மாயக்கரங்கள் (சிறுகதை)

cutout-tamil“ஆத்தா, எந்திரன் படம் பார்த்துட்டேன்….” என்று கத்திக் கொண்டே வந்தான் ரஜினி முத்து. முகம் எல்லாம் கருப்பும் சிவப்புமாக வண்ணப் பொடிகள் ஒட்டி மீசையில் வேர்வை சொட்ட கோமாளி மாதிரி வந்து நிற்கிற பிள்ளையைப் பார்த்து “டேய்… ” என்று கூப்பிட்டுக் கொண்டு வந்த அவன் அம்மா வசந்திக்கு சிரிப்பு வந்து விட்டது.

“என்னடா, எதோ வேஷம் கட்டிட்டு நிக்கப் போறேன்னு சொன்னே, அப்படியே வந்துட்டியா?” என்றாள்.

“அதான் சொன்னேனே, எந்திரன் படத்துல, ரஜினி மாரியம்மன் வேஷம் போட்டது மாதிரி கத்தி கத்தி கபடா எல்லாம் கட்டிக்கிட்டு போய் தியேட்டரையே கலக்கிட்டோம்ல..” என்றான் முகத்தில் பெருமையாய்.

“ஏண்டா, சாமிக்கு கரகம் எடுத்தாலும் ஏதாவது புண்ணியம் கிடைக்கும், இப்படி தியேட்டர் வாசல்ல போய் நின்னியின்னா என்ன புண்ணியம் அதுல…”

“தோ பாரு, நான் உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன், எனக்கு சாமி வேற, தலைவர் வேற இல்ல, தலைவருக்காக நான் எதுவும் செய்வேன்.”

“அது சரி, வீட்டுல இருக்குற காசெல்லாம் எடுத்துட்டு போய் படம் பாத்துட்டு வந்துட்ட, இப்படி பண்ணின்னா சோத்துக்கு என்ன செய்யறது?”

“மா, ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவதான் தலைவர் படம் வருது. நா ரசிகர் மன்ற மெம்பர் வேற. இந்த ஊர்ல பட வசூல் குறைச்சலா ஆயிடுச்சின்னா, எங்களுக்குத்தானே அசிங்கம்?”

“அப்போ அடுத்த வாரம் மெயின் ரோடு மாரியம்மன் கோவில்ல திருவிழா வருமே, அப்போ காசுக்கு என்ன பண்ணுவே?”

“அதுக்குத்தானே இப்பவே வசூலுக்கு போறேன்… இன்னிக்கு சாயந்திரத்திலிருந்து பாரு, நம்ம தெரு சனங்களோட போயி, ஊர் முழுக்க வசூல் செஞ்சி போன வருசத்தை விட வசூலை அதிகமாக் காட்றேன் பாரு!” என்றான்.

***

“சார்… அம்மா.. அய்யா… மாரியம்மனுக்கு கூழு காச்சி ஊத்தறோம். நாலு ஏழைங்க சாப்பிடுவாங்க. வசூலுக்கு வந்திருக்கோம். உங்களால முடிஞ்சதைக் கொடுங்க”

லொக் லொக் என்று உண்டியலை குலுக்கினான் ரஜினி முத்து. கூடவே நாலைந்து இளைஞர்கள்.

“என்னப்பா.. இவ்வளவு நேரம் இந்த வீடு முன்னாடி நின்னு கூவிட்டு இருக்கோம்… யாருமே வரல.. வீட்டுல ஆள் யாரும் இல்லையா?”

“இரு, உள்லேர்ந்து ஒத்தர் வராரு பாரு..”

நெடு நெடுவென்று ஒருத்தர் வந்தார். தலையில் குல்லாயை தடவிக் கொண்டே “என்ன வேணும்?” என்றார்.

“மெயின் ரோடு அம்மன் கோவிலுக்கு…”

“தம்பி, நாங்க வேற ஆளுங்க. இங்க வந்து கேக்கறியே.. இந்தத் தெருவில யார் வீட்டுலயும் கொடுக்க மாட்டாங்க.”

“போன வருஷம் கூட கொடுத்தாங்களே…”

“அவங்க எல்லாம் இப்போ காலி பண்ணிட்டு போய்ட்டாங்க. இப்போ இருக்கிற யாரும் கொடுக்க மாட்டாங்க.”

அவநம்பிக்கையுடன் உண்டியலைக் குலுக்கிக் கொண்டே நகர்ந்தவர்களிடம், “தம்பி…” என்றார் பெரியவர் “ஆமா, உங்க சாமியை இந்த பக்கம் ஊர்வலமா தூக்கிட்டு வரப் போறீங்களா”

“ஆமா, அப்படித்தானே வருசா வருசம் சாமி ஊர்வலம் வருது.”

“தம்பி, நான் சொல்லுரத கேளு, இந்த வருடத்திலிருந்து இந்த பக்கம் தூக்கிட்டு வரக் கூடாது”

“ஏன்?”

“என்ன உனக்கு புரியலையா, இந்த பக்கம் வரக் கூடாதுன்னா வரக்கூடாது. சொல்றோமில்ல..”

***

வசூலுக்குப் போய் விட்டு வந்து, அப்போது தான் சாப்பிட உட்கார்ந்தான் ரஜினி. மனதில் அந்த பெரியவர் சொன்னது உறுத்திக் கொண்டே இருந்தது.

“அம்மா, அந்த ஆள் ஏம்மா அப்படி சொன்னான்? சாமி ஊர்வலம் அவங்க தெருப் பக்கம் வரக் கூடாதாமே, இத்தனை வருசமா வந்தது தானே”

“நமக்கு ஏண்டா அவனுங்க வம்பெல்லாம்?”

“இல்ல, அவனுங்க மட்டும் சாமி கும்பிடுறது இல்லையா, நம்பள யார் அவன் தடுக்க? ஒரே ஊர் தானே நாம எல்லாரும், பக்கத்து பக்கத்துல இருந்துட்டு இப்ப திடீர்னு இப்படி சொன்னா எப்படி?”

“இரு வாசல்ல யாரோ நிக்கறாங்க.. பார்த்துட்டு வரேன்.”

“முத்து! போலீஸ்டா…”

“இங்க முத்து யாரு?”

“என் மகன்தான், ஐயையோ, என்ன பிரச்னை அய்யா?”

“அவன இன்ஸ்பெக்டர் அழைச்சிட்டு வர சொன்னார்”

***

போலீஸ் ஸ்டேஷன். ரஜினி முத்துவும் நண்பர்களும் கையை பிசைந்து கொண்டு.

“நீங்க தானேடா அவங்க தெருவுல போய் கலாட்டா பண்ணது. ”

“அய்யா நாங்க கலாட்டா செய்யல..”

“செருப்பு பிஞ்சி போகும் நாய்களா.. என்ன மதச் சண்டைக்கு அலையுரீங்களா…”

“அய்யா..”

“அந்தத் தெரு வழியா சாமியை தூக்கிட்டு போகக் கூடாது. மீறி போகற எண்ணம் வந்துது லாடம் கட்டிருவேன்!”

“அவங்க வந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க, மரியாதையா ஊர்வலம் தூக்கிட்டுப் போகமாட்டோம்னு எழுதி இதுல கையெழுத்து போடுங்க. ”

“அய்யா வருசா வருசம்…”

“அதெல்லாம் பேசாதே, அது போன வருசம்… இப்போ முடியாது!”

“சும்மா மிரட்டாதீங்க சார், எங்களுக்கும் ஆளு இருக்கு!” குரல் கொடுத்தான் ராஜூ. “எங்க கட்சில சொன்னா பிரச்னை பெருசாகிடும்..”

சொல்லும் போதே “பளார்…” என்று அறைந்தார் இன்ஸ்பெக்டர்.

***

“தம்பி, நாங்க சாமி ஊர்வல விஷயத்தை பெரிய லெவெல்ல பேசிட்டோம். போலீஸ் தடை பண்ண மாட்டாங்க, பாதுகாப்புக்கு வருவாங்க. நாங்க பாத்துக்கறோம்” உள்ளூர் இயக்க பிரமுகர் சொன்னார்.

***

amman-lightsஆயிற்று. திருவிழா அமர்க்களமாக ஆரம்பித்து விட்டது. சீரியல் விளக்குகள் பிரகாசத்துடன், லவுட் ஸ்பீக்கரில் பக்தி சினிமா பாட்டுகள் அலற, ஜே ஜே என்று களை கட்டியது. ரஜினி முத்து தான் முன்னணியில். மாரியம்மன் தோற்றத்திலேயே மூங்கிலால் சட்டம் கட்டி சீரியல் லைட் கோர்த்து கட்டிக் கொண்டிருந்தான்.

“முத்து,” குழறினான் ராஜூ, “எனக்கு பயமாக இருக்கிறது. பெரிய கலவரம் வருமோன்னு… ”

“ஏண்டா, இன்ஸ்பெக்டர் முன்னாடி என்னவோ தைரியமா முன்னணி, இயக்கம், கட்சி ஆளுங்க அப்படி இப்படின்னு கொரலு உட்ட..”

“நீ வேறடா, அவங்க எல்லாம் பிரச்னைன்னா சப்போர்ட் பண்ணுவாங்க, ஆனா நாளைக்கு போலீஸ், ஜெயிலு, கோர்ட்டுன்னு போனா விலகிடுவாங்க. எனக்கு பயமா இருக்கு.”

“அதெல்லாம் ஒன்னும் நடக்காது. சாமியை நம்பு.”

“அந்த தெரு வழியா சாமி ஊர்வலம் போறது ஆபத்து. அவனுங்க ஆளுங்களோட தயாராயிட்டானுங்களாம்…. ”

“சும்மா பயமுறுத்தாதேடா”

***

பாண்ட் வாத்தியத்துடன் ஊர்வலம் துவங்கியது. சாமி தூக்குபவர்களில் ரஜினி முத்துவும் நின்று கொண்டிருந்தான்.

மெல்ல மெல்ல நகர்ந்த ஊர்வலம் மூன்று தெருக்களைக் கடந்து அந்த தெருவுக்குள் பிரவேசித்தது.

“முத்து, எல்லாரும் இப்படியே திரும்பிடலாமா”

“சும்மா இருடா.. ஒன்னும் ஆகாது.”

“டேய், பொட்டை பசங்களா, எவண்டா அம்மன இந்த தெருவுக்குள்ள வரக் கூடாதுன்னு சொன்னது?” யாரோ ஒருவன் குரல் கொடுத்தான்.

“என்னடா சலசலப்பு, இவன் யார்ரா கொரலு உடறது…”

அதற்குள் அந்த இடத்தில் ஒரு செருப்பு பறந்து வந்து விழுந்தது.

தொடர்ந்து கற்கள் பறந்து வந்தன.

“டேய், சாமியைத் தூக்கிட்டு ஓடுடா… ”

முத்துவை நோக்கி ஒரு குரல்.

முத்துவும் இன்னும் சிலரும் திணறி சாமியைத் தூக்கிக் கொண்டு ஓட, தெருவில் விளக்கு அணைந்தது.

“முத்துஊஊ …”

அம்மனைத் தூக்கிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் கத்தினான்.

முத்து திரும்பிய பக்கத்தில்  வேகமாக அவர்களை நோக்கி சிலர் அரிவாளுடன் வந்து கொண்டு இருந்தனர்…

religiouscurfew

 

***

“அப்புறம் நாங்க ஊர விட்டே வந்துட்டோங்க. என்ன அந்தக் கலவரத்துல என் கையதான் வெட்டிட்டாங்க. விடலையே நானு, அம்மனை ஒரு பக்கம் தூக்கிட்டு ஓடினோம். அப்போ எங்கிருந்து அவ்வளவு பலம் வந்ததுன்னு தெரியல. கோவிலுக்கு திரும்ப போனதும் மயக்கம் வந்துட்டது. ஆனா எப்படி அப்படி ஓடினேன்னு எனக்கே புரியல. ஆச்சு இதெல்லாம் நடந்து ரெண்டு மூணு வருஷம் ஆகிப் போச்சு.”

“அடப்பாவமே, போலீஸ் என்ன செஞ்சுது? அதுக்கப்புறம் என்ன நடந்தது?”

“அந்த கலவரத்துல எங்க பசங்க நாலைஞ்சு பெற கைதி பண்ணி பெருசு பெருசா கேஸ் போட்டுட்டாங்க… எந்தக் கட்சியும் அதுக்கப்புறம் உதவிக்கு வரல. நான் ஆஸ்பத்திரியில ரெண்டு மூணு வாரம் இருந்ததால தப்பிச்சேன். ஒரு சாமி ஊர்வலத்துக்காக அரிவாளால வெட்டக் கூடிய ஆளுங்க இருக்காங்கன்னு அதுநாள் வரைக்கும் தெரியல”

“என்னமோ போங்க..” 

“இப்போ கொஞ்ச நாள் முன்னாடி அந்தப் பக்கத்திலேர்ந்து தெரிஞ்ச பையன் ஒருத்தன் வந்திருந்தான். அவன் சொல்லித் தான் தெரியும். நாங்க இருந்த தெருவில இருந்தவங்க நிறைய பேர் வீட்டைக் காலி செஞ்சிட்டு வேற வேற எடத்துக்கு போய்ட்டாங்க. இப்போ கலவரம் எதுவும் நடக்கறதில்ல.”

“கோவில் என்ன ஆச்சு?”

“அது இன்னும் இருக்கு. திருவிழா எதுவும் கொண்டாடறதில்ல, ஊர்வலம் அது அதுன்னு எதுக்கும் அம்மன் வெளியே வரதில்லையாம். யாரோ தம்பிரான் சாமி வந்து காசு போட்டு கோவில் சுத்தி சுவரெல்லாம் எழுப்பி இருக்காங்க, ஒண்ணு தெரியுமா கோவிலைச் சுத்தி  சுவரோரமா கடை வச்சிருக்கிறது பூராவும் அவனுங்க தானாம்”

“அடப்பாவிகளா, வேற யாருமே எதுவும் செய்ய முடியலையா?”

“என்னங்க பண்ணுறது, அரசாங்கம் போலீசு எல்லாம் அவங்களுக்குத்தான் உதவி செய்யுது. அந்த சம்பவத்துக்கப்புறம் மனிசங்க மேல நம்பிக்கையே போயிடுச்சிங்க. என்னவோ, என்னைப் பொருத்தவரைக்கும், இன்னமும் நாம தருமத்தைக் காப்பாத்தினா, தருமம் நம்மைக் காப்பாத்தும்-னு நம்பறேன். என்னால முடிஞ்ச வரைக்கும் அம்மனுக்காக போராடி கையை இழந்துட்டேன். கை போனாலும் இப்போ இந்த ஊர்ல வந்து  தனியா ஏதோ கடை போட்டு போழைச்சிட்டு இருக்கேன்.  அந்த அம்மன்தான் எங்க குடும்பத்தைக்  காப்பாத்துது-னு நினைக்கறேன். மனிசங்க மோசம் செய்தாலும் சாமி மோசம் செய்யாதுன்னு ஒரு நம்பிக்கை மட்டும் இருக்கு.  சாமி புண்ணியத்துல காலம் ஓடுது. வேற என்ன சொல்ல…”

“இந்த ஊர்ல உங்க ஊர் மாதிரி பிரச்சனை எதுவும் இப்ப வரைக்கும் இல்லங்க” என்று நான் சொல்லும்போதே, பக்கத்திலிருந்து “ஓ” என்ற இரைச்சலுடன் வழிபாட்டு அழைப்பு லவுட் ஸ்பீக்கர் கூவியது.

“இனிமே என்ன ஆகுமோ…, சரி நான் வரங்க” என்று நகர்ந்தேன். அனிச்சையாக ஒரு கணம் கடையில் மாட்டி இருந்த படத்தில் மாரியம்மன் படத்தை நான் திரும்பிப் பார்க்க, அம்மன் கண்ணசைப்பதுபோல் இருந்தது. ஊனமுற்ற கை அசைய, இருக்கும் ஒற்றைக் கையால் அவன் மாரியம்மனைத் தொட்டு வணங்கிக் கொண்டிருந்தான்.

13 Replies to “மாயக்கரங்கள் (சிறுகதை)”

 1. Pingback: Indli.com
 2. படிக்கும் குமரிமாவட்ட காரர்களுக்கு பிள்ளையார்புரம் சம்பவம் நினைவு வந்தால் ஆசிரியர் பொறுப்பல்ல என ஒரு குறிப்பும் கொடுத்திருக்கலாம்

 3. முட்டாள் முததுவை நினைத்து ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும் மரியம்மனுக்கு கூழ் ஊத்த முடியாத இயலாத நிலையை நினைத்து மனம் வெதும்பி நெஞ்சுக்குள் ஏதோ பந்து உருளுகிறது. சமகால இலக்கியச் சூழலில் ஏனோ இதுபோன்ற விழிப்புணர்வு கதைகள் படிப்பதற்கு கிடைப்பதில்லை. அந்தவகையில் சமீபத்தில் வெளியான சிறுகதைகளில் உன்னதமான சிறுகதை என்று சிபாரிசு செய்ய கடைமைப்பட்டிருக்கிறேன். சோடா ப்ளீஸ்!

 4. எதிர் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மாவட்டம் தோறும் நடைபெற வாய்ப்புகள் அதிகமுள்ளது.

  காரணம் நம்மிடையே ஒற்றுமை இல்லை,அதிக காசுக்கு ஆசைப்பட்டு அவர்களிடம் இடத்தை விற்கும் தவறை பலர் செய்கின்றனர். நம்மவர்கள் அந்த இடத்தை வாங்க தயாராய் இருந்தும் இடத்தின் மதிப்புக்கு முமடங்கு கொடுத்தேனும் வாங்கிவிட அவர்கள் தயாராய் உள்ளனர். இடம் விற்பவரும் அதிக பணத்துக்கு ஆசை பட்டு அவர்களிடம் தான் விற்கின்றனர்.அதிக பணம் கொடுத்து வாங்க நம்மவர்க்கு பணமுமில்லை மனமுமில்லை என்ன செய்வது?இடத்தை விற்பவர்களையும் ஒன்றும் சொல்வதற்கில்லை,பணத்தால் அடித்து வளைக்க ஆரம்பித்து விட்டார்கள், இப்போதே ஒரு சில ஊர்களில் கணிசமான அளவு அவர்களிடம் போய்விட்டது.மிச்சம் மீதி உள்ளவற்றையும் தொல்லை கொடுத்தும் பிரச்னை செய்தும் பிடுங்கி விடுவார்கள். பெரும் பகுதி அவர்கள் வசம் போனபின் என்ன ஆகும்? . மேலே உள்ள சிறுகதை கிராமம் தோறும் அரங்கேற ஆரம்பிக்கும்.
  கண்ணெதிரே நாம் எல்லாவற்றையும் இழந்து கொண்டு இருக்கிறோம்.

  சம்பவாமி யுகே யுகே, எப்போதோ?

 5. As dravidan has rightly said, this will continue to happen till there is unity amongst hindus.

  My neighbour was planning to sell his house. Though he had higher offers from non hindus, he was steadfast in refusing to sell to them & succeeded also.

  Another friend of mine who sold his house was more forthright. He told his brokers strictly that
  they should not bring any muslim clients.

 6. ஹிந்துக்கள் ஒன்று பட வேண்டும்!
  நன்றி!

 7. Dravidan is right! I think they deliberately buy lands and settle near temples. Initially they show-off like peace-loving people but once their strength increases they show their real intentions.

 8. Actual police force has long become politicians tail and Politicians are just dogs wagging tail for whoever throws biscuits(votes). I think Media(esp National ones like times now, headlines today, ndtv, CNN) is the new age police. Even though these channels are pro-Minority(so called), I think we should use them to highlight the ground realities which will force the government to take action.

 9. நாட்டில் சில பகுதிகளுக்கு மட்டும் குடிகளில் பெரும்பான்மையினரை செல்லக் கூடாது என்று கூறுவது என்ன வகை இறையாண்மை? இப்படிப் பிரிக்கும் வரை ஆண்மை இல்லாத தேசம் என்று சொல்ல வேண்டியது தான்.

 10. திரு. திராவிடன் (தென்னாடுடயான்) அவர்களே …
  இந்துக்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள் உண்மைதான். அந்த ஒற்றுமையை ஏற்படுத்துவது யாருடைய பொறுப்பு திராவிட கட்சிகளின் பொறுப்பா இல்லை திராவிட இயக்கங்களின் பொறுப்பா சொல்லுங்கள் . இந்துசமயத்தின் மற்றும் இந்துகளின் தற்போதய நிலையை மக்களிடம் உணர்ச்சிபூர்வமாக கொண்டு சென்று ஒற்றுமையை ஏற்படுத்த இந்துசமயத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிகொள்ளும் மடங்களும், ஆசிரமங்களும் ஆதினம்களும், ஹிந்துமத இயக்கங்களும் தான் அந்த சீரிய பணியை செவ்வனே செய்ய வேண்டும். அனால் எந்த மடமாவது ஆதினமாவது அந்த பணியை ஒன்று பட்டு செய்து இருக்கிறார்களா . இவர்களின் நோக்கம் எப்போது தங்கள் மடத்தின்,ஆசிரமத்தின் அடுத்த கிளையை எந்த நாட்டில் தொடங்கலாம். நன்கொடை என்கிற பெயரில் எப்படி வெளிநாட்டில் இருந்து dollar மற்றும் euro களை அறுவடை செய்யலாம். செய்து எப்படி ac கார் ஆசிரமம் என்கிற பெயரில் அடம்பர மாளிகை இன்னும் பல சொகுசான வாழ்கையை அனுபவிக்கலாம் என்கிற பேரானந்த உணர்வை தவிர இவர்களுக்கு வேற என்ன இருக்கிறது .மக்களுக்கு எளிமையை தூய்மையை கற்று தர வேண்டிய மஹான்கள் மகாராஜாவை போல் ஆடம்பரமாக சொகுசா இருந்தால் இவர்கள் பேச்சை யார் கேட்க முன்வருவார்கள். ஆசிரமம், மடம் தியானபீடம் வைத்து நடத்தும் எந்த ஹிந்துமத குரு இன்று எளிமையாக இருக்கிறார் என்று சொல்லுங்கள் பார்போம். மேல்தட்டு மக்கள் முன்பு ஆன்மீக உபன்யாசம் செய்வது இலவசமாக கற்று தரவேண்டிய பண்டைய ரிஷிகள் முனிவர்கள், சித்தர்கள் போன்றோர்கள் மனிதகுலம் மேன்மைஅடைய அவர்கள் விட்டு சென்ற யோக தியான முறைகளை இவர்கள் உருவாக்கியது போல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து menucard போட்டு காசு பறிப்பது என்பதில் தான் இவர்கள் நோக்கம் இருக்கிறது . ஒரு வேளை உணவுக்கு கூட வழி இல்லாமல் திண்டாடும் ஏழை ஹிந்துகுடும்பத்தை பற்றி இவர்கள் என்றாவது நினைத்து பார்திருப்பார்களா அப்படி நினைத்து பார்க்கும் ஒரு ஹிந்து மடாதிபதியை சொல்லுங்கள் பார்போம். அப்படி ஒருவர் இருந்துஇருந்தால் என்றோ இந்தியா இந்துராஷ்டரம் ஆகி அது இழந்த தெய்வீக ஒளியை மீண்டும் பெற்று இருக்கும். இந்தியாவிடம் ஞானசெல்வம் இருக்கிறது மேலை நாடுகளில் பொருட்செல்வம் இருக்கிறது அங்கே ஞானத்திற்கு பஞ்சம் இருக்கிறது இங்கே பொருளுக்கு பஞ்சம் . நம்முடைய ஞான செல்வத்தை அவர்களுக்கு கொடுத்து அவர்களின் பொருட்செல்வத்தை இங்கு கொண்டுவந்து இந்தியாவின் வறுமையை போக்க வேண்டும் எந்த இந்தியனும் பட்டினியும் நோய்நொடியும் இல்லாமல் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்த முதலும் கடைசியுமான ஒரே ஹிந்துமகான் சுவாமி விவேகானந்தர் மட்டும் தான் . அவருக்கு பிறகு வந்த யாரும் இந்துக்களை பற்றியோ அல்லது இந்த பாரதத்தை பற்றியோ எள்முனை அளவும் கவலைப்படவில்லை .எல்லோரும் தான் இருக்கும் வரை ராஜபோகத்தோடு சகல சௌபாக்கியங்களோடு இருக்க வேண்டும் என்கிற சுயநலத்தை பற்றி தான் நினைத்தார்களே தவிர பாரதத்தின் பண்பாட்டை மீட்டு எடுக்கவேண்டும் என்று யாரும் எண்ணவில்லை . இந்த நிலையில் இவர்களுக்கு இந்துக்களின் பறிபோன பறிபோய் கொண்டுஇருக்கிற உரிமைகளை மீட்டு எடுக்க ஏது நேரம்.ஆகவே ஹிந்துக்களே நாம் ஒன்றுபடுவோம் பாரத ஹிந்து கலாச்சாரத்தின் முட்டுகட்டையாக இருக்கும் “இந்தியா மதசார்பற்ற நாடு” என்னும் மாயையை உடைத்தெறிவோம் . நன்றி

 11. தாயுமானவன் அவர்களின் கருத்தை படித்ததும் ‘நாம் மட்டும் தண்ணீர் விட்டால் தெரியவா போகிறது’ என்று ஊரில் உள்ள அனைவரும் நினைத்த கதைதான் நினைவுக்கு வருகிறது. இங்கே lead செய்வதற்கும் ஆள் இல்லை lead செய்யப்படுவதற்கும் ஆட்கள் இல்லை. அனைவருக்கும் அன்றாட அலுவல்களும் சுய முன்னேற்றமும் மட்டும்தான் கவனத்தில் இருக்கிறது. comment போட்டதும் கடமையை செய்து விட்டது போல் உணரும் என்னைப் போல் உள்ளோர்தான் கோடிக்கணக்கில்… Still BJPக்கு கிடைக்கும் ஆதரவு இந்துக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் முறை போல்தான் தோன்றுகிறது. காங்கிரஸ், CPI(M) போன்ற கட்சிகள் BJP செய்வதை எல்லாம் எதிர்க்காமல் BJPயின் support base பற்றியும் அது எப்படி வளர்ந்தது என்பதைப் பற்றியும் யோசித்தார்களானால் minority appeasement என்ற பெயரில் இந்துக்களுக்கு அவர்கள் செய்து வரும் துரோகச் செயல்களை நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் they behave like headless chicken and increase minority appeasement activities and justify the need for BJP!

 12. திரு தாயுமானவன்,
  நிச்சயம் ஆதினங்கள்,மடங்கள் மற்ற இந்து அமைப்புகள் எல்லாம் இந்துக்களின் முன்னேற்றத்திற்காக பாதுகாப்பிற்காக எதுவும் செய்யாமலும் இல்லை, அதையே தங்களின் சேவையாக செய்து கொண்டும் இல்லை. ஒரு சில அமைப்புகள் தங்களால் ஆனவரை செய்து கொண்டுதான் உள்ளன.இவற்றின் ஒரு சில அமைப்புகளினால் தான் இன்னும் ஓரளவு ஒற்றுமையும் அதனால் பாதுகாப்பும் இன்னும் இந்து சமுதாயத்திற்கு கிடைத்து கொண்டிருக்கிறது.அவற்றுள் பல கேப்மாரி மொள்ளமாறி இருக்கத்தான் செய்கிறது அவையே ஸ்டேடஸ் மற்றும் பண அறுவடை விசயங்களுக்கு அலைகின்றன
  மேலும் அவர்கள் இன்றைய கலகங்களின் அராஜக இந்து எதிர்ப்பு மற்றும் போலி செகிலரிசத்துக்கு பயந்து அவர்களிடமிருந்து தங்களை காத்து கொள்ளவே மதம் சார்ந்த செயல் பாடுகள் மற்றும் இந்துக்களை ஒருஞ்கினைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடவே பயபடுகின்றனர். இந்த செயல்களில் இருந்து விலகி தனைகளை காத்து கொள்ளவும் தங்கள் அமைப்பிற்கு பாதிப்பு வராமல் காத்து கொண்டு அவர்கள் வழியில் செல்வதுமாக பலர் உள்ளனர்.
  ஆதினங்களுக்கும் சாமியார்களுக்கும் மற்றும் இந்து அமைப்பின் தலைவர்களுக்கும் நான் சப்போர்ட்டர் என்று நினைக்க வேண்டாம் அவர்களினால் சில நன்மையையும் தீமையும் ஏற்பட்டாலும் , இவற்றில் சில அமைப்புகளினால் தான் இன்னும் இந்து மதம் உயிர் வாழ்கிறது. பிற சக்திகளால் மதம் மாற்றமுடியாமல் இருப்பதற்கு ஒரு சில இந்து அமைப்புகளின் ஆன்மிக சேவையே காரணமாக உள்ளது.
  இங்கே ஓரிடத்தில் இந்துக்கள் பல இடங்களில் ஒருங்கிணைய அவர்களை அறியாமலோ அறிந்தோ அவர்களும் ஒரு காரணமாக இருக்கிறார்கள்.

  நாம் தான் நமக்குள் ஒற்றுமை வளர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  நாம் (ஒவ்வோர் சராசரி இந்துவும்) நமக்குள்ளான ஒற்றுமைக்கும் விழிப்புணர்வுக்கும் பொறுப்பு ஏற்கவேண்டும்.ஒவ்வொருவரும் உணர்வுடன் செயல் பட தொடங்கினால் எல்லாம் தானே நாளடைவில் சரியாகும்.

  கிருகச்தர்கலாகிய நமக்கு தான் சமுகத்தை பாது காக்கும் பொறுப்பு அதிகம்
  சன்யாசியை விட சமுகத்தை காக்க வேண்டிய பொறுப்பு அதிகம் நமக்கே.

  சந்நியாசி கபட சந்நியாசி பற்றி நாம் ஏன் கவலை பட வேண்டும். அவர்களில் சிலரால் தெரிந்தோ தெரியாமலோ நம் மதத்திற்கு நன்மை ஏற்படுகிறது. அவர்களின் சேவைகளை அங்கீகரிப்போம். மற்ற கபட சந்யசிகளை ஓரம் கட்டுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *