மூலக் கட்டுரை: Say Proudly I am a Hindu
கட்டுரை ஆசிரியர்: திரு P. தெய்வமுத்து. இந்து இயக்க செயல்வீரர், மும்பையில் இருந்து வெளியாகும் Hindu Voice இதழின் ஆசிரியர்
மொழிபெயர்ப்பாளர்: திரு வேதம். கோபால்
இந்து என்ற சொல்லில் மனிதநேயத்தின் அத்தனை கூறுகளும் அடங்கியுள்ளன. இந்த மனித நேயமே இந்து ஒவ்வொருவருக்கும் பெருமையளிப்பது. ஆனால், இந்த “இந்து” என்ற சொல்லை போலி-செக்யூலர் வியாதிகளும் இந்து விரோத சக்திகளும் ஒரு தீண்டத்தாகத வார்த்தையாக மாற்றிவிட்ட ஒரு பெரும் அவலம் இப்போது நிலவுகிறது.
இந்த அவல நிலை புற்று நோய்போல் எல்லா இந்தியர்களையும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் சுயநல லாபத்திற்காகவும் ஆட்டிப்படைக்கிறது. ஒரு மந்த சூழ்நிலையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்துக்கள் தங்கள் அடையாளங்களை இழந்துகொண்டு இருக்கிறோம் என்பதை அறிந்தே சுயநினைவி்ன்றி செயலற்று இருக்கிறார்கள். இது பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இந்திய இறையாண்மைக்கு தீங்குதான் செய்யும் என்பது திண்ணம்.
2009ஆம் ஆண்டு எதிர்பாராத, புரிந்துகொள்ள முடியாத வெற்றிகளை தேர்தலில் பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். இதற்கு பிறகுதான் இந்த இந்து எதிர்ப்பு மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் சோர்வடைந்து போன பி.ஜே.பி பட்டபுண்களுக்கு மருந்துபோடுவதிலேயே வீணாகக் காலத்தை கழிக்கிறது. பல முன்னணித் தலைவர்கள் களத்தைவிட்டே ஓடிவிட்டார்கள். தங்களை பெருமையாக இந்து என்று சொல்லிவந்த ஒருசில தலைவர்களும் இன்று அதைச் சொல்ல தயங்குகிறார்கள்.
காங்கிரஸை இன்னும் பல பத்து ஆண்டுகளுக்கு அசைக்கமுடியாது என்று பல இந்துக்கள் எண்ணிவருகிறார்கள். அதனால் இந்துத்துவம் என்ற கொள்கையை விட்டு விட்டு ஸெக்யூலசிஸம் என்ற [பெயரில் வரும்] கொள்கையை கடைபிடிக்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரப்படி காங்கிரஸ் வெறும் 24 சதவிகித வாக்குகளால்தான் ஆட்சியில் அமர்ந்துள்ளது. இதை மறந்து மீதமுள்ள 76 சதவிகித வாக்குகளை ஒன்றுதிரட்டாமல் மந்தமாய் திரிந்து கொண்டிருக்கிறார்கள் [இந்து அரசியல் கட்சிகள்]. இந்த சூழ்நிலையில் பாமர இந்து சோர்வடைவது இயற்கையே. ஆனால், பல முன்னணி இந்து தலைவர்கள் தன்னம்பிக்கையுடன், இழந்த இந்து ஒற்றுமையை ஒன்றுதிரட்டாமல் ஸெக்யூலரிஸம் பேசிவருவது நமது போறாத காலமே.
எனவே இந்த இந்து தலைவர்களுக்கு நம்பிக்கையூட்டுவது நமது முதல் கடமையாகும். இந்த இந்து தலைவர்களின் தன்னம்பிக்கையின்மையை எடுத்துக்காட்ட நடந்த சில நிகழ்ச்சிகள் உதாரணங்களாய் இங்கே.
சில வருடங்களுக்குமுன் மும்பையின் ஒரு இந்து அமைப்பு அங்குள்ள தழிழர்களுக்காக ஒருமாத இதழ் ஆரம்பிக்க முடிவுசெய்தது. சில இந்து தலைவர்களும் தொண்டர்களும் கூடி இதற்கு ஒரு நல்ல பெயர் சூட்டவேண்டும் என்று தீர்மானித்து ஆலோசனைகளை வரவேற்றார்கள்.
இதற்கு சங்கவாணி, சங்ககீதம் போன்று சில பெயர்கள் கூறப்பட்டன. இது தூங்கும் இந்துக்களை எழுப்புவதற்காக ஆரம்பிக்கும் பத்திரிகை. எனவே இதற்கு இந்து முழக்கம் என்ற பெயரே பொருத்தமானது என நான் கூறினேன். உடனே ஒரு மாநில தலைவர் இந்து என்ற சொல்லை உபயோகிக்க Registrar of Newspapers in India அனுமதி தராது என்றும், மேலும் இது Information & Broadcasting Ministry கீழ் வருகிறது என்றும் கூறினார். அதிர்ச்சியடைந்த நான் இப்படி முன்னணி தலைவர்களே இந்து என்ற வார்த்தையில் நம்பிக்கையில்லை என்றால் பாமர இந்துவின் நிலைமையை பற்றி என்ன கூறுவது என்று சொல்லி அவருக்கு நம்பிக்கையூட்டினேன். பின்பு இந்து முழக்கம் பத்திரிகை சட்டப்படி அனுமதிக்கபட்டதோடு அல்லாமல் போஸ்டல் டிபார்ட்மெண்ட் சலுகையும் கிட்டியது. இந்த பத்திரிகைக்கு நான் ஆசிரியராக இருந்து நான்கு வருடம் தொடர்ந்து நடத்தினேன். பின்பு சில நடைமுறை சிக்கல்களால் இதை தொடரமுடியவில்லை.
எனக்கு தெரிந்த ஒரு இந்து தலைவர் “இந்து பாரதம்” என்ற ஒரு வலைதளத்தை ஆரம்பிக்க அன்றைய மந்திரி ஒருவரை அணுகினார். ஆனால் அந்த மந்திரி “இந்து” என்ற சொல் வலைதளத்திற்கு இருப்பதால் அதை திறந்துவைக்க மறுத்திருக்கிறார். வேறுவழி இல்லாமல் தனது பெயரை “புனித பாரதம்” என்று மாற்றிக்கொண்டு அதே மந்திரி கையால் வலைத்தளம் திறந்துவைக்கப்பட்டது.
ஒருமுறை நான் “இந்து சேவா” என்ற பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்க ஒரு முக்கிய தலைவரை அணுகினேன். அவர் சற்றும் யோசிக்காமல் இந்த பெயரில் டிரஸ்ட் ஆரபித்தால் அதற்கு அனுமதி கிடைப்பது கடினம் என அறிவுரை கூறினார். ஆனால், நான் அதே பெயரில் டிரஸ்ட் ஆரம்பித்து நடத்திவருகிறேன்.
மேலும் இந்த சம்பவத்தின் போது எனக்கு அனுமதி அளித்த ரிஜிஸ்டாரிடம் இதே பெயரில் வேறு ஏதாவது டிரஸ்ட் இருக்கிறதா என்று கேட்டேன். அவர் அளித்த பதில் நோகடிக்க வைத்தது. “யாரும் இந்த பெயரில் பதிவு செய்யமாட்டார்கள் என்பது எனக்கு தெரிந்ததால் இதில் பரிசீலிக்க எதுவும் இல்லை” என்றார் அவர். நான் அதிர்ந்து போனேன். இதுதான் இன்றய நிலவரம்.
நான் 2002இல் “இந்து வாய்ஸ்” பத்திரிக்கை தொடங்கிய பொழுது பல இந்துத் தலைவர்களும் குருமார்களும் பெயர் மாற்றம் செய்யச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால், நான் அதற்கு செவிசாய்க்கவில்லை. சிந்தித்து பாருங்கள். [பாரம்பரியம் மிக்க இந்து அமைப்புக்கள் எதுவும்] தாங்கள் நடத்திவரும் பத்திரிகைகளுக்கு இந்துவின் குரல் என பெயர் வைக்க முன்வரவில்லை. உலகில் 100 கோடி இந்துக்களுக்காக இயங்கும் பல ஸ்தாபனங்கள் “இந்துவின் குரல்” என்று இந்துக்களுக்காக குரல் எழுப்பவில்லை. ஆனால், நிறைய “இஸ்லாம் வாய்ஸ்”, “கிரிஸ்டின் வாய்ஸ்” என்று பல பத்திரிக்கைககள் உலாவருகின்றன. இவற்றிற்கிடையில் “இந்து” என்ற பெயர் கொண்ட பத்திரிக்கை வெற்றி பெறாது என்று பொய்யான நம்பிக்கை நிலவுகிறது. இதை முறியடிக்கும் வகையில் நம்பிக்கையுடன் ஆரமபிக்கப்பட்ட ”இந்து வாய்ஸ்” எட்டு ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
முன்னணி இந்து தலைவர்கள் சற்று சிந்திக்கவேண்டும். இந்து என்ற சொல்லை உபயோகிக்க எங்கும் எதிலும் எந்த தடையும் கிடையாது. தடை அவர்கள் மனத்தில்தான் உள்ளது.
நமது அரசியல் ஸாஸனம் இந்து என்று சொல்லிக்கொள்ள முழுசுதந்திரம் அளித்துள்ளது. கிறுத்துவரும் முகமதியரும் தங்களை கிறுத்துவர் முகம்மதியர் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் போது நாம் ஏன் இந்து என்று கூறி பெருமைப்படக்கூடாது?
இதை முதலில் இந்து தலைவர்களும் குருமார்களும் புரிந்துகொள்ளவேண்டும். இதனால் பாமர இந்துவும் மதில்மேல் உள்ள இந்துவும் தைரியத்துடன் இந்து என்று கூறி பெருமையுடன் ஒன்றுபடுவர். எனது ”இந்து வாய்ஸ்” பத்திரிகை சட்டப்படி அனுமதிக்கப்பட்டு மும்பை மெட்ரோபாலிடன் நீதிபதிமுன் தன்நிலை விளக்கங்கள் அளித்து போஸ்டல் டிபார்ட்மெண்டால் அனுமதிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் ஏஜண்ட்டுகளுக்கு ரயில்வே மூலம் பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. எங்களது ஏரியா கோரேகான் காவல் நிலையத்திற்கு இந்து வாய்ஸ் பற்றி நன்கு தெரியும். எங்களுக்கு “இந்து வாய்ஸ்” என்ற பெயரில் வங்கி கணக்கு உள்ளது.
எனவே, இந்து என்ற சொல்லுக்கு எங்கேயும் தங்குதடைகள் கிடையாது. எல்லா அதிகாரிகளுக்கும் மதத்தால் பாரபட்சம் பார்ப்பது பிரிவினை பேசுவது சட்டபடி குற்றம் என்று நன்கு தெரியும். ஆனால், சந்தர்ப்பவசத்தால் பல இந்துத் தலைவர்கள் “இந்து” என்ற சொன்னால் பிரச்சனைகள் எழும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பெயரை வைத்திருப்பதால் பிரச்சனைகளையே நாங்கள் எதிர்கொள்ள வில்லை என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. ஒரு சில பிரச்சனைகளை நாங்கள் தினம் தினம் சந்திக்கவேண்டியுள்ளது. இதற்கு காரணகர்த்தாக்கள் இந்து எதிரிகள். தீவிர முகம்மதியர்களும் கிறுத்துவர்களும். இவர்களுக்கு ஆதரவு அளித்து தூண்டிவிட்டு கொண்டிருப்பவர்கள் போலி ஸெக்யூலர் வாதிகள், கம்யூனிஸ்ட்கள், பொறுப்பில்லாத பத்திரிக்கைகள்.
இந்துகளுக்காக வெளிவரும் பத்திரிக்கைகளை வழியில் கிழிப்பது வலைத்தளங்களில் வேண்டும் என்றே குளறுபடி செய்வது இந்து விழாக்களிலும் பொதுக்கூட்டங்களில் கலாட்டாசெய்வது போன்ற அற்பத்தனமான காரியங்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்த தீயசக்திகள் மிகவும் அதிகம் என்பது ஒரு கசப்பான உண்மை. இது இந்து தமிழர்கள் மேல் பூசப்பட்ட அவமான கறையாகும். இதை இந்து என கூறிக்கொண்டு கோவிலுக்கு செல்லும் ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும். இது சட்டபடி குற்றம், தண்டனைக்கு உரியது என்று தெரிந்தும் ஆளும்கட்சி ஆதரவில் இந்த ஈன செயல்களை செய்கின்றனர். கோழையாக மௌனம் சாதிக்காமல் தைரியமாக இவற்றை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும்.
நாம் இந்துத்துவா என்றால் உண்மையாக என்ன என்பதை பார்போம். இந்துத்துவம் பற்றி போலி ஸெக்யூலர்வாதிகளும் சுயநல அரசியல் கும்பல்களும் கூறும் வரையறைகளைப் புறக்கணித்து, உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தை சற்று பார்போம்:
“Hindutva is indicative more of the way of life of the Indian people. It is not to be understood or construded narrowly. It is not Hindu fundamentalism nor is it to be confined only to the strict Hindu religious practices or as unrelated to the cultural and ethos of the people of India, depicting the way of life of the Indian people. Considering Hindutva as hostile, inimical, or intolerant of other faiths, or as communal proceeds is from an improper appreciation of its true meaning” (Supreme Court judgement dated 11.12.1995. Reported at AIR 1996 SC at page 1113)”
“இந்திய மக்களின் வாழ்கை நெறிமுறைகளை உள்ளடக்கி குறிப்பிட்டு கூறுபவைகளே இந்துத்துவம் ஆகும். இதை ஒரு குறுகிய கண்ணோட்டத்திலோ அல்லது ஒரு குறுகிய எல்லைக்குள்ளோ அடைத்துப் பார்க்கக்கூடாது. இதை ஒரு அடிப்படைவாதம் என்றோ அல்லது ஒரு குறிப்பிட்ட இந்துமத கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒன்று மட்டுமே என்றோ கருதக் கூடாது. இந்தியர்களின் கலாசார சிறப்பியல் பண்புகளுக்கு எதிரானதாகக் கருதக்கூடாது. மேலும் இந்துவத்துவம் என்பதை நேசமனப்பான்மையற்றதாகவோ, தீண்டத்தகாததாகவோ, மற்றமதத்தவரை சகித்து கொள்ளாததாகவோ, இனப் பகையை ஊக்குவிக்கத் திட்டம் தீட்டுகிற வழிமுறையாகவோ தவறான உள் அர்த்தம் செய்து கொண்டு பார்ப்பது இந்துத்துவம் என்ற சொல்லுக்கு விளக்கமாகாது.”
உச்ச நீதிமன்றமே இந்துத்துவம் என்ற சொல்லுக்கு தங்குதடையின்றி இது இந்தியர்களின் வாழ்கை நெறிமுறைகளை குறிப்பதே ஆகும் என்று விளக்கியுள்ளது. இதைப்பற்றி மேற்கத்தியர்களும், மேற்கத்திய நாடுகளும் என்ன கூறுகின்றனர் என பார்ப்போம்.
சிலநாட்களுக்குமுன் எனக்கு திரு.ஸ்டிவன் பரவுன் என்ற அமெரிக்கர் ”இந்து வாய்ஸ்” இதழுக்கான ஒருவருட சந்தாதொகையை செக்காக அனுப்பியிருந்தார். அந்த செக்கில் பெறுநர் பெயராக ”ஜெய் ஸ்ரீகிருஷ்னா” என்று இந்தியில் எழுதியிருந்தார். பொதுவாக இந்த பகுதியில் இந்து வாய்ஸ் இதழுக்கான சந்தா என்று இருக்கவேண்டும். அதுதான் வங்கி நடைமுறை. ஆனால், இதை எங்களது வங்கி எந்த சலசலப்பும் இல்லாமல் அங்கீகரித்தது. இதைவிட அதிசயம் அந்த செக்கில் ”HINDUISM IS MOST SCIENTIFIC” என்று கொட்டை எழுத்தில் முத்திரை செய்யப்பட்டிருந்தது. இப்படி ஒரு இந்தியவங்கியின் செக் ஒன்றில் முத்திரை குத்த முடியுமா?
அப்படி செய்தால் போலி-ஸெக்யூலரிஸ வியாதிகள் கூச்சலிட்டு அந்த வங்கிக்கு இனமுத்திரை குத்திவிடுவார்கள். பெரும்பான்மை கிறுத்துவர்களான அமெரிக்கர்களுக்கு இந்துத்துவம் என்றால் என்ன என்று புரிகிறது. ஆனால், பெரும்பான்மை இந்துக்களான இந்தியர்களுக்கு, உச்சநீதிமன்றமே உள்நோக்கம் இல்லாத விளக்கங்கள் அளித்தும் அதை புரிந்துகொள்ள விருப்பமில்லை.
மேலும் பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள் உலகில் உள்ள பல மதங்களை பற்றி ஆராய்ச்சி செய்து இந்துத்துவம் ஒரு விஞ்ஞான முறையிலான வாழ்கை நெறி என்று ஒப்புக்கொண்டுள்ளன. இதுவும் நம் உச்சநீதி மன்ற விளக்கத்தை ஒட்டியே உள்ளது. அமெரிக்கர்கள் இந்துவத்துவம் ஒர் விஞ்ஞான வாழ்க்கைநெறி என்பதை உணர்ந்ததால் ஒருமுறை வேதமந்திரங்களுடன் செனட் ஒருமுறை ஆரம்பிக்கப்பட்டது. ஏப்ரல் 2010 இல் Alaska State Senate & House of representatives in Juneau தங்கள் அலுவலகப் பணிகளை இந்து சுலோகங்களை சொல்லி ஆரம்பித்தனர். திரு. ராஜன் செட் (Rajan Zed) என்னும் அமெரிக்க இந்து சமஸ்கிருத சுலோகங்களை செனடர்கள் முன்கூறி புனித கங்கா தீர்த்தத்தை தெளித்தார்.
ஏப்பிரல் 2010 இல் லாஸ் ஏஞ்சல்ஸில் பைசாகி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில் பாலிவுட் நடிகை மல்லிகா சேராவத், இசை அமைப்பாளர் பாபி லிகரி, ஹாலிவுட் நடிகை அலெக்ஸ் பீட்டர்ஸ் , கலிபோர்னியாவின் மாநிலஅவை உறுப்பினர் டெட் லியூ போன்றோர் பங்கேற்றார்கள். விழாவை டோனி மெக் நட்டி ஆரம்பித்து வைத்தார். 200 பேர் கலந்துகொண்டு பஜனை பாடல்களை பாடினார்கள். இரண்டு சிறுவர்கள் ஆரத்தி எடுத்து விழாவை முடிவு செய்தனர். ஸ்ரீராமநவமி கிருஷ்ணாஷ்டமி போன்ற பண்டிகைகள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, இங்கிலாந்துப் பாராளுமன்றம், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற போன்ற மதிப்பிற்குரிய அவைகளில் தொடர்ந்து கொண்டாடப்படுகின்றன.
ஒளிவிழாவான தீபாவளி இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதில் உள்ளுர் அரசியல் தலைவர்களும் பங்கு கொள்கிறார்கள். 2003 ஆம் வருடம் தொட்டு வெள்ளை மாளிகையில் இவ்விழா தொடர்ந்து கொண்டாடடப்படுகிறது. 2009இல் இது மேலும் சிறப்பிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா கலந்துகொண்டு கைகூப்பி குத்துவிளக்கு ஏற்றுகையில் வணக்கம் தெரிவித்தார். அப்போது வேத மந்திரங்கள் சொல்லப்பட்டன. ந்யூயார்க், லாஸேஞ்சலஸ், வாஷிங்டன், சிகாகோ முதலான இடங்களில் வான வேடிக்கைகள் நடந்தன. 2009இல் லண்டன் மேயர் தீபாவளி பண்டிகையை கொண்டாடி நற்செய்திகளை கூறினார். கனடாவில் தீபாவளி கொண்டாட்டம் என்பது அந்த நகரின் சமூக ஒற்றுமை விழாவாகக் கருதப்பட்டு அந்த நாட்டின் பிரதமர் தன் நாட்குறிப்பில் தீபாவளி தினத்தை முக்கிய விழாநாளாகக் குறித்துவைத்துள்ளார்.
டிவியில் ”ஜெய் கிருஷ்ணா” மற்றும் “லிட்டில் கிருஷ்ணா” என்ற ஒளிபரப்புகள் அங்கே பிரபலமானவை. இதை தவிர வெள்ளித் திரையிலும் பாலகிருஷ்ணா, கிருஷ்ணா ஆயோ நட்கட் நந்தலால் போன்ற படங்கள் வெளிவந்துள்ளன. ஜகன்நாதர் ரத யாத்திரை லண்டன் நகரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதைப்போல் விநாயகசதுர்தி விழா உலகெங்கும் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, துபை போன்ற நாடுகளின் தலைவர்களும் பெரும்புள்ளிகளும் விழாக்களில் குதூகூலத்துடன் பங்குகொள்கிறார்கள். விழாக்களை அமைதியாக ஒர் ஒழுங்குமுறையுடன் இந்துக்கள் கொண்டாடுவதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.
பிரிட்டனின் புதிய முதல்வர் “டேவிட் காமிரோன்” (கன்சர்வேடிவ் கட்சியை சார்ந்தவர்) இந்துக்களின் வாழ்க்கை நெறிமுறைகளை மிகவும் புகழ்ந்து பாராட்டி கூறியுள்ளார். லைஸ்டர் என்ற இடத்தில் சமீபத்தில் நடந்த ஒரு இந்து நிகழ்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். பல சமயங்களில் காமரோன் ஆன்மிக குருவான ”முராரி பாபு” அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். சமீபத்தில் வெம்ப்ளியில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் காமிரோன் கலந்துகொண்டு இந்துக்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இந்துகளின் கடின உழைப்பு குடும்பத்தை கட்டிகாக்கும் பண்பு தேசபற்று போன்ற நல்ல குணங்களின் தாக்கம் பிரிட்டன் மக்களையும் மாற்றியுள்ளது என்றார் அவர்.
இது உலக அரங்கில் இந்துக்களுக்கு கிடைத்த மரியாதை கலந்த புகழாரம் ஆகும். இது போலி-ஸெக்யூலரிஸம் பேசும் மாங்காய் மடையர்களின் மண்டையில் ஏறாது. என்.டி.ஏ அரசு ஆட்சியின்போது நிறைய தொழில் அதிபர்கள் வெளிநாட்டு பங்குதாரர்களை தொலைபேசியில் நமஸ்தே என்று விளித்த பின்புதான் உரையாடல் செய்தார்கள். இது வெளிநாட்டினருக்கும் இன்று பழகிவிட்டது.
இதைக் கண்டு பல கிறுத்துவ பாதிரிமார்களும் அதையே கடைபிடிப்பதோடு, அவர்களது தொண்டர்களையும் அவ்வாறு செய்யச் சொல்கிறார்கள். இதற்கு சான்றாக பல வீடியோக்களை வலைதளங்களில் காணலாம். சமீபத்தில் எனது நண்பர் தனக்கு ஜெர்மனியில் ஏற்ப்பட்ட ஒரு அனுபவம் பற்றி கூறினார். அவர் ஒரு புகழ்வாய்ந்த புத்தக விற்பனை ஏஜென்சியை சேர்ந்தவர். அவரை ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் நடந்த ஒரு மாபெரும் புத்தக கண்காட்சிக்கு அனுப்பினார்கள். அந்த புத்தகக் கண்காட்சி நுழைவாயிலில் மாலை அலங்காரத்துடன் ஒரு விநாயகர் சிலை வைக்கப்படடிருந்தது கண்டு அவர் அதிசயித்தாராம்.
அதன் நுழைவாயிலில் அவரது பாஸ்போர்ட்டை செக் செய்து பின்பு ஒரு வி.ஐ.பி வரிசையில் நிற்கசொன்னார்கள். ஆனால், பல பேர்களை வேறுவரிசையில் நிறுத்தி முழுமையாக சோதனை செய்தார்களாம். இதனால் அதிர்ச்சியான எனது நண்பர் தன்னை ஏன் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என அந்த அதிகாரியை கேட்டார். அதற்கு அந்த அதிகாரி “நீங்கள் இந்தியாவில் இருந்து வரும் ஒரு இந்து. சோதனை தேவையில்லை. போகலாம்” (You are a Hindu from India, no checking, go) என்று பதிலளித்துள்ளார்.
அவரது பெயர் ராமகிருஷ்ணன். இதுவே ஷாருக் ஃகான், கமல ஹாசன் என்ற பெயர்கள் இருந்தால் சோதனை தீவிரமாகும். இவர்கள் எவ்வாறு அமெரிக்க விமானநிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சைனாக்காரர்களையும் பாக்கிஸ்தான்காரர்களையும் முழுசோதனைக்கு உட்படுத்தியதற்கு ராமகிருஷ்ணன் சாட்சி. மேலும் இஸ்லாமியர்களை வேறு ஒரு வரிசையில் நிறுத்தி காலணி டை போன்றவற்றை கழற்றி அரைநிர்வாணமாக்கி சோதனை செய்தார்களாம்.
ஆனால், இஸ்லாமியர்களை பற்றி முற்றிலும் எதிர்மறையான கருத்தாக்கம்தான் அங்கே உள்ளது இன்று. சமீபத்தில் வெளியான தகவலின்படி அமெரிக்காவில் 14 நாடுகளிலிருந்து (இதில் பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் நைஜிரியா சவுதி அரேபியா போன்ற நாடுகள் அடக்கம்) வரும் பயணிகளை தீவிரமான அரைநிர்வாண சோதனை செய்துதான் நாட்டின் உள்ளே அனுமதிக்கிறார்களாம். ஆனால், இந்திய இந்து தலைநிமிர்ந்து உள்ளே செல்கிறான்.
வேதம் யோகா ஆயுர்வேதம் போன்றவற்றிற்கும் சனாதன இந்து தர்ம கொள்கைகளுக்கும் மேற்கத்திய நாடுகளில் சிறந்த வரவேற்பு உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் யோகா இன்று மல்டிமில்லியன் இன்டஸ்டிரியாக வளர்ந்துள்ளது. இதனால் மேலைநாடுகளில் இந்துக்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்.
சோணல் ஷா என்ற இந்து பெண்மணி ஓபாமாவின் இணைச் செயலராக இருக்கிறார். அஞ்சு பார்கவா என்பவர் ஆசிய இந்தியப் பெண்களுக்கான அமெரிக்க அமைப்பின் தலைவராக இருக்கிறார். 42 வயதான இவரை வெள்ளை மாளிகையின் மதம் சார்ந்த ஆலோசனைக் குழுமத்தில் ஒருசிறப்பு உறுப்பினராக ஓபாமா அமர்த்தியுள்ளார்.
பெர்சட் பிஸ்ஸெஸார் என்ற இந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ட்ரிநிடாட் மற்றும் டபகோ நாட்டின் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதை போல் மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் டாக்டர். ரவிச்சந்திர ராமகூலம் இந்திய வம்சாவளியில் வந்த இந்து. ஸ்வாமி கஹனானந்த ஸரஸ்வதி என்பவரின் வழிகாட்டுதலின்படி கானா நாட்டில் 10000க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாட்டினர் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். இந்த குரு ஒரு ஆப்பிரிகர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஆக்ரா (Accra) என்ற இடத்தில் ஒரு இந்து கோவிலை கட்டி வழிபட்டுவருகிறார்கள்.
தாய்லாந்தின் விமான நிலயத்தில் சமுத்திர ராஜன் பாற்கடலை கடையும் காட்சி மிக பிரம்மாண்டமாக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு அங்கு செல்லும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கிறது. இந்த விமான நிலயத்திற்கு ”சுமுத்திர பூமி” என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தோநேஷியாவின் ரூபியா கரன்ஸி நோட்டில் வினாயகர் படம் போடப்பட்டுள்ளது. அவர்களது அரசு விமானசேவையின் பெயர் “ஏர்-கருடா”.
நெதர்லாண்டு நாட்டில் மகரிஷி மகேஷ்யோகி “Global Country of World Peace’ என்ற ஸ்தாபனத்தை நிறுவியுள்ளார். அவர்களே தனியாக “ராம்” (Raam) என்ற நாணய சந்தையை ஏற்ப்படுத்தி வண்ணவடிவில் ஒன்று ஐந்து பத்து Raam கரன்ஸிகளை அச்சிட்டுள்ளார்கள். இந்த கரன்ஸி அமெரிக்க ஐயோவாவில் உள்ள மகரிஷி வேதிக் நகரில் அமெரிக்க டாலர் போல் அங்கீகரிக்கப்பட்டுளளது. ராம் என்ற இந்த பணபத்திரம் 35 அமெரிக்க நகரங்களில் அனுமதிக்கப்படுகிறது. தனது சமீபத்திய கட்டுரையில் “இந்தப் புதிய இந்து இன்று எங்கும் இருக்கிறான்” என்று தருண் விஜய் கூறியு்ளார்.
லண்டனின் லக்ஷ்மி மிட்டல் உலகப் பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர். மாலிகியூலர் பயோலாஜிஸ்ட் வெங்கட் ராமகிருஷ்ணன் அமெரிக்காவில் உள்ளார். பிரணாப் மிஸ்திரி எம்.ஐ.டி டெக்னோ லேபில் பணிசெய்கிறார். இவர் ஏற்படுத்திய “Futuristic Techno Invention Sixth Sense” என்ற ஆராய்ச்சி மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடும். இந்திரா நோயி பெப்ஸி கம்பெனியின் தலைமை பொறுப்பில் உள்ளார். இவரை ஃபோர்ப்ஸ் என்ற பத்திரிகை அமெரிக்காவின் மிகவும் பிரபலமான 100 பெண்கள் வரிசையில் சேர்த்துள்ளது.
இவர்கள் தவிர பல இந்துக்கள் தொழில் அதிபர்களாகவும் வேறு பல துறைகளின் தலைவர்களாகவும் இருந்துகொண்டு இந்தியாவிற்கும் இந்து சமுதாயத்திற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்து கொண்டிருக்கிறார்கள். இதில் பிரபலமான மேலும் சில பெயர்கள் – ஸ்வராஜ் பால், வினோத் கோஸ்லா, பாபி ஜிந்தால், சல்மான் ருஷ்டி, கேவல்ராம் ச்ஹென்ராய், விக்ரம் பண்டிட், ரமணி ஐயர், அமர் கோபால் போஸ், ஸபீன் பாட்டியா, கவிதார்க் ஸ்ரீராம்….
அமெரிக்காவில் மொத்தம் 1.7 மில்லியன் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இதில் 95 சதவிகிதம் இந்துக்கள். மேலும் சில புள்ளி விபரங்கள் –
1. அமெரிக்க இந்தியர்களின் வாங்கும் சக்தி – 20 பில்லியன் டாலர்கள்
2. 30% ஹோட்டல்களுக்கும், மோட்டல்களுக்கும் இந்தியர்களே உரிமையாளர்கள்
3. 50% இந்தியர்கள் வீடுகளுக்கு உரிமையாளர்கள்
4. 65% மேலாளர், தொழில்நிபுணர், பொறியியல் துறைகளில் உள்ளவர்கள் இந்தியர்கள்
5. 80% இந்தியர்கள் கல்லூரிப் பட்டம் பெற்றவர்கள்
6. 90% பேர் நகரங்களில் வாழ்பவர்கள்
7. 100% பேர் தங்களது இந்தியப் பரம்பரை பற்றிப் பெருமிதம் உடையவர்கள்
8. ஒரு அமெரிக்க இந்தியரின் சராசரி வருமானம் 88,000 டாலர்கள்; சராசரி அமெரிக்கரின் வருமானம் 55,000 டாலர்கள்
9. 38% அமெரிக்க மருத்துவர்கள் இந்தியர்கள்
10. 36% நாஸா விஞ்ஞானிகள் இந்தியர்கள்
11. 34% மைக்ரோஸாஃப்ட் கம்பனியில் வேலைபார்ப்பவர்கள் இந்தியர்கள்
12. 28% ஐபிஎம் கம்பனியில் வேலைபார்ப்பவர்கள் இந்தியர்கள்
13. 17% இண்டெல் கம்பனியில் வேலைபார்ப்பவர்கள் இந்தியர்கள்
14. ஸிலிக்கான் வேலியில் உள்ள ஸான் ஹோஸே நகரில் ஒரு சிறு இந்தியாவையே காணலாம்
இந்த புதுயுக இந்துக்கள் இந்துமதத்தின் பெருமையை வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்கின்றனர். இப்படியான சாத்தியக்கூறுகள் இதற்குமுன் இல்லை.
இந்த வருடம் ஷாங்காயில் விஜய் சௌத்ரி என்ற இந்து தொழில்அதிபருடன் உலகச் சந்தையில் தீபாவளி கொண்டாடப்பட்டது. ஸ்வாமிநாராயண் ஸ்தாபனம் பல உலகநாடுகளுக்கு இந்துமத தர்மத்தை எடுத்துச் செல்கிறது. இதில் மஸ்கட் என்ற இஸ்லாமிய நாடும் அடக்கம்.
போர் நடந்து முடிந்த இராக்கில் அமைதி சூழலை ஏற்ப்படுத்த சொற்பொழிவுகள் ஆற்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அழைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் டைம் பத்திரிக்கை ஒரு பெரிய கட்டுரையை முக்கிய கட்டுரையாக வெளியிட்டது. அதன் தலைப்பு “On the healing powers of yoga and chanting of OM”.
காயத்திரி மந்திரத்தின் எதிர் ஒலி ரோம், ந்யூ யார்க், பீஜிங் போன்ற இடங்களில் இன்று ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த சாதனைகள் எல்லாம் சாத்வீக இந்துவால் வெற்றிகரமாக நடத்திகாட்ட முடிகிறது.
தாங்கள் குடிபெயர்ந்த நாட்டில் இவர்கள் தவறியும் குண்டு வீசமாட்டார்கள். அதே நேரத்தில் தங்களது சொந்தநாட்டின் கலாச்சார பெருமையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பரமாரிபோ என்ற இடத்தில் சுரிநாம் நகரத்தில் ஓடும் நதியை இந்துக்கள் கங்காநதிபோல் போற்றி வணங்குகின்றனர். மொரிஷீயஸின் போர்ட் லூயிஸில் உள்ள ஒரு சிறிய நதிக்கு கங்கா டலப் என்று பெயர் சூட்டியுள்ளனர். பங்களாதேசத்தில் 1971ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட காளிகோவிலை புதுப்பிக்க இந்துக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்.
இந்த புதுயுக இந்து வித்தியாசமானவன். மிகுந்த தைரியத்துடன் துணிகரமாக புதிய புதிய யுக்திகளை மேற்கொண்டு பல சாதனைகளை செய்ய துடிக்கிறான். அவனது அரசியல் எண்ணங்கள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், யாரும் இந்தியன் இந்து என்ற முத்திரையை எல்லா இடத்திலும் பதிவுசெய்ய தவறவில்லை. ஆன்மீக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாதா அமிர்தானந்த மயி போன்றவர்கள் உலக அரங்கில் புகழ் வாய்ந்தவர்களாக உள்ளனர்.
சமீபத்தில் ஸஞ்ஜீவ் மெஹ்தா என்ற மும்பையை சேர்ந்த தொழிலதிபர் இந்தியாவை ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த நிறுவனம் ஒரு காலத்தில் உலகில் பல இடங்களில் காலனி ஆதிக்கம் செலுத்தியது. அதில் இந்தியாவும் ஒன்று.
ஸ்வாமி ராம் தேவ் மேற்கத்திய நாடுகளில் தீவிரமாக யோகாவை தன் பதஞ்சலி பீடம் மூலம் புயல்போல் பரப்பிக்கொண்டிருக்கிறார். இதை தவிர பல இந்திய குருமார்கள் உலகில் பல இடங்களில் இந்து ஆசிரமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்கான், ஸ்வாமி நாரயண், ஸன்ஸ்தா, ஆர்ட் ஆஃப் லிவிங் போன்ற அமைப்புக்கள் வெளிநாடுகளில் உள்ள சர்ச்சுகளை விலைக்கு வாங்கி அதைக் கோவில்களாகவும் ஆசிரமங்களாகவும் மாற்றி வருகிறார்கள்.
இவர்கள் ஆன்மீகத்தை தவிர பல சமூகசேவைகளையும் அங்கே செய்து கொண்டிருக்கிறார்கள். 2005ஆம் ஆண்டு ரீடா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க டெக்ஸாஸில் உள்ள இந்து கோவிலில் அடைக்கலம் அளிக்கப்பட்டது.
மாதா அமிர்தானந்த மயி கத்ரினா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்தார்.
நியூஸ் வீக் என்ற பிரபல பத்திரிகையில் லிசாமில்லர் என்பவர் 2009இல் ஒர் ஆய்வு கட்டுரையை வெளியிட்டார். அதன் தலைப்பு “நாங்கள் எல்லோரும் இந்துக்கள்”.
24 சதவிகித அமெரிக்கர்கள் இன்று மறுபிறவியில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். 6 சதவிகித அமெரிக்கர்கள் இறந்தபின் எரிப்பதுதான் சிறந்தது என்று ஒத்துக்கொண்டுள்ளார்கள். கிறுத்துவம் இன்று உலகெங்கும் தேய்ந்துகொண்டிருக்கிறது. பல சர்சுகள் விலைக்கு விற்கப்படுகின்றன. (பாதரிமார்களின் பாலியல் குற்றத்திற்கான நஷ்டஈட்டு பணம் தருவதற்காக). சர்ச்சுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மங்கிக்கொண்டுவருகிறது.
பல கிறுத்துவர்கள் ஏசுவிற்கும் பையிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். பைபிள் ஏசுவிற்குப் பின் 200 ஆண்டுகள் கழித்து ஒரு மாபியா கும்பலால் எழுதப்பட்டது. இன்றும் இந்தியாவில் பைபிள் திரும்ப திரும்ப பல்வேறு மாற்றம் பெற்று வருகிறது. அதைப்போல் இஸ்லாமிலும் சொல்லிக் கொள்கிற மாதிரியான ஆன்மீகம் கிடையாது. இன்று உலகில் மக்கள் ஆன்மீகத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் இந்துமத ஆன்மீகம் ஒரு மருந்துபோல் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.
எனவே, இந்து என்ற ஆன்மாவிற்கு என்றும் அழிவுகிடையாது. ஆனால், அதைத் தாங்கி நிற்கும் பாரதம் என்ற பூதஉடல் அழியக் கூடியது. இதை அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும். எனவே, கும்பகர்ண தூக்கத்திலிருந்து இந்து தலைவர்களும் குருமார்களும் விடுபட்டு, ஊக்கத்துடன் செயல்படவேண்டும்.
// பல கிறுத்துவர்கள் ஏசுவிற்கும் பையிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். பைபிள் ஏசுவிற்குப் பின் 200 ஆண்டுகள் கழித்து ஒரு மாபியா கும்பலால் எழுதப்பட்டது. //
முழுக்க முழுக்க உண்மையே. பௌத்த மத சாஸ்திரத்தை இவர்கள் அட்டைக் காப்பி அடித்து “புது ஏற்பாடு” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர் என்று (ironically) Christian Lindtner என்ற பெயருள்ள வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். இங்கே பார்க்கவும்: https://www.jesusisbuddha.com/CLT.html
சு பாலச்சந்திரன்
இந்து மதத்தின் சிறப்புக்கள் பல. அவற்றுள் சில :-
இறை வழிபாட்டு முறைகளிலோ, சடங்குகளிலோ எல்லைகள் எதுவும் கிடையாது.
கடவுள் நம்பிக்கை இல்லாத நண்பர்களுக்கு கூட புகலிடம் தரும் ஒரே இடம் இது மட்டுமே..
என் முன்னோர் கூறியுள்ள அனைத்து முறைகளும் எனக்கு சரிப்பட்டு வரவில்லை. எனவே புதியதாக ஒரு புதிய வழியை தேடுகிறேன் என்போருக்கும் ஊக்கம் கொடுக்கும், ஆதரிக்கும் இடம் இது மட்டுமே.
புதிய சிந்தனைகள், காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் இவற்றுக்கு இடம் தரும் அமைப்பு,.
எவனும் தலைவன் கிடையாது. இறைவன் மட்டுமே தலைவன். ஏனையோர் அனைவரும் அவனது பக்தர்கள், அல்லது இறை அருளால் நாத்திகம் பேசும் பொய் வியாபாரிகள்.
எவனெவனோ எழுதிவைத்துவிட்டுப்போன புனிதநூல்களைத்தவிர, எதிர்காலத்திலும் எவன் வேண்டுமானாலும் புதிய புனித நூலை எழுதலாம்.
பெயர், உருவம் , மொழி இவற்றில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை.
ஒரு நாளைக்கு இத்தனை தடவை இறைவனை வழிபடவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. நேரமிருந்தால் நூறு தடவை கூட வணங்கலாம். வேறு முக்கிய வேலை வந்துவிட்டால் , எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வழிபடலாம்.
இந்துக்களின் கடவுள் சொர்க்கத்தில் மட்டும் இருப்பவர் அல்ல. அவர் இல்லாத இடமே இல்லை. எங்கும் நிறைந்தவர். இந்த சிறப்புக்கள் வேறு எங்கும் காணப்படவில்லை.
கந்தர்வன் அவர்களே
கொஞ்சம் படித்தேன் – தலையை சுற்றுகிறது – இவ்வளவோ தேர்ந்த காபி அடிக்க முடியுமா என்று –
புத்த சூத்ரங்களின் அளவுகளை அப்படியே கிறிஸ்தவர்கள் கிரேக்க மொழியில் மாற்றினார்கள் என்று சொல்கிறார் எப்படி அது முடிந்தது என்பதற்கு அவர் கொடுக்கும் ஒரு உதாரணம்
PRaTi-RûPaKa
PiRaT-KoPieR
pirate copy
எல்லா எழுத்துக்களும் அப்படியே வருவது ஆச்சரியம் தான்
tê epiphôskousê (பதினாலு எழுத்துக்கள்) – Mathew
praty ûsa samaye (பதினாலு எழுத்துக்கள்) – Mûlasarvâstivâdavinaya budhdhist book
after becoming light (இது விவில்யத்தில் மிக பிரபலமான வாக்கியம் தானே)
எப்பா கட்டாயம் group discussion வெச்சு தான் காபி அடிச்சிருப்பாங்க
ஆனா புத்த மதத்திற்கும் க்ரிச்தவதிர்க்கும் சம்பந்தேமே இல்லை – ஒன்று தத்துவ தர்க்க ரீதியில் நகர்கிறது, மற்றொன்று காட்டுமிராண்டி தனமாக, லாகிக்கே இல்லாமல் நகர்கிறது
//முழுக்க முழுக்க உண்மையே. பௌத்த மத சாஸ்திரத்தை இவர்கள் அட்டைக் காப்பி அடித்து “புது ஏற்பாடு” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர் என்று (ironically) Christian Lindtner என்ற பெயருள்ள வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். இங்கே பார்க்கவும்: https://www.jesusisbuddha.com/CLT.html//
சகோதரர் கந்தர்வன் அவர்களே, நமக்கு ஏன் இந்த கேவலமான ஆராய்ச்சி? ராம நாமத்தை சொல்லுங்கள்.. போதும்.
இதைப்படிக்கும்போதே கண்கள் பனித்தன. நெஞ்சம் புடைத்தது.. ஆனாலும், மனம் பதைபதைத்தது. இந்தியாவில் இப்படிப்பட்ட நிலை இல்லாமல், கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது எவ்வளவு உண்மை என்பதுபோல், வேத,புராண,இதிஹாச, மீமாம்ச, வியாகரண, கல்ப,சூத்திர, யோக தத்தவங்களை மதிக்கும் மனம் இந்திய ஆட்சியாளர்களிடையே இல்லாமல், மக்களைப் பரிகசிக்கும் இடமாக உள்ளதே என்று.
நம்முடைய தாய் நாடாகிய பாரதத்தில் ஓட்டுப் பொறுக்கும் அரசியல் வாதிகளால் இந்துமதம் இந்துத்வா தீவிரவாதமென்றும் காவித்தீவிரவாதம் என்று கொச்சைப்ப்டுத்துவதைக் கண்டு வேதனைப்படும் உள்ளங்க்ளுக்கு, இக்கட்டுரையில் காணப்படும் அரியசெய்திகள் உள்ளத்தைக் குளிர்விப்பனவாக உள்ளன.
திரு பாலாஜி அவர்களின் கருத்தை நானும் வழி மொழிகிறேன். அவர்களை பற்றி நாம் பேசுவது நமது தகுதிக்கு கீழாக போவது போன்று தோன்றுகின்றது?
இக்கட்டுரை மிக மன ஆறுதலைத் தருகிறது. எவ்வளவு திரிபுகள்… எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டு இந்து தர்மம் இன்னும் சிறப்புற்று விளங்குகிறது என்பதை இக்கட்டுரை காண்பிக்கிறது. நன்றிகள்… இந்துக்களாகிய நாம் நமக்குள் உள்ள பேதங்களை விடுத்து இந்துக்குடையினுள் ஒன்று திரள வேண்டும்…
‘இந்து என்று சொல்வதில் பெருமை கொள்ளுவோம்’….
நன்றி! அருமை!
Refer this site you can see the Indonesian currency with Ganesha symbol
https://indianmuslims.in/ganesha-on-indonesian-currency/
இந்த website என்றாவது தவறு செய்யும் சாமியார்களை தட்டி கேட்டு இருகிறதா ? நாம் ஏன் நம் குறைகளை மறைக்க நினைக்கிறோம் ? இதை எல்லாம் சையது வரை .. இந்த முயற்சி எனக்கு ஒரு மத கலவரத்தை தூண்டும் செயலக தோன்றுகிறது …
கந்தர்வன் குறித்த அந்த வெப்சைட் பற்றி யாரேனும் நன்றாக புரிந்து படித்தவர்கள் தமிழில் நல்ல விளக்க உரையுடன் எழுதினால் நன்றாக இருக்கும். but really it was interesting…..
@ balaji & @ srikumars
y not sir. we must have these kind of research in our religious schools. Rama naama smaranam is very important than anyother, but leaving this is our great madness. We must enlighten the true facts to all sects of people. When Jain or Bauddha Vaadaaas were tried to swallow hindutva ideologies and facts, SriRamanujacharya,SriSankaracharya,SriMadhwacharya like saints took their divine weapon – Granthas and their pen. By that only they defeat / make bright the minds of people which were in the darkness.
இதை மேலும் தெளிவாக நம் தமிழ்ஹிண்டு தளம் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக நிறைய மக்களை சென்றடைய வாய்ப்புண்டு
திரு மோகன் அவர்களே, தங்கள் கருத்து மிகவும் குழப்பத்திற்கு உரியது. நமது பாரத நாட்டில் உள்நாட்டு குழப்பங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக பாகிஸ்தான் காரன் சண்டைக்கு வந்தால், முதலில் உள்நாட்டு பிரச்சனையை தீர்த்து விட்டு, பிறகு சண்டை இடலாம் என்று சொல்விர்களா? மேலும், ஒரு முஸ்லிம் முஸ்லிமாக இரு என்று கூறினால் இந்த நாட்டில் மத கலவரம் வராது. ஒரு கிறித்துவர் கிறித்துவனாக இரு என்று கூறினால் இந்த நாட்டில் மத கலவரம் வராது. ஆனால் ஒரு ஹிந்துவை ஹிந்துவாக இரு என்று கூறினால் இந்த நாட்டில் மத கலவரம் வருமா?
\\ இந்த website என்றாவது தவறு செய்யும் சாமியார்களை தட்டி கேட்டு இருகிறதா ? நாம் ஏன் நம் குறைகளை மறைக்க நினைக்கிறோம் ?\\
இங்கு யார் எதை மறைத்தார்கள்? நங்கள் என்ன வாடிகனா, கோடி கணக்கில் பணத்தை கொடுத்து சிறுவர்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்த பாவாடை பாவிகளை சட்டத்தில் இருந்து காப்பாற்ற? உங்களுக்கு திருச்சி பாவாடை பற்றி ஏத்தவது தெர்யுமா?
இதை பற்றி இந்த வலை பதிவு பேச தேவையே இல்லை. போதுமான அளவு கம்யூனிஸ்ட் மற்றும் கிறித்துவ சார்பு பத்திரிகைகள் அளவுக்கு அதிகமாகே விமர்சனம் செய்து விட்டது. இதற்கு மேல், இந்த வலை தளம் என்ன செய்ய வேண்டி இருக்கிறது. இருத்தலும், பல விஷயங்கள் இந்த வலை தலத்தில் விவாதிக்க பட்டுள்ளது. நீங்கள் இந்த வலை தளத்திருக்கு புதியவரா என்ன?
முதலில் வலை தலத்தில் உள்ள பதிவுகளை படித்து விட்டு நீங்கள் உங்கள் கருத்தை பதித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
போலி சாமியார்கள் என்ன ஹிந்து மதத்தில் மட்டுமா இருகிறார்கள்… எல்லா இடத்திலும் எல்லா மதத்திலும் நீக்க மாற நிறைத்து இருபது போலி என்ற சொல். ஹிந்து தர்மமும் இதற்கு விதி விளக்கு அல்ல? இதற்கு ஹிந்துக்கள் என்ன செய்ய இயலும்? ஒருவர் போலி என்பது கண்டு பிடிக்க படும் பொழுது மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை ஈடுக்க இயலும். ஒரு சில போலி மருத்துவர்கள் காரணமாக ஒட்டு மொத்த மருத்துவ உலகையே நீங்கள் குறை கூறுவீர்களா? இத போலி மருத்துவர் காரணம் காட்டி ஒரு உணமையான மருத்துவர் மீது நடத்த படும் திட்டமிட்ட தாக்குதலை பார்த்து வாயை முடி கொண்டு இருக்க சொல்கிறிர்களா?
ஒரு இந்தியனை இந்தியனாக இரு என்று சொல்வது ஏப்படி இந்திய பாகிஸ்தான் போரை உருவாக்கும். என்று தங்கள் சொல்ல இயலுமா?
பரதன் ராமபிரானின் “பாதுகைகளை” அரியணையில் வைத்து ஆட்சிசெய்த பாரத நாடு, இன்று “இந்தியா” என்று எப்படிச் சீரழிந்து கிடக்கிறதென்றால், வெள்ளையர்களின் “காலனி” ஆட்சி ஒழிந்தும், வெள்ளையரில் ஒருவளான இத்தாலிய சோனியாவின் “காலணி” ஆட்சியின் கீழ் இருப்பதுதான். கோவில் கோபுரவாசல்களில், காலணிகளைப் பாதுகாத்துகொண்டுகூட தொண்டுபுரிந்து வாழ்க்கை நடத்தும் சாமானியர்கள் நாட்டில், காங்கிரஸ்காரர்கள், சோனியாவின் காலணிகளைப் பார்த்துக்கொண்டிருப்பது என்று மானம் இழந்து, மதிகெட்டுப் போனதிசை எல்லார்க்கும் கள்வனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு என்ற முறையில் இருக்கின்றார்கள்.
அருமையான அவசியமான கட்டுரை
ம.மணிவண்ணன்
புதுவை
Mark me, விவேகானந்தர் சொன்ன இந்துத்துவம் !!!!
Then and then alone you are a Hindu : when the very name sends through you a galvanic shock of strength
Then and then alone you are a Hindu : when every man who bears the name, from any country, speaking our language or any other language, becomes at once the nearest and the dearest to you.
Then and then alone you are a Hindu : when the distress of any one bearing that name comes to your heart and makes you feel as if your own son were in distress
Then and then alone you are a Hindu: when you will be ready to bear everything for them, like ……. the great Guru Govind Singh. After having shed his own blood for the defense of Hindu Religion, after having seen his children killed on the battlefield – Ay, this example of the great Guru, left even by those for whose sake he was shedding his blood of his own nearest and dearest – he, the wounded lion, retired from the field calmly to die in the South but not a word of curse escaped his lips against who had ungratefully forsaken him !
Mark me,
Every one of you will have to be a Govind Singh, if you want to do good to your country. You may see thousands of defects in your countrymen, but mark their Hindu blood. They are the first GODS you will have to worship, even if they do everything to hurt you: even if every one of sends out a curse to you, you send out to them words of love. If they drive you out, retire to die in silence like that mighty lion, Govind Singh. Such a man is worthy of the name of Hindu : such an ideal ought to be before us always.
All our hatchets let us bury: send out this grand current of love all around.
HINDUISM
H = HUMANITY
I = INDEPENDENCE – FREE THINKING – REASONING – SEE ISWAR IN EVERY THING
N = NOBEL – NOBEL RACE – HARMLESS INHABITANT
D = DEVOTION, DIVINE
U = UNITY (VASUDEVA KUDUMBAKKAM)
I = INNOCENT
S = SCHOLAR (TEACHES THE WHOLE WORLD WHAT IS HUMANITY –SWAMIJI)
M = MEMORIZE (MEMORIZE VEDAS DAY & NIGHT CHANT TO PLEASE THE NATURE – TO PROTECT THE EARTH FOR PEACEFUL EXISTANCE OF HUMAN RACE WITHOUT ANY NATURAL CALAMITIES)
I believe in GOD – GOD is within me – I am the GOD. GOD is present in all the living things. Searching GOD (self) is the way of Hindu spiritualism. Only one GOD exists everywhere in different form that is polytheism. All monotheists’ beliefs are false and against harmonized human existence. There is room for polytheist, atheist and no room for dangerous monotheist (ASS/U/ME). Belief is OK as long as it will not disturb others privacy. If GOD is scientifically or spiritually provable there is no need of GOD. Rishis only realized GOD but not seen like wind can only be sensed and can not be seen. Sensing itself gives tremendous powers. Faith in GOD/ALL, without faith no freedom, without freedom no humanity – “FAITH FREEDOM CLAM”
ஜெய் ஹிந்த்,
நம் தலையில் இருந்து வீழும் முடிக்காக வருத்தப்படுவதில்லை, அது போல் மதம் மாறும் முடிக்காக (சரியான வார்த்தையை மாற்றி கொள்வும்) வருந்தவேண்டாம் ஹிந்துகள். நம் மதம் இருக்கவேண்டும் என்று கடவுள் நினைத்தால் இருக்கும் அல்லது வீழும். நாம் செய்த தர்மம் நம் தலையை காக்கும்.
ஜெய் ஸ்ரீ ராம்
ஓம் நம சிவாயா
ஜெய் காளி ஓம் காளி
ஹிந்துவை சோதனை விலக்கு பெருமை கொள்ளச்செய்யும் நிகழ்வுதான்.ஆனால் அதைத் தவிர்த்து தானும் சோதனைக்கு உட்பட்டு அனைவரையும் சோதித்து அனுமதிப்பதையே விரும்ப வேண்டும். ஏனெனில் ஹிந்துவின் போர்வையில் ஹிந்து விரோதி நுழைந்து விட்டால் அது நம் அனைவரின் பெருமையும் குழைத்துவிடும் .எந்த ஹிந்துவுமே தனக்கு வாழ்வளிக்கும் நாட்டிற்கு தீங்கு செய்யக் கனவிலும் கூட நினைத்தறியான்.
ஈஸ்வரன்,பழனி.
மிக ஆவசியமான கட்டுரை நன்றி
//Mohan on December 20, 2010 at 6:01 am//
//இந்த website என்றாவது தவறு செய்யும் சாமியார்களை தட்டி கேட்டு இருகிறதா ? நாம் ஏன் நம் குறைகளை மறைக்க நினைக்கிறோம் ? இதை எல்லாம் செய்வது வரை .. இந்த முயற்சி எனக்கு ஒரு மத கலவரத்தை தூண்டும் செயலாக தோன்றுகிறது …//
தன்னை ஒரு ஹிந்து என்று சொல்வதற்குக் கூச்சமோ, அச்சமோ படக்கூடிய பெரும்பாலான ஹிந்துக்களுக்கு, உண்மை நிலையை எடுத்துக் கூறியுள்ளது இக்கட்டுரை.
தவறு செய்பவர்கள், தங்களை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக நல்லவர்களாக வேடம் போடுவது புதிதல்ல. இந்தக் கதையை மெய்ப்பொருள் நாயனார் வரலாறே நமக்கு உணர்த்தியிருக்கிறது.
இராவணனும் சீதா தேவியை அடைய, இராமபிரானின் திருவுருவை எடுத்துக் கொண்டு முயல நினைத்தான் என்றும் கேள்விப்படுகிறோம்.
போலி CBI மற்றும் Police அதிகாரிகளாக நடித்து, பெருமளவில் கொள்ளையிட்டவர்கள் உண்டு.
“…மக்களுக்கு, மக்களால், மக்களே…” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, மக்களைச் சுரண்டும் நவீன அரசியல் வாதிகளும் உண்டு.
ஒரு முத்தநாதன் இருந்ததால், சிவநெறி தவறானதா? அந்த நெறியைப்பற்றிப் பேச, எழுதக் கூடாதா?
ஒரு இராவணனின் தவறான, தோல்வியடைந்த முயற்சிக்காக, ஸ்ரீ ராமபிரானைப் பற்றிப் பேச, எழுதக் கூடாதா?
போலி CBI மற்றும் Police அதிகாரிகளாக நடித்தவர்கள் இருப்பதனால், CBI மற்றும் Police துறைகள் எதிர்க்கப்பட வேண்டியவையா?
மக்களைச் சுரண்டும் போலி ஜனநாயகவாதிகளை நாம் ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதால், ஜனநாயகமும் அரசியலும் தவறானவையா?
மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை நண்பரே…!
உங்களையறியாமல் உங்களுக்குள்ளேயும் இருக்கும் (ஹிந்து என்று அடையாளம் சொல்லிக்கொள்வதற்கான) ஐய உணர்வை, அச்ச உணர்வை, இறைவன் நீக்கியருளட்டும்.
Tharmathin valvu thanai soothu kavvum eruthil tharmame vellum.its like our religion.
ஐயா
நானும் இந்து மதத்தை சார்ந்தவன்தான் . எனினும் இந்து மத கடவுள்களை பற்றிய தவறான சித்தரிப்புகள் என்னை கலக்கமுற செய்கின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின் உண்மை நிலையை தங்கள் விளக்கினால் எங்கள் மனம் விழிப்படையும்
நன்றி.
மாரியப்பன், பாண்டிசேரி
@ MARIAPPAN V K on March 3, 2012 at 4:32 pm
நண்பர் அவர்கள் முதலில் இந்த வலைத் தளத்தில் ஹிந்து சமயம் பற்றி வந்துள்ள அனைத்துக் கட்டுரைகளையும் படிக்க வேண்டும். அதன்பின் சந்தேகம் இருந்தால் புதிய கேள்விகளை வையுங்கள்.
மிக மிக அருமையான கட்டுரை. நாம் நம்மையே தாழ்வாக நினைக்க வைப்பது தானே அவர்களின் குறிகோளாக இருந்தது. சுவாமி விவேகாநந்தரால் எழுச்சியூட்டப் பட்ட சனாதன தர்மிக்களாகிய நாம் நம் பாரம்பரியம் குறித்துப் பெருமிதம் கொள்ள வேண்டும். எந்த வளம் இல்லையிந்த திருநாட்டில் என்ற வரிகள் முக்கியமாக ஆன்மிக வளத்தைப் பற்றி கூறும்போது எப்படி ஒத்துப் போகிறதென்று பாருங்கள்! நான் என்னுடைய தளத்தில் வேத தர்மத்தை ஏன் வெளிநாட்டவர் பின்பற்றுகின்றனர் என்பதைப் பற்றி ஒரு பதிவு செய்துள்ளேன். படிக்குமாறும் படித்துப் பின் நாம் ஹிந்துக்கள் என்று பெருமிதம் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன் – https://www.gnanaboomi.com/what-attracts-westerners-towards-hinduism
சூப்பர் சார்! நல்ல கட்டுரை.
நான் இந்துவா? என்ற எனது வலைப்பூ பதிவையும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ரஷ்யாவில் ” யோகா” சமய பிரச்சாரம் என்றும் கடுமையான உடற்பயிற்சி என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளதாக செய்தி சன் செய்திகள் தொலைக்காட்சியில் நேற்றி ஒளிபரப்புச் செய்யப்ட்டது. விபரம் இருப்பின் தொிவிக்கலாம்.