கொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை?

பாரத அரசாங்கத்தில் வேலையில் இருக்கும் ஒரு அன்பர் என்னுடன் பகிர்ந்த தகவல்கள் இந்த விஷயமாக மிகுந்த தெளிவை அளிக்கிறது.. ஆரம்ப கட்டத்திலேயே முழுமையான பரிசோதனைகளுக்கு முன்னால் கோடிக்கணக்கான தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு போட்ட பின்னர், பாதகமான எதிர்விளைவுகளை எதிர்கொண்டால் என்ன ஆகியிருக்கும்?… நிறவெறி மிகுந்த அமேரிக்க அரசின் மூலப்பொருள் ஏற்றுமதித் தடை என்ற சதி நடவாதிருந்தால், பாரதத்தில் இரண்டாம் கொரோனா அலையில் நெருக்கடியையும் பெருமளவில் பொதுமக்களின் சாவுகளையும் நாம் எதிர்கொள்ளத் தேவையே இருந்திருக்காது…

View More கொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை?

சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3

எந்த மருத்துவ நிபுணரும் மருத்துவ மனையும் எதிர்பார்த்திராத நோய் அதிகரிப்பினால் ஏற்பட்ட பின்னடைவு இது. இதை மத்திய அரசின் மீது பழிபோடக் கிடைத்த அரசியல் வாய்ப்பாகப் பார்க்கும் எதிர்கட்சிகள்தான் பிண அரசியல் செய்கின்றன. சர்வ தேச ஊடகங்கள் இந்தியா வீழ்கிறது என்று காட்டக் கிடைத்த வாய்ப்பு என்று இறங்கி அடிக்கிறார்கள். நம்மிடம் சில குறைகள் உண்டு. சில விடுபடல்கள் உண்டு. ஆனால், நாம் கொடுத்துவரும் அதிகப்படியான விலை என்பது அதற்கு எந்தவகையிலும் இசைவானது அல்ல. இதுவும் நம் தேசத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இன்னொரு போரே… சீனா நமக்கு இழைத்திருக்கும் பெரும் அநீதி இது. பொறுக்காத சர்வ தேச மருந்து மாஃபியாவின் கரங்களும் இதன் பின்னால் உண்டா என்பதும் தெரியவில்லை…

View More சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3

சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 2

உலகளவில், நோய்த் தொற்று பாதிக்கப்படுபவர்களில் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். ஆனால், படுக்கை வசதிகள் இல்லாத, ஆக்ஸிஜன் இல்லாத, மருந்துகள் இல்லாத, இந்தியாவில் இறப்புவிகிதம் உலகின் பிற 100 நாடுகளையும் விட பல மடங்கு குறைவு… இரண்டாவது அலை பற்றிய அபாய அறிக்கைகளைத் தொடர்ந்து, அரசு பயந்து பயந்து எல்லா ஏற்பாட்டையும் செய்தது. ஆனால் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் மீறிக்கொண்டே இருந்தார்கள்… இவை எதுவும் புரியாமல் மக்கள் கூட்டம் உடனே ரெம்டெசிவர் என்னமோ நோயை முழுவதுமாக்க் குணப்படுத்திவிடும் என்று தாமாகவே நினைத்துக்கொண்டு முண்டியடிக்கிறார்கள். பல மருத்துவர்களை ஒருவித தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள்…

View More சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 2

காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்

1950கள் வரை காலரா நோய்க்கான காரணிகள் முழுவதுமாக அறியப் படவில்லை. அந்த அறிதலை அளித்தவர் டாக்டர் சம்பு நாத் டே என்ற இந்திய மருத்துவ அறிவியலாளர். காலராவை உருவாக்கும் நச்சுக்காரணி (Cholera toxin) பற்றிய திட்டவட்டமான முடிவுகளை 1959ல் அறிவித்தார். காலரா தடுப்பூசிகளும், சிகிச்சைக்கான மருந்துகளும் உருவாக இந்தக் கண்டுபிடிப்புகளே மூல காரணம்…. கடுமையான மருத்துவக் கல்லூரி ஆசிரியர் பணி மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இடையே, சொற்பமான உபகரணங்களையும் வசதிகளையும் வைத்துக் கொண்டு தனது ஆய்வுகளை டே நிகழ்த்தினார்… மனித உயிர்களை நோயிலிருந்து காப்பதிலும் மீட்பதிலும், மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர்களையும் விட, சம்பு நாத் டேயின் பங்களிப்பு மிக அதிகமானது, உயர்வானது…

View More காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்

வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்

அரசியல் தலைவருங்க பூரா இந்துக்களுக்கு எதிரா நடந்துக்கறதையே இந்தம்மாவுக்கு காட்டுற விசுவாசமா நினைச்சிருக்காங்கன்னா பாத்துக்கயேன்… வேப்பிலையைக் கொப்போட பறிச்சு கயித்துல சரம் மாதிரி கட்டி ஊர்ல இருக்கற எல்லாத் தெருக்கள்லயும் கட்டி வெப்பாங்க. கொடியேத்தின நாள் முதலா யாரும் ஊருக்குள்ள வரக்கூடாது. ஊருக்குள்ள இருந்து யாரும் வெளிய போகவும் கூடாது.

View More வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்