வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்

appukuppu1அப்புசாமி: என்ன குப்பு, நியூஸ் பேப்பர சவச்சு தின்னுடுவ போலருக்கே! என்ன படிச்சன்னு கொஞ்சம் எனக்கும் சொல்லுப்பா..

குப்புசாமி: “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 4-ஆவது முறையாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்படுகிறார்’- ங்கறதுதான் இப்ப லேட்டஸ்ட் நியூஸ்! என்ன கொடும சரவணா!

அப்புசாமி: எதக் கொடுமைன்னு சொல்ற..

குப்புசாமி: பின்ன என்ன அப்பு! வெள்ளையனே வெளியேறுன்னு சொல்லி வெள்ளைகாரனை விரட்டறதுக்குன்னே உண்டான கட்சி தான் காங்கிரஸ். இன்னிக்கு அந்தக்கட்சிக்கு தலைவியா ஒரு வெள்ளைக்கார பெண்ணையே நியமிக்கிறாங்கன்னா இத விட கொடுமை வேற என்ன இருக்கு சொல்லு?

அப்புசாமி: அது சரி தான்.. ஆனா அந்தம்மாக்கு மக்கள் ஓட்டு போடறத பாத்தா மக்கள் அவங்கள ஏத்துக்கிட்டாங்கன்னு தானே தோனுது.

appukuppu2குப்புசாமி: இருக்கட்டும்பா. ஆனாலும் நூறு கோடி ஜனத்தொகை இருக்கற இந்தியால காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கற யோக்கியதை ‘ஒரு’ இந்தியனுக்குக் கூடவா இல்ல. ஏன் இப்படி வெள்ளைகாரங்க கால்ல விழுந்து கிடக்காங்கன்னு தெரியலையே!.. ஹூம், காந்தி உயிரோட இருந்திருந்தா இந்த ஈனப்பொழப்புக்காடா நாங்க இந்தப்பாடு பட்டோம்ன்னு கண்ணீர் விட்டிருப்பாரு…

அப்புசாமி: சரி விடு குப்பு.., அந்தம்மாவும் இந்தியால தானே வாழறாங்க..

குப்புசாமி: இந்தியால வாழ்ந்தா மட்டும் இந்தியராயிருவாங்களா என்ன? உடம்ப மட்டும் இந்தியால வெச்சுகிட்டு விசுவாசத்த வாட்டிகனுக்கு காமிச்சா எவன்தான் ஏத்துக்குவான்?

அப்புசாமி: எதவெச்சு அப்டிச் சொல்ற…?

குப்புசாமி: நிறைய இருக்கு. உதாரணத்திற்கு தமிழ்ஹிந்து தளத்துல வெளியான, “சோனியா காந்தியின் முகத்திரை: சில பழைய ரகசியங்கள்” -ங்கற கட்டுரையப் படிச்சிப் பாரேன். அது மட்டுமா? இந்தியரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்தியாவுல வாழ்ந்தாலும், கிட்டத்தட்ட 16 வருஷமா இந்திய குடியுரிமையே வாங்காம இருந்திருக்காங்கன்னா அந்த இத்தாலி விசுவாசத்த என்னன்னு சொல்வ?

அப்புசாமி: யப்பா இவ்வளோ விஷயம் இருக்கா?

குப்புசாமி: பின்ன இல்லையா? இந்தம்மா இந்தியாவோட நிழல் பிரதமரானப்பரம்தான் கிறிஸ்தவ மதமாத்தம் வெள்ளைக்காரன் காலத்துல கூட இல்லாத அளவுக்கு தலைவிரிச்சு ஆடுது. அரசியல் தலைவருங்க பூரா இந்துக்களுக்கு எதிரா நடந்துக்கறதையே இந்தம்மாவுக்கு காட்டுற விசுவாசமா நினைச்சிருக்காங்கன்னா பாத்துக்கயேன்.

அப்புசாமி: ஆமாமாம், ப.சிதம்பரம் கூட காவி தீவிரவாதம்ன்னு பேசி மக்களோட எரிச்சல சம்பாதிச்சிருக்காரே!

குப்புசாமி: பின்ன… அந்தம்மா கிட்ட இத்தாலிக்கான விசுவாசத்த வேற எப்டிக் காட்டுவாங்க? தெரியாமத்தான் கேக்கறேன், “காவி”, தீவிரவாதத்தோட சின்னம்ன்னு இவர் அடயாளப்படுத்த விரும்பினா, தேசியக்கொடியில காவியிருக்கே, அதயும் சேத்துதான் அவமதிக்கிறாரா?

அப்புசாமி: அதானே! சிதம்பரத்துக்கு அடிக்கடி வாய் வழியா பேதி போகுது. oral diarrhea. நல்ல டாக்டரா பாத்து வைத்தியம் பாக்கலைன்னா ஒடம்புக்கு ஆகாது. பாவம்.

குப்புசாமி: என்னைக்கும் இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட பத்து வருஷமா இந்தியால இந்துக்களுக்கு பெரிய கொடுமைகள் இழைக்கப்படுதுன்னா காரணம் இதுதான். மதமாற்றத்தை மார்கெட்டிங் கம்பெனி மாதிரி டார்கெட் வெச்சு நடத்தறாங்க, மல்டிலெவல் மார்கெட்டிங்க்கு ஆள் சேக்குற மாதிரி!. அரசாங்கங்களோட ஊக்கம் இல்லாம இதெல்லாம் நடக்காதுங்கறது எத்தனை அப்பாவிங்களுக்குத் தெரியும்?

அப்புசாமி: அதான் விஷயமா.. என்னைக்கூட போனவாரம் ஒரு நண்பர் வேளாங்கண்ணிக்கு வா.. மாதாகோவில் விஷேசத்துல கலந்துக்க. உன் வேண்டுதல் எல்லாம் நடக்கும்ன்னான். நான் தான் போகலை.

குப்புசாமி: அப்பு.. பக்தியா கூப்படறவங்களும் இருக்காங்க. ஆள் பிடிக்க அலையறவங்களும் இருக்காங்க. உன்னைக் கூப்பிட்ட ஆளு எந்தரகமோ? இதுல விஷேசம் என்ன தெரியுமா? இந்த மாதா கோவில் விஷேசங்கள் எல்லாம் கூட அம்மன் கோவில் பண்டிகை போலதான் நடக்கும். பிரார்தனையா மொட்டை எல்லாம் போடறாங்கன்னா பாத்துகோ!

அப்புசாமி: அப்படியா?

குப்புசாமி: தெரியாதா? உதாரணத்துக்கு நம்ம ஊரு மாரியம்மன் கோவில் திருவிழான்னா கொடியேத்தத்தோடதானே தொடங்கும். வேளாங்கண்ணி கோவில்லயும் கொடியேத்துவாங்க.

அப்புசாமி: கொடின்னா கட்சிக்கொடி மாதிரி துணிக்கொடியா? அம்மன் கோவில் கொடின்னா வேப்பிலை கட்றதத்தானே சொல்லுவாங்க.

neem_leavesகுப்புசாமி: அங்கதான் இந்து தர்மமும் நம்ம ஆன்மிகத்தோட தாத்பர்ய மகிமையும் நிக்குது அப்பு. மாரியம்மன் கோவில் கொடின்னா வேப்பிலையை வரிசையா கயித்துல கட்டி ஊர் முழுசும் கட்டுவாங்க. அதுக்கு அறிவியல் பூர்வமா அர்த்தம் இருக்கு. ஆனா வேளாங்கண்ணி மாதா கோவில்ல கொடியேத்தம்னு சொன்னா மாதா சின்னம் பொறிச்ச துணியத்தான் கொடியா ஏத்துவாங்க. அதுல ஒரு விஷயமும் இல்ல.

அப்புசாமி: புரியும்படியா சொல்லேன்.

குப்புசாமி: அப்பு.. நம்ம பாரத நாடு மக்கள் கூட்டம் கூட்டமாக கிராமம் கிராமமாக வாழ்ந்து வந்த பிரதேசம். இங்கே எல்லாமே இயற்கைதான். அறிவியல் மருத்துவம்ன்னு எல்லாத்தையுமே இயற்கையோடு ஒன்னாவே கலந்து வாழ்ந்திருக்காங்க. அப்படித்தான் கோவில்களும் திருவிழாக்களும். ஒரு கிராமத்தில அம்மன் கோவில் திருவிழான்னா எப்ப வரும்?

அப்புசாமி: வருஷத்துக்கு ஒருவாட்டி..

குப்புசாமி: எந்த மாசம்?

அப்புசாமி: ஆடி மாசம்.

குப்புசாமி: ஏன் ஆடி மாசத்துல கொண்டாடறாங்க?

அப்புசாமி: நீயே சொல்லேன்..

mariyamman-koil-festival

குப்புசாமி: ‘மாரி’ ன்னா மழைன்னு அர்த்தம். ஆடிப்பட்டம் தேடி விதைன்னு சொல்வாங்க. விதை விதைச்சுட்டா போதுமா? மழை வேனாமா? விவசாயிகளெல்லாம் பாடுபட்டு ஆடிப்பாடி விதை விதைச்சாலும் விதைச்ச நெல்லு அரிசியா கொட்டி அடுப்புல பொங்கனும்னா அந்தந்த பருவத்துல மழை வந்தாதானே முடியும்? அதனால மழை வரணும்னும் நல்ல விளைச்சல் கிடைக்கனும்னும் வேண்டிகிட்டு மழையைக் கொண்டுவர தேவதையா அம்மனை வேண்டி ‘மாரி’யைக் கொண்டுவா மாரி அம்மான்னு கும்பிடறாங்க. இந்த வேண்டுதலை ஒழுங்கா நிறைவேத்தினா, ஐப்பசி மாசம் அடமழை பெய்யும். இப்படி பருவம் தப்பாம மழை பெஞ்சா நல்லா விளைச்சல் கிடைச்சு, நிறைய அறுவடை பண்ணி தை மாசம் பொங்கல் வெச்சு மழைகுடுத்த அம்மனுக்கு படையல் பண்ணிப் போடுவாங்க. இப்படி மழைகுடுக்கற தெய்வத்த, “பருவம் தப்பாம எங்கள காப்பாத்துடீ தாயே!”ன்னு சொல்லிக் கும்பிடத்தான் சரியா ஆடி மாசம் விதை விதைக்கற காலத்துல மாரியம்மனுக்கு விழா எடுத்துக் கும்பிடறாங்க.

அப்புசாமி: அடேங்கப்பா! மாரியம்மன் திருவிழால இவ்வளோ விஷயம் இருக்கா? சரி அதுக்கு வேப்பிலைக் கொடி ஏன் கட்றாங்க?

neem-leaves-in-festivalsகுப்புசாமி: அங்கதான் நம்ம மக்கள் இயற்கை வைத்தியத்லயும் அறிவியல் நுணுக்கத்துலயும் எவ்வளவு புத்திசாலியா இருந்திருக்காங்கன்னு தெரியுது. விளக்கமா சொல்றேன் கேளு!

வேப்பிலை ஒரு கிருமிநாசினி. பல வியாதிகளைப் போக்கற அருமருந்தாச்சே.. வெளிநாட்டுக்காரனே வேப்பிலைக்கு பேட்டன்ட் உரிமை வாங்கி வெச்சு நம்மள அடிமையாக்கப் பாத்தான்னா பாத்துக்க. ஆனா ஏற்கனவே இந்தியால வேப்பிலை வெச்சு நம்ம ஆளுங்க நிறைய ஆராய்ச்சி பண்ணின ஆதாரம் இருந்ததால, அதக்காட்டி அந்த உரிமையை ரத்து பண்ண முடிஞ்சுது. அவ்ளோ மருத்துவ குணமும் வேப்பிலைக்கிருக்குன்னு நம்ப முப்பாட்டனுக்கு முப்பாட்டன்கள் எல்லாம் தெரிஞ்சுதான் வெச்சிருக்காங்க.

பத்து நாள் திருவிழா துவங்கறதுக்கு முன்னாடியே ஊரெல்லாம் தமுக்கடிச்சு அம்மன் கோவில் விஷேசத்த அறிவிப்பாங்க. திருவிழா துவங்கற நாளுக்கு முன்னாடி ஊரெல்லாம் வேப்பிலைக் கொடியைக் கட்டுவாங்க. வேப்பிலையைக் கொப்போட பறிச்சு கயித்துல சரம் மாதிரி கட்டி ஊர்ல இருக்கற எல்லாத் தெருக்கள்லயும் கட்டி வெப்பாங்க. கொடியேத்தின நாள் முதலா யாரும் ஊருக்குள்ள வரக்கூடாது. ஊருக்குள்ள இருந்து யாரும் வெளிய போகவும் கூடாது.

அப்புசாமி: இதென்னப்பா கட்டுப்பாடு? பத்து நாளும் யாரும் வெளிய வரப்போகாம இருப்பாங்களா?

குப்புசாமி: கண்டிப்பா இருப்பாங்க அப்பு. ஏன்னா எல்லா கிராமத்திலேயுமே ஒரே காலத்துல இந்த திருவிழா நடக்கறதனால எல்லாரும் அவங்கவங்க ஊர்லயே தங்கிடுவாங்க. அப்படி வேற ஊர்ல மாட்டிக்கிட்டாலும் அந்த ஊரைவிட்டு திருவிழா முடியற வரைக்கும் வரமாட்டாங்க.

அப்புசாமி: அப்படியா? ஏன் இவ்ளோ கட்டுப்பாடு?

kaavadi_veppilaiகுப்புசாமி: காரணம் இருக்கு அப்பு! திருவிழான்னா மக்கள் எல்லோரும் ஒரே இடத்துல கூடுவாங்க இல்லயா? கூட்டம் கூடும்போது அங்கே தொத்துக்கிருமிகள் பரவ நிறைய வாய்ப்பிருக்கு. திருவிழா சமயம் மக்கள் கூட்டமா கூடற எடத்துல ஊர்க்காரர் ஒருத்தர் வெளியெ போய் ஏதாவது தொத்துநோய்க் கிருமியோட ஊருக்குள்ள வந்திட்டா கூட்டத்தோட கலந்து அத்தனை பேருக்கும் ஒரேயடியா வியாதி வந்து மக்கள் எல்லாருக்குமே நோய் வர வாய்ப்பாயிடும். அதே நேரம் வெளியூர்லருந்து ஒருத்தன் புதுசா வந்தாலும் அதே பயம்தான். அதனாலதான் அம்மன் கோவிலுக்கு கொடியேத்திட்டா யாரும் ஊரைவிட்டு போகக்கூடாதுன்னும் ஊருக்குள்ள புதுசா யாரும் வரக்கூடாதுன்னும் உத்தரவு போடுவாங்க.

அப்படி நோய்க்கிருமி எதுவும் அண்டக்கூடாதுன்னும், கிருமிகள் பரவறதத் தடுக்கவும்தான் கூட்டமா மக்கள் கூடற திருவிழா தினத்துக்கு முன்னாடியே ஊரெல்லாம் வேப்பிலையால சுத்தி தொத்துக்கிருமிகள் அண்டாம பாத்துக்கறாங்க.

அப்புசாமி: ஓகோ! நம்ம அரசியல் வாதிங்க மீட்டிங் போட்டா மாநகராட்சி சார்புல ரோடு சைடுல முழுசும் பிளீச்சிங் பவுடரோ குளோரிங் பவுடரோ எதோ ஒன்னு தூவுவாங்களே அது மாதிரியா?

neem-leaves-hung-outside-for-indication-of-chickenpoxகுப்புசாமி: அப்புடீன்னு தான் வெச்சுக்கோயேன். இன்னும் கேளு.. திருவிழா துவங்கறதுக்கு முன்னாடி எல்லாருடைய வீட்டுலயும் வேப்பிலையை வாசல்ல தோரணமா கட்டுவாங்க. வீட்டுக்கு உள்ளேயும் சாமிபடத்துல வேப்பிலை மாலையப் போட்டு வைப்பாங்க. எல்லோருடைய வீட்டுலயும் சாணத்தால மொழுகி, சுவர்கள்ல மஞ்சள் பூசி வைப்பாங்க. ஆக ஊர் தொடங்கி தெரு, வீடு வரைக்கும் வேப்பிலை, பசுஞ்சானம், மஞ்சள்ன்னு மருந்துகளாலேயே நோய்க்கிருமிகளுக்கு எதிரா ஒரு பாதுகாப்பு வளையத்தை உண்டு பண்ணிடறாங்க. சுத்தத்துக்கான இத்தனை ஏற்பாடுகளை பண்ணிட்டு அதுக்கப்புறம்தான் திருவிழா தொடங்கும். மக்கள் விரதம் இருந்து கூட்டம் கூட்டமா கோவிலுக்கு வந்து பொங்கல் வெச்சு, தீ மிதிச்சு, கூழ் காய்ச்சி மத்தவங்களுக்கும் கொடுத்து, பிரார்தனைகளை நிறைவேத்தி, அம்மனை வழிபட்டு, மனநிறைவோட வீட்டுக்குப் போவாங்க.

ஆக இன்னைக்கும் அம்மன் கோவில் திருவிழாக்கள்ல வேப்பிலைக் கொடியேத்தி இயற்கையோட துணை மாறாம நாம கொண்டாடறோம்.

இப்படி சுத்தத்தோட காரணமா வேப்பிலையைக் கட்டி கொடியேத்தறதுக்கு இருக்கற அர்த்தம், மாதாவோட சின்னத்த வெச்சு கட்சிக்குக் கொடியேத்தற மாதிரி ஒரு துவைச்சுப்போட்ட துணியை கம்பத்துல கட்டி ஏத்தறதுல இருக்கான்னு நீயே சொல்லு.

அப்புசாமி: அம்மன் கோவில் திருவிழாவுல கொடியேத்தற சம்பிரதாயத்துக்கு இத்தனை அறிவியல் பூர்வமான அர்த்தம் இருக்குன்னு இப்பதான் தெரியுது குப்பு!

neem-leavesகுப்புசாமி: பின்ன, இந்து தர்மம்ங்கறது வெறும் அடையாள மதமா என்ன? அது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் சேர்ந்த ஒரு வாழும் தர்மமில்லையா? இந்து தர்மத்தோட தத்துவங்கள்லயும் சம்பிரதாயங்கள்லயும் உள்ள உள்ளர்த்தங்களை தெளிவாப் புரிஞ்சிக்கிட்டா, இதை அப்படியே காப்பியடிச்சு வேற ரூபத்தில எத்தனை மதம் வந்தாலும் இந்து தர்மத்திற்கு நிகரா அதனால நிக்கக்கூட முடியாது. அதனாலதான் இதை ஸநாதன தர்மம்னு சொல்றோம். அதாவது நிரந்தரமான தர்மம்.

அப்புசாமி: எல்லாம் சரிதான்… ஆனா திருவிழாவோட கடைசி நாள்ல இளசுகள்ளாம் ஒருத்தர் மேல ஒருத்தர் மஞ்சத்தண்ணி ஊத்தி விளையாடுவாங்களே அதைப்பத்தி சொல்லாம முடிக்கிறியே..!

குப்புசாமி: அதுக்கும் அர்த்தம் இருக்கு. மஞ்சளுக்கு நோய்க்கிருமிகளை விரட்டற மருத்துவத் தன்மை இருக்கு. உதாரணமா எல்லோரும் மஞ்சளால செஞ்ச குங்குமத்தை நெத்தில வெச்சுக்கறோம்தானே..

அப்புசாமி: ஆமாம். அது ஏன்?

turmeric-and-kumkumகுப்புசாமி: நெத்தில இருக்கற மஞ்சள் மேல படற காத்து நம்ம முகத்தைச் சுத்தியே இருக்கும். அதனால நாசித்துவாரம் வரைக்கும் ஒரு பாதுகாப்பு வளையம் போல துர்கிருமிகளை மஞ்சளோட சக்தி அண்டவிடாது. நோய்க்கிருமிகள் இல்லாத சுத்தமான காத்தை மட்டும் நாம் சுவாசிக்க அது உதவும். அந்தளவுக்கு சக்தி உள்ள மருத்துவ குணம் மஞ்சளுக்கு உண்டு.

கூட்டமான இடத்துக்கு வந்து மக்கள் கலைஞ்சு போகும்போது யாருக்காவது அவங்களுக்கே தெரியாம ஏதாவது நோய்தொற்று இருந்து அது மத்தவங்க வீட்டு வரைக்கும் பரவிடக்கூடாதே! அதனால திருவிழா முடிஞ்சி திரும்பிப்போகும் நாள்ல எல்லோர் கால்கள்லேயும் மஞ்சத்தண்ணி ஊத்தி, உடம்புமேலயும் மஞ்சத்தண்ணியைத் தெளிச்சி நோயில்லாம வீட்டுக்குப் போங்கன்னு அனுப்பி வைப்பாங்க.

turmeric-waterஇதுக்காக அவங்கவங்க வீட்டிலேருந்து அவங்கவங்க பங்குக்கு எல்லோரும் மஞ்சத்தண்ணி கரைச்சு எடுத்துக்கிட்டு வந்து, வரவங்க போறவங்க மேல தெளிக்கும்போது, சிலர் கோபப்படலாம்.. அதனால அவங்கவங்களுக்கு முறையுள்ளவங்க மேல மட்டும் மஞ்சத்தண்ணி தெளிப்பாங்க. பொதுவா, தேவையில்லாம யாரோட கோபத்துக்கும் ஆளாகிட வேண்டாம்ன்னு சொல்லி ஆரம்பிச்சதை, முறைப்பையன் முறைப்பெண் மேல தெளிக்கனும், முறைப்பெண் முறைப்பையன் மேல மஞ்சத்தண்ணி ஊத்தணும்னு காலப்போக்குல மாத்திப் புரிஞ்சிக்கிட்டாங்க. அதனால் மஞ்சத்தண்ணி ஊத்தறது விளையாட்டு நிகழ்ச்சி மாதிரி ஆகிப்போச்சு! சிலசமயம் வேற காரணங்களால பலநாள் முறைப்பா இருக்கற சொந்தங்கள்கூட இந்தத் தெளிப்புனால சிரிப்பாகி சட்டுனு பகைமை விலகிப் பழக ஆரம்பிச்சுடுவாங்களாம். மாரியம்மன் கோவில் திருவிழாவுல இவ்ளோ விஷயம் இருக்கு.

அப்புசாமி: குப்பு! இவ்வளவு அர்த்தமுள்ள பண்டிகையைப் பத்தித் தெரிஞ்சுக்காம கூட்டத்துல நிக்கறதுக்கு சங்கடப்பட்டே நான் இவ்வளோ நாளா அம்மன் கோவில் திருவிழால கலந்துக்காம போய்ட்டேனே! அடுத்த மாரியம்மன் திருவிழால வேப்பிலைக் கொடி கட்டுற வேலைய நானே செய்யப்போறேன். சரி… நேரமாயிடிச்சு, போற வழியில ஆத்தாவ வேண்டிக்கிட்டே வீடு போய்ச்சேர்றேன்.

அப்புசாமி இடத்தை காலி செய்ய, குப்புசாமி பெருமூச்சுடனும் சிறு முணுமுணுப்புடனும் திண்ணையில் சாய்ந்தார்– “இந்து தர்மம் மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் சேர்ந்தது இல்லையோ!”

25 Replies to “வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்”

  1. நல்ல கட்டுரை. நன்றி. சுவாரஸ்யமான விஷயங்கள். இது போல் இன்னும் வெளியிடவும்

  2. R.C christians try to convert Hindus by adopting Hindu formalities such as Paathayathirai, sambirani thoobam, wearing Gold ornaments, Girivalam,etc. Without knowing their aim some of our idiots participate in their functions and show their secularism. Our people should be religiously educated.

  3. in periya naayagi church which is famous in the name of PeriyaNayagi Amma and Specially designed silk saree is offered for the Mary there

  4. மற்றுமொரு அருமையான கட்டுரை! தமிழ் ஹிந்துவின் எல்லாக் கட்டுரைகளும் நன்றாக இருக்கிறது. அறிவியல் பூர்வமாகவும் உள்ள சடங்குகளின் தத்துவங்களை சாமானியர்களும் புரிந்து கொண்டால் நம் பலம் பெருகி விடும்! நன்றி!

  5. அய்யா ஒரு கேள்வி
    தமிழரின் தாய் மதம் —> எங்கே எம்பெருமான் முருகன் படம் எங்கே.? அவன்தானே தமிழ் கடவுள்

  6. அன்புள்ள ராம்குமார் அவர்களே, முன்னொரு காலத்தில் வேல்நெடுங்கண்ணி மாரியம்மன் கோவிலாக இருந்த வழிபாட்டுத்தலத்தை கிறிஸ்தவர்கள் தங்கள் வழிபாட்டுத்தலமாக ஆக்கிக் கொண்டதை தாங்கள் அறியவில்லையா? ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இருந்த இடத்தில் சாந்தோம் சர்ச் ஏற்படுத்திய சம்பவம் முதலாக எண்ணற்ற சம்பவங்கள் மூலம் கிறிஸ்தவர்களின் உண்மையான முகம் என்னவென்பதை ஹிந்துக்களாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டும்!

  7. Pingback: Indli.com
  8. Pingback: pligg.com
  9. Pingback: ulavu.com
  10. Excellent article.Christians adopt hindu practices in their temples and worship to confuse the illiterate for converting them misleading them into beileving that this is also similar to Hinduism

  11. அருமையான கருத்துக்கள், எளிய நடையில் எழுதப் பட்ட கட்டுரை.இதே ஸ்டைல்ல இன்னும் நெறைய எழுதுங்க ஆசிரியர் ஐயா.வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    ஆரோக்யசாமி

  12. திரு வரதராஜன் அவர்களே
    வணக்கம்
    வேளாங்கண்ணி என்ற ஊருக்கு அருகில் இருப்பது சிக்கில். அங்கு எழுந்தருளி இருக்கும் முருகப் பெருமானுக்குச் சிங்காரவேலன் என்பது திருநாமம். சூரனை வதம் செய்யப் பார்வதியின் அருள் வேண்டுகிறான் முருகன். தாயே வேலாக மாறி நின்றாள், அதனால் தான் முருகன் கை வேலுக்குச் சக்தி வேல் என்ற பெயர் உண்டாயிற்று, வேலாகிய சக்தி என்பதனால் வேல் +ஆம்+ கன்னி என்ற பெயர் நாளடைவில் மருவி வேளாங்கண்ணி ஆயிற்று என்பது என் எண்ணம். வேளாங்கண்ணி என்பது என்ன மொழி?அதன் பொருள் என்ன என்பது இன்று வரை யாருக்கும் தெரியவில்லை, தாங்களாவது விளக்குவீர்களா?
    அன்புடன்
    நந்திதா

  13. திரு ராம் அவர்களே,

    நல்ல அருமையான ,எளிய நடையில், கேள்வி பதில் முறையில் இக்கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது.அறிவியல் அடிப்படையில் நம் சடங்குகால் இருப்பதை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.மிகவும் பாராட்டுகிறேன்.

  14. திரு ராம் அவர்களே,

    நல்ல அருமையான ,எளிய நடையில், கேள்வி பதில் முறையில் இக்கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது.அறிவியல் அடிப்படையில் நம் சடங்குகால் இருப்பதை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.மிகவும் பாராட்டுகிறேன்

  15. மறுமொழி இட்ட அனைவருக்கும் நன்றி!

    திரு,தனபால், நீண்ட நாளாக நினைத்திருந்தது நேரம் கிடைத்த போது எழுதினேன். இது போல இன்னும் நிறைய இருக்கிறது. எழுத நேரம் வசதிப்பட்டால் பரிமாறிக்கொள்வோம்! இது போன்ற பொக்கிஷங்களை வாழ்க்கைப் பழக்கமாகவே நமக்குக் கொடுத்த நம் முன்னோர்கள் மிகப்பெரியவர்கள். அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்!

  16. நல்ல கட்டுரை கொடுத்த திரு ராம் அவர்களுக்கு நன்றி. வேளாங்கண்ணி என்பது வேலாம்கன்னி (வேலாக்கிய கன்னி)என்பதை மாற்றியது என்ற நந்திதாவின் விளக்கம் சிந்திக்கத் தகுந்தது.

    செந்தில்

  17. இதுல கொடுமை என்னனா வேலங்கன்னினு சொன்னா மாறி அம்மனுக்கு பதிலா மேரியம்மா நியாபகம் வர அளவுக்கு கெடுத்து வச்சிருகானுக . இந்த கொடுமை எப்போ மாறுமோ !

  18. திரு ராம் அவர்களுக்கு நன்றி
    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இருந்த இடத்தில் சாந்தோம் சர்ச் ஏற்படுத்திய சம்பவம் முதலாக எண்ணற்ற சம்பவங்கள் மூலம் கிறிஸ்தவர்களின் உண்மையான முகம் என்னவென்பதை ஹிந்துக்களாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டும்!

  19. குங்குமம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்தால் தயவு செய்து என் மெயிலுக்கு தகவலை அனுப்புங்களேன்.

  20. வேல் இளங்கன்னி அம்மன் தான் வேளாங்கண்ணி ஆகி விட்டது. நல்ல வேளை நாம் இதையெல்லாம் back-track பண்ண முடிகிறது.

  21. Aadi month falls when sun transit in kataka – cancer sign in which ”mangalan ‘ known as ‘chevvai ‘ or mars attains neecha loses its power . Mangalan when loses its power will cause problems of epidemic
    and communicative diseases during Aadi month when rain will be more since sun transit in cancer the sign of ‘water’. so infections spread fast during rainy season. Mangalan – chevvai denotes marriages
    fertility for begetting child – that is why farmers plant seeds during this month of aadi . since mangalan
    denotes welfare for women as chandran, the house is the mother karagan, when chevvai transit
    it gives all goodthings . in this cancer sign, jupiter , the planet of spiritualism gets exalted – uccham
    hence all auspicious festivals are celebrated by worshipping goddess – saivites worship ‘AMMAN’
    the goddess of ‘SAKTHI’ and vaishnvaits worship ” ANDAL” as she took birth in AADI month. as avatara of Sri Bhumi devi ‘ so all living entities from animals to birds and from women to men
    worship of goddess during ‘AADI ‘ month is important. NAGA PANCHAMI falls during this month as naga symbolise fertility, spiritualism and kala sarpa dosham which affects the marriages. so our ancient sages combined both astronomy and science on top of spiritualism . Hinduism is only a science for the welfare of all human faces. Chiristianity is the demoinc face of Rahu while its spirtialistic face denotes worship of karuppanna swami, ayyanar ect – ellai kaval deivangal which are in outer borders of all villages, as protective gods against the infiltration of abhramic religion
    since rahu is the mental conflict of materialism and spiritualism as it is the intersection points
    at the lunar orbits intersecting in sun orbit- an imaginary points without any form or shape or mass
    but a power ful force to create ” shadows ‘ on moon and sun. hence it created many ‘ SHADOW’
    RELIGIONS LIKE CHRISTIANITY, ISLAM WHICH WAGE PHILOSOPHICAL WAR AGAINST THE
    SANADANA DHARMA ROOTED IN THE MENTAL PLANE OF MOON.

  22. இந்து மதத்திலிருந்து கிருத்துவ மதத்திற்க்கு போனவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு கொண்டு வருவது எப்படி என்ற விளக்கம் தேவை ஆசிரியர் அவர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *