தேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக

தமிழகத்தின் 14 வது சட்டசபைத் தேர்தல் வரும் ஏப். 13 ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இது வரையிலான தமிழகத் தேர்தல் களங்களுக்கு மாறான ஒரு காட்சி தெளிவாகவே தென்படுகிறது. அது, கழகங்களுக்கு மாற்றாக பாஜக உருவெடுத்திருப்பது தான்.

காமராஜர் தலைமையிலான ஆட்சிக்கு முடிவுரை எழுதிய 1967 சட்டசபைத் தேர்தலை அடுத்து, திமுக, அதிமுக ஆகிய இரு கழகங்களே மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வந்துள்ளன. இவ்விரு கட்சிகளும் எதிரெதிரே செயல்படுவதுடன், எதிரிக் கட்சி மீதான மக்கள் அதிருப்தியைப் பயன்படுத்தியே அரசியல் நடத்தி வந்துள்ளன. இந்த இரு கழகங்களுக்கும் மாற்றாக சென்ற தேர்தலில் உருவான நடிகர் விஜயகாந்தின் தேசிய திராவிட முற்போக்குக் கழகமும் இத்தேர்தலில் அதிமுகவுடன் அணி சேர்ந்துவிட்டது.

காங்கிரஸ் வழக்கம் போல சவாரி செய்யத் தோதான தோளைக் கண்டு தாவிவிட்டது. இரு கழகங்களையும் மாறி மாறி சார்ந்திருந்த காரணத்தாலேயே காங்கிரஸ் தமிழகத்தில் காற்றில் கரைந்த பெருங்காயமாகி விட்டது. தற்போது அது வெறும் காலி பெருங்காய டப்பா மட்டுமே. ஆனால், தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாகவும் பிரதான எதிர்க்கட்சியாகவும் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி, இப்போது, தமிழகத்தில் மாற்றங்களை விரும்பும் நடுநிலை வாக்காளர்களின் தளமாக உருவெடுத்திருக்கிறது.

பாரதீய ஜனதாவின் அரசியல் பயணம்

ponji_tதமிழகத்தில் பாஜக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக 1996 வரை இருந்ததில்லை. எனினும் மாநிலம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான தொண்டர்களுடன் வலுவான அடித்தளம் பாஜகவுக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு எதிரான மக்களின் அதிருப்தி அலை பொங்கிப் பிரவகித்த 1996 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதம் பெற்றதுடன், குமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றியும் பெற்றது. சி.வேலாயுதன் சட்டசபைக்கு பாஜக உறுப்பினராகச் சென்றபோது தான் கட்சியின் இருப்பு புலப்பட ஆரம்பித்தது. அத்தேர்தலில் அதிமுக 4 தொகுதிகளையே கைப்பற்ற முடிந்தது என்பதும், மதிமுக- கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன என்பதும், மதிமுக ஓரிடத்திலும் வெல்லவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒப்பீட்டுத் தகவல்கள்.

அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் (1998) பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. 30 தொகுதிகளில் வென்ற அக்கூட்டணியில் பாஜக 3 தொகுதிகளில் வென்றது. இந்த வெற்றியே மத்தியில் வாஜ்பாய் ஆட்சி அமைய அடிகோலியது. எனினும் ஜெயலலிதா ஆதரவை விளக்கிக் கொண்டதால் நாடு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது (1999).

இப்போதும் கூட்டணி பாஜகவை மையமாகக் கொண்டுதான் அமைந்தது. அதன் தமிழகத் தலைமையாக திமுக மாறியது. முந்தைய கூட்டணியிலிருந்த கட்சிகளில் அதிமுகவுக்கு பதிலாக திமுக மட்டும் மாறியது. அத்தேர்தலில் 26  தொகுதிகளில் கூட்டணி வென்றது; பாஜக 4  தொகுதிகளில் (கோவை-சி.பி.ராதாகிருஷ்ணன்; நீலகிரி- மாஸ்டர் மாதன்; திருச்சி- ரங்கராஜன் குமாரமங்கலம், நாகர்கோவில்- பொன்.ராதாகிருஷ்ணன்)   வென்றது. வாஜ்பாய் ஆட்சியும் தொடர்ந்தது.

2001 சட்டசபை தேர்தலில் திமுக அணியில் இருந்த பாஜக 4 தொகுதிகளில் (காரைக்குடி- ஹெச்.ராஜா; மயிலாடுதுறை- ஜெகவீரபாண்டியன்; மயிலாப்பூர்- கே.என்.லட்சுமணன்; தளி- கே.வி.முரளிதரன்)  வென்றது. எனினும் அத்தேர்தலில் திமுக ஆட்சியை அதிமுகவிடம் இழந்தது. எதிர்க்கட்சி வரிசையில் பாஜக தனது ஜனநாயகக் கடமையை செவ்வனே செய்தது.

இந்த இரு (1998, 1999) தேர்தல்களும், பாரதீய ஜனதா கட்சியை தீண்டத் தகாத கட்சியாகக் கருதி வந்த இரு கழகங்களின் மனப்பான்மையில் ஏற்பட்ட மாற்றத்தை அம்பலப்படுத்தின. அதன் விளைவாகக் கிடைத்த வெற்றியிலும், மத்தியில் அமைந்த ஆட்சியிலும் அவை பங்கெடுத்தன.

ஆனால், 2004 தேர்தலில் தேசிய அளவில் பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணி பிரகாசிக்கவில்லை. அத்தேர்தலில் காங்கிரசை மையப்படுத்தி அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தமிழகத்திலும் (39 தொகுதிகளிலும்) தேசிய அளவிலும் வென்று ஆட்சி அமைத்தது. அதிமுக, பாஜக கட்சிகள் மட்டும் ஒரு புறமும் பிற கட்சிகள் அனைத்தும் மறுபுறமும் அணி மாறி நின்ற நிலையில், வாக்குக்களின் கூட்டணியால் எதிரணி வென்று வாகை சூடியது. ஆயினும் அதிமுக- பாஜக கூட்டணி 41 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றது.

அதன் பிறகு மீண்டும் அரசியல் தீண்டாமைப் படலம் துவங்கியது. ஜெயலலிதா பாஜகவை சுமையாகக் கருதி நாசூக்காகக் கழற்றிவிட்டார். வாஜ்பாய் ஆட்சியில் சக்திவாய்ந்த துறைகளில் கோலொச்சியதை மறந்துவிட்டு, ‘மதச்சார்பின்மை காவலர்’ என்று கூறிக்கொண்டு, பாஜகவை வசைபாடத் துவங்கினார் கருணாநிதி.

2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அரசியல் தீண்டாமை தொடர்ந்தது. தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி, இடதுசாரிகளுடன் கைகோர்த்த திமுக கூட்டணி ஆகியவற்றுடன் பாஜக தனித்து மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது. எதிர்பார்த்தது போலவே பாஜக தோல்வியுற்றது. திமுக கூட்டணி 27 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 12 தொகுதிகளிலும் வென்றது. பாஜக 2.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. கன்யாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 2.54 லட்சம் வாக்குகள் பெற்று, 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

இந்நிலையில்தான் தற்போது தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிறது. இரு கழகங்களும், வெல்வதற்கு அடிப்படையான வாக்கு வங்கி, தேர்தல் கூட்டணிகளின் அடிப்படையில் வியூகம் அமைத்த காரணத்தால், இம்முறையும் பாஜக தனித்து விடப்பட்டுள்ளது. ஆனால், இந்த தனிமைப்படுத்தப்பட்ட நிலையே பாஜகவின் தனிச்சிறப்பாக மாறி இருக்கிறது.

மாற்றாக உருவெடுக்க கிடைத்த வாய்ப்பு

பாஜகவுடன் கூட்டு சேர்வது சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த வாக்குகளை இழக்கக் காரணமாகி விடும் என்ற கணக்கீட்டால்தான் பாஜகவை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்கின்றன. அதே சமயம், தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக மட்டுமல்லாது, மதிமுக, பாமக போன்றவையும் பாஜகவுடன் கூடிக் குலாவியவைதான். தற்போது அவை நெருக்கம் காட்டாமல் விலகி இருக்கக் காரணம் கொள்கை தான் என்று சொன்னால் மக்கள் சிரிப்பார்கள். இப்போதைக்கு பாஜகவிடம் பெரும் வாக்கு வங்கி இல்லை என்ற கருத்தால் தான் அக்கட்சிகள் தீண்டாமையைக் கடைபிடிக்கின்றன. அந்நிலையை மாற்ற பாஜகவுக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இத்தேர்தல்.

சென்ற சட்டசபைத் தேர்தலில் இரு கழகங்களுக்கும் போட்டியாக உருவெடுத்த தேமுதிக, ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதிமுகவுடன் அங்கம் வகிக்கிறது. இதே அதிமுகவும் ஊழல் குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டதல்ல என்பது தமிழக மக்கள் அறிந்தது. இப்போது தமிழக மக்கள் முன்னுள்ள ஒரே வாய்ப்பு ‘இரு கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி’ என்று தேர்ந்தெடுப்பதாகவே இருக்கிறது.

அதிமுகவுடன் ஊடல் கொண்டு மதிமுக தேர்தலைப் புறக்கணித்த நிலையில், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவுடன் ஐக்கியமான நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான – ஊழலை சற்றும் ஏற்காத மக்களின் வாக்குகளை பெறும் முனைப்பில் பாஜக மட்டுமே இருக்கிறது. இது பாஜகவின் பலம். தனித்து போட்டியிடுவது பாஜகவின் பலவீனமல்ல; பலம் என்பதை இத்தேர்தல் நிரூபிக்கும்.

தேசிய அளவில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலை அம்பலப்படுத்தியதில் பாஜகவின் பங்களிப்பு அதிகம். காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஊழலையும் வெளிப்படுத்தி நாட்டைக் காக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பாஜகவுக்கு மட்டுமே, நேர்மையாளர்களின் வாக்குகளைக் கோர உரிமை உள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், இமாச்சல், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தனித்தும் ஜார்க்கன்ட், பீகார், பஞ்சாப் மாநிலங்களில் கூட்டாகவும் ஆளும் பாஜகவுக்கு, ஆட்சித்திறனின் அடிப்படையில் தமிழக மக்களிடம் வாக்கு கோரவும் தகுதி உள்ளது.

இன்று தேசிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ள மாநிலங்கள் அனைத்தும் தே.ஜ.கூட்டணி ஆளும் மாநிலங்களே. குஜராத் மாநிலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி சதவிகிதத்தைவிட தனிப்பட்ட அளவில் பல மடங்கு வளர்ச்சியை எட்டி இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் புகார்களும் (கர்நாடகா தவிர) இல்லை. ஆக, தமிழகத்தை நாசமாக்கும் ஊழல் மயமான அரசியல், இலவசத் திட்டங்களால் விலை பேசப்படும் மக்கள், மதுவில் மூழ்கி மடியும் இளைய தலைமுறை போன்ற இழிவுகளை நீக்குவதற்கான ஒரே மாற்றாக பாஜக மட்டுமே உள்ளது.

தனித்துப் போட்டியிடும் பாஜக, தனக்கென உள்ள வாக்கு வங்கியை மேம்படுத்தவும், ஊழல் புகழ் கழகங்களிடமிருந்து மக்களை மீட்க மாற்றுத் தளமாக உருவெடுக்கவும் கிடைத்துள்ள வாய்ப்பு இத்தேர்தல்.

மாற்று அணியின் வேட்பாளர் படை

இம்முறை தான், பிற கட்சிகளை சார்ந்திருக்காமல் தனித்துக் களம் காண துணிவுடன் முடிவெடுத்தது தமிழக பாஜக. அதன் மூலமாக, இரு கழகங்களை சார்ந்து அரசியல் நடத்திவந்த நிர்பந்த நிலையை மீறி, தனக்கென சுய மரியாதை உள்ளதை (இதைத் தான் தங்கள் மூலதனமாக வாயளவில் இரு கழகங்களும் முழங்குகின்றன). பாஜக நிரூபித்தது. அது மட்டுமல்ல, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 208 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். இதில் பாஜக 193 தொகுதிகளிலும் ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதாதளம் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

பாஜக தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் (மயிலாப்பூர்), மாநிலத் துணைத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் (வேளச்சேரி) ஆகியோரும் களம் காண்கின்றனர்.

193 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டாலும் சுமார் 50 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறது; அதிலும் குறிப்பாக 15 தொகுதிகளில் வெற்றியை இலக்காகக் கொண்டு திட்டமிட்டு பணி புரிந்து வருகிறது. மலை போன்ற இரு கழகங்களின் பணபலம், ஆதிக்கம், பிரசார பலத்தின் முன் பாஜகவின் பலம் குறைவுதான் என்றாலும், கொள்கையில் ஊன்றிய தொண்டர் படை, தேசியத் தலைவர்களின் வழிகாட்டுதல், பாஜக மாநில முதல்வர்களின் பிரசாரம் ஆகியவற்றின் ஆதரவில் தமிழக பாரதீய ஜனதா உற்சாகத்துடன் வாக்குகளை சேகரித்து வருகிறது.

tnbjpz

இத் தேர்தலில் பாஜக நம்பிக்கையுடன் களம் காணும் தொகுதிகள் பட்டியலில், குமரி மாவட்டத் தொகுதிகள் ஆறும் உள்ளன. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இத்தொகுதிகளில் பாஜக பெற்ற வாக்குகளே இந்த நம்பிக்கைக்கு காரணம். பெரும்பாலான தொகுதிகளில் இரண்டாமிடம் பெற்ற பாஜக, குறைந்தபட்ச வித்தியாசத்தில்தான் வெற்றியைத் தவற விட்டது. இம்முறை கடும் உழைப்பாலும் திட்டமிட்ட பிரசாரத்தாலும் நாகர்கோவில் (பொன் ராதாகிருஷ்ணன்), கன்யாகுமரி (எம்.ஆர்.காந்தி), பத்மநாபபுரம் (சுஜித்), குளச்சல் (ரமேஷ்), விளவங்கோடு (ஜெயசீலன்), கிள்ளியூர் (சந்திரகுமார்) ஆகியோரை சட்டசபைக்கு அனுப்ப தீவிர களப்பணி புரிகின்றனர் பாஜக தொண்டர்கள். ‘’இரு கழகங்களின் யோக்கியதையும் தெரிந்துவிட்டதால், இம்முறை தங்களை மாற்றாகக் கருதி மக்கள் தேர்வு செய்வார்கள்’’ என்கிறார், பொன்.ராதாகிருஷ்ணன்.

அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தளி (கே.எஸ்.நடராசன்), ஓசூர் (பாலகிருஷ்ணன்) தொகுதிகளிலும் வாகை சூட முடியும் என்று பாஜக கருதுகிறது. கர்நாடகா மாநிலத்தின் அண்டையில் உள்ளதாலும், இங்கு ஏற்கனவே பாஜக வென்றுள்ளதாலும், வெற்றி வாய்ப்பு பிரகசாமாக இருக்கிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா இங்கு வந்து பிரசாரம் செய்தால் பாஜகவின் வெற்றி உறுதியாகும்.

அடுத்ததாக இந்து இயக்க செல்வாக்கு மிகுந்த கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பாஜக பார்வையைப் பதித்துள்ளது. குறிப்பாக கோவை தெற்கு (சி.ஆர்.நந்தகுமார்), கோவை வடக்கு (சுப்பையன்), மேட்டுப்பாளையம் (கே.ஆர்.நந்தகுமார்), தொண்டாமுத்தூர் (ஸ்ரீதர மூர்த்தி), திருப்பூர் வடக்கு (பாயிண்ட் மணி), திருப்பு தெற்கு (பார்த்திபன்) ஆகியோர் அதிக வாக்குகள் பெற வாய்ப்புள்ளது. சற்று கடுமையாக உழைத்தால் கழக கூட்டணிகளுக்கு இவர்களால் கடும் நெருக்கடி கொடுக்க முடியும். கடைசி நேர மாற்றங்களால் வெற்றி பெறவும் வாய்ப்புண்டு.

கோவையைச் சேர்ந்தவரும் பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான எஸ்.ஆர்.சேகர், ”இம்முறை பாஜக ஆளும் மாநிலங்களின் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி பிரசாரம் செய்கிறோம். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கோவை, திருப்பூர், சென்னையில் பிரசாரம் செய்து சென்றது தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுநிலை வாக்காளர்களிடம் சுஷ்மாவின் பிரசாரம் பலனளித்துள்ளது” என்கிறார்.

சென்னையில் மயிலாப்பூர் (வானதி சீனிவாசன்), வேளச்சேரி (தமிழிசை சௌந்தர்ராஜன்) ஆகியோர் நல்ல போட்டியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தவிர, திருச்செந்தூர் (ராமேஸ்வரன்), ஈரோடு மேற்கு (பழனிசாமி), திண்டுக்கல் (பி.ஜி.போஸ்), திருச்சி மேற்கு (திருமலை), சிதம்பரம் (வி.கண்ணன்), சிவகங்கை (பி.எம்.ராஜேந்திரன்), காரைக்குடி (சிதம்பரம்), பரமக்குடி (சுப.நாகராஜன்), மயிலாடுதுறை (கே.வி.சேதுராமன்), தென்காசி (எஸ்.வி.அன்புராஜ்) ஆகியோரும் தேர்தல் களத்தை மாற்றும் வேட்பாளர்களாக பவனி வருகிறார்கள். திருப்பத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் இஸ்லாமியரான ஷேக்தாவூத் என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.

கடமையைச் செய்: பலன் தானாக வரும்

பகவத் கீதையில் கண்ணன் கூறிய உபதேசம் இது. இந்தக் கண்ணோட்டத்துடன் தான் தமிழக பாஜக தேர்தலில் போட்டியிடுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெறும் தலைகளிடையே, இரு கழகங்களின் பணபலத்திடையே, கொள்கையற்ற இரு கூட்டணிகளிடையே போராடுவது பத்மவியூகத்தில் அபிமன்யூ போராடுவது போன்றது தான். பாரத அபிமன்யூவுக்கு உதவிகள் தடுக்கப்பட்டன. ஆனால், தமிழக பாஜகவின் உதவிக்கு வந்திருக்கிறது பிற மாநில முதல்வர்கள் படை. எனவே, இந்த அபிமன்யூ களத்தில் சாதித்துக் காட்டுவான்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டவர்கள் தமிழகம் வந்து பிரசாரம் செய்வது பாஜக வேட்பாளர்களுக்கு கண்டிப்பாக உறுதுணை புரியும். கழகங்களின் தேர்தல் அறிக்கைக்கு போட்டியாக லேப்டாப் இலவசம், பசு இலவசம் ஆகிய கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன், பூரண மதுவிலக்கு, விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை, தனி வாரியத்திடம் ஹிந்து கோயில்கள், மதமாற்றத் தடைச் சட்டம், மத்தியில் தமிழை ஆட்சி மொழி ஆக்குதல் உள்ளிட்ட தனித்துவ அம்சங்களுடன் பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களை சிந்திக்கச் செய்துள்ளது.

தமிழகத்தை ஆளும் கூட்டணியும், அதனை எதிர்க்கும் பிரதானக் கூட்டணியும் பேசும் மதச்சார்பின்மை போலியானது என்பதும், அக்கூட்டணிகளிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகள் மூலம் உறுதியாகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி, கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் அங்கம் வகிக்கும் தமுமுகவின் அரசியல் அமைப்பு. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக், தேசப்பிரிவினைக்கு வித்திட்ட அரசியல் அமைப்பு. அந்தக் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டே பாஜகவை இந்துமத வெறியர்களின் கட்சி என்று கூப்பாடு போடும் கழகங்களின் மாய்மாலங்களுக்கு இத்தேர்தல் படிப்பினை அளிக்க இருக்கிறது.

சிறுபான்மை மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் கல்விக் கடனுதவி முறையற்றது; அதனை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் பிரசார யாத்திரை சென்ற மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் பயணத்திற்கு அப்போது நல்ல ஆதரவு கிடைத்தது. அதனை வாக்குகளாக மாற்ற இத்தேர்தல் வழிகோலும்.

தவிர பாரதீய ஜனதா சார்ந்த சங்க பரிவார் அமைப்புகளான ராஷ்ட்ரீய  ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்),  ஹிந்து முன்னணி,  விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்), அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி),  வனவாசி கல்யாண் ஆசிரமம், பாரதீய கிஸான் சங்கம் (பி.கே.எஸ்), சேவாபாரதி உள்ளிட்ட அமைப்புகள் கடந்த  பல ஆண்டுகளாக தமிழகத்தில் ஆற்றிய பணிகளால் தனி முத்திரையைப் பதித்துள்ளன. இந்த அமைப்புகள் ஒவ்வொன்றுக்கும் தமிழகத்தில் தனித்தனியே ஆயிரக் கணக்கான கிளைகளும் தனித்த தொண்டர் படையும் உண்டு. இவை நேரடியாக தேர்தல் களத்தில் குதிக்காவிட்டாலும், பாஜகவின் அடிப்படை வாக்குவங்கியை உருவாக்கியுள்ளன. இவற்றின் வெளிப்படையான தாக்கமும் இத்தேர்தலில் தெரியவரும்.

அரசியல் என்பதே வியாபராமாகவும், கூட்டணி என்பதே பேரம் பேசுவதற்கான உபாயமாகவும் மாறியுள்ள சூழலில், தனித்தன்மையை இழக்காமல், சொந்தக்காலில் நின்று தேர்தலைச் சந்திக்கிறது தமிழக பாரதீய ஜனதா கட்சி. ஊழல் கறை படியாத கட்சி, நாட்டின் நலனுக்கு பாடுபட்ட வாஜ்பாயை பிரதமராக்கிய கட்சி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரையும் சமாகக் கருதும் கட்சி என்ற அடிப்படைகளுடன் மக்களை அணுகுகிறது பாஜக.

போட்டியிடும் வேட்பாளர் எவருமே சரியில்லை; எனவே ‘49 – ஓ’ வுக்கு வாக்களிப்போம் என்று கூறுகிற அவநம்பிக்கையாளர்களுக்கும், தேர்தலை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் மதிமுகவினருக்கும் வாக்களிக்கும் வாய்ப்பை பாஜக அளித்துள்ளது. இரு கழகங்களும் தமிழகத்தில் மாறி மாறி நடத்திவரும் அராஜகங்களுக்கும் கலகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மாற்று அரசியல் விரும்புவோருக்கு முன்பு, வாக்குகளை கோரி நிற்கிறது பாஜக.

ஆளும் அணி முதலணி; எதிர்க்கும் அணி இரண்டாவது அணி; பிறர் மூன்றாவது அணி என்ற வழக்கமான ஊடக ஒப்பீடுகளைப் பற்றிய கவலையின்றி, மாற்று உருவாக்குவதே முக்கியம் என்ற அடிப்படையில் போராடும் பாஜக அதிகபட்ச வாக்குகளையும், இயன்ற வெற்றிகளையும் பெறுவது தமிழக நலனுக்கு நல்லது. கடமையை செய்கிறது தமிழக பாஜக. பலன் கிடைக்காமலா போய்விடும்?

60 Replies to “தேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக”

 1. இரு கழகக் கூட்டணிகளுக்கும் மாற்றாக பா.ஜ.க. தமிழ் நாட்டில் உருவாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழ் நாட்டில் காங்கிரசும், கம்யூனிஸ்ட், பிரஜா சோஷலிஸ்ட் ஆகிய கட்சிகள் தான் தேசிய கட்சிகளாக இருந்தன. காங்கிரஸ் தவிர மற்றவை பலமாக வளராத நிலையில் தி.மு.க. காங்கிரசை ஒழித்து விட்டால் தமிழ் நாடு நம்முடையதாக ஆகிவிடும் என்று முனைப்புடன் செயல் பட்டது. காரணம், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வ.உ.சி. சிறை சென்ற பிறகு காங்கிரஸ் மிதவாதிகள் கைக்குப் போயிற்று. அதில் பெரும்பாலும் பிராமண மேட்டுக் குடியினர்தான் தலைவர்களாக இருந்தனர். பணக்காரர்களாகவும், உயர் நிலையிலும் இருந்தார்கள். அப்போது காங்கிரசுக்குள் இருந்த ஈ.வே.ரா., வரதராஜுலு நாயுடு போன்றோர் பிராமண தலைமையை எதிர்த்தார்கள். ஆனால் வலுப்பெற முடியவில்லை. காரணம், காமராஜ் அவர்களை முன்னிலைப் படுத்தி சத்தியமூர்த்தி அரசியல் செய்தார். காமராஜ் எனும் ஆல விருட்சத்துக்கு அடியில் திராவிட கட்சிகள் வளர முடியவில்லை. உடனே மித்திர பேதம் செய்து, காங்கிரசை பிராமணர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து பிரித்து வெற்றி கண்டனர் திராவிட இயக்கத்தார். பிராமண எதிர்ப்பு என்பது இருமுனை ஆயுதமாக அவர்களுக்குப் பயன்பட்டது. எல்லா மக்களும், காங்கிரசார் உட்பட பிராமண எதிர்ப்பில் ஒன்று பட்டனர். இது நல்ல வியாபாரம் என்று தி.மு.க. அதை கையில் எடுத்துக் கொண்டது. பிராமண ஆதிக்கம் என்ற பொய்யான குற்றச்சாட்டை இன்று வரை தி.மு.க. செய்து கொண்டு, பிராமணர் அல்லாதவர்களைத் தன பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது. அது முதல் தமிழ் நாட்டில் எந்த கட்சி உருவானாலும், “திராவிட” என்கிற அடைமொழியோடுதான் செயல் பட முடிந்தது. காங்கிரசும் மெல்ல மெல்ல தனது தனித் தன்மையை இழந்து திராவிடக் கட்சியாக உருவெடுத்தது. அதில் முன்னிலை வகிக்கும் கூட்டம் பெருகியது. இன்று பீட்டர் அல்பான்ஸ் போன்றவர்கள் திராவிடக் கட்சியாரைக் காட்டிலும் அழுத்தமான பிராமண எதிரி. பொதுவாக பிராமணர், நகரத்தார், நெல்லை பிள்ளைமார், ஆற்காடு முதலியார் என்ற மேல் ஜாதியார் என்று வர்ணிக்கப்பட்டவர்கள் திராவிட கட்சிகளைப் பொதுவாக ஆதரிப்பதில்லை. அதிலும் கூட பலர் இன்று வண்ணம் மாறிவிட்டனர். அவ்வளவு ஏன், பிராமணரில் கூட சிலர் இன்றும் திராவிடக் கட்சிகளுக்குப் பல்லாண்டு பாடுவதும், வாழ்த்துவதும், தங்களை பூண்டோடு ஒழிக்க நினைக்கும் அந்த கட்சிகளுக்கு இப்படி ஜால்ரா தட்டுகிறோமே என்கிற ‘சொரணை’ கூட இல்லாத ஜன்மங்களும் இன்றும் இருக்கின்றன. ஜாதி பேதங்கள் இல்லை, ஜாதிப் பிரிவுகள் சொல்வது பாவம் என்றெல்லாம் சொன்னவன் பாரதி. அவன் வழி நடப்பவர்கள் எவரும் ஜாதி அரசியல் செய்வதை விரும்ப மாட்டார்கள். அரசியல் நடத்தி பிழைப்பு நடத்தும் சிலர்தான் ஜாதிகளை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டு அலைகிறார்கள். தமிழ் நாடு மாற வேண்டுமானால், இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல தமிழ்நாடும் தேசிய அரசியலில் இணைத்துக் கொள்ள வேண்டுமானால் ஒரு அவசர, அவசிய மாற்றம் தேவை. அந்த மாற்றம், இங்குள்ள திராவிட, திராவிடம் அல்லாத எல்லா கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு ஓர் புதிய சக்திக்கு, குஜராத் போல முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தர வேண்டும். பா.ஜ.க.வை மதவெறியர்கள் என்றும், பண்டாரம் பரதேசி என்றும் இழித்துப் பேசியவர்கள் மக்களை கோடி கொடியாகக் கொள்ளை அடித்த பின்பும் இன்னமும் மக்கள் இந்த கேடு கேட்டவர்களை நம்பினால், தமிழ்நாடு அழிந்து போவது நிச்சயம். தமிழக மக்களுக்கு இந்த உண்மை என்று புரிகிறதோ, அன்றுதான் தமிழரும், தமிழ் நாடும் புத்துயிர் பெரும். அதுவரை, உடலில் அழுகிய பகுதி போலத்தான் இந்தியாவில் தமிழ்நாடு விளங்கும்.

 2. இலவசங்களை தவிர்த்திருக்கலாம். இந்தமுறை என் ஓட்டு பா ஜ க விற்குத்தான்

 3. இல கணேசன் அதிமுக ஓட்டுக்களை பிரிப்பதற்காக திமுகவிடம் பெட்டி வாங்கிவிட்டதாக சொல்கிறார்களே? பல காங்கிரசாரைப் போல இவர் BJPஇல் உள்ள திமுககாரரோ? BJPக்கு ஓட்டு போடுவதன் மூலம் திமுக வெற்றி பெறுமானால் என்ன பயன்?

 4. திரு.சேக்கிழான்,
  நம்மள வீட்டுக்குத்தான் அனுப்பராங்கன்னு நம்பி ஆட்டோல ஏறினேன்.
  அது இன்னொரு க்ரூப் இருக்கிற மூத்திர சந்துக்கு போச்சு.

  என் நிலையும் இதுதான்.
  பா.ஜ.கவிற்கு ஓட்டைப் போட்டு அடுத்த 10 வருடங்கள் கழித்தாவது
  ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால் எங்கள்
  தொகுதியில் பா.ஜ.க நிற்க வில்லை. என்ன செய்வது என்று தெரியாமல்
  குழம்பியுள்ளேன்.

 5. நல்ல ஒரு விஷயம் இந்த தேர்தலில் நடைபெற இருக்கிறது!! அது தான் change of party அதாவது தமிழகத்தில் உள்ள ஒரு கொடுமை ஒன்று தி மு க அல்லது
  அ தி மு க தான் ஆட்சி கட்டிலில் உள்ளன!!?? ஆனால் மாற்று எப்பொழுது உருவாகும் என்று மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்!! இந்த தேர்தலில் இல்ல விட்டாலும் கூட நிச்சியம் அடுத்த எந்த தேர்தலிலும் பாஜாக க்கு ஒரு தனி இடம் உண்டு அதை மறுக்க எந்த திராவிட கட்சியாலும் முடியாது!!!
  ஏனென்றால் தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள் மக்களுக்காக என்பதை மறந்து விட்டு எனக்காக, என் குடும்பத்திற்காக என்று கோசம் போடாத அளவிற்கு அவர்களின் செயல்பாடு உள்ளது!! நிச்சயம் நாம் நம் குலதெய்வத்தை வேண்டுவோம் ஒரு நல்ல ஆட்சிக்காக நல்ல மாற்றம் வர வேண்டும்!! மக்களுக்காக அரசியல்வாதிகள் இருக்க வேண்டும்!!
  வ உ சி போல முத்துராமலிங்க தேவர் போல செண்பகராமன் போல
  சுப்ரமணிய சிவாவை போல நல்ல மனிதர்களும் அரசியலில் இருக்கிறாகள் அவர்களை மக்கள் அடையாளம் கண்டு ஒட்டு போட வேண்டும் தனக்கு என்பதை விட்டு மக்களுக்கு என்பதை கட்சிகளும் உணர வேண்டும்!!
  “வந்தே மாதரம்”

 6. தமிழக வாக்காளர்களுக்கு முன் இப்போது உள்ள பிரச்சினை தற்போதைய ஆளும் கட்சியான திமுக மீண்டும் பதவிக்கு வரலாமா கூடாதா? என்பதே ஆகும்.

  விலை வாசி கடுமையான உயர்வு, கடுமையான மின்வெட்டு, இவை இரண்டும் மக்களை கடுமையாக பாதித்து உள்ளன. படித்த மற்றும் பொருளாதார அறிவு உள்ளவர்களோ தமிழக அரசின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி யை தாண்டிவிட்டதை நினைத்து , அரசு ஊழியர்களுக்கு கூட சம்பளம் வழங்க நிதி இல்லாமல் , அவர் குடும்பம் தமிழகத்தை சுரண்டிவிட்டதே , எதிர் காலம் என்ன ஆகுமோ என்று பயப்படுகிறார்கள்.

  ஆனால் தமிழக ஆளும் கட்சியும், அதன் தலைவரும் ௨ஜி என்ன, இதைப்போல ஆயிரம் மடங்கு ஊழல் செய்தாலும் மக்கள் என் பக்கமே என்று , மக்களை மடையர்களாக நினைக்கிறார்கள். மாற்று சக்தியாக , பாஜக போன்ற நல்ல கட்சிக்கு தமிழகத்தில் ஒட்டு போட மாட்டார்கள். ஏனெனில் பாஜக ஓட்டுக்கு காசோ, டாஸ்மாக்கோ கொடுக்காது. எவன் ஓட்டுப்போடுவான்?

  பாஜக நல்ல கட்சியே என்றாலும், தமிழனுக்கு அது ஒரு நல்ல மாற்று சக்தியாக இன்னும் படவில்லை. கோவை , நெல்லை, குமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மட்டுமே ஓரளவு பாஜக வளர்ந்துள்ளது. எனவே காங்கிரசுக்கு சாவு மணி அடிப்பதற்காக , பாஜக ஆதரவாளர்கள் காங்கிரசுக்கு எதிராக ஓட்டுப்போடுவர். காங்கிரசு கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் போராடுகிறார்கள். ராட்சத பணபலம் உள்ள ஊழல் திமுகவை , குறைந்த ஊழலான அதிமுக மட்டுமே இன்றைய நிலையில் தோற்கடிக்க முடியும். பாஜகவினர் அவர்கள் வெற்றிபெற வாய்ப்புள்ள சுமார் பதினைந்து தொகுதிகளை தேர்ந்தெடுத்து , அவற்றில் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெற முழுகவனம் செலுத்தவேண்டும்.

  திமுக ஆட்சி நீக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் மிகவும் மும்முரமாக உள்ளனர். தமிழனின் தலைஎழுத்து இந்த தீய சக்திகளிடம் அகப்பட்டுக்கொண்டு , டாஸ்மாக்கிலே குடித்து வயிறு கருகி , கழகத்தலைவர்கள் வீட்டு வாசலில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய சூழலில் தான் மக்கள் உள்ளனர். காங்கிரசு கூட்டணி இந்த தேர்தலுடன் ஒழிந்துவிடும்.

 7. அனைவருக்கும் வணக்கம் ,
  பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையை படித்தாலே தெரியும்.அதில் உருப்படியான சில விஷயம்கள் இருந்தாலும். அவர்களின் அறிக்கையில் சொல்ல பட்ட முதல் அறிவிப்பை பாருங்கள் . தமிழ் புத்தாண்டை தையில் இருந்து பாரம்பரியமாக கொண்டாடிய ஆரிய அடிமை முறை படி சித்திரை மாதத்திற்கே மாற்றுவோம் என்பது தான். இதற்காகவே இவர்களுக்கு ஒட்டு போடகூடாது. இவர்களின் முதல் அறிவிப்பே தமிழனின் தனி தன்மையில் கை வைக்கும் பொழுது இவர்களை எப்படி தமிழகத்தின் ஆட்சி நாற்காலியில் அமரவைக்க முடியும். தமிழரின் திருவள்ளுவர் ஆண்டை ஏற்காத இந்த பா.ஜ.க மத்தியில் தமிழை ஆட்சி மொழி ஆக்குகின்றதாம். இதே பா.ஜ.க 2000 இல் மத்தியில் ஆட்சி வகித்த பொது அப்போது கலைஞர் தமிழை ஆட்சி மொழி ஆக்கும்படி கடிதம் முலம் வற்புறுத்தினர். அப்போது என்ன செய்தது இந்த பா.ஜ.க அரசு . ஆக்கியதா தமிழை ஆட்சி மொழியாக. தமிழகத்திற்கு பல நன்மைகள் தரும் சேது சமுத்ர திட்டத்தை மதத்தின் பெயரால் இல்லாத ராமரின் பெயரால் முடக்கி போட்டதே இந்த பா.ஜா.க தான் இப்போது வெட்கம் இல்லாமல் அந்த மணல் திட்டை தேசிய சின்னமாக அறிவிக்க போகிறார்களாம். தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் இனி வேருன்ற முடியாது. 1967 ஆம் ஆண்டோடு தேசிய கட்சிகளின் ஆட்டம் முடிந்து விட்டது. திராவிட கட்சிகளின் முதுகில் வேண்டுமானால் இவர்கள் பயணம் செய்யலாம். தமிழ்நாட்டில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது இருக்கட்டும் முதலில் இவர்கள் எதிர் கட்சி வரிசையில் ஒன்று, இரண்டு பேராவது உட்காருவார்களா என்று பாருங்கள் . ஏனென்றால் தமிழகத்தில் மதத்தின் பெயரை சொல்லி இவர்கள் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது இவர்கள் பிரச்சாரமும் எடுப்படாது தமிழ்நாடு மக்கள் இவர்களை அங்கீகரிக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை. நன்றி.

 8. பா.ஜ.க.மற்றும் ஹிந்து ஆதராவாளர்கள் ஒவ்வொரு வீட்டையும் அணுகி வீட்டிற்கு குறைந்த பட்சம் ஒரு வாக்கையாவது ஹிந்ததர்மம் காக்க வாக்களிக்க வேண்டும் என கேட்க வேண்டும்.

 9. பி.ஜே.பி வெற்றிபெற வாழ்த்துக்கள் .

 10. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால் தி.மு.க. தோற்க ஆ.தி.மு.க. அணிக்குத்தான் மனமில்லாமல் ஓட்டுப் போடவேண்டிய நிர்பந்தம். தவறியும் தி.மு.க. வந்துவிடக்கூடாது என்பதுதான் முக்கிய நோக்கம்.

 11. அன்புள்ள தாயுமானவன்,

  இல்லாத ராமன் பெயரால் என்று எழுதியுள்ளீர்கள். என்ன பாவமோ? கழகங்களின் பொய் பிரச்சாரத்தினால் உங்களை போன்றவர்கள் ஏமாந்து போய் , பொய்களை உண்மை என்று நம்பி, வாழ்ந்து வருகிறீர்கள்.

  திருவள்ளுவர் ஆண்டு என்று ஒன்று எப்போதும் இருந்தது கிடையாது. அதற்கு பகுத்தறிவு ரீதியான மற்றும் விஞ்ஞான ரீதியாக எந்த ஆதாரமும் கிடையாது. திமுக ஆட்சிக்காலத்தில் தான் இந்த ஆண்டு ஜனனம் எடுத்தது. கடவுள் இல்லை, இல்லை இல்லவே இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள், கடவுள் நம்பிக்கையை பரப்புபவன் அயோக்கியன் என்று மேடைகளில் சொல்லிக்கொண்டு , வியாபாரத்தை ஆரம்பித்த மோசடி இயக்கங்கள் , திருக்குறளில் முதல் அதிகாரமே கடவுள் வாழ்த்து என்று இருப்பதை மூடி மறைத்து, தங்கள் கருத்துக்கு முரண்படும் திருவள்ளுவரை சிலை அமைத்து வழிபடுகின்றனர். பெரியார் திடலிலும் சுவிசேஷ பிரச்சாரத்திற்கு வாடகைக்கு விட்டு கொள்கை வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களை போன்ற கோமாளிகளை நம்பி, அவர்கள் சொல்லும் பொய்களை நம்பி இப்படி கடிதம் எழுதியுள்ளீர்கள்.

  மேஷ ராசியில் சூரியன் நுழைவது போன்ற தோற்றம் வானில் ஏற்படும் ஒரு விஞ்ஞானபூர்வமான நிகழ்வே தமிழனின் சித்திரை திருநாள் எனப்படும் தமிழ் புத்தாண்டு ஆகும். நீங்கள் வானியல் ( Astronomy) படித்தால் உங்களுக்கு இந்த உண்மைகள் புரியும். சேது சமுத்திரத்திட்டம் என்பது வேறு , ராமன் என்பவன் இருந்ததில்லை என்பது வேறு. நீங்கள் இல்லை என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தமிழ் இந்து .காம் என்ற இந்துக்களின் வெப் சைட் லே அதனை வெளியிடுவது எங்களது பரந்த மனப்பான்மையையும் , உலகம் முழுவதும் எங்கள் குடும்பம் என்ற கருத்தின் அடிப்படையிலும் அமைந்தது. வேறு மதங்களின் வெப் சைட்டில் , இதனை அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் நாத்திக வாதிகளை உடனே கொன்று விடும்படி , பிற மத நூல்களில் கட்டளைகள் உள்ளன. ஆனால் இந்துமதம் என்பது நாத்திகத்தையும் தன்னுள்ளே அடக்கியது. எனவே போலி பகுத்தறிவுக்காரர்களுக்கு வேறு போக்கிடம் கிடையாது. இங்கு மட்டுமே அனுமதி உண்டு.

  ராமபிரானின் நல்லாசி உங்களை போன்றோருக்கும் உண்டு. ராமனை பற்றி அறிய தமிழிலே கம்ப ராமாயணம் என்ற அற்புத நூல் உண்டு. அதையாவது படியுங்கள். உங்கள் வாழ்வு வளம் பெறும்.

  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

 12. முதலில் நான் ஒரு இந்தியன் இந்து இறைநம்பிக்கை கொண்டவன் என்று எந்த தமிழன் நினைகிறானோ அவன் நிச்சயமாக பா.ஜ.க. கட்சிக்குதான் இன்றைய சூழ்நிலையில் வாக்களிப்பான். இன்று உருவாகியுள்ள தி.மு.க கூட்டணி மண்ணை கவ்வவைக்கும் வேலையை அந்த கூட்டணி கட்சிகளே செய்துவிடும். எனவே ஜெ கட்சிக்கு வாக்களித்தால் தான் தி,ழு.க வை கீழே இறக்கமுடியும் என்பது உண்மை இல்லை. இன்று பா.ஜ.க வுடன் கூட்டணி அமைக்க தமிழகத்தில் எந்த கட்சியும் முன்வரவில்லை. இது தமிழனது சுதேசிய சிந்தனை தேய்துவிட்டதையே படம்பிடித்து காட்டுகிறது. இந்த ஆரோகியமற்ற சூழ்நிலையை மாற்றவேண்டும். இன்று பா.ஜ.க விற்கு வாக்களித்து பிரதான எதிர்கட்சியின் வாக்குவங்கி சதவிகிதத்தை உயர்தினால்தான் வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க மற்ற கட்சிகள் முனைப்பை காட்டும். பா.ஜ.க கூட்டணி நிற்காத இடங்களில் விஜயகாந்து கட்சிகோ அல்லது இந்திய ஜனநாயக கட்சிக்கோ வாக்களியுங்கள். (இந்திய ஜனநாயக கட்சி எஸ்.ஆர்.எம் கல்வி குழுவினரால் துவக்கப்பட்டுள்ளது. இக்கட்சி மக்கள்சக்தி இயக்கம் ஐந்து தூண்கள் போன்ற பல சிறிய கட்சியுடன் கூட்ணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது)

 13. @ thayumanavan1985

  இது என்னது திருவள்ளுவர் ஆண்டு. ராமர் மட்டும் கற்பனையாம், ஆனால் திருவள்ளுவர் மட்டும் உண்மையாம். இது உங்களுக்கே ஒரு காமெடியாக இல்லை. திருவள்ளுவரும் உண்மை, ராமரும் உண்மையே. திருவள்ளுவர் ஆண்டு என்பது ஒரு இல்லவே இல்லை.

  இன்னும் எவ்வளவு நாள் தான் ஆரிய திராவிட என்ற பொய்யை கூற போகிறீர்கள். கருப்பாக இருக்கும் மக்கள் திராவிடனாம், vellaiyai இருக்கும் மக்கள் ஆரியனாம், அப்படி என்றால், ராமன் கருப்பு தானே, உங்கள் கோட்பாட்டின் படி, அதாவது, இரிஸ் கிறித்துவ பாதரியார் கால்டு வெல் கோட்பாட்டின் படி, ராமன் திராவிடன், அவர் எப்படி ஆரியன் ஆக முடியும்.

  உங்கள் தமிழ் பற்றை தான் நாங்கள் எல்லோரும் இலங்கை போரில் பார்த்தோமே. நீங்கள் எல்லாம் மனிதர்களா? பாவிகளா? தமிழ் தமிழ் என்று கூறி ஓட்டை வங்கி லட்சகணக்கான தமிழனை கொன்று குவிக்கும் பொழுது என்ன புடுங்கி கொண்டு இருந்திர்கள்.

  இதே பிஜேபி ஆட்சியில் இருந்து இருந்தால் இந்த நிலை இலங்கை தமிழர்களுக்கு வந்து இருக்குமா? பாகிஸ்தான் இந்திய போரின் பொழுது நமக்காக ஒத்துழைத்த இலங்கை தமிழர்கள் முதுகில் குத்திய கொலைகார பாவிகளே.. எந்த முகத்தை வைத்து கொண்டு இன்னும் தமிழனுக்கு போராடுகிறோம் என்று வாய் கூசாமல் பேசுகிறீர்கள். உங்களுக்கு எல்லாம் வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லையா?

  உங்களையெல்லாம் பாகிஸ்தான் ஒரு மாதம் சுற்றுலா அனுப்பினால் தான் திருந்துவிர்கள். லூசு தனமாக பேசுவதில் இவர்களை அடித்து கொள்ளவே முடியாது. சரி கொஞ்சமாவது அறிவியல் படித்து இருந்தால் தானே தெரியும்.

 14. நமக்கு சொந்த மொழி, வீடு, நாடு என்று இருப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் உண்மை. நமக்கு சொந்தமில்லாதது என்று எதுவும் இல்லை.

  நாம் சிலவற்றை மட்டும் சொந்தம் கொண்டாடும்போது மற்றவை நமக்கு சொந்தமில்லை என்று ஆகிவிடுகிறது. எனவே தான் நம் முன்னோர் வசுதேவ குடும்பகம் என்று உலகமே குடும்பம் என்றனர்.

  கடவுள் நம்பிக்கை என்பது இந்து மதத்தின் ஒரு பகுதியாகும். கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லும் சார்வாக நாத்திகம் பேசுவோரும் இந்துக்களே. இவர்களை தவிர கடவுள் இருந்தாலும் இருக்கட்டும், இல்லையென்றாலும் இல்லாமல் போகட்டும். எனக்கு அதுபற்றி கவலை இல்லை என்று சொல்லும் ஆக்னேய வாதிகளும் (அக்னோஸ்டிக்ஸ்) நமது இந்து கலாசாரத்தின் ஒரு கூறே ஆகும்.

  அடிப்படை என்ன வென்றால், நம் கருத்தை பிறர் மீது திணிக்க கூடாது. பிறர் கருத்தை யாரும் கட்டாயத்தின் பேரில் ஏற்கவேண்டிய தேவை இல்லை. மதம், கடவுள் நம்பிக்கை இவற்றின் பெயரால் வன்முறை, பயமுறுத்தல், கூடாது. அன்பும், அஹிம்சையும் எங்கும் வளர வேண்டும்.

 15. வெளி மாநிலத்தில் இருப்பவர்கவள் தங்கள் குடும்பத்தினரின் வாகுகள் ப ஜ க விற்கு அளிக்கவேண்டும் என வற்புறுத்த வேண்டும் .நாம் அனைவரும் முடிந்த அளவு வாகுகளை தொலை பேசி மூலம் சேகரிக்க வேண்டும் .இது நமது கடமை.

 16. அன்புள்ள தாயுமானவன் ,

  தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டதை பற்றி பெருமையாக எழுதியுள்ளீர்கள். இதில் என்ன சாதனை உள்ளது? உங்களுக்கு உண்மை தெரியுமா? தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட பின்னரே சமஸ்கிருதத்திற்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

  அதன் பின்னர் ஆந்திர முதலமைச்சர் அதட்டியே வாங்கிவிட்டார் தெலுங்கிற்கு செம்மொழி அந்தஸ்தை. பார்த்தார் எட்டியூரப்பா , நான் மட்டும் இளைத்தவனா என்று மிரட்டி வாங்கிவிட்டார் கன்னடத்திற்கு செம்மொழி அந்தஸ்தை. இதில் தமிழகத்திற்கு என்ன பெருமை தனியாக உள்ளது.

  வரும் தேர்தலுக்கு பிறகு , கேரளாவில் அமையவிருக்கும் காங்கிரசு அரசும், மேற்கு வங்காளத்தில் அமையவிருக்கும் திரினாமூல் காங்கிரசு அரசும் முறையே மலையாளம் மற்றும் வங்காள மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வாங்கிவிட்டார்கள் என்ற செய்தி வரும். இதில் என்னப்பா பெருமை உள்ளது?

  நான் சரவண பவனில் காப்பி சாப்பிட்டேன் என்று ஒருவன் சொன்னால் என்ன பெருமை? யார் வேண்டுமானாலும் சரவண பவனில் காப்பி சாப்பிடலாம். காசை கொடுத்தால் தருவார்கள். இந்தியாவில் உள்ள முக்கியமான மொழிகளான பதினெட்டு மொழிகளும் செம்மொழி அந்தஸ்து பெரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  தமிழில் ஒரு புதிய என்சைக்ளோபீடியா வெளியிட்டால் பெருமை உண்டு. தமிழில் தமிழக மாணவர்கள் அனைவரையும் தமிழ் மீடியத்தில் படிக்க வைத்தால் பெருமை உண்டு. கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக வாங்கிய கழகங்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் புற்றீசல் போல ஆங்கில வழி மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும், இன்னும் இது போன்ற தனியார் கல்வி நிலையங்கள் பலவும் துட்டு சம்பாதித்து பெரிய கோடீஸ்வரர்கள் ஆக வழி வகுத்தவர் கலைஞர் தான்.

  மிக்சி, மற்றும் கிரைண்டர் இலவசமாக கொடுக்க வேண்டாம். தனியார் நடத்தும் கல்விநிலையங்களை என் அரசே எடுத்து நடத்தக்கூடாது? தனியார் கல்வி நிலையங்களை நடத்தும் பெரிய பண முதலைகளான இவர்கள் கட்சி வி.ஐ பி க்களும் , இவர்களின் உறவினர்களும் கொழுத்தது எப்படி?

  டி வீ எஸ் போன்ற தொழில் நிறுவனங்கள் நடத்திய போக்குவரத்தினை பஸ் தேசிய மயமாக்கும் சட்டமியற்றி , அரசு எடுத்துக்கொண்டதே? அதே போல இப்போது , பாங்குகளை தேசிய மயமாக்கிய நடவடிக்கையை எடுத்த முன்னாள் பிரதமர் இந்திராவை ஆதரித்தவர் ஏன் தயங்கவேண்டும்?

 17. பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்துத்தான் பார்ப்போமே. கழக ஆட்சிகளுடன் ஒப்பிடக்கூடாத தரத்தில் சிறப்பாய் இவர்களது ஆட்சி நிச்சயம் இருக்கும்.. குஜராத், பீஹார் எடுத்துக்காட்டுக்கள்

 18. இந்த முறை தமிழகத்தில் ஆட்சி அமைப்பது பாஜக தான். கனவு காண உங்களுக்கு உரிமை இருக்கிறது

 19. Let us vote for the Nationalistic party the BJP
  Crush the corrupt, rowdy,barbaric DMK and AIADMK

 20. அனைவருக்கும் வணக்கம். நான் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தைச் சார்ந்தவன், முதல் முறையாக ஒட்டு போடுகிறேன், எப்போதும் என் ஒட்டு பா ஜ க விருக்கு மட்டும், என் வீட்டின் முன் இங்கு ஓட்டுகள் விற்பனைக்கு இல்லை என்று எழுதி போட்டேன்… அனைவரும் என்னை விசாரித்தார்கள்… சம்திங் ஸ்பெஷல் என்று…. ஆம் தொண்டாமுத்தூர் தொகுதியில் திரு. ஸ்ரீதர் மூர்த்தி அவர்கள் மற்றும் ஒன்றியத் தலைவர் வந்தே மாதரம் தியாகு அவர்களும் தேர்தல் நேரம் மட்டும் இல்லாமல் எப்பொழுதும் சிறந்த முறைகள் பணி ஆற்றி, இளைஞர்களுக்கு மிகவும் உதவினார்கள். இப்பொழுது அவர்கள் காசு, பணம் பார்க்காமல் பணிவிடுப்பு எடுத்து தேர்தல் பணிகளைச் செய்கிறார்கள்… வேட்பாளர் திரு ஸ்ரீதர் மூர்த்தி வக்கீல் அவர்கள், தனது தேர்தல் செலவிற்காக, வாக்காளர்களிடம் ஒரு ரூபாய் பெற்று அனைத்துப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றாராம், இதுதான் வெற்றியின் முதல் படி.. தமிழகமே தொண்டாமுத்தூர் ஒன்றியத்தைத் திரும்பி பார்க்கும் வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவிற்குப் பின்..

 21. பா.ஜா.கா. தலைவர்கள் கவனத்திற்கு….

  1) இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று அணி நான்தான் என கூரிய விஜ்யகாந்த், தற்போது கூட்டணியின் மூலம் தானும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்பதை கட்டி விட்டார். அவரை நம்பிய நடுநிலை வாக்காளர்கள், தற்போது யார் பின்னால் செல்வது என்று யோசித்து வருகின்றனர். அவர்களுக்கு பா.ஜா.கா.தான் மாற்று அணி என்பதை புரிய வைத்தால் நடுநிலை வாக்குகள் பா.ஜா.கா.வுக்கு சாதகமாக கிடைக்கும்.

  ௨) இலங்கை தமிழர்களுக்காக உண்மையாக போராடுவதும் பா.ஜா.கா.தான் – சரியான பிரசாரத்தின் மூலம், ஒதுங்கி இருக்கும் ம.தி.மு.க.வின் வாக்குகளையும், தமிழின அதரவாளர்கள் ஓட்டையும் பா.ஜா.கா. அள்ளலாம்.

  3) பா.ஜா.கா. வால் மட்டுமே நேர்மையான, ஊழலற்ற முறையில் சிறப்பாக ஆட்சி செய்யமுடியும் என குஜராத், பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களில் மூலம் நிருபித்துள்ளது – உண்மையான வளர்ச்சியை விரும்பும், அறிவார்ந்த வாக்களர்களை இதன் மூலம் கவர முடியும்.

  4) பா.ஜா.கா. வுக்கு உள்ள இந்து வாக்கு வங்கி

  திட்டமிட்டு பிரசாரம் செய்தல் – மேற்கண்ட வாக்குகளை (குறைந்தபட்சம் 10 % ) பா.ஜா.கா அள்ள முடியும். யோசியுங்கள்.

 22. திமுக ஜெயித்துவிடும் என்பதால் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது சரியான கருத்தல்ல.
  ஒரு தொகுதியில் பாஜக ஜெயித்தால் அது ஒரு போதும் திமுகவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. ஆகவே தைரியமாக பாஜகவுக்கு வாக்களியுங்கள்.
  கருணாநிதி குடுமபம் இன்னும் செழிப்பாக வாழவேண்டும் என்று கருதுபவர்கள் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்
  சசிகலா குடும்பம் இன்னும் செழிப்பாக வாழவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்
  உங்கள் குடும்பம் செழிப்பாக வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் தாமரைக்கு வாக்களியுங்கள்

 23. ஹிந்துக்கள் முஸ்லிம்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

  மனித நேய மக்கள் கட்சி(ம.ம.க.,)

  ஜவாஹிருல்லா – ராமநாதபுரம்
  எம். தமீம் அன்சாரி – சேப்பாக்கம்
  அஸ்லம் பாட்சா – ஆம்பூர்

  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்(இ.யூ.மு.லீக்)

  அல்தாப் உசைன் – துறைமுகம்
  எச்.அப்துல் பாசித் – வாணியம்பாடி
  எம்.முகமது ஷேக் தாவூது – நாகப்பட்டினம்

  இந்த இரு இஸ்லாமிய கட்சிகளும் எந்த ஒரு தொகுதியிலும் நேரடியாக மோதாமல் புத்திசாலி தனமாக இருகிறார்கள். கண்டிப்பாக இந்த தேர்தலில் இவர்கள் வெற்றி மற்றும் முஸ்லிம் மக்கள் ஓட்டு முதலியன வெளி வரும் பொழுது இவர்கள் உண்மையான நிலை தெரிய வரும்.

 24. வணக்கம் திரு. கதிரவன் அவர்களே ,

  //தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டதை பற்றி பெருமையாக எழுதியுள்ளீர்கள். இதில் என்ன சாதனை உள்ளது? உங்களுக்கு உண்மை தெரியுமா? தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட பின்னரே சமஸ்கிருதத்திற்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

  அதன் பின்னர் ஆந்திர முதலமைச்சர் அதட்டியே வாங்கிவிட்டார் தெலுங்கிற்கு செம்மொழி அந்தஸ்தை. பார்த்தார் எட்டியூரப்பா , நான் மட்டும் இளைத்தவனா என்று மிரட்டி வாங்கிவிட்டார் கன்னடத்திற்கு செம்மொழி அந்தஸ்தை. இதில் தமிழகத்திற்கு என்ன பெருமை தனியாக உள்ளது.

  வரும் தேர்தலுக்கு பிறகு , கேரளாவில் அமையவிருக்கும் காங்கிரசு அரசும், மேற்கு வங்காளத்தில் அமையவிருக்கும் திரினாமூல் காங்கிரசு அரசும் முறையே மலையாளம் மற்றும் வங்காள மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வாங்கிவிட்டார்கள் என்ற செய்தி வரும். இதில் என்னப்பா பெருமை உள்ளது?//

  இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது அதான் பதிலும் உங்கள் மறுமொழியிலே இருக்கிறது. எந்த தகுதியும் இல்லாமல் மக்களை திரட்டி மிரட்டி வாங்குவதற்கு பெயர் அந்தஸ்தா. அதற்கு பெயர் கேவலம். ஒரு மொழி செம்மொழி ஆவதற்கு உரிய தகுதி அந்த மொழி ஈராயிரம் ஆண்டுகள் பழமை உடையதாய் இருக்க வேண்டும், பிற மொழிகளின் தயவு இல்லாமல் தனித்து இயங்கும் ஆற்றல் இருக்க வேண்டும். பிற மொழி சாராத இலக்கண இலக்கிய வளங்கள் இருக்க வேண்டும் . இந்த தகுதி படி பார்த்தால் இந்தியாவில் செம்மொழி தகுதி பெற எத்தனை மொழிகளுக்கு தகுதி இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். அறிவுள்ள மாணவனுக்கு அவன் அறிவின் திறத்தை தகுதியை எண்ணி கொடுக்கப்படும் கௌரவத்திற்கும் .. எந்த ஒரு அறிவும் தகுதியும் இல்லாத ஓர் மடையன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டி அறிவாளி பட்டம் வாங்குவதற்கும் உள்ள வேறுபாடு எப்படியோ அப்படி தான் இந்த செம்மொழி விஷயத்திலும் நடந்துகொண்டு இருக்கிறது.

  திரு. பிரதாப் அவர்களே
  //திருவள்ளுவர் ஆண்டு என்று ஒன்று எப்போதும் இருந்தது கிடையாது. அதற்கு பகுத்தறிவு ரீதியான மற்றும் விஞ்ஞான ரீதியாக எந்த ஆதாரமும் கிடையாது//

  சரி சதுர் யுகம் என்று அழைக்க படும் கிருத யுகம் =1,728,௦௦௦000௦௦௦ ஆண்டுகள், திரேதா யுகம் =1,296,000 ஆண்டுகள், த்வாபர யுகம் =864,௦௦௦000 ஆண்டுகள், கலியுகம்=432,௦௦௦௦௦௦௦௦௦000 ஆண்டுகள் போன்ற ஆண்டுகள் இருந்தன என்பதற்கு என்ன அறிவியல் பூர்வமான வரலாற்று ரீதியான ஆதாரங்கள் இருக்கிறது. கொஞ்சம் சொன்னால் என்போன்ற பாமரர்களுக்கு புரியும். சரி ராமர் இருந்தார் என்பதற்கு என்ன அறிவியல் பூர்வமான பகுத்தறிவு ரீதியான சான்றுகள் இருக்கிறது என்பதை கொஞ்சம் எங்களுக்கு சொன்னால் புண்ணியமாக போகும். இன்றைக்கு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வரும் துணை பாட கதைகளை போல அன்று தனி மனித ஒழுக்கத்திற்காக சொல்லிவைத்த நன்னெறி கதைகள் தான் இந்த ராமாயணம் பாரதம் எல்லாம். கற்பனை என்றே வைத்து கொண்டாலும் திருவள்ளுவர் ஒரு எடுத்துகொள்ள கூடிய ( practical ) ஆனா அழகிய கற்பனை என்றால் ராமாயணம் மனித சிந்தனைக்கு ஒவ்வாத ஒரு அட்டு கற்பனை.

  //சேது சமுத்திரத்திட்டம் என்பது வேறு , ராமன் என்பவன் இருந்ததில்லை என்பது வேறு.//
  மன்னிக்கவும் சேது சமுதிர திட்டத்தை முடக்கிய சக்திகளை இன்றும் கேட்டால் கூட அவர்கள் கூறுவது”ராமன் என்று ஒருவன் இருந்தான் அவனின் தர்மபத்தினியை இராவணன் இலங்கைக்கு இழுத்து சென்றான் அவளை மீட்டு கொண்டு வர வானரங்களின் துணை கொண்டு பாலத்தை கட்டி இலங்கையில் இருந்து சீதையை மீட்டான் . அந்த சீதையை மீட்க போட்ட பாலம் தான் இதோ இப்போது இருக்கும் இந்த மணல் திட்டு தான் என்று கூறுகிறார்கள். எதற்கும் நண்பர் பிரதாப் அவர்கள் இந்த திட்டத்தை முடக்கி போட்ட ஹிந்து மத வாத சக்திகளிடம் கேட்டு கொள்வது நல்லது .

  ராமநேசசெல்வர்களுக்கு ஒன்று சொல்கிறேன் நான் நாத்திகவாதி அல்ல ஆத்திகவாதி தான்.. கடவுளை நம்புபவன் தான் அதனால் தான் இது போன்ற மூட நம்பிக்கைகளை ஏற்க முடிவது இல்லை .பா.ஜ.கா வையும் ஏற்று கொள்ளமுடியவில்லை . நன்றி

 25. //நான் நாத்திகவாதி அல்ல ஆத்திகவாதி தான்.. கடவுளை நம்புபவன் தான் அதனால் தான் இது போன்ற மூட நம்பிக்கைகளை ஏற்க முடிவது இல்லை .பா.ஜ.கா வையும் ஏற்று கொள்ளமுடியவில்லை .//
  திமுக அனுதாபிகள் மூடநம்பிக்கைகளை மட்டும்தான் எதிர்க்கிறார்கள் ஆனால் அவர்கள் தலைவர் மட்டும்தான் போலி இந்து கடவுள் எதிர்ப்பு எனும் நாடகத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. அப்படியானால் இத்தகைய போலித் தலைவரை தொடர்ந்தே தீர்வேன் என்கிற மூடநம்பிக்கை மட்டும் எதற்கு?
  தமிழை வாழ(!) வைத்தால் மட்டும் போதாது தமிழனயும் வாழ வைக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் எப்படி தமிழினத்தலைவர்?
  தமிழ் தமிழ் என்று மக்களை தமிழ்நாட்டுக்குள்ளேயே முடக்கி அவர்களை ஒன்றும் இல்லாதவர்களாக்கி அவர்களுக்கு இலவசம் எனும் எச்சில் தட்டைப் போட்டு அவர்களுடைய சுய மரியாதாயையும் இல்லாததாக்கியவர் எப்படி சுயமரியாதை சிங்கம்?

 26. //தமிழகத்தில் மதத்தின் பெயரை சொல்லி இவர்கள் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது//
  சரிதான். ஆனால் சாதியின் பெயரை சொல்லி 1967 முதல் ஆட்சிக்கு வந்துக் கொண்டிருப்பவர்கள் என்ன மாற்றத்தை செய்தார்கள். தமிழனை கிணற்றுத் தவளையாக்கியதைத் தவிர?

 27. Mr Thayumanavan is nothing but a little frog in a deep well. People like him can never think of themselves as Indians first and foremost.Please note that being a Tamilian, Bengali, Keralite, etc all come a distant second to being a patriotic Indian.Brainwashed to the core by the totally corrupt,selfish, DK/DMK mob, they lack simple common sense. They parrot the tired old line on Aryan Brahmin/ Dravidian divide. They do not want to do any research/ study on these topics themselves and expect us all to spoon feed them and to prove that we are right.
  Mister Thayumanavan, why don’t you prove that Lord Rama did not exist with historical facts? The onus is on you and not on us. Do not quote tales written by EVR/MK.Also,why don’t you give us scientific evidence and proof that our ancestors were all wrong and gives your theory on origin of the Universe? I won’t buy into Hawkin’s big bang theory. No evidence that Big bang caused creation.
  Get out of the well and breath some fresh air. You need it.

 28. WHEN MALAYSIAN TAMILS UNDER THE BANNER OF MALAYSIAN HINDU TAMILIANS ASSOCIATION CAME TO CHENNAI AND SOUGHT THE SUPPORT OF DMK AND AIADMK , BOTH KARUNANIDHI AND JAYALALITHA REFUSED TO MEET THEM AND ALSO DID NOT GIVE ANY PUBLIC STATEMENT IN SUPPORT OF MALAYSIAN TAMILS WHO ARE SUPPRESSED BY MALAYSIAN MUSLIM HEADED GOVERNMENT. THIS IS BECOUSE THAT MALAYSIAN TAMILS ARE 100% HINDUS AND TRUE DEVOTEES OF TAMIL GOD MURUGAN .THEREFORE THEY USED THE BANNER AS ” MALAYSIAN TAMIL HINDUS ASSOCIATION” THE WORD ‘HINDU’ HAD DRIVEN AWAY THE M K AND JAYA AWAY FROM EXTENDING THE SUPPORT TO THEM.
  ALSO LTTE PRABHAKARAN IS A CONVERT CHRISTIAN AND ALL MEMBERS OF LTTE ARE MOSTLY CHRISTIANS WHO WERE FUNDING ALL DRAVIDAN PARTIES WITH THE MONEY THEY OBTAINED FROM THE DRUG TRADE ALL OVER THE WORLD. SUCH BAD MONEY OBTAINED FROM DRUG PEDDLING ACROSS THE BORDERS HELPED THEM BUY WEAPONS IN THE INTERNATIONAL MARKET AND GIVING MONEY TO DRAVIDAN PARTIES TO GETTING THEIR SUPPORT. MALAYSIAN HINDU TAMILS DID NOT OFFER ANY MONEY BECOUSE THEY ARE NOT DOING ANY TRADE. SO ALL DRAVIDAN PARTIES KEPT AWAY FROM THEIR TROUBLE IN MUSLIMS DOMINATED MALAYSIA. BUT ONLY BJP AND ITS NATIONAL LEADERS IN NEW DELHI RAISED THEIR VOICE IN THE PARLIMENT IN SUPPORT OF MALAYSIAN TAMILS WHICH MADE MALAYSIA TO DROP THE OPPRESSION AGAINST TAMILS IMMEDIATELY.
  EVEN ONE OF THE SRILANKAN TAMIL PARTY NOT CONNECTED WITH LTTE, SENT THEIR
  PARLIMENT M P FROM SRILANKA TO MEET BJPS NATIONAL LEADERS TO GE THE SUPPORT AFTER SEEING THE RELIEF OBTAINED BY MALAYSIAN TAMILS DUE TO THE PRESSURE OF CENTRAL GOVERNMENT DUE TO THE RAISE OF ISSUE BY ADVANI AND OTHERS BJP MEMBERS .SO BJP IS REALLY CONCERNED ABOUT TAMILS WITHOUT ANY EYE ON VOTES FROM TAMILS IN TN STATE. KINDLY VOTE FOR BJP IF YOU BELIEVE IN NATIONALISM AND IN DEVELOPMENT.

 29. வணக்கம் தாயுமானவன் அவர்களே ,

  தமிழ் செம்மொழி பற்றி எழுதி உள்ளீர்கள்,நன்று.
  திரு.உ. வே. ச யார் என்று தெரியுமா?
  அவர் செய்த பணி என்ன என்று தெரியுமா? இன்று தமிழ் காவலன், தமிழ் இன தலைவர். இப்படி எல்லாம் தனக்கு தானே பெயர் வைத்துகொண்டு அலையும் மு.க. நடத்தியது தமிழ் செம்மொழி மாநாடு அல்ல அது தி மு க மாநாடு.திரு உ.வே.ச பற்றி எதுவும் பேசாமல் தமிழ் செம்மொழி மாநாடு. உ. வே சாமிநாத (அய்யர்) அதனால் அவருக்கு தமிழில் உரிமை இல்லை. அனால் வெளி நாட்டில் இருந்து மற்றும் தமிழ் அறியாதவர்கள் கூட மரியாதை செய்யப்பட்டபோது. தமிழ் தாத்தாவிற்கு எதுவும் கிடையாது. இப்படி நிறைய சொல்லிகொண்டே போகலாம்.

  நாளை தமிழை காத்தவர், வளர்த்தவர் கருணாநிதி என்று சொன்னாலும் உண்மை தான் என்று ஒத்துகொள்ளும் மக்கள் உள்ள வரை திராவிடன் ஆரியன் இப்படி எது வேண்டுமானாலும் சொல்லி மக்களை முட்டாள்ளாக்கி முதுகில் சவாரி செய்துகொண்டுதான் இருப்பார்கள்.

 30. வணக்கம்,
  இலங்கை தமிழர்கள் விஷயத்தை பற்றி இங்கே சிலர் சொல்கிறார்கள் பா.ஜ.க இருந்தால் போர் நடந்து இருக்காது என்று . நான் ஒன்று கேட்கிறேன் அவர்களை(தமிழர்களை) முள்ளிவாய்கால் வரை கொடூரமான ஆயுதங்களால் விரட்டி விரட்டி கொல்லப்பட்டபோது.அதை தடுத்து இத்தாலிய சோனியாவையும் , கொலைவெறி பிடித்த மகிந்தனையும் அடக்கும் அளவுக்கு இங்கு இருக்கும் எந்த ஹிந்து மத இயக்கம் அல்லது பா.ஜா.கா தலைவர்கள் அதற்காக பெரிய அளவில் போராடினார்கள் அதை சொல்லமுடியுமா. போர் நடக்கும் சமயத்தில் குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் எந்த பா.ஜ.கா தலைவர் கேள்வி எழுப்பினார். அந்த அப்பாவி தமிழர்கள் வழிபட்ட ஹிந்து கடவுள்கள் என்னும் கற்சிலைகளும் கைவிட்டன. இந்தியாவில் இருக்கும் 90 கோடி இந்துகளும் கைவிட்டனர் . கொலைவெறி பிடித்த அந்த மகிந்த மிருகம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களையும் விடுதலை புலிகள் இயக்கத்தையும் வெற்றிகரமாக இந்தியாவின் துணை கொண்டு அழித்த பின் தானே போரை நிறுத்தியது . அவ்வுளவு ஏன் அந்த படுகொலையை ஆதரித்து பேசிய பெரியவர்கள் அனைவரும் ஹிந்து பிராமணர்கள் தானே.. வெற்றிகரமாக போரை முடித்த மகிந்தவுக்கு என் பாராட்டுக்கள் என்று சொல்லி மகிழ்ந்தாரே “துக்ளக்” சோ அவர் என்ன காங்கிரஸ்வாதியா இல்லை கலைஞர் கட்சியில் இருப்பவரா . புலிகளை வென்று அடக்கிய மகிந்தவுக்கு என் சபாஷ் என்று சொல்லி சிரிதானே சுப்ரமணிய சுவாமி அவர் என்ன காங்கிரஸ்வாதியா இல்லை தி.மூ.க வின் கொள்கை பரப்பு செயலாளரா. சொல்லுங்கள். நடுநிலையாக இருந்து செய்தி வெளியிட வேண்டிய “ஹிந்து” ராம் அந்த மிருகத்திடம் லங்கா ரத்னா பட்டம் பெற்று கொண்டு இன படுகொலையை மறைத்து மகிந்தவை உலகின் சிறந்த தலைவர் என்று பாராட்டி எழுதினாரே அவர் எந்த கட்சி. சரி இலங்கை விஷயத்தை விடுங்கள். தமிழ்நாட்டு நிலைக்கு வருவோம் .2008 இல் நடந்த கர்நாடக தேர்தலில் எடியுரப்பா ஒகேனக்கல் கர்நாடகத்துக்கு தான் சொந்தம் என்று சொல்லி ஒரு அழுக்கு பிடித்த அரசியல் செய்தாரே தான் ஆட்சிக்கு வந்தால் ஒக்கேனக்கல்லை கர்நாடக மாநிலத்தோடு இணைப்பேன் என்று அறைகூவினாரே ஏன்னையா ப.ஜா.க காரர்களே தமிழ்நாட்டிற்கு சொந்தமான ஒரு நில பகுதியை அரசியல் செய்ய ஒருவர் உங்கள் கட்சியின் பெயரால் வந்தாரே இங்கு கண்டித்தீரா அவரை. இன்று வரை ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் பிரச்சனைகளை கிளப்பினார்களே கன்னட வெறியர்கள் கண்டித்ததா பா.ஜ.க. முல்லை பெரியாறு பிரச்சனையில் என்ன போராட்டம் செய்தது பா.ஜ.க. காவேரி நீர் பிரச்சனையில் என்ன அழுத்தம் கொடுத்தது. தமிழகத்திற்கு தரவேண்டிய காவேரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி நியாயமான 205 t .m .c தண்ணீரை திறந்து விட சொல்லி கேட்டதா ..அங்கு நடப்பதும் பா.ஜ.க அரசு தானே .ஆட்சிக்கு வந்தால் தான் இதை செய்ய வேண்டும் என்று அர்த்தமா என்ன. இதை செய்து இருந்தால் என்றோ தமிழ் மக்கள் மனதில் அபிமானம் பெற்று இருக்குமே பா.ஜ.க. மீண்டும் சொல்கிறேன் தமிழர்களின் உரிமைக்கு போராடாமல் . தமிழர்களின் கலாச்சாரதிர்ற்கு முன்னுரிமை கொடுக்காமல் இந்த மாநிலத்தில் எந்த அரசியல் கட்சியும் பிரவேசிக்க முடியாது. மீண்டும் சொல்கிறேன் தேசிய கட்சிகளும் ஹிந்தி மொழியும் எந்த காலத்திலும் தமிழ் மண்ணில் கால் அடி எடுத்து வைக்க முடியாது … இது உண்மை ….. நன்றி

 31. ஓட்டுப்போடும் இயந்திரமான சாதரணமான தமிழக வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு ரகசியமான விஷயமாக உள்ளது.

  என் நண்பர் ஒருவர் கடற்கரை பகுதிகளில் மீனவர்களுக்கு சுனாமி வீடுகள் ஏராளம் கட்டி கொடுத்துள்ளனர் எனவே மீனவர்கள் ஒட்டு முழுவதும் ஆளுங்கட்சி அள்ளிவிடும் என்றார். எனவே இது உண்மையா என்று அறிய , அந்த மீனவ சமுதாய நண்பர் ஒருவரை விசாரித்தேன். அவர் சொல்கிறார் . சுனாமி வீடு மூவாயிரம் பேரில் நூத்து எண்பது பேருக்கு தான் கிடைத்தது. மீதி இரண்டாயிரத்து எண்ணூற்று எண்பது பேர் எதிர்த்து தான் ஒட்டு போடுவார்கள் என்று சொல்கிறார்.

  டி வி கொடுத்ததால் அதிக ஒட்டு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். டி வி ஏற்கனவே எல்லோர் வீட்டிலும் உள்ளது. டி வீ இல்லாத வீடுகள் கம்மி. அவர்கள் இலவசத்தை வாங்கி ஆயிரம் ரூபாய்க்கு விற்று வேறு செலவு செய்து விடுகிறார்கள். தமிழக அரசு வழங்கிய நாற்பது சதவீத டி வி க்கள் தற்பொழுது கேரளா, மற்றும் ஆந்திர பார்டர் பகுதிகளில் தான் உள்ளது. தமிழ் நாட்டில் இல்லை. டி வி யால் ஒட்டு கூடுதலாக கிடைக்காது என்கிறார்கள். கிராம பகுதிகளில் மின்வெட்டால் டி வீ இருந்தும் பார்க்க முடியவில்லை என்று கருதுகிறார்கள்.

  சோனியா கூட்டத்திற்கு வாசன், சிதம்பரம் போன்றோர் வரவில்லை. இந்தமுறை காங்கிரசு கூட்டணி கோவிந்தா ஆகிவிடும். இனிமேலாவது கட்சியை வளர்ப்பார்களா இல்லை ஜெயா காலே சரணம் என்று அங்கு போய் விழுவார்களா என்று தெரியவில்லை. ஒரு சோனியாவின் தாலிக்கு இத்தனை தாலிகளா என்று கேட்ட திருமா போன்றவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு காங்கிரசு காரர்கள் ஒட்டு கேட்பதை பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள்.

  பிரபாகரனின் தாயாருக்கு மருத்துவ சிகிச்சைக்கு , மனிதாபிமான முறையில் உதவி செய்திருக்க வேண்டிய கலைஞர் , பார்வதி அம்மாள் ஏர்போர்ட்டில் இறங்க அனுமதி மறுத்த மத்திய அரசில் அங்கம் வகுப்பது , ஒரு அசிங்கம். எனவே காங்கிரசு காரர்களுக்கும், திமுகவுக்கும் கூட்டணி சரியில்லை. இருவர் வாழ்வும் அஸ்தமனம் ஆக போகிறது.

 32. நான் கடந்த 12 வருடங்களாக பெங்களூர்வாசி என்பதால் தமிழகத்தில் வாக்குரிமை இல்லை. கர்நாடகத்தில் தான் வாக்களித்து வருகிறேன். கடைசியாக நான் தமிழகத்தில் வாக்களித்தது 1998 தேர்தலில்.

  ஆனால் தமிழக தேர்தல் நிலவரங்களை கவனித்து வருகிறேன். சேக்கிழான், கழகங்களுக்கு மாற்றாக தாமரை மலருவதற்கான சாத்தியங்கள் இந்தத் தேர்தலில் மக்களால் அடையாளம் காட்டப் படும் என்று நீங்கள் சொல்வதைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக, பல மக்கள் போராட்டங்களை (குறிப்பாக இந்து குழந்தைகளுக்கும் கல்வி உதவி வேண்டி நடத்திய போராட்டம்) பாஜக நடத்தியிருக்கிறது. அதன் தாக்கம் குறிப்பிட்ட தொகுதிகளில் இருக்கும் என்று நம்புவோம். நீங்கள் குறிப்பிட்ட பட்டியலில் மண்ணச்சநல்லூர் தொகுதியை விட்டுவிட்டீர்கள். அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அங்கு திமுக – பாஜக இடையே தான் நேரடிப் போட்டி என்று கேள்விப் படுகிறேன்.

  சதீஷ் கூறியது போல, தமிழகத்தில் வசிக்கும் எனது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பாஜகவுக்கு வாக்களிப்பதன் அவசியத்தைப் பற்றி சொல்லி வருகிறேன்.

  தாயே நீ ஆளவேண்டும் தரணிதனில் தலைநிமிர்ந்து
  பழம்பெருமை பாரதம்போல் ஆக வேண்டும்
  தாமரையின் ஆட்சி வேண்டும் – பி.ஜே.பி
  தாமரையின் ஆட்சி வேண்டும்

  என்று 90களில் ஒரு நல்ல தேர்தல் பிரசார பாட்டு பிஜேபி தரப்பிலிருந்து போடுவார்கள். இன்னும் என் நினைவில் இருக்கிறது!

  தேசம் முழுதும் நல்லாட்சி மலர, தமிழக தேர்தல் கட்டியம் கூறட்டும்.

 33. அன்புள்ள தாயுமானவன்,

  தங்கள் பதிலுக்கு நன்றி.
  ஆயிரக்கணக்கான மற்றும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள விஷயங்களுக்கு ஆதாரம் பராமரிப்பது என்பது எங்கும் முடியாது.

  அது ராமர் மட்டுமல்ல. வேறு எவராயினும் சரி. உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் ஒரு வழிபாட்டு தளத்தில், நபிகள் நாயகத்தின் முடி என்று இஸ்லாமியர்கள் நம்பும் ஒரு முடி , பத்திரமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை அது தொலைந்து போய் விட்டதாக செய்தி பரவியவுடன் , அங்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் கலாட்டா ஏற்பட்டது.

  பல பஸ்கள் எரிக்கப்பட்டு, ஹர்த்தால் நடந்தது. பல வீடுகள் கூட கொளுத்தப்பட்டன. யாருமே அது நபிகள் நாயகத்தின் முடி என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க முடியாது. ஏனெனில் அது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம்.

  சதுர் யுக கணக்கும் , வெகு காலமாக நம் மக்கள் மதித்து நம்பிவரும் ஒரு விஷயம் தான். ஆனால் புதுவருடம் என்பது அப்படி அல்ல. தமிழ் புத்தாண்டு என்பது வானியல் நிகழ்வான மேஷ ராசியில் சூரியன் புகும் ஒரு உண்மையான கணக்கீடு . இது விஞ்ஞான பூர்வ மான ஒரு செய்தி. எனவே உங்கள் வாதம் பொருத்தமாக இல்லை என்று அன்புடன் தெரிவித்துக்கொண்டு , தங்கள் கருத்தை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன்.

  ராமர் பாலம் என்ற இந்துக்களின் நம்பிக்கை சேது சமுத்திர திட்டத்திற்கு , தடையாக இருப்பதாக நீங்கள் கருதுவதாக தெரிகிறது. நான் இந்து இயக்கங்கள் எதிலும் உறுப்பினர் அல்ல. சேது சமுத்திர திட்டம் என்பது பொருளாதார ரீதியாக சரியில்லை என்றும், நிலவியல் ரீதியாகவும் சரி இல்லை என்றும் அந்த துறை சார்ந்த பல அறிஞர்கள் விளக்கமாக தெரிவித்துள்ளனர். அம்பதுகளிலேயே இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு , உண்மை பகுத்தறிவாளர் ஜவஹர்லால் நேரு வாலே கைவிடப்பட்ட திட்டம் இது.

  நேரு யார் தெரியுமா? இந்து திருமண மற்றும் சொத்துரிமை , பெண்கள் உரிமை என்று ஏராளமான சீர்திருத்தங்களை நிறைவேற்றியவர். எப்படி நிறைவேற்றியவர் தெரியுமா, சென்ற தலைமுறைகளின் பெரும்பாலான மக்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே தான் இதனை செய்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது , வேறு மதங்களை சேர்ந்தவர்கள் , அவர்கள் மத கருத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் யாராவது சீர்திருத்தம் செய்ய முற்பட்டால் அவர்களை ஏதாவது பெயர் சொல்லி கொன்று விடுவார்கள் ( உதாரணம் பத்வா). ஆனால் இந்துக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும் அல்ல. கடவுள் சக்தியை உணர்ந்த ஞானிகள் . எனவே தான் இங்கு எல்லா சீர்திருத்தங்களுக்கும் இடம் உண்டு. சேது திட்டம் யாரோ ஒரு திமுக அமைச்சர் மூலமாக , பெரிய அளவில் ஊழல் செய்ய பெரியவர் போட்ட கொள்ளை திட்டமே தவிர, நல்ல திட்டம் அல்ல. எனவே அது என்றுமே நிறைவேறாது.

  அது உண்மையிலேயே நல்ல திட்டமாக இருந்தால், பெரியவர் , திட்டத்தை நிறைவேற்றாத மத்திய அரசை எதிர்த்து, பதவி விலகி , சிறை செல்ல வேண்டியது தானே. இவர் ஏற்கனவே தண்டவாளத்தில் தலை வைத்ததாகவும் சிலர் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர், சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேலான சிவிலியன் தமிழர்கள் கொல்லப்பட்ட போதே , வாய் மூடி இருந்து , தன்னுடைய பேரன், மற்றும் மகன்களின் பதவிக்காக , டெல்லி காங்கிரசுடன் பிச்சை கேட்டு அலைந்தவர்.

  ௨ஜி ஊழலுக்காக தன்னுடைய குடும்பத்தினர் மாட்டக்கூடாது என்பதற்காக இவர் அலைந்தாரே தவிர, சேது சமுத்திர திட்டத்திற்காக , எதிர்க்கட்சியானவுடன் தான் மீண்டும் போராட்டம் நடத்துவார். அந்த திட்டம் என்றுமே நிறைவேறாது. ஏனெனில் அது, பொருளாதார ரீதியாகவும், நிலவியல் ரீதியாகவும் உருப்படி இல்லை என்று நிரூபிக்க பட்ட திட்டம். உங்களுக்கு இது குறித்து மேலும் தகவல் வேண்டுமென்றால், இணைய தளத்தில் சென்று அங்கு கொட்டிக்கிடக்கும் ஏராளமான விஷயங்களை பாருங்கள். உண்மை புரியும். அதன் பிறகு, உங்கள் கருத்து மாறலாம் என்று நம்புகிறேன்.

 34. இரு கழகங்களை தவிர்த்து வேறு நல்ல தேசிய கட்சி ஆட்சிக்கு வரும் நாள் வருமா என்று பலரும் நினைக்கிறார்கள். அதே சமயம் இந்த தேர்தலில் நிச்சயம் அது நடக்காது என்று எல்லோருக்கும் ஒரு அவ நம்பிக்கை உள்ளது.சிறிது காலமாவது பொறுத்திருந்து தான் இந்த நிகழ்ச்சி நடக்கும் என்று எல்லோருமே எண்ணுகிறார்கள்.

  நம் நாட்டில் கலப்பு திருமணம் செய்து கொள்ளுவோருக்கே அரசு, பாங்கு, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான இன்சுரன்சு போன்றவற்றில் வேலை , மற்றவர்களுக்கு வேலை இல்லை என்று ஒரு சட்டம் போட்டால் , பத்தே வருடங்களில் எல்லா ஜாதியும் ஒழிந்துவிடும். ஜாதி மட்டுமல்ல, ஜாதியை வைத்து மக்களைபிரித்து ஒட்டு வாங்கும் , வோட்டு வங்கி அரசியலும் காணாமல் போகும். கழகங்கள் தீய சக்திகள் ஆவர். நல்லது நடக்க அவர்கள் ஒருபோதும் விடமாட்டார்கள்.

  மொழி வியாபாரம், சாதிவியாபாரம், மத வியாபாரம் இந்த மூன்று வியாபாரமும் விரைவில் படுத்து விடும். அதன் பிறகே கழகங்களுக்கு தமிழன் விடை கொடுப்பான். நாட்டு மக்கள் நல்ல குடிதண்ணீர் , தங்குதடையற்ற மின்சாரம், வேலைவாய்ப்பு, ஒழுங்கான காவல் மற்றும் நீதித்துறை, எல்லா துறைகளிலும் , விவசாயம், சிறு மற்றும் பெருந்தொழில் உட்பட நல்ல வளர்ச்சி இவற்றையே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ,கழகங்களால் இவற்றை நிறைவேற்ற முடியாது. அவற்றிடம் , தலைமையின் குடும்ப சொத்து மற்றும் அதிகாரத்தை பெருக்கி கொள்வதை தவிர வேறு திட்டம் எதுவும் இல்லை. இலவச டி வி கூட அவர்களின் குடும்ப கேபிள் வியாபாரத்தை விஸ்தாரப்படுத்திக் கொள்ளுவதற்கு தான்.

  இந்நிலையில் மைனாரிடிகளை தூண்டிவிட்டு, ஜாதிக்கலவரங்களை உருவாக்கி ஒட்டு பிடிப்பதே திமுகவின் கொள்கையாகி விட்டது. இவர்கள் உண்மையாகவே சீர்திருத்த வாதி அல்ல. தமிழ் நாட்டில் தண்ணீர் பிரச்சினை மற்றும் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. ஆறுகள் பல கழக ஆட்சியில் காணாமல் போய்விட்டன. எனவே பெரிய தீமையிலிருந்து, சிறிய தீமையை நோக்கியும், பின்னரே எவனாவது நல்லவன் வருவானா என்றும் ஏங்குகிறான் தமிழன்.

  சுமார் இரண்டு லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்ற போது, அதற்கு தளவாடம் கொடுத்து உதவிய காங்கிரசு காரனுக்கும் , அவனுக்கு பல்லக்கு தூக்கிய திமுக கூட்டணி கட்சிகளுக்கும் மானமுள்ள எந்த தமிழனும் ஒட்டு போடமாட்டான். இந்த தேர்தலுடன் காங்கிரசு தமிழ் நாட்டில் ஒழியும். காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கிய குடும்ப கட்சியும் ஒழியும்.

 35. I belong to Mannachanallur constituency. It is a new constituency and consists of only rural voters who normally without their knowledge that their right to cultivate and earn are blocked by these two money mongers, vote for them only. But this time, BJP has entered in to the arena. Let me see how they perform in this election. My vote is for BJP only

  sridharan g

 36. வணக்கம் திரு. பிரதாப்,

  //ஆயிரக்கணக்கான மற்றும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள விஷயங்களுக்கு ஆதாரம் பராமரிப்பது என்பது எங்கும் முடியாது.

  அது ராமர் மட்டுமல்ல. வேறு எவராயினும் சரி. உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் ஒரு வழிபாட்டு தளத்தில், நபிகள் நாயகத்தின் முடி என்று இஸ்லாமியர்கள் நம்பும் ஒரு முடி , பத்திரமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை அது தொலைந்து போய் விட்டதாக செய்தி பரவியவுடன் , அங்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் கலாட்டா ஏற்பட்டது.//

  உண்மை தான் … ஆதாரம் இல்லாத நிருபிக்க இயலாத விஷயத்தை வைத்து கொண்டு எதுவும் பேசுவதும் ஒரு நல்ல திட்டத்தை முடக்குவதும் பகுத்தறிவுக்கு அழகல்ல. அது நபிகளின் முடியாக இருந்தாலும் சரி ராமர் என்கிற கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.மூடநம்பிக்கை என்பது இந்துகளுக்கு மட்டும் சொந்தமானது அன்று. மதம் என்றாலே அங்கே 70 விழுக்காடு மூட நம்பிக்கை தான் இருக்கும் அந்த மூடநம்பிக்கை என்பது இஸ்லாத்திலும் உண்டு கிறிஸ்தவத்திலும் உண்டு. அதில் ஒன்று தான் நீங்கள் மேல சுட்டி காட்டிய நபிகளின் முடி விவகாரம்.

  //சதுர் யுக கணக்கும் , வெகு காலமாக நம் மக்கள் மதித்து நம்பிவரும் ஒரு விஷயம் தான். ஆனால் புதுவருடம் என்பது அப்படி அல்ல. தமிழ் புத்தாண்டு என்பது வானியல் நிகழ்வான மேஷ ராசியில் சூரியன் புகும் ஒரு உண்மையான கணக்கீடு . இது விஞ்ஞான பூர்வ மான ஒரு செய்தி. எனவே உங்கள் வாதம் பொருத்தமாக இல்லை என்று அன்புடன் தெரிவித்துக்கொண்டு , தங்கள் கருத்தை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன்.//

  ஆண்டு கணக்கை பொறுத்த வரை நான் மேல சொன்ன விஷயத்தை தான் மீண்டும் சொல்கிறேன். மக்கள் நம்பி தான் வருகிறார்களே தவிர இது தான் அப்பட்டமான உண்மை என்று யாரும் ஏற்று கொள்ளவில்லை. திருவள்ளுவர் என்று ஒருவர் இருந்தார் என்பதை ஏற்று கொள்ளும் அளவிற்கு கூட இந்த உலகில் சதுர்யுக ஆண்டை யாரும் முழுமனதாக நம்ப தயாராக இல்லை.

  தமிழ்புத்தாண்டு விஷயத்தில் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். சித்திரை முதல் நாள் என்பதை உங்கள் விஞ்ஞான வ்யாக்யானத்தின் படி நீங்கள் ஜோசியம் பஞ்சாங்கம் நல்லது கெட்டது பார்க்க( அதில் நம்பிக்கை உள்ளவர்கள் ) ஜாதகம் கணிக்க வைத்து கொள்ளுங்கள் யாரும் உங்களை வேண்டாம் என்று சொல்லவில்லையே. வேண்டுமானால் இந்து மத புத்தாண்டு என்று இந்தியா முழுமைக்குமாக வைத்து கொள்ளுங்கள் யார் உங்களை தடுக்க போகிறார்கள் அதான் சொல்லிவிட்டிர்களே “வானியல் நிகழ்வான மேஷ ராசியில் சூரியன் புகும் ஒரு உண்மையான கணக்கீடு” என்று . எந்த தமிழனும் உங்கள் மீது வழக்கு தொடுத்து நிறுத்த மாட்டான். கவலை வேண்டாம். அனால் தை திங்கள் முதல் நாள் என்பது மார்கழிக்கு பிறகு வரும் ஒரு மனதுக்கு இதம் தரும் இனிய குளுமையான மாதம். உலகிலுள்ள சர்வ மத தமிழர்கள் ஒன்று கூடி கொண்டாட கூடிய பாரம்பரிய புத்தாண்டாக அமையட்டும் அந்த மாதம் . சித்திரையில் என்ன இருக்கிறது கொண்டாட.. சுட்டெரிக்கும் வெயிலில் என்ன கொண்டாட்டத்தை காண முடியும். 100 மீட்டார் தூரம் நடந்தாலே நாய்க்கு நாக்கு தள்ளுவது போல் தள்ளி விடுமே நாவறட்சி. வேண்டும் என்றால் சன் t .v யில் போடும் நிகழ்ச்சிகளை வீட்டில் உட்கார்ந்து ரசிக்கலாம்.அதற்கு தான் அது லாயக்கு. இன்னும் சொல்லப்போனால் கிராமப்புறங்களில் உள்ள தமிழ் பழமொழியே சொல்லுவது கூட “தை பிறந்தால் வழி பிறக்கும்”என்பது தானே.. தை அன்று தானே உழவன் மகிழ்ச்சியாக தான் பயிரிட்ட நெல்லை அறுவடை செய்து புத்தாடை அணிந்து அறுவடை செய்த நெல்லை இறைவனுக்கு பாலும் வெள்ளமும் சேர்த்து காணிக்கை ஆகுகிறான். மீதம் இருக்கும் நெல்லை சந்தையில் விற்று பணம் சம்பாதித்து தன் இன்ப நாட்களை தொடங்குகிறான் . அந்த மகிழ்ச்சியான தருணம் தான் தமிழனுக்கு ஒரு இனிய புத்தாண்டாக அமைய முடியும். “சித்திரையில் பிள்ளை பிறந்தால் நித்திரை கெட்டு போகும்” என்பது தானே சித்திரையின் யோகியதையை சொல்லும் பழமொழி, அன்றைக்கு மருத்துவமனை அறுவை சிகிச்சை fan , a /c போன்ற வசதி இல்லாத காலத்தில் பெண்ணுக்கு பிரசவ வேதனை என்பது பெரிய வேதனையாக அமைந்து இருந்தது .அதிலும் சித்திரையில் பிரசவம் என்பது மரண வேதனையாக இருந்ததால் தானே அப்படி சொல்லி வைத்தார்கள் . இப்போது வந்ததாக இருக்கட்டும் தை தமிழ் புத்தாண்டு இனி வரும் காலங்களில் உலகில் உள்ள தமிழர்கள் சித்திரையை மறந்து தை மாதத்தை மட்டுமே புத்தாண்டாக மனதில் கொள்வார்கள்.அந்த நாள் விரைவில் அமையும். ஆர்ய குலசெல்வர்கள் அதற்காக கவலை படவேண்டாம் ….

  சிங்கள தீவினிற்கோற் பாலம் அமைப்போம் சேதுவை மேடுருட்டி வீதி சமைப்போம் என்று பாடினான் புரட்சி கவிஞன் பாரதி அவன் ஒரு முட்டாள் போலும். இதை எதிர்பவர்கள் எல்லாம் அதி மேதாவிகள் போலும் .சேதி சமுதிர திட்டத்தால் சில பின்னடைவுகள் இருக்க தான் செய்கின்றன பவள பாறைகளுக்கு ஆபத்து ஏற்படும். மீன்பிடி வேலைக்கு ஆபத்து ஏற்படும் என்பது அனைத்தையும் தாண்டி அந்த திட்டத்தால் பல நம்மைகள் உண்டு . இந்த திட்டத்தால் உண்மையான இழப்பு இலங்கைக்கு தான். இனி இலங்கையை சுற்றி எந்த கப்பலும் போக வேண்டிய அவசியம் இருகாது. ஒரு திட்டத்தை முடக்க வேண்டும் என்றால் ஆயிரம் காரணம்கள் சொல்வார்கள். மொத்ததில தமிழ்நாடு செல்வ பூமி ஆகிவிட கூடாது. அனைத்தையும் இங்கு நான் எழுத முடியாது .. மேலும் தகவலுக்கு இந்த இணையத்தை பார்க்கவும் https://www.keetru.com/literature/essays/mu_anandakumar.php

 37. பிரதாப்

  இன்று ஞாயிற்று கிழமை ஏப்ரல் பத்தாம் நாள் காலை வந்துள்ள ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் வாரம் இருமுறை இதழ்களின் இருநூற்று முப்பத்து நான்கு தொகுதிகளுக்கான அலசலில் , எம்ஜிஆர் கட்சி கூட்டணிக்கு 141, கருணா குடும்ப கூட்டணிக்கு 92 மற்றும் இதரருக்கு 1 என்று ஜூனியர் விகடன் இதழில் கணித்துள்ளார்கள்

  குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வந்துள்ள கணிப்பிலும் இதைவிட அதிக தொகுதிகளில் எம்ஜிஆர் கட்சி கூட்டணி வெற்றிபெறும் என்று கணித்துள்ளார்கள்.

  நக்கீரன் என்ற வாரம் இருமுறை இதழில் மட்டும் கருத்து கணிப்பில் திமுக விற்கு சுமார் ஐந்து சதவீத ஒட்டு கூடுதலாக கிடைக்கும் என்றும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

  இது எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது,லயோலா கல்லுரி, சண்டே இந்தியன், மற்றும் இதர பத்திரிகைகளில் வந்துள்ள கருத்து கணிப்புஅலசல்கள் பலவற்றை பார்க்கும் போது, சில விவரங்கள் தெளிவாக தெரிகிறது.

  நாலு கோடியே எண்பத்து ஒன்பது லட்சம் வாக்காளர்கள் எடுக்கப்போகும் தேர்தல் பற்றிய முடிவை, சுமார் ஒரு லட்சம் பேரை சந்தித்து, செய்யப்படும் கருத்து கணிப்புகள் எந்த அளவுக்கு சரியாக வரும் என்று தெரியவில்லை.

  பாஜக ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளிலாவது வெற்றிபெறும் என்று நான் நினைக்கிறேன் . ஆனால் இந்த கணிப்புகளில் ஒரு கணிப்பில் ஒரு சுயேச்சை வெற்றி பெறுவார் என்றும், இன்னொரு கணிப்பில் நாலு தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

  பத்திரிகை உலகம், பாஜக ஓரிரு இடங்களில் வெற்றிபெறும் என்ற உண்மையை கூட எழுத ,பயப்படுகிறார்கள் என்று தெரிகிறது. இதைவிட கோமாளித்தனம் என்னவெனில் சுவிசேஷ பகுத்தறிவு கமிஷன் ஏஜென்ட் திக வீரமணி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசும் போது இந்த தேர்தல் ஸ்ரீ என்ற ஸ்ரீரங்க வட மொழிக்கும், திரு என்ற திருவாரூர் தமிழ் மொழிக்கும் இடையே நடைபெறும் போர்/ யுத்தம் என்று உளறி கொட்டியுள்ளார்.

  எனவே, இப்போது நடக்கும் கோமாளித்தனத்தை பார்க்கும் போது, சமூகநீதி காத்த வீராங்கனைக்கு , வீரமணி மீண்டும் பாராட்டு விழா நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

  கடைசி நேர அலை ஏதாவது அடித்தால் , எம்ஜிஆர் கட்சி கூட்டணிக்கு சுமார் இருநூறு இடங்களுக்கு மேல் போய் நின்றாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. இந்த தேர்தலில் எல்லோருக்கும் ஓரிரு உண்மைகள் இப்போதே தெரிய வந்துள்ளன.

  முதல் உண்மை தமிழகத்தில் தன்னை மூன்றாவது பெரியகட்சி என்று உளறிக்கொண்டிருக்கும் நாட்டு விரோத , மற்றும் மக்கள் விரோத காங்கிரசு காணாமல் போகப்போவது.

  இரண்டாவது உண்மை கலைஞரின் கூட்டணி கட்சிகளின் வலு எதிர்பார்த்தபடி இல்லை என்ற உண்மை வெளியே தெரிந்து விடும். வட தமிழ் நாட்டின் பெறும் பகுதிகளில் தனக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக நினைத்து பிரச்சாரம் செய்யும் அந்த இரண்டு கட்சிகளும் மக்கள் ஆதரவு கிடைக்கவில்லையே என்று வருத்தப்படும்.

  மூன்றாவது உண்மை, காங்கிரசுடன் சேர்ந்தோமே என்று கலைஞர் மிகவும் வருத்தப்படுவார்.

 38. தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஐந்து மணியுடன் ஓய்கிறது. தமிழக மக்கள் மனதில் யாராவது நரேந்திர மோடி போல கிடைக்க மாட்டார்களா என்று ஏங்குகிறார்கள். பாஜகவினர் நரேந்திர மோடி போல ஒரு நல்ல ஆட்சியாளர் , குஜராத் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக எவ்வளவு செய்துள்ளார் எப்படி செய்துள்ளார் என்று பொது மக்களிடம் எடுத்து சொல்லி நிறைய பொது கூட்டங்கள் போடவேண்டும்.

  தமிழகத்தில் இரு கழகங்களில் ஒரு கழகம் தான் ஆள முடியும் என்று இருப்பது இனி வரும் காலத்தில் நிச்சயம் மாறும்.

  நக்கீரன் வாரமிருமுறை பத்திரிக்கையின் கருத்து கணிப்பு தவிர மற்றவை அதிமுகவுக்கு சாதகமாக நிலைமை இருப்பதாக தெரிவிக்கின்றன. நக்கீரன் மட்டும் திமுகவுக்கு சாதகமாக நிலைமை இருப்பதாக தெரிவித்துள்ளது. எது சரி என்று இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும். எனவே மே பதிமூணு மதியம் பன்னிரண்டு மணிவரை எல்லோரும் பொறுமையாக காத்திருக்க வேண்டியது தான்.

  இன்று தமிழக முதல்வர் அளித்துள்ள பேட்டியில் , கருத்துகணிப்புக்கள் சரியாக இருக்கக்கூடும் என்று தெரிவித்ததாக இன்று தினமணி தமிழ் நாளேட்டில் செய்தி வந்துள்ளது. மாறுபட்ட கருத்து கணிப்புக்கள் வந்துள்ள சூழலில் , அவர் எந்த பத்திரிகை வெளியிட்ட கருத்து கணிப்பு சரியாக இருக்க கூடும் என்று கருதுகிறார் என்று தெளிவாக சொல்லவில்லை.

  இந்த தேர்தலில் இது வரை வந்துள்ள தகவல்களை வைத்து சிலவற்றை அனுமானிக்கிறேன்.

  பாஜக ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெல்லும்.

  காங்கிரசும், திமுகவின் கூட்டணி கட்சிகளும் எதிர்பார்த்தபடி வெற்றிபெறமாட்டா. காங்கிரசு ஒழிந்து போகும்.

  திமுக மட்டுமே அந்த கூட்டணியில் அதிக இடங்களில் வெற்றிபெறும்.

  ரிசல்ட்டு வந்தவுடன் , கலைஞர் மனதில் , காங்கிரசுக்கு கொடுத்த அறுபதுக்கு மேற்பட்ட இடங்களில் கழகமே நின்றிருந்தால் , கழகத்தின் வலு சற்று கூடியிருக்குமே என்று வருத்தப்படுவார்.

  திமுக கூட்டணியை விட, அதிமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்.

  கடைசி நாளின் ஏதாவது அலை அடித்தால் , அது ஆளுங்கட்சி கூட்டணியை , மிகவும் பாதிக்கும்.

  காங்கிரசு ஒழிந்தவுடன் தமிழர்கள் அனைவரும் பாயசம் சாப்பிட்டு மகிழ வேண்டிய நாளாக இருக்கும்.

 39. தமிழக தேர்தல் 2011 முடிந்துவிட்டது. இதுவரை நடந்த பதினாலு சட்டசபை தேர்தல்களில் 1952 முதல் 2011 முடிய , வாக்குப்பதிவில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. தற்காலிக மதிப்பீட்டிலேயே 75 . 21 சதவீதம் என்று தலைமை தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் அதிக ஊழல் இல்லாமல் , முடிந்தவரை சிறப்பாக நடந்ததற்கு தேர்தல் கமிஷனுக்கும், பணிபுரிந்த இதர அரசு பணியாளர்களுக்கும் , பொதுமக்களாகிய நாம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்.

  இதற்கு முந்திய தேர்தல்களில் அதிகபட்சமாக 1967 தேர்தலில் சுமார் எழுபத்தாறு சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குபதிவு நடந்தபோது , தமிழக மக்கள் பிளவுபடாத காங்கிரசை ஒழித்துக்கட்டி , திமுக என்ற திருடர் கும்பலை ஆட்சி பீடத்தில் அமர்த்தினர். அவர்களை விஷ கிருமிகள் என்றார் பெரியவர் பக்தவத்சலம்.

  இந்த தேர்தலில் பழைய வாக்கு பதிவு உச்ச நிலையையும் விட அதிக வாக்கு சதவீதம் எட்டப்பட்டு இருப்பதால், ஆட்சி மாற்றம் உறுதி. இந்த தேர்தலிலும் , ஊழல் மற்றும் அராஜக சக்தியான காங்கிரசும் அதன் அடிவருடி கட்சியான திமுகவும் ஒழிந்துபோகும்.

  நரகாசுரனை வாதம் செய்த நாளை நம் மக்கள் தீபாவளி பண்டிகை என்று கொண்டாடுவதை போல, தமிழக காங்கிரசுக்கு மக்களால் முடிவுரை எழுதப்பட்ட இந்த நாளை, தமிழர்கள் அனைவரும் பால் பாயாசம் வைத்து , எல்லா கடவுளுக்கும் படைத்து , அருந்தி மகிழ வேண்டும்.

  இந்த தேர்தலின் பெரிய தர்மசங்கடம் அறந்தாங்கி தொகுதி மக்களுக்கு தான். அங்கு காங்கிரசு சார்பில் முன்னாள் பாஜக அமைச்சரும் , தொகுதியின் மக்களால் மிகவும் நேசிக்க பாடுபவரும் ஆகிய திருநாவுக்கரசரும் , அதிமுக சார்பில் சிறுமருதூர் திரு முத்துக்குமாரசாமி சேர்வைகாரர் அவர்களின் திருக்குமாரர் திரு மு. இராசநாயகம் அவர்களும் போட்டியிடுகின்றனர். இந்த இரு வேட்பாளர்களுமே மிகவும் சிறந்த வேட்பாளர்கள் ஆவார்கள். திருநாவுக்கரசர் தொகுதி முழுவதும் நன்கு அறியப்பட்டவர் என்பதுடன் , எம்ஜிஆரின் செல்லப்பிள்ளை. ஆனால் அவர் நிற்கும் கட்சியான காங்கிரசு ஒரு டுபாக்கூர் பசங்களின் பொறுக்கி கும்பல். வேட்பாளர் மிக நல்லவர். கட்சியோ ஒரு இழி பிறவி. திருநாவுக்கரசர் தனியாக நின்றால் கூட வெற்றிபெறக்கூடியவர் தான். ஆனாலும் , ஏனோ போயும் போயும் , இந்த வீணாய்ப்போன விஷ ஜந்துவான காங்கிரசில் போய் சேர்ந்துள்ளார். அதற்கு பேசாமல் அதிமுகவில் கூட போய் சேர்ந்திருக்கலாம்.

  காங்கிரசைவிட அதிமுக எவ்வளவோ பெட்டர்.

  அதே போல திரு ராஜ நாயகமும் நல்ல வேட்பாளர் தான். இருவரில் யார் வென்றாலும் , தொகுதி மக்களுக்கு மிக நல்லதே. தேர்தலில் யாராவது ஒருவர் தான் வெற்றிபெறமுடியும்.

 40. ////////////////வேண்டுமானால் இந்து மத புத்தாண்டு என்று இந்தியா முழுமைக்குமாக வைத்து கொள்ளுங்கள் யார் உங்களை தடுக்க போகிறார்கள் அதான் சொல்லிவிட்டிர்களே “வானியல் நிகழ்வான மேஷ ராசியில் சூரியன் புகும் ஒரு உண்மையான கணக்கீடு” என்று . எந்த தமிழனும் உங்கள் மீது வழக்கு தொடுத்து நிறுத்த மாட்டான். கவலை வேண்டாம்////////

  திரு தாயுமானவன்,
  கடந்த வருடம் இதே நாளில் பஞ்சாங்கம் படிக்க சென்றவர்களை தடையை மீறி பஞ்சாங்கம் படித்ததாக கைது செய்தார்களே அது உங்களுக்கு தெரியுமா?
  தமிழ் புத்தாண்டை மாற்றி அதோடல்லாமல் அதனை கொண்டாடுவோற்கு இருக்கும் உரிமையான பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வான சமயம் சார்ந்த விசயத்தை தடுப்பது இந்த தமிழ்நாட்டிலேயே நடந்தது தாங்கள் அறியாததோ? அது நிச்சயம் தமிழ் இந்துக்களின் புத்தாண்டே.

 41. /////// தை திங்கள் முதல் நாள் என்பது மார்கழிக்கு பிறகு வரும் ஒரு மனதுக்கு இதம் தரும் இனிய குளுமையான மாதம். உலகிலுள்ள சர்வ மத தமிழர்கள் ஒன்று கூடி கொண்டாட கூடிய பாரம்பரிய புத்தாண்டாக அமையட்டும் அந்த மாதம் .//////

  நண்பரே தெரிந்துதான் பேசுகிறீர்களா? இந்துவை தவிர தமிழ் புத்தாண்டை எந்த மதத்தை சேர்ந்த தமிழரும் கொண்டாடமாட்டர்கள் என்பது தங்களுக்கு தெரியாதா? கிறித்தவர்கள் ஜனவரியை தான் புத்தாண்டாக ஏற்பார்கள், முகமதியர் அவர்களின் ஆன்மிக கணக்கையே ஏற்பர்.நீங்கள் தலைகீழாக நின்றாலும் அவர்கள் தையை ஒரு புத்தாண்டாக ஏற்க போவதில்லை.
  இது இந்துக்களின் இயல்பான முறையை மாற்றி வைத்து கிறித்தவ வருட பிறப்பை ஒட்டி மாற்றி வைக்கும் கிறித்தவ அடிமை செயல் அன்றி வேறு ஒன்றுமில்லை.

 42. /////சிங்கள தீவினிற்கோற் பாலம் அமைப்போம் சேதுவை மேடுருட்டி வீதி சமைப்போம் என்று பாடினான் புரட்சி கவிஞன் பாரதி அவன் ஒரு முட்டாள் போலும். இதை எதிர்பவர்கள் எல்லாம் அதி மேதாவிகள் போலும் //////
  நண்பரே நன்கு கவனிக்கவும் சேதுவை மேடு உருத்திதான் வீதி சமைக்க சொன்னான் பாரதி, பள்ளம் உறுத்தி அல்ல. வீதி என்பது மக்களும் கால்நடைகளும் தரையில் செல்லும் வாகனங்களும் செல்லும் பாதை அதையே அவன் வீதி என்று தெளிவாக கூறியிருக்கிறான். அவன் கூற்று ராமர் பலத்தை பலபடுத்தி அதனை சிங்கள தீவிற்கு செல்லும் வீதியாக மாற்ற சொன்னதாகத்தான் தெரிகிறது.

 43. அன்புள்ள தாயுமானவன்,

  பிற மதத்தினரின் உரிமைகளில் தலையிட்டு இருந்தால், மஞ்சள் துண்டாரின் பதவி நாற்காலி எப்போதோ பிடுங்கப்பட்டு இருக்கும்.

  நாட்டு நடப்பு எதுவும் உங்களுக்கு தெரியவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. சென்ற தமிழ் புத்தாண்டில் கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க சென்றவர்களுக்கு , மஞ்சளாரின் அரசு ஏகப்பட்ட மிரட்டல் மற்றும் கைது உட்பட பல தடைகளை ஏற்படுத்தியது.

  தை ஒன்றாம் நாள் பொங்கல் பண்டிகை ஆக ஏற்கனவே கொண்டாட பட்டு வரும் ஒரு திருவிழாதான். நீங்கள் சொல்வது போல, தை முதல் நாளை , ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த கலைஞரும், அவர் குடும்பத்தினரும் புத்தாண்டாக கொண்டாடுவது பற்றி யாருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால், ஏற்கனவே தமிழ் இந்துக்கள் வழக்கமாக சித்திரை ஒன்றாம் நாள் கொண்டாடும் தமிழ் புத்தாண்டை , கோவில்களில் அன்று பஞ்சாங்கம் படிக்க விடாமல் தடுத்து, தேவை இல்லாமல் குழப்பம் செய்வித்த மோசடி பகுத்தறிவு வாதியான கலைஞருக்கு , தமிழ் இந்துக்கள் அனைவரும் மிகுந்த வேதனையுடன் இந்த தேர்தலில் தீர்ப்பு வழங்கி விட்டார்கள்.

  பல கோயில்களில் , கோயில்களின் ஆண்டு திட்டத்திலேயே பஞ்சாங்கம் படித்து , தெய்வ திருவுரு முன்பு , தீபாராதனை செய்து வழிபடுவது வரவு செலவு திட்டத்திலேயே பல வருடங்களாக உள்ளது. எனவே தமிழ் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளில் தலையிட்டு , அவர்களின் சுதந்திரத்தை பறித்த கிரிமினல் குற்றத்தை செய்தவர் இவர்.

  இது போன்ற அயோக்கிய தனமான செயல்களை செய்த இவருக்கு பல்லக்கு தூக்கிய காங்கிரசு காரனுக்கும் தமிழ் மக்கள் இந்த தேர்தலில் நல்ல பாடம் புகட்டி உள்ளனர். இவரும், இவரது குடும்பத்தினரும் தமிழ் இந்துக்களின் சாபத்தினால் விரைவில் நல்ல பாடம் பெறுவார். இனிமேல் குதிரை ஓடியபிறகு இவர் லாயத்தை பூட்டி என்ன பலன்? இவரது பித்தலாட்ட சாம்ராஜ்யங்கள் இவர் கண் முன்னே சிதறும்.

 44. \\ சரி சதுர் யுகம் என்று அழைக்க படும் கிருத யுகம் =1,728,௦௦௦000௦௦௦ ஆண்டுகள், திரேதா யுகம் =1,296,000 ஆண்டுகள், த்வாபர யுகம் =864,௦௦௦000 ஆண்டுகள், கலியுகம்=432,௦௦௦௦௦௦௦௦௦000 ஆண்டுகள் போன்ற ஆண்டுகள் இருந்தன என்பதற்கு என்ன அறிவியல் பூர்வமான வரலாற்று ரீதியான ஆதாரங்கள் இருக்கிறது.\\

  இன்று பசு மாட்டு முத்திரத்தில் இருந்து பற்பல மருந்துகள் கண்டு பிடிக்க பட்டு அதை காப்புரிமை சட்ட படி பதிவும் செய்கிறார்கள்.

  https://www.goshala.com/products.php

  பசு மாட்டு முதிரத்தை குடிக்கும் கபோதிகள் என்று ஹிந்துக்களை திட்டினார்கள் இந்த திராவிட பொய்யர்கள். அறிவியல் என்பது ஒரு முடிந்து போன கட்டுரை அல்ல. போன நுற்றாண்டில் ஆங்கில மருத்துவர்களால் ஏற்று கொள்ள முடியாத இந்த பசு முத்திரம் இன்று மருந்தாக ஏற்று கொள்ள பட்டுள்ளது. ஐநுரு ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பிய மக்கள், சூரியன் பூமியை சுற்றுகிறது என்றார்கள். ஆனால் நாம் பூமி சூரியனை சுற்றுவதோடு மட்டும் அல்லாமல் அனைத்து கோள்களின் இயக்கம் மற்றும் பிரபஞ்ச அறிவியல் பற்றி தெளிவாக சொல்லி உள்ளோம்.

  உங்களுடைய இந்த கேள்விக்கான அறிவியல் பூர்வமான உண்மையை இந்த லிங்கில் தெரிந்து கொள்ளலாம். அது மட்டும் இன்றி, நீங்கள் பிரபஞ்சதிற்கான கால அளவையும் மனித இனத்திற்கான கால அளவயும் போட்டு குழப்பி கொண்டு இருகிறீர்கள்.

  https://thamizhan-thiravidana.blogspot.com/2010/12/15.html

  \\ . இன்றைக்கு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வரும் துணை பாட கதைகளை போல அன்று தனி மனித ஒழுக்கத்திற்காக சொல்லிவைத்த நன்னெறி கதைகள் தான் இந்த ராமாயணம் பாரதம் எல்லாம். கற்பனை என்றே வைத்து கொண்டாலும் திருவள்ளுவர் ஒரு எடுத்துகொள்ள கூடிய ( practical ) ஆனா அழகிய கற்பனை என்றால் ராமாயணம் மனித சிந்தனைக்கு ஒவ்வாத ஒரு அட்டு கற்பனை \\

  \\ராமநேசசெல்வர்களுக்கு ஒன்று சொல்கிறேன் நான் நாத்திகவாதி அல்ல ஆத்திகவாதி தான்.. கடவுளை நம்புபவன் தான் அதனால் தான் இது போன்ற மூட நம்பிக்கைகளை ஏற்க முடிவது இல்லை .பா.ஜ.கா வையும் ஏற்று கொள்ளமுடியவில்லை\\

  உங்களுடைய இந்த இரண்டு கருத்திற்கும் ஒரு மிக பெரிய முரண்பாடு உள்ளதே? நீங்கள் எந்த கோட்பாட்டு முறை படி நீங்கள் இறை தத்துவத்தை தெரிந்து கொள்ளே முயற்சி செய்கிறிர்கள் என்று சொல்ல முடியுமா?

  இதில் சைக்கில் கேப்பில் பிஜேபியை இழுக்க காரணம் என்ன? BJP ஒன்றும் சேது சமுத்திர திட்டத்தை முழுமையாக எதிர்க்க வில்லை. ஹிந்துக்கள் நம்பக்கூடிய பாலத்தை இடிக்காமல் மாற்று பாதையில் செல்லுமாறு அல்லவா கோரிக்கை வைத்தார்கள். உங்களால் பிஜேபி ஏன் ஏற்று கொள்ள முடியவில்லை. அப்படி பிஜேபி யை ஏற்று கொள்ள முடியவில்லை என்றால் வேறு எந்த கட்சியையும் உங்களால் ஏற்று கொள்ல முடியாது.

  ராம சேது திட்டத்தினால் ஒரு உபயோகமும் இல்லை. சும்மா டகால்டி உடாதிங்க. அந்த பாலத்தை உடைக்க பல முறை முயற்சி செய்தும் முடியாமல் அனுப்பிய கப்பல்கள் எல்லாம் உடைந்து போனது. நான் பகுத்தறிவை குத்தகைக்கு எடுக்காததால் நான் சொல்லும் அனைத்துக்கும் கண்டிப்பாக ஆதாரம் கொடுக்க வேண்டும். இதே பகுத்தறிவு குத்தகை காரர் என்றால் ஒரு ஆதாரமும் தேவை இல்லை. இஷ்டத்திற்கு வாய்க்கு வந்த படி பேசலாம். அதற்கு ஆதாரம் தேவை இல்லை. கீழே உள்ள லிங்கை படித்து தெரிந்து கொள்ளவும்.

  https://www.timesonline.co.uk/tol/news/world/asia/article1572638.ece

  ராம சேது திட்டத்தினால் அரசியல் வியாதிகளுக்கு தான் லாபமே தவிர மக்களுக்கு ஒரு லாபமும் இல்லை.

 45. பாஜக இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு சுமார் நாலு சதவீத வாக்குகளை பிரிக்கும். ஓரிரு இடங்களில் வென்றால் அதிசயம்.

  இதனால் அதிமுக அணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமோ என்று பலரும் கவலைப்படுகிறார்கள். இம்முறை அதிமுக அணியின் வாக்கு வித்தியாசம் மிக அதிகமாக இருக்கும். எனவே பாஜக பிரித்த வாக்குகள் அதிமுக அணியின் வெற்றிக்கு ஒரு பாதிப்பையும் உண்டாக்காது. தன்னுடைய வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளும் ஒரு முயற்சியில் தான் பாஜக ஈடு பட்டுள்ளது.அதற்கு மேல் எதுவும் இல்லை.

  தமிழக தேர்தலில் இதுவரை நடந்த பதினாலு சட்டசபை தேர்தல்களிலேயே அதிக பட்ச அளவாக 77 .4 சதவீதம் வாக்கு பதிவு ஆகி உள்ளது. எனவே ஒரே தலைகீழ் புரட்டல் ஆக இருக்கும். தேர்தல் கமிஷனின் பாராட்ட வேண்டிய நடவடிக்கை காரணமாக இந்த அளவு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு உள்ளது. வாக்கு பதிவு அதிகரிக்க , தேர்தல் கமிஷனின் வீடியோ ஒரு அற்புதமான தூண்டுதலாக அமைந்தது.

  தேர்தல் கமிஷனுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், இரவு பகல் பாராமல் கண் விழித்து பணியாற்றிய காவல் துறையினருக்கும் அவசியம் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.

  காங்கிரசு தமிழ் நாட்டில் இந்த தேர்தலுடன் ஒழிந்தது. மக்களுக்கு இனிமேல் நல்ல காலம் தான். இந்த தமிழ் புத்தாண்டு காங்கிரசு கூட்டணியினரை தவிர மற்ற எல்லோருக்கும் நல்ல ஆண்டே ஆகும்.

 46. அரசியல் ஜோதிடர்கள் ஆளாளுக்கு ஒன்றாய் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். எல்லா சீட்டும் எங்கள் கட்சிக்கே/கூட்டணிக்கே என்று ஆளாளுக்கு அவிழ்த்து விடுகிறார்கள்.

  மே பதிமூணாம் நாள் வரை காத்திருக்க பொறுமை இல்லையா?

  பாஜக தன்னிடம் இருக்கும் குறைந்த பணம், மற்றும் ஆள்பலம் இவற்றை வீணாக்காமல், ஒரு பதினைந்து அல்லது இருபது தொகுதிகளை தேர்ந்தெடுத்து அவற்றில் மட்டும் போட்டியிட்டு இருந்தால் , அதிக எம் எல் ஏக்களை பெற்றிருக்கலாம்.

  வீணாக கண்டவனெல்லாம், மஞ்சளாரிடம் பாஜக பெரிய பெட்டியை வாங்கி விட்டது எனவே ஓட்டை பிரிப்பதற்காக எல்லா இடங்களிலும் தனித்து போட்டி போடுகிறது என்று அவச்சொல் சொல்ல வாய்ப்பு அளித்திருக்க வேண்டாம்.

  காங்கிரசு ஒழிந்தால் மட்டும் போதுமா? இந்துக்களுக்கு எதிரான எல்லா சக்திகளும் தேர்தலில் தோற்கடிக்க படவேண்டும்.

 47. இந்த தேர்தலில் மட்டுமல்ல எந்த தேர்தலிலுமே திமுக மற்றும் அதன் சார்பு கட்சிகளுக்கு ஒட்டு போட கூடாது என்று ஒரு கருத்து பலரிடமும் நிலவுகிறது. இதில் ஒரு ஆச்சரியம் என்னவெனில் , இவர்களில் பலரும் 1996 ம் வருட சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் மற்றும் மூப்பனார் ஆகியோரின் பேச்சை கேட்டு, உதய சூரியனுக்கு ஒட்டு போட்ட மக்கள் ஆவார்கள்.

  அப்படி என்ன நடந்து விட்டது கலைஞர் ஆட்சியில் என்று கேட்டால் கதை கதையாக சொல்கிறார்கள்.

  தமிழ் வருடம் சித்திரை முதல் நாள் என்பதை, தை முதல் நாள் என்று மாற்றி இவர் உத்தரவு போட்டது ஒரு கொடூரமான நகைச்சுவை ஆகும். கோயில்களில் பஞ்சாங்கம் படிப்பது ஒவ்வொரு சித்திரையிலும் பல ஆண்டுகளாக உள்ள ஒரு வழக்கம். இதில் தலையிட்டு ஒரு பெரிய வெறுப்பை சம்பாதித்து கொண்டுள்ளார்.

  பிற மதங்களின் விவகாரங்களில் இதுபோல் தலையிட்டு ஏதாவது செய்தால் இவர் கதி இந்நேரம் அதோ கதி ஆகியிருக்கும்.

  அது தான் போகட்டும், நமது மதத்தில் உண்மையான சீர்திருத்தம் செய்து , அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு வழிவகுத்திருந்தால், பலரும் பாராட்டியிருந்திருப்பார்கள். அதற்கும் எல்லா சாதியினருக்கும் பயிற்சி கொடுத்துவிட்டு , கோயில்களில் பூஜை செய்ய வேலை நியமன ஆணை கொடுக்க வில்லை. எனவே அதுவும் ஒரு மோசடி தானா?

  சைவ கோயில்களில் ஸ்மார்த்த பிராமணரோ, குருக்கள் எனப்படும் சிவாச்சரியார்களோ பூஜை செய்கிறார்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக. இவர்களுடன் அனைத்து ஜாதியினருக்கும் பயிற்சி கொடுத்து, அர்ச்சகராக நியமனம் செய்தால் , இந்து மதத்தில் தற்போது நிலவி வரும் , எல்லா ஜாதிகளும் ஒழிந்துவிடும். மேலும் மத மாற்ற வியாபாரிகள், நமது மதத்தவரிடம் பிரச்சாரம் செய்யும்போது, உங்கள் கோயிலில் நீங்கள் பூஜை செய்ய உரிமை உண்டா என்று கிண்டலடித்து, மத மாற்றத்துக்கான விதைகளை ஊன்றுகிறார்கள்.

  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதாலும், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு என்று சட்டம் செய்தால் , நமது மதத்தினை பிடித்த இடைக்கால சனியன் ஒழிந்து , நம் நாட்டிலேயே பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

  கபாலீசுவரர் கோயிலில் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகும் பொது , சிவபெருமான் உண்மையிலேயே மிக மகிழ்வார்.

  இதனைப்போல திருப்பதியில் உள்ள வேங்கடவன் கோயிலிலும் எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதால் நம் நாட்டில் ஜாதி பிரச்சினை ஒழிந்துவிடும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் தான், வேங்கடவன் உண்மையிலேயே மகிழ்வார். மத மாற்றங்கள் ஒழிந்து நிம்மதி பிறக்கும்.

  இது போன்ற உண்மையான சீர்திருத்தங்களில் கலைஞருக்கோ, ஜெயாவுக்கோ எந்த அக்கறையும் கிடையாது. பாஜக போன்ற கட்சி ஆட்சிக்கு வந்து , பல சீர்திருத்தங்களை செய்யும் என்று anaivarum edhir paarkkiraarkal.

 48. தமிழக தேர்தலில் பாஜக சுமார் நூற்று தொண்ணூறு இடங்களுக்கு மேல் போட்டியிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் ஐநூறு ஒட்டு வீதம் நூறு தொகுதியிலும், சுமார் ஆயிரம் ஒட்டுவீதம் இருபது தொகுதியிலும், சுமார் ஐயாயிரம் ஒட்டு வீதம் இருபது தொகுதியிலும் , பத்தாயிரம் ஒட்டு வீதம் சுமார் ஐம்பது தொகுதியிலும், இரண்டு தொகுதிகளில் சுமார் நாற்பதாயிரம் ஒட்டு வாங்கி வெற்றிபெறும் என்று என் நண்பர் கூறுகிறார்.

  இந்த கணக்குப்படி பாஜக தனியாக நின்று சுமார் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ஒட்டு வாங்கும் என்று எதிர்பார்க்கிறார். ரொம்பவும் விவரம் தெரிந்தவர்கள் பலர் பேசும் போது, இந்த தேர்தலில் வெற்றி பெரும் வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் ஆயிரம் அல்லது இரண்டாயிரத்திற்கு மேலே இருக்காது எனவும், பெரிய தலைகளே கூட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றிபெறுவார்கள் என்றும் , சில பெரிய தலைகள் , குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை என்றும் கூறுகிறார்கள்.

  எனவே, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் , வெற்றிவாய்ப்பை இழக்கும் கட்சிகள் எதுவாயினும், பாஜக மேல் மண்ணை வாரி தூற்றப்போகிறார்கள். இது உறுதி.

 49. பாஜக கழகங்களுக்கு மாற்றாகிறதோ இல்லையோ ஒன்று நன்றாக தெரிகிறது. மே பதிமூணில் வென்ற தோற்ற குழுக்கள் வெற்றி அல்லது தோல்வி பெற்றதற்கு பாஜகவே காரணம் என்று சொல்லி மகிழவும், அல்லது புலம்பவும் செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  இந்த தேர்தலில் வென்ற மற்றும் வெற்றிவாய்ப்பை இழந்த வேட்பாளர்களுக்கு இடையே உள்ள வாக்கு வித்தியாசம் சுமார் நூற்று ஐம்பது தொகுதிகளில் மிக குறைவாகவே இருக்கும் எனவும், அதாவது ஐநூறு முதல் மூவாயிரம் வரை தான். இந்த தொகுதிகளில் பாஜக சுமார் மூவாயிரம் அல்லது நாலாயிரம் வாக்குகளை பெற்று, தேர்தல் முடிவை திசை மாற்றிய சக்தியாக அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் ஆளும் மற்றும் முன்னாள் ஆண்ட கழகங்கள் சார்ந்தவர்கள் பேசுகின்றனர்.

  எல்லோரும் சொல்லும் ஒரே விஷயம் கூட்டணிக்கு எந்த கட்சியும் காங்கிரசை தேடாது என்பதுதான். ஏனெனில் காங்கிரசில் மிக சில அல்லது பூஜ்யம் அதாவது சைபர் எம் எல் ஏக்களே இருப்பார் என்று பலரும் கூறுகிறார்கள். இதற்கு சீமான் போன்றவர்களின் பிரச்சாரம் மட்டுமே காரணம் அல்ல.

  சீமான் குரூப் கூட்டத்தில் உரையை கேட்டுவிட்டு வந்தபோது மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனித்தேன். இவர் காங்கிரசை மட்டும் காரணம் ஆக்குகிறார், ஆனால் திமுக பதவியில் மாநிலத்திலும், மத்தியில் கூட்டும் பெற்று , லட்சக்கணக்கான சிவிலியன் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பதவி சுகத்துக்காக , வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார்கள். இப்படியிருக்க, காங்கிரசை மட்டும் குறைகூறுவது தவறு சீமான் போன்றவர்கள் நியாயமாக நடந்துகொள்வோராக இருந்தால், அந்த கூட்டணியை ஒட்டுமொத்தமாக எதிர்த்து பிரச்சாரம் செய்யவேண்டும், அதை விடுத்து இப்படி ஓரவஞ்சனை செய்ய கூடாது.

  எனவே இவர்போன்ற ஆட்களின் பேச்சை கேட்டு, நாம் முடிவு எடுக்க கூடாது என்று சொன்னார்கள். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், காங்கிரசுக்கு மக்கள் ஒட்டுபோடுவார்கள் என்பது கிடையாது. திமுகவும் கூட சேர்ந்து பலியாகும் வாய்ப்பே அதிகம் என்று படுகிறது.

  காங்கிரசில் அறந்தாங்கி திருநாவுக்கரசரை தவிர வேறு யாரும் தேறுவார்கள் என்று தெரியவில்லை. வேறு யாராவது வெற்றி பெற்றால் அது வாக்கு பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட ஏதாவது கோளாறினால் தான் இருக்கும். ஆனால் இரு அணியினரும் பாஜக ஓட்டை பிரித்ததால் தான் தங்களுக்கு தோல்வி ஏற்பட்டது என்று முடிவு தெரிந்ததும் புலம்பும் சூழ்நிலை ஏற்படலாம்.

 50. எந்த வாக்காளரும், சுயேச்சைகளுக்கும் , நிச்சயம் வெற்றிபெறாது என்று எல்லோராலும் நம்பப்படும் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க விரும்பமாட்டார்கள். பாஜக வாக்குகளை பிரிப்பதால் முக்கிய கழகங்களின் வெற்றி தோல்வி வாய்ப்புக்கள் மாறிவிட கூடும் என்று கூறும் கருத்துக்கு மாறுபட்ட கருத்தும் பரவலாக உள்ளது.

  நம் மக்கள் இப்போதைய ஆட்சி நீடிக்க வேண்டுமா அல்லது மாற்று வாய்ப்பு வேறு ஒரு அரசியல் கட்சிக்கு கொடுக்கப்பட வேண்டுமா என்பதில் மிக தெளிவாக ஒரு முடிவை எடுப்பார்கள். சுயேச்சைகளுக்கும் , நிச்சயம் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கருதப்படும், பாஜக, எஸ் ஆர் எம் பச்சைமுத்து போன்ற கூட்டணிகளுக்கும் வாக்களிக்கலாம் என்று எண்ணுபவர்கள் கூட , வாக்கு சாவடிக்கு போய் வாக்கு அளிக்கும் முன்னர் மனம் மாறி ஒரு நிலையான அரசுக்கு , இரு கொள்ளை கழகங்களில் ஏதாவது ஒன்றுக்கு ஓட்டு போட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள்.

  பாஜக சுமார் இருபது தொகுதிகளை தேர்ந்தெடுத்து முழு சக்தியையும் அந்த இருபது தொகுதிகளுக்கு செலவிட்டு இருந்தால் , அதன் வெற்றி வாய்ப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். ,

 51. டூ ஜி ஊழல் தொடர்பான வழக்கில் ராம் ஜேத் மலானி கனிமொழிக்காக வாதாடி வருவதை செய்தி ஊடகங்கள் மூலம் அறிந்து அனைவரும் சிரிக்கிறார்கள்.

  அவர் எந்த ஆவணத்திலும் கை எழுத்து போடவில்லை என்கிறார். இவரது சட்ட ஞானம் நம்மை திகைக்க வைக்கிறது. ஊழல் செய்து தகாத முறையில் சம்பாதிப்பவர்கள் கையெழுத்து போட்ட லஞ்சம் / கையூட்டு வாங்குகிறார்கள். ஏதோ மற்ற ஊழல்வாதிகள் ரெவின்யூ ஸ்டாம்பு ஒட்டி கை எழுத்து போட்டு லஞ்சம் வாங்கியது மாதிரியும், இவர் மட்டும் கை எழுத்து போடவில்லை என்பது போலவும் இவர் சொல்வதை கேட்டு கோர்ட்டே சிரித்தது.

  அவர் ஒரு டி வி கம்பெனியில் இயக்குனராக இருப்பதும், அதில் இருபது சதவீதம் பங்கு வைத்திருப்பதும் தவறா என்று வேறு கேட்கிறார். அதனை யாரும் தவறென்று சொல்லவில்லை. ஆனால் தாவூது இப்ராஹீம் பின்னணி உள்ள பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டு முதலீட்டாளர்களுக்கு , டூ ஜி யை விற்றுவிட்ட ஸ்வான் போன்ற கம்பெனிகளிலிருந்து தொகை கடனாக வாங்க வேண்டிய தேவை என்ன நேரிட்டது?

  ஏன்? தேசீயமயமாக்கப்பட்ட பாங்குகள் உங்களுக்கு கடன் கொடுக்காதா? ஏன் ஏதாவது ரகசிய வியாபாரமா செய்கிறீர்கள்?

  அறுபத்தாறு கோடி சொத்து குவிப்பு ஜெயாமீது வழக்கு போட்டபோது அவர் பெண்ணென்று இவர் கண்ணில் தெரியவில்லை. இப்போது இவர் மகள் மீது வழக்கு வந்தவுடன் பெண் என்பது இப்போதுதான் தெரிகிறது. இது என்ன பாரபட்சம்?

  இவர்களின் ஒரு லட்சத்து தொண்ணூறாயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் நஷ்டம் நாட்டுக்கல்லவா ? இவ்வளவு பெரிய மோசடி குடும்பம் ஒரு அரசியல் இயக்கம் என்ற பெயரில் நாட்டு பாதுகாப்புக்கே ஆபத்தான செயல்களை செய்து கொண்டு இருப்பது நமக்கு ஆச்சரியம் ஆக தெரியவில்லை.

  அன்றே காமராஜர் சொன்னார் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று. நாக்கூசாமல் காமராசர் போன்ற உத்தமர்களை 1967 முதல் 1975 முடிய விமரிசித்த பாவம் இவர்களை சும்மா விடாது. அது தான் இப்போது விஸ்வ ரூபம் எடுத்து ஆடுகிறது.

  இனிவரும் காலங்களில் தமிழகத்தை பிடித்த இந்த தீய இயக்கம் ஒழிந்துபோகும். இது உறுதி.

 52. கதிரவனின் 13 . ஏப்ரல் .2011 தேதிய கடிதத்தில் குறிப்பிட்டபடி , திருநாவுக்கரசர் காங்கிரசு கட்சியில் போய் சேர்ந்தது இமாலய தவறு என்று இப்போதாவது உணர்ந்திருப்பார்.

  அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் இதுவரை தோற்காத திருநாவுக்கரசர் இம்முறை சுமார் பதினாறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க நேரிட்டுள்ளது.

  ஏற்கனவே பலராலும் தெரிவிக்கப்பட்டுள்ள படி , காங்கிரசு ஒரு டுபாக்கூர் கும்பல். அதனுடன் சேர்ந்த கருணா கட்சி இந்த தேர்தலில் காலியாகி விட்டது. காங்கிரசுக்கு கொடுத்த அறுபத்து மூணு தொகுதிகளில் , காங்கிரசு கூட்டணி இல்லாமல் , திமுக வே போட்டி போட்டிருந்தால் , திமுக இன்னும் ஒரு இருபது இடங்களிலாவது வெற்றி பெற்று இருக்கும். காங்கிரசு கூட்டணியால் திமுக காலியாகி போனது. அந்த உருப்படாத கும்பலில் போய் சேராமல் , திருநாவுக்கரசரே தனியாக , சுயேச்சையாக போட்டி போட்டிருந்தால் கூட , இந்த நிலை வந்திராது.

  தமிழகத்தில் காங்கிரசு ஒழிந்தது , இந்த தேர்தலில் ஒரு நல்ல நிகழ்ச்சி. ஒவ்வொரு தமிழனும், பாயசம் குடித்து மகிழ வேண்டிய நாள் இது.

 53. பிரதாப்,

  தங்கள் கருத்து முற்றிலும் தவறானது.

  முதலில் உண்மையான காங்கிரஸ் இந்திராகாந்தி பதவி ஏற்றபொழுதே கோமாவில் விழுந்துவிட்டது. சோனியா பதவி ஏற்ற உடன் அது செத்து போய் விட்டது.

  அந்த செத்த போனதிற்கு உயிர் இருப்பது போன்று நடிக்கவைத்து கிறித்துவர்களும் முஸ்லிம்களும் ஆட்டி படைத்து கொண்டு இருக்கின்றர்னர். இதை தெரியாமல் சுயநலம் மிக்க போலி செகுலர் ஹிந்து முட்டாள்கள் அதனுடன் சென்று கொண்டு இருக்கின்றர்னர்.

  இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் கேரளா. அங்கு கிறித்துவ மற்றும் முஸ்லிம் கட்சிகள் தலா 9 மற்றும் 20 தொகுதிகளை கை பற்றினர். இவர்கள் எல்லாம் செகுலர் வாதிகள், BJP இவர்களுக்கு மதவாத கட்சி. காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மீதம் உள்ள 38 கூட இவர்கள் தயவால் கிடைத்தது.

  ஏற்கனவே அனைத்து துறைகளும் கேரளாவில் இவர்கள் வசம் இருந்த நிலையில் வரலாறு காணாத அளவில் கிறித்துவ மற்றும் முஸ்லிம்கள் கட்சி வெற்றி பெற்றதால், அரசு மற்றும் வியாபாரம் முதலியவற்றை முழுமையாக கை பற்றுவர். இனி LOVE JIHADI இவர்கள் ஆசியில் இனியதே நடைபெறும். ஹிந்துக்கள் சதவிகிதம் இன்னும் குறைய வைப்பு உள்ளது. என்னுடைய கவலை எல்லாம் இவர்கள் தாக்குதலினால் ஏற்ப்படும் உயிர் சேதம் பற்றியதே 🙁

  இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் இடம் இவர்கள் கூட்டணி இருந்தது போக இவர்களுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும். விரைவில் மற்றும் ஒரு காஷ்மீர் போன்ற நிலை தென் இந்தியாவில் நாம் ஒரு பத்து வருடங்களில் காணலாம்.

  அங்கு இருக்கும் ஹிந்துக்கள் அடித்து விரட்டப்படும் பொழுது அவர்கள் இருப்பதற்கு இப்பொழுதே நாம் தமிழ் நாட்டில் இடம் பிடிக்க வேண்டும். அப்பொழுது கூட இங்கு இருக்கும் ஆட்சி எப்படி இருக்கும் என்று தெரிய வில்லை. மனித நேய மக்கள் கட்சி இரண்டு தொகுதிகளை ஜெயலிதா ஆசியில் இனிதே கிடைத்தது.

  இனி இவர்கள் பாடு தமிழகத்தில் கொண்டாட்டம் தான். இன்னும் ஒரு பத்து வருடங்களில் கேரளா போன்ற சூழ் நிலை தமிழ் நாட்டில் உருவாகும்.

  இந்த இக்கட்டான சூழ் நிலையில் நம்மை நமது முன்னோர்கள், அவர்கள் தவ வலிமை மற்றும் நமது ஆன்மிக வலிமை நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் உள்ளது.

  வாழ்க பாரதம் !! வாழ்க தமிழ் !1

 54. the day congress is wiped out from the entire country ,that day will be deepavali for us all – especially the Hindus

 55. பா.ஜ.க சொற்பமாக ஏறகுறைய 2 சதவிகிதவாக்குகளை தான் பெற்றுள்ளது. இதற்கு காரணம் தி.மு.க. வை பதவி விலகசெய்வதில் பொது மக்கள் வெகு தீவிரமாகவே செயல்பட்டுள்ளார்கள் என தெரிகிறது. நான் சந்தித்த பல வாக்காளர்கள் பொதுவாக பா.ஜ.க கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதைவிட முக்கியமா தி.மு.க வை விழ்தவேண்டும் என்ற ஒரே குறியாக எந்தவித ரிஸ்க் எடுக்கவும் முன்வரவில்லை. கேட்டால் பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பா.ஜ.க விற்கு வாக்களிப்போம் என்றே தெரிவித்தார்கள். அப்படிபட்டவர்கள் வாக்களித்திருந்தால் பா.ஜ.க சதவிகிதம் நிச்சயம் 4 சதவிகிதத்தை எட்டியிருக்கும். இதனால் தேவையில்லாமல் ஜெயாவிற்கு தனி பெரும்பான்மை கிடைத்து கூட்டனி அரசு அமைய வாய்பு இல்லாமல் போய்விட்டது.

  ஆட்சி ஆரம்பிக்கும் போதே ஜெயா இன்னும் திருந்தவில்லை என்பது அவர் அவசரகோலத்தில் வீண்பிடிவாதமாக சட்டசபையை பழைய இடத்திற்கு மாற்றுவது சரியில்லை. புதுவாளாகத்தினால் நிச்சயம் போக்குவரத்து நெறிசல் ஏற்படும் அது சரியான தேர்வு இல்லை என்பது பலருக்கு தெரியும். பொருமையாக வேறு இடத்தை தேர்வு செய்து ஒரு 6 மாதத்திற்குபின் அங்கே சட்டசபையை கூட்டியிருக்கலாம். அதுவரை புதிய கட்டிடத்தில் செயல்பட்டிருக்கலாம்.

  முன் எச்சரிக்கையாக சுப்பிரமணியம் சாமி சோனியாவுடன் தூரஇருப்பது தான் ஜெயாவிற்கு நல்லது என்று அறிக்கை வெயியிட்டுள்ளார். எதிர்பார்தபடி இன்று சோனியாவிடமிருந்து தேனீர் விருந்திற்கு ஜெயாவிற்கு அழைப்பு வந்துள்ளது. இந்த சாக்கடையில் விழுந்து புரளாமல் ஜெயா இருந்து சாமர்தியமாக செயல்பட்டு தமிழக மக்களின் வாக்கிற்கு மதிப்பளித்து நல்லது செய்யவேண்டும் என ஆண்டவனை பிராத்திக்கிறேன் !!!!!

 56. பாஜக போட்டியிட்டு அதிக வாக்குகளை பிரித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் , மூன்று இடங்களிலும், கர்நாடக மாநில எல்லைக்கருகில் உள்ள ஓசூர் தொகுதியிலும், பட்டுக்கோட்டை தொகுதியில் கட்சி டிக்கட் கிடைக்காத ஒருவர் சுயேச்சையாக போட்டியிட்டு ஏராளமான ஓட்டுக்களை பிரித்ததால் காங்கிரசு கட்சி வெற்றி பெற நேரிட்டது. மற்றபடி காங்கிரசுக்கு, பாஜக போட்டியிடாமல் இருந்திருந்தால் எல்லா தொகுதியிலும் தோல்வி உறுதியாகி இருக்கும். காங்கிரசுக்கு ஐந்து இடம் கிடைத்ததற்கு, நாலு இடத்தில் பாஜகவும், ஒரு தொகுதியில் செல்வாக்குள்ள சுயேச்சையும் அருள் புரிந்தனர்.

 57. தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த பின்னடைவை கொடுத்துள்ளது. ஆனாலும் கிடைத்த ஐந்து தொகுதி வெற்றியில் மூன்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தது. வெற்றி பெற்ற தொகுதிகளில் படித்த கிறித்தவர்கள் அதிகம். இவர்கள் காங்கிரசை வெற்றிபெற செய்ததன் மூலம் ஈழத்தமிழர் படுகொலைக்கு ஆதரவளிக்கிரார்களா? அல்லது வேட்பாளர் கிறித்தவர் ஆனதால் வெற்றிபெற செய்தார்களா ?. மனித உயிர்கள் படுகொலை செய்யப்பட்டதை கிள்ளியூரிலும், குளச்சலிலும் உள்ள படித்த கிறித்தவர்கள் காங்கிரசுக்கு வாக்கு அளித்து நியாபடுத்தி உள்ளார்கள் என்று எடுத்து கொள்ளலாமா ?

  மனித உயிரை விட கிறித்தவர்களுக்கு மதம் முக்கியமாகி விட்டதா ?

  கிறித்தவர்களே இலங்கை தமிழர் படுகொலைக்கு ஆதரவாக இருந்த காங்கிரசை வெற்றிபெற செய்து விட்டீர்கள். கிறித்தவர்களே, நீங்கள் படித்த படிப்பு உங்களுக்கு சுய சிந்தனையை தரவில்லையா .? கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்தவர்கள் அதிகம். ஆனாலும் தலைகுனிய வேண்டிய விஷயம், என்னவென்றால் தமிழகத்திலேயே குறைவான வாக்கு சதவிகிதம் மற்றும் காங்கிரசை மக்கள் தமிழகம் முழுவதும் நிராகரித்த போதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் வெற்றிபெற செய்தது.

  தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தோற்க கிறித்தவர் சீமான் பிரச்சாரம் செய்தார். இதற்கு அவர் என்ன பதில் சொல்ல போகிறார்?

 58. Many Political parties In India fear very much Bharatheeya Janatha Party is because of the Brand Slogan of the Party “Appecement to none,Justice for All” very much irritates them, The only thing they know very well in the political trade is that method only. Once Nehru the splitting party of the nation “MUSLIM LEAGUE” as a dead hourse,but actually what happend is,Gongress is a dieing horse but carried every where by the pseudo secularists Muslim league( there name and quality may change one state to another,but the party remains the same) Kerala Congress ( They speak only for christians and there rights,especially for earlier forest encrochers of this country, Majlies ,the another avatharam of Nizam of Hydrabad,who ready to join with pakistan and stand against India in the early1947. all these people are behind Pakistan to shatter our country.Even after knowing these peoples divisive plans Congress go with them to destablise our country cannot be tolerated by patriotic Citizens of this country. HERE BJP STOOD FIRST AGAINST THESE CALLOUS PEOPLE AND THERE PARTY. SO THESE POLITICAL STREET VENDORS MAKING VERY MUCH HUE AND CRY AGAINST THIS PARTY “BJP”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *