அயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை

ram_sita_lakshmanயோத்யா என்ற சொல்லுக்கு ”போர் தொடுக்கப் படாத பூமி” என்று பொருள்.இந்துக்கள் போற்றி வணங்கும் ஏழு புனித நகரங்களில் முதன்மையானது ஸ்ரீராமனின் ஜன்மபூமியாகிய அயோத்தி. ஸ்ரீராமனும் அயோத்தியும் இணைபிரியாதவை.

அருந்திறல் இழந்த அயோத்தி போல
பெரும்பெயர் நகரம் பெரும்பேதுற்றது

என்று 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிச் சென்றார் செந்தமிழ்ச் சேரநாட்டு இளவல் இளங்கோவடிகள். கோவலனும் கண்ணகியும் புகார் நகரைப் பிரிந்ததும் அது “ராமன் இல்லாத அயோத்தி போல” ஆயிற்று என்று உவமை சொல்கிறார்! அப்படி என்றால் எந்த அளவுக்கு ராமனும், அயோத்தியும் பழந்தமிழர் பண்பாட்டில் வேரூன்றியிருந்தனர் என்று ஊகிக்கலாம்.“அங்கண் நெடுமதிள் புடைசூழ் அயோத்தி என்னும், அணிநகரத்து உலகனைத்தும் விளக்கும் சோதி”, “அயோத்தியர் கோமானைப் பாடிப் பற!” என்றெல்லாம் ஆழ்வார்களும் அயோத்தி நகரைப் பரவசத்துடன் பாடியிருக்கிறார்கள்.

பல நூறு ஆண்டுகளாக இந்துக்களின் மாபெரும் புனிதத் தலமாக விளங்கிய அயோத்தி 1528ல் இஸ்லாமியப் படையெடுப்பாளன் பாபரால் சிதைக்கப் பட்டது. அங்கிருந்த எழில்மிகு ஸ்ரீராமர் ஆலயம் தகர்க்கப் பட்டு ஆக்கிரமிப்புச் சின்னமாக மசூதி எழுப்பப் பட்டது. அப்போதும், அதைத் தொடர்ந்த பல நூற்றாண்டுகளிலும் ராம ஜன்ம பூமியை மீட்க மன்னர்கள், படைவீரர்கள், சாதுக்கள், சாமானியர்கள், வனவாசிகள் என்று பல தரப்பட்ட இந்துக்களும் தொடர்ந்து போராடி ரத்தம் சிந்தியுள்ளனர்.

அயோத்தி உள்ளிட்ட புனித நகரங்கள் மீட்கப் பட்ட காலங்களில் இந்துக்கள் எழுப்பிய சில கோயில்கள் மீண்டும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளரின் கை ஓங்குகையில் தொடர்ந்து தகர்க்கப்பட்டு வந்தன; பிறகு மீண்டும் மீட்கப்பட்டு மீண்டும் எழுந்தன.

ராமஜன்மபூமியில் 1700களில் இஸ்லாமியர் நடவடிக்கை முற்றாக நின்று போய் ராமர் வழிபாடு மட்டுமே தொடர்ந்தது. 1885ல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மஹந்த் ரகுவர் தாஸ் அந்த பூமி இந்துக்களுக்கு உரிமையானதே என்று வழக்குத் தொடர்ந்தார். 1949ல் அங்கு தோன்றிய குழந்தை ராமனின் தெய்வத் திருவுருவம் தொடர்ந்து இடையறாது வழிபடப்பட்டு வருகிறது. 1984ல் ராமஜன்மபூமியை மீட்க நாடு தழுவிய இயக்கம் உருவாகத் தொடங்கியது. 1986ல் உள்ளூர் மாஜிஸ்ரேட் நீதிமன்ற உத்தரவின் படி ராமஜன்ம பூமி கோயிலின் கதவுகள் பொது வழிபாட்டுக்காக திறந்து விடப்படுகின்றன. 1989ல் அயோத்தி இயக்கம் தேசிய அளவில் பெரும் ஜ்வாலையாக வளர்கிறது; ராமர் கோவிலுக்கான அஸ்திவாரம் போடப் படுகிறது. 1990ல் முதல்கட்ட கரசேவைக்காகச் சென்ற ராமபக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு நூற்றுக் கணக்கானோர் உயிரிழக்கின்றனர். 1992ல் கரசேவைக்காகக் கூடிய பெரும் மக்கள் திரளின் உணர்ச்சிக் கொந்தளிப்பில் பாபர் கட்டிடம் இடிக்கப் படுகிறது. தற்காலிகமாக ராமர் கோயில் உடனடியாக எழுகிறது.

ayodhya_sarayu_ghat

இதைத் தொடர்ந்து 1993ல் நாடு தழுவிய கலவரங்கள் வெடித்தன; மும்பை குண்டுவெடிப்புகளில் நூற்றுக் கணக்கானேர் மடிந்தனர். 2003ல் அயோத்தி அகழ்வாராய்ச்சி அரசு அனுமதியுடன் நடந்து அதன் முடிவுகள் வெளிவருகின்றன. 2005ல் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஜன்மபூமி திருத்தலத்தைத் தாக்க முயன்று காவல் படையினரால் கொல்லப் படுகின்றனர். 2009ல் ராமஜன்மபூமி விவகாரத்தை ஆராய அமைக்கப் பட்ட லிபர்ஹான் கமிஷன் தன் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்கிறது. 2010 செப்டம்பர் 30 மாலை 3.30 மணிக்கு, சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளாகத் தொடரும் இந்த வழக்கில் முதல் கட்டத் தீர்ப்பு அலகாபாத் நீதிமன்றத்தால் வழங்கப் பட இருக்கிறது.

1980-90களில் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களின் களமாக இருந்த இந்த பிரசினை நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் பக்குவத்துடன் விவாதிக்கப் படும், ஏற்கப் படும் சூழல் உருவாகியிருப்பது இந்திய ஜனநாயகமும், சமுதாயமும் பக்குவமடைந்து வருவதை உணர்த்துகின்றது.

ராமஜன்மபூமியை மீட்பதற்காக நூற்றாண்டுகளாக நடந்துவரும்  அறப்போராட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இந்தத் தீர்ப்பு விளங்கும் என்று எதிர்பார்ப்போம்.   தீர்ப்பின் தன்மையைப்  பொறுத்து  சட்டரீதியான அடுத்தகட்ட  நடவடிக்கைகளை  சம்பந்தப் பட்ட இந்து இயக்கங்கள் எடுக்கும் என்றும் எதிர்பார்ப்போம்.    எதுவானாலும், நாட்டில் நிலவும் அமைதி குலையாமல் இருக்கவேண்டும் என்றும் வேண்டிக் கொள்வோம்.

ram_ayodhyaதேசமே தீர்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சிந்தித்துப் பார்க்க சில எண்ணச் சிதறல்கள் –

னது நீண்ட அரசியல் பயணத்தில், தீர்க்கமான பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த முதன்மையான நிகழ்வாக அயோத்தி இயக்கத்தைக் கருதுகிறேன். நமது அரசியலில், சமூகத்தில், ஏன் நமது உண்மையான தேசிய அடையாளம் என்ன என்ற உணர்விலேயே கூட அந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது என்று சமகால இந்திய வரலாற்றைப் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் சான்று பகர்வான். தெய்வீக இயற்கையின் விதியே இந்த இயக்கத்தில் ஒரு மையமான கடமையை நிறைவேற்ற என்னை இதில் ஈடுபடுத்தியது என்று நம்புகிறேன்.

எல்.கே.அத்வானி (வாழ்க்கை வரலாறு – My Country, my life. பக்-341)

தென்னாட்டின் சில பழைய கோயில்களும் குஜராத்திலுள்ள சோமநாதபுர ஆலயமும் ஏராளமான சரித்திர ஞானத்தை உங்களுக்கு அளிக்கும்; எத்தனையோ புத்தகங்களைப் படிப்பதை விட அதிகக் கூர்மையான சூட்சுமப் பார்வையை உங்களுக்கு அவை தரும்.

கவனித்துப் பாருங்கள். இந்தக் கோயில்களில் நூற்றுக் கணக்கான தாக்குதல்களின் வடுக்களும், புனர்நிர்மாணத்தின் நூற்றுக்கணக்கான சின்னங்களும் உறைந்துள்ளதைப் பாருங்கள். தொடர்ந்து அவை அழிக்கப் பட்டன. இடிபாடுகளிலிருந்து தொடர்ந்து, மீண்டும் புத்துணர்ச்சியுடன் வழக்கமான வீறுடன் எழுந்தன. அதுவே தான் நமது தேசிய ஜீவசக்தி. அதனைப் பின்பற்றிச் செல்லுங்கள்; உங்களைப் புகழ்நிலைக்கு அது இட்டுச் செல்லும். அதனைக் கைவிட்டால் இறந்தொழிவீர்கள். செத்து மடிவதே முடிவாகும். அந்த ஜீவசக்தியைப் புறக்கணித்தால், அக்கணமே பூண்டற்றுப் போவது தான் ஒரே முடிவு.

சுவாமி விவேகானந்தர் (Complete-Works, Vol. 3 (Lectures from Colombo to Almora), The Future of India.)

கேள்வி: அயோத்தி பாபர் கட்டிட இடிப்பு சம்பவம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: மற்றவர்கள் நினைப்பது போல மோசமாக அல்ல, அதை நான் சொல்லியே ஆக வேண்டும். அங்கு கோவிலே இருந்திருக்கவில்லை என்று சொல்பவர்கள் ஒரு விஷயத்தை முற்றாக மறந்து விடுகிறார்கள். தெரிந்து கொள்ளூங்கள். தான் வெற்றி கொண்ட இந்த தேசம் மீது பாபருக்கு அதீத வெறுப்பு இருந்தது. அவன் அந்த மசூதியைக் கட்டியது அந்த வெறுப்பில் விளைந்த செயல் தான்.

advani_ayodhya_rath_yatraஅயோத்தியில், தான் வெற்றிகொண்ட சமூகம் புனித பூமியாகப் போற்றி வணங்கிய அந்த இடத்தில் அவன் மசூதியைக் கட்டிய செயல் அவமதிப்பதற்காகவே செய்யப் பட்டது. ஒரு பழம்பெரும் மகோன்னதத்தை அவமதிப்பதற்காக. இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகள் தொன்மையான ராமன் என்கிற மகத்தான பிம்பத்தை அவமதிப்பதற்காக.

… இந்தியா ஒரு நீண்ட நெடிய நிகழ்வின் விளைவுகளுடன் வாழப் பழகி விட்டிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் முன்பு தொடங்கிய அந்த நிகழ்வு, இஸ்லாமியப் படையெடுப்பு. அதற்கு முன்பிருந்த ஒரு முழுமையான சமய, கலாசார உலகையே கிழித்தெறிவதாகவும், அனேகமாக அழித்தொழிப்பதாகவும் அது இருந்தது. இன்று வரை இந்திய மக்களால் அந்த மாபெரும் அழித்தொழிப்பை, பெரும் வலியும், வேதனையும் நிரம்பிய வரலாற்றை முழுதாக ஜீரணிக்க முடியவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய முழுமையான புரிதல் அவர்களிடம் இல்லாதிருந்தது. பா.ஜ.க.வின் இந்த இயக்கமும், மசூதி விவகாரமும் எல்லாம் அதைப் பற்றிய புதிய வரலாற்று உணர்வின் ஒரு அங்கம் என்றே நான் நினைக்கிறேன். என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையான, புதிய புரிதல். இது ஒருவேளை தவறாக வழிநடத்தப் படலாம், சில சமயம் அரசியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப் படவும் சாத்தியமுண்டு, ஆனால் இது வரலாற்று இயக்கத்தின் ஒரு புதிய திருப்புமுனை. ஏன் இந்தியாவில் இத்தனை இதயங்களில் அந்த உணர்வு எதிரொலிக்கிறது என்று புரிந்து கொள்ள முயலாத அறியாமையே, அதனை பாசிசம் என்று மொண்ணையாக வசைபாடுகிறது…

இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் வி.எஸ்.நய்பால் (1993ல் அளித்த நேர்காணல்கள்)

ayodhya_hanumangarhiந்தியாவின் மத-மோதல்கள் மற்றும் அயோத்தி தொடர்பான விவாதங்களின் ஊடாக, ஒரு மிக முக்கியமான புரிதல் எனக்குக் கிடைத்துள்ளது. உண்மையில் இந்த மோதல் நிலத் தகராறு காரணமானதோ, சரித்திரத்தை மாற்றி எழுதுவது தொடர்பானதோ அல்ல. அடிப்படையான மத, தத்துவ பிடிப்புகள் தொடர்பானது. அயோத்தி விஷயத்தில் இந்திய முஸ்லிம்களின் பிரசினை அவர்களது தீவிர மனப்பான்மையோ, அவர்களுக்கு சொந்தமில்லாத ஒன்றின் மீது உரிமை கொண்டாடுவதோ அல்ல. மாறாக, இத்தகைய மனப்போக்கை வளர்த்து, புனிதப் படுத்தும் ஒரு மதத்தை அவர்கள் காலம்காலமாக நம்பிப் பின்பற்றி வருவது தான். அயோத்தியிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதல்ல, முஸ்லிம்களிடமிருந்து இஸ்லாமியத்தை வெளியேற்றுவதே முக்கியமான விஷயம் (The point is not getting the Muslims out of Ayodhya, it is getting Islamism out of the Muslims).

… உலகளாவிய நோக்கில், அனைத்து முஸ்லிம்களும் இஸ்லாமியத்திலிருந்து வெளிவருவதற்கான தங்கள் வழியைத் தாங்களே தேடிக் கண்டடைய வேண்டும். அவர்கள் வாழும் நாடுகளின் சொந்தப் பாரம்பரியமும், நவீன சிந்தனையின் கொடைகளும் இரண்டுமே இதற்கு உதவும். மேற்கத்திய உலகமும் இதே அனுபவத்தின் வழியாகச் சென்று கொண்டிருக்கிறது. கிறிஸ்தவத்தின் இருண்ட மதக் கொள்கைகளை நம்புவது சாத்தியமில்லை என்று கண்டு, மானுடத்தின் ஆன்மீகத் தேவைகளுக்கான புதிய விடைகளை நோக்கி அது பயணித்துக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களுக்காக இதை மற்றவர்கள் செய்ய முடியாது. சிறுவயதிலிருந்து அவர்களுக்கு புகட்டப் பட்டிருக்கும் கொள்கைகளில் இருந்து தங்கள் மனங்களை அவர்கள் தான் விடுவித்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்கள் இதற்கு உதவலாம் – இஸ்லாமைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறந்த, அறிவார்ந்த விமர்சனங்கள் அனைவரையும் சென்றடையச் செய்வதன் மூலமும், அடிப்படைவாத பிற்போக்கு, முஸ்லிம் தலைவர்களின் பிடி இறுகுவதை எதிர்ப்பதன் மூலமும். இந்துக்கள் தொடர்ந்து தங்களது மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை முனைந்து களைவதும் இதற்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையும்.

இதன் விளைவாக, இஸ்லாமியத்திலிருந்தும், அதனை முன்னிறுத்தி பேசப்படும் அராஜக கொள்கைகளிலிருந்தும் முஸ்லிம்கள் விடுபடுவார்கள். இந்துக்களிடமிருந்து களவாடப் பட்ட புனித தலங்களை அவர்களே திரும்பக் கொண்டு வந்து தரவும் கூடும். தன் மனைவியைக் கவர்ந்து சென்ற அரக்கர்களையும் உய்வடையச் செய்த ராமன் என்ற தெய்வத்துக்காக அவர்களே அயோத்தியில்ஒரு கோயில் கட்டவும் கூடும். இஸ்லாமுக்குள் கொண்டு தள்ளப் பட்ட இந்துஸ்தானத்தின் மைந்தர்களையும், இஸ்லாமிய மூளைச்சலவையால் சங்கிலி பூட்டப் பட்ட அவர்கள் குழந்தைகளையும் ராமன் விடுவிப்பான். அவர்கள் அனைவரையும் அவன் மீட்டு அழைத்துச் செல்வான், தன் ஜன்மபூமியில் திருவிழாக் கொண்டாடுவதற்காக.

வரலாற்று, சமூகவியல் அறிஞர் கொய்ன்ராட் எல்ஸ்ட் (Ayodhya, the case against the temple நூலின் கடைசி வரிகள்).

38 Replies to “அயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை”

  1. உண்மைதான் இணையத்தில் பலர் தங்களை முஸ்லீமாக முன்வைப்பார்கள் பாபர் ஆக்கிரமிப்புப் பற்றிய கேள்விக்கு பதிலளிக்க மறுக்கிறார்கள்.

    இதற்கிடையில் சில அவசரக் குடுக்கைகள் அது அந்த காலம் இது இந்த காலம் என்று சப்பைக் கட்டுவேற.

    தாஜ்மகாலும் நாமிழந்த சொத்து அயோதியையாவாவது மீட்போம்.

  2. ஒரு மனிதன் மகனாக, கணவனாக,அரசனாக ,தோழனாக,சகோதரனாக, எவ்வாறு வாழ வேண்டும் என்று அந்தப் பரம் பொருளே புருஷோத்தமனாக பூமிக்கு வந்து காட்டிய ராமன் அவதரித்த புனிதமண் அயோத்தி.

    போராட்டம் வெறும் கோயிலுக்காக மட்டும் அல்ல
    நம் முன்னோர் வணங்கிய, போற்றிய நெறிகள் மீண்டும் வெற்றி பெறுவதற்காகவும்.

  3. // ஏன் இந்தியாவில் இத்தனை இதயங்களில் அந்த உணர்வு எதிரொலிக்கிறது என்று புரிந்து கொள்ள முயலாத அறியாமையே, அதனை பாசிசம் என்று மொண்ணையாக வசைபாடுகிறது…//

    Very very true. What a precise and sharp expression by V S Naipaul!

  4. I was also a sickular idiot and I condemned the act of demolition of the Babri structure. But later on, I kept on investigating for any justification for the demolition and I am today a fully reformed person. If we don’t preserve our great cultural identity, then what remains in India would be just a pensinsula of land. The Christians have some countries claiming themselves as Christian nations, some countries as Islamic nations and there is no country except Bharat which has the Hindu identity. The Ram Mandir movement is definitely a great milestone in the efforts to identify the soul of Bharat.

  5. // ல நூறு ஆண்டுகளாக இந்துக்களின் மாபெரும் புனிதத் தலமாக விளங்கிய அயோத்தி 1528ல் இஸ்லாமியப் படையெடுப்பாளன் பாபரால் சிதைக்கப் பட்டது. அங்கிருந்த எழில்மிகு ஸ்ரீராமர் ஆலயம் தகர்க்கப் பட்டு ஆக்கிரமிப்புச் சின்னமாக மசூதி எழுப்பப் பட்டது. அப்போதும், அதைத் தொடர்ந்த பல நூற்றாண்டுகளிலும் ராம ஜன்ம பூமியை மீட்க மன்னர்கள், படைவீரர்கள், சாதுக்கள், சாமானியர்கள், வனவாசிகள் என்று பல தரப்பட்ட இந்துக்களும் தொடர்ந்து போராடி ரத்தம் சிந்தியுள்ளனர். புனித பூமி மீட்கப் பட்ட காலங்களில் இந்துக்கள் எழுப்பிய கோயில் மீண்டும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளரின் கை ஓங்குகையில் தொடர்ந்து தகர்க்கப்பட்டு வந்தது.
    1700களில் இஸ்லாமியர் நடவடிக்கை முற்றாக நின்று போய் ராமர் வழிபாடு மட்டுமே தொடர்ந்தது. // ஜடாயு சொன்னால் அது உண்மையாக இருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் முகலாயர் ஆட்சியில் நடந்த போர்களும் கிளர்ச்சிகளும் அதிகாரத்துக்காக மட்டுமே என்று படித்திருக்கிறேன். ஆதரத்துக்காக ஏதாவது சுட்டி இல்லை புத்தகங்கள், இல்லை சரித்திர குறிப்புகள் தர முடியுமா? உதாரணமாக அக்பர் நாமா, ஜகாங்கீர் நாமா, சர் தமாஸ் ரோவின் குறிப்புகள், துளசிதாஸ், சூர்தாஸ் பாடல்கள், இல்லை வேறு எதிலாவது ராம் ஜன்ம பூமிக்காக கிளர்ச்சி, மசூதி தகர்க்கப்பட்டு கோவில் கட்டுவது என்பது பற்றி ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா?

    // 1885ல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மஹந்த் ரகுவர் தாஸ் அந்த பூமி இந்துக்களுக்கு உரிமையானதே என்று வழக்குத் தொடர்ந்தார். // ௧௮௮௫-இல் ஆரம்பித்த கேஸ் இன்னும் நடக்கிறதா? சில இடங்களில் அறுபது வருஷ கேஸ் என்று படித்தேன். Clarify செய்ய முடியுமா?

    // 1949ல் அங்கு தோன்றிய குழந்தை ராமனின் தெய்வத் திருவுருவம் தொடர்ந்து இடையறாது வழிபடப்பட்டு வருகிறது. // ஜடாயு, ராம விக்ரகம் தோன்றியதா? இல்லை தோன்ற வைக்கப் பட்டதா? என்னங்க இப்படி ஒரு சாமியார் உடலிலிருந்து விபூதி கொட்டுகிறது ரேஞ்சில் ஒரு ஸ்டேட்மென்ட்? 🙂

  6. யூதர்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் போராடி தான் தங்கள் நிலங்களை அரேபியர்களிடம் இருந்து மீட்டார்கள், ஆகவே நாமும் போராடி தான் நமது கோவிலை / இடத்தை மீட்க வேண்டும்

  7. // ஆனால் முகலாயர் ஆட்சியில் நடந்த போர்களும் கிளர்ச்சிகளும் அதிகாரத்துக்காக மட்டுமே என்று படித்திருக்கிறேன். ஆதரத்துக்காக ஏதாவது சுட்டி இல்லை புத்தகங்கள், இல்லை சரித்திர குறிப்புகள் தர முடியுமா? //

    அன்புள்ள ஆர்.வி,

    “அதிகாரத்துக்காக மட்டுமே” என்றால் என்ன அர்த்தம்? அதிகாரம் என்பதற்கு இங்கே “உரிமை” என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இங்கு பேசிக் கொண்டிருப்பது மன்னராட்சி நிலவிய நிலப்பிரபுத்துவ காலகட்டம் என்பதையும் மறக்க வேண்டாம்..

    ராமஜன்மபூமி மட்டுமல்ல, மதுரா, காசி, அவந்திகா (உஜ்ஜயினி) என்று பல புனிதத் தலங்களிலும் உள்ள கோயில்கள் இடிக்கப் பட்டு, மீட்கப் பட்டு, திருப்பி இடிக்கப் பட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.. மிக விரிவாகவே இது பற்றீ எழுதப் பட்டுள்ளது.. எல்லாவற்றையும் இங்கே தருவது சாத்தியமில்லை.

    குறிப்பாக அயோத்தி வரலாறு பற்றி அறிய,

    Harsh Narayan: The Ayodhya temple-mosque dispute.
    R Nath: The Babri Masjid of Ayodhya.
    ஆகிய புத்தகங்களைப் பரிந்துரைக்கிறேன்..

    சில போர்கள் ராமஜன்ம பூமியை மீட்பதற்காக என்றே நடந்தன. பெரும்பாலும் இதில் பங்கு கொண்டவர்கள் அயோத்தி உள்ளூர் பிரதேச மக்களே.. ஜன்மபூமியை மீட்கும் வரை தலைப்பாகையும், செருப்பும் அணீயக் கூடாது, குடைபிடிக்கக் கூடாது ஆகிய சபதங்களை அவர்கள் எடுத்தது பற்றி நாட்டார் இலக்கியம் உள்ளது.. . அதுபோக, ரஜபுத்திரர்கள், சந்தேலர்கள், மராட்டியர்கள், ஜாட்கள்,கோர்காக்கள், சீக்கியர்கள், பைராகிகள் இஸ்லாமிய அரசுடன் தொடர்ந்து போராடி வந்தனர். அவர்கள் வெற்றி பெற்று “அவத்” பிரதேசத்தில் வலிமையுறும்போதெல்லாம், ராமஜன்மபூமியில் வழிபடுவதையும், சிறு கோயில்கள் அமைப்பதையும் செய்திருக்கிறார்கள்.. நடுநிலையான ஆய்வாளரான எல்ஸ்ட் எழுதுகிறார் –

    This is not to say that their (ie. Hindutva-vadis) claim that dozens of battles have been waged in defence of Ayodhya during centuries past, ridiculed by Pandey (in J.McGuire et. al’s “Politics of Violence”, p147), is altogether spurious. These folk traditions may have a core of truth in them. Compared with Europe and China, Indian kept on using far more perishable writing materials until 19th century, and the oral traditions are sometimes the only source of information for a period which has left only little documentary evidence.

    Girilal Jain is quoted as claiming that the disputed site had been known as Janmasthan since well before the British period. This is well attested by a number of 18th century sources (not to speak of the 12th century inscription found at the site during archeology post-1992)..

    – Decolonizing the Hindu mind, Dr, Koenraad Elst, Rupa & co. Page 78.

    இதில் நாட்டார் மரபுகளையும் கணக்கில் எடுக்கவேண்டும் என்று எல்ஸ்ட் கூறுவதைப் பாருஙக்ள்.

    // தென்னாட்டின் சில பழைய கோயில்களும் // என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டது எதை என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.. சிதம்பரம், மதுரை, திருவரங்கம் ஆகிய கோயில்களூம் இஸ்லாமியப் படையெடுப்பில் சிதைக்கப் பட்டன.. இவை அனைத்தும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் மீட்கப் பட்டன.. மதுரை/திருவரங்கத்தின் மீட்சி பற்றி விஜயநகர மன்னர் புக்கரின் மருமகள் கங்காதேவி எழுதிய ‘மதுராவிஜயம்’ என்ற சம்ஸ்கிருத காவியமே நம்மிடம் உள்ளது.. இதை அடிப்படையாக வைத்து ஸ்ரீவேணுகோபாலன் தமிழில் ‘மதுரா விஜயம்’ என்று ஒரு நாவலும் எழுதியிருக்கிறார்.. நீங்கள் படித்திருக்கலாம்.. அதில் படைவீரர்களும், சாமானியர்களும் இணைந்து போரிட்டு அரங்க் நகர் மீண்டதை விவரிக்கிறார்.. இதெல்லாம் “அதிகாரப் போர்” தானே?

    இஸ்லாமிய ஆதிக்கத்தால் 200 வருடங்களே பாதிக்கப் பட்ட தமிழகத்திலேயே இது நிகழ்ந்திருப்பதற்கான ஆதாரம் உள்ளது.. என்ன, இங்கே விஜயநகரப் பேரரசு தோன்றி இஸ்லாமிய ஆதிக்கத்துக்கு ‘சீல்” வைத்து விட்டதால் இருபதாம் நூற்றாண்டு வரை இந்தப் போராட்டம் நீடிக்கவில்லை.. அது ஒன்று தான் வித்தியாசம்.

    அயோத்தி உள்ளிட்ட வட இந்தியக் கோயில் அழிப்பு, மீட்பு பற்றி மேலும் அறிய –

    Hindu Temples: What Happened to Them Vol. 1 – https://voiceofdharma.com/books/htemples1/
    Hindu Temples: What Happened to Them Vol. 2 (The Islamic Evidence) – https://voiceofdharma.com/books/htemples2/

    இரண்டாவது வால்யூமின் தொகுப்பாசீரியர்களில் அருண் ஷோரியும் அடக்கம்.

  8. // ராம விக்ரகம் தோன்றியதா? இல்லை தோன்ற வைக்கப் பட்டதா? என்னங்க இப்படி ஒரு சாமியார் உடலிலிருந்து விபூதி கொட்டுகிறது ரேஞ்சில் ஒரு ஸ்டேட்மென்ட்? //

    ”பல்கலைக் கழகம் தோன்றியது” என்று சொல்கிறோம்.. அதற்கு மந்திர சக்தியால் தோன்றியது என்று நீங்கள் பொருள் கொண்டால் அது உங்கள் reading. நான் என்ன செய்வேன்.

    இப்போது வணங்கப் படும் விக்ரகங்கள் 1949ல் அங்கு வலிந்து கொண்டு வந்து வைக்கப் பட்டிருக்கலாம்.. அது சின்ன விஷயம். ஆனால் அதற்கு குறைந்தது 200 ஆண்டுகள் முன்பிருந்தே அங்கு தொடர்ந்து ராமர் வழிபாடு நடந்து வந்திருக்கிறது.. அது தான் முக்கியமானது.

    Ayodhya and After – issues before Hindu society – Dr Koenraad Elst, Chapter 1

    That the Babri Masjid replaced a pre-existent centre of worship, is also indicated by the fact that Hindus kept returning to the place, where more indulgent Muslim rulers allowed them to worship on a platform just outside the mosque. This is attested by a number of different pieces of testimony by Western travelers and by local Muslims, all of the pre-British period, as well as from shortly after the 1856 British take-over but explicitly referring to older local Muslim sources. A number of these documents have been presented by Harsh Narain4 and A.K. Chatterjee5. That they are authentic and have a real proof value, is indirectly corroborated by the attempts made to make two of them disappear, which Harsh Narain and Arun Shourie independently discovered6.

    Most of these sources explicitly declare that the Babri Masjid had replaced an earlier Hindu temple, and even specify that it has been Ram’s birthplace temple. But whatever their historical explanation for this unusual phenomenon of Hindus insisting on worshipping in a mosque’s courtyard, they testify to the existing practice. And these Hindus were going into a mosque courtyard for specifically Hindu worship — not for common Hindu-Muslim worship of some local Sufi, as you find in some places, but for separate Hindu worship of Lord Ram. The JNU historians completely fail to explain this well attested fact.

    The attachment of the Hindus to the Babri Masjid spot cannot reasonably have originated in the period when the mosque was standing there. For the sake of argument, we might opine that perhaps a great miracle happened on the spot, sometime later than 1528: but in that case, there would be a tradition saying so. No, the Hindus’ attachment to the spot clearly dates back to pre-Masjid days, and stems from a pre-existent tradition of worship on that very spot. Since this near inevitable assumption is corroborated by all relevant documents and by the local Hindu tradition, and is not contradicted by any authentic source giving a different explanation, we might as well accept it.

    However, while the inference that there was a pre- existent tradition of worship on the spot is necessary for explaining the Hindus’ centuries-long attachment to the place, it may not be sufficient. There are many destroyed temples to which Hindus have not kept returning. They simply built a new temple somewhere else, and even when Muslim power ended, they stayed with the new arrangement and forgot about the destroyed and abandoned temple. If they were so attached to the place, it is probably not because the erstwhile temple had made it important, but because the place had an importance of its own, and retained its special character even regardless of there being a temple in place or not. …

  9. // ௧௮௮௫-இல் ஆரம்பித்த கேஸ் இன்னும் நடக்கிறதா? சில இடங்களில் அறுபது வருஷ கேஸ் என்று படித்தேன். Clarify செய்ய முடியுமா? //

    ஆமாம்., முதல் வழக்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே போடப் பட்டது.. சுதந்திரம் வரும் வரை தீர்ப்பு வழங்கப் படவில்லை..

    அறுபது வருஷம் என்பது சுதந்திர இந்தியாவில்.

  10. ஜடாயு,

    நான் அதிகாரம் என்பதை அரசியல் அதிகாரம் என்ற பொருளிலேயே எழுதினேன். (சிவாஜியின் போர்களுக்கு முன் முகலாயர் போர்களில் மதம் ஒரு பொருட்டாக இல்லை என்றும், சிவாஜியின் போர்கள் கூட பிரதானமாக அரசியல் அதிகாரத்துக்கே என்றும் நினைவு. குரு கோவிந்த் சிங், பந்தா பஹதூரின் போர்கள் மட்டுமே மதத்தை முன் வைத்து நடந்தவை.)

    நீங்கள் எழுதி இருப்பதை வைத்து நாட்டார் இலக்கியம் தவிர்த்த வேறு ஆதாரம் கிடையாது என்று பொருள் கொள்கிறேன். தவறாக இருந்தால் திருத்துங்கள். முகலாய அரசின் அதிகாரபூர்வமான தகவல்கள் நிரம்பிய அயினி அக்பரி, அக்பர் நாமா, ஜகாங்கீரின் டைரி, ஆகியவற்றில் கிளர்ச்சி, அதை அடக்க அனுப்பப்பட்ட படைகள் பற்றி தகவல் இல்லாதது வியப்புதான். அதே நேரத்தில் நாட்டார் இலக்கியம் என்றால் புறம் தள்ள வேண்டியதில்லை. அவையும் முக்கிய ஆதாரங்களே. அதே நேரத்தில் நாட்டார் இலக்கியம் என்றால் அதில் ஒரு தொன்மைப்படுத்துதல் (legendary claims) இருப்பது சகஜம். நம்மூர் கட்டபொம்மன் நாட்டுப்புற பாடல்களிலேயே இது தெரியும்.

    கான்ராட் எல்ஸ்ட் நடுநிலையாளர் இல்லை என்று சிலர் சொல்வதைப் படித்திருக்கிறேன். 🙂 எப்படி இருந்தாலும், அவரும் // These folk traditions may have a core of truth in them. // வெகு ஜாக்கிரதையாகத்தான் இதைப் பற்றி எழுதி இருக்கிறார்!

    ஒரு புராதனக் கோவில், அதன் மேல் மசூதி, அதன் மேல் மீண்டும் கோவில், மீண்டும் மசூதி, மீண்டும் கோவில்… என்ற ஒரு சித்திரத்தை இந்த பதிவு அளிக்கிறது. சமீபத்திய அகழ்வாராய்ச்சி முடிவுகள் இந்த சித்திரத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றனவா? இரண்டு மூன்று மசூதி லேயர்களாவது கிடைத்திருக்க வேண்டுமே?

    // மதுரா விஜயம்… // மன்னிக்கவும், இவை எல்லாம் முகலாய அரசுக்கு முந்தைய விஷயங்கள் ஆயிற்றே? விஜயநகர அரசே 1565 தலைக்கோட்டைப் போருக்கு பிறகு ஒரு சிற்றரசாக மாறிவிடவில்லையா? அக்பர் ஆட்சிக்கு வந்து அப்போது பத்து வருஷம் கூட ஆகவில்லை.

    நீங்கள் சொல்லும் புத்தகங்களை தேடிப் பார்க்கிறேன்…

  11. // RV
    29 September 2010 at 12:42 pm // மதுரா விஜயம்… // மன்னிக்கவும், இவை எல்லாம் முகலாய அரசுக்கு முந்தைய விஷயங்கள் ஆயிற்றே? விஜயநகர அரசே 1565 தலைக்கோட்டைப் போருக்கு பிறகு ஒரு சிற்றரசாக மாறிவிடவில்லையா? அக்பர் ஆட்சிக்கு வந்து அப்போது பத்து வருஷம் கூட ஆகவில்லை. //

    நான் “முகலாய அரசு” என்று சொல்லவில்லை. “இஸ்லாமியப் படையெடுப்பு” என்று தான் எழுதியிருக்கீறேன். மாலிக்காபூர், உலூக்கான், மதுரை “சுல்தான்”கள் இவர்களை எதிர்த்து நடந்த போரைப் பற்றிய் விவரணம் அது..

    முகமது பின் காசிம், கஜினி, கோரி தொடங்கி, குத்புதின் ஐபெக், அல்டமிஷ், அலாவுதீன் கில்ஜி, தைமூர் ஊடாக பாபர்,ஹுமாயூன், ஔரங்கசிப், அகமது ஷா அப்தாலி வரை தொடர்ச்சியாக இஸ்லாமிய ஆக்கிரமிப்பும், கோயில் இடிப்புகளும் நடந்தபடியே தான் வந்துள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்துக்கள் போராடியுள்ளனர்…

    மற்ற விஷயங்களுக்கு பிறகு வருகீறேன்..

  12. // சிவாஜியின் போர்களுக்கு முன் முகலாயர் போர்களில் மதம் ஒரு பொருட்டாக இல்லை என்றும், சிவாஜியின் போர்கள் கூட பிரதானமாக அரசியல் அதிகாரத்துக்கே என்றும் நினைவு. குரு கோவிந்த் சிங், பந்தா பஹதூரின் போர்கள் மட்டுமே மதத்தை முன் வைத்து நடந்தவை //

    இல்லை, இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை இந்தியா மீது தொடுத்த தாக்குதல்கள் அனைத்துமே இஸ்லாமைப் பரப்பவேண்டும் என்ற ஜிகாதின் ஒரு பகுதியாக அமைந்தவையே. சூறையாடல்கள், கொள்ளையடிப்புகள், கோயில் இடிப்புகள், கட்டாய மதமாற்றங்கள், தோற்றவர்களை அடிமைகளாக்கி விற்றல் இதெல்லாம் அந்த மத-அதிகார-ஆக்கிரமிப்பு அரசியலில் அடங்குபவை தானே. இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் (அமீர் குஸ்ரோ,ஃபரிஷ்டா..), மற்றும் மற்றும் ஆட்சியாளர்கள் (பாபர், அவுரங்கசீப்) எழுதி வைத்த குறிப்பிகளே தெளிவாக குறிப்பிடப் படுகின்றன..

    இந்துக்களைப் பொறுத்தவரை அது வாழ்வா சாவா போராட்டம்.. அவர்களது தாய்மண்ணின் மீதும், வாழ்க்கை முறை, மதம், கலாசாரம் அனைத்தின் மீதும் தொடுக்கப் பட்ட போர்.நீங்கள் சொல்வது போன்று துண்டு துண்டாகப் பிரித்து இதைப் பார்க்க முடியாது.. சமூக, அரசியல், பொருளாதார காரனிகள் உண்டு. ஆனால் ஒட்டுமொத்தமாக இது ஒரு clash of civilizations தான்.

    சிவாஜி மிகத் தெளிவாக தனது போரை ஹிந்து சுதந்திரத்திற்கான போர் என்றே அறிவித்திருக்கிறார்.. அவரைப் பற்றி கவிராஜ் பூஷண் என்ற ஹிந்திக் கவிஞர் பாடிய இந்தப் பாடலே ஒரு சான்று:

    kashiji ki kalaa jaati, mathura masjid hoti
    shivaraj agar naa bhaye, sabki sunnat hoti

    காசியின் கலை அழிந்திருக்கும்; மதுரா மசூதி ஆகியிருக்கும்
    சிவாஜி ராஜன் மட்டும் பிறந்திருக்காவிட்டால், நம் எல்லாருக்குமே சுன்னத் ஆகியிருக்கும்..

    இந்தப் பாடலில் முதல் வரியில் சொல்ல இரண்டும் நடந்தே விட்டிருக்கிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

  13. Dear RV,

    The excavations in Ayodhya site have revealed articles used from 2nd century BC to 15th Century AD. This excavations and the chronicles are from ASI. Islam cannot and will not segregate Political power and Religion. Initial invasion of Sindh by Arabs did not stop with just usurbing political power . Mass forced conversions ( please do not ask again (!!!) what is forced conversion ) happened and it is documented by Islamic/ Arab historians. Sindh was also ruled by pre christian Greeks. Then mass conversion ( asking people to worship zeus!!) did not happen. You can infer from these 2 acts .

    Koil Ozhugu has documented the Islamic invasion on Srirangam. It has also documented how Vedanta desikan (one of the brilliant acharya of vaishnavism) escaped the ordeal.

    Regards
    S Baskar

  14. ஆர்.வி,

    // ஒரு புராதனக் கோவில், அதன் மேல் மசூதி, அதன் மேல் மீண்டும் கோவில், மீண்டும் மசூதி, மீண்டும் கோவில்… என்ற ஒரு சித்திரத்தை இந்த பதிவு அளிக்கிறது. சமீபத்திய அகழ்வாராய்ச்சி முடிவுகள் இந்த சித்திரத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றனவா? இரண்டு மூன்று மசூதி லேயர்களாவது கிடைத்திருக்க வேண்டுமே?//

    ஓ.. கட்டுரையின் சொற்கள் அப்படி ஒரு குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்பது புரிகிறது. இங்கு ராமஜன்ம பூமி ஆலயத்தை மட்டும் சொல்லவில்லை. பொதுவாகக் குறிப்பிட்டேன். . அந்த வாசகம் இப்படி இருக்க வேண்டும், அதை இவ்வாறு மாற்றுகிறேன்..

    — அயோத்தி உள்ளிட்ட புனித நகரங்கள் மீட்கப் பட்ட காலங்களில் இந்துக்கள் எழுப்பிய சில கோயில்கள் மீண்டும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளரின் கை ஓங்குகையில் தொடர்ந்து தகர்க்கப்பட்டு வந்தன; பிறகு மீண்டும் மீட்கப்பட்டு மீண்டும் எழுந்தன. —-

    அயோத்தியிலேயே ஜன்மஸ்தானத்தைச் சுற்றியுள்ள சில ஆலயங்கள் இப்படிப் பட்டவையே. அதற்கு ஆதாரமும் இருக்கிறது (அயோத்தியில் முன்பு இன்னும் அதிக மசூதிகள் இருந்ததாகக் கூறப் படுகிறது), மற்ற சில புனித நகரங்களிலும் இது நிகழ்ந்துள்ளது.

    ஜன்மபூமி ஸ்தலத்தில் இருந்த பாபர் மசூதியைப் பொறுத்த வரையில் அந்த கட்டிடத்திற்கு முன்புறம் ராம் சபூத்ரா (ராமர் சதுக்கம்), சீதா கி ரஸோயி (சீதையின் சமையலறை!) ஆகிய வழிபாட்டு மேடைகளை மட்டுமே இந்துக்களால் கட்ட முடிந்தது – அங்கு தான் வழிபாடுகள் செய்யப் பட்டன.

    இதுபற்றி எதேச்சையாக இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தி..

    A Nawab’s lesson in conflict resolution – The Times of India

    https://timesofindia.indiatimes.com/india/A-Nawabs-lesson-in-conflict-resolution/articleshow/6647861.cms#ixzz10up63BAm

    LUCKNOW: If history is meant to take lessons, here is one. A dispute
    in Ayodhya similar to the Babri masjid-Ram temple was resolved by the
    last Nawab of Oudh, Wajid Ali Shah, in 1855 with urgency, not allowing
    communal forces to spread their tentacles.

    It was the time when British were taking over Oudh. Hanuman Garhi and
    temples around it in Ayodhya were constructed with the help of Nawab
    Safdarjung, the great grandfather of Wajid Ali Shah. In 1855, an
    accusation by a Muslim that a masjid located among the cluster of
    temples have been demolished by Hindus led to clashes in which over
    100 people were killed. Nawab sent a three-member panel comprising a
    Muslim, a Hindu and a British to probe the matter. The panel found the
    allegations of Muslims were false.

    But a hardliner, Maulvi Ameer Ali, wanted to ‘reconstruct’ the mosque.
    Nawab sought a fatwa. Chief cleric Mujtahid Sayyad Muhammad Nasirbad
    consulted Ulema from Firangi Mahal and issued a fatwa that since there
    was no mosque, constructing one would be against Islam. Nawab’s forces
    defeated and killed Ameer Ali near Rudauli. The dispute was solved.

    “That was the time when the Ganga-Jamuni tehzeeb was at its peak but
    the British wanted to divide Hindus and Muslims. But Nawab showed that
    if the government has right intentions, no matter how sensitive the
    dispute may be, it can be resolved,” says Aziz Haider, a researcher.

  15. //பாபர் கட்டிடம் இடிக்கப் படுகிறது. தற்காலிகமாக ராமர் கோயில் //

    I am astonished by the selection of words used to describe the construction. 😉

  16. அன்பிற்குரிய திரு. ஜடாயு,

    இந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா, அதை இடித்து மசூதி கட்டினார்களா என்பதைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. இந்த நிலத்திற்கான டைட்டில் பற்றிய தீர்ப்பு நாளை வெளியாக இருக்கிறது.

    இந்த தீர்ப்புக்காக காத்து இருக்காமல் அவசரப் பட்டு வேகம் காட்டி மசூதியை உடைத்ததால் இந்து மதத்திற்கு, இந்துக்களுக்கு , இராமரின் கொள்கைக்கு , அவரின் புகழுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் உண்மையிலேயே உணர்ந்து இருக்கிறீர்களா?

    இராமரின் முக்கிய சிறப்பே அவர் அயோத்தியின் ஆட்சியை விட்டுக் கொடுத்ததுதான். கைகேயி கேட்டு இருந்தால் எப்போதிக்குமாக கூட ஆட்சியை விட்டுக் கொடுத்து இருப்பார். சரி, அவர் விட்டுக் கொடுத்ததைப் போல எல்லோரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் – ஆனால் இப்படி அடாவடியாக உடைப்பது இராமரின் கொள்கைக்கு பொருத்தமானதா?

    ஸ்லாம் டாக் மில்லியனர்- அது ஒன்னும் சிறந்த படம் போல எனக்குத் தோன்றவில்லை. ஆனால் விருது எல்லாம் குடுத்து இருக்கிறார்கள். அதிலே கூட இராமரைப் பற்றி ஒரு கேள்வி கேட்பது போலவும், அது சம்பந்தமாக கலவரம் நடந்தது போலவும், ஒரு சிறுவனை இராமர் போல வேடமிட்டு நிற்க வைத்து காட்டி இருப்பார்கள்.

    சரி, இராமரின் புகழுக்கு பின்னடைவு ஏற்பட்டது – அதை விடுங்கள். அதை விட முக்கியம் அவருடைய கொள்கைகள். இராமர் தன்னை பற்றிக் கவலைப் படுவதை விட, எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதையே முக்கியமாகக் கருதியவர்.

    இராமர் இருந்திருந்தால் அவர் இப்படி தனக்கு கோவில் கட்டுவதாக சொல்லிக் கொண்டு அனுமதியின்றி இடித்ததை ரசித்து இருப்பாரா? அந்த மசூதி அல்லது சிலர் சொல்வது போலக் கட்டிடம் இடிக்கப் பட்டதால் இலட்சக் கணக்கான இஸ்லாமியரக்ள மன வருத்தம் அடைந்துள்ளனர். அந்த மன வருத்தம், இராமரே அதைப் பார்த்து மிக வருந்தி இருப்பாரா இல்லையா என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்.

    இராமர் ஆயுதம் ஏந்தியது காப்பதற்கு தான், அப்பாவிகளைக் காப்பதற்கு தான். அப்பாவியான ஒருவரை தண்டித்ததில்லை இராமன். கங்கையிலே குளிக்க சென்றபோது, தன்னுடைய அம்பில் யாரும் விழுந்து காயம் பட்டு விடக் கூடாதே என்று அதை கீழே மண்ணில் குத்தி வைத்து விட்டு சென்றார். குளித்து வந்து அம்பை எடுத்த போது மண்ணுக்குள் புதைந்து இருந்து தேரை அம்பால் குத்தப் பட்டு இருந்ததை கண்டு மனம் வருந்தவில்லையா? ஆயதங்களை ஏந்தியவர்களில் நான் இராமன் என்று சொல்லும் அளவுக்கு கட்டுப்பாடு, நியாயம் காத்தவர் இராமன்.அவருக்கு கோவில் கட்டுவதாக சொல்லி தூண்டப் பட்ட கலவரங்களில் இழந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு?அந்த மசூதியின் மீது கடப்பாறையை பாய்ச்சியது இராமனின் பினாமினா (Phenomena) மீது பாய்ச்சியது போலத்தான்.

    உலக்குக்கே வழி காட்ட வேண்டிய நிலையில் இந்து மதம் உள்ளது. வெண்ணை பொங்கும் நேரத்திலே தாழியை உடைக்க வேண்டுமா? இதில் விவேகானந்தரையும் இழுக்கிறீர்கள். இந்துக்கள் சர்ச்சுக்கு செல்கிறார்கள. மசூதிகளைக் கட்டித் தருகிறார்கள், அது நல்லது என்று விவேகானந்தர் சொல்லவில்லையா? உடைக்கப் பட்ட கோவில்களை தான் திருப்பி எழுப்ப சொன்னார். மசூதி அல்லது சமாதி என்று சொல்லப் படுகிற இடத்தை பலவந்தமாக உடைத்து அதிலே கோவில் கட்டலாம் என்று சுவாமி ஒரு போதும் எண்ணக் கூட மாட்டார்.

    இந்து மதமும் அடாவடி, அராஜக செயல்களை நம்பும், இறங்கும் மதம் என்று ஆக்கி விட்டால், நாளைய தலை முறையினர் மன்னிக்க மாட்டார்கள். உலகத்துக்கு அமைதியும், நல்லிணக்கமும் , ஒளியையும் உண்மையையும் தரக் கூடிய ஒரு மதத்தை சரியாக சிந்திக்காமல் தவறான பாதைக்கு கொண்டு போக் வேண்டாம். அப்படிக் கொண்டு போவது எளிதல்ல.

    வரலாற்றின் மிக முக்கியமான கால கட்டத்தில் நிற்கிறீர்கள். உங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. இந்து மதத்தை அது எப்போதும் இருந்தது போல அமைதியான பாதையில் அழைத்து செல்ல முயற்சி செய்யுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

  17. ராமச்சந்திர ஷர்மா

    எதற்காக நீங்கள் அதிர்ந்து போனீர்கள் என்பது தெரிந்தால் நாங்களும் அதிர்ந்து போகலாம். அது பாபர் கட்டிடம் மட்டுமே அல்லது ஒரு கும்முட்டம் மட்டுமே அதற்கு மேல் அதற்கு வேறு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது. ஜடாயு சரியான வார்த்தைகளையே பயன்படுத்தியுள்ளார். அதை மசூதி என்று அழைப்பது உள்நோக்கம் கொண்ட அயோக்கியத்தனம் மட்டுமே

    விஸ்வாமித்ரா

  18. ஆர் வி

    ” நீங்கள் எழுதி இருப்பதை வைத்து நாட்டார் இலக்கியம் தவிர்த்த வேறு ஆதாரம் கிடையாது என்று பொருள் கொள்கிறேன். தவறாக இருந்தால் திருத்துங்கள். முகலாய அரசின் அதிகாரபூர்வமான தகவல்கள் நிரம்பிய அயினி அக்பரி, அக்பர் நாமா, ஜகாங்கீரின் டைரி, ஆகியவற்றில் கிளர்ச்சி, அதை அடக்க அனுப்பப்பட்ட படைகள் பற்றி தகவல் இல்லாதது வியப்புதான். அதே நேரத்தில் நாட்டார் இலக்கியம் என்றால் புறம் தள்ள வேண்டியதில்லை. அவையும் முக்கிய ஆதாரங்களே. அதே நேரத்தில் நாட்டார் இலக்கியம் என்றால் அதில் ஒரு தொன்மைப்படுத்துதல் (legendary claims) இருப்பது சகஜம். நம்மூர் கட்டபொம்மன் நாட்டுப்புற பாடல்களிலேயே இது தெரியும்.”

    வழி வழியாக வரும் பாடல்களில் உண்மை தொடரவே செய்யும் அதில் சில மிகைப் படுத்தல்கள் இருந்த போதிலும், கெட்டி பொம்மு என்ற ஒரு வசூல் செய்யும் உரிமையுள்ள பாளையக்காரன் இருந்தான் என்பதும் அவன் தன் உரிமைக்காக ஓரளவுக்கு மேல் பணிய முடியாமல் போராடினான் என்பதும் உண்மை. நாட்டுப்புறப் பாடல்களை மேலும் திருநெல்வேலி கலெக்டர் ஆஃபீஸ் ஆவணங்கள் உறுதி செய்கின்றன. அது போலவே இந்தப் போராட்டங்களும் ஆவணப் படுத்த இந்து மன்னர்கள் இல்லாத சூழலில் நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாகவே இவை போன்ற விஷயங்கள் வெளி வரும் அதையும் ஏற்க மறுத்தால் என்ன செய்வது? ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் இஸ்லாமியப் படையெடுப்பில் கொல்லப் பட்டார்கள் என்ற செய்தி நாட்டுப்புறப் பாடல்கள் வழியாகவே அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் பட்டது. எங்கிருந்தோ வரும் காட்டுமிராண்டி முகலாய மன்னன் சொல்வதை நம்புவீர்கள் உள்ளூர் மக்கள் தலைமுறைக்கு கடத்திய பாடல்களை நம்ப மாட்டீர்கள். இன்னும் பல நாட்டுப்புறப் பாடல்களில் இஸ்லாமிய அடக்குமுறையை எதிர்த்து இடம் பெயர்ந்த பல ஜாதியினர் பதிந்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். அரசாங்கம் முஸ்லீம் மன்னர்களிடம் இருக்கும் பொழுது ஆவணப் படுத்துதலுக்கு இது ஒன்றே வழி அது நம்பகத்தன்மை வாய்ந்ததும் கூட. நாட்ட்புறப் பாடல்களில் மிகை இருக்கக் கூடும் ஆனால் ஆதாரமான விஷயத்தில் பொய் இருக்காது. ஏனென்றால் அது எளியவர்களால் உருவாக்கப் பட்டவை/

    எல்ஸ்ட் ஒரு நிலைப்பாடு எடுத்துள்ள காரணத்தினால் அவர் சொல்வதை நம்ப மறுக்கும் நீங்கள் எப்படி அக்பர் நாமாவை மட்டும் நம்புகிறீர்கள், ஆச்சரியம் ஏதுமில்லை. எல்ஸ்ட் புத்தகங்கள் எதையும் படிக்காமலேயே மிக எளிதாக அவர் மீது முத்திரை குத்த முடிகிறது. ஆனால் அக்பர் நாமா மீது கண்ணை மூடிக் கொண்டு நம்பிக்கை வைக்க முடிகிறது.

    எல்ஸ்ட் ஆர் எஸ் எஸ் காரர், ராஜாராமன் ஃப்ராடு, நாகசாமிக்கு எதுவும் தெரியாது, நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் உடான்ஸ் ஆனால் அக்பர் நாமா மட்டும் அக்மார் உண்மை. அங்கு ராமர் கோவில் இருந்ததும் அழிக்கப் பட்டதும் மறுக்க முடியாத உண்மைகளே. அதற்கு ஆதாரங்கள் வேண்டுமான அளவுக்கும் மேலாகவே உள்ளன. முஸ்லீம்களின் ஓட்டுக்காக ஒரு அரசு தன் பெரும்பான்மையைக் கொண்டு சட்டத்தைத் திருத்தம் செய்தது போல இந்துக்களின் உணர்வுகளை மதித்தும் தவறைத் திருத்தக் கோருகிறோம். நீதி மன்ற தீர்ப்பு எப்படி இருந்தாலும் இதுதான் கோரிக்கை. ஷா பானு கேசில் அரசு சட்டத்தை மாற்றியிருக்கா விட்டால் இந்தக் கோரிக்கைக் கூட எழாமலேயே போயிருந்திருக்கும். இப்படி தங்கள் உரிமையை நிலை நாட்டாமல் போனதினால்தான் காஷ்மீரப் பண்டிட்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறார்கள் இப்பொழுது இந்துக்கள் இந்த உரிமையை நிலைநாட்டா விட்டால் இந்தியா மற்றொரு பாக்கிஸ்தானாக மாறுவதைத் தவிர்க்கவே முடியாது அது குறித்து உங்களுக்கு கவலை இல்லை எனக்கு இருக்கிறது.

  19. Dear Tiruchikaran,

    I also understand Ahimsa paramo dharmaha, but it has its own elastic limit. If the Government of India ban the Conversions, if the govenment of India can relocate Pandits back to Kashmir, if GOI does not kneel before Separtist in kashmir, if GOI can pursue Madani , if the GOI treat the sentiments of Ram Bhakthas ( filing an affidavit in SC that RAM is fictional character) in the same way they reacted to obscure Danish cartoonist, If 50000 crores of CSI ( only in tamilnadu ) is audited the same way of TTD then …….

    Regards
    S Baskar

  20. விஸ்வாமித்ரா,

    வீணாக சண்டைக்கு அலைகிறீர்கள் என்று தோன்றுகிறது. எனக்கு ஆர்வம் இல்லை.

    இந்த ஒரு முறை மட்டும், அதுவும் குறிப்பாக நீங்கள் எழுதி இருக்கும் // எல்ஸ்ட் ஆர் எஸ் எஸ் காரர், ராஜாராமன் ஃப்ராடு, நாகசாமிக்கு எதுவும் தெரியாது, // இந்த ஒரு ஸ்டேட்மெண்டால் பதில் எழுதுகிறேன்.

    நாகசாமிக்கு எதுவும் தெரியாது என்று நான் சொன்னதாக நீங்கள் எழுதி இருப்பது அவதூறு. எனக்கு இதப் படித்ததும் ஏற்பட்ட வெறுப்பு கொஞ்சநஞ்சமில்லை. இது வரை அவரைப் பற்றி எங்கு எழுதி இருந்தாலும், அவரது ஸ்காலர்ஷிப், ஞானத்தை புகழ்ந்தே எழுதி இருக்கிறேன். மன்னிக்கவும், இதற்கு மேல் நான் இந்த அவதூறைப் பற்றி எழுதினால் printable வார்த்தைகளில் இருக்காது.

    ராஜாராமின் குதிரை சீல் பற்றிய பற்றிய சர்ச்சை எளிதில் முடியக்கூடியது. குதிரை இருக்கும் சீலைக் காட்டினால் சர்ச்சை தானாக முடிந்துவிடும். காட்டமுடியாவிட்டால் அவர் செய்தது ஏமாற்று வேலை. இன்று வரைக்கும் அவர் காட்டவில்லை. இந்த தளம் ஸ்காலர் என்று புகழும் ஐராவதம் மகாதேவனின் வார்த்தைகளில் – // Rajaram’s outbursts speak for themselves and need no annotation. The first part of the book is not about academic research on the technical problem of deciphering an unknown script. It is crude communal propaganda with obvious political overtones, betraying deep mistrust of foreigners and alien ideologies and intolerance towards religious and linguistic minorities. // மன்னிக்க வேண்டும், இந்த விஷயத்தில் உங்களை விட மகாதேவன் போன்றவருக்கு அதிகம் தெரியும். (உங்களைப் பற்றி இப்போது கொஞ்சம் யூகிக்க முடிகிறது – தமிழ் ஹிந்து தளம் ஐராவதம் மகாதேவன் கருணாநிதி அரசின் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டதை கேள்வி கேட்டிருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் அவரது ச்காலர்ஷிப்பைப் பற்றி இது வரை எந்த கேள்வியும் (எனக்குத் தெரிந்து) எழுந்ததில்லை. ராஜாராம் வேண்டுமானால் ஏதாவது கேட்டிருக்கலாம். :-))

    எல்ஸ்ட், ஆர்.எஸ்.எஸ். இரண்டையும் இணைத்து ஒரு இது வரை நான் இங்கும் வேறு எங்கும் ஒரு வரி, வாக்கியம், பாரா, பத்தி, பதிவு, கட்டுரை எழுதியதில்லை. அவர் ஆர்.எஸ்.எஸ்.காரராக இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். எனக்குத் தெரியாது. எல்ஸ்டின் நடுநிலை அல்லது இல்லாமையை புரிந்து கொள்ள இந்த பதிவில் எடுத்துக் காட்டியிருக்கும் மேற்கோளே போதும். // அனைத்து முஸ்லிம்களும் இஸ்லாமியத்திலிருந்து வெளிவருவதற்கான தங்கள் வழியைத் தாங்களே தேடிக் கண்டடைய வேண்டும். // இது ஆர்.எஸ்.எஸ்.சையும் தாண்டிய நிலையாக இருக்கிறது. Anyway, அவர் நடுநிலை அல்லது இல்லாமை நான் வைக்கும் வாதத்துக்கு – எல்ஸ்ட் மிக ஜாக்கிரதையாக நாட்டார் பாடல்களின் அடிப்படையாக கொஞ்சம் உண்மை இருந்தாலும் இருக்கலாம் (there may be a core of truth) என்று எழுதி இருக்கிறார் – எந்த வகையிலும் மாற்றாது.

    நீங்கள் வர வர நான் எழுதும் எதையும் படிப்பதில்லை என்று எனக்கு மேலும் மேலும் உறுதியாகிக் கொண்டே போகிறது. என் வார்த்தைகளில் – // அதே நேரத்தில் நாட்டார் இலக்கியம் என்றால் புறம் தள்ள வேண்டியதில்லை. அவையும் முக்கிய ஆதாரங்களே. // இதை உங்கள் மறுமொழியில் கட் பேஸ்ட் செய்திருக்கிறீர்கள், அப்படியே படிக்கவும் செய்திருக்கலாம். அப்படி படித்திருந்தால் // உள்ளூர் மக்கள் தலைமுறைக்கு கடத்திய பாடல்களை நம்ப மாட்டீர்கள். // என்றும் // நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் உடான்ஸ் // என்றும் நான் சொல்வதாக எழுதி இருக்க மாட்டீர்கள். இப்படி படிக்காமல் வெட்டி மறுமொழி எழுதி ஏன் எல்லார் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்? நீங்களே சொல்கிறீர்கள், // நாட்டுப்புறப் பாடல்களை மேலும் திருநெல்வேலி கலெக்டர் ஆஃபீஸ் ஆவணங்கள் உறுதி செய்கின்றன. // அங்கே திருநெல்வேலி கலெக்டர் ஆஃபீஸ் ஆவணங்கள் என்றால் இங்கே அயினி அக்பரிதான். இது உங்களுக்கு புரியவில்லை என்று என்னால் நம்பமுடியவில்லை. முகலாய அரசில் ஒரு கிளர்ச்சி நடந்து, அதை ஒடுக்க படையும் அனுப்பப்பட்டால் அது official records-இல் பதிவாகும் என்ற அடிப்படை புரிதல் உங்களுக்கு இல்லாமல் போகாது, ஆனால் வீண் சண்டைக்கு அலைகிறீர்கள்.

    மன்னிக்கவும், வர வர உங்கள் மறுமொழிகள் வெற்றுக் கூச்சலாக இருக்கின்றன. என்ன எழுதி இருக்கிறேன் எனபதை நீங்கள் சரியாக படிப்பது குறைந்து கொண்டே போகிறது. Such responses don’t deserve a reply. நீங்கள் நான் பதில் எழுதும் தகுதி உள்ள மறுமொழி எதையாவது எழுதினால் மட்டுமே இனி மேல் உங்களுக்கு இங்கே பதில் அளிப்பதாக எண்ணம்.

  21. அன்புள்ள திருச்சிக்காரன்,

    பாபர் கட்டிடம் அந்தக் குறிப்பிட்ட நாளில் இடிக்கப் பட்டது ஒரு *அசாதரணமான* வரலாற்றுத் தருணம். ராமஜன்ம பூமி இயக்கத்தை அதுவரை வழிநடத்தி வந்த தலைவர்களே எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வு அது, திட்டமிடப் பட்ட நிகழ்வு *அல்ல* என்பதை மனதில் கொள்ளவும். லிபர்ஹான் கமிட்டி அறிக்கையும் அதைத் தெளிவுபடுத்துகிறது..

    அயோத்தி இயக்கத் தலைவர்களிடையே இதற்கான இரண்டு வகை எதிர்வினைகள் இருந்தன.

    உமா பாரதி, சாத்வி ரிதம்பரா, அசோக் சிங்கல் போன்றவர்கள் இந்த நிகழ்வுக்காக நாங்கள் சிறிதும் வருந்தவில்லை (dont regret) என்றார்கள்.
    ஹெச்.வி.சேஷாத்ரி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்.தலைவர்கள், அத்வானி, வாஜ்பாய் ஆகியோர் மிகவும் வருந்தத் தக்க நிகழ்வு (highly regrettable) என்றார்கள். நான் ஆர்.எஸ்.எஸ், அத்வானி கட்சி. ஆனால் அவர்களும் ஒருபோதும் வெட்கப் படுகிறோம் (shameful) என்று சொல்லவில்லை என்பதைக் கவனிக்கவும்..

    போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தான் ”வெட்கத்திற்குரியது” என்று மீண்டும் மீண்டும் வர்ணித்தன. திட்டமிட்ட இஸ்லாமிய மதவெறி மற்றும் இன அழிப்பு செயல்பாடுகளால் காஷ்மீரி இந்துக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உயிருக்குப் பயந்து ஓடிவந்ததுதும், காஷ்மீரில் புராதன இந்துக் கோயில்கள் 1980களில் இடிக்கப் பட்டதும் இவர்களைப் பொறுத்தவரையில் “வெட்கத்திற்கு உரிய” நிகழ்வு அல்ல; ஆனால் ஒரு மாபெரும் ஜனநாயகரீதியான மக்கள் இயக்கம் ஒரு கொந்தளிப்பு தருணத்தில் பழைய கட்டிடம் ஒன்றை இடித்தது வெட்கத்திற்கு உரிய நிகழ்வு!

    இந்த போலித்தனத்தை கீறிக் கிழித்து வெளிக்காண்பித்தது தான் அயோத்தி இயக்கத்தின் பெரும் சாதனை!

  22. ஐயா,

    அயோத்தி தீர்ப்புகளை டிவியில் இதுவரை கேட்டதில், மானிட ஜட்ஜுகள் – அது இராமர் பிறந்த இடமே என்பதை ஒப்புக்கொண்டு ராம் லாலா இருக்கும் இடத்தில கோவில் கட்ட ஒப்புதல் அளித்துள்ளார்கள் – முழு விவரங்கள் விரைவில் – வாழ்க ஹிந்து இயக்கங்கள் – உங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்

  23. தீர்ப்பு குறித்து யாராவது விளக்கினால் நன்று.

  24. ஜெய் ஸ்ரீராம் ! தர்மத்தின் பக்கம் தீர்ப்பு வந்துள்ளது !

    இந்தக் கோயிலுக்காகத் தங்களது வாழ்வை அர்ப்பணித்த பலிதானிகளின் பாதம் பணிகிறேன் !

  25. வலியவர் எளியவரைத் தாக்கினார். எளியவரை ஹைகோர்ட் தாங்கியது. ஜெய் ஸ்ரீராம் !!

  26. ஆர் வி

    கோவிச்சுக்காதீங்க. நான் சொன்னதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம் அது உங்கள் பார்வையைக் கிண்டல் அடித்துச் சொல்லப் பட்டதே. நீங்கள் நேராக எதுவும் சொல்லவில்லை என்றாலும் உங்கள் தொனி அதுதான் அதை நீங்களே மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எங்கும் நேரடியாக எல்ஸ்ட் ஒரு ஆர் எஸ் எஸ் என்றோ ராஜாராம் ஒரு ஃப்ராட் என்றோக் இதுவரை சொல்லவில்ல உண்மைதான் ஆனால் நீங்கள் மறைமுகமாக சொல்ல வருவது அதைத்தான் என்பதையே நான் குறிப்பிட்டிருந்தேன். நான் உங்கள் கருத்தை முழுக்க உணர்ந்து படித்தே இந்தக் கிண்டலை அடித்திருக்கிறேன். ராஜாராமனுக்கும் மகாதேவனுக்கும் நடப்பது ஸ்காலர்லி ஆர்க்யுமெண்ட்ஸ் இதைப் போலவே ஐ.மகாதேவன் அவர்கள் கண்டுபிடிப்புகளை நிராகரிப்பவர்களும் இருக்கலாம் அதற்காக அவர்களது ஸ்காலர்ஷிப் உழைப்பு எல்லாம் ஃப்ராட் என்றாகி விடாது

    நான் நன்கு படித்த பின்னரே என் பதிலை கிண்டலாகப் போட்டிருந்தேன். நாட்டுப்புறப் பாடலை ஒத்துக் கொள்ளும் முன்னாலேயே அதுக்கு ஒரு கனமான ஒரு ரைடர் போடுகிறீர்கள் ஆனால் அக்பர் நாமாவை மீண்டும் மீண்டும் அறிய ஆவலாக இருக்கிறீர்கள் இதில் இருந்து நீங்கள் நினைப்பது என்ன என்பதை நான் கேலியாகச் சொல்லியிருந்தேன். இதை ஒரு கிண்டலாக மட்டுமே எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது கோர்ட்டே சொல்லி விட்டது இருந்தாலும் உங்களுக்கு அக்பர் நாமாவில் சொன்னால்தான் சரியாக இருக்கும் :)) ஆகவே அக்பர் நாமாவில் சொல்லப்படாத எதையுமே தீர்ப்பாக நீங்கள் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். நான் நாட்டுப்புறப் பாடல்களில் உள்ள அடிப்படை உண்மைகளை நம்புபவன். எல்ஸ்ட் அவர்கள் யார் என்பதை விட அவர் என்ன சொன்னார் என்பதன் அடிப்படையில் அவற்றைப் படித்துப் பார்த்து விட்டு ஏற்பதோ நிராகரிப்பதோ செய்பவன். என் கருத்து ஒன்றே ஒன்றுதான் ஷா பானு கேஸ், காஷ்மீர் கேஸ் என்று எண்ணற்ற கேஸ்களில் இந்திய அரசு மைனாரிட்டி அப்பீஸ்மெண்ட் நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது இந்துக்களின் இந்த ஒரு உணர்வையாவது அவர்கள் மதித்து இதற்கு ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதுதான். அதையே சற்று காட்டமாக வீம்பாக சொல்லி வருகிறேன் மற்றபடி ஷா பானு கேசில் சட்டத்தை மாற்றாமல் இருந்திருக்குமானால் இந்தப் பிடிவாதம் நான் பிடிக்க மாட்டேன்.

    அன்புடன்
    விஸ்வா

  27. ஆர் வி

    வீண் சண்டைக்கு எல்லாம் நான் அலையவில்லை. உங்க கூட நான் வீம்பு சண்டை போட்டு என்ன சாதிக்கப் போகிறேன். நீங்கள் எழுப்பும் கேள்விகள் மூலமாக சில விஷயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். அவ்வளவே. உங்களைப் போலவே ஏராளமான படித்த இந்துக்கள் உலகம் முழுவதும் கும்முட்டம் இடித்தது தவறு என்றும் அங்கு மீண்டும் மசூதி கட்டப் பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உங்களைப் போலவே அதற்காக விவாதம் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் இங்கு ஒரு ஆர் வி க்குக் கொடுக்கும் பதில் அவர்கள் அனைவருக்கும் கொடுக்கும் பதிலாக இருக்கும். ஆதலால் இதில் வீண் சண்டையே வம்போ கிடையாது. நீங்கள் வினவையும் விஸ்வாமித்ராவையும் குழப்பிக் கொண்டுள்ளீர்கள் :)) நிற்க

    நான் உங்கள் கேள்விகளுக்குள் போவதற்குள் உங்கள் நிலைப்பாடுகள் சிலவற்றை உறுதிப் படுத்திக் கொள்கிறேன் அதனால் நான் நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறேன் என்று நினைக்க மாட்டீர்கள் அல்லவா. உங்கள் நிலைப்பாடுகளாக நான் புரிந்து கொண்டவை:

    1. முதலில் ராமர் கோவிலுக்கான போராட்டம் ஏதோ சமீபத்தில் ஆர் எஸ் எஸ் மற்றும் இந்துத்துவ வெறியர்களால் உருவாக்கப் பட்ட அரசியல் என்று நீங்கள் நினைத்தீர்கள். அப்புறம் ஏதோ கொஞ்ச காலாமாகத்தான் இதற்கான கோரிக்கை இருப்பதாக நினைத்தீர்கள். அப்புறம் 1850 வாக்கிலேயே இதற்கான கேஸ்களும் போராட்டங்களும் நடந்தன என்ற உண்மையையும் ஏற்றுக் கொண்டீர்கள். இருந்தாலும் இன்னும் இதற்கான போராட்டம் 500 ஆண்டுகளாக எல்லாம் நடக்கவில்லை ஏதோ கடந்த 150 ஆண்டுகளாக மட்டும் நடப்பதாகவும் ஆதலால் இது இன்று எழுந்த போராட்டம் என்றும் ஆகவே இதில் நியாயமில்லை என்றும் நினைக்கிறீர்கள்

    2. பாபர் இடித்தது முதலேயே இதற்காக இந்துக்கள் போராடி வருகிறார்கள் என்ற உண்மையை நீங்கள் ஏற்கத் தயாராக இல்லை. அதற்கான ஆதாரத்தை அன்றைய முகலாய அரசு கெஜட்டுகளில் அல்லது அவை போன்ற ஆவணங்களில் உள்ளதா என்று கேட்க்கிறீர்கள்? நாட்டுப்புறப் பாடல்களில் இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். சரியா?

    3. ராமர் கோவில் அங்கிருந்ததிற்கான அகழ்வாய்வு ஆதாரங்களை நாகசாமி போன்றவர்கள் சொல்வதால் ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லாவிட்டால் அதையும் நிராகரித்திருப்பீர்கள், சரியா?

    4. அப்படியே இந்துக்கள் ராமர் கோவிலுக்காக உரிமை கோரி கடந்த 500 வருடங்களாகப் போராடி வருகிறார்கள் என்ற உண்மையை ஆதரங்களுடன் நீங்கள் கேட்க்கும் முகலாய ஆவணங்கள் மூலமாக நிரூபித்தால் அதே உரிமை இன்றும் இருப்பதாக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அப்படி ஏற்றுக் கொண்டால் அங்கு ராமர் கோவில் கட்டப் பட வேண்டும் என்பதை ஆதரிப்பீர்களா? மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன் இல்லையென்றால் சொல்லவும்.

    5. 500 ஆண்டுகளாக அங்கு இந்துக்கள் போராடி வந்ததற்கு ஆதாரம் அக்பர் நாமாவில் இருந்தே தந்தாலும் கூட, அங்கு பிரமாண்டமான ஒரு கோவில் இருந்ததிற்கான அசைக்க முடியாத ஆதர்ரங்கள் தொல்பொருள் ஆய்வுகள் கிட்டியும் கூட இன்று அங்கு உள்ள இடத்தில் ராமர் கோவில் கட்டப் பட வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் வலுவாக நிராகரிக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். சரியா?

    6. அங்கிருந்த கும்முட்டமோ அல்லது உங்கள் பாணியில் சொன்னால் ஒரு கக்கூசோ கூட இடிக்கப் பட்டது தவறே என்றும் அப்படி சட்ட விரோதமாக இடிக்கப் பட்டதால் அந்த இடம் மீண்டும் முஸ்லீம்களிடம் மட்டுமே ஒப்படைக்கப் பட வேண்டும் என்றும் அகழ்வாய்வு ஆதாரம், 500 வருட போராட்டத்தின் ஆதாரம் எல்லாம் செல்லுபடியாகாது என்றும் நீங்கள் கருதுகிறீர்கள். சரியா?

    உங்கள் நிலைப்பாட்டின் படி அகழ்வாய்வு ஆதாரம் எதுவாக இருந்தாலும் 500 வருடங்கள் இந்துக்க்கள் போராடியிருந்தாலும் இன்று அந்த இடம் முஸ்லீம்களுக்கே சொந்தமானது அதனால் அங்கு கோவில் கட்டக் கூடாது என்பது உங்கள் நிலைப்பாடு , வாதம் சரியா?

    எனது மேற்படி அனுமானங்களில் ஏதேனும் தவறாக இருப்பின் நான் மேலே செல்வதற்கு முன்னால் இப்பொழுதே சுட்டிக் காட்டி விடுங்கள். அதனால் திரித்து சொல்கிறேன் என்ற அவப் பெயர் வராது.

    அன்புடன்
    விஸ்வாமித்ரா

  28. ராமச்சந்திர ஷர்மா

    ஜடாயுவின் வார்த்தைகளினால் அஸ்டானிஷ் ஆனீர்கள். ஜடாயு பாபர் கும்முட்டத்தை ஒரு கட்டிடடம் என்று சொன்னார் என்று. இப்பொழுது கோர்ட்டும் நீதிபதிகளும் அதையே சொல்லியிருக்கிறார்களே படித்தீர்களா ?

    Whether the disputed building was a mosque? When
    was it built? By whom?

    The disputed building was constructed by Babar, the year
    is not certain but it was built against the tenets of Islam. Thus, it
    cannot have the character of a mosque.

    இப்பொழுது நீதிபதிகளின் வார்த்தைத் தேர்வைப் பார்த்து அஷ்டானிஷ் ஆவீர்களா? நிச்சயம் இதற்காகவும் அதிர்ச்சி அடைந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். அது வெறித்தனத்தின் உச்சம். ஆபாசத்தின் குறியீடு. இந்துக்களின் மத நம்பிக்கைச் சின்னத்தை அழித்ததின் வெற்றிப் பேயாட்டம். அதை ஜடாயு கட்டிடம் என்று அழைத்ததே மிக கவுரவமான ஒரு சொல். நானாக இருந்தால் வேறு வார்த்தைகளைப் பயன் படுத்தியிருந்திருப்பேன். ஆகவே கூல் டவுண்

  29. ஸ்ரீ ராம் பவானுக்கு வெற்றி என்றென்றும் நம் பகவானுக்கு வெற்றி… ஜெய ஜெய ராம்…ராம்….

  30. ராமன் அயோத்தியின் ஆட்சியை விட்டுக் கொடுத்தான்
    ஆனால் தர்மத்தை ஒரு பொழுதும் விட்டுக் கொடுக்கவில்லை
    அதனாலேயே முனி புங்கவர்களின் யாகங்களுக்கு இடையூறு செய்த கர ,தூஷணர்களை வதம் செய்தான்
    காகாசூரன் சீதை அன்னையிடம் வம்பு செய்ததால் பாணம் எய்து பதினாலு லோகங்களிலும் அலைய வைத்தான்
    அதர்மமான மன்னர்களான ராவணன், வாலி இவர்களிடமிருந்த ஆட்சியை தர்மிஷ்டர்களான விபீஷணன் ,சுக்ரீவன் இவர்களிடம் கொடுத்தான்
    கருத்து என்னவென்றால் சுயநலத்துக்காக கொலையோ, போரோ புரியாதே.
    நாட்டுக்காக,தர்மத்துக்காக,சமுதாயத்துக்காக,நல்லவர்களைக் காக்க,கொடியவர்களை அழிக்க – ஆயுதம் ஏந்து
    ஆகவே நம் தர்மத்தைத் தவாறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்

  31. ஒரு சமுதாயத்தை காக்க வேண்டியது , அதன் நம்பிக்கைகளை தாங்கிப் பிடிக்க வேண்டியது யார்?
    அரசாள்பவர்கள்.

    அவ்வாறுதான் நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் விளங்கினர்
    ஒரு மசூதி , சர்ச் கட்டிக் கொள்கிறோம் என்றால் பெருந்தன்மையாக இடம் கொடுத்தனர். கேரளாவில் ஹிந்து மன்னர் கிறிஸ்தவர்கள் முதல் முதலில் அங்கு வந்த போது அவர்களுக்கு சர்ச் கட்ட அனுமதி அளித்தார்
    குஜராத்தில் மன்னர் பார்சிக்களுக்கு இடம் கொடுத்தார்
    அனால் அதையெல்லாம் தவாறகப் பயன் படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக மதம் மாற்றுவது , கோயில்களை இடிப்பது என்று செய்ய ஆரம்பித்தனர்.

    சத்ரபதி சிவாஜி, ரானா பரதப் சிங்க் முதலியவர்கள் முகலாயர்களின் கொடுங்கோலை எதிர்த்து போரிட்டனர்
    மக்களை காப்பது தம் கடமை என்று உணர்ந்தனர்

    ஆனால் மன்னர் ஆட்சி போன பின்பு நவீன சத்திரியர்களான அரசியல்வாதிகள் தங்களது சரித்திரத்தை மறந்தனர்,முன்னோரை மறந்தனர்
    தாங்கள் நல்ல பேர் எடுக்க வேண்டும். நாட்டுக்கு, மக்களுக்கு, தர்மத்துக்கு எந்த அவமானம் நேர்ந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு மனப்போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்தனர்.நம் எதிரிகள் நம் நாட்டை அடிமைப் படுத்த கடைப் பிடித்த யுக்திகளை கடைப் பிடிக்க ஆ ரம்பித்தனர். அவர்களது பொய்யான ‘கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், வாதங்கள் இவற்றை நம் தலைவர்களே தத்தெடுத்துக் கொண்டனர்.
    இது நம் முன்னோர்களுக்கும்,அவர்கள் போற்றிய கொள்கைகளுக்கும், நம் நாட்டுக்கும் மிகப் பெரிய துரோகமாகும்.

    இதனால் நாடே துண்டாடப் பட்டது
    அப்போதும் ஹிந்துக்கள் பெருந்தன்மையுடன் இருந்தனர்
    அனால் இவர்களின் அக்கிரமம் தங்க முடியாத அளவுக்குச் சென்றது.நாடே போனால் கூடப் பரவாயில்லை. தாங்களும் ,தங்கள் குடும்பங்களும் மட்டுமே பதவி, பணம் இவற்றை சேர்த்துக் அளவில்லாமல் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தனர்

    ஆள்பவர்கள் தர்மத்தை மறந்தால் அல்லது அதர்மத்தின் பக்கம் சென்றால் தர்மத்தை தூக்கிப் பிடிக்க தர்ம தேவதை மக்கள் மனங்களில் புகுவாள் .
    அரசாங்கம் செய்ய வேண்டியதை செய்யாமல் தட்டிக் கழித்தால் அதை மக்களே செய்வதுதான் சரி.

  32. நம் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறும் இவ்வேளையில் அயோத்தி தீர்ப்பின் ஒரு சிறந்த பகுதியைப் பலரும் பேசுவதாகத் தெரியவில்லை. பாபரோ அவனது அடியாள் மீர் பாகியோ கட்டிவைத்தது சும்மா ஒரு கட்டிடம் தானா? கும்முட்டமா? மசூதியா? என்ற விவாதம் சிக்கலான பல அரசியல் சாசன விஷயங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க தெளிந்த தீர்ப்புகளை வழங்கிய பாரம்பரியமிக்க பிரயாகை (அலகாபாத்) உயர்நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டுவிட்டது.

    இராமர் இத்தகைய போராட்டங்களுக்குப் பிறகு தனக்குக் கோவில் கட்டுவதை இரசித்திருப்பாரா என்பது அபத்தத்தின் உச்சத்தில் உதிக்கும் கேள்வி. அரைகுறை செக்யூலர் அறிவின் பாற்பட்ட அறிவுசாரா ஆர்ப்பாட்டம் அது. இராமரின் வாழ்க்கையை முழுவதுமாக அறிந்து கொள்ளாது இசுலாமியர் ஓட்டுக்காக இட்டுக்கட்டப்பட்ட கதை, காசுக்காக களியாட்டம் காட்டும் நம்பிக்கைசாரா ஊடகங்களின் ஒளிச்சிதறல். தனக்கு ஒருவன் அநீதி செய்தால் அவனைப் போரிட்டு வென்று களங்கத்தைத் துடைக்கும் கதையே இராமாயணம். போனால் போகிறதென்று அநீதிக்கு விட்டுக் கொடுப்பதை சனாதன தர்மசாஸ்திரமும், சங்கம் பல கண்டு சமயம் வளர்த்த இலக்கிய மரபுகளும் ஆதரிப்பதில்லை. கொலைவாளினை எடடா கொடியோர் செயல் அறவே என்பதே நமது பாரம்பரியம்.

    நிற்க. இந்திய அதிசயமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை முஸ்லிம்களுக்கு எதிரானது என்று பொதுவாக மறைக்கப்பட்டுவிடும் உண்மைச் செய்தியை வெளியிட்டுள்ளது. பிரயாகை நீதிமன்றம் தன் தீர்ப்பில் வரலாறு மற்றும் தொல்லியல் நிபுணர்கள் எனும் சுய தம்பட்டத்துடன் களமிறங்கி உளறிக்கொட்டி உண்மையைக் கிளறி மூடப்பார்த்த சில தான்தோன்றிகளை தோலுரித்துள்ளது.

    இந்த ‘சுதந்திர நிபுணர்கள்’ (independent experts!!) வஃபு வாரியத்துக்காகக் களமிறங்கியவர்கள். முன்று நீதியரசர்களும் இந்த நிபுணர்களின் கருத்துக்களை மொத்தமாகத் தள்ளுபடி செய்துவிட்ட போதிலும், நீதியரசர் சுதீர் அகர்வால் இவர்களின் சாட்சியங்களையும், அறிக்கைகளையும் தீர ஆராய்ந்து ஒவ்வொரு நிபுணரையும் அவர்களது போலி நிபுணத்துவத்தையும் தோலுரித்துள்ளார்.

    இவர்களில் பலர் நீதிமன்றத்தில் இருமுறை பேசியவர்கள். ASI அகழ்வாராய்ச்சிக்கு முன் ஒரு தடவை அதற்குப் பின் ஒரு தடவை. முதலில் இவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் கோவிலே கிடையாது என்று சாதித்தவர்கள். அகழ்வாராய்ச்சி முடிவுகளுக்குப்பின் தோண்டியெடுக்கப்பட்டவை மசூதியாகவும் இருக்கலாம் இல்லையெனில் ஏதாவதொரு ஸ்தூபியாகவும் இருக்கலாம் என்றனர். நீதிமன்றக் குறுக்கு விசாரணையில் இவர்களது நிபுணத்துவம், துறைசார் அறிவு போன்றவை குறித்த கேள்விகளுக்கு இவர்களின் பதில் மழுப்பலொன்றல்லாது வேறொன்றறியோம் நீதிபதியே என்று தான் இருந்துள்ளது.

    பலர் தங்களின் அறிக்கை, ஆராய்ச்சிக்கட்டுரை போன்றவற்றிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கே பதிலளிக்கத் திணறியிருக்கிறார்கள். கேள்விகளினின்றும் ஓடி ஒளியவே தலைப்பட்டனர் என்று நீதியரசர் அகர்வால் தீர்ப்பெழுதியுள்ளார். சார்பற்ற நிபுணர்கள் என்று இவர்கள் கூறிக்கொண்டாலும், ஒருவரை ஒருவர் எப்படிச் சார்ந்தே இருந்திருக்கின்றனர் என்பதும் தீர்ப்பில் வெளிச்சமாகியுள்ளது. ஒருவர் மற்றவரின் கீழ் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றவர். ஒருவருக்கொருவர் புத்தக மதிப்புரை எழுதிக் கொண்டவர்கள்.

    சுவிரா ஜெய்ஸ்வால் எனும் நிபுணர் “சர்ச்சைக்குரிய இடம், கட்டடம் பற்றி தாம் அறிந்ததெல்லாம் செய்தித்தாட்களில் படித்தும் பிறர் கூறக்கேட்டுமே தவிர ஆராய்ந்து அறிந்ததல்ல என்று கூறியுள்ளார். இவர் நீதிமன்றத்தில் கொடுத்த அறிக்கையும் பேப்பர் படித்தும் மத்திய கால வரலாறு சொல்லித்தரும் பேராசிரியர்களிடம் பேசியும் சேகரித்த தகவல்களின் அடிப்படையிலானது தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    ஸுப்ரியா வர்மா என்கிற மற்றொரு நிபுணர் ASI செய்த அகழ்வாராய்ச்சி தவறு என்று வாதிட்டார். குறுக்கு விசாரனையில் அவர் ASI முதலில் அளித்த லேசர் ராடார் ஆராய்ச்சி அறிக்கையைப் படிக்கவேயில்லை என்பது தெளிவானது. இந்த லேசர் ராடார் ஆராய்ச்சி அறிக்கைதான் நீதிமன்றம் இடத்தைத் தோண்டிப்பார்க்க உத்தரவிடவே முகாந்திரமாயிருந்தது. இவர் ஷிரீன் ரத்னாகர் என்கிற மற்றொரு நிபுணரிடம் மாணவியாயிருந்து PhD பட்டம் பெற்றவர்.

    இந்த ஸுப்ரியா வர்மாவும் ஜெயா மேனன் எனும் மற்றொரு நிபுணரும் அகழ்ந்தாய்த ASI பூமியின் கீழே கோவில் தொடர்பான தூண்களை வைத்துவிட்டது என்று குற்றம் சாட்டியவர்கள். யார் சாட்சி? யாருமில்லை. நேரில் பார்த்தார்களா இவர்களிருவரும்? அகழ்வு நடந்த காலகட்டத்தில் இவர்கள் அயோத்தி பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை.

    மற்றொரு அகழ்வாராய்ச்சி நிபுணர் ஷிரீன் ரத்னாகர் இன்னொரு நிபுணர் பேராசிரியர் மண்டல் என்பவர் எழுதிய புத்தகத்துக்கு முகவுரை எழுதியவர். தனக்கு இருப்பது ஏட்டறிவுதான், துறைசார் செயல் அனுபவம் எதுவும் தமக்குக் கிடையாது என்று நீதிமான்றத்தில் ஷிரீன் ரத்னாகர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    பொதுவாக சாட்சிகள் குறித்தோ அவர்களின் நம்பகத்தன்மை குறித்தோ நீதிபதிகள் தனியாக தீர்ப்பில் குறிப்பிடுவதில்லை. ஏற்புடையதல்ல என்றால் கிளம்பு காற்று வரட்டும் என்று அனுப்பிவிடுவார்கள். ஆனால் நீதியரசர் அகர்வால் மிகத்தெளிவாக எழுதியுள்ளார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. நிபுணர்கள் என்போர் மக்கள் மத்தியில் மிகவும் மதிக்கப்படுவோர். ஆராய்ச்சி எல்லாம் செய்து தெளிந்த அறிவு பெற்ற பெருமக்கள் என்பது எதிர்பார்ப்பு. இப்படி நம்பப்படும் நிபுணர்கள் பேப்பர் படித்து எழுதிக்கொடுத்தேன், எனக்கு எதுவும் தெரியாது என்று பல்டியடிப்பது வேதனைக்குரியது என்று நீதிபதி அகர்வால் கூறியுள்ளார்.

    இப்படிப்பட்ட கேடுகெட்டவர்களை நிபுணர்களை என்று வைத்து வாதிட வ்ஃபு வாரியத்துக்கு என்ன அவசியம்? உண்மை தம் பக்கமில்லை என்பதால் தானே நீதிமன்றத்திலேயே பொய் சொல்லத் தலைப்பட்டார்கள்? மனசாட்சியுள்ள மனிதன் செய்யமாட்டானய்யா இந்த வேலை. படித்தவன் பாவம் செய்தால் ஐயோ என்று போவான் என்று பாரதி பாடினார். பாவம் இந்த நிபுணர்கள். வஃபு வாரியம் இவர்களை எதுவரை காப்பாற்றும்?

  33. மேலும் ஒரு செய்தி நண்பர்களே! அயோத்தி பிரச்சினையில் வஃபு வாரியத்துக்கு தார்மீக உரிமை கிடையாது. ஏனென்றால் சுன்னி முஸ்லிம்களின் பிரதிநிதி அமைப்பாக மட்டுமே செயல்படும் வஃபு வாரியம் இந்தப் பிரச்சினையில் தலையிட எந்த உரிமையும் கொண்டதல்ல. இதில் வழக்காடவோ உரிமை கொண்டாடவோ பாப்ரி மசூதி அமைப்பின் முத்வாலி (நம்ம கோவில் தர்மகர்த்தா மாதிரியான பதவியாயிருக்கும் போல) மட்டுமே தார்மீக உரிமை கொண்ட நபர் என்பது பிரயாகை உயர்நீதிமன்றத்தின் ஒருமித்த முடிவு.

    The three Judge Lucknow Bench of the Allahabad High Court has unanimously held in Issue No. 20(b) of the Suit No. 4 filed by the Sunni Wakf Board that since the Muthwali of the Babri Masjid is the only authority or party that can file the suit, the Sunni Wakf Board representing the Sunni Muslims has no locus standi in the dispute.

    இந்த முத்வாலி ஒரு ஷியா முஸ்லிமாம். அவர் சார்ந்த ஷியா முஸ்லிம்கள் இந்துக்கள் கோவிலைக் கட்டிக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டார்கள். கோவில் கட்ட donation தருவதாகக் கூட சொன்னார்கள். பாபரின் ஆணைப்படி கோவிலை இடித்து/கோவிலின் இடிபாடுகளின் மீது கும்முட்டம் கட்டிய மீர்பாகி ஒரு ஷியா முஸ்லிமாம். அதனால் சுன்னி முஸ்லிம்களுக்கு இதில் எந்தவிதமான உரிமையும் இல்லை என்பது நீதிமன்றத்தின் ஒருமித்த உத்தரவு.

    ஆக வஃபு வாரியத்தின் முறையற்ற தலையீடு வஹாபி இசுலாமின் விளையாடல் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அப்படி இசுலாமியர்களிடையே வேறுபாடின்றி உரிமைக்குப் போராடுபவர்களானால் பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டிக்கட்டுமே? சதாம் உசேன் என்ற சுன்னி முஸ்லிம் இராக்கில் பெரும்பான்மையாயிருந்த ஷியா முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தி ஆண்ட போதும் இவர்கள் எங்கே போனார்கள்? சொந்த மதமானாலும் பெரும்பான்மையினரைக் கொடுமைப்படுத்துவது என்ன கோட்பாடோ?

  34. ஒவ்வொரு ஹிந்துவும், இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு. இது வெகு ஜனங்களைச் சென்றடைய வேண்டும்.

  35. ஹிந்துவாக பிறப்போம், ஹிந்துவாகவே இறப்போம்.மதமாற்றத்தை கண்டிப்பாக தடை செய்வோம்.

  36. நல்லபதிவு இந்துமதம் என்றும் உயிர்போடுதான்இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *