அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்- நிறைவுப்பகுதி

தொடர்ச்சி….

pillar-2அயோத்தி வழிபாட்டுத்தலம் தொடர்பான அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் அடிப்படை ஆதாரமாக இருந்தது, சம்பந்தப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த ஆதாரங்கள். ஆனால், அதன் அடிப்படையில் மூன்று நீதிபதிகளும் அறுதியிட்டு தீர்ப்பு வழங்கவில்லை.

அவ்வாறு வழங்க பொருத்தமான காலச்சூழல் நாட்டில் நிலவவில்லை என்பதுதான் அதற்கு காரணமாக இருக்க முடியும். அதற்காக, அகழாய்வில் கிடைத்த ஆதாரங்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. எதிர்காலத்தில் இவ்வழக்கு மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் செல்லுமானால், அங்கு அயோத்தி வழக்கை நிமிர்த்தி நிறுத்தப்போகும் ஆதாரங்கள் அவை தான். எனவேதான், நீதிபதிகள் சர்மாவும், அகர்வாலும், அனைத்து ஆதாரங்கள் தொடர்பான பதிவுகளையும் தங்கள் தனித் தனித் தீர்ப்புகளில் மிகுந்த பிரயாசையுடன் இணைத்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த ஆதாரங்களையே, செக்யூலரிசத்தைக் காக்கவென்றே பிறப்பெடுத்த நமது அறிவுஜீவிகளும் ஆங்கில ஊடகவாதிகளும் சந்தேகப்படுகிறார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி அயோத்தியில் நடந்த அந்த அகழாய்வு, பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது நடந்ததாம். அதனால், அகழாய்வில் தவறான ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற பிரசாரத்தை ஏற்கனவே ஆங்கில ஊடகங்களில் சரித்திர வல்லுனர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் நடத்தி வருகிறார்கள்.

அதாவது ஆட்சிப் பொறுப்பில் அன்று இருந்தவர்களது நிர்பந்தத்தால் தான், நியாயமான முறையில் நடந்த அகழாய்வு கூட, ராமர் கோயிலுக்கு ஆதரவான ஆதாரங்களை ஏற்படுத்திவிட்டது என்பது அவர்களது புகார்.

அதே பாணியில் நம்மாலும் கேள்வி கேட்க முடியும். அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு ஒருவாரகாலம் ஒத்திவைக்கப்பட்டபோது என்ன நடந்தது? தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஹிந்துவிரோத கூட்டணி அரசால், நீதிபதிகள் நிர்பந்தம் செய்யப்பட்டார்களா? அதனால்தான், தீர்ப்பில் அகழாய்வு ஆதாரங்கள் அடக்கி வாசிக்கப்பட்டனவா? இதே நீதிமன்ற பெஞ்சில், மூன்றில் இருவர் ஹிந்துக்களாக இல்லாமல் இருவர் முஸ்லிம்களாக இருந்திருந்தால் தீர்ப்பின் கதி எப்படி ஆகியிருக்கும்?

கேள்விகள் கேட்பதானால் இன்னும் பல கேள்விகளைக் கேட்க முடியும். ஷன்னி வக்பு வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், பிறகு எதற்காக முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது? நாட்டின் அமைதிக்காக அரசு நிர்பந்தத்தால் தீர்ப்புக்கள் திருத்தப்பட்டனவா?

எப்படி இருந்தாலும் நீதிமன்றத் தீர்ப்பை நாட்டு மக்கள் நிம்மதியுடன் வரவேற்றிருக்கிறார்கள். அந்த நிம்மதி அறிவுஜீவிகளுக்கு மட்டும் பொறுக்கவில்லை. 1992 சம்பவத்தின்போது இந்த அறிவுஜீவிகள் விசிறிவிட்ட பெருநெருப்புத் தானே, சிறுபான்மையினரின் அழிவுச் செயல்களை நியாயப்படுத்த உதவியது?

இப்போதும் நீதிமன்றத் தீர்ப்பில் முழு திருப்தி அடையாதபோதும், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக அதனை வரவேற்கக் காரணம், நாட்டின் அமைதியும் வளர்ச்சியும் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணம் தான். இதே கண்ணோட்டத்துடன் தான், 1947-ல் தேசப் பிரிவினையை கண்ணீருடன் ஹிந்து மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்; தேசத்தைப் பிளந்த போதும் அருகில் குடியிருந்த முஸ்லிம் மக்களைத் துரத்தாமல் அவர்களை அரவணைத்தார்கள். அந்த ஹிந்துக்களின் பெருந்தன்மை தான் மீண்டும் மீண்டும் சீண்டப்படுகிறது.

மும்பையிலும் தில்லியிலும் கோவையிலும் வெடித்த குண்டுகளையும் அதனால் உயிரிழந்தவர்களையும் கண்டுகொள்ளாத ஆங்கில ஊடகவாதிகள், குண்டு வெடிக்கக் காரணம் என்ன என்ற புதைபொருள் ஆராச்சியில்தான் கவனம் செலுத்தினார்கள். அவர்கள் கண்டறிந்த ஒரே காரணம், நாட்டில் பரவும் ஹிந்து வகுப்புவாதமே முஸ்லிம்கள் குண்டுவெடிக்க காரணம் என்பது தான். அதாவது, ஹிந்துக்கள், தங்களை ஹிந்து என்று உணர்ந்து ஒருங்கிணைவதே முஸ்லிம்களை கொடூரர்கள் ஆக்குகிறது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலமாக, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் கூட அவமதித்தார்கள் இந்த ‘குருவிமண்டைகள்’ (வார்த்தைக்கு நன்றி: ஜெயமோகன்; காண்க: எனது இந்தியா). அதே குருவி மண்டைகள் தான் தற்போதைய அயோத்தித் தீர்ப்பையும் விமர்சிக்கிறார்கள். உண்மையில் இவர்களை இயக்குவது யார்? ஆங்கிலக் கல்வி பயின்றதால் ஏற்பட்ட மெக்காலே தாக்கமா? மிஷனரிகளும், செஞ்சீனாவும், அரபுநாடுகளும் அள்ளிவீசும் பொற்காசுகளா? கல்வியுடன் நாட்டுப்பற்றை ஊட்டத் தவறிய காங்கிரஸ் அரசா?

உண்மையில் இவையெதுவும் காரணம் கிடையாது. ஊடகம் என்பது மக்களைப் பிரதிபலிப்பது. அவ்வாறு பிரதிபலிக்காத ஊடகம் தாக்குப் பிடிக்காது. ஆனால், நமது நாட்டில் மக்களின் மனநிலைக்கும் ஊடக ராஜாங்கத்திற்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறதே! சுயநலக் காரணங்களுக்காகத் தடம் புரளும் ஊடகங்களை – கண்டிக்கும் வாசகர்கள் இல்லாதவரை, புறக்கணிக்கும் மக்கள் இல்லாதவரை, விமர்சிக்கும் நடுநிலையாளர்கள் இல்லாதவரை, இத்தகைய வரலாற்றுப் பிழைகள் தொடரும்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள். 1975, நெருக்கடி நிலையின்போது கோயங்காவின் எக்ஸ்பிரஸ் தவிர, பெரும்பாலான பத்திரிகைகளும் அன்றைய சர்வாதிகாரி இந்திரா முன் மண்டியிட்டனவே! அவர்களுக்கு அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய ஊடகவாதிகள் சிலர் கம்பீரமாக அமர்ந்து அயோத்தி தீர்ப்பு குறித்து நாட்டு மக்களுக்கு கதைக்கிறார்கள். இதை ‘கலிகாலம்’ என்று சொல்லிவிட்டு நாம் உறங்கச் செல்கிறோம். தவறு யாரிடம்? இந்த இடத்தில் இரு சம்பவங்களைக் கூறியாக வேண்டும்.

1. சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. தினமலர் நாளிதழின் இணைப்பான சிறுவர் மலர் புத்தகத்தில் முகமது நபி குறித்த சித்திரக்கதை வெளியானது. எப்போதும் ஹிந்து சமயம் தொடர்பான கதைகளையே வெளியிடுகிறோமே, கொஞ்சம் மதச்சார்பின்மையையும் காப்போம் என்ற எண்ணத்தில் நபி பெருமானாரின் படக்கதை வெளியானது. ஆனால், நடந்ததோ வேறுகதை. அதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, இறைவனையோ, இறைவனின் தூதரையோ உருவமாக சித்தரிக்கக் கூடாது. எனவே இந்த படக்கதைக்காக தினமலர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுந்தது.

ஆரம்பத்தில் தினமலர் நிர்வாகம் அதைப் பொருட்படுத்தவில்லை. மறுநாள் அதிகாலை மதுரை பேருந்து நிலையத்தில் விநியோகத்திற்காகக் குவிக்கப்பட்ட தினமலர் நாளிதழ் கட்டுக்கள் முஸ்லிம் இளைஞர்களால் எரிக்கப்பட்டன. அப்போது தான், சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்தது தினமலர். அடுத்த நாளே தினமலர் நாளிதழ் முதல் பக்கத்தில் இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்டது. பிரச்னைக்குரிய படக்கதையும் நிறுத்தப்பட்டது. அவர்களுக்குத் தெரியும், நாளிதழின் அடிப்படை வேர் அதன் விநியோகத்தில் இருப்பது. எந்த இடத்தில் அடித்தல் வலிக்கும் என்று தெரிந்தவர்கள் புத்திசாலிகள். வன்முறை கூடாது என்று கூறுபவர்கள் முட்டாள்கள். இது தானே மேற்படி சம்பவத்தின் நீதி?

2. மற்றொரு சம்பவமும் தினமலர் தொடர்பானது தான். தினமலர் நாளிதழ் வாரந்தோறும் ‘பக்தி மலர்’ என்ற இணைப்பு இதழை வழங்குகிறது. பத்திரிகை விற்பனையை அதிகரிக்க ஒரு உபாயமாக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் மாநிலம் முழுவதும் நல்ல பயன் அளித்தபோதும், திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்புக்களில் பலனளிக்கவில்லை. ஏனென்று ஆராய்ந்தபோது, அந்தப் பதிப்புகளுக்கு உட்பட்ட மாவட்டங்களில் கிறிஸ்துவ மக்கள் அதிகம் இருப்பதே காரணம் என்று தெரியவந்தது. அதாவது, ஹிந்துக்களின் தெய்வங்கள் குறித்த கட்டுரைகள் அதிகம் கொண்டிருப்பதால், கிறிஸ்துவர்கள் தினமலர்- பக்திமலரை விரும்பவில்லை. இத்தனைக்கும் பக்திமலரில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்காக தனிப் பகுதிகள் உள்ளன. இது பற்றி ஆலோசித்த தினமலர் நிர்வாகம், மேற்படி பதிப்புக்களில், கிறிஸ்துவர்களுக்கென்று தனியே பக்திமலர் தயாரிப்பது என்று முடிவெடுத்தது. இன்றும், அந்த பதிப்புக்களில், கிறிஸ்துவர்களுக்கென்று பிரத்யேக பக்திமலரும், மற்றவர்களுக்கு பொதுவான பக்திமலரும் விநியோகிக்கப்படுகிறது. வாசகர் விரும்பாத எதையும் பத்திரிகைகளால் விற்க முடியாது; இது தானே கிறிஸ்துவர்கள் நடத்திக் காட்டிய நீதி?

இவை போன்ற எண்ணற்ற உதாரணங்களைக் காட்ட முடியும். பிரபல எழுத்தாளர் மதன் ‘வந்தார்கள், வென்றார்கள்’ தொடரை ஆனந்த விகடனில் எழுதியபோது, முகலாயர்களின் அட்டூழியத்தை எழுதியதற்காக இஸ்லாமியர்களால் மிரட்டப்பட்டார்.

வார்த்தையில் ‘எனது இந்தியா’ கட்டுரையை எழுதியதற்காக எழுத்தாளர் ஜெயமோகனுக்கு மிரட்டல்கள் வந்தன.

தினமலர் -வேலூர் பதிப்பில் ‘கம்ப்யூட்டர் மலரில்’ வெளியான முகமது நபி கார்ட்டூனுக்காக, அதை வெளியிடாத பிற பதிப்புகளின் முதல் பக்கத்திலும் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டிவந்தது.

கீழக்கரையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் என்ற செய்திக்காக ‘நிமிர்ந்த நன்னடை’ தினமணியும் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

விழிப்புணர்வுள்ள சமூகமே தன்மீதான அபவாதத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் என்பதுதான் மேற்கண்ட சம்பவங்கள் காட்டும் நீதி. முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புலம்புவதில் பொருளில்லை.

அவர்கள் ஆளைக் கொல்கிறார்கள் என்றால், ஹிந்துக்களால் எதிர்ப்புக்குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் கூடவா நடத்த முடியாது?

இறையச்சம் மிகுந்த சமுதாயங்களாக இஸ்லாமிய சமுதாயமும், கிறிஸ்துவ சமுதாயமும் உள்ளன என்பதை மறுக்க முடியாது. நாமோ, ‘எல்லாம் இறைவன் செயல்’ என்று கூறிக்கொண்டே, கோயிலை இடித்தாலும் தேமே என்று இருக்கிறோம். நமது துறவியரை ஊடகங்கள் வக்கிரமாகச் சித்தரித்தாலும் பொங்கிஎழ மறுக்கிறோம். அயோத்தித் தீர்ப்பிற்கு எதிராக ஊடக சாம்ராஜ்யவாதிகள் நிகழ்த்தும் பிரசார வன்முறையைக் கண்டும் காணாமல் இருக்கிறோம்.

65 ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போராடி நாட்டில் ஹிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் ஏதோ, இந்த அளவேனும் சிந்திக்கிறோம். சற்றே சிந்தித்துப் பாருங்கள், இந்த அமைப்பும் இல்லாத முந்தைய காலகட்டத்தில் நமது ஹிந்து மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று! ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பரிவார இயக்கங்களும் இல்லாது இருந்திருந்தால், நமது நாட்டையே அரசியவாதிகள் விற்றுத் தின்றிருப்பார்கள்!

imagescalg79m2எந்த ஒரு நிகழ்வும் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது என்பதுவே ஹிந்துக்கள் நம்பும் விதி என்பதன் சாராம்சம். இதுவரை நடந்தவை நமக்கு படிப்பினை அளிக்க ஏற்பட்ட சரித்திர நிகழ்வுகள் என்று கொண்டால், அதிலிருந்து நாம் சரியான பாடம் கற்றுக் கொண்டால், நாளைய பாரதம் நம்மிடம் இருக்கும். விழிப்புணர்வுள்ள சமூகமாக ஹிந்துக்கள் மாறாத வரை, ஊடகவாதிகளின் அத்துமீறல்களை நெஞ்சு நிமிர்த்திக் கண்டிக்க ஹிந்து சமூகம் முன்வராதவரை, அபத்த ஊடகங்களின் அல்ப செயல்பாடுகள் தொடரவே செய்யும்.

இப்போது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் ஹிந்து உணர்வுள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்வது பெருகி வருவது நம்பிக்கை அளிக்கிறது. ஆயினும் தற்போதைய அபத்த வெள்ளத்திற்கு அணை கட்ட அவை போதாது. இந்த விழிப்புணர்வு பெருக வேண்டும். ஒவ்வொரு ஹிந்துவும் விழிப்புணர்வுள்ள குடிமகனாக மாறும்வரை, நமது தேசவிரோதிகளுக்கு எதிரான எழுத்துப் போராட்டம் மேலும் பல முனைகளில் நடத்தப்பட வேண்டும். இணையதளம் நமக்கு உதவக் காத்திருக்கிறது. நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.

(நிறைவு)

22 Replies to “அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்- நிறைவுப்பகுதி”

 1. உண்மையில் இவர்களை இயக்குவது யார்? ஆங்கிலக் கல்வி பயின்றதால் ஏற்பட்ட மெக்காலே தாக்கமா? மிஷனரிகளும், செஞ்சீனாவும், அரபுநாடுகளும் அள்ளிவீசும் பொற்காசுகளா? கல்வியுடன் நாட்டுப்பற்றை ஊட்டத் தவறிய காங்கிரஸ் அரசா?——————

  இது எல்லாம் சேர்ந்த ஒரு விஷ கூட்டணி

  உண்மையில் இவையெதுவும் காரணம் கிடையாது. ஊடகம் என்பது மக்களைப் பிரதிபலிப்பது. அவ்வாறு பிரதிபலிக்காத ஊடகம் தாக்குப் பிடிக்காது. ஆனால், நமது நாட்டில் மக்களின் மனநிலைக்கும் ஊடக ராஜாங்கத்திற்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறதே! சுயநலக் காரணங்களுக்காகத் தடம் புரளும் ஊடகங்களை – கண்டிக்கும் வாசகர்கள் இல்லாதவரை, புறக்கணிக்கும் மக்கள் இல்லாதவரை, விமர்சிக்கும் நடுநிலையாளர்கள் இல்லாதவரை, இத்தகைய வரலாற்றுப் பிழைகள் தொடரும். —————-

  ஊடக பஹிஷ்காரம் மற்றும் ஊடகத்தை மிரட்டல் ஆகியவை ஒற்றுமையான ஆப்ரஹாமிய சமுதாயத்தால் செய்ய முடியும். இது ஹிந்துக்களால் முடியாது என்ற திமிரே ஊடகத்தாரை ஹிந்து விரோதமாகவும் தேச விரோதமாகவும் நடத்த தூண்டுகிறது. சரியான பதிலடி பஹிஷ்காரம் அல்ல. இவர்களை எதரி கொள்ள தேசபக்தர்களால் நடத்த பட வேண்டிய வலிமை மிக்க பல கோடி மக்களுக்கு போய் சேரும் உடகங்கள். வ. வு. சி. வெள்ளையனை எதிர்த்து கப்பல் விட்டார் என்றால் இன்று இருக்கும் தேச பக்தர்களால் ஹிந்து விரோத தேச விரோத சக்திகளுக்கு எதிராக வலிமை மிகுந்த ஊடகம் ஏன் நடத்த முடியாது? பணம் இல்லையா மூளை இல்லையா ? நடத்த முடியும் என்ற மன உறுதியும் சங்கல்பமும் மட்டும் தேவை.

  இணையதளம் நமக்கு உதவக் காத்திருக்கிறது. நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.——————–

  மன்னிக்கவும். இணையதளம் பல்லாயிரம் பேரால் மட்டும் படித்து அறிய முடியும் விஷயம். படித்தவர் படிக்காதவர் பாமரர் என அனைத்து ஹிந்துக்களையும் இணைக்க வலிமையான இந்த இணையதளம் போன்ற நேர்மையான மற்றும் தினமலர் தினமணி போன்று ஆப்ரஹாமிய மதங்களுக்கு வால் பிடிக்காத அவர்கள் அல்லிவிசும் பொற்காசுகளுக்கு அடிமை ஆகாத ஹிந்து ஆதரவு மற்றும் தேச பக்த டிவி இன்றைய மிக பெரிய தேவை. இவ்வாறு ஒரு ஊடகம் ஆரம்பிக்கப்படும் நாள் ஹிந்துக்களுக்கு விடிவு காலம் ஆரம்பிக்கும் நாள். அந்த நாள் விரைவில் மலர எல்லாம் வல்ல ராம பிரானை வணங்குகிறேன்.

 2. ஆழமான கொட்டுகள் உள்ள எளிய நடையில் எழுத்தப்பட்ட கட்டுரை மேலும் இந்த கட்டுரைஎழுதிய ஆசிரியருக்கு எனது நன்றிகள் கலிகாலம் என்று சொல்லிவிட்டு போகும் என் சமுகத்திற்கு இதற்க்கு பிறகாவது விழித்தால் பாரத மாதாவின் மானத்தையும் நாம் ஏற்று இருக்கும் தர்மத்தையும் வருங் காலங்களில் காப்போம் பழையபடி எல்லாம் கலிகாலம் என்று சொல்லிவிட்டு போய் துங்குவது பேடித்தனம்

 3. Pingback: Indli.com
 4. ஊடகங்களில் உண்மையான இந்துக்களும் உரிய பங்காற்ற வேண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) செயற்படுத்தவது போல பல்வேறு தொலைக்காட்சிகளும் வானொலிகளும் இந்துக்களுக்கு அவசியம் வேண்டும். அப்போது இந்தப் பிரச்சினை ஒழியும். நியூ மீடியாவில்(நவீன ஊடகத்தில் Websites ) இலத்திரனியல் (Electronic) மற்றும் அச்சு ஊடகங்கள் (Print media)யாவிலும் நல்ல பற்றும் தெளிவும் அறிவும் கொண்ட இந்து இளைஞர்கள் உருவாக வழி செய்தால் இப்பிரச்சினை இல்லாமல் போகுமல்லவா..?

  ‘ஸத்ய மேவ ஜெயதே’

 5. /////ஆப்ரஹாமிய மதங்களுக்கு வால் பிடிக்காத அவர்கள் அல்லிவிசும் பொற்காசுகளுக்கு அடிமை ஆகாத ஹிந்து ஆதரவு மற்றும் தேச பக்த டிவி இன்றைய மிக பெரிய தேவை. இவ்வாறு ஒரு ஊடகம் ஆரம்பிக்கப்படும் நாள் ஹிந்துக்களுக்கு விடிவு காலம் ஆரம்பிக்கும் நாள். அந்த நாள் விரைவில் மலர எல்லாம் வல்ல ராம பிரானை வணங்குகிறேன்.////////
  நன்றி திரு கிருஷ்ணா குமார் அவர்களே.

  நாம் சில மாதங்கள் முன்பு இங்கே டிவி சேனல் தொடங்குவது பற்றி நண்பர்கள் சிலருடைய கருத்துக்களை படித்தோம்.
  அதற்கான அடித்தளமிட என்ன செய்ய வேண்டும்? பலர் தங்களால் முடிந்த அளவு பங்காற்றுவார்களே.

 6. எல்லா டிவி சேனல்களுமே மிகச் சரியான அளவில் வியாபார தந்திரத்தை கடை பிடித்து வருகின்றன காலையில் வேளுக்குடி கிருஷ்ணன் , எம் வி அனந்த பத்மனபாசாரியார் போன்றவர்களின் ஆன்மிக நிகழ்சிகள். பிறகு மசாலத் தனமான தொடர்கள் கலாசார சீர்கேடான ஆட்டம் பாட்டம். இவையெல்லாவற்றையும் ரசிக்கும் தமிழர்கள். நல்லவற்றை மட்டும் உள்வாங்கிக்கொள்ளவேண்டும் என்னும் உபதேசங்கள். ஊடகங்கள் வியாபாரம் செய்தால் சரி ஆனால் விபச்சாரம் அல்லவோ செய்கின்றன.

 7. நம் மக்களை பொறுத்தவரை வருமுன் காப்போம் என்ற விழிப்புணர்வு கிடையாது .அடி விழுந்தால்தான் குய்யோ முறையோ என்று கதறுவார்கள் [உதாரணம் -கார்கில் போர் ஏற்ப்பட்ட பிறகு தானே தேசபக்தி வெளிப்பட்டது ] அதுபோல் பிரச்னை முற்றிய பிறகு தான் விழிப்பு ஏற்ப்படும் என்றால் நாம் என்ன செய்வது ?மேலும் நமது மக்களுக்கு வசீகரமாகப் பேசவும் ,எழுச்சி ஊட்டவும் ஒரு நாயகன் தேவயாயிருக்கிறான் …பத்திரிக்கயாகட்டும் ,திரைப்படமாகட்டும் ,ஆட்சியாளர்களாகட்டும்-எல்லோரும் சேர்ந்து ஒருமைப்பாடு ,சகோதரத்துவம் என்று சொல்லி சொல்லி நம்மை மழுங்கடித்து விட்டார்கள் . எப்படி இவர்களை திருத்துவதோ தெரியவில்லை ?

 8. //////நாம் சில மாதங்கள் முன்பு இங்கே டிவி சேனல் தொடங்குவது பற்றி நண்பர்கள் சிலருடைய கருத்துக்களை படித்தோம்.
  அதற்கான அடித்தளமிட என்ன செய்ய வேண்டும்? பலர் தங்களால் முடிந்த அளவு பங்காற்றுவார்களே./////
  ஸ்ரீ பாபு நான் ஓரிரு மாதங்களாகத்தான் இந்த இணையதளத்தில் எழுதி வருகிறேன். டிவி சேனல் தொடங்குவது மிகபெரிய வேலை. கோடிகள் தேவை. இந்த காரியம் நான் முன்னமே எழுதியது போல் ஏதோ ஓரிருவர் முனைந்து செய்ய முடிந்த வேலை இல்லை. பெரிய இயக்கங்களான பா ஜ க மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் இணைந்து முனைய வேண்டும். இந்த இணையதளம் மூலமும் மற்றும் பல சஹ்ருதய இணையதளங்களும் இந்த இயக்கங்களை இந்த பெரிய காரியம் செய்ய இடைவிடாது அறிவுறுத்த வேண்டும். எறும்பூற கல்லும் தேயும்.

 9. நான் நீண்ட நெடுங்காலமாகவே ஆர். எஸ். எஸ்., பா.ஜ.க. தலைவர்களிடம் ஒரு ஜனரஞ்சகமான தொலைக்காட்சியைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தேன்( இப்போது சலிப்புற்று அதுபற்றிப் பேசுவதில்லை!). நான் கூறும்போதெல்லாம் அமாம், ஆமாம் என்பவர்கள் அதன்பின் அதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விடுவார்கள். இவ்விரு அமைப்புகளும் மனம் வைத்தால் பொருளாதாரச் சுமை தெரியாமல் ஒரு தொலைக்காட்சி ஊடகத்தைத் தொய்வின்றி நடத்தமுடியும். ஜன ரஞ்சகத் தொலைக் காட்சியின் மூலம் தேனில் மருந்தைக் குழைத்துப் புகட்டுவது போல் ஹிந்துக்களிடையே விழிப்புனர்ச்சியை ஊட்ட முடியும் என்று பலவாறு எடுத்துக் கூறியும் பலனில்லை.
  -மலர்மன்னன்

 10. இந்த ஊடகங்களுக்கு பல முகங்கள் உண்டு. seenioril ஒரு கட்டுரை. சக்தி பக்தி என்று ஒரு பதிப்பில் வேறு ஒரு கட்டுரை. ஒரு ஜோதிடப் பத்திரிக்கை ஹிந்துக்களுக்கு நாதி இல்லையா என்று அலறும். அதே குழுமம் ஒரு கிப்போட்டார் பத்திரிக்கை நடத்தி ஹிந்துக்களை கேவலப் படுத்தும். எல்லாம் காசு ஒன்றுதான் குறி.

 11. // விழிப்புணர்வுள்ள சமூகமே தன்மீதான அபவாதத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் என்பதுதான் மேற்கண்ட சம்பவங்கள் காட்டும் நீதி. //
  நீங்கள் சொல்லி இருக்கும் சம்பவங்கள் முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள் மேல் அபவாதம் என்று கொள்வதற்கில்லை. உண்மை அபவாதமாகாது!

  // முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புலம்புவதில் பொருளில்லை. அவர்கள் ஆளைக் கொல்கிறார்கள் என்றால், ஹிந்துக்களால் எதிர்ப்புக்குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் கூடவா நடத்த முடியாது? //
  ஆளைக் கொல்பவர்கள் போக வேண்டிய இடம் தூக்கு மேடை – அங்கே என்ன ஹிந்து முஸ்லிம்? நீங்கள் இதை புலம்புவதில் பொருளில்லை என்று ஒதுக்கக் கூடாது.

  // நமது துறவியரை ஊடகங்கள் வக்கிரமாகச் சித்தரித்தாலும் பொங்கிஎழ மறுக்கிறோம். // அப்படி ஹிந்து துறவிகள் எல்லாரும் உண்மையான துறவிகளாக இல்லையே? மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பற்றி எந்தப் பத்திரிகை தவறாக எழுதி இருக்கிறது? அப்படி எழுதினால் பொங்கி இருப்பார்கள். நித்யானந்தாவையும் ப்றேமானந்தாவையும் பற்றி உண்மையாக (சண் டிவி மாதிரி இல்லை) செய்தி தருவது ஊடகங்களின் கடமையே. பாதிரியார்களின் ஊழல், பாலியல் தவறுகளை மறைக்ககூடாது என்றல்லவா போராட வேண்டும்? தமிழ் ஹிந்து தளத்திலேயே தவறு செய்யும் துறவி “நம்மவர்”, அவரை கண்டுகொள்ளாதீர்கள் என்ற நினைப்பு வரக்கூடாது.

  உண்மையில் தமிழ் ஹிந்து மாதிரி தளங்கள் ஊடகங்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை, அது தவறுகளை மூடி மறைக்கும் அணுகுமுறை என்று போய்விடக் கூடாது. எல்லாருக்கும் ஒரே மாதிரியான, தவறுகளை வெளிச்சம் போட்டு காட்டும் அணுகுமுறை என்றே இருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு சிவில் சட்டம் வேறாக இருக்கிறது, அதனால் நாஞ்சில் நாட்டில் மருமக்கள் வழி மான்மியமே சொத்துரிமையை தீர்மானிக்க வேண்டும் என்று போவது சரித்திரத்தை திருப்பும் முயற்சி. முஸ்லிம்களுக்கு சிவில் சட்டம் வேறாக இருக்கிறது, எல்லாருக்கும் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும் என்பதுதான் சரியான வழி.

 12. ///இப்போதும் நீதிமன்றத் தீர்ப்பில் முழு திருப்தி அடையாதபோதும், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக அதனை வரவேற்கக் காரணம், நாட்டின் அமைதியும் வளர்ச்சியும் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணம் தான்///

  மேற்பட்டது தவறான கருத்து என்றே எனக்குத் தோன்றுகிறது. ஹிந்துக்கள் அமைதி காக்க காரணம் ‘திருப்தி’.. அதாவது அவர்கள் மனதில் படிந்திருந்த காயங்களுக்கு மருந்தாக இந்த தீர்ப்பு அமைந்ததும், தீர்ப்பு இந்த அளவுக்குக்கூட சாதகமாக இருக்காது என்று எதிர்பார்த்ததும்தான்.

  ‘அங்கே ராமர் கோவில் இருந்தது’ என்ற ஒருவரி அந்த தீர்ப்பில் இருந்ததுவே போதும் பல ஹிந்துக்களுக்கு. ராமர் கோவில் எழும்பினால்தான் மகிழ்ச்சி பிறருக்கு.

 13. ஆன்மீக நிகழ்ச்சிகள் என்றால் ஹிந்துக்கள் பெருவாரியாக அவைகளைப் பார்ப்பார்கள்.
  ஆகவே அது விளம்பரங்கள் குவிக்கும், பணத்தை அள்ளும்.
  ஆகவே அந்த நிகழ்ச்சிகளைப் போடுகிறார்கள்
  அதே சமயம் அவர்களின் ஹிந்து விரோதக் கொள்கையாலும் பணம் கிடைக்கிறது .
  அதாவது ‘ தலை விழுந்தால் நான் ஜெயித்தேன்,பூ விழுந்தால் நீ தோற்றாய்’ என்பது போல் அவர்களுக்கு இரண்டிலும் பணம்.

 14. டிவி மீடியாவின் மற்றொரு நயவஞ்சக முகம்.

  ndtv , டைம்ஸ் நௌ, ஹெட்லையன் டுடே, சி என் என் ஐ பி என் போன்ற சேனல்களில் விவாதங்கள் பார்த்து இருப்பீர். பாஜக விலிருந்து ரவி ஷங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர்,சுஷ்மா ஸ்வராஜ் போன்றோரும் காங்கரஸ் கட்சியின் ஜெயந்தி நடராஜன், அபிஷேக் மனு சிங்க்ஹ்வி போன்றோரும் கமுனிஸ்ட் கட்சியின் சீதாராம் எச்சூரி, பிரகாஷ் கராத் போன்றோர் பங்கேற்கும் விவாதங்கள் பார்த்திருப்பிர். காவி உடுத்தும் ஹிந்து வெறுப்பாளர் மற்றும் நக்சல் ஆதரவாளர் சுவாமி அக்னிவேஷை விட்டு விட்டேன். இதில் டிவி மீடியாவின் நயவஞ்சகம் பார்பீர்.
  ௧. ஹிந்து வெறுப்பாளர் என்ன உளறி கொட்டினாலும் அதை இடையூறு செய்யது அனுமதிப்பார்கள்.
  ௨. ஹிந்து ஆதரவாளர் பேசும் போது அவர்கள் ஒரு வாசகம் பேசி முடிக்கும் முன் பத்து வாசகங்கள் நடுவில் நுழைத்து அவர்களை பேச விடாது தடுமாற வைப்பார் பிரணாய் ராய், பர்கா, அர்னாப், வேர்ல்ட் விஷன் ராஜ்தீப் சர்தேசாய் போன்றோரும் மற்றும் ஹிந்து வெறுப்பாளி காங்கரஸ் மற்றும் கமுனிச்டும். அதை மீறி ஹிந்து ஆதரவாளர் பேசினால் டிவி காரரிடம் வுள்ளது பெரிய ஆயுதம். கமர்ஷியல் ப்ரேக். ஹிந்துக்கள் தங்களது சரியான வாதங்களை வைக்க போகிறார்கள் என்று தெரிந்தால் ஆரம்பத்திலேயே அவர்களை பேச விடாது திணற அடிப்பார்கள். தட்டி முட்டி தன் பங்குக்கு பேச ஆரம்பித்து விட்டால் ப்ரேக் ஆயுத பிரயோகம்.
  ௩. சரி பேச விடுகிறார்கள் என்று பார்ப்போம். அடுத்து இன்னொரு வியூகம். பார்வையாளர் என்ற போர்வையில் வெள்ளை சர்ச்சின் பணம் தின்னும் ஹிந்து புல்லுருவிகள் கம்முனிச புல்லுருவிகள் நாட்டை இரண்டு துண்டாக்கிய காங்கரஸ் கட்சியினர் என்று ஒரு கூட்டத்தை உட்கார வைத்திருப்பார். இந்த கூட்டத்தின் வேலை என்ன. ஹிந்து விரோதியாளரின் உளறல்களுக்கு சபாஷ் போடுவது மற்றும் ஹிந்து ஆதரவாளர் பேசினால் கேலி கூக்குரல் இடுவது.
  ௪. இவை அதனையும் மீறி பேசுகிறார் என்று வையுங்கள். ஹிந்து விறோதியாளரிடம் தேனொழுக பாலொழுக பேசும் அர்னாப் ஹிந்து ஆதரவாளரிடம் போலீசில் பிடி பட்ட பிக் பாக்கேட் polavum பேச aarambippar.

 15. டில்லி ஷாஹி இமாம் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது ஒரு நிருபர் அயோத்தி விஷயம் பற்றி ஏடாகூடமாக ஒரு கேள்வி கேட்ட போது ஆத்திரம் கொண்டு இமாம் அவரை தாக்க எத்தனித்தார் . அந்த செய்தியை ராஜ்தீப் சர்தேசாய் மொட்டையாக (அந்த நிருபர்)
  ‘அந்த சமூகம் முழுவதற்கும் எவ்வாறு அவர் பிரதிநிதியாக இருக்க முடியும்?’ என்று கேட்டார் என்று கூறினார்.
  அதாவது ‘முஸ்லீம் சமுதாயம் முழுமைக்கும் ‘ என்று கூறக் கூட தைர்யம் இல்லை.
  அனால் ஹிந்துக்கள் என்றால் எவ்வளவு திமிராகப் பேசுவார்?
  எவ்வளவு அயோகியத்தனம்?

 16. அன்புள்ள ஆர்.வி,

  //ஆளைக் கொல்பவர்கள் போக வேண்டிய இடம் தூக்கு மேடை – அங்கே என்ன ஹிந்து முஸ்லிம்? நீங்கள் இதை புலம்புவதில் பொருளில்லை என்று ஒதுக்கக் கூடாது//

  நமது நாடாளுமன்றத்தைத் தாக்கியதற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு தூக்குமேடைக்கு சென்றுவிட்டாரா? மும்பை தாக்குதலில் தொடர்புடைய கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதா? அங்கே ஏன் பாகுபாடு? எதற்கு பயம்? திரு. ஆர்.வி தனது தளத்தில் இதுபற்றி துணிவுடன் முதலில் எழுதட்டும்!

  முஸ்லிம்கள் ஆளைக் கொல்கிறார்கள் என்பதால் தான் ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் (காவல்துறையினர் உள்பட) வரை அனைவரும் அஞ்சி நடுங்குகிறார்கள். அவர்களது வழிமுறையை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அவர்களது தவறுகளைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பவர்கள் தான், அமைதியாக ஷாகா நடத்தும் ஆர்.எஸ்.எஸ்.சை வசை பாடுகிறார்கள். அதைச் சுட்டிக் காட்டவே ”முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புலம்புவதில் பொருளில்லை. அவர்கள் ஆளைக் கொல்கிறார்கள் என்றால், ஹிந்துக்களால் எதிர்ப்புக்குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் கூடவா நடத்த முடியாது?” என்று நான் கேட்டிருந்தேன். அதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்பது எனக்கும் புரியவில்லை.

  // அப்படி ஹிந்து துறவிகள் எல்லாரும் உண்மையான துறவிகளாக இல்லையே? மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பற்றி எந்தப் பத்திரிகை தவறாக எழுதி இருக்கிறது? அப்படி எழுதினால் பொங்கி இருப்பார்கள். நித்யானந்தாவையும் பிரேமானந்தாவையும் பற்றி உண்மையாக செய்தி தருவது ஊடகங்களின் கடமையே//

  நண்பர் ஆர்.வி,
  காஞ்சி பரமாச்சாரியார் பற்றி பகுத்தறிவுத் திலகங்கள் அள்ளித் தெளித்த அவதூறுகள் உங்களுக்கு தெரியவில்லையா? இன்றும் கூட அவரை ‘பெரிய சங்கராச்சாரி’ என்று தானே திருவாளர் வீரமணி வெளியிடும் விடுதலை குறிப்பிடுகிறது? அருளாளர் கிருபானந்த வாரியாரை கழகத்தினர் துரத்தித் துரத்தி அடித்த சம்பவங்கள் உங்களுக்குத் தெரியாதா?

  தவறு செய்யும் யாரையும் கண்டிக்க உரிமை உள்ளதாகக் கூறிக் கொள்ளும் ஊடகங்கள் ஏன் திருச்சி ஜோசப் கல்லூரி அவலம் குறித்து (கன்யாஸ்திரி கற்பழிப்பு) அடக்கி வாசிக்கிறது? கொலைக் குற்றம் சாட்டப்பட்ட டில்லி இமாம் மீது இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காதது ஒருபுறம் இருக்கட்டும், அவரது முகத்திரையை மட்டும் ஏன் கிழிக்க ஊடகம் மறுக்கிறது? ஊடகங்கள் செய்ய மறுத்த அந்த கைங்கரியத்தை ஏன் ஆர்.வி. தனது தளத்தில் செய்து பாராட்டுச் சான்றிதழ் பெறக் கூடாது?

  -சேக்கிழான்.

 17. In the young world supplement of The Hindu newspaper, a story for children was publised. It was a pictorial on prophet mohammed.

  The very evening, a group of muslis went to the newspaper office & told them that since they had published the prophet pictorially, it wounded their sentiments & demanded an apology.

  The Hindu published an apology the very next day.

  When mu.ka was the CM in 1989, he renamed the “Walaajaah road” as “babu Jagjivan ram road”. There was a function in which jagjivan ram’s daughter also partcipated.

  The next day, a group of muslim leaders met mu.ka & told him to revert to the old name since walaja was their respected leader.

  Mu.ka immediately complied with their request.

  So much for tolerance.

 18. மன்னிக்க வேண்டும் சேக்கிழான், சரியாக புரிந்துகொள்ளாமல் பதில் எழுதுகிறீர்கள்.

  // நமது நாடாளுமன்றத்தைத் தாக்கியதற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு தூக்குமேடைக்கு சென்றுவிட்டாரா? மும்பை தாக்குதலில் தொடர்புடைய கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதா? அங்கே ஏன் பாகுபாடு? எதற்கு பயம்? திரு. ஆர்.வி தனது தளத்தில் இதுபற்றி துணிவுடன் முதலில் எழுதட்டும்! // கொலைகாரர்களில் ஹிந்து என்ன, முஸ்லிம் என்ன, // // முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புலம்புவதில் பொருளில்லை. // என்று நினைக்ககூடாது, அப்படி நடக்கும் வன்முறையை எதிர்த்து உங்கள் பாஷையில் “புலம்புவது”, என் பாஷையில் எதிர்ப்பது பொருளற்றது இல்லை என்று எழுதி இருக்கிறேன். புரிந்துகொள்ளாமல் அஃப்சல் குரு, கசப் என்று “புலம்புகிறீர்கள்.” For the record, அ ஃ ப்சல் கேஸ் பற்றி எனக்கு அதிகம் தெரியாது, சில இடங்களில் சுப்ரீம் கோர்ட் ஆதாரம் இல்லை என்றாலும் மக்கள் இதையே விரும்புகிறார்கள் என்று சொன்னதாகப் படித்தேன். எது உண்மை எது பொய் என்று தெளிவாகத் தெரியாதபோது எதுவும் எழுதுவதற்கில்லை. கசபைப் பற்றி என்ன எழுதுவது? அதுதான் கேஸ் நடக்கிறதே! தீர்ப்பு வந்தால் எழுதலாம்.

  // முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புலம்புவதில் பொருளில்லை. அவர்கள் ஆளைக் கொல்கிறார்கள் என்றால், ஹிந்துக்களால் எதிர்ப்புக்குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் கூடவா நடத்த முடியாது?” என்று நான் கேட்டிருந்தேன். அதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்பது எனக்கும் புரியவில்லை. // மீண்டும் ஒரு முறை: முஸ்லிம்களின் வன்முறை பற்றி “புலம்புவதை” நிறுத்தாதீர்கள். எல்லா வன்முறைக்கும் அதே அளவுகோலை பயன்படுத்துங்கள்.

  // காஞ்சி பரமாச்சாரியார்… // தனி மனித ஒழுக்கம் என்ற அளவில் சந்திரசேகரேந்திறரை வீரமணி உட்பட யாரும் தவறாக பேசியதாக எனக்குத் தெரியவில்லை. இது தவறான நினைப்பு என்றால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன். அவரது கோட்பாடுகள் வன்மையாக கண்டிக்கப்பட்டால் அது அவர்களின் கருத்துரிமை என்றே சொல்வேன். For the record, சந்திரசேகரேந்திரரின் கோட்பாடுகள் மேல் எனக்கும் விமர்சனங்கள் உண்டு. (ஈ.வெ.ரா.வின் கோட்பாடுகள் மீதும் விமர்சனம் உண்டு.)

  // திருச்சி ஜோசப் கல்லூரி அவலம்… // அதைத்தானே அய்யா சொல்லிக் கொண்டிருக்கிறேன்? எல்லா அவலங்களையும் வெளிப்படுத்துங்கள்! கிருஸ்துவர்கள் தங்கள் “பலத்தால்” இப்படி செய்திகளை அமுக்குகிரார்கள் என்றால் அதை எதிர்ப்போம். ஆனால் கிருத்துவர்கள் செய்திகளை அமுக்குகிரார்கள், நாமும் அமுக்குவோம் என்று கிளம்பாதீர்கள்.

  // ஆர்.வி. தனது தளத்தில் செய்து… // தெரியாத விஷயம் பற்றி எழுதும் எண்ணம் இல்லை. தெரிந்தால் எழுத தடையும் இல்லை.

 19. அன்புள்ள ஸ்ரீ ஆர்.வி., நீங்கள் என்னிடம் உரிமையுடன் நேரடியாகவே கேட்பதுபோல் நானும் உங்களிடம் நேரடியாக ஒன்று கேட்கலாமா? ஹிந்துஸ்தானத்தில் இன்றைய ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்படுகின்றன என்று கருதுகிறீர்களா? ஆம் எனில் உங்களிடம் எனக்குப் பேச ஏதும் இல்லை. ஆனால் அல்லவெனில் அவை அவ்வாறு நடுநிலையுடன் செயல்படாமைக்குக் காரணம் என்னவாக இருக்கமுடியும் என்று யோசித்துப் பதில் அளிப்பீர்களா? ஏனெனில் ஊடகங்கள் பெரும்பாலும் ஹிந்துக்களே பணியாற்றிவரும் அமைப்புகளாகவும் உள்ளன, அவற்றைப் பயன்படுத்துவோரிலும் ஹிந்துக்களே பெரும்பான்மையினராக உள்ளனர் என்ற உண்மையின் அடிப்படையில் இதனை அணுகி விடை காண்பீர்களா?

  மேலும், ஹிந்துத்துவம் என்ற தலைப்பிலேயே ஸாவர்கர்ஜி எழுதியுள்ள முழு விளக்கச் சிறு நூலை நீங்கள் வாசித்துள்ளீர்களா? முதன் முதலில் ஹிந்துத்துவம் என்ற பதத்தை உருவாக்கிப் பிரயோகம் செய்தவரே அவர்தான். அவர் அளித்துள்ள விளக்கமே ஹிந்துத்துவம் என்பதாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்ப்ட்டுள்ளது. இந்நிலையில் ஹிந்துத்துவத்தை நிராகரிப்பதாக நீங்கள் அறிவிப்பது எந்த அடிப்படையில்?
  -மலர்மன்னன்

 20. அன்புள்ள ஆர்.வி.
  தூங்குபவர்களை எழுப்பலாம்; தூங்குபவர்கள் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. வேண்டுமானால், ‘தூங்கும்போது கால் ஆடணுமே’ என்று சொல்லலாம். அப்போது சிலர் தன்னை அறியாமல் கால் ஆட்டக் கூடும். அதைத் தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள். நன்றி.

  தெரியாத விஷயம் பற்றி எழுத மாட்டேன் என்று கூறி இருக்கிறீர்கள். அதற்கும் நன்றி. அப்சல் குரு, காஞ்சி பரமாச்சாரியார் குறித்தெல்லாம் தெரியாது என்று கூறி இருக்கிறீர்கள். அனால், அதற்கு முந்தைய பின்னூட்டத்தில் பரமாச்சாரியார் குறித்து பிரஸ்தாபித்து இருந்தீர்கள். உங்களுக்குத் தேவை என்றால் இழுத்துக் கொள்கிறீர்கள்; இல்லை என்றால் வெட்டி விடுகிறீர்கள். இது ஆரோக்கியமான் தர்க்கமாக இருக்க வாய்ப்பில்லை.

  குதர்க்கங்களுக்கு தொடர்ந்த பதில் சொல்வதும் வீண் வேலை என்றே கருதுகிறேன்.

  -சேக்கிழான்.

 21. மிக மிக அருமையான கட்டுரை சிந்தயைக்கிளரும் வார்த்தைகள்.கட்டுரை ஆசிரியர் அவர்களின் நேர்த்தியான நடை பாராட்டுக்கள்.இப்பொழுது இந்துக்களுக்காக போராட வாதாட ஆர் எஸ் எஸ், வி ஹச் பி,இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இருக்கும் போதே இந்து விரோத பிரச்சாரமும் ,செயல்களும் நடந்து கொண்டுள்ளன .அதுவும் யாரால்? மதச்சார்பின்மை பேசும் இந்துக்களான இந்துவிரோதிகளால்.அந்தக்காலத்தில் அதிகாரம் கையில் உள்ள கொடுன்கோலர்கலான அவுரங்கசீப் போன்றவர்களிடம் நமது மக்கள் என்ன பாடு பட்டிருப்பர் என்பதை நினைத்தாலே அப்பப்பா உடம்பே நடுங்குகிறது……………………………….ஈஸ்வரன்,பழனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *