தேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது?

dmk-family

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா?” என்ற முந்தைய கட்டுரையில் திமுக ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது பற்றிய முழு விவரங்களைப் பார்த்தோம். தேசத்தின் பாதுகாப்பிற்குக்கூட இவர்களால் ஆபத்து ஏற்படும் என்பது பணி நியமனம் சம்பந்தப்பட்டது. 2007-இல் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நியமனம் செய்வது தொடர்பாக தேர்வு நடந்து முடிந்தபின் அடுத்த கட்டமான உடல்தகுதித் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு முடிந்து பணி நியமன ஆணை வழங்கப்படும் போதுதான் உளவுத் துறைக்குத் தெரிந்தது, தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 42 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் இந்த 42 பேருக்கும் ஆளும்கட்சியின் இஸ்லாமியப் புள்ளி பரிந்துறை செய்ததும். ஆனாலும் திமுக அரசு, நியமித்தவர்களை பணிநீக்கம் செய்யவில்லை என்பது வெட்கக்கேடானதாகும்.

* ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்தவர்கள் திமுகவினர். 2006-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் உடனடியாக கூட்டுறவுத் தேர்தல் நடத்தப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 7.7.2007-ஆம் தேதி தமிழகத்தில் ஐந்து கட்டமாக கூட்டுறவுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 602 கூட்டுறவு சங்கங்களுக்கு 11,000 பேர் வரை போட்டியிட்டார்கள். உலகமே வியக்கும்வகையில் 10,095 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அரசு அறிவித்தது. எவ்வாறு இவ்வளவு பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றால் திமுக-வினரைத் தவிர வேறு எவரும் போட்டியிட முடியாமல் வன்முறையின் மூலம் தடுக்கப்பட்டார்கள். திமுகவின் கூட்டணிக் கட்சியான சி.பி.எம்., பாமக-வும் கூட தங்களது கட்சியைச் சார்ந்தவர்கள் மனுதாக்கல் செய்ய திமுகவினர் அனுமதிக்கவில்லை என முதல்வரிடம் புகார் வாசித்தார்கள். ஆகவே பல்முனைத் தாக்குதல்களினாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பினாலும் திமுக அரசு கூட்டுறவுத் தேர்தலை ஒத்தி வைத்து ஆண்டுகள் நான்கு முடிந்தும் தேர்தலை நடத்தவில்லை.
 
* ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான தேர்தலுக்கு ஒரு புதிய இலக்கணம் வகுத்தார்கள். அந்த இலக்கணத்திற்கு திருமங்கலம் ஃபார்முலா என நாமகரணமும் சூட்டினார்கள், அதாவது வாக்குகளைக் கொள்ளையடிப்பது என்பது அதன் பொருளாகும். 2006-லிருந்து 2011 வரை நடந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது பண பலத்தினாலும் அதிகார பலத்தினாலும் மட்டுமே. ஆகவே திமுக-வினருக்கு சாதனைகளை எடுத்துக் கூறினால் வாக்குக் கிடைக்காது என்பது நன்கு தெரிந்தும் அராஜகத்தின் மூலம் வெற்றியை பெற முடிவுசெய்தது தான் திருமங்கலம் ஃபார்முலாவாகும். வோட்டு ஒன்றுக்கு ரூ.5000 வீதம் கொடுத்ததாக அழகிரியின் உதவியாளர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்; பணம் மட்டுமில்லாமல் பொருளாகவும் கொடுத்த சம்பவங்களும் உண்டு.

* ஒரு காலத்தில் தமிழகத்தில் ஏழைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பெரும் செல்வந்தர்கள் கல்வி நிலையங்களை ஏற்படுத்தியதாக வரலாறு உண்டு சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் கல்லூரி உதராணமாகும். ஆனால் இன்று அமைச்சர்கள் அனைவருமே கொள்ளையடிப்பதற்காகவே கல்வி நிலையங்களை ஏற்படுத்தியுள்ளார்கள். திமுக அமைச்சர்களில் பலர் இன்று புதிய கல்வித் தந்தைகளாக மாறியுள்ளார்கள். ஒருபுறம் தனியர் கல்லூரிகளில் வாங்கப்படும் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக பொது மேடைகளில் முழங்கும் திமுகவினர் தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நடத்தும் கல்லூரிகளில் அடிக்கும் கொள்ளைகளைப் பற்றி வாய் திறப்பதில்லை.

அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மனைவி சாந்தா ஆகியோர் இணைந்து ‘நாராயண அறக்கட்டளை’ என்கிற பெயரில் பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார்கள். இந்தக் கல்லூரிக்காக ஏழை எளிய விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி 100 ஏக்கர் நிலத்தை வளைத்துள்ளார்கள். நேருவின் மற்றொரு தம்பியான ராமஜெயம் மற்றும் நேருவின் அக்காள் மகனும் மாப்பிள்ளையுமான செந்தில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி ‘கேர் இன்ஜினியரிங் கல்லூரி’யாகும். இந்தக் கல்லூரி நேருவின் தந்தை பெயரில் இயங்கி வரும் நாராயணா எஜூகேஷனல் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கோவை அருகே பாப்பம்பட்டி பிரிவுப் பகுதியில் ‘கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’ எனும் பெயரில் பொங்கலூர் பழனிச்சாமி நடத்தி வருகிறார். வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் அருகே உத்தம சோழபுரத்தில் ‘வி.எஸ்.ஏ. குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்’ எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார்.

கடலூர் மாவட்டச் செயலாளரும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது பங்கிற்கு சித்தப்பா தெய்வசிகாமணி என்பவர் மூலம் 2008-இல் காட்டுமன்னார்கோயிலில் ‘சந்திரவதனம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்’ மற்றும் ‘சந்திரவதனம் ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனம்” மேல பழஞ்சநல்லூர் என்ற இடத்தில் ‘எம்.ஆர்.கே.கலை மற்றும் அறிவியல் கல்லூரி’, மேலும் வீராணம் நல்லூர் என்ற இடத்தில் ‘எம்.ஆர்.கே. இன்ஜினியரிங் கல்லூரி’ போன்றவை நடத்தப்படுகின்றன. சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் அரசின் வெடிமருந்துத் தொழிற்சாலை நடக்கின்ற பகுதியைச் சுற்றிலும் எந்ததொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தக் கூடாது என்ற விதி இருந்தும் விதிக்குப் புறம்பாக காட்பாடியிலிருந்து சித்தூர் போகும் வழியில் 6 கிமீ தொலைவில் தனது மகன் கதிர் ஆனந்த் பெயரில் ‘கிங்ஸ்டன் கலை மற்றும் பொறியியல் கல்லூரி’ நடத்தி வருகிறார். விழுப்பும் மாவட்டச் செயலாளரும் உயர் கல்வி அமைச்சருமான பொன்முடி தன் பங்கிற்கு ‘சிகா மேலாண்மைக் கல்லூரி’, ‘சிகா டீச்சர் டிரெயினிங் கல்லூரி’ மற்றும் விக்கிரவாண்டியில் ‘சூர்யா பொறியியல் கல்லூரி’யும் நடத்தி வருகிறார்.

ஆகவே செல்வம் கொழிக்கும் கல்வித் துறையில் அனைத்து அமைச்சர்களும் புகுந்து கொண்டு கொள்ளையடிக்கிறார்கள். சமீபத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில், “இது பொற்கால ஆட்சி; திமுக ஆட்சிக்கு வந்தபின் பெரும்பாலான அமைச்சர்கள் கல்லூரிகள் ஆரம்பித்துள்ளார்கள். இது கட்சிக்கு நல்லதல்ல அனைவரும் அதைக் கட்சிக்கு எழுதி வைத்துவிடுங்கள்'” எனக் கூறியவர் தமிழக முதல்வர் கருணாநிதி. அமைச்சர்கள் மட்டுமில்லாமல் முதல்வரின் குடும்பத்தின் வாரிசுகள் கூட கல்லூரிகள் துவங்கியுள்ளார்கள். மு.க.அழகிரியின் மகன் பெயரில் ‘தயா இன்ஜினீயரிங் கல்லூரி’ துவங்கப்படவுள்ளது.

எனவே தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின் பெரும் வளர்ச்சி கண்டவர்கள் திமுக-வினரும் அதன் அமைச்சர்கள் மட்டுமே என்பதும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகமே திமுகவின் சொத்தாக மாறிவிடும் அவல நிலை ஏற்படும் என்பதற்காகவே திமுக-விற்கு வாக்களிக்க கூடாது.

 
ஆட்சியின் அவலங்கள்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முடியும்முன் சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையில் முந்தைய நிதி நிலை அறிக்கையில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் வெளியிடப்படும். தமிழக மக்கள் நிறைவேற்றாத திட்டங்களைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது என்கிற எண்ணத்தில் ஆட்சியாளர்களால் ஒரு சடங்காக நிதிநிலை அறிக்கை சமர்பிக்கப்படும். திமுக அரசு அறிவித்த திட்டங்கள் பல இன்னும் நிறைவேற வில்லை. 2006-2007-இல் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் இன்று வரை அதாவது திமுகவின் ஆட்சி முடிவுற்று மீன்டும் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நிறைவேற்றப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஒரு பெரிய துறைமுகம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்ற அறிவிப்பு, அறிவிப்பாகவே இருக்கிறது. கப்பல் துறை அமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திமுக அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ள வளர்ச்சிக் கட்டமைப்பு மையம் ஏற்படுத்தப்படும், கோவை மாவட்டம் பல்லடத்தில் வெங்காயத்துக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழத்துக்கும் தேனி மாவட்டத்தில் ஒடைப்பட்டியில் திராட்சைப் பழங்களுக்கும் ஏற்றுமதிக்கேற்ற வகையில் குளிர்பதன வசதிகளுடன் கூடிய விற்பனைக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்றார்கள். கிராமப் பகுதிகளில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு விரைவாக வேலை வாய்ப்புகள் பெறுவதற்காக ஊரகப் பகுதிகளில் பல் மருத்துவ கல்லூரி, செவிலியர் கல்லூரிகள், உடல் இயக்க மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தவர்கள், அமைச்சர்கள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக கல்லூரிகள் அமைக்க உதவி செய்தார்களே தவிர ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அறிவித்த திட்டங்களைக் கூட செயல்படுத்தவில்லை என்பது இந்த அரசின் இலட்சணமாகும்.

ரூ.279.01 கோடி செலவில் வெள்ளத்தால் சென்னை பாதிப்பதைத் தடுக்க, கூவம், அடையாறு, கொசல்தலையாறு, பக்கிங்காம் கால்வாய், ஒட்டேரி நல்லா விருகம்பாக்கம், அரும்பாக்கம் வடிகால், பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரி ஆகியவற்றின் வழியாக வெள்ள நீர் சீராகக் கடலில் கலக்கும்படியான வெள்ளத் தடுப்புப் பணிகள் நடைபெறும் எனக் கூறினார்களே தவிர ஆண்டுதோறும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது சென்னைவாசிகள் படும் துன்பங்கள் சொல்லி மாளாது, இப்படிப்பட்டர்களுக்கு ஏன் மீண்டும் வாக்களிக்க வேண்டும்?

 
குடும்ப ஆதிக்கம்- ஊழலும் நிர்வாகத்தில் தலையீடும்

தமிழக முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் நிர்வாகத்தில் தலையீடு அதிக அளவில் நடந்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர் உட்பட அமைச்சர்களும் அவர்களது வாரிசுகளும் அடித்த கொள்ளை தமிழகத்தையே திவாலாக்கிவிட்டது. இலவசம் என்கிற பெயரில் கூட்டுக் கொள்ளைகள் அடிக்கப்பட்டன. 2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அழகிரி தனது பெயரில் வெளியிட்ட விளம்பரம்- “அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக தவறான சிபாரிசுகளை சிலர் செய்துவருகிறார்கள். இனி இவர்களைப் பொருட்படுத்த வேண்டாம்” என்பதே சாட்சியாகும். அழகிரிக்கு அனைத்து விதத்திலும் உதவி செய்தவர் ஏபிஆர்ஓ பாஸ்கரன் என்பது உலகறிந்த விஷயமாகும். அறிக்கை வெளியிடப்பட்டதே தவிர அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஊழல் மற்றும் ஊழல் அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சி செயததற்கு அமைச்சர் பூங்கோதை பதவிநீக்கம் செய்யப்பட்டாலும், முதல்வரின் துணைவியாரின் சிபாரிசின் பெயரில் மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. ரூ.600 கோடி முதல்வரின் மனைவிக்குக் கொடுத்தபின் தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்ததாக நீரா ராடியா குறிப்பிடுகிறார்.

தனது மகன் அழகிரியை மதுரையில் ‘முரசொலி’ பத்திரிகை நடத்த அனுப்பியதாகக் கூறிய முதல்வருக்கு தற்போது தனது மகனின் சொத்து என்ன என்பது தெரியுமா என்பது தெரியவில்லை தேர்தல் கமிஷன் மூலம் கொடுத்துள்ள கணக்கின்படி அழகிரியின் குடும்பச் சொத்து ரூ.19,39,78,895 என ஓர் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. வெறும் கேசட் கடை நடத்தியதில் இவ்வளவு சொத்து சம்பாதிக்க முடியும் என்றால் தமிழகத்தின் தனிநபர் வருமானம் என்ன என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் ஊழலின் ஊற்றுக் கண் எங்கே என்பது நன்கு தெரியும். 2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் திருமணத்தில் அழகிரி பேசிய பேச்சு, இந்த அரசு, நிர்வாகத்தில் தலையீடு செய்கிறது என்பதற்கு தக்க சான்றாகும், அதாவது மணமக்களை வாழ்த்திப் பேசிய அழகிரி, “என் மீதான வழக்கில் (த.கிருஷ்ணன் கொலை வழக்கு) நான் விடுதலையாவதற்கு அமைச்சர் பெரியசாமி செய்த உதவிகளை மறக்க முடியாது,” என்கிறார்.

top-5

கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு அதிகார மையங்கள் என்றால் அது மிகையாகாது. ஸ்டாலின் விசுவாச அணியென்றும், அழகிரி அணி என்றும், இவர்கள் இருவருக்கும் நடுவே கனிமொழி அணியென்றும், இந்த மூன்று அணியையும் மீஞ்சும் விதத்தில் தயாநிதி மாறனின் அணியென்றும் தமிழகத்தை வலம் வந்த அணியாகும். தினகரன் எரிப்பு சம்பவத்திற்குப்பின் அமைச்சர் பதவியை இழந்த தயாநிதி மாறன் 2009-க்கு பின் அமைச்சர் பதவி பெற ரூ.600 கோடியை தயாளு அம்மையருக்குக் கொடுத்ததாக வந்த தகவலும் அண்ணாசாலையில் உள்ள டாடாவிற்குச் சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள இடத்தை ராஜாத்தி அம்மையார் பேரம் பேசியதும் கொள்ளையடிப்பதற்கு அதிகாரத்தை பயன்படுத்தியதை வெட்ட வெளிச்சமாக்கியது.

அமைச்சர் பதவியை கையில் வைத்துக் கொண்டு தயாநிதி மாறன் தனது தொழிலுக்குப் போட்டியாக வந்தவர்களை நசுக்குவதில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார். புதிதாக தொலைகாட்சி துவங்க வேண்டுமானால் TRAI லைசென்சும் W.P.C கிளியரன்சும் இல்லையென்றால் ஆரம்பிக்க முடியாது. மலர் தொலைக்காட்சி என்பதாக தினமலர் குழுமத்திலிருந்து திட்டமிட்ட சேனல் முயற்சிகளுக்கு மூன்றாண்டுகள் முட்டுக்கட்டை போட்டவர் தயாநிதி மாறன். லைசென்சைப் புதுப்பிக்கk காலதாமதானதைக் காரணம்காட்டி ராஜ் ப்ளஸ் சேனல் ஒளிபரப்பு ரத்துசெய்யப்பட்டது. இவ்வாறாக சன் டிவிக்கு ஆதரவாகவும் தனது சகோதரனுக்கு அனுசரணையாகவும் சுமார் 60 சேனல்களுக்கு உரிமம் கொடுப்பதை தடுத்து வைத்திருந்தவர் தயாநிதிமாறன். இன்று மாறன் வசம் இருக்கும் சேனல்கள் நான்கு மொழிகளில் 20 சேனல்கள், பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 46 எப்.எம். ரேடிடீயா ஒலிபரப்புகள், இரண்டு தினசரிகள், நான்கு பருவ இதழ்கள், இவற்றோடு சுமங்கலி கேபிள் விஷன், சன் டைரக்ட் DTH, ஸ்பைஸ் ஜெட் என இவர்களின் குடும்ப வியாபாரம், தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி விரிவுபடுத்தப்பட்டது.

 
நிறைவேறாத திட்டங்கள்

இந்த அரசு ஓட்டுகளை வாங்குவதற்கு எப்படியெல்லாம் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். ஆட்சிக்கு வந்த பின்னும் கூட மக்கள் நம்பும்படியாக கயிறு திரிக்கத் தயக்கம் காட்டமாட்டார்கள். 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரோட்டில் நடந்த நீர்ப்பாசனக் கருத்தரங்கில் அமைச்சர் துரைமுருகன் பேசியதைப் பார்க்க வேண்டும். அங்கு பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அத்திக்கடவு அவினாசித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், ”திட்டம் தயாராக இருக்கிறது. அரசு அனுமதி பெற்றபின் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். இம்மாதிரியான கருத்தை கூறி ஆண்டுகள் நான்கு ஓடி விட்டது, ஆனால் திட்டம்தான் இன்னும் செயலுக்கு வரவில்லை. இரண்டாவது “ஏரி குளங்களை ஆக்ரமித்து இருப்பவர்களின் பெயர் பட்டியல் எங்களிடம் உள்ளது, அதே போல திருட்டுத்தனமாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது அரசு இனி கடும் நடவடிக்கை எடுக்கும்,“ என்றார். ஆனால் ஆட்சியில் இருந்த ஐந்தாண்டுகளில் இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மையாகும். எனவே ஐந்தாண்டு கால ஆட்சியில் வெளியில் பேசியது ஒன்றும் உள்ளே நடப்பது ஒன்றாகவும் இருந்ததுதான் இவர்களின் சாதனையாகும்.

இலவசத் திட்டங்களினால் அதிக ஆதாயம் அடைந்தவர்கள் திமுக-வினர் என்றால் அது மிகையாகாது. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குப் போடுவதால், அதிக அளவு அரிசி கடத்தப்பட்டது. 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகம் வழியாக மாலத் தீவுக்குக் கடத்தவிருந்த 2,212 டன் ரேஷன் அரிசி பிடிபட்டதாக சுங்கத் துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் தகவல் கொடுத்தார்கள். ஆளும்கட்சியின் நெருக்கடியின் காரணமாக, சில தினங்களுக்குள், “பிடிப்பட்டது ரேஷன் அரிசி கிடையாது” என அந்தர்பல்டி அடித்தார் மாவட்ட ஆட்சியாளர். அரிசிக் கடத்தலில் ஆளும் கட்சியினர் மட்டுமில்லாமல் கூட்டணிக் கட்சியினரும் ஈடுபட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும். ஈரோடு நகரில் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் அரிசிக் கடத்தலில் கைது செய்ய்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி 20,775 டன் கடத்தலின் போது கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட அரிசியின் அளவே 20,775 டன் என்றால் கடத்தப்பட்டது எவ்வளவு இருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சுமார் 11.73 கோடி ரூபாய் அளவிற்கு அரிசி கடத்தப்பட்டுள்ளது.

2006-இல் ஆட்சிக்கு வரும் போது 2001 முதல் 2006 வரை ஆட்சியிலிருந்து அஇஅதிமுக செய்த தவறுகளை நாங்கள் செய்ய மாட்டோம், துறைகளின் நிதியை முழுமையாக மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே செலவிடுவோம் என்று திரைக்கதை வசனம் எழுதிய மு.கருணாநிதி, தனது ஐந்தாண்டு ஆட்சியிலும் அதே கதையை ஆனால் இன்னும்கூட விஸ்தாரமாகத் தொடர்ந்தார்.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் எனும் நிறுவனத்திற்க ஏழு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இந்தக் கழகங்களுக்கு 20,104-க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இந்தப் போக்குவரத்து கழகங்களின் வருவாய் 2004-2005-இல் ரூ.5,053 கோடியாகும். 2008-2009-இல் தணிக்கை செய்ய்பட்டபோது, இதன் நஷ்டம் ரூ.3,884.99 கோடியாகும். இந்த நஷ்டத்தை இவர்கள் சரிசெய்த விதத்தை ஆய்வு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய ரூ.969.99 கோடியைக் கொடுக்காமல், விபத்தில் உயிரிழந்தவர்களுக்குக் கொடுக்க வேண்டிய நஷ்டஈடு ரூ.158.15 கோடியைத் தராமல், தங்களது நஷ்டத்தை ஓரளவிற்கு சரி(?)செய்தார்கள். இம் மாதிரியான செயல்பாடு நல்ல அரசுக்கு ஏற்புடைதல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய பின்னும் அரசு சரிசெய்ய வில்லை என்பதுதான் வெட்கக்கேடு. இதன் காரணமாக பல மாவட்டங்களில் நீதிமன்றம் அரசு பஸ்களை ஜப்தி செய்யும் செயல் அதிகரித்துள்ளது.

இவர்களின் ஆட்சியில் மின்வெட்டு என்பது தினசரி நடக்கும் சந்தி சிரிக்கும் காரியம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நஷ்டம் ரூ.3,512 கோடி என தணிக்கைத் துறை சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால் இந்த வாரியத்தின் செயல்பாடுகளைப் பற்றி தணிக்கைத் துறை குறிப்பிட்டுள்ளது. முறையான மின்சாரம் வழங்குவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பாதுகாக்கவோ, பெருக்கவோ, எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. கோதையாறு நீர்மின் நிலையம்– இதன் மின் உற்பத்தி திறன் 60 மெகாவாட்– இதில் உள்ள சுழலி அச்சுத் தண்டு பழுதானது, இந்த உபகரண உற்பத்தியாளருக்கும் வாரியத்திற்கும் 2004-இல் பிரச்சினை. ஆனால் 2006-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க 2009 வரை எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் வாரியத்திற்கு 74.45 கோடி ரூபாய் நஷ்டமும், 386 மில்லியன் யூனிட்டுகள் மின்உற்பத்தியும் இல்லாமல் போனது. இது போல பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேடுகளைக் களைய திமுக அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

2008-ஆம் ஆண்டு முதல் தமிழகம் இருளில் மூழ்கத் துவங்கியது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக, அஇஅதிமுக இரண்டும் தங்கள் இலவசங்கள் அனைத்தும் மின்பொருட்களாக அறிவித்துள்ளார்கள். ஏற்கனவே தமிழகம் மின்பற்றாக்குறை மாநிலமாக மாற்றப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக, சென்னையைத் தவிர மற்ற மாவட்ட நகர்ப்புறங்களில் தினசரி இரண்டு முதல் மூன்று மணி நேரம் மின்தடை உள்ளது, கிராமங்களில் தினசரி நான்கு மணி முதல் ஐந்து மணி நேரம் மின்தடை அமுலில் உள்ளது. இந்த இழிநிலைக்கு முக்கிய காரணம் ஆட்சியில் இருந்த திமுக அரசு மின் உற்பத்திக்குரிய திட்டங்களை செயல்படுத்தவில்லை என்பதேயாகும். 2011-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் மேட்டூரிலிருந்து 600 மெகாவாட்டும் எண்ணூரிலிருந்து 600 மெகாவாட் மின்சாரமும் வள்ளூரிலிருந்து 500 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கும் என்றும் மேலும் புதிய அனல்மின் நிலையங்கள் மூலமும் நீர்மின் நிலையங்கள் மூலமும் 2000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டசபையில் மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் இந்தத் தருணம் வரை இந்தத் திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் மத்திய மாநில அரசுகள் கொடுக்கவில்லை என்பதே உண்மையாகும். மின்வெட்டு காரணமாக ஜவுளித் தொழில் நசிந்து, கோவையில் பவுண்டரி தொழில் மறையும் அபாயத்தில் உள்ளது.

2006-2009-ஆம் ஆண்டுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியான ரூ.5,395 கோடி, வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தில் 47 சதவிகித ஆய்வக உதவியாளர்களின் பணியிடங்கள் காலியாகவே இருந்தன. இவர்களைப் போலவே 22 சதவிகித ஒட்டுநர்கள் பதவியும் 12 சதவிகித மருத்துவர்கள் பதவியும் காலியாகவே இருந்தன. மேடை தோறும் திமுகவினர் வேலைவாய்ப்புகள் அதிகம் வழங்கப்பட்டது தங்களுடைய ஆட்சி எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

இவ்வளவு மோசமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வளமான தமிழகமாக மாறும் என வாய்ச்சவடால் அடிக்கும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

32 Replies to “தேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது?”

  1. சரவணன் உங்களுக்கு எல்லா மகிழ்வும் உண்டாகட்டும்.

    மேலும் இவர்கள் சென்ற அக்டோபர் இரண்டாயிரத்து ஆறில் நடந்த சென்னை மற்றும் பிற மாநக ராட்சி தேர்தலில் செய்த அக்கிரமங்கள் இன்னும் பலர் மனதை விட்டு அகலவில்லை. ஏதோ புத்தரை போல பேசும் மஞ்சளாரையும், அவருடன் கூட்டு சேர்ந்து அழியப்போகும் சோனியா கம்பெனியும் அரசியல் இழிபிறவிகளே ஆகும்.

    உண்மையான காங்கிரசு காரன் எவனும் இப்போது அந்த கட்சியில் இல்லை. சமீபத்தில் தினமலர் தமிழ் நாளிதழில் நெல்லை கண்ணன் அவர்கள் தேர்தல் முடியும் வரை தொடர் கட்டுரைகள் எழுதிவருகிறார். அதை தொடர்ந்து படிப்போருக்கு தான் கருணாவின் உண்மை சொருபம் தெரியும். இவர்களுக்கு ஓட்டுபோட்டு மீண்டும் நாட்டை கொள்ளைஅடிக்க அனுமதிப்பது என்பது ஒரு தற்கொலை முடிவாகும்.

    விரைவில் நல்ல தலைவர்கள் உருவாக இறை அருள் உண்டாகட்டும்.

  2. இந்த தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும்! அதுதான் தமிழகத்துக்கு நல்லதாக இருக்க முடியும். இதற்கு ஒன்றல்ல பத்து காரணங்களை கூற முடியும்.

    https://thillana.wordpress.com/

  3. Pingback: Indli.com
  4. பாஜகவிற்கு ஏன் ஓட்டளிக்க முடியாது என்று ஒரு பக்கமல்ல பல பக்கம் எழுதலாம். தமிழ் நாட்டில் இப்போது இருக்கும் கட்சிகளில் நல்ல கட்சி பாஜக தான். அது ஒன்றே போதும் , அந்த கட்சி இந்த தேர்தலில் வெற்றிபெறமுடியாது என்பதற்கும், அதற்கு ஒட்டு போடுவது தவறு என்பதற்கும்.

    தகாத முறையில் கோடிக்கணக்கில் குவித்து வைத்துள்ள மஞ்சள் குடும்பமும் , அதனுடன் கூட்டு குடும்பம் நடத்திவரும் இத்தாலி கம்பெனியும் ஒரு பக்கம் கோடிக்கணக்கில் பண விநியோகம் செய்து வருகின்றனர்.

    மறுபக்கம் என்னடா வென்றால் , வாஜ்பாயிக்கு துரோகம் செய்த இரண்டாவது அணியான ஜெயா மற்றும் இதர உதிரிகள். இவர்களால் கருணா அண்ட் கோ வழங்கும் பணம் அளவுக்கு தானம் வழங்குமளவுக்கு பண வசதி கிடையாது. ஏதோ ஒரு வெட்டி புடவை அல்லது ஓட்டுக்கு நூறு அல்லது இருநூறு தான் கொடுக்கமுடியும்.

    பாஜகவுக்கு ஓட்டும் போட்டுவிட்டு , அவர்களுக்கு நாம் தான் ஏதாவது காப்பி அல்லது தேநீர் கொடுத்து தேர்தலுக்கு செலவுக்கு பணமும் கொடுக்க வேண்டும். எனவே , பாஜகவுக்கு, கோவை, நெல்லை, குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் தவிர வேறு எங்கும் அதிக ஒட்டு கிடைக்காது. அந்த மூணு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தப்பித்தவறி வேண்டுமானால் அவர்கள் ஜெயிக்கலாம். அதுகூட இந்த ஊழல் வெள்ளத்தில் பண அபிஷேகத்தில் , பண மழையில் மிக சிரமம். கடவுள் அவர்களுக்கு ஏதாவது சிறிது அருள்புரிந்தால் , ஒரு நாலு அல்லது ஐந்து இடத்தில் வெல்லலாம்.

    ஜெயா ஆணவம் பிடித்தவரே தவிர, கருணா அளவுக்கு ஊழல் அல்ல. ஜெயா வீட்டில் கருணாவின் காவல்துறை சுமார் நானூறு க்கு மேற்பட்ட செருப்புக்கள் உட்பட கணக்கெடுத்து ,மஞ்சள் குடும்பத்தொலைக்காட்சியில் பலமுறை காட்டிய நகைகள் உட்பட சொத்துகுவிப்பு வழக்கில் அறுபத்து ஆறு கோடிதான் வந்துள்ளது. ஜெயாகட்சியின் ஊழலில் பாகிஸ்தான் மற்றும் சீன ஊடுருவல் எதுவும் இல்லை. அவர்மேல் போட்ட கருணாவின் லண்டன் ஓட்டல் வழக்கை மஞ்சள் கருணா தானே வாபசு வாங்கிவிட்டார்.

    ஆனால் கருணா அவர்கள் , இரண்டு ஜி ஊழல் ஜெயாவை போல சுமார் 1760 கோடி மடங்கு அதிகம். ஜெயா ஆட்சியில் இரண்டாம் முறையில் அதிக ஊழல் இல்லை. மின்சார தட்டுப்பாடு, சட்டம் ஒழுங்கு இவ்வளவு மோசம் இல்லை. எனவே ஜெயாவுக்கே மக்கள் வேறு வழியில்லை என்று ஓட்டளிப்பர். கருணா குடும்பம் உடனடியாக அரசியலை விட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் கொள்கைபரப்பை ஜெயிலிலேயே வைத்துக்கொண்டு, ஒரு அரசு தமிழ் நாட்டில் இருப்பது , உலகம் முழுவதும் நமக்கு தீராத அவமானம்.

    எனவே இன்றைய கொடுமையான சூழலில் , எம் ஜி ஆர் கட்சி கூட்டணியை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். பாஜகவுக்கு ஒன்று முதல் அதிகமாக ஐந்து வரை கிடைத்தாலே அதிகம். அரசியலில் நல்லவர்களுக்கு உடனடியாக வெற்றி கிடைக்காது. இன்னும் பல தேர்தல்களில் தனித்து போட்டி இட்டு , பிறகு தான் ஆட்சி கட்டிலில் ஏறும் நிலை வரும்.

  5. I do not think BJP will be able to win even a single assy seat in this election.

    As to who will come to power, it is still a tough fight between DMK & ADMK.

    One cannot say for sure now that the ADMK front will come to power.

  6. BOTH DMK AND AIADMK ARE CORRUPT WHILE JAYA IS LESS CORRUPT BUT SASIKALA AND HER FAMILY ARE PYTHON HOLDING JAYA HEAD IN ITS MOUTH,.SO JAYA CAN NOT BE 100% CLEAN EVEN IF SHE COMES TO POWER. WE CAN NOT REJECT BJP EVERYTIME THINKING THAT THEY WILL BE WIN THE SEAT BUT TO VOTE FOR JAYA TO OUST DMK. WE MUST VOTE FOR BJP TO MAKE THEM GROW STRONGER. BJP WAS A SMALL PARTY IN CONGRESS DOMINATED AND RULED GUJARATH BEFORE 20 YEARS BUT THEY ARE RULING FOR PAST 11 YEARS IN GUJARAT STATE. SIMILARLY IN M P, H P, UTTANCHAL, CHITTISHGAR
    THEY ARE RULING THEMSELF. KARNATAKA PEOPLE ARE WISE AND INTELLIGENT THAN T N STATE AS THEY MADE BJP GROW IN THEIR STATE MAKING TOTALLY THREE FRONTS.
    THIS WILL MAKE THE RULING PARTY NOT TO COMMITT CORRUPT PRACTICE BUT TO MAKE THE STATE IMPROVED IN ALL SECTORS.

    LET US VOTE FOR BJP TO GET MAX VOTES SO THAT JAYA HERSELF WILL JOIN IN ALLIANCE WITH BJP DURING PARLIMENTARY ELECTIONS ONCE SHE SEES THE VOTE SHARE OF BJP IN T N.

  7. It’s better to concentrate on the necessary things only. Don’t proove that you too are a biased editor.

  8. எல்லோரும் பா ஜ க -வுக்கு ஓட்டுபோட வேண்டும். யாரும் தி மு க … மற்றும் அ தி மு க .. கூட்டணி கட்சிகளுக்கு ஒட்டு போடக்கூடாது . அப்போதுதான் பொன். ராதாகிருஷ்ணன் முதல்வராக முடியும் … இது ஏன் மக்களுக்கு புரிய மாட்டிங்குது…
    எல்லோரும் ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள் .. அவர்களை தேர்தல் கமிசன் சிறையில் அடைத்து விட்டு பா ஜ க வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் .. பொன்.ராதாகிருஷ்ணன்- ஐ முதல்வராக அறிவிக்க வேண்டும் .. இது ஏன் தேர்தல் அதிகாரிகளுக்கு புரிய மாட்டிங்குது …

  9. வாங்க பி பிரசாத்,
    உங்கள் வைத்தெரிச்சல் புலம்பல் நன்கு தெரிகிறது.,பிஜேபி செய்த்து விடுமோ உங்களின் பயம் தெரிகிறது. ஓட்டுக்கு காசு கொடுப்பவர்களை நிச்சயம் சிறையில் அடிக்கலாம்,
    அனால் பிஜேபி யே கொளத்தூரில் வாபஸ் வாங்கிவிட்டது. காரணம் இருபெரும் கட்சிகள் போட்டி இடுகின்றனவாம்,அதிலும் துணை முதல்வர் அங்கு போட்டி இடுவதால் வேட்பாளர் ராஜராஜன்
    எதிர் போட்டியாளார் வலிமையாக இருந்தால் இவர்கள் விலகி கொள்வார்களாம். இவர்களை நம்பி யார் ஒட்டு போடுவது? போட்டி இடவே தைரியம் இல்லாவதர்கள் வெற்றிபெற்று எங்கிருந்து ஜனநாயக கடமையை ஆற்ற போகிறார்கள். இவர்களும் கழகங்களுக்கும் என்ன வித்தியாசம் ?
    தமிழ் நாட்டை ஆண்டவன்தான் உண்மையிலேயே காப்பாற்ற வேண்டும்

  10. We all should vote for BJP. I know BJP will not win the seat, but by showing our vote power we can bring BJP as an alternative force. if BJP gets atleast 4-5% votes, then the big parties will come to us for alliance. we have to prove our vote bank. so please vote for BJP and dont waste for ADMK/DMK.

  11. \\தமிழ் நாட்டை ஆண்டவன்தான் உண்மையிலேயே காப்பாற்ற வேண்டும்
    \\
    உடனடியாக தேவர்கள் எல்லாம் போய் விஷ்ணுவிடம் முறையிட்டு … பத்தாவது அவதாரம் எடுக்க சொல்லி தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் சரிதானே ….

  12. சரவணன்

    நல்ல தொகுப்பு. நாம் ஊதுகிற சங்கை ஊதுவோம். விழித்திருக்கிறவன் விழிக்கட்டும். கேட்க்கக் கூடிய காதுகள் உடையவன் கேட்க்கட்டும். இன்றைய சூழலில் உறுதியான நேர்மையான ஊழலற்ற தலைமையும் தொண்டர்களும் உடைய ஒரே கட்சி பா ஜ க மட்டுமே. இதைப் படிக்கும் அனைவரும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பா ஜ க போட்டியிடாத தொகுதியில் தி மு க வை எதிர்க்கும் பலமான கட்சிக்கு ஓட்டுப் போடலாம். மீண்டும் இந்தக் கருணாநிதி கும்பல் த்லையெடுக்க விட்டால் ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் இந்தியாவையும் சேர்த்துச் சூறையாடி விடுவார்கள்.

    நன்றி
    ச.திருமலை

  13. ப பிரசாத்
    இன்னும் பத்தாம் பசலித்தனமாக கழக பொய்களை,புரட்டுகளை நம்பி ஏமாறாமல் ஓட்டை யோசித்து போட்டாலே போதும். அந்த யோசிக்கும் திறனை ஆண்டவன் ஒவ்வோர் தமிழனுக்கும் அருளி காப்பாற்ற வேண்டும் என்ற அர்த்தத்தில் சொன்னேன்,

    முடிந்தால் நீங்கள் தாரளமாக விஷ்ணுவிடம் சென்று முறையிடலாம்.அது உங்கள் விருப்பம். தேவர்கள் தான் போகவேண்டும் என்று தாங்கள் நினைத்தால் அதற்கு அவர்களை நீங்கள் அணுகலாம்.

    ஆண் தி வேயில் ஒரு கடவுள் வந்து கொண்டிருப்பதாக மைக் போட்டு ஊரையே தூங்கவிடாமல் கத்திகொண்டிருக்கிரார்கள் கூட்டம் கூட்டமாக,
    அவர்களை முதலில் கேளுங்கள்.

    விஷ்ணுவின் பத்தாம் அவதாரம் வர இந்துக்களின் கணக்குப்படி இன்னும் நாலரை லட்சம் ஆண்டுகள் உள்ளன.

    ஆனால் ரொம்ப நல்லவர் நீங்கள்,எவ்வளவு வலிச்சாலும் வலிக்காத மாறியே நடிக்கறீங்க

  14. வணக்கம்

    ///ஆட்சி கட்டிலில் ஏறும் நிலை வரும்.///

    அய்யா முதலில் இந்த வார்த்தையை மாற்றி ஆட்சி பீடம், அல்லது ஆட்சி நாற்காலி இப்படி எதாவது சொல்லுங்கோ.

    ஆட்சி கட்டில் என்று ஏற்றி வைத்தவுடனேயே அங்கே நல்லாட்சி தூங்கி விடுகிறது. ஆட்சியாளர்களும் நன்றாக தூங்கி அவர்களுக்கு சாதகமான கனவுகளை மட்டுமே கண்டு அதனை செயல்படுத்தி கொள்கிறார்கள்.

  15. நன்றி திரு சரவணன்.என்னுடைய வேண்டுகோள் ஆசிரியருக்கு .நீங்கள் ஏன் ப ஜ க வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பயோடாடாவை வெளியிட கூடாது .மக்களுக்கு அது பற்றி தெரிய ஒரு வாய்ப்பாக இருக்கும்.வேறு எந்த நாளிதழிலும் இது பற்றி தெரிவிக்க மாட்டார்கள் .எனக்கு தெரிந்து குமரி மாவட்ட ப ஜ க வேட்பாளர்கள் அனைவரும் சிறந்த வேட்பாளர்கள் நாஹ்கு தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு நமக்கு உள்ளது.ஜைஹிந்த்

  16. பிரதாப்

    நேற்று இரவு வேலூரு கூட்டத்தில் கேரளத்தின் மாவலி சக்கரவர்த்தி கதையை உதாரணமாக கூறி தன்னை மாவலி யுடன் ஒப்பிட்டுக்கொண்டுள்ளார் பகுத்தறிவு பண்டாரம். புராணங்களையும் , இதிகாசங்களையும் பொய் என்றும் புரட்டு என்றும், புனைகதைகள் என்றும் வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்த பகுத்தறிவுக்கு , தேர்தல் சமயத்தில் மட்டும் அது எப்படி உண்மை வரலாறு போல தெரிகிறது?

    இவர் துண்டு மட்டும் மஞ்சள் அல்ல. கண்ணும் மஞ்சள் என்று இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. மோசடித்தனமாக , இவர் பேசுவது எல்லோருக்கும் நன்றாக தெரிகிறது. தேர்தல் நெருங்க நெருங்க இவரது புலம்பல் அதிகமாக உள்ளது. செய்த ஊழலை தவிர , பிற நல்ல சாதனைகளை சொல்லி ஒட்டு கேட்காமல், ஜெயிலுக்குள் உள்ள ராசாவை இன்னமும் கட்சியின் கொள்கை பரப்பாக வைத்துக்கொண்டிருப்பதால் , இந்தமுறை இவர் ஆட்சி வீட்டுக்கு போகும் நிலை ஏற்பட்டு விட்டது. போதாக்குறைக்கு காங்கிரஸ் பிணத்தை வேறு தூக்கிக்கொண்டு அழுகிறார்.

    தேர்தலுக்கு பிறகு, தமிழகத்தில் மிக பெரிய திருப்பங்கள் நடைபெறும். மூன்று கட்சிகள் காணாமல் போகும் என்று பட்டிக்காட்டான் கூட சொல்லுகிறான். அதில் முதலிடம் பெறப்போவது காங்கிரசு என்று குழந்தைக்கும் தெரியும். மற்ற இரண்டு கட்சிகள் எது என்பது கலைஞருக்கும் தெரியும். காங்கிரசையும், மரம் வேட்டியையும் கலைஞர் தேர்தலுக்கு முன்பே வெட்டி விட்டிருந்தால் இந்த தேர்தலுக்கு பிறகு ஒரு கூட்டணி அரசாவது அமைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதை விட்டு அனாதை பிணங்களை கூட்டணி சேர்த்து கொண்டு அவஸ்தை படுகிறார்.

    நான் சுமார் ஆயிரம் பேரிடம் கருத்து கேட்டதில், 85 சதவீத மக்கள் மின்வெட்டு, விலைவாசி உயர்வு , குடும்ப அரசியல் ஆகிய மூன்றும் இவரால் வந்த ஆபத்து என்று தெரிவித்தனர். ௨ஜி ஊழலை பற்றி அவ்வளவு பேர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சுமார் இருபது சதவீதம் பேர் தான் ஊழலை ஒரு பிரச்சினையாக தெரிவித்தனர். ஊழல் இல்லாமல் திமுக , திக போன்ற குடும்ப கட்சிகள் செயல் பட முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது. இனி மேல் இவர்கள் எதனையும் மூடி மறைக்க முடியாது.

    கலைஞரை சட்ட சபை தேர்தலில் பாதித்த விஷயங்கள் வருமாறு:

    விலை வாசி உயர்வு அறுபத்து நான்கு சதவீதம்

    மின்சார தட்டுப்பாடு இருபத்தைந்து சதவீதம்.

    காங்கிரசு கூட்டு பதினொரு சதவீதம்

    நடிகை குஷ்பூவும் சிறுத்தை, மரம்வெட்டி கட்சிகளுடன் சேர்ந்து ஒரே மேடையில் வோட்டு கேட்பதை பார்த்து , டீக்கடையில் டீக்குடித்து கொண்டிருக்கும் குப்பனும், சுப்பனும் கூட நமுட்டு சிரிப்பு சிரித்து , நல்ல தமிழ் கற்பு அப்பா என்கிறான், நக்கலாக. பாவம் கலைஞர், அவருக்கு இவ்வளவு இழிநிலை வரவேண்டாம்,.

    பேசாமல் இளைய தலைமுறையை சேர்ந்தவர்களிடம் கட்சிப் பொறுப்பை கொடுத்துவிட்டு நிம்மதியாக ஒய்வு எடுப்பது அவருக்கும், தமிழகத்திற்கும் நல்லது. இனிமேலும் இந்த நகைச்சுவையை தமிழ் நாடு தாங்காது.

  17. \\\ இன்னும் பத்தாம் பசலித்தனமாக கழக பொய்களை,புரட்டுகளை நம்பி ஏமாறாமல் ஓட்டை யோசித்து போட்டாலே போதும். அந்த யோசிக்கும் திறனை ஆண்டவன் ஒவ்வோர் தமிழனுக்கும் அருளி காப்பாற்ற வேண்டும் என்ற அர்த்தத்தில் சொன்னேன் \\\

    யோசிக்கும் திறனை …. குஜராத் மற்றும் கர்நாடக மக்களுக்கு மட்டும் கொடுத்த ஆண்டவனுக்கு … தமிழ்நாட்டு மக்கள் மீது மட்டும் ஏனோ இந்த ஓரவஞ்சனை ?

    \\ஆண் தி வேயில் ஒரு கடவுள் வந்து கொண்டிருப்பதாக மைக் போட்டு ஊரையே தூங்கவிடாமல் கத்திகொண்டிருக்கிரார்கள் கூட்டம் கூட்டமாக,
    அவர்களை முதலில் கேளுங்கள்.\\

    இப்பொழுது கேட்டுக்கொண்டுதானே இருக்கிறேன் பதில் கிடைக்கவில்லை 🙁

    \\விஷ்ணுவின் பத்தாம் அவதாரம் வர இந்துக்களின் கணக்குப்படி இன்னும் நாலரை லட்சம் ஆண்டுகள் உள்ளன.\\

    thanks for the information … ஒருவர் ஆயிரம் ஆண்டு ஆகும் என்கிறார்
    தயை கூர்ந்து இந்த link – ஐ பார்க்கவும்
    https://historicalrama.org/dateevents.html
    மற்றும் நான் தவறாக புரிந்து கொண்டேன் என்றால் சரியானது என்ன என விளக்கவும்..
    \\ஆனால் ரொம்ப நல்லவர் நீங்கள்,எவ்வளவு வலிச்சாலும் வலிக்காத மாறியே நடிக்கறீங்க\\

    என்ன செய்ய நண்பரே ..நானும் ஒரு திராவிடன் (தென்னாடுடையான்) தானே!!! இதெல்லாம் சகஜமப்பா ….

    எல்லாம் சரிதானே …

    வலியுடன்
    ப பிரசாத்.

    (edited and published)

  18. கருணாநிதிக்குப் போட்டியாக ஜெயலலிதாவும் கிறித்தவ, முஸ்லிம் மதவாதத்தை தூண்டும் விதமாக பேசிக்கொண்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டும் இருக்கிறார்
    தான் ஆட்சிக்கு வந்தால் கிறித்தவர்களுக்கு பெத்லஹெம் செல்ல
    அரசு பண உதவி செய்யும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

    மேலும் கிறிஸ்தவர்களுக்கும் ஹிந்து தலித்துகளுக்கு சமமான அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறுகிறார்
    கிறிஸ்தவப் பள்ளிகளின் கூட்டமைப்பு அதிமுகவுக்கே தங்கள் வோட்டு என்று கூறியுள்ளது.
    இவர்கள் கல்வியின் மூலம் கோடிகளைக் குவிக்கின்றனர்
    அதிமுக ஆட்சிக்கு வந்தால் அளவில்லாமல் கல்விக் கட்டணம் வசூலிப்பார்கள்
    எனவே அதிமுகவுக்கு வோட்டுப் போடக் கூடாது
    பா ஜ கவுக்கே நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும்

    இரா.ஸ்ரீதரன்

  19. மலை நாகராஜன்

    நாட்டுக்கு மின்சார உற்பத்தி பெருக்கமும், உணவு உற்பத்தி பெருக்கமும், உற்பத்தியான பொருட்களை வாடிக்கையாளருக்கு கொண்டுபோய் சேர்க்க நல்ல போக்குவரத்து வசதியும் தேவைப்படுகிறது.

    மக்களை மொழி, மதம், சாதி , என்று பல விதமாக பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்கள் பதவிக்கு வந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. மனித இனத்தை ஒற்றுமைப்படுத்தும் தலைவர்களே இன்று தமிழகத்திற்கு தேவை.

    தெலுங்கு உகாதி புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார் பகுத்தறிவு. இது வரவேற்கத்தக்கது தான். ஆனால் தமிழ் புத்தாண்டை சித்திரை முதல் தேதிக்கு பதிலாக தை பொங்கல் நாளன்று மாற்றுவதாக ஒரு கோமாளித்தனமாக உத்தரவு ஒன்று போட்டார் இவர். இந்த தேர்தலில் தமிழன் இவருக்கு ஒட்டு சாவடியில் போடவிருக்கிறான் இவருடைய அரசியல் வாழ்வுக்கு பூட்டு. மூன்றரை லட்சம் உயிரிழந்த தமிழர்களின் ஆவி இவருடைய குடும்ப கழகத்தை சுற்றுகிறது. பாவங்களின் விலை எதுவோ அதை கொடுத்துத்தான் தீரவேண்டும்.

    வேண்டுமானால் , தன்னுடைய பகுத்தறிவு வேடத்தை களைந்துவிட்டு, இறைவனே என்னை இயக்குகிறான், நான் வெறும் கருவிதான், எனவே நான் செய்த கொடுமைகளுக்கு எல்லாம் அவனே பொறுப்பாகும் என்று சொல்லி, ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். அரசியல் வியாபாரம் இனி போணியாகாது.

  20. அண்மையில் வேலூரில் நடந்த கூட்டத்திலும் , அதன் தொடர்ச்சியாக பல இடங்களிலும் பேசும்போது , கலைஞரின் உளறல் மிக அதிகமாகிவிட்டது. பூணூல் அணிபவர்களைப்பற்றி தேவை இல்லாமல் விமர்சனம் செய்துள்ளார். பூணூலில் ஒட்டு மொத்தமாக இவருக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ இல்லை. இவருக்கு ஆதரவு பூணூல்கள் பட்டியல் வருமாறு:-

    மூதறிஞர் ராசாசி (பூணூலை பிடித்துக்கொண்டு கழகத்துக்கு ஒட்டு போட சொன்னபோது)

    சுப்பிரமணிய சுவாமி ( ஜெயலலிதாவுக்கு எதிராக டான்சி மற்றும் சில வழக்குகளை போட்டு , மகளிர் அணியினரிடம் புனித காட்சி பெற்றபோது)

    வி பி சிங் ( வட இந்தியாவில் சத்திரிய வகுப்பை சேர்ந்தோர் பூணூல் அணியும் பழக்கம் இன்றும் உண்டு. வி பி சிங் சத்திரிய மன்னர் வகுப்பை சேர்ந்தவர்)

    டாக்டர் ராமதாசு ( வன்னிய குல சத்திரியர்களுக்கு பூணூல் அணியும் ஜாதி வழக்கம் உண்டு. டாக்டர் ராமதாசு வன்னிய இனத்தை சேர்ந்தவர் என்று யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை.)

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி (இவரது மருமகன் மற்றும் மனசாட்சியான முரசொலி மாறனை மத்திய அமைச்சராக ஐந்து ஆண்டுகள் வைத்திருந்த பூணூல் நண்பர்)

    மத்திய அமைச்சர் கபில் சிபல் ( ௨ ஜி குடும்பத்தை காப்பாற்ற அன்னை சோனியா உத்தரவின் பேரில் மிக தீவிரமாக முயன்று சுப்ரீம் கோர்ட்டால் கண்டிக்கப்பட்டவர் – இவரும் ஒரு பூணூலே.)

    பூணூல் பார்ப்பனர்கள் மட்டும் அணியும் ஒன்று அல்ல. விஸ்வ கர்மா மக்கள் பூணூல் அணிவர். சத்திரிய குல வன்னியர்கள் மற்றும் ராஜபாளையம் சத்திரிய குல ராஜுக்கள், சிவகாசி சத்திரிய குல நாடார்கள், வணிக வைஸ்ய செட்டியார்கள் , மண் பானை வனையும் குலாலர்கள், மதுரை பகுதியில் உள்ள சௌராஷ்டிர மக்கள், கொங்கு மண்டலத்தில் வாழ்கிற ஜேட செட்டியார்கள் இவர்கள் அனைவரும் பூணூல் அணிபவரே.

    தேர்தல் நேரத்தில் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் , கலைஞர் ஏதாவது உலருவதையே இந்த தேர்தலில் வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார். தேர்தல் முடியும் முன்னரே தேர்தல் தோல்வி ஜுரமா? வரும் ஜூன் மூன்றாம் தேதி நடைபெறும் கடற்கரை ஓர கலைஞர் பிறந்த நாள் விழாவில், நான் உங்களுக்காக கட்டையை மிதப்பேன் என்று , மீண்டும் புலம்ப ஆரம்பித்து விடுவாரோ என்று மக்கள் அனைவரும் அஞ்சுகிறார்கள்.

  21. ஐந்து கோடி க்கு மேல் பணம் திருச்சியில் பிடிபட்டது என்று செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது. இதுவரை பிடிபட்ட சுமார் முப்பது கோடி ரூபாய்களை ஒரு நபரும் கோரவில்லை என்பதிலிருந்தே அது முழுவதும் கருப்பு பணம் என்பதும் தேர்தல் விநியோகத்திற்கு என்று வந்தது என்பதும் தெளிவாக புரிகிறது. எனவே மஞ்சள் துண்டார் தேர்தல் கமிஷன் மேல் எரிந்து விழுவது அவரது வயிற்று எரிச்சலை மட்டும் தான் காட்டுகிறது.

    தொகுதிக்கு பத்து கோடி வீதம் சுமார் இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பது கோடி ரூபாய் விநியோகம் செய்யப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பே பத்திரிகைகளில் வந்த கிசு கிசு இப்போது உண்மை ஆகிவிட்டது.

    உண்மையான ஜனநாயகத்தின் சக்தியை தமிழகம் நிரூபிக்குமா? மதிமுகவினர் எங்களை ஆதரிக்கிறார்கள் என்று கலைஞர் அவராகவே சொல்வதை பார்க்கும் போது , கலைஞரின் கூட்டணி கோவிந்தா ஆகிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. வைகோ வாயை மூடிக்கொண்டிருக்கும் போது , கருணா தானே இப்படி கூறியிருப்பதை பார்த்து எல்லோரும் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள். பாவம் கருணா.

  22. ஸ்பெக்ட்ரம் ஊழலில் இறந்துபோன சாதிக் பாட்ஷா விற்கு அடுத்த படியாக, இரண்டாவதாக தீபக் புஷ்பநாதன் என்ற ராசாவின் உறவினர் இந்த வாரம் புதன் கிழமை இறந்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

    இந்த இரண்டாவது சாட்சியின் மரணச்செய்தி கிடைத்ததும் , மத்திய புலனாய்வு துறை பாக்கி இருக்கும் சாட்சிகளுக்கு எல்லாம் தக்க போலிசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு கொடுத்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.

    இந்த ௨ஜி சாட்சிகள் எல்லாம் தேர்தலுக்கு முன்பே இப்படி இறந்துபோவதால் , திமுகவின் வெற்றி வாய்ப்புக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும். என்ன செய்வது? உண்மைகளை புதைக்க முடியாது.

  23. வணக்கம்

    தேர்தல் ஆணையம் மீது மிகவும் கடுப்பாகத்தான் கருணா இருக்கிறார், உண்மைதான், எனவேதான் மறை முகமாக காங்கிரசுடன் கடுமையை தளர்த்துமாறு வேண்டியுள்ளதாக ஒரு செய்தி படித்தேன்,

    எல்லாம் இருக்க ஒரு சந்தேகம் உள்ளது. எல்லாம் வெளிப்புறத்தில் மிக கடுமையாக தேர்தல் ஆணையம் இருக்க, வாக்கு இயந்திரத்திலே கோல்மால் செய்து ஜெயித்து விட்டால்? மாங்கு மாங்கு என்று தேர்தலில் வேலை செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகளின் நிலை என்னவாகும்?

    தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல் படுமா? அல்லது மத்திய அரசின் கட்டுப் பாட்டிலே செயல் படுமா என்று எனக்கு தெரியாது.
    எனவே இந்த சந்தேகம். ஏனெனில் மக்களை திசை திருப்ப கருணா&காங்கிரஸ் ஏற்பாடாக இருக்கலாமோ?

    இத்தனை கட்டுப் பாடுகளை மீறி மக்கள் தி மு க கூட்டணியையே தேர்ந்து எடுத்து விட்டார்கள் என்று தாராளமாக சொல்லிக் கொள்ளலாம். ஆம், எதுவும் நடக்கும்.

    என்னைப் பொறுத்த வரையிலே இயந்திரம் இருக்கும் வரை இந்த தேர்தலின் மீது நம்பிக்கை இல்லை என்பதுவே உறுதி.

  24. தினகரன்,பத்திரிகை, மற்றும் சன், கலைஞர் தொலைக்காட்சிகள் குழுக்கள் தன் வசம் இருப்பதால் என்ன பொய் பிரச்சாரம் செய்தாலும் எடுபடும் என்று கலைஞர் நினைக்கிறாரா என்று தெரியவில்லை.

    விலைவாசி உயர்வு மிக கடுமையாக உள்ளது.அதனால் அடித்தட்டு மக்களிடையே கடுமையான அதிருப்தி உள்ளது. தேர்தல் சமயத்தில் தூக்கி வீசும் சில ஆயிரம் ரூபாய் காசின் மூலம் இந்த அதிருப்தியை போக்கிவிடலாம் என்று நினைத்தால் தமிழன் ஏமாளி அல்ல என்பது மே பதிமூன்றாம் நாள் மத்தியானம் ஒருமணி அளவில் புரியும்.

    கிராமப்புறங்களில் அறிவித்த மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நாலு முதல் ஆறுமணிவரை உள்ளது. இதைவிட கொடுமை என்ன என்றால் சென்னை மாநகரில் தேர்தல் வரை மின்வெட்டு இருக்காது. ஆனால் அதன் பிறகு சுமார் நாலு மணிநேர மின்வெட்டு வர வாய்ப்புள்ளது என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள் .

    சுமார் இரண்டாயிரம் மெகா வாட் பற்றாக்குறை இருப்பதாகவும், முந்தைய ஆட்சியில் உபரியாக பிற மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் நிலை இருந்ததாகவும், தற்போது மின்சார பிச்சை எடுக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிய வருகிறது.மின் உற்பத்தி பெருக்கத்துக்கு இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை என்பது தெளிவாகிவிட்டது.

    இவர் குடும்பத்தினர் அரசியல் மற்றும் தொழில் துறைகளில் செலுத்தும் ஆதிக்கம் எல்லோர் மனத்திலும் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

    இலங்கையில் நடந்த சிவிலியன் படுகொலையில் , சிங்கள படைக்கு இந்திய அரசு படைக்கலங்கள் கொடுத்து உதவியதாகவும் , தன்னுடைய குடும்ப நலன்களை காத்துக்கொள்வதற்காக , கலைஞர் வாய் மூடி மௌனம் சாதித்தார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. எனவே இலங்கையில் படுகொலை செய்யப்பட சுமார் இரண்டு லட்சம் தமிழர்களின் உயிர்கள் , ஆவியாக கலைஞர் குடும்பத்தை சுற்றுகின்றன.

    இரண்டு ஜி ஊழல் மக்களிடம் சுமார் இருபது சதவீத பாதிப்பை உண்டுபண்ணியுள்ளது.

    ஜெயாவின் ஊழல்கள் மிக குறைவு, அதுவும் அவர் செய்ததல்ல, அவரை சுற்றியுள்ள சிலர் செய்தது. ஜெயாவின் உறவினர் யாரும் இல்லை. ஆனால் கருணாவின் ஊழல்கள் கட்சியில் கொள்கை பரப்பாக , புதுடெல்லி திகார் சிறையிலேயே இன்னமும் உள்ளன. கருணாவின் உறவினர் பட்டாளம் எல்லோர் கண்களிலும் நன்கு தெரிகிறது.

    கிருட்டிணன் கொலை,
    தினகரன் ஆபீசில் மூவர் கொலை,
    சென்னை சட்டக்கல்லூரியில் போலீசார் கண்முன்னே சாதி சங்க மாணவர்கள் வெறியாட்டம்
    சென்னை உயர் நீதி மன்ற எல்லைக்குள்ளே , வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மேல் போலீசார் தாக்குதல்
    நாள் தோறும் பெருகிவரும் ரவுடிகள் அட்டகாசம்
    பெரிய தத்துவங்களை விளக்கிபேசும் பேச்சாளர்கள் போய், பாக்கியராஜ், தமிழ் கற்பு குஷ்பு, வடிவேலு, குமரி முத்து, தியாகு என்று ஐந்து நடிகர்கள் வசம் கழக பிரச்சாரம்,

    கலைஞர் குடும்பத்தை பற்றியே எப்போதும் பேசுகிறாயே, ஏன் இந்த பொறாமை? வேண்டுமென்றால் உனக்கும் ஒரு குடும்பத்தை செட்டப் செய்துகொள்ளேன் என்று சுமார் அறுபத்தைந்து வயதான ஜெயலலிதாவைப்பார்த்து, சுமார் அறுபது வயதாகும் ஸ்டாலின் அவர்களின் தரக்குறைவான பேச்சு நேற்று செய்தி தாள்களில் வெளியாகி உள்ளது.

    இலவச டிவியும், பிற வாக்குறுதிகளும் இந்தமுறை இவரையும், இவர் அரவணைக்கும் மக்கள் விரோத , சமூக விரோத, தீய சக்தியான காங்கிரசையும் காப்பாற்ற போவதில்லை.

    காங்கிரசுடன் சேர்ந்து , இவரும் மக்களால் நிராகரிக்க படுவார்,

    போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்று ஒரு சொலவடை உண்டு. இவ்வளவு கொடுமைகள் போதாது என்று , இவருக்கு வக்காலத்து வாங்கி, இரண்டு ஜி ஊழல் மூலமாக அரசுக்கு லாபம் வந்துள்ளது என்று பொய்கள் பேசி மக்களின் முன்னே கோமாளியாய் நின்ற வீரமணி, சுபவீ வகையறாக்கள் வேறு பிரச்சாரம். ஒரு மனிதனுக்கு போதாத காலம் வந்தால், எல்லா இடைஞ்சல்களும் வரும். சுபவீ, வீரமணி போன்றோரின் உறவு இவருக்கு எந்தவிதத்திலும் நல்லதல்ல.

    இந்த கோமாளிகளைவிட , மேலும் கெடுதல் காங்கிரசு உறவு , கலைஞரின் குடும்ப கட்சி அவ்வளவு தான். காங்கிரசுடன் கூட்டில்லை என்று அறிவித்து , வீரமணி போன்றோரிடம் மஞ்சள் பட்டு சாத்திக்கொண்ட இவர், பிறகு எந்த முகத்துடன் தேசவிரோத, மக்கள் விரோத காங்கிரசுடன் சேர்ந்தார்.?

    மக்கள் திமுக என்ற குடும்ப கட்சிக்கு இந்த தேர்தலில் அடிப்பார்கள் சாவு மணி.

  25. prasath p
    3 April 2011 at 9:28 pm
    \\\ இன்னும் பத்தாம் பசலித்தனமாக கழக பொய்களை,புரட்டுகளை நம்பி ஏமாறாமல் ஓட்டை யோசித்து போட்டாலே போதும். அந்த யோசிக்கும் திறனை ஆண்டவன் ஒவ்வோர் தமிழனுக்கும் அருளி காப்பாற்ற வேண்டும் என்ற அர்த்தத்தில் சொன்னேன் \\\

    யோசிக்கும் திறனை …. குஜராத் மற்றும் கர்நாடக மக்களுக்கு மட்டும் கொடுத்த ஆண்டவனுக்கு … தமிழ்நாட்டு மக்கள் மீது மட்டும் ஏனோ இந்த ஓரவஞ்சனை ?//////////////////

    சாமி கொடுக்க வரும் வரத்தை பூசாரிகள் (கருப்பு கள்ள பூசாரிகள்) தடுத்து கொண்டிருப்பதால்தான்,விரைவில் இதற்கும் ஒரு விடிவு வரும். அந்த திருட்டு பூசாரிகளுக்கு ஜிங் சக் போடும் ஒரு குள்ளநரிகூட்டமும் இங்குள்ளவர்களை மழுங்கடித்து வைத்திருப்பதுதான். விரைவில் இதற்கும் உண்டு விடிவு.கவலை வேண்டாம்

  26. \\ஆண் தி வேயில் ஒரு கடவுள் வந்து கொண்டிருப்பதாக மைக் போட்டு ஊரையே தூங்கவிடாமல் கத்திகொண்டிருக்கிரார்கள் கூட்டம் கூட்டமாக,
    அவர்களை முதலில் கேளுங்கள்.\\

    இப்பொழுது கேட்டுக்கொண்டுதானே இருக்கிறேன் பதில் கிடைக்கவில்லை /////
    இடம் மாறி கேட்பதுடன் நையாண்டி வேறு.

  27. \\விஷ்ணுவின் பத்தாம் அவதாரம் வர இந்துக்களின் கணக்குப்படி இன்னும் நாலரை லட்சம் ஆண்டுகள் உள்ளன.\\

    thanks for the information … ஒருவர் ஆயிரம் ஆண்டு ஆகும் என்கிறார்
    தயை கூர்ந்து இந்த link – ஐ பார்க்கவும்
    https://historicalrama.org/dateevents.html
    மற்றும் நான் தவறாக புரிந்து கொண்டேன் என்றால் சரியானது என்ன என விளக்கவும்../////////
    தவறாக புரிந்து கொண்டீர்களோ இல்லையோ, ஆனால் புரிந்து கொள்ள சென்ற இடம் கூட தவறனா தகவல் உள்ளதாக இருக்கலாம்.
    மேலும் விவரங்களுக்கு இந்த தளத்திலேயே விவரங்களும் யுக கணக்குகளும் உள்ளது தேவைபட்டால் படித்து கொள்ளவும்

  28. \\ஆனால் ரொம்ப நல்லவர் நீங்கள்,எவ்வளவு வலிச்சாலும் வலிக்காத மாறியே நடிக்கறீங்க\\
    என்ன செய்ய நண்பரே ..நானும் ஒரு திராவிடன் (தென்னாடுடையான்) தானே!!! இதெல்லாம் சகஜமப்பா ….
    எல்லாம் சரிதானே …
    வலியுடன்
    ப பிரசாத்.///////
    ஏன் உங்கள் அடையாளத்தை கூட மாற்றிக்கொள்ளும் நிலை வந்து விட்டதோ? அய்யோ பாவம்,
    அனால் நன்கு சிரிக்கும்படிக்கு உள்ளது உங்களின் பதில். இதற்கு கலைஜர் ஸ்டைலில் பதில் தரவேண்டாம்.ஏற்கனவே அப்படிதான் உள்ளது.

  29. மிகவும் நன்றாக இருக்கிறது இந்த பிரசுரத்தை அச்சிட்டு கிராம மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் அனைவருக்கும் தெரியும் பா ஜா க தான் இதை கிராம மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் கண்டிப்பாக மாற்றம் வரும்.

  30. சீமான் போன்றவர்கள் காங்கிரசுக்கு எதிராக மட்டும் காங்கிரசு போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்தனர். திமுக போட்டியிடும் தொகுதிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

    ஈழ தமிழர் வாழ்வில் இவ்வளவு பெரிய துயரம் நிகழ்ந்தபோது , அங்கு தன குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன இலாக்கா கிடைக்க வேண்டும் என்பதில் சோனியாவுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தார் முக. இவர் மட்டும் இரு ஆயிரத்து ஒன்பது பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு பத்து நாளுக்கு முன் சோனியாவிடம் பேசியிருந்தால் , இந்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது.

    எனவே சீமான் போன்றவர்கள் செய்த செயல் , ஒரு சிறு மோசடிகாரனை மட்டும் ( காங்கிரசு) விமர்சித்து, பெரிய ஊழல் மற்றும் தமிழின விரோத சக்தியான திமுகவை ஒன்றும் விமர்சிக்காதது ஒரு அரைகுறை மற்றும் கோமாளித்தனமானதே ஆகும். திமுக ஒரு மக்கள் விரோத இயக்கமே என்பதற்கு அவர்கள் இலங்கை சிவிலியன் தமிழர்கள் படுகொலை செய்ய பட்டதை தடுக்க ஒன்றும் செய்யாமல் , நாடகம் ஆடியது ஒன்றே போதும். இதற்கு சீமான் போன்றவர்கள் என்ன சொல்ல போகிறார்கள் ?

  31. //சாமி கொடுக்க வரும் வரத்தை பூசாரிகள் (கருப்பு கள்ள பூசாரிகள்) தடுத்து கொண்டிருப்பதால்தான்,விரைவில் இதற்கும் ஒரு விடிவு வரும். அந்த திருட்டு பூசாரிகளுக்கு ஜிங் சக் போடும் ஒரு குள்ளநரிகூட்டமும் இங்குள்ளவர்களை மழுங்கடித்து வைத்திருப்பதுதான். விரைவில் இதற்கும் உண்டு விடிவு.கவலை வேண்டாம்//
    சரியான வார்த்தை … திருட்டு பூசாரிகளை சிறையில் அடைக்க வேண்டும்..
    ஒன்லி காவி நிறம் .. ஒ கே …

    //இடம் மாறி கேட்பதுடன் நையாண்டி வேறு.//
    எதுக்கு சார் இவ்வளவு கோவம் .. பேச்சு பேச்சுதான் இருக்கணும் ….
    //தவறாக புரிந்து கொண்டீர்களோ இல்லையோ, ஆனால் புரிந்து கொள்ள சென்ற இடம் கூட தவறனா தகவல் உள்ளதாக இருக்கலாம்.
    மேலும் விவரங்களுக்கு இந்த தளத்திலேயே விவரங்களும் யுக கணக்குகளும் உள்ளது தேவைபட்டால் படித்து கொள்ளவும்//
    அப்ப நீங்க அத பாக்கவே இல்ல … பாஸ் கண்ணா தொறந்து பாருங்க …

    //ஏன் உங்கள் அடையாளத்தை கூட மாற்றிக்கொள்ளும் நிலை வந்து விட்டதோ? அய்யோ பாவம்,
    அனால் நன்கு சிரிக்கும்படிக்கு உள்ளது உங்களின் பதில். இதற்கு கலைஜர் ஸ்டைலில் பதில் தரவேண்டாம்.ஏற்கனவே அப்படிதான் உள்ளது.//
    இல்லிங்க சார் …. நான் உண்மையிலேயே திராவிடன் தான் … நீங்கள் என்னை பார்த்து பரிதாப படுவது மனசுக்கு ஆருதல இருக்கு ..நன்றி

  32. dear sir, when mr. vajpayee ji ruled, a good governance was there. he treated every party equal. today before proving proving in the floor, they imposed the president rule in uttarakhand. if they say that the cm is in horse trading, then what about the cm of ex karnata who did operation kamal. the rule is the same for every one, the cm should have allowed for floor test. the image of bjp has gone down by this incident.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *