பரமக்குடி முதல் பாடசாலை வரை

1973ல் திண்டுக்கல் பகுதியில் பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. அஇஅதிமுகவும் திமுகவும் தேவர் சமுதாயத்தவரையே வேட்பாளர்களாக நிறுத்தியது. அப்போது ஆட்சியில் இருந்ததோ திமுக அரசு. 

அது அரசு சார்பில்,  சுவரொட்டிகளைத் திண்டுக்கல்லில் ஒட்டியது. தேவர் சமுதாயத்தினருக்கு, அரசு வேலை வாய்ப்புகள் –குறிப்பாகக் காவல் துறையில்- எவ்வாறு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டன என்பதுதான் அந்த சுவரொட்டிகள்  சொன்ன விசயம்.  ஆட்சியில் இருந்த அந்த திமுக ஜெயிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார் ஈவெரா. (ஈவெராவின் அந்திம ஆண்டும் அதே 1973தான். )

1990களில் தென் தமிழ் மாவட்டங்களில் தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டன. அவமதிப்பை வைத்து பெரும் சாதிக் கலவரங்கள் தலித் சமுதாயத்துக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையே உருவாகின.  இந்த பிரச்சனைகளை வன்முறையாக வெடிக்க வைத்ததில் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் பங்கு உண்டு. தவ்ஹீத் ஜமாத்தினருக்கும் தமுமுகவுக்கும் இடையே நடக்கும் மோதலில் இந்த ரகசியமான உண்மைகள் இணையத்தில் கசிந்துள்ளன.


(படத்தின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)

இவையெல்லாம் போதாதென்று சாதியப் பெருமைகளைப் பாடும் தமிழ் சினிமாக்கள் வேறு. ‘போற்றிப்பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே’ என்கிற பாடல் ஒரு சாதிய கொழுப்பு கொண்ட பாடலாகத் தலித் பெண்களைக் கிண்டல் செய்ய தென் மாவட்டங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

தென் மாவட்டங்களில் சாதி மோதல்கள் இன்று வெடிப்பதற்குப் பல காரணங்கள் உண்டு.  இன்று ஆதிக்க சாதியினராக வன்முறை செய்யும் சாதிகளும் ஒரு காலத்தில் தலித்துகள் போலவே தம்முடைய உரிமைக்காக ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடிய வரலாறு உண்டு.

ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததாலேயே அவர் குற்றப் பரம்பரை என வெள்ளையர் அரசாங்கம் அறிவித்த கொடுமையை எதிர்த்து போராடியவர்தாம் முத்துராமலிங்கத் தேவர். ஆனால்,  தலித் மற்றும் ஆதிக்க சாதிகளிடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அவர் சிந்திக்கத்  தவறியது பெரிய வரலாற்றுத் தவறு என்றே சொல்ல வேண்டும். அவருடைய சாதியினருக்கும் தலித் சமுதாயத்தினருக்கும் இருந்த பகையை மீற அவரது சுய சாதி அபிமானம் விடவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற ஒரு தேசியவாதியின் இந்தத் தவறு இன்று இரு சமுதாயங்கள் இணைந்து தமிழ்நாட்டை மேம்படுத்த வழியில்லாமல் ஆக்கிவிட்டது.

இதில் அரசியல் வகுப்புவாத சக்திகளுக்கும் பங்கு உண்டு. தலித் அரசியல் தலைமை சுயநலம் கொண்ட நேர்மையற்ற தலைவர்களிடம் உள்ளது. ஆனால், இந்த நிலை தலித் அரசியல் தலைமையின் தனித்தன்மை அல்ல.  இப்படி நேர்மையற்ற சுய சாதி அடையாளத்தை வைத்து சம்பாதிக்கும் நிலை, சுயநல கீழ்த்தர தலைவர்களிடமே சாதி அமைப்புகள் இருக்கும் நிலை, எல்லா சாதி அமைப்புகளிலும்  உள்ளது.

ஆனால், தங்கள் சாதியை மீறி தேசத்தையும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறித்து சிந்தித்த தலைவர்கள் கொண்ட பாரம்பரியம் தலித் அமைப்புகளிடம் மட்டுமே இருக்கிறது.

உதாரணமாக பாபா சாகேப் அம்பேத்கர் ஆகட்டும், பெரும் தலைவர் எம்.சி.ராஜா ஆகட்டும், தலித்துகளின் அரசியல் பாரம்பரியம் தேசியத்தின் உண்மையான உற்றத் தோழனாகவே இருந்து வந்துள்ளது.

இந்திய ராணுவத்தின் வலிமையான ஒரு பிரிவான மகர் பிரிவு, அண்ணல் அம்பேத்கராலேயே உருவாக்கப்பட்டது. பிரிவினையின் போது பாகிஸ்தான் பகுதிகளில் இருந்த ஹிந்துக்களைக் காப்பாற்றிக்  கொண்டு வரும் சாகசப் பணியை இந்தப் பிரிவே செய்தது. இதுவும் அம்பேத்கரின் யோசனைப்படியே நடந்தது.

இன்றைய தலித் தலைமை ஜான் பாண்டியன், திருமாவளவன் போன்ற சுயநலமும் நேர்மையின்மையும் கொண்ட சாதாரணர்களால் நடத்தப்படுவது துரதிர்ஷ்டவசமான வீழ்ச்சி என்றே சொல்லவேண்டும்.

முக்குலத்தோர் சமுதாயத்தைப் பொறுத்தவரையில் அவர்களின் வீண் சாதிய மேட்டிமை வாதம், கேவலமான தலித் வெறுப்பு மனநிலை ஆகியவை அவர்களது மனிதத்தன்மையையே கீழ்மைப்படுத்துகின்றன என்பதுதான் உண்மை.

இந்த நிலை அரசியல்வியாதிகளுக்கும் தேசவிரோத சக்திகளுக்கும் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தேங்கிய சாக்கடை போன்ற இந்த ஆதிக்க சாதி மன உணர்வின் காரணமாகவே மிகவும் நியாயமான தலித் கோபம், சுயநலத் தலைவர்களால் வன்முறையாக மாற்றப்படுகின்றது.

சமீபத்திய காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டை எடுத்துக் கொள்வோம்.  “சட்ட ஒழுங்கைத் தடுக்க அவர்கள் வேறு என்ன செய்யமுடியும்?” என அச்சம்பவம் பலரால் நியாயப்படுத்தப் படுகிறது. 1999ல் மாஞ்சோலை தலித் போராட்டத்தின் போது 19 தலித்துகள் (ஒரு வயது குழந்தையான விக்னேஷ் உட்பட) போலீஸ் நடவடிக்கையால் கொல்லப்பட்ட போதும் இதே போல ஒரு வாதம் பரவலாக முன்வைக்கப்பட்டது. இன்றும் அதுவே முன்வைக்கப்படுகிறது.

ஆனால், தலித்துகள் ஊர்வலங்களில் மட்டும்தான் சட்ட ஒழுங்கு பிரச்சனை வருமா?

எத்தனையோ ஆதிக்க சாதியினர் நடத்தும் மாநாடுகள் கேவலமான சாதிய வன்முறைக் கோஷங்களுடன் நடத்தப் பட்டாலும், அங்கெல்லாம் மிகவும் பொறுப்புடன் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் காவல்துறை ஏன் இங்கு மட்டும் இப்படிச் செயல்படுகிறது?

காவல்துறை திட்டமிட்டு இப்படி நடக்கிறது என்று இக்கட்டுரை சொல்லவில்லை. இதுதான் இயல்பான மனநிலையாக உள்ளது. தலித் சமுதாயத்தினரின் மேல் உள்ள ஒருவித வெறுப்பு. இந்த வெறுப்பு தலித்தல்லாத சாதியினரிடம் இருக்கும் ஒரு சமூக மனநோய். இதை மாற்றுவது எல்லா சமூகத்தினருக்கும் இருக்கும் ஒரு பொறுப்பு.

இது தமிழ்ஹிந்து.காம். தமிழ் இந்துக்களின் தளம். ஆதிக்க சாதிகள் மற்றும் தலித்தல்லாத சாதிகளுக்கு இருக்கும் இந்த மனநோயை அழிக்க வேண்டிய பொறுப்பு வேறெந்த தளத்தைக் காட்டிலும் இந்த தளத்துக்கு அதிகமாகவே உண்டு. எனவே, மனத்தடையின்றி மேலும் சில எண்ணங்களை இக்கட்டுரையில் முன்வைக்கிறேன்:

1. ஒரு இந்துவாக நமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. நம் ஆதீனங்கள், நம் பீடாதிபதிகள், நம் கோவில்கள் ஆகியவற்றில் நம் தலித் சமுதாயத்தினர் ஆதீனங்களாக, பீடாதிபதிகளாக, கோவில் தெய்வத் திருமேனிகளைத் தொட்டு வணங்கும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

2. பிறப்பு அடிப்படையில் எங்கெல்லாம் ஆன்மிக-சமுதாய-சடங்கு அமைப்புகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவை தகுதி அடிப்படையில் என மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றப்படும் போது அவற்றில் தலித்துகளுக்கு – சலுகையாக அல்ல, உரிமையாக – முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இதை நாம் செய்வது நம் தலித் சகோதரர்களுக்காக அல்ல. மாறாக தலித் அல்லாத நம் சமூகங்களில், புரையோடிக் கிடக்கும் சாதிய மனநோய் என்னும் வக்கிரமான சமூக மனநோயை அழிப்பதற்கு நாமே நமக்கு அளிக்கும் மருந்து. இதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்னும் சொன்னால், (வியாசர் முதல் சத்யகாமர் உட்பட) வேதங்களின் மந்திர திருஷ்டாக்களே இன்று தலித்தாக்கப்பட்டுள்ள சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான். உண்மை இப்படி இருக்கும் போது, அவர்களுக்குப் ‘பாரம்பரிய வேத பாடசாலைகள் வேதம் ஓதும் உரிமையை மறுப்பது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா?

எனவே, இப்போதைய உடனடித் தேவை ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனநிலை மாற்றம். அதைச் செய்ய நம் பண்பாட்டின் அதிகாரத்தை பூட்டியிருக்கும் பிறப்படிப்படையிலான புற்றுநோய் சுவர்களை உடைத்தெறிந்து கரசேவை செய்வோம்.

 வாருங்கள் !

இதுவே மீண்டும் மீண்டும் பலியாக்கப்படும் நம் தலித் சகோதர சகோதரிகளுக்கு நாம் செய்யும் நீண்ட கால நியாயத்தின் குறைந்த பட்ச தொடக்கமாக இருக்க முடியும்.

[குளவியின் கொட்டுகள் தொடரும்…]

157 Replies to “பரமக்குடி முதல் பாடசாலை வரை”

 1. Pingback: Indli.com
 2. குளவிக்கு …. ……..

  உண்மையில் இன்றைய பெரும்பாலான சாதித்தலைவர்கள் சமூக விரோதிகள்……மக்களிடையே நல்லிணக்கம் வராமல் பார்த்துக்கொள்வதில் மிக அக்கறையாக இருப்பவர்கள் இவர்கள் தான்…..இவர்களை புறக்கணிக்காமல் சமூக அமைதி என்பது பகல் கனவுதான்…..

  அதிலும் குறிப்பாக இன்று தம்மை தலித் தலைவர்கள் என்று அழைத்துக் கொள்வோர் பெரும்பாலும் மத மாற்ற சக்திகளின் கைக்கூலிகள் தான்…….அவர்கள் பிழைப்புக்காக அப்பாவிகளை தூண்டிவிட்டு இவர்கள் வளமாக வாழ்கிறார்கள்….இதை அந்த அப்பாவி தலித்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதிலேயே முழு கவனமாக இருக்கிறார்கள்…

  கல்வியை எடுத்துக்கொள்வோம் …. ..இன்று ஆதிக்க சாதியினர் நல்ல வாய்ப்புகளை பெறுவதற்கு ஆங்கில வழி கல்விதான் உதவி புரிகிறது…..ஆனால் சொல்லி வைத்தாற்போல் இந்த தலித் தலைவர்கள் அனைவரும் தமிழ், தமிழன் என்றே ஜல்லியடிப்பார்கள்…….அவர்கள் முன்னேறாமல் இருந்தால் தானே இவர்கள் பிழைப்பு நடக்கும்?

  // போற்றிப்பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே’ என்கிற பாடல் ஒரு சாதிய கொழுப்பு கொண்ட பாடலாக //

  தம்மை ஒரு பகுத்தறிவு வியாதியாக முன் நிறுத்திக்கொள்ளும் கமல் போன்ற அயோக்கியர்களை புரிந்துகொள்ள இது போன்ற பாடல்கள் ஒரு வாய்ப்பு……வியாபார நோக்கத்திற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்…..இவர் நடித்த சண்டியர் [ பின்னர் விருமாண்டி என்று மாற்றப்பட்டது ] என்ற குப்பை படத்திற்கு தென் மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு எழுந்த போது தலித் ஒருவர் இந்த விஷயத்தை பற்றி கூறியிருந்தார்…….தேவர்கள் அவர்கள் சமூக விழாக்களில் மட்டுமல்லாது அனைத்து சாதியினரும் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் கூட மேற்படி பாடலை ஒலிபரப்ப சொல்லி வலியுறுத்து வார்களாம் ….மறுத்தால் பிரச்சினை செய்வார்களாம்….கடைசியில் பணிந்து போவது பெரும்பாலும் தலித்கள் தான் என்று கூறியிருந்தார்,……..[…]
  எத்தனையோ கொடுமைகளுக்கு பின்னும் இன்றும் ஹிந்துவாக நீடிக்கும் ஒவ்வொரு தலித்தின் காலிலும் ஒவ்வொரு சாதி இந்து [என்று தம்மை அழைத்துக்கொள்வோர்]வும் விழுந்து வணங்க வேண்டும்….

  ஹிந்து தலித்களின் முன்னேற்றம் ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்……….

  [Edited and published]

 3. தவ்ஹீத் சமாஜ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இந்துக்களிடையே வன்முறையைத் தூண்டுகிறார்கள்.

  பிரிட்டிஷ் மற்றும் மொகமதிய ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்ட வேத பாடசாலைகள் தங்களை “பாரம்பரிய” வேத பாடசாலைகள் என்று சொல்லிக் கொண்டு, சாதி அடிப்படையில் அறிவைப் புதைக்கின்றன.

  இரண்டு குழுக்களின் செயல்பாடுகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இருவரும் இந்துத்வத்தை அழிக்கின்றனர்.

  இந்த இரண்டு வைரஸ் கிருமிகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் எதிர்ப்பவர்களைத்தான் பெரும்பாலும் இந்துக்களிடையே காணுகிறோம். அவர்கள் எந்த வைரஸை எதிர்க்கவில்லையோ, அந்த வைரஸால் பீடிக்கப்பட்டு உள்ளார்கள் என அறிக.

  வாழ்க குளவியார் !

  இதை எழுதும் தைரியம் தமிழ் ஹிந்து தளத்திற்கு மட்டுமே இருக்கிறது.

  .

 4. Nice article.

  Regarding kamal’s thevar magan, it is not surprising. His brother charu haasan appeared for muthuramalinga thevar in the keezhvenmeni case.

  The thevar factor in films is also bcos many artists belong to that community – Sivaji, SSR, muthuraman, O.A.K thevar, Chinnappa devar, vinu chakravarthy, comedians senthil, vivek kanja karuppu, m.s baskar,directors bharathiraja, simbu devan, balaji shakthivel, etc.,

  Actor Muthuraman once openly remarked ” We can influence votes in 110 constituencies in tamilnadu”.

  Comedian Vivek once said “I am not a single person. I have an entire community behind me”.

  Not only thevars, there are clashes between vanniars & dalits as well.

 5. i think comedian vivek is not from thevar community, i heard that he is from brahmin family.

 6. தமிழ் ஹிந்துவின் இந்த முன்மாதிரியான கட்டுரைக்கு வாழ்த்துக்கள். நமது தவறுகளை, நமது குற்றங்களை நாம் திருத்திக்கொள்ளாதவரை நமது சமுதாயத்திற்கு கதிமோட்சமில்லை. மதமாற்ற சக்திகளையும், குண்டுவெடிப்பின்மூலமும், அராஜகத்தின் மூலமும் அமைதி மார்க்கத்தை நிலைநாட்டத்துடிப்போரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. நாம் ஒவ்வொருவரும் நமது மனத்தடைகளை களைவோம், தலித் சகோதரர்களும் நமது சகோதரர்களே என்பதை மனதார உனர்வோம்.. பாரதி பாடிய நம்மில் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ என்ற கருத்தை முழுதாய் நாம் நம்புவோம். சாதியைச் சொல்லி வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகளை விரட்டுவோம். தனிமனித அளவில் நாம் எந்தவிதத்திலும் சாதிப் பெருமை பேசுதல் போன்ற தீயகுணங்களை விட்டொழிப்போம்..

  சாதிபேதமற்ற இந்து சமுதாயம் மலரட்டும். அப்படிப்பட்ட சமுதாயத்தால் மட்டுமே உலகிற்கு வழிகாட்ட முடியும்.

 7. குளவியாரின் கட்டுரையையும் ,அதற்க்கான பின்னூட்டங்களையும் படித்து உள்ளம் பூரிப்படைந்தேன் .ஹிந்து மதம் என்னும் ஆல மரத்தினை சாதிகள் என்ற கரையான் அரிக்காமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் .

 8. பாராட்டத்தக்க கட்டுரை.
  இது அனைத்து உண்மை உணர்வாளர்களாக இருக்கும் இந்துக்களிடம் இருந்தாலும் அதன் சொல்வடிவமாக இதனை பார்க்கிறேன்.

  இதனை செயல்வடிவமாக மாற்றும் பொறுப்பும் தமிழ் இந்துக்களிடமும் தமிழ் இந்து உணர்வாளர்களிடமும் இருக்கிறது.

  இன்றே தொடங்குவோம்.

 9. \\பிரிட்டிஷ் மற்றும் மொகமதிய ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்ட வேத பாடசாலைகள் தங்களை “பாரம்பரிய” வேத பாடசாலைகள் என்று சொல்லிக் கொண்டு, சாதி அடிப்படையில் அறிவைப் புதைக்கின்றன.\\

  @ களிமிகு கணபதி,

  தாங்கள் யாரை சொல்கிறீர்கள் என்று புரிகிறது 😉 ஆனால் ஒட்டு மொத்தமாக குல தர்மத்தை விமர்சனம் செய்வதை ஏற்க்க முடியாது. குலம் சார்ந்த பண்பாட்டில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டிய பொருப்பு நமக்கு உள்ளது. அதை நான் முழுமையாக ஏற்கிறேன்.

  @ சரவணக் குமார்,

  \\எத்தனையோ கொடுமைகளுக்கு பின்னும் இன்றும் ஹிந்துவாக நீடிக்கும் ஒவ்வொரு தலித்தின் காலிலும் ஒவ்வொரு சாதி இந்து [என்று தம்மை அழைத்துக்கொள்வோர்]வும் விழுந்து வணங்க வேண்டும்….\\

  நூற்றுக்கு நூறு உண்மை. உணமையில் அவர்களுக்கு இருக்கும் பக்தி வாய் கிழிய விதண்டாவதம் பேசும் அறை குறைகளுக்கு கிடையாது என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன்.

  \\பிறப்பு அடிப்படையில் எங்கெல்லாம் ஆன்மிக-சமுதாய-சடங்கு அமைப்புகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவை தகுதி அடிப்படையில் என மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றப்படும் போது அவற்றில் தலித்துகளுக்கு – சலுகையாக அல்ல, உரிமையாக – முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்\\

  பொது கோயில்களில் இது போன்ற விசயங்கள் வரவேற்புக்கு உரிய விசயம். வெத்தலை போட்டு கொண்டு அர்ச்சனை செய்யும் ஒரு சில கயவர்களை பார்க்கும் பொழுது இவர்களுக்கு எல்லாம் எந்த கபோதி வேலை கொடுத்தான் என்று தோன்றுகிறது. முறையாக கோயில் பண்பாட்டை பயின்று அதற்கான பயிற்சி மற்றும் ஒழுங்குமுறைகளை கடைபிடிக்கும் பட்சத்தில் இது வரவேற்க தக்க விசயம்.

 10. @ திராவிடன்,

  விவேக் தேவர் இனத்தை சேர்ந்தவர். இந்த விவரம் விக்கிபீடியாவிலேயே உள்ளது. அதுவும் தவிர இவன் தேவர் சாதி பொதுக் கூட்டத்தில்… தான் தேவர் இனத்தை சேர்ந்தவன் என்பதால் தான் எனக்கு அதிகம் பிரச்சனை வருகிறது என்று பேசியுள்ளான். பிற சாதிகளை கேவலமாக பேசும் இந்த முற்போக்கு முட்டாள் தனது சாதி கூட்டத்தில் இது போன்று பேசியுள்ளான்.

 11. //….தாங்கள் யாரை சொல்கிறீர்கள் என்று புரிகிறது ;)..////

  கோமதி செட்டி,

  நான் யாரைச் சொல்வதாக நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்களோ, அவர்களையும் சேர்த்து அனைத்துவித இந்து மத அமைப்புக்களையும் ஒட்டுமொத்தமாகவே குறிப்பிடுகிறேன்.

  என்.டி.டி.வியில் ஒரு டாக்குமண்டரி. லிண்டா ஹெஸ் என்பவர் கபீர் பற்றிய அந்த டாக்குமண்டரியை எடுத்துள்ளார். டாக்குமண்டரியின் பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை.

  சாதிப் பிரிவுகளை, ஆச்சாரங்களைக் கடுமையாக எதிர்த்தவர் கபீர்தாசர். அவருடைய பாடல்களில் பெரும்பாலும் சாதி எனும் அமைப்பை எதிர்த்தே இருக்கின்றன. அவரது பாரம்பரியத்தில் வந்த ஒருவர், லிண்டா ஹெஸ் எனும் யூதப் பெண்ணிடம் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் உயர்ந்தவர்கள், ஏனெனில் அவர்களது ஜீன்கள் உயர்ந்தவை என்று பேசுகிறார். அந்தப் பெண்மணி திகைத்துப் போய் அவரைப் பார்க்கிறார். பிறப்படிப்படை சாதியம் இந்தியாவின் அனைத்து அமைப்புக்களையும் பாதித்துள்ளது.

  எனவே, நான் யாரைச் சொன்னதாக நீங்கள் நினைத்தீர்களோ, அவர்கள் மட்டுமே குறைபட்டவர்கள் அல்ல. மற்றவர்களும் இந்த விஷயத்தில் அவர்கள் போலவே முனைப்பானவர்கள். மெக்காலே கல்வியின் வீச்சை சாதாரணமாக மதிப்பிட வேண்டாம்.

  //…ஆனால் ஒட்டு மொத்தமாக குல தர்மத்தை விமர்சனம் செய்வதை ஏற்க்க முடியாது. குலம் சார்ந்த பண்பாட்டில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை…//

  சாதி அடிப்படையில் வேதம் கற்றுத் தருவேன் என்று சொல்வது குலதர்மமா ?

  தனது குலத்தை ஒதுக்காது உயர்த்த வேண்டும் என்பதுதான் குலதர்மம். மற்ற குலம் தாழ்ந்தே இருக்க வேண்டும் என்பது குல தர்மமாக இருக்க முடியாது. அரபியப் பாலைவனத்துக் கொள்ளையர் மதமாக வேண்டுமானால் அது இருக்கலாம்.

  நம் குலதர்மம் என்று நாம் தவறாகப் புரிந்துகொண்டுள்ள இந்த இழிவு மனநிலை நாம் முகமதியரிடமும், கிறுத்துவரிடமும் அடிமையாக இருந்த போது உருவானது.

  இது நம் குலதர்மம் அல்ல.

  மேலும், நீங்கள் யார் குலதர்மத்தின் காவலர்கள் என்று சொல்கிறீர்களோ, அவர்கள் குலதர்மத்தின் மற்ற விஷயங்களைப் பின்பற்றுகிறார்களா ?

  அவற்றை மட்டும் பின்பற்றத் தயாராக இல்லாதவர்கள் வேறு எதைப் பற்றியும் வழிகாட்டத் தகுதியானவர்கள் இல்லை.

  நாம் நம் குலதர்மத்தை வேதங்களின் வழியே உணர்ந்து கண்டறிய வேண்டும்.

  .

 12. இந்துமத மேன்மைக்கான அற்புதமான கட்டுரை இது …… என்று சொல்ல முடியவில்லை. இக்கட்டுரை வெளியிடப்பட்டிருக்கும் நேரம் பொருத்தமானதாக இல்லை. பரமக்குடி துப்பாக்கி சூடு நடந்து முடிந்திருக்கும் இந்த வேளையில் வந்திருக்கும் இக்கட்டுரை கலவரத்தில் தலித்துகளின் செயலை ஆதரித்தும் காவல்துறையை குற்றம் சொல்லும் தொனியிலும் உள்ளது.

  //காவல்துறை திட்டமிட்டு இப்படி நடக்கிறது என்று இக்கட்டுரை சொல்லவில்லை. இதுதான் இயல்பான மனநிலையாக உள்ளது. தலித் சமுதாயத்தினரின் மேல் உள்ள ஒருவித வெறுப்பு. இந்த வெறுப்பு தலித்தல்லாத சாதியினரிடம் இருக்கும் ஒரு சமூக மனநோய். இதை மாற்றுவது எல்லா சமூகத்தினருக்கும் இருக்கும் ஒரு பொறுப்பு.//

  பொதுவான உண்மைகளை காலநேர பொருத்தமில்லாமல் முன்வைக்கும்போது கருத்துகளுக்கு பாரபட்ச நோக்கு வந்துவிடுகிறது. இச்சம்பவத்தின் முறையான நீதி விசாரணைக்குப் பிறகே யாரையும் குற்றம் சாட்டி நாம் எழுத முடியும்.

  இக்கட்டுரை இச்சமயத்தில் இங்கு வந்திருக்க வேண்டாம்.

 13. அனைத்து சாதியினருக்கும் சம இடம் கொண்ட ஒரு சமத்துவ சமுதாயத்தை அமைப்பது என்பது ஒரு நல்ல லட்சிய நோக்குத்தான். ஆனால் அதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில்தான் உங்களுடன் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இவற்றை வைதீக சடங்குகளில் இருந்து தொடங்குவதை விட கலைகளில்/கல்வியில் இருந்து துவங்குவது வெறும் குறியீட்டு தன்மை மட்டுமல்லாது இயல்பாக அனைவரும் கலந்து பழகும் தன்மை ஏற்ப்படும் என்பது என்னுடைய நிலைப்பாடு.

 14. One of the best article which in tamilhindu… if bios of becoming poojari in temple is vanished and if any one who believe and learns mantras and knows the process of can become poojari.. we can send these periyar group out of tamil nadu…

 15. நமது பண்பாட்டு பொக்கிஷங்களான வேதங்களையும் மற்றும் பல புனித கிரந்தங்களையும் படைத்த மகான்கள் தற்பொழுது தலித் என்று வழங்கப்படும் சமுதாயப்பிரிவை சார்ந்தவர்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மைகளை உணராமல் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் கையூட்டு பெற்று சமுதாயத்தை இழிவு நிலைக்கு இட்டுச்செல்லும் தலைவர்களை தோலுரித்துக்காட்டும் முயற்சி நடைபெறவேண்டும். நமது நாட்டையும் சமுதாயத்தையும் சிதைக்க நினைக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கு முகவர்களாக நமது தலைவர்கள் செயல்படுவதை ஆதாரங்களுடன் வெளியிட்டு தலைவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். நக்சலைட்டுகள் மற்றும் தேசவிரோத சக்திகளின் பிடியில் சிக்கி தவிக்கும் தமிழக தலித்துக்களை காப்பாற்றுவதற்கு உடனடியான நடவடிக்கைகளை ஹிந்து இயக்கங்கள் முனைந்து நடத்த வேண்டும்.

 16. தேவர் ஒரு மகான் அவர் ஒருபோதும் சாதியம் பார்த்ததில்லை தன்னுடைய சொத்துக்களையெல்லாம் தானம் செய்தபோது அவர் ஜாதிக்கு மட்டுமல்லாமல் மற்ற எல்லோருக்கும்தான் பகிரிந்து கொடுத்தார் .தேவரை நீங்கள் மேலுள்ளவாறு கூறியதை எற்றுகொள்ளமுடியது .நான் கேள்விப்பட்டவரை ஒரு தலித்தை கூடவே வைத்திருந்தார் என்றுதான்.இதுவரை தேவரை பற்றி விமர்சனம் நான் படித்ததில்லை இன்றுதான் படித்தேன் இன்மேல் இவ்வாறு செய்யாதீர்கல் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் .

 17. Very nice article. Agree with all points mentioned in this article. Kulavi you have done a grea service to Hindu community with this article. Thanks.

 18. ஸாய்ராம் அன்ப்பர்களே.
  கட்டுரை ஆசிரியரின் எண்ண ஓட்டங்கள் அனைத்திலும் ஒப்புதல் இல்லையெனினும், அவரது ஆதங்கம் புரிகிறது. எல்லா பிராமணர்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களல்ல (உ-ம் – மிகப் பிரபல உலக நாயகன்), எல்லா தலித்துக்களும் கடவுள் உணர்வு அற்றவர்களல்ல (உ-ம் – நந்தனார், 63 நாயன்மார்களுள் ஒன்றாக உயர்வடைந்தவர்), ஆக, தலித்துகள் வேதம் ஏன் கற்கக் கூடாது, அவர்களுக்கு அந்த விருப்பும், வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களுக்கு மதிப்பும் மரியாதையும் அவர்கள் கொடுப்பதாக இருந்தால்? சத்ய சாயி பாபா அமைப்புகள் மூலமாக விரும்புவர் அனைவருக்கும் சாதி மத குல பேதமின்றி வேதம் கற்றுக்கொடுக்கப் படுகிறது. மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவர்கள் எவராக இருப்பினும், எவரும் யார் காலிலும் விழுந்து வணங்குவதில் தயக்கம் கூடாது. அதே சமயத்தில், எல்லோர் காலிலும் எல்லோரும் விழுந்து வணங்கவேண்டும் என்று ஆணையிடுவது அழகல்ல. பிச்சையிடுவதற்கே, ‘பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்று சொல்வார்களல்லவா?

 19. I disagree that Muthuramalinga thevar was a nationalist leader. He may have been a follower of Subhash chandra bose, but he was & still is revered & venerated only by the thevar community.

  Dalits (or for that matter other communities) do not take kindly to him.

  Also, there is talk that the provocation for the recent police firing in paramakudi was a writing on a wall by the dalits on thevar.

  Of course, this is not fully probed yet, so cannot conclude right now.

 20. Very very nice article. I have not expected this type article from TamilHindu. Really I am happy as all we HIndus are nowadays getting united. This is a good sign. And I hope we will take the main core of this article to all HIndus.

 21. DEAR TAMILHINDU TEAM,

  THESE TYPE OF ARTICLES NEED NOT BE PUBLISHED IN OUR SITE.

  WE NEED NOT HAVE TO LISTEN TO THESE MODERN PSEUDO SECULARISTS TO TAKLE CARE OF HINDUISM and IN THE NAME OF CHANGE WE NEED NOT FALL PREY TO SUCH THINGS.

  PLEASE DO NOT PUBLISH THE ARTICLES OF KUZHAVI ANYMORE ; HIS EARLIER ARTICLE ARGUED THAT SINCE SANTHAN,PERARIVALA and MURUGAN MUST BE RELEASED SINCE THEY ARE TAMIL HINDUS ….

 22. திரு.ஓகை நடராஜன் அவர்களே…….

  குரு பூஜை வழிபாடு என்பது ஹிந்துக்களின் வழக்கம்.இம்மானுவல் சேகரன் ஒரு கிறித்தவர். கிறித்தவ கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டவர். அவருக்கு குரு பூஜை செய்கிறோம் என்று கிளம்புவதே மாற்று இனத்தவரை சீண்டும் எண்ணத்தோடு செய்யப்படும் செயல்தான்…..[ இதன் பின்னணியில் இருப்பவர் கிறித்தவரான ஜான் பாண்டியனும் இதர பாதிரிகளும் தான் ]

  ஆனால் தவறு எங்கே தொடங்குகிறது? முத்துராமலிங்கத்தேவர் எந்த அரசுப்பதவியிலும் இருந்தவரல்ல. இன்று அவர் குறிப்பிட்ட சாதியின் தலைவராகவே முன் நிறுத்தப்படுகிறார்.அப்படிப்பட்டவரின் பிறந்த நாளை அரசு விழாவாக அரசே கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?அதனால்தானே ஒவ்வொரு சமூகத்தவரும் தற்போது தங்கள் சாதித்தலைவரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் ?புதிது புதிதாக குரு பூஜைகள் கிளம்புகின்றன.அந்த நாட்களில் தேவையற்ற பதட்டங்கள் ஏற்படுகின்றன.

  // இக்கட்டுரை கலவரத்தில் தலித்துகளின் செயலை ஆதரித்தும் காவல்துறையை குற்றம் சொல்லும் தொனியிலும் உள்ளது.//

  இருக்கலாம். ஆனால் காவல்துறை கழகங்களின் ஏவல்துறையாகி பலகாலம் ஆகிறது.ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைப்பது கழகங்களுக்கு கைவந்த கலை.பரமக்குடியில் தலித்கள் எதை எதையெல்லாம் செய்யக்கூடாது [ திறந்த வேனில் வருவது ,கோஷங்கள் எழுப்புவது,போக்குவரத்து விதியை மீறுவது, வாத்தியங்கள் இசைப்பது போன்றவை ] என்று போலீஸ் சொல்கிறதோ அதையெல்லாம் ஒவ்வொரு வருடமும் தேவர் குருபூஜையின்போது தேவர்கள் செய்கிறார்கள்.இதையெல்லாம் நானே நேராக பார்த்திருக்கிறேன்.அவர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கையை காவல் துறை ஏன் எடுப்பதில்லை?

  மறியல் செய்ததும் , காவல்துறையை தாக்கியதும்தான் துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமென்றால் அந்த தவறை தேவர்கள்கடந்த காலங்களில் பலமுறை செய்துள்ளார்கள் . ஆனால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில்லையே ? அது ஏன்?

  யார் செய்தாலும் தவறு என்பது தவறுதான். we should call a spade,a spade. அப்பா தோண்டிய கிணறு என்பதற்காக உப்புத்தண்ணீர் ஆக இருந்தாலும் குடிக்க முடியுமா?

 23. திரு. தமிழரசு அவர்களே…..

  .//தேவரை நீங்கள் மேலுள்ளவாறு கூறியதை எற்றுகொள்ளமுடியது //

  விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உலகில் யாரும் கிடையாது.ஆக்கப்பூர்வமான உள்நோக்கமற்ற விமரிசனங்களை எதிர்கொள்வதே அழகு.

 24. கர்ணன் படத்தில் சகுனி சொல்வான் “பாண்டவர்களின் கெட்ட காலத்திற்கு அவர்களின் புத்தியும் கெட்டு விடுவதை பார்” என்பான் எள்ளலாக நகைத்து கொண்டே !!! ஹ்ம்ம் புரிஞ்சா சேரி

 25. குளவி ​கொட்டுனா அ​தை அடிக்கத்தா​னே ​செய்வார்கள்?
  என்ன​மோ ​தேவ​ர் கூட​வே இருந்து அவ​ரைப் பற்றி அதிகம் அறிந்து ​கொண்டு எழுதியுள்ளது ​போன்று உள்ளன குளவியின் வார்த்​தைகள்!
  ​தேவ​ரைப் பற்றிய குளவியின் வார்த்​தைகள் தவறாக இருக்கலாம்!

  ​தேவ​ரையும்
  அம்​பேத்கா​ரையும்
  ஜாதி அடிப்ப​டையில் அணுகுவ​தே நமது ஒற்று​மையின்​மைக்கு அடிப்ப​டை,
  இத்தவ​றை குளவியும் ​செய்துள்ளார்.
  ஆனால் குளவி ஒற்​றை​​மை​யை எதிர்பார்க்கிறார்.
  நாம் ​செய்யும் தவறுகளால் அம்​பேத்காருக்கும் ​தேவருக்கும் ​செரு……மா​லைகள் விழுகின்றன.
  இவ்விரு த​லைவர்களும் பாவம்.

  சிறுவன் ​செய்ததும் தவறு!
  அ​தைக் கண்டித்த மு​றையும் தவறு,.
  இவ்வாறாக ஒருதவறு பல தவறுக​ளை உண்டாக்கிவிடுகிறது.
  ஆனால் யார் என்ன தவறு ​செய்தாலும்
  ​​கெட்ட பெயர் வாங்குவது மட்டும் ​தேவரும் அம்​பேத்காரும்.
  இவ்விரு த​லைவர்களும் பாவம்.

  அன்பன்
  கி.கா​ளைராசன்

 26. நல்வழியில் ஔவையார் அருளியது

  சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
  நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
  இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
  பட்டாங்கில் உள்ள படி

 27. i understand 50 pct dalits are hindus and balance 50 pct are christians who were converted long time ago. if they look in to their origin, Bagwat sri ramanujar gave special rights to them in temple rituals which is still followed in many vaishnvaite temples and sri ramanujar called them as ”Thiru kullathan ” or sons of shri hari and hence they were called as harijans.Azhwars like thirpanazhwar and thirumazhiazhwar are from dalit community and still in thirukurangudi perumal temple on karthigai dwadesi dalits are given first darshan due to the episode of Nambudavan.
  so all hindus must treat them alike and make them comfortable to stay in hinduism rather than driving them to other religions. christian missionaries are targeting dalits to convert but now they are wiser and refused to convert. john pandian and immanual sekrans are christians in this community gets money from christian missionaries who convert them for expanding their religions

  Hence those dalits still practicing hinduism must be appreciated and given due respects.Hwe when i happened to pass through paramakudi four years before on immanual sekran rememberance day on my way to thirupullani temple, i found thirumavalavan and his followers came in 200 white ambassder cars very rash driving on the madurai road up to paramakudi while large police forces with many vans are placed in all small small villages which was totally quite as it looked other opposite community devars shut down their doors and confined to home. There
  was no traffic expect private cars of few. The way thriumavalavan party members went in car dashing fast showed that dalits are under the slave of these selfish corrupt politiians of this community, which has the sting of christian missionaries to operate or fund money to these parties in tamilnadu. Neither dailts nor the devar communities to be blamed for this but the political parties of communal leaders are totally responsible for their plight in society.

 28. Mr.Saravankumar rightly said

  குரு பூஜை வழிபாடு என்பது ஹிந்துக்களின் வழக்கம்.இம்மானுவல் சேகரன் ஒரு கிறித்தவர். கிறித்தவ கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டவர். அவருக்கு குரு பூஜை செய்கிறோம் என்று கிளம்புவதே மாற்று இனத்தவரை சீண்டும் எண்ணத்தோடு செய்யப்படும் செயல்தான்…..[ இதன் பின்னணியில் இருப்பவர் கிறித்தவரான ஜான் பாண்டியனும் இதர பாதிரிகளும் தான் ]

  கிருஸ்துவர்களாக மாறிய யாரும் தமிழர் இல்லை தலித்தும் இல்லை இந்துவும் இல்லை அவர்களுக்கு நாம் ஏன் வக்காலத்து வாங்கவேண்டும்.

  கிருஸ்துவம் என்றுமே அராஜகத்தை தூண்டும் என்பது ஊர் அறிந்த விஷயம்

 29. வணக்கம். இறந்தவர்களுக்கு எம் அஞ்சலி. இந்த கலவரம் அல்லது நிகழ்வு ஏன் ஏற்பட்டது என்பது பற்றி கட்டுரையில் ஒன்றும் இல்லை. மக்களுக்கும் சொல்லப் படவில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமே உண்மை தெரியும். இருப்பினும், கட்டுரையில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன.
  மாற்று மதத்தினர் ஹிந்துக்களை கேவலப் படுத்தவும் அவர்களுக்குளே பிளவு ஏற்படுத்தவும் செய்யும் செயல்களைப் பற்றி சரியான முறையில் தெரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் கட்டுரைகள் வெளியிடுவதை
  தமிழ் ஹிந்து சரிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
  நன்றி.
  மத விஷயங்கள் பற்றி பேசும்போது தனிப் பட்ட கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. தற்போது இருக்கும் அனைவருமே வேதங்களோ புராணங்களோ சாஸ்திரங்களோ சரியாக என்ன சொல்கின்றன எனச் சொல்லும் வல்லமை படைத்தவர்கள் அல்ல. முதலில் அனைவரும் சம்ஸ்க்ருதம் என்னும் மொழியை அவதூறு சொல்வதை விட்டு அனைவரும் பயில வேண்டும்.
  நன்றி.

 30. தேவைப் பட்டால் என்னை shankaranar@ gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்.

 31. The below two points are really excellent:
  ஒரு இந்துவாக நமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. நம் ஆதீனங்கள், நம் பீடாதிபதிகள், நம் கோவில்கள் ஆகியவற்றில் நம் தலித் சமுதாயத்தினர் ஆதீனங்களாக, பீடாதிபதிகளாக, கோவில் தெய்வத் திருமேனிகளைத் தொட்டு வணங்கும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

  2. பிறப்பு அடிப்படையில் எங்கெல்லாம் ஆன்மிக-சமுதாய-சடங்கு அமைப்புகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவை தகுதி அடிப்படையில் என மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றப்படும் போது அவற்றில் தலித்துகளுக்கு – சலுகையாக அல்ல, உரிமையாக – முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

 32. ///முத்துராமலிங்கத்தேவர் எந்த அரசுப்பதவியிலும் இருந்தவரல்ல. இன்று அவர் குறிப்பிட்ட சாதியின் தலைவராகவே முன் நிறுத்தப்படுகிறார்.அப்படிப்பட்டவரின் பிறந்த நாளை அரசு விழாவாக அரசே கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?/// அதானே, நாளை பிராமணர்கள் எல்லாரும் வாஞ்சிநாதனுக்கு குருபூஜை அரசு செலவில் நடத்த வேண்டும் என கேட்டால் செய்வார்களா?

 33. A very bold article by Kuzhaviar… But I strongly condemn using Muthuramalingaayya’s name as being pro-Thevar alone… There isn’t material proof to the claim…. But the opposition of some Mukulathoor to Dalits is a fact and it needs to be accepted and faced…. We need to shed it…

  I would also appreciate if you can go further and understand why Dalit community people are not ready to work with other communities…. There are lot of misguided and corrupt leaders in their community like Thirmavalavan, John Pandian, Jagan Murthy, Armstrong, Selva Perunthagai.. These supposed leaders, in the name of working for their community do katta panchayathu and create trouble…. If Dalit community can clear these leaders and engage others we can all move forward together….

 34. நான் பல வருடங்களாக குஜராத்திலும் இப்பொழுது மும்பையிலும் வாழ்ந்து வருகிறேன். இங்குள்ள கோவில்களில் காலை நேரத்தில் யார் வேண்டுமானாலும் கடவுள் விக்ரஹத்தைத் தொட்டுக் கூட வணங்கலாம். தானாகவே பூஜை அபிஷேகம் எல்லாம் செய்யலாம். கோவிலில் யாரும் நீங்கள் எந்த ஜாதி என்று கேட்க மாட்டார்கள். இந்த பூஜை முறையை ஏன் தமிழ் நாட்டில் கொண்டு வரக்கூடாது? கிராமங்களில் இந்த முறையை கொண்டு வர முடியா விட்டாலும் நகரங்களில் செய்யலாமே. எல்லா ஜாதியினருக்கும் இதனால் மகிழ்ச்சி உண்டாகுமே.

 35. திரு சரவணக்குமார்,

  //ஆனால் தவறு எங்கே தொடங்குகிறது? முத்துராமலிங்கத்தேவர் எந்த அரசுப்பதவியிலும் இருந்தவரல்ல. இன்று அவர் குறிப்பிட்ட சாதியின் தலைவராகவே முன் நிறுத்தப்படுகிறார்.அப்படிப்பட்டவரின் பிறந்த நாளை அரசு விழாவாக அரசே கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?//

  இதற்காக கலவரமா? காவல்துறை அடி வாங்கவேண்டுமா? காவல்துறை தலித் மற்றும் மற்ற சமுதாயத்தினரிடையே பாரபட்சம் காட்டுகிறது என்பதற்காக காவல்துறை வண்டியைக் கொளுத்தியதை ஆதரிக்கிறீர்களா? தீயணைப்பு வண்டியைக் கொளுத்தியதை ஆதரிக்கிறீர்களா? தலித் முன்னேற்றத்துக்கு இதுதான் வழிமுறையா? காவல்துறையின் முன்னெச்சரிக்கை கைது கலவரம் செய்வதற்கான கதவுகளைத் திறந்துவிடுமா?

  ஏற்கனவே நடந்த தவறுகள் இப்போதைய தவறை நியாயப்படுத்தி விடுமா?

  காவல்துறை அராஜகம் என்று இதை வர்ணித்தால் வாகனங்கள் தீவைப்பும் காவல்துறையினர் பட்ட காயங்களும் என்ன சொல்லுகின்றன? இவ்வளவும் நடந்தது துப்பாக்கி சூட்டுக்குப் பிறகா அல்லது முன்பா?

  அடங்க மறு திருப்பி அடி – இந்த பிரச்சாரத்தின் அப்பட்டமான கொள்கைப் பரப்புதான் இந்த பதிவும் உங்கள் பதிலும்.

 36. குலவியாரின் கட்டுரை நல்லாத்தான் இருக்கு அனால் அவர் சொல்லும் யோசனை சிரிப்பு மூட்டுகிறது

  //ஆதீனங்களாக, பீடாதிபதிகளாக, கோவில் தெய்வத் திருமேனிகளைத் தொட்டு வணங்கும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்//

  ஏன் சார் இப்படி – இன்று தாழ்டப்பட்டவருக்கு தேவை economic improvements தான். அதை விட்டு விட்டு பத்து வருஷம் மாஞ்சு மாஞ்சு வேதம் படிச்சிட்டு மாசம் ஆயிரம் ரூவா சம்பளத்துக்கு அர்ச்சகராகி தீக கார EO கிட்ட அசிங்கப்பட்டு வாழனுமா ? – கோவில் அர்ச்சகராகிட்டா பிரச்சனையை தீர்ந்திடுமா – வட பாரத்தத்தில் யார் வேணும்னாலும் சுவாமி காலை தொடலாம் – அங்கெல்லாம் தாழ்டப்பட்டவர்கள் முன்னேறி விட்டார்களா ?

  கோவில் அர்ச்சகர்கள் எல்லாம் அப்படியே சூபரா வாழ்ந்து கிட்டு இருக்கானான்னு உங்களது நினைப்பா? அதை விட கேவலமான வாழ்க்கை இன்று இல்லவே இல்லை – வேதம் படித்து ஆகமம் படித்து, சுத்தமாக இருந்து வாரத்தில் ஏழு நாளும் லீவு இல்லாமல் நாலு மணி முதல் பத்து மணி வரை வேலை பார்த்தல் – ஒரு பத்தாவது பெயிலான தீகா காரன் இவர்களை நாயை விட கேவலமாக நடத்துவான்

  நீங்கள் சொல்லும் அறிவுரை அம்பானிகளுக்கு அவர்கள் தொழிலை எப்படி நடத்த வேண்டும் என்று முதல் ஆண்டு MBA படிக்கும் மாணவன் கூறும் அறிவுரைகள் போல இருக்கிறது.

  தொடருங்கள் உங்கள் அறிவுரையை

 37. தேவர் ஜாதிக்காரர்கள் குருபூஜை என்று கூறி தெருக்களில் செய்யும் அட்டகாசம் தனி ரகம். அவர்கள் தெருவில் போவோர் வருவோரையெல்லாம் அடித்து தள்ளிக்கொண்டே போவார்கள். பள்ளிக்காலத்தில் மதுரையில் அனுபவித்திருக்கிறேன். அதே நேரம் ஜாதி வெறியை தூண்டிவிட்டு கொழுந்துவிட்டெரியச் செய்ததால் தலித்துகள் சென்னை சட்டக்கல்லூரி வாசலில் சக மாணவர்களை போட்டு நாயடி அடித்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

  ரெண்டு பேரும் கேடுகெட்ட ஜாதி வெறி பிடித்தவர்களே. இதில் யாருக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. போலீஸ் என்ன செய்தார்களோ அதுவே மிகச்சரி. இது போன்ற வெறி பிடித்தவர்களுக்கெல்லாம் போலீஸ் சிம்ம சொப்பனமாக விளங்க வேண்டும். சமூகத்திற்கு அடங்காத ஜாதிக்காரர்களை போலீஸ் அடித்து நொறுக்கி விரட்டி ஒடுக்க வேண்டும் என்பதே சரி. இதில் யாருக்கும் ஜாதி ஆதாயம் கிடைக்க விடக்கூடாது. சமூக அமைதி என்பதே முக்கியம்.

  முக்கியமான விஷயம். தலித்துகள் ஒன்றும் வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத குழந்தைகளல்ல. ஒரேயடியாக வக்காலத்து வாங்கிக்கொண்டு இருக்காதீர்கள். பச்சாதாபம் செய்யாதீர்கள். எந்த ஜாதியானாலும் நல்லோருக்கு பண்பால் மட்டுமே மதிப்பு கிட்ட வேண்டும். இல்லையேல் ‘இந்தியாவில், நாம் எது செய்தாலும் சரி, யாரும் கேட்க முடியாது’ என்கிற மனோபாவம் முஸ்லீம்களிடம் வந்து விட்டது போல தலித்துகளுக்கும் வந்துவிடும். பிறகு தலித்துகள் என்ன செய்தாலும் எல்லோரும் ஏதோ ‘மைனாரிட்டி ஆதரவு நிலை’ போல ஆதரித்தே தீர வேண்டிய காட்டாயத்திற்கு உள்ளாவீர்கள். ஜாக்கிரதை!

 38. திரு சுப்ரமணியன்

  //நான் பல வருடங்களாக குஜராத்திலும் இப்பொழுது மும்பையிலும் வாழ்ந்து வருகிறேன். இங்குள்ள கோவில்களில் காலை நேரத்தில் யார் வேண்டுமானாலும் கடவுள் விக்ரஹத்தைத் தொட்டுக் கூட வணங்கலாம். தானாகவே பூஜை அபிஷேகம் எல்லாம் செய்யலாம். கோவிலில் யாரும் நீங்கள் எந்த ஜாதி என்று கேட்க மாட்டார்கள். இந்த பூஜை முறையை ஏன் தமிழ் நாட்டில் கொண்டு வரக்கூடாது? கிராமங்களில் இந்த முறையை கொண்டு வர முடியா விட்டாலும் நகரங்களில் செய்யலாமே. எல்லா ஜாதியினருக்கும் இதனால் மகிழ்ச்சி உண்டாகுமே.
  //

  நிஜமாகவே வித்யாசம் இருக்கு – இங்கிருக்கும் கோவில்களில் அதை ஒரு நாளும் நடைமுறை படுத்த முடியாது – அதற்க்கு காரணம் ஜாதி அடிப்படை இல்லை. நீங்கள் தென்னாட்டு கோவில் அமைப்புகளை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளாதவரை உங்களுக்கு புரிய வைப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

  தமிழ் நாட்டிலும் பிராண பிரதிஷ்டை செய்யாத எந்த ஒரு விக்ராஹத்தையும் எந்த பொது மக்களும் தொட்டு வணங்கலாம் – பிராண பிரதிஷ்டை செய்யப்பட கோவில்களில் முறை படி தான் கிராமங்கள் நடக்க வேண்டும் – செய்து வைப்பவர் இன்ன ஜாதியாக தான் இருக்க வேண்டும் என்று சொல்லவர வில்லை – வருவோர் போவோரெல்லாம் அபிஷேகம் செய்வது என்பது முடியாது என்பதுதான் விஷயம்

 39. // அதானே, நாளை பிராமணர்கள் எல்லாரும் வாஞ்சிநாதனுக்கு குருபூஜை அரசு செலவில் நடத்த வேண்டும் என கேட்டால் செய்வார்களா? //

  ராம், வாஞ்சி நாதன் பிராமண ஹீரோ அல்ல, தேசபக்த, சுதந்திரத் தியாகி.

  தேசியத் தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் சாதி முத்திரை குத்தும் ஈனத் தனமான பழக்கத்தை விட்டொழியுங்கள்.

  ஏதோ சவடாலுக்காகக் கேட்பதாக எண்ணிக் கொண்டு, வாஞ்சி நாதனின் நினைவைப் போற்ற பிராமணர்கள் கோரிக்கை விடுக்க வேண்டும் என்ற உங்கள் சிந்தனையே கீழ்த்தரமானது. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  வாஞ்சியும், பாரதியும், வ.உ.சியும், கொடிகாத்த குமரனும், கட்டபொம்மனும், வேலு நாச்சியாரும், சுப்பிரமணீய சிவாவும், அய்யா வைகுண்டரும் பிற தேசிய, ஆன்மிகப் பெரியவர்களும் நம் அனைவரின் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்.

 40. அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு அரசு செலவில் குருபூஜை மற்றும் விழா எடுப்பதா என்று நமது தளத்திலே சில அன்பர்கள் வினா எழுப்பியுள்ளனர்.

  இந்திய மற்றும் தமிழக அரசினரால் விழா நடத்தப்படும் எந்த தலைவருக்கும் பசும்பொன் அய்யா அவர்கள் ஒரு சிறிதும் குறைந்தவரில்லை. மிக சிறந்த தேசபக்தர் மட்டுமல்ல. நேதாஜி சுபாஸ் சந்திர போசுடைய அமைப்பில் சிறந்த பணி ஆற்றிய பெருமகனார் ஆவார். இந்த மண்ணின் உண்மையான மைந்தர்களில் சிறந்தவர்.

  அவரை போன்றவர்களுக்கு விழா எடுப்பதால் , தமிழக அரசு செய்துள்ள எவ்வளவோ பாவங்கள் குறையும். திருக்குறளையும், திருவாசகத்தையும் கசடறக்கற்றவர். பெரியாரை போன்ற தமிழின விரோத அரைகுறைகளுக்கு ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே , தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் சேர்ந்து தக்க பதிலடி கொடுத்தவர். அவரை விட சிறந்த ஒரு சீர்திருத்தவாதியை இன்று வரை தமிழகம் ஈன்று எடுக்கவில்லை.

  அவர் ஒரு புடம் போட்ட ஆன்மீக வாதி. அவருக்கு அரசு விழா எடுக்க கூடாது என்றால், யாருக்குமே தமிழகத்தில் அரசு விழா நடத்த தகுதியில்லை. தவறான கருத்துக்களை நமது தளத்தில் வெளியிட்ட அன்பர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

 41. திரு சாரங் சொல்வது மிக சரியே.
  கண் கூடாக இந்த கோவில் அதிகாரிகள் [ முதல் தகுதி -நாத்திகராக இருத்தல் வேண்டும்!] அர்ச்சகர்களை கேவலமாக நடத்துவதை கண்டிருக்கிறேன். பீட்சாவில் பணத்தை விட்டெறியும் நண்பர்கள் கோவில் அர்ச்சகர் தட்டில் பத்து ருபாய் போட்டேன் என்று அலுத்துக்கொள்வார்கள்.
  அந்த அர்ச்சகர்கள் தங்கள் வேலையை விட்டால் முழுக்க முழுக்க கோயில்கள் நாத்திக வாதிகள் மற்றும் அந்நிய சக்திகள் கட்டுப்பாட்டில் வரும்.
  அர்ச்சனை ” அடைந்தால் திராவிட நாடு” என்ற ரீதியில் நடக்கும்.அதே கழக ஏடுகள் [ குங்குமம் போன்றவை] சொல்லி பரிகாரம் செய்ய நாம் கோயில்களுக்கு போகும் பொது நொந்து போக நேரிடும்
  முதலில் கோயில்களை நாத்திக , இந்து விரோத அரசாங்கத்திடமிருந்து மீட்கும் வழியைப்பாருங்கள். சென்ற ஐந்தாண்டுகளில் நந்தனார் நாடகம் நடத்தி நாத்திகவாதிகள் ஒரு கோயிலை [ குறிப்பாக அதன் சொத்துக்களை] பிடித்தார்கள். இதே தளம் தான் தான் அது பற்றி எழுதியது. பலருக்குத்தெரியாது. இந்த ஆட்சியிலும் பெரிதாக நியாயத்தை எதிர்பார்க்க முடியாது- அவர்கள் அரசியல் செய்ய வேண்டுமே?
  நாளைக்கு நாம் எல்லாரும் போய் அழக்கூட இடம் இல்லாத நிலை வந்து விட வேண்டாம் .
  தற்போது நாம் எல்லாருமே அழிக்க எண்ணும் சிலருக்கு பகடைக்காய்கள்.
  தற்போதைய நிலமைகளைப்புரிந்து கொண்டு பின் பேசுவோம்.
  சரவணன் .

 42. ///ஏதோ சவடாலுக்காகக் கேட்பதாக எண்ணிக் கொண்டு, வாஞ்சி நாதனின் நினைவைப் போற்ற பிராமணர்கள் கோரிக்கை விடுக்க வேண்டும் என்ற உங்கள் சிந்தனையே கீழ்த்தரமானது. //

  மதிப்பிற்குரிய ஜடாயு ஐயா, அது வெறும் குதர்கத்திற்காக எழுதியது தான். அதில் சவுடால் எதுவும் இல்லை. நக்கல் பாவனை. அவ்ளோதான்! மற்றபடி அம்பேத்கார் என்கிற பெருங்கடலை ஜாதி என்கிற சொம்புக்குள் அடைத்து விட்டார்கள் என்பதையே ஏற்காதவன் நான் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

 43. சாதியால் மனிதனை பிரித்தது போதும் ,
  எல்லா சாதியிலும் ஏழைகள் இருக்கிறார்கள், இவர்களுக்கு அனைவருக்கும் உதவிகள் தேவை , கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தேவை, ஏழை பணக்காரன் என்ற வகையில் அரசாங்கம் பகுத்து பார்த்தல் போதும் , ஓட்டு வங்கிக்காக பகுத்தரியாதே ஜாதி என்ற பெயரில் . பகுத்தறிவு என்பது இதுதானா . கடவுள் உண்ட இல்லையா என்ற பகுதரியலை விட்டு விட்டு ஜாதி உண்ட இல்லையா என்று பகுத்தறிந்து பார் . ஆர்யா வர்ணாஸ்ரமத்தை குறை சொல்லும் நீ , திராவிட பகுத்தறிவு மூலம் சாதியை இந்த 60 ஆண்டுகளில் துடைத்து ஏறிந்திருக்கலாமே , இதுவும் பார்பண சதியோ , ஹிந்து தமிழா சிந்தித்து பார் ,

 44. முக்கியமான விஷயம் ஒன்றை இக்கட்டுரையின் பின்னூட்டங்கள் திசை திருப்புகின்றன என்று கருதுகிறேன். சாதிக் கலவரத்தைத் தூண்டுவதில் திமுகவின் துணையுடன் இசுலாமுய அமைப்புகள் சில ஈடுபட்டன என்பது குறித்து யாரும் பின்னூட்டங்களில் பெருமளவில் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆக சாதிக்கலவரங்களுக்கு மூளை மு.கருணாநிதி, செயலாற்றியது இசுலாமிய விஷமிகள். பரமக்குடி கலவரத்துக்குமே இதுவே மூலகாரணம் என்பது விவரமறிந்தோரின் ஐயம். நாட்டு நலன் பற்றிச் சிறிதும் கவலையின்றி 10பேர் செத்தால் நமக்கு ஆதாயமா…. 10ல் 4 தலித்தாக இருக்கட்டும் 2 தேவராக இருக்கட்டும் பாக்கி 4 நமக்கு வேண்டாதவனைப் போட்டுத்தள்ளு என்பதே கருணாநிதியின் அரசியல் தந்திரம். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் முதல் தினகரன் ஊழியர்கள், தா.கிருட்டிணன், ஆலடி அருணா வரை இதுவே நடந்துள்ளது.

  தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்பட வேண்டும் என்றால் தகுதியை தரமாகத் தரவேண்டுமேயன்றி, 30 மார்க் வாங்கியவனும் பட்டதாரி 80 மார்க் வாங்கியவனும் பட்டதாரி என்ற தற்போதைய நடைமுறை ஒவ்வாது. அமெரிக்காவின் Affirmative Action திட்டத்தில் நீக்ரோக்கள் கல்வி விஷயத்தில் தரம் தாழ்த்தப்பட்டதில்லை. பொதுத் தரத்துக்கு அவர்களும் உயர்த்தப்பட்டார்கள். இங்கே அப்படித் தரமான அடிப்படை இல்லை.

  தலித் சமுதாயத்திலேயே பொருளாதார ரீதியில் முன்னேறியவர்கள் பின்தங்கிய தலித்களைக் கைதூக்கி விடுவதில்லை. தன் சமுதாய முன்னேற்றத்தில் முறையான அக்கறை கொள்ளாத மக்களை எங்கு எப்படி உயர்த்துவது? இந்நிலையில் அவர்களை அர்ச்சகராக்குவோம் என்பதும் ஆதீனகர்த்தராக்குவோம் என்பதும் கருணாநிதித்தனமாக பிரச்சினையின் ஆணிவேரை விடுத்து விவாதத்தை திசை திருப்புவதாகவே அமையும்.

 45. வேதங்கள் கொண்டாடப்படும் நாள் சீக்கிரம் வரும். அன்று அனைவரும் -ஆம் ,அனைவரும் வேதம் படித்து ஜாதி அடிப்படையில் இன்றி தங்கள் ஆன்மீகத்தின் அடிப்படையில் அர்ச்சகர் ஆவார்கள்.
  நந்தனார்களும், கனகதாசர்களும் , அப்பர், சம்பந்தர் ,மற்றும் ஆழ்வார்களும் மீண்டும் பக்திப்பயிரை வளர்ப்பார்கள்.

  காலங்கள் உணர்ந்த பெரியோர்கள் ,வாழும் ஜ்னாநிகளின் அறிவுரைகள் நமக்குத்தேவை.
  இன்றைய நிலைமை இதுவே -நம் கையில் இல்லாத ஒன்றில் நாம் சீர்திருத்தம் செய்யப்பார்த்தல் எப்படி முடியும்?
  அது வம்பில் முடியும் சாத்தியங்கள் தான் அதிகம்.
  சரவணன்

 46. Some of the facts wirtten by the author about Sri. Muthuramalinga Thevar is higly objectionable. Before writing he should have read or referred the books about Thevar.Let him read “Mudisooda mannar Muthuramaling Thevar” by A R Perumal. When Sri Vaidhyanatha Iyer was threatened bycaste Hindus when Sri Iyer brought Dalits to enter the Meenakshi Amman Temple, Sri. Rajaji requested Thevar to support him though Rajaji was dead against Thevar during that period. Thevar announced that he will enter with Dalits if any one wants to stop, they were free to do that. Thevar entered the temple with Dalits ( the caste hindus mainly belong to justice party). Thevar lost mother at the early stage. Only Dalit lady broguht him up. He used to have lunch with Dalits without any discrepancy. One of his most trusted assitant was dalit. As per his will most of the properties of Thevar was given to Dalits. Thevar always appointed the persons from other castes as candidates in election and got them elected. In fact in Ramnad the majority community was mukkulathor, but he announced one chettiar as candidate and got him elected, the Ramnad Raja was defeated by him and the Raja is from Thevar community. The enitre riot in Mudukulathoor / paramakudi was engineered by then ruling party, in fact ten memebers from the Thevar community were killed by police in shooting, it was not a shooting, there were brought to the bank of the lake with tied hands and police mostlybelonged to particular community killed them. It created a wedge between the communities and the entire episode was fully engineered by the great “karma veerar”. The Thevars partiortism, the spritual power cannot be matched with any one. The incident in the Meenakshi temple insdie with anna durai – the then DMK president the elder generation still remembers or the great Reddiar asked the Thevar help during the Thiruvarutpa publishing and all great incidents…. need more page to write these details … I am the regualr reader of Tamil Hindu. But it is shocking that defaming the Thevar without knowing him is totally objectionable. If its conitnues, this site unknowingly doing harm to the person advocated for Nationalism and Patriotism.

 47. திரு செந்தில் அவர்கள் மிக அழகாக சொல்லிவிட்டார். பாராட்டுக்கள் .

  திரு பசும்பொன் அய்யா அவர்கள் பாரத திருநாட்டின் தூண் போன்ற ஒரு அற்புத தலைவர். அவரின் உண்மை வரலாறு தெரியாதவர்களே அவரை தவறுதலாக புரிந்து கொண்டு, ஏகடியம் பேசுகின்றனர். பசும்பொன் அவர்கள் தெய்வீகம், தேசீயம், இரண்டும் ஒருங்கிணைந்த அற்புத ஓவியம்.

 48. திரு. ஓகை நடராஜன் அவர்களே……

  // இதற்காக கலவரமா? காவல்துறை அடி வாங்கவேண்டுமா? காவல்துறை தலித் மற்றும் மற்ற சமுதாயத்தினரிடையே பாரபட்சம் காட்டுகிறது என்பதற்காக காவல்துறை வண்டியைக் கொளுத்தியதை ஆதரிக்கிறீர்களா? //

  என் கருத்தை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.அல்லது என் கருத்தை நான் சரியாக விளக்கவில்லை…மன்னிக்கவும்……

  காவல்துறையை மதிக்காத சமுதாயம் உருப்படாது என்பது என் ஆணித்தரமான கருத்து.

  ஆனால் துரதிர்ஷ்ட வசமாக சாதிக்கலவரங்களை கையாளும் விஷயத்தில் காவல்துறையின் கரங்கள் கழகங்களால் கட்டப்பட்டுள்ளன.அதிமுக ஆட்சிக்காலத்தில் தேவர் ஆதரவு நிலையை எடுக்கவும் திமுக ஆட்சிக்காலத்தில் தலித் ஆதரவு நிலையை எடுக்கவும் காவல்துறை நிர்பந்திக்கப்படுகிறது … ……..

  தேவர்களுடன் மோதினார் என்ற ஒரே காரணத்துக்காக அதிமுக ஆட்சியில் வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்டர் செய்யப்பட்டார்…..சென்ற திமுக ஆட்சியில் பட்டப்பகலில் ,சட்டக்கல்லூரி வாசலில் தேவர் வகுப்பை சேர்ந்த மாணவர்களை தலித் மாணவர்கள் அடித்து நொறுக்கியதை காவல்துறை கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தது….இவையெல்லாம் கழகங்கள் செய்யும் சாதி அரசியலுக்கான எடுத்துக்காட்டுக்களே……

  இவர்களின் சுய நல அரசியலின் நடுவே காவல்துறை சிக்கி சீரழிவதே நான் சொல்ல வந்த விஷயம்……..

 49. தலித்துகளோ வேறு யாரோ தகுந்த நியமங்களோடு வேதம் கற்க முன்வந்தால் வரவேற்கப்படவேண்டிய ஒன்று . ஆனால் பலரும் மேற்கத்திய கல்வியால் பாதிக்கபட்டு இந்து நூல்கள் மேல்ஜாதியினர் செய்த சதி என்ற எண்ணத்தில் உள்ளனர் . மேலும் இந்த செய்தியை பார்த்தல் வேதம் கற்று அதன் நியமங்கள் படி நடப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும்

  http://ibnlive.in.com/news/namboothiri-grooms-turn-to-orphanages-for-brides/178509-60-116.html

 50. திரு.ஜடாயு அவர்களின் கருத்தை தலைவணங்கி ஏற்கிறேன்…

  -ஆர்.டி.வர்மா.

 51. அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிலையத் தேர்வுகளிலும் இருக்கும் சாதி அடிப்படை இட ஒதுக்கீட்டைப் பலர் எதிர்க்கிறார்கள்.

  அதே எதிர்ப்பை அவர்கள் மதம் சார்ந்த இடங்களில் உள்ள சாதி அடிப்படை இட ஒதுக்கீட்டின் மேலும் காட்ட வேண்டும்.

  .

 52. தமிழ்ஹிந்துவில் 14 நவம்பர் 2008-ல் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “அழியட்டும் சாதியம் மலரட்டும் ஆன்மநேயம்” என்ற கட்டுரையில் (http://tamilhindu.com/2008/11/towards-a-casteless-society/ ) பின்வருமாறு உள்ளது:

  “…பாபா சாகேப் அம்பேத்கரும் சரி பொன் முத்து ராமலிங்க தேவரும் சரி இந்த கொடூர வக்கிரங்களை அவர்கள் பெயர்களில் நடத்திட அனுமதிக்க மாட்டார்கள். மிக மோசமான சாதியக்கொடுமையையும் அன்பாலும் அறிவாலும் எதிர்த்து நின்றவர் அண்ணல் அம்பேத்கர். இன்றைய போலி தலித் தலைமை பீடங்களைப் போலல்லாமல் பாரத தேசியத்தை அனைத்திற்கும் மேலாக மதித்தவர். சாதி எனும் குறுகிய வட்டத்தில் அவரை அடைத்து அவருக்கு சிறிதும் ஏற்புடையதல்லாத வன்முறையை அவர் பெயராலேயே நடத்தும் அவலத்தை என்னவென்பது?

  இன்றைக்கு முத்துராமலிங்க தேவரை குறித்து பேசும் அவரது சாதியினர் என தம்மை கருதிக்கொள்பவர்கள் என்ன செய்கிறார்கள்? ஒரு நடிகருடன் இணையாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை போஸ்டரில் போடுகிறார்கள். நேதாஜியை தேசிய நாயகனாகவும் முருகப்பெருமானை தெய்வீக ஊற்றாகவும் கண்ட தமிழகத்தின் வீரத்திருமகன் முத்துராமலிங்க தேவருக்கு இதைவிட கேவலமான அவமானத்தை உருவாக்க முடியாது. அவரை சாதி எனும் குறுகிய வட்டத்தில் அடைத்தது முதல் அவமானம் என்றால் அவரை சாதி எனும் ஒரே அடிப்படையில் நடிகர்களுக்கு இணையாக்கியது அடுத்த அவமானம். ஆனால் அவர் பெயரைச் சொல்லி சாதி மோதல்களில் ஈடுபடுவது அதுவும் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே ஈடுபடுவது என்பது அவரது நினைவுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதி…….

  ……வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்ட குற்றவாளிப்பரம்பரை எனும் சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள் அண்ணல் அம்பேத்கரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும். ஆரிய இன/படையெடுப்புக்கோட்பாட்டை எதிர்த்தவர்கள் இருவரும். பாரத தேசியத்திலும் பாரத தேச ஒருமைப்பாட்டிலும் ஒத்த கருத்துள்ளவர்கள் இருவரும். எனவே இவர்கள் இருவரது பெயர்களும் இணைவது சமுதாயத்தின் ஒட்டுமொத்த நன்மைக்கு தேவையானதாகும். ஆனால் இந்த பெருந்தலைவர்களின் பெயரால் துவேசஷத்தை இளம் நெஞ்சங்களில் விதைத்தக் கொடியவர்கள் யார்? அண்ணல் அம்பேத்கரின் பெயரைச் சொல்லி வன்முறையை தேசப்பிரிவினையை வளர்க்கும் கயவர்கள் யார்? பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரால் மிருகத்தனமான சாதி வெறியை தூண்டி அதில் மனித இரத்தத்தைவிட்டு குளிர்காய நினைப்பவர்கள் யார்?……

  …..சாதியத்தில் பிரிந்து வீழ்ந்துவிட்டோம். போதும். ஆன்மநேய ஒருமைப்பாடுடைய பாரத தேசியத்தில் இணைந்திடுவோம். வாருங்கள், அண்ணல் அம்பேத்கரும் பசும்பொன் தேவரும் பாரத தாயின் மைந்தர்கள். மீனவப்பெண்ணின் மகன் தந்த வேதத்தை இடையன் அளித்த பகவத் கீதையை புலையனாக வந்த சங்கரனை வணங்கும் இந்த தருமத்தில் சாதியம் அழியட்டும். தருமம் வளரட்டும். ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வு ஓங்கட்டும்.”

  இதே தமிழ்ஹிந்துவில் தற்போது குளவி கொட்டியுள்ள கட்டுரையில் இவ்வாறு வருகிறது:

  ”… ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததாலேயே அவர் குற்றப் பரம்பரை என வெள்ளையர் அரசாங்கம் அறிவித்த கொடுமையை எதிர்த்து போராடியவர்தாம் முத்துராமலிங்கத் தேவர். ஆனால், தலித் மற்றும் ஆதிக்க சாதிகளிடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அவர் சிந்திக்கத் தவறியது பெரிய வரலாற்றுத் தவறு என்றே சொல்ல வேண்டும். அவருடைய சாதியினருக்கும் தலித் சமுதாயத்தினருக்கும் இருந்த பகையை மீற அவரது சுய சாதி அபிமானம் விடவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற ஒரு தேசியவாதியின் இந்தத் தவறு இன்று இரு சமுதாயங்கள் இணைந்து தமிழ்நாட்டை மேம்படுத்த வழியில்லாமல் ஆக்கிவிட்டது.”

  இரண்டு விதமான கருத்துக்களையும் தமிஹிந்து பெருமையுடன் வெளியிட்டிருக்கிறது.

  What a fall!

  இதற்கு விளக்கம் சொல்லவேண்டியது தமிழ்ஹிந்துவின் கடமை.

  நிற்க..,

  ராஜிவ் கொலை வழக்கில் விடுதலைப்புலி இயக்கத் தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்த குளவியின் கட்டுரை மூலம் பல தேசியவாதிகளின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டுள்ளது தமிழ்ஹிந்து. தற்போது இந்தக் கட்டுரை மூலமும் முத்துராமலிங்கரைப் போற்றும் தேசபக்தர்கள் மட்டுமின்றி தேவர் சமூக மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளது.
  மேலும் சில கட்டுரைகள் மற்றும் பல மறுமொழிகளின் மூலம் ஆன்மீகவாதிகளின் வெறுப்பையும், சில குறிப்பிட்ட சமுகத்தவரின் வெறுப்பையும்கூட சம்பாதித்துள்ளது தமிழ்ஹிந்து (மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய கட்டுரை மற்றும் சங்கர மடம் பற்றிய மறுமொழிகள் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்ல்லாம்).

  அனைத்து சமூகத்தவரும் ஒன்றிணைந்த ஒரு தமிழ்-ஹிந்து சமுதாயத்தை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தாங்கிப் பிடித்துக்கொண்டு மற்றவரின் வெறுப்பை சம்பாதித்தால் அது நடக்காது. சாதி வேற்றுமைகளை ஒழிக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. ஆனால் அதற்காக சாதிகளையே ஒழித்துக் கட்டுவோம் என்று கிளம்பினால் குறித்த இடத்திற்குப் போய்ச்சேர முடியாது. தங்களுடைய சாதி அடையாளத்துடனும் அதே சமயத்தில் மற்ற சாதியினரிடத்து அன்பும் மரியாதையுடனும் இருப்பவர்கள் பலகோடி பேர் தமிழகத்தில் இருக்கின்றனர். அவர்கள் மற்ற சமூகத்தினரைத் தாழ்த்தாமலும் தூற்றாமலும் தங்களுடைய சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதன்மூலம் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழிவகை செய்கிறார்கள்.

  ஆன்மீகத்தலைவர்களும் வேறு சில இயக்கங்களும் சாதிவேற்றுமையின்றி அமைதியாக சமூக நல்லிணக்கத்திற்குத் தேவையான பல பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்ஹிந்து அவற்றையெல்லாம் தன்னுடைய வாசகர்களுக்கு வழங்கவேண்டும். எதிர்மறையான விஷயங்களைவிட நேர்மறையான விஷயங்களைத் தருவதன்மூலம் அனைத்து சமூகத்தவரையும் ஒன்று சேர்க்க முயல்வது தமிஹிந்துவிற்குப் பயனளிக்கும்.

  அதைவிட்டு, தற்போதைய கதியில் பயணித்தால் தமிழ்ஹிந்து தலித் இலக்கிய தளமாகக் குறுகிவிடும் அபாயம் இருக்கிறது. தமிழ்ஹிந்துவிற்கும் பிரயோசனம் இருக்காது; தலித் மக்களுக்கும் பிரயோசனம் இருக்காது.

  Yes, if the present trend continues, Tamilhindu may end up as a website peddling Dalit Literature without benefitting anyone.

  I have expressed my concern, for I regard this website and respect those noble minds behind this sincere service oriented venture.

  My prayers to the Almighty.

  Thanks.

  Thamizhchelvan

 53. திரு சரவண குமார்,

  //காவல்துறையை மதிக்காத சமுதாயம் உருப்படாது என்பது என் ஆணித்தரமான கருத்து.//

  என் கர்த்துகளின் அடிப்படையே அதுதான்.

  //ஆனால் துரதிர்ஷ்ட வசமாக சாதிக்கலவரங்களை கையாளும் விஷயத்தில் காவல்துறையின் கரங்கள் கழகங்களால் கட்டப்பட்டுள்ளன.அதிமுக ஆட்சிக்காலத்தில் தேவர் ஆதரவு நிலையை எடுக்கவும் திமுக ஆட்சிக்காலத்தில் தலித் ஆதரவு நிலையை எடுக்கவும் காவல்துறை நிர்பந்திக்கப்படுகிறது … ……..//

  காலங்காலமாகவே காவலர்கள் அரசின் ஏவலர்கள்தான். இந்த நிலைமை முன்னேற சரியான ஆட்சியாளர்கள் அமர்த்துவதே ஒரே வழி. ஆனால் அதற்காக நாட்டு நடப்புகளின்படி எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளையும் அவ்வாறு வகைப் படுத்த முடியாது. முன் எப்போதையும் விட நமக்கு உடனுக்குடன் செய்திகள் படக்காட்சிகளாகவே வந்துவிடுகின்றன.. ஊடகங்களின் தகிடுதத்தங்களையும் மீறி உண்மைகள் வெளிவந்துவிடுகின்றன.

  //தேவர்களுடன் மோதினார் என்ற ஒரே காரணத்துக்காக அதிமுக ஆட்சியில் வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்டர் செய்யப்பட்டார்…..//

  தேவர்களுடன் மோதினார் என்பது அவருடைய ஒரே குற்றமா? மற்றவகையில் அவர் குற்றமற்றவரா?
  பிடிபடும்போது அபாயகரமான எதிர்ப்பு காட்டினால் என்கவுண்டர் என்பது சரிதானே!

  //சென்ற திமுக ஆட்சியில் பட்டப்பகலில் ,சட்டக்கல்லூரி வாசலில் தேவர் வகுப்பை சேர்ந்த மாணவர்களை தலித் மாணவர்கள் அடித்து நொறுக்கியதை காவல்துறை கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தது….இவையெல்லாம் கழகங்கள் செய்யும் சாதி அரசியலுக்கான எடுத்துக்காட்டுக்களே……//

  உண்மை! எடுக்காத நடவடிக்கைக்காக கண்டிக்கும் நீங்கள் எடுத்த நடவடிக்கையும் கண்டிக்கலாமா?

 54. திரு.ஓகை நடராஜன் அவர்களே……

  // தேவர்களுடன் மோதினார் என்பது அவருடைய ஒரே குற்றமா? மற்றவகையில் அவர் குற்றமற்றவரா? //

  போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்ட லிங்கம்,கராத்தே செல்வின், சேரா , கபிலன் போன்ற ரவுடிகள் நாடார்கள் தான்.அவர்களை பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.

  வெங்கடேஷ் பண்ணையார் குற்ற பின்னனி உள்ளவர் அல்ல. அவர் ஒரு நில சுவான்தார் .அவர் மீது எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை.சங்கர மட பக்தர்.அவருடைய சொந்த உப்பளத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது அவர் எடுத்த நடவடிக்கை சாதி ரீதியாக twist செய்யப்பட்டது

  அவர் கொல்லப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற சாத்தான் குளம் இடைத்தேர்தலில்அவர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் . [ மேற்படி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஹிந்து. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கிறித்தவர். சாத்தான்குளத்தில் கிறித்தவ நாடார்கள் அதிகம். காங்கிரஸ் வேட்பாளருக்கு சர்ச்சுகள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தன .எனவே ஹிந்து வாக்காளர்களின் ஆதரவை ஒன்று திரட்ட அந்த பகுதிய சேர்ந்த பெரிய மனிதரான பண்ணையாரை அதிமுக பயன்படுத்திக்கொண்டது.]

  எம்ஜியார் உயிருடன் இருந்தவரை அதிமுக மீது எந்த சாதி சாயமும் பூசப்பட்டதில்லை.சொல்லப்போனால் தலித்கள் பெரும்பாலும் அதிமுக ஆதரவாளர்கள்…..

  ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்பே இந்த நிலை…[ உபயம் – சசிகலா குடும்பத்தினர் ] இதனால் அதிமுகவை விட்டு விலகிய தலித்களை பயன்படுத்தியே தற்போது விஜயகாந்த் வளர்கிறார்…….

 55. திரு குளவியர் மீண்டும் கொட்டியிருக்கிறார். ஒரு சில முக்குலத்து நண்பர்களுக்கு வருத்தம் விளைவிக்கும் வண்ணம் தேவர் திருமகன் அவர்களைப்பற்றி சற்று வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஆனால் பரமக்குடியில் நடந்தது என்ன என்பதைப்பற்றி இன்னும் தெளிவில்லை.
  ஐயா தேவர் அவர்கள் தேசியமும் தெய்வீகமும் தமது இரண்டு கண் என்று போற்றியவர். நேர்மையாளர் துயவர். திராவிட இயக்க மாயை தமிழகத்தினை முழுதும் கவ்வாமல் இருந்ததற்கு அவரும் ஒரு காரண கர்த்தா.
  அப்பெரும் தேச பக்தரும் ஆன்மீகவாதியும் கூட சாதி அடையாளத்தினை முற்றிலும் கடந்து வரவில்லை என்பது உண்மைதான். அவர் மட்டுமல்ல பெருந்தலைவர்கள் பலரும் அப்படித்தான் என்று சொல்லமுடியும். ஏன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒட்டுமொத்த விடுதளைக்குப்ப் பாடுபட்ட அண்ணல் அம்பேத்கர் கூட மகர் சாதித்தலைவராக மாதங் எனப்படும் மற்றொரு தாழ்த்தப்பட்ட சாதி யினரால் கருதப்பட்டார் என்பதே உண்மை.
  இன்று சாதி சங்கங்கங்கள் பலவற்றில் தலைவர்கள் தந்தை(?) பெரியார்(?) அவர்களின் தொண்டர்கள் என்பதும உண்மை.
  இன்று உள்ள தலித் இயக்கங்கள் ஏன் பிற்படுத்தப்பட்டோர் இயக்கங்கள் யாவுமோ ஒரு சாதியை மையமாக கொண்டுள்ளன.
  போராட்டம தலித் மற்றும் ஆதிக்க சாதியினருக்கு இடையில் என்பது மெய்யல்ல. தனித்தனி சாதிகளுக்கு இடையே ஆதிக்கப் போட்டி நிகழ்கிறது.
  மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்த ஊடகங்கள் அப்படி கற்பிக்கின்றன.
  சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது என் கருத்தல்ல. நிச்சயம் உள்ளன. அனால் போராட்டம் இரு பிரிவுகளுக்கல்ல இருசாதியினருக்கிடையில் உள்ளது என்பதே எனது நிலை.
  இந்த போராட்டத்திற்குப் பின்னால் மதமாற்றிகள் மற்றும் தேர்தலில் தோற்றவர்கள் இருக்கக்கூடும். ஏன் என்றால் ஆதாயம் அவர்களுக்குத்தான்.

  எனக்குத்தோன்றியவற்றை எழுதினேன். இன்னும் இதில் ஆழ்ந்து ஆய்வு செய்யவேண்டும். ஆனால் பிளவுண்டு நிற்கும் இரண்டு சாதி மக்களும் ஒன்று பாட்டு வாழவேண்டும். பொருளாதார நிலையில் கல்வியில் பெரும்பாலான மக்கள் இரு சாதியிலும் பின்தங்கி யுள்ளனர். இந்த பூசலைவிட்டு தத்தம் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும். இருவரும் நன்றாக வாழ இந்நாட்டில் இடமுண்டு, முன்னேற வளமுண்டு. அதற்க்கு மனம் வேண்டும் நேசமும் வேண்டும்.

 56. ஒரு நாள் குறியுங்கள்
  அன்று அனைத்து முக்குளத்தோரும் ஒன்று சேர்ந்து அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்.
  அன்று அனைத்து தலித் அமைப்பினரும் ஒன்று சேர்ந்து தேவர்சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்.
  திட்டமிடுவோம்
  செயலாற்றுவோம்

  அன்பன்
  கி.காளைராசன்

 57. //
  ஒரு நாள் குறியுங்கள்
  அன்று அனைத்து முக்குளத்தோரும் ஒன்று சேர்ந்து அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்.
  அன்று அனைத்து தலித் அமைப்பினரும் ஒன்று சேர்ந்து தேவர்சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்.
  திட்டமிடுவோம்
  செயலாற்றுவோம்
  //

  அதே நாளில் கூட்டத்தில் வேண்டுமென்றே மிசனரிகளும் மியாங்களும் ஊடுருவி ஏதாவது ஏடாகுடமாக செய்வார்கள் – நம்மாளுங்க அடிச்சிக்கிட்டு சாவோம்

  மனதில் மாற்றம் வேண்டும் – வெறுமனே சிலைக்கு மாலை இடுவது என்பது கழகங்கள் (தீ கா உட்பட) செய்யும் சடங்கு.

 58. யாராக இருந்தாலும் தமிழில் உள்ள கடிதங்களை மட்டுமே பிரசுரிக்கவும். தமிழில் கடிதம் எழுத முடியாத நண்பர்கள் தங்கள் கருத்தை யாராவது தமிழ் தெரிந்த நண்பர்கள் மூலம் தமிழ் ஹிந்துவில் வெளியிடுவது நல்லது.

  ஆங்கிலம் மூலம் கருத்துப்பரிமாற்றம் செய்வதற்கு ஏராளமான தளங்கள் உள்ளன. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நண்பர்கள் தங்கள் கருத்தை , அந்த தளங்கள் மூலம் வெளிப்படுத்தலாம். தமிழ் தளத்தில் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பது சரியல்ல. அல்லது , இந்த தளத்தின் பெயரையாவது தமிழ்-ஆங்கில இந்து என்று பெயர் மாற்றிவிடுங்கள்.

 59. நான் திரு கதிரவனின் கருத்துகளை வழி மொழிகிறேன்

 60. //ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததாலேயே அவர் குற்றப் பரம்பரை என வெள்ளையர் அரசாங்கம் அறிவித்த கொடுமையை எதிர்த்து போராடியவர்தாம் முத்துராமலிங்கத் தேவர். ஆனால், தலித் மற்றும் ஆதிக்க சாதிகளிடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அவர் சிந்திக்கத் தவறியது பெரிய வரலாற்றுத் தவறு என்றே சொல்ல வேண்டும். அவருடைய சாதியினருக்கும் தலித் சமுதாயத்தினருக்கும் இருந்த பகையை மீற அவரது சுய சாதி அபிமானம் விடவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற ஒரு தேசியவாதியின் இந்தத் தவறு இன்று இரு சமுதாயங்கள் இணைந்து தமிழ்நாட்டை மேம்படுத்த வழியில்லாமல் ஆக்கிவிட்டது.//

  காங்கிரஸ்-ஃபார்வர்ட் பிளாக் அரசியல் மோதலில் பலிகடாவாக்கப் பட்டது இமானுவேல் சேகரன் மட்டுமல்ல.. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும்தான்.

  முன்னவர் இளங்கன்று.. தார்மீக கோபம் இருந்தது.. அத்துடன் தாம் காங்கிரஸால் பயன்படுத்தப் படுகிறோம் என்பதை உணரமுடியாதளவுக்கு உணர்ச்சிப் பெருக்கும் இருந்தது. பின்னவரோ முக்குலத்தோரையும், தேவேந்திரர்களையும் ஒருங்கிணைக்கவல்ல “ஆபத்தான” பெரும் தலைவராக அவருடைய அரசியல்/கொள்கை எதிரிகளால் அஞ்சப்பட்டார்.. அவருக்கெதிரான திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தால் தேவர் அவர்கள் வில்லனாக்கப்பட்டார்..

  இன்றைக்கும் இவ்விரு வகுப்பினருக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டு விடாமல் இருக்க அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கின்றன சில கும்பல்கள்… முருகனருளால் சதிகள் முறியடிக்கப்பட்டு சகோதரத்துவம் மலரும் என நம்பி அனைவரும் அதற்கு உழைப்போமாக.

 61. அய்யா தாங்கள் எழுதியது மிக சரியே…

  தேவர் அவர் சார்ந்த சாதிக்கு மட்டுமே தலைவராயிருந்தார். எந்நாளும் அவர் பொதுவானவராக இருந்ததில்லை. அவரின் தேர்தல் பிரச்சாரம், மேடை பேச்சு கேட்டால் தெரியும். பல சாதியினருக்கு எதிராக விசத்தை கக்கியிருப்பார். இம்மானுவேல் ஐ எற்றுக்கொள்லாததாலேகொலை நடந்தது. இன்னமும் அவர் சார்ந்த சாதியினர் சாதி வெறியுடனே இருக்கின்றனர். சட்ட கல்லூரி வன்முறையின் ஒரு பக்கம் மட்டுமே நமக்கு தெரியும், அதற்க்கு முன் தேவர் ஜெயந்திக்கு என்ன நடந்தது என்று விசாரித்து பாருங்கள்.

  பண்ணையார் ஒரு மரியாதியான மனிதர், பசுபதி பாண்டியனுக்கும் அவருக்கும் தனிப்பட்ட பகை. அதனால் கொலைகள் நடந்தன, ஏதோ டீல் ஒத்து வராததால் (t t v ,தினகரனுடன்) என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பதுதான் உண்மை, அவர் தகுதிக்கு 45000 ரூபாய்க்காக நடந்த தகராறு என்று போலீஸ் கூறுவது வடிகட்டிய பொய்.
  தேவரை பற்றி சுவரில் எழுதியது தவறு, அதற்காக ஒரு சிறுவனை கொன்றது காட்டுமிராண்டிகளின் செயல், தெய்வதிருமகன் இம்மானுவேல் என பேனர் வைத்தது sc /st போக்குவரத்து தொழிலாளர்களின் வம்புக்கிழுக்கும் செயல், ஜான் பாண்டியனை தடுத்தது அரசின் தவறு, வன்முறையில் ஈடுபட்டது அவர்கள் தவறு, சுட்டது ஓவர், இதேர்க்கேல்லாம் காரணம் அடிப்படையில் கருணாநிதியே…

  தேவருக்கு மதுரை மத்தில் சுய லாபத்துக்கு சிலை வைத்து, அவர் பிறந்தநாளை அரசுவிழாவாக்கி, அவர்களை தூண்டி குளிர்காய்ந்து, பிற சாதியினரை தாங்களும் இவ்வாறெல்லாம் செய்ய வேண்டுமென நினைக்க வைத்துவிட்டார்.
  போன சட்டசபை தேர்தலில் கூட “சிறுத்தைகள் நடமாடலாம், சிங்கங்கள் நடமாடக்கூடாதா?” என உசிலம்பட்டியில் போய் சாதி வெறி ஊட்டினார்.
  நண்பர்களுக்கு ஒன்று கூறுகிறேன், நான் எழுதியதற்கு யாரும் கோப படவோ, வருந்தவோ வேண்டாம். மனிதர் களை மொத்தமாக எடை போடா வேண்டாம். நல்லவரும் கேட்டவரும் என்குமிருப்பார். அனைவரும் சமம் என நினையுங்கள்.

 62. Mr கதிரவன் , Mr திராவிடன்
  Sorry for writing in English. I can only read Tamil . I haven’t written in Tamil for over 45 years. It was terrible even in those days.
  (My excuse ( truly) : College and Graduate study in English, have lived/living overseas for over 35 years where English is the medium of communication). I am sure many of the readers are in similar situation. I really wish I could write in Tamil. So writing in English is purely a necessity and not an indulgence, believe me. It is not easy/practical to find someone who knows to write in Tamil to help me out. If TH in future restrict English, people like me will not be able to air our views. Simple as that. Hope you guys understand.
  Anyhow, I am trying to improve my Tamil. ( lately read quite a few books written by Balakumaran, Janakiraman, Sujatha, Shivashankari, Kannadasan)

 63. சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரசை கலைத்துவிட்டு வேறு புதிய பெயரில் அரசியல் கட்சியை துவக்கி கொள்ளுமாறு காந்தியார் அன்றைய அரசியல் வாதிகளை கேட்டுக்கொண்டார். ஆனால் நேரு போன்ற அரசியல் வியாதிகள் , காந்தியார் பேச்சை கேட்கவில்லை. இன்றோ, காங்கிரசு என்ற பெயர் அசிங்கப்பட்டு, உலகம் முழுவதும் நாறுகிறது.

  முத்துராமலிங்கத்தேவர் பெயரை கெடுக்க காங்கிரசார் அன்று செய்த திட்டமிட்ட பொய் பிரச்சாரம் மற்றும் சதிகளின் பலனை இன்று காங்கிரசார் அனுபவிக்கும் காலம் வந்துவிட்டது. வினை விதைத்தவர்கள் அல்லவா? வேறு எதனை அறுக்க முடியும்?

  காங்கிரசு என்று இன்று சொல்லிக்கொண்டு நாட்டில் உலாவரும் அரசியல் கொள்ளைக்கூட்ட ஜந்து ஒரு விஷக்கிருமி. அது விரைவில் ஜல சமாதி ஆகும். இத்தாலி பெண்மணி அந்த திருப்பணியை விரைவில் முடிப்பார்.

  காங்கிரசுடன் படகில் ஏறியோரும் அதே கதியை தான் பெறுவார்கள்.

 64. மரியாதைக்கும் அன்புக்கும் உரிய RAMA

  தாங்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை எழுதி வாருங்கள். தங்களுடைய நிலையை சரியாகவும், தெளிவுபடவும் சொல்லி இருக்கிறீர்கள். உங்களை போல , ஓரிருவர் ஆங்கிலத்தில் எழுதினால் , அதை நீங்கள் கூறிய காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பெரும்பான்மையோர் ஆங்கிலத்தில் எழுத தொடங்கி விடிவார்களோ என்ற அச்சத்தால் தான் நாங்கள் அவ்வாறு கருத்து தெரிவித்தோம். தாங்கள் எவ்வித தயக்கமும் இன்றி , தொடர்ந்து பங்களிப்பு செய்ய வேண்டுகிறேன்.

 65. அன்பார்ந்த ஸ்ரீமான்கள் கதிரவன் மற்றும் த்ராவிடன்

  தமிழிலேயே உத்தரம் எழுத வேண்டும் என்ற தங்கள் வேண்டுகோள் சரியானதே.

  தமிழகத்திலிருந்து பெயர்ந்து முப்பது வருஷம் ஆகிறது. பற்பல மாகாணங்களில் பணி புரிந்து மிக மோசமாக உக்ரமான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த சமயம் காஷ்மீரத்திலும் தற்போது முருகப்பெருமான் அருளால் ஜம்முவிலும் எனது உத்யோகம்.

  இன்றைய நாட்களில் வாயைத்திறந்து பேசுமுன் நான் பேசவேண்டிய மொழி தமிழா, ஹிந்தியா, ஹிந்துஸ்தானியா, ஆங்க்லமா அல்லது ஸம்ப்ரதாயத்திற்காக டோக்ரியா என்று க்ஷணத்தில் தீர்மானித்த பின்னரே பேசவேண்டும். ராஜதானியில் இருக்கும் என் மனைவி மக்களுடன் சில நிமிஷம் தினமும் தூர்பாஷியில் தமிழில் பேசுவது தினமோதும் திருப்புகழ் விநாயகர் அகவல் இங்கே சில வாசகங்கள் தமிழில் எழுதுவது அபூர்வமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி இவ்வளவே எனக்கு தமிழ் மொழியுடன் சம்பந்தம். ஒரு மொழி பேசுகையில் மறுமொழி ஊடே நுழைவது மிகவும் ஸ்வாபாவிகம். வேறுவழியின்றி முப்பது வருஷங்களாக அதிகம் பேசி வரும் மொழி ஹிந்தி. இது எனது பாக்யமா துர்பாக்யமா தெரியவில்லை. ஆனால் பாரத மாதாவின் அணிகலன்களாம் பல மொழிகளில் கருத்துக்களின் ஒற்றுமையை பார்க்கையில் இவையெல்லாவற்றையும் மீறி ஒரு பெருமிதம் மனதில் நிறைவது உண்டு.

  எழுதுவதென்கையில் இப்போது ஒரு வருஷமாக தமிழ் ஹிந்துவில் தமிழில் எழுதுவதே.ஆற்றொழுக்கு போன்ற தமிழில் பேச எழுத ஆசையே. அது அசாத்யமன்று. ஆனால் ச்ரமசாத்யம்.

  பின்னும் எனது ஸ்வாபாவிகமான மொழிநடை தங்களது வேண்டுகோளுக்கு மாறாக இருப்பதற்கு என்னை க்ஷமிக்கவும்.

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 66. அன்பார்ந்த ஸ்ரீ தமிழ்ச்செல்வன்

  தேசியம் சார்ந்த கருத்துகளை முன் வைத்து வ்யாசங்கள் எழுதும் ஸ்ரீமதி ராதாராஜன், ஸ்ரீ அ.நீலகண்டன் இவர்களின் வரிசையில் தங்களுடைய வ்யாசங்களையும் விரும்பி வாசிப்பவன் நான்.

  விஜயவாணி தளத்தில் தங்களுடைய வ்யாசங்களில் தமிழ்ஹிந்து பற்றிய குறிப்பு படித்ததன் மூலமாகவே ஒரு வருஷமாக தமிழ்ஹிந்துவில் பங்கேற்று வருகிறேன்.

  \\\\தற்போது இந்தக் கட்டுரை மூலமும் முத்துராமலிங்கரைப் போற்றும் தேசபக்தர்கள் மட்டுமின்றி தேவர் சமூக மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளது.\\\\

  பசும்பொன் முத்துராமலிங்க தேவராக இருக்கட்டும் சின்னப்பா தேவராக இருக்கட்டும், தேவர் என்றாலே நினைவுக்கு வருவது இவர்களின் நீரணிந்த நெற்றியும் நிறைந்த தெய்வ பக்தியும் குறைவில்லா தேசபக்தியும் இணையில்லா வீரமும். அதற்காக மற்றவர்களை குறைசொல்வதாக நினைக்க வேண்டாம். இங்கே உத்தரபாரதத்தில் ராமாயண ரசங்களை அழகு பொலிய என்னுடன் ஆசையாக பகிர்ந்து கொள்ளும் என் நண்பர்களில் பலர் வால்மீகியினர் எனும் ஜாதியை சார்ந்த தலித்துக்களே.

  ஸ்ரீ செந்தில் அவர்களது வ்யாசங்களும் மறுமொழிகளும் விஜயவாணியில் வாசித்துள்ளேன். இங்கும் கூட தேவர் பெருமகனார் பற்றித் தெளிவாக எழுதியுள்ளார். தேவர் பெருமகனாரை ஜாதியவாதியாக தவறாக முன்வைத்த குளவியின் கருத்தை மறுத்து உண்மைகளை தெளிவாக்கும் பிறிதொரு வ்யாசம் இங்கும் விஜயவாணியிலும் எழுதப்பட வேண்டும். அது குளவியின் விஷக்கடிக்கு மருந்தாகும்.

  ஆப்ரஹாமிய அக்ரமங்களை பற்றி குளவி கொட்டியுள்ள இப்போதைய வ்யாசம் தங்கள் குறையை சற்றே போக்கும் என நம்புகிறேன்.

  \\\\\\\\\\ராஜிவ் கொலை வழக்கில் விடுதலைப்புலி இயக்கத் தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்த குளவியின் கட்டுரை மூலம் பல தேசியவாதிகளின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டுள்ளது தமிழ்ஹிந்து\\\\\\\\

  சங்கப்பயிற்சி பெற்றதால் தேசம் சார்ந்த விஷயங்களை ஹிந்து ராஷ்ட்ரம் மற்றும் ஹிந்துத்வம் வழியாகவே பார்க்கும் எனக்கு சில சமீப தமிழ்ஹிந்து வ்யாசங்களைப் படிக்கையில் கசப்பு மேலிட்டது. ஹிந்துத்வம் என்ற கோட்பாட்டின் மூலம் மற்றைய கோட்பாடுகளைக் காணாது மற்றைய கோட்பாடுகளின் மூலம் ஹிந்துத்வத்தை பார்க்க விழைவது மேலும் மற்றைய கோட்பாடுகளுக்கு சாமரம் வீசும் வகையாக ஹிந்துத்வத்தைக் கரைப்பது போன்ற போக்குகளை காண நேர்கிறது.

  இதோ இன்னும் சில நாட்களில் தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் போல அஃப்சல் குரு சம்பந்தமாகவும் J&K சட்டசபையில் தீர்மானம் நிறைவேற உள்ளது. பஞ்சாபில் புல்லர் என்ற பயங்கரவாதிக்கு ஆதரவு பெருகுகிறது. ஸ்ரீ நகரிலிருந்து ஜம்மு வந்து சேருவதே பெரும் விஷயமாக இருக்கும் சிவிலியன்கள் மற்றும் ராணுவ துணைராணுவ வீரர்களுக்கு இது போன்ற தீர்மானங்கள் உரைக்கக்கூடிய விஷயங்கள். ஜீரணமாக முடியாதவை.

  ஆனாலும் விஷக்கடிக்கு மருந்துண்டே. விஸ்வாமித்ரரின் வ்யாசம் தெளிவாக தீர்க்கமான கருத்துக்களை முன்வைத்து விஷமுறிவு செய்துள்ளதே.

  \\\\\Yes, if the present trend continues, Tamilhindu may end up as a website peddling Dalit Literature without benefitting anyone.\\\\

  ஐயா, தவறு. வெட்டுப்புலி வ்யாசமும் அதன் மறுமொழியையும் வாசித்துப் பாருங்கள். பற்பல ஜாதியினரிடையே கருத்து வேறுபாடுகள் வெறுப்புகள் சண்டை சச்சரவுகள் இவற்றையெல்லாம் மீறி ஒருவரை ஒருவர் மதிக்க விழையும் பாங்கும் புரிய முற்படும் போக்குகளும் கூடத் தெளிவாகத் தெரிகின்றது.

  \\\\\\\\\\\\\மேலும் சில கட்டுரைகள் மற்றும் பல மறுமொழிகளின் மூலம் ஆன்மீகவாதிகளின் வெறுப்பையும், சில குறிப்பிட்ட சமுகத்தவரின் வெறுப்பையும்கூட சம்பாதித்துள்ளது தமிழ்ஹிந்து (மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய கட்டுரை மற்றும் சங்கர மடம் பற்றிய மறுமொழிகள் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்ல்லாம்).\\\\\\\\\\\\\\\ \\\\\\\ ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தாங்கிப் பிடித்துக்கொண்டு மற்றவரின் வெறுப்பை சம்பாதித்தால் அது நடக்காது.\\\\ அனைத்து சமூகத்தவரும் ஒன்றிணைந்த ஒரு தமிழ்-ஹிந்து சமுதாயத்தை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல.\\\\\\\\\\\\\

  உண்மை தான் ஐயா, பங்கு பெறும் வாசகர்கள் பலருக்கும் ஏதாவது ஒரு விஷயமாக தமிழ் ஹிந்து தளத்தின் பால் இதுபோலவே குறையிருக்கலாம். இவரின் வெறுப்பை சம்பாதித்துள்ளது அவரின் வெறுப்பை சம்பாதித்துள்ளது என்று எழுதியுள்ளீர்கள் அல்லவா. இதில் எல்லாம் சொல்லப்படாமல் ஆனால் தொக்கி நிற்கும் வேறொரு விஷயம் இவர் த்ருப்தி அடைந்துள்ளார் அவர் த்ருப்தி அடைந்துள்ளார் என்பதும் கூட.

  ஆப்ரஹாமிய மதங்களின் மனிதப்பண்பாட்டுகளுக்கெதிரான போக்குகளை சாடுவதில் எல்லா ஹிந்துக்களும் ஒன்றிணைவதையும் பாருங்கள்.

  தேசம் முழுதும் உலகம் முழுதும் வாழும் தமிழ் ஹிந்துக்களில் எல்லோருக்கும் எல்லாக் கருத்துகளிலும் இன்றைய நிலையில் ஒற்றுமை ஏற்படுவது என்பது சாத்யமான விஷயமன்று. மறுக்க முடியாத விஷயம் இங்கு பங்குபெறும் பற்பல சாதி, மாகாணங்கள் மற்றும் பற்பல தேசங்களைச் சார்ந்த அன்பர்களின் ஹிந்து ராஷ்ட்ரம் மற்றும் ஹிந்துத்வத்தில் உள்ள அக்கறை. அதனாலேயே இங்கு பலரும் தங்களது அன்றாட அலுவல்களினூடே சமயம் ஒதுக்கி இங்கே பங்களிக்கிறார்கள். மையக்கோட்பாடான ஹிந்துத்வத்தை சுற்றியே க்றைஸ்தவ இஸ்லாமிய அன்பர்கள் தவிர்த்து ஹிந்துக்கள் அனைவரும் தங்கள் வ்யாசங்களையும் உத்தரங்களையும் பதிவு செய்கிறார்கள் என்பது எனது தீர்க்கமான கருத்து.

  மிக மிகக் கடினமான ஒரு பணியை மிக மிகச் சிறப்பாகவே கத்தியின் மீது நடப்பதற்கொப்பாக பக்ஷபாதமில்லாது நடாத்தி வருகிறார்கள் தள நிர்வாகிகள் என்றே படுகிறது. வெற்றிவேல் பெருமான் பொறுமை மிகுந்த பக்ஷபாதமில்லாத தளநிர்வாகத்தினருக்கு குறைவில்லா மதியையும் நிறைந்த அருளையும் தர இறைஞ்சுகிறேன்.

  பாரத வந்தே மாதரம்.

 67. ஒரு இனம் ஆண்டாண்டு காலம் அடிமைப்படுத்தப்பட்டு, அநியாயதிற்குள்ளாக்கபட்டு, அடக்குமுறைகளுக்குட்பட்டு கிடந்தது. அதிலிருந்து விடுதலை பெற, உரிமைகளை மீட்டெடுக்க வழிதெறியாது விழி பிதுங்கி நிண்ட நேரத்தில். அவர்களுக்காய் குரல் கொடுத்து, உரிமையை பறித்தெடுக்க போராடியவர் இமானுவேல் சேகரன்.

  சுதந்திர போராட்ட தியாகி, இராணுவ வீரன் என தனது இளமை பருவம் தொட்டு போராட்ட களத்தை நோக்கி பயனித்தார் இமானுவேல். இரட்டை குவளை, நாய் குளத்தில் தண்ணீர் அருந்த அனுமதிக்கும் கூட்டம் மனிதன் தண்ணீர் எடுக்க தடைவிதிப்பதா? என்று ஆதிக்க சக்திகளை எதிர்த்து விவேகத்துடன் போராட்டத்தை தொடங்கினார். 1950-ல் “ஒடுக்கப்பட்டோரின் விடுதலை இயக்கம்” என்று ஆரம்பித்து ஒரு சில வருடங்களுக்குள் தன் சமூக பலத்தை அரசியல் சக்தியாக மாற்றினார். 1957-ல் நடந்த தேர்தலில் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான கடும் உழைப்பினால் தங்கள் இனத்தின் சக்தியை நிரூபித்தார்.

  அதன் பின் பல பிரச்சனைகள், சமரச கூட்டங்கள், சிறைகள் என கழிந்து கொண்டிருந்தன நாட்கள். 5-9-1957 அன்று லாவி என்னும் கிராமத்தில் குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. அதனால் ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண 10-9-1957 அன்று பணிக்கர் என்னும் உயர் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த இமானுவேல் வருகிறார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்ற போதிலும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக அங்கே தங்கிய இமானுவேல் அடுத்த நாள் 11-9-1957 பரமக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின் சுமார் 9 மணி அளவில் தன் சொந்த கிராமத்திற்க்கு புறப்பட்ட இமானுவேல் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அன்று முதல் தங்கள் சமூகத்திற்காக தனது உயிரை கொடுத்த வீரர்களின் பட்டியலில் சேர்ந்து தலித் சமூக மக்கள் மனங்களில் என்றும் மறையா இடத்தை பிடித்தார்.

  இதன் காரணமாக ஒவ்வொரு 9/11 போது இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு நாள் அமைதியான முறையில் நீண்ட காலம் நடைபெற்று வந்தது குறிப்பிடதக்கது. அதன் பின் சுமார் 4 வருடங்களாக 1000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மரியாதை செய்யும் நிகழ்சியாக உருவெடுத்தது.

  இதற்கு அரசியல் ரீதியான பல காரணங்கள் மறைந்து கிடக்கின்றன. பொதுவாகவே ஆண்டாண்டு காலமாக தேவர்-பள்ளர் பிரச்சனை வழக்கத்தில் இருந்து வருகிறது. எதேனும் விழாக்கள் நடத்தப்பட்டு மக்கள் அதிகமாக கூடும் காலங்களில் இது கலவரமாக வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

  அப்படியிருந்தும். தேவர்கள் தங்கள் இனத்தலைவரான் முத்துராமலிங்க தேவர் நினைவாக ஒவ்வொரு அக்டோபர்-2 அன்று தேவர் குருபூஜை என்று விழா எடுப்பதும். அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை அசிங்கபடுத்துவதும், அவர்களை வம்புக்கிழுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நேரங்களில் காவல் துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்ற போர்வையில் கலவரம் செய்பவர்களை கட்டுப்படுத்தாமல் தலித் மக்கள் வாழும் பகுதிக்குள் போலீஸை குவித்து வழக்கம் போல் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பேருந்து செல்ல தடை என பதற்றம் பற்றி கொள்ளும். ஆனாலும் அரசியல் தலைவர்கள் பாகுபடின்றி இப்பூஜையில் கலந்து கொண்டு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி செல்வர். அதில் ஜெ, ஸ்டாலின், காங்கிரஸ்காரர்கள், விஜயகாந்த், சரத்குமார் உட்பட அனைவரையும் அங்கு காணலாம்.

  இதற்கு மாற்றமாக தலித் மக்கள் சார்பில் இமானுவேல் சேகரனது நினைவு தினம் விமர்சியாக்கப்பட்டது. ஆனால் தேவர் குரு பூஜைக்கு கொடுத்த முக்கியத்துவமும், அந்தஸ்தும் இமானுவேல் சேகரனது குரு பூஜைக்கு கொடுக்கபடவில்லை. அதை எந்த அரசியல் கட்சி தலைவர்களும் கண்டுகொள்வது கூட இல்லை. தலித் கட்சி தலைவர்களைத் தவிர. இது அம்மக்கள் மத்தியில் குமைச்சலாக புகைந்து கொண்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது.

 68. எதையும் அதன் உண்மை வடிவத்தில் அணுகவும் என்றே கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். பொதுவான பார்வையில் பார்க்காதீர். 8 க்கும் மேற்ப்பட்டோர் சுட்டுக்கொல்லப்படுமளவுக்கு அங்கே என்ன கொடுமை நடந்து விட்டது? நாளை இவர்கள் சமூகத்தில் நிறையபேர் காவல் துறை மேலதிகாரிகளாக வந்தால் தேவர் ஜெயந்தி நிலைமை என்ன ஆகும்? நமக்கு சொல்லப்பட்ட வரலாறுகளெல்லாம் திரித்துக்கூரப்பட்டவையே! இவர்கலஎல்லாம் தலைவர்கள் என்று நம்பி அடுத்தவன் தாலி அறுப்பது காட்டு மிராண்டி தனம்….அரக்கத்தனம்… யாருமே அந்த சிறுவன் கொல்லப்பட்டது பற்றி எதுவும் சொல்லவேயில்லையே…. தேவரை பற்றி எழுதியது அவ்வளவு பெரிய குற்றமா? இதற்க்கெல்லாம் காரணம் உங்கள் ஜாதீய கண்ணோட்டமே…! ஏறத்தாழ 50 % இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்கப்படும் நம் சஹோதரர்களை புறக்கணித்துவிட்டு எப்படி நம் மதம் முன்னேறும்? மீண்டுவரும்?
  அவர்களை பள்ளன்,பறையன், சக்கிலியன் என புறக்கணித்துவிட்டு , அவர்கள் தன் மானம் வேண்டி கிறித்தவராகவோ, முஸ்லீமாகவோ மாறும் போது குத்துதே குடையுதே என்றால் எப்படி?

  பிற ஜாதியினரை கவனியுங்கள்… முஸ்லீம்களை மாமா, மச்சான் என்று (பயத்திலும் )அன்பு பொங்க அழைப்பர் , ஆனால் அவர் போன தலைமுறை பறையனாக, சக்கிலியனாக இருந்து மதம் மாறியிருப்பார். இவர்கள்தான் நமது சொந்த சஹோதரர்களை (தலித்துகளை) இழிவாக நடத்துவர். பிறகு தலித்துக்கு தன்மானமே இருக்காதா? உங்களை முஸ்லிம் களையும் இழிவாக நடத்த சொல்லவில்லை., தயவுசெய்து தலித்துகளையும் சமமாக நடத்துங்கள்…. நான் அடித்து சொல்லுவேன்… நாடார், கள்ளர், இன்னும் பிற தலித்துகள் கிறித்துவர்களாக பேர் கொண்டிருந்தாலும் பைபிள் ஐ கண்ணால் கூட பார்த்திருக்க மாட்டார்கள்… மனதளவில் இன்னும் ஹிந்துக்களே…

 69. விவேக்,

  தங்கள் கருத்தை நாம் முழுமையாக ஆமோதிக்கிறேன். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை. தலித்துகளுக்கு போதுமான அளவு அரசு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தனது சொந்த முயற்சியால் தான் முன்னேற முடியும். எந்த ஒரு பிராமணனும் இன்னொரு பிராமணன் வாழ்க்கைக்கு உதவுவது இல்லை. இது அவர்கள் சமுதாயத்தில் மட்டும் அல்ல. எல்லா சமுதாயத்திலும் இந்த நிலை தான். மற்ற சமுதாயங்கள் அரசியல் வாதிகளை நம்புவதில்லை.

  ஆனால் தலித் சமுதாயமோ அவர்களை அதிகம் நம்புகிறார்கள். அந்த சமுதாயத்தின் இந்த நிலைக்கு அவர்களை வழி நடத்தும் தலைவர்களும் முக்கிய காரணம். ஏனைய சமுதாயத்தினர் தனது வாழ்க்கை முன்னேற்றத்திர்காக பள்ளிகளை கட்டு பொழுது இவர்களும் செய்யலாமே?

  பணம் இல்லை என்று சொன்னால் சிரிப்பு தான் வருகிறது. தலித் சமுதாயத்தில் இருந்து அரசியல்வாதிகளோ அல்லது அரசு அலுவலர்களோ வருவதில்லையா? மற்ற சமுதாய அரசியல்வாதிகள் போல் இவர்கள் இலஞ்சம் வாங்குவது கிடையாதா? சும்மா அடுத்தவனை குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை. எந்த ஒரு சாதிக் கட்சியும் பாஜாகவை ஆதரிப்பது இல்லையே? ஏன்?

  இதற்காக அவர்கள் மதம் மாறினால் பிரச்சனை தீரும் என்று நினைத்தாள் அது வேறு மாதிரி திரும்பி ரூவாண்டா போன்ற நிலை தான் ஏற்படும்… தலித் சமுதாயத்திற்கு தேவை அவர்களை சரியான வழியில் நடத்தி செல்லக் கூடிய தலைவர்கள்…. திருமா வளவன் போன்ற அரசியல்வாதிகள் அல்ல….

  தலித் சமுதாயத்திற்கு போராடுகிறேன் என்று சொல்லும் இவர் தேவை இல்லாமல் எதற்காக இலங்கை தமிழருக்காக போராடுகிறேன் என்று ஊரை ஏமாற்ற வேண்டும். இவர் ஏன் தலித் சமுதாயத்திற்காக் ஒரு கல்லூரியை கட்டவில்லை. ஹிந்து அமைப்புகளுக்கு சொந்தமான பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அவர்கள் சக்திக்கு உட்பட்டு அவர்கள் வாழ்வை எவ்வளவு முன்னேற்ற முடியுமோ அத்தனை விசயங்களையும் செய்கிறார்கள். அதனால் தேவை இல்லாமல் ஹிந்து அமைப்புகளை குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை. ஹிந்து அமைப்பின் கட்டுபாட்டில் எந்த சாதிக் கட்சியும் இல்லை…

  ஆனால் பல சாதிகளில் கிறித்துவ மிஷினரிகள் மிக பலமாக ஊடுறுவியுள்ளன.

  தேசிய முன்னேற்றத்தில் நம்பிக்கை உள்ள பல அமைப்புகள் பல தன்னார்வ நிறுவனங்களை நடத்தி கொண்டு உள்ளன. விவரங்கள் கீழே..

  http://www.newsbharati.com/Sewa.aspx

 70. குளவியின் கட்டுரை ஒரு பொய் சமத்துவ கட்டுரை.

  “நம் ஆதீனங்கள், நம் பீடாதிபதிகள், நம் கோவில்கள் ஆகியவற்றில் நம் தலித் சமுதாயத்தினர் ஆதீனங்களாக, பீடாதிபதிகளாக, கோவில் தெய்வத் திருமேனிகளைத் தொட்டு வணங்கும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்.”

  முதலில் வேதங்களையும் அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களையும் அங்கிஹரித்து அதன் மேல் நம்பிக்கையும் இருந்தால்தான் இது சாத்தியம். வேதங்களை பழிப்பதே கொள்கையாக கொண்டவர்கள் ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் ஆவது இந்து மதத்திற்கு கேடு. ஹிந்து நம்பிக்கை வேத நம்பிக்கை பக்தியை போட்டும் வாழ்க்கை நெறியுடன் கூடிய குடும்பத்தில் வளர்ந்தவரானால் எந்த இனத்தவரும் அர்ச்சகர்கள் ஆஹ அனுமதிக்கலாம். அதே சமயம், இந்த ஒழுக்கம் இல்லாத பிராமண மக்களும் அர்ச்சகர் ஆக கூடாது என்பதில் அர்த்தம் உண்டு.

  “பிறப்பு அடிப்படையில் எங்கெல்லாம் ஆன்மிக-சமுதாய-சடங்கு அமைப்புகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவை தகுதி அடிப்படையில் என மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றப்படும் போது அவற்றில் தலித்துகளுக்கு – சலுகையாக அல்ல, உரிமையாக – முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்”
  தலித் இனத்தவருக்கு முன்னுரிமை என்பது மறுபடியும் பிறப்பு ரீதியில் ஆன பிரிவினையே!!. பிறப்பினால் தகுதி இல்லை என்பதில் சம்மதம் என்றால் அது எல்லாருக்கும் தானே பொது?

  இந்த விதண்ட வாதங்கள் எல்லாம் எதோ அர்ச்சகர்களும் வேதியர்களும் செல்வ செழிப்புடன் இருப்பது போல் எண்ணிக்கொண்டு எழுதபடுபவை. அவர்கள் போல் ஏழையாக பிறந்து பிறர் தரும் தருமத்தில் வேதம் பயின்று மனம் செய்ய பெண் கிடைக்காமல் அவதிப்பட்டு சொல்ப ஊதியத்திற்கு அர்ச்சகர் பணி செய்து பிற மக்களால் அவமதிக்கப்பட்டு, பணம் கொழிக்கும் ஆங்கில படிப்பிற்கு செல்லாமல் கடவுளுக்கு முறைப்படி ஆசார அனுஷ்டனதுடன் பணி செய்து கிடப்பது, ஒரு திடமான ‘conviction ‘ இல்லாவிடில் முடியாது. உண்மையில் பிராமணர்களை தவிர வேறு எவரும் இதற்கு முன்வர மாட்டார்கள். முன் வந்தால் நல்லதே. ஒரு இரண்டு அர்ச்சகர்களால் அனைவரையும் குறை கூறுவது சாதி வெறியின் அறிகுறி.

  pro -தலித் என்ற பெயரில் தேவர், பிராமணர் மற்றும் பிற சமுதாயத்தை பிழித்து எழுதுவது பலன் தராது. இப்படிபட்ட கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்ட கட்டுரைகளை வெளியிடுவது தமிழ் ஹிந்துக்கு இழுக்கே.

 71. பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தாறுமாறாகக் குளவி கொட்டியதை சுட்டிக்காட்டிய மதிப்பிற்குறிய ஸ்ரீ தமிழ்ச்செல்வன் அவர்கள் சுட்டியது மட்டுமின்றி ப்ரச்சனையின் முழுப்பரிமாணங்களையும் இதுவரை தலித்துகளுக்கெதிராக நிகழ்ந்த கலகங்களின் பின்னணிகளையும் அதில் குளிர் காய்ந்த சக்திகள் பற்றியும் ஹிந்து சமுதாயம் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன என்பது பற்றியும் பக்ஷபாதமில்லாது விஜயவாணி தளத்தில் தன் வ்யாசத்தில் பதிவு செய்துள்ளார். குளவி ஆராயாத பரிமாணங்களைச் சொல்லும் சில வாசகங்களை அவரது வ்யாசத்திலிருந்து கீழே பதிவு செய்துள்ளேன்.

  முழு வ்யாசமும் கீழ்க்கண்ட சுட்டியில்

  http://tamilhindu.com/2011/09/paramakudi-dalit-killings-some-thoughts/

  Dalits have been perennially facing discrimination in Tamil Nadu and the blame must be shared by

  1. Dravidian & Communist politicians

  2. Church & Christian NGOs and

  3. Dalit leaders.

  All of them exploit the dalits for self-aggrandizement.

  Social Justice cannot be achieved by mere freebies and reservation quotas. It can be truly achieved only by

  1. affirmative action ensuring the social recognition of oppressed classes

  2. taking so-called upper castes into confidence and acting as a bridge between them and the oppressed classes and

  3. improvement of educational and other infrastructures

  The state stillhas scores of worshipping places refusing entry to dalits, hundreds of manualscavengers, scores of caste walls separating dalits and OBCs/BCs/MBCs,two-tumbler system in hundreds of tea shops, separate burial grounds for dalitsand refusal of entry even in saloons! In certain villages, the dalits are not allowed towalk on the public road, wear chappals, ride bicycles, wear dhotis folded, weartowels on shoulders, use common wells and get clothes washed or ironed.

  Communists have their own way of playing caste politics. They always register their protest against Dravidian governments in the guise of fighting for oppressed people (scheduled castes). Ultimately they always end up making matters worse for the dalit community and spoiling the prevailing peace and harmony.

  The dubious role of the Church and Christian NGOs in most caste conflicts must be investigated. Evangelism and conversion activities are rampant in the state and conversion strategies vary from village to village depending upon the community-wise population percentage.

  In January 2010, a Hindu dalit, Sadaiyandi, was attacked and human excreta thrust inside his mouth by Christian Vanniars in Meikovilpatti village near Dindukkal.

  Pon Muthuramalinga Thevar served in Netaji’s INA. He was a nationalist and considered Hindu Nationalism and Hindu Spiritualism as his two eyes, which earned him the title Theyva Thirumakan (Divine Son). He had also served dalit causes. An example of his pan-community appeal was his joining the Dalits’ Temple Entry movement. He ably supported Vaidyanatha Iyer in his efforts to take dalits inside Madurai Meenakshi Amman Temple, and was respected by all communities.

  இந்த வ்யாசத்தின் தமிழாக்கம் தமிழ் ஹிந்துவில் ப்ரசுரமாக வேண்டும் எனவும் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

 72. இது குளவியின் அர்த்தமற்ற பேத்தல்களில் ஒன்று. தலித்துக்களை வேதம் படிக்க செய்து கோவிலில் அர்ச்சகராக்கி விட்டால் அவர்கள் முன்னேறி விடுவார்களா? தலித்துக்கள் சமமாக நடத்தப்பட்டு விடுவார்களா? முக்குலத்தோரும், கவுண்டரும், வன்னியரும், வேதம் படித்ததனால் தான் முன்னேறிய உயர் சாதியினராக கருதப்படுகிறார்களா?

  தலித்துக்கள் முன்னேற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதற்கு அவர்களுடைய பொருளாதார நிலையும், கல்வி அறிவும், இந்து சமயம் சார்ந்த அறிவும் மேம்பட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் மத மாற்ற சக்திகளிலிருந்து தப்ப முடியும்.

  வேதம் படித்தால் ஒருவன் உயர்ந்தவன் ஆகி விடுகிறான் என்றால், மற்ற தொழில் எல்லாம் உயர்ந்தவை இல்லையா? “சாதுர் வர்ணம் மயா ஸ்ரிஷ்ட்யம்” என்று கீதையில் கண்ணன் சொல்வதின் அர்த்தம் என்ன? “ச்வதர்மே நிதனம் ஸ்ரேய” என்பதின் அர்த்தம் என்ன?

  இந்த குளவி அறிவற்ற, பக்குவமற்ற, ஒரு ஜந்துவாக தெரிகிறது. இதுவும் இந்த களிமிகு கணபதி என்ற ஒன்றும் மத மாற்ற சக்திகளை விட மோசமானது என்றே தோன்றுகிறது. இந்த அரை வேக்காட்டு குளவியும், களிமிகு கணபதி என்ற பெயர் கொண்ட ஜந்துவும் துடைப்ப கட்டையால் அடித்து துரத்தப்பட வேண்டிய ஒன்று என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .

 73. Dweller,

  நீங்கள் சொன்னவற்றுள் பெரும்பாலானவை ஏற்கத்தக்கவையே. அப்படி இருந்தும் ஏன் சார் கீழ்க்கண்ட மாதிரி எல்லாம்?

  // இந்த அரை வேக்காட்டு குளவியும், களிமிகு கணபதி என்ற பெயர் கொண்ட ஜந்துவும் துடைப்ப கட்டையால் அடித்து துரத்தப்பட வேண்டிய ஒன்று என்பதில் எள்ளளவும் ஐயமில்லை . //

  இருவரும் சொல்வதை சாரங் தமிழ்ச்செல்வன் முதலானோர் எதிர்த்து விவாதம் செய்துள்ளனர். நீங்கள் சம்பிரதாய வாதியாக இருக்கிறீர்கள், நானும் அவ்வாறே. அதற்காக சம்பிரதாய வாதத்தில் இருக்கும் நியாயம் உண்மை நிலை என்ன என்பதைத் தெளிவாக communicate செய்யலாமே, “துடைப்பக் கட்டையால்” அடிப்பதை விட்டு?

  // அர்ச்சகராக்கி விட்டால் அவர்கள் முன்னேறி விடுவார்களா? //

  கண்டிப்பாக ஒத்துக் கொள்கிறேன். “யோவ் ஐயரே! நேரமாகுது… சீக்கிரம் அர்ச்சனையை/பூஜையை/மந்திரத்தைச் சொல்லி முடிக்க வேண்டியது தானே?” எத்தனை முறை இதைக் கேட்டிருக்கிறோம்.

 74. // இது குளவியின் அர்த்தமற்ற பேத்தல்களில் ஒன்று. தலித்துக்களை வேதம் படிக்க செய்து கோவிலில் அர்ச்சகராக்கி விட்டால் அவர்கள் முன்னேறி விடுவார்களா? தலித்துக்கள் சமமாக நடத்தப்பட்டு விடுவார்களா? //

  தலித்கள் ஆலயத்துள் வந்து வணங்குவது, வேதம் கற்பது, அர்ச்சகர்களாவது என்பது அவர்களுக்கு இந்துமதத்துக்குள் காலகாலமாக மறுக்கப் பட்டிருக்கும் சமய, கலாசார உரிமைகளை நியாயபூர்வமாக அவர்களுக்கு அளிக்கும் செயலின் ஒரு அங்கமேயாகும். இதற்கு என்ன “பொருளாதார” மதிப்பு என்று கேட்பது சாமர்த்தியமான கேள்வி அல்ல, அபத்தமான பேத்தல்.

  காந்தி செய்த சாதாரண செயல் பிரிட்டிஷாரின் தடையை மீறி உப்பு காய்ச்சியது. அந்தப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் உப்பு வரி பொருளாதார ரீதியாக பெரிய விஷயமாக இருக்கவில்லை (மற்ற வரிகள் அதன் இடத்தை எடுத்துக் கொண்டிருந்தன). இந்தியாவெங்கும் உப்பு காய்ச்ச ஆரம்பித்தபோது அறிவு ஜீவிகளும், சிந்தனையாளர்களும் அதை எள்ளி நகையாடினார்கள். ஆனால் அது இந்தியாவின் அந்தராத்மாவைத் தொட்ட ஒரு ”அடையாள” போராட்டம் என்று இன்று வரலாறு நிரூபித்திருக்கிறது. இந்திய மனதில் “உப்பு” என்பதன் இடத்தை உப்புவரிக்கென்றே மாபெரும் சுங்கவேலி கட்டிய பிரிட்டிஷாரும் , காந்தியும் எவ்வளவு துல்லியமாக புரிந்து வைத்திருந்தனர் என்பதையே அது காட்டியது. இது பற்றி ஜெயமோகன் எழுதியுள்ள ஒரு அபாரமான கட்டுரை – http://www.jeyamohan.in/?p=21029

  உப்பு போன்றே வேதம், கோயில், அர்ச்சனை ஆகியவற்றுக்கு இந்திய கலாசார வெளியில் ஒரு மாபெரும் சமூக மதிப்பும், அங்கீகாரமும் உள்ளது. தலித்துகளுக்கு இவற்றை வழங்குவது இந்து சமுதாயம் உரத்த குரலில் சமத்துவத்தை பறை சாற்றும் செயல். அதை உணர்ந்து குளவி சரியாகக் கொட்டியிருக்கிறது. அந்தக் கொட்டல் தான் உம்மைப் போன்றவர்கள் மனதில் உறைந்து விடக்கும் சாதீய விஷத்தை இப்படி நுரைதள்ளிப் பேசவைக்கிறது.

  // வேதம் படித்தால் ஒருவன் உயர்ந்தவன் ஆகி விடுகிறான் என்றால், மற்ற தொழில் எல்லாம் உயர்ந்தவை இல்லையா? “சாதுர் வர்ணம் மயா ஸ்ரிஷ்ட்யம்” என்று கீதையில் கண்ணன் சொல்வதின் அர்த்தம் என்ன? “ச்வதர்மே நிதனம் ஸ்ரேய” என்பதின் அர்த்தம் என்ன? //

  ஒரு நூறு வருடம் முன்பு, தலித்துகளுக்கு ஆலய பிரவேசம் வேண்டிப் போராடிய போது இதே போன்ற ஒரு சால்ஜாப்பு சொல்லப் பட்டது. “இவன்லாம் கோவிலுக்கு வந்து என்ன ஆகணும் இப்ப? காலைல கலைப்பையத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு போகும்போது கோபுரத்தைப் பார்த்து கன்னத்துல போட்டுண்டு போனாலே அவனுக்கு முக்தின்னு சாஸ்திரம் சொல்றது. அவன் ஏன் கோயிலுக்கு உள்ள வரணும்?”

  ஆனால் உண்மையான இந்துத்துவர்களான காந்தியும், வைத்யநாத ஐயரும், நாராயண குருவும், சாவர்க்கரும் இந்த சாதுவான குரலின் பின் இருந்த சாதிய வெறியை, மானுட வெறுப்பை சரியாக அடையாளம் கண்டு அதை எதிர்த்துப் போராடினார்கள். பிறகு நடந்தது வரலாறு.

  இன்று அதே குரலின் எதிரொலியைத் தான் வெட்கமில்லாமல் தமிழ்ஹிந்து தளத்தில் Dweller என்ற பெயரில் உலவும் சாதிவெறி மிருகம் கிறீச்சிடுகிறது. அப்போதும் இந்த மிருகத்தைத் துரத்தவேண்டும் என்று சொல்ல எனது இந்து மனம் ஒப்பவில்லை. இத்தகைய மிருகங்களின் கோரைப்பற்கள் பிடுங்கப் பட்டு அவை வீட்டு விலங்குகளாக சமுதாயத்தின் ஏதேனும் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் திருந்தி வாழ அன்னை காளி அருள் புரியட்டும்.

 75. அன்புள்ள திரு ஜடாயு,

  // ஒரு நூறு வருடம் முன்பு, தலித்துகளுக்கு ஆலய பிரவேசம் வேண்டிப் போராடிய போது இதே போன்ற ஒரு சால்ஜாப்பு சொல்லப் பட்டது. “இவன்லாம் கோவிலுக்கு வந்து என்ன ஆகணும் இப்ப? காலைல கலைப்பையத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு போகும்போது கோபுரத்தைப் பார்த்து கன்னத்துல போட்டுண்டு போனாலே அவனுக்கு முக்தின்னு சாஸ்திரம் சொல்றது. அவன் ஏன் கோயிலுக்கு உள்ள வரணும்?” //

  “அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே” என்று முக்தியையே வேண்டாம் என்று விலக்கி ஆலய சேவையையே அனைத்தையும்விட உயர்ந்த புருஷார்த்தமாகக் (supreme goal) கருதும் கண்ணோட்டம் இருக்கும்பொழுது இப்படி அவர்கள் கூறுவது வேடிக்கையையும் வியப்பையும் தருகிறது.

  உங்கள் ஆவேசத்தைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

  // வேதம், கோயில், அர்ச்சனை ஆகியவற்றுக்கு இந்திய கலாசார வெளியில் ஒரு மாபெரும் சமூக மதிப்பும், அங்கீகாரமும் உள்ளது. //

  வேதம் ஓதி வைதிகச் சடங்கு பணியில் இருப்பதும், அர்ச்சகப் பணியில் இருப்பதும், மடாதிபதி பணியில் இருப்பதும் அதிகார பீடங்களாகக் (power houses) காண என்னால் இயலவில்லை. அதிகார பீடம் என்பதே ஒரு ஆபிரகாமியக் கண்டுபிடிப்பு என்று நினைக்கிறேன் (pope, caliph போன்று). இத்தகைய போக்கு நமது மடங்களிலும் கோயில்களிலும் புகுந்திருப்பது வருத்தத்திற்குரியதே.

  சமூக மதிப்பும் அங்கீகாரமும் அனைத்துத் தொழில்களுக்கும் சமமாகத் தான் வழங்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.

  உலக விஷயத்தில் பற்றின்மையும், புலனடக்க-ஆசார அனுஷ்டான, பகவத் விஷயத்தில் தீராத பற்றுள்ளமையும் அர்ச்சகர், பீடாதிபதி, வேதியர் ஆகிய தொழில்களுக்கு இன்றியமையாதவை என்பது பல சம்பிரதாய வாதிகளின் உண்மையான அக்கறையாக இருக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் அவர்களில் சிலர் இத்தகைய அக்கறையை (scrutiny) பிறப்பால் பிராம்மணர்கள் என்று கூறப்படும் பிள்ளைகளின் விஷயத்தில் காட்டுவதில்லை என்பதையும் தீராத வருத்தத்துடன் இங்கு விண்ணப்பிக்கிறேன். இதில் முதலில் கூறப்பட்டதற்கு, அத்தகைய அனுஷ்டானத்தில் உயர்ந்த தலித் அர்ச்சகர்களை உருவாக்குவதைப் புரட்சிவாத ஹிந்து இயக்கங்கள் உருவாக்கி அவர்களையே முன்னிறுத்துவது அவசியம். இரண்டாவதாகக் கூறப்பட்டதற்குக் கண்டனமும் சுட்டிக்காட்டி மன்னிப்பு வாங்குவதும் அவசியம். இதுவே நல்ல ராஜதந்திரம் என்பது என் கருத்து.

  பொதுவாக, நம் ஹிந்து சமூகத்தில் சில sensitive விஷயங்கள் குறித்து பலவிதமான கொள்கைகள் நிலவி வருகின்றன. There is a spectrum of beliefs and ideologies with regard to this. பொதுவில் மனிதநேயமும் சமத்துவமும் பாராட்டுபவர்களிடம் கூட இத்தகைய கருத்து வேற்றுமையைக் காண்கின்றோம். “இந்த விஷம் கக்கும் சாதீயப் பாம்புகளுடன் நாம் எதற்குச் சமரசம் செய்ய வேண்டும்?” என்றும், “ஆசார அனுஷ்டானமில்லாத தான்தோன்றிப் பண்டாரப் பரதேசிகளுடன் நாம் எதற்கு உரையாட வேண்டும்?” என்றும் கருதி ஒருவரையொருவர் புறந்தள்ளுவது ஹிந்து சமூகத்திற்கு மிகவும் அபாயகரமான அரசியல் என்பது எனது தாழ்மையான கருத்து.

  மனிதநேயம் கெடாத வரை, மனித உரிமை கெடாத வரை, அனைத்து ஹிந்துத் தரப்பினருடன் ஒன்று கூடுவதே நல்ல அரசியல். (இதற்கு மேலே சொல்லப்போவது ஆங்கிலத்தில் தான் தெளிவாகச் சொல்ல வருகிறது – இதற்காக மன்னிக்கவும்).

  In my humble opinion, Hindu revolutionists have to wake up to the fact that there is a very real and happening neo-sampradAya vAda revolution due to the advent of internet and free online resources. These types hold on to a “traditionalist” view with regard to several things.

  The Hindu revolutionist has in their mind a Hindu utopia which is free of varna/jati distinctions and sampradAya vAdins, while the utopia of the the neo-champion of traditionalism is full of people who are devoted to their kula dharma etc while at the same time amicable to all fellow human beings.

  இந்த இரண்டு utopia-க்களும் நடைமுறையில் சாத்தியமல்ல என்பதை இரு தரப்பினரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

  சம்பிரதாய வாதிகளுக்கு நாம் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டியது – திருப்பாணாழ்வார் கதை, இராமானுஜர் கதை, ஸ்ரீதர ஐயாவாள் கதை, கோபாலக்ருஷ்ண பாரதி கதை.

  The society will naturally and organically gravitate towards what they see is the more favorable of these two sides. இவ்விஷயத்தில் வாதப்-பிரதிவாதங்கள் நடைபெறட்டும். எந்த இடத்தில் நியாயம் இருக்கிறதோ அந்தப் பக்கம் மக்கள் தாமாகப் போவார்கள்.

 76. \\\\\\இந்த அரை வேக்காட்டு குளவியும், களிமிகு கணபதி என்ற பெயர் கொண்ட ஜந்துவும் துடைப்ப கட்டையால் அடித்து துரத்தப்பட வேண்டிய ஒன்று என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .\\\\\\\

  உத்தரங்கள் மட்டுறுத்தப்பட்ட பின்பே வெளியிடப்படுகிறது என்ற பின்பும் இது போன்ற பண்பாடற்ற உத்தரங்களை திருத்தம் கூட செய்யாது வெளியிடல் தவறு. மாற்று கருத்துகளை மறுப்பதற்கு முன் மதிப்பதற்கு முதலில் கற்றுக் கொள்வோம். ஸ்ரீ தமிழ்செல்வன் அவர்கள் ஹிந்துக்களில் அனைத்து ஜாதியினரும் ஒன்றிணைந்து எப்படி அந்நிய சக்திகளை எதிர் கொள்ள வேண்டும் என பதிவுகள் செய்துள்ளார்.

  மேற் கண்ட உத்தரங்கள் சமுதாயத்தைப் பிளப்பதன்றி வேறென்ன செய்யவியலும்

  சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
  அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கியெழு
  மறத்தை நிலை காணும்!

  முகந்தெரியா பெயர்களில் ஒளிந்துகொண்டு பண்பாடற்ற கருத்துக்களை வெளியிடுபவர்களை குத்தி நிற்கும் வெற்றிவேல் பெருமானின் வேலாயுதம் தடுத்து நிறுத்தட்டும். வெற்றிவேல் அறத்தை நிலை நாட்டட்டும். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். ஆனால் தர்மமே வெல்லும்.

  சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
  செகுத்தவர் ருயிர்க்குஞ் சினமாகச்

  சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
  திருப்புகழ் நெருப்பென்றறிவோம் யாம்

  சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலன் “dweller” என்ற பெயரிலும் இன்ன பிற முகந்தெரியா பெயர்களில் காழ்ப்புமிழ்பவர்கட்கு நன்மதி அருளட்டும்.

 77. தலித்துகள் வேதாகமங்கள் பயின்று கோவில் அர்ச்சகர்களாக வரவேண்டும். ஆனால் ஸ்ரீ தமிழ்ச்செல்வனின் வ்யாசத்தில் இன்னும் பல இடங்களில் தலித்துகளின் ஆலயப்ரவேசம் கூட கேள்விக்குறியாக்கப்பட்ட அவலத்தை பதிவு செய்துள்ளாரே. சாய் கடைகளில் ரெட்டை தம்ளர், பொதுவீதியில் பாதரக்ஷை அணிந்து செல்ல தடை, க்ஷவரக் கடைகளில் ஜாதி வித்யாசங்கள், சைக்கிளில் செல்ல தடை இவ்வளவு ஏன் இறந்த பின் பிணத்தைப் புதைப்பதில் கூட சண்டை சச்சரவுகள். இவையெல்லாம் இருபத்தோராம் நூற்றாண்டில்.

  ஆலயப்ரவேசம் பற்றி ஸ்ரீ தமிழ்ச்செல்வனின் பதிவு :-

  Similarly, in Kanthampatty village near Omalur, Salem district, Hindu Vanniars have been refusing entry for Hindu dalits inside the Draupathi Amman Temple for years. Thirumavalavan despite being closely acquainted with Vanniar leader and PMK (Pattali Makkal Katchi) founder Dr Ramadoss (they jointly run an organization called Tamil Protection Movement) didn’t bother to solve the problem. Both kept the issue alive with the aim of securing their votebanks. Finally public pressure forced Thirumavalavan to approach the High Court, which allowed entry for dalits. (22).

  தினசரி வாழ்க்கை நடத்துவது கூட தலித்துகளுக்கு எவ்வளவு கடினம் என்பதை பதிவு செய்துள்ளார். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட குறைவிருக்குமோ? ஆப்ரஹாமியரும் கம்யூனிஸ்டுகளும் நல்ல அறுவடை செய்ய வாய்ப்புகளைக் களைவது காழ்ப்பின்றி ஒற்றுமை மிக வாழ ஹிந்து சமுதாயம் முனைந்தாலன்றி சாத்யமன்று. இது ஒருவர் மேல் ஒருவர் கல்லடி சொல்லடி கொடுப்பதன் மூலம் நிச்சயமாக நடக்கக் கூடிய காரியமும் அன்று. வைத்யநாத அய்யரும் நாராயண குருவும் தெய்வத்திருமகன் பசும்பொன்முத்துராமலிங்கத்தேவரும் ஹிந்து சமூஹம் ஒன்றிணைய பாடுபட இயலும் என்றால் இன்றைய தலைமுறையால் ஏன் முடியாது?

 78. துடப்பக்கட்டை, மிருகம், கோரைப்பற்கள், துரத்தப்படல் —— என்னே பதப்ப்ரயோகங்கள். வசவுகள் மற்றும் பிரதி வசவுகள். சமுதாயத்தை திருத்துவது சுமுதாயத்தை ஒன்றிணைப்பது எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. உத்தரமும் பிரத்யுத்தரமும் பகிரும் வாசகர்கள் நாம் பண்பாடு மிகுந்த சனாதன தர்மத்தின் பிரதிநிதிகள் என்ற பொறுப்பை உணர்ந்து உத்தரம் அளிக்க விக்ஞாபிக்கிறேன். நான் வாசிப்பது உத்தரங்கள் மட்டுறுத்தப்படும் தமிழ் ஹிந்து தளம் தானா அல்லது உத்தரங்கள் மட்டுறுத்தப்படா தனி நபர் ப்ளாக் போன்ற ஒரு தளமா என்ற சம்சயம் எழுகிறது.

 79. ஜடாயு

  ///தலித்கள் ஆலயத்துள் வந்து வணங்குவது, வேதம் கற்பது, அர்ச்சகர்களாவது என்பது அவர்களுக்கு இந்துமதத்துக்குள் காலகாலமாக மறுக்கப் பட்டிருக்கும் சமய, கலாசார உரிமைகளை நியாயபூர்வமாக அவர்களுக்கு அளிக்கும் செயலின் ஒரு அங்கமேயாகும். ///

  dweller எழுதியது கண்டு வேதனைப்பட்டேன். தங்கள் மறுமொழி கண்டு சமாதானமடைந்தேன். எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

 80. //..குளவியும், களிமிகு கணபதி என்ற பெயர் கொண்ட ஜந்துவும் துடைப்ப கட்டையால் அடித்து துரத்தப்பட வேண்டிய ஒன்று என்பதில் எள்ளளவும் ஐயமில்லை …//

  தலித்துகளுக்குக் கோயில்களில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று முன்பு சொன்னேன். Dweller அதி அற்புதமான சம்பிரதாயவாத விளக்கத்தை அளித்து என் அறிவீனத்தைத் திருத்திவிட்டார். அவருடைய இந்தக் கமெண்ட் என் மனத்தை மாற்றிவிட்டது. இப்போது என் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறேன்.

  எவ்வளவோ கொடுமைகள் செய்யப்பட்ட பின்பும் இந்து தர்மத்தை விட்டு விலகாமல் உறுதியாக இருக்கும் தலித்துகள் நம் தர்மத்தைக் காக்கும் தெய்வங்கள்.

  தங்கள் சாதி மேட்டிமை எனும் கீழ்த்தரக் குணத்தை அழிக்க அந்தத் தெய்வங்களுக்கு ஆகம விதிப்படி கோயில்கள் கட்டி, அத்தெய்வங்களை பிரிட்டிஷ் பிராமண சாதியார் உண்மையான பக்தியோடு தொழுது ஒழுக வேண்டும்.

  பிரிட்டிஷ் பிராமணர்கள் இந்தத் தலித் தெய்வங்களினை மூன்று வேளைகளிலும் ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள் செய்து தங்களது தவறுகளுக்குத் தண்டனை தருமாறும், தங்கள் அகம்பாவம் அகலுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும். பார்ப்பனீயவாதம் எனும் கசடு தங்களிடம் இருந்து அகல உண்ணா விரதம் இருந்து வேண்ட வேண்டும். வேதங்கள் கற்றலும், கற்றுவித்தலுமாக இருந்தவர்கள் வெள்ளைக்காரன் தூக்கி எறிந்த எச்சில் காசுக்காகத் தங்கள் தர்மத்தைத் தூக்கி எறிந்ததை எண்ணி வெட்கப்பட வேண்டும். அந்த தலித் தெய்வங்களின் வாழ்வில் இருந்து உண்மைகள் கற்றுத் தங்களைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.

  மாறிய என் கருத்துக்கு ஏற்ப, அந்தக் கோயில்களில் இட ஒதுக்கீடே கூடாது. பிரிட்டிஷ் பார்ப்பனர்களுக்கு மட்டுமே அந்த தலித் தெய்வங்களின் முன் தண்டனிடும் சேவை அளிக்கப்பட வேண்டும். இல்லை, மற்றவர்களுக்கும் இட ஒதுக்கீடு என்று மிகவும் வற்புறுத்தினால், ஒழிந்து போங்கள் என்று விட்டுக் கொடுக்கலாம். ஆனால், அந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்து தங்கள் மனத்தில் உள்ள மாத்சர்யங்களைக் கழிக்கும் பணி பார்ப்பனீயவாதம் பேசுகிற பிரிட்டிஷ் பிராமணர்களுக்கு மட்டுமே தரப்பட வேண்டும். (பிரிட்டிஷ் பிராமணர்கள் = தங்களைப் பிறப்பின் அடிப்படையில் பிராமணர் எனச் சொல்லும் அனைவரும்.)

  என்னை ஒரு ஜந்து என்று Dweller சொல்லுகிறார். மெக்காலேவின் கள்ளப் பிள்ளையாக இருப்பதைவிட பாரத மாதாவின் புத்ரனான ஒரு ஜந்துவாக, பாரத மாதாவின் புத்ரர்களான தலித்துகளை தனக்கு இணையாக மதிப்பவனாக இருப்பதுதான் எனக்குத் திருப்தியாக இருக்கிறது.

  அந்த திருப்தி இல்லாதவர்கள் அவர்கள் அப்பனான மெக்காலேவிடம் போய் பிராது கொடுங்கள்.

  .

 81. அன்புள்ள ஆசிரியர் குழுவிற்கு,

  Dweller இன் மறுமொழியையும் அதற்குப் பதிலாக வந்த மறுமொழிகளையும் தயவு செய்து நீக்கி விடுங்கள். எள்ளளவும் அம்மருமொழிகளைப் பதித்ததில் தமிழ் கலாச்சாரத்துக்கோ ஹிந்துத்துவத்திற்கோ பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கோ பயன்படாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இத்தளத்தில் என்னுடைய இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டு பங்களிப்பில் இம்மறுமொழிகளைப் படித்ததால் வந்த அளவிற்கு ஒருபொழுதும் இவ்வளவு மனம் வருந்தியதில்லை.

 82. // இந்த குளவி அறிவற்ற, பக்குவமற்ற, ஒரு ஜந்துவாக தெரிகிறது. இதுவும் இந்த களிமிகு கணபதி என்ற ஒன்றும் மத மாற்ற சக்திகளை விட மோசமானது என்றே தோன்றுகிறது. இந்த அரை வேக்காட்டு குளவியும், களிமிகு கணபதி என்ற பெயர் கொண்ட ஜந்துவும் துடைப்ப கட்டையால் அடித்து துரத்தப்பட வேண்டிய ஒன்று என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .//

  அக்கிரஹாரத்துக்குள் அரைடவுசரோடு நுழைந்த ராப்பிச்சைக்காரன் தயிர் சாதத்துக்கு கருவாட்டுக்குளம்பு கேட்டால் மடிசார் பாட்டி விடும் வசவைப் போல் மோசமாக இருக்கிறது.

 83. //வேதங்கள் கற்றலும், கற்றுவித்தலுமாக இருந்தவர்கள் வெள்ளைக்காரன் தூக்கி எறிந்த எச்சில் காசுக்காகத் தங்கள் தர்மத்தைத் தூக்கி எறிந்ததை எண்ணி வெட்கப்பட வேண்டும்//

  தங்களது இந்த வரிகள் தேவையற்றவை என்று நான் கருதுகிறேன். முதலில் ஒரு முக்கியமான விசயத்தை நாம் மறந்துவிட்டு பேசுகிறோம். அனைத்து பிராமண்ர்களும் கருவரைக்குள் செல்ல முடியும் என்று யார் சொன்னது. ஒரு குறிப்பிட்டவர்கள் மட்டுமே கருவரைக்குள் சென்று திருப்பணி செய்யும் உரிமை உள்ளது.

  காசுக்காக தான் அவர்கள் செய்தார்கள் என்பதை முழுமையாக ஏற்று கொள்ள முடியாது. பிராமண்ர்கள் பிச்சை எடுத்து வாழ்பவர்கள். அவர்களுக்கு பிச்சை இட வேண்டியது பிற இனத்தவரின் கடமை. முகலாய மற்றும் கிறித்துவ ஆதிக்கத்தின் காரணமாக நிலை குழைந்த பிராமண சமூகம் தங்களை காப்பாற்றி கொள்ள வேறு வழியின்றி இது போன்று செய்ல்களில் செய்ய நேர்ந்து இருக்கலாம்.

  முதலில் dweller என்பவர் ஹிந்து தானா என்பதிலேயே எனக்கு சந்தேகம்…ஏன் எனில் ஹிந்து உணர்வு உள்ளவர் எவறும் இது போன்று எழுத மாட்டார்கள். அதுவும் நாகரீகற்ற இது போன்ற விமர்சனத்தை தோழர்களிடம் தான் வரும் என்பது தாங்கள் அறியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

  அதுவும் தவிர மூச்சுக்கு முன்று முறை தேவர் சமூகத்தை குற்றம் சொல்லும் மக்கள் அவர்கள் படும் கஷ்டங்களை பற்றி வாய் திறப்பது இல்லை. தலித்துக்கு பிரச்சனை என்றால் ஓடி வரும் இயக்கங்கள், தேவர் இனத்தை சேர்ந்த்வர். பாதிக்கப்பட்டால் எதுவும் பேச மாட்டார்கள். இருவர் மீதும் தவறு இருக்கிறது.

  நீங்கள் சொல்வதை பார்த்தால் பிற சமுதாயங்கள் எல்லாம் வளமோடு வாழ்வது போல அல்லவா உள்ளது. dweller தான் வரம்பு மீறி பேசுகிறார் என்றால் நீங்களுமா?

  \\(பிரிட்டிஷ் பிராமணர்கள் = தங்களைப் பிறப்பின் அடிப்படையில் பிராமணர் எனச் சொல்லும் அனைவரும்.)

  இதை நாம் முழுமையாக ஏற்கிறேன். ஆனால் எதற்கு எடுத்தாலும் பிராமணர்களை வம்புக்கு இழுப்பது தேவையற்ற செயல்.

 84. ஆம். திரு கந்தர்வன் சொல்வது சரிதான். தயவு செய்து கோபத்தில் எழுதப்பட்ட மறுமொழிகளை நீக்கி விடுங்கள்.
  இதைப்படித்தபோது மகாபாரதப்போர் முடிந்த பின் ஒரு முனிவர் ” ஸ்ரீ கிருஷ்ணரின் குலத்தவர்கள் தங்களுக்குள் சண்டை இடட்டும்” என்று சாபம் கொடுத்தது ஞாபகம் வருகிறது,. இது ஒரு வேளை பாரதர்கள் அனைவருக்குமான சாபமோ என்ற வேதனை எழுகிறது..
  கோவில்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில், நாடே நாளை என்னாகுமோ என்பதுபோல் அழிவு சக்திகள் ஆரவாரம் செய்யும் நிலையில் இந்தக்கோபங்கள் நம்மை எதிர்ப்பவர்க்குத்தான் லாபம்.
  சரவணன்

 85. திருப்பராய்த்துறை ராமக்ருஷ்ண தபோவனத்தில் ஒருமாதம் சங்கத்தின் சிக்ஷாவர்க பயிற்சி பெற்றபோது வேதமந்த்ரங்களை சொல்லித்தந்தவரும் சொல்பவர்களான ஸ்வயம்சேவகர்களும் என்ன ஜாதி என்று யாரும் பார்க்கவில்லை. அது சங்கம் அளித்த ஸம்ஸ்காரம். தலித் சஹோதரர் என்ன, வேதங்கற்க ஆசைப்படுபவர்கள் யாருக்கும் தமிழகத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்ற கருத்துப் பகிர்வுகள் ச்லாக்யமே.

  ஆனால், பரமக்குடியில் நிகழ்ந்த கலவரங்களுக்கு தலித்துகளுக்கு வேதங்கற்பதில் உள்ள ப்ரச்சினைகள் காரணமா? வ்யாசத்தையும் உத்தரங்களை வாசிக்குங்கால் அப்படித்தான் தோன்றுகிறது. மிக விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டா ஸ்ரீ தமிழ்ச்செல்வனின் வ்யாசத்தில் இது சம்பந்தமாக ஒரு வாசகம் கூட இல்லாதது இவ்விஷயம் முக்யமான விஷயமாயினும் பரமக்குடி ப்ரச்சனையுடன் சம்பந்தப்படாதது எனத்தெரிகிறது.

  தலித்துகளுக்கும் மற்றைய ஹிந்துக்களுக்கும் சண்டைகள் மூட்டி விட்டு அதில் குளிர் காய்ந்தும் அச்சண்டைகளை மதமாற்றப்பித்தலாட்டங்களுக்கு ஆதாரமாக பயன் படுத்த விழையும் ஆப்ரஹாமிய சக்திகளுக்கு நிகழ்ந்த கலவரங்களில் பங்கில்லையா?

  நிகழ்ந்த சண்டைகளை ஆதாரமாக வைத்து ஓட்டு வங்கிகளை ஸ்திரப்படுத்த முனையும் த்ராவிட கட்சிகளுக்கும் ஜாதிவாத கட்சிகளுக்கும் நிகழ்ந்த சண்டையில் பங்கில்லையா? ஜாதிஹிந்துக்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே கலவரம் நிகழ்ந்ததா அல்லது நிகழ்த்தப்பட்டதா?

  ஸ்ரீ வைத்யநாத அய்யருடன் தோளொடு தோள் கொடுத்து தலித்துகளின் ஆலயப்ரவேசத்திற்காக முனைந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை தேசியத்தையும் ஹிந்து மதத்தையும் தன் இரு கண்கள் போல் பாவித்த அந்த மாமனிதரை ஒரு ஜாதிவாதியாக இந்த வ்யாசம் சித்தரித்தது சரியா?

  கலவரம் நிகழ்ந்த இடமான பரமக்குடியில் ஜாதிஹிந்துக்களிலும் தலித்துகளிலும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள தயாராக உள்ள மனிதர்கள் மட்டும் தான் உள்ளனரா? பரமக்குடியில் ஜாதிஹிந்துக்களிலும் தலித்துகளிலும் ஒருவரை ஒருவர் அரவணைத்து சஹோதர பாவத்துடன் உள்ள மனிதர்கள் அறவே இல்லையா?

  ஹிந்து சமுதாய ஒற்றுமை என்பது ப்ராம்மண ஜாதியினர் எனப்படுபவரும் தலித்துகள் எனப்படுபவரும் மட்டும் தான் சார்ந்ததா?

  என்னுடைய கேள்விகள் பாமரத்தனமாக இருக்கலாம்? ஆனால் என் கேள்விகளில் இருக்கும் அதே த்வனி மதிப்பிற்குரிய ஸ்ரீ தமிழ்ச்செல்வன் அவர்களின் கேள்விகளிலும் கண்டேன். வெறும் கேள்வி கேட்டதோடு நிற்காது பரமக்குடி கலவரம் மட்டுமின்றி இது வரை நிகழ்ந்த கலவரங்களின் பின்னணிகளை மிக விரிவாக ஆராய்ந்து இது சம்பந்தமான வ்யாசத்தை விஜயவாணி தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட ( தவறு – அடிப்பதற்காக ஜாதிவாத இயக்கங்களாலும் த்ராவிட இயக்கங்களாலும் மற்றும் ஆப்ரஹாமிய மிஷ நரிகளாலும் தூண்டிவிடப்பட்ட) ஜாதிஹிந்துக்களும் தலித் சஹோதரர்களும் இருவருமே நமது சஹோதரர்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக வ்யாசத்தில் அவர் பதிவு செய்துள்ளார். ஊர் இரண்டு பட கூத்தாடிகளுக்கு எப்படி கொண்டாட்டம் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

  எப்படி நகரங்களில் படித்து வாழும் நமது தலித் சஹோதரர்களுக்கு ஹிந்து மத சாஸ்த்ராதிகள் படித்து மற்ற ஹிந்துக்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற ஞாயமான ப்ரச்சினை உள்ளதோ அது போன்றே – தவறு அதை விட மிக அதிகம் மனவேதனை தருவதானதும் மிகச்சீக்கிரமாக சரிசெய்யப்பட வேண்டியதானதும் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படும் நிலையில் மிகக் கொடுமையாக தங்கள் தினசரி வாழ்வை நடாத்தி வரும் தலித் சஹோதரர்களின் வாழ்வில் விளக்கேற்ற முனைவது ஒரு சில ஜாதியினரின் கடமை அல்ல ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயத்தின் கடமை.

  கடைந்தெடுத்த வசவுகளால் ப்ராம்ஹணரையும், தலித்துகளையும், ஜாதிஹிந்துக்களையும் இழித்துப்பழிப்பதுடன் ப்ரச்சினை முடிந்து விடுமா? பேசிப்பேசி பொழுது கழியலாம். எழுதியெழுதி பக்கங்கள் நிரப்பப்படலாம். அனைத்து ஹிந்துக்களிடையே பரஸ்பரம் அன்பும் பண்பும் உண்டாக வழியென்பது ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூஹப் பணிகள் செய்வது மூலமே சாத்யம் என்பது சங்கம் கண்ட அருமருந்து. நிதம் சங்கப்பணி செய்ய முடியாதவர்கள் கூட சேவாபாரதி, விச்வ ஹிந்து பரிஷத், தேசிய கல்விக்கழகம், வனவாசி கல்யாண் ஆச்ரம் போன்ற எண்ணற்ற சங்கத்தின் விவித கிளைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கையில் நமது ஹிந்து சமூஹம் எப்படி ஆலவ்ருக்ஷம் போன்றது என்பது பங்கேற்பவர்க்கு தெரியவரும். இங்கு பங்கேற்கும் பல நண்பர்கள் முன்னமே சமுதாயப்பணிகளில் ஈடுபட்டிருக்கலாம். வாய்ப்பில்லாதவர் உடன் இப்பணிகளில் பங்கேற்க விக்ஞாபிக்கிறேன்.

  பொதுப்பேச்சுகளில் கண்யமிக பேசவேண்டும் அறவே வசவுகள் தவிர்க்கப்படவேண்டும் என்பது சங்கத்தினர் அளித்த பயிற்சி. எனவே வசவுகள் வாசிக்கையில் ச்ருதியில்லாது கர்ணகடூரமாக கேழ்க்கப்படும் சங்கீதம் கேழ்ப்பது போன்ற ஒரு அசுசி ஏற்பட்டு விடுகிறது. கண்யமில்லாக் கருத்துகளைத் தவிர்க்க வேண்டுகிறேன்.

  இப்போதெல்லாம் புதுப்புதுப் பெயர்களில் விஷமத்தனமாக கருத்துப் பரிமாற்றம் செய்பவர்கள் பெருகுதல் தெரிகிறது. ட்வெல்லரின் மற்றும் அந்த நபரின் கருத்துக்கு உத்தரமளித்த கருத்துகளை நீக்குமாறு விண்ணப்பிக்கிறேன். கருத்து வேறுபாடுகளினூடே நுழைந்து வெறுப்புகள் விதைக்க விழையும் மிஷ நரிகளுக்கும் ட்வெல்லர் போன்றவர்களுக்கும் இடையில் வித்யாசம் இருப்பதாகத் தெரியவில்லை. வெற்றிவேல் பெருமான் விஷமிகளுக்கு ஸத்புத்தி அருளட்டும்.

  மீண்டும் ஸ்ரீ தமிழ்ச்செல்வனின் மிக விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்ட வ்யாசத்தை தமிழாக்கம் செய்து தமிழ் ஹிந்துவில் ப்ரசுரம் செய்ய விக்ஞாபிக்கிறேன். நண்பர்களை அந்த வ்யாசம் வாசிக்க கோருகிறேன். ஹிந்துக்களிடையே அன்பும் பண்பும் பெருக அவுணர்களை அழித்த வெற்றி வேல் பெருமான் கருணை புரியட்டும்.

 86. @Krishnakumar

  முகந்தெரியாத பெயரில் ஒளிந்து கொண்டு எழுதுவதாக என்னை விமர்சித்துள்ளீர்கள். இங்கு எழுதி வரும் குளவி, ஜடாயு, களிமிகு கணபதி ஆகியோரின் பெயர்கள் எல்லாம் அவர்களுடைய பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்பட்டவையா என்ன? நாம் நிகழ்த்திக் கொண்டிருப்பது கருத்துப்பரிமாற்றம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  தாங்கள் மேற்கொள் காட்டியுள்ள தணிகை மலை முருகனின் திருப்புகழை அடியேனும் படித்துள்ளேன். தனக்கு மாற்று கருத்து கொண்டவர்களளெல்லாம் எரிந்து போய் விட வேண்டுமென்று கருதி அதை அருணைப் புலவர் பாடவில்லை. அந்த முருகனே ஞானசம்பந்தக் குழந்தையாக வந்து “வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன் கழல் விடுவேனல்லேன்” என்று கூறியது போல எப்பொழுதும் அவன் திருவடியே சரணம் என்று எண்ணும் பேற்றையே யான் விரும்பி யாசிப்பேன்.

  எனக்கு மதி அருளுமாறு தாங்கள் முருகனிடம் வேண்டிக்கொண்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாரதியார் பராசக்தியிடம் விண்ணப்பித்தது போல “கல்வியிலே மதியினை நீ கொடுக்க வேண்டும், கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்” என்று சிரம் தாழ்த்தி அந்த பரம்பொருளிடம் மன்றாடுகிறேன்.

 87. தேவரை பற்றி தானே குலவியார் அதிகமாக எழுதி இருந்தார் – மெதுவா இளிச்சவாய பிராமணர்களை திட்டுவதில் திரும்பிவிட்டன பதில்கள். பலே பலே

  இளிச்சவாயர்களை அடிப்பது தான் உண்மையான மேக்காலேவின் கை கூலிகள் செய்யும் வேலை தாடிக்காரர் போல

 88. உலகெங்கிலும் ஹிந்துக்கள் மிகுந்த உற்சாகத்துடன் நவராத்திரிப் பெருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள்.. திருமலையில் ஏழுமலையானுக்குப் ப்ரம்மோத்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மஹா அஷ்டமி.. நாளை மஹா நவமி, மறுநாள் விஜய தசமி.. இப்படி அடுக்கடுக்காக முக்கிய விழாக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிற தற்சமயம் அதிகளவில் முக்கியமற்ற விவாதங்களும்.. அவற்றினை அடுத்து ஏற்பட்டிருக்கிற மனக்கசப்புக்களும் மன வருத்தம் அளிக்கின்றன..

  எது எவ்வாறாகிலும் இந்த சிக்கலிலிருந்து விடுபட்டு தமிழ்ஹிந்து கடந்த இரு நாட்களாக இருக்கிற தளர்விலிருந்து விடுபட்டு வீறுடன் மிளிர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்..

 89. கோமதி செட்டி,

  நான் சொல்லாததை, என் எழுத்தில் இல்லாததை, என் கருத்துகளாகக் கண்டுபிடிக்காதீர்கள்.

  நன்றி.

  .

 90. \\\\\\\தனக்கு மாற்று கருத்து கொண்டவர்களளெல்லாம் எரிந்து போய் விட வேண்டுமென்று கருதி அதை அருணைப் புலவர் பாடவில்லை. \\\\\\\\\ ஐயா, நிதம் திருப்புகழோதும் நான் அடுத்தவருக்கு கனவிலும் தீங்கு நினைக்கவியலாது. மாற்று மதத்தவருக்கு உத்தரமளிக்கும் போது கூட அடுத்தவருக்கு கேடு விளைவதாக அடியேன் உத்தரமளித்ததில்லை. பண்பாடு கெட்ட பேச்சுகளுக்கு கூட அன்புடனேயே உத்தரமளித்துள்ளேன்.

  \\\\கருத்து வேறுபாடுகளினூடே நுழைந்து வெறுப்புகள் விதைக்க விழையும் மிஷ நரிகளுக்கும் ட்வெல்லர் போன்றவர்களுக்கும் இடையில் வித்யாசம் இருப்பதாகத் தெரியவில்லை. வெற்றிவேல் பெருமான் விஷமிகளுக்கு ஸத்புத்தி அருளட்டும்.\\\\

  இது என் மதிஹீனமே. தாங்கள் பண்பாடற்ற மொழியில் உத்தரமளித்ததை சுட்டிகாட்டுகையில் பண்பாடிழந்த எனக்கு முதலில் வெற்றிவேல் பெருமான் ஸத்புத்தி அருளட்டும். இது போன்ற கருத்து தெரிவித்தமைக்கு சிரம் தாழ்ந்து இருகரம் கூப்பி மன்னித்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பண்பில்லா உத்தரங்கள் இத்தளத்தில் இத்துடன் மறையட்டும்.

 91. @ களிமிகு கணபதி அவர்களுக்கு,

  என்னுடைய கருத்து பொதுவான விமர்சனத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. தங்களை குறிப்பிட்டு எழுதவில்லை.

  சரியான முறையில் எனது பின்னூட்டத்தை எழுதவில்லை. தவறுக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் 🙁

  ————————————————————————————————————-

  எனக்கு என்னமோ நாம் தேவையற்ற முறையில் இங்கு இந்த விசயத்தை விவாதித்து கொண்டு இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. எந்த ஒரு சமுதாயமும் உயர்ந்ததும் இல்லை தாழ்ந்ததும் இல்லை.

  எல்லா சமுதாயத்திலும் ஹிந்து என்ற போர்வையில் சில விஷ ஜந்துக்கள் இருக்கின்றனர். இதில் பிராமணர்களும் விதிவிலக்கு இல்லை. செட்டியார்களுக்கும் விதி விலக்கு இல்லை.

  மீண்டும் சொல்கிறேன். பிரச்சனை சாதி கிடையாது. சில கயவர்கள் சாதியின் பெயரில் சகுனி வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  இதில் எத்தனை பேர் தென் தமிழ்நாட்டு கிராம பகுதியை சேர்ந்தவர்கள் என்பது எனக்கு தெரியாது. ஒரு குடும்ப பிரச்சனை இப்படி ஒரு சமுதாய பிரச்சனையாக மாறிவிட்டது என்பது தான் உண்மை.

  இந்த கலவரத்தின் பின்னனியில் இத்தாலிகாரியின் கை இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. ஏன் எனில் சர்ச்சைக்குரிய மத வன்முறை தடுப்பு சட்டத்திற்காக இது போன்ற ஒரு வன்முறையை உருவாக்கியுள்ளனரோ என்ற சந்தேகம் உள்ளது. தேவையற்ற முறையில் ஜான் பாண்டியன் இவ்வளவு பிரச்சனைகளை எந்த ஒரு அரசியல் பிண்ணியும் இன்றி செய்து இருக்க முடியாது.

  வழக்கும் போல கலவரத்தை தூண்டிவிட்ட கபோதிகள் காவல் துறையிடம் மாட்டாமல் ஓடிவிட்டனர். அவர்களை நம்பி வந்த அப்பாவிகள் மற்றும் கலவரத்தில் மாட்டி கொண்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

  ஏன் இன்னும் நமது காவல் துறை மிளகாய் பொடி போன்ற உயிருக்கு ஆபத்து இல்லாத் பொருட்களை உபயோகப்படுத்தி கலவரத்தை ஒடுக்காமல், துப்பாக்கிகளை பயன்படுத்துகிறது.

 92. கோமதி செட்டி அவர்களே,

  இரு தனி நபர்களான குளவியையும், களிமிகு கணபதியையும் விமர்சித்து இருந்தது என்னுடைய ஒரு சொற்றொடர். ஒரு செயல் இருந்தால் அந்த செயலுக்கு உண்டான எதிர் விளைவுகளும் இருந்தே தீரும். வினையை விதைத்து விட்டு யாரும் தினையை அறுவடை செய்ய முடியாது. “தேசியமும் தெய்விகமும் எனது இரு கண்கள்” என்று வாழ்ந்த தேவர் திருமகனாரை இழிவு படுத்தி ஒரு கட்டுரை. போலி சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பிராமணர்களை இழிவு படுத்தும் வகையில் சில கருத்துக்கள்.அது குறித்து கருத்தும், கண்டனமும், வருத்தமும் தெரிவித்த என்னை ஒரு தனி நபராக விமர்சிக்காமல் ஒரு இனத்தையே மெக்காலேவின் கள்ளப்பிள்ளைகள் என்று தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கும் ஒரு கயவனின் கெடுமதியை கண்டிக்க உமக்கு திராணியில்லை. நீர் எம்மை பற்றி அபிப்ராயம் சொல்லப் புகுந்து விட்டீர். உங்களுக்கும் இன்ன பிற மனிதர்களுக்கும், கந்தர்வர்களுக்கும் நான் பணிவோடு சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த கட்டுரை ஒரு விஷம் கக்கும் வினை. அதை எழுதிய ஆசிரியரையும், அவர் அடிவருடியையும் நான் விமர்சித்தேன். அவ்வளவே. பிராமணர்களை மெக்காலேவின் கள்ளப்பிள்ளைகள் என்று கூறியிருக்கும் ஒரு நீசன், தமிழ்நாட்டை நாத்திக வாதம் பேசி, தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் அடைந்தவர்களின் கள்ளப்பிள்ளையா, செல்லப்பிள்ளையா, வளர்ப்பு பிள்ளையா என்பது அவருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இது வரை அவருக்கு அது தெரியாவிட்டால் அதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏவல் செய்யட்டும். விஷமத்தனமான அவரது பேச்சும், இந்த பதிப்பும் வன்மையாக கண்டிக்கத்தக்கவையே.

 93. @களிமிகு கணபதி
  //நான் சொல்லாததை, என் எழுத்தில் இல்லாததை, என் கருத்துகளாகக் கண்டுபிடிக்காதீர்கள்.//
  நீங்கள் சொல்லாவிடில் பிறகு யார் சொன்னது? உங்கள் எழுத்துகள் மேலே உள்ளன. அவற்றில், மற்ற பிராமன எதிர்ப்பு கழகங்களை சார்ந்தவர்கள் போலே, பிராமணர்களுக்கும் வைதிகர்களுக்கும் உள்ள வித்தியாசம் அறியாமை (அல்லது பொய் அறியாமை) தெளிவாக தெரிகிறது. பிராமனர்களை எசுவத்தின் மூலம் தலித் முன்னேற்றம் காண முயல்வது கழக நாகரிகம், அனால் அது பிரயோஜனம் தராது .

 94. இரு தனி நபர்களான குளவியையும், களிமிகு கணபதியையும் விமர்சித்து இருந்தது என்னுடைய ஒரு சொற்றொடர். ஒரு செயல் இருந்தால் அந்த செயலுக்கு உண்டான எதிர் விளைவுகளும் இருந்தே தீரும். வினையை விதைத்து விட்டு யாரும் தினையை அறுவடை செய்ய முடியாது. “தேசியமும் தெய்விகமும் எனது இரு கண்கள்” என்று வாழ்ந்த தேவர் திருமகனாரை இழிவு படுத்தி ஒரு கட்டுரை. போலி சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பிராமணர்களை இழிவு படுத்தும் வகையில் சில கருத்துக்கள்.அது குறித்து கருத்தும், கண்டனமும், வருத்தமும் தெரிவித்த என்னை ஒரு தனி நபராக விமர்சிக்காமல் ஒரு இனத்தையே மெக்காலேவின் கள்ளப்பிள்ளைகள் என்று தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கும் ஒரு கயவனின் கெடுமதியை கண்டிக்க உமக்கு திராணியில்லை. நீர் எம்மை பற்றி அபிப்ராயம் சொல்லப் புகுந்து விட்டீர். உங்களுக்கும் இன்ன பிற மனிதர்களுக்கும், கந்தர்வர்களுக்கும் நான் பணிவோடு சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த கட்டுரை ஒரு விஷம் கக்கும் வினை. அதை எழுதிய ஆசிரியரையும், அவர் அடிவருடியையும் நான் விமர்சித்தேன். அவ்வளவே. பிராமணர்களை மெக்காலேவின் கள்ளப்பிள்ளைகள் என்று கூறியிருக்கும் ஒரு நீசன், தமிழ்நாட்டை நாத்திக வாதம் பேசி, தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் அடைந்தவர்களின் கள்ளப்பிள்ளையா, செல்லப்பிள்ளையா, வளர்ப்பு பிள்ளையா என்பது அவருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இது வரை அவருக்கு அது தெரியாவிட்டால் அதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏவல் செய்யட்டும். விஷமத்தனமான அவரது பேச்சும், இந்த பதிப்பும் வன்மையாக கண்டிக்கத்தக்கவையே.

 95. \\\\\\\என்னை ஒரு தனி நபராக விமர்சிக்காமல் ஒரு இனத்தையே மெக்காலேவின் கள்ளப்பிள்ளைகள் என்று தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கும் ஒரு கயவனின் கெடுமதியை கண்டிக்க உமக்கு திராணியில்லை. \\\\\\

  அன்பார்ந்த ஸ்ரீ ட்வெல்லர், பண்பாடற்ற உத்தரங்களுக்குக் கூட அன்புடனேயே உத்தரமளிக்க வேண்டும் என்ற கருத்துடைய நான் அக்கருத்திலிருந்து பிறழ்ந்து விட்டபடிக்கு ஊருக்கு என்ன உபதேசம் செய்யவியலும்?

  விமர்சிக்கப்பட வேண்டியது கருத்துக்கள் மட்டுமேயன்றி அறவே தனிநபர்கள் அன்று

  கருத்துக்களைப்பற்றிய விமர்சனம் பண்பான மொழிகளால் இருக்க வேணேடுமேயன்றி தரம் தாழ்ந்த மொழிகளால் அன்று

  என்ற கருத்தில் எனக்கு உறுதிப்பாடு நிலைக்க வெற்றிவேல் பெருமான் அருளட்டும்.

  தக்ஷிண பாரதத்தில் தசரா விழா கொலு வைத்தும் துர்க்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி தேவியருக்கு பூஜைகள் செய்வது மூலமும் கொண்டாடப்படுவது போல் உத்தர பாரதத்தில் ராமாயண காவ்யத்தை நாடகமாக அரங்கேற்றி ராவண கும்பகர்ண மேகநாதனின் (இந்த்ரஜித்) வதத்துடன் நிறைவு பெறுகிறது. ராவண கும்பகர்ண மேகநாதர்கள் அவகுணங்களின் உருவகங்களே. அவர்கள் அழிக்கப்பட்டனர் என்பது நம் மனதிலிருக்கும் அவகுணங்கள் மறைந்து ஸ்திரமன சித்த சுத்தியை நாம் பெற வேண்டும் என்பதையே காட்டுகிறது.

  உத்தர பாரதத்தில் குடியேறியுள்ள எங்கள் க்ருஹத்தில் இந்த வைபவத்தை ஒட்டி ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் நவாஹ பாராயணம் ஏற்பாடு செய்ய்ப்பட்டு ராம பட்டாபிஷேகத்துடன் இன்று நிறைவு பெற்றது. முழு பாராயணத்திலும் பங்கு பெற வாய்ப்பில்லாவிடினும் பட்டாபிஷேக வைபவத்தில் பங்கு பெறும் பாக்யம் கிடைத்தது.

  அழகான பலஸ்ருதி

  ஆயுஷ்யம் ஆரோக்யகரம் யசஸ்யம் ஸௌப்ராத்ருகம் புத்திகரம் சுபம் ச
  ஸ்ரோதவ்யம் ஏதத் நியமேன ஸத்பி: ஆக்யானம் ஓஜஸ்கரம் ருத்திகாமை:

  இந்த விஜயதசமி சுபதினத்தில் இங்கு பங்குபெறும் அனைத்து சஹோதரர்களிடையேயும் குறைவில்லா அன்பும், ஆயுளும், மதியும், கீர்த்தியும், பரஸ்பர சஹோதர பாசமும் எல்லா சுபங்களும் கிடைக்க ஸ்ரீமத் சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனூமத் சமேத ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி அருளட்டும். வலிமை மிகுந்த ஹிந்து ராஷ்ட்ரம் அமைவதற்கு நம்மிடையே ஒற்றுமையும் கட்டுக்கோப்பும் அவசியம். அது நிலைத்திருக்கட்டும்.

 96. Dweller,

  “பிராமணர்களெல்லாம் மெக்காலேவின் கள்ளப் பிள்ளைகள்” என்று நான் சொல்லியதை ஆதாரத்துடன் நீங்கள் நிரூபித்தால் உங்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன்.

  அதற்கான ஆதாரத்தை உங்களால் கொடுக்க முடியாவிட்டால், நேர்மை உணர்வுக்கு ஒப்ப நீங்கள் இங்கே மன்னிப்புக் கேட்க வேண்டும்.

  அப்படி நீங்கள் கேட்காவிட்டால், உங்களை “ஈவெரா Dweller” என்றுதான் இனி அழைக்க வேண்டும்.

  .

 97. Dweller-ஐ தவிர வேறு யாருமே களிமிகு கணபதியின் பிராமன ஏசலை சாடவில்லை. எனக்கு மட்டுமே இவ்வாறு தோன்றுகிறதோ ? இது ஹிந்து ஆதரவு தளமா இல்லை பிராமன எதிர்ப்பு தளமா என்று ஐயம்

 98. ஒரு இந்துத்துவ முட்டாள்தனம் இந்த கட்டுரையில் தெளிவாக தெரிகிறது.. இந்து என்றால் என்ன என்று இதுவரை ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க முடியாத நீங்கள், இல்லாத இந்து மதத்துக்காக வைதீக பாரம்பரியத்தை ஒழிக்க ஆலோசனை சொல்ல வந்துட்டீங்க? உங்க மனசுல என்ன இந்து போப்பாண்டவர்னு நினைப்பா? இல்ல, சே-குவாரா மாதிரி, புரட்சியாளர்னு நினைப்பா?

  உங்களுக்கும் மார்க்சிய வாதிகளுக்கு என்ன வித்தியாசம்? ஜாதி பற்றிய அடிப்படை ஞானம் உங்களுக்கு எந்த அளவுக்கு இருக்கிறது? ஒரு ஜாதியின் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்றாவது தெரியுமா?
  சரி.. இன்றைக்கு, சாதாரண மக்களிடம் சென்று அவர்களுடைய கருத்துக்களை கேட்டீர்களா? எதுவுமே இருக்காது.. அப்படி இருந்தாலும், இந்துத்துவ சாயத்தில், சரியாக புரியப்படாத ரெண்டுங்க்கெட்டானாகத்தான் இருக்கும்..

  தலித என்ற அடையாளத்தை அரசியல் காரணங்க்களுக்காக கொண்டு வரப்பட்டது.. அந்த அடையாளத்தை நாம் தூக்கி எறிந்திருக்க வேண்டும்.. அதை விட்டு விட்டு, வார்த்தைக்கு வார்த்தை, தலித் சகோதரர்கள், என்று காலணிய சிந்தனை வரம்புக்குள்ளே சுற்ற்க் கொண்டு இருப்பதால் உங்கள் அறியாமையைதான் தெரியுது..

  இந்த ஜாதி மோதல், பள்ளர்களுக்கும் தேவர்களுக்கும் இடையானது என்று மட்டும் எடுத்து கொள்ள வேண்டியதுதானே? எதற்கு தலித் என்ற அடையாளம்??

  /** 1. ஒரு இந்துவாக நமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. நம் ஆதீனங்கள், நம் பீடாதிபதிகள், நம் கோவில்கள் ஆகியவற்றில் நம் தலித் சமுதாயத்தினர் ஆதீனங்களாக, பீடாதிபதிகளாக, கோவில் தெய்வத் திருமேனிகளைத் தொட்டு வணங்கும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
  **/
  என்ன பித்துக்குளித்தனம்? முதலில் இந்துவாக எந்த ஜாதியும் தன்னை தானே சொல்லிக் கொள்ளவில்லை.. தனது தர்மத்தை விட்டுவிட்டு அரசாங்க வேலைக்கு சென்ற பிராமணர்கள், ஏற்படுத்திய ஒரு போலியான, அடையாளம் “இந்து”.. அரசாங்க பதவியில் இருந்ததால், அவர்களாகவே எல்லா மக்களையும் இந்த அடையாளத்தில் இணைத்து விட்டார்கள்..

  அதனால், திரு. குளவி அவர்களே.. நீங்கள் எல்லா ஜாதியையும் இந்து மதத்தில் இருந்து நீக்கி விடலாம்.. எந்த ஜாதியும் கவலை படப் போவதில்லை..

  அடுத்து, கோவிலோட தாத்பரியம் என்னன்னு தெரியுமா உங்களுக்கு? மடத்தின் பாரம்பரியன் என்னனு தெரியுமா? மொத்தனை எத்தனை மடம் இருக்கிறதென்று தெரியுமா? இல்லை, எத்தனை வகையான மடங்கள் இருக்கிறதுனு தெரியுமா? எந்த மடமாவது, தன்னை இந்து மடம் என்று அடையாளப்படுத்திக் கோண்டதா?
  மடத்தின், கோயிலின் பாரம்பரியத்தை மாற்ற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நீங்க என்ன இந்து போப்பாண்டவரா? இல்லாத இந்து மதத்திற்கு, இருக்கிற பாரம்பரியத்தை மாற்றுவதற்கு?

  /** பிறப்பு அடிப்படையில் எங்கெல்லாம் ஆன்மிக-சமுதாய-சடங்கு அமைப்புகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவை தகுதி அடிப்படையில் என மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றப்படும் போது அவற்றில் தலித்துகளுக்கு – சலுகையாக அல்ல, உரிமையாக – முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
  **/

  மார்க்சியவாதிகள் இதைதான் சொல்கிறார்கள்.. அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பத்தம்.. முதலில், ஆன்மிக-சமுதாய-சடங்கு அமைப்புகள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்.. அதை மாற்றும் அதிகாரம் உங்களுக்கு யார் கொடுத்தது? அப்படி மாற்ற வேண்டும் எண்ணம் உங்களுக்கு வந்தது, அந்த அமைப்புகளை எவ்வளவு கீழ்தரமாகவும், உங்கள் சித்தாந்தக்கு அவைகள் அடிமையாக நீங்கள் நினைப்பதாகவுமே காண்பிக்கிறது.. இது அப்பட்டமான் அயோக்கியத்தனம்..

  /** இன்னும் சொன்னால், (வியாசர் முதல் சத்யகாமர் உட்பட) வேதங்களின் மந்திர திருஷ்டாக்களே இன்று தலித்தாக்கப்பட்டுள்ள சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான்.
  **/

  அரைகுறை ஞானம் எவ்வளவு ஆபத்தானது என்று நிரூபித்துள்ளிர்கள்.. வியாசர், பராசரருக்கும், சத்யவதிக்கும் பிறந்தவர்.. பராசரர், ஒரு ரிஷி.. ரிஷியின் வழியில் வந்த வியாசர், தானும் ரிஷியாக சென்றுவிட்டார்..
  ஒருவர் ரிஷியான பின்பு, அவர் எல்லா விதமான கிரஹஸ்த அடையாளங்களையும் துறந்துவிடுவார்.. அவரை தலித் என்று முத்திரை குத்துவது, உங்கள் அறியாமையின் தீவிரத்தினை காட்டுகிறது..

  ராமாயணத்தில், வால்மீகியும், சன்யாசம் வாங்கிய பின்புதான், ஆன்மிக அறிவு பெற்றார்.. கிரஹஸ்தத்தில் இருக்கும் பொழுது, பிராமணர்களுக்கே அவர்களுடைய தர்மத்தை மாற்றும் ஆதிகாரம் இல்லை.. முற்றும் துறந்த ரிஷிகள் தான், எந்த மாறுதல் வேண்டும் என்றாலும், அதை ஏற்படுத்துவார்.. அது போல, ஒரு சூத்திரர், வருணாசிர தர்மத்தில் இருக்கும் வரை வேதம் பயிலக்கூடாது.. அப்படி நடந்ததாக, எந்த இதிகாச புரான கதைகள் எதுவும் இல்லை..

  அப்படி இருக்கையில், திரு. குளவி அவர்கள், தன்னை வியாசரை விட, பராசரரை விட, அறிவு ஜீவியாக எண்ணிக் கொண்டு, இல்லாத இந்து மதத்திற்கு கோட்பாடுகள் கொடுக்கிறார்..

 99. செந்தில்

  //
  ஒரு ரிஷி.. ரிஷியின் வழியில் வந்த வியாசர், தானும் ரிஷியாக சென்றுவிட்டார்..
  ஒருவர் ரிஷியான பின்பு, அவர் எல்லா விதமான கிரஹஸ்த அடையாளங்களையும் துறந்துவிடுவார்
  //

  ரிஷிகள் சந்நியாசிகள் அல்ல – ரிஷிகள் க்ருகஸ்தர்களாகவே இருந்தனர் – வால்மீகியை ரிஷி என்று சொல்லி இப்போது தான் கேள்விபடுகிறேன் – வால்மி முனி என்று தான் சொல்வர் இல்லை என்றால் வால்மீகி கவீ என்று சொல்வர். ரிஷி சந்நியாசி இரண்டும் ஒரே வ்யக்தியை குறிப்பவை அல்ல

  வியாசருக்கு சுகர் என்ற ஒரு புத்திரனும் இருந்தார் இல்லையா.

  சன்யாசிகள் சில உதாரனங்கங்கள் – சங்கராசார்யார் ராமானுஜர் மத்வர், புத்தர், யாஞவள்கர் ரிஷி அப்புறம் சந்நியாசி கூட.

 100. செந்தில்,

  இந்துமதத்தில் தீவிரவாதம் இல்லை. இசுலாமில் மட்டுமே உண்டு. இந்து மதம் என்ற சொல் ஒரு வசதிக்காகத்தான் பிரயோகிக்கப்படுகிறதேயொழிய அது சரியா இல்லையா என்ற ஆராய்ச்சி பண்டிதருக்கு மட்டும் இருந்தால் போதும். நமக்கு வேண்டாம். இந்துமதம் தன்னைக் காலவோட்டத்துக்குத் தக்க மாதிரி திருத்திக்கொண்டே வந்திருக்கிறது. அது தொடரும். நீங்கள் சொல்லிய ‘எதையும் மாற்றக் கூடாது. அவை அப்படியேதான் இருக்கவேண்டும்’ என்பது தீவிரவாதமாகும்.

  கழகங்களோடு தொடர்பை விட ஜிஹாதி மனப்போக்கு மிக்க ஆபத்தானது. ஏனென்றால், கழகங்கள் செய்வது அரசியல். அது சூழலுக்கும் காலத்துக்குமேற்ப மாறலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சில விழுக்காடே தமிழர் எண்ணிக்கையில் இருக்கும் தமிழ்பிராமணர்கள், பல விழுக்காடாகப் பல்கிப்பெருகி, ஆட்சியில் ஆட்களை அமர்விக்கும் சக்தியுடையவராகும்போது, கழகங்கள் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும். ஆனால் ஜிஹாதிகள் அப்படியல்ல. எனவே தீவிரவாதமானப் பேச்சு – மாற்றம் கூடாதென்பது – பயங்கரமானது.

 101. திரு.செந்தில்

  //தனது தர்மத்தை விட்டுவிட்டு அரசாங்க வேலைக்கு சென்ற பிராமிணர்கள் ஏற்ப்படுத்திய ஒரு போலியான அடையாளம் ”இந்து”. அரசாங்க பதவியில் இருந்ததால் அவர்களாகவே எல்லா மக்களையும் இந்த அடையாளத்தில் இணைத்துவிட்டார்கள்.//

  வர்ணாசிரம வரிசையில் தனது தர்மத்தை தொலைத்தவர்கள் முதலில் மற்றவர்ணத்தவர்களே. ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு முன்வரை தாக்கு பிடித்த பிராமிணர்கள் காலத்தின் கட்டாயத்தால் வாழ் ஆதாரம் தேடி அரசாங்க வேலைகளுக்கு சென்றார்கள். இப்படி எல்லா அடையாளங்களும் தொலைந்து எஞ்சி இருக்கும் பிராமிணன் என்ற அடையாளம் தேவைதானா?

  மேலும் இந்து என்ற அடையாளத்தை பிராமிணன்தான் இந்தியர்களுக்கு இணைத்துவிட்டார்கள் என்பதற்க்கு என்ன ஆதாரம் ? அப்படியே இருந்தாலும் அந்த அடையாளமாவது இன்று நமக்கு இருப்பதால்தான் இன்றளவும் நாடு பிற மதவாத சக்திகளால் கூறுபடாமல் காப்பாற்றபட்டு வருகிறது.

 102. @Nanda,

  //Dweller-ஐ தவிர வேறு யாருமே களிமிகு கணபதியின் பிராமன ஏசலை சாடவில்லை. எனக்கு மட்டுமே இவ்வாறு தோன்றுகிறதோ ? இது ஹிந்து ஆதரவு தளமா இல்லை பிராமன எதிர்ப்பு தளமா என்று ஐயம்//

  தங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது நந்தா. இதற்கு பாரதியின் பாடலே பதிலாக இருக்க முடியும்.

  அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரடி – கிளியே – ஊமைச் சனங்களடி

  நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா இந்த தமிழ் ஹிந்து இணைய தளத்தின் வாசகர்களின் துயிலை நீக்க மாட்டாரா என்று மனம் துடிக்கிறது.

  குளவி, கொசு, ஈ, எறும்பு போன்றவைகள் எல்லாம் கட்டுரை எழுதினால் அது இந்தத் தரத்தில் தான் இருக்கும். உண்மையிலேயே இந்து சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்கள் இந்து மதத்தின் அங்கங்களாக இருக்கும் பிராமணர்களையும், முக்குலத்தோரையும் இழித்தும், பழித்தும் எழுதுவார்களா? பசும்பொன் தேவர் திருமகனார் இந்து மதத்தின் தலைவர். ஆம், அவரை ஒரு சாதியத் தலைவராக இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது அபத்தம். நெற்றியில் நீற்றினை நிறையப் பூசி பொலிவோடு திகழ்ந்தவர் தேவர் திருமகனார். “முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டர் புராணத்தில் உள்ளது போலத் திகழ்ந்தவர் அவர். இன்று கூட, அவர் இறந்து பல்லாண்டு காலமான பின்பும் கூட, நாத்திகம் பேசி இந்து மத தெய்வங்களை மட்டும் பழிப்பவர்களுக்கு தேவரின் பெயர் சிம்ம சொப்பனம். அவரைப் போன்ற ஆன்மீக உள்ளம் கொண்ட வீரமிக்கத் தலைவரை காண்பது அரிது. சிங்க நிகர் தலைவரை நரிகளும், ஓநாய்களும் பழிப்பதை என்னவென்று சொல்வது. இந்த கட்டுரையை வழி மொழிந்து பாராட்டி இன வேறுபாட்டை விசிறி விட்டு வளர்க்க முயலும் ஜடாயு, களிமிகு கணபதி ஆகியோரை நான் கண்டித்தேன். அதற்கு ஜடாயு(ராம காரியத்தில் உயிர் நீத்த ஒரு உத்தம ஜீவனின் பெயரில்) என்னை மிருகம் என்கிறார், பல்லை பிடுங்குவேன், வெட்டுவேன் என்கிறார். இவர் கசாப்பு கடை வைத்துக் கொண்டிருக்கிறாரோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

  பிரணவ தத்துவத்தின் ஸ்வரூபமாக இருக்கும் கணபதியின் பெயரில் களிமிகு கணபதி என்பவர் பிராமணர்களை தகாத வார்த்தைகள் சொல்லி மெக்காலேவின் கள்ளப் பிள்ளைகள் என்று ஏசுகிறார். இந்த நபர் பழி, பாவத்துக்கு அஞ்சாதவராகத் தான் இருப்பார். நாவார ஒரு இனத்தை பழித்து திருப்தி கொள்ளும் இவரை எந்த வகையில் சேர்க்க முடியும். அந்த கணபதியே இதை அறிவார். தலித்துகளுக்கு கோவில் கட்டுவேன், பிராமணர்களை காலில் விழ வைப்பேன் என்றெல்லாம் பிதற்றுகிறார். சினிமா நடிகையர்களுக்கு கோவில் கட்டிய சிலரில் இவரும் ஒருவரோ? பக்குவமற்ற விடலைச் சிறுவனை போல பேசி அகம்பாவத்தால் தருக்கித் திரியும் இவரது இறுமாப்பை என்னவென்று சொல்வது?

  பசியோடு இருப்பவனுக்கு உணவு தான் தெய்வம் என்றார் சுவாமி விவேகானந்தர். பசிக்கு உணவாவான், நோய்க்கு மருந்தாவான் என்று இறைவனைக் கூறுவதுண்டு. “அன்ன லக்ஷ்மி” “அன்னம் பிரம்மா” என்றே சொல்லுகிறோம். “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் சுவாமிகள் வாழ்ந்த பொன்நாட்டில் நாம் வாழ்கிறோம். இந்தியா ஒருபக்கம் பொருளாதார வல்லரசாகப் போகிறது என்கிறார்கள். இன்னொரு பக்கம் குடிக்க நல்ல நீரின்றி, உணவின்றி லட்சோப லட்சம் மக்கள் மடிகிறார்கள். அவர்களிடம் போய், வாருங்கள், உங்களுக்கு கோவில் கட்டுகிறேன், வேதம் சொல்லி தருகிறேன் என்றால் என்ன பிரயோஜனம்? வாய்ச்சொல் வீரர்களாக சவடால் பேசக் கூடாது. காரியத்தில் உறுதி வேண்டும். நாம் ஒவ்வொருவரும், தனியாகவும், கூட்டாகவும் நம்மால் முடிந்த சேரிகளுக்கும், காலனிகளுக்கும் போய் தரித்திர நாராயணன் என விளங்குபவர்களுக்கு தொண்டு செய்யலாம்.

  சமத்துவம் நிச்சயம் வேண்டும். அது எப்படி வரும்? ஆலயப் பிரவேசம், தலித்துகள் கோவில் பூசாரிகள் ஆக வேண்டும், இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஒரு நூற்றாண்டு காலமாகப் பேசி, பேசி ஒரு பயனும் இல்லையே. விரோதமும், வேற்றுமையும் வளர்ந்து கொண்டே போகிறது. இதனால் அரசியல் ஆதாயம் அடைந்தவர்கள் தான் பலர். இதை விடுத்து எல்லோர் உள்ளில் உறைவது இறைவன் தான் என்ற எண்ணம் வரும் போது அன்பும் சமத்துவமும் நிச்சயம் வரும். இந்து மதத்தின் ஆணி வேராகக் கருதப்படும் அத்வைத சித்தாந்தத்தின் கரு இது தான். “விஷ்ணு மயம் ஜகத்” “வசுதைவ குடும்பகம்” என்று உலகத்தையே ஒரு குடும்பமாக சொல்லி இறைவனின் குழந்தைகளாக வாழ்ந்த நம் நாட்டில் இது போன்ற போலி சமத்துவம் பேசி விதண்டாவாதம் செய்து நாட்டையும், மக்களையும் கூறு போட நினைக்கும் சக்திகளின் குரல்கள் எல்லாம் ஆழ்ந்து போய் வையகம் துயரற்று சைவ நீதி விளங்கட்டும் என்ற தெய்வக் குழந்தையின் கட்டளையே நமது அவா. அரஹரோஹரா, அரஹரோஹரா, அரஹரோஹரா…..

  “ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே”

 103. ஹல்லோ ஈவெரா dweller,

  நலமா ?

  “பிராமணர்கள் எல்லாம் மெக்காலேவின் கள்ளப் பிள்ளைகள்” என்று நான் சொன்னேன் என்பதை நிறுவச் சொல்லி உங்களிடம் கேட்டிருந்தேன். உங்களால் முடியவில்லை. மனசாட்சி இருந்திருந்தால் இந்தப் பொய்களைத் திருப்பிப் பேசுவதையாவது நிறுத்தலாம்.

  ஆனால் இப்போதோ, தேவர் திருமகனார் தேசியப் பற்று இல்லாதவர் என்று குளவி சொன்னதாக அடுத்த பொய்யைச் சொல்லுகிறீர்கள்.

  கொஞ்சம்கூடக் கூசாமல் பொய் சொல்லுகிறீர்களே “ஈவெரா dweller”. உங்களுக்கு வெட்கம் என்பதே கிடையாதா? 🙁

  .

 104. dweller,

  உங்களால் நல்ல முறையில் விவாதிக்க முடியும்போது “ஜந்துக்கள்” என்று கூறி “துடைப்பக் கட்டையை” ஏன் கையில் எடுக்கவேண்டும்?

 105. நான் முன்னர் ஒருமுறை எழுப்பிய ஒரு கேள்விக்கு விடைதர யாரும் முன்வரவில்லை. பிராமணர்களின் பூணூல் சடங்கில் <> தீண்டாமை இன்றளவும் செய்யப் படுகிறதே இதுகுறித்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஜடாயுவையும் களிமிகு கணபதியையும் மிருகங்கள்/ ஜந்துக்கள் என கூறும் / வீரவசனங்கள் பேசும் / வீரர் dweller இதற்கும் இதோ இன்னொரு கேள்விக்கும் என்ன பதில் வைத்திருக்கிறார்? அந்த இன்னொரு கேள்வி இதோ …

  மனிதப் பிறவி மட்டுமே பாவம், புண்ணியம் என தீவினை, நல்வினைகளைச் செய்கின்றது. ஜந்துக்கள், மிருகங்கள் ஆகியன சிந்திக்கும் ஆறாம் அறிவு இல்லாததால், தனது இயற்கை நியதிப் படியே அனைத்து செயல்களையும் ஆற்றுவதால், பாவமும் செய்யவியலாது, புண்ணியமும் செய்ய இயலாது, கீதையில் கண்ணன் சொன்ன சுயதர்மப்படி நடக்கின்றன. அவை எதுவும் தம்மில் எவரையும் பிறப்பால் உயர்வு என்றும் பிறப்பால் தாழ்வு என்றும் நடத்துவதில்லை. எனவே இந்தப் பாவ புண்ணியங்களுக்குப் பாத்திரனான மனிதப் பிறவியை விட ஜந்துவும் மிருகமும் உயரிய பிறவிகள் அல்லவா?

  அடுத்த பிறவியில் பிறப்பில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்லும் இந்த மனிதப் பிறவியை விட்டு புழுவாய்ப் பிறந்து புண்ணியா நின்னடி வழுவாதிருக்கவே அந்த இறைவனை வேண்டுவோம்.

 106. அன்புக்குரிய குமரன்,

  “கொலை வாளினை எடடா அந்தக் கொடியோர் செயலறவே” என்று மனம் புழுங்கி இத்தகைய புல்லர்களைக் கண்டு தான் பாவேந்தர் சீறியிருப்பார். பாவேந்தருக்கு பண்பு தெரியாதா என்ன? அழுக்காறோடு பயனில பேசும் இத்தகைய வீணர்களைத் தான் தெய்வப் புலவர் “மக்கட் பதடிகள்” என்று சாடினார். அந்த பெருந்தகைக்கு அவையடக்கம் இல்லையா என்ன? இந்த மாக்களின் மதியீனத்தையும் நாட்டையும் சமூகத்தையும் பிளவு படுத்த நினைக்கும் நயவஞ்சகத்தையும் குறித்து என்னுடைய மன நிலையை வேதனையோடு வெளிப்படுத்தினேன். ஆனால் ஒன்று. புறநானூறு “பெரியோரை இகழ்தல் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்று கூறுகிறது. அழுக்காற்றாலும், அறிவின்மையாலும் அவதூறு பேசித் திரியும் இத்தகைய சிறுமதி படைத்தவர்களை விமர்சிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதே இதன் பொருள். அதன் படி “சிறுமை கொண்ட நெஞ்சினாய் போ போ போ” என்று இத்தகையவர்களை புறந்தள்ளுவதே சாலச் சிறந்தது என்று இப்போது உணர்கிறேன்.

  தங்களுடைய அன்பான கேள்விக்கு நன்றி.

 107. ஓது வித்தவர் கூலிகொ டாதவர்
  மாத வர்க்கதி பாதக மானவர்
  ஊச லிற்கன லாயெரி காளையர் …… மறையோர்கள்

  ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்
  ஆர்த னக்குமு தாசின தாரிகள்
  ஓடி யுத்தம ரூதிய நாடின …… ரிரவோருக்

  கேது மித்தனை தானமி டாதவர்
  பூத லத்தினி லோரம தானவர்
  ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை …… யிகழ்வோர்கள்

  ஏக சித்ததி யானமி லாதவர்
  மோக முற்றிடு போகித மூறினர்
  ஈன ரித்தனை பேர்களு மேழ்நர …… குழல்வாரே

  \\\\\\\அவை எதுவும் தம்மில் எவரையும் பிறப்பால் உயர்வு என்றும் பிறப்பால் தாழ்வு என்றும் நடத்துவதில்லை. எனவே இந்தப் பாவ புண்ணியங்களுக்குப் பாத்திரனான மனிதப் பிறவியை விட ஜந்துவும் மிருகமும் உயரிய பிறவிகள் அல்லவா? \\\\\\\\

  அன்பின் அஞ்சன் குமார், பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பவர்களை காணவொண்ணாத கண்ணன் கோவில் வாசலைப்பார்க்காது கனகதாஸர் இருந்த கோவிலின் பின்புற சாளரத்தை நோக்கி திரும்பி அவருக்கு தரிசனம் தந்தது உடுப்பி க்ஷேத்ரத்தில். அப்படித் திரும்பி கனகதாஸருக்கு காட்சி கொடுத்த கண்ணன் இன்று வரை கனகதாஸருக்கு தரிசனம் தந்த சாளரத்தின் வழியாகவே அனைவருக்கும் காட்சி தருகிறான்.

 108. \\\\\\\\\ஒரு இனத்தையே மெக்காலேவின் கள்ளப்பிள்ளைகள் என்று தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கும் ஒரு கயவனின் கெடுமதியை கண்டிக்க உமக்கு திராணியில்லை. நீர் எம்மை பற்றி அபிப்ராயம் சொல்லப் புகுந்து விட்டீர். \\\\\\\

  ஐயன்மீர், கண்டிக்கிறேன். ஸ்ரீ களிமிகு கணபதி, யாரைக்கேட்டு தனியாக இவருக்கு நாமகரணம் செய்துள்ளீர். இங்குள்ள அன்பர் அடியவரையெல்லாம் துடைப்பத்தில் அடிக்க விழைந்தும் கயவன் நீசன் என்றெல்லாம் கடைந்தெடுத்த வசவுகளால் அர்ச்சனை செய்யும் இவருக்கு ரொம்ப சாதாரணமாக நாமகரணம் செய்துள்ளீர்.

  பௌண்ட்ரக வாசுதேவன் காசிமாநகரத்தில் பகவானைப்போல் வேஷம் போட்டு விஷ்ணுசக்ரத்திற்கு இரையானான். அவன் பகவானுக்கு அபசாரம் செய்தான்.

  இந்த மெத்தப்படித்த ஸ்ரீமான் குளவி, ஈ, கொசு, எறும்பு முதல் மனிதர் கந்தர்வர்கள் வரைக்கும் எல்லோருக்கும் வாய் நிறைய வசைபொழிந்து அபசாரம் செய்துள்ளார். ஈவெராவுக்கு பாடம் சொல்லத்தக்க வ்யக்திக்கு ஏதோ சர்வ சாதாரணமாக நாமகரணம் செய்தமையை கடுமையாக கண்டிக்கிறேன்.

  \\\\உங்களுக்கும் இன்ன பிற மனிதர்களுக்கும், கந்தர்வர்களுக்கும் \\\\\\\குளவி, கொசு, ஈ, எறும்பு போன்றவைகள்\\\\\\\\நான் பணிவோடு சொல்ல விரும்புவது என்னவென்றால்\\\\\\

  ஆஹா, தங்கள் பணிவு ஈடு இணையில்லாதது அல்லவா. வார்த்தைக்கு வார்த்தை தெரிகிறதே

  \\\\\\\\பாரதியார் பராசக்தியிடம் விண்ணப்பித்தது போல “கல்வியிலே மதியினை நீ கொடுக்க வேண்டும், கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்” என்று சிரம் தாழ்த்தி அந்த பரம்பொருளிடம் மன்றாடுகிறேன்.\\\\\\

  பாரதியார் கனக சுப்புரத்தனத்திற்கு உபநயன ஸம்ஸ்காரம் செய்ததை முதலில் மனதில் இருத்தி உங்களிஷ்டம் போல் பகவத்கீதைக்கு வ்யாக்யானாதிகள் செய்யவிழைவீர்.

  \\\\\\தனக்கு மாற்று கருத்து கொண்டவர்களளெல்லாம் எரிந்து போய் விட வேண்டுமென்று கருதி அதை அருணைப் புலவர் பாடவில்லை. \\\\\\\\\

  அடியார்களையெல்லாம் வசைபொழிந்து விட்டு என்னை வேல் என்ன செய்யும் என்று சவால் விடுவது போல் உள்ளது உங்கள் பேச்சு. எங்கள் வள்ளி மணவாளப்பெருமானின் வேலும் மயிலும் சேவலும் பாகவத அபசாரம் செய்பவர்களை என்னென்ன செய்யும் பார்த்திடுவீர்

  வேல்

  துதிக்கும் அடியவர்க்கொருவர் கெடுக்க இடர்
  நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களயும்
  எனக்கொர் துணையாகும்

  மயில்

  பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருஷர்
  பூரண கணங்களொடு வந்து தொழவே

  போரிடுவ வென்று வெகு வாரண கணங்கள் உயிர்
  போயினம் எனும் படி எதிர்ந்து விழுமே

  சேவல்

  உலகிலநு தினமும் வரும் அடியவர்கள் இடரகல
  உரிய பர கதி தெரியவே

  உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
  இருள்கள் மிட கெட அருளியே

  கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
  கடினமுற வரில் அவைகளைக்

  கண்ணைப்பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிற
  கைக்கொட்டி நின்றாடுமாம்

  மலைகள் நெறுநெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
  மடிய அயில் கடவு முருகனின்

  சேவல்

  இதைமீறி வேலுக்கும் மயிலுக்கும் சேவலுக்கும் சவால் விடுத்து அடியார்களை வைய விழைந்தால் தோஷம் உங்களிடம் இல்லை. உங்களொடு வார்த்தாலாபம் செய்பவர்களிடமே. பாகவத அபசாரம் செய்வது மட்டும் பாபமல்ல. பாகவத அபசாரம் செய்பவரிடம் வார்த்தாலாபம் செய்வது கூட பாபம் தான்.

  அடியார்கள் என்றும் எவருக்கும் தீங்கு நினைக்கலாகாது. எனவே வேலும் மயிலும் சேவலும் தங்கள் மனதில் வெறுப்பு காழ்ப்பு என்ற பேய்களை விரட்டி அன்பு உண்மை என்ற நற்குணங்களை விதைக்க வேண்டுகிறேன்.

  வேலும் மயிலும் சேவலும் துணை

 109. @sarang,

  Pls refer this site for rishi vs muni..

  http://en.wikipedia.org/wiki/Rishi_Muni

  both are same.. the concept of sanyasi became popular only after rise of budhist monks..

  and grahastha is NOT just having wife.. grahastha is the one who is part of varna dharma.. rishis and sidhars had wife, and lived in forest.. that doesnt mean they are grahastha.. they do not earn wealth..

 110. @vedamgopal,

  /** வர்ணாசிரம வரிசையில் தனது தர்மத்தை தொலைத்தவர்கள் முதலில் மற்றவர்ணத்தவர்களே. ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு முன்வரை தாக்கு பிடித்த பிராமிணர்கள் காலத்தின் கட்டாயத்தால் வாழ் ஆதாரம் தேடி அரசாங்க வேலைகளுக்கு சென்றார்கள். இப்படி எல்லா அடையாளங்களும் தொலைந்து எஞ்சி இருக்கும் பிராமிணன் என்ற அடையாளம் தேவைதானா?
  **/

  இது உண்மை அல்ல.. சத்திரியர்கள், தன்னுடைய வருணத்தை விடவில்லை.. அவர்கள் மாண்டு போனார்கள்.. வட இந்தியா முழுதும், முஸ்லிம் படையெடுப்பில், சத்திரியர்கள், முஸ்லிம்களுக்கு போர்வீரர்களானார்கள்.. அப்படியும், பெரும்பாலோனோர், சத்திரிய தர்மத்தை முடிந்தவரையில் கடைபிடித்தார்கள்..
  தென்னிந்தியாவில், களப்பிரர் படையெடுப்பில் சோழ நாடும், பாண்டிய நாடும் நாசமானது.. எஞ்சிய பகுதிகளில், ஆங்கிலேயர் காலம் வரை வருணாசிர தர்மம் அப்படியே இருந்தது.. முக்கியமாக சேர நாட்டில்
  (குறிப்பு: இன்று எல்லோரும் நம்புவது போல் கேரளா சேர நாடு கிடையாது.. அது கைராள தேசமாகத்தான் இருந்தது.. மன்னர் மானியம் வாங்க திருவாங்கூர் மன்னர், ஒரு சில தகிடுதித்தங்களை பண்ணி, தன்னை சேர நாட்டின் வாரிசாக ஆங்கிலேய அரசாங்கத்திற்கு மனு செய்து மானியம் வாங்கிக் கொண்டார்.. இந்த ஏமாற்று வேலையை, சேதுபதி மன்னர், 100 வருடத்துக்கு முந்தியே “வஞ்சி மா நகரம்” என்ற புத்தகத்தை தனது திவான் மூலம் வெளியிட்டு, திருச்சி அருகே இருக்கும் கரூர் தான் சேரனின் வஞ்சி என நிரூபித்தார் )..

  சரி விஷயத்திற்கு வருவோம்.. ஆங்கிலேயர் காலத்தில், தஞ்சாவூர் பிராமணர்களில், பலர் மன்னர் கொடுத்த மானிய பூமி வைத்திருந்தார்கள்.. ஆங்கிலேயர், அதை தனிப்பட்ட சொத்தாக மாற்றி, பல பிராமணர்கள் ஜமீந்தாரர்களாக மாறினார்கள்.. புதிதாக வந்த செல்வ செழிப்பில், இவர்களுடைய பிள்ளைகளே ஆங்கில வழி கல்வி பயின்று அரசாங்க வேலைக்கு சென்றார்கள்.. இதை உங்களால் மறுக்க முடியுமா? அன்று முதல், இன்று வரை, ஏழ்மை நிலையில் உள்ள பிராமணர்களே தோடர்ந்து பாரம்பரிய பிராமண தர்மத்தில் இருக்கிறார்கள்.. ஆகையால் நீங்கள் சொல்வது போல வறுமையால் பிராமணர்கள் அரசாங்க வேலைக்கு போனார்கள் என்பது உண்மையல்ல…

  சரி.. தமிழ் நாட்டில், முதன் முதலில் ஆங்கில வழிக் கல்வியை கொண்டு வந்தது யார்? கும்பகோணம் மடம் தான்.. 1850 வாக்கில கொண்டுவந்தார்கள்.. இந்த கும்பகோணம் மடம் யார் தெரியுமா? இன்றைக்கு இருக்கும் காஞ்சி சங்கர மடம் தான் 50 வருடத்துக்கு முந்தி கும்பகோணம் மடமாக இருந்தது..

  இது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்று பார்க்க வேண்டும்.. கிறித்துவர்கள் நடத்திய கல்லூரியில், பெரும்பாலான பிராமணர்கள் படிக்க தயங்கினார்கள்.. ஏனேன்றால், அது மிலேச்சகர்கள் நடத்தும் கல்லூரி என்பதால்.. ஆனால், ஒரு பிராமண மடம கல்லூரியை கும்பகோணத்துக்கு கொண்டுவந்த பொழுது, இந்த தயக்கம் உடைந்தது.. நிறைய பிராமணர்கள், இந்த கல்லூரியில் சேர்ந்து ஆங்கில வழி கல்வி பயின்று, ஆங்கிலேயர்களின் பட்டம் வாங்கியதால்தான், அவர்களால், அரசாங்க வேலைக்கு போக முடிந்தது..

  இதை உங்களால் மறுக்க முடியுமா?

  இப்பொழுது புரிகிறதா, ஏன் தஞ்சாவூர் பிராமணர்கள், மொத்த அரசாங்க வேலையும் குத்தகைக்கு எடுத்தார்கள் என்று? பாண்டிய நாட்டிலும், கொங்கு நாட்டிலும் உள்ள பிராமணர்கள், மிகக் கம்மியே..

  சரி.. அரசாங்க வேலைக்கு போன இவர்கள், எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள்?

  சூத்திரர்களை தொடுவது தீட்டு.. ஆனால், மாட்டுக்கறி திங்கும் ஆங்கிலேய மிலேச்சர்களிடம் கொஞ்சி குலாவினார்கள்.. இதை உங்களால மறுக்க முடியுமா?

  இன்று செக்யுலரிசம் பேசும் பெரும்பாலோனோர், இந்த மாதிரி வந்த பிராமணர்கள் தான்.. நான் அவர்களை கெட்டுப்போன பிராமணர்கள் என்று சொல்கிறேன்..
  மீதி இருக்கிறவர்கள் இந்துத்துவ பிராமணர்கள்.. இரண்டு பேருமே தர்மத்தை விட்டு மிலேச்சகரின் வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட கலாச்சார அகதிகள்.. நன்றாக பாருங்கள்.. இவர்கள் தான், இன்று இந்துதுவா கூப்பாடு போட்டுக்கொண்டு, இன்று அடையாளத்துக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்கள்.. இவர்களால் தான் இந்து என்ற மிலேச்சகர்கள் உருவாக்கிய அடையாளத்தை விட முடியாமல் தவிப்பவர்கள்..

  பாரம்பரிய தர்மத்தில் இருக்கும் (உதாரணம்: ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள்) யாராவது, இந்த மாதிரி இந்து இந்து என்று ஏங்குகிறார்களா?

  ஏன் தமிழ் நாட்டில் மட்டும் திராவிட இயக்கம் வேரூன்றியது.. இதே பெரியார், கேரளா போய் செருப்படி வாங்கிதானே வந்தார்.. இங்கு மட்டும் அவருக்கு எப்படி இந்த மரியாதை?
  காரணம், பிரிட்டிஷ் அரசாங்கம் எங்கும் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பிராமணர்கள் இருந்ததே.. யார் காரணம்.. ஆங்கில கல்லூரியை கொண்டு வந்த தற்போதைய காஞ்சி மடம்..

  மற்ற எல்லா ஜாதிக்காரர்களும், ஆங்கிலேய அடக்குமுறையால் பஞ்சத்தில் உழன்று கொண்டிருந்த பொழுது, அரசாங்க வேலைக்கு போன பிராமணர்கள் அரசாங்க சம்பளத்தில் செல்வ செழிப்பில் வாழ்ந்தார்கள்.. (அந்த சம்பளமும் ஆங்கிலேயர் கொள்ளையடித்ததில் இருந்து கொடுக்கப்பட்டது).. இந்த் ஒரு விஷ்யம், எல்லா வெள்ளாள ஜாதியையும், செட்டியார்களையும் ஒன்றினைத்தது.. திராவிட இயக்கம் வளர்ந்தது..

  இதுவே, கர்நாடகாவிலும் ஆந்திராவிலும், கேரளாவிலும் இந்த இயக்கம் வளரவில்லை..

  இது ஒரு மிகப்பெரிய அதர்மமல்லவா? அதனுடைய பலனைதான் இன்று தஞ்சாவூர் பிராமணர்கள் அனுபவிக்கிறார்கள்.. முன்னை அவர்கள் வாழ்ந்த அக்ரஹாரம், இன்று முஸ்லிம் குடியிருப்புகளாகவும், கிறிஸ்துவர் குடியிருப்புகளாகவும் மாறியது..

 111. /**
  மேலும் இந்து என்ற அடையாளத்தை பிராமிணன்தான் இந்தியர்களுக்கு இணைத்துவிட்டார்கள் என்பதற்க்கு என்ன ஆதாரம் ? அப்படியே இருந்தாலும் அந்த அடையாளமாவது இன்று நமக்கு இருப்பதால்தான் இன்றளவும் நாடு பிற மதவாத சக்திகளால் கூறுபடாமல் காப்பாற்றபட்டு வருகிறது.
  **/

  படையெடுத்து வந்த வெள்ளைக்காரர்களுக்கு வர்ணாசிர தர்மத்தை பற்றி கற்றுக்கொடுத்தது யார்? இந்திய சமுதாயத்தை வருணாசிரம அடிப்படையில், தேசிய அளவில் பிரித்தது ஆங்கிலேய அரசுதான்.. ஆனால், அதுக்கு துணை நின்றது யார்?

  இன்றைக்கு இந்து என்ற அடையாளம் நமது பாரம்பரியத்தை எந்த அளவுக்கு அழித்தது என்பதை, நேரில் சென்று பார்க்கும்பொழுதுதான் புரியும்.. பிற மதவாத சக்திகள் எந்த அளவுக்கு நமது நாட்டில் கடந்த 50 ஆண்டில் புகுந்து விளையாண்டிருக்கிரார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது.. இதுக்கு மேல் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்து என்ற அடையாளம் தான் நமது சமுதாயத்தை காப்பாற்றியது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.. இன்றும் பேரும்பாலான தலித்கள் தங்களது பாரம்பரியத்தில் இருக்கிறார்கள் என்றால், அதற்கு இந்து என்ற அடையாளம் எந்த விதத்திலும் காரணமில்லை.. மாறாக, அவர்களின் ஜாதிதான் காரணம்.. எந்த தலித் ஜாதியும் தன்னுடைய ஜாதி வேண்டாம் என்று சொன்னதில்லை.. சொல்லப்போனால், இந்த ஜாதி சண்டையே, ஜாதி வேணும் என்பதற்கு போடப்படும் சண்டையாகும்.. ஆனால், இன்று இந்துத்துவா வாதிகள், இவ்வளவு நாள் தலித்துகளை பாரம்பரியமாக வைத்திருந்த ஜாதி அடையாளத்தை அழிக்க வேண்டு என்று கூப்பாடு போடுகிறார்கள்..

  நீங்கள் சொல்லுங்கள். இந்து என்ற அடையாளம் நமது கலாச்சரத்தை அழித்துக் கொண்டுதானே இருக்கிறது?

 112. /** பிராமணர்களின் பூணூல் சடங்கில் தீண்டாமை இன்றளவும் செய்யப் படுகிறதே இதுகுறித்து என்ன செய்யப் போகிறீர்கள்?
  **/

  தீண்டாமையால் யாருக்கு என்ன பாதிப்பு? தீண்டாமை தான், பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்திருக்கிறது.. ஒருத்தரை ஒருத்தர் தீண்டாத வரையில் எந்த பிரச்சினையிம் வரவில்லை.. சமத்துவம் பேசும் குள்ள நரிகள் வந்து, ஒவ்வொரு ஜாதியையும் தீண்ட வைத்ததின் விளைவுதான் இன்றைக்கு பல பிரச்சினைகளுக்கு காரணம்.. கறி திங்காத பிராமணனும், மாட்டுத்தோலில் வேலை செய்யும் ஒரு ஜாதியும், எப்படி ஒன்றாக இருக்க முடியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத முட்டாள்கள்தான் இங்கு நிறைந்து இருக்கிறார்கள்..

  இந்த உண்மை புரியாமல், இந்துதுவா வாதிகள் கிறித்துவர்களின் பரப்புரையை, கிளி போல சொல்லிக் கொண்டிருப்பது கேவலத்தின் கேவலம்.. நமது சமுதாயத்துக்கு எதிரி வெளியில் இல்லை.. உள்ளுக்குள்ளேயே இருக்கிறார்கள்..

  என்னுடைய வலைப்பதிவில், தீண்டாமை ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதை விளக்கியுள்ளேன்..

  http://psenthilraja.wordpress.com/2009/09/10/untouchability-is-it-really-evil/

 113. @jatayu

  /** தலித்கள் ஆலயத்துள் வந்து வணங்குவது, வேதம் கற்பது, அர்ச்சகர்களாவது என்பது அவர்களுக்கு இந்துமதத்துக்குள் காலகாலமாக மறுக்கப் பட்டிருக்கும் சமய, கலாசார உரிமைகளை நியாயபூர்வமாக அவர்களுக்கு அளிக்கும் செயலின் ஒரு அங்கமேயாகும். இதற்கு என்ன “பொருளாதார” மதிப்பு என்று கேட்பது சாமர்த்தியமான கேள்வி அல்ல, அபத்தமான பேத்தல்.
  **/

  ஹிந்துதுவ சித்தாந்தத்தில் கிறித்துவ மதத்தின் தாக்கங்கள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது, ஜடாயுவின் இந்த வரிகள் அப்பட்டமாக நமக்கு காட்டுகிறது..

  ஆலயத்துள் வந்து வணங்குவது – எந்த ஆலயம்? தேவாலயமா?

  வேதம் கற்பது – எந்த வேதம்? பைபிள் வேதமா?

  அர்ச்சகர்களாவது – யேசுவை அர்ச்சனை பண்ணவா?

  இந்துமதத்துக்குள் – இந்து மதம் என்பதற்கு இதுவரை எந்த ஒரு விளக்கமும் யாரும் தரவில்லை.. அதிக பட்சம், உச்ச நீதிமன்றம், இந்து என்ற சொல்லுக்கு, கிறித்துவர், முஸ்லிம், யூதர்கள் அல்லாதவர் என்ற ஒரு கேவலமான் ஒரு விளக்கத்தை தந்திருக்கிறது.. சுயசார்பான ஒரு விளக்கம் இது வரை யாரும் தரவில்லை..

  சரி.. சில யதார்த்தத்துக்கு வருகிறேன்..

  * கிறித்துவத்தில் சர்ச்சுகள் என்பது ஒரு கூடும் இடம்.. அதில் கடவுள் குடி கொண்டிருக்காது.. அதனால, அவர்கள் யாரை வேண்டுமானாலும் உள்ளே விட்டுக் கொள்வார்கள்.. ஏனால் அவர்கள் கும்பல் சேர்க்க வேண்டும்..
  ஆனால், நமது கோவில்கள் என்பது, கடவுளே குடியிருக்கும் இடம்.. எத்தனை பேர் கும்பிடுகிறார்கள் என்பது முக்கியமல்ல.. ஒருவர் கும்பிட்டாலும், அந்த கடவும் குடியிருக்கும் இடத்தின் சானித்யம் காக்கப்பட வேண்டும்.. அதனால்தான், தலித் சமூகத்திலுள்ள முதியோர்கள் ( கிறித்துவ பரப்புரையால் பாதிக்கபடாமல், பாரம்பரியத்தில் வந்தவர்கள் ) அவர்களாகவே கோவிலுக்கு வெளியில் இருந்து கும்பிட்டார்கள்.. ஏனேன்றால் அவர்களுக்கு கோயிலின் தாத்பர்யம் புரிந்திருக்கிறது.. இங்கே கொக்கரிக்கும் ஹிந்துத்துவா முட்டாள், தலித் பெரியோர்களை தேடிப் கண்டுபிடித்து இதை பற்றி கேட்டு அறியாமையை போக்கிக் கொள்ளட்டும்.. அதை விடுத்து, வெள்ளைக்காரன் எழுதியதை புத்தகத்தில் படித்துக்கொண்டு விவாதிக்க வேண்டாம்..

  * கோயில் என்பது ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு விதமாக இருக்கும்.. சேர சோழ தேசத்தில் காளியம்மனும் செல்லியம்மனும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும்.. பாண்டிய தேசத்தில் பேச்சியம்மன் அதிகமாக இருக்கும் தெய்வம்..

  அதே போல, கோயில் பல வகைப்படும்.. குலதெய்வம், காவல் தெய்வம், ஊர் தெய்வம்,… ஒவ்வொரு ஜாதிக்கும் குல தெய்வக் கோயில் என்பது கண்டிப்பாக இருக்கும்.. மன்னர்களுக்கும் சேர்த்துதான். பொதுவாக இந்த குல தெய்வ கொயில் அம்மனாக தேவியாக இருக்கும்.. உதாரணத்துக்கு, நேபாள மன்னர், ஒவ்வொரு வருடமும், தன் குல தெய்வத்துக்கு பலி கொடுத்து பூஜை செய்வார்..

  இதில் முக்கியம் என்னவென்றால், அம்மன் கோயிலில் பிராமணர்கள் பூஜை செய்யகூடாது.. பண்டாரம் தான் செய்ய வேண்டும்..

  நமது கலாச்சாரத்தில், குல தெய்வத்திற்குதான் முக்கியத்துவம் அதிகம்.. ஒருவன் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் கும்பிடலாம்.. ஆனால், குலதெய்வத்தை கும்பிட்டால்தான் அந்த பலன் கிடைக்கும்..

  ஒவ்வொரு ஜாதிக்கும் குல தெய்வம் இருக்கும்பொழுது, மற்றவர் கோயிலில் நுழைய அவசியமே இல்லை.. பாரம்பரியமிக்க எந்த தலித்தும் மற்றவர் கோயிலுள் நுழைகிறேன் என்று சொல்ல்மாட்டான்.. வெறும் மார்க்சிய வாதிகள் தான் இப்படி இதுவரை கத்திக்கிட்டிருக்கனுங்க.. இந்துதுவாவாதிகள், இதை புரிந்து கொண்டிருந்தார்களேயானால், இப்படி முட்டாள்தனமால் கட்டுரை எழுத மாட்டார்கள்.. ஏன் அவர்களுக்கு புரியவில்லை..? ஏனா, தலித் என்ன நினைக்கிறாங்கன்னு அவங்க தெரிஞ்சுக்க எந்த முயற்சியும் இது வரையில் எடுத்ததில்ல… அப்படி முயற்சி எடுத்து, ஒரு பாரம்பரியமான தலித்திடம் போய் கேட்டுருந்தாங்கனா, உண்மை புரிந்திருக்கும்.. இதுவரை யாரும் கேட்கவில்லை.. இனிமேலாவது கேட்பார்களென்றால் இந்த கட்டுரை எழுதிய கொடுக்கில்லாத குளவிக்கு, கொஞ்சம் வீரியம் வரும்.. இல்லையென்றால, அம்மியில்லாத குளவியா மாறிருவாரு.. என்ன குளவி அவர்களே?

  சரி.. ஈஸ்வரன் கொயிலும், பெருமாள் கோயிலும், யாருக்கு சொந்தம்? அதை யார் கட்டினார்களோ, அவர்களுக்கு சொந்தம்.. பொதுவாக, ஈஸ்வரன் கோயில், அரசனுடைய தேசத்தின் நலன் கருதி (தேசம் என்பது, வெறும் மக்கள் மட்டும் அல்ல.. இயற்கை, மண், மற்றும் பல அம்சங்களை கொண்டது) கட்டுவது.. வெறும் மக்களுக்காக கட்டியது கிடையாது.. ஒவ்வொரு தேசத்திற்கும் பஞ்ச பூதங்கலின் தன்மையை பொருத்து சக்தியுள்ள ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, அங்கு ஆகம முறைப்படி அரசன் கோயில் கட்டுவான்.. அது அவனுடைய தேச நலனுக்காக.. அதில் வழிவடும் உரிமை, அந்த தேசத்தை நிர்வகிப்பவர்களுக்கு.. அவர்களை ஒருங்கிணைக்க.. பொது மக்களுக்காக அல்ல..

  ஆனால், இன்று அரசனுடைய கோயிலை, அரசாங்கம் என்று சொல்லிக் கொள்ளும் காலணிய அமைப்பு பிடுங்கிக் கொண்டது.. அவர்களை பொருத்த வரை அது பிடுங்கப்பட்ட பொருள்.. அதாவது கொள்ளையடிக்கப்பட்ட பொருள்.. கொள்ளையடிக்கப்பட்ட இடமும் பொருளும், எல்லாருக்கும் பங்கு போடுவதிலும், எப்படி வேண்டுமானாலும் வைத்திருப்பதிலும் எந்த வருத்தமும் இல்லை? ஆனால், அதை உருவாக்கியவருக்கு? அரசன் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக, அல்லது, அரசன் அதிகாரம் பிடுங்கப்பட்ட காரணத்தால், யார் வேண்டுமானாலும் கோவிலுக்குள் நுழையலாம் என்பது கொடுமையிலும் கொடுமை..

  இப்படி கோயிலில் இவ்வளவு தாத்பர்யங்கள் இருக்கும்பொழுது, நாம் எல்லா கொயிலும் சர்ச்சு மாதிரி ஒரு கட்டடமாக பாவிப்பதால்தான் இப்படி குழம்பி தவிக்கிறொம்..

  மிக அழகாக பார்த்து கட்டப்பட்ட உங்கள் வீட்டை நான் பிடுங்கிக்கொண்டு, பொது மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று சொல்லி, திறந்து விட்டா எப்படி இருக்கும்?

  * மார்க்சிய சமத்துவத்த இந்துதுவ வாதிகள் கையில் எடுத்துக்கொண்டு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. சமத்துவம் இரண்டு இடத்தில்தான் இருக்கும்.. ஒன்று அடிமைகளிடம்.. இன்னொன்று கொள்ளைக்காரர்களிடம்.. ஒரு சுதந்திரமான, நாகரிகமான சமூகத்தில் சமத்துவம் இருக்க முடியாது..
  உதாரணத்துக்கு, எல்லா பெண்களுக் ஒன்றுதான்.. ஆனால், உறவு முறை என்று வரும்பொழுது, மனைவியையும், மகளையும், தங்கையும், தாயையும் நாம் சமமாக பார்க்க முடியாது.. ஒவ்வொருவரிடமும் நாம் நடந்து கொள்ளும் முறை வேறு வேறானது.. இந்த உண்மை ஏன் இந்துத்துவவாதிகளுக்கு உரைக்கவில்லை? சமத்துவம் இயற்கைக்கு விரோதமானது.. ஒரு அடிமை சமூகத்தில்தான் இருக்கும்.. ஏனா, அடிமைகளுக்கு உறவு முறைகள் இல்லை.. சுதந்திரம் இல்லை..

  ஒரு குடும்பத்துக்குள்ளேயே எல்லாரும் சமம் இல்லை எனும்பொழுது, ஒரு சமூகத்தில்?

 114. @ramkumaran,

  /** தலித்துகளோ வேறு யாரோ தகுந்த நியமங்களோடு வேதம் கற்க முன்வந்தால் வரவேற்கப்படவேண்டிய ஒன்று . ஆனால் பலரும் மேற்கத்திய கல்வியால் பாதிக்கபட்டு இந்து நூல்கள் மேல்ஜாதியினர் செய்த சதி என்ற எண்ணத்தில் உள்ளனர் . மேலும் இந்த செய்தியை பார்த்தல் வேதம் கற்று அதன் நியமங்கள் படி நடப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும்

  http://ibnlive.in.com/news/namboothiri-grooms-turn-to-orphanages-for-brides/178509-60-116.html
  **/

  ராம்குமரன்,

  1. தகுந்த நியமங்கள் என்று எதையெல்லாம் குறிப்பிடுகிறீர்கள்?

  2. வேதம் படிப்பது என்பது காலேஜ் படிப்பு போல எண்ணுகிறீர்களா? 4 வருடம் படித்துவிட்டு, கோயிலில் போய் நல்லா பெர்ஃபார்ம் பண்ணுவதற்கு.. நீங்கள் சொல்வது பார்த்தால் டிப்லொமா பட்டமே குடுப்பீர்கள் போல.. ஏற்கனவே, சில யொகா குருக்கள் (ரவிஷங்கர் உட்பட) அப்படி செய்து கொண்டிருக்கிறார்கள்..

  3. வேதம் தெரிந்த எல்லாருமே அர்ச்சனை செய்ய முடியாது என்று தெரியுமா உங்களுக்கு? ஒரு வைஷ்யர், பூனூல் போட்டு, வேதம் கற்றாலும், அவர் பொய் கருவரையில் நின்று ஓதக்கூடாது.. அதுதான் நமது தர்மம்.. அப்படி இருக்கையில், தலித்கள் வேதம் பயின்று என்ன செய்வார்கள்?

  4. எத்தனை தலித்கள் வேதம் கற்க வேண்டும் என்று விருப்பபடுகிறார்கள்? ஏதாவது சர்வே எடுத்தீர்களா? அவர்களின் கருத்து என்ன?

 115. செந்தில் ராஜா,

  இந்துத்துவவாதிகள் தீண்டாமை கூடாது என்று சொல்வது கிறுத்துவப் பிரச்சாரமே என்று சொல்கிறீர்கள்.

  இது கிறுத்துவப் பிரச்சாரம் என்றால் நான் போப்பாண்டவராக ஆசைப்படுகிறேன்.

  .

 116. செந்தில் அவர்களின் கருத்தை நாம் முழுமையாக ஏற்கிறேன். தலித் என்று சொல்லப்படும்… அதாவது மெக்காலே பிள்ளைகளால் தாழ்ந்த சாதி என்று சொல்லப்படும் ஒவ்வொரு குலத்திற்கும் தனிப்பட்ட குலக் கோயில்கள் உள்ளன. நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எங்கள் கோயிலுக்குள் சங்கராச்சாரியாரே வந்தாளும் வெளியில் தான் நிற்க வேண்டும். வியாசரே வந்தாலும் அவருக்கும் இதே பதில் தான். தேவை இல்லாமல் கம்யூனிஸ் டுபாக்கூர்களை இங்கு கொண்டு வந்து குழப்ப வேண்டாம். தலித் என்று சொல்லி கொள்ளும் கயவர்கள் யாரும் தனது பாரம்பரிய பண்பாட்டை விட்டு மதம் மாறியவர்களே…

  வேண்டுமானால் மெக்காலே குழந்தைளான போலி உயர் சாதி பைத்தியங்களை பிரிட்டிஷ்காரன் உருவாக்கிய சாக்கடையை தூர் வார செய்யுங்கள்…. அந்த பணியை செய்யும் தலித் என்று சொல்லப்படும் மக்களை மாற்று காலணிய இத்தாலி அரசாங்கத்தின் உயர் பதவில் அமர்த்துங்கள் எங்களுக்கு என்ன வந்தது…..

  இங்கு உள்ள எத்தனை பேருக்கு பள்ளர்கள் குலக் கோயில் என்ன என்று தெரியும் என்று எனக்கு தெரியவில்லை….

  இரண்டு சாதி வெறியர்கள் அரசியல் மற்றும் ஆப்பிரகாமிய டிராகுலாக்களினால் தெரு நாய் போல சண்டை போட்டு கொண்டால் அதற்காக நான் ஏன் எனது பாரம்பரிய அடையாளத்தை விட வேண்டும். நான் ஏன் சாதியை தவறு என்று நினைக்க வேண்டும். எந்த மாநிலத்திலும் ஏன் எந்த காலத்திலும் செட்டியார்கள் பிற சாதியினருடம் சண்டையிட்டார்கள் என்று சொல்ல முடியுமா?

  சும்மா சாதி சண்டை வீதி சண்டை என்று ஏமாற்ற வேண்டாம்….

  மீண்டும் சொல்கிறேன். நான் இந்தியன் என்று சொன்னால் அதற்கு அமெரிக்காவின் எதிரி என்று ஆகாது. நான் ஆண் என்று சொன்னால் அது பெண்களுக்கு எதிரானவன் என்று ஆகாது

  நான் ஒரு செட்டியார் என்று சொன்னால் அது பள்ளர் இனத்தை அவமதிக்கிறேன் என்று ஆகாது.

  அதுவும் தவிர வேதம் யார் வேண்டுமானாலும் படித்து கொள்ளட்டும். இதில் எனக்கு என்ன வந்தது….

  அது சரி தேவர் இனத்தை சேர்ந்த மக்கள் படும் கஷ்டத்தை பற்றி எவறாவது கவலைபட்டது உண்டா? அவர்கள் வாழ்வாதாரமான விவசாயம் அழிக்கப்பட்டு அவர்கள் பிச்சைகாரர்களாக மாறியுள்ள நிலை உங்களுக்கு தெரியுமா?

  இந்த இலட்சனத்தில் செல்வி ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேவர் இனத்தை சேர்ந்தவர் அதனால் தான் காவல் துறையினர் இது போன்று செய்தார்கள் என்று பேச்சு வேறு…..சசிகலா வேற சாதி.. சம்மந்தப்பட்ட தேவர் இனத்தவர் வேற சாதி…..

  அதுவும் தவிர மீடியாக்கள் முதல் கம்யூனிஸம் வரை எல்லா இடங்களிலும் உயர் சாதி என்று தன்னை தானே சொல்லி கொண்ட மெக்காலே கூட்டம் தான் உண்டு முடிந்தால். அவர்களை நாடு கடத்துங்கள்… உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்…..

 117. /** செந்தில் ராஜா,

  இந்துத்துவவாதிகள் தீண்டாமை கூடாது என்று சொல்வது கிறுத்துவப் பிரச்சாரமே என்று சொல்கிறீர்கள்.

  இது கிறுத்துவப் பிரச்சாரம் என்றால் நான் போப்பாண்டவராக ஆசைப்படுகிறேன்.
  **/

  அப்படியென்றால், உங்களை ஒதுக்கி வைக்க நாங்கள் தயங்க மாட்டோம்.. நேரடியான எதிரிகளை விட, கூட இருந்து குழி பறித்து அழிப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.. இது சாணக்கிய நீதி..

  உங்களுக்கு ஜாதியும் தீண்டாமையும், வேண்டாம் என்றால், எல்லா ஜாதியையும், இந்து மதத்தில் இருந்து நீக்கி விடுங்கள்.. ஏன் உங்களால் அதை செய்ய முடியவில்லை? ஏனென்றால் அப்படி எல்லா ஜாதியையும் நீக்கிவிட்டால், மீதி இருப்பது, கெட்டுப்போன பிராமணர்களும், இந்துதுவ பிராமணர்களும், அப்புறம் கூட சில கலாச்சார அகதிகளும்தான்.. மறுபடியும் சொல்கிறேன்.. எந்த ஜாதியும், தன்னை இந்து என்று சொல்லிக்கொள்வதில்லை.. உங்கள் மேல் இருக்கும் நல்லேண்ணத்தினால்தான், வரலாற்று பந்தத்தினால்தான், நீங்கள் இந்து என்ற அடையாளத்தை அளிக்கும்பொழுது, எல்லா ஜாதிகளும் எந்த கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளது.. அவர்கள் கிறித்துவத்தையோ இஸ்லாமையோ, ஏற்றுக் கொள்ளவைல்லை. புத்த மதத்தை கூட ஏற்றுக்கொள்ளவில்லை.. அப்படி உங்களை அரவணைத்த ஜாதிகளை, நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்று பாருங்கள்.. குற்றவாளியை போலவும், காட்டுமிராண்டிகள் போலவும், நடத்தி, ஜாதிகளையே அழிக்க நினைக்கிறீர்கள்..

  இது எப்படி இருக்கிறது என்றால், தவறான வழிக்கு சென்ற சில பெண்கள், பத்தினிகளே இருக்க கூடாது என்று சொல்வது போல.. பிராமண தர்மத்தை விட்டு, மிலேச்ச கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு ரெண்டுங்கெட்டான் வாழ்க்கை வாழ்ந்து வரும் உங்களை போன்றவர்கள், பாரம்பரிய பிராமணர்கள் தங்கள் தர்மத்தை கடைபிடிக்க விடாமல் அவர்களை கெடுத்து, கெட்டுப்போன பிராமணர்களின் எண்ணிக்கையை அதிகரித்து உங்கள் பாதுகாப்பை தேடிக்கொள்கிறீர்கள்…

  அதை நாங்கள் என்றைக்கும் துணை போக மாட்டோம்.. பாரம்பரிய பிராமணர்கள் அவர்களின் தர்மத்தை கடைபிடிக்க என்ன சூழ் நிலை தேவையோ, அதை உருவாக்கித்தருவோம்.. அது, தீண்டாமையாக இருந்தாலும் சரி.. நாங்களே தீண்டப்படாதவர்களாக இருந்தாலும் சரி.. தர்மம் தான் முக்கியம்.. தீண்டாமையால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.. அதிக பட்சம் அவமானப்படுத்தப்படலாம்.. இது ஒரு பெரிய விஷயமே இல்லை..

  This is just a behavioural problem.. or at the most inter-personal problem..

 118. சொல்லப்போனால், ஆங்கிலேய அரசாங்க வேலைக்கு சென்ற பிராமணர்களை, ஆச்சார பிராமணர்கள் ஒதுக்கி வைத்து, பிராமண சமூகத்திலிருந்து துரத்தியடித்திருக்க வேண்டும்.. ஆனால், அதிகாரம் இல்லாததாலும், அவர்களை பாதுகாக்கும் சத்திரிய வம்சம் இல்லாத்தாலும், திருமண பந்தத்தாலும், அவர்களால் அதை செய்ய முடியவில்லை.. அதனால், பிராமண எதிர்ப்பு இயக்கம் வந்த பொழுது, அவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.. காரணம், ஆங்கிலேய வேலைக்கு சென்றவர்கள் தங்களையும் பிராமணர்கள் என்று கூறிக் கொண்டதால்..
  இன்று வரை, அதே பிரச்சினைதான் தொடர்கிறது..

  முதலில், பிராமண தர்மத்தை கடைபிடிக்காதவர்கள் பிராமணர்களே இல்லை என்று அறிவிக்க வேண்டும்.. வேண்டும் என்றால, “முன்னாள் பிராமணன்” அல்லது “கெட்டுப்போன பிராமணன்” என்று அடையாளப்படுத்திக் கொள்ளட்டும்.. உண்மையிலேயே தர்மத்தின் மீது மதிப்பு இவர்களுக்கு இருந்தால், “நாம்தான் இப்படி வழிதவறி வந்துவிட்டோம்.. மீதி இருக்கிறவர்களாவது தர்மத்தை காப்பாற்றட்டும் என்று எண்ணி, பாரம்பரிய பிராமணர்களை ஆதரித்திருப்பார்கள்”.. ஆனால், இவர்கள் ஆங்கிலேய அரசாங்க வேலை மூலம் வந்த அதிகார போதையில், கேள்வி கேட்க சத்திரியர் இல்லாததால், தங்கள் வசதிக்கு தகுந்த மாதிரி, தர்மத்தையே மாற்ற ஆரம்பித்தார்கள்.. அதற்கு இந்துத்துவா என்று பெயர் கொடுத்தார்கள்.. அந்த இந்துத்துவத்திற்கு எதிராக, ஜாதிகளும் வர்ணங்கலும் இருந்ததால், அதை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.. கேட்டால், காலத்திற்கு தகுந்த மாதிரி மாற வேண்டுமாம்.. இவர்களே காலத்தையும் முடிவு செய்துவிட்டார்கள்.. எப்படி மாற வேண்டும் முடிவுசெய்துவிட்டார்கள்.. எது எது இருக்க வேண்டும், எது இருக்க கூடாது என்று இவர்களே முடிவு செய்து விட்டார்கள்.. யாரையும் கேட்க வில்லை.. நமது ரிஷிகளும், முனிவர்களும் முட்டாள்கள்.. அல்லது கொடூரக்காரர்கள்.. இப்படிப்பட்ட வர்ணாஷ்ர தர்மத்தை ஏற்படுத்தி மக்களை அடிமைப்படுத்தி விட்டிருக்கிறார்கள்.. இந்த இந்துத்துவ வாதிகள் வந்து மீட்கிறார்கள்..

 119. நண்பர் கோமதி செட்டி அவர்களே………..

  // இந்த இலட்சனத்தில் செல்வி ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேவர் இனத்தை சேர்ந்தவர் அதனால் தான் காவல் துறையினர் இது போன்று செய்தார்கள் என்று பேச்சு வேறு…..சசிகலா வேற சாதி.. சம்மந்தப்பட்ட தேவர் இனத்தவர் வேற சாதி…//

  தெளிவாக மத , தேசப்பற்றுடன் கருத்துக்களை முன் வைக்கும் உங்களிடம் இது போன்ற கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை……….

  நீங்கள் மேலே சொன்ன கருத்தை பதிவு செய்தவன் நான் தான்……நான் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவன்…..ஹிந்து இயக்கங்களின் தீவிர ஆதரவாளன்……மதுரை – சத்திரியகுல நாடார் வகுப்பை சார்ந்தவன்……….தென் மாவட்டங்களுடன் பல வருடங்களாக வர்த்தக ரீதியாக தொடர்புள்ளவன்………தென் மாவட்டங்களில் பல நண்பர்கள் எனக்கு உண்டு…..நான் ஒவ்வொரு முறை தென் மாவட்டங்களுக்கு செல்லும் போதும் அங்கு நிலவும் கடுமையான சாதி துவேஷங்களை கண்டு மனம் நொந்தவன்…….அவரவர் சாதி அவரவருக்கு…….அது அடுத்தவரை தொந்தரவு செய்யாதவரை யாருக்கும் பிரச்சினையில்லை……..ஆனால் நான் மேல்சாதி ,நீ கீழ் சாதி என்று துவேஷம் பாராட்டுவது நிச்சயம் நல்லதல்ல……

  நீங்கள் ஒத்துக்கொண்டாலும் சரி…..ஒத்துக்கொள்ளாவிட்டாலும் சரி ……அதிமுக தேவர் ஆதரவு கட்சி என்ற முத்திரை பலமாக விழுந்துள்ளது……..அதற்கு காரணம் சசிகலா குடும்பம் தான்……சசிகலாவின் கணவர் நடராசன் தொடர்ந்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார்…..தேவர் சாதியில் உள்ள உட்பிரிவுகளை [கள்ளர்,மறவர்,அகமுடையார் ] விடுங்கள்…..ஆனால் அதிமுக ஆட்சியில் தேவர்களுக்கு ஒரு free hand தரப்படுவது மறுக்க முடியாத உண்மை………

 120. செந்தில் அவர்களே……

  காலுக்கு கீழ் தரை நழுவிக்கொண்டிருக்கிறது……..ஆனால் நீங்கள் பழம்பெருமை பேசிக்கொண்டு திரிகிறீர்கள்…….

  தலித்களை [ இந்த வார்த்தையை நான் ஆதரிக்கவில்லை ] ஹிந்துக்களிடமிருந்து பிரித்து , முஸ்லிம் , கிறித்தவ , தலித் ஆகியோரை ஒன்றாக சேர்த்து ஹிந்துக்களுக்கு எதிராக மோதவிட சர்வதேச அளவில் சதி நடக்கிறது……[ சமீபத்திய மத வன்முறை தடுப்பு சட்ட மசோதா ஒரு உதாரணம்…..]

  ஒருவேளை அந்த சதி வெற்றி பெற்றால் பிறகு யார் பெரும்பான்மை ….யார் சிறுபான்மை என்பது தெரிந்து விடும்…..[ இதை கிறித்தவ வெறியரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சவாலாகவே தெரிவித்தார் ] அதன் பிறகு நீங்கள் வலியுறுத்தும் பாரம்பரியம் என்ன ஆகும் என்று தெரியாது……மாயன்களும், செவ்விந்தியர்களும்,ஆஸ்திரேலிய பழங்குடியினரும்[ அபாரிஜின்ஸ் ] என்ன ஆனார்கள் என்பதை வரலாற்றில் சென்று தேடிப்பாருங்கள்……..

  சொந்த மருமகன் என்று பாராது ,பிரித்திவிராஜனை ராஜனை அழிக்க , ஜெயச்சந்திரன் கோரி முகம்மதுவிடம் ஆதரவு கேட்டதால் தான் இந்தியாவில் இஸ்லாமியர்கள் நிழைய முடிந்தது……அதன் பிறகு விளைந்த அனர்த்தங்களை நாடு அறியும்…….

  தேச , மத மேம்பாட்டுக்காக ஒரு சிறு துரும்பை கூட கிள்ளிப்போடாதவர்கள் எல்லாம் ஒரு கணினி கிடைத்தால் போதும்……ஹிந்து இயக்கங்கள் மீது புழுதி வாரி தூற்ற வந்து விடுகிறார்கள்………

  அன்றும் சரி …..இன்றும் சரி …….நம் தேசத்தில் ஜெயச்சந்திரன்களுக்கும்
  எட்டப்பன்களுக்கும் குறைவே இல்லை…….இது நம் தேசத்தின் தலைவிதி போலும்……..

 121. //நான் ஒரு செட்டியார் என்று சொன்னால் அது பள்ளர் இனத்தை அவமதிக்கிறேன் என்று ஆகாது. அதுவும் தவிர வேதம் யார் வேண்டுமானாலும் படித்து கொள்ளட்டும். இதில் எனக்கு என்ன வந்தது//

  செந்திலை ஆதரிக்கிறேன் என ஆரம்பித்து எழுதுகிறீர்கள். இரண்டாவது வரியில் சொல்லப்பட்டதைச் செந்தில் மறுக்கிறார். தலித்துகளுக்கு வேதம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. அவர்கள் பிராமணர்கள் செய்வதைச் செய்யக்கூடாதென்கிறார். சமத்துவம் என்பதே இல்லை; அது வெள்ளைக்காரன் நம்மைப்பிளவுபடுத்தி நம் சமூகத்தைக்கெடுக்கச் செய்த தந்திரம் என்கிறார். எப்படி ஆதரிக்கிறேனெனச் சொல்கிறீர்கள் ?

  முதல் வரியை எடுத்துக்கொண்டால், செட்டியார் என்று சொன்னால், பிற இனத்தவரை அவமதிக்கிறேன் என்றாகாது என்பது உண்மைதான். அப்படிச் சொல்லி மட்டும் நின்று விடுகிறார்களா என்ன ? செட்டியார்கள் பெருவாரியாக வாழும் ஊர்களில் ஆதிகாலத்திலிருந்து தலித்துகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்தான் வாழவைக்கப்பட்டார்கள். இன்று அவ்விடங்கள் ஊர் விரிந்ததனால் உள்ளே வந்து விட்டன. வாழவைத்து ஊருக்குள் வந்தால் தீண்டாமைக்கு ஆளாக்கும் வழக்கம் இருந்தது. இன்றும் பலவிடங்களில் இருக்கிறது. செட்டியார்கள் குடும்பங்களின் சம்பாசனைகளில் தலித்துக்களை நகையாடும் வழக்கம் உண்டு. செட்டியார்கள் முன்னால் தலித்துகள் கைகட்டி நிற்கும் பழக்கும் இன்றும் உண்டு.

  இப்படிப்பட்டவை எல்லாச்சாதியினரும் செய்ததுதான் என்றாலும் செட்டியார்கள் என்று மட்டும் சொல்லும்போது இதை எடுத்துச் சொல்ல வேண்டியதாகிறது.

  தீண்டாமை என்பது நேரடியாகச் செய்யும் போது பெருத்த மனவேதனையைச் தருகிறது. அதாவது அவர்களை நேராகவேத் திட்டுதல், முகத்துக்கெதிராகவே செயல் போன்று. அப்படிபட்ட மனவேதனையையும் அதோடுனில்லாமல், வாழ்க்கை வாய்ப்புக்களையும் மறுத்ததுதான் தீண்டாமை.

  இதை எல்லாரும் செய்தார்கள். இதனால் நெடுங்காலமா அவர்கள் கஷ்டப்பட்டார்கள் தலைமுறை தலைமுறையாக!

  தனிநபராக நீங்கள் சொல்வது பொருந்தும். அப்படிப்பட்ட தனிநபர்கள் வேறு; பொதுஜனம் வேறு.

  ஒரு சில உதாரணங்களைச் சொன்னால், சூர்ய நாராயண சாஸ்திரி, பண்டிதமணி கதிரேசச்செட்டியார், ராமசாமி, லட்சுமணசாமி முதலியார்கள், காமராஜ் நாடார், ஒமந்தூர் ராமசாமி படையாச்சி, என்றெல்லாம் தனிநபர்கள் உண்டு. இவர்களுக்கும் தீண்டாமைக்கு எந்தத் தொடர்புமில்லை. ஆனால் இவர்கள் சார்ந்த ஜாதியினர் தீண்டாமை பண்ணவில்லையென்று சொல்ல முடியுமா ?

  எனவே கருத்து வாதங்கள் ‘பொதுவாக சமூகக்கருத்துகளாகத்தான் இருக்கவேண்டுமே தவிர நம்மைத் தனிநபராகக் கொண்டு எழுதக்கூடாது.

   கருமுத்து

 122. சில மறுமொழிகள் என்னை வியக்க வைக்கின்றன. அவரவர்களுக்கு அவரவர் குலதெய்வக் கோயில்களுக்கு மாத்திரம் பிரவேசிப்பது தான் உரிமை/பரிந்துரை என்பது வேடிக்கையாக இருக்கிறது.

  ‘மேல்சாதி அறிவுஜீவிகள்’ என்று ஒரு பக்கமும், ‘தலித்துக்களுக்கென்று தனியாக ஆலயமும் தெய்வமும்’ என்று இன்னொரு பக்கமும் இதென்ன double-pronged attack?

  //நமது கலாச்சாரத்தில், குல தெய்வத்திற்குதான் முக்கியத்துவம் அதிகம்.. ஒருவன் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் கும்பிடலாம்.. ஆனால், குலதெய்வத்தை கும்பிட்டால்தான் அந்த பலன் கிடைக்கும்..//

  ‘ஹிந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை’ என்று பேசிவிட்டு, இப்பொழுது என்ன ‘நமது கலாச்சாரம்’ என்று கூறுகிறீர்கள்?? அது எந்தக் கலாச்சாரம்? ஸ்ரீவைஷ்ணவமா, சைவ சித்தாந்தமா, மத்வ மதமா, ஸ்மார்த்தர்களின் அத்வைத மதமா? கௌடீய வைணவ மதமா? காஷ்மீர் சைவமா?

  //ஒவ்வொரு ஜாதிக்கும் குல தெய்வம் இருக்கும்பொழுது, மற்றவர் கோயிலில் நுழைய அவசியமே இல்லை.//

  இப்படி எல்லாம் உங்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.

  குலம், பால் முதலான பாகுபாடுகளால் வேறுபட்டவர்கள் அனைவரும் தன்னை வழிபடலாம் என்று கண்ணன் கூறியிருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

  இராமானுஜர், ஸ்ரீ சைதன்யர் போன்றோர் செய்த சீர்திருத்தங்கள் என்னாவது? அவர்களும் ‘மெக்காலேவின் தாக்குதலால்’ உந்தப்பட்டவர்களா?

  ‘குல வேறுபாடின்றிக் கண்ணனைக் கும்பிடுங்கள்’ என்று காட்டித் தந்த நம்மாழ்வார் என்ன மார்க்சீய சமத்துவ வாதியா?

  வேத ஞானம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது. அனைத்து மக்களின் இம்மை மறுமைப் பலன்களை எளிதில் அளிக்கவல்லது. இதை வேதமே கூறுகிறது.

  மேலும், குலாச்சாரவாதிகள் கூட வேதத்தை அனைவரும் ஸ்வரத்துடன் வாசிப்பதைத் தான் தமக்கு உடன்பாடு இல்லை என்று கூறுவர். அவற்றின் பொருளை வியாக்கியானங்களுடனோ, இதிகாச-புராண, கீதை, தமிழ்மறை வாயிலாகவோ யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம் என்று அவர்களே கூறுவார்கள். கண்டிப்பாக இது அனைவர்க்கும் ஏற்றது.

  கண்மூடித் தனமாக எதையுமே ‘இது குலாச்சாரம், இது பரம்பரை வழக்கு’ என்று வேதாந்திகள் ஏற்பதில்லை. பெரியோர்கள் ஆய்ந்து எழுதியவற்றை வைத்துக் கொண்டு தான் இவை நிர்ணயிக்கப்படும்.

  yasya yal lakṣaṇaḿ proktaḿ
  puḿso varṇābhivyañjakam
  yad anyatrāpi dṛśyeta
  tat tenaiva vinirdiśet

  Translation “If one shows the symptoms of being a brāhmaṇa, kṣatriya, vaiśya or śūdra, as described above, even if he has appeared in a different class, he should be accepted according to those symptoms of classification.” – ஸ்ரீமத் பாகவதம், 7.11.35

 123. களிமிகு கணபதி, வெள்ளையர்கள் மட்டும் தான் போப்பாக மாற முடியும். அதுவும் தவிர நீங்கள் ஐரோப்பாவில் பிறந்து இருக்க வேண்டும். இத்தனை வருடத்தில் ஒரு அமெரிக்கர் கூட போப்பாக ஆனது கிடையாது. இந்த நிலையில் கருப்பர்களும் செமி கருப்பர்களும் கனவில் கூட நினைத்து போப்பாக மாற முடியாது. இது போன்ற பாரம்பரிய கட்டுபாடுகளில் விருப்பம் இல்லாதவர்கள் ஆரிய சமாஜம் அல்லது ISKON போன்ற அமைப்பில் சேரலாம்…. அவ்வளவு ஏன் சீக்கிய மதம், ஜைன மதம் மற்றும் புத்த மதம் என்று எத்தனையோ இருக்கிறது. நீங்கள் சீன பண்பாடான தௌவிசத்தை கூட இந்தியாவில் தொடங்கலாம்.

  ஆப்பிரகாமிய மதத்தில் சேர்வதற்கு பேசாமல் நாத்திகராக மாறலாம்  பாரம்பரிய பண்பாட்டு முறைகள் இல்லாத எத்தனையோ ஆயிரக்கணக்கான் கோயில்கள் உள்ளன என்பதை தங்களுக்கு நினைவுறுத்த விருப்புகிறேன்.

  (நகைசுவைக்காக சொன்னேன். தவறாக நினைக்க வேண்டாம்)

 124. செந்தில்,

  //
  @sarang,

  Pls refer this site for rishi vs muni..

  http://en.wikipedia.org/wiki/Rishi_Muni

  both are same.. the concept of sanyasi became popular only after rise of budhist monks..

  and grahastha is NOT just having wife.. grahastha is the one who is part of varna dharma.. rishis and sidhars had wife, and lived in forest.. that doesnt mean they are grahastha.. they do not earn wealth..

  //

  இதற்க்கு விக்கியை நம்பும் உங்களை பாராட்டுகிறேன்

  ர்ஷி முனி என்ற இரண்டும் சமக்ரிட்ட வார்த்தைகள் அல்லவா – அதனால் சமஸ்க்ரிட்ட அர்த்தத்தை பாப்போம் – சும்மா ஒரே ஒரு எஜ்ஜாம்புல்

  முனி என்ற சொல் சமஸ்க்ரிதத்தில் ஆண் பால் சொல். சொல்லுக்கு சமஸ்க்ரிதத்தில் பெண் பால் வார்த்தையும் உண்டு முனீ என்று.

  ர்ஷி என்ற சொல்லுக்கு பெண் பால் சொல்லே கிடையாது – ர்ஷி என்ற சொல்லை பிரித்தால் ர்தத்தை அறிபவர் அல்லது காண்பர் அல்லது கடை பிடிப்பவர் என்று பொருள் – செயல் முறையில் கொண்டுவரப்படும் ர்தம் தான் சத்யம் என்பது.

  சைடுல புதுசா ஒரு விஷயம் வேற சொல்றீங்க – சம்ந்யாஸித்வம் புத்தருக்கு அப்புறம் தாம் பிரபலம் அடைந்தது என்று – பலே பலே. புத்தர் இந்திய தர்மத்திலிருந்து சதுர் மாச வ்ரத்தத்தை கூட காபி அடித்துள்ளார்.

  கிருஹஸ்தர்கள் யார் இல்லை என்பதற்கு அருமையான விளக்கம் தந்ததுக்கு நன்றி.
  iநான் ர்ஷி வேறு முனி வேறு என்று உங்களுக்கு சொன்னது விளக்கம் கொடுப்பதற்காக அல்ல – நீங்கள் யாரையோ எல்லாம் தெரிந்து கொண்டு எழுதுங்கள் என்று சொல்லி விட்டு பிறகு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்
  ர்ஷி முனி, சந்நியாசி புத்தர் க்ருஹஸ்தர் என்று போட்டு குழப்பி அடித்ததை புரியவைக்கலாம் என்று தான் – நீங்கள் என்னடான்னா புது புது விஷயங்களை அடுக்க ஆரம்பித்தாகிவிட்டது.

  இன்றைக்கு நாட்டின் நிலைமையை புரிந்து கொண்டு செயல் படுபவனே அறிவாளி. தலித்துக்கள் கோவிலுக்கு வெளியே இருந்து கும்பிட்டுட்டு போகட்டுமே என்று பேசுபவர் பற்றி என்ன சொல்ல.

  எவ்வளவு பாணர் கதைகளை தான் நாம் படிப்பது. எவ்வளவு வாட்டி தான் ஆழ்வார் நாயன்மார் கதைகளை சொல்வது.

  நம்மாழ்வார் தலித் தான் அவர் என்ன கோவில் வெளியிலேயே இருந்து தான் கும்பிட்டாரா?

  உங்களுக்கு தெரிந்த ரகசிய மேட்டர் தெரியாமலா தலித் ஆலயப் பிரவேசத்தை ராமானுஜர் நடத்திக் காட்டினார்.

  வீர வேசமாக பேசும் முன்பு உங்கள் பக்கம் சான்றுகள் இருக்கிறதா என்று பாருங்கள்.

  உங்களுக்க் தெரிந்த தலித் பெரியர்வர்களிடம் கூறுங்கள் – கோவிலுக்குள் சென்றால் சாமி கொச்சுக்காது மாறாக இவ்வளவு நாள் வராதவன் வந்திருக்கான்னு சந்தோஷப்படும்

 125. //
  4. எத்தனை தலித்கள் வேதம் கற்க வேண்டும் என்று விருப்பபடுகிறார்கள்? ஏதாவது சர்வே எடுத்தீர்களா? அவர்களின் கருத்து என்ன?
  .//

  இங்கு தலித்களுக்கு வேதம் சொல்லித்தரப்படும் என்று போடு வையுங்கள் – எத்தனை பேர் வருகிறார்கள் என்று பாருங்கள் – நிறைய பேருக்கு ஆசை இருக்கு ஸ்வாமின். கொஞ்ச நாள் முன்னாடி இங்கே ஒருத்தர் கேட்டு எழுதி இருந்தார்.

  வேதம் படித்தால் நித்யம் இரண்டு வேலை ஔபாசனம் செய்ய வேண்டும் – செய்யும் பிராமண ஸ்ரேஷ்டர்களை காட்டுங்கள் பார்க்கலாம் – சந்த்யா வந்தனம் செய்யும் பிராமணர்கள் பிராமனர்களுள் பத்து சதவீதம் தான் இருக்கும்

 126. கோயிலுக்கு பஞ்சமர்கள் அவர்களாகவே போக மாட்டார்கள். அதே போல அவர்கள் கோயிலுக்கு நாங்கள் போக மாட்டோம். பின்னே இங்கென்ன பிரச்சினை என்கிறீர்கள் !

  ஆனால் பிரச்சினை இது கிடையாது. பஞ்சமர்கள் தங்கள் இடத்திலேயே மகிழ்ச்சியாக இருந்தார்கள். இருக்க முடியும். எப்படி நீங்கள் இருக்கிறீர்களோ அப்படி. ஆனால் சமூக வாழ்க்கை வீட்டிற்குள்ளேயே தம் தெருவுக்குள்ளேயே முடிந்து விடுகிறதா என்ன ? எனவே ஊருக்குள்ளேயே பஞ்சமர்கள் போக வேண்டிய கட்டாயமும், மேலும் பலவித செயல்களை அவர்கள் மட்டுமே செய்ய முடியுமாதலால் – உதாரணம் ஊருக்குள் செத்து கிடக்கும் பிராணிகளை அகற்றுதல் – பஞ்சமர்கள் ஊருக்குள் வருகிறார்கள். வெறும் கோயில் கும்பிடுதலுக்காக மட்டுமல்ல.

  அப்போது அவர்களை பிற ஜாதியினர் எப்படி நடத்தினார்கள்? வெறும் அக்ரகாரத்தில் மட்டுமல்ல. ஊருக்குள் எல்லாத்தெருக்களில் வழியாக அவர்கள் காலணி அணிந்து மேலாடை உடுத்திச் செல்லக்கூடாது. அவர்களைக்கண்டால் பிற விலகித்தான் செல்வார்கள். கூலியை கும்பிடு போட்டுத்தான் வாங்க வேண்டும். எல்லார் முன்னிலையும் தரையில் குத்த வைச்சுத்தான் பேச வேண்டும். நின்றால், கைகட்டி வாய்பொத்தித்தான் நிற்க வேண்டும். அவர்களை, கேவலமாகவும் ஒருமையிலும்தான் அனைவரும், சிறுவன் முதற்கொண்டு விளிப்பார்கள்.

  ஆக எவையெல்லாம் ஒரு மனிதனை தான் மற்றெல்லோருக்கும் கீழானவன் என்ற நினைப்பை உள்வாங்கச் செய்யுமோ அவையெல்லாம் அவர்கள் மேல் வீசப்பட்டன. அன்றைய சமூகத்தில் அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. எனவே தீண்டாமை அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவர்களும் இதிலேதும் தவறல்ல என்று நினைத்துத்தான் வாழ்ந்தார்கள். அதோடு இல்லாமல், தம்மால் ஊருக்கும் கோயிலுக்கும் தீட்டாகிவிடும் என்று பஞ்சமர்கள் நம்பினார்கள். எனவேதான் திருப்பாணர் ஊருக்கு வெளியே நின்றே அரங்கனைப்பாடினார். ஊருக்குள் வாரும் என்றால் அதை நம்பாமல் ஓடினார். நந்தனார் ஊருக்குள் நுழையும் போது மிகப்பயந்தார் என்று சேக்கிழார் தொடக்கத்திலேயே எழுதுகிறார். போகப்பயந்து, நாளைப் போவேன் எனத் தனக்குத்தானே பொய்களைச் சொல்லிக்கொண்டார். நம்பாடுவான் ஆழ்வார், ஊர் உறங்கிவிட்டது என்று நிச்சயம் செய்த பின்னரே நுழைந்து திருக்குறுங்குடி நம்பி மீது பாசுரமழைகள் பொழிந்து பின்னர் ஊர் விழித்துக்கொள்ளுமுன் ஓடிவிடுவார். ஒருநாள் பிடிபட்டார். ஆக, பஞ்சமர்கள் தங்களால் தீட்டு என்று நம்பினார்கள். தீண்டாமை அவர்களை நம்ப வைத்தது.

  செந்தில் சொன்னது போல பஞ்சமர்கள் பிறஜாதியினர் அருகில் செல்வது கிடையாது எனவே. மேலும் பிறஜாதியினர் வந்து ‘உம்மை நல்லவிதமாக நடத்துகிறேன் வாரும்!’ என்றழைத்தாலும் அவர்கள் செல்வதில்லை என்பதை உலோகசாரங்க முனிவர் வந்தழைத்தபோது திருப்பாணர் ஓடினார். பின்னர் கட்டாயப்படுத்தி அவரைக் குண்டுகட்டாகத் தூக்கி தன் தோளில் வைத்து ஊர்வீதிகளில் நடந்தார் முனிவர் என்பது வரலாறு.

  குலதெய்வத்தைப்பற்றி நிறையப் பேசப்பட்ட்து. சரியே. எனினும் ஊருக்குள் ஒரு கோயில் இர்ந்த்து பொதுவாகத்தான் இருந்த்து. உதாரணமாக பஞ்சமர்கள் தங்களுக்கு ஒரு பெரிய மாரியம்மன் கோயிலைக்கட்டிக்கொண்டார்கள். அது அவர்கள் சேரிக்குப் பொதுவானது. அது தவிர குலதெய்வமும் தனியான கோயிலில் இருக்கும் அது அங்கேயே இருக்க வேண்டுமென்பது கிடையாது. இங்கு ஒன்று கவனிக்க வேண்டும். இவர்கள் அண்டி வாழும் ஊருக்குள் ஒரு கோயில் எல்லா ஜாதியினருக்கும் பொதுவாக இருக்கும். அங்கு இவர்கள் போகமாட்டார்கள். இவர்கள் தவிர பிறஜாதியினர் அனைவருக்கும் உண்டு. இதைக் குறிப்பிடக்காரணம் குலதெய்வம் தவிர பொதுக்கோயிலும் உண்டு. அங்கு பஞ்சமர் நுழைய முடியாது.

  எனவே, தீண்டாமை என்பது பல பரிமாணங்களையுடையது. வெறும் வேதம் படித்தல், கோயிலுக்குள் நுழையவிடாமை மட்டுமல்ல.

  – கருமுத்து

  (திரு கிருஸ்ணகுமார் கனகதாசரைப்பற்றிச் சொன்னது தமிழகத்தில் குடந்தையிலும் திருக்குறுங்குடியிலும் நடந்தது. திருமழிசையாழ்வாருக்காக ஒப்பிலியப்பன் ஒரு சாய்வான தரிசனத்தைத் தந்தார்; ஏனென்றால் ஆழ்வார் பஞ்சமராதலால் உள்ளே வரவில்லை. அப்படியே இன்றும் காட்சி தருகிறார். இதே போல நம்பாடுவான் ஆழ்வாருக்கு கொடிமரம் நம்பியை மறைக்க, ஆழ்வார் தரிசனத்துக்குக் கஸ்டப்பட்டர். எனவே நம்பி கொடி மரத்தை விலக்கிக்காட்டினார். இன்றும் கொடிமரம் விலகியே நிற்கிறது. திருக்குறுங்குடி ஸ்தல புராணம் படிக்கவும்.)

 127. தமில்ஹிண்டுவின் கொள்கை மீது நம்பிக்கை குறைகிறது தேவரை பற்றி அறிந்து இந்த கட்டுரை எழுதப்பட்டது போல தெரியவில்லை, ஆன்மீகமும் தேசியத்தையும் உயிராக போற்றிய உத்தம தலைவரை பற்றிய இந்த கட்டுரை இந்து என சொல்லிக்கொள்ளும் எவருக்கும் இந்த கட்டுரை வலிமிகுந்த அனுபவத்தை தரும் விஸ்வநாத தாஸ் வள்ளி நாடகம் மூலம் தேசபற்றை நாடெங்கும் பரப்பினார் திருநெல்வேலியில் நாடகம் நடத்த முயலும்போது அதனை நிறுத்த வெள்ளை படை முயன்றதை தடுத்து முறியடித்த தலைவர் தேவர், ராமாயணத்தை கிண்டல் செய்து கிமாயணம் மதுரையில் நடத்த முயன்றபோது அதனை அவர்களை ஒரே இரவில் வெளியேற்றியவர் தேவர், இந்த மகத்தான தலைவன் இல்லையென்றால் நீங்கள் கொண்டாட சிலைகள் இருக்காது, திராவிட தலைவர்கள் நொறுக்கி இருப்பார்கள். இன்று வாய் பேசும் இந்த சூரர்கள் எங்கேனும் திராவிட இயக்கங்களின் பொது கூட்டம் நடைபெற்றால் அதை குறித்து மனம் வெதும்பி இணையத்தில் கொட்டி தீர்ப்பார்கள்,அதுதான் அவர்களால் முடியும், அவ்வளவுதான் வீரம் ஆனால் தேவர் நேருக்கு நேர் இன்று அவர்களை எதிர்த்தார் திராவிட ஆரிய கொள்கை மூலம் பிளவு ஏற்ப்படுவதை விரும்பாத மக்கள் தலைவர்,தமில்ஹிண்டு கொண்டாடும் குருஜி கோல்வால்க்கர் கூட்டத்திற்கு தலைமை வகிக்கவே எவரும் வராத சூழலில் அவர் கூட்டத்திற்கு தலைமை வகித்து அவருக்கு பணமுடிப்பை வழங்கியது யார் என உங்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள், உங்களுக்கு இதயம் இருந்து இருந்தால் இவ்வாறு ஏன் எழுதபோகிரீர்கள் (Edited) நல்ல கட்டுரைகளை தந்த தமிழ்ஹிந்து தரம் தாழ்கிறதா?

 128. திரு செந்தில்

  தங்களது ஆரோக்கியமான நீண்ட விவாதத்திற்கு மிகவும் நன்றி. வர்ணாஸ்ரம தர்மத்தை பிராமிணர்கள் கைவிட்டதால்தான் நாடே கெட்டுவிட்டது என்று ஒருதலையாய் சாடியதைதான் நான் சுட்டிகாட்டினேன். என்னை பொருத்தவரையில் யார் வர்ணாஸ்ரம தர்மத்தை முதலில் தொலைத்தார்கள் என்ற கண்டுபிடிப்பே இன்று தேவை இல்லை அதனால் சாதிக்கபோவது ஒன்றும் இல்லை. மேலும் நீங்கள் கூறும் காரணங்களும் ஏற்புடையது அல்ல.

  எனது பூர்வீகம் திருவையாறு, நானும் தஞ்சாவூர்காரன்தான் எனது கொள்ளுதாத்தா வைதியநாத கனபாடிகள், எனது தாத்தா கிருஷ்ண கனபாடிகள், எனது தந்தை வேதம் ஐயர். அவர் மெகாலே கல்விபடித்தவர். அதுவும் நிங்கள் சொல்லும் கிருஸ்துவ லயோலா கல்லூரியில் படித்தவர். அப்பொழுதே அவரை மதமாற தூண்டினார்கள்.(இன்றுவரை நாம் எல்லோரும் படிப்பது மெகாலே கல்விதான் இதில் விதிவிலக்கு யாரும் இல்லை) எங்கள் பரம்பரை நீங்கள் சொல்லுவதுபோல் ஜமீன்தார்கள் அல்ல. எங்கள் குடும்ப ஆலமர படத்தில் சுமார் 500 பேர்களுக்கு மேல் உள்ளார்கள். அவர்கள் யாரும் ஜமிந்தார்கள் அல்ல. இன்றும் சிலர் வைதிகத்தை பிழைப்பாகதான் கொண்டுள்ளார்கள்.

 129. திரு செந்தில்

  தமிழகத்தில் ஆங்கில கல்வியை கும்பகோணம் மடம்தான் முதலில் கொண்டுவந்தார்கள் என்று நீங்கள் கூறுவது பற்றி எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. அது என்க்கு தேவையும் இல்லை.

  //இப்பொழுது புரிகிறதா ஏன் தஞ்சாவூர் பிராமிணர்கள் மொத்த அரசாங்க வேலையையும் குத்தகை எடுத்தார்கள் என்று//

  (அப்படியே இருந்தாலும் அதனால் இன்று நடைபெற்றுகொண்டிருக்கும் நிர்வாக சீர்கேடுகள் அன்று இருந்ததா?) பொதுவாகவே தமிழகத்தில் பிராமணன் மீது பொறாமையாலும் தன்நம்பிக்கை இல்லாததாலும் ஒருதலையான வெறுப்பு புரையோடி ஒரு நூற்றாண்டுகள் ஒடிவிட்டன. நானும் அதில் ஒருவன் என்பதுபோல் பதில் பதிவு செய்யாதீர்கள். நீங்கள் பிராமிணனை குறை சொல்ல கூடாது என்று நான் கூறவில்லை தொட்டதெற்கெல்லாம் அவன்தான் காரணம் என்ற கண்டுபிடிப்பில் இறங்காதிர்கள். பொதுவாகவே பிராமிணனுக்கு கீழ் ஜாதிகளிடம் இருக்கும் கரிசனம் மற்ற வர்ணத்தவர்களுக்கு கிடையாது. அதனாலேயும் பிராமிணர்களை வெறுத்தார்கள் என்பது எனது கருத்து. விவேகானந்தரும் தான் பிராமிணனை சகட்டுமேனிக்கு சாடியும் உள்ளார் பாராட்டியும் உள்ளார். அதைபோல் மற்ற வர்ணத்தவர்களின் குறைகளையும் சுட்டிகாட்டியுள்ளார்.

 130. திரு செந்தில்

  //சூத்திரர்களை தொடுவது தீட்டு. ஆனால் மாட்டுக்கறி திங்கும் ஆங்கிலேய மிலேச்சர்களிடம் கொஞ்சி குலாவினார்கள்//

  இணக்கமாக சென்றுஇருக்கலாம். கொஞ்சி குலாவினார்கள் என்பதெல்லாம் ஒரு காழ்பு உணர்வின் வெளிபாடே. சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு அளித்தது பிராமிணர்கள்தான். இன்றய நிலை வேறு உதாரணத்திற்கு நான் பணிசெய்த இடத்தில் மதிய உணவை பகிர்ந்து கொண்டு உண்ணுவோம். ஒருநாள் ஒரு புதிய நன்பனின் உணவை பகிர்நது உண்டேன். உணவுவேளைக்கு பின் எனது முதலியார் நன்பன் ஏன் சார் அவன் பரையன் அவனது உணவைபோய் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்றான் !! போன வாரம் நடந்த நவராத்திரி கொலுவின் போது ஐந்தாறு கன்னி குழந்தைகள் வீட்டிற்கு வந்தார்கள். எனது மனைவி அவர்களை அமர்த்தி நலங்கிட்டு தாம்பூலம் வழங்கினார். குழந்தைகள் பிராமிணர் இல்லை. இதேவாரத்தில் எங்கள் இல்லத்திற்கு வந்த ஒரு பிராமிணர் அல்லாத சுமங்கலியும் எனது மகனின் ஒரு இஸ்லாமிய நன்பனும் உணவு அருந்திய பின் நாங்கள் உண்டோம். போலி ஸெக்யூலரிசம் பேசுபவர்கள் நாங்கள் அல்ல அதில் சில விதிவிலக்குகள் இறுக்கலாம்.

  இந்து இந்துத்துவம் என்ற அடையாளங்கள் பிரலமானதற்கு விவேகானந்தரின் ராமகிருஷ்னா இயக்கம் தான் முதன்மையானது. பின்பு வந்த ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்களும் அதனுடன் சேர்ந்து கொண்டார்கள். இவற்றில் பிராமணர்களின் பங்களிப்பு சொற்பமானதே. ஏன் இந்த தளத்ததிலேயே இந்து இந்துத்துவம் பேசுபவர்கள்கூடத்தான் பிராமிணர்களை சாடுகிறார்கள்.

  பிராமிணன் தனிதன்மையோடு இருக்கிறான் அவன் சமூகத்துடன் ஒட்டுவதில்லை, அவன் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடுவதில்லை என்றெல்லாம் ஒதிங்கி இருந்தவன் மீது பழி சுமத்தியதால் அவனும் சமூகஜோதியில் இன்று கலந்துவிட்டான். இப்பொழுது மறுபடியும் அவனை நீ குலதர்மத்தின் படி வாழாததால்தான் நாடு கெட்டுவிட்டது என்று பழிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. விவேகானந்தர் கூட வேத கல்வி, அக்கனி மந்திரத்தை பிராமிணர்கள் கீழ் ஜாதிகளுக்கு அளிக்கவில்லை என்றால் அவர்கள் கல்வி நாசமாக போகட்டும் என்றார். இல்லையேல் தானே தீயில்விழுந்து சாகட்டும் என்றார். என்னவோ அவனுக்கு மட்டும் தான் வேத மந்திரம், அக்கினி மந்திரம் தெரியும் மற்ற வர்ணத்தவருக்கு தெரியாது என்பது போல் ?

 131. திரு செந்தில்

  நான் உங்கள் வலைதளத்தை மிகவும் ஆர்வமாக படிப்பவன். மீண்டும் மீண்டும் குப்பையை கிளரி பழையவற்றை பற்றியே ஏன் பேச வேண்டும். இன்று நாடு இருக்கும் நிலையில் நமக்கு என்ன தேவை நம் சமூகஅமைப்பு எப்படி இருக்கவேண்டும். இந்து என்றும் இந்துத்துவம் என்றும் பேசக்கூடாது என்றால் நமது இந்தியர்களின் பண்பாட்டை இணைத்து பாரதியர்கள் பாரதிய கலாசாரம் என்று கூறலாமா? நாடு முன்னேற உங்களது முக்கியமான அடிபடை தேவைகள் என்ன என்பதை பற்றி ஒரு சிறிய கட்டுரையை தங்கள் தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 132. கருமுத்து

  //திருமழிசையாழ்வாருக்காக ஒப்பிலியப்பன் ஒரு சாய்வான தரிசனத்தைத் தந்தார்; ஏனென்றால் ஆழ்வார் பஞ்சமராதலால் உள்ளே வரவில்லை. அப்படியே இன்றும் காட்சி தருகிறார்.
  //

  இது கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில். ஆழ்வார் கோவிலுக்குள் சென்று தான் கிடந்தவாறு எழுந்திரு என்று பாடினார் – பெருமாள் எழுந்தார்.

  மற்றபடி – ஆழ்வார் பிரவேசம் செய்ய வில்லை என்பதெல்லாம் கற்பனை.

  கும்பகோணத்தில் பெருமாள் பெயர் ஆரவமுதாழ்வார் – ஆழ்வார் பெயர் திருமியாழிசை பிரான் – இப்படி பெருமாள் தொண்டராகவும், ஆழ்வார் பெருமானாகவும் மாறிவிட்ட இடத்திலா ஆலய பிரவேசம் இல்லை என்கிறீர்கள்?

 133. //தேவரை பற்றி அறிந்து இந்த கட்டுரை எழுதப்பட்டது போல தெரியவில்லை,//

  maniajith007,

  இந்தக் கட்டுரையில் தேவரைப் பற்றி அப்படி என்ன தவறாகச் சொல்லி விட்டார்கள் என்பதை விளக்க முடியுமா ?

  .

 134. 1930-1960 காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்த எல்லாத் தலைவர்களும் ஈ.வே.ரா.வின் வாய் கூசும் வசவுகளுக்கு அஞ்சிக் கொண்டிருந்தபோது ஈ.வே.ரா.வுக்கு வயிற்றில் புளியைக் கரைத்த ஒரே தலைவர் பசும்பொன் தேவர் அவர்கள்.

  முதுகுளத்தூர் கலவரத்தின் போது பொய்க் கேசு போட்டாவது தேவரை தூக்கில் மாட்ட ஈ.வே.ரா காட்டிய அவசரம் காமராஜரையே அசத்திவிட்டது. ஈ.வே.ரா. வை நம்பி காமராஜர் கெட்டார், காமராஜரை நம்பி இமானுவேல் சேகரன் கெட்டார்.

  தேவர் குரு பூஜைக்கு கழகக் காளைகளின் ஊர்வலம் போல் பலரும் “தண்ணி” அடித்துவிட்டு ஆர்ப்பாட்டமாக, குறிப்பாக தேவேந்திரகுல மக்களை தாக்கும் கோசங்களோடு, போவது தேவர் திருமகனாருக்கு காட்டும் அவமரியாதை என்பதை உணர்வார்களா?

 135. குமரன்,

  “முதுகுளத்தூர் கலவரத்தின் போது பொய்க் கேசு போட்டாவது தேவரை தூக்கில் மாட்ட ஈ.வே.ரா காட்டிய அவசரம் காமராஜரையே அசத்திவிட்டது. ”

  அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறதே குமரன்.

  மேல் விவரங்கள் கொடுங்களேன். ப்ளீஸ்.

  .

 136. //Ernst Stavro Blofeld
  இந்தக் கட்டுரையில் தேவரைப் பற்றி அப்படி என்ன தவறாகச் சொல்லி விட்டார்கள் என்பதை விளக்க முடியுமா ?//

  .
  /ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததாலேயே அவர் குற்றப் பரம்பரை என வெள்ளையர் அரசாங்கம் அறிவித்த கொடுமையை எதிர்த்து போராடியவர்தாம் முத்துராமலிங்கத் தேவர். ஆனால், தலித் மற்றும் ஆதிக்க சாதிகளிடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அவர் சிந்திக்கத் தவறியது பெரிய வரலாற்றுத் தவறு என்றே சொல்ல வேண்டும். அவருடைய சாதியினருக்கும் தலித் சமுதாயத்தினருக்கும் இருந்த பகையை மீற அவரது சுய சாதி அபிமானம் விடவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற ஒரு தேசியவாதியின் இந்தத் தவறு இன்று இரு சமுதாயங்கள் இணைந்து தமிழ்நாட்டை மேம்படுத்த வழியில்லாமல் ஆக்கிவிட்டது./

  இந்த கருத்தை தான் அய்யா இங்கே மற்றுமொரு உதராணமாக தேவர் காலடி மண்ணே பாடலை சொல்லி இருக்கிறார் குளவி ஆனால் அதில் எந்த இனத்தை இழிவு படுத்தப்பட்டுள்ளது என கூறுங்கள் பசும்பொன் தேவர் சாதி முறை மறைவது பற்றி கூறும்போது பொருளாதார எற்றுதாழ்வுகள் மறைந்து விட்டால் போதும் பிறகு திருமண சம்பந்தங்கள் உருவாகும் பிறகு சாதி மறையும் என கூறியவர், அவரை பற்றி இப்படி எழுதி இருப்பது நியாயமான ஒன்றா என கேட்க்க வேண்டும் ஆனால் கேடு கேட்ட குளவிக்கு நல்லவர் தீயவர் தெரியாது கொட்டும் அற்ப ஜந்து அதையே செய்துள்ளது

 137. @maniajith007

  உங்கள் கருத்தை முழுமையாக ஆமோதிக்கிறேன்..

  இன்றும், கிறித்துவ மிஷனரிகள் தேவர்கள் இருக்கும் கிராமங்களில் எதுவும் வாலாட்ட முடியாது.. காரணம், அடித்து துவைத்து விடுவார்கள்..

  தேவர் ஒரு முருக பக்தர்.. அவர் இந்து என்று சொல்லிக்கொண்டு ரெண்டுங்கெட்டான் வாழ்க்கை வாழவில்லை… தெளிவாக முருக பக்தராக இருந்தார்.. தமிழ் நாட்டில், முக்குலத்தோர் மிகப் பெரிய சமூகம்.. அந்த சமூகம், இன்று வரை நாத்திகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதற்கு முதல் காரணம் தேவர் தான்.. ஒவ்வொரு வருடமும், தேவர் குருபூஜை, (அது எப்படி நடந்தாலும்), தேவரின் வாழ்க்கை சரித்தரத்தை முக்குலத்தோர்க்கு நினைவு படுத்தும் விதமாகத்தான் அமைகிறது..

  தேவர் என்ற ஒருவர் இல்லையென்றால், இன்னேரம், அவர்கள் தி.க வில் ஐக்கியமாகியிருப்பார்கள்.. கவுண்டர்களுக்கும், பிள்ளைகளுக்கும் செட்டியார்களுக்கும், இப்படி ஒரு தலைவர் இல்லாததால், பெரியார் பக்கம் சாய்ந்துவிட்டார்கள்.. தேவர்களும் சாய்ந்திருந்தால், தமிழ் நாடு சுடுகாடாயிருக்கும்..

  இந்துத்துவவாதிகள், முதலில், கற்பனை உலகத்திலிருந்து வெள்யில் வர வேண்டும்.. வரலாற்றை பிடித்துக்கொண்டு, தவறான கருத்துகளை வளர்த்துக் கொண்டு தர்மத்தை அழித்து கொண்டிருக்கிறார்கள்.. யதார்த்தம் என்பதை மருந்துக்கும் பார்க்க முடியவில்லை.. எதற்கெடுத்தாலும், இந்து இந்து என்று, ஒரு பாதுகாப்பற்ற உணர்விலேயே உழன்று கொண்டிருக்கிறார்கள்.. கிறித்துவர்களை போலவே இருக்க வேண்டும்.. ஆனால் கடவுள் மட்டும் லோக்கலாக இருக்க வேண்டும், என்பது அவர்களின் கோட்பாடு.. அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்..

  பிராமண அர்ச்சகர்களை மந்திரம் சொல்லும் கூலியாளாக பார்ப்பது.. அந்த கூலித்தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று தர்க்கம் பண்ணுவது.. கோயிலை கட்டடமாக (சர்ஸ் மாதிரி) பார்ப்பது.. அந்த கட்டிடத்தில், கடவுளின் அருள் (யேசுவின் அருள் மாதிரி) கொட்டி கிடப்பதாகவும், அந்த அருளை தலித்கள் கொண்டு செல்ல ஆதிக்க சாதியினர் தடுப்பது போலவும் கற்பனை செய்து கொண்டு, கிறித்துவர்களின் பிரச்சாரத்தை அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பித்துக்கொண்டு தர்மத்தை அழிப்பது.. யார் வேண்டுமானாலும் கருவரைக்கு சென்று தொட்டு வணங்கலாம் என்கிற ரீதியில் கொயிலையும் கோயில் தாத்பரியத்தையும் கெடுத்து குட்டிசுவராக்கிவிட்டார்கள்..

  என்ன சொல்ல.. இவர்களின் பாதை தவறு என்பதை இவ்வளவு நாள் இந்துதுவ கொள்கை எதையும் சாதிக்கவில்லை என்பதிலிருந்தே தெரிய வேண்டாம்.. ஆனால், இவர்கள் என்றுமே யோசித்ததில்லை..

 138. @vedamgopal
  /** நான் உங்கள் வலைதளத்தை மிகவும் ஆர்வமாக படிப்பவன். மீண்டும் மீண்டும் குப்பையை கிளரி பழையவற்றை பற்றியே ஏன் பேச வேண்டும்.
  **/
  ஏன் முஸ்லிம் படைஎடுப்பையும், ஆங்கில அடக்குமுறையும் பேசிக்கோண்டிருக்கிறோம்?

  பழைய குப்பையை மார்க்சியவாதிகளும், மிஷனரிகளும் இதுவரை கிளரி, நம்மீது சேற்றை வாரி தெளித்தார்கள்… ஏன் என்று இதுவரை யாருக்கும் புரியவில்லை.. அதனால்தான், நாம் நாமே நமது பழைய குப்பையை கிளரலாமே.. இது உண்மையில் குப்பையா, இல்லையா என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாமே.. ஒரு அழகிய வீடு இடிந்து விழுந்தால், குப்பையும் புழுதியுமாகத்தான் இருக்கும்.. நாம் குப்பையை பார்க்கிறோமா, இல்லை முன்பிருந்த வீட்டை பார்க்கிறோமா என்பதுதான் பிரச்சினை.. அன்பர்க்கு நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்..

  /** இன்று நாடு இருக்கும் நிலையில் நமக்கு என்ன தேவை நம் சமூகஅமைப்பு எப்படி இருக்கவேண்டும். **/

  சுதந்திரம் வாங்கும்பொழுது நாடு எந்த நிலையில் இருந்தது? இன்று எந்த நிலையில் இருக்கிறது? சமூகம் என்றால் என்ன? சமூக அமைப்பு முன்பு எப்படி இருந்தது? இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ளாத வரையில், நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் வராது..
  கூடிய விரைவில் என்னுடைய வலைத்தளத்தில், இதைப் பற்றி எழுதுகிறேன்..

  /** இந்து என்றும் இந்துத்துவம் என்றும் பேசக்கூடாது என்றால் நமது இந்தியர்களின் பண்பாட்டை இணைத்து பாரதியர்கள் பாரதிய கலாசாரம் என்று கூறலாமா? **/

  புத்த மததையும், ஜைன மதத்தையும் தோற்கடித்தது, சைவமும் வைணமும்.. அதை ஏன் நாம் அடையாளமாக எடுத்துக் கொள்ளக் கூடாது? சைவத்திலும், வைணவத்திலும், தெளிவான வாழ்க்கை முறையும், நெறிகளும், கடவுள் வழிபாடு முறையும் வகுத்திருக்கிறார்கள்.. ஆனால், இந்த அடையாளங்கள், மறுக்கப் படும்பொழுது, இதை சார்ந்த அமைப்புகளும், வாழ்க்கை முறையும் நலிவடைந்துள்ளது.. இந்து என்று ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டால் போதும்.. அவர்கள் எந்த கடவுளை வேண்டுமானாலும் வழிபடட்டும்.. என்று இந்துத்துவ வாதிகள், நினைத்ததால், நமது சைவ, வைணவ சமூக கட்டுமானங்கள் அழிந்து கொண்டு வருகின்றன.. அதை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.. அதை விடுத்து, வித்தியாசமே இருக்க கூடாது என்ற முட்டாள்தனமான எண்ணத்தால், குலக் கலப்பும், ஜாதிக்கலப்பும், மற்றும் பல்வேறு கலப்புகளும் இந்துதுவவாதிகளால் அரங்கேற்றப்படுகிறது.. ஐயரையும் ஐயங்காரையும் கலப்பது.. ஜாதி விட்டு ஜாதி கல்யாணத்தை ஆதரிப்பது.. இப்படி எத்தனையோ சொல்லலாம்…

  நமது நாட்டில், தர்மம்தான் தலையாயதாக இருந்தது.. கலாச்சாரம் அல்ல..

 139. @senthil

  உண்மைதான் செந்தில் சார் பகுத்தறிவு என்ற பெயரால் மிக சிறந்த சடங்குகளை நாம் அழிவின் நுனிக்கு கொண்டு வந்து விட்டோம் காரணமின்றி காரியமில்லை என்பதுதான் இந்துக்கள் சடங்குகள், வட இந்தியாவில் கோவிலில் இறைவனை தொட்டு கும்பிடுவது பலரும் சொல்கிறார்கள் ஆனால் அங்கே உள்ள கோவிலின் கட்டிட அமைப்பிற்கும் நமது கோவில்களின் அமைப்பிற்கும் உள்ள வேறுபாடு அதன் சூட்ச்சுமங்கள் பற்றி அறிந்து சொல்கிறார்களா என தெரியவில்லை, கிருத்துவர்கள் அதை தர்மமாக எண்ணவில்லை ஒரு கார்பரேட் நிறுவனமாக அதனை உலக ரீதியில் வளர்க்க முயல்கின்றனர் , இந்துத்துவம் எனபது வேறு அது இந்துக்களுக்கும் தற்பொழுது கைக்கு அகப்பாடாமல் சென்று கொண்டிருக்கிறதோ என தோன்றுகிறது. இன்று கூகிளில் தேவர் பற்றி தேடினால் அவருக்கு எதிரான செய்திகள் வந்து விழுகின்றது அத்தனையும் கிளி பிள்ளை சொல்வதை போல சொல்கிறது அவரை சாதி மற்றும் மத ரீதியாக அடைத்து வைக்க, அவர்களுக்கேனும் காரணம் உண்டு பகுத்தறிவு பெயரால் பிரிவினையை தெய்வீகத்தை அழிக்க நினைத்ததால் பசும்பொன் அய்யா அவர்களை எதிர்த்து வெற்றி கண்டதன் வெறுப்பு அவர்களுக்கு, இந்த இந்துத்துவவாதிகளுக்கு அவர் மேல் என்ன வெறுப்பு என தெரியவில்லை

 140. களிமிகு கணபதி,

  பெரியார் முழக்கம், நவம்பர் 2008

  ”1957 இல் அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தலித் மக்களுக்கு எதிராக தேவர் சாதியினர் சாதிக்கலவரங்களை நடத்தினர். ஆதிக்கசாதியினரின் அடக்குமுறைகளுக்கு எதிராக தலித் மக்களை அணி திரட்டிப் போராடிய இமானுவேல் சேகர் என்ற போராளி படுகொலை செய்யப்பட்டார். ஆதிக்கசாதியினரின் தலைவராகவும், வழிகாட்டியாகவும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் செயல்பட்டார். ஆனாலும், அவரை விமர்சிப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சினர். கலவரம் வெடித்தபோது, முதலமைச்சராக இருந்தவர் காமராசர். முத்துராமலிங்கதேவரை துணிவுடன் கைது செய்தார், காமராசர். பெரியார் ஒருவர் தான் அன்று ஆதிக்கசாதியினருக்கு எதிராக உறுதியாகக் குரல் கொடுத்தார். காமராசர் எடுத்த நடவடிக்கைகளை தீவிரமாக ஆதரித்தார்.”

  தீவிரமாக வழிகாட்டினார் என்பதை தீவிரமாக ஆதரித்தார் என்கிறார்கள்.

  1957, அக்டோபர் 26 ல் அப்போதைய காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர், திரு.எம்.பக்தவத்சலம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை குறித்து பெரியார் கூறியது – “தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார்”

  வேலிக்கு ஓணான் சாட்சி.

  தேவருக்கு எதிரான அறிக்கையின்படியே போலிசின் குற்றப் பத்திரிக்கையும் இருந்தது. வழக்கு விசாரணையின் போது தேவரின் வாக்குமூலம் காங்கிரஸ் அரசின் உள்ளக் கிடக்கையை தோலுரித்துக் காட்டியது. ( http://pasumponayya.blogspot.com/2011/07/blog-post.html )

 141. @தமிழன்,

  /** @senthil , எந்த யுகத்தில் இருக்கிறீர்கள்? **/

  ஏன் கேட்கிறீர்கள்? ஆங்கிலேயர் உருவாக்கிய நகரத்தில் வாழ்ந்து கொண்டு, ஆங்கிலேய்ர்களின் காலணிய அடக்குமுறை அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு, பாரத கலாச்சாரத்தையும், அதன் கட்டுமானங்களையும் அழித்து கிறித்துவ பாணியில், கூட்டஞ்சார்க்கும் மதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும், இந்துதுவவாதிகளின் யுகத்தில் இருக்கிறேன்..

 142. @குமரன்

  I want to quote the following lines from the blog you have given..
  http://pasumponayya.blogspot.com/2011/07/blog-post.html
  ……
  மேலும், இந்த இடத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். நான் தேவர் மரபைச் சேர்ந்தவன். எனது சகாவன சசிவர்ணத் தேவரும் ஒரு தேவர். நானும் அமோக வாக்குகளால் ஜெயித்தேன். சசிவர்ணத் தேவரும் அதே மாதிரி ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார். ஆனால், நாங்கள் வெற்றி பெற்றது எங்கள் தேவர் மரபினரின் ஓட்டுக்களால் மட்டுமல்ல; இதர மக்களின் வாக்குகளாலும் தான். முதுகுளத்தூர் தொகுதி வாக்காளர்களில் தேவர் ஓட்டுக்கள் 35 ஆயிரம் தான். அரிஜன வாக்குகள் 45 ஆயிரம். இதர இனத்தாரின் வாக்குகள் 90 ஆயிரத்துக்குமேல். மார்ச் மாதம் நடந்த தேர்தலில் நான் பெற்ற ஓட்டுக்கள் 55,333. எனக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற ஓட்டு 32,767. ஜுலையில் நடந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் 56,657. காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற வாக்குகள் 32,875. இவ்வளவு ஏற்ற தாழ்வான வாக்கு வித்தியாசம் இருக்கையில், சகல இன மக்களும், என்னையும், எனது சகாக்களையும் அபிமானத்தோடு ஆதரித்துத் தமது வாக்குகளைப் போடும் நிலையில், நான் வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விட்டுத் திட்டமிடுவதிலும், சட்ட விரோதச் செயல்களுக்குத் தூபமிடுவதிலும் நாட்டங்காட்டினால், அது அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதை சாதாரண பொது அறிவுள்ளவன் கூடப் புரிந்து கொண்டு விடுவது எளிது.

 143. குமரன், செந்தில், மணி அஜித் ஆகியோர் உண்மையை உரக்கப் பேசியிருக்கிறார்கள்.

 144. திருமதி கோமதி செட்டி மேடம்

  நீங்கள் அண்ணை சோனியாவை இத்தாலி காரி என்றெல்லாம் பேசியுள்ளீர்கள். நம் இனத்தை சேர்ந்த ஒருவர் உல் துறை அமைச்சராக இருப்பத்டற்கு அண்ணை சோனியாவிற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். மேலும் தெரு நாய்கள் போல சண்டை போடுகிறார்கள் என்று சொலி விட்டு நீங்களும் அவர்கலோடு சண்டை போட்டால் நம்முடைய செட்டி இன அந்தஸ்தையே குறைப்பது போல ஆகி விடும்.

  இவண்
  கோமுட்டி செட்டி

 145. உண்மையான தேசீயவாதிகளை தனது அதிகார பீடத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக பலி கொடுப்பது கானியரசின் பாரம்பர்ய பழக்கம்; ஆலன் அக்டேவியன் ஹூம் அதன் ஸ்தாபகர்; அன்டோனியோ மெய்னோ அதன் இன்றய தலைவர்.

  காமராஜர் தேவருக்குச் செய்த துரோகம் சரித்திரத்தின் கல்வெட்டுக்காளில் என்றும் இருக்கும் – எவர் சப்பைக்கட்டுக் கட்டினாலும் அதை மறைக்கமுடியாது; அங்கே சுபாஷ், இங்கே தேவர் இவர்கள் அதர்ம அதிகார யுத்தத்திற்குப் பலியான நவீன அரவான்கள்.

  அன்றோடு முடியவில்லை காங்கிரஸ் அதிகாரக் குடும்பத்தின் அதிகார வெறி; தீனதயாள் உபாத்யாயா, சியாமா ப்ரஸாத் முகர்ஜி என்று தொடர்ந்து ராஜேஷ் பைலட், சிந்தியா என்று போய்க்கொண்டே இருக்கிறது.

  காங்கிரசின் கோயபல்ஸ் பிரசாரத்தினால் பலி கொள்ளப்பட்டவர் தேவர்; அதில் ஒரு துளியும் சந்தேகமில்லை; இன்றளவும் அந்த அரசியலை எதிர் கொள்ள ஒரு நிச்சயமான வழியும் ஓர் வெற்றிகரமான தலைமையும் ந்மக்குக் கிடைக்கவில்லை. இதற்கு, தியாக மனப்பான்மையும் உண்மைத் தேடலும், லட்சிய நோக்கமும் குறைந்த மக்களும் ஒரு காரணம்.

 146. ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? என்றார் பாரதியார். திரு ஜான் பாண்டியனுக்கும் திரு இம்மானுவேலுக்கும் தேவேந்திர குலத்துக்கும் என்ன சம்பந்தம், தாழ்த்தப் பட்டவர்களை உள்ளே விடாமல் தடுக்கும் சர்ச்சுகளுக்குச் செல்லலாமே? திரு தேவர் அவர்கள் மறைந்த போது அவருடைய பூத உடல் எடுத்துச் செல்லப் படும்போது தாழ்த்தப் பட்டவர்களும் கண்ணீர் வழியச் சென்றார்கள் என்பது வரலாற்று உண்மை,

  திரு தேவரவர்கள் எந்த அரசுப் பதவியிலுல் இருந்ததில்லை தான். அதனால் குருபூஜை நடத்தக் கூடாதா? திரு ஈவேரா கூடத்தான் எந்தப் பதவியிலும் இல்லை, அவருடைய உருவச் சிலை நிறுவப் படவில்லையா? அவருக்கு மாலை மரியாதைகள் நடத்தப் படுவதில்லையா? தேவரவர்கள் ஒரு தேசியப் போராட்ட வீரர், அவர் ஜாதி மதங்களைக் கடந்தவர். எல்லோராலும் போற்றப் பட வேண்டியவர்,

  திரு ராஜிவ் காந்தி கொல்லப் பட்ட போது அவர் பிரதமரும் இல்லை. காந்தியார், இந்திரா காந்தி இவர்கள் கொல்லப் பட்ட இடத்தில் நினைவாலயம் கட்டப் படவில்லையே? அவர் நேருவின் வாரிசுமல்லர், காந்தியாரின் வாரிசுமல்லர். அவர் ஃபெரோஸ்கான் என்ற பார்சியின் வாரிசு. போஃபர்ஸ்ஸைத்தவிர வேறு எந்த வகையில் அவர் புகழ் பெற்றவர்?

  நேதாஜியைப் பற்றிய எந்த விவரமும் தங்களிடம் இல்லை என்று அரசு கை விரித்து விட்டது? இது நியாயமா? உண்மையாக தேசத்துக்காகப் போராடியவர்களை ஒதுக்கி விட்டு ஒன்றுமில்லாதவர்களைக் கொண்டாடுவது இந்த நாட்டின் கெட்ட தலையெழுத்து அன்றி வேறென்ன?

  ராஜீவ் காந்திக்கு மட்டும் ஏன் அவர் இறந்த இடத்தில் ஒரு நினைவாலயம்? என்ற கேள்விகள் எழாதா? அந்தநிலம் ஒரு திருக்கோயிலைச் சார்ந்த இடம், அடிமாட்டு விலைக்குக் கொள்ளப் பட்டதாகப் பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளதே? அந்த இடத்தில் ஒரு பகுதி ஒரு காங்கிரஸ்காரருக்குச் சொந்தமானதாக இருந்தது, அவர் அரசு கொடுத்த விலையை ஏற்க மறுத்து விட்டார் என்பதும் பத்திரிக்கையில் வந்த செய்தி தானே? அப்படி இருக்க ஒரு தேசியவாதிக்கு, சுதந்திரப் போராட்ட வீரருக்கு, இடதுகை ரேகை வைக்காதே அதனை விட இடது கைக் கட்டை விரலை வெட்டி விடு அல்லது செத்து விடு, ஆனால் அடிமையாய் இராதே என்றாரே, அது செய் அல்லது செத்து மடி என்ற காந்தியாரின் வாக்கை ஒத்துத் தானே இருக்கிறது, குற்றப் பரம்பரை சட்டம் என்பது ஒரு சாதிக்குமட்டுமா இருந்தது, எல்லோருக்கும் தானே? எவன் ஒருவன் சாதி வெறி கொள்கிறானோ அவன் என் இதயத்தைப் பிளந்து இரத்தத்தைக் குடிக்கின்றவன் ஆவான் என்று முழங்கியவர் அல்லவா திரு தேவரவர்கள். எல்லோரும் சமமாக ஒற்றுமையாக வாழவேண்டும் என்று நினைத்தவர் திரு தேவரவர்கள், திரு செந்தில் திரு மணி அஜித் அவர்கள் கூற்றினை வழி மொழிகிறேன். என்னுடைய இனம் தேவர் இனம் அல்ல..

 147. @ கோமுட்டி செட்டி

  //திருமதி கோமதி செட்டி மேடம்

  நீங்கள் அண்ணை சோனியாவை இத்தாலி காரி என்றெல்லாம் பேசியுள்ளீர்கள். நம் இனத்தை சேர்ந்த ஒருவர் உல் துறை அமைச்சராக இருப்பத்டற்கு அண்ணை சோனியாவிற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். மேலும் தெரு நாய்கள் போல சண்டை போடுகிறார்கள் என்று சொலி விட்டு நீங்களும் அவர்கலோடு சண்டை போட்டால் நம்முடைய செட்டி இன அந்தஸ்தையே குறைப்பது போல ஆகி விடும்.

  இவண்
  கோமுட்டி செட்டி//

  நீங்கள் உங்கள் இனத்தவராக கூறும் இதே சிதம்பரம் அவர்கள் தான் இந்துத்துவத்தின் மீது தாக்குதல் தொடுப்பது, உங்கள் பதில் உண்மையில் அதிர்ச்சி அளிக்கிறது அய்யா, சிதம்பரம் நிதியமைச்சராக இருப்பதில் உங்களுக்கு பெருமைதான்,அவர் சிறப்பாக செயல்பட்டால் தமிழன் ஒவ்வொருவனும் பெருமை கொள்வான்,முன்பு சிதம்பரம் தனியாக காங்கிரஸ் ஜன நாயக பேரவை துவங்கியபோது நானும் அதில் இருந்தவன், நான் உங்கள் இனம் இல்லை ,அப்பொழுது அவர் ஒரு நல்ல மனிதர் என்ற முறையில் ,ஆனால் இன்று அவரை சுற்றி எத்தனை மர்மங்கள் எத்தனை குற்றச்சாட்டுகள் அவர் தேர்தல் வெற்றியே மர்மமாக இருக்கிறது, உங்கள் இனம் என்பதற்காக குற்றம் செய்தாலும் அவரை ஆதரிப்பீர்களா, அன்னை சோனியாவா , கொத்துகொத்தாக பிஞ்சு சிறுவர் சிறுமிகளை கொன்று குவித்ததற்கு நீங்கள் கொடுக்கும் பட்டமா இந்த அன்னை, உங்கள் அன்னையின் அரசியல் வரலாறை கூறுங்கள் எத்தனை போராட்டங்களை முன்னின்று நடத்தி இருக்கிறார் என பார்ப்போம், அவர் ராஜிவின் மனைவி என்பதை தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது,நாம் எந்த இனமாலும் தவறு செய்தவர் குற்றாவ்ளியே தவிர சாதி சொல்லி தப்பிக்க கூடாது, என் இனமாக இருந்தாலும் ஏன் என் உறவாகவே இருந்தாலும் தவறு செய்தாவர் குற்றவாளி தான் இது தான் எங்கள் தர்மம் நியாயம், இந்த கட்டுரையில் குழவி தேவர் இனத்தவர் இன பெருமை பேசி திரிவாதாக குறிப்பிட்டுள்ளதே, இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறது

 148. திரு செந்தில்
  ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் திருமகனைப் பற்றி கடுமையாக எழுதிய குளவியாருக்கு பதில் தரும் வகையில் கடுமையாக எழுதியுள்ளார். ஹிந்துத்துவர்களின் சமத்துவக்கொள்கையை சாடியுள்ளார்.
  அவர் சொல்லும் சில கருத்துக்கள் உடன்பாடானவையும் உண்டு.
  ஒன்று இன்றைய கேரளா சேரனாடு அன்று என்பது.
  இன்று எல்லோரும் நம்புவது போல் கேரளா சேர நாடு கிடையாது.. அது கைராள தேசமாகத்தான் இருந்தது.. ………… இந்த ஏமாற்று வேலையை, சேதுபதி மன்னர், 100 வருடத்துக்கு முந்தியே “வஞ்சி மா நகரம்” என்ற புத்தகத்தை தனது திவான் மூலம் வெளியிட்டு, திருச்சி அருகே இருக்கும் கரூர் தான் சேரனின் வஞ்சி என நிரூபித்தார்.
  மருமக்கட் வழி ஆட்சி திருவிதாங்கூரில் உண்டு. சேர நாட்டில் மூத்தமகனே ஆட்சிக்கு வாரிசு. சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் கதை இதனைக்கூறும்.
  ஆனால் திரு செந்தில் கூறும் இரண்டுக்கருத்துக்கள் அபத்தம்.
  ஒன்று சிவாலயங்களும் பெருமாள் கோயில்களும் மக்களுக்கு சொந்தமானவை அல்ல என்பது.
  “ஈஸ்வரன் கொயிலும், பெருமாள் கோயிலும், யாருக்கு சொந்தம்? அதை யார் கட்டினார்களோ, அவர்களுக்கு சொந்தம்.. பொதுவாக, ஈஸ்வரன் கோயில், அரசனுடைய தேசத்தின் நலன் கருதி (தேசம் என்பது, வெறும் மக்கள் மட்டும் அல்ல.. இயற்கை, மண், மற்றும் பல அம்சங்களை கொண்டது) கட்டுவது.. வெறும் மக்களுக்காக கட்டியது கிடையாது…….. அதில் வழிவடும் உரிமை, அந்த தேசத்தை நிர்வகிப்பவர்களுக்கு.. அவர்களை ஒருங்கிணைக்க.. பொது மக்களுக்காக அல்ல..
  சிவாலயங்களும் திருமாலின் திருக்கோயில்களும் அனைவருக்கும் உரியவை.
  இதை மறுத்து ஆட்சியாருக்கு மட்டும் அவை உரியவை என்பது அனியாயம். அப்படியிருந்தால் ஆலயங்கள் கோட்டைக்குள் மட்டும் இருக்கும் வெளியே இருக்காது. பல சமூகங்களுக்கு மண்டபங்க்கள் மண்டகப்படிகள் இருப்பதை பல ஆலயங்களில் காணலாம். திருவிழாவில் தனித்தனி நாட்கள் ஒவ்வொரு சாதிக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதையும் அறியுங்கள்.
  மூன்று சமத்துவம் என்னும் கருத்தை ஹிந்துத்துவர்கள் வலியுறுத்துவதை கண்டிக்கிற ஸ்ரீ செந்தில்.
  சமத்துவம் மார்சிய கருத்து அல்ல அவர்களுக்கு முன்னேயே இருந்தது. சமத்துவம் என்பது ஒரே தன்மையல்ல(not uniformity). வேறுபடும் ஒவ்வொரு மனிதனும் மதிக்கப்படவேண்டும். இது உன் சாதி உனக்கு இவ்வளவே மதிப்பு. நீ என்னை விட தாழ்ந்தவன் என்பது சரியா. மனிதனை இனம் சாதி, மொழி கடந்து மதிக்கவேண்டும். அவனை இழிவாக கருதவோ நடத்தவோ கூடாது என்பது தவறா. அன்று இருந்த படியே இன்றும் நீ தோளில் துண்டு போடாமல் காலில் செருப்பு அணியாமல் செல்லவேண்டும் என்பது சரிதானா. கோயிலுக்குள் வரக்கூடாது என்பது. டீக்கடைகளில் தனிக்குவளை இவையெல்லாம் சரிதானா. இது தான் நீங்கள் கூறும் தர்மமா.
  ஹிந்துத்துவம் இவையெல்லாம் கூடாது என்று சொல்லுகிறது. எல்லாரும் கட்டாயம் கலப்புத்திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றெல்லாம் அது கூறவில்லை.

 149. @சிவஸ்ரீ. விபூதிபூஷண்

  /**
  சிவாலயங்களும் திருமாலின் திருக்கோயில்களும் அனைவருக்கும் உரியவை.
  இதை மறுத்து ஆட்சியாருக்கு மட்டும் அவை உரியவை என்பது அனியாயம். அப்படியிருந்தால் ஆலயங்கள் கோட்டைக்குள் மட்டும் இருக்கும் வெளியே இருக்காது. பல சமூகங்களுக்கு மண்டபங்க்கள் மண்டகப்படிகள் இருப்பதை பல ஆலயங்களில் காணலாம். திருவிழாவில் தனித்தனி நாட்கள் ஒவ்வொரு சாதிக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதையும் அறியுங்கள்.
  **/

  இப்படி பொத்தாம்பொதுவாக எழுதக்கூடாது.. ஒவ்வொரு ஜாதிக்கும் முறை இருக்கிறது.. ஆனால், அது எல்லா கோயிலிலும் இல்லை.. கொயில் என்றால் சர்ச்சை மனதில் நினைத்துக்கொண்டு இங்கே ஹிந்துத்துவவாதிகள் எழுதுவதுதான் பிரச்சினையே.. திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலில், நீங்கள் சொல்வது போல, 13 நாளுக்கும் ஏகப்பட்ட ஜாதிக்கு மண்டகப்படி இருக்கிறது.. இன்று வரையில், தேவதாசிகளுக்கும் மண்டகப்படி இருக்கிறது.. ஆனால் யார் யாருக்கு, எங்கே எப்பொழுது முறை என்பது யாருக்காவது தெரியுமா? இங்கே கொடுக்கில்லாமல் கொட்டிக்கொண்டிருக்கும் குளவிக்காவது தெரியுமா? ஆனால், வக்கனையா எல்லா கோயில்களையும் இந்து கோயில்கள் என்று டம்பட்டம் அடித்துக் கொள்ளத்தெரியும்..

  ஒவ்வொரு கொயிலுக்கும் ஒரு பாரம்பரியம் இருக்கும்.. அதை வகுத்தவர்கள் முட்டாள்கள் இல்லை.. அந்த பாரம்பரியம், அந்தந்த பகுதியில் உள்ள மக்களோடு தொடர்பிருக்கும்.. சோழ தேசத்தில் இருக்கும் கோயில்கள் பற்றி எனக்கு தெரியாது.. அதுபோல், கொங்கு நாட்டில் இருக்கும் கோயில்கள் பற்றி சென்னையில் இருப்பவர்களுக்கு தெரியாது.. அந்த மாதிரி தெரியாது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.. அப்படி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தான், உங்களுக்கு பிரதேச பாரம்பரியத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.. அப்படி மதிக்க தெரிந்தால், நீங்கள், எல்லா ஜாதியும் கொயிலுக்கு உள்ளே போக வேண்டும் என்று சொல்ல மாட்டீர்கள்.. மாறாக, கொயில் சானித்யத்தை கடைபிடிக்காதவர்கள், கொயிலை விட்டு தூக்கி எறியப்படுவார்கள் (அது பிராமணனே இருந்தாலும் சரி ) என்று சொல்வீர்கள்… இந்த கட்டுரையில் இருப்பது மாதிரி, வெள்ளக்காரன் சொல்லிட்டு போனத முட்டாள்தனமா சொல்லிட்டு இருக்க மாட்டீங்க..

  /** சமத்துவம் மார்சிய கருத்து அல்ல அவர்களுக்கு முன்னேயே இருந்தது. சமத்துவம் என்பது ஒரே தன்மையல்ல(not uniformity).
  **/
  இன்றைக்கு சமத்துவம் என்பது ஒரே தன்மை என்ற அர்த்தத்தில்தான் உபயோகப்படுத்தப்படுகிறது.. எல்லாரையும் மதிக்க வேண்டும் என்பது சமத்துவமல்ல.. எல்லாருக்கும் கொடுக்கும் மரியாதையிலேயே சமத்துவம் கிடையாது.. ஒருவரின் தாய்க்கு கொடுக்கப்படும் மரியாதை ஒரு வகை, பாம்பே ரெட்லைட்டில் இருக்கும் விபச்சாரிக்கு இருக்கும் மரியாதை வேறு மாதிரி இருக்கும்.. சமத்துவம் என்பது அடிமைகளுக்குள் மட்டுமே இருக்க முடிகிற ஒன்று.. ஏனென்றால, அடிமைகளுக்கு, எதுவுமே சொந்தமில்லை.. சுதந்திரம் இல்லை.. ஓரே வேலை, முதலாளி சொல்வதை கேட்பதுதான்.. அங்கு வேண்டுமானால் சமத்துவம் இருக்க வாய்ப்புண்டு..

  /**
  வேறுபடும் ஒவ்வொரு மனிதனும் மதிக்கப்படவேண்டும். இது உன் சாதி உனக்கு இவ்வளவே மதிப்பு. நீ என்னை விட தாழ்ந்தவன் என்பது சரியா. மனிதனை இனம் சாதி, மொழி கடந்து மதிக்கவேண்டும்.
  **/

  அப்போ போய் எல்லா இஸ்லாமியனையும், கிறித்துவனையும் கட்டிப்பிடித்துக்கொண்டு மதிக்கவேண்டியதுதானே.. எதற்கு இங்கு வந்து “மதம் மாத்தறான்.. மதம் மாத்தறான்ன்னு குரைச்சிக்கிட்டிருகீங்க? மனிதன் என்பது ஒரு பொதுவான வார்த்தை..

  ஒரு குறிப்பிட்ட நபரை மதிக்கலாம்னு வேண்டுமானல் சொல்லலாம்.. இந்த கட்டுரைய எழுதிய குளவிய திட்டக்கூடாது.. மதிக்கனும்னு சொன்னா, அதுக்கு ஒரு அர்த்தம் உண்டு.. பொத்தாம் பொதுவா மனிதன மதிக்கனும்னா, பித்துக்குளித்தனமா இல்ல.. அஜ்மல் கஸாம் கூடத்தான் மனிதன்.. அவனை கூப்பிட்டு, “அய்யா.. நீங்களும் மனிதன்.. உங்களை மதிக்கிறேன்னு” சொல்லி ஆரத்தி எடுக்க வேண்டியதுதானே?

  ஒவ்வொரு மனிதனும், அவனுடைய எண்ணங்களை பொருத்தும் வாழும் வாழ்க்கையை பொறுத்தும்தான் மற்றவர்கள் பழகும் விதம் அமையும்.. அது போல தான்.. சில ஜாதிகளின் வாழ்க்கை முறை, கோயிலில் கடைபிடிக்கவேண்டிய சுத்தத்திற்கும், சானித்யத்திற்கும் பொருந்தாததால், அவர்களை உள்ளே விடவில்லை.. ஆனால், அவர்களுக்கு அந்த தெய்வங்களை வணங்கும் உரிமை உண்டு.. குருவாயூர் கோயிலில், பாடகர் யேசுதாஸ் கோயிலிக்கு வெளியே இருந்துதான் வணங்கி பாடிவிட்டு சென்றார்.. அவரை குருவாயூரப்பனை கும்பிட வேண்டாமென்று யாரும் சொல்லவில்லை.. கோயிலுக்கு உள்ளே வராதே என்றுதான் சொன்னார்கள்..

  /** இன்றும் நீ தோளில் துண்டு போடாமல் காலில் செருப்பு அணியாமல் செல்லவேண்டும் என்பது சரிதானா. கோயிலுக்குள் வரக்கூடாது என்பது. .
  **/

  கொயிலுக்கு உள்ளே வரக்கூடாது என்று சொல்வது தர்மம்தான்.. எல்லாரும் உள்ளே வாருங்கள்… கருவரைக்கு வந்து கடவுளை இஷ்டப்படி தொட்டுவிட்டு செல்லுங்கள் என்று சொல்வதுதான் அதர்மம்..

  /** டீக்கடைகளில் தனிக்குவளை இவையெல்லாம் சரிதானா. இது தான் நீங்கள் கூறும் தர்மமா
  **/
  காலில் செருப்பு போடக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை.. இது ஜமீந்தார் முறையில் ஏற்பட்ட ஒரு வெள்ளைகார பழக்கம்.. அதுக்கும் ஜாதிக்கும் சம்பந்தம் இல்லை..

  ஒரு முஸ்லிம் கடையில், கண்முன்னே மாட்டுக்கறி பரிமாறப்பட்ட தட்டில், விபூதி பூஷனோ, இல்லை இந்த கொடுக்கில்லாத குளவியோ, இல்லை, அறிவு ஜீவி அரவிந்தன் நீலகண்டனோ, இல்லை நமது எழுத்தாளர் குருமூர்த்தியோ, பொய் சாப்பிட்டு வரட்டும்.. குறைந்தது, இந்த கெட்டுப்போன பிராமணர்களாவது இப்படி சாப்பிடட்டும்.. அதுக்கப்புறம், நீங்க ரெட்டை டம்ளர் முறைய ஒழிக்க வரலாம்..

  முதல்ல மூளைன்னு ஒண்ணு இருக்கிறத நெனச்சு பாருங்கய்யா.. கிறித்துவ மிஷனரிகளின் பிரச்சாரத்தை அப்படியே காப்பியடிச்சுகிட்டு, அப்படியே உளராதீங்க..

  (Edited and published)

 150. செந்தில்,

  நீங்கள் சொன்னது இங்கு பலருக்கு நன்றாக சூடு போட்டது போல் உள்ளது. இந்த கேடு கெட்ட கட்டுரையை வெளியிட்ட பின் எனக்கு இந்த தமிழ் ஹிந்து தளத்தின் மீதே நம்பிக்கை பொய் விட்டது. மேலும் இந்த தளத்தில் குறிப்பிட்ட சாதியை தாக்கி வரும் பதிவுகளை மட்டும் பதிபிக்கிறார்கள்.

  கேடு கெட்ட ஜென்மம் குளவி மட்டும் அல்ல. இந்த களிமிகு கணபதி, கிருஷ்ணகுமார், சடாயு போன்ற பத்தாம் பசலிகள் மற்றும் இந்த சாதி வேறுபாடு கட்டுரையை பதிப்பித்த இந்த தளமும் தான்.

  தைரியமாக கருத்து தெரிவித்த செந்திலுக்கு பாராட்டு.

 151. செந்திலின் கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால்
  கிருத்துவருக்கும் இசுலாமியருக்கும் நன்மை பயக்கும்.
  தலித்துகள் ஒட்டுமொத்தமாக அவர்களிடம் போய்விடுவர்.

  செந்திலின் எண்ணங்கள் இக்காலத்துக்கும் ஒத்தே வரா !

 152. வர்ணாஷ்ரம தர்மத்தை, இந்த இந்துதுவ வாதிகள், எப்படியெல்லாம் குழப்பி பாழ்படுத்துகிறார்கள் என்று எனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறேன்.. ஆர்வமுள்ளோர் படியுங்கள்..

  http://psenthilraja.wordpress.com/2011/11/16/varnashrama-dharma-is-not-totalatarian/

  ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன்..

  தீண்டாமையுக்கும் வர்ணாஸ்ரமத்துக்கும் உள்ள் தொடர்பையும் விவரித்துள்ளேன்.. அதை, இந்த குளவியும், ஜடாயுவும், அரவிந்தன் நீலகண்டனும் புரிந்து கொள்வார்களா? அல்லது, அதை பற்றி விவாதத்துக்காவது தயாரா..

  என்னுடைய வலைப்பதிவின் சாராம்சம்:

  -> வர்ணாஸ்ர தர்மம் என்பது, ஒரு குடியமர்ந்த சமுதாயத்துக்கு மட்டுமே.. எல்லாருக்கும் பொதுவானதும், கட்டாயமானதும் அல்ல. மலைவாழ் மக்கள், வேடுவர்கள், மீனவர்கள், போன்றவர்களுக்கு வர்ணாஸ்ரம தர்மம் பொருந்தாது..

  -> வர்ணாஸ்ர தர்மம் மேற்கத்திய பாணி நகரங்களில் (சென்னை, பம்பாய், போன்றவை) இருக்கும் மக்கள் கூட்டத்துக்கு (அவை சமுதாயம் அல்ல) பொருந்தாது.. ஆகவே, ஆங்கிலம் படித்து சென்னையில் செட்டில் ஆகி, இந்துதுவத்தை தொங்கிக் கொண்டிருப்பவர்கள், தர்மத்தை காப்பாத்தறேன் பேர்வழி என்று வர்ணாஸ்ர தர்மத்தை போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது.

  -> வர்ணாஸ்ரம தர்மம் தழைக்க, அதற்குண்டான இயற்கை சூழ் நிலையும், சமூக சூழ் நிலையும் வேண்டும்.

  -> வர்ணாஸ்ரம தர்மத்துக்குள் எல்லாரும் வரவேண்டும் என்ற கட்டயம் இல்லை. விருப்பமில்லாவிட்டால், அந்த சமூகத்தை விட்டு வேறு இடத்தில் போய் வாழலாம்.. கிறித்துவர்களை போல, வர்ண தர்மத்தை விட்டு செல்பவர்களை கொல்ல வேண்டும் என்று மனு ஸ்மிருதி சொல்லவில்லை..

  -> தீண்டாமை என்பது, வர்ணாஸ்ரம அடிப்படையில் உள்ள சமுதாயத்துக்கே பொருந்தும்.. பாரம்பரிய கிராமத்தில் உள்ள பிராமணர்கள், தங்கள் தர்மத்தின் படி வாழ முற்படும்பொழுது, பெரும்பாலான மற்ற ஜாதியிடம் கலந்து இருக்க முடியாது.. அது எல்லா மக்களுக்கும் தெரியும்.. ஆனால் அதே பிராமணர், தன் தர்மத்தை தூக்கி எறிந்து விட்டு, வெள்ளைக்கார நகரத்துக்கு சென்று கும்பினி வேலையில் சேர்ந்து கொண்டு, தீண்டாமையை கடைபிடிக்கும்பொழுதுதான், அது ஒரு பிரச்சினையாகவும் அதர்ம்மாகவும் உருவாகிறது.. ஆக இங்கே குற்றவாளி, துபாஷி பிராமணர்கள் தானே தவிர, வர்ணாஸ்ரம தர்மமோ, இல்லை ஜாதியோ அல்ல..

  இன்று குதித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாமே, இந்த மாதிரி தர்மத்தை விட்டு கும்பினி வேலைக்கு சென்ற பிராமணர்களும் அவர்களின் வம்சாவளியும் தான்.. மனு ஸ்மிருதிப்படி, தன் வர்ணத்தை இழக்க நேர்ந்ததால், அவர்கள், வர்ண தர்மத்தையே மாற்ற முயற்சிக்கிறார்கள்.. அல்லது அழிக்க நினைக்கிறார்கள்..

  இந்த கலாச்சார அகதிகளின் சிந்தனா ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டியது தலையாய தேவை.. புத்தகத்தை படித்துவிட்டு, கண்டபடி எழுதுவதை நிறுத்தி, சாதாரண மக்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி (இந்துதுவ சாயம் இல்லாமல்( அறிந்து கொள்ள அவர்கல் முயலும் வரை அவர்களுக்கு எதிரான எனது இந்த எதிர்ப்பு தொடரும்..

 153. இந்து மதம் தான் சாதி வேறுபாட்டிற்கு அடிதழம் …

 154. அது என்ன எப்போதும் தேவர் ஐயா வை ஜாதி என்ற ஒரு வலைக்குள் இழுத்து, பிறகு அதனை காரணமாக வைத்து அந்த இன மக்களை கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, இல்லாத ஒன்றை விமர்சித்து பிறகு அவர்களை சீண்டி விட்டு, வெறுப்பேற்றி அதனால் அவர்கள் கோபப்பட்டு, எதிர்ப்பதை மட்டும் பெரிதாக்கி, அதில் குளிர்காய்கிறார்கள்.

  முதலில் “தேவர்” என்பதே ஜாதி பெயர் இல்லை.. அது ஒரு பட்டம். பட்டம் யார் கொடுத்தது என்று கேட்பார்கள். இது யாரும் கொடுத்து வருவது அல்ல. அது வம்சம் வம்சமாக, பல தலைமுறையாக தொன்றுதொட்டு வரும் அடைமொழி. வீரவரலாற்றின் அடையாளம், அவர்களின் சரித்திரத்தின் பின்புலம்.. க்ஷத்ரிய வழிநின்று வரும் மரபினர் அனைவருக்கும் இந்த அடையாளம் உண்டு..

  அரைகுறை வேக்காடுகள் தான் இதனை அறியாமலும், தெரிந்திருந்தாலும் வேண்டும் என்றே சூழ்சியினால் வஞ்சகம் கொண்டு “ஜாதி” என்று அதனை உருவகப்படுத்துகிறார்கள்.

  இதே போன்று ஜாதி அடையாளம் சூட்டி புரக்கணிக்கப்படுபவர் பாமக “அன்புமணி” அவர்கள். அவரின் தந்தையையும் ஜாதியையும் காரணம் காட்டி, புறக்கனிக்க வைக்கின்றனர். அவன் திறமை வீணடிக்கப்படுகிறது. இது ஒருபுறம்.

  “தேவர்” எனும் பட்டத்தை முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுக்கு, அவரின் மக்கள் மரியாதை நிமித்தமாகவும், பெருமைதனை சமர்பிக்கும் விதமாகவும் அன்பினால் கூறப்படுவது. அந்த பட்டத்தை தவிர்ப்பது என்பது தேவர் ஐயா அவர்களுக்கு செய்யும் துரோகம். பெருமைகளை இருட்டடிப்பது செய்வது தவறே.

  எப்போது பார்த்தாலும் இமானுவேல் படுகொலையை இதில் இழுத்துவிட்டு குளிர் காய்கிறார்கள். தேவர் ஐயாவிற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று எத்தனையோ கட்டுரைகளில் வெளிவந்தும், பழையனவற்றை திரித்து கூறி இல்லாததை இன்றும் பரப்புகிறார்கள். தலித் மக்களுக்கு அவர் செய்த தொண்டினை தேவர் ஐயாவின் ஊரிலையே போய் கேட்டு தெளிவுபெறுங்கள். தேவர் ஐயாவின் தொன்றினை இஙௌகே பதிவிடவேண்டும் என்றால் பல பக்கங்கள் தேவைப்படும்.தேவர் ஐயா INA இந்திய தேசிய ராணுவத்தில் அவர் சமூக மக்களை அழைத்துச் சென்று விடுதலைக்காக போராடியதெல்லாம் மறந்துவிட்டார்கள். தேவர் ஐயா தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என்றவர்.

  அவனவன் உதவாக்கரைகள் எல்லாம் ஜாதி பெயரையும், சங்கங்களும் மாநாடுகளும் நடத்துவது தெரியவில்லையா?

  தேவர் ஐயா அனைத்து மக்களுக்கும் வேறுபாடு பார்க்காமல் இந்தியர்கள் என்ற பார்வையில் அனைவருக்கும் உதவிகள் புரிந்தவர். ” பெருந்தலைவர் காமராஜர்” எனும் முதலமைச்சரை தமிழகத்திற்கு அறிமுகபடுத்தியவர் தேவர் ஐயா. அண்ணாத்துரை, ஈ.வே.ரா, காங்கிரஸ் என்று எவராயினும் அவர்கள் செய்கை தவறானால் நேரிடையாக எதிர்த்தார். இதனாலையே தேவர் ஐயாவின் தொண்டுகள் மறைக்கப்பட்டு, பெயருக்கும் கலங்கம் விதைக்கப்பட்டது.

  தேவர் ஐயா நினைத்திருந்தால் பெருந்தலைவராக கருதப்படும் காமராஜரை தவிர்த்து, அவர் சமூகத்திலேயே வேறொருவரை மேலே கொண்டு வந்திருப்பார். அனைத்து தர மக்களையும் சமகண்ணோட்டம் கொண்டிருந்த சான்று இது ஒன்றே போதும்.

  இன்று அந்த அரசாண்ட வம்சங்களும் பரம்பரைகளும், சமூக மக்களும் பெருமளவில் படும் துயரங்கள் யாருக்கு தெரியும்? பொருளாதாரத்தில்மிகவும் தாழ்த்தப்பட்டு அரசியல் சூழ்ச்சியினால் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பொருளாதாரத்தில்குறைவிடினும் தலைகுனியாத குலம்.. மானமே பெரிதென வாழ்பவர்கள்.. கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்.

  அனைத்து கட்சியினரும் தேவர் ஐயாவிற்கு மாலை இட்டு அரசியல் நாடகம் ஆடிவிட்டு ஓட்டு மட்டும் வாங்கிக்கொள்கிறார்கள். இம்மக்களுக்கு நல்லது செய்தோர் இல்லை.. அரசாண்ட வம்சங்கள் அனைத்தும் இன்று அவல நிலையில். வெட்கக் கேடு… ஒரு நாள் விடியும்..

  மீண்டும் விழித்தெழுந்து சரித்திரம் படைப்பார்கள் எனும் நம்பிக்கையில்…. நன்றிகள்… வெற்றிவேல் வீரவேல்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *