வள்ளுவமும் வைணவமும்

[1950களில் ஒரு பள்ளியில் மாணவனின் அனுபவம்]

th_thiruvalluvarவேனிற்கால ஆண்டு விடுமுறை  முடிந்து மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. குத்தாலம் போர்டு ஹைஸ்கூலும் வழக்கம்போல் திறந்தாகிவிட்டது. ஆழ்வார் திருநகரியில் இருந்து விடுமுறை  நாட்களைக் கழித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பவே  மனம் வராமல் வேறு வழியின்றித் திரும்பிவந்தேன். அடுத்த வகுப்புதான் என்றாலும் தமிழ் ஆசிரியர் மட்டும எங்களுக்கு மாறவேயில்லை. திரு. ஞானசம்பந்தம்  அவர்களே ஐந்தாம் பாரத்திலும் தமிழ் ஆசிரியராக வந்தார்.

தமிழ்ப் புத்தகத்தை  ஆவலாகப் பிரித்த எனக்கு என்னவோ ஏமாற்றம்தான். ஒரு சிலம்பை  வைத்துக்கொண்டு வாதாடும் பாடல்கள்.  எனக்குப் புளித்துப்போய்விட்டது. முதல் பாரத்திலிருந்து தொடர்ந்து இதே கதைதான் வந்துகொண்டிருக்கிறது. ‘வாயிலோயே! வாயிலோயே!’  எத்தனை  தரம் கதவைத் தட்டினாலும், எங்கள் நிர்க்கதியைக் கேட்க யாருமில்லை!

திருக்குறளும் அப்படித்தான். வள்ளுவர் உலகிற்கு என்ன செய்தி சொல்கிறார் என்பதைவிட, குறட்களை  மனப்பாடம் செய்து எழுதுவதே திறமையென நிர்ணயிக்கப்பட்டிருந்த காலம் அது. ‘பிற’ என்று முடியும் குறளை எழுதுக, அல்லது ‘உலகு’ என்று முடியும் குறளை  எழுதுக என்று எல்லா  வினாத்தாள்களிலும் ஒரே  மாதிரியான கேள்விகளே  கேட்கப்படும். மிகவும் அலுத்துப்போய்விட்டது. ஒருவழியாகத் தைரியத்தை  வரவழைத்துக் கொண்டு ஆசிரியரிடம் போய்க் கேட்டுவிட்டேன்.

“ஐயா, திருக்குறளை  வேறு விதமாக அணுகிப் பயில முடியாதா?  ஏன் எப்போதும் ஈற்றுச் சொல்லை  வைத்தே  மனனம் செய்து கொண்டிருக்கவேண்டும்?” புதிதாக ஒரு ஜந்துவைப் பார்த்ததுபோல் என் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். சரியாக மாட்டிக் கொண்டோம் என்று நினைத்தேன்; நல்லவேஎளை  ஆசிரியரின் கைகள் பிரம்பினைத் தேடவில்லை. ‘யார்?  நீந்தான் அந்த மாவடுப் பையனா? ராஜகோபாலையங்கார் ஆத்துப் பையன்தானே  நீ? ஐந்தாம் பாரம் படிக்கும் உனக்கு இது போதாதா? இது என்ன வேறு அணுகுமுறை? ஒருவேளை  நீ பசுபதியாரின் கவிதை  இயற்றிக் கலக்கு என்கிற விஷயமெல்லாம் படிக்கிறயா?”  நான் போட்டிருந்த  நாமத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே, ” சரி, ஒண்ணு பண்ணு. வள்ளுவரை  சைவரென்றும் சமணரென்றும் சொல்வாருண்டு. நீ  ஏன் அவருடைய படைப்பில் வைணவக் கருத்துக்களைக் கண்டு தொகுத்து வள்ளுவமும் வைணவமும் என்று  ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை  ஒன்று எழுதிண்டு வா,  பாக்கலாம்”  என்றார். எனக்கு திக் என்றது. இது ஏதுடா  வம்பாப் போச்சே!  வள்ளுவருக்கு நாயனார் என்று கூடப் பெயருண்டே?   பேசாமே  குறட்களை  நெட்டுரு பண்ணிண்டு இருந்திருக்கலாம் என்று தோன்றியது.  என்னை  நானே  நொந்துகொண்டு வீட்டிற்குத் திரும்பினேன்.

திருவள்ளுவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஒருவேளை  அதற்கு உரை  எழுதியவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்று பார்க்கலாம் என்று தோன்றியது. முதலில் பரிமேலழகர் பெயர்தான் நினைவுக்கு வந்தது. இந்தப்பெயரை  நினைத்தவுடன் ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளை  வேண்டிக்கொண்டேன். நீங்கள்தான் காப்பாத்தணும் என்று.

vishnu-lakshmi2

திருக்குறள் ஒருபொது நூல். இது எந்த சமயத்தையும் சார்ந்தது இல்லை. மாலுடன் சம்பந்தப் படுத்தவேண்டுமென்றால், மாலைத்தான் கேட்கவேண்டும், சரி,அது என்ன மாலை? அதுதான் திருவள்ளுவமாலை.

மாலும் குறளாய் வந்தான். இரண்டடியால் உலகை அளந்தான். எனவே  மாலும் வள்ளுவமும் ஒன்றாய் இருக்குமோ?  இந்த சந்தேகம் முன்னர் பரணர் என்ற தமிழ்ப்புலவருக்கும் வந்ததாம். அதை  அவர்அப்படியே  ஒரு வெண்பாவாகப் பாடிவைத்துள்ளார்.

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான்-வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவஎல் லாம்அளந்தார் ஓர்ந்து


இதே  கருத்தைப்   பொன்முடியார் என்ற புலவரும்

கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப-நூன்முறையால்
வானின்று மண்நின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள்

என்று பாடியுள்ளார். சரி, இந்த இரண்டு பாடல்களையும்  வைத்துக்கொண்டு ஆசிரியரிடம் சென்றால், அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார். சொந்த சரக்கு என்ன என்று கேட்பார்! நான் யோசித்துக் கொண்டேயிருந்தேன். முதலில் திருவள்ளுவருக்கு ஒரு நல்ல பெயர் வேண்டும். வள்ளுவர் என்பது அவரது இயற்பெயரா? புத்தகத்தைத் தேடினேன்;  நாயனார், தேவர், நான்முகனார் என்பன பல.  இவையாவும் எனது கட்டுரைக்கு ஏற்றதல்லவே!  என் செய்வது?

இப்படி நினைத்துக்  கொண்டிருக்கும்போதுதான்,  என் தம்பி முகுந்தமாலையை  உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தான்.” ஸ்ரீ  வல்லபேதி,வரதேதி,   தயாபரேதி . . ”  அட. இது என்ன விசித்திரமாக இருக்கிறதே! ஸ்ரீவல்லபா (லட்சுமிக்குப் பிரியமானவனே) என்பதைத் தமிழ்ப்படுத்தினால் திருவல்லபா  அல்லது திருவள்ளுவா என்று திரிபுடன் சொல்லிவிடலாமே  என்று தோன்றியது. முதல் கட்டம் வெற்றி!  திருவள்ளுவரைத் திருமாலுடன் இணைத்தாகி விட்டது.  இனி அடுத்த கட்டம்.

முதல் குறளிலேயே  வெற்றி. அகர முதல எழுத்தெல்லாம்- ஆஹா  இது அப்படியே  கீதா வாக்கியம் – அக்ஷராணாம் அகாரோஸ்மி.  எழுத்துக்களில் நான் அகாரமாய் இருக்கிறேன்.
எனவே  வள்ளுவர் குறிப்பிடும் கடவுள் திருமால்தான்.

அடுத்த குறளிலே  வாலறிவன் என்கிறார். வாலறிவன் என்பதற்கு வடமொழியில் ‘சர்வக்ஞ:’ அல்லதுமுற்றுமுணர்ந்தவன் என்று பொருள் கொள்ளலாம். ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருகின்ற ஒரு நாமம்.

vamana2

அடுத்து ஆறாம் குறளில் ‘ஐந்தவித்தான்’  என்று குறிப்பிடுமிடத்தே,  ஐம்புலன்களை  வென்றவன் அதாவது ஹ்ருஷீகேசன் என்ற திருநாமம் பொருந்துகிறது. இதுவும்திருமாலின் ஒரு திவ்யநாமம்.  ஹ்ருஷீகம் என்றால் இந்திரியங்கள். அவற்றுக்கு ஈசனாய் இருப்பவன் ஹ்ருஷீகேசன்.

ஏழாவது குறளிலே  தனக்கு உவமை  இல்லாதான் என்கிறார். அதாவது ஒப்பில்லாதவன்;  ஒப்பிலியப்பன். தன்னொப்பாரிலப்பன் (திருவாய்மொழி 6-3-9));  ஒப்பார்  மிக்காரை  இலையாய  மாமாயன் (திருவாய்மொழி 2-3-2); வடமொழியில் அதுல:  என்ற திருநாமத்திற்கு உரியவன்.

ஒன்பதாவது குறள். எண்குணத்தான் என்கிற தலைவன் யார்? வடமொழியில் குணப்ருத் என்கிற நாமத்திற்கு உரை  சொல்லிமிடத்தே எல்லாப் பொருள்களையும் தனது குணம் போல தரிப்பவன். இதுவும் சஹஸ்ரநாமத்தில் வருகின்ற திருநாமம்.

ஆமாம். இப்படியே  எல்லா காட்டுகளும் கடவுள் வாழ்த்து என்கிற அதிகாரத்திலிருந்து எடுத்துச் சொன்னால், தமிழ் ஆசிரியர் ஏற்றுக் கொள்வாரா?  நிச்சயம் இல்லை. சோம்பல் பார்க்காமல் எல்லா  அதிகாரங்களையும் படிக்க வேண்டும்,  சோம்பலை  வெறுக்கும் அதிகாரம் மடியின்மை. இங்கே போய் தேடினால்,  குறள்எண்610 பளிச்சென்று என்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது.

மடியிலா  மன்னவன் எய்தும்; அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

இங்கே  அடியளந்தான் என்ற பதத்தால் திருமாலை  நேராகவே  குறிப்பிட்டு விடுகிறார் வள்ளுவர். திருவிக்கிரமன் என்பதும் திருமாலின் திவ்யநாமம்,

ஆஹா! நல்ல மேற்கோள்கள் கிடைத்தனவே. எனக்கு நிலை  கொள்ளவில்லை. பட்டென்று ஒரு சிந்தனை. உடனே  நிலையாமை என்கிற அதிகாரத்தைப் புரட்டினேன்.

vamana

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.
( குறள் எண் : 338 )

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
(குறள் எண்: 339)

இறப்பு துக்கத்தையும், பிறப்பு தூங்கி விழிப்பதையும் போன்றவை.

இதைப் படித்தவுடன் பகவத் கீதையில் கண்ணன் சொல்வது இந்தக் குறட்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா  விஹாய
. . நவானி க்ருஹ்ணாதி நரோபராணி
ததா  சரீராணி விஹாய ஜீர்ணானி
. . அன்யானி ஸன்யாதி நவானி தேஹி
(2-22)

கடைசியாக,, குறள் எண்1103 புணர்ச்சி மகிழ்தல் எனப்படும் அதிகாரம்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்?
தாமரைக் கண்ணான் உலகு

தாம் காதலிக்கும் மாதரின் தோள்களைத்  தழுவிக்கொண்டு உறங்குவது போன்ற இன்பம் வைகுந்ததிலும் இல்லை என்று திருமால் வசிக்கும் வைகுந்தத்தைக் குறிப்பிடுகிறார்.  தாமரைக்கண்ணனாகிய அரவிந்தாக்ஷன், புண்டரீகாக்ஷன் என்பன ஸஹஸ்ரநாமத்தில் வரும் திருநாமங்கள்.

இந்த எடுத்துக் காட்டுகளை  வரிசைப் படுத்தி அதற்கு விளக்கமும் எழுதி, ஆசிரியரிடம் காண்பித்தேன்.  திருவள்ளுவருக்கு வழிபடு கடவுளும் குறளுக்கு ஏற்புடைக்கடவுளும் திருமால் என்பது பேரறிஞர் கண்ட பேருண்மை என்று அறுதியிட்டு முடித்திருந்தேன். படித்துப் பார்த்துவிட்டு, ‘கருத்தும் நடையும் மிக நன்று. அறவாழி அந்தணன் என்று வருவதைக் கொண்டு சமணர் என்பாருண்டு’. நீ  என்ன சொல்கிறாய்?  என்றார். ‘ஐயா!,  நம்மாழ்வார் திருவாய்மொழியில் திருமாலை,’அறவனை ஆழிப்படை அந்தணனை’ என்றுதானே சுட்டுகிறார். எனவே, இப்படிப்பார்த்தாலும், திருமாலைத்தான் குறிக்கிறது’.

பிறவித் துயரற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்
அறவனை யாழிப் படையந் தணனை
மறவியை யின்றி மனத்துவைப் பாரே

‘ஆங்!  அப்படியா?  இலக்குமியைப் பற்றிப் பல இடங்களிலே  சொல்கிறாரே, ஏன் எழுதவில்லை?;  போய் நாளைக்கு எழுதிண்டு வா!’ என்றார்.

****************

எங்கள் தமிழ் ஆசிரியர் பணித்திருந்த வண்ணம் திருக்குறளில் இலக்குமியைப் பற்றிக் குறிப்பிடும் கருத்துகளைத் தொகுக்கமுயன்றேன். ஸ்ரீ, பூ, நீளா  தேவி ஸமேத விஷ்ணுவான படியாலே, தேடுதல் இம்மூவரையும் பற்றியதாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

பூமாதேவியின் முக்கிய குணம் பொறுமை  அல்லவா? முதலில் இந்தக்குணம் தேவை. க்ஷமயா ப்ருதிவீ ஸம: என்று இராமனின் குணவிஷே சத்தை  வால்மீகி எடுத்துச் சொல்வதுபோல், பொறையுடைமை  அதிகாரத்தில், ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என்று முதல் குறளில் தொடங்குகிறார். பின்னர் அடுத்துவரும் அழுக்காறாமையில், பொறாமையுள்ளவனைத் திருமகள் நீங்கிவிடுவாள் என்றும் நிலை  நாட்டுகிறார். இதுமட்டுமன்று. மூதேவி வந்து சேர்வாள் என்றும் எச்சரிக்கையும் விடுக்கிறார்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

இவ்வாறு நீங்கிய திருமகள் எங்கே குடியிருப்பாள் என்ற வினா  தொடர்ந்து வருவது நியாயந்தானே! அதற்கும் விடை தருகிறார்  ஸ்ரீ வல்லபர்.

vishnu-lakshmi

தருமம் இது என்று உணர்ந்து, பிறர்பொருளை  விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் அவர் தகுதியை  அறிந்து அவரிடம் சேர்வாள்.

அறனறிந்து வெஃகா  அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே  திரு


முயற்சி திருவினை  ஆக்குமே!  மேலும் தேடிப்பார்க்கலாம் என்று புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். முயற்சி இன்றிச் சோம்பி இருப்பாரையும் விட்டு விலகிவிடுவாள் இலக்குமி. மூதேவி குடிகொள்ளுவாள்.

மடியுளான் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

அடுத்து நீளாதேவியைப் பற்றி எங்கே  குறிப்பிடுகிறார்? “குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர்” ( திருவிருத்தம் – 3 ) என்கிறார் நம்மாழ்வார். நீளாதேவியான நப்பின்னை மற்ற இருவரோடு (திருமகள் , மண் மகள்)  இணைந்து,  இம்மூவரும், திருமாலின் நிழல் போல்வனர் என்பதால் இம்மூவருமே  ஒருவர்தான் என்றும் காட்டுகிறது. நிழல் ஒன்று தான் இருக்க முடியும். அந்த நிழலை மூன்று பெயர்களில், மூன்று குணங்களில் மூன்று தேவியராகப் பார்க்கிறோம் என்றும்  தெரிகிறது. இதனால்தானோ நீளாதேவியைப் பற்றிய செய்தி திருக்குறளில் இல்லாமல், நிழலாகத் திருவள்ளுவமாலையில் கிடைக்கிறது?

நீளாதேவியைப் பற்றி வள்ளுவத்தில் ஏதானும் கிடைக்காதா  என்று ஏங்கிக்கொண்டிருக்கையில், திருவள்ளுவமாலையில் ஒருபாடல் கிடைத்தது. இந்தத் தொகுப்பில் பல்வேறு காலக்கட்டத்தில், பல்வேறு புலவர்கள் திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களுள் ‘நல்கூர் வேள்வியார்’ என்னும் புலவர் கூறியுள்ள செய்தியில், நப்பின்னையின் இயற்பெயர் இடம் பெற்றுள்ளது.

உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப – இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு.

இதன் பொருள், ” உப்பக்கம் நோக்கி, அதாவது எருத்தின் முதுகு நோக்கி (உப்பக்கம் – முதுகு), உபகேசியை மணந்தவன் வட மதுரைக்கு ஆதாரம் போன்றவன். (கண்ணன்.) அதுபோல மாதானுபங்கி எனப்படுகின்ற குற்றமற்ற செந்நாப் போதார் எனப்படும் திருவள்ளுவர் தென் மதுரைக்கு ஆதாரமானவர்.”

வள்ளுவர் திருமாலையும், இலக்குமியையும் குறிப்பிட்டுச் சொல்வதால், கவிசாகரப் பெருந்தேவனார், திருக்குறளை மிக உயர்வாகப் பின்வருமாறு ஒப்பிடுகிறார்.

பூவில் சிறந்தது தாமரை; பொன்னில் சிறந்தது சாம்புனதம்;  பசுவில் சிறந்தது காமதேனு; ஆனையில் சிறந்தது ஐராவதம்; தேவர்களில் திருமால்; பாடல்களிலே  வள்ளுவரின் குறள் என்று முடிக்கிறார்.

பூவிற்குத் தாமரையே; பொன்னுக்குச் சாம்புனதம்
ஆவிற்கு அருமுனியா. ஆனைக்கு அமரரும்பல்
தேவில் திருமால், எனச்சிறந் தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா

காரிக்கண்ணனார் என்பார், வள்ளுவரை நான்முகனுக்குச் சமமாகச் சொல்கிறார். திருமாலையும், இலக்குமியையும் அருகிருந்து அறிந்தார் கொப்பூழ் எழுகமலத்தே  அமர்ந்த நான்முகனைத் தவிர வேறு யார் உளர்?

ஐயாறும்,  நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப்-பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தா  மரைமேல் அயன்

இந்தக் கட்டுரையைப் படித்த ஆசிரியருக்கு மிக்க மகிழ்ச்சி. மேல்முகட்டைப் பார்த்தவாறு, மோவாயைத் தடவி விட்டுக்கொண்டார். எனக்கு ஒரே உதறல். இன்னும் என்னவெல்லாம் எழுதச் சொல்வாரோ?

18 Replies to “வள்ளுவமும் வைணவமும்”

  1. மிக நன்று. நப்பின்னையைப் பற்றி குறள் புகழ்வோர் பாடலில் இருந்து சொல்லியுள்ளீர்கள். தேடினால் ஒருவேளை திருக்குறளிலும் கிடைக்குமோ?ஸ்ரீதேவி மற்றும் பூதேவி பற்றி பாடிய செந்நாப்போதார் நப்பின்னையப் பற்றியும் பாடியிருப்பாரோ?

    \\\\\\\\\\\பூவில் சிறந்தது தாமரை; பொன்னில் சிறந்தது சாம்புனதம்; பசுவில் சிறந்தது காமதேனு; ஆனையில் சிறந்தது ஐராவதம்; தேவர்களில் திருமால்; பாடல்களிலே வள்ளுவரின் குறள் என்று முடிக்கிறார்.\\\\\\\\\\\\\

    மஹாசயா,

    புஷ்பேஷு ஜாதி
    புருஷேஷு விஷ்ணு
    நாரீஷு ரம்பா
    நகரேஷு காஞ்சி

    என்றும் வசனமுண்டு.

    \\\\\\\\\இந்தக் கட்டுரையைப் படித்த ஆசிரியருக்கு மிக்க மகிழ்ச்சி. மேல்முகட்டைப் பார்த்தவாறு, மோவாயைத் தடவி விட்டுக்கொண்டார். எனக்கு ஒரே உதறல். இன்னும் என்னவெல்லாம் எழுதச் சொல்வாரோ?\\\\\\\

    ஆசார்யேஷு ஸ்ரீஞானசம்பந்தம்
    சிஷ்யேஷு சௌந்தரம்

    என்று சேர்க்கலாம் போல இருக்கிறது. இப்படியெல்லாம் கூட உன்னதமாக தமிழ் கற்பித்து இருக்கிறார்களே என்று உகப்பாக இருக்கிறது.

  2. ஐந்தாம் ‘பாரத்’திலேயே இத்தனை தமிழ் அறிவா?
    கி. வெ. பதி.

  3. அருமையான மகிழ்ச்சி தரும் அதே சமயத்தில் எளிமையும் கூடிய நடை. இவரிடமிருந்து இன்னும் பல கட்டுரைகளை எதிர்பார்கிறேன்.

  4. சௌந்தர் மிக நன்றாக அலசியுள்ளார் . அவர்தம் தமிழ் ஞானம் ரசிப்பதாக இருக்கிறது . வாழ்க அவர் பணி, பக்தி பரவட்டும் .

  5. திருவள்ளுவர் ஒரு சித்தர் அவர் உருவ வழிபாட்டை கூறினார் என்பது இக்கட்டுரை ஆசிரியரின் அறியாமையையே காட்டுகிறது. இவரது வைணவ சம்பிரதாயத்திற்கு வலு சேர்க்க திருவள்ளுவரை துணைக்கு அழைத்துக்கொள்வதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. உருவமற்ற இறைவனை உருவமாக படைத்து சடங்குகளில் உழலும் மனிதர்களால் எப்படி திருவள்ளுவரின் ஞானத்தை உணர முடியும்.

    மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
    ஞாலம் முழுதும் நயந்தளந்தான்-வாலறிவின்
    வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
    உள்ளுவஎல் லாம்அளந்தார் ஓர்ந்து

    இதில் மாலும் குறளாய் வந்து என்பது திருமாலும் திருக்குறளைப் போல சிறிய உருவாக வந்து அதன் பொருள் போல உலகை அளந்தார் எனப் பொருள்படும் மேலும் வாலறிவன் என்பது இறை அறிவு அதாவது தன் ஞானத்தால் இறையை உணர்ந்து, உலகை உணர்ந்து உலக மக்கள் உய்யும் பொருட்டு ஈரடியாக பாழ வைத்தார் என்றே எழுதி உள்ளார்.

    காமாலை கண்ணனுக்கு காணும் பொருள் எல்லாம் வேறு விதமாய் தோன்றுவது போல இவருக்கு திருவள்ளுவரின் ஞானமும் வைணவ ஞானமாக தெரிகிறது போலும்.

    நக்கினம் சிவம்

  6. திருக்குறளும் திருஞானசம்பந்தர் தேவாரமும் திருக்குறளும் திருஞானசம்பந்தர் தேவாரமும்
    திருமதி. கோமதி சூரியமூர்த்தி திருமதி. கோமதி சூரியமூர்த்தி
    தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் உலகம் போற்றும் ஒப்பற்ற பொதுமறையாகும். திருஞானசம்பந்தரின் தேவாரம் சைவ உலகம் போற்றும் திருமறையாகும்.
    திருக்குறளின் காலம் பற்றிச் சங்க இலக்கியங்கட்கு முன்னர்த் தோன்றியது என்றும், பின்னர்த் தோன்றியது என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. திருஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு. அவருடைய பாடல்கள் சைவத்திருமுறைகளுள் முதல்முன்று திருமுறையாகத் தொகுககப்பட்டது கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் ஆகும்.
    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலியோர் அருளிச் செய்த பாடல்களைத் தேவாரம் என்ற பொதுப்பெயரால் அழைப்பர். இவர்களுடைய நூல்கள் மூவர் தமிழ் எனப் போற்றப்படுகின்றது. திருக்குறளும் மூவர்தமிழும் ஒத்த பொருளுடையன என ஒளவையார் தம் நீதிநூலில் கூறியுள்ளார்.
    ‘தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
    மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
    திருவாசகமும் திருமூலர் சொல்லும்
    ஒரு வாசகம் என்று உணர்”
    என்பது ஒளவையார் வாக்கு. இவ்விரு நூல்கட்குமுள்ள ஒப்புமைப் பகுதிகள் பலவேறு நோக்கில் இவ் ஆய்வுக் கட்டுரையில் ஆராய்ந்து கூறப்படுகின்றன.
    வேதம்
    ‘செய்யாமொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
    பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே” திருவள்ளுவமாலை, செய்யுள், 23)
    என்று வெள்ளிவீதியார் கூறுகின்றார். இங்குச் ‘ செய்யாமொழி என்றது வேதத்தைக் குறிக்கும். வேதமும், திருக்குறளும் பொருளால் ஒன்றே என உணர்த்தப்படுவதால், ஆன்றோர்கள் திருக்குறளை ‘உத்தரவேதம்” என அழைக்கலாயினர். பின்தோன்றிய வேதம் எனப் பொருள் ( உத்தரம் – பின்).
    சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தரை ‘வேதம் தமிழால் விரித்தார்” (திருஞானசம்பந்தர், செ. 289) எனப் போற்றுகிறார். எனவே திருஞானசம்பந்தர் தேவாரமும் ‘தமிழ்வேதம்” எனப் போற்றப்படும் சிறப்புடையது என்பது புலனாகும்.
    எழுதுமறை எழுதுமறை வேதம் ஏட்டில் எழுதப்படாது வாய்மொழியாகவே ஒதப்பட்டு வந்த காரணத்தினால் அதனை ‘எழுதாக்கிளவி” என அழைப்பார். திருக்குறளைக் கோதமனார் என்னும் புலவர்,
    ‘ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப்
    போற்றி உரைத்து ஏட்டின் புறத்து எழுதார் – ஏட்டெழுதி
    வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாரைச்
    சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று”
    (திருவள்ளுவமாலை, செ. 15)
    என்று கூறுவதால் திருக்குறள் எழுதுமறை எனப் போற்றப் படுகின்றது.
    சேக்;கிழாரும் திருஞானசம்பந்தரை, ‘வண்டமிழால் எழுதுமறை மொழிந்த பிரான்” (திருஞா. புராணம், செ. 260) என்று போற்றவதால் திருஞானசம்பந்தர் தேவாரமும் எழுதுமறை என ஆன்றோர்களால் போற்றப்பட்டு வருகின்றது.
    சம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்கள் சம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்கள்::::அகரமுதல அகரமுதல அகரமுதல:::: திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்களாகப் பல இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.
    முன்னோர் கூறிய பொருளை அவர்தம் சொல்லாமல் எடுத்துக் கூறுதலே மேற்கோள் எனப்படும்.
    திருவள்ளுவர் இறைவனை அகர எழுத்துக்கு ஓப்பிட்டு,
    ‘அகர முதல எழுத்தெல்லாமல் ஆதி
    பகவன் முதற்றே உலகு” (கடவுள் வாழ்த்து, 1)
    என்று கூறுகிறார். திருஞானசம்பந்தர்,
    ‘அகரமுதலானை அணி ஆப்பனூரானை” (1:88:5) என்று கூறுகின்றார்.
    எண்ணும் எழுத்தும் கண் எண்ணும் எழுத்தும் கண்
    ‘எண் என்ப ஏனை ஏழுத்தென்ப இவ்இரண்டும்
    கண் என்ப வாழும் உயிர்க்கு” (குறள், 392)
    என்கின்றார் வள்ளுவர். திருஞானசம்பந்தரும்,
    ‘எண்ணும் ஒரெழுத்தும் இசையின் கிளவி தேர்வார்
    கண்ணும் முதலாய கடவுள்” (2:170:4)
    என்கின்றார்…. ஈத்துவக்கும் இன்பம ஈத்துவக்கும் இன்பம::::; அருளாளர்கள் தம் செல்வத்தை வறியவர்கட்குக் கொடுத்து, அதனால்
    அவர்கள் அனுபவிக்கும் இன்பத்தினைக் கண்டு தாமும் மகிழ்வர். இவ்வாறு ஈவதால் எய்தும் இன்பத்தினை ‘ஈத்துவக்கும் இன்பம்” என்பர்.
    தமது செல்வத்தைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து போகின்ற கொடியவர், வறியவர்க்குக் கொடுத்து அவர்கள் மகிழ்வதால் தமக்கு உண்டாகும் இன்பத்தை அறிய மாட்டார்கள்.
    ‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன் கணவர்” (குறள், 228) என்கின்றார் வள்ளுவர்.
    ஈத்துவக்கும் இன்பத்தைத் திருஞானசம்பந்தர்
    ‘ இன்மையால் சென்றிரந்தார்க்கு இல்லை என்னாது ஈத்துவக்கும்
    தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே” (2:178:9)
    என்று ஆக்கூர் அருளாளர்களின் ஈகைச் சிறப்பைப் போற்றும்போது குறிப்பிடுகின்றார்.
    சலத்தால் பொருள் செய்யாமை: சலத்தால் பொருள் செய்யாமை: குற்றமற்ற தம்குலத்து மரபோடு ஒத்து வாழக் கருதுபவர்கள் வறுமை வந்துற்றபோதும், தம் குலத்துக்குப் பொருந்தாத தொழில்களைச் செய்யார். இதனை வள்ளுவர்,
    ‘சலம் பற்றி சார்பில் செய்யார் மாசற்ற
    குலம் பற்றி வாழ்தும் என்பார்” (குறள், 956)
    என்கின்றார். தீயவழியில் பொருள் ஈட்டக்கூடாது என்பதை ஒமாம்ப+ர் சான்றோர் செயலால்,
    ‘ சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையால் மிக்க உலப்பில் பல்புகழார் ஓமாம்புவிய+ர்” (3:380:5)
    என ஞானசம்பந்தர் அறிவுறுத்துகின்றார்.
    சொல்லாட்சிகள் சொல்லாட்சிகள்: : : திருக்குறளில் காணப்படும் சொல்லாட்சிகள் சில, எப்பொருளில்
    திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளனவோ அப்பொருளிலேயே அச்சொற்கள் திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் பயிலப்பட்டுள்ளன. ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் இக்கட்டுரையில் காட்டப்படுகின்றன.
    ஈரம் ஈரம் —- அன்பு அன்பு அன்பு:::: அன்போடு கலந்து வஞ்சனை இல்லாது அறத்தை உணர்ந்தாரது வாயினின்று வரும் சொற்களே இன்சொற்கள் எனப்படும்.
    ‘இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
    சொற்பொருள் கண்டார் வாய்ச்சொல்” (குறள். 91)
    என்கிறார் வள்ளுவர். இங்கு ‘ஈரம்” என்பது அன்பு எனப் பொருள்படும்.
    ‘ஈரம் ஏதும் இலனாகி எழுந்த இராவணன் (2:141:8)
    என்ற திருஞானசம்பந்தர் பாடலடியில் ‘ஈரம்” என்ற சொல் அன்பு என்ற பொருளில் பயிலப்பட்டுள்ளதைக் காண்க.
    படிறு படிறு —- பொய் பொய் பொய்::::கள்ள மனமுடையானின் பொய் ஒழுக்கத்தைப் பிறர் அறியவில்லை என்றாலும். அவனது உடம்பில் கலந்துள்ள ஐந்து ப+தங்களும் கண்டு தம்முள்ளே ஏளனமாகச் சிரிக்கும்.
    ‘வஞ்சமனத்தான் படிற்று ஒழுக்கம் ப+தங்கள்
    ஐந்தும் அகத்தே நகும்” (குறள்.271)
    படிற்று ஒழுக்கம் என்பதில் ‘படிறு” என்றது பொய் எனப் பொருள்படும்.
    படைக்கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமான் பொய்யாகப் பலியேற்பதுபோலப் பிரமக பாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களில் சென்று பலியேற்றுண்ணும் கள்வன் என்ற பொருளில்.
    ‘படையிலங்கு கரம் எட்டுடையான் படிறாகக் கலனேந்திக்
    கடையிலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன்” (1:3:2)
    என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உலகமெல்லாவற்றையும் தமக்கு உடைமையாகக் கொண்ட இறைவன் பலி கொண்டு உண்டான் என்பது பொருந்தாது ஆதலின் அஃது அவருக்கு விளையாட்டு@ உண்மையன்று என்பது பொருள். இங்குப் ‘படிறு” என்றது பொய் எனப்பொருள்படும்.
    உடுக்கை – ஆடை ஆடை:::: ‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள். 788)
    என்ற குறளில் உடுக்கை என்பது ஆடையைக் குறிக்கும்.
    உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களை. ‘உண்டு உடுக்கை விட்டார்கள்”
    (3:295:9) என்று சம்பந்தர் குறிப்பிடுவதில் உடுக்கை என்பது ஆடை எனப்பொருள்படுதல் காண்க.
    வெறி நாற்றம் வெறி நாற்றம் —- நறுமணம் நறுமணம் நறுமணம்
    ‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
    வேல் உண்கண் வேய்த்தோள் அவட்கு” ( குறள் 1113) மூங்கில் போலும் தோள்களை உடையளுக்கு உடல்நிறம். தளிர் நிறமாகும். பற்கள்
    முத்தாகும். இயல்பான மணம் நறுமணமாய் இருக்கும். மையுண்ட கண்கள் வேற்படையாகும்
    என்பது பொருள். இக்குறளில் ‘வெறிநாற்றம்” என்றது மணம் நறுமணத்தைக் குறித்தது.
    ‘வெறியார் மலர்த் தாமரையான்” (1:39:9)
    ‘நாற்றமலர் மிசை நான்முகன்” (1:116:9)
    என்ற திருஞானசம்பந்தர் பாடலடிகளில் ‘வெறி, நாற்றம்” என்பன நறுமணம்
    எனப்பொருள்படுதல் காண்க.
    திருக்குறள் கருத்துகள் பொதிந்துள்ளமை திருக்குறள் கருத்துகள் பொதிந்துள்ளமை:::: ‘கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார்” (குறள்,
    356) என்பதில் கற்று – என்றது மெய்நூல்களைக் கற்றலைக் குறிக்கும். கற்று என்பதற்கு அனுபவமுடைய தேசிகர்பால் கேட்டு என்று பரிமேலழகர் உரை கூறுவார்.
    மெய்ந்நூல்களைக் கற்றும், கேட்டும், மெய்யுணர்வு பெற்றவர்களே பெரியார் என்பதைத் திருஞானசம்பந்தரும்,
    ‘கற்றல் கேட்டல் உடையார் பொரியார்” (1:1:1)
    என்று கூறுகின்றார்.
    கற்றலின் பயன் கற்றலின் பயன்:::: கற்றலின் பயன் கடவுளின் திருவடிகளை வழிபடுதலாகும்.
    ‘கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன்
    நற்றாள் தொழா அர் எனின்” (கடவுள் வாழ்த்து,2)
    என்ற கருத்தும்,
    ‘கற்றவர் தாம் தொழுதேத்த நின்றான்” (1:5:9)
    ‘கற்று முற்றினார் தொழும் கழுமலம்” (2:234:11)
    என்ற திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலடியில் ‘பொய்யகத்து ஐயுணர்வு எய்தி” என்றது
    பொய்ப் பொருட்கள் மீது நிலையில்லாத உலகப் பொருட்கள் மீது செல்லும் அவாவை அடக்கி எனப் பொருள். ‘மெய்தேறினார்” என்றது சிவனே பரம் பொருள் எனத்தெளியும்
    மெய்யுணர்வை உணர்த்திற்று.
    வேளாளர்கள் தாளாளர்கள் வேளாளர்கள் தாளாளர்கள்
    ‘தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
    வேளாண்மை என்னும் செருக்கு” (குறள், 613)
    என்ற குறளும்,
    ‘வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர்” (2:178:3)
    என்ற திருஞானசம்ந்தர் பாடலடியும் ஒப்பிட்டுக் காண இன்பம் உண்டாகும்.
    அறக்கருத்துக்களில் ஒப்புமை அறக்கருத்துக்களில் ஒப்புமை::::திருக்குறள் அறநூல் என்பது உலகோர் அறிந்த உண்மை.
    திருஞான சம்பந்தர் தேவாரம் பக்தி உணர்ச்சியை எழுப்பி இறைவனைப் போற்றும் தேத்திர நூலாகும். இப்பக்தி நூலிலும் திருக்குறளுக்கு ஒப்பான அறக்கருத்துக்கள் பல இடங்களில் ஊடுருவிச் செல்கின்றன.
    புறங்கூறாமை புறங்கூறாமை:::: ஒருவன் அறத்தை போற்றாது தீய செயல்களைச் செய்தொழுகுபனானாலும்@ அவன் புறங்;கூறாதவன் என்று மற்றவர் சொல்லும்படி நடத்தல் நல்லது என்கின்றார் வள்ளுவர்
    (குறள், 181). ஒருவன் பிறரால் பெருமதிப்புப் பெற வேண்டுமானால் மற்றவர்களின்
    நற்செயலகளையே பிறரறியச் சொல்ல வேண்டும். அவர்களின் சிறுமையைப் பிறரிடம் சொல்லாது காக்க வேண்டும் என்று குமரகுருபரர் அறிவுறுத்துவார் (நீதிநெறிவிளக்கம், 19).
    நல்லவர்கள் ஒருவனுடைய நற்செயல்களையே பேசுவர். பொல்லாதவர்’களே புறங்கூறுவர் என்பதையும், அறியாமையுடையவர்கள் அதனைப் பலரிடமும் பரப்பிப் பழி உண்டாக்குவதையும்,
    ‘நல்லார் அறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
    அல்லார் அலர் தூற்ற” (1:84:10)
    என திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இங்கு ‘அறம’ ; என்றது நற்செய்கைகளைக் குறித்தது. புறம்பேசுதல் எவ்வளவு தவறோh, அவ்வளவு தவறு புறம் கூறுதலைக் கேட்பதும். இதனைத் திருஞானசம்பந்தர், ‘செவித்தொகைகளால் யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள் தாமே” (2:251:4) என்பதால் குறிப்பாகப் புலப்படுத்துகிறார்
    எனலாம்.
    பயனில சொல்லாமை பயனில சொல்லாமை:::: பயனில்லாத சொற்களைப் பலமுறையும் பேசுகின்றவனை மனிதன் என்று சொல்லாதீர்கள. அவன் மக்களுள் பதர் எனக் குறிப்பிடுகின்றார். வள்ளுவர் (குறள்,
    196).
    ‘பேச்சினால் உனக்கு ஆவது என் பேதைகாள்” (2:142:2) என்பதால், சிவசம்பந்தமில்லாத அவப்பேச்சால் ஒரு பயனுமில்லை. அவ்வாறு பேசுபவர்கள் அறிவிலிகள் என அறிவுறுத்துகின்றார் திருஞான சம்பந்தர்.
    ‘சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்” (குறள், 200) என்று வள்ளுவர் கூறுகிறார்.
    ‘பெற்றம் அமரும் பெருமானை அல்லால்
    பேசுவது மற்றோர் பேச்சிலோமே” (1:5:9)
    என்பதால் மெய்யுணர்வு பெற்றவர்கள் இறைவனைப் பற்றிய பேச்சு அல்லாமல் வேறு பயனில்லாத வீண்பேச்சுப் பேசமாட்டார் எனத் திருஞானசம்பந்தர் அறிவுறுத்துகிறார்.
    சிவநெறிக் கொள்கைகளில் ஒப்புமை சிவநெறிக் கொள்கைகளில் ஒப்புமை:::: சிவநெறிக்கொள்கைகள் கூறும் இறைவன், உயிர்,
    உலகம் என்ற முப்பொருட்கள் பற்றிய கருத்துக்களில் இவ்விருநூல்களுக்குமிடையேயான
    ஒப்புமையான கருத்துக்கள் சில இப்பத்தியில் ஆராய்ந்து கூறப்படுகின்றன.
    இறைவன் இறைவன்:::: வள்ளுவர் இறைவனை ‘ஆதிபகவன்” (கடவுள் வாழ்த்து,) எனக் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரும்,
    ‘ஆதி பாதமே ஓதி உய்ம்மினே”
    ‘பரமன் பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே” (1:67:4)
    என இறைவனைக் குறிப்பிடுகின்றார்.
    வள்ளுவர் இறைவனை ‘வாலறிவன்” (கடவுள் வாழ்த்து, 2) எனக் குறிப்பிடுகின்றார்.
    வாலறிவன் என்றால் தூய அறிவினன், நிறைந்த ஞானமுடையவன் எனப் பொருள்.
    திருஞானசம்பந்தரும், ‘ஞானத்திரளாய் நின்ற பெருமான்” (1:69:3) என இறைவனைப்
    போற்றுகின்றார்.
    திருவள்ளுவ் இறைவன் அன்பர்களின் நெஞ்சமாகிய தாமரைமலரில் வீற்றிருப்பவன் என ‘மலர்மிசை ஏகினான்” (குறள், 3) என குறிப்பிடுவதும், திருஞானசம்பந்தர் ‘மலர்மிசை யெழுதரு பொருள்” (1:21:5) என்று இறைவனப் போற்றுவதும் ஒப்புநொக்கத்தக்கது.
    திருவள்ளுவர் இறைவனைப் ‘பொறிவாயில் ஐந்தவித்தான்” (குறள், 6) என்று குறிப்பிடுவது போலத் திருஞான சம்பந்தரும்,’புலன்கள் வென்றவன் எம் இறைவன்” (3:319:7) என இறைவனைப் போற்றுகின்றனர்.
    இறைவனுக்கு ஒப்பாக எவரையும் கூற முடியாது ஆதலால் வள்ளுவர், ‘தனக்குவமை இல்லாதவன்” (குறள், 7) என்று குறிப்பிடுவது போலத் திருஞானசம்பந்தரும் ‘தன்னேர்
    பிறரில்லான்” (2:198:3) எனப் போற்றுகின்றார்.
    இறைவன் அறக்கடலாக விளங்குவதை வள்ளுவர் ‘அறவாழி” ((குறள், 8) என்கின்றார்.
    திருஞானசம்பந்தரும் இறைவன் அறவடிவினன் என்பதை அறிவுறுத்துகின்றார் (1:9:2, 2:199:11).
    இறைவனின் குணங்கள் இறைவனின் குணங்கள்:::: இறைவனை ‘எண்குணத்தான்” (குறள், 9) என வள்ளுவர்
    குறிப்பிடுகின்றார். தன்வயத்தனாதல் (சுதந்தரமுடையவன்) தூயஉடம்பினனாதல்,
    இயல்பாகவே பாசங்களை நீக்கியவன், இயற்கை உணர்வினன், முற்றுணர்வினன்,
    பேரருளுடையவன், முடிவிலாற்றலுடையவன், வரம்பிலின்பமுடையவன் என எண்குணங்களைப்
    பரிமேலழகர் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரும் இறைவன் எண்குணத்தினன் எனக்
    குறிப்பிடுகின்றார் (1:131:1)
    உயிர்கள் உயிர்கள் உயிர்கள்:::: இவ்விருநூல்கட்கும் உயரிகள் பல என்பதில் உடன்பாடு உண்டு (குறள், 322:
    திருஞானசம்பந்தர் தேவாரம், 1: 53:2, 1:63:4). உயிர் இவ்வுடம்பிற்கு வேறாய் உள்ளது என்பதும், அது தான் செய்யும் வினைக்கீடாக வேறுவேறு பிறப்புக்களுள் புகுந்து உழன்று வரும் என்பது வள்ளுவர் கருத்து. அவர்,
    ‘குடம்பை தனித் தொழியப் புட்பறந்தற்றே
    உடம்போடு உயிரிடை நட்பு” (குறள், 338) என்கிறார். இதனால் புள் (பறவை),
    குடம்பையின் (முட்டை அல்லது கூடு) வேறாயினாற்போல உயிர் உடம்பின் வேறாயுள்ளது
    என்பது பெறப்படும். திருஞானசம்பந்தரும் ‘உடல் வரையின் உயிர்” (3:363:1) என
    உடல்வேறு, உயிர்வேறு என உணர்த்துகிறார்.
    ‘உறங்குவது போதும் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு” (குறள், 339)
    என்பதால் உறக்கமும், விழிப்பும் மாறி மாறி வருதல் போல, உயிர்கட்கு இறப்பும், பிறப்பும்
    மாறி மாறிவரும் என மறுபிறப்பு உண்மை பெறப்படும். திருஞான சம்பந்தரும் மறுபிறப்பு
    பற்றிக் கூறுகின்றார் (2:182:1, 3:353:9).
    பாசம் பாசம்::::ஆணவம், கன்மம், மாயை முதலியன பாசம் என்ற சொல்லால் சிவநெறிக்
    கொள்கைகளில் குறிப்பிடப்படும். ‘யான எனது என்னும் செருக்கு” (குறள், 346) என்பதில்
    ‘செருக்கு” என்றது ஆணவத்தைக் குறிக்கும். இவ் ஆணவமே உயர்கள் இறைவனை உணரா வண்ணம் அவற்றின் அறிவை மறைக்கின்றது. இந்த மறைத்தல் சக்தி காரணமாக அஃது இருள் எனப்படும். ஆணவமலச் சேர்க்கை காரணமாக உயிர்கள் செய்யும்
    செயல்களே வினை எனப்படும். இச்சிவநெறிக் கொள்கையை ‘இருள்;சேர் இருவினை” (குறள்,
    5) என்ற தொடர் உணர்த்துவது காண்க. திருஞானசம்பந்தரும் ‘ஊனத்திருள்” (1:38:3) என ஆணவத்தையும், ‘நல்வினை” (2:207:11), தீவனை (2:207:11) என இருவினைகள் பற்றியும் குறிப்பிடுகின்றார். இறைவனை வணங்குதலின் இன்றியாமை இறைவனை வணங்குதலின் இன்றியாமை:::: ‘கோளில் பொறியில் குணமிலவே
    எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை” (குறள், 9)
    எனத் தலை முதலிய உறுப்புகள் இறைவனை வணங்காவிடில் காணாத கண்போல, கேளாத
    செவிபோல, மற்றும் தம் தம் புலன்களைக் கொள்ளாத பிற பொறிகள் போலப்
    பயனற்றவையாய்க் குற்றமுடையவனவாம் என வள்ளுவர் கூறுகிறார்.
    ‘ஆமாத்தூர் அ ‘ஆமாத்தூர் அ ‘ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே” (2:180:4) ம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே” (2:180:4) ம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே” (2:180:4)
    ‘ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே” (2:180:7) ‘ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே” (2:180:7) ‘ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே” (2:180:7)
    ; ‘ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவியெல்லாம் கேளாச் செவிகளே”
    (2:180:8) என்ற திருஞானசம்பந்தரின் தேவார அடிகள் முற்கூறிய திருக்குறள் கருத்துடன் ஒப்புடையதாய் விளங்குவதைக் காண்க.
    இறைவனைப் புகழ்வதால் உண்டாகும் நன்மை இறைவனைப் புகழ்வதால் உண்டாகும் நன்மை:::: இறைவனைப் புகழ்ந்து போற்றுபவர்களை
    இருவினைகள் வந்தடையா.
    ‘இருள்சோ இருவினையும் சேரா இறைவன்
    பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (குறள்,5)
    என்கிறார் வள்ளுவர்.திருஞானசம்பந்தரும்,
    ‘நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியார்கட்கு
    அடையா பாவமே” (1:86:3) என்கின்றார்.
    முடிவுரை
    1. திருக்குறள் உத்தரவேதம் என்றும், திருஞானசம்பந்தர் தேவாரம் தமிழ்வேதம் என்றும் போற்றப்படுகின்றன.
    2. இவ்விரு நூல்களையும் எழுதுமறை என் ஆன்றோர்கள் போற்றியுள்ளனர்.
    3. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்களாகப் பல இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.
    4. சில சொல்லாட்சிகள் திருக்குறளில் எப்பொருளில் வழங்கப்பட்டனவோ, அப்பொருளில்
    அச்சொற்கள் திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் பயிலப்பட்டுள்ளன.
    5. திருக்குறளனின் கருத்துக்களை உள்ளடக்கித் திருஞானசம்பந்தர் தேவார அடிகள் பல
    விளங்குகின்றன.
    6. ப+க்களால் தொடுக்கப்பட்ட மாலைக்குள் இழைநார் ஊடுருவிச் செல்வது போல, திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் மனிதனின் உள்ளத்தைப் பண்படுத்தும் உயரிய அறக்கருத்துக்கள் திருக்குறளின் அறக்கருத்துக்களுடன் இவ் ஆய்வில்ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
    7. இவ்விரு நூல்கட்கிடையே சிவநெறிக் கொள்கைகளில் ஒப்புமைகள் பல உள்ளன. ஆயினும் இட எல்லை கருதி ஒரு சில ஒப்புமைகள் மட்டுமே இங்குச் சுட்டிக் காட்டப்பட்டன.
    8. இவ்வாறு திருக்குறளுக்கும், திருஞானசம்பந்தர் தேவாரத்திற்கும் இடையே காணப்படும்
    ஒப்புமைகள் பலவாகும். இவ்விரு நூல்களையும் ஊன்றிப் படித்து ஆராய்வோர்க்கு அவை உவப்பிலா ஆனந்தத்தை உண்டாகும்;.

  7. அருமை! வள்ளுவத்தை இவ்வாறெல்லாம் பார்க்கலாம் என்றே தெரியாத பல ஆசிரியர்களும் மாணாக்கர்களும் உள்ள காலம் இது. அருமையான பார்வை!
    மன்னிக்கவும் நக்கினம் சிவம் அவர்களே தங்கள் கருத்துக்கு வலுவாக தங்கள் விளக்கமாக குறளைப் பற்றி எளிதினால் தானே புரியும்!
    தமிழ் ஹிந்துவிற்கு வணக்கங்களைத் தமிழ் சமுதாயம் என்றும் செலுத்தக் கடமைப் பட்டு இருக்கிறது! நன்றி!

  8. அருமை! வள்ளுவத்தை இவ்வாறெல்லாம் பார்க்கலாம் என்றே தெரியாத பல ஆசிரியர்களும் மாணாக்கர்களும் உள்ள காலம் இது. அருமையான பார்வை!
    மன்னிக்கவும் நக்கினம் சிவம் அவர்களே தங்கள் கருத்துக்கு வலுவாக தங்கள் விளக்கமாக குறளைப் பற்றி எழுதினால் தானே புரியும்!
    தமிழ் ஹிந்துவிற்கு வணக்கங்களைத் தமிழ் சமுதாயம் என்றும் செலுத்தக் கடமைப் பட்டு இருக்கிறது! நன்றி!

  9. திரு ஆங்கரை கிருஷ்ணன் அவர்களின் மறு மொழி மிக சிறப்பாக உள்ளது. சிறந்த ஒப்புநோக்குதல் பார்வை. பல புதிய தகவல்கள்.

    சோமசுந்தரம்

  10. அருமை !எளிமையான ,அருமையான விளக்கம் .வள்ளுவரை சமணர் என்று சாதிப்பவர்களுக்கு சவுக்கடி போன்ற ஆதாரங்கள் .இருந்தாலும் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .தூங்குபவரைப் போல நடிப்பவரை எழுப்ப முடியாது தானே ?தொடர்ந்து கலக்குங்கள் திரு.சௌந்தர் .

  11. கட்டுரையும் திரு.ஆங்கரை கிருஷ்ணன் அவர்களின் கருத்தும் ரசிக்கத்தக்கன.ஆனால் திருக்குறள் சமய நூல் அல்ல. ஒருவிதமான நீதிநூல். அது தமிழ் மக்களை சரியாகச் சென்று அடைய வேண்டுமானால் தமிழரிடையே பரவி இருந்த சமயங்களையும் அவர்களது வாழ்க்கையில் கலந்திருந்த வழக்கங்கள் நம்பிக்கைகளையும் தொட்டு எழுதுவதுதான் சரி என்று அப்படி எழுதி இருப்பார் என்பது என் எண்ணம். ஆகையால் இந்தப் பார்வைகளை ரசித்து விட்டுவிடுங்கள் இதில் சமயங்களை தேடுவது தேவையா?

  12. வள்ளுவம் வைணவ நூல் என்று மொழிந்தால் ஒன்றும் குடிமூழ்கி விடாது. 19ம்
    நூற்றாண்டிலேயே திருக்குறள் “அத்புத வாமணன்” என்கிற பெயரில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஆஸ்ரமத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ மத் காடந்தே த்தி ஆண்டவன் ஸ்ரீனிவாச ராமானுஜ மகாதேசிகன் என்கிற மகானால் எழுதப்பெற்று வடமொழி மட்டும் அறிந்தோரும் குறளின் பெருமையை அறிந்தனர்.குறளோவியம் தீட்டியவர் குறள் வழி நடக்கிறாரா என்ன? அதையே பலர் படித்து தொலைக்கும்போது வள்ளுவமும் வைணவமும் என்பதை தாராளமாகப் படிக்கலாம்.

  13. அற்புதம் ..

    தாமரைக்கண்ணான் உலகு .. இது ஒன்று போதாதோ திருவள்ளுவர் திருமால் அடியார் என்றியம்ப…

    கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிநீ என்றது காண்க,,

    நக்கினம் சிவம் அவர்களது அறியாமை இருள் அகல ..

  14. அருமையான கட்டுரை பராசரன் வக்கீல் அவர்களின் தந்தை கேசவையங்கார் சுவாமி வள்ளுவர் உள்ளம்,திருக்குறள் ஒரு வைஷ்ணவ நூல் என இரு நூல்கள் எழுதியுள்ளார்.(தெரியும் என நினைக்கிறன்) எனவே திருக்குறள் வைஷ்ணவ தொடர்பு வெள்ளிடைமலை வாழ்க உமது ஆய்வு கேசவையங்கார் நூல்கள் படித்தால் போகும் வைஷ்ணவ காய்வு…

  15. திருக்குறள் ஒரு மதநூல் அல்ல. இது உண்மையான கூற்றே. ஏனெனில் வள்ளுவரின் காலத்தில் ஜைனம், புத்தம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் எதுவும் இல்லை. உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் தங்கள் முன்னோரின் நம்பிக்கைகளையும், அறிவுரைகளையும் பின்பற்றி வந்தனர். அந்த நம்பிக்கைகள் மதம் என்ற ஒரு தொகுப்பாக ஆக்கப்படவில்லை.

    நம் பாரத திருநாட்டில் உள்ள நம்பிக்கைகளின் தொகுப்பாகவே திருக்குறள் விளங்குகிறது. திருக்குறளில் தென்புலத்தார் வணக்கம் ( நீத்தார் கடன் – இறந்த மூதாதையருக்கு செய்யும் பித்ரு கர்மா) பற்றி குறிப்பிடப்படுகிறது.

    கண்டாசார்யா சைவ சித்தாந்தம், மத்வம், வைஷ்ணவம் ஆகிய உள்பிரிவுகள் தோன்றி, இந்து சனாதன தர்மம் புதுபெயர்கள் சூட்டிக்கொண்டது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குள் தான். நமது புனித நூல்களில் ” சிவஸ்ய ஹிருதயம் விஷ்ணுர் – விஷ்ணுவாஸ்ச ஹிருதயம் சிவா -” என்று வருகிறது.

    ( சுவாமி சிவானந்தரின் ” சிவபெருமானும், சிவ வழிபாட்டு தத்துவங்களும்- ( divine life society, sivanandha ashramam, Rasipuram- pages 254-256).

    எங்கும் நீக்கமற நிறைந்த உயர் இறையின் எண்ணிக்கை கடந்த வடிவங்களில் இரண்டே இரண்டு தான் சிவனும், விஷ்ணுவும். எனவே, திருக்குறள் பிரிவு படாத இந்துமத கொள்கைகளை தெளிவாக விளக்கும் இந்து நூலே ஆகும். பல வழிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள திருக்குறள் , சாக்தம், சௌரம் உட்பட அனைத்து பிரிவுகளின் ஒட்டு மொத்த நூலே ஆகும்.

  16. சைவமோ, வைணவமோ… திருக்குறள் சந்தேகமற ஒரு இந்து ஞான நூலே… வள்ளுவருக்கு காவியுடுத்தி பட்டையோ, நாமமோ சாத்தி வணங்கலாம்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *