திக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்

ஜீலை மாதம் 13ந் தேதி மும்பையில் மூன்று இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்தன.

தேசம் முழுவதும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த தாக்குதல்களை நிகழ்த்தியது இந்தியன் முஜாஹிதீன் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாகவே இருக்கக் கூடும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வழக்கம் போலவே திக்விஜய்சிங் சங்க பரிவார்களையும் விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். மீதும் பாரதீய ஜனதா கட்சியின் மீதும் திக் விஜய் சிங் சுமத்தும் குற்றச்சாட்டுகள் புதிதல்ல. சில ஆண்டு காலமாகவே குறிப்பாக எப்பொழுதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி வருகிறதே, அப்போதெல்லாம் திக் விஜய் சிங் இம்மாதிரி அபத்தமான பேச்சு பேசுவது வாடிக்கையாகி விட்டது. நாடு முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல் பற்றி இதுவரை வாய் திறந்து எவ்வித கருத்தையும் இந்த ஆசாமி கூறவில்லை. இவர் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் வடிக்கட்டிய பொய் என்பது உலகறிந்த உண்மையாகும். 1949லிருந்து காஷ்மீரில் நடத்தும் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாடுகளை பற்றிய கருத்துகளை இதுவரை கூறாதவர் என்பது கவனிக்க தக்கது.

july_2011_mumbai_bomb_blast

18.7.2011 மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை பற்றி கூறும் போது “ஆர்.எஸ்.எஸ். வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்திருக்கிறார்கள்” என்றார். உண்மையில் இப்படிப்பட்ட தொழிற்சாலைகளை ஆர்.எஸ்.எஸ் இயக்குகிறார்கள் என்றால், திக்விஜய் சிங்கின் காங்கிரஸ் கட்சி தான் மத்தியில் ஆட்சியில் உள்ளது. இவர்கள் இது சம்பந்தமாக தனது அதிகாரத்தின் கீழ் உள்ள உளவு அமைப்புகளை முடுக்கி விட்டு, தக்க சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கலாமே? ஏன் அதை செய்யவில்லை? அல்லது மத்திய அரசுக்கு திக்விஜய்சிங் தனது கோரிக்கையை இது வரை ஏன் வைக்கவில்லை? திடீர் என 23.7.2011 அன்று போபாலுக்கு அருகில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் “ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கு வெடி குண்டு தயாரிப்பது பற்றிய பயிற்சி கொடுக்கிறார்கள் “என கூறுகிறார். ஆகவே இவரது குற்றச்சாட்டில் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகும். கடந்த எட்டு ஆண்டுகளாக எவ்வித அரசு பதவியும் இல்லாமல் இருப்பதால் பதவி வெறியின் காரணமாகவே உளறுகிறார்.

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ந் தேதி மும்பையில் நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிர் இழந்தார்கள். இந்த சம்பவத்தில் காவல் துறை பொறுப்பாளர் ஹேமந்த கார்கரே வும் உயிர் இழந்தார். இந்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டு காவலில் உள்ள கசாப் கூட தன்மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டையும் இஸ்லாமிய அமைப்புகளின் தொடர்பையும் மறுக்கவில்லை.

ஆனால் இந்த பயங்கரவாத தாக்குதலில் ஹேமந்த கார்கரேவை சுட்டது இந்து இயக்கங்கள் என ஒரு அபாண்டமான பொய்யை அப்போது திக்விஜய்சிங் எடுத்து விட்டார். திருமதி ஹேமந்த கார்கரே இந்த கூற்றை முற்றிலும் மறுத்தது மட்டுமில்லாமல், திக்விஜய் சிங் தனது கணவரின் மரணத்தை வைத்து காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம் சுமத்தினார். திக் விஜய் சிங்குக்கும் கர்கரேக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் எதுவுமே நடக்கவில்லை என மும்பை புலனாய்வு செய்து கூறியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முழுவதும் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பயங்கரவாத இயக்கம் லஷ்கர்-இ-தொய்பா என்பதும், இவர்களுக்கு முழு உதவி புரிந்தது தடை செய்யப்பட்ட இயக்கமான சிமி என்பதும் புலன் விசாரனையில் தெரிய வந்தது. தான் சொல்லிய அப்பட்டமான பொய்க்கு இன்றுவரை திக்விஜய் சிங் வெட்கப் படவுமில்லை, தேசத்தின் முன்பு மன்னிப்பு கேட்கவுமில்லை.

மகராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள மலோகன் நகரில் இரண்டு முறை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை இன்று வரை கண்டு பிடிக்கவில்லை. ஆனால் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ந் தேதி சைக்கிள் ஒன்றில் இருந்த குண்டு வெடித்து ஐந்து பேர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என இந்து சன்யாசியை கைது செய்ததை மட்டும் வைத்துக்கொண்டு குற்றம் சுமத்தும் திக்விஜய்சிங் இதற்கு முன் நடந்த குண்டு வெடிப்பின் குற்றவாளிகள் இஸ்லாமியர்கள் என தெரிந்து கைது செய்யாதது ஏன் என்பது பற்றி பேச மறுக்கிறார்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி டெல்லியில் ”26/11 – An R.S.S. Conspiracy” எனும் தலைப்பில் எழுதப் பட்ட ஒரு டுமீல் புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் திக்விஜய்சிங். இந்த புத்தகத்தை எழுதியவர் Aziz Burney என்பவர். இவர் எழுதிய பல கட்டுரைகளில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இந்து தீவிரவாதி என்றும், இந்து அமைப்புகள் அனைத்தும் பயங்கரவாத அமைப்புகள் என்றும் தொடர்ந்து எழுதி வருபவர். இவரின் உற்ற நன்பர் காவி பயங்கரவாதம் என கூறிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். இந்த எழுத்தாள ஆசாமி 2009ம் ஆண்டு துவக்கத்தில் எழுதிய கட்டுரையில் நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஹேமந்த கார்கரேவை இந்தியாராணுவம் கொன்றது என எழுதினார்! அதே கட்டுரையில் மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும், ஆர்.எஸ்.எஸ். என்றும் குறிப்பிட்டு எழுதினார். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை நீதி மன்றத்தில், இவர் மீது பொய்யான, ஆதாரமற்ற இந்திய எதிர்ப்பு கட்டுரை எழுதியதற்காக குற்றம் சாட்டப்படு வழக்கு நடக்கிறது. இப்படி பட்ட தேச விரோதியின் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட திக்விஜய்சிங் எப்படி பட்டவர் என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் கருப்பு பணத்தை தடுக்கவும், ஊழலை முற்றிலுமாக ஒழிக்கவும் உண்ணவிரதம் மேற் கொண்ட பாபா ராம்தேவ் போராட்டததை கொச்சசைப்படுத்தினார். உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கு முன் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சுபோத் காந்த் சகாய் போன்ற நான்கு அமைச்சர்கள் பாபா ராம் தேவ் அவர்களை சந்தித்து பேசியதை கண்டித்தார். அமைச்சர்கள் பேசியது அரசு தரப்பில் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தம் கிடையாது என்றும் கூறினார். இந்த வார்த்தைகளோடு நிறுத்தி இருந்தால் எவ்வித விமர்சனமும் எழுந்திருக்காது. இதற்கு ஒரு படி மேலே போய் பாபா ராம்தேவ் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தூண்டுதால் தான் காரணம் என குற்றச்சாட்டை சுமத்தினார். நாட்டிற்கு விரோதமான காரியங்கள் நடக்கும் போது ஆர்.எஸ்.எஸ் கை கட்டி வாய் மூடி இருக்க வேண்டும் என திக்விஜய்சிங் எதிர்பார்க்கிறா என்பது புரியவில்லை.

நாட்டில் நடந்த பல்வேறு சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ் நாட்டின் ஒற்றுமைக்கும், ஜனநாயகத்தை பாதுகாக்வும் தனது பங்கினை செவ்வனே செய்துள்ளது. 1947க்கு முன் நாட்டில் நடந்த சுதந்திர போராட்டக் காலத்தில் காந்தியடிகள் விடுத்த அறைகூவலுக்கு அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டதால் விடுதலை பெற்றோம். சுதந்திரத்திற்கு பின் பல்வேறு சம்பவங்களில் அரசு ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்ட போதும், நாட்டின் இறையான்மைக்கு ஆபத்து ஏற்பட்ட போதும், நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்ட போதும் அதை மீட்பதற்காகவே பல்வேறு போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க பரிவாரங்கள் கலந்து கொண்ட நிகழ்வுகள் ஏராளம்.

1974ம் ஆண்டு ஜீன் மாதம் ஜெயப்பிரகாஷ் நாராயண் துவக்கிய போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அன்றைய தினத்திலிருந்த பாரதீய ஜனசங்கம் முழுமையாக கலந்து கொண்டதால் தான் அந்த போராட்டம் வெற்றி பெற்றது என்பதும், 1975ல் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட அவசர நிலையை எதிர்த்து அனைவரும் ஒரே அணியில் திரண்டதால் இந்திரா காந்தி அவசர நிலை சட்டத்தை திரும்ப பெற்றார் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும். லட்சக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மீண்டும் ஜனநாயகத்தை மீட்க ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தலைமறைவில் போராட்டத்தை நடத்தினார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது. ஆகவே சமுதாயத்தின் மேன்மைக்கு பங்கம் எற்படுதம் ஊழல், மோசடி, கருப்பு பணம் போன்ற தீய சக்திகளை அழிக்க அனைவரும் ஒரே அணியில் இணையும் போது ஆளும் கட்சியினர் கூறும் பழைய பல்லவிதான் ஆர்.எஸ்.எஸ். என்ற பூசாண்டியாகும். நாடு தழுவிய பொதுவான பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ்.சின் பங்கு இல்லாமல் எந்த போராட்டமும் வெற்றி பெற்றதில்லை.

raul_rss_simiஇன்று பாரத தேசத்துடன் காஷ்மீர் மாநிலம் இணைந்து இருப்பது ஆர்.எஸ்.எஸ் சின் இடைவிடாத போராட்டமாகும் என்பதை மறந்து விடக்கூடாது. சர்தார் பட்டேல் மற்றும் காந்திஜி மூலம் இந்தியாவுடன் காஷ்மீர் இணைய வேண்டும் என மகாராஜா ஹரிசிங்க்கு முயற்சி செய்தும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. ஆகவே சர்தார் பட்டேல் திரு மேகர் சந்த் மகாஜன் மூலம் மகாராஜா ஹரிசிங்கிடம் பேச ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜிக்கு கடிதம் கொடுத்தார். குடிதம் கிடைத்தவுடன் குருஜி தனது அனைத்து சுற்றுப் பயணத்தையும் ரத்து செய்து விட்டு பண்டிட் திரு பிரேம் நாத் டோக்கராவும் உடனிருக்க, மகாராஜா ஹரி சிங்குடன் பேச்சு வார்த்தை நடத்தி காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைய முழு சம்மத்தை வாங்கினார். காஷ்மீர் இந்தியாவுடன் இணைய முழு முயற்சி எடுத்து வெற்றி கண்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். என்பதை பொய்மையும் கயமையுமே உருவான திக்விஜய் சிங் போன்றவர்களுக்கு மறந்திருக்கலாம். ஆனால் இந்திய மக்களுக்கு மறக்கவில்லை.

காஷ்மீர் மாநில பிரதமராக ஷேக் அப்துல்லா பதவி ஏற்றவுடன் காஷ்மீர் மாநிலத்திற்கு வருபவர்கள் அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டுதான் வர வேண்டும் என உத்திரவிட்ட போது, பாரதீய ஜனசங்கத்தின் தலைவராக இருந்த டாக்டர் சியம பிரசாத் முகர்ஜி சட்டத்தை மீறி பத்தான்கோட் பகுதியிலிருந்து ஸ்ரீநகருக்கு பாதயாத்திரை சென்று மர்மமான முறையில் சிறையில் உயிர் விட்டபின் தான் நேரு நடவடிக்கை எடுத்தார். ஆகவே இந்த நாட்டில் நடக்கும் தேச விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகள் நடக்குமானால் அதை தடுக்க யார் முன் வந்தாலும் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி தங்களது முழு ஆதரவை கொடுக்கும் என்பது வரலாற்று உண்மையாகும்.

காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் கோடிக்கணக்கில் முறைகேடு செயது சிறையில் உள்ள சுரேஷ் கல்மாடியும் கார்கில் பேரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு வீடு கட்டி தரும் ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடுகள் செய்து தனக்கு வேண்டியவர்களும் ஒதுக்கீடு செய்ததும், இன்னும் சில முறைகேடுகளுக்காகவும் முதல்வர் பதவியை இழந்த அசோக் சவான் ஆகிய இருவரும் அப்பாவிகள் என திக்விஜய் சிங் 11.7.2011 அன்று கருத்து தெரிவித்துள்ளார். இதில் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்த இருவர் மீதும் மத்திய புலனாய்வு துறை விரிவான விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகள் சுமத்திய பின்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. உச்ச நீதி மன்றத்தில் கேள்விகள் எழுந்த பின்னர் மத்திய அரசு இருவர் மீதும் நடவடிக்கை எடுத்தது. ஆனால், உச்ச நீதி மன்றத்தையும், காங்கிரஸ் அரசில் உள்ள மத்திய புலனாய்வு துறையின் மீதும் குற்றம் சுமத்தும் விதமாக பேசிய திக்விஜய் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை !

23.8.2008 ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி அன்று நள்ளிரவில், ஒரிஸ்ஸா மாநிலத்தில் கண்டமால் மாவட்டத்தில் சுவாமி லஷ்மணந்த சரஸ்வதி சுவாமி மற்றும் இரண்டு பேர் உட்பட மூன்று பேர்களை கொன்ற கிறிஸ்துவ மாவோயிஸ்ட்களை பற்றி இந்த ஆசாமி வாய் திறக்காது ஏன்? இந்துக் கடவுள்களை கேவலமாக விமர்சத்து புத்தகம் எழுதிய நியூ லைப் எனும் கிறிஸ்துவ மிஷனரி மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஏன் முன் வரவில்லை என்பது பற்றி திக்விஜய்சிங் நினைத்திருப்பாரா? கர்நாடக மாநிலத்தில் 2008 இறுதியில் மங்களுர் & ஹூப்ளியில் நடந்த மத கலவரத்தை விசாரிக்க மத்திய அரசின் உள்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்வதற்கு அனுப்பட்டதே, அதே போல் ஏன் ஒரிஸ்ஸா மாநிலத்தில் கண்டமால் சம்பவத்திற்கு உடனடி விசாரணை நடத்த மத்திய அரசு தனது செயலாளர்களை அனுப்பவில்லை? இது பற்றி திக்விஜய்சிங் கவலைப் பட்டாரா என்பது தெரியவில்லை.

இந்து இயக்கங்கள் பற்றி தினசரி அபத்தமான கருத்துக்களை கூறி வரும் திக்விஜய்சிங், கிறிஸ்துவ பயங்கரவாதத்தை பற்றி எப்போதாவது கண்டன கணைகளை வீசினாரா? இந்திய நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அஸ்ஸாம், மணிபூர், திரிபுரா, மேகாலயா, நாகர்லாந்து, அருணாசல பிரதேசம், போன்ற மாநிலங்களில் உள்ள தனி நாடு கோரும் பிரிவினை தீவிரவாத இயக்கங்களுக்கு அந்த மாநிலங்களில் உள்ள கிறிஸ்துவ சர்சுகள் ஆயுதங்கள், நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பது நாடறிந்த, உலகம் அறிந்த விஷயம். திக்விஜய்சிங்க்கு தெரியாதா என்ன? ஆனால் இந்த கிறிஸ்தவ பயங்கரவாதத்தை எதிர்த்து ஒரு சொல் அவர் கூறியிருக்கிறாரா?

”Nagaland for Christ"
”Nagaland for Christ"

2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரிபுராவில் உள்ள  Noapara Baptist Church அமைப்பின் பாதிரியார் Nagmanlal Halam கைது செய்யப்பட்டார். கைதுக்கு முக்கிய காரணம் திரிபுராவில் உள்ள நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலந்து என்ற அமைப்புக்கு ஆயுத உதவி செய்வதற்காக தனது சர்சு வளாகத்தில் கள்ள தனமாக வெடி மருந்து வைத்திருந்தது. இவரை போலவே திரிபுராவில் உள்ள பல்வேறு சர்சுகளில் உள்ள பாதிரியார்கள் பிரிவினை கோரும் பயங்கரவாதிகளுக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்து வருகிறார்கள். இந்த பயங்கரவாதிகள் வெளிப்படையாகவே Naglim for Christ (நாகாலாந்து கிறிஸ்துவுக்கே) எனும் கோஷத்துடன் வலம் வருகிறார்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் Manmasi National Christian Army என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வடகிழக்கு எல்லைப் புற மாநிலங்களில் தோன்றியுள்ள கிறிஸ்துவ பயங்கரவாத செயல்பாடுகளைப் பற்றி வாய் திறக்காத திக்விஜய்சிங் இந்து இயக்கங்களை மட்டும் குறி வைத்து தாக்குவது தனது தலைமைக்கு உச்சி குளிர வேண்டும் என்பதற்காக செய்வது.

திக் விஜய்சிங்கின் அறிக்கைக்கும் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் கூறி வருகிறார்கள். இது வரை கட்சியின் தலைவி சோனியாவும் அடுத்த பிரதமர் பதவிக்கு வர துடிக்கும் ராகுல் காந்தியும் எவ்வளவு கேட்ட போதும் திக்விஜய் சிங்கின் உளறல்கள் பற்றி வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார்கள். அப்படியானால் இந்த உளறல்களுக்கு பொறுப்பேற்பது யார்?

திக்விஜய் சிங்கின் உளறல்களால், காங்கிரஸ் கட்சியின் கள்ள மௌனத்தால் யாருக்கு என்ன பயன்? இந்தியாவை தாக்கி அழிக்கத் திட்டமிட்டு வேலை செய்யும் அன்னிய சக்திகளுக்கும், அவர்களுக்குத் துணை போகும் உள்ளூர் இஸ்லாமிய, கிறிஸ்தவ பயங்கரவாதிகளுக்கும் இவை கொண்டாட்டத்தை ஏற்படுத்துகின்றன என்பதைத் தவிர வேறு ஒரு பயனும் இல்லை.

16 Replies to “திக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்”

 1. திக்விஜய்சிங் போன்ற கோமாளிகள் வெறும் அம்புகளே….எய்தவர்கள் கள்ளச்சிரிப்புடன் தேசத் தலைவர்களாக உலா வருகிறார்கள்…..இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களை விட ஆர்.எஸ்.எஸ்.இயக்கமே அபாயகரமானது என்று அவர்களுடைய இளவரசர் அறிவித்து விட்ட பிறகு,அதற்கேற்றவாறு உளருவதுதானே அடிமைகளின் வேலை…… இனி பாருங்கள் …மும்பை குண்டுவெடிப்பை செய்தது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான் என்பதற்கு எவ்வளவு ஆதாரங்கள் கிடைத்தாலும் அதை வெளியே விடமாட்டார்கள் …….காரணம் ,ராகுல் வின்சியின் வாக்கு பொய்யாகிவிடுமே…ஊழலில் ஊறித்திளைக்கும் காங்கிரஸ் அரசின் மீதான மக்களின் கவனத்தை திசை திருப்பவே இது போன்ற பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்துக்கும் பங்கு உண்டு என்று ராஜா நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார்.பி.ஜே,பி அதை பற்றி கேள்வி கேட்டால் சிதம்பரம் அதற்கு பதில் கூறாமல் இந்து இயக்கங்கள் மீது பாய்கிறார்.கால் வைத்த இடமெல்லாம் மரண அடி விழுவதால் , உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்கள் ஓட்டை எப்படியாவது வாங்கி விடவேண்டும் என்று அலைகிறது ராகுலின் அல்லக்கை கும்பல்…இது போன்ற தேச துரோகிகளை அடையாளம் கண்டு புறக்கணிப்பது இந்துக்களின் கடமை…..

 2. திக்விஜசிங் உறுதியாக கூறவில்லை ,பலரும் அந்த இயக்கமாக இருக்குமோ ,இந்த இயக்கமாக இருக்குமோ என்று சொல்வது போலத்தான் இவரும் சொல்லிருக்கிறார் .சுவாமி பிரக்யாசிங் ,சுவாமி அசிமானந்தா போன்ற RSS பிஜேபி தொடர்புடைய முக்கிய நபர்களெல்லாம் குண்டு வெடிப்பில் கைதாகி உள்ளே இருப்பதை யாரும் மறக்க மறுக்க முடியாது .இது போல் நடக்கும் குண்டு வெடிப்புக்கெல்லாம் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திருக்குமானால் இதை எப்போதே நிறுத்தியருக்கலாம்.இனிமேலாவது பார்ப்போம் மும்பை தாக்குதல் அனைவராலும் மதத்திற்கு அப்பாற்பட்டு கண்டிக்கவேண்டும் .அதே நேரம் விசாரணை சரியாக நடத்தி உண்மை குற்றவாளிகள் கைது செய்ய பட வேண்டும் .மாலேய்கன் ,சம்ஜவுத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகள் நடந்தபோது உடனே முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டபட்டது ஆனால் பின்பு இந்து அமைப்பை சேர்தவர்கள் கைது செய்ய பட்டார்கள் .எனவே திக் விஜய் சிங் சொல்வது ஒன்றும் தவறு இல்லை .யாரும் சந்தேகடிற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது .
  இந்தியாவில் நடந்த பல குண்டு வெடிப்புகள் (மலேகாவ்ன்,அஜ்மீர்,ஹைதராபாத் ஜும்மா மசூதி, சம்ஜோத எக்ஸ்பிரஸ் என்று ஒரு லிஸ்டே வுள்ளது) இந்து தீவிரவாதிகள் வைத்துதான், மோடி ஒரு மத தீவிரவாதி :- ஒரு முறை அப்துல் கலாம் உடன் கலவரம் பாதித்த பகுதிகளை பார்வை இட சென்ற பொழுது 5 வகுப்பு படிக்கும் சிறுமி இவருடன் நீங்கள் வருவிர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இவர் நல்லவர் இல்லை.என் குடும்பத்தில் உள்ள பல பேர் கொல்லப்பட்டதற்கு இவரே காரனம்.இப்பொழுது நான் ஒரு அனாதை என்று கூறியதை கேட்டு அப்துல் கலாம் என்ன பதில் கூறுவது என்றே தெரிய வில்லை.நல்ல வேலை இந்த rss மற்றும் சங்க பரிவர் கும்பல் தமிழ் நாட்டில் நுழைய வில்லை.இல்லா விட்டால் மத பிரச்சனை எழுப்பி அடுத்த ரத்த ஆறு ஓட வைத்திருப்பர் .இருந்தபோதிலும் கோவை பயங்கரவாதத்தை நடத்தி விட்டனர்.முஸ்லிம்கள் ஒசாமாவையோ இந்துக்கள் மோடி செய்வதையோ நியாயபடுத்த வேண்டாம்.இருவரும் தங்கள் சொந்த மதத்தை சேர்ந்தவர்களும் இறந்ததற்கு காரணமாக உள்ளனர்.
  கிறிஸ்தவர்கள் எந்த இடதில்லும் திவிரவததில் ஈடுபட்டது இல்லை . கிறிஸ்தவம் ஒரு அமைதி விரும்பி சமயம் . கிறிஸ்தவர்கள் தன்னை போல பிறரையும் நேசிப்பவர்கள் ,அதனால் தான் கிறிஸ்தவர்கள் ஒரிசா , குஜராத் , கர்நாடக , பீகார் போன்ற மாநிலம்களில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யபட்ட போதும் அமைதி காத்தார்கள். கிறிஸ்தவம் ஒரு அன்பு சமயம் அதனால் தான் இன்று ஏராளமான பிற சமயத்தவர்கள் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

 3. கிறிஸ்தவர்கள் உலகத்திலேயே ஒண்ணாம் நம்பர் பிராடுகள் என்பதற்கு திருவாளர்.பிரைட் அவர்களின் பின்னூட்டமே ஆதாரம். உலக வரலாற்றில் கிறிஸ்தவர்கள் செய்த கொலைகள் பற்றி பா.ராகவனின் நிலமெல்லாம் ரத்தம் படிக்க வேண்டும். பிராட்டஸ்டண்ட், பெந்தேகொஸ்தே, ஆர்.சி. மூன்று கோஷ்டிகளுக்கும் ஒருவருக்கொருவர் ஆகாது. ஏன் பிராட்டஸ்டண்ட் டயோசீசன் தோ்தலிலேயே அரிவாளோடு அலைகிறார்கள். இவர் அன்பு மதம் என்று எதன் அடிப்படையில் சொல்கிறார்?. இயேசுவே, ”உலகில் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எணணாதீர்கள். பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.” என்கிறார். தந்தையையும் மகனையும் பிரிப்பேன். தாயையும் மகளையும் பிரிப்பேன். மாமியாரையும் மருமகளையும் பிரிப்பேன். என்னை விட தாயையோ தந்தையையோ நேசிப்பவன் எனக்கு பாத்திரன் அல்ல என்று குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கும் வேலையைச் செய்து வருகிறார்.

  இதை எல்லாம் மறைத்து விட்டு கிறிஸ்தவம் அன்பு மதம் என்று காதில் பு சுற்றுகிறார். கிறிஸ்தவ மதத்தின் வண்டவாளங்களை http://www.evilbible.com இணைய தளத்தில் காணுங்கள். பொய், புரட்டு, வன்முறை இவைகளைப் பயன்படுத்துவதில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

 4. கிறுத்தவம் அமைதிய வரும்புதா? மிசோரத்தில் கூட கிறுத்தவம் அமைதியை விரும்புதா? NAXAL & MAOIST கூட பாதிரிகள் ஏன் கள்ள தொடர்பு வைக்கிறார்கள்? மோடி பத்தி பேச எந்த போடிக்கும் தகுதியில்ல. குஜராத் கலவரத்துக்கு காரணம் யார்? அதை தொடங்கியது யார்? ரயிலில் வந்த VHP MEMBERSஜ உயிரோடு எரித்தது யார்? பாரதத்தில் 30 கிறுத்தவ திவிரவாத அமைப்பு இருக்கிறதே? இவர்களும் அமைதியை தான் விரும்புகின்றனரா? என்ன சொன்னாலும் கேட்க நாங்க என்ன கேனையா? ச எந்த போடிக்கும் தகுதியில்ல. குஜராத் கலவரத்துக்கு காரணம் யார்? அதை தொடங்கியது யார்? ரயிலில் வந்த VHP MEMBERSஜ உயிரோடு எரித்தது யார்? பாரதத்தில் 30 கிறுத்தவ திவிரவாத அமைப்பு இருக்கிறதே? இவர்களும் அமைதியை தான் விரும்புகின்றனரா? என்ன சொன்னாலும் கேட்க நாங்க என்ன கேனையா?

 5. அட! இவரு ஒரு டம்மி பீஸு. இந்த வார இந்தியா டுடே பாருங்கள், இவரை பத்தி ஒரு கட்டுரை. இவர் தான் வருங்கால பிரதமருக்கு ஆலோசகராம்…

  கர்கரே என்னிடம் ஃபோனில் தனக்கு இந்து இயக்கங்களால் ஆபத்து இருப்பதாக கூறினார் என்றார். ஆனால் அவருக்கு எந்த ஃபோன் காலும் கர்கரேவிடமிருந்து வரவில்லை என்று தெரிந்ததும் பம்மினார்.

  இவரு சரியான நன்றியுள்ளவர்… 🙂

 6. CHRUCHES ,PASTERS,ARCHBISHOPS,MISSIONARIES IN INDIA ARE UNDER THE CONTROL OF FOREIGN MISSIONARIES WORKING UNDER THE CONTROL OF VATIGAN WHICH HAS AN INTELLIGENCE WING KNOWN AS OPPOSDEI LIKE ISI, KGB MOSSAD OR CIA.THIS OPPOSDIE
  DO COVERT OPERATIONS IN INDIA WITHOUT ANYBODYS SUSPICIONS MOSTELY ITALIAN MAFFIAS ARE DIRECTLY INVOLVED.THEY ARE THE WON WHO PROTECT SONIAS INTEREST AND OPPUSDIE HAS MAJOR ROLE IN THE ASSASSINATION OF RAJIV GANDHI THROUGH LTTE AND KOTTARCHI (BOFOR FAME) ITALIAN FRIEND OF SONIA WHO MET LTTE SPOKESMAN MR.AMURTHALINGAM IN PARIS TO CHACK OUT THE PLAN. MANY CONGRESS PERSONS KNEW THIS WELL AND RAN AWAY FROM THE DIAS WHEN RAJIV WAS THERE ALONE DURING THE TIME OF BOMB EXPLOSION. OPPUSDEI HAS ROLE IN THE DEATH OF ALL FAMILY MEMBERS – FATHER IN LAW, BROTHER IN LAW AND SISTER IN LAW OF PRIYANKA VODARA, DAUGHTER OF SONIA. ALSO ONE MUST LOOK SUSPICIOUSLY ABOUT THE DEATH OF MADHAVARAO SCINDIA, RAJESH PILOT AND JIJENDRA PRASAD BESIDES YSR DEATH WAS ALSO SAID TO BE THEIR HANDIWORK BECOUSE HE WAS IN DIRECT CONTACT WITH VATIGAN OVERRULING ITALIAN QUEEN IN INDIA.
  SO CHRISTANS ARE VERY DANGEROUS COVERT, CUNNING AND TRICKY PEOPLE WHO WILL DO QUITELY TO ACHIEVE THEIR GOAL AND DO NOT MIND KILLING THEIR OWN HUSBAND OR FATHER OR MOTHER. CONVERSION TRICKS BY CHRISTIANS ARE KNOWN TO EVERYONE. THEY HAVE MONEY, RESOURCES, GOVERNMENT AND POLITICIANS SUPPORT BECOUSE THEY FORM A GOOD VOTE BANK FOR THEM. THEY GET SUPPORT OF AMERICA AND DONATIONS FROM MANY COUNTRIES. THEY ARE CURSE TO THE SOCIETY. IF ANYONE COMES ACROSS A CHRISTIAN FRIEND, ONE MUST BE V CAREFULL BECOUSE HE WILL BE TERMITE TO FAMILY ITSELF WAITING FOR RIGHTTIME WHEN ANY PROBLEMS COME TO THOSE FAMILITIES OF HINDU, THIS CHRISTIAN FRIEND WILL BRING A FATHER TO DO PRAYER WITH THE INTENTION OF CONVERSION. SO HINDUS MUST BE V CAREFULL WITH THEM. EVEN I WOULD AGREE THAT MUSLIMS ARE NOT CUNNING OR ENGAGED IN CONVERSION.

 7. J Bright,

  நீங்கள் தரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன – இதை எல்லாம் ஹிந்து தீவேரவாதி செய்தார்களா – அச்சச்சோ பெருமாளே காலம் இப்படி கெட்டு கிடக்கிறதே, எசய்யா நீங்க தான் காப்பாததனும். எசய்யா உங்கள் கரங்களை கீழே இறக்குங்கள் நாங்கள் பிடித்து கொள்கிறோம்

  //
  கிறிஸ்தவர்கள் எந்த இடதில்லும் திவிரவததில் ஈடுபட்டது இல்லை . கிறிஸ்தவம் ஒரு அமைதி விரும்பி சமயம் .//

  பத்தே வருடங்களில் உலகம் பூராவும் 14 லட்சம் பேரை கொன்று குவித்தது அமெரிக்க கிறிஸ்தவப்படை – வியட்நாம் ஞாபகம் இருக்கா ?

  சிறிலங்காவில் சிங்களரை கைக்குள் போட்டுக் கொண்டு தமிழரை முழுக்க கிறிஸ்தவர்கள் ஆக்க செய்த ஒரு முயற்ச்சியே சிங்களப் போர் – நாற்பதாயிரம் தமிழர்கள் பலி

  இந்த உலகத்தில் தீவிரவாதத்தை உண்டு பண்ணியதே கிறிஸ்தவம் தான் – கிறிஸ்தவத்தி தோற்றமும் தீவிரவாதமும் ஒன்றோடோன்று பின்னிப்பி பிணைந்தது.

  உங்க பெரியப்பா பசங்க யூதர்களை கொன்றது யாருங்கோ? கிறிஸ்தவர்கள் நல்லவர்கள் என்று சொன்னால் ஜார்ஜு புஷ்சே அரை மன்நேரம் விடாம சிரிப்பார்

 8. முதலில் திக்விஜய் சிங்க் ஒரு கோமாளி அவன் சொல்லுவதை எல்லாம் ஒரு பெரிய விஷயமாக நினைக்க வேண்டாம். சுனாமி வந்த நேரம் எல்லாம் திக்விஜய் சிங்கோட தலைவி கிறிஸ்மஸ் கொடட்ட்டதில் இருந்தாங்க. உடனடியாக காரியத்தில் இறங்கினது அர் எஸ் எஸ் தான் என்பது அவனுக்கு தெரியும் அவனுக்கு வயது முதிர்வலும் பதவி பைதியதலும் கிறுக்கு பிடிச்சு இருக்கு. இவங்களுக்கும இவங்க அடுத்த பிரதமர் என்று சொல்லிக்கொண்டு ஊர் ஊர பொண்ணுங்க பின்னால சுத்திகிட்டு திருயுரனே ராகுல் அவனுக்கும் நம்ம நாட்டை பத்தி கவளி இல்லை அவங்களுக்கு கவலை எல்லாம் இத்தாலி பதித்தான்.

 9. நண்பா CECIL …. எத்தனை காலம் தான் அன்னை சோனியாவை இப்படி வசைபாடுவீர்கள் கடந்த பாராளுமண்ற தேருதலின் போதும் இப்படி தான் பிரச்சாரம் பண்ணுநீர்கள் விளைவு காங்கிரஸ் அமோக வெற்றி வருகினற பாராளுமண்ற தேருதலிலும் வெற்றி காங்கிரஸ்கு தான் அண்ணன் ராகுல் காந்திஜி தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் . “பாரத மாதா அன்னை சோனியா ஜி” தலைமைல் அண்ணன் ராகுல் ஜி இந்தியாவின் பிரதமராக இருப்பார்.

 10. J.Bright,

  உங்களை தான் தேடிக் கொண்டு இருந்தேன். கிறித்துவ மிஷினரிகளின் குள்ள நரிதனத்தையும், தீவிரவாதத்தை பற்றி தான் மூன்று பதிவுகள் போடப்பட்டுள்ளன.

  சூடானை கடித்த டிராகுலாக்கள் பாகம் -2 மற்றும் பாகம் -3 ல் இதை பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறது. சும்மா, உதார் விடாதீர்கள்.

  வெள்ளை ஏகாதிபத்திய கிறித்துவ மிஷினரிகள் ஒரு நாள் உங்கள் அனைவருக்கும் அல்வா கொடுக்கத் தான் போகிறார்கள். அப்பொழுது உங்களை காப்பதற்கு ஹிந்துக்கள் தான் இருப்பார்கள் என்பதை மறந்துவிட்டு பேசாதீர்கள்.

  கோயில் பணத்தை எடுத்து அதை அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு நல்லது செய்கிறேன் பேர் வழி என்று கொடுக்கிறது. அதை வைத்து பெரும்பான்மை மக்களை மதம் மாற்றும் கேவலமான ஜந்துக்கள் தான் இந்த கிறித்துவ மிஷினரிகள்.

  பாரதத்தை ஆப்பிரிக்கா போல மாற்ற நினைக்கும் கிறித்துவ கயவர்களின் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறாது.

 11. திக் விஜய் சிங்க் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆர் எஸ் எஸ் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்காமல் இருக்கும் வரை ஆர் எஸ் எஸ் மீது நம்பிக்கை வைக்க முடியாது.அவர் மீது வழக்கு தொடுத்தால் தான் இது போன்ற உளறல்கள் பிற்காலத்தில் தவிர்க்கப்படும் .கர்கரே பற்றி இவர் கூறிய கருத்துக்களை வைத்து ஏன் நாம் நீதிமன்றத்தை அணுகவில்லை.இது தான் நாம் செய்யும் தவறு.இது போன்ற ஆட்களுக்கு நாம் வாய்ப்புகள் அளிக்க கூடாது.

 12. திக்விஜய் சிங்க் உலகத்திலேயே ஒண்ணாம் நம்பர் கோமாளி.

 13. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ஆசியுடன் தீவிர ஆர் எஸ் எஸ் பிரச்சாரத்தை செய்துவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கிற்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கும் எதிராக ஆர். எஸ். எஸ். இயக்கம் சட்ட ரீதியாக நடவடிக்கைகளை துவக்க வேண்டும். இந்த மோசமான, கடைந்தெடுத்த, அயோக்கியர்களின் ஊழல்களை அம்பலமாக்கி உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்த வேண்டும். நாடு முழுவதும் போராட்டம் நடத்தி விட்டு தனது கடமை முடிந்துவிட்டதுபோல் வாளாவிருப்பது ஹிந்து சமுதாயத்தில் தீவிரவாதிகளை ஆர். எஸ். எஸ். உருவாக்குகிறது என்ற குற்றச்சாட்டை அங்கீகரிப்பது போல இருக்காதா?

 14. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ஆசியுடன் தீவிர ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தை செய்துவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கிற்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கும் எதிராக ஆர். எஸ். எஸ். இயக்கம் சட்ட ரீதியாக நடவடிக்கைகளை துவக்க வேண்டும். இந்த மோசமான, கடைந்தெடுத்த, அயோக்கியர்களின் ஊழல்களை அம்பலமாக்கி உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்த வேண்டும். நாடு முழுவதும் போராட்டம் நடத்தி விட்டு தனது கடமை முடிந்துவிட்டதுபோல் வாளாவிருப்பது ஹிந்து சமுதாயத்தில் தீவிரவாதிகளை ஆர். எஸ். எஸ். உருவாக்குகிறது என்ற குற்றச்சாட்டை அங்கீகரிப்பது போல இருக்காதா?

 15. திக்விஜய்சிங் ஒரு கோமாளி. ஓசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு அவனது மகனே வருந்தவில்லை. ஓபாமாவும் கிளிண்டனும் தங்கள் எதிரியைக் கொன்றிருக்கிறார்கள், அதில் தமக்கு வருத்தமில்லை என்றும், தம் தந்தை சென்ற பாதை சரியில்லை என்று பேசியுள்ளார். Disbelieve the obvious என்ற அடிப்படையில் அந்தக் கருத்தின் உண்மைதன்மை விவாதத்துக்குரியது. முல்லாக்கள் பலரும் மவுனமாக இருந்த போது “ஓசாமாஜி கொல்லப்பட்டது வருத்தமளிக்கிறது” என்று பேசிய அந்தப் பதரை மனிதனகாக மதிக்கவே மனம் மறுக்கிறது. இந்தக் அரைவேக்காடு வருங்காலப் பிரதமராக தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்ட இராகுல காந்தியாருக்கு ஆலோசகர். ஊர் நாட்டில் சொல்வார்கள் “கேணப்பய ஊருக்கு கிறுக்குப்பய நாட்டாமையாம்” என்று. நாம் கேணப்பயலகளாக இருக்கும் வரை திக்விஜயசிங்குகள் உளறிக் கொண்டுதான் இருப்பார்கள்.

 16. ராகுல் காந்தி ஆள வந்தால் ராகுகாலம் நிரந்தரமாக வந்துவிடும் .திக்விஜய் இந்த நாட்டையே திக்கு தெரியாமல் போக விடுவார் .சிதம்பரமும் சிபலும் இருக்கிறவரை இந்த நாடு உருப்படுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *