காவேரியைக் காக்க ஒரு யாத்திரை

காவிரியின் புனிதம் காக்க மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை அகில பாரத துறவியர் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கிறது.

குடகு மலைச் சாரலில் காவிரியின் பிறப்பிடமான தலைக்காவேரியில் அக்டோபர் 23ம் நாள் தொடங்கிய இந்த யாத்திரை நவம்பர்-11 அன்று காவிரி கடலில் கலக்குமிடமான பூம்புகாரைச் சென்றடையும்.

அக்டோபர் 23ம் நாள் நடைபெற்ற தொடக்க விழாவில் ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் (உடுப்பி பெஜாவர் மடாதிபதி), தவத்திரு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் (காசி மடம், திருப்பனந்தாள்), தவத்திரு மருதாசல அடிகளார் (பேரூர் ஆதீனம்), சுவாமி கேசவானந்த மகராஜ் (ராமகிருஷ்ண மடம், கோவை) உள்ளிட்ட துறவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த யாத்திரையில் 20க்கும் மேற்பட்ட துறவியர்கள் & மடாதிபதிகள் தொடக்கம் முதல் கடைசி வரை பங்கேற்று காவிரிக் கரையில் உள்ள புனிதத் தலங்களையும் தரிசித்து வருகிறார்கள். செல்லும் வழியெங்கும் ஆங்காங்கே தங்கி காவிரி நதியின் புனிதத்துவத்தை உணர்த்தும் வகையில் காவேரித் தாய்க்கு பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் செய்து வருகிறார்கள். இவ்விடங்களில் காவிரியைப் பாதுக்காப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், பஜனைகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஆங்காங்கே பல இந்து சமயப் பிரிவுகளயும் சார்ந்த பல்வேறு துறவியர்கள் கலந்து கொண்டு அருளாசி வழங்குகிறார்கள். இது வரையில் யாத்திரை சென்றவிடங்களில் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றுள்ளது.

யாத்திரை நிகழ்ச்சிகளின் போது கீழ்க்கண்ட கருத்துக்கள் பேச்சாளர்களால் வலியுறுத்திப் பேசப் படுகின்றன.

தமிழகத்தில் யாத்திரை செல்லும் வழி மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள்:

நவம்பர்-2 (புதன்): ஒகேனக்கல்
நவம்பர்-3 (வியாழன்): மேட்டூர்
நவம்பர்-4 (வெள்ளி): பவானி
நவம்பர்-5 (சனி): கரூர்
நவம்பர்-6 (ஞாயிறு): திருஈங்கோய்மலை
நவம்பர்-7 (திங்கள்): முசிறி, ஸ்ரீரங்கம்
நவம்பர்-8 (செவ்வாய்): திருவையாறு
நவம்பர்-9 (புதன்): கும்பகோணம்
நவம்பர்-10 (வியாழன்): மயிலாடுதுறை
நவம்பர்-11 (வெள்ளி): பூம்புகார்

இவ்விடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தவத்திரு காசிவாசி. முத்துக்குமாரசுவாமி தம்பிரான் (திருப்பனந்தாள்), சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் (திருவாவடுதுறை), ஸ்ரீமத் சுவாமி திவ்யானந்த மகாராஜ் (ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை), பூஜ்ய சுவாமி ஓங்காரானந்தா (சித்பவானந்த ஆசிரமம், தேனி), பூஜ்ய ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் (தன்வந்தரி ஆரோக்கிய பீடம், வாலாஜாபேட்டை), ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்தா, சுவாமி ராமகிருஷ்ணானந்தா, (ராமகிருஷ்ண மடம்), சுவாமி சைதன்யானந்தா (விவேகானந்த ஆசிரமம், வெள்ளிமலை), மாதாஜி ஸ்ரீவித்யாம்பா சரஸ்வதி உள்ளிட்ட பல துறவியர் கலந்து கொள்கின்றனர். பாரதீய கிஸான் சங்கம் என்ற அகில பாரத விவசாயிகள் அமைப்பின் தலைவர்களும், செயலாளர்களும் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றனர்.

நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் கீழே காணலாம்.

மாசு படிந்திருக்கும் காவேரியைத் தூய்மை செய்து அதன் புனிதத் துவத்தை மீட்பது என்பது சாதாரண பணியல்ல. மத்திய, மாநில அரசுகள், காவிரி செல்லும் வழியிலுள்ள நகராட்சி ஊராட்சி அமைப்புக்கள், சூழலியல் அமைப்புகள், நதிநீர்த் துறை நிபுணர்கள், விவசாயப் பெருமக்கள், தொழில் அமைப்புகள், திருக்கோயில்கள், மடங்கள், இந்து சமய ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பன்முக ஒத்துழைப்புடன் செய்ய வேண்டிய மாபெரும் பணி இது. துறவியரின் இந்த யாத்திரை அத்தகைய பணிக்கான தேவை பற்றிய விழிப்புணர்வை சம்பந்தப் பட்ட அனைத்துத் துறையினரிடமும் கட்டாயம் உருவாக்கும் என்று நம்புவோம்.

6 Replies to “காவேரியைக் காக்க ஒரு யாத்திரை”

  1. அன்புள்ள தமிழ்இந்துவிற்கு,

    தங்களின் இப்பதிவு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தரும் ஒரு விடயமாக அமைகிறது…காவிரிஅன்னையை என்றென்றும் தூய்மை விளங்கசெய்வோம்

  2. நல்ல விஷயம் , அதேபோல் எங்கள் நொய்யல் ஆற்றை காப்பதற்கும் உதவுங்கள்

  3. 1970 களின் இறுதியில் காவிரி மாசடையத் தொடங்கியது. கர்நாடகாவில் இந்த அளவு தூய்மைக்கேடு இல்லை என்பது எனது அனுபவம். கடுங் கோடைக் காலங்களிலும் இடுப்பளவு நீரோட்டத்தில் நீராடி மகிழ்ந்து இருக்கின்றேன். மக்களின் அலட்சிய மனோபாவம் மற்றும் ஆற்றைக் காக்க வேண்டிய அரசின் மணல்கொள்ளை(கொள்கை) எல்லாம் காவிரியை தமிழகத்தில் நோயாளி ஆக்கிவிட்டன. காவிரியில் நீர் தரவில்லையென்று கூச்சலிடும் திராவிட(விஷ)க்கட்சிகள் பெருகிவரும்போது கடலில் வீணாகக் கலக்கவிடுதல் தான் தமிழ் பண்பாடா என்று எனது கன்னட நண்பர் கேட்டபோது என்னிடத்தில் பதில் இல்லை. பொது பணித்துறையில் ஆற்று பாதுகாப்பு கோட்டம் என்று ஒன்று உண்டு. அதன் பனி என்ன என்று காவிரி கொள்ளிடம், தாமிரபரணி, வைகை போன்ற நதிகளை பார்த்தால் தெரியும். அதன் பெயருக்கும் பாதுகாப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று. துறவியரின் முயற்சியும் இறைஅருளும் காவிரி மற்றும் உள்ள நதிகளையும் காக்கட்டும்.

  4. நோக்கம் வெற்றிபெற ஆதரவும் தருகிறோம்!!

  5. //’…பெருகிவரும்போது கடலில்வீணாகக் கலக்கவிடுதல்…’//

    நெடுநாட்களாக என் எண்ணத்தில் இருந்தது இன்று உங்கள் எழுத்தில் வெளிப்பட்டுள்ளது. ஆறுகளின் குறுக்கே தமிழக எல்லைக்குள் அணைகள் கட்டி நீரைத் தேக்கிக் கொள்வதை எந்தக் கன்னடர் எதிர்க்கிறார் ? நமக்கு ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் அடை மழைக் காலம் என்பது பழமொழி. இன்னும் கார்த்திகை மாதமே பிறக்கவில்லை. இப்போதே வீணாக ஓடிக் கடலில் கலக்கும் நீரின் அளவைக் கடற்கரைப் பகுதிகளிலுள்ள காட்சிகள் மூலம் அறிந்தால், நமக்கு வேதனை மிஞ்சுவதோடு தமிழக அரசியல் வாதிகள் பலரின் ஏமாற்று வேலையும் நன்கு புரியும்.

  6. நன்றி திரு பெருந்துறையான் ! பெருந்தலைவர் காமராஜ்/பக்தவத்சலம் ஆட்சிக்கு பின் அணைக்கட்டுக்கள் ஏதும் உருப்படியாக எந்த திராவிட கட்சிகளும் கட்டவில்லை. ஏரிகளையும் குளங்களையும் வீட்டு மனைகளாக்கும் (விளைநிலங்களையும்) வித்தை அறிந்தவர்கள்தான் ஆட்சியில் அமர்ந்தனர். தஞ்சை மாவட்டத்தை ஒருமுறை சுற்றி வாருங்கள் எல்லா ஆறுகளின் கரைகளிலும் அமோகமாய் வீட்டுமனை வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. ஆனை கட்டி போரடித்த நாட்டிலே இனி அரிசி இறக்குமதி தான் அள்ளி வழங்கப்போவது கர்நாடக ஆந்திரா சகோதரர்கள்தான். வாழ்க தமிழர் பண்பாடு வைகோவும் நாம் தமிழர் சீமானும் தமிழ் இன(ஈன)த் தலைவரும் விளை நிலங்களை காக்க குரல் கொடுக்க முன்வருவார்களா ? அவர்கள் காவிரியில் தண்ணீர் வராதபோது மிகச் சிறப்பாய் நடிப்பார்கள். நாமும் அவர்களின் வீராவேச(வேஷ)த்தில் மகிழ்ந்து விடுவோம். க்ருஷ்ணராஜ சாகர் நிரம்பி வழியும் பொது எல்லாவற்றையும் மறந்து பல லட்சம் கன அடி தண்ணீரை வீணாய் கடலுக்கு அனுப்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *