அண்மையில் ஐடி நிறுவனம் ஒன்று, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு புரோகிராமர் வேலை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதில் ஆச்சரியமான உண்மை ஒன்று இருக்கிறது. கணினித் துறையில் புரோகிராமராக நுழைய அந்தக் கல்வியே போதும் என்பதுதான்… தரமற்ற கல்வி ஒரு சுமை. இங்கே கல்வி என்பது பாடப்புத்தகம், அதனைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் இரண்டையும் குறிக்கிறது. இந்தக் கல்விமுறை ஒரு மாணவனுக்குச் சிந்திக்கும் திறனையோ, தன்னம்பிக்கையையோ, தேர்வில் வெற்றி பெற வேண்டிய உழைப்பையோ ஊக்கப்படுத்துவதாகவே இல்லை… ஒரு மாணவர் தனக்கு எந்தக் கல்வித் துறையில் ஆர்வம் என்று எண்ணிப் பார்த்து அதற்காகவெல்லாம் உழைப்பது இல்லை. அப்படி ஒரு குறிக்கோளை அவருக்கு யாரும் சொல்லித் தருவதும் இல்லை, ஊக்கப்படுத்துவதும் இல்லை, தானாகக் கண்டடைவதும் இல்லை. எது சுலபம், எதில் ஏமாற்றலாம் என்பதை நோக்கியே மாணவர்களும் இருக்கிறார்கள்…
View More நமது கல்வித் துறையில் பத்து குறைகள்Author: ஸ்ரீகாந்த்
தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2
தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை, இரண்டு கை போதாது அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பானாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று இன்புறுவர் என்று மங்கல வாழ்த்துரை செய்து திருப்பாவையை முடிக்கிறாள் ஆண்டாள்.
View More தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1
ஆண்டாள் இயல்பாகவே பெண்ணாக இருப்பதால், இறைவனைத் தன் காதலனாக எண்ணி அவனை காதலனாக நினைத்து கசிந்து உருகி பக்தி செய்ய முடிந்தது. இதைக் கண்ட மற்ற ஆழ்வார்களெல்லாம், எவ்வளவு எளிதாக பக்தி செய்து இச்சிறுபெண் கண்ணனை அடைந்து விட்டாள்! பெண்ணாக இருந்தால் இறைவனை எளிதாக அடைந்து விடக் கூடுமோ என்று எண்ணி ஆண்டாளை உதாரணமாகக் கொண்டு அவர்களும் பெண் பாவனையில் கண்ணனைக் காதலித்தல், ஊடல் கொள்ளுதல், பிரிந்து வருந்துதல், தூது விடுதல், மடலூர்தல் என்று விதவிதமாக நாயகி பாவத்தில் கண்ணனை பக்தி செய்து அனுபவித்தனர் போலும்
View More தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1இக்காலத்தில் சமஸ்க்ருத மொழி வளர்ச்சி
இந்திய துணைக் கண்டம் எங்கும் பொதுவான ஒரு மொழியாகவே பல நூறு ஆண்டுகள் இருந்த சமஸ்க்ருதம் பின்னர் கடந்த சில நூற்றாண்டுகளில் அரசாங்க மொழி, பேச்சு மொழி என்ற பயன்பாடுகள் எல்லாம் போய், வெறும் சடங்கு மொழியாக ஆகி விட்டது. சமஸ்க்ருத மொழியின் இன்றைய நிலை என்ன? இது செத்த மொழியாக, சடங்கு மொழியாகத்தான் இருக்கிறதா.. இருந்த இடத்திலிருந்தே எதையும் தெரிந்து கொள்ளும் அளவுக்கு தேடுபவர்களுக்கெல்லாம் அறிவை பொதுவாக அள்ளி வழங்குகிற இணையம் போன்ற தொழில் நுட்பங்கள் பெருகிவிட்ட இந்நாளில் சமஸ்க்ருத மொழி என்ன நிலையை அடைந்திருக்கிறது?
View More இக்காலத்தில் சமஸ்க்ருத மொழி வளர்ச்சிஒழியுமா ஊழலுக்கு ஆதரவு?
பொதுவாகவே ஊழலையும், நேர்மையின்மையையும், சுயநலத்தையும், சுரண்டலையும் அடித்தட்டு மக்களில் ஆரம்பித்து நாட்டு அதிபர் வரை அன்றாட நிகழ்வாக ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம். ஒருவன் செய்யும் குற்றத்தை இன்னொருவன் தட்டிக் கேட்கத் தகுதி இல்லாத அளவு, ஒட்டு மொத்த சமுதாயமும் நேர்மையற்றதாக மாறிக்கொண்டு இருக்கிறது.
View More ஒழியுமா ஊழலுக்கு ஆதரவு?சாமியே சரணம் ஐயப்பா!
இந்திய ஆன்மீக சிந்தனையில், சைவமும் வைணவமும் இரு பெரும் நதிகளாகப் பொங்கிப் பிரவகிக்கின்றன. ஒரே இறைவனை அதாவது பிரம்மத்தை சிவமயமாகவும், விஷ்ணு மயமாகவும் இரு வண்ணங்களில் நமது ஆன்மீக முறைகள் சித்தரிக்கின்றன. இந்த இரு பெரும் நதிகளின் சங்கமமாக ஐயப்பன் இருக்கிறான்…
View More சாமியே சரணம் ஐயப்பா!குமுதம் கட்டுரை
இந்த வார குமுதம் ஜோதிடம் புத்தகத்தில், சிறப்புக் கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. பொதுவாக…
View More குமுதம் கட்டுரைவிழித்தெழு இந்தியா!
நமது நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிற நேரம் இது. இந்த மும்பை தீவிரவாத தாக்குதல் அரசுக்கு மட்டும் அல்ல, சாதாரணப் பொதுமக்களுக்கு கூடப் பல அம்சங்களில் கண்ணைத் திறந்துள்ளது. பாகிஸ்தான் எந்த அளவு பலகீனமாக, தன் குடிமக்களுக்கும், வந்து போகிற வெளிநாட்டவர்க்கும் பாதுகாப்பின்றி இருக்கிறதோ அதே போல்தான் இந்தியாவும் என்று இந்தத் தீவிரவாதிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். வெறும் பத்து இருபது பேர்கள் ஒரு நாட்டையே தன் ராணுவம், கடற்படை, சிறப்புக் காவல்படை என்று என்னென்ன வகை படைகள் வைத்திருக்கிறதோ அவை எல்லாவற்றையும் கொண்டு வந்து நாட்கணக்கில் சண்டையிட வைத்து விட்டார்கள்.
View More விழித்தெழு இந்தியா!யோகம் – ஒரு எளிய அறிமுகம் (பகுதி – 3)
யோகம் என்பது ஏதோ மூச்சு பயிற்சியோ, அல்லது உடற்பயிற்சியோ மட்டும் அல்ல. அது ஒரு ஆன்மீகத் தேடலுக்கான சிறந்த வழிமுறை. யோகம் சனாதன தருமத்தின் ஆணிவேர். இந்த கட்டுரை யோகத்தின் வெவ்வேறு பெயர்களை சொல்லி அவற்றை சுருக்கமாக விளக்க மேற்கொள்ளப்பட முயற்சி மட்டுமே. யோக சாத்திரத்தின் ஒவ்வொரு யோக முறையும் கடலளவு பெரியது. சனாதன தருமத்தில் பங்கு வகிக்கும் எந்த மார்க்கத்திலும், அது முருக வழிபாடாகட்டும், அனுமனின் வழிபாடாகட்டும், சக்தி வழிபாடாகட்டும், வைணவ வழிபாடாகட்டும், எந்த வழிபாட்டிற்கும் அடிப்படையானது யோகம். இதுவே அந்தந்த இஷ்ட தெய்வங்களின் அருளை பெற்றுத்தந்து முக்தி அடைய உதவக் கூடியது.
View More யோகம் – ஒரு எளிய அறிமுகம் (பகுதி – 3)யோகம் – ஒரு எளிய அறிமுகம் (பகுதி – 2)
இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தில் யோகம் என்பது நான்கு பிரிவுகளாகவும், ஒவ்வொரு பிரிவிலும் எட்டு அங்கங்களை கொண்டதாகவும் பார்த்தோம். அந்த எட்டு அங்கங்களை இந்த பகுதியில் சுருக்கமாக பார்ப்போம். அஷ்டாங்க யோக முறையில் ஐந்து பகுதிகள் – அங்கங்கள் பகிரங்கமாக அதாவது உடலை கட்டுப் படுத்துவதும், மூன்று பகுதிகள் அந்தரங்கமாக உள்ளத்தை – மனதை கட்டுப்படுத்தக் கூடிய பயிற்சியுமாக பிரித்து கூறுவர். அதாவது யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம் ஆகியவை பகிரங்கமாகவும் – வெளிப்படையாக உடலை கட்டுப்படுத்தவும்; தியானம், தாரணை, சமாதி ஆகியவை மனதை கட்டுப்படுத்தவும் என பிரிக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றைப்பற்றியும் மிகச் சுருக்கமாக காண்போம்.
View More யோகம் – ஒரு எளிய அறிமுகம் (பகுதி – 2)