அத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்

அத்வானி அவர்களின் ரத யாத்திரையை சீர்குலைக்கும் விதமாக பயங்கரவாதிகளின் செயல் திட்டம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதிமுகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு பயங்கரவாத இயக்கத்துடன் கைகோர்த்து செயல்பட்ட சம்பவங்கள் ஏராளம் உள்ளது. நாடு முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஜன் சேத்தனா ரத யாத்திரை துவக்கப்பட்டது. இந்த ரத யாத்திரையை துவக்கிய போது மத்திய உளவுத் துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு எச்சரிக்கை குறிப்பு அனுப்பி இருந்தது. அதாவது அத்வானியின் ரத யாத்திரையை சீர்குலைக்கும் விதமாக பயங்கரவாத இயக்கங்கள் ஈடுபடலாம் என தகவல்கள் கிடைத்துள்ளதால் அதிக அளவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பபட்டது.

தமிழக காவல் துறை முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததா என்பதே தற்போதைய தலையாய கேள்வியாகும். ஏன் என்றால் 28.10.2011ந் தேதி காலையில் ரத யாத்திரை துவங்கி 15 நிமிடங்களில் அடையக் கூடிய ஆலம்பட்டி பாலத்தில் வெடி குண்டு காலை 8 மணிக்கு கண்டு பிடிக்கப்பட்டது என்றால் காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடு எவ்வாறு அமைந்திருந்தது என்பதை மாநில உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

கண்டு பிடிக்கப்பட்ட பைப் குண்டு 6 அடி நீளமுள்ளதும், அதனுள் 7 கிலோ டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள், இவைகள் வைத்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஜெலட்டின் ஜெல் ஆகியவை அந்த இடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு திட்டமிட்டப்படி வெடித்திருந்தால் மிகப் பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்திருக்கும் என ஐ.பியின் உயர் அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்த வெடி குண்டை கண்டு பிடித்தது காவல் துறையினர் கிடையாது. காலையில் கிராமங்களில் உள்ளது போல் காலைக் கடனை முடிக்க சென்ற போது தென்பட்ட பச்சை ஒயர் கண்டு பதற்றமடைந்த செல்வராஜ் பின்னர் காவல் துறையினருக்கு துப்பு கொடுத்த பின்னர் தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முற்பட்டார்கள் என்பதை சற்று நினைத்து பார்த்தால் காவல்துறையினரின் பாதுகாப்பு எந்த லட்சணத்திலிருந்தது என்பது தெரியவரும்.

அத்வானியின் ரத யாத்திரை செல்லும் வழி இஸ்லாமியர்களின் பயங்கரவாத சம்பவங்கள் நடந்த பகுதி என்பதை காவல் துறை கவனிக்கவில்லை. வெடி குண்டு கண்டு பிடிக்கப்பட்ட பகுதியான ஆலம்பட்டி கிராமத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் திருமங்கலம் பகுதியுள்ளது. இந்த திருமங்கலம் இமாம் அலி போலீஸ் காவலில் இருக்கும் போதே தப்பித்த பகுதி என்பதையும், மதுரைக்கு அருகில் உள்ள மேலுர் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரம் என்பதையும் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும் தென்காசி மிகவும் பதற்றமான பகுதியாகும் இங்கு இந்து முன்னணியை சார்ந்தவர்கள் ஆறு பேர்களை கொன்று குவித்த இடமாகும். ஆகவே இவ்வளவு பிரச்னைக்குறிய பகுதியில் ரத யாத்திரை செல்லும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது கூட தெரியாத காவல் துறையினர் உள்ளார்கள்.

முக்கிய பிரமுகருக்கான பயண பாதுகாப்பு திட்டத்திலேயே மதுரை மாவட்ட காவல்துறையினரும், உளவுத்துறையினரும் அலட்சியம் காட்டி இருக்கிறார்கள். இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள தலைவர்களுக்கு அவர்கள் செல்லும் பாதையில் பாலங்கள் வருமேயானால் இரு தினங்களுக்கு முன்பே வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு சோதனையிட இட வேண்டும், பின்னர் அந்த இடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட வேண்டும் என்கிற வழக்கமான முறையை கூட இதில் கடைபிடிக்கவில்லை. பல்வேறு பயங்கரவாத குழுக்கள் மதுரையை சுற்றி இருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். திருமங்கல பகுதியை கண்காணிக்க எஸ்.பி அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ஆனால் அத்வானி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பிலிருந்த எஸ்.பி வேறு பணிக்கு மாற்றப்பட்டார். எனவே அவருக்கு மாற்றாக ஒருவரையும் இந்த அரசு நியமிக்கவில்லை.

ஆலம்பட்டி கிராம மக்கள் கொடுத்த தகவல் மூன்று அல்லது நான்கு பேர் இநத் ஆபரேஷனில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவர்கள் கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை அணிந்திருந்ததை இங்கே குளிக்க வந்தவர்கள் பார்த்திருக்கிறர்கள். அதில் ஒருவன் ராஜபாளையத்தை நோக்கி பைக்கில் சென்றதாகவும், மற்றவர்கள் திருமங்கலத்தை நோக்கி ஆட்டோவில் சென்றதாகவும் தகவல் கொடுத்தார்கள்.

இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என ஐ.பி அதிகாரியிடம் விசாரித்த போது அவர் கொடுத்த தகவல் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. இந்த டெட்டனெட்டர் குண்டு தமிழ்நாட்டில் இதுவரை யாரும் பயன்படுத்தியதில்லை. எல்லாம் காஷ்மீர், மும்பை, பாகிஸ்தான் போன்ற பகுதிகளில் பயனபடுத்தப்படுபவை. துமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அமைதியாக இருக்கிறது. அங்கே போனால் போலீஸ் கெடுபிடி அவ்வளவாக இருக்காது என்று தமிழ்நாட்டில் உள்ள தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் துணையோடு முன் கூட்டியே இந்த இடத்தை தேர்வு செய்திருக்கிறார்கள். மேலும் 2001ல் சிமி இயக்கத்தின் மீது தடைவிதித்த பின்னும் மதுரையில் செயல்பட்டுவந்த சிமி இயக்கத்தினர் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தற்போது ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினரே முன்னாள் சிமி இயக்கத்தின் தமிழக தலைவர் என்பதை மறந்து விடக் கூடாது என்றாh

சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் டெல்லியில் நடந்த மாநில காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் குறிப்பிட்ட செய்தி முக்கியமானதாகும். அதாவது பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் ஊடுருவல் செய்வது எளிதாக இருக்கிறது. ஆகவே மத்திய மாநில அரசுகள் தமிழகத்தின் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டதையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே இஸ்லாமிய பயங்கரவாதிகள் இலங்கை மூலம் கள்ள தோணியில் ராமநாதபுரம் வழியாக வந்திருக்கலாம் என்பதையும் விசாரிக்க வேண்டும். தொடர்ச்சியாக அத்வானியின் உயிருக்கு ஆபத்து என்பதும், இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா, சிமி , இந்தியன் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளால் எந்த நேரமும் ஆபத்து நிகழலாம் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

2011ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்த சமயம், அஇஅதிமுக மனித நேய மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார்கள். அப்போதே பல்வேறு தேசிய வாதிகள் சில விஷயங்களை குறிப்பிட்டார்;கள், பயங்கரவாத இயக்கத்திற்கு அரசியல் அங்கீகாரம் கொடுக்கும் விதமாக இந்த கூட்டணி உள்ளது, தேர்தலுக்கு பின் இவர்கள் பல்வேறு விஷயங்களுக்காக போராட்டம் நடத்தும் போது இந்த அரசு பயங்கரவாத செயலை சந்திக்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார்கள். அவர்களின் வாக்கு தற்போது பலித்துவிட்டதாகவே தெரிகிறது. ஆகவே தமிழக அரசு எவ்வித தயவு தாட்சண்யம் இல்லாமல் மத்திய புலானாய்வு அமைப்பினர் துரிதமாக விசாரிக்க உத்திரவிட வேண்டும்.

4 Replies to “அத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்”

  1. நீங்கள் சொல்லுவதை பார்த்தால், இந்த அரசு வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்தது போன்று தோன்றுகிறது. கண்டுபிடித்து சொன்னதால் வேறுவழியின்றி விசாரணைக்கு இறங்கிய போலிஸார் கூட நக்ஸலைட்டுகள் மீது பழி போட்டு பேசினார்கள்.

    இதெல்லாம் கூட்டணி கட்சியை காப்பாற்றவா என்று தெரியவில்லை. இது போல நடக்கலாம் என்றுதான் தமிழகத்தில் அதிமுக மமகவுடன் கூட்டணி ஏற்படுத்தியபோது நல்ல உள்ளம் கொண்டவர்கள் எச்சரித்தார்கள்.

    அதிமுகவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

  2. ராம்நாட்டில் முன்னால் சிமி தலைவர் தற்போது சட்டமன்ற ஒருபினர் எப்படி யாருடைய தவறு அதை தடுக்க சிந்திக்க வேண்டும். இவரோ சிறுபான்மை மக்களிடம் பணத்தை தவறாக பயன்படிதிருக்கிரரமே?

  3. ஒரு பெரிய அரசியல் கட்சி தலைவருக்க்கு இருக்க வேண்டிய பொறுப்பு பற்றி ஏன் எவரும் சிந்திப்பதில்லை?. இத்தகைய யாத்திரைகள் வன்முறைக்கு வித்திடும் என் தெரிந்தும், லாலுபிரசாத்போன்றவர்கள் எச்சரித்தும், அரசியல் ரீதியாக எந்த செல்வக்கும் இல்லாத தமிழ் நாட்டில் ஏன் இந்த பயணம்? கட்சியில் தன் செல்வாக்கை வளர்த்து பிரதம்ர் பதவி ஆசைதானே? வன்முயற்சிகளை தவிர்ப்பத்தில் போதிய கவனம் தேவை எனபது எவவளவு நியாமோ அந்த அளவிற்கு அரசியல் வாதிகளும் பொறுப்புடன் செயல்படவேண்டும். ஓழல் ஒழிப்பு என்று அன்னா ஹாசரே எழ்ப்பிய அலயில் இவர்க்ள் ப்டகு ஓட்டி கட்சியை வளர்க்க முயற்சிறார்கள். பதவியிலிலிருந்தபோதும் அதற்கு பின்னரும் தேசத்தில் ஊழலே இல்லையா? அல்லது இவர்கள் மறந்திருந்தார்களா? தயவு செய்து எப்போதும் காவல் துறையை குறை சொல்லாதீர்கள். அவ்ர்களால் தவிர்க்கபட்ட பல விபத்துக்கள் பற்றி மீடியாக்க்கள் பேசுவதில்லை.. அதனால் அரசு வேண்டுமென்றே செய்கிறது என சொல்வதெல்லாம் தவறு.
    ரமணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *