மனமாற்றம் [சிறுகதை]

manamaatram1செல்போன் அடித்தது. ராமசுப்பு கம்ப்யூட்டரில் இருந்து அப்போதுதான் கண்ணைத் திருப்பினார்.

“ஏங்க! நாலு மணிக்கு கூப்பிடச் சொன்னீங்க! கிளம்பலாமா?” அவர் மனைவி சுகன்யாதான்.

“நாலா?” ராமசுப்பு துணுக்குற்று எழுந்தார்.

“அட, மறந்து போச்சு சுகி. நீ ஒண்ணு செய். ஆட்டோ பிடிச்சு கம்பனிக்கு வந்துடு. இங்கிருந்தே போகலாம்.”

உடனே இன்டர்காமில் தன் பணியாளர்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்துவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு ரிசப்ஷனை நோக்கி விரைந்தார்.

“என்ன சார் பர்மிஷனா? மேடம் கூட சினிமாவா?” தாரா குறும்போடு கேட்க, அவளைக் குட்டுவது போல் கையைத் தூக்கி, என்னைப் பார்த்தா அப்படியெல்லாம் தோணுதா? என் ஒண்ணு விட்ட சகோதரன் பையன் ஆக்ஸிடன்ட் ஆகிப் படுத்திருக்கானாம். அதுக்குத் தான் போயிட்டிருக்கேன். சரி, எம்.டி வந்தார்னா, பர்ச்சேஸ் லெட்ஜர் முழுக்க பார்ட்டி வாரியாவும், மாதம் வாரியாவும் போட்டு டேபிள்ல இருக்குன்னு சொல்லிடு. பேங்க் அக்கவுன்ட் முழுசா டாலி ஆயிடுச்சுன்னு சொல்லிடு.”

அதற்குள் ஆட்டோ சத்தம் கேட்க, ராமசுப்பு வாசலை நோக்கி விரைந்தார்.

கட்டிலில் அருண் கிழிந்த நாராய்க் கிடந்தான். ஸ்கூல் வாசலில் ஆட்டோ மோதியதாம். இவன் சைக்கிளில். கை கால்களில் பலத்த அடி. ஒன்றிரண்டு எலும்பு முறிவுகூட. மெல்லத் தான் ஆறும் என்று டாக்டர்கள் சொன்னார்களாம்.

“ஒரு மாசமாச்சு இவன் கீழே விழுந்து. ஏண்டா ஒரு வார்த்தை கூட எனக்குச் சொல்லி அனுப்பல? எங்க ஆபீஸ் ப்யூன் சொல்லித்தான் விஷயமே தெரியும்,” ராமசுப்பு படபடவென வெடிக்க, ரங்கன் சமாதானப்படுத்தும் விதத்தில் ஏதோ சொன்னான். ராமசுப்புவிற்குக் கோபம் அடங்கவில்லை. “நீ பெரிய தன்மானக்காரனா இருக்கலாம். அதுக்காக இப்படியா? உன் தங்கைக்காவது சொன்னியா?”

ரங்கன் இல்லை என்று தலை அசைக்க, ராமசுப்பு கோபம் தலைக்கேறினாலும் பொறுத்துக் கொண்டு, ரங்கன் மனைவி மாலதியைப் பார்த்து, “ஏம்மா, இவந்தான் கிறுக்கனா இருக்கான். நீயுமா?” எனக் கேட்க, ரங்கன், “அண்ணா, கொஞ்சம் பொறுங்க! அப்புறம் சொல்லறேன்,” என்று விட்டு அங்கே கூட இருந்த இருவரையும் தயக்கத்தோடு நோக்கினான்.

manamaatram3“அண்ணா, இவர் ராஜாராமன், அவர் நரசிம்மன்,” என்று ரங்கன் அறிமுகம் செய்து வைத்தான். அவர்களில் இரண்டாமவர், “ம்ஹும், எபிநேசர்!” என்று திருத்திவிட்டுச் சிரித்தார். ரங்கன் தொடர்ந்து, அண்ணா இவர்கள் குடுத்த தைரியம்தான், இன்னிக்கு நான் இந்த நிலைமையில இருக்கேன்,” என்று சொல்ல, இன்னொருவர், “இல்ல மிஸ்டர் ரங்கன், கர்த்தர் அருள்தான் இதுக்குக் காரணம். இன்னிக்கு நான் நல்லா ஜபிச்சிருக்கேன். வேணாப் பாருங்க. இன்னும் இரண்டு நாளில் பையன் எழுந்தே உட்கார்ந்துருவான்,” என்றார்.

ராமசுப்புவிற்கு ஏதோ இடித்தது. ரங்கன் அவர்கள் இருவரிடம் ஏதோ மந்திரத்தில் கட்டுப்பட்டவன் போல நடந்தது அவருக்குப் பல சந்தேகங்களைக் கிளப்பியது. உடனே, “மாலதி, பாத்ரூமுக்கு போகணும்…” என்று சொல்லிவிட்டு கொல்லைப்பக்கம் போய்விட்டு நேராக சமையல் அறைக்குள் நுழைந்தார். “மாலதி, உண்மையைச் சொல்லு. இங்க இருக்கிற ரெண்டு பேர் மேலயும் எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்ல. குழந்தை நிலவரம் எப்படி இருக்கு? எந்த டாக்டர் கிட்ட காண்பிசசீங்க? என மெல்ல, உறுதியாக வினவ, அவள் உடைந்தே விட்டாள்.

“அண்ணா! இவங்க ரெண்டு பேரும் அருணை கவர்மண்டு ஹாஸ்பிட்டல்ல யாரோ சேர்த்தப்போ கூட இருந்திருக்காங்க. நாங்க போனப்ப, இவாதான் டாக்டர் கிட்ட, மருந்து வாங்க அப்படீன்னு ஒத்தாசை செஞ்சாங்க. அப்புறம் டாக்டர்ஸ் ஆபரேஷன் பண்ணனும், உங்களுக்கு வேணுமின்னா, தனியார் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிகிட்டு போங்கன்னு சொன்னாங்க. இவங்க தங்களுக்குத் தெரிஞ்ச ஒரு கிறித்தவ ஆசுபத்திரிக்குக் கூட்டிகிட்டுப் போனாங்க. அவங்கதான் ஒண்ணும் ஆபத்தில்ல. மாவுக் கட்டு போட்டா போதும்மின்னு சொன்னாங்க. அப்பப்ப வந்து ஜபிக்குறாங்க. இவரும் சர்ச்சுக்கு அப்பப்ப போயிட்டு வர்றார்,” என்று முடித்தாள்.

ராமசுப்பு இப்போது அதிகக் கலவரமானார். “ஒரு டாக்டர் ஆபரேஷன் பண்ணச் சொல்லியும் நீங்க சும்மா இருந்தீங்களா?”

இதைக் கேட்டதும் மாலதி தலையைக் குனிந்து கொண்டாள். “விசாரிச்சுப் பார்த்ததில, ஆபரேஷனுக்கு மட்டும் ஒண்ணரை லட்சம் கேட்டாங்க. எங்க போவோம்? இவங்க ஆஸ்பத்திரியில இப்ப வரைக்கும் ஒரு காசு கூட கேட்கலை…”

அவள் சொல்லி முடிக்குமுன் பின்னாலேயே சமையலறையினுள் நுழைந்த சுகி, “என்ன மாலதி, நெத்தியில பொட்டு எங்கயோ விழுந்து பாழ்நெத்தியா இருக்கு… சாமி குங்குமமாவது வெச்சுக்க,” என்றவள் அங்கே சாமி மாடத்தைப் பார்த்து, “பூட்டி வச்சிட்டே, பூஜை ஒண்ணும் இல்லையா?” என்று தயங்கிக் கேட்டாள்.

“அவருக்கு இதில எல்லாம் நம்பிக்கை போயிடுச்சு,” என்றாள் மாலதி உணர்ச்சி எதுவும் காண்பித்துக்கொள்ளாமல்.

“ஆமாமாம். அம்பது ரூபா மாவுக்கட்டுக்கு மயங்கி மதம் மாறிட்டான்,” என்று மனதுக்குள் கறுவிய ராமசுப்பு புயலாக அருணிடத்தில் சென்றார். காதருகில் குனிந்து, “குழந்தை, வலிக்குதாடா?” என்று கேட்க, அவன் மெல்ல முனகி, “ஆமா பெரியப்பா. எபிநேசர் அங்கிளும் அப்பாவும் தினமும் ப்ரே பண்ணறாங்க. அப்பவும் கால்ல வலி குறையவே இல்லை,” என்று காலைக் காட்டினான். வீக்கம் அப்படியே இருந்தது. கண்கள் இரண்டும் குழி விழுந்து போயிருந்தன.

ஹாலுக்கு நேராக வந்தவர், “ஏண்டா ரங்கா, குழந்தையோட உயிரோட விளையாடறயா? ஒரு மாசம் ஆச்சு, படிக்கற குழந்தை வலியில கதர்றான். ஏன் இப்படி இருக்கே?” என்று அதட்டலும் ஆற்றாமையுமாகக் கேட்க, அந்த எபிநேசர், “சார் அருண் இன்னும் கர்த்தர் மேல பூரண நம்பிக்கை வைக்கலை; அதான் அப்படி. என் பிரார்த்தனைல கான்சரே குணமாயிருக்கு!” என்றார்.

ரரமசுப்பு, அதற்குள் வீட்டுக்கு வெளியில் போய் தன் எம்.டிக்கு போன் போட்டார். “சார், நாந்தான் சார். ஒரு அவசர உதவி வேணும். உங்க சம்பந்தி சார் டிரஸ்ட்ல ஒரு ஸ்கூல் குழந்தைக்கு ஆர்த்தோ ஆபரேஷன் பண்ண முடியுமான்னு கேட்கணும் சார்..” என்று அவரிடம் அருண் விவரங்களைக் கூறினார்.

“ராமசுப்பு, நான் சொன்னேன்னு நீங்களே அவர்கிட்ட பேசுங்க. இன்னிக்கே ராமகிருஷ்ணாவுல பண்ணிடலாம்… அவர் குடுக்கல்லேன்னா கூட, நம்ப கம்பனி அக்கவுண்டுல இருந்து கட்டிடலாம். முதல்ல தயங்காம அட்மிட் பண்ணுங்க. என்னை ராத்திரி ஏழு மணிக்குக் கூப்பிடுங்க!” என்றார்.

ராமசுப்பு உடனே ரங்கனின் தங்கை கிருத்திகாவுக்கு போன் பண்ணினார். தன்னுடைய தமக்கைக்கும், தம்பிக்கும் போனில் விவரங்கள் சொல்லிவிட்டு, கையோடு கால்டாக்சிக்கும் ஆம்புலன்சுக்கும் போன் பண்ணினார்.

ஹாலில் நுழைந்தவர், “ரங்கா, என் முதலாளியோட சம்பந்தி டிரஸ்ட்ல பர்மிஷன் வாங்கிட்டேன். செலவெல்லாம் அவங்க பாத்துப்பாங்க. இன்னிக்கே அருணை செக் அப்புக்கு வரச் சொல்லீட்டாங்க. இப்பவே ராமகிருஷ்ணாவிற்கு போகணும். அவங்க சொன்னா இன்னிக்கே ஆபரேஷன் செய்யணும்….” என்று சொல்லிக்கொண்டே போனார்.

ரங்கன் தயங்கி அந்த இருவரையும் பார்க்க, அவர்கள் இருவரும் “மிஸ்டர் ரங்கன், இது கர்த்தரின் ஆணைக்கு எதிரானது. நாம் தனித்துப் பேசணும்,” என்றனர்.

அதைக்கேட்டு மாலதி ஓடி வந்து ரங்கனின் காலைப் பிடித்துக் கொண்டாள். “தயவு செஞ்சு இதில விளையாடாதீங்க. குழந்தையைக் காப்பாத்துங்க!…” என்று கதற, ” உனக்கு என்ன பைத்தியமாடா?” என்று ராமசுப்பு உலுக்கியதும்தான் ரங்கன் வழிக்கு வந்தான்.

ஹாஸ்பிட்டலில் டாக்டரின் வசவு மிக மோசமாக இருந்தது. “மை காட்! ஒரு மாசமா இப்படியேவா இருக்கான் பையன்? உங்களுக்கெல்லாம் மூளையே இல்லையா? எந்த ஹாஸ்பிட்டலுக்குப் போனீங்க? எவன் சொன்னான் மாவுக் கட்டு போடணும் அப்படீன்னு? இப்பவே கால்ல செப்டிக் ஆகற அறிகுறி இருக்கு,” என்று கடிந்துகொண்டார். நர்ஸ்களிடம், “இன்னும் அரை மணில ஆபரேஷன். பேரன்ட்ஸ் கிட்ட ஃபார்ம்ஸ்ல கையெழுத்து வாங்குங்க!” என்று பரபரப்பாக ஆணை இட்டார்.

ராமசுப்பு நடந்ததைக் கூற, டாக்டர், “மிஸ்டர் ரங்கன், பிரார்த்தனை அது இதுன்னு சொல்லி எங்க ஹாஸ்பிட்டல்ல கூட கொஞ்சம் பேர் வந்தாங்க. கடைசியில அவங்களுக்கு மதமாற்றம் ஒண்ணுதான் குறிக்கோள்னு தெரிஞ்சபிறகு எங்க டீன் அவங்களை விரட்டிட்டாரு. இவங்க கிட்ட நீங்களும் ஏமாந்தீங்களா? நல்ல வேளை, குழந்தையை இப்பவாவது கொண்டு வந்தீங்களே…” என்று சொல்லி அருணின் தலையைத் தடவிக் கொடுத்தார். “டாய் ஸ்மால் பாய்! உன்னை நல்லாப் பண்ணாம இன்னிக்கு அங்கிள் போக மாட்டார்..” புன்னகையுடன் சொல்லும்போதே இரண்டு நர்சுகள் அருணின் ஸ்ட்ரெட்ச்சரை ஆபரேஷன் தியேட்டருக்குள் தள்ளிக் கொண்டு போயினர்.

இதற்குள் கிருத்திகாவும் கணவர் குழந்தைகளுடன் ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டாள். ராமசுப்புவின் தம்பியும் தங்கையும் வந்து விட்டனர். அவர்கள் எல்லாரும் ரங்கனை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டுவிட்டனர். ரங்கன் அவர்களைத் தனியாகக் கூட்டிப் போய் சமாதானம் செய்தான். அப்போது அங்கே ரங்கன் வசிக்கும் காலனியின் பிள்ளையார் கோயில் குருக்கள் வேகமாக வந்தார். ரங்கனிடம் “இப்போத்தான் கேள்விப்பட்டேன். ஆம்புலன்ஸ் வந்ததா பக்கத்துல சொன்னா. அதான் கொழந்தையைப் பார்க்க வந்தேன். எவ்வளவு பக்தியான பையன். விநாயகர் அகவல் சொன்னா இன்னிக்கும் கேட்டுண்டே இருக்கலாம்,” என்று சொல்லிவிட்டு கையில் திருநீற்றைக் கொடுத்து, “ஆபரேஷனுக்கு முன்னாடி கொழந்தை நெத்தியில இடுங்கோ!” என்று சொல்ல, ரங்கன் ஓடினான்.

அப்போது ராமசுப்புவும் அந்த இருவரும் மட்டும் தனியாக நின்றனர். பிரசாதத்தைப் பார்த்ததும், எபிநேசர், “சாத்தானின் பொடி!” என்றார். அப்போது தான் ராமசுப்பு அங்கே திரும்பினார். “குருக்களே, கொஞ்சம் இங்க வாங்க” என்றார்.

“இவங்க கிறித்தவங்க . உங்க விபூதியை சாத்தான் கிட்ட இருந்து வந்ததாச் சொல்லறாங்க. கொஞ்சம் விளக்குங்க,” என்றார். குருக்கள் கொஞ்சமும் அசராமல், “முதல்ல அந்த சாத்தான் யாருன்னு சொல்லுங்க. அவன் எங்க இருந்து வந்தான்னு சொல்லுங்க,” என்று அவர்களை நோக்கி எதிர்க் கேள்வி ஒன்று போட்டார்.

“சாத்தான் கடவுளுக்கு எதிரானவன். அவன் கெட்டவன்!” என்று அவர்கள் சொல்ல இவரோ அமைதியாக, “அப்போ, கடவுள் நல்லவர் மட்டும்தான். இல்லையா? அப்புறம் கடவுளுக்கு எதிராகவும் யாரோ இருக்க முடியும் அப்படீன்னு உங்க தத்துவம் சொல்லுது இல்லையா?” என்று கேட்டார்.

“ஆமா. முற்றிலும் சரி,” என்றார் எபிநேசர்.

“ஒரு விஷயம். நான் தத்துவம் படித்தவன். இந்த வெள்ளை-கருப்பு, உயரம்-குள்ளம், சுத்தம்-அசுத்தம், நோய்-ஆரோக்கியம், மேதாவித்தனம்-மூடத்தனம், ஒழுக்கம்-நீசத்தனம், இது போல நல்லது-கெட்டது இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றில்லாம இன்னொன்னு இருக்க முடியாது. மேடு என்பதை பள்ளம் என்பது இல்லாம நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது.” ராமசுப்பு தொடர்ந்தார் ” இந்து மதத்தைப் பொருத்த வரையில் இவைகள் இரட்டைகள். இவைகளில் இருந்து விடுபடுவதுதான் மோட்சம்னு பகவான் கீதையில சொல்லி இருக்கார். நல்லதும் பந்தம். கெட்டதும் பந்தம். இதை விட்டுட்டு இந்த கிறித்தவாள்லாம் அறியாமைல நல்லதெல்லாம் கடவுள்னு சொல்லிக்கிட்டுத் திரியறா. அப்படியே பார்த்தாலும் இந்த ரெட்டைகளுக்கு அழிவு உண்டே! அப்போ கடவுள் சாவாரா? இது மூடத்தனம் இல்லையா?” என்று வினவினார்.

அந்த இருவரும் வாயடைத்துப் போயினர். ராமசுப்பு அவர்களிடம், “தயவு செய்து இனிமே என் தம்பியிடம் வராதீர்கள். வந்தா போலீஸ்ல சொல்லிடுவேன்!” என மிரட்டினார். அவர்கள், மனதுக்குள் அவரை வசைபாடியவர்களாக அங்கிருந்து நகர்ந்தனர். ராமசுப்பு தன் முதலாளியிடம் பேசிவிட்டு, மனைவியை நோக்கி, “கொஞ்சம் இரு. நான் பக்கத்தில அன்னபூர்ணாவில இருந்து எல்லாருக்கும் சாப்பிட வாங்கி வர்ரேன்,” என்றுவிட்டு குருக்களைப் பார்த்து, “சார் காந்தீபுரம் வரைக்கும் போறேன். அப்படியே உங்களைக் காட்டூரில் இறக்கி விடறேன், வண்டில ஏறுங்க,” என்று கூற அவரும் உடன் கிளம்பினார்.

ராமசுப்புவின் டாக்சி அலங்கார் ஹோட்டல் வளைவில் திரும்பியபோது, அங்கே ஒரே கூட்டம். யாரோ அடிபட்டுக் கிடந்தார். ராமசுப்பு டிரைவரை நிறுத்தச் சொல்லிவிட்டு, காரில் இருந்து இறங்கி ஓடினார். அங்கே ரத்த வெள்ளத்தில் எபிநேசர்! அவரது நண்பரைக் காணோம். கூடவே குருக்களும் ஓடிவர, “எல்லாரும் ஒதுங்கிக்குங்க. இவர் எங்க குடும்ப நண்பர்தான்..” என்று சொல்லிவிட்டு “குருக்களே பிடிங்க!” என்றபடி எபிநேசரின் தலைமாட்டிற்கு ஓடினார். இருவரும் அவரைக் காரில் படுக்க வைத்தனர்.

கார் திரும்ப ஆஸ்பத்திரிக்கு ஓடியது.

“என்னடா என் செல்லம்? கால் எப்படிடா இருக்கு?” காலையில் அருண் விழித்ததும் ராமசுப்பு கேட்டார்.

“அசைக்க முடியலை பெரியப்பா!”

ராத்திரி முழுதும் மயக்க மருந்தின் ஆளுமையில் இருந்தவன் இப்போதுதான் தெளிவாகியிருந்தான். குருக்களும் ராத்திரி முழுவதும் அங்கேயே இருந்துவிட்டார். குருக்களைப் பார்த்ததும் அருண், “மாமா! நல்லா இருக்கீங்களா?” என்று கேட்க, “எனக்கு என்னடா தங்கம்? நீ இப்படிப் பேசவும்தான் எனக்கு நிம்மதியே. இந்தாடா கண்ணா…” என்று ஆதுரமாக நெற்றியில் திருநீற்றை வைத்தார்.

அசையமுடியாததால் அருண் மெதுவாகத் தன் தலையை மட்டும் திருப்பி வார்டில் இருந்தவர்களை எல்லாம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். 2 பெட் தள்ளி இருந்தவரைப் பார்த்ததும் திடுக்கிட்டு, “ஏன் பெரியப்பா, அது எபிநேசர் மாமா தானே?” என வினவினான்.
 “ஆமாண்டா கண்ணா! அவர் நேத்து ஸ்கூட்டர்ல அடிபட்டுக் கிடந்தார். அவருக்கும் நேத்து கைல சின்ன ஆபரேஷன். கொஞ்சம் இரு அவரைப் போய் பாத்துட்டு வர்ரேன்,” என்று சொல்லிவிட்டு எபிநேசரை நோக்கிச் சென்றார்.

“என்ன சார் எப்படியிருக்கு?” என வினவ, அவர் மெல்லச் சிரித்தார். பக்கத்தில் இருந்த அவர் மனைவி கைகூப்பி, “என் வீட்டுக்காரர் எல்லாம் சொன்னார். இவர் கூட இருந்தவர் சர்ச்சு ஹாஸ்பிட்டல்ல கேட்டுட்டு வர்ரேன்னுட்டு போனவர்தான், திரும்பி வரவே இல்லை. இவர்தான் போன வருஷமே அதிகாரபூர்வமா மதம் மாறிட்டாரே! இன்னும் இவரால அவங்களுக்குப் பிரயோஜனம் இல்ல போல. சம்பந்தமே இல்லாத நீங்க செஞ்ச உதவியாலதான் இவர் இப்ப….” அந்த அம்மாவுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

குருக்களும் அவர்களைச் சமாதானம் செய்தார். “கடவுள் எல்லாருக்கும் பொது. இந்த மதபோதகர்கள் ஏதோ ஓர் அதிசயத்தைக் காண்பிக்கற மாதிரி கூட்டிட்டு போய் குறுகிய மனப்பான்மை என்கிற சேத்தில தள்ளிடுறா. புதுசா கடவுள் பேர் ஒண்ணைச் சொல்லி எல்லாத்தையும் முட்டாளாக்குறா. இந்து மதம் எப்போதும் கடவுளை மையமா உள்ள மதம் இல்ல. தர்மமும் சத்தியமும் மோக்ஷமும் மையமா உள்ள மதம். அதனாலதான் இங்க முப்பத்து முக்கோடிக் கடவுள் பேர் உண்டு,” என்று விளக்கினார்.
 
“வாஸ்தவம் தான்” என்று கண்கலங்கிய எபிநேசரின் மனைவி சட்டென்று, “எனக்கும் பிரசாதம் கொடுப்பீங்களா குருக்களே?” என்றாள். “ஏம்மா, நீங்க போன வருஷம் வரை இந்துக்கள்தானே. அப்போ இந்தப் பிரசாதம் வாங்கிக்கலாம்,” என்று தன் பையில் இருந்து கல்கண்டும் விபூதியும் எடுக்க, எபிநேசர், “சரளா, எனக்கும் திருநீறு வெச்சுவிடு” என்றார். குருக்கள் பரவசமடைந்து, “முருகா! எல்லாருக்கும் துணை நீதாண்டா!!” என்றவாறு அவரே எபிநேசரின் நெற்றியில் திருநீற்றை இட்டார்.

manamaatram2பக்கத்துப் படுக்கையில் இருந்து அருண், “எபிநேசர் அங்கிள்! விநாயகர் அகவல் படிங்க. வலி போயிடும்!” என்று தன் தலையணை அடியில் இருந்து சிறு புத்தகத்தை எடுத்தான்.

“சரிடா கண்ணா! இனிமே என்னை நீ நரசிம்மன் மாமான்னே கூப்பிடு,” என்று நரசிம்மன் புன்னகைத்தார். விநாயகர் அகவல் புத்தகத்தைப் பிரிக்க கையில் வாங்கியவர் ஏதோ அதன்மேல் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்பவர் போல், “சரளா, இனிமே நாம பொய் சொல்லி ஆள் பிடிச்சி காசு சம்பாதிக்க வேண்டாம். உண்மையா இருப்போம்,” என்றார். முகம் தெளிவாகவும் வாக்கு திடமாகவும் இருந்தது.

“சர்வே ஜனா சுகினோ பவந்து!” என்று குருக்கள் கூற, ரங்கனும் ஆமோதித்தான்.

ராமசுப்பு, “இந்து மதத்தில் அவரவர் கடவுள் அவரவர் அந்தராத்மா தான். அது எப்போதும் உறங்காதிருந்து வழிதவறியவரையும் சரியான நேரத்தில் திரும்ப வழிநடத்திவிடுகிறது.” என்று பரவசப்பட்டார். ஒருகணம் நிதானமாகக் கண்மூடி, கைகூப்பி தன் அந்தராத்மாவை வணங்கினார்.

32 Replies to “மனமாற்றம் [சிறுகதை]”

 1. இந்து மதம் எப்போதும் கடவுளை மையமா உள்ள மதம் இல்ல. தர்மமும் சத்தியமும் மோக்ஷமும் மையமா உள்ள மதம். அதனாலதான் இங்க முப்பத்து முக்கோடிக் கடவுள் பேர் உண்டு,” என்று விளக்கினார்.- This is the peak point of the story.

 2. நெடியோன் குமரன்… பிரமாதம் … ஒவ்வொரு நிகழ்வும் (கதையில்) நெத்தியடி. நல்ல படிப்பினை தரும் இதை படிப்பவர்களுக்கு. இந்த இடத்தில் இன்னொன்றும் புரிந்தது. hospital la இப்படில்லாம் வேற நடக்குதா.??? என்ன கொடும சார் இது ???

 3. Pingback: Indli.com
 4. நாட்டில் நடக்கும் கிறித்துவ சூழ்ச்சியை அழ்கிய சிறுகதையாகத் தந்துள்ளார். எங்கள் குடும்பத்தில் சிலசங்கடங்கள் ஏற்பட்டபோது ஒரு கிறித்துவ அம்மையா வந்து உங்களுக்காக ‘ப்ரே’ பண்ணினேன் என்றார். துளைக் கிணறு போட்டபோது தண்ணீர் வர உங்களுக்காகக் கர்த்தரிடம் ப்ரே பண்ணினேன் என்றார். நல்லகாலம், இவர்களுக்கு ‘prey” நம் கர்த்தர் எங்களுக்கு மனவலிமை அளித்துள்ளார் துன்பப்படுவோனின் மனம் எங்காவது நமக்குப் பற்றுக்கோடு கிடைக்காதா என்று தேடி அலையும் பலவீனமுடையது. அந்த பலவீனத்தை இச்சூழ்ச்சியாலர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கூட்டுக் குடும்பப் பண்பாட்டை விட்டு நீங்கி, தனிக்குடும்பமாகும் கலாசாரமும் இவ்வஞ்சகச் சூழ்ச்சிக்கு இரையாகும் நிலைக்குத் தள்ளுகிறதோ என நினைக்கின்றேன். பெரியவர்கள் சார்பிருந்தால், அவர்கள் ஆண்டவன்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு டாக்டரிடம் கூட்டிட்டுப் போ என்றுதான் அறிவுறுத்தியிருப்பார்கள்.. .

 5. This Info is 100% true. These peoples converted our Hindu peoples as like this method and I Personally Know about this conversion. One of my HR Manager also converted by this method. Plz read the below PDF . After that we know how this Peoples convert our Hindus into Christianity .Mr.Thayappan was good follower of Bangaru adigalar upto 2000. After that The Christianity peoples converted this man gradually. Now he is worked as evangelist and he converts Hindus. Before 10yrs he was just like middleclass family man and now he is Crorepathy.

  https://www.ipaseattle.org/Karthik1.pdf

  Jai Hind,
  Anand

 6. Now urgently we need to have one Narendran(vivekanandar) in each state to explain the facts of sanadhana dharma and keep people in awareness.
  And need more wealth to spend for poor welfare like education(first priority), employment,and health.
  At least we should have Narendra modi in each state to protect us.

 7. The story is good. Same conditions happened to my known people. They converted to christian religion. ok. we must try to safe our Hindu religion and hindu people.

  Thank you. Save our religion.

 8. திரு ராம், மத மாற்றச் சூழ்ச்சிகள் இன்னும் எத்தனையோ உண்டு. க்ரோசின் மாத்திரையைக் கொடுத்து கர்த்தர் கொடுத்ததாகச் சொல்லி மதம் மாற்றிய கதையும் உண்டு. அவற்றையும் இது போன்ற கதைகளாக வடித்திட ஆசை.

  அவலத்தை மட்டும் சொல்லி நிறுத்தாமல் அதற்கான தீர்வையும் உள்ளடக்கியதாக இந்தக் கதைகள் இருக்க வேண்டும் என்பதும், அதன் தீர்வும் விழுமிய பொருளும் , ஒரு நல்ல பாசிடிவ் ஆக இருக்க வேண்டும் என்பதும் ஆரம்பிக்கும் முன்பே நான் முடிவு செய்தது. தமிழ் மக்கள் இதை வரவேற்றால் மிக்க மகிழ்வேன்.

  திரு ss, திரு முத்துக்குமாரசுவாமி , திரு பாபு, திரு ஆனந்த் ஆகியோருக்கும் நன்றி.

 9. இது கதை அல்ல, இது போல உண்மையாகவே சம்பவங்கள் நடந்து வருகின்றன! ஹிந்துக்கள் ஒன்று பட வேண்டும்! அது தான் ஒரே வழி!

 10. கிரோசின் குடுத்து எமாத்த்ரோமே என்ற எண்ணம் கூட இருக்காது – எல்லாமே ஒரே தேவன் கரங்களை கீழே இறக்கி தந்தது – நாம் நம் கையை மேலே தூக்கி பிடித்துக் கொண்டோம் என்று காரணம் சொல்லி – உண்மைலேயே இயேசு கொடுத்ததை தானே நாம் கொடுத்தோம் என்று தன்னையும் ஏமாற்றி கொள்ளும் பேர்வழிகள் – இவர்களுக்குள் ஒரு கார்பஸ் பண்டு உருவாக்கி அந்த பணத்த எவனுக்கோ குடுத்து பாரு இயேசு கொடுத்தார் அப்படின்னு ஏமாத்தற கோஷ்டி ஒன்னு – அழகிரி மாதிரி தான் ஹோர்லிக்ஸ் பாட்டில் திருடி அத இலவசமா தர்ற வேலை தான் இது

  என்னை ஒருமுறை இரண்டு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து – கேர்மனியில் இருந்து இவர் உங்களுக்காக நல்லது பண்ண வந்திருக்கிறார் – உள்ளே போய் பேசலாமா என்றனர் – அவரிடம் ஒரே நிபந்தனை விதித்தேன் – பேசுவோம் , நான் தோத்தா நான் கிறிஸ்டியன மாறிடறேன், நீங்க தொத்த மாற்றத்துக்கு நீங்களும் உங்க ஜெர்மனி ஆளும் தயாரா என்றேன் – நாம அப்புறம் சந்திப்போம் என்று சொல்லி விட்டு அவரது வேட்டையை வேறு பக்கம் போய் தொடர்ந்தார் – தமிழ் ஹிந்துவில் ஏராளமான விவாதங்கள் உள்ளன, நமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படி வந்து சில்மிஷம் பண்றவனை ஒதுக்கித் தள்ளாமல் அவனிடம் வாதிட்டு நாம் தோற்கடிப்பதே மேல் – ரொம்ப கஷ்டமெல்லாம் பட வேண்டாம் இப்படி வருபவன் எல்லாம் காசு வாங்கிக் கொண்டு விஷயம் தெரியாம உலரும் கூட்டம் தான்

 11. கிரோசின் குடுத்து எமாத்த்ரோமே என்ற எண்ணம் கூட இருக்காது – எல்லாமே ஒரே தேவன் கரங்களை கீழே இறக்கி தந்தது – நாம் நம் கையை மேலே தூக்கி பிடித்துக் கொண்டோம் என்று காரணம் சொல்லி – உண்மைலேயே இயேசு கொடுத்ததை தானே நாம் கொடுத்தோம் என்று தன்னையும் ஏமாற்றி கொள்ளும் பேர்வழிகள் – இவர்களுக்குள் ஒரு கார்பஸ் பண்டு உருவாக்கி அந்த பணத்த எவனுக்கோ குடுத்து பாரு இயேசு கொடுத்தார் அப்படின்னு ஏமாத்தற கோஷ்டி ஒன்னு – அழகிரி மாதிரி தான் ஹோர்லிக்ஸ் பாட்டில் திருடி அத இலவசமா தர்ற வேலை தான் இது

  என்னை ஒருமுறை இரண்டு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து – ஜெர்மனில் இருந்து இவர் உங்களுக்காக நல்லது பண்ண வந்திருக்கிறார் – உள்ளே போய் பேசலாமா என்றனர் – அவரிடம் ஒரே நிபந்தனை விதித்தேன் – பேசுவோம் , நான் தோத்தா நான் கிறிஸ்டியன மாறிடறேன், நீங்க தொத்த மாற்றத்துக்கு நீங்களும் உங்க ஜெர்மனி ஆளும் தயாரா என்றேன் – நாம அப்புறம் சந்திப்போம் என்று சொல்லி விட்டு அவரது வேட்டையை வேறு பக்கம் போய் தொடர்ந்தார் – தமிழ் ஹிந்துவில் ஏராளமான விவாதங்கள் உள்ளன, நமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படி வந்து சில்மிஷம் பண்றவனை ஒதுக்கித் தள்ளாமல் அவனிடம் வாதிட்டு நாம் தோற்கடிப்பதே மேல் – ரொம்ப கஷ்டமெல்லாம் பட வேண்டாம் இப்படி வருபவன் எல்லாம் காசு வாங்கிக் கொண்டு விஷயம் தெரியாம உலரும் கூட்டம் தான்

 12. Good description showing Christian atrocities and tactics. They should be punished for
  getting into any hospital or vulnerable people in any situation. Law should protect people against fraud.
  Christianity spreads by fraud and deception only

 13. மனமாற்றம்
  இது கதை அல்ல நிஜம் ,
  மதமாற்றத்தின் ஒரு பகுதியினை மிக யாதர்த்தமாக வெளிச்சமிட்டு கட்டிய ஒரு நல்ல பதிவு .
  நம் அவசர தேவை விழிப்புணர்வு என்பதை நினைவூட்டிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றியையும் வணக்கங்களையும் உரித்தாக்குகிறேன் .

  பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

 14. @babu said
  // I DID ANY MISTAKES? PLEASE ADVISE ME AND I WILL CORRECT MY SELF//

  for what??????
  try 2 write ur thoughts in tamil. அது உங்களின் எண்ணங்களை ,கருத்துகளை மற்றவர்களிடம் அப்படியே சேர்க்க , புரிய வைக்க உதவும் என்று நம்புகிறேன் .
  இது அறிவுரை அல்ல என் கருத்து.
  நட்புடன்
  பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

 15. This is NOT just a story.. but happens real at many place.. my relative has been brainwashed, through false hopes.. He comes back and abuses us that we are worshipping false gods and stones.. More interestingly, he says, Lord Murugar is sinned, because he has two wives.. and that we are automatically sinned, because we are worshipping sinned gods..

 16. Dear Senthil, if that person comes back again ask him 1) who is the father of Jesus 2) How does he explain how a God can make a 13 year old girl pregnant when she is betrothed to a man- this is against Jewish law 3) How does God then kill this man- to save the world. Is it not nonsense 4) Why does John 8-41 say Jesus was born to a prostitute- see Tamil bible especially 5) Why did Jesus never say himself a) he was god b) he was the only son of god c) his mother was a virgin. Why only others say this when Jesus never said this. 6) Why did Jesus want his followers to kill those who do not follow him and quoted a parable- Luke 19-47. Also John 15-6. Also see Acts 3-23 7) Jesus is not all knowing Mark 13:32 and Matt 24:36 8) Jesus is not powerful John 5:19 John 5:30 9) If Jesus is god why say God is different- this John 20:17 Matt 27:46 Matt 26:36-39 Luke 22:42 10) God is invisible Jesus says. So Jesus is not god- John 1:18 John 4:24 11) Father greater John 14:28 12 ) Jesus says he is not even good- Matt 19:17 13) He sent me John 8:42 So Jesus is not God 14)Thy will be done not Jesus`s- John 5:30 So Jesus is not god

  Also see Mark 16 last verses. Jesus says his followers should drink poison, handle deadly snakes and heal sick. Has your friend done all this. Has the pope done this or tried

  Jesus also asks his followers to buy swords even of they have to sell their shirts; Luke
  22- 36 to 38 ( Obviously to kill. Whom- see John 15-6, Luke 19-27 acts 3-23)

  Why does he want you to hate your parents- Luke 14-26

  Why does he want kids killed- Mark 7-9 and 10

  Your friend will leave you alone for ever if you ask these questions.

  Tell him also Jesus is in hell for threatening and supporting violence against non-Christians

 17. நன்றி திரு பிரத்யுஷ் அவர்களே,
  நான் தமிழில் தட்டச்சு செய்ய மிக கடினமாக உள்ளது.ஏன் என்றல் நான் மற்ற ஒரு தினசரியின் வாசகர் கருத்து பகுதியில் தட்டச்சு செய்து கத்தரித்து அதனை இங்கே ஒட்டுகிறேன்.இனி நான் தமிழிலேயே பதிவிட முயல்கிறேன்.
  நான் முன்பு இட்ட மறுமொழி ஒன்று பிரசுரிக்காமல் பரிசீலனையில் இருந்தது.எனக்கு தவறாக சொல்ல கூடாததை சொல்லிவிட்டோமோ என்று தோன்றியது.எனவே
  I DID ANY MISTAKES? PLEASE ADVISE ME AND I WILL CORRECT MY SELF
  என்று ஆசிரியர் குழுவுக்கு வின்னபித்திருந்தேன்.அதை அவர்கள் பிரசுரித்து விட்டார்கள்.

 18. dear prathush
  மேலும் எனக்கு நன்கு தெரிந்த என் தாய் மொழியில் எழுத்து பிழைகள் தவிர்ப்பது எத்தனை முயன்றாலும் இந்த கணினியில் தட்டச்சும் போது கடினமாகவுள்ளது.
  even though here after I try to type in tamil
  .

 19. நண்பர் பாபு அவர்களே ,
  நீங்க வேற எங்கயும் போய் தமிழில் டைப் செய்து இங்கே பேஸ்ட் பண்ண வேண்டாம் .நம்ம மறுமொழி இடும் கட்டத்தின் மேலே உள்ள இந்த லிங்கில்
  (Click this அ or Press Ctrl+g to toggle between English and Tamil)
  உள்ள “அ” கட்டத்தை கிளிக் செய்து இங்க்லீஷில், தமிழ் வார்த்தை டைப் செய்தால் அதுவே தமிழாக்கம் செய்துகொள்ளும் .
  வணக்கங்களுடன்
  Pratyush ramakrishnan

  மன்னிக்கணும் என் பேருல ஸ்பெல்லிங் மிஸ்டேக் .
  நானும் ரொம்ப கஷ்டப்பட்டு தான் சார் டைப் அடிக்கிறேன் .

 20. நண்பர் பிரத்யுஷ் அவர்களுக்கு மிக்க நன்றி . இங்கேயே டைப் செய்யலாம் என்று தெரியாமல் இருந்தேன் !

 21. நன்றி திரு பிரத்யுஷ் அவர்களே எனக்கும் இது தெரியாமல் இருந்தது.

 22. மிக்க நன்றி நண்பர் பிரத்யுஷ் அவர்களே.

 23. அருமையான கட்டுரை வளர்க உமது சேவை
  ம.மணிவண்ணன்
  புதுவை

 24. மிக்க நன்றி நண்பர் பிரத்யுஷ் அவர்களே,

 25. சதீஷ் அவர்களின் ,பாபு அவர்களின் ,தூயவன் அவர்களின் , RGK அவர்களின் நட்பு கிடைக்க காரணமாய் இருந்த தமிழ் ஹிந்துவிற்கு என் நன்றிகள்

  நட்பு பாராட்டி,
  பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

 26. இணைய வசதியும் இந்த மாதிரியான இணையபக்கங்களின் தொடர்பும் கிடைப்பவர்கள் தானே இந்த சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளமுடியும். ஆயிரக்கணக்கான இந்து ஏழைகள் தினமும் ஏமாற்றப் படுகிறார்கள். அவர்களுக்கு எப்படி புரியவைப்பது. சிந்திக்கும் திறன் அழிக்கப்படுகிறது, அதற்கு என்ன செய்வது?

  நன்றி

 27. thooyavan nnu per vecha keduketta paavi nee..un manasula muzhukka azhukku.. un udambil oduradhu prostitute raththamo? maasatra yesuvai nee yendaa naaye avathooru pesare? unakku adharkku thakka sanmaanam kidaikkum naaye..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *