பாதிரியாரும் போற்றிய ஒரு இந்து சாமியார்

சுவாமிஜியைப் போற்றிய பாதிரியார்

ஆக்கம்: ரீவ்ஸ் கால்கின்ஸ்

(பிப்ரவரி 2009 ராமகிருஷ்ண விஜயத்தில் வெளிவந்த கட்டுரை.)

சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த என் முதல் அனுபவம் மகிழ்ச்சியான ஒன்றல்ல. அவர் இந்தியாவின் பிரதிநிதியாக சிகாகோவிற்கு உலக சர்வ சமய மாநாட்டிற்கு வந்திருந்தார்.

swami_vivekananda_chicago_addressஅப்போது கல்லூரிப் படிப்பை முடித்து ஒரு பாதிரியாராகச் சேர்ந்திருந்த நான், தொன்மை வாய்ந்த கிறுத்துவ வரலாற்றைப் போற்றாமல் அவர் “கிழக்கில் உதித்த நட்சத்திரமாக”, வேதாந்தம் என்ற வேறு ஒரு தத்துவத்தைப் பிரச்சாரம் செய்தது எனக்குப் பிடிக்கவே இல்லை.

அமெரிக்க ஜனநாயக எண்ணங்களில் நம்பிக்கை கொண்டிருந்த என்னை, “அவரது அரசரைப் போன்ற கம்பீரமான நடத்தையும் பேச்சும்”தான் நிலையகுலையச் செய்தன என நினைக்கிறேன். “பிறரை விடத் தான் சிறந்தவர்” என்று அவர் எப்போதும் காட்டிக்கொள்ளவில்லை.

அதன் பின் பல வருடங்களுக்கு நான் அவரைப் பற்றி வேறு ஒரு செய்தியும் கேள்விப்படவில்லை. நானும் அவரைப் பற்றி மறந்து விட்டிருந்தேன்.

டிசம்பர் 1900-ல், நேப்பிள்ஸிலிருந்து கிளம்பி நான் “ரூபப்பட்டினோ” என்ற கப்பலில் இந்தியாவிற்குப் பயணம் செய்துகொண்டிருந்தேன். கப்பலில் உணவருந்தும் அறையில் எனது இருக்கை நடு பாகத்தில் ஒரு வரிசையின் இறுதியில் இருந்தது. நான் கூறப்போகும் நிகழ்ச்சிக்கு இது தொடர்புடையது.

ட்ரேக் ப்ராக்மேன் ஐ.ஸி.எஸ். என்பவர் வலது புறத்திலும் வேறு யாரோ ஓர் ஆங்கிலேயர் அவரது எதிரிலும் இருந்தனர். கப்பல் சூயஸ்கால்வாயை நெருங்கிய போது எங்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது ஒரு புதியவர், இந்திய உடையில் ட்ரேக் ப்ராக்மேனுக்கு அருகில் வந்து அமர்ந்தார்.

அவர் யாருடனும் பேசவில்லை. கப்பலில் தந்த பிஸ்கட்டையும் சோடாவையும் அருந்தினார். உணவு நேரம் முடியும் முன்பே எழுந்து சென்றுவிட்டார். அவ்வளவு அமைதியாகவும், அதே சமயம் கம்பீரமாகவும் வந்து சென்ற அவர் யார்?

அவர் சாதாரணமானவர் அல்ல என்பது மட்டும் தெரிந்தது. அங்கிருந்த பழக்கப்பட்ட பிரயாணி ஒருவர் உணவு பரிமாறும் பிரதம பணியாளரிடம் அன்றைய மது பானத்திற்கு ஆர்டர் செய்தவர்களின் பட்டியலைக் கொண்டு வரும்படிப் பணித்தார். அது கொண்டுவரப்பட்டதும், தனது அட்டையைத் தேடுவதுபோல அவர் வேறு ஓர் அட்டையை வெளியில் எடுத்து அதை அங்கிருந்தவர்களிடம் காட்டினார்.

என்னிடம் அது காட்டப்பட்டபோது அதில் “விவேகானந்தா” என எழுதியிருந்ததையும், சோடா நீருக்கான வேண்டுகோள் மட்டும் பதிவாகியிருந்ததையும் கண்டு நான் துணுக்குற்றேன்.

அவர் சர்வசமய மாநாட்டில் ஏற்படுத்திய சலசலப்பு எனக்கு நினைவிற்கு வந்தது. கப்பலில் தொடர்ந்த என் பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் அவரைச் சந்திக்கக் காத்திருந்தேன்.

அந்த சுவாமியுடன் முதல் சந்திப்பில் ஏற்பட்ட எதிர்மறையான எண்ணங்கள் அப்போதும் என் மனதை விட்டு அகன்றிருக்கவில்லை. அதனால் நானே சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை.

தற்செயலாக வேறு ஒருவர் சுவாமியின் பெயரைக் கூறி, “அவரை நாம் சீண்டிப் பார்ப்போம்; பேச வைப்போம்” என்று கூறியது என் காதில் விழுந்தது. அந்நியர்களிடமும் பண்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் அடுத்த பத்து நாட்களும் விவேகானந்தரின் நண்பனாக இருந்து அவரைச் சீண்டுபவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது.

young_vivekananda_2இந்த நட்புணர்வை உணர்ந்தவர்போல் உடனே அவர் என்னைத் தேடி வந்து கேட்டார்: “நீங்கள் அமெரிக்க மதப் பிரச்சாரகரா?”

”ஆம்” என்றேன்.

 “எங்கள் நாட்டில் நீங்கள் ஏன் கிறுத்துவ மதத்தைப் போதிக்கிறீர்கள்?” என்று அவர் நேரடியாகக் கேட்டார்.

“நீங்கள் ஏன் எங்கள் நாட்டில் மதத்தைப் போதிக்கிறீர்கள்?” என நானும் திருப்பிக் கேட்டேன்.

பிறகு நிலவிய அமைதியில், நான் புருவங்களை உயர்த்தி அவரது கண்களைப் பார்த்தேன். உடனே நாங்கள் இருவரும் மனம் விட்டுச் சேர்ந்து சிரித்தோம். நண்பர்களானோம்.

ஓரிரு நாட்களுக்கு உணவறையில் சில பயணிகள் வந்து அவரைச் சீண்டுவார்கள். ஆனால் அவர், எந்த விவாதத்திற்கும் தாம் தயாராக இல்லை என்பதை மிகச் சில வார்த்தைகளால் வெளிப்படுத்தி விடுவார். அது அவர்களைப் புண்படுத்தாது, ஆனால், புரிய வைக்கும். தேவையான அளவு மட்டும் பேசப்படுபவையாக அவரது பதில்கள் இருக்கும்.

அவை பொருத்தமான மேற்கோள்களுடன் இருக்கும். அப்பதிலைக் கேட்டுச் சாதாரணமானவர்கள் தங்களது வாள்களை உறையிலிட்டு, வாலைச் சுருட்டிக்கொண்டு சென்று விடுவர். ஆனால் ப்ராக்மேன் மட்டும் பின்வாங்கவில்லை.

மற்ற அனைவரும் சுவாமியுடன் செய்யும் கருத்துப் பரிமாற்றத்தில், உதாரணங்களையும் உவமைகளையும் தள்ளிவிட்டு, அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட விஷயங்களை மட்டுமே ப்ராக்மேன் பேசுவார்.

அது சுவாமியை சங்கடத்தில் ஆழ்த்தியது. சிறிது சிறிதாகக் கடைசி மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்த எங்களிடமிருந்து மற்ற பயணிகளின் கவனம் விலகிச் சென்றுவிட்டது. எங்களைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

ஓர் இரவில் நான் சுவாமியின் ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டுபிடித்தேன். விவேகானந்தர் அன்றூ தமது பேச்சில் நிகரற்றவராக ஒளிர்ந்தார். அவரது சொற்கள் கங்கை நதி பெருக்கெடுத்து ஓடுவதைப் போல் வெளிவந்தன. அந்தப் பிரவாகத்தத் தடைசெய்ய அங்கு வேறு ஒன்றுமில்லை.

இடையில் எங்களது கேள்விகள் அவரது கவனத்தைச் சற்றே திசை திருப்பும். ஆனாலும், பதில் கூறிவிட்டு நொடியில் அவர் கவனம் தமது பேச்சின் மையக்கருத்தின் பிரவாக தாரைக்குத் திரும்பும்.

என்றாவது எங்கள் இதயத்தைத் தொடும்படி அவர் ஏதாவது விஷயத்தைப் பற்றிப் பேசி முடித்திருந்தாரென்றால், அவர் விடைபெற்றுச் செல்லும் முன் எங்கள் ஒவ்வொருவருக்கும், மரியாதையுடன் வணக்கம் கூறிவிட்ட்டு, எழுந்து அமைதியாகச் சென்றுவிடுவார். ப்ராக்மேனின் எதிரில் அமர்ந்திருந்தவர் என்னிடம் கேட்டார்:

“அந்த இந்தியக் கனவானிடம் நாம் குறுக்குக் கேள்விகள் கேட்டால், அவர் எங்கே நிறுத்தினாரோ, அங்கிருந்தே மீண்டும் பேச்சைத் துவக்குவதைக் கவனித்தீர்களா?”

“ஆமாம், நாங்கள் அதைக் கவனித்தோம்.”

“அவர் நமக்காக, தான் ஏற்கனவே ஆற்றிய சொற்பொழிவு ஒன்றைத்தான் மீண்டும் கூறியிருக்கிறார்” என்றார்.

ஆம். அது அப்படித்தான் இருந்தது. அது ஓர் ஆச்சரியமளிக்கும் சுவையான அனுபவம். கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து தேநீரை உறிஞ்சிக் குடிக்கும் நேரத்தில் செய்யப்படும் திசையற்ற உரையாடல் போல அது எங்களுக்குத் தோன்றவில்லை ! அந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று !

ஜனவரி 12. விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாகும்.  அவர் விடுத்த அனல் போதனைகள் நம் உரிமைகளின் உயிர் மூச்சாக இருக்கிறது.  இந்துக்களின் உயிரில் ஊக்கம் எழுப்பிய விவேகானந்தப் பரஞ்சோதியின் காலடியை இன்று பணிந்து தொழுவோம்.

12 Replies to “பாதிரியாரும் போற்றிய ஒரு இந்து சாமியார்”

  1. Pingback: Indli.com
  2. சுவாமி உங்களை போல் ஒரு தெய்வத்தை இனி நாங்கள் காண கிடைக்குமா .நீங்கள் இல்லாத குறை எங்களுக்கு நன்றாக தெரிகிறது.இந்த தர்மத்திற்கு எதிரான போராட்டத்தில் எங்களுக்கு வெற்றி கிடைக்க துணை நில்லுங்கள்.

  3. Pujya swami vivekanandji maharaj’s call to the nation, “Arise awake and stop not till the goal is reached” shall be ever reverberating in the mind and soul of people of Hindustan. The congress formed by Allan Octavian Hume branded their freedom from Britain as fight for Hind Swaraj. Apart from the occasional jai hind s, the so called Indian National Congress which was formed by the British to serve the British bequeathed the ways of English and threw away swaraj and it is not a secret that the words “Hindu” “Vande Mataram” are but anathema to them. To attain real Hind Swaraj, lets remember swamiji and recharge ourself for the sacred cause. Vande mataram.

  4. விவேகஜானந்த நிமக்ன சித்தம்
    விவேகதானைக விநோத சீலம்
    விவேக பாh கமனீய காந்திம்
    விவேகினம் தம் ஸதததம் நமாமி

    விவேகத்திலுருவாகும் ஆனந்த சித்தர்
    விவேகத்தை யாவருக்கும் வழங்கு கற்பகம்
    விவேக ஒளியில் உருவெடு அழகினர்
    விவேகானந்த தேவரை சதா வணங்கினேனே

    விவேகானந்தர் என்ற பெயர் கேட்கிற போதே உத்ஸாகம்.. அவரது ஒவ்வொரு வார்த்தைகளும் அமுதக் களஞ்சியம்.. விவேகானந்த மஹராஜின் பாதங்களை வணங்குகிற ஒவ்வொருவரையும் வணங்குகிறேன்.

    அவர் வழி நிற்கும் தூய துறவுப் பரம்பரையை வணங்குகிறேன். அவர் வழியில் சேவையாற்றும் ஒவ்வொருவரையும் போற்றுகிறேன். அவர் எல்லோரையும் ஆகர்ஷிப்பவர். நம் ஒவ்வொருவரும் வழிகாட்டியாகக் கொள்ளக் கூடியவர்.

  5. சுவாமி விவேகானந்தரிடம் இருந்து எவ்வளவோ தெரிந்து கொண்டோம்.

    ஆனால் எனக்கு தெரியாத ஒன்று அவருக்கு எப்படி மரியாதை செலுத்துவது என்பதுதான்.

    இந்த உலகிற்கு, மனிதத்துக்கு சுவாமி செய்த சேவைக்கு நான் அவருக்கு எவ்வளவு மரியாதை செலுத்தினாலும் வணங்கினாலும், அது அவருக்கு செலுத்த வேண்டிய மரியாதையின் மிகச் சிறிய பகுதியாகவே உணர்கிறேன்.

  6. ஹிந்துக்கள் கண்ட மாபெரும் மாணிக்கம், சிங்கம் சுவாமி விவேகானந்தர்! அவரைப் போல உள்ளவர்களின் தேவை இன்று தெளிவாக தெரிகிறது! ஹிந்துக்களைக் குறுக்கி அவர்கள் சரியான வழியில் கல்வி பயிலச் செய்யாமல் இருக்கச் செய்த அரசாங்கங்களும், மத மாற்ற சக்திகளும் ஒழிக்கப் பட்டால் தான் சரியாகும்!
    அனைவரும் ஒன்று பட வேண்டும்! ஹிந்து மதத்தின் கருத்துக்கள் எல்லா மனிதர்களுக்கும் சென்று சேரும் படிச் செய்ய வேண்டும்! மக்களை விளிபோணர்வு பெறச் செய்ய வேண்டும்!
    தனிப் பட்ட முறையில் பெருமைகளும் பெயரும் பெற வேண்டும் எனப் பாடுபடாமல் இயங்க வேண்டும்!
    தமிழ் ஹிந்து முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறது! இதை இணையத்தில் உலவும் அனைத்து தமிழ் மக்களும் படிக்கச் செய்ய வேண்டும்!
    வாழ்க பாரதம்! வெல்க மக்கள்!

  7. நான் விவேகானந்தரை அதிகம் படிக்கவில்லை அனால் பல அவரைப்பற்றிய கட்டுரைகள் வாசித்திருக்கின்றேன் இதன்படி நான் மிக உச்சத்தில் வைத்திருக்கின்ற ஒரு பெரியார் இவரேயாகும். சுவாமி அவ்ர்களைப்பறி திருச்சிகாரருடைய தளத்திலும் நேற்று ஒரு பதிவு வாசித்திருந்தேன் எனவே இக்கட்டுரைக்கு திருச்சிகாரருடைய மறுமொழியின் கீழ் நானும் ஒப்பமிடுகின்றேன் வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மதம்.
    மீண்டும் ஒரு விவேகானந்தருக்காக ஏங்கும் லோகன்

  8. One of the most easiest and productive way to work towards nation building and reviving Hindu Dharma is to associate ourselves in good satsangs and offer our services (both physical and monetary). “When small droplets of water cometogether they make a mighty ocean”. Gandhiji’s words are very appropriate to remember – “Be the change you want to be”. JAI HIND.

  9. வாளெடுத்துக் காத்தார் ஹிந்து தார்மதத்தை வீர சிவாஜி
    வாயேடுத்துக் காத்தார் ஹிந்து தர்மத்தை சுவாமி விவேகானந்தர் .
    ஈஸ்வரன்,பழனி.

  10. சுவாமி வாழும் காலத்தில் நாம் வாழாமல்.. நம் தர்மத்தை தலை குனிய வைக்கும் போலிகளின் காலத்தில் வாழ நாம் (நான்) என்ன பவம் செய்தோமோ? நம்மையும்.. நம் தர்மமும் சிறப்பாக இருக்க சுவாமி அருளத்தும்!

  11. இணையதளம் www .tamilhindu .com நன்றாகவே உள்ளது. மேலோட்டமாகவே பார்த்தேன். விரிவாக பார்த்துவிட்டு கருத்தை தெரிவிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *