இந்துத் தொல்மரபின் அடிநாதமாக, மூலவேராக இருப்பது அறிவியக்கம். உரையாடலாக, அனுபவப் பகிர்தலாக, தனிமனித சுதந்திரத்தோடு தொடரும் இந்த அறிவியக்கம் இந்து மதங்களில் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது.
இந்த அறிவியக்கம் மானுடத்தின் ஆதி நூல்களில் மிகப்பழமையானதான ரிக் வேதத்திலும் பேசப்படுகிறது. மக்கள் ஒன்று கூடி கேள்வி பதில்களின் மூலம் அறிவை வளர்க்கும் இந்த அறிவியக்கத்தை “விஷஹ்” என்று அழைத்திருக்கிறார்கள் (“விஷஸ்த்வா ஸர்வா வாச்சந்து” – ரிக் வேதம், X. 173.1; அதர்வ வேதம், VI. 87-1). அரசனாக இருந்தாலும் தலைவணங்கிப் பணியும் “ஸமிதி” என்றும் இவ்வறியக்கம் அறியப்படுகிறது. இந்த அறிவியக்கத்தின் அவைக்குச் செல்லும் அரசனே உண்மையானவன் என்று நம் முன்னோர் கருதி இருக்கிறார்கள் (“ராஜா ந ஸத்ய: ஸமிதிரியான:”, ரிக் வேதம், IX.92.6).
இந்த மரபில் இருந்து எழுந்ததால்தான் நமது தத்துவ, இதிகாச, புராண, நீதி நூல்கள் அனைத்தும் உரையாடலாகவும், ஞானப் பகிர்வாகவும் இருக்கின்றன. இந்துத்துவ நூல்களான இவை அனைத்தும் கேள்வி பதில் வடிவிலேயே இருக்கின்றன.
இந்துத்துவம் என அறியப்படும் பன்மைத் தன்மையும், தனிமனித சுதந்திரமும் இந்த அறிவியக்க மரபின் விளைவே.
இந்தியாவில் உள்ள கலைகளும், கோயில்களும், விழாக்களும், சடங்குகளும் இந்த மரபின் வெளிப்பாடுதான். பரத கண்டத்தின் “ஞான பீடங்களும்”, நாலந்தா பல்கலைக் கழகங்களும் இந்த மரபின் விளைவே. குரு-சீட உறவும் இந்த மரபை ஒட்டியதாகவே இருந்தது. உபநிஷதங்களும், ஐம்பெருங்காப்பியங்களும், வள்ளுவமும், சங்க இலக்கியங்களும், நவீன இலக்கியங்களும் இந்த மரபில் விளைந்த ஞானக் கனிகள்.
சங்கம் வளர்த்த தமிழின் தொன்மக் கதை சொல்லும் “சங்கப் பலகையும்” இந்த மரபின் இடுகுறிதான். சிவபெருமானே ஆனாலும் தப்பு தப்புத்தான் என்று சொல்ல நக்கீரனுக்குத் தைரியம் அளித்தது இந்த மரபுதான். “சங்கம்” என்ற வார்த்தை கூட ஸமிதியின் வேறு பெயர்தான்.
இந்த சங்கம் வைக்கும் மரபும், இந்த மரபு தரும் சுதந்திரமும்தான் சினிமா நடிகர்களுக்கும்கூட சங்கம் ஆரம்பிக்கும் வடிவில் தற்காலத்தில் தொடர்கிறது. முதன் முதலாக சினிமா நடிகர்களுக்கு சங்கம் ஆரம்பித்தது இந்தியாவில்தான். அதுவும் நம் தமிழகத்தில்தான். மர்லின் மன்றோவிற்காக.
அந்த சுதந்திர மரபின் தொடர்ச்சியில்தான் நம் “கைப்புள்ள” கூட “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” ஆரம்பித்து நடத்துகிறார். அவரை யாரும் இப்படி ஒரு சங்கம் நடத்துவதற்காகத் தண்டிப்பதில்லை. அதற்குக் காரணமும், இந்த மரபுதான்.
கிராமங்களுக்கு சுயசார்பையும், சுய-அதிகாரங்களையும் அளிக்கும் பஞ்சாயத்துக்கள்கூட, இந்த மரபின் விளைவுதான்.
அனைவரின் கருத்துக்களும் கேட்கப்படுவதோடு, ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் இந்த மரபில் இருக்கின்றன.
நான்தான் கடவுளின் உண்மையான இறைத்தூதுவன், நான் சொன்னதைக் கேட்காவிட்டால் எண்ணைக் கொப்பரையில் உன்னைக் கடவுள் பொரித்துவிடுவார் என்று அச்சுறுத்தும் மதமாக இந்து மதம் இன்றுவரை திரிந்துவிடவில்லை. இங்கனம் அழிந்துவிடாமல் இந்துப் பண்பாட்டைப் பாதுகாப்பதும் இந்த அறிவியக்கம்தான்.
சூனியக்காரர்கள் என்றோ, காஃபிர்கள் என்றோ, பேகன்கள் என்றோ, பூர்ஷ்வா என்றோ குற்றம் சாட்டப்பட்டுக் கொடூரமாக மனிதர்கள் கொல்லப்படாமல் பாதுகாப்பதும் இந்த இயக்கம்தான்.
அந்தத் தொல்மரபின் தொடர்ச்சிதான் இந்தத் தமிழ் இந்து தளமும். எனவே, இந்த இந்துத்துவ மரபினை ஒட்டிய வடிவில் கேள்வி-பதில் பகுதியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம்.
சரி. இந்தப் பகுதிக்குக் கேள்விகளை யார் கேட்கலாம்?
நீங்கள்தான் கேட்கப் போகிறீர்கள்.
அப்படியா? யார் பதில் சொல்லப் போகிறார்கள்?
அதுவும் நீங்களே.
கனிந்த ஞானி முதல், கைப்புள்ளை வரை அனைவருக்கும் இங்கு இடம் உண்டு. இதில் தமிழ் இந்துவின் பங்கு நீங்கள் கேட்கும் கேள்விகளையும், தரும் பதில்களையும் தொகுத்துத் தருவது.
இந்தக் கேள்வி-பதில் பகுதி இரண்டு பாகங்களைக் கொண்டது.
1. ஒரு உரைபொருள் சார்ந்த (theme based) பகுதி.
2. ஒரு பொதுக் கேள்விகளுக்கான பகுதி.
உரைபொருள் சார்ந்த பகுதியில், ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்த கேள்வி-பதில்கள் இருக்கும்.
உதாரணமாக, “இன வாதம்” என்ற ஒரு உரைபொருளை எடுத்துக்கொண்டால், அதற்கான கேள்வி பதில் இப்படி இருக்கலாம்.
கேள்வி:
ஆரியர் என்பதும், திராவிடர் என்பதும் இனங்களைக் குறிக்கின்றன எனச் சொன்னவர்கள் யார்?
– மணிவாசகம், தேவன் குறிச்சி
பதில்:
‘ஆரிய’ என்பதை ஒரு இனம் என்று முதன் முதலில் சொன்னவர் மாக்ஸ் ம்யூலர் என்ற ஜெர்மானியர். ப்ரோட்டஸ்டண்டு பாதிரியார்களின் விருப்பப்படி இங்கனம் சொல்லப்பட்டது என்று சொல்பவர்கள் உண்டு. இந்த ஆரிய இனவாதமே இரண்டாம் உலகப் போரின்போது பல்லாயிரக்கணக்கான யூதர்களைக் கொலை செய்தது.
‘திராவிட’ என்பதை ஒரு இனம் என்று முதன் முதலில் சொன்னவர் கால்ட்வெல் என்ற கத்தோலிக்கப் பாதிரியார். இந்தியாவில் சாதிக் கலவரங்களின் மூல வேர் இந்த ஆரிய-திராவிட இனவாதம்.
– ராபர்ட் ஏசுநாதன், திருப்பெரும்புதூர்
பொதுக் கேள்விகான பகுதியில் பொதுவான கேள்விகளும் இருக்கலாம். நகைச்சுவையான கேள்விகளும் இருக்கலாம்.
உதாரணமாக,
கேள்வி:
ஊழல் செய்பவர்களை ஏன் இந்தியாவில் தூக்கில் போடுவதில்லை?
– நரசிம்மன், சென்னை
பதில்:
சுடுகாட்டுக் கூரை முதல், விளையாட்டு அரங்கக் கூரைவரை ஊழல் பரவி இருப்பதால் தூக்குக் கயிறு தொங்கும் கூரையும் இடிந்து விழும் வாய்ப்பு அதிகம். அதனால்தான்.
– அனானிமஸ், அம்பத்தூர்
இப்போது நீங்கள் உங்களது கேள்விகளை எங்களது தளத்திற்கு அனுப்புங்கள். அந்தக் கேள்விகளை நாங்கள் வெளியிடுவோம்.
வெளியிடப்பட்ட கேள்விகளைப் படித்து, அந்தக் கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் அனுப்பலாம். கிடைத்த கேள்வி-பதில்களை தளம் தொகுத்து வெளியிடும்.
நீங்கள் உரைபொருள் சார்ந்த கேள்விகளையும் அனுப்பலாம், பொதுவான கேள்விகளையும் அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: tamizh.hindu@gmail.com.
கேள்விகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 5 அக்டோபர் 2010
இம்முறைக்கான கேள்வி-பதிலின் உரைபொருள்: அயோத்தியா கோயில் மீட்பு
இந்த உரைபொருள் குறித்து அறிய, கேள்வி-பதில் கேட்க, கீழேயுள்ள தளங்கள் உதவலாம்:
கோவில் மீட்பிற்கு ஆதரவான கட்டுரைகள்:
Ayodhya And After – Issues Before Hindu Society by Koenraad Elst
https://voi.org/books/ayodhya/
அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி
https://tamilhindu.com/2010/09/ayodhya-facts/
அயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை, ஜடாயு
https://tamilhindu.com/2010/09/ayodhya-a-turning-point-in-history/
இராம சேது குறித்தும் இராமர் குறித்தும், எஸ்.அரவிந்தன் நீலகண்டன்
https://tamilhindu.com/wp-admin/post.php?action=edit&post=13044
மறுப்புவாதமும் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளும், ஃப்ரான்ஷ்வா காதியே
https://www.thinnai.com/?module=displaystory&story_id=200102215&format=html
அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், வினவு
https://www.vinavu.com/2009/04/07/elec0904/
Ayodhya and Nazareth: A Comparitative Study By Koenraad Elst
https://www.faithfreedom.org/articles/from-ayodhya-to-nazareth/
The Ayodhya Debate: Focus on the ‘No Temple’ Evidence – Koenraad Elst
https://koenraadelst.bharatvani.org/articles/ayodhya/notemple.html
Romila Thapar’s Double standards and Half Truths
https://arvindneela.blogspot.com/2007/09/romila-thapars-double-standards-and.html
Berlin Wall & Ayodhya Temple
https://www.faithfreedom.org/articles/free-thought/berlin-wall-ayodhya-temple/
THE EVIDENCE AT AYODHYA
https://folks.co.in/2009/11/the-evidence-at-ayodhya/
THE ROLE OF LAW AND JUDICIARY IN THE AYODHYA CASE
https://www.hvk.org/specialrepo/bjpwp/ch9.html
[நூல் அறிமுகம்] Ayodhya 6 December 1992 by PV Narasimha Rao
https://readerswords.wordpress.com/2006/07/29/ayodhya-6-december-1992-by-pv-narasimha-rao/
கோவில் மீட்பிற்கு எதிரான கட்டுரைகள்:
Ayodhya: is a solution possible? – K.N. Panikkar Professor of Modern
History with Jawaharlal Nehru University, Delhi
https://www.hindu.com/2010/09/27/stories/2010092751201300.htm
[ஒரு கிறுத்துவப் பார்வையில்] God and Ayodhya.By Winfried Corduan
https://wincorduan.net/God%20and%20Ayodhya.pdf
அயோத்தி -அகழ்வாராய்ச்சி -அமெரிக்கா இராக் மற்றும் சில கக்கூஸ்கள்
https://www.thinnai.com/?module=displaystory&story_id=20303231&format=html
அயோத்தி வழக்கு – வரலாறும் வருங்காலமும்
https://www.saravanakumaran.com/2010/09/blog-post_24.html
தேசத் துரோகம், ஆபிதீன்
https://abedheen.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/
A solution to Ayodhya dispute – DR. K. HUSSAIN
https://www.hindu.com/thehindu/op/2001/11/27/stories/2001112700270100.htm
லிபரான் ஆணையம்
https://www.tmmk.in/index.php?option=com_content&view=category&id=87&Itemid=284
When caution becomes an imperative- Vidya Subrahmaniam
https://www.thehindu.com/opinion/lead/article695270.ece
“Evidences about Ayodhya doubtful”
https://www.milligazette.com/Archives/2005/01-15July05-Print-Edition/011507200533.htm
[மின் நூல்] Slouching Towards Ayodhya: From Congress to Hindutva in Indian
Politics
https://umanitoba.academia.edu/documents/0009/1959/7_Slouching_Towards_Ayodhya_Smaller_Size.pdf
நல்ல புதுமையான முயற்ச்சி. பாராட்டுக்கள். வாசகர்கள் பேராதரவு தருவர்கள் என்று நம்புகிறேன். குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் பயன் பெறட்டும். முயற்சி வெற்றி பெற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
சரியான நேரத்தில் சரியான துவக்கம்
வாழ்த்துகள்
பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்
இந்தக் கட்டுரையில் சொல்லியது போல ஒரு கருத்துக்களம் அமைத்ததற்கு நன்றிகள்.
இன்னும் அழகாக தனியான forum அல்லது embedded forum அமைக்கலாமே[இலவச சேவையும் உள்ளது.] அதில் நேரடியாக மக்கள் கேள்வியும் பதிலும் அனுப்பலாம். தள நிர்வாகிகள் கால இடைவேளையில் அதை சீர்படுத்தலாமே.
“அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், வினவு” என்னவொரு விஷமமான இணைப்பு? ஓட்டுக்காக அரசியல் செய்கிறார்கள் என்று சொல்வதைத் தவிர மற்றதெல்லாம் கேலிக் கூத்து. இந்துக்கள் பயன்படுத்தும் பொருட்கள் விற்பனை செய்யும் முஸ்லீம்களைக் காட்டி முஸ்லீம்கள் தான் உண்மையான குடிமக்கள் எனக் காட்டியுள்ளது. சிறுபான்மையினரின் தொழில் வளர உதவுபவர்கள் இந்துக்கள் என்று புரியாமல் அரசியல் ஆதாயம் தேடுபவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் தயார் செய்யும் பொருட்களை கூட விடுங்கள் விநாயகர் சதுர்த்தியன்று ஊர்வலம் கூட நம்பகுதியில் போகக் கூடாது என்று சொல்லும் சில முஸ்லீம்களை என்ன சொல்வது?
வினவு இடுகை இடம் மாறி வந்துவிட்டதாக நினைக்கிறேன்.
நன்றி! படிக்க ஆவலாக உள்ளோம்!
அயோத்தியில் முதன்முதலில் ஸ்ரீ ராமருக்கு ஆலயம் கட்டியவர் யார்? இது பற்றி விளக்கமாக யாராவது விளக்க வேண்டுகிறேன்.ஈஸ்வரன், பூலாம்பட்டி,பழனி.
பால. மோகன் தாஸ்
“அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டி அவரை வழிபட அந்த இடம் வேண்டும் என்று ஹிந்துக்கள் கோறுகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக அது ஒரு மசூதியாக இருந்தது என்றும் எனவே அங்கு அல்லாவைத் தொழ தாங்கள் விரும்புவதாகவும் முஸ்லிம்கள் கோறுகிறார்கள். ஒரே இடத்திற்காக இருதரப்பினர் போட்டிபோடுவது தேவையற்றது. கடவுள் ஒருவரே. முஸ்லிம்களும் அந்தக் கடவுளை வழிபடத்தான் கேட்கிறார்கள் எனும்போது கொடுத்துவிட்டுப்போனால்தான் என்ன? அனைவருக்குமான பரம்பொருளான, பரம தியாகியான அந்த ஸ்ரீ ராமர், தற்போது இருந்தால் ‘கூடாது’ என்று கூறவும் கூடுமோ?” என்ற கேள்வியை உண்மையான, விஷயஞானம் நிறைந்த, ஆத்திக ஹிந்து ஒருவர் என் முன் வைத்தார். இந்த கேள்விக்கான நேர்மையான, விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.
பால. மோகன் தாஸ்
“அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டி அவரை வழிபட அந்த இடம் வேண்டும் என்று ஹிந்துக்கள் கோறுகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக அது ஒரு மசூதியாக இருந்தது என்றும் எனவே அங்கு அல்லாவைத் தொழ தாங்கள் விரும்புவதாகவும் முஸ்லிம்கள் கோறுகிறார்கள். ஒரே இடத்திற்காக இருதரப்பினர் போட்டிபோடுவது தேவையற்றது. கடவுள் ஒருவரே. முஸ்லிம்களும் அந்தக் கடவுளை வழிபடத்தான் கேட்கிறார்கள் எனும்போது கொடுத்துவிட்டுப்போனால்தான் என்ன? அனைவருக்குமான பரம்பொருளான, பரம தியாகியான அந்த ஸ்ரீ ராமர், தற்போது இருந்தால் ‘கூடாது’ என்று கூறவும் கூடுமோ?” என்ற கேள்வியை உண்மையான, விஷயஞானம் நிறைந்த, ஆத்திக ஹிந்து ஒருவர் என் முன் வைத்தார். இந்த கேள்விக்கான நேர்மையான, விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.
குறிப்பு: இந்த கேள்வியில் ஸ்ரீ ராமர் ‘தற்போது இருந்தால்’ என்ற வார்த்தை அர்த்தமற்றது. அது எனது பிழை. மன்னிக்கவும்.
பாரத நாட்டைப் பிரித்ததின் பின் புலத்தில் நடந்த சதிகள், அவற்றை அரங்கேற்றியவர்கள் பற்றி சொல்ல முடியுமா?
இந்திராவின் கணவர் பெயர் பெரோஸ் கான். அவரது மாமனார் முஸ்லீம் என்றும் மாமியார் பார்சி என்றும் கூறப் படுகிறது
மாமியாரின் பார்சி குடும்பப் பெயர் ‘கண்டி’ (ghandy) என்று சொல்லப் படுகிறது. இப்படி இருக்கும்போது ‘காந்தி ‘ என்ற பெயரை எப்படி அந்தக் குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டனர்? இதற்கு விளக்கமான விடை சொல்ல வேண்டும்.
இவை ஒரு ஃபோரம் வடிவில் இருந்தால் ஒரே இடத்தில் அனைத்துக் கேள்வி பதில்களையும் காண இயலும். கேள்வி எழும் ஒரு நபர் அக்கேள்வி ஏற்கனவே கேட்கப்பட்டிருக்கிறதா என்பதைத் தேடவும் உதவும். ஒரு subdomain இல் இதைத் தொடங்கலாமே!