தமிழகத்தைப் பொருத்தவரை தமிழ் தவிர வேற்று மொழிகளுக்கு கல்வித்தளத்தில், அரசியல் சமூக தளங்களில் பங்கு என்பது மிகக் குறைவே. இத்தனைக்கும் அண்டை மாநில மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராட்டியம் ஆகிய மொழிகளைப் பேசக் கூடியவர்கள் அதிக அளவில் தமிழகத்தில் உள்ளனர். எனினும் இந்த மொழிகளில் உள்ள இலக்கியங்கள், கலைப் படைப்புகள், வரலாற்று நூல்கள் ஆகியவற்றில் பரிச்சயம் உள்ள பன்மொழி அறிஞர்கள் என்று சொல்லப் படவோர் தமிழகத்தில் மிகக் குறைவு. எதிர்மறையாக மற்ற மொழிகளைக் குறித்து ஏளனமும் வெறுப்பும் உள்ள அறிஞர்களே செல்வாக்கு உள்ளவர்களாக இருந்து வருகின்றனர். அறிஞர்கள் இயங்கும் தளத்திலேயே இப்படி என்றால் தமிழகத்தின் பொதுமக்கள் மத்தியில் ஏனைய மற்ற மொழிகளைக் குறித்த அறிமுகம் இல்லை என்றே சொல்லி விடலாம்.
இது மிகச் சமீப காலத்தில் விளைந்த அரசியல் சூழ்நிலைகளின் விளைவு என்று கருத இடம் இருக்கிறது. பேச்சு முறையில் இருந்து வரக் கூடிய உயிர்ப்புள்ள தெலுங்கு போன்ற ஏனைய மொழிகளே தமிழர்களுக்கு பரிச்சயம் இல்லாத நிலையில் சமஸ்க்ருதம் போன்ற பாரதத்தின் புராதன மொழிகளிடமிருந்து தமிழர்கள் விலகி போயுள்ளது தெளிவு. சமஸ்க்ருத மொழியை பயன்படுத்தி தினம் வீட்டில் பிரார்த்தனை செய்யக் கூடியவர்கள், ஸ்லோகங்கள் ஸ்தோத்திரங்கள் ஓதி வழிபடுபவர்கள், குருமார்களை அண்டி அவர்கள் காட்டும் வழியில் செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட குறைந்தது இல்லை. எனினும் இந்து மதத்தின் மூல நூல்கள் அனைத்தும் சமஸ்க்ருதத்தில் இருந்தும், பக்தியுள்ள இந்துக்கள் கூட சமஸ்க்ருத மொழியை கற்க முயலுவது இல்லை என்றே சொல்லலாம்.
நிற்க. இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த சமூக நிலையின் பின்னுள்ள அரசியல் பற்றி அல்ல. இந்து மதத்துக்கு மிக முக்கியமான மொழியாக உள்ள சமஸ்க்ருதத்தின் தற்கால நிலை பற்றி சில சிந்தனைகளை, நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் குறிக்கோள். இந்திய துணைக் கண்டம் எங்கும் பொதுவான ஒரு மொழியாகவே பல நூறு ஆண்டுகள் இருந்த சமஸ்க்ருதம் பின்னர் கடந்த சில நூற்றாண்டுகளில் அரசாங்க மொழி, பேச்சு மொழி என்ற பயன்பாடுகள் எல்லாம் போய், வெறும் சடங்கு மொழியாக ஆகி விட்டது. சமஸ்க்ருத மொழியின் இன்றைய நிலை என்ன? இது செத்த மொழியாக, சடங்கு மொழியாகத்தான் இருக்கிறதா.. இருந்த இடத்திலிருந்தே எதையும் தெரிந்து கொள்ளும் அளவுக்கு தேடுபவர்களுக்கெல்லாம் அறிவை பொதுவாக அள்ளி வழங்குகிற இணையம் போன்ற தொழில் நுட்பங்கள் பெருகிவிட்ட இந்நாளில் சமஸ்க்ருத மொழி என்ன நிலையை அடைந்திருக்கிறது? என்று பார்க்கலாம்.
முதன்மையாக புராதன காலத்தில் இருந்தே சம்ஸ்க்ருதம் தமிழர்களுக்கு அன்னிய மொழி அல்ல. சுதந்திர தாகம் மிகுந்த காலத்தில் வந்தே மாதரம் என்று தமிழகமும் சேர்ந்துதான் முழங்கியது. நடைமுறை மொழியில் இன்றைக்கு ஆங்கிலச் சொற்கள் புழங்குவது போலவே நீக்க முடியாத அளவு சமஸ்க்ருத சொற்களும் தமிழில் கலந்துள்ளன.
அண்மையில் சென்ற வருடம் ஜூன் மாத இறுதியில் மயிலாடுதுறை அடுத்த ஆனதாண்டவபுரம் சாலையில் உள்ள கைலாச நாதர் கோவிலில் ஏராளமான சோழர் கால செப்பேடுகள் கிடைத்துள்ளன. இதில் பல செப்பேடுகள் சமஸ்க்ருதத்திலும் தமிழிலும் வடிக்கப் பட்டுள்ளன. இன்றைக்கு இந்தியாவில் ஆங்கிலம் எந்த அளவு அரசாங்கம் மற்றும் பொது மொழியாக இருந்து வருகிறதோ, அந்த அளவுக்கு சமஸ்க்ருதம் இருந்து வந்தது என்பது தெளிவாகிறது. தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர் ஆட்சியில் தமிழும் சமஸ்க்ருதமும் சமமாகவே பாவிக்கப் பட்டு வந்துள்ளது.
அதே நேரத்தில் அக்காலத்தில் சமஸ்க்ருதம் எல்லா தரப்பு மக்களாலும் பேசப்பட்டதா என்பது சர்ச்சையின்றி தெளிவாக வில்லை. இலக்கண தமிழ் – பேச்சு தமிழ் என்று இருப்பதைப் போல சமஸ்க்ருதத்திலும் பேச்சு மொழி இருந்திருக்க வேண்டும். இது காளிதாசன் போன்ற சமஸ்க்ருத மகாகவிகள் எழுதிய நாடகங்களில் பல பாத்திரங்கள் – சமஸ்க்ருதத்தை பேச்சு முறையில் சற்று கொச்சையாக பேசுவதாக அமைத்துள்ளனர். இதன் மூலம் பேச்சு முறையிலும் சமஸ்க்ருதம் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.
இன்னொரு கருத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். எத்தனையோ இந்து மத நூல்கள் சமஸ்க்ருதத்தில் இருந்தாலும், இந்த மொழியை இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமான ஒரு மொழியாக என்றுமே கருதப் படவில்லை. இந்து மதத்தின் முக்கிய இதிகாசங்களான ராமாயண – மகாபாரத காவியங்கள், வேதங்கள் மட்டும் அல்லாது பௌத்த – ஜைன மதங்கள் உட்பட இந்தியாவின் பல்வேறு மதங்களின் நூல்களும் சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்டு உள்ளன. தேவர்கள் மட்டுமே பேசும் மொழி, தேவவாணி, தேவபாஷை என்று என்றைக்குமே உயர்வு சொல்லி ஒதுக்கி வைக்கப் படவில்லை. இந்த மண்ணில் பிறந்த மனிதர்களின் நம்பிக்கைகள் பலவும் சமஸ்க்ருத மொழியிலேயே பதிந்து வைக்கப் பட்டது. இதோடு மட்டும் அல்லது முகலாயர் ஆட்சிக் காலத்தில் அரபி – சமஸ்க்ருத அகராதிகள், அல்லோபநிஷத் போன்ற இசுலாமிய நூல்கள் உருவாகின. இவ்வளவு ஏன் இன்றைக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் மொழிபெயர்க்கப் பட்ட சமஸ்க்ருத பைபிள் கூட இருக்கிறது.
ஆங்கிலேய ஆட்சியின் போது, மாக்ஸ் முல்லர் போன்ற மேற்கத்திய மொழியியலாளர்களால் முன்வைக்கப் பட்ட மொழி ஆராய்ச்சிகளில் ஐரோப்பிய மொழிகளுக்கும் – சமஸ்க்ருதத்துக்கும் தொடர்பு உண்டு என்று கூறப் பட்டது. இதன் தொடர்ச்சியாக மேற்குலகு எங்கும் சமஸ்க்ருதத்தின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அண்மைக் காலம் வரை ஏராளமான சமஸ்க்ருத நூல்கள் ஆங்கிலம் மட்டும் அல்லாது ஜெர்மன், இத்தாலி, பிரெஞ்சு, ஜப்பான் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு வருகிறது. நமது நாட்டுக்கே உரிய மொழி இன்று உலகெங்கும் பலராலும் படிக்கப் பட்டும், மொழிபெயர்க்கப் பட்டும் சிலாகிக்கப் பட்டு வருகிறது என்பது சிறப்பு.
இன்றைய நவீன யுகத்தில் இணையம் போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களால் சமஸ்க்ருதத்தை எவரும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் பெருகி உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவெங்கும் பனிரெண்டு சமஸ்க்ருத பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றுடன் இணைந்த மற்றும் தனியாக சமஸ்க்ருத படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் சுமார் நூறு இருக்கலாம். இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிடமிருந்து இவற்றுக்கு நிதி உதவியும் கிடைத்து வருகிறது.
ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத சம்ஸ்தான் என்கிற சுதந்திரமான அமைப்பு பல சம்ஸ்க்ருத பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. சம்ஸ்க்ருத பாரதி, பாரதீய வித்யா பவன் போன்ற தனியார் அமைப்புகளும் சமஸ்க்ருத வகுப்புகள் நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் இவ்வமைப்புகள் அதிக விளம்பரம் இல்லாது இயங்கி வருவது குறிப்பிடத் தக்கது. இவை சமஸ்க்ருதத்தை மக்களிடம் ஓரளவு கொண்டு சென்று வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை சமஸ்க்ருத உயர்கல்விக்கு குப்புசாமி சாஸ்திரி இன்ஸ்டிட்யூட் மைலாப்பூர், சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள சம்ஸ்க்ருதத் துறைகள், மதுராந்தகம் சம்ஸ்க்ருதக் கல்லூரி, Raja’s colleg e of Sanskrit and Tamil, Thanjavur ஆகிய கல்வி மையங்கள் சமஸ்க்ருதத்தில் உயர்கல்வியை அளித்து வருகின்றன. இது தவிர Government Oriental Manuscripts library, அடையாறு தியசாபிகல் சொசைட்டி, தஞ்சை சரஸ்வதி மகால் போன்ற இடங்களில் பல்லாயிரக்கணக்கான பாரத பாரம்பரிய அறிவுச் செல்வம் பொதிந்துள்ள ஒலைஎடுகள், செப்பேடுகள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.
உலகத் தமிழ் மாநாடு போன்றதொரு உலக சம்ஸ்க்ருத மாநாடு வருகிற 2012ம் ஆண்டு நமது இந்தியாவில் தில்லியில் நடைபெற உள்ளது. இது பதினைந்தாவது மாநாடு ஆகும். இதற்கு முன் ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்று உள்ளது. அண்மையில் தமிழகத்தை கலக்கிய செம்மொழி மாநாட்டைப் போலவே சம்ஸ்க்ருத மாநாட்டுக்கும் உலகமெங்கும் இருந்து சமஸ்க்ருத அறிஞர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கு முன் 1997ல் பெங்களூரில் பெரியதொரு அளவில் பத்தாவது சம்ஸ்க்ருத மாநாடு நடந்தது.
இது மட்டும் அல்ல, சென்னை தமிழ் புத்தகக் கண்காட்சியைப் போலவே பெரியதொரு சம்ஸ்க்ருத புத்தக கண்காட்சி வருகிற 2011 ஜனவரி மாதம் ஏழாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை பெங்களூரில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் மாதிரி சமஸ்க்ருத கிராமம், சிறார்களுக்கான போட்டிகள், சம்ஸ்க்ருத கதை, காவிய இலக்கியப் புத்தகங்கள், பொதுமக்களுக்கு சம்ஸ்க்ருத அறிமுக நிகழ்ச்சிகள், அறிஞர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கும் வகையில் சுமார் மூன்று கோடி செலவில் பெரியதொரு நிகழ்வாக அமைய திட்டமிடப் பட்டுள்ளது.
சமஸ்க்ருத மொழியில் புதிய நூல்கள் எதுவும் எழுதப் படுவதில்லை. அதன் உயிர்ப்பு போய்விட்டது. ஆகவே சமஸ்க்ருதம் செத்த மொழி என்று ஒரு பொது அபிப்பிராயம் இருந்து வருகிறது. உண்மை அது அல்ல. இந்த புத்தகக் கண்காட்சியில் கூட இருநூறுக்கும் மேற்பட்ட சமஸ்க்ருத புத்தகப் பதிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். புதிய புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக மேற்கத்திய தத்துவங்கள் சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள பாஸ்சாத்திய சாத்திர இதிகாசம் என்ற நூல், சத்திய சோதனம் என்று சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப் பட்ட காந்தியடிகளின் சுயசரிதை, பீமாயணம் என்ற பெயரில் வெளிவந்துள்ள அம்பேத்கரின் சுயசரிதை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
சம்ஸ்க்ருத மொழியில் பத்திரிகை துறையும் வளர்ந்து வருகிறது. சிறுவர்களுக்கான சம்ஸ்க்ருத மாதாந்திர பத்திரிக்கையான சந்தமாமா, சமஸ்க்ருதத்தில் நாட்டு நடப்புகளைத் தரும் சுதர்மா என்கிற சம்ஸ்க்ருத தினசரி, சம்பாஷன சந்தேசம் என்னும் மாதாந்திர பத்திரிகை, சம்பிரதம் என்கிற பத்திரிகை, வாக் என்கிற செய்திப் பத்திரிகை போன்ற மேலும் சில பத்திரிக்கைகள் சம்ஸ்க்ருத மொழியில் வெளியாகி வருகின்றன. வானொலியில் தினமும் சம்ஸ்க்ருத செய்தி ஒலிபரப்பாகிறது.
சுமார் இருபது வருடங்களுக்கு முன் ஆதி சங்கரர் வரலாற்றை சமஸ்க்ருத மொழி திரைப்படமாக எடுக்கப் பட்டு வெளிவந்தது. அண்மையில் பிரபோத சந்த்ரோதயம் என்கிற பதினொன்றாம் நூற்றாண்டில் ஸ்ரீகிருஷ்ண மிஸ்ரரால் இயற்றப்பட்ட காவியத்தை கதையின் அடிப்படையாக கொண்டு சமஸ்க்ருதத்தில் புதிய திரைப்படம் ஒன்று தயாரிக்கப் படவுள்ளது.
httpsv://www.youtube.com/watch?v=OIIUxYWvxfs
அண்மையில் உத்தரகண்ட மாநிலம் சமஸ்க்ருதத்தை மாநில மொழியாக அறிவித்தது. இந்தியாவிலேயே இந்த ஒரு மாநிலம் மட்டுமே முதன் முறையாக இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. இதே சமயத்தில் உருது இந்தியாவில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி மொழி என்பது வியப்பு. உத்தரகண்ட மாநிலம் சம்ஸ்க்ருத மொழியுடனும் பாரத தொன்மையிலும் மிகவும் முக்கியம் இடம் வகிக்கக் கூடியது. இந்த பிரதேசத்தில் இருந்து தான் வியாசர் மகா பாரத கதையை இயற்றினார் என்பது நம்பிக்கை. மகா கவி காளிதாசர் பிறந்ததும் இங்கே தான் என்று கூறுவர். இந்துக்களின் புனித தலங்களான ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்கள் இந்த மாநிலத்தில்தான் உள்ளன. ஆகவே இம்மாநிலம் சமஸ்க்ருதத்தை ஆட்சி மொழியாகக் கொள்வது பொருத்தமே.
தமிழகத்திலிருந்தும் அண்மைக் காலத்தில் சில நூல்கள் சமஸ்க்ருத மொழியில் வெளிவந்துள்ளன. பேராசிரியர் திரு N. வீழிநாதன் அவர்களின் முயற்சியில் தர்க்க சாத்திரம் கற்க விரும்புவோருக்கான எளிய நூலாக பாலப்ரியா, தர்க்க சங்கிரஹம் ஆகிய நூல்கள் 1980 லிருந்து பதிப்பிக்கப் பட்டு வருகிறது. இப் பேராசிரியரே மேலும் அவ்யய கதாதரி போன்ற மேலும் சில நூல்களைப் பதிப்பித்துள்ளார். 1995ல் பண்டிட் R. தங்கசாமி என்பார் பாரதீய தர்சநேஷு ப்ரத்யக்ஷ பிரமாண விமர்சம் என்கிற நூலை வெளியிட்டுள்ளார். இது பாரத தேசத்தில் எழுந்த பல்வேறு தத்துவங்களைப் பேசும் நூல்.
கணினி துறையிலும் இயற்கை மொழி செயலாக்கம் (natural language processing) போன்ற சில நுணுக்கமான ஆய்வுகள் சம்ஸ்க்ருத மொழியில் நடைபெற்று வருகின்றன. இது தவிர ஏராளமான வலைப் பக்கங்கள் இணையத்தில் எழுதப் பட்டு வருகின்றன. பல புதிய புத்தக முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அவ்வளவு ஏன், தமிழகத்தில் நமது முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சில புத்தகங்கள், முக்கியமாக குறளோவியம், நெஞ்சுக்கு நீதி போன்ற புத்தகங்கள் சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப் பட்டு வருகின்றன என்கிறது ஒரு செய்தி.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே தமிழகத்தில் இது போன்ற நூல்கள் சமயம் மட்டும் அல்லது ஏனைய துறைகளிலும் சமஸ்க்ருத மொழியில் வெளிவந்துள்ளன. ஆனால் இவை சமஸ்க்ருத பண்டிதர்கள் மத்தியில் மட்டுமே பிரபலமாக இருந்து பொது மக்களிடம் சென்று சேரவில்லை. இந்த நிலை மாறவேண்டும் என்பதே ஒரு சமஸ்க்ருத அபிமானியாக என்னுடைய அவா.
அன்புள்ள ஸ்ரீகாந்த்,
பயனுள்ள தகவல்களை கொடுத்து இருக்கிறீர்கள். பெங்களூரில் அகில உலக சமஸ்கிருத புத்தக கண்காட்சி நடப்பது பற்றி தெரிந்து மகிழ்கிறேன்.
இன்றைய சூழலில் தமிழக மக்கள் சமஸ்கிருதம் பயில தேவை எதுவும் இல்லை. இறை வழிபாட்டுக்கு எந்த மொழியுமே தேவை இல்லை. பக்தி மற்றும் வழிபாடுகளில் மொழி அவசியம் என்று யாராவது உளறினால் , அவர்கள் தங்களை அறியாமலேயே கடவுள் சக்தியை கேவலப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்.
இன்றைய தமிழனுக்கு அவன் உலகில் எங்காவது சென்று பிழைக்க பலவேறு நாட்டு மக்களுடன் பழகவும், தொடர்புகள் கொள்ளவும், வியாபாரம் அல்லது தொழில் உற்பத்தி செய்து வாழ்வை நடத்தி செல்லவும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் பேசும் மொழிகளான மந்தாரின்( சீன மொழி), இந்தி( இந்தியா) , ஸ்பானிஷ்( ஸ்பெயின் மற்றும் தென்னமரிக்க நாடுகள்) மற்றும் அரபி போன்ற மொழிகளில் அன்றாடம் உபயோகப்படும் 200 வாக்கியங்களாவது பேச தெரிந்து கொள்ளுதல் அவசியமும், மிக்க உடனடி தேவையும் ஆகும்.
தமிழகத்தில் மஞ்சள் துண்டாரின் டாஸ்மாக்கைத்தவிர, ஒரு பகுத்தறிவு புண்ணியமும் இல்லை. எனவே எதிர் காலத்தமிழன் மாடு மேய்க்க கூட புல்தரை இங்கு இருக்காது. எனவே வெளிநாடுகளுக்கு சென்று எப்படியாவது பிழைப்பை தேடிக்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் தமிழக இளைஞர்கள் உள்ளனர். தங்கள் அரசியல் பிழைப்புக்காக இந்தி படிக்காதே என்று நாற்பது வருடமாக தமிழனை எதற்கும் லாயக்கில்லாதவனாக ஆக்கி விட்டார்கள்.
இந்தி படித்தால் மட்டும் வேலை கிடைத்துவிடுமா ? இந்தி பேசும் மாநிலங்களில் வேலை இல்லாமல் வேலை வாய்ப்பு தேடித்தரும் அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை பல கோடி உள்ளதே என்று கேட்கிறார்கள். பல மொழிகளை பேசத்தெரிந்த மனிதனுக்கு வேலை தேடி வெளியூர்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ செல்வோருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பும் அதிகம், அதே சமயம் எவ்வித தேவையற்ற பயமும் இருக்காது. இதைப்பற்றிக்கூட சிந்திக்காத தலைவர்களைக்கொண்ட தமிழகத்தில், சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழியை கற்பதால் நமக்கு நல்லது என்று இன்றைய தலைமுறை நினைக்க வாய்ப்பு எதுவும் இல்லை.
அந்த மொழியின் சிறப்பு தெரிந்தவர்கள் கூட அதனை இறை வழிபாட்டுக்கு மட்டும் பயன் படுத்துவதால் ஒரு புண்ணியமும் இல்லை. அதன் வேர்ச்சொற்கள் எல்லாத்துறையிலும் இருப்பதை அறிந்து , அதன் உபயோகம் பற்றி புரிந்த அரசியல் வாதி யாராவது பதவிக்கு வந்தால் ஒருக்கால் சிறிது மாறுதல் வரும்.
மேலும் கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவு பற்றிய கருத்துக்கள் சமஸ்கிருதத்திலும் ஏராளம் இருப்பதாக இந்த அரங்கிலேயே பல நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள். பலகோடி மக்கள் பேசும் மொழிகளிலேயே நாத்திக கருத்துக்கள் ஏராளம் உள்ளன. நாத்திக கருத்துக்கள் முழு விஷம் ஆகி விட்டன. ஏனெனில் இன்றைய நாத்திகம் என்பது ஒரு மோசடி வியாபாரம் ஆகும். இறைநம்பிக்கை கொண்டோரில், இந்து மதம் சார்ந்த மக்களின் மனது புண்படும்படி மட்டும் எதையாவது உளறுவது மட்டுமே நம் ஊரில் நாத்திகம் என்று ஆகி விட்டது. பிறர் மனது புண்படும்படி எவன் ஒருவன் பேசுகிறானோ , அவன் உண்மையான நாத்திகனும் அல்ல, ஆத்திகனும் அல்ல.
எவன் ஒருவன் என் வழி நல்லது என்கிறானோ அவனை வரவேற்கலாம். ஆனால் அவன் என் வழி மட்டுமே உயர்ந்தது என்று எப்போது சொல்கிறானோ , அப்போதே அவன் மனித இனத்தின் விரோதியாகிறான். தமிழகத்தில் உள்ள நாத்திகர்கள் பொய் வியாபாரிகள் மற்றும் சமூக விரோதிகளே ஆவார்கள்.
ஸ்ரீகாந்த் மஹாசயா நமஸ்காரம்.
தமிழகத்தில் மிகப் பலபேர் ஸம்ஸ்க்ருதம் கற்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் விஷய ஞானம் அளிப்பதாகவும் இந்த வ்யாசம் உள்ளது. நன்றி.
பல மொழிகளுக்கு இடையே ப்ரகாசமாய் விளங்கும் பாரத மாதாவை பார்க்கும் போது நான் கற்ற பாடல் ஞாபகம் வருகிறது.
பாரத தாயை பணிந்து வண்ங்கும் வீர மைந்தர் நாம்
அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே தூய மனதுடனே
பேசுகிறோம் நாம் பல மொழி ஆனால் பேதம் இங்கில்லை
வங்கள மொழியும் சிங்கத் தமிழும் எங்களதென்றிடுவோம்
கன்னடம் தெலுங்கு கவின் மலயாளம் ஹிந்தியும் எங்களதே
த்ங்களுடைய சில கருத்து பகிர்வுகளுக்கு எனது மறுமொழி :-
\\\\\\\\\எதிர்மறையாக மற்ற மொழிகளைக் குறித்து ஏளனமும் வெறுப்பும் உள்ள அறிஞர்களே செல்வாக்கு உள்ளவர்களாக இருந்து வருகின்றனர்.\\\\\\\\
இது தமிழகம் மட்டுமன்றி முழு ஹிந்துஸ்தானத்திலும் பரவி வரும் துர்குணம். தமிழகத்தில் சற்று அதிகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
\\\\\\\\இது செத்த மொழியாக, சடங்கு மொழியாகத்தான் இருக்கிறதா..\\\\\\\\\\\\\\\\\\\\\\\\சமஸ்க்ருத மொழியில் புதிய நூல்கள் எதுவும் எழுதப் படுவதில்லை. அதன் உயிர்ப்பு போய்விட்டது. ஆகவே சமஸ்க்ருதம் செத்த மொழி என்று ஒரு பொது அபிப்பிராயம் இருந்து வருகிறது. உண்மை அது அல்ல.\\\\\\\\\\\உதாரணமாக மேற்கத்திய தத்துவங்கள் சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள பாஸ்சாத்திய சாத்திர இதிகாசம் என்ற நூல், சத்திய சோதனம் என்று சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப் பட்ட காந்தியடிகளின் சுயசரிதை, பீமாயணம் என்ற பெயரில் வெளிவந்துள்ள அம்பேத்கரின் சுயசரிதை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\\\\\\\\\\\\\
பூனை கண்ணை மூடிக்கொண்டு பூரா லோகமும் அஸ்தமனமாகி விட்டது என நினைப்பதைப் போன்றது இது. செத்த மொழி சடங்கு மொழி என்றெல்லாம் சான்றிதழ் கொடுப்பவர்களில் மிகப்பல்பேர் ஸம்ஸ்க்ருத பாஷையில் ஒரு அக்ஷரம் கூட தெரியாதவர்களாகவே இருப்பவர். தாங்கள் மேலே குறிப்பிட்டது மற்ற மொழியிலிருந்து ஸம்ஸ்க்ருதத்தில் மொழிபெயற்கப்பட்ட உரைநடை நூல்கள். தமிழகத்தில் மட்டும் கவி காளிதாஸன், தண்டி மற்றும் பாரவிக்கு இணையாக ரதபந்தம்,மாலினி, சாலினி, ஆர்யா, உபேந்த்ரவஜ்ரா, சார்தூலவிக்ரீடிதம் போன்ற பற்பல லலிதாதி வ்ருத்தங்களில் சென்ற பல பத்தாண்டுகளில் மட்டும் ஒரு லக்ஷம் க்ரந்தத்திற்கு மேல் (அனுஷ்டுப் அலகீட்டால்) வ்யாகரண சுத்தமாக புராணம் மற்றும் காவ்யங்கள் ஸம்ஸ்க்ருத பாஷையில் படைக்கப்பட்டன. ஹிந்துஸ்தானத்தின் மற்ற பகுதிகளில் படைக்கப்பட்ட காவியங்களைப் பற்றி எமக்கு விஷய ஞானம் இல்லை.
மனோன்மணியத்திற்கு பிறகு பாவிலக்கண சுத்தமாக காப்பியங்கள் ஏதும் தமிழில் படைக்கப்பட்டதா தெரியவில்லை (எமக்கு). தகவல் தெரிந்தவர்கள் பாவிலக்கண சுத்தமாக சமிபத்தில் தமிழில் படைக்கபபட்ட காப்பியங்கள் யாவை? செய்யுட்களின் ஸங்க்யை எத்தனை? இது சம்பந்தமாக கருத்து பரிமாறி ஒப்பீடு செய்யலாமே? புதுக்கவிதை, ஹைகூ கவிதை, இன்னும் என்னென்ன புது விதங்கள் உண்டோ அவற்றில் எல்லாம் தமிழில் கணக்கின்றி கவிதைகள் படைக்கப்பட்டு வருகின்றன. யாப்பிலக்கணப்படி தமிழில் இயற்றப்பட்ட படைப்புகளைப் பற்றி அறிந்தவர்கள் இது சம்பந்தமாக எழுத வேண்டும்.
\\\\\\\\\\\முதன்மையாக புராதன காலத்தில் இருந்தே சம்ஸ்க்ருதம் தமிழர்களுக்கு அன்னிய மொழி அல்ல. \\\\\\\\\\\
ஸ்ரீ சுப்ரமண்ய பாரதியார் ஸம்ஸ்க்ருததில் கவிதை புனந்துள்ளார். முன் சொன்னது தொடர்ச்சியாக மற்ற பாஷைகளிலிருந்து ஸம்ஸ்க்ருததில் மொழி பெயர்ப்பு போல ஸம்ஸ்க்ருததில் இருந்து தமிழில் மொழி பெயர்ப்புகள் உள்ளன. திருவானைக்காவில் பெருமதிப்பிற்குறிய ஸ்ரீ அ.வெ.ரா.க்ருஷ்ணஸ்வாமி ரெட்டியார் அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த சௌந்தர்யலஹரி க்ருங்கற்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இது போல பல படைப்புகள் இருக்கலாம்.
\\\\\\\\\\\\\\நடைமுறை மொழியில் இன்றைக்கு ஆங்கிலச் சொற்கள் புழங்குவது போலவே நீக்க முடியாத அளவு சமஸ்க்ருத சொற்களும் தமிழில் கலந்துள்ளன.\\\\\\\\\\\\\\\\
தமிழ் ஹிந்துக்கள் ஸம்ஸ்க்ருதம் கலந்த தமிழின் மணிப்ரவாள நடையை எவ்வளவு புழங்குகிறார்களோ அதை விட அதிகமாக தமிழ் கிறிஸ்தவ சகோதரர்கள் மணிப்ரவாள நடையில் பைபலை வாசிக்கிறார்கள்.
\\\\\\\\\\\\\அதே நேரத்தில் அக்காலத்தில் சமஸ்க்ருதம் எல்லா தரப்பு மக்களாலும் பேசப்பட்டதா என்பது சர்ச்சையின்றி தெளிவாக வில்லை. \\\\\\\\\\\\
ஸம்ஸ்க்ருதத்தின் கிளை மொழியான ப்ராக்ருதத்தில் சாமான்ய மக்கள் பேசினர் என அறிகிறேன். மாற்றுக் கருத்துள்ளவர்கள் விவரம் தெரிவிக்கலாம்.
\\\\\\\\\\\\\இன்னொரு கருத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். எத்தனையோ இந்து மத நூல்கள் சமஸ்க்ருதத்தில் இருந்தாலும், இந்த மொழியை இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமான ஒரு மொழியாக என்றுமே கருதப் படவில்லை. இந்து மதத்தின் முக்கிய இதிகாசங்களான ராமாயண – மகாபாரத காவியங்கள், வேதங்கள் மட்டும் அல்லாது பௌத்த – ஜைன மதங்கள் உட்பட இந்தியாவின் பல்வேறு மதங்களின் நூல்களும் சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்டு உள்ளன\\\\\\\\\\\\\\\
மஹாசயா, மேற்கண்ட வாசகத்தில் ஒரு பெரும் பிழை. பௌத்த ஜைன மதங்கள் ஹிந்து மதத்திலிருந்து அன்யமான மதங்கள் அன்று. ஹிந்து மதத்திலேயே உள்ள விவித தர்சன்ங்கள். சட்ட ப்ரகாரம் HINDU UNDIVIDED FAMILY என்ற STATUS ஸனாதனிகள் (தாங்கள் ஹிந்து என்று காட்டுபவர்கள்) பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்கள் இவர்கள் அனைவருக்கும் உண்டு. ஆக இவர்கள் அனைவரும் சட்டப்படி ஹிந்துக்களே.
\\\\\\\\\\\\\இதோடு மட்டும் அல்லது முகலாயர் ஆட்சிக் காலத்தில் அரபி – சமஸ்க்ருத அகராதிகள், அல்லோபநிஷத் போன்ற இசுலாமிய நூல்கள் உருவாகின. இவ்வளவு ஏன் இன்றைக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் மொழிபெயர்க்கப் பட்ட சமஸ்க்ருத பைபிள் கூட இருக்கிறது.\\\\\\\\\\
இது சற்று விவகாரமான விஷயம். பரங்கிப்பாதிரி கால்ட்வெல் தமிழ் படித்தது தமிழை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கவே அன்றி வளர்க்க அல்ல. அதே போலத்தான் மற்ற பிற ஆப்ரஹாமிய மதங்களின் சங்கதியும். இது சகிப்புத்தன்மையற்ற ஆப்ரஹாமிய மதஸ்தவர்கள் ஸம்ஸ்க்ருதம் அல்லது தமிழ் கற்கும் நோக்கம். புராண காவ்யங்கள் மற்றும் பற்பல பௌத்த ஜைன க்ரந்தங்களை பல அன்ய நாட்டினர் ச்லாக்யமாக கற்கின்றனர் என்பதும் உத்ஸாஹம் தரும் விஷயம்.
படது ஸம்ஸ்க்ருதம்
வதது ஸம்ஸ்க்ருதம்
க்ருஹே க்ருஹே க்ருஹே
தன்யவாத:
திரு.ஸ்ரீகாந்த்,
மிக்க நன்றிகள்.
ஹிந்து மத தத்துவங்களை கூடிய மட்டும் சரியாக அறிய சமஸ்க்ருத
மொழி அறிவு அவசியம் என்பது பொதுவான அபிப்பிராயம்.
சாதாரண மக்களுக்கு கூட அடிப்படை அறிவு இருப்பது அவசியம் என்பது
என் கருத்து. நவீன காலத்தில் அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களுக்கு
மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மொழிகளை சரியாக
பேசி எழுதுவோர் மிகவும் குறைவாகவே உருவாகின்றனர். தாய்
மொழிகளுக்கே இந்த கதி எனில், சமஸ்க்ருதத்தை பற்றி கூற வேண்டியது
இல்லை.
ஆனாலும் 90களில் இருந்து ஹிந்து எழுச்சியின் ஒரு பரிணாமமாக
சமஸ்க்ருதத்தை கற்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.
> இன்றைய சூழலில் தமிழக மக்கள் சமஸ்கிருதம் பயில தேவை எதுவும் இல்லை
வெள்ளைக் காரன் வந்து ஒரு யோகாவின் நன்மையை நமக்கு எடுத்துச் சொல்லும் போது தேவைப் படுமா… அவன் சம்ஸ்க்ருதம் படித்து ஆயுர்வேத முறைகளை அறிந்து தன் பேரில் பேடன்ட் வாங்கும்போது தேவைப் படுமா…
தேவை – தேவை இல்லை என்று ஒரு கல்விச் செல்வத்தை நிராகரிப்பது நியாயமே இல்லை. இதனால் கல்லா கட்ட முடியாது என்று காரணம் சொல்லுங்கள் – ஒத்துக் கொள்ளலாம். அதற்கு நிவாரணம் என்ன என்று சொல்லுங்கள்.
அதை விடுத்து, இன்றைக்கு காசு கிடைக்கிறது என்று அலைவது தழையை நீட்டும் இடத்துக்கு தலையை நீட்டும் ஆட்டின் கதிதான். சில தலைமுறைகள் கழித்து இந்த குணத்தின் தீமை புரியும் போது காலம் கடந்து விட்டிருக்கும்.
சரி நமக்கென்ன, அது வரை ஷேக்ஸ்பியர் படிப்போம் – ஏனென்றால் அதைப் படித்தால் ஆங்கில அறிவு வளரும் – வேலை கிடைக்கும் – காசு வரும்.
Could you suggest me a web site or a book to learn Sanskrit through Tamil. appreciated.
Raja
பெருமதிப்பிற்குரிய திரு கிருஷ்ணகுமார்,
வழக்கம் போலவே உங்கள் கடிதம் மிக இனிமையாகவும் பொருள் பொதிந்ததாகவும் அமைந்துள்ளது. தங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயம், தங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதி வாருங்கள். தமிழ் ஹிந்து அரங்கில் நல்ல அழகிய கருத்துக்களை தெளிவாக எழுதும் உங்கள் பணி தொடரட்டும். சமஸ்கிருதம் எவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்ததாயினும் , இன்றைய சூழலில், தமிழகத்தில், அதற்கு கழகங்களின் பொய் பிரச்சாரங்களினால் அநியாயமான முறையில் தேவையற்ற தடைகள் கடந்த 43 வருடங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. சுமார் நாற்பது வருடங்களுக்கு முந்தைய தமிழ் புலவர்கள் அனைவருமே தமிழ், சமஸ்கிருதம், மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகள் தெரிந்தவர்களாக இருந்தனர். இன்றோ, பரிதாபம். தாய் மொழி தவிர பிற மொழி எதுவும் தெரியாத ஒரு தலை முறையை வளர்த்து விட்டுள்ளனர். எத்தனை அரசுகள் ஆதரித்தாலும் ஒரு மொழி வளர்ச்சி அடைய வேண்டுமானால், அம்மொழி பேசும் மக்கள் சமுதாயம் தங்கள் தாய் மொழியை உயர்வாக எண்ணுதல் வேண்டும். ஆனால் தமிழகத்தில் கழகங்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னர் இங்கிலீஷ் மீடியம் பள்ளிகளும், கல்லூரிகளும் புற்றீசல் போல பெருகி, கல்வி வணிகமாகி , தாய் மொழி புறக்கணிக்கப்பட்டு , ஆங்கிலத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு , தமிழன் தன்னை ஆங்கிலத்துக்கு அடிமையாகவே கருத தொடங்குமளவு ஒரு சூழ்நிலையை பாவிகள் உருவாக்கிவிட்டார்கள்.இந்த நிலை விரைவில் மாறும்.
வடமொழி பயிலுவதை ஊக்கும்விதமாக எழுதுவதாகச் சொல்லி இரண்டு பத்திகள் அரசியலையே பேசி அரசியல் பேசவில்லை என்று வேறு சொல்கிறீர்கள் ஸ்ரீகாந்த். நீதியா?
பிரதாப்,
தமிழ் என்றதும் உங்களுக்கு மஞ்சள்துண்டார் தான் நினவு வருகிறார் என்றால் கோளாறு அங்கில்லை.
மொழியையும் வேலை வாய்ப்பையும் இணைத்துப் பேசுவதை நிறுத்துங்கள். அப்படி பேசவேண்டுமாயின் சி ஷார்ப், c ++ என்று பேச வேண்டியிருக்கும்.
மொழிக் காழ்ப்பும் வெறுப்பும் தமிழகத்தின் தனிச்சொத்தல்ல. எல்லா மாநிலத்திலும் உள்ளது. தேவைக்கதிகமாகவே தமிழகத்து தேசியவாதிகளும் இதை சிக்கலாகி உள்ளார்கள்.
இதே தளத்தில் என்னுடைய பதிவுகளைப் படியுங்கள்.
ராஜு,
திண்ணை இணைய தளம் கற்று தருகிறது.
https://www.thinnai.com/?module=displaystory&story_id=51012271&edition_id=20101227&format=html
வாழ்த்துகள்
தமிழ் ஹிந்து என பெயர் வைத்துகொண்டு, தமிழ் மொழிக்கு எதிரான கருத்தக்களை இடுகின்றனர்.
//ஹிந்து மத தத்துவங்களை கூடிய மட்டும் சரியாக அறிய சமஸ்க்ருத
மொழி அறிவு அவசியம் என்பது பொதுவான அபிப்பிராயம்.//
இந்த கூற்று தான் சமயங்களின் வளச்சியை பெரிதும் பாதிகின்றன.
வடமொழி தெரிந்தால் தான் சமய தத்துவங்கள் அறிய முடியும் என்பது தவறானது.
என்னை பொறுத்தவரை, சைவ சமயத்தை அறிந்து கொள்ள மற்றும் அதன் படி நடப்பதற்கும் தமிழ் மொழியே சிறந்ததும் மற்றும் போதுமானதும் கூட.
சமஸ்க்ருத மொழி என்றும் எக்கலதிலும் எவராலும் பேசப்படவில்லை.
அன்புள்ள ஸ்ரீ ப்ரதாப் , தங்கள் அபிமானத்திற்கு நன்றி. என் விஷய பகிர்வுகளாலும் பல அறிஞர்களுடைய வ்யாசங்களையும் மற்றும் சிறந்த மறுமொழிகளை இந்த தளத்தில் வாசிப்பதன் மூலமும் எனது புரிதலை செழுமை படுத்தவே விழைகிறேன்.
கணக்கிலடங்கா வேதோபநிஷத்துகள், மீமாம்ஸா தர்க்க சாஸ்த்ராதிகள்,இதிஹாஸ புராண காவ்யங்கள் ஸங்கீத நாட்ய சில்ப வாஸ்து சாஸ்த்ராதிகள் இன்னும் பற்பல சம்பத்துகளை உடைய ஸம்ஸ்க்ருதம், என் தாய் மொழி தமிழ் போலவே சிர புராதனம் நித்ய நூதனம் என்ற வைபவம் உடைய பாஷை.
கடவுளை கல் என்று நினைப்பவற்கு அது கல்லாகத்தான் தோன்றும். அது போலவே ஸம்ஸ்க்ருதம் ஒழிய வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு அது செத்தது போல தோன்றும். அந்த பைசாச எண்ணம் ஒரு தோற்றமே.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது தமிழ் வசனம். அம்ருத ஸுரபியாம் தேவ வாணியான ஸம்ஸ்க்ருதமும் கொண்டாடுபவர்களுக்கிடையே நித்ய நூதனமாய் அதி புஷ்டியுடன் சோபித்து வருகிறது. ஹிந்து மதத்தை கசடற அறிய விழைபவர்கள் ஸம்ஸ்க்ருதமும் கற்பது அவச்யம்.
ஸ்வாமி ஸ்ரீ ராம்தேவ் மஹராஜ் தன் யோக ப்ரசங்க மேடைகளில் இப்போதெல்லாம் ஸம்ஸ்க்ருதத்தின் பெருமையையும் பறைசாற்றி வருகிறார். எந்த குருவிடமிருந்து அஷ்டாத்யாயி கற்றாரோ அவரைத் தன் பக்கத்திலிருத்தி அவர் மூலம் சாமான்ய ஜனங்களுக்கும் புரியும் படி ஸம்ஸ்க்ருதத்தின் தனித்தன்மை மற்றும் விசேஷங்களை ப்ரசங்கம் செய்விக்கிறார். இவையெல்லாம் ஹிந்தி பாஷையில் ராத்ரி ஒன்பது மணிக்கு சன்ஸ்கார் சேனலில் ஓளிபரப்பாகிறது. ஸம்ஸ்க்ருதம் பற்றி மேலும் அறிய விரும்பும் ஹிந்தி பாஷை அறிந்தவர்கள் இந்த ஒளிபரப்பை பார்த்தும் பயனுறலாம். பாரத ஸ்வாபிமான ஆந்தோளன ப்ரசங்கங்களினூடே ஸம்ஸ்க்ருதம் பற்றிய ப்ரசங்கமும் வருவதால் இந்நிகழ்ச்சியை நித்யம் பார்ப்பவர் பயனுற முடியும்.
அன்புள்ள திரு ராம்கி (தங்கள் ப்ரியத்திற்கிணங்க ஸ்ரீ யை விடுத்துள்ளேன்)
\\\\\\\மொழிக் காழ்ப்பும் வெறுப்பும் தமிழகத்தின் தனிச்சொத்தல்ல. எல்லா மாநிலத்திலும் உள்ளது. தேவைக்கதிகமாகவே தமிழகத்து தேசியவாதிகளும் இதை சிக்கலாகி உள்ளார்கள்.\\\\\\\\\
இருபத்தைந்து வருஷங்களுக்கு மேல் அன்ய மாகாணங்களில் வசித்து வருவதாலும் தற்போது நித்ய கண்டம் பூர்ண ஆயுஷ் ஏன்ற ரீதியில் சாந்தம் நிலவும் காஷ்மீரத்தில் வசிப்பதாலும் அன்ய மொழி காழ்ப்பு என்பது எனக்கு சற்று அதிகமாகவே கசப்பளிப்பதாக இருக்கலாம். அன்ய மொழி காழ்ப்பு மற்றும் தேசியவாதம் இவை இரண்டும் எதிரெதிர் துருவங்கள். தேசியவாதம் என்ற தேவத்வம் புஷ்டியாக இருப்பதற்கு அன்ய மொழி காழ்ப்பு என்ற அஸுரத்வம் வதம் செய்யப்பட வேண்டும். நான் பிற மொழிகளில் ஆர்வம் காண்பிப்பதன் லாபம் என் பிற மொழி சகோதரர்கள் பற்பல தமிழ் வார்த்தைகள் கற்கிறார்கள். என்னை பார்த்து வணக்கம் என்று சொல்லும் பஞ்ஜாபி, டோக்ரி மற்றும் காஷ்மீரி நண்பர்கள் இப்போதெல்லாம் காலை வணக்கம் என்று சொல்கிறார்கள். பதிலுக்கு ஸுப்ரபாத் என்று சொல்வதை நான் தன்மான குறைவாக எண்ணுவதில்லை.
தன்யவாத:
பாரதத்தில் பல நூல்கள் சமஸ்கிரத்தில் தான் இன்றும் உள்ளன. ஆண்மிகம் தொடங்கி மெஞ்ஞானம் விஞ்ஞானம் வானசாஸ்திரம் கட்டிடகலை சிற்ப்பகலை ஜோதிடம் கனிமங்களிலிருந்து தாதுக்களை பிரித்தல் ஆகாய விமானம் கணிதம் அணு விஞ்ஞானம் என்று எண்ணற்ற பொக்க்ஷியங்களை கொண்டுள்ளது. இவற்றை வெளிநாட்டினர் சமிஸ்கிரதம் படித்து பல செய்திகளை எடுத்து தங்களது கண்டுபிடிப்புகளாக உலகிற்க்கு தெரிவித்தார்கள். இதற்கு நிறைய உதாரணங்களை காட்டலாம். இன்றும் இது தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.
ஆரியபட்டா பாஸ்கராசாரியார் போன்றோர் தங்களது கண்டுபிடிப்புகளை சமஸ்கிரதத்தில் தான் எழுதி வைத்துள்ளார்கள். இதைபடித்து தெரிந்துகொள்ள பல சங்கேத சூத்திரங்களையும் எழுதிவைத்துள்ளார்கள். வெளிநாட்டினர் தான் பல சமிஸ்கிரத மொழி பெயர்புகளை வெளிகொணர்ந்துள்ளனர். இதை பாரதியர்கள் கற்று வெளிகொணர்ந்தால் முழுமையான பயனை நாம் பெறாலாம். எனவே சமஸ்கிரதம் பயிலவில்லை என்றால் நஷ்டம் நமக்குதான். தமிழ் இந்து வாசகர்கள் (www.iish.tv ) திரு.கோபாலகிருஷ்ன் அவர்களின் ( IIT) சொற்பொழிவை அவசியம் பார்க்கவேண்டும்
பிரதாப்
அன்புள்ள ராம்கி,
திண்ணை இணையதளம் மிக நன்றாக உள்ளது. அதில் உள்ள சமஸ்கிருதம் கற்போம் என்று இருபத்திரண்டு பாடங்கள் வந்துள்ளன. நன்றி.
இன்றைய உலகில், தொழில் அல்லது வியாபாரம் அல்லது வேலைவாய்ப்பில் பயனுள்ள வகையிலேயே மாணவர்களின் மொழித்தேர்வு அமைகிறது. வேலைவாய்ப்பையும், மொழியையும் இணைத்துப்பெசுவதை நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளீர்கள். மீண்டும் சொல்கிறேன். மொழி என்பது ஒரு தொடர்பு சாதனம் மட்டுமே ஆகும். ஒவ்வொரு மனிதனும் அன்றாட வாழ்வில் பிறருடன் தொடர்பு கொள்ளவேண்டியது கட்டாயமாகிவிட்டது.
எனவே வேலை வருமானம் இல்லாமல் மனிதன் சிரமப்படும் காலத்தில் மொழியும், வேலைவாய்ப்பும் இணைவது தவிர்க்க இயலாதது. மேலும் சி , சி பிளஸ் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மையே. கம்ப்யூட்டர் சயின்சு மட்டுமல்ல சட்டம், கணிதம், இயற்பியல், மருத்துவம் என்று எல்லாத்துறைகளிலும் மனிதனுக்கு நல்ல வாழ்வு மற்றும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் மனிதனுக்கு உபயோகம் இல்லாதது எதுவாயினும் காலப்போக்கில் ஒதுக்கப்பட்டு விடும். மனிதன் உயிருடன் இருந்தால் தான் எந்த மொழியையும் பேச முடியும் என்பதை நீங்கள் மனதில் கொண்டால் இந்த இணைப்பு தவிர்க்க முடியாதது என்பதை ஒப்புக்கொள்வீர்கள்.
Pl alow me to join in this line with my own statement of case for Sanskrit learning by Indians.
The two versions – Tamil and English – sent out by me have been very well-received on the internet also and
I am conducting a course of learning the language for the last few weeks happily attended by white-collar intellectuals – students as well as middle-aged adults – from IT, Mgmt, Academics etc. – from different castes, creeds and languages – specifically the Tamil family – Tamil, Telugu, Kannada and Malayalam – and, most significantly, of different political mindsets!
My method of teaching has been appreciated by them as being refreshingly and innovatively maverick. There have been requests from people from Malaysia and the USA who hv heard about my course, to hv my course reach them. In this posting let me just present my preface explaining the specific line of approach that steers clear of both the extremes – of animosity and of bigoted overzealousness!
The Tamil version follows the English text below:-
STUDY SANSKRIT? TODAY? WHATFOR?
AN APPROACH
Sanskrit is a heritage language of ours. By ‘ours’ I identify myself with the Indian Subcontinent. It is a language of proud heritage – for us – in more than one sense. It is a language that is heritage by itself:- existing from Time immemorial [like Tamil and Chinese] – it has been our language of all pan-Indian literature, of world-famous philosophies – [Vedic Hindu, Buddhist, Jain and even the ‘there-is-NO-God’ brand of Rationalism], of all the arts and sciences that have been exported to or imported from neighbouring civilizations – and, most significantly, of all formal official intercommunication between the diversely linguistic regions / states / kingdoms. In fact it had been functioning as the common connecting language of our [politically multiple but nationally united] Subcontinent, until the centuries-long widespread alien Muslim rule eroded its prime status, and the succeeding British rulers replaced it outright with English, and – irony! – in the post-Independence remnant India Hindi got to be promoted for the hegemonic status.
Whether Sanskrit should be restored its original political status is NOT the point of immediate concern here – [howsoever wishful a thinking it might be for whom-so-ever]! The more mundane specific approach to Sanskrit in the current social and political milieu is simply this:- To have, at the least, WORKING KNOWLEDGE of READING and WRITING Sanskrit, with which one should be able to read by oneself the already existing Sanskrit works that are universally acclaimed as containing knowledge said to be relevant to modern times also.
To be an Indian – why, any person of Indian origin, wherever on the Globe – and to go to learn one’s own [Sanskrit-preserved] history and heritage only through translations – and that too, by European and American scholars – is a SHAME. To see ideas and concepts from our Sanskrit works being recognized for their modern relevance first by those scientists and technologists and wielded by them to make epoch-making inventions adding to their credit for world leadership in research and development and knowledge-building – e.g. Computer Linguistics and Coding Theory – is RINGING RIDICULOUS SHAME! – Upon us!
So, to re-iterate the purpose of and approach to this course of lessons: Take up the study of Sanskrit as just a language of human communication and expression – pure language for language’s sake – just as one would approach any modern language to-day – with no sense of religious mysticism or any association of exclusive caste and creed and status or what else. Indeed, to put it as a cynical flip, the course could be started with an ‘unlearning’ lesson preceding the first ‘learning’ lesson – ‘unlearning’ the following four or five prevalent myths namely,
Sanskrit being a dead language,
it being the language for Hindu rites and rituals,
a language exclusively for the Brahmins,
a language with intractable grammar & so on.
The course of lessons is claimed to be so designed that the above myths will be found to get broken as one steers along.
STARTING STANDPOINT
To ‘scientifically systematically’ treat or deal with any subject, one should start from the very start – [a humorous tautology?!] – after tracing its absolute origins.
So it might appear, but that is not what we do, in reality. We have not waited to write History only after ascertaining when and where exactly any particular tribe or civilisation came into being; we proceed from some generally hypothetical point of time when the tribe or civilisation shows discernible identity.
We have not waited to advance in literature or linguistics only after determining when and how the first human communication – oral or in writing – took form, primordially.
In fact, in the study of all human activities of immemorial origin we have been dealing with the present and future just virtually hypothesizing a convenient starting point for the line of study: [e.g. (i) The state of atoms as the start of classical Physics and Chemistry and (ii) the dogma of a rib-tickling Father figure creating human population from ‘1+1’]. Such hypothetical start is true in the study of languages too – in learning or teaching their grammar and idioms.
Apply this dictum to our approach to Sanskrit. What is the basic image of this language on which we shall build our course? The image of a language handed down to us mortals by the divine Devas, not to be handled impiously? The image of a language of Siberian cowherds and shepherds gushing into the Indo-Gangetic plains and deeper South, flushing out a long-existing ever-so-superior culture of you-know-who(!) who had been living there since when the sea South was land? Or is it the ‘mother of ALL our languages’ including those of the Southern Peninsula – or else, vice versa, an offshoot of the latter (as some would have it)? Our standpoint, that is, in this course of lessons, is well clear of all of these, with no comments, positive or negative. We start with the following view taken as axiom:-
At some point of history the diverse language speakers of our subcontinent accepted and admitted Sanskrit as their common language and put all contributions of universal interest in that language. Sanskrit embodies linguistic features of surprisingly diverse languages – like the South Indian languages on the one side and Latin and its derivatives on the other. Internal structure-wise the language is really close to the above-mentioned two groups rather than to Hindi whose commonness with Sanskrit virtually consists just in its import of vocabulary.
SCRIPT FOR SANSKRIT
Sanskrit has been being written in different scripts by peoples of different languages:- in the varying NAGARI scripts in the North Indian regions and Maharashtra, in Sharada script in Bengal, Uriya in Orissa, Telugu by the Telugus, Kannada by the Kannadigas, Malayalam by the Malayalis and the Grantha(m) script by the Tamils.
All this was from ancient times till just a few decades ago. Now Devanagari, one of those Nagaris of the North, pushed up by promoters of Hindi hegemony has gained ascendance as the common script for Sanskrit all over the country.[The point is: the oft found observation on Devanagari script as the Sanskrit script, is myth.]
There is also an internationally standardized system of the Roman script – better called to-day the English alphabet – along with the so-called ‘diacritical marks’ such as the apostrophe, the hyphen, bar or vinculum(~) above the letter, dots above, beside or below the letter.
ஸம்ஸ்க்ருதம் கற்கலாம் வாரீர்!
யார் கற்கலாம், எதற்காகவாம்?
யாருமே கற்கலாம்! மொழிக்கு ஜாதி-மத-இன-பேதம் கிடையாது.ஸம்ஸ்க்ருதம் இன்ன ஜாதிக்காரருடையது, இன்ன மதத்திற்கு ஆனது – என்கிறதெல்லாம் சமீபகால வரலாற்றுத் தவறான ‘இமேஜ்’.
அன்று:-
கண்ணன் இடையன். ராவணன் அரக்கன். கம்பன், விஷ்ணுசித்தன் – பச்சைத் தமிழர்கள். யுவாஞ் சுவாங், ஃபாஹியான் என ஒரு சீனப்பரம்பரையே இருக்கிறது. அல் பிரூனி, ஊமர் கய்யாம், அக்பரின் செல்லமருமான் கான் கனான், ஔரங்கசீப் கொன்றுபோட்ட பெரியண்ணன் தாரா ஷிகோ – எல்லாரும் ஸம்ஸ்க்ருதம் படித்தார்கள்; ஸம்ஸ்க்ருதத்தில் புலமையும் பெற்றார்கள்.
இன்று:-
மேனாடுகளில் அமெரிக்க ஐரோப்பிய தேசங்களில் பல்கலைக்கழகங்களில் வெள்ளையர்கள் ஸம்ஸ்க்ருதம் படிக்கிறார்கள், ஆராய்ச்சி செய்கிறார்கள். ஸம்ஸ்க்ருதத்தின் சொந்தக்காரரான நாம்தான் அரசியல் அழுக்குக் கிறுக்குத் தனங்களினால் அதை ஒதுக்கிவிட்டு மொழிச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.
[Incidentally, நம் பாரதநாட்டின் பல நூற்றாண்டுச் சரித்திரத்தில் ‘மொழிப்பிரசினை’ என்று எங்கேனும் காணக்கிடைக்கிறதோ? இல்லை! அலெக்ஸாண்டர் காலத்து மெகாஸ்தனீஸிலிருந்து ஆங்கிலேயர் காலத்து து-புவா போஷா(ம்ப்) ஜோடி வரை,எந்த வெளிநாட்டுக்காரரும் அவர்கள் விவரமாக எழுதிய பாரதமக்களின் மீதான வாழ்க்கைச்சித்திரத்தில் நம்மிடை இன்று காணும் மொழிச்சண்டையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை!]
எதற்காகக்கற்கவாம்?
இன்று நாம் மஹாராஷ்டிரத்தில் வேலை செய்து வாழ மராட்டி கற்றாகவேண்டும்; கர்நாடகத்தில் பணி புரியக் கன்னடம் கற்க வேண்டும்; தமிழ்நாட்டில் பிழைக்கத் தமிழ் (மட்டும்) கற்கவேண்டும். எந்த ஊதியப் பிழைப்புக்காக ஸம்ஸ்க்ருதம்கற்கவேண்டுமாம் ?!
மிகச்சுருக்கமாகச்சொன்னால் –
1. நம் பன்மொழிநாட்டின் பன்னூற்றாண்டுகாலத்து ஒரே பொதுமொழியாக (ஆங்கில ஆதிக்கம் வரை) விளங்கியிருப்பது ஸம்ஸ்க்ருதமே.
So what அதற்காக?
2. அந்த ஒரே பொதுமொழியில்தான் நம் முன்னோர்களின் பல்லாயிர காலத்து அறிவுப்படைப்புகள் எல்லாமே – இலக்கியம், ஆன்மிகம், தத்துவம், அரசியல், சட்டம் ஆகிய எல்லாத்துறையிலும் – ஒருமிக்கப் பதித்திருக்கக் காணும்
இந்திய – (அதாவது பரத-உப-கண்டத்து) பிரம்மாண்ட Knowledgebase ஸம்ஸ்க்ருதத்தில்தானே உள்ளது?
சற்றே விளக்கமாகச் சொன்னால்
எந்த ஒரு தனிக் கூட்டத்தாருக்கும் தாய்மொழியாய் இல்லாது எல்லாப்
பிரதேசத்தினர்க்கும் சம உறவாக அரசியல்களத்திலும் விளங்கி வந்திருக்கிற
‘நாட்டனைத்துப் பொதுமொழி’ ஸம்ஸ்க்ருதம். மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு தாய்மொழிகள் நிலவும் பிரதேச அரசுகளுக்கும் மையத் தலைமை யரசாட்சிக்கும் ‘அதிகார பூர்வப்’ பொதுத் தொடர்பு மொழியாக இன்று (நூற்றுச் சொச்ச ஆண்டுகளாக) விளங்குவது ஆங்கிலம். அதன் இடத்தில் இந்தியை ஏற்றி வைக்கும் அரசியல் முயற்சிகள் இன்னும் சரியாகப் பலிப்பதாயில்லை. இந்த ஆங்கிலத்தின் ஆதிக்கஸ்தானத்தில் தொன்று தொட்டு வீற்றிருந்து வந்த ஸம்ஸ்க்ருதம் ஆயிரமாண்டு அந்நியக் கலாச்சார இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் கூடப் பாரசீக / அரபு / உருது மொழிகள் வழக்கில் ஒங்கினாலும்
ஒதுக்கி ஒழிக்கப் படாது விளங்கிற்று. இதற்குக் கண்கூடான இலக்கிய
வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.
அறிவுக்களஞ்சியம் / சிந்தனைக்குதிர் / knowledgebase
நம் நாட்டின் பண்டைச் சாதனை இன்று மிகப்பெருமையுடன் பேசிப் பேசி கர்வப்பட்டுக்கொள்ளும் பொருளாயிருக்கிறது. மனித அறிவின் எல்லாத் துறைகளிலும் – தத்துவ-விசாரம், கலைகள், இன்று science என்று சொல்லப்படும் விஞ்ஞானம் என்க – பாரதம் உற்பத்திஸ்தானமாக இருந்துவந்திருக்கிறது. இது தற்பெருமைச் ‘சவடால்’ அல்ல. காலங்காலமாக வந்து போன அயல்நாட்டார் -பாரசீகர், அரபியர், கிரேக்கர், சீனர் – புகழ் பெற்ற புள்ளிகள்-எழுதிவைத்துப் போயிருக்கின்றனர். அவ்வாறு இங்கே நம் நாட்டில் தோன்றி உலகளாவிச் சென்ற ‘ஒரிஜினல்’ சிந்தனைகளை, கண்டுபிடிப்புகளை நம் முன்னோர் (ஜாதி மத பேதம் இல்லாமல்) ஸம்ஸ்க்ருதத்திலே போய் இட்டுவைத்தனர். மேநிலைப் படிப்பு விசாரங்களுக்காக மேலை மற்றும் கீழைய இரு புறத்துச் சீமைகளி லிருந்தும் அறிஞர்கள் காஞ்சிக்கும் காசிக்கும் நாளந்தாவுக்கும் வந்து ஸம்ஸ்க்ருதம் பயின்றனர் . ———————–[இன்று எல்லாரும் அமெரிக்காவுக்கு அமெரிக்காவுக்கு ஓடுவது போலே!]
இன்று?
நாட்டிலே ஸம்ஸ்க்ருதப்படிப்புக்குப் பெருங் கேட்டு நிலை. அடக்கப்பட்டுக்கொண்டோ, ஒடுக்கப் பட்டுக் கொண்டோ, அலட்சியப்படுத்தப் பட்டுக்கொண்டோ, ‘இளைப்பம்’ செய்யப்பட்டுக்கொண்டோ இருக்கிறது. ஸம்ஸ்க்ருதம் இன்று பொதுஜன மொழியில்லை. வெள்ளைக்கர மேனாட்டுக் கல்விக்கழகங்கள் போதிக்கும் அளவுக்குக்கூட நம் தேசீயக் கல்வித் திட்டத்தில் ஸம்ஸ்க்ருதத்துக்கு மதிப்பிடம் இருப்பதாகக் காணோம். இந்த அழகில், நம் பண்டை நூல்களை அந்தப் பிறநாட்டான் படித்து (தோன்றியபடி) ஆங்கிலத்திலும் ஃபிரெஞ்சிலும், ஜெர்மன் மொழியிலும் எழுதியதை நாம் படிக்கிறோம்!
முதலில் இந்த இழிநிலை போய்த் தொலையவேண்டாமா?
நம்முடைய பல்துறை ஆக்கவழி அறிவு வெளிப்பாடுகளை ஆங்கிலத்திலேதான் செய்யவேண்டியிருக்கிறது,என்பது போன்ற இன்றைய அவலம் அகன்று, மஹாகவி பாரதி சொன்ன ‘அறிவிலே விடுதலையைச்’ சாதிப்பதற்காக நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது பெரும் சமூகப் புரட்சிகிரட்சி யொன்றும் இல்லை:
SIMPLY இதைச் செய்தால் போதும்:-
நாம் எல்லோரும் அனைத்திந்தியப் பரப்பில் முறையாக ஸம்ஸ்க்ருதத்தை – அது
ஒரு மானிட மொழி என்ற barest அடையாளத்தின் அடிப்படையில் – ஆங்கிலத்தைப் படித்த அதே மனப்பாங்குடன் பயின்று, நம் முன்னோர் படைத்தவற்றையெல்லாம் ஒவ்வொருவனும் தானே மூலவுருவில் படித்துப் புரிந்து கொள்ளும் ‘working knowledge’ அளவுக்கு நம்மைத் தரப்படுத்திகொள்ளலாமே?
பப்ளிக் சர்விஸ் கமிஷன்களால் கேட்கம் படும் மொழித் தேர்ச்சி வகைகள்: READ WRITE SPEAK.இவற்றில் முதற்படியான ‘ஏற்கெனவே எழுதப்பட்டுள்ளதைப் படித்துப் புரிந்து கொள்ளும்’ தேர்ச்சியை அடுத்து ‘தானே வாக்கியங்களெழுதும்’ தேர்ச்சி வந்தால் போதும் – ‘பேசும்’ தகுதி, திறமை, தானே வரும். இது உலகில் எல்லா மொழி விஷயத்திலும் கண்கூடு. ‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்றது போல.
ஆம். இந்தக்கடைசி இரு வாக்கியங்களை மீண்டும் அழுத்தமுறச் சொல்லி யாக வேண்டும்:- ஸம்ஸ்க்ருதத்தில் பத்து நாளில் பேசலாமே என்று கிளம்பி, “simplify பண்’றேன் பார்” என்று மொழி வழக்கு வளத்தைச் சிதைப்பது போலான – [குல்லாய்க்கேற்பத் தலையை வெட்டுவது போலவும், கிரேக்கப் புராணத்துப் புரோக்ரேடீஸ் விருந்தோம்பியது போலவும்] – அநுகூல சத்துருத்தனத்தில் இறங்காமல், எல்லாவற்றையும் விட
அடிப்படை முதனிலை அவசியமாக நாம் செய்யவேண்டியது என்னவென்றால்:-
ஏற்கெனவே ஸம்ஸ்க்ருதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கிடக்கும் நூல்களை – வேதாந்தத்திலிருந்து விஞ்ஞானம் வரை, புராணங்களிலிருந்து போர்னோகிராஃபி வரை, காவியங்களிலிருந்து கடி ஜோக்குகள் வரை(!) உள்ளவற்றை –எந்தக் குடிமக்களும் தானே படித்து அர்த்தம் புரிந்துகொள்ளும் ‘SANSKRIT LITERACY’ பெற்றால் போதும்; மற்றவையெல்லாம் தானே வரும்!
“ஓம் சாதனைசெய்க பராசக்தி” பாலசுப்பிரமணியன்9444059070[06-10-2010]
மதிப்பிற்குரிய ஸ்ரீகாந்த அவர்களுக்கு,
தங்களின் கட்டுரை மூலம் சம்ஸ்கிருத மொழியின் இன்றைய நிலை பற்றிய தெளிவைப் பெறக் கூடியதாக இருந்தது. அத்துடன் பல்வேறு இணையத் தொடுப்புக்களும் செய்திருக்கின்றமை மிக்க பயனுடையதாக இருக்கிறது.
—
இலங்கையில் கிரந்த எழுத்துருக்களின் மூலமான சம்ஸ்கிருத இலக்கியங்கள் சில எழுந்திருக்கின்றன. ஆனாலும் காலத்திற்கேற்ற வளர்ச்சி இத்துறையில் இங்கு எட்டப்படவில்லை. ஆனால் கிரந்த எழுத்துருவில் ஏராளமான பத்ததிகள், நீதிநூல்கள் மாதாந்தம் பல நுஸல்களாக பதிப்பிக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும் சம்ஸ்கிருதம் ஒரு சமய, நீதி மொழியாகப் பயன்படுத்துவதற்கு அப்பால் வேறு நிலைகளையும் பெறுவது தானே சிறப்பு. இலங்கையில் நீர்வேலியில் நுஸறாண்டுகளுக்கு முன் வசித்த சைவ வேளாளர் குலத்து உதித்த ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர பண்டிதர் என்பவர் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சியில் பாரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். அவர் தமிழகத்திலும் வேதாரண்யம், சிதம்பரம் ஆகிய இடங்களில் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
சிங்களமக்களிடையேயும் நிறையவே சம்ஸ்கிருத அறிஞர்கள் இன்று வரை இருந்து வருகிறார்கள். நமது குருமார்கள் சிலர் இவர்களுடன் பேசுவதற்கு சிங்களம் தெரியாமையால் சம்ஸ்கிருதத்தைப் பாவித்துப் பேசியதாகவும் சொல்வார்கள்.
ஸ்ரீ. ஸ்ரீநிவாஸசாஸ்திரிகள், நியாய சிரோன்மணி சுப்பிரம்மண்ய சாஸ்திரிகள், வியாகரணசிரோன்மணி சீதாராமசாஸ்திரிகள், பேராசிரியர். கலாநிதி, .கைலாஸநாதக்குருக்கள் ஆகியவர்களும் யாழ்ப்பாணத்தில் சம்ஸ்கிருதத்தில் சில இலக்கியங்களைச் செய்ததுடன் நிறைவான பங்களிப்பை ஆற்றிய பெரியவர்களாவர்.
மிக்க அன்பிற்குரிய ஸ்ரீமான் கிருஷ்ணகுமார் அவர்களும் இங்கே சிறப்பான பதிவுகளை இட்டிருக்கின்றமைக்கு மிக்க நன்றிகள்…
சென்னையில் சம்ஸ்க்ருதம் கற்றுத்தரும் பணியை ஸம்ஸ்க்ருத பாரதி செய்வதாகக் அறிந்து தொடர்பு கொண்டேன். 5-6 அழைப்புகளுக்குப் பிறகு ஒருவர் பேசினார். வகுப்பு நடக்குமிடம் வர வழி கேட்டேன். மாலை 5 மணிக்கு வகுப்பு ஆரம்பம். பாலவாக்கம் பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டுப் பேசு, வழி சொல்கிறேன் என்றார். சென்னை டிராபிக்கில் சிக்கி மீண்டு 4.50 மணிக்கு பாலவாக்கம் போய் இறங்கிவிட்டு செல்பேசியில் அழைத்தேன். அழைப்பை ஏற்கவில்லை. 16 கால் போட்டு நொந்து போய் என் நண்பரை அழைத்து வழி கேட்டேன். தெரியவில்லை என்றார். அருகே போக்குவரத்துக் காவலர், கடைக்காரர்கள் உள்ளிட்ட பலரிடம் முகவரி விசாரித்தேன் யாருக்கும் தெரியவில்லை. (ஒன்று, எங்காவது பொதுவான தெரிந்த இடத்தில் நடத்தவேண்டும். Introductory sessionஆவது பொதுவாகத் தெரிந்த இடத்தில் வைக்கலாம். இல்லை எங்காவது டொக்கில் நடத்தினால் வழியை சரியாகக் காட்டவேண்டும். இரண்டும் இல்லை என்றால்?) போங்கடா என்று திரும்பிவிட்டேன். (வலைபூவில் இதுபற்றி பதிவு போடலாம் என்று யோசித்தேன். பிறகு வேண்டாம் என்று விட்டு விட்டேன்.)
புத்தகத்தில் பார்த்துப் படிப்பதை விட நேரில் யாராவது நடத்துவது எந்த மொழியையும் பயில சிறந்த வழி. சம்ஸ்க்ருத பாரதி வேறு எங்காவது பொதுவாகத் தெரிந்த இடங்களில் நடத்தினால் செல்லத் தயாராக இருக்கிறேன்.
அருன்ப்ரபு அவர்களே
சமஸ்க்ரித பாரதியில் நீங்கள் யாரை தொடர்பு கொண்டீர்கள்? – அந்த அமைப்பு செயல்படும் விதம் சற்று வித்யாசமானது – அவர்கள் பலருக்கு ஆசிரியர் பயிற்சி கொடுத்து நீங்களே தனியாக சமஸ்க்ரிதம் பரப்பும் சேவை செய்யுங்கள் என்று அனுப்பிவிடுவார்கள். இதன் படி பல இடங்களில் சமஸ்க்ரித வகுப்புகள் நடத்தபடுகின்றன (சென்னை மற்றும் தமிழகமெங்கும் – இவர்களின் முயற்சியால் தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் பேர் சமஸ்க்ரிதத்தில் பேசும் திறன் கொண்டுள்ளார்கள்) – புத்தகமும் பரிட்சையும் தான் சமஸ்க்ரித பாரதி அமைப்பின் பொறுப்பு – இடம், வகுப்பிற்கு தேவையான பொருட்கள் எல்லாம் சேவை செய்ய முன்வந்தவரின் பொறுப்பு தான்.
சமஸ்க்ரித பாரதி சம்பாஷன ஷிபிரம் என்ற ஒரு பத்து நாள் (இரண்டு மணி நேரம் ) (சமஸ்க்ரிதத்தில் பேசும் பயிற்சி கொடுப்பார்கள் – அதன் பிறகு கீதா சோபனம் என்று ஆரம்பித்து படிப்படியாக முன்னேறலாம்
சென்னையில் சமஸ்க்ரித பாரதி அலுவலகம் ராதக்ரிஷ்ணன் சாலையிலும் வள்ளுவர் கோட்டம் சாலையிலும் உள்ளன
சாரங் அவர்களே! தகவலுக்கு மிக்க நன்றி!
https://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=12025
இந்த சுட்டியில் பார்த்துத் தான் நான் பரசுராமன் என்பவரை அணுகினேன். பலனில்லை. ஹைந்தவ கேரளத்தார் என் பின்னூட்டத்தை அனுமதிக்காது எனக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்பி வேறு இரு எண்களைக் கொடுத்தனர். பலனில்லை என்று நான் சொன்ன பிறகே பின்னூட்டத்தை அனுமதித்தனர்.
மயிலை இராதாகிருஷ்ணன் சாலை அலுவலகத்தில் முயன்று பார்க்கிறேன். still, திரு.பரசுராமன் அவர்கள் செய்தது என் வரையில் சரியல்ல.
அருன்ப்ரபு அவர்களே
srsarangan@gmail.com க்கு இ-மெயில் அனுப்பினால் நான் உங்களுக்கு மேலும் தகவல்கள் தருகிறேன்
அறிவினா ஐய வினா என்று பவநந்தி முனிவர் வகைப்படுத்துவது போல் பிரதாப், நீங்கள் தெரிந்து குழப்புகிறீர்களா? தெரியாமலா? மொழியின் பயன்பாடு அதன் மேலான ஆர்வம் ஆகியவற்றை எந்த தளத்தில் விவாதம் செய்ய விழைகிறோம்? வேலை வாய்ப்பிலிருந்தா? 1984 ல் தமிழ் முழு நேர பட்ட மேற்படிப்பிற்கான விண்ணப்பம் ஒன்றே ஒன்றுதான் என செய்தி வந்தது. வேலைவய்ய்ப்பிற்கான விஷயங்களை மக்கள் நன்கே அறிந்து இருக்கிறார்கள். அதை விவாதிக்க இந்த தளம் எதற்கு? இந்தி படித்தால் வேலை என்று நீங்கள்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். இது உண்மையா என்று ஆய்வு செய்யுங்கள். நான் முன்னரே அளித்த விவரங்களை நோக்க மனமில்லை போலும்.
//மேனாடுகளில் அமெரிக்க ஐரோப்பிய தேசங்களில் பல்கலைக்கழகங்களில் வெள்ளையர்கள் ஸம்ஸ்க்ருதம் படிக்கிறார்கள், ஆராய்ச்சி செய்கிறார்கள். //
மேக்ஸ் முல்லர் வேதங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, ஆக்ஸ்போர்டு பல்கலையில் படிக்கவந்த சதுர்வேதி என்ற இந்தியரை அணுகி ரிக்வேதத்தில் சில சந்தேகங்களைக் கேட்டாராம். அதற்கு அந்த சதுர்வேதி வேதங்கள் போன்ற வீணான விஷயங்களில் தாம் மனத்தைச் செலுத்தி நேர விரயம் செய்யவில்லை என்றும், தாம் பாரிஸ்டருக்குப் படித்து முன்னேற வந்திருப்பதாகவும் சொன்னாராம். அறியாமையின் உச்சம் இதுதான் என்று சுவாமி தயானந்த சரஸ்வதி ஒரு முறை சொன்னார்.
I think arguments against Hindi as national language are there to negate the advantage the Hindi speaking people will have over those who speak other languages. English will make everyone equal as it is not our mother tongue! But even in English knowing public we have differences between Anglo-Indians, convent educated and others.
We should also keep in mind the similarity between all Indian languages and their grammar and English language and its grammar. Some one said that if you are strong in Tamil(for example) you can learn Hindi easily. Only the knowledge of equivalent words is needed.
Tamil – உன் பேர் என்ன?
Hindi – Thumhaaraa naam kyaa hai?
English – What is your name?
The above is just an example of the similarity of the sentence structure of Indian languages. So when learning Hindi or any other Indian language, only the vocabulary is the difficulty. But in learning English, grammar as well as vocabulary are the difficulty.
At least as a common language to communicate with each other we can have Hindi, as majority of Indians know or understand it. Education and employment is another matter.
கோவையில் சம்ஸ்க்ருத பாரதி, ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5 ஆம் தேதிவரை , 10 இடங்களில் சம்ஸ்க்ருத அறிமுக வகுப்புகள் நடத்துகிறார்கள்.
இடங்கள் கீழ்வருமாறு
ஆர்.ஸ்.புரம், 2 ரேஸ் கோர்ஸ் , 3 . வய்சியாள் ஸ்ட்ரீட் , 4 . வேடபட்டி , 5 . பேரூர் ,
6 .சாய்பாபா காலனி , 7 .ராமநாதபுரம் , 8 .பாப்ப நாயக்கன் பாளையம் 9 .கணபதி
10 . கவுண்டம்பாளையம் .
விருப்பமுள்ள கோவை அன்பர்கள் தொடர்பு கொள்ளவும்
ஸ்ரீ. முரளி 98841 04024
ஸ்ரீ .அனந்த கல்யாண கிருஷ்ணன் 94438 89938
வகுப்புகள் இலவசமாக நடத்தபடுகின்றது.
ஜெய் பவானி
பிரத்யூஷ்
சம்ஸ்கிருதபாரதியின் செயற்பாடுகள் பற்றி அறிய யானும் ஆவலாக உள்ளேன். மதிப்பார். அருண்பிரபு காட்டிய வண்ணம் குறித்த இணையத்தளத்தை சென்று பார்த்தேன். சம்ஸ்கிருத மொழியை பயிற்றுவிக்கிற முயற்சி சிறப்பானது.
ஆனாலும் நான் விரும்புவது எதனை எனில் ஒரே இடத்தில் தமிழும் சம்ஸ்கிருதமும் போதிக்கப்பட வேண்டும். ஒன்று வடமொழி. மற்றையது தென்மொழி. ஒன்றில் ஒன்று பெற்றுயர்ந்தது. ஒன்றோடொன்று இணைந்திருப்பது. ஒன்றோடொன்று நெருக்கமானது. பிரிக்க இயலாத் தன்மையுடையது. இவை இரண்டும் எம்மைப்போன்ற இந்துக்களுக்கு மிக அவசியமான மொழிகள்.
ஆகவே, இரண்டினையும் இணைத்துப் பார்ப்பதும்… இரண்டையும் கற்றுக்கொள்வதும் நமக்கு அவசியமானவை என்று கருதுகிறேன். ஆனாலும் ஒன்று தாய்மொழி.. மற்றையது தந்தைமொழி என்பதை மனங்கொள்வதும் அவசியமானது.
1) சமஸ்க்ருதம் கற்று கொள்ளாவிட்டால் என்ன நஷ்டம் என்று கேட்பவர்களுக்குப் பதில் என்னவென்றால் – தாய்மொழியைக் கற்காவிட்டால் ஏற்படும் நஷ்டத்திற்கு சற்றும் குறைவானதல்ல என்பதே.
2) நம் வேத தர்மத்தின் உண்மைகள் சமஸ்க்ருதத்திலேயே உள்ளது. நாம் அறிவீனர்களாய் இருந்துப் பின் மேக்ஸ் முல்லர் போன்ற அரைகுறை மொழிபெயர்ப்பாளர்கள் சொன்ன கருத்து தான் உண்மையான ஹிந்து மதக் கருத்துக்கள் என்று கற்றறிந்த பலருமே எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
3) சமஸ்க்ருதத்தை ஒழுங்காகப் படித்தால் நம் தர்மம் என்ன சொல்கிறது என்பது எல்லா தரப்பு மக்களுக்கும் புரியும், அப்படிப் புரிந்தால் “ஆனந்தாக்களும்” “பாபாக்களும்” “மஹான்களும்” வந்து தான் நம்மைக் கடையேற்ற வேண்டும் என்பதும் அவர்கள் காலடியில் போய் விழுவது எவ்வளவு மடத்தனம் என்பது தானே புரிந்து போகும். நான் குறிப்பிடுவது போலிகளை மட்டுமே. அவர்கள் போலியா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான வழிமுறைகளும் சமஸ்க்ருத நூல்களிலும் (நம் தமிழ்ச் சித்தர் பாடல்களிலும் கூட உண்டு) ஆதி சங்கரரின் ப்ரஷ்ணோத்தர ரத்ன மாலிகாவிலும் உண்டு. பதஞ்சலி யோக சூத்திரம் ஒன்றைப் படித்தாலே போதும்.
4) இதே கருத்தில் பதியப்பட்ட பதிவு இது – https://www.gnanaboomi.com/what-do-these-eyes-denote
5) என் தாழ்மையான அபிப்ராயம், சமஸ்க்ருதம் கற்றுத் தருவதில் இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் புதிதாகத் தொடங்குபவர்கள் சிறிது நாட்கள் கழித்து ‘இதேதடா பெரிய கஷ்டமா இருக்கும் போலர்க்கே” என்ற மலைப்பிலாழ்த்துவது போன்றே இருக்கிறது.
Instead of expecting others to learn sanskrit, the learned scholars should concentrate on translation of the literature into the other Indian languages.Interested people will always try to learn.