ஒரு சமூகம் தனது மூதாதைகள் அதீத புத்திசாலிகள், எல்லாம் தெரிந்தவர்கள், இப்போதிருக்கும் எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று நம்புவதையும், பெருமைப்பட்டுக் கொள்வதையும் கூடப் புரிந்து கொள்ளமுடிகிறது, ஆனால் என் முன்னோர் முட்டாள்கள், ஒன்றும் தெரியாத சோற்றுப் பாண்டங்கள், அப்படியே ஏதாவது தெரிந்திருந்தாலும் அவை எல்லம் போலி அறிவியல், உண்மையில் அவற்றுக்கு அர்த்தமே இல்லை, வெளியிலிருந்து இன்னொருத்தன் வந்து தான் எங்களுக்கு அறிவியல் சொல்லித் தந்தான் என்று பெருமை கொள்ளும் அடிமை மனநிலையின் உளவியல் தான் புரிவதே இல்லை.
பொதுவாக இந்தியாவின் பாரம்பரிய அறிவியலைப் பற்றிப் பேசும் போது மின்னஞ்சல்களில் பரவலாக சுற்றி வரும் சிலவற்றையே அறியமுடிகிறது, பாஸ்கராச்சாரியர், ஆர்யபட்டர், சரகர், சுஸ்ருதர் போன்ற பெயர்கள் மட்டும் பிரபலம். இல்லாவிட்டால் 3000 வருடம் முன்பு இந்தியாவில் க்ளோனிங் பண்ணினார்கள், கிட்னி ட்ரான்ஸ்பிளாண்ட் பண்ணினார்கள் என்ற ரீதியிலான “கோட்டி அறிவியல்” (நன்றி:அரவிந்தன் நீலகண்டன்) தகவல்கள் பரப்பபடும். இவற்றுக்கு மத்தியில் உண்மையான இந்திய அறிவியல் சாதனைகளை ஆதாரப் பூர்வமான மேற்கோள், நூல் பெயர், ஆண்டு இன்னபிற தகவல்களுடன் தெளிவாகப் பேசும் யாராவது இருக்கிறார்களா என்று தேடியபோது முனைவர்.கோபாலகிருஷ்ணன் என்பவரின் உரைகள் யூட்யூபில் கிடைத்தது.
மிகத் தெளிவாக “இந்தியாவில் எல்லாம் இருந்தது என்று சொல்லாதீர்கள், இந்தியாவில் ஒன்றுமே இல்லையென்றும் சொல்லாதீர்கள்.ஒரு நாகரிகம் எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.உண்மையிலேயே இங்கே என்ன இருந்தது என்று தெரிந்துகொண்டு அதை மட்டும் சொல்லுங்கள்” என்று கூறுகிறார். அவரைப் பற்றிய விவரங்கள் கீழே தருகிறேன்.
அதற்கு முன் கொஞ்சம் அவருடைய ஒரு உரையிலிருந்து சில தகவல்கள்.
“1500 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்யபட்டர் பூமியின் குறுக்களவு 1050 யோஜனை (1 யோஜனை=12.11KM) அதாவது 12715KM என்று குறிப்பிட்டுள்ளார் (கோபர்நிகஸ், கலிலியோவுக்கு எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னால்!!). ஆனால் இதை எப்படிச் சொன்னார்? அதற்கு ஆர்யபட்டீய எண்முறை பற்றித் தெரிந்திருக்கவேண்டும். சமஸ்கிருத எழுத்துக்களை அடிப்படையாக வைத்து எண்மதிப்பு கணக்கில் கொள்ளவேண்டும். “ந்யீளா பூவ்யாசம்” என்கிறது ஆர்யபட்டீயம். ந்யீ என்றால் 1000, ளா என்றால் 50 (இவை எப்படி வந்தது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் காண்க) ஆக 1050 யோஜனை – கணக்கு மேலே.
பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுழல்கிறது, அந்தச் சுழற்சியின் வேகம், புவியின் சாய்வுக் கோணம், மேலும் க்யூப் ரூட், சைன் தீட்டா, காஸ் தீட்டா போன்றவற்றையும் விளக்கியிருக்கிறார் ஆர்யபட்டா. (எல்லாவற்றுக்கும் அதன் மூல சம்ஸ்கிருதச் செய்யுளைச் சொல்லி விளக்கியிருக்கிறார் கோபாலகிருஷ்ணன்).
இன்னொரு எண்முறை இருந்திருக்கிறது – பூத சங்க்யா!
1 = பூமி, ப்ருத்வி, சந்திரன், இந்து, சசி, …… (இவை எல்லாம் ஒன்று என்பதால்)
2 = (கண்கள்) நயனம், நேத்ரம், (செவிகள்) ச்ரோத்ரம்…. (இவை எண்ணிக்கையில் இரண்டு என்பதால்)
3 = ராமா(பலராம, பரசுராம, ஸ்ரீராம என மூன்று என்பதால்), அக்னி (கார்ஹபத்ய, பிரகஸ்பத்ய, ப்ரஜாபத்ய), அனலா, வஹ்னி ….
4 = வேதம் (4 வேதங்கள்), சமுத்ரம், வனம், கானனம்…
5 = சரம், பிராண (ஐந்து பிராணன்), பூத (பஞ்ச பூதங்கள்)….(எல்லாம் ஐந்து..)
6 = ருது, ரச..
7 = ரிஷி, முனி, ….
8 = சர்ப்பம், திக்…
9 = கிரகம்…
இப்படியாக போய்க்கொண்டே இருக்கிறது. சரி ஏன் இப்படி ஒரு எண்முறை வைத்தார்கள்? அறிவியலும் சம்ஸ்கிருத செய்யுள்கள் வடிவில் எழுதப்பட்டதாலும், அவை சந்தஸ் எனப்படும் சந்தத்துக்குள் கட்டமைக்கப்பட்டிருந்த்தாலும் இவ்வாறு வெவ்வேறு சொற்களைக் கொண்டு எண்களைக் குறிப்பது சுலபம். கூடுதலாக கவியுணர்வும், அழகியல் உணர்வும் இருக்கும். படித்து மனனம் செய்யவும் ஏதுவாக இருக்கும். எழுதும் போது எண்ணிக்கையின் வலமிருந்து இடமாக எழுத வேண்டும்.
உதாரணமாக லல்லாசார்யர் ‘சிஷ்யதீவ்ருத்தி தந்த்ரா’ என்னும் நூலை மேற்கண்ட எண்முறையைக் கையாண்டு எழுதியிருக்கிறார் (825 பொ.ஆண்டு). ஒரு மஹாயுகம் 43,20,000 வருடங்கள். ஒரு மஹாயுகத்தில் பூமி 157,79,17,500 முறை சுழல்கிறது (“வ்யோம சூன்ய சர அத்ரி இந்து ரந்த்ர அத்ரி அத்ரி சர இந்தவ:”) சுழற்சியை மொத்த வருடங்களால் வகுத்தால் 365.252538617 முறை ஒரு வருடத்தில் சுழல்கிறது!!
இதைத் தவிர எண்முறை கடபயாதி எண்முறை என்று ஒன்று இருக்கிறது. புதுமை, அழகியல், தேவை அடிப்படையில் இந்த எண்முறைகளே அவற்றின் அளவில் ஒரு தனிச்சிறப்பான கண்டுபிடிப்புகளாகும்.
பூமி சூரியனைச் சுற்றி வரும் வேகம் “கோபாக்யயா தினதாம” = “ஏகோன ஷஷ்டிலிப்தா: அஷ்டௌ விலிப்தா” அதாவது 59நிமிடம் 8 நொடி, 10 டெசி நொடி,13 மைக்ரோ நொடி கோணத் திசைவேகம் (ஆங்குலர் வெலாசிடி) – சொன்னவர் புதுமனை சோமயாஜி (கலிலியோவுக் கெல்லாம் முன்பே).
இவற்றை அறிந்துகொள்ளும் பொழுதே தவிர்க்கமுடியாத ஒரு கேள்வி மனதில் எழும். ‘எந்தப் பயன்பாட்டிற்காக இத்தனை அடிப்படையான அறிவியல் உண்மைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்தார்கள் நம் ரிஷி விஞ்ஞானிகள்? நவீன அறிவியலில் அடிப்படை உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவற்றின் நடைமுறைப் பயன்பாட்டு தொழிநுட்பம், கருவிகள், இயந்திரங்கள் வளர்ந்துவிடும். பண்டைய இந்தியாவில் என்னவெல்லாம் தொழில்நுட்பங்கள், கருவிகள் இருந்தன?’
இதற்கு விடைதேட, நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்ற அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மற்றும் பயன்பாடுகள்; உதாரணமாக: மருத்துவம், கட்டிடம், கணிதம், வானவியல், ஜவுளி, கணிமவியல், ரசாயனம், பௌதீகம், என்று பல துறைசார்ந்த கண்டுபிடிப்புகளையும் அவற்றின் மூலத்தை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். மேலும் பல நூல்கள் மஹாபாஸ்கரீயம் (628 பொ.ஆ), லகுபாஸ்கரீயம் (629 பொ.ஆ), பிரம்மஸ்புட சித்தாந்தம் (528 பொ.ஆ)….. இன்னும் ஏராளமான தகவல்கள்.. மெய்சிலிர்க்கவைக்கும் உண்மைகள். பெருமை கொள்ளச் செய்யும் பாரம்பரியம்.
இந்திய அறிவியலை நீர்த்துப் போகச்செய்யும் இன்னொரு தவறான புரிதல் ரிஷிவிஞ்ஞானிகள் இதையெல்லாம் உள்ளுணர்வு அல்லது கற்பனையினால் சொன்னார்கள் என்பது. இதையும் தெளிவாக மறுக்கிறார், “சாக்ஷாத் அனுபவ யத்ருஷ்டௌ, ந ச்ருதோ, ந குருதர்சித, லோகானாம் உபகாராய ஏதத் சர்வம் ப்ரதர்சம்”, “பரீக்ஷாயார்த்து கலு ப்ரயோஜனம்” போன்ற வரிகளில் நமது ரிஷிகள் தெளிவாகவே இவை அனைத்தும் வெறும் செவிவழிச் செய்தியல்ல, உலக நன்மைக்காக அனுபவத்தாலும், பயனை திரும்பத்திரும்ப பரீட்சித்துப் பார்த்தும், முறையாக வளர்தெடுக்கப்பட்ட அறிவு என்று தெரிவிக்கிறார்கள்.
எல்லா துறைகளிலும் இந்த நாட்டின் எல்லாப் பாகங்களிலுமுள்ள ரிஷி விஞ்ஞானிகளும் பங்களித்திருக்கின்றனர். அவை சம்ஸ்கிருத்தில் நூலாகத் தொகுக்கப்பட்டு நாடுமுழுவதிலும் ஆர்வமுடையவர்களால் கற்கப்பட்டு வந்துள்ளன. சமஸ்கிருதம் ஒதுக்கப்பட்டதாலும், ஒட்டுமொத்த தேசத்தின் ஆற்றலும் அன்னியர்களிடமிருந்து நாட்டை காக்கவும், விடுவிக்கவும் செலவழிக்கப்பட்டதாலும் இன்னும் பல காரணங்களாலும் இவை வளராமலும், பரவாமலும் போனது. இவற்றில் பலநூல்கள் ஐரோப்பியர்களால் நூறாண்டுகளுக்கு முன்பே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, நம்மவர்களின் உதவியால் தான் அவற்றைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள்.
இருந்தும் ஒருசில நேர்மையாளர்களைத் தவிர, பெரும்பான்மை ஐரோப்பியர்கள் இந்த உண்மைகளை மறைத்து இந்தியாவை பாம்பாட்டிகளின் தேசமாக மட்டுமே, தங்களால் நாகரீகம் கற்றுத்தரப்பட வேண்டியவர்கள் என்றுமே பரப்பிவந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது நமது ரிஷிவிஞ்ஞானிகளின் மேண்மையும், பிறரின் மனக்கோணலும் புரிகிறது. ‘இந்தியாவில் கொஞ்சம் மதம், தத்துவம் தவிர அறிவியல் எதுவும் இல்லை’ என்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சொன்னதும் நமது துரதிர்ஷ்டமே!
ஆனால் இந்த பல்லாயிரம் ஆண்டு பாரம்பரிய விஞ்ஞான நூல்கள் எதையும் பற்றிய அடிப்படைத் தகவல் கூட அறிந்திராத அறிவின்மை தரும் அசட்டுத் துணிச்சல் தான் இந்திய அறிவியல் பாரம்பரியத்தைப் இழிவுபடுத்தி, ‘நீராவிய வச்சு வெள்ளக்காரன் கப்பல்வுட்டான், நம்மாளுக கொழாப்புட்ட செஞ்சு வாய்க்குள்ள வுட்டானுங்க’ என்று கேலிபேசச் செய்கிறது, கூடவே ‘எனக்கு நவீன அறிவியல் தெரியும்’ என்கிற அளவிற்கு மீறிய தன்னம்பிக்கையும் பாரம்பரிய அறிவியல் அறிவை குறைத்து மதிப்பிட்டு, முற்போக்கு போலிப்பகுத்தறிவுச் சாயம் பூசச்செய்கிறது. முனைவர். கோபாலகிருஷ்ணன் மிகத் தெளிவாகவும், அடக்கமாகவும், ஆனித்தரமாகவும் பேசும் காரணம் உண்மையான அறிதல் தரும் நேர்மையான துணிவு.
டாக்டர். கோபாலகிருஷ்ணன் உயிர்வேதியலில் ஆய்வுப் பட்டம் பெற்று, அமெரிக்காவிலும் இந்திய CSIR லும் வேலை செய்து விட்டு, தற்போது கேரளத்தில் திருச்சூர் அருகில் Indian Institute of Scientific Heritage என்னும் ஆய்வுமையத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
சமஸ்கிருதத்தில் டி.லிட். பட்டம் வாங்கியவர். உலக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க கௌரவ தலைவர் மருத்துவர். மகாதேவன் சாம்பசிவன் இந்த அமைப்பின் தலைவர் (இவர் ரிக், யஜுர் இரண்டு வேத கணபாடமும் வலமிருந்து இடமாகச் சொல்லும் திறமை படைத்தவர், உலகில் இந்தத் திறமை வாய்ந்த வெகுசிலருள் ஒருவர், திருவனந்தபுரம் பழவங்காடி கண்பதி உட்பட 18 கோயில்களின் தந்திரி). இந்திய பாரம்பரிய அறிவியல் நூல்கள் (மேலேசொன்னவை உட்பட) அனைத்தும் சமஸ்கிருத செய்யுள்-ஆங்கில மொழிபெயர்ப்புடன் 25, 30 ரூபாய்க்கு நூல்களாக வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் செய்தும், கல்லூரி, பல்கலைக் கழகம், பொது அமைப்புகள், கருத்தரங்குகளில் உரையாற்றி இவற்றைப் பரப்பும் தொண்டு வருகிறார்.
மேலே கொடுத்துள்ள இந்திய அறிவியல் தகவல்கள் வெறும் 0.1% மட்டும் தான். அவை அவர் 2003ம் ஆண்டு Chennai IIT ல் ஆற்றிய உரையில் இருந்து எடுத்தது
httpsv://www.youtube.com/watch?v=dqmlhG397g0&feature=related
இவற்றோடு முனைவர். கோபாலகிருஷ்ணன் ஏராளமான ஹிந்துமத அடிப்படைகளை, சம்ஸ்காரங்களை, தத்துவங்களை விளக்கும் சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். அவர் உரைகள் எல்லாம் மலையாளத்திலும், ஆங்கிலத்திலுமாக ஒளிக்கோப்புகளாக யூட்யூப் போன்ற ஊடகங்களிலும், புத்தகங்களாகவும் கிடைக்கிறது. இந்திய பாரம்பரிய அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் வலைத்தள முகவரி www.iish.org . அந்தத் தளத்தில் பல புத்தகங்களை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? நம்மைப் பற்றி நாம் அறிந்துகொள்வதே அறியாமையிலிருந்தும், தாழ்வுணர்ச்சியிலிருந்தும் உதறித் தலைநிமிர ஒரேவழி. ஆகவே, எழுமின்! விழிமின்!!
பிரகாஷ் சங்கரன் முதுகலைப் பட்டம் பெற்ற உயிரியல் ஆய்வாளர். நரம்பியல், உயிரியல், மருத்துவம் தொடர்பான துறைகளில் ஆர்வம் கொண்டவர். எளிய தமிழில் ஆழமான அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது அறிவியல் கட்டுரைகளை இங்கே படிக்கலாம். கதைகள் மற்றும் பிற படைப்புக்களை இங்கே படிக்கலாம்.
மிக அருமையான விளக்கம் ! ஐந்து மதம் வளரட்டும்.வாழ்க வளமுடன் !
இரா.சி.பழனியப்பன். இராஜபாளையம்.
இந்து மதம் வளரட்டும் !
பிராகாஷ் சங்கரன் சிறப்பான கட்டுரை,பண்டைய பாரதத்தின் மருத்துவ அறிவியல் விடயங்களை பற்றிய தங்களின் படைப்பு மெய் சிலிர்க்க வைக்கின்றன…இதனூடு நம் மூதாதையரின் மனப்பாங்கை பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .நாம் ரிஷிகளை போல விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொண்ட மேல் நாடு அறிந்ஞர்கள் பலர் தம் உயிருக்கு உத்தரவாதம் இன்றியே தம் ஆராய்சிகளை மேற்கொண்டனர்…பூமி தட்டையானது,சூரிய மைய்ய கொள்கை போன்ற உண்மைகளை வெளிக்கொண்டு வந்தமைக்காக மேலை நாடு ஆராய்ச்சியாளர்கள் அக்காலத்தில் அளித்தொளிக்கபட்டனர்.கி.பி 600 ஆம் ஆண்டில் இது போன்று கொலை செய்ய பட்டவர்களின் பின்னணியில் தான் ” தி டா வின்சி கோடு” படம் உருவாகப்பட்டது….புத்திஜீவிகள்,அறிஞர்களை மதிப்பளிக்கும் பண்பு அன்றும் இன்றும் என்றும் பாரத கலாச்சாரத்தில் மட்டுமே பயுற்றுவிக்கபட்டு வந்துள்ளது தங்களின் போன்றோரின் படைப்புக்களே சாட்சி
//இந்தியாவில் கொஞ்சம் மதம், தத்துவம் தவிர அறிவியல் எதுவும் இல்லை’ என்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சொன்னதும் நமது துரதிர்ஷ்டமே!//
அவருக்கு பெண்களைத்தவிர வேற எதுவும் கண்களுக்கு தெரியாது. இந்த நாட்டின் சாபம் இங்கே இருந்து தான் ஆரம்பம்.
, இது தொடராக – ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியாக,தகுந்த ஆதாரங்களுடன் விளக்கும் பதிவுகளாக வந்தால் நன்றாக இருக்கும். இதைப்படித்துவிட்டு வேறு எங்காவது இதை உபயோகிக்க நினைத்து .அவர்கள் விளக்கம் கேட்டால் முழிக்கவேண்டியிருக்கும். விளக்கம் சொல்லவுடியவில்லை என்றால் குரானின் இருக்கும் விஞ்ஞானம் போல் என்று நினைத்துவிடுவார்கள்.
நன்றி. அடுத்த தலைமுறைக்கு சென்று அடைய வேண்டிய விஷயம். எல்லாத் தலைமுறைகளுக்குமே உரியது தான். நன்றி.
அவசர உதவி வேண்டப்படுகிறது ,
நேற்று மதம் மாறி சென்ற நண்பன் ஒருவன் கிரகண நேரத்தில கொவில ஏன் மூடுரங்க ?சாமிக்கு பவர் போய்டுமான்னு கிண்டல் பேசினான். நன் எனக்கு தெரிந்த அறிவை கொண்டு கிரகண நேரத்துல வெளிய வர கூடாதுன்னு சொல்வாங்க .சந்திரனோட இடைதாக்கம் அதிகமா இருக்கும் அந்த நேரத்துல மக்கள் கோவிலுக்கு போறது சரி இல்ல என்பதால தான் கோவில் nadai சாதுரங்கனு சொன்னேன்.அப்பாவும் அவன் விடாம அப்டினா கடவுள் கிரகனத்துல இருந்து மக்களை காபத்தனும்னு லொள்ளு பேசுனான்.அவனுக்கு விஞ்ஞான ரீதியில் சரியான பதிலை தர விரும்புகிறேன்.தயவு செய்து இதை பற்றி அறிந்தவர்கள் என் கேள்விக்கு பின்னூட்டம் இட்டால் சிறப்பாக இருக்கும் ..
நல்ல செறிவான கட்டுரை. திரு பிரகாஷ் சங்கரன் அவர்கள் தொடர்ந்து நமது அறிவியல் பாரம்பர்யம் பற்றி எழுத வேண்டும். நம் பாரம்பரிய அறிவியலை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர சமஸ்க்ருத மொழியை அனைவருக்கும் அளிக்க வேண்டியது அவசியம் என்பதை இக்கட்டுரை உணரவைக்கிறது.
முனைவர் கோபாலக்ருஷ்ணன் அவர்கள் பணி மகத்தானது. அதனை ஹிந்து உணர்வுள்ள ஒவ்வொரு அறிவியல் வல்லுனரும் தொழில் நுட்ப வல்லுனரும் பின்பற்றுவது நம் தேசத்தை ஓங்கி உயர வைக்கும்.
சிவஸ்ரீ விபூதிபூஷன்
Dear kollumbu Tamilan,
your friend might be christian. so, please ask how can the whole race came out from Adam and eve.
How can red sea could be broken.
dear super thinker,
yes,he’s an christian.i asked about some scientific errors in bible, and i also stated what are the scientific things in Hinduism.but he replied me like this,God is not science and we can’t control the in to science fiction.even scientist also have no answers for the question where is god,and people who are follow jesus Christ will not be effected by any solar or Lunar eclipse..but crystal clear he is in nightmare of missionaries.
also he stated that scientist and they are inventions are done by devil,devils the incentive to the scientist to do that such things…but i have to prove that Hinduism have answer for the creation and continues of galaxy.that’s why i requested you and other people to help me.thank you super thinker for your respected reply.
vetri vel veera vel.
colombo thamilan wijey
missed,
also he said,We can’t control the god into science and fiction..he stated. Natural disasters are implemented by the god via his angels,to destroy the “பாவிகள்”.I realize that what a foolish examples they have to describe the god.
in Hindus point of view,not only the healing is religion.it should be a way of living and sharing economic wealth,also respecting each and everyone’s justice beliefs
அருமையான விளக்கங்கள். 72 மேள கர்த்தா ராகங்களை நினைவில் கொள்ள கடபயாதி சங்க்யை பற்றி சங்கீதம் சம்பந்தமான பிறிதொரு வ்யாசத்தில் இதே தளத்தில் வாசித்தது நினைவுக்கு வருகிறது. சுழற்சியை வருஷங்களால் வகுக்க 365.258680556 கிடைக்கிறது 365.252538617 அல்லவே. மூன்றாவது தசமஸ்தானத்திலிருந்து சற்றே வேறுபடுகிறது.
கொழும்பு தமிழன்,
நீங்கள் “கிரகண நேரத்தில் ஏன் கோவில் நடை சாத்துகிறார்கள்?” என்று உங்கள் நண்பன் கேட்டதாக அதற்கு அறிவியல் சார்ந்த விளக்கம் கேட்டிருந்தீர்கள்.
உண்மையில் இதற்கெல்லாம் அறிவியல் விளக்கம் தேடுவது சரியல்ல. இது ஒவ்வொரு பிரதேசத்துக்கு பிரதேசம் மக்களின் பழக்க வழக்கங்கலைப் பொருத்து மாறும் சம்பிரதாயம். நம்பிக்கை வேறு அறிவியல் வேறு.
பூக்களால் அலங்கரித்து, தூப தீபங்கள் காட்டி, பசித்திருந்து தரிசனம் செய்யும் போது கிடைக்கும் உணர்வை எந்த அறிவியலும் விளக்க முடியாது – தர முடியாது.
இது பைபிளுக்கும் பொருந்தும்.
@ Keerthi,
//நீங்கள் “கிரகண நேரத்தில் ஏன் கோவில் நடை சாத்துகிறார்கள்?” என்று உங்கள் நண்பன் கேட்டதாக அதற்கு அறிவியல் சார்ந்த விளக்கம் கேட்டிருந்தீர்கள்.
உண்மையில் இதற்கெல்லாம் அறிவியல் விளக்கம் தேடுவது சரியல்ல. இது ஒவ்வொரு பிரதேசத்துக்கு பிரதேசம் மக்களின் பழக்க வழக்கங்கலைப் பொருத்து மாறும் சம்பிரதாயம். நம்பிக்கை வேறு அறிவியல் வேறு.//
உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரியாது என்று பாருங்கள் தெரிந்து கொள்ளும் தூரம் தொலைவில் இல்லை அதை விடுத்து இது போன்ற முடிவு எல்லாம் எடுக்காதீர்கள் சொல்லாதீர்கள். நமது இந்திய மண்ணில் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிசென்றவை எல்லாம் நம்பிக்கையின் அடிபடையில் மட்டும் அல்ல. அதற்க்கு சரியான காரணங்களும் காரியங்களும் இருக்கிறது. கூடிய விரைவில் அதற்க்கு சரியான விளக்கம் தருகிறேன்.
நன்றி
பிரபு
நண்பர்களுக்கு, நன்றி!
திரு.கொழும்பு தமிழன், உங்கள் கேள்விக்கான மிகத் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
கிரகணகாலங்களில் கோயில் நடை அடைக்கப்படுவது பற்றியும், இன்ன பிற சந்தேகங்களையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய உங்கள் நண்பன் எழுப்பியதாக எழுதியிருந்தீர்கள். மதம் மாறியவுடன் மருந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது போலும். அது அப்படியே ஒருபுறம் இருக்கட்டும்.
கிரகணம் என்னும் நிகழ்வை நமது பாரம்பரிய வானியல் சாஸ்திரங்கள் அறிவியலாகவும், புராணங்கள் தொண்மக் கதையின் வாயிலாகவும் விளக்குகிறது (நமது பெரும்பாலான சடங்கு/ஆச்சாரங்களுக்குப் பின் பொதுவாக இவை இரண்டும் உண்டு). சூரிய, சந்திர கிரகண காலங்களில் ஹிந்து பண்பாட்டில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் சில சம்பிரதாயங்கள்:அந்நேரத்தில் சூரியனையோ சந்திரனையோ நேரடியாகப் பார்க்கக் கூடாது, கிரகண கலத்தில் எதுவும் உண்ணக் கூடாது, நீத்தார் கடன் செய்வது, தியானம், மந்திர ஜபம் செய்வது, கிரகணம் விலகியவுடன் குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்வது, இப்படியாக இன்னும் சில. இவற்றுள் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்பது முதல் அந்நேரம் வெளியாகும் கதிர் வீச்சு வரை நவீன அறிவியலில் இன்று சர்வசாதரணமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு முறைகளே. எனவே அதன் அறிவியல் தன்மைகள் குறித்து அதிகம் விளக்கத் தேவையில்லை.
சந்திர கிரகணத்தைப் பொறுத்தவரை, ஜோதிட (இது கணிதப் பகுதி துல்லியமான நேரடி அறிவியலையும், பலன்களைச் சொல்லும் ஊகப் பகுதி அனுபவத்தையும் உள்ளடக்கியது) சாஸ்திரம் சந்திரனையே மனநலம், உணர்ச்சிகள், அறிவுத்திறன் ஆகியவற்றிற்குக் காரணனாக உருவகிக்கிறது. ஆங்கிலத்திலும் சந்திரனைக் குறிக்க Lunar என்னும் வார்த்தையையும், மனநலன் குன்றியவர்களை குறிக்க Lunatic என்னும் வார்த்தையையும் பயன்படுத்துவதைக் கவனிக்கலாம். அமாவாசை, பௌர்னமி நாட்களில் மனநலம் குன்றியவர்கள் இயல்பைக் காட்டிலும் சற்றுக் கூடுதல் உணர்ச்சிவசப்படுவதும் அறிந்ததே. ஆகவே இதே போல தொடர்புடைய சந்திர கிரகண நாளிலும், சந்திரணின் தாக்கம் பூமியில் அதிகம் இருப்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அந்தச் சமயத்தில் குளித்துவிட்டு மனத்தை ஒருமுகப்படுத்தும் தியானத்தில் ஈடுபடுவதையும், அதற்குத் துணைசெய்யும் மந்திரங்களை ஜபிப்பதையும் ஊக்குவித்துள்ளனர்.
ஆனால் அந்த நேரத்தில் உணவில் துளசி அல்லது தர்ப்பைப் புல்லைப் கிள்ளிப் போடுவது, கோயில் நடை அடைப்பது போன்றவை சந்திர கிரகணம் பற்றிய நம் புராணங்களில் இருந்து வந்த நம்பிக்கை. பாற்கடலில் இருந்து கிடைத்த அமிர்தத்தை, அரக்கர்கள் குலத்தைச் சேர்ந்த ராகுவும் பருகியதைச் சூரிய, சந்திரர்கள் மோகினி ரூபத்தில் இருந்த மஹாவிஷ்ணுவிடம் காட்டிக் கொடுக்க, அவர் அமிர்தம் வயிற்றுக்குள் இறங்குவதற்குள் ராகுவின் தலையைக் கொய்துவிடுகிறார். ஆனாலும் அமிர்தம் அருந்திய தலை சாகா நிலை பெற்று விடுகிறது. கோபம் கொண்ட ராகு அவ்வப்போது சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதாகப் புராணம் நகர்கிறது. அறுபட்ட உடல் தான் கேது. ஆகவே கேது நிழல்கிரகம் என்றறியப்படுகிறது. இதற்குப் பின் உள்ள அறிவியலையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பூமியின் வடக்கில் சூரியனும், சந்திரனும் தங்கள் நீள் வட்டப்பாதையில் சந்திக்கும் புள்ளி (Lunar Node) ராகு என்றும், தெற்கில் சந்திக்கும் புள்ளி கேது என்றும் தெளிவாகவே குறிப்பிடப்படுகிறது. எனவே பூமி, சூரியன், சந்திரன் சந்திக்கும் புள்ளிகளின் வரும் சந்திர, சூரிய கிரகணங்களை ராகு என்னும் பாம்பு விழுங்குவதாக ஒரு படிமமாக்கி எளிமைப்படுத்திச் சொல்கிறது நமது புராணங்கள்.
எனவே இந்த அறிவியல் பின்புலங்கள் தான் உண்மையில் உள்ளுறையாக உள்ளது. மேற்கொண்டு விவரங்கள் சேகரித்து இன்னும் தெளிவுபடுத்த முயற்சிக்கிறேன்.
நமது பழக்கங்கள், சடங்குகளை “கடவுள் காப்பாற்ற மாட்டாரா?” என்று கேட்கும் அறிவிலியை “பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?” போன்ற மட்டையடிக் கேள்விகள் மாதிரி நாமும் ஏராளமாகக் கேள்வி கேட்டு மடக்கலாம். அந்தச் சிறுமையை நாம் ஒரு சிறு புண்ணகையில் கடந்து முன்னேறுவோம்.
மேலே உள்ள பதிலில், ”கேது நிழல்கிரகம் என்றறியப்படுகிறது” என்னும் வரியை “ராகு, கேது நிழல்கிரகம் என்றறியபடுகிறது” என்று வாசிக்கவும்.
————-
திரு.க்ருஷ்ணகுமார், தாங்கள் சுட்டியது சரியே. நமது பாரம்பரிய கணக்கின் படி வரும் விடையான பூமி சூரியனைச் சுற்றி வர 365.258680556 நாட்கள் என்பது தற்காலக் கணக்கிற்கு 365.256363004 இன்னும் நெருக்கமாக வரும் . நன்றி!
மதிப்புக்குரிய அண்ணன் பிரகாஷ் சங்கரன் அவர்கட்கு,
என் சந்தேகங்களக்கு தெளிந்த நீரோடை போன்ற பதில்களை அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.தாங்களின் சீரிய முயற்சிகளக்கு மீண்டும் மிக்க நன்றிகள்..மதம் என்பது நடக்க முடியாதவனை நடக்க வைக்க முடியும் எனின்,உயிரிலந்தவனை உயிர்பிக்கவும் வேண்டும்…இல்லை என்றால் துண்டுபிரசூரங்களில் “conditions apply ” என அச்சிட வேண்டும்.வாழ்க்கை நெறியாகவும்,வாழ்வியல்,அறிவியல் முறையாகவும்,பிற மனிதனையும் உயிர்களையும் மதிக்கும் பண்பை உருவாக்குவதாகவும் மத நெறி அமைய வேண்டும்.நம் தமிழ் இந்து அன்பர்களின் சந்தேகங்கள் இவ்வாறு தீர்க்கப்படுமாயின் உண்மையுள்ள தேவனை நம் இந்து மதத்திலேயே காணலாம்..
நன்றி கொழும்பு தமிழன் wijey
அண்ணன் பிரபு அவர்களக்கு ,
தங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.
நன்றி
நல்ல ஆழ்ந்த கருத்துக்கள் திரு பிரகாஷ் சங்கரன், எனது வேலையை சுலபமாகிவிட்டீர்கள் நன்றிகள் பல.
@ கொழும்பு தமிழன்,
திரு பிரகாஷ் சங்கரன் சொன்னது போல் lunar , lunatic இன்னும் நிறைய அறிவியல் பூர்வமாக சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் அவர்களுக்கு சொல்லி புரிய வைப்பதற்குள் வேண்டும் என்றே நிறைய கேள்விகள் ஒவ்வொன்றிலும் கேட்டுகொண்டே இருப்பார்கள். அவர்கள் குறிக்கோள் தெரிந்து கொள்ள அல்ல. அவர்கள் குறிக்கோள் அவர்கள் புத்திசாலிகள் நாம் எல்லாம் முட்டாள் என்ற நினைப்பு.
என்னால் முடிந்த அளவு எளிமையாக விளக்க முயல்கிறேன். நமது கோயில்களில் நாம் கடவுளாய் வழிபாடும் சிலைகள் வெறும் கற்கள் அல்ல. அவைகள் எல்லாம் பிரதிஸ்டை செய்யப்பட்டவை. ஆகம விதி படி கட்டப்பட்ட நமது கோவில்கள், சிலைகள் எல்லாம் சக்தி கேந்திரங்கள். அவைகளின் சக்திகள் அதிகம். அதை உணர மட்டுமே முடியும்.
நிலவு, கிரகங்கள் சூரியன் போன்றவைகளால் பூமியில் தாக்கங்கள் உண்டு. முழுநிலவு, அமாவாசை நாட்களில் கடலில் எழும் அலைகள் அதற்க்கு உதாரணம். அதே போல கிரகண காலத்தில் உண்டாகும் சக்தி வீச்சு கோயிலின் உள் உள்ள சக்திகளை பாதிக்க கூடாது அந்த நேரத்தில் கோயிலின் உள் யாரும் செல்லக்கூடாது சென்றால் பாதிப்புகள் அதிகம் என்பதற்காக நடை சாத்தபடுகிறது.
கிரகண நேரத்தில் உண்ண கூடாது, (தாய்மை அடைந்த(கற்பமடைந்த) பெண்கள் முக்கியமாக) உண்டால் அதன் தாக்கம் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு இருக்கும் இதை போல் பாதிக்கபட்டவர்களை கண்டிப்பாக எங்கேனும் பார்த்திருப்பீர்கள். கிரகண நேரத்தின் தாக்கம் அறிய கிராமங்களில் உலக்கை, வெங்கலதட்டு போன்றவற்றை வைத்து தெரிந்து கொள்வார்கள். நான் பார்த்திருகிறேன் எனக்கு சரியாக அதை விளக்கும் அளவுக்கு – நியாபகம் இல்லை. அது கிரகணத்தின் தாக்கத்தை அறிய. யாரேனும் கிராமபுரங்களில் இருப்பவர்கள் பார்த்தவர்கள் அதை பற்றி எழுதினால் அனைவருக்கும் பயன்படும்.
அவர்களுக்கு சக்தி, பிரதிஸ்டை, தாக்கம், போன்றவற்றை எல்லாம் புரிய வைக்க முடியாவிட்டால் எளிமையாய் அவர்களுக்கு விளக்கி சொல்ல வேண்டும் என்றால்
கழிவறைக்கும், உணவரைக்கும் வித்தியாசம் உண்டு. உண்ணும் பொது அருகில் கழிவறை இருந்தால் மூடிவைத்தல் நல்லது. அதே போல் கழிவறையில் அமர்ந்திருக்கும் பொது உணவறையை பார்க்காமல் இருப்பது நல்லது.
தெளிவா சொல்லிடுங்க கோயில் உணவறை போல கிரகண நேரத்தில் நாங்கள் உண்ணுவதில்லை என்று இல்லையென்றால் அவுங்க புத்தி எங்க போகும் தெரியும்ல.
நேரமின்மை காரணமாக இத்துடன் முடிக்கிறேன். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இதை பற்றி முழுவதும் விளக்குகிறேன் என்னால் முடிந்தவரை. இது உங்களுக்கு விளக்க போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அனைவருக்கும் என் நன்றிகள்
என் சந்தேகங்களக்கு பதில் அளித்த பிரபு அண்ணா,பிரகாஷ் சங்கரன் அண்ணா அவர்களக்கு நன்றிகள் உரித்தாக ….
நேற்று முன்தினம் இரவு விஜய் டிவி,குற்றம் நிகழ்ச்சியில் 2012 இல் உலகம் அழியுமா??? என்ற தொனிப்பொருள் எடுக்கப்பட்டது…எடுத்த எடுப்பிலயே அவர்கள் சென்றது ஒரு தேவாலயத்துக்கு,பாதிரியிடம் உலக அழிவு பற்றி நேர்காணல்…………
வழக்கம் போல பாதிரி உலகஅழிவு நெருங்குவதை தற்போது இடம்பெறும் இயற்கை அழிவுகளுடன் இணைத்து அத்துடன் இது ஏசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் ஆயத்தம் எனவும் கூறினார்..ஆயினும் மற்ற பாதிரிகளை போல் உணர்சிவசப்படமால் தன் கருத்துக்களை கூறியதுடன்,இயேசுவின் இரண்டாம் வருகை நாள் யாராலும் அறுதியிட்டு கூற முடியாது எனவும் கூறினார்.
அடுத்து இந்துமத ஜோசியர் ஒருவரிடம் சென்ற போது,அவர் கூறிய கருத்துக்கள் சிந்திக்க தூண்டுவதாய் அமைந்தன.உலகின் இறுதி நாட்களில் அமில மழை பொலிவு,மற்றும் மீன்கள்,தவளை மழை பற்றியும் கூறினார்.அதற்கு சில ஜோசிய சாஸ்திரங்கள் மற்றும் விஞ்ஞான எடுகோள்களையும் ஆதார படுத்தினார்.எனினும் ஒரே நாளில் உலக அழிவு என்பது நடக்க முடியாத ஒன்று என்றும்,இப்போதைக்கு அது நடப்பது சாத்தியம் அற்ற ஒன்று எனவும் விளக்க படுத்தினார்.விஞ்ஞான ரீதியில் இந்து மதம்,அறிவியலுடன் ஒத்து போகிறது என கருத்திட்கொள்ள முடிகிறது.
இங்கு நாம் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும்,மிஷனரிகள் உலகில் இயற்கை அழிவுகள் நடக்கும் போதெல்லாம் அதனை தம் பிரசார உத்திகளாக பயன் படுத்தி ஆன்ம அறுவடை செய்து வருகின்றனர்..அண்மைய ஜப்பான் சுனாமி,தாடி வச்ச சாது சுந்தரால் முன்கூட்டியே தீர்க்க தரிசன படுத்த பட்டதாம்.அதாவது நிலநடுக்க வலயத்தில் இருக்கும் ஒரு நாட்டில் ஏற்பட போகும் சுனாமியை இவர் கூறினாலும் நடக்கும்…ரோட்ல போற முனுசாமி சொன்னாலும் நடக்கும் என்ற வகையிலே பார்க்க வேண்டி உள்ளது….பசிபிக் சமுத்திரத்திலே 3 தேவதூதர்கள் நிறுத்தி வைத்து அவர்களின் கையிலே உள்ள பட்டயத்தின் படி அலைகளை அவர்கள் எழுப்புவார்கள் என இவர்,கூறி 4 மாதத்தில் சுனாமி வந்ததாம்.(பி.கு: அவர் கணக்கு படி 9 .00 ரிச்டர் நிலநடுக்கம் நடக்கவே இல்லை !!!!!! 😛 :@ => ) இடை இடையே “Fear to god,” சத்தம் வேறு ….1882 இல் இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்ட போதும் இவர்கள் இதைதான் சொல்லிருபைன்களோ?
விளக்கம் சொல்லமுடியவில்லை என்றால் குரானின் இருக்கும் விஞ்ஞானம் போல் என்று நினைத்துவிடுவார்கள்.-தமிழன்
அறிவியல் என்று வந்தால் தமிழன் கருத்தை மறுக்க முடியாது. உலகத்தின் கடைத்தெடுக்கபட்ட பிற்போக்கு தனங்களின் மொத்த உருவமான குரான் அல்லது இஸ்லாம் தன்னை மினுமினுப்பாகா செய்ய அறிவியல் சாயம் பூசி புறப்பட்டு இன்று அவமானப்பட்டு நிற்கிறது.இது தலை நிமிர்ந்த உயர்வான இந்து மதத்திற்க்கு ஒரு போதும் எந்த காலத்திலும் தேவையில்லாத விடயம்.
@ ஸ்ரீலங்கா ஹிந்து ,
தங்களின் கருத்தை வரவேற்கிறேன்,இந்துவாக பிறந்த ஒவ்வொருவனும் தாம் இந்துவாக பிறந்ததை கடவுளின் வரம் என கருதுவதுடன்,நம் பழக்க வழக்கங்கள்,பாரம்பரியம் தொடர்பான தெளிவான புரிதலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.இங்கு மதம் மாறிய மக்கள் மஞ்சள் நீர்,வேப்பிலை,கிரகனநேர கடமைகள் என்பவற்றை கிண்டல் அடித்து கொண்டு இருக்கும் அதே வேளை,அதே மஞ்சள் வேப்பிலை விளையாத அமெரிக்கா(கிறிஸ்தவ நாடு:There moto in currency,in god we trust!|) அதன் மகிமைகள் அறிந்து காப்புரிமை பெற்று விட்டது ,வேப்பிலைகு மட்டும் வாங்க முடியவில்லை.இந்துவில் இறைவனை நோக்கி வழிபட்டு பிணி தீர்ந்த மக்கள் உண்டு என்பதால் தான் நேர்த்திகடன்கள் நிறைவேற்ற படுகின்றன..அது மட்டும் இன்றி மருத்துவம்,விஞ்ஞானம்,வாழ்வியல்,மனவளம் என பலவும் கொண்டது இந்து மதம்…
இன்று காலை கல்யாண மாலை நிகழ்ச்சியில் மதிப்புக்குரிய அய்யா சுகி சிவம் அவர்கள் இன்றைய இளைன்ஞர்களின் ஆன்மிகம் குறித்து கூறியவற்றில் ஒரு சில கருத்துக்கள் ,
1 . தனது சமயத்தை கணவனாக போற்றி பணிவிடைகள் செய்தும்,போற்றியும் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணிடம்,உன் கணவன் சரி இல்லை,மோசமானவன் அவனை விட நல்ல மாப்பிள்ளை என்கிட்டே இருக்கு,கட்டிகிறியானு கதவை தட்டி கேட்பது போல் உள்ளது தற்போதைய மதமாற்ற நிலைமை.
2 .நல்லது நடக்குது,பிரச்னை தீருது னு,காணிக்கைனு பல ஆயிரம் ரூபாய்கள மதமாற்ற வியாபாரிகள் கிட்ட கொடுக்குறீங்க.தப்பா நினைக்க வேணாம்.பல இடங்களில் அது எல்லாம் குடும்ப சொத்தாக மாறி கொண்டு இருக்கிறது ..
சமீபத்தில் நான் ரசித்துப் படித்த கட்டுரை இது .அற்புதப் பாண்டியனைப் பற்றி வலைப் பூவில் அற்புதமாக எழுதியது நீங்கள்தானா?
why u not posting about LEONARD SUSSKIND,who discovered that this universe is nothing but an illusion of black hole i.e we are living in holographic universe…
ஐன்ஸ்டீன் மிக பெரிய விஞ்ஞானி என்பது உலகு அறிந்த உண்மை தான்.. ஆனால் வினவிற்கு ஒன்று புரியவில்லை. மகாபாரதத்தின் ஒரு அங்கம் தான் பகவத் கீதையும். அந்த பகவத் கீதை தான் தன்னுடைய அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு உத்வேகத்தை அளித்தது என்று கூறிகிறார்.. அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்,
“I have made the Bhagwad Gita as the main source of my inspiration and guide for the purpose of scientific investigations and formation of my theories”.
“When I read the Bhagavad-Gita and reflect about how God created this universe everything else seems so superfluous”.
மேலும், இந்தியர்களின்(இந்துக்களின்) விஞ்ஞான அறிவை பற்றி கூறும்போது..
“We owe a lot to Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made”. ஐன்ஸ்டீனின் இந்த கூற்று உலகம் அறிந்த ஒன்று..
அவர் மட்டும் இல்லை அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் அணு சக்தி ஆயுதத்தின் தந்தை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உடன் பணியாற்றிய இராபர்ட் ஓப்பன்ஹீமர்(Julius Robert Oppenheimer) தன்னுடைய அணு ஆயுத கண்டுபிடிபிற்கு மிக உத்வேகம் அளித்தது பகவத் கீதை தான் என்று கூறியுள்ளார்…தன்னுடைய ஆய்வு கூடத்திற்கு செல்லும் போதெல்லாம் எப்போதுமே பகவத் கீதை நூலை உடன் கொண்டு செல்வது அவருடைய வழக்கம்.. அவர் கூறுவது …
Oppenheimer later recalled that, while witnessing the explosion, he thought of a verse from the Hindu holy book, the Bhagavad Gita (XI,12):
If the radiance of a thousand suns were to burst at once into the sky, that would be like the splendor of the mighty one …
Years later he would explain that another verse had also entered his head at that time: namely, the famous verse: “kālo’smi lokakṣayakṛtpravṛddho lokānsamāhartumiha pravṛttaḥ” (XI,32), which he translated as “I am become Death, the destroyer of worlds.”
In 1965, he was persuaded to quote again for a television broadcast:
We knew the world would not be the same. A few people laughed, a few people cried. Most people were silent. I remembered the line from the Hindu scripture, the Bhagavad Gita; Vishnu is trying to persuade the Prince that he should do his duty and, to impress him, takes on his multi-armed form and says, ‘Now I am become Death, the destroyer of worlds.’ I suppose we all thought that, one way or another.//
அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக செய்த ஓப்பன்ஹீமர் சோதனைச்சாலையில் அணுசக்தியின் வெடித்து கிளம்பும் நெருப்பு பிழம்பின் ஆற்றலை கண்டு மகிழ்ச்சி அடைந்த அவர் அந்த ஆற்றலை பகவத் கீதையில் வரும் 11 அத்தியாயத்தில் வரும் 12 ஸ்லோகத்தோடு ஒப்பிடுகிறார்
“If the radiance of a thousand suns were to burst at once into the sky, that would be like the splendor of the mighty one” … அதாவது,
“வானத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒருமிக்க உதித்திருக்குமானால் அது ஒரு மகாத்மாவின் ஒளிக்கு ஒப்பாகும்” என்கிற வரிகளை தான் தன்னுடன் பணியாற்றிய சக விஞ்ஞானிகளிடம் உணர்ச்சி பொங்க கூறினார்..
பின்னாளில் 1965ஆம் ஆண்டு அவர் தொலைக்காட்சி பேட்டியில் கூறும்போது….
//We knew the world would not be the same. A few people laughed, a few people cried. Most people were silent. I remembered the line from the Hindu scripture, the Bhagavad Gita; Vishnu is trying to persuade the Prince that he should do his duty and, to impress him, takes on his multi-armed form and says, ‘Now I am become Death, the destroyer of worlds.’ I suppose we all thought that, one way or another//
தனுடைய ஆராய்ச்சியில் தொய்வு ஏற்படும் போதெல்லாம் தனக்கு உத்வேகம் தருவது பகவத் கீதையில் வரும் 11ஆம் அத்தியாயம் 32 ஆம் ஸ்லோகத்தில் கூறப்படும்..
“உலகங்களை அழிக்க வல்ல காலம் நான். உலகங்களை சங்கரிக்க தலைபட்டிருக்கிறேன். நீ போரினின்று பின்வாங்கினால் , எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்கள் எல்லோரும் வாழ மாட்டார்கள்”.
என்னும் வரிகள் தான் என்று கூறினார்.. இந்த ஸ்லோகத்தின் மொத சாரத்தை அவர் சுருக்கமாக ‘Now I am become Death, the destroyer of worlds.’ என்று கூறினார். இதற்குள் ஒளிந்திர்க்கும் தத்துவம் யாதெனில்.. இந்த படைப்புகளுக்கு காரணமாக விளங்கும் அணுசக்தி(atomic fusion ). அழிக்கவும் செய்யும் என்பதுதான் அதன் உள்ளர்த்தம்..
இதன் மூலமாக தான் இரண்டாம் உலக போர் ஒரு முடிவுக்கு வந்தது…
மேற்கண்ட வற்றிற்கான ஆதாரம்
The Gita Of J. Robert Oppenheimer நூலில் கண்டு கொள்ளலாம் …
ஆதாரம்:https://en.wikipedia.org/wiki/J._Robert_Oppenheimer
அவரின் தொலைக்காட்சி பேட்டி…
https://www.youtube.com/watch?v=e67mIPR6ryA
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இராபர்ட் ஓப்பன்ஹீமர் மட்டுமல்ல இந்து வேத சாஸ்திரங்களை அறிந்த பல உலக விஞ்ஞானிகள் பாராட்டி கூறி இருக்கிறார்கள். தேவை என்றால் அதையும் ஆதாரத்துடன் அளிக்க தயார். இந்து வேத சாஸ்திரத்தின் அருமை என்ன என்பது அவர்களுக்கு தெரியும். ஏனென்றால், அவர்கள் படித்தவர்கள் மேலும் விஞ்ஞான மேதைகள்.. எதையும் நுண்மையாக அராய்ச்சி செய்யும் அறிவு அவர்களுக்கு இருக்கிறது.. பெரியார் போன்றும் அவரை பின் பற்றி நடக்கும் பெரியாரிஸ்டுகள் போன்றும் எதையும் மேலோட்டமாக பார்க்கும் முட்டாள்கள் அல்ல அவர்கள்..
மேற்கண்ட எனது மறுமொழி இந்து மதம் தொடர்பாக வினவு தளம் வெளியிட்ட அவதூறுக்கு கொடுக்க பட்ட பதில் மொழிகள்