முந்தைய பகுதிகள்:
தொடர்ச்சி …
“நான் ஒரு ஹிந்து, தெய்வ பக்தி உள்ளவன், ஹிந்து மதத்தின் பன்முகத் தன்மை என் சிந்தனை முறைக்கு பொருத்தமாக இருக்கிறது என்று சொல்வதில் எல்லாம் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் ஹிந்துத்வம் என்றால் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா? நான் ஹிந்துத்வத்தை எதிர்க்கிறேன் (என்று நினைக்கிறேன்). இது என்னவோ எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் ஒருவராலும் வரையறுக்க முடியாத விஷயம் போலிருக்கிறது”- சில வாரங்கள் முன்பு ஒரு கூகிள் குழும விவாதத்தில் ஒரு நண்பர் இப்படிக் கேட்டிருந்தார்.
சென்ற பகுதியில் இந்தக் கேள்வியுடன் நிறுத்தியிருந்தோம். அங்கிருந்து தொடங்குவோம்.
ஹிந்துத்துவம் என்பதற்கு ஒரு சமகாலத்திய பாடப்புத்தக வரையறை தரவேண்டும் என்றால் இப்படிச் சொல்லலாம் –
ஹிந்துப் பண்பாட்டில் வேர்கொண்ட கலாசார-தேசியவாத, சமூக, அரசியல் சித்தாந்தம்.
இந்த வரையறையில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. இதற்கு முன்பு ஹிந்து என்ற சொல்லிற்கு நான் அளித்திருந்த பொது வரையறையும் இங்கு நினைவூட்டுகிறேன் –
ஹிந்து என்ற பெயர் ஒரு மதத்தை (religion), கலாசாரத்தை (culture), தத்துவ ஞான மரபை (philosophy), வாழ்க்கை முறையை (way of life), இவை அனைத்தையும் உள்ளடக்கிய பண்பாட்டை (civilization) குறிக்கிறது.
இரண்டையும் இணைத்து, ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள உறவும், அவற்றின் தனித்தன்மைகளும் புலப்படும்.
ஹிந்துத்துவம் என்ற சொல்லை உருவாக்கியவர் வீர சாவர்க்கர். அந்தமான் கடுஞ்சிறையில் வாடிய பொழுதும் தேசத்தையும் தர்மத்தையும் பற்றிய சிந்தனைகள் கனலாக அவரது உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்தன. 1921ம் ஆண்டு அவரது விடுதலைக்குப் பின் ஹிந்துத்துவம் என்ற பெயரில் அவை நூல் வடிவில் வெளிவந்தன. இந்தியாவின் பழம்பெரும் பண்பாட்டின் அஸ்திவாரத்தின் மீது கட்டப் பட்ட, புத்துயிரும் புது மலர்ச்சியும் கொண்ட நவீன இந்து தேசியத்திற்குக் கட்டியம் கூறியது இந்த நூல். இந்த நூலின் முகப்பில் காணப்படும் சுலோகத்தையும் சாவர்க்கரே இயற்றினார் –
ஆஸிந்து ஸிந்து பர்யந்தா யஸ்ய பாரத பூமிகா |
பித்ருபூ: புண்யபூஸ் சைவ ஸ வை ஹிந்துரிதி ஸ்ம்ருத: ||
சிந்துவில் இருந்து கடல் வரை பரந்த பாரத பூமியைத் தங்கள் தந்தையர் நாடாகவும், புண்ணிய பூமியாகவும் கருதுவோரே ஹிந்துக்கள்.
ஹிந்துத்துவம் என்பதை பண்பாடும் தேசியமும் இரண்டறக் கலந்த ஒரு கருத்தாக்கமாகவே சாவர்க்கர் முன்வைக்கிறார். தனது வாதங்களுக்கு உரம் சேர்க்க ரிக்வேதம் தொடங்கி, அர்த்த சாஸ்திரம், புராணங்கள், மத்திய கால இந்து, இஸ்லாமிய ஆவணங்கள் என்று பல வரலாற்றுச் சான்றுகளையும் இந்த நூலில் அளித்துள்ளார். இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனை முன்வைத்த தேசியவாதத்தையும் (idea of nation-state), இந்திய கலாசார ஒற்றுமையையும் கலந்து இப்படி ஒரு சித்தாந்தத்தை சாவர்கர் முன்வைத்தார் என்று இன்றைய அரசியல் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் பகுப்பாய்வு செய்கிறார்கள். இதைப் பிடித்துக் கொண்டு இன்னும் ஒரு சாரார் ஹிந்துத்துவத்தின் வேர் இந்திய சிந்தனையில் இல்லை, ஐரோப்பிய சிந்தனையில் தான் உள்ளது, எனவே அது ஆசாரக் குறைவு என்று தீர்ப்பு வழங்கத் துடிக்கிறார்கள்.
நவீன இந்திய தேசிய மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் எல்லா தேசபக்த சிந்தனையாளர்களும், புரட்சியாளர்களும் மாஜினி, கரிபால்டி, பிஸ்மார்க் போன்ற நவீன ஐரோப்பிய தேசிய நாயகர்களை ஆதர்ச வீரர்களாகக் கருதினார்கள். அது இயல்பானதே. அர்ஜுனனும், ராமனும், கண்ணனும், சிவாஜியும், குரு கோவிந்தரும் போன்ற புராண, சரித்திர வீரர்கள் மட்டுமல்ல, தங்கள் நாட்டுக்காகப் போராடி வென்ற சுதந்திர வீரர்களின் சமகால உதாரணங்களும் அவர்களுக்குத் தேவைப் பட்டன. ஆங்கிலக் கல்வி மூலம் கற்ற சரித்திரம் ஐரோப்பிய தேசியவாத சிந்தனைகளையும் அவர்கள் மனங்களில் விதைத்தது. மகாகவி பாரதி கூட மாஜினியின் பிரதிக்கினை குறித்தும், பெல்ஜியத்தை வாழ்த்தியும் கவிதை எழுதியிருக்கிறார். எனவே இதற்கு சாவர்க்கர் மட்டும் விதிவிலக்கல்ல.
சாவர்க்கர் மாஜினியை ஆதர்ச தியாக வீரராகக் கருதினார் என்பது உண்மை தான். ஆனால் ஐரோப்பிய தேசியவாதத்தின் பக்க விளைவுகளான இனவெறி, அதிகாரப் பரவல், ராணுவ ஆக்கிரமிப்பு, சர்வாதிகாரம் ஆகிய குறுக்கல்வாத அணுகுமுறைகளை அவர் முற்றகவே நிராகரித்தார். இன்றைக்கு ஊடகங்களிலும், கல்விப் புலங்களிலும் இந்துத்துவத்தைக் கட்டுடைப்பதாகக் கூறி இந்துத்துவத்தை இந்த எதிர்மறை சித்தாந்தங்களுடன் தொடர்பு படுத்திப் பேசும் கருத்தாக்கங்கள் உள்நோக்கம் கொண்ட திரிபுவாதங்கள் அன்றி வேறில்லை (பார்க்க: பாசிசம், நாசியிசம், சோசலிசம், இந்துத்வம்).
தன் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர் சாவர்க்கர். அவரது குடும்பமே இந்திய தேச விடுதலை வேள்வியில் தன்னை முழுமையாக ஆகுதியாக அர்ப்பணித்த பெருமைக்குரியது. ஹிந்துப் பண்பாட்டை பெரிதும் மதித்த சாவர்கள் மத ரீதியாக ஒரு நாத்திகர். தனது மரணத்திற்குப் பிறகு வைதீக சடங்கு எதுவும் செய்யப் படக்கூடாது என்று உயில் எழுதியவர். தலித்துகளின் உரிமைப் போரை மிகப் பெருமளவில் முன்னெடுத்து ‘புத்தருக்கு ஒப்பான பெரியவர்’ என்று அம்பேத்கரால் பாராட்டப் பட்டவர்.
உலகம் இனவாதப் பேயின் குரூர கிருத்யங்களுக்கு சாட்சியாக நின்ற 1920களிலும் 30களிலும் எழுதப் பட்ட சாவர்க்கரின் கீழ்க்கண்ட வரிகளே அவரது மானுட சமத்துவப் பார்வையின் விசாலத்திற்குச் சான்று பகரும் –
“சொல்லப் போனால், உலகெங்கும் ஒரே இனம் தான், மனித இனம். ஒரே மனித ரத்தம் தான் அதை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கிறது. மற்ற எல்லா வாதங்களும் காரிய வாதமாகச் சொல்லப் படுபவையே. தற்காலிகமாகவோ அல்லது சார்பு நிலை கொண்டோ கூறப்படுபவையே. ஒரு இனத்திற்கும் வேறோர் இனத்திற்கும் இடையில் செயற்கையாக நீங்கள் எழுப்பும் தடைகளை எல்லாம் இயற்கை இடையறாது தகர்த்தெறிந்து கொண்டே தான் இருக்கிறது. ரத்தக் கலப்பை விதிமுறைகள் போட்டுத் தடுப்பது என்பது மணல் மேல் கோட்டை கட்டுவது போல. பாலியல் ஈர்ப்பு என்பது எல்லா இறைத்தூதர்களும் போடும் கட்டளைகளை விடவும் வலிமை வாய்ந்தது என்பது தொடர்ந்து நிரூபிக்கப் பட்டு வந்திருக்கிறது.. ஒரு மனிதனது நாடி நரம்புகளில் மனிதகுலம் முழுவதின் ரத்தமும் ஓடுகிறது என்பதே உண்மையாக இருக்கும். வட துருவம் முதல் தென் துருவம் வரை மானுடத்தின் அடிப்படை ஒருமையே சத்தியமானது. மற்றவை அனைத்தும் சார்பு நிலை கொண்டவைகளே.”
– ஹிந்துத்துவம், இரண்டாம் அத்தியாயம்.
ஹிந்துத்துவத்தை ஒரு உறுதியான சித்தாந்த கட்டுமானமாக சாவர்க்கர் முன்வைத்தார்; ஆனால் அதற்கான விதை நவீன இந்திய தேசிய மறுமலர்ச்சியின் போதே ஆழமாக ஊன்றப் பட்டு விட்டிருந்தது. சாவர்க்கருடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் குறிப்பிடத்தக்கவர்கள் – சுவாமி தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர். இந்த மகான்களின் பெயரை வேண்டுமென்றே நான் உள்ளிழுக்கவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். ஹிந்துத்துவத்தை சித்தாந்த ரீதியாக எதிர்மறையாக விமர்சித்து பேராசியர் ஜ்யோதிர்மய சர்மா எழுதிய Hindutva என்ற நூலில் (2004) இந்த நால்வரின் கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் எடுத்து விரிவாக அலசுகிறார். இன்றைய ஹிந்துத்துவ அரசியல் கொள்கைகளின் மைய கருத்தாக்கங்கள் அனைத்திற்கும் மூலம் இந்த நால்வரின் சிந்தனைகளில் தான் உள்ளது என்று அறுதியிட்டுக் கூறுகிறார். தமிழகத்தில் மகாகவி பாரதி, வ.வே.சு ஐயர்,சுப்பிரமணிய சிவா போன்றோர் இதே சிந்தனைகளை எதிரொலித்தவர்கள். காந்தி, தாகூர், திலகர், அம்பேத்கர், மதன் மோஹன் மாளவியா, சுபாஷ் சந்திரபோஸ், வல்லபாய் படேல் ஆகியோரது அரசியல்,சமூக கொள்கைகளிலும் பல ஹிந்துத்துவ கூறுகளை நாம் காணமுடியும்.
1920களில் வீர சாவர்க்கர் ஹிந்து மகா சபா என்ற அரசியல் கட்சியின் தலைவராகி தனது சிந்தனைகளுக்கு அரசியல் ரீதியாக செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கினார். தமிழகத்தில் பல இடங்களில் அவர் உரை நிகழ்த்தியிருக்கிறார். ஹிந்து மகா சபையை முழுமையாக ஆதரித்தவர்களில் வ.வே.சு ஐயர், சேலம் விஜயராகவாச்சாரியார், தலித் தலைவர் எம்.சி.ராஜா, வ.உ.சிதம்பரம் பிள்ளை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் அடங்குவர். ஹிந்துத்துவத்தின் மையக் கருத்துக்கள் தேசபக்தி, தெய்வ பக்தி, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றுடன் முற்றிலும் இயைந்திருந்தது என்று இந்தப் பெரியோர்கள் கருதியதே அவர்கள் ஹிந்து மகா சபைக்கு ஆதரவளித்ததற்குக் காரணம்.
1925ல் டாக்டர் ஹெக்டேவார் தொடங்கிய ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம், ஹிந்துத்துவத்தை செயல்முறை அளவில் பாரத நாடெங்கும் எடுத்துச் சென்ற மாபெரும் இயக்கமாகும். சங்கத்தின் இரண்டாவது தலைவராகிய குருஜி கோல்வல்கர் அந்த அமைப்பின் இயங்கு தளங்களை மிகப் பரந்த அளவில் விரிவு படுத்தி சங்க பரிவாரம் எனப்படும் சகோதர அமைப்புகளை உருவாக்கினார். மாணவர் அமைப்பு, தொழிற் சங்கம், துறவியர் பேரவை, பக்தர் பேரவை என்று பல்வேறு வகைப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகளையும் நீண்டகால அளவில் இந்த அமைப்புகள் வெற்றிகரமாகத் தொடர்ந்து செய்து வருகின்றன. கல்வி, மருத்துவம், சமூக சேவை, வனவாசிகள் மேம்பாடு, இயற்கைப் பேரிடர் நிவாரணம் என்று பல தளங்களிலும் தன்னலமின்றிப் பணியாற்றும் ஏராளமான காரிய கர்த்தர்களை சங்கபரிவார அமைப்புகள் மிகப் பெரிய அளவில் உருவாக்கியுள்ளன.

1951ல் சியாமா பிரசாத் முகர்ஜி நிறுவிய பாரதீய ஜன சங்கம், சுதந்திர இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயக சூழலில் ஹிந்துத்துவ கோட்பாடுகளை மையப் படுத்தி உருவான அரசியல் கட்சி ஆகும். சிறந்த சமூக சிந்தனையாளரான தீனதயாள் உபாத்யாயாவின் வழிகாட்டுதலில் அந்தக் கட்சி வளர்ந்து பின்னர் 1980களில் பாரதீய ஜனதா கட்சியாக வடிவம் கொண்டது. தீனதயாள் உபாத்யாயா 1960களில் உருவாக்கிய ஒருங்கிணைந்த மானுடவாதம் (Integral Humanism) என்ற சித்தாந்தத்தையே பா.ஜ.க அதிகாரபூர்வமாக இன்றும் தனது அரசியல் கொள்கையாக ஏற்றுள்ளது. சில காந்திய சமூக, பொருளாதாரக் கொள்கைகளையும், சர்வதேச அளவில் பொதுவான மானுட அறம் சார்ந்த மதிப்பீடுகளை வலியுறுத்திய Humanism கருத்தாக்கங்களையும் ஹிந்துத்துவ கோட்பாட்டுடன் இணைக்கும் முயற்சியே தீனதயாள் உபாத்யாய உருவாக்கிய சித்தாந்தம் ஆகும். தொடக்கத்திலிருந்தே நேருவிய சமூக, பொருளாதாரக் கொள்கைகளை ஹிந்துத்துவ அரசியல் தரப்பு கடுமையாக விமர்சித்து வந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் இடது சாரிக் கட்சிகளின் இந்து விரோதப் போக்கு, போலி மதச்சார்பின்மை, சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியல் ஆகிய கொள்கைகளையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
ஒரு பறவைப் பார்வையில் ஹிந்துத்துவ கண்ணோட்டம் என்பதை சுருக்கமாக இவ்வாறு பட்டியலிடலாம்.
>>> கலாசார தேசியவாதம்: இந்தியாவின் சமூக, பிரதேச, மொழி சார்ந்த பன்முகத் தன்மைகளுக்கு மத்தியிலும் இந்தியாவை ஒரே தேசமாகப் பிணைக்கும் கலாசார பண்பாட்டுச் சரடு உள்ளது. அதை வலுப்படுத்துவதே இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் நன்மை பயக்கக் கூடியது. ஹிந்து, பௌத்த, சமண, சீக்கிய மதங்கள் இயல்பாகவே எல்லாவிதங்களிலும் இந்தச் சரடில் பொருந்துபவை. கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் அன்னியமானவை. வழிபாட்டு ரீதியாக அன்னிய மதங்களைக் கடைப்பிடித்தாலும், காலங்காலமாக இந்தியாவையே தாய்நாடாகக் கொண்ட இந்திய கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் அதன் தேசியப் பண்பாட்டை மதித்துப் போற்ற வேண்டும். அதனை மறுதலிக்கவோ, அதற்கு எதிராகச் செயல்படவோ கூடாது.
>>> காலனியத் தாக்க நீக்கம் (Decolonization): பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாகவும், மெகாலே கல்வி முறையின் மூலமாகவும் பீடிக்கப் பட்டுள்ள இந்தியாவின் சிந்தனை அந்தத் தளைகளை அறுத்து இந்தியாவின் சுயமான தேசியப் பண்பாட்டு வேர்களைக் கணடடைய வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி மட்டுமல்ல, இந்தியாவின் மீதான இஸ்லாமியப் படையெடுப்பும், இஸ்லாமிய ஆட்சியும் கூட இந்தியப் பண்பாட்டை உருக்குலைத்து, சீரழித்த காலனிய ஆக்கிரமிப்பு தான். அந்த ஆக்கிரமிப்பின் தாக்கங்களிலிருந்தும் வெளிவர வேண்டும்.
>>> இந்துப் பெருமிதம்: இந்து ம்தமும், பண்பாடும் உலகின் வேறெந்த மதத்தையும் பண்பாட்டையும் போலவே பெருமையும், உயர்வும் மிக்கது. காலனியம் விளைவித்த தாழ்வுணர்ச்சிகளாலேயே அந்தப் பெருமைகளை உணராதிருந்தோம். அந்தத் தாழ்வுணர்ச்சியைக் கைவிட்டு இந்து ஆன்மிகம், அறிவியல், கலைகள், வரலாறு ஆகியவற்றை பெருமித உணர்வுடன் பறைசாற்ற வேண்டும்.
>>> இந்து சமூக ஒற்றுமை: பல உன்னதங்களைக் கொண்டிருந்த போதும், இந்து சமுதாயம் தொடர்ந்து அடிமைப் பட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளானதற்கு சமூக ஒற்றுமையின்மையே முக்கிய காரணம். இந்து சமுதாயத்தின் சமுதாயப் பிரிவுகள் தம்மளவில் சக்தியும், அதிகாரமும் பெற்றால் மட்டும் போதாது. அது ஒட்டுமொத்த இந்து சமுதாய சக்தியாகவும், அரசியல் அதிகாரமாகவும் பரிணமிக்க வேண்டும்.
>>> சமுதாய சமத்துவம்: உலகின் மற்ற சமுதாயங்கள் போலவே இந்து சமுதாயத்திலும் சுரண்டலுக்கு ஆட்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளனர். அவர்களைக் கைதூக்கி விடுதலும், சம உரிமைகளை அளித்தலும் அனைத்து இந்துக்களின் தார்மீகக் கடமை. அது இந்து ஒற்றுமையை மேன்மேலும் வளர்க்கும் செயல்பாடும் ஆகும். இந்து சமுதாயத்தின் எல்லா பிரிவினருக்கும் உரிய அங்கீகாரமும், பிரதிநிதித்துவமும் அளிக்கப் படவேண்டும்.
>>> இந்து உரிமைகள்: சுதந்திர இந்தியாவின் நேருவிய போலி மதச்சார்பின்மைக் கொள்கைகள் இந்திய அரசு அமைப்பின் ஒரு பகுதியாகவே மாறி, தொடர்ச்சியாக இந்துக்களின் உரிமை இழப்புகளுக்குக் காரணமாகியுள்ளன. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் இந்துக்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு துரத்தப்படுவது, ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் செய்யப் படும் கிறிஸ்தவ மதமாற்றங்கள், சிறுபான்மையினர் என்ற பெயரில் பிற மதத்தினருக்கு கல்வி போன்ற துறைகளில் வழங்கப் படும் சலுகைகள் என்று பல உதாரணங்களைக் கூறலாம். ஜனநாயக ரீதியாக இந்த பிரசினைகளை வலியுறுத்திப் போராட வேண்டும். இந்தியாவிற்கு வெளியே மற்ற நாடுகளிலும் இந்துக்கள் உரிமை இழப்புகளுக்கும், கொடுமைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் ஆளாகின்றனர். உலகளவில் இந்த பிரசினைகள் கவனப் படுத்தப் பட்டு தீர்வு காணப் பட வேண்டும்.
இது ஒரு பொதுவான கோட்டுச் சித்திரம். மற்றபடி ஹிந்துத்துவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தரப்புகளுக்கு உள்ளாக பல்வேறு வகைப்பட்ட கருத்தோட்டங்கள் உள்ளன. பல்வேறு இயக்கங்களும், இயக்கங்கள் எதையும் சாராத தன்னிச்சையான சிந்தனையாளர்களும் உள்ளனர்.
உதாரணமாக, பிற மதங்கள் பற்றிய விமர்சனப் பார்வை. சங்க பரிவார் இதனை தேசியத்துடன் தொடர்புடைய பிரசினையாக மட்டுமே பார்க்கிறது. மதமாற்றத்தில் ஈடுபட்டு தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காத வரை கிறிஸ்தவ மதத்தைப் பற்றி நமக்குக் கவலையில்லை, அதைப் பற்றித் தெரிந்து கொள்ள அவசியமும் இல்லை என்பதே இந்த நிலைப்பாடு. கிறிஸ்தவ இறையியல் கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து விமர்சிப்பதோ, பைபிளில் உள்ள முரண்களை வெளிக் கொணர்வதோ, கிறிஸ்தவ வரலாற்றின் இருண்ட பக்கங்களை எடுத்துக் காட்டுவதோ, கிறிஸ்தவ மதக் கொள்கைகள் குறைபாடுள்ளவை என்று நிறுவுவதோ எதுவும் இதில் கிடையாது. பொதுவாக இவற்றை செய்பவர்கள் சங்க பரிவாரத்துடன் தொடர்பில்லாத தனிப்பட்ட சிந்தனையாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் தான். ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாம் ஹிந்துத்துவம் என்றே ஒருகுடைக் கீழ் கொண்டு வரப்படுகிறது. அது போக, இந்த விஷயங்களைப் பற்றி நடுநிலையுடன் யாராவது பேசினால் கூட, உடனடியாக அவர்களை ஹிந்துத்துவர்கள் என்று முத்திரை குத்துதலும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ரீதியில் ஆயுர்வேத மருத்துவத்தின் மேன்மை பற்றிய சொற்பொழிவுகளையும், ஏழாம் அறிவு திரைப்படத்தையும் கூட ஹிந்துத்துவம் என்று சொல்லலாம் (“ஏழாம் அறிவில்” கடைசியில் வரும் நீண்ட வசனத்தில் மதமாற்றம் பற்றியும் ஒரு சிறுகுறிப்பு வருகிறது). பழைய இந்தியக் கல்விமுறை பற்றி உருவாக்கப் பட்டிருந்த பொது அபிப்பிராயங்களைத் தகர்த்து, அதன் உண்மையான சிறப்பம்சங்களை எடுத்துரைத்த காந்திய அறிஞர் தரம்பால் அவர்களின் புத்தகங்களையே கூட ஹிந்துத்துவ பிரசாரம் என்று சொல்லி விடலாம்.
உண்மையில், இந்து விரோதிகள் அதைத் தான் செய்கிறார்கள். சாதாரண மக்களிடம் பொதுவாக எழும் நியாயமான, இயல்பான ஹிந்து உணர்வைக் கூட ஹிந்துத்துவ அரசியல் இயக்கங்களின் நிலைப்பாடுகளோடும், சில உதிரிக் குழுக்கள் (பஜ்ரங் தள், ராம் சேனா) செய்யும் அடாவடிகளோடும் மீண்டும் மீண்டும் சம்பந்தப் படுத்திப் பேசுவதன் மூலம், அந்த இயல்பான ஹிந்து உணர்வு கூட வரவிடாமல் செய்ய முயல்கிறார்கள்.
சமீபத்தில் சென்னை நண்பர் ஒருவர் கூறிய ஒரு சம்பவம். அவர் சார்ந்திருக்கும் ஆன்மீக அமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் நகரில் பல இடங்களில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சென்று பஜனைகள் நடத்துவது, பக்தி புத்தகங்களை வினியோகிப்பது என்று தொடர்ந்து செய்து வருகின்றனர். வழக்கமாக நகர் மையத்திலிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் போகவேண்டுமா , ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள சிறு கோயில்களுக்கும் செல்லலாமே என்று அந்தக் குழுவில் உள்ளவர் ஒருவர் யோசனை கூற, அதன்படி தலித் மக்கள் வாழும் பேட்டைகளிலும் குப்பங்களிலும் உள்ள அம்மன் கோயில், முனீஸ்வரன் கோயில்களுக்கும் சென்று வருகிறார்கள். அப்படி ஒரு முறை அம்மன் கோயில் ஒன்றில் அவர்கள் வழிபாடு செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று பத்துப் பதினைந்து பேர் அங்கு வந்து கூச்சல் போட ஆரம்பித்தார்கள். அங்கு கூடியிருந்த மக்களிடம் “இவர்கள் தான் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்றார்கள்; கலவரம் செய்தார்கள். ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவ கன்யாஸ்திரீகளை தாக்கினார்கள்” என்று முஷ்டியை உயர்த்தி சுட்டிக் காட்டினார்கள். “பார்ப்பனீய சக்திகளே வெளியேறுங்கள்!” என்று கோஷம் வேறு. பஜனைக் கார இளைஞர்களும், யுவதிகளும் வெலவெலத்துப் போய்விட்டனர். அவர்களுக்கு தலை கால் எதுவும் புரியவில்லை. அங்கிருந்த பொதுமக்களில் சிலர் கூச்சல் போட்டவர்களை விலக்கி விட்டு, இளைஞர் குழுவினரையும் அமைதிப் படுத்தினார்களாம். கூச்சல் போட்டவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என்று பின்னர் தெரிய வந்ததாக நண்பர் கூறினார்.
இந்த உண்மை சம்பவத்தின் மூலம் புலப்படுவது என்ன என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
ஏன் ஹிந்துத்துவ தரப்பு கூறும் பல விஷயங்கள் எதிர்வினைத் தன்மை கொண்டவையாக (reactionary) உள்ளன என்று பொதுவாகக் கேட்கப் படுகிறது. ஏனென்றால் ஹிந்துத்துவம் சமகால யதார்த்தத்தை தயங்காமல் துணிவுடன் எதிர்கொள்ளும் ஒரு சித்தாந்தம். அதைப் பார்த்து கண்மூடிக் கொண்டு போகும் சித்தாந்தமல்ல. ஹிந்துத்துவம் பேசும் நியாயமான பிரசினைகளைக் கூட புறந்தள்ளும், மறைத்து மூடும் அல்லது விவாதிக்கத் தயங்கும் போக்கு துரதிர்ஷ்டவசமாக நமது சூழலில் உருவாகி விட்டது. எனவே யாராவது அதைச் சொல்லும்போது தீவிரமான எதிர்மறைக் கருத்து போலத் தோற்றமளிக்கிறது. “கடந்த காலத்தின் பெருமிதங்களையும், நிகழ்காலத்தின் வலிகளையும், எதிர்காலத்தின் கனவுகளையும் சுமக்கும் இளைஞர்களே ஒரு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வார்கள்” என்ற ஸ்ரீஅரவிந்தரின் வார்த்தைகளை இங்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஹிந்துத்துவம் அடிப்படையில் இந்திய தேசியத்துடன் தொடர்புடையது; அரசியல் ரீதியானது. எனவே வெளிநாட்டில் வாழும் இந்துக்களுக்கும் அதற்கும் தொடர்பு என்ன என்று கேட்கலாம். அது நியாயமான கேள்வியே. அதனால் தான் தொடக்கத்தில் நான் அளித்த “ஹிந்து” என்பதற்கான வரையறையில் தேசியம் பற்றிய குறிப்பு இல்லை. “ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம்” என்று தன்னை தேசிய இயக்கமாகவே இந்தியாவில் அழைத்துக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ். உலகின் பல நாடுகளில் உள்ள அதன் கிளை அமைப்புகள் “ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம்” என்றே தங்களை அழைத்துக் கொள்கின்ற்ன. ஆனால் இந்தியாவில் வாழும் ஹிந்துக்களின் அரசியல், சமூக பிரசினைகள் ஒருவிதத்தில் உலகெங்கும் வாழும் ஹிந்துக்களின் வாழ்க்கையில் கட்டாயம் தாக்கம் செலுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. அவர்கள் மிக சமீபகாலத்தில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த ஹிந்துக்களானாலும் சரி. பாகிஸ்தான், பங்களாதேஷ், பாலித் தீவுகள், மலேசியா அல்லது இலங்கையில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் இந்துக்களானாலும் சரி. தாங்கள் வாழும் இடங்களில் எதிர்கொள்ளும் பிரசினைகளை கையாள்வதற்கான சில வழிமுறைகளையாவது ஹிந்துத்துவ கருத்தியலில் இருந்து அவர்கள் கற்றுக் கொள்ளும் சாத்தியம் இருக்கிறது. மேலும் உலகில் ஏதோ பகுதியில் ஒடுக்கப் படும் இந்துக்களின் குரலை உலக அரங்கில் யார் கேட்கச் செய்ய முடியும்? இந்தியா மட்டும் தான். அவ்வகையிலும் இந்தியாவின் ஹிந்துத்துவ அரசியல் உலக அளவில் முக்கியமானது.
ஆரம்பத்தில் நண்பர் எழுப்பிய கேள்விக்கு வருவோம். ஹிந்துத்துவம் குறித்த அவரது தயக்கம் பெரும்பாலும் அது சார்ந்து உருவாக்கப் பட்டிருக்கும் எதிர்மறையான பிம்பங்கள் சார்ந்ததே என்று எண்ணத் தோன்றுகிறது. ஹிந்துத்துவ சிந்தனைகள் என்று அடிக்கோடிட்டு வெளிவந்த அரவிந்தன் நீலகண்டனின் நம்பக் கூடாத கடவுள் புத்தகத்தைப் படித்த பெண் ஒருத்தி “இது தான் ஹிந்துத்துவம்னா நான் இன்னிலேர்ந்து ஹிந்துத்துவ வாதி என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்” என்று என்னிடம் அடித்துக் கூறினாள். முந்தா நாள் வரை தன்னை ஹிந்துத்துவ எதிர்ப்பாளர் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவள் அவள்.
“நான் ஒரு ஹிந்து, தெய்வ பக்தி உள்ளவன்.. என்று சொல்வதில் எல்லாம் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று நண்பர் சொல்கிறார். ஆனால் 1960களிலோ அல்லது 80களிலோ இப்படிச் சொல்வதற்கே அவர் பயங்கரமாகத் தயங்கியிருப்பார்.
1960களில் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை பற்றி ஆய்வு செய்த ராஜ் கிருஷ்ணா என்ற பேராசிரியர், அப்போது மந்தகதியில், 2-3% விகிதத்தில் ஊர்ந்து கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரத்தைக் குறிக்க “ஹிந்து வளர்ச்சி விகிதம்” (Hindu Rate of growth) என்ற சொல்லாடலை அறிமுகப் படுத்தினார். இந்தச் சொல்லாடல் இன்றும் நமது பாடப்புத்தகங்களில் பொருளாதாரத் தேக்க நிலையைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. உண்மையில் அந்தத் தேக்க நிலைக்கும் ஹிந்து மதத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அந்த நிலைக்கு முழுக் காரணமும் நேருவின் சோஷலிச பொருளாதாரக் கொள்கைகளே. “நேருவிய வளர்ச்சி விகிதம்” என்பது தான் அதற்கு மிகப் பொருத்தமான பெயராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதே நேருவியம் உருவாக்கிய இந்து-இழிவு நோக்கு மனப்பான்மையின் காரணமாக, வேண்டுமென்றே இந்து என்ற முத்திரை பயன்படுத்தப் பட்டது. இதை அருண் ஷோரி தனது நூல் ஒன்றில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இன்றைக்கு இந்தியாவிலேயே தலைசிறந்த ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கும் குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவ அரசியல் தான் ஆட்சி நடத்துகிறது. எனவே 12% பொருளாதார வளர்ச்சிப் பாய்ச்சலுக்கு “ஹிந்துத்துவ வளர்ச்சி விகிதம்” என்று நியாயமாகவே பெயர் சூட்டலாம் தானே? ஒருவேளை அப்போது தயக்கங்கள் அகலுமோ என்னவோ?
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற சூத்திரம் நினைவு வருகிறது. கூடவே ஆலிஸின் உரையாடலும்.
“The question is”, said Alice, “whether you *can* make words mean so many different things”.
“The question is”, said Humtpy Dumpty, “which is to be the master – that’s all”.
(முற்றும்)
நன்றி. ஹிந்துக்களின் ஒற்றுமை அவசிய உடனடித் தேவை.
வாழ்க பாரதம்.
நாம் ஏன் கிருஸ்துவர்கள் போல் ஒரு பொதுவான ஹிந்து அமைப்பை ஏற்படுத்தி அதில் ஹிந்துக்களை உருப்பினராக சேர்த்து மாதா மாதம் கூட்டம் கூட்டி ஹிந்துகளின் பிரச்சனைகள் பற்றி விவாதிக்ககூடாது. இதனால் அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த முடியாதா ?. என்னை பொருத்த வரையில் ராமகிருஷ்ணா மடம் இந்த ஏற்ப்பாட்டை செய்வது சாத்தியமானதும் அது எல்லா ஹிந்துக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கு என் நம்புகிறேன். இதற்கு மற்ற ஹிந்து மடங்களும் ஹிந்து இயக்கங்களும் ஆதரவு தந்து செயல்படவேண்டும். இங்கே எல்லா ஹிந்துக்களுக்கும் பொதுவான நல்ல பண்புகளை வளர்க்கும் ஔவையாரின் பாடல்கள் திருக்குறள் கீதை இவற்றை ஒரு செயல் திட்டம் வகுத்து ஹிந்துக்களுக்கு ஒரு ஈர்பு உணர்வை ஏற்படுத்த முடியாதா ?. அதை போல் பல ஹிந்து சமயத்தவர் ஆண்மீக முன்னேற்றத்திற்காக அந்தந்த சமயத்தின் முன்நிலை தலைவர்களை அழைத்து செற்பொழுவு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இங்கே மத நல்லிணக்கண கூட்டங்களையும் வருடத்தில் இரண்டுமுறை கூட்டி மற்ற மதத்தாறுடன் ஒற்றுமையை வளர்க்கலாம்.
சமீபத்தில் திருநெல்வேலியில் ஏகல் வித்யாலயா வெற்றிகரமாக 5008 பேரைகூட்டி திருவிளக்கு பூஜை நடத்தியுள்ளது.
🙁
ஏன் முடித்தீர்கள் ?
நண்பர் வேதம்கோபால் சொல்வது நல்லது, அது மட்டுமல்லாமல் இந்துக்களை இந்துக்கலாக்குவது தற்போதைய முதல் தேவையாக உள்ளது. அதற்கு விதுரநீதியை அனைவரும் படிக்க செய்ய வேண்டும், அந்த நூல்களை கல்யாணம், புதுமனை புகல், ….. போன்ற நிகழ்ச்சிகளில் அன்பளிப்பாக கொடுக்க வேண்டும், மேலும் முக்கிய கருத்துக்களை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு விநியோகிக்கலாம், மேலும் இது சம்பந்தமாக கோவில்களில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளலாம், பொது மேடை நிகழ்ச்சிகள் நடத்தலாம், ஆவி கூட்டங்கள் போல் நாமும் சில வருட காலங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய கட்டாயத்தில்தான் நாம் இருக்கிறோம், நாம் நம் பகுதிகளில் இந்த புத்தகத்தை படித்து சிறிய அளவிலாவது பொது கூட்டங்களை நடத்தியே அக வேண்டும், இது நல்லது, விதுர நீதி தமிழ் விளக்கம் அடங்கிய ஆடியோ பேழைகளை அனைத்து இல்ல வீடுகளின் மங்கள நிகழ்ச்சிகளிலும் ஒலிக்க விட வேண்டும், பிரச்சார யுக்தியில் இறங்கியுள்ள கிறிஸ்துவ இஸ்லாமிய மத பிரச்சாரத்துக்கு முன்னால் நம் இந்த அறிமுகம் மக்கள் மத்தியில் சின்ன அதிர்வை ஏற்படுத்தும், இஸ்லாமியம் கூட இன்று மைக் பிடித்து பிரச்சாரம் செய்யபடுகிறது. விதுர நீதி நல்ல ஒரு ஆரம்பத்தை கொடுக்கும்.
அது என்ன ஏகல் வித்யாலயா திருநெல்வேலியில்? வேதம் கோபால் விளக்குக
உங்கள் கட்டுரை மேலும் கேள்விகளைத்தான் எழுப்புகிறது. சில அவசரக் கேள்விகள்:
1. // ஹிந்து என்ற பெயர் ஒரு மதத்தை (religion), கலாசாரத்தை (culture), தத்துவ ஞான மரபை (philosophy), வாழ்க்கை முறையை (way of life), இவை அனைத்தையும் உள்ளடக்கிய பண்பாட்டை (civilization) குறிக்கிறது. //
கலாசாரம் என்று நீங்கள் சொல்வதில் இஸ்லாமியக், கிருஸ்துவக் கலாசாரக் கூறுகளும் அடங்குமா? உதாரணமாக பசுவதையை எதிர்க்கிறீர்களா?
2. // சிந்துவில் இருந்து கடல் வரை பரந்த பாரத பூமியைத் தங்கள் தந்தையர் நாடாகவும், புண்ணிய பூமியாகவும் கருதுவோரே ஹிந்துக்கள். //
இந்த புண்ணிய பூமி, பாவ பாதாளம் போன்ற கருத்தாக்கங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் ஹிந்து. உங்கள் கண்ணில், சவர்க்கார் கண்ணில் நான் ஹிந்துவா?
3. // இந்தியாவின் மீதான இஸ்லாமியப் படையெடுப்பும், இஸ்லாமிய ஆட்சியும் கூட இந்தியப் பண்பாட்டை உருக்குலைத்து, சீரழித்த காலனிய ஆக்கிரமிப்புதான். அந்த ஆக்கிரமிப்பின் தாக்கங்களிலிருந்தும் வெளிவர வேண்டும்.//
ஆரியர்கள் வந்தேறியவர்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தால் ஆரியப் “படையெடுப்பையும்” காலனிய ஆக்கிரமிப்பு என்றுதான் வரையறுப்பீர்களா? உருது மொழியைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அது அழிக்கப்பட வேண்டிய மொழியா?
4. // அந்தத் தாழ்வுணர்ச்சியைக் கைவிட்டு இந்து ஆன்மிகம், அறிவியல், கலைகள், வரலாறு ஆகியவற்றை பெருமித உணர்வுடன் பறைசாற்ற வேண்டும். //
தயவு செய்து தெளிவுபடுத்துங்கள் – இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் இந்து ஆன்மீகத்தைப் பற்றி பெருமை கொள்ள வேண்டுமா?
5. // இந்து சமுதாயத்தின் எல்லா பிரிவினருக்கும் உரிய அங்கீகாரமும், பிரதிநிதித்துவமும் அளிக்கப் படவேண்டும். //
தெளிவுபடுத்துங்கள் – இந்து சமுதாயம் என்பதில் இன்று இந்து மதத்தினர் என்று அறியப்படுபவர்கள் மட்டும்தான் அடக்கமா? இல்லை நீங்கள் குறிப்பிடுவது uber-ஹிந்துவா?
6. // “நான் ஒரு ஹிந்து, தெய்வ பக்தி உள்ளவன்.. என்று சொல்வதில் எல்லாம் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று நண்பர் சொல்கிறார். ஆனால் 1960களிலோ அல்லது 80களிலோ இப்படிச் சொல்வதற்கே அவர் பயங்கரமாகத் தயங்கியிருப்பார். //
ஜடாயு, இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை? 🙂 உங்களுக்கு “நண்பரை” எண்பதுகளிலேயே தெரியுமா?
அன்புள்ள ஆர்வி,
நான் ஹிந்துத்துவ கருத்தியலின் கூறுகளாக கொடுத்திருந்தது பொதுவான கோட்டுச் சித்திரம் என்றும், ஹிந்துத்துவத்திற்கு உள்ளேயே கூட பலவித கருத்தோட்டங்கள் உள்ளன என்றும் சொல்லியிருந்தேன். அதை மீண்டும் நினைவுறுத்துகிறேன். “நீங்கள்” என்ற உங்களது விளியில் எனது தனிப்பட்ட கருத்தைக் கேட்கிறீர்களா அல்லது பொதுக் கருத்தா என்று தெரியவில்லை. எதுவானாலும், எனது பதில்கள் –
// 1. கலாசாரம் என்று நீங்கள் சொல்வதில் இஸ்லாமியக், கிருஸ்துவக் கலாசாரக் கூறுகளும் அடங்குமா? உதாரணமாக பசுவதையை எதிர்க்கிறீர்களா? //
ஹிந்து கலாசாரம் என்று சொல்லும்போது அதில் இஸ்லாமிய, கிறிஸ்துவ கலாசார கூறுகள் எப்படி சார் அடங்கும்? “இந்திய கலாசாரம்” என்பதில் அடங்குமா என்று கேட்டாலாவது அர்த்தம் இருக்கிறது.
இதற்கும் பசுவதை தொடர்பான கேள்விக்கும் சம்பந்தம் இல்லை. அது தனிக்கேள்வி.
பசுவதை எதிர்ப்பு என்பது ஏதோ நவீன ஹிந்துத்துவ வாதிகள் கண்டுபிடித்த ஒன்றல்ல. சிலப்பதிகார காலத்திலிருந்து நமது பண்பாட்டில் வந்து கொண்டிருப்பது (“ஆவிற்கு நீரென்று இரப்பினும்..” – திருக்குறள்). காந்தியின் நிர்மாணத் திட்டங்களில் ஒன்று பசுப்பாதுகாப்பு. இந்தியா ஒரு மாபெரும் விவசாய கலாசாரமாக ஆன்பொழுது உருவான கலாசாரக் கூறு அது, ஏதோ குருட்டு நம்பிக்கை அல்ல. மார்வின் ஹாரிஸ் என்ற சமூகவியல் அது பற்றி எழுதியிருக்கிறார். “பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக் காரிகள்” என்ற பெயரில் தமிழில் புத்தகமாகவும் வந்துள்ளது.
ஹிந்துத்துவம் பசுவதையை எதிர்க்கிறது – இது நன்கறிந்த விஷயம் தானே? காங்கிரஸ் அரசுகள் பசுவதைத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளன. பல சூழலியல் அமைப்புகள் பசுவதைத் தடை கோரியுள்ளன.
இந்த கலாசார அம்சத்தைத் தூக்கி எறிந்தால் என்ன ஆகும் என்பதற்கு பங்களாதேஷ் ஒரு உதாரணம். அங்கிருக்கும் இஸ்லாமியப் பெரும்பான்மையினர் கட்டுப்பாடற்று பசுக்களைக் கொன்று தின்றதால், குழந்தைகளுக்குப் பால் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். ஒவ்வொரு பங்களாதேச கிராமமும், மேற்கத்திய கம்பெனிகள் விற்கும் பவுடர் பால் பாக்கேட்டுகளால் நிரம்பியுள்ளன. அந்த நிலை இந்தியாவுக்கும் வரவேண்டுமா?
பசுவதைத் தடையை இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு விரோதமானது என்று சித்தரிப்பது விஷமத் தனமானது (வந்தே மாதரம் இஸ்லாமுக்கு எதிரானது என்ற விஷப் பிரசாரம் போல). உலகமே வியக்கும் வண்ணம், பல இந்திய இஸ்லாமிய அமைப்புகள் தாங்களாகவே முன்வந்து பசுவதைத் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் – இந்த ஆதரவுக் குரல்களை இந்திய ஊடகங்கள் வேண்டுமென்றே இருட்டடித்து, மோதல் வளர்க்கும் கருத்துக்களையே முன்னிறுத்துகின்றன. மேலும், இந்தியாவின் கால்ந்டைச் செழிப்பினால் ஒட்டுமொத்த நாடுமே பயன்பெறும், இந்துக்கள் மட்டுமல்ல.
2. // சிந்துவில் இருந்து கடல் வரை பரந்த பாரத பூமியைத் தங்கள் தந்தையர் நாடாகவும், புண்ணிய பூமியாகவும் கருதுவோரே ஹிந்துக்கள். //
இந்த புண்ணிய பூமி, பாவ பாதாளம் போன்ற கருத்தாக்கங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் ஹிந்து. உங்கள் கண்ணில், சவர்க்கார் கண்ணில் நான் ஹிந்துவா?
கண்டிப்பாக நீங்கள் ஹிந்து தான், என் கண்ணிலும் சாவர்க்கர் கண்ணிலும்.
புண்ணிய பூமி என்பதை லிடரலாக எடுத்துக் கொள்ளலாமா ஆர்.வி? அந்தச் சொல்லை சாவர்க்கர் இணைத்ததற்குக் காரணம், இந்தியா என்ற பூகோளப் பரப்புடன் மட்டுமல்ல, அதன் பண்பாட்டுப் பரப்புக்கும் அதிகாரி ஹிந்து என்று சுட்டுவதற்காகத் தான். பாரதி எத்தனையோ பாடல்களில் புண்ணிய பூமி என்ற கருத்தை சொல்லியிருக்கிறாரே.
இந்த சுலோகம் ஒரு கீற்று மட்டுமே. சாவர்க்கர் சொலல் வருவதை முழுமையாக உள்வாங்க் நீங்கள் அவரது புத்தகத்தைப் படிக்க வேண்டும். அல்லது “ஹிந்து என்னும் சொல்” பகுதியில் நான் குற்ப்பிட்ட எல்ஸ்ட் அவர்களின் Who is a Hindu புத்தகம். அதில் சாவர்க்கர் தரப்பைத் தொகுத்தளிக்கிறார்.
3. // ஆரியர்கள் வந்தேறியவர்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தால் ஆரியப் “படையெடுப்பையும்” காலனிய ஆக்கிரமிப்பு என்றுதான் வரையறுப்பீர்களா? //
இஸ்லாமிய படையெடுப்பு, ஆக்கிரமிப்பு என்பது பூதாகாரமான வரலாற்று உண்மை. இந்தியா மீது பட்ட மிகப் பெரிய காயம். Wounded civilization என்றழைத்த வி எஸ் நய்பால் முதல் ஜெயமோகன் வரை ஏராளமான சிந்தனையாளர்கள் இன்று வரை அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். “ஆயிரம் ஆண்டுகள் அன்பிலா அன்னியர்” என்று பாரதி ஒரு பாடலில் எழுதுகிறார். அதை எப்படி எந்த ஆதாரமும் இல்லாத “வாதத்துக்காக வைத்துக் கொள்வோம்” சமாசாரத்துடன் சேர்க்கிறீர்கள்? அத்தகைய வெற்று வாதங்களால் ஆவதென்ன?
“இஸ்லாமிய காலனிய தாக்க நீக்கம்” என்ற சொல்லை மட்டுமே நான் இங்கே பயன்படுத்தியிருக்கிறேன். அதற்கு “இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து விரட்ட வேண்டும்” என்றெல்லாம் சொல்வதாக நீங்கள் அதீத பொருள் கொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது. குருஜி கோல்வல்கர் உட்பட எந்த ஹிந்துத்துவரும் அப்படி சொன்னதில்லை. அப்படி சொன்னவர் ஒருவர் – அவர் பெயர் டாக்டர் அம்பேத்கர்.
// உருது மொழியைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அது அழிக்கப்பட வேண்டிய மொழியா? //
இல்லை. எனக்கு ஹிந்தியில் நல்ல பரிச்சயம் உண்டு. உருது கஜல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். குலாம் அலி பிடித்த பாடகர்.
உருது *இந்திய* மொழி. வட இந்தியாவின் பேச்சு வழக்கு மொழிகளும், அரபு/பாரசீக மொழிகளும் இணைந்து உருவானது அது.
4. // // அந்தத் தாழ்வுணர்ச்சியைக் கைவிட்டு இந்து ஆன்மிகம், அறிவியல், கலைகள், வரலாறு ஆகியவற்றை பெருமித உணர்வுடன் பறைசாற்ற வேண்டும். //
தயவு செய்து தெளிவுபடுத்துங்கள் – இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் இந்து ஆன்மீகத்தைப் பற்றி பெருமை கொள்ள வேண்டுமா?//
கட்டாயமாக. ஏன் பெருமை கொள்ளக் கூடாது? வங்கக் கவிஞர் நஸ்ருல் இஸ்லாம் அன்னை துர்க்கையைப் பற்றி சிலிர்ப்பூட்டும் பாடல்கள் எழுதியிருக்கிறாரே. கபீர்தாசரும், குணங்குடி மஸ்தானும், மு.மு இஸ்மாயிலும், ஷேக் சின்னமவுலானாவும், அப்துல் கலாமும், உஸ்தாத் பிஸ்மில்லா கானும் உருவான மண்ணில் நின்று கொண்டு, அதைப் பற்றிய பிரக்ஞ்யே இல்லாமல் எப்படி உங்களால் பேச முடிகிறது?
// 5. // இந்து சமுதாயத்தின் எல்லா பிரிவினருக்கும் உரிய அங்கீகாரமும், பிரதிநிதித்துவமும் அளிக்கப் படவேண்டும். //
தெளிவுபடுத்துங்கள் – இந்து சமுதாயம் என்பதில் இன்று இந்து மதத்தினர் என்று அறியப்படுபவர்கள் மட்டும்தான் அடக்கமா? இல்லை நீங்கள் குறிப்பிடுவது uber-ஹிந்துவா? //
“சமுதாய சமத்துவம்” என்பதன் கீழ் நான் சொல்ல வருவது இந்து சமுதாயத்திற்கு *உள்ளே* உள்ள பிரதினிதித்துவம் பற்றி. உதாரணமாக, தலித்துக்களுக்கு வழிபாட்டுரிமை.
ஒட்டுமொத்த இந்திய சமுதாயம் தொடர்பான பிரதிநிதித்துவம் குறித்து இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சொல்வதை ஹிந்துத்துவமும், நானும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். பொது சிவில் சட்டம் குறித்து இந்திய சட்ட வரைவு பிதாமகர்களின் பரிந்துரையை அமல் படுத்த வேண்டும் என்று ஹிந்துத்துவ அரசியல் தரப்பு மட்டுமே வலியிறுத்தி வருகிறது என்றும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். ஹிந்துத்துவம் இந்திய ஜனநாயகத்தை மதிக்கும், போற்றும் கருத்தியல், அதற்கு எதிரான ஒன்றல்ல.
// 6. ஜடாயு, இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை? 🙂 உங்களுக்கு “நண்பரை” எண்பதுகளிலேயே தெரியுமா? //
ஹா ஹா! :)) நண்பரைப் போன்ற ஒருவர் என்று சொல்ல வந்தேன்.
RV அவர்களே,
உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் ஆன விடை ‘ Being different’ புத்தகத்தில் உள்ளது. விசயம் ரொம்ப சாதாரணம்.. நாங்கள் ஏசு பொய்யானவர். நபி ஒரு போலி சாமியார் என்று எழுதவில்லை. அவர்கள் மார்கத்தில் இறைவனை அடைய முடியாது என்று யாராவது சொன்னார்களா? தீவிர ஹிந்துக்கள் கூட இது போன்ற விசயத்தை சொல்ல மாட்டார்கள். ஆனால் இறையியல் கோட்பாட்டில் அவர்கள் கொள்கை என்ன? இதை பற்றி ஆழமாக பேசி கட்டுரையின் தலைப்பை திசை மாற்ற விருமபவில்லை….
https://beingdifferentbook.com/mark-tully/
இந்த புத்தகத்தை இப்பொழுது தான் படித்து கொண்டு இருக்கிறேன். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடை உள்ளது. இந்த புத்தகம் IIT ல் உள்ள tata book showroom ல் உள்ளது.
கடைசியாக நாங்கள் எதிர்பார்ப்பது அப்துல் கலாம் போன்ற முஸ்லீமை, ஜேசுதாஸ் போன்ற கிறித்துவரை தலைய்…. ஹிந்துக்கள் எல்லோரும் பிற மதத்தவர்களை இந்த பெரியவர்கள் பார்வையிலேயே (90%) பார்க்கிறார்கள்.
———————————————————————————————————————————————————–
எல்லா கடவுளையும் ஞான மார்க்கத்தில் பார்ப்பது என்பது 90% மக்களுக்கு முடியாதா காரியம். பக்தி மார்க்கத்தில் மட்டுமே மனிதன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். அந்த பக்தி மார்க்கம் ஒரே ஒரு கடவுளை மையமாக கொண்டு ஒரே ஒரு பாரம்பரியத்தையாவது முழுமையாக கடைபிடிப்பதன் மூலமே வரும். அது கண்ணனாக இருந்தாலும் சரி கருப்ப சாமியாக இருந்தாலும் சரி.
எனது தனிபட்ட அனுபவத்தில் சொல்கிறேன். நாம் ஹிந்து என்ற வார்த்தைகளின் மூலம் ஒன்றுபட்டு இருப்போம், ஆனால் பக்தி என்று வரும் பொழுது அவரவர் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் முழுமையாகவோ அல்லது முடிந்தவரையிலோ கடைபிடிக்க வேண்டும்.
ஒரு விசயத்தை எடுத்து அதை ஒழுங்க்காக செய்ய வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து. ஒரே ஒரு கோயிலுக்கு சென்றாலும் அதை ஒழுங்காக செய்ய வேண்டும். அந்த தெய்வத்தை தொடர்ந்து ஆராதனை செய்வதன் மூலமாகவோ அல்லது அந்த தெய்வத்தின் நாமத்தை தொடர்ந்து ஜபம் செய்வதன் மூலமாகவோ நாம் இறைவனின் பூரண அருளை பெறலாம்… இது எனது சகோதரர்க்கு எனது பாட்டி 15 வருடங்களுக்கு முன் சொன்ன அறிவுரை. அதை நான் இன்னமும் நியாபகம் வைத்து இருக்கிறேன்….
இந்த இடத்தில் இதை வழியுறுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதனால் எழுதினேன்.
குழப்பவாதிகளைத் தெளிய வைக்க ஜடாயு செய்த முயற்சிகூட, ஆர்வி போன்ற குழப்பவாதிகளை மேலும் குழப்பி இருக்கிறது என்பது அவரது கேள்வியில் தெரிகிறது. குழப்பம், புரிந்துகொள்ளாததால் வந்ததல்ல; புரிந்துகொள்ள மறுப்பதால். வாதத்துக்கு மருந்துண்டு; விதண்டாவாதத்துக்கு?
மற்றபடி, தெளிவான சிந்தனையோட்டத்துடன் ஜடாயு எழுதி இருக்கிறார். ஹிந்து இயக்கங்களில் நீண்ட நாட்களாக உள்ள ஒருவர் கூட சிந்திக்காத கோணங்களில் ஹிந்துத்துவத்தை விளக்கி இருக்கிறார். நன்றி.
– சேக்கிழான்
அன்புள்ள ஜடாயு,
அவசரத்தில் இன்னும் சில:
// “நீங்கள்” என்ற உங்களது விளியில் எனது தனிப்பட்ட கருத்தைக் கேட்கிறீர்களா அல்லது பொதுக் கருத்தா என்று தெரியவில்லை. // இந்த கட்டுரையின் context-இல் மட்டுமே எழுதுகிறேன். இந்தக் கட்டுரை உங்கள் தனிப்பட்ட கருத்தா இல்லை பொதுக் கருத்தா என்று “நீங்கள்”தான் சொல்ல வேண்டும். 🙂
சவர்க்காரின் வரையறைப்படி இந்தியா தங்கள் தந்தையர் நாடு மற்றும் புண்ணிய பூமி என்ற இரண்டு எண்ணங்களும் உள்ளவர் ஹிந்து. நீங்கள் தந்தையர் நாடு மற்றும் ஹிந்து “மதப் பண்பாட்டுப்” பின்புலத்தை ஏற்றால் போதும் என்று விளக்குகிறீர்கள். // ஹிந்து கலாசாரம் என்று சொல்லும்போது அதில் இஸ்லாமிய, கிறிஸ்துவ கலாசார கூறுகள் எப்படி சார் அடங்கும்? “இந்திய கலாசாரம்” என்பதில் அடங்குமா என்று கேட்டாலாவது அர்த்தம் இருக்கிறது. // ஹிந்து கலாசாரம், இந்தியக் கலாசாரம் இரண்டும் வேறு வேறு என்பதையும் உணர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் ஹிந்து கலாசாரத்தை உள்ளடக்கிய இந்திய கலாசாரத்தை நிராகரிக்கிறீர்கள் என்று பொருள் கொள்ளலாமா? இஸ்லாமிய, கிருஸ்துவக் கலாசாரக் கூறுகள் இல்லாத “தூய்மையான” ஹிந்து மதப் பண்பாட்டுப் பின்புலத்தை எல்லா முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள் உட்பட்ட எல்லா இந்தியர்களும் ஏற்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
// இஸ்லாமிய படையெடுப்பு, ஆக்கிரமிப்பு என்பது பூதாகாரமான வரலாற்று உண்மை…. // நீங்கள் பொதுவாக படையெடுப்பு+ஆக்கிரமிப்பு செயல்களை எதிர்க்கிறீர்களா இல்லை குறிப்பாக இஸ்லாமிய, பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பை எதிர்க்கிறீர்களா என்று தெளிவுபடுத்திக் கொள்ளத்தான் ஆரிய “ஆக்கிரமிப்பு” தியரியைப் பற்றி கேட்கிறேன். ஆரிய படையெடுப்பு உண்மை என்று நாளை நிறுவப்பட்டால் அதையும் எதிர்ப்பீர்களா?
// தயவு செய்து தெளிவுபடுத்துங்கள் – இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் இந்து ஆன்மீகத்தைப் பற்றி பெருமை கொள்ள வேண்டுமா?// கட்டாயமாக. ஏன் பெருமை கொள்ளக் கூடாது? //
மீண்டும் கேட்பதற்காக மன்னிக்கவும். இந்து கலாசாரம் பற்றி பெருமையா இந்து ஆன்மிகம் பற்றியா?
ஏகல் வித்யாலயா என்பது ஒரு மிக பெரிய தொண்டு நிறுவனம். ஓர் ஆசிரியர் பள்ளி என்ற திட்டத்தில் மலைவாழ் மக்களுக்கு கல்வி அளித்து வருகிறது. பல கிராமங்களை மாடலாக்கி கிராம மக்கள் முன்னேற்றத்திற்கும் கல்விக்கும் ஆண்மீக எழுச்சிக்கும் பாடுபட்டு வருகிறது. இதை பற்றி மேலும் அறிய ”ஏகல் வித்தியாலயா வலை தளத்திற்கு சென்று பார்க்கவும்.
சேக்கிழான் ஜி
ஆர்வி அவசர கேள்விகளை அதுவும் சில அவசரக் கேள்விகளையே கேட்டுள்ளார் என்பதால் அவரை விட்டு விடுங்கள்.
அவர் ஆழ சிந்தித்து இன்னும் நிறைய கேட்பார்
//
குழப்பவாதிகளைத் தெளிய வைக்க ஜடாயு செய்த முயற்சிகூட, ஆர்வி போன்ற குழப்பவாதிகளை மேலும் குழப்பி இருக்கிறது என்பது அவரது கேள்வியில் தெரிகிறது. குழப்பம், புரிந்துகொள்ளாததால் வந்ததல்ல; புரிந்துகொள்ள மறுப்பதால். வாதத்துக்கு மருந்துண்டு; விதண்டாவாதத்துக்கு?
//
ஆர்.வி,
// சவர்க்காரின் வரையறைப்படி இந்தியா தங்கள் தந்தையர் நாடு மற்றும் புண்ணிய பூமி என்ற இரண்டு எண்ணங்களும் உள்ளவர் ஹிந்து. நீங்கள் தந்தையர் நாடு மற்றும் ஹிந்து “மதப் பண்பாட்டுப்” பின்புலத்தை ஏற்றால் போதும் என்று விளக்குகிறீர்கள்.//
உண்மையில் இரண்டும் ஒன்றே தான். மார்க்சியர்களுக்கு சீனாவும் ரஷ்யாவும் “புண்ய பூமி”. இஸ்லாமியர்களுக்கு மெக்கா/அரபியம் தான் புனிதம். கிறிஸ்தவர்களுக்கும், காலனிய மோஸ்தரில் பீடிக்கப் பட்டிருப்பவர்களும் ஐரோப்பா/மேற்குலகம் தான் புண்யபூமி. இந்த அர்த்தத்தில் தான் சாவர்க்கர் புண்யபூமி என்பதை ஒரு “படிமமாக” சொல்லியிருக்கிறார் என்றும் சொல்லியாச்சு, இதற்கு மேலும் புளியைப் போட்டு விளக்க முடியாது. நீங்கள் விரிவாக அறிய விரும்பினால் அதற்கான சுட்டிகளையும் கொடுத்திருந்தேன்.
// ஹிந்து கலாசாரம், இந்தியக் கலாசாரம் இரண்டும் வேறு வேறு என்பதையும் உணர்ந்திருக்கிறீர்கள்.//
வேறு தான். இந்தியக் கலாசாரம் என்று சொல்லும்பொது பாலிவுட்/கோலிவுட் சினிமா, கிரிக்கெட், அரசியல்வாதிகளுக்கு கட்டவுட் வைப்பது எல்லாமும் கூட வரும் தானே? குண்டு வைப்பதைக் கூட “Bomb culture” என்று சொல்லும் காலம் இது :))
// நீங்கள் ஹிந்து கலாசாரத்தை உள்ளடக்கிய இந்திய கலாசாரத்தை நிராகரிக்கிறீர்கள் என்று பொருள் கொள்ளலாமா? //
புரியவில்லை. இந்திய கலாசாரத்தின் உயிர்த்துடிப்பும், அதன் உன்னதங்களும் எல்லாம் ஹிந்து கலாசாரத்தில் உள்ளவை என்றல்லவா சொல்லியிருக்கேன்?
இன்றைய இந்திய கலாசாரம் = ஹிந்து கலாசாரம் + காலனிய தாக்கங்கள் + கண்டதும் கலந்தது.
// இஸ்லாமிய, கிருஸ்துவக் கலாசாரக் கூறுகள் இல்லாத “தூய்மையான” ஹிந்து மதப் பண்பாட்டுப் பின்புலத்தை எல்லா முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள் உட்பட்ட எல்லா இந்தியர்களும் ஏற்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? //
எல்லா இந்தியர்களுக்கும் இதிகாசம் ராமாயணம், மகாபாரதம் தான். எல்லா இந்தியர்களுக்கும் *இந்திய* தத்துவம் என்றால் அது வேதமும் உபனிஷதங்களும் ஆறு தரிசனங்களும் சமணமம் பௌத்தமும் தான். எல்லா இந்தியர்களுக்கும் மகாகவிகள் என்றால் அது வால்மீகியும், வியாசனும், கம்பனும், காளிதாசனும் தான். எல்லா இந்தியர்களுக்கும் பாரம்பரிய இசை என்றால் அது தியாகராஜ கீர்த்தனமும், துருபத் கானமும் தான்.
இந்தியாவில் கிறிஸ்தவர்களும்,முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்பதற்காக குரானையும், பைபிளையுமா நாம் நமது கலாசாரம் என்று சொல்ல முடியும்?? அப்படி சொன்னால் உலகமே நம்மைப் பார்த்து சிரிக்காதா? நீங்களே சொல்லுங்க ஆர்.வி.
அல்லது வேறு எந்த கலாசாரக் “கூறுகளை” நாம் ஏற்க வேண்டும்? மதமாற்ற சூழ்ச்சிகள், ஜிகாத், அடிப்படைவாதம், சிறுபான்மையினர் என்ற பெயரில் ஓட்டுவங்கி உருவாக்கி அரசியல் செய்தல் இதெல்லாவற்றையுமா? :))
// நீங்கள் பொதுவாக படையெடுப்பு+ஆக்கிரமிப்பு செயல்களை எதிர்க்கிறீர்களா இல்லை குறிப்பாக இஸ்லாமிய, பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பை எதிர்க்கிறீர்களா என்று தெளிவுபடுத்திக் கொள்ளத்தான் ஆரிய “ஆக்கிரமிப்பு” தியரியைப் பற்றி கேட்கிறேன். ஆரிய படையெடுப்பு உண்மை என்று நாளை நிறுவப்பட்டால் அதையும் எதிர்ப்பீர்களா? //
இதே மாதிரி கேள்வி டாக்டர்ஜி (சங்க ஸ்தாபகர்) இடம் கேட்கப் பட்ட போது சொன்னார் – “கடைசியாக வந்தவர்கள் எல்லாம் முதலில் வெளியே போகட்டும்.. பிறகு முதன்முதலில் வந்த ஆரியர்களைப் பற்றி யோசிப்போம். :))
// மீண்டும் கேட்பதற்காக மன்னிக்கவும். இந்து கலாசாரம் பற்றி பெருமையா இந்து ஆன்மிகம் பற்றியா? //
பெருமை உண்மையில் “பண்பாடு” பற்றி இருக்க வேண்டும். அதில் ஆன்மிகம், கலை,கலாசாரம் எல்லாமே வந்து விடுகிறதே. நமது பண்பாடு வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக (holistic) பார்ப்பது. மேற்கத்திய பண்பாடு போல கூறுபோட்டு (fragmented) பார்ப்பதல்ல.. ராமாயணம் என்ற ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது நடராஜர் சிலை என்ற ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள் – அதில் வாழ்க்கை நெறி,காவியம்,கலை,க்லாசாரம் எல்லாம் தானே வருகிறது?? சிற்பத்தை புகழ்வேன் ஆனால் அதன் மூல ஊற்றாக உள்ள நடராஜ தத்துவத்தையும், சிவ வழிபாட்டையும் இகழ்வேன் என்று சொல்வது நடராஜரின் ஒரு காலை மட்டும் உடைத்து தனியே வைத்துக் கொண்டாடுவது போல.
நான் கொடுத்த இஸ்லாமியப் பெரியோர்களது பெயர்களை ஒரு முறை மீண்டும் படித்துப் பாருங்கள். அவர்கள் யாருக்கும் நீங்கள் இப்போது கேட்பது போன்ற குழப்பம் எழவில்லை. ஏனென்றால் அவர்கள் தங்களது தேசிய பண்பாடான ஹிந்து பண்பாட்டை அதன் முழுமையில் உணர்ந்திருந்தார்கள்.
ஆர் வீ அவர்களே
நீங்கள் பதிலே சொல்ல முடியாமல் திணறிப் போகும்படி ஒரு கேள்வி கேட்கிறேன். இது எண்ணற்ற சமயத்தில் தனது பக்ஷம் சத்தியமாக தவறு என்று தெரிந்ததும் சகோதர்கள் வைக்கும் கேள்வி
கேள்வி இங்கே
“சகோ நீங்கள் கேள்விகளை மட்டுமே கேட்கிறீர்களே. உங்கள் மாற்றுக் கருத்து தான் என்ன. மாற்றுக் கருத்தை வைக்காத வரையில் கேள்வி கேட்டு என்ன பயன்”
அதவாது நமது சகோக்களுக்கு பசுவை ஏன் வதை கூடாது என்று சொன்னால் போறாது அதற்க்கு பதிலாக எதை போட்டுத் தாக்க வேண்டும் என்று கூறியே ஆக வேண்டும். இதற்க்கு பெயர் தான் மாற்றுக் கருத்து,
நிச்சயமாக இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் இருக்கு. (“அத்தாட்சிகள் இருக்கு” இல்லை “அத்தாட்சிகள் இருக்கின்றன” என்று இருக்க வேண்டும் என்று சொல்லாதீர்கள். தப்பும் தவறுமாக எழுதினால் தான் நமது சகோக்களுக்கு ஒரு இணையில்லா கருத்து போல தெரியும்)
இப்போ நிஜமாவே சொல்றேன். கண்டிப்பாக நான் எழுதியதில் ஆர் வீ அவர்கள் புரிந்து கொள்ள விஷயம் இருக்கு
(தமிழன் உங்களது மற்றும் ஒத்த கருத்துடைய உங்களது நண்பர்களது தாவா பனி தமிழ் ஹிந்து வரை பரவி உள்ளதை நினைத்து நிச்சயமாக நீங்கள் சந்தோஷப் பட வேண்டும். என்னால் கொஞ்ச நாளைக்கு வேற மாதிரியாக எழுதமுடியுமான்னே தெரியல)
@ ஜடாயு ,
///இன்றைய இந்திய கலாசாரம் = ஹிந்து கலாசாரம் + காலனிய தாக்கங்கள் + கண்டதும் கலந்தது. ///
idhu இவ்வாறு இருக்க வேண்டும்
இந்திய கலாசாரம் = ஹிந்து கலாசாரம் + காலனிய தாக்கங்கள் + கண்டதும் கலந்தது. -(ஆபிரஹமிய சக்திகளின் பொய் பிரச்சாரங்கள்-பாவிகளே பிரசார பார்டிகள்-வேலை வெட்டி இல்லாத கம்யூனிஸ்ட் தலைவர்கள் )
எல்லையில்லாதவன்,எல்லாமாய் இருப்பவன் -இறைவன்.[இதில் உலகத்தினரின் அனைத்து வழிபாட்டு (நாத்திகமும்)முறைகளும் இதில் அடங்கி விடும்.] இந்த உண்மையை இந்துக்கள் அறிந்து பயன்படுத்துவதால் அது இந்துத்துவம்.மற்றவர்களை இழிவாக நினைக்கும் மதங்களைத் தவிர எந்த மதத்தையும் யாரையும் இந்து எதிர்க்க மாட்டான்.
அன்புள்ள ஜடாயு, உடனுக்குடனே பதில் அளித்து கலக்குகிறீர்கள், நன்றி!
உங்கள் பதில்களில் ஒரு defensive attitude-ஐ காண்கிறேன். உதாரணமாக // “இஸ்லாமிய காலனிய தாக்க நீக்கம்” என்ற சொல்லை மட்டுமே நான் இங்கே பயன்படுத்தியிருக்கிறேன். அதற்கு “இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து விரட்ட வேண்டும்” என்றெல்லாம் சொல்வதாக நீங்கள் அதீத பொருள் கொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது. // நீங்களாக ஏன் “என் அப்பன் குதிருக்குள் இல்லை” என்கிறீர்கள்? 🙂 இது நண்பர்களுக்குள்ளே விவாதம், இசைவு ஏற்படுகிறதோ இல்லையோ, குறைந்த பட்சம் ஒருவர் நிலையை மற்றவர் தெளிவாகப் புரிந்து கொள்ளவாவது உதவும். எந்த வித டென்ஷனும் வேண்டாம், லைட் லேலோ!
கலாசாரம், பண்பாடு இரண்டு வார்த்தைகளையும் சமமாகப் பயன்படுத்திப் பழக்கம். அதே போல ஆன்மிகம், மதம் இரண்டு வார்த்தைகளையும் ஏறக்குறைய சமமாகப் பயன்படுத்திப் பழக்கம். நீங்கள் கலாசாரம் பண்பாட்டின் ஒரு பகுதி என்று பொருள் கொள்கிறீர்கள். கவனமாக எழுத முயற்சி செய்கிறேன்.
பண்டைய கிரேக்கப் பண்பாடுதான் இன்றைய மேலை நாடுகளின் பண்பாட்டு ஆதாரம் என்பதை அறிவீர்கள். கிரேக்க இலக்கியம், இதிகாசங்கள், தொன்மங்கள், கலை, தத்துவம், அறிவியல், கணிதம், கலாசாரம் அத்தனையும்தான் இன்றைய மேலை நாட்டு பண்பாட்டுக்கு அடிப்படை. ஆனால் கிரேக்க ஆன்மிகம் என்ன என்று கிரீஸ் நாட்டவருக்கே இன்று தெரியுமா என்பது சந்தேகம்தான் இல்லையா? நிச்சயமாக கிரேக்க ஆன்மிகம் என்ன என்று எனக்குத் தெரியாது! ஆனால் கிரேக்க இதிகாசங்களை ரசிக்க நான் அதீனாவின் பக்தனாக இருக்க வேண்டியதில்லை. இவை எல்லாம் கட்டுக்கதைகள், இவற்றின் மத+ஆன்மீகக் கூறுகளை நிராகரிக்கிறேன், ஆனால் இவை எல்லாம் மானுட பாரம்பரியத்தின் சொத்து என்று ஒரு கிருஸ்துவரோ, முஸ்லிமோ, யூதரோ, அட ஹிந்துவோ சொன்னால் எந்த “கிரேக்கவாதியும்” அது தவறான கண்ணோட்டம் என்று போராடப் போவதில்லை. அட இந்த இதிகாசங்கள், தொன்மங்கள், ஆன்மிகம், மதம் எல்லாம் முட்டாள்தனமான கட்டுக்கதைகள், என் மத நம்பிக்கைகளுக்கு எதிரானவை, இவற்றை முழுமையாக நிராகரிக்கிறேன் என்று ஒரு கிரீஸ் நாட்டு கிருஸ்துவனோ, முஸ்லிமோ சொன்னால் யாரும் அவன் உண்மையான கிரேக்கன் இல்லை என்று குற்றம் சாட்டப்போவதில்லை. (முட்டாள் கிரேக்கன் என்று பரவலாக கருதப்படலாம்.)
உங்கள் நிலை வேறாகத் தெரிகிறது. ஒரு சின்ன உதாரணம். // எல்லா இந்தியர்களுக்கும் *இந்திய* தத்துவம் என்றால் அது வேதமும் உபனிஷதங்களும் ஆறு தரிசனங்களும் சமணமம் பௌத்தமும் தான். // என்று எழுதி இருந்தீர்கள். வேதங்களில் சடங்குகள் பற்றி நிறைய உண்டு, யஜூர்வேதம், சாமவேதம், ஏன் ரிக்வேதம் கூட சடங்கு விதிமுறைகள், அங்கே பாடப்பட வேண்டிய பாடல்கள், ஸ்தோத்திரங்கள் என்று பல தத்துவம் தவிர்த்த, சம்பிரதாய, மதச்சடங்குகள் சம்பந்தப்பட்ட ஏராளமான verses உள்ளவை. (நீங்கள் வேதம் முழுவதும் தத்துவமே என்ற impression-ஐத் தருகிறீர்கள்.) அவற்றை ஒரு முஸ்லிமும் கிறிஸ்துவனும் யூதனும் எப்படி ஏற்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? வேதத்தில் உள்ள சடங்கு கூறுகளை நிராகரிக்க அவர்களுக்கு உரிமை கிடையாதா? நீங்கள் குறிப்பிடும் பவுத்தமும் சமணமும் கூட வேதங்களை நிராகரிக்கவில்லையா? அதுவும் நீங்கள் பெருமிதத்தோடு குறிப்பிடும் தத்துவக் கூறுகளையே நிராகரிக்கவில்லையா? பல முறை பெருமையாகப் பேசிக் கொள்ளும் சார்வாகனும் ஜாபாலியும் வேதம் சார்ந்த ஹிந்து மத மரபை நிராகரிக்கவில்லையா? நான் வேதமும் உபநிஷதமும் படித்ததில்லை. நாளை படித்தால் ஏற்கலாம், இல்லை நிராகரிக்கலாம். அப்படி நிராகரிப்பது ஹிந்து மதத்தின் “பன்முகத்தன்மையில்” மீது உள்ள நம்பிக்கையால்தான். எனக்கு, சார்வாகனுக்கு அப்படி நிராகரிக்கும் உரிமை உண்டு, முஸ்லிம்களுக்கு இல்லையா? சரி அப்படியே இல்லை என்று வைத்துக் கொள்வோம்; இன்றைய “ஹிந்து” இந்தியர்களில், அதுவும் ஹிந்துத்வம் பேசும் இந்தியர்களில் எத்தனை பேர் வேத, உபநிஷத தத்துவங்களை உணர்ந்து பெருமைப்படுகிறார்கள்? படிக்காமலே, அதில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அநேக ஹிந்துக்களும் ஹிந்துத்துவர்களும் ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவதற்கும் அநேக முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் சீச்சீ என்று நிராகரிப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டு பக்கமுமே வெறும் நம்பிக்கையால் அல்லவா செயல்படுகின்றன? இதில் ஒரு நம்பிக்கையை பாராட்டவும் இன்னொரு நம்பிக்கையை இழித்துப் பேசவும் நமக்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?
சுருக்கமாக: இந்திய முஸ்லிம்கள், கிருஸ்துவர்களுக்கு சரியான மாடல் கிரேக்க பண்பாட்டு மாடல் என்று நான் கருகிறேன். மதம் (ஆன்மிகம் அல்ல) தவிர்த்த பிற பண்பாட்டுக் கூறுகளை ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரியானதே. அப்படி ஏற்க மறுப்பவர்கள் நிச்சயமாக சிலர் இருந்தே தீருவார்கள். அவர்களின் முட்டாள்தனத்தை புறம் தள்ளி மேலே போவதே சரி. நம்பிக்கையோடு வாதிடுவதில் பொருளில்லை. நீங்கள் சொன்னது போல // சிற்பத்தை புகழ்வேன் ஆனால் அதன் மூல ஊற்றாக உள்ள நடராஜ தத்துவத்தையும், சிவ வழிபாட்டையும் இகழ்வேன் என்று சொல்வது நடராஜரின் ஒரு காலை மட்டும் உடைத்து தனியே வைத்துக் கொண்டாடுவது போல. // ஹோமரைப் புகழ்வேன், ஆனால் ஹீராவையும் ஏறசையும் ஏற்கமாட்டேன் என்று சொல்ல முடியாதா என்ன? நான் ஏற்பதில்லை சார்! (நடராஜ தத்துவம் எனக்கு சரியாகத் தெரியாது, ஆனால் அரசல் புரசலாகத் தெரிந்தது என்னைப் பெரிதாக கவரவில்லை. அதனால்தான் மேலே தேடிப் படிக்கவில்லை, ஆனால் நடராஜர் சிலையின் கலை அம்சம் என்னைப் பெரிதும் கவர்ந்த ஒன்று.)
இனி சில specific எதிர்வினைகள்:
பசுவதை: பீஃப் பிரியாணியை நவீன ஹிந்துத்துவர்கள் நிராகரிப்பது மத நம்பிக்கை அடிப்படையிலா இல்லை பொருளாதார அடிப்படையிலா? உண்மையான காரணம் மத நம்பிக்கை அடிப்படைதான், ஆனால் பொருளாதார அடிப்படை என்ற போர்வையில் மறைந்து கொள்கிறார்களா?
புண்ணியபூமி: // இந்தியா என்ற பூகோளப் பரப்புடன் மட்டுமல்ல, அதன் பண்பாட்டுப் பரப்புக்கும் அதிகாரி ஹிந்து என்று சுட்டுவதற்காகத்தான். // அதிகாரி என்ற சொல்தான் எனக்கு உதைக்கிறது. அப்படி என்றால் மேலை நாடுகளின் பூகோளப், பண்பாட்டு பரப்புக்கு அதிகாரி கிருஸ்துவர்கள், அரேபியா, இரான், இராக் மற்ற நாடுகளின் பூகோளப், பண்பாட்டு பரப்புக்கு அதிகாரி முஸ்லிம்கள் என்பதை ஏற்கிறீர்களா?
ஹிந்து vs இந்தியன் கலாசாரம்: // // ஹிந்து கலாசாரம், இந்தியக் கலாசாரம் இரண்டும் வேறு வேறு என்பதையும் உணர்ந்திருக்கிறீர்கள்.//
வேறு தான். இந்தியக் கலாசாரம் என்று சொல்லும்பொது பாலிவுட்/கோலிவுட் சினிமா, கிரிக்கெட், அரசியல்வாதிகளுக்கு கட்டவுட் வைப்பது எல்லாமும் கூட வரும் தானே? குண்டு வைப்பதைக் கூட “Bomb culture” என்று சொல்லும் காலம் இது ) //
அது மட்டும் இல்லையே? தாகூரின் கவிதைகள் வரும், சத்யாகிரகம் வரும், உண்ணாவிரதப் போராட்டங்கள் வரும், ஜாமினி ராய் வருவார், எஸ் டி பர்மனும் இளையராஜாவும் குலாம் அலியும் ஸௌராசியாவும், மதுரை மணி ஐயர் பாடும் இங்கிலீஷ் நோட்சும் கூட வருமே! மேலும் குரு தத், சத்யஜித் ரே உட்பட்ட எல்லா சினிமாவும் என்னவோ உங்கள் கண்ணுக்கு நெகடிவ் ஆகவே தெரிகிறது. மேலும் நெகடிவ் கூறுகளை பட்டியல் போடுவது என்றால் ஹிந்து கலாசாரத்தில், தலித்கள் மீது அடக்குமுறை என்பது ஒரு கூறு என்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
// இந்திய கலாசாரத்தின் உயிர்த்துடிப்பும், அதன் உன்னதங்களும் எல்லாம் ஹிந்து கலாசாரத்தில் உள்ளவை என்றல்லவா சொல்லியிருக்கேன்? இன்றைய இந்திய கலாசாரம் = ஹிந்து கலாசாரம் + காலனிய தாக்கங்கள் + கண்டதும் கலந்தது. //
நீங்கள் சொல்லி இருக்கும் மூன்றில் நீங்களே குறிப்பிட்ட உருது மொழி, கஜல்கள், நீங்கள் குறிப்பிடாத தாஜ்மகல் போன்ற கட்டிடக் கலை உன்னதங்கள், கதக் நடனம் போன்றவற்றுக்கு ஆதாரம் என்ன? இவை எல்லாம் என் கண்ணில் உன்னதங்கள், உங்கள் கண்ணிலும் இவை உன்னதங்களாகத்தான் இருக்கும். ஆனால் நீங்கள் இந்திய கலாசாரத்தின் உன்னதம் எல்லாம் ஹிந்து கலாசாரத்திலிருந்தே வந்தவை என்கிறீர்களே?
// அல்லது வேறு எந்த கலாசாரக் “கூறுகளை” நாம் ஏற்க வேண்டும்? மதமாற்ற சூழ்ச்சிகள், ஜிகாத், அடிப்படைவாதம், சிறுபான்மையினர் என்ற பெயரில் ஓட்டுவங்கி உருவாக்கி அரசியல் செய்தல் இதெல்லாவற்றையுமா? ) // ஜடாயு, பொழுது விடிந்து பொழுது போகும்போதெல்லாம் கிருஸ்துவ மிஷனரிகள் இந்து மதம் = ஜாதி வெறி+தீண்டாமை என்று சித்தரிக்கிறார்கள் என்று குறைப்படும் நீங்களே இப்படி பிற மதங்களை சிறுமைப்படுத்தலாமா? அதுவும் சில பல கலாசாரக் கூறுகளை நீங்களே ரசிக்கும்போது?
// இந்தியாவில் கிறிஸ்தவர்களும்,முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்பதற்காக குரானையும், பைபிளையுமா நாம் நமது கலாசாரம் என்று சொல்ல முடியும்?? அப்படி சொன்னால் உலகமே நம்மைப் பார்த்து சிரிக்காதா? நீங்களே சொல்லுங்க ஆர்.வி. // ஆம், கலாசாரம் என்பதற்கான எல்லை இந்தியாவோடு நின்றுவிட வேண்டும் எனபது ஒரு arbitrary constraint. குரான், பைபிள், கில்கமேஷ் தொன்மம், டாவின்சி, மைக்கேலாஞ்சேலோ, ஆர்க்கிமிடீஸ், நியூட்டன், எல்லாருமே எனது மூதாதையரே; எனது கலாசாரப் பின்புலமே. இந்தியாவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் எனக்கு வியப்பைத் தருகிறது. அப்படி ஒரு எல்லை வகுத்துத்தான் ஆக வேண்டும் என்றால் நான் ஏன் இந்த எல்லையை தமிழ்நாட்டோடு, தொண்டை நாட்டோடு, சென்னையோடு, கோபாலபுரத்தோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது?
ரிபீட்டு: இஸ்லாமிய, கிருஸ்துவக் கலாசாரக் கூறுகள் இல்லாத “தூய்மையான” ஹிந்து மதப் பண்பாட்டுப் பின்புலத்தை எல்லா முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள் உட்பட்ட எல்லா இந்தியர்களும் ஏற்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
ஆரியர்கள்: // இதே மாதிரி கேள்வி டாக்டர்ஜி (சங்க ஸ்தாபகர்) இடம் கேட்கப் பட்ட போது சொன்னார் – “கடைசியாக வந்தவர்கள் எல்லாம் முதலில் வெளியே போகட்டும்.. பிறகு முதன்முதலில் வந்த ஆரியர்களைப் பற்றி யோசிப்போம். ) // ஜடாயு, இதெல்லாம் சப்பைக்கட்டு. நீங்களும் ஹிந்துத்த்வர்களும் எதிர்ப்பது படையெடுப்பு+ஆக்கிரமிப்பையா இல்லை இஸ்லாமிய+பிரிட்டிஷ் படையெடுப்பு+ஆக்கிரமிப்பையா என்று தெளிவுபடுத்தத்தான் வேண்டும். நீங்கள் எதிர்ப்பது படையெடுப்பை என்றால் எனக்கு மேலே பேச எதுவுமில்லை. இஸ்லாமியப் படையெடுப்பு என்றால் அதில் என்ன வித்தியாசம், படையெடுப்புக்கு statute of limitations உண்டா என்பதை தெளிவுபடுத்துங்கள். உதாரணமாக எனக்கு கஜினி முகமது, கோரி முகமது, பாபர், நாதிர்ஷா, ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்கள் ஆகியோர் ஆக்கிரமிப்பாளர்கள். குத்புதீன் ஐபக், அலாவுதீன் கில்ஜி, துக்ளக், அக்பர் முதலான முகலாய அரசர்கள், பிஜப்பூர், கோல்கொண்டா அரசர்கள், ஜன்ஜிரா கோட்டை சித்திகள், சிராஜ் உத் தௌலா போன்றவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை, இந்தியர்கள். உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லையே?
ஹிந்து ஆன்மீகத்தைப் பற்றி பிற மதத்தினர் பெருமை: // கட்டாயமாக. ஏன் பெருமை கொள்ளக் கூடாது? வங்கக் கவிஞர் நஸ்ருல் இஸ்லாம் அன்னை துர்க்கையைப் பற்றி சிலிர்ப்பூட்டும் பாடல்கள் எழுதியிருக்கிறாரே. கபீர்தாசரும், குணங்குடி மஸ்தானும், மு.மு இஸ்மாயிலும், ஷேக் சின்னமவுலானாவும், அப்துல் கலாமும், உஸ்தாத் பிஸ்மில்லா கானும் உருவான மண்ணில் நின்று கொண்டு, அதைப் பற்றிய பிரக்ஞ்யே இல்லாமல் எப்படி உங்களால் பேச முடிகிறது? // கபீர் அல்லாவைப் பற்றிக் கூடத்தான் எழுதி இருக்கிறார். நீங்கள் யாரும் இஸ்லாமிய ஆன்மீகத்தைப் பற்றி பெருமை கொள்வதாக எனக்குத் தெரியவில்லையே? ஊருக்கு உபதேசமா?
அன்புள்ள ஆர்.வி,
உங்கள் கிரேக்க ஒப்பீடு முழு முற்றிலுமாகவே பொருந்தாத ஒன்று. உலகெங்கும் 100 கோடி மக்கள் பின்பற்ற இன்னும் எல்லா விதங்களிலும் உயிர்த்துடிப்புடன் திகழும் இந்துப் பண்பாட்டையும்,, ஒரு கடந்த கால நினைவாகவும், கலாசார எச்சமாகவும், அருங்காட்சியக்ப் பொருளாகவும் ஆகி விட்ட கிரேக்கப் பண்பாட்டையும் இப்படி ஒப்பிடுவதே நீங்க்ள் எந்த அளவு காலனிய சிந்தனையில் ஊறியிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.
பழைய கிரேக்க கலாசாரத்தை கிறிஸ்தவம் கொன்று அழித்து விட்டது. எனவே அதன் புராணங்களையும், தேவ தேவியரையும் தத்துவத்தையும் எப்படி வேண்டுமானாலும் கேலி செய்யலாம் என்ற சிந்தனை தான் மேற்த்திய உலகில் உள்ளது..அவர்களை பொறுத்த வரை “வாழும் (வாழத் தகுதி படைத்த) மதங்க்ள் என்றால் அவை ஆபிரகாமிய மதங்கள் மட்டுமே.. அந்தக் கருத்தை அப்படியே பிரதியெடுத்து இந்துப் பண்பாட்டுக்கும் பொருத்தும் மகா அபத்தத்தை செய்கிறீர்கள். ராமனும் சீதையும் அனுமனும் இன்றும் கோடிக் கணக்கான மக்களின் இதயத்தில், சமய பிரக்ஞையில் வாழும் சத்தியங்கள். ஹோமரின் “கதாபாத்திரங்களோடு” அவர்களை ஒப்பிடுவது இந்துப் பண்பாட்டை அவமதிப்பதன்றி வேறில்லை. இதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லையா உங்களால்? அல்லது விதன்டாவாதம் செய்கிறீர்களா?
// வேதத்தில் உள்ள சடங்கு கூறுகளை நிராகரிக்க அவர்களுக்கு உரிமை கிடையாதா? நீங்கள் குறிப்பிடும் பவுத்தமும் சமணமும் கூட வேதங்களை நிராகரிக்கவில்லையா? அதுவும் நீங்கள் பெருமிதத்தோடு குறிப்பிடும் தத்துவக் கூறுகளையே நிராகரிக்கவில்லையா? பல முறை பெருமையாகப் பேசிக் கொள்ளும் சார்வாகனும் ஜாபாலியும் வேதம் சார்ந்த ஹிந்து மத மரபை நிராகரிக்கவில்லையா? //
சம்பந்தமே இல்லாத விஷயங்களை ஒப்பிடுகிறீர்கள்… இந்து மதத்திற்கு (அல்லது இந்திய மதங்களுக்கு) உள்ளே வழிமுறைகளையும், தத்துவங்களையும் ஏற்கும்/நிராகரிக்கும் சுதந்திரம் என்பது ஞானத் தேடலுக்கான சுதந்திரம். அது வெறுப்புணர்வில் விளைவதல்ல.
ஆனால் ஆபிரகாமிய மதங்கள் அவற்றைப் பின்பற்றுபவர்கள் மனதில் இந்து மதத்தின், பண்பாட்டின் மீது விதைக்கும் வெறுப்பு அந்த மதங்களின் ஒற்றைப் படையான, பன்மையை மறுக்கும் தன்மையினாலும் தீர்க்கதரிசி மதங்களுக்குரிய அடிப்படைவாத தன்மையினாலும் வருவது.
// இந்திய முஸ்லிம்கள், கிருஸ்துவர்களுக்கு சரியான மாடல் கிரேக்க பண்பாட்டு மாடல் என்று நான் கருகிறேன். //
அதாவது அவர்கள் கிரேக்கப் பண்பாட்டை அழித்தொழித்து மியூசியம் பீஸ் ஆக்கியது போல இந்துப் பண்பாட்டையும் செய்ய வேண்டும் என்கிறீர்கள்! பலே. மதமாற்ற பிரசாரத்தில் இதை அவர்கள் சூப்பராக உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
// பசுவதை: பீஃப் பிரியாணியை நவீன ஹிந்துத்துவர்கள் நிராகரிப்பது மத நம்பிக்கை அடிப்படையிலா இல்லை பொருளாதார அடிப்படையிலா? உண்மையான காரணம் மத நம்பிக்கை அடிப்படைதான், ஆனால் பொருளாதார அடிப்படை என்ற போர்வையில் மறைந்து கொள்கிறார்களா? //
நான் குறிப்பிட்ட புத்தகத்தை (மார்வின் ஹாரிஸ்) பற்றி லேசாக தேடியிருந்தாலே பொறி கிட்டியிருக்குமே.. பசு மீதான அன்பு என்ற “மத நம்பிக்கை” சும்மா குருட்டாம்போக்கிலா ஏற்பட்டிருக்கும்? அது உருவான போது சமூக, பொருளாதார காரணிகள் கட்டாயம் இருந்திருக்குமல்லவா? இதில் மறைக்க என்ன இருக்கிறது? கிராமத்தில் இருக்கும் நூற்றூக் கிழவிகளும்,மாடு வளர்த்து அதன் மீது அன்பைப் பொழிபவர்களும் பொருளாதார சமாசாரங்களை எல்லாம் வைத்து வாதம் செய்து விட்டு பின்னர் பசு மீது அன்பு செலுத்தவேண்டுமா? என்ன கொடுமை சார் இது? அது ஆய்வாளர்களின் வேலை.
வெகுஜன தளத்தில் பசுப்பாதுகாப்பு என்பது ஒரு விழுமியம், ஒரு வேல்யூ. இன்றைக்கும் அர்த்தமுள்ள, தேவையான ஒரு வேல்யூ. அது ஒன்றே போதாதா?
//கலாசாரம் என்பதற்கான எல்லை இந்தியாவோடு நின்றுவிட வேண்டும் எனபது ஒரு arbitrary constraint. குரான், பைபிள், கில்கமேஷ் தொன்மம், டாவின்சி, மைக்கேலாஞ்சேலோ, ஆர்க்கிமிடீஸ், நியூட்டன், எல்லாருமே எனது மூதாதையரே; எனது கலாசாரப் பின்புலமே. இந்தியாவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் எனக்கு வியப்பைத் தருகிறது. அப்படி ஒரு எல்லை வகுத்துத்தான் ஆக வேண்டும் என்றால் நான் ஏன் இந்த எல்லையை தமிழ்நாட்டோடு, தொண்டை நாட்டோடு, சென்னையோடு, கோபாலபுரத்தோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது? //
அடேயப்பா! நீங்கள் அப்படி நினைத்துக் கொள்ள தாராளமாக உங்க்ளுக்கு உரிமை உண்டு. இது சுகமான இலக்கியக் கனவு, தத்துவார்த்தம். உலக வானில் சும்மா ஜிவ்வென்று சிறகடித்துப் பறக்கலாம்!
ஆனால் நான் கூறியது எதுவும் அந்தத் தளத்தில் அல்ல. இந்த மண்மீது, பூமி மீது அழுந்த நின்று கொண்டு நடைமுறை சமூக,அரசியல் தளத்தில் பேசுகிறேன். மேற்கத்தியர்கள் வாய்கிழியப் பேசும் Universalism என்பது Absolute தன்மை கொண்டதே அல்ல. மற்ற உலக கலாசாரங்களை அவர்கள் கண்ணோட்டத்தின் படி மதிப்பிட்டு தொகுத்துக் கொள்ளூம் முறைமைக்கான கோட்பாடு தான் அது. இதில் மேற்கத்திய பண்பாடு உயர்ந்தது என்ற ஸ்தானத்தில் இருந்தே அது எப்பொதும் செய்யப் படும். ராஜீவ் மல்ஹோத்ரா being different புத்தகத்தில் மிக விரிவாகவே இதை ஆராய்ந்திருக்கிறார். மேலும் இந்துமதம் போன்று காலனியத்தால் அடிபட்டு நொறுங்கி மீண்டெழும் பண்பாட்டையும், காலனிய அதிகாரத்திலும் சுரண்டலிலும் திளைத்து வேண்டிய செல்வங்களைக் கொள்ளையடித்த பின்பு நல்ல பிள்ளை போல அமைதி உபதேசம் செய்யும் காலனியாதிக்க அதிகாரங்கலையும் நாம் ஒப்பிட முடியாது.
மேலும் இங்கு நாம் பேசுவது exotic தனிநபர் கலாசாரத் தேர்வுகளை அல்ல. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள், மக்களைக் காலம் காலமாகப் பிணைத்த, பிணைக்கும் தேசிய உருவாக்கம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
எல்லா நாடுகளிலும் இத்தகைய தேசிய வாத அரசியல் சித்தாந்தங்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன. எந்த சுயமரியாதையுள்ள நாடும் அதன் கலாசாரம் சும்மா பேருக்குத் தான், நாம் உலக பிரஜை என்றெல்லாம் ஜல்லியடிக்காது, நேற்று முளைத்த அமெரிக்கா உட்பட. இந்தியா அப்படி செய்ய வேண்டும் சென்று சொல்வது இந்திய தேசிய அடையாளத்தையே நீர்த்துப் போகச் செய்து அதை அழிவுக்கு இட்டுச் செல்லும் வழி.
ஒட்டுமொத்த இந்தியக் கலாசாரத்தைப் போலவே, அதன் ஒவ்வொரு பிரதெச, மொழி, சாதி, சமயப் பிரிவுகளின் சிறந்த கலாசாரக் கூறுகளும் முக்கியமானவையே. அவற்றையும் பாதுகாக்க வேண்டும். ஆனால் தொண்டை நாட்டோடு, சென்னையோடு நின்று போயிருந்தால்,நைஜீரியாவுக்கும் சூடானுக்கும் ஏற்பட்ட நிலை தான் நமக்கு ஏற்பட்டிருக்கும். போன பகுதியிலேயே (ஹிந்து – பன்மையின் பாதுகாப்பு அடையாளம்) ஜெயமோகன் கட்டுரையை மேற்கோள் காட்டி இதை விளக்கி இருக்கிறேன். காஞ்சியும், காசியும் காஷ்மீரமும் கொண்ட உறவுக்கு மூவாயிரம் ஆண்டு கால வரலாறு இருக்கிறது. உலகின் எல்லா இடங்களிலும் தேசிய, கலாசார உருவாக்கங்கள் அப்படி தான் நிகழ்கின்றன. மற்ற பிரதேசங்கள், மதங்கள் விஷயத்தில் அவற்றை ஒத்துக் கொள்ளூம் நீங்கள் ஏன் இந்தியா, இந்துமதம் விஷயத்தில் மட்டும் பல்டியடிக்க வேன்டும்? இது காலனிய தாக்கமன்றி வேறென்ன?
இந்த மனநிலை குறித்து தான் எல்ஸ்ட் இரண்டு புத்தகம் எழுதியிருக்கிறார் –
Negationism in India
Decolonizing the Hindu mind
அவற்றைப் படிக்குமாறு உங்க்ளுக்கு பரிந்துரைக்கிறேன்.
இனி, நான் இதுவரை பரிந்துரைத்துள்ளவற்றில் எதையாவது படித்து விட்டு வந்து நீங்கள் வாதம் செய்தால் தான் அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
// உதாரணமாக எனக்கு கஜினி முகமது, கோரி முகமது, பாபர், நாதிர்ஷா, ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்கள் ஆகியோர் ஆக்கிரமிப்பாளர்கள். குத்புதீன் ஐபக், அலாவுதீன் கில்ஜி, துக்ளக், அக்பர் முதலான முகலாய அரசர்கள், பிஜப்பூர், கோல்கொண்டா அரசர்கள், ஜன்ஜிரா கோட்டை சித்திகள், சிராஜ் உத் தௌலா போன்றவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை, இந்தியர்கள். உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லையே? //
K.S Lal எழுதிய Legacy of Muslim Rule in India என்ற புத்தகத்தை படிக்கவும்.
பைதிவே, நாலந்தா பல்கலைக் கழகத்தை சூறையாடி அதன் நூலகத்தை எரித்து, பிட்சுக்களையும் பேராசிரியர்கலையும் கொன்ற பக்தியார் கில்ஜி யாருடைய படைத் தளபதி? சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்க்ள். அவன் ஆக்கிரமிப்பாளன் இல்லையா?
// கபீர் அல்லாவைப் பற்றிக் கூடத்தான் எழுதி இருக்கிறார். நீங்கள் யாரும் இஸ்லாமிய ஆன்மீகத்தைப் பற்றி பெருமை கொள்வதாக எனக்குத் தெரியவில்லையே? ஊருக்கு உபதேசமா? //
கபீர் தெளிவாக வைஷ்ணவ குரு ராமானந்தரிடம் தீட்சை பெற்று அவர் சீடரானவர். அவரது இயற்பெயருடன் தீட்சா நாமத்தை சேர்்த்து “கபீர்தாசர்” என்று அழைக்கப் பட்டார்.
அல்லா, ரஹீம் ஆகிய பெயர்களை இறைவனைக் குறிக்க பயன்படுத்தியுள்ளார், வாஸ்தவம். ஆனால் அதில் “இஸ்லாமிய ஆன்மிகம்” ஒன்றும் கிடையாது. இஸ்லாம் அப்போது அரசாட்சியில் இருந்ததாலும், முஸ்லிம்களை ஆன்மிகத்திலிருந்து அன்னியப் படுத்தி விடக் கூடாது என்பதாலுமே இத்தகைய ‘இணைப்பு’ உருவகங்களை கபீர்,நானக், தாதூ தயால் ஆகிய அருளாளர்கள் உருவாக்கினர். அதற்கு உந்துதல் அளித்ததும் இந்து ஆன்மிகமே (இந்தியாவில் மட்டுமே அது நிகழ்ந்தது, இஸ்லாம் பரவிய மற்ற இடங்களில் அல்ல என்பதை எண்ணிப் பார்க்கவும்).
அன்புள்ள ஜடாயு,
// உலகெங்கும் 100 கோடி மக்கள் பின்பற்ற இன்னும் எல்லா விதங்களிலும் உயிர்த்துடிப்புடன் திகழும் இந்துப் பண்பாட்டையும்,, ஒரு கடந்த கால நினைவாகவும், கலாசார எச்சமாகவும், அருங்காட்சியக்ப் பொருளாகவும் ஆகி விட்ட கிரேக்கப் பண்பாட்டையும் இப்படி ஒப்பிடுவதே நீங்க்ள் எந்த அளவு காலனிய சிந்தனையில் ஊறியிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. // கிரேக்க பண்பாட்டையும், கிரேக்க பாகன் மத+ஆன்மீகத்தையும் குழப்பி நிறைய எழுதி இருக்கிறீர்கள். கிரேக்க சிந்தனையே இன்றைய மேலைச் சிந்தனையின் அடிப்படை. அரிஸ்டாட்டிலும் பிளேட்டோவும் சாக்ரடீசும் அருங்காட்சியகத்து சுவடிகளில் மட்டும் இல்லை. பழைய கிரேக்க கலாசாரம் எப்படி அழியும்? ஹோமரை விடுங்கள், போரடிக்கும் ஈஸ்கைலஸ் கூட இன்னும் மறக்கப்படவில்லை! இன்னும் ஒலிம்பிக் விளையாட்டுகள் கூட நடக்கின்றன? ஜீயசும் ஹீராவும் அதீனவும்தான் அருங்காட்சியகத்துக்கு போய்விட்டார்கள். அதாவது மதக் கூறுகள் மட்டுமே அழிந்திருக்கின்றன. மீண்டும் மீண்டும் கிரேக்கப் பண்பாடு செத்துவிட்டது என்று எழுதி இருக்கிறீர்களே! ஒரு வேளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த கிரேக்க கலாசாரத்துக்கும் இன்றைய மேலை நாட்டுக் கலாசாரத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று சொல்ல வந்தீர்களோ? அதில் என்ன வியப்பு? இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட இந்திய கலாசாரத்துக்கும் இன்றைய கலாசாரத்துக்கும் கூடத்தான் எக்கச்சக்க வித்தியாசம் இருக்கிறது.
// ராமனும் சீதையும் அனுமனும் இன்றும் கோடிக் கணக்கான மக்களின் இதயத்தில், சமய பிரக்ஞையில் வாழும் சத்தியங்கள். ஹோமரின் “கதாபாத்திரங்களோடு” அவர்களை ஒப்பிடுவது இந்துப் பண்பாட்டை அவமதிப்பதன்றி வேறில்லை. // அப்படி என்றால் நான் மைக்கேலான்ஜெலோவின் சிஸ்டைன் ஆலயத்து அற்புத ஓவியத்தைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தாலும் ஆடமின் விரலைத் தொட்டு எழுப்பும் ஜெஹோவாவை நிராகரிப்பது இந்துக்களை விட பல மடங்கு அதிகமான கிறிஸ்துவர்களின் சமயப் பிரக்ஞையை , பண்பாட்டை,அவமதிப்பதா? எந்த கருத்திலும் சமயக் கூறுகளை கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமான விஷயமில்லை சார்! நீங்கள் சொன்ன நடராஜர் உதாரணத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள சமயக் கூறுதான் அநேக ஹிந்துக்களுக்குத் தெரியும். கலைக் கூறு சிலருக்குத் தெரியும். தத்துவக் கூறு வெகு சிலருக்குத் தெரியும். பிரிக்க முடியாமலா போய்விட்டது?
// இந்து மதத்திற்கு (அல்லது இந்திய மதங்களுக்கு) உள்ளே வழிமுறைகளையும், தத்துவங்களையும் ஏற்கும் சுதந்திரம் என்பது ஞானத் தேடலுக்கான சுதந்திரம். // இதைத்தான் இரு புறமும் நம்பிக்கை என்று குறிப்பிட்டிருந்தேன். ஞானத் தேடலுக்குப் பிறகு வேதங்களையும் உபநிஷதங்களையும் ஏற்ற ஹிந்துக்கள் குறைவே. அநேகர் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் அதை ஏற்கிறார்கள். ஹிந்துக்களின் “அப்படி சொல்லப்பட்டிருக்கிறது” நம்பிக்கை சரி, ஆபிரகாமிய மதத்தவரின் “அப்படி சொல்லப்பட்டிருக்கிறது” நம்பிக்கை தவறு என்று சொல்ல எந்தக் காரணமும் இல்லை.
இது ஹிந்துத்வத்துக்கு வெளியே போகும் digression – ஆனால் நீங்கள்தானே ஆரம்பித்து வைத்திருக்கிறீர்கள்? // ஆனால் ஆபிரகாமிய மதங்கள் அவற்றைப் பின்பற்றுபவர்கள் மனதில் இந்து மதத்தின், பண்பாட்டின் மீது விதைக்கும் வெறுப்பு அந்த மதங்களின் ஒற்றைப் படையான, பன்மையை மறுக்கும் தன்மையினாலும் தீர்க்கதரிசி மதங்களுக்குரிய அடிப்படைவாத தன்மையினாலும் வருவது. // இதை நீங்கள் உறுதியாக நம்பினால், ஆபிரகாமிய மதத்தவரோடு இணக்கமாக ஹிந்துக்களால் ஒரு நாளும் வாழ முடியாது என்று corrolary வருகிறது. என் லாஜிக் சரியா, இல்லை ஏதாவது தவறான முடிவுக்கு வந்துவிட்டேனா?
// நான் இதுவரை பரிந்துரைத்துள்ளவற்றில் எதையாவது படித்து விட்டு வந்து நீங்கள் வாதம் செய்தால் தான் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். // அடடா, இதை இப்போதுதான் பார்க்கிறேன். மேலே பேச உங்களுக்கு விருப்பம் இல்லை என்று புரிந்து கொண்டேன். எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிடுகிறேன். உங்கள் கருத்தை பொறுமையாக முன் வைத்ததற்கு நன்றி.
ஜடாயு அவர்களே ,
“இஸ்லாமிய ஆன்மிகம்” என்றால் என்ன. கொஞ்சம் புரியும்படி விளக்குங்கள்.
அது அன்பான வார்த்தைகால் விலக்கப்படவேண்டியது என்று பலர் சொல்கிறார்கள்.
பண்பாடு என்பது படிக்கப் பட வேண்டியது அதிக பட்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவ்வளவே என்ற எண்ணத்தில் இருப்பர்வர்கள் தான் இப்படி பேசுவார்கள்
//கலாசாரம் என்பதற்கான எல்லை இந்தியாவோடு நின்றுவிட வேண்டும் எனபது ஒரு arbitrary constraint. குரான், பைபிள், கில்கமேஷ் தொன்மம், டாவின்சி, மைக்கேலாஞ்சேலோ, ஆர்க்கிமிடீஸ், நியூட்டன், எல்லாருமே எனது மூதாதையரே; எனது கலாசாரப் பின்புலமே. இந்தியாவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் எனக்கு வியப்பைத் தருகிறது. அப்படி ஒரு எல்லை வகுத்துத்தான் ஆக வேண்டும் என்றால் நான் ஏன் இந்த எல்லையை தமிழ்நாட்டோடு, தொண்டை நாட்டோடு, சென்னையோடு, கோபாலபுரத்தோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது? //
பண்பாடு என்பது புரிந்துக்கொள்ளப் படவேண்டியது கடைபிடிக்க்கப் பட வேண்டியது என்று நினைப்பவர்கள் நான் ஒரு பெரிய வட்டம் போட்டு அந்த வட்டத்துக்கும் வெளியே நிப்பேன் என்பார்கள். தாரளமாக நில்லுங்கள். குழந்தைக்கும் தெரியும் தன்னால் எது முடியும் எது முடியாது என்று.
குரானை படியுங்கள், கடை பிடியுங்கள். நபிகள் நாயகம் ஸல் இப்னு அப்துல்லாஹா அவர்களை தாராளமாக பின் பற்றுங்கள் உங்கள் மீது நிச்சயமாக அல்லாவின் சாந்தியும் கருணையும் உண்டாகும்.
இதுக்கு உடனே. வெளி நாட்டவர்கள் மாட்டும் ஹிந்து பண்பாட்டை படித்தால் ஆர்டிகள் போடறீங்க, நாம் ஏன் மத்தவங்க பண்பாட்டை பாக்கக்கூடாது என்று கேள்வி கட்டாயம் நீங்கள் கேட்பீர்கள் என்று தெரிந்து வைத்துக் கொண்டு அதை இங்கே கேட்காமல் விடுவது அழகல்ல என்பட்தால் எழுதி விட்டேன். நானே கேட்ட கேள்விக்கு நானே எனக்கு பதில் சொல்லிக் கொண்டு விட்டேன். நீங்களே கேட்டால் தான் உங்களுக்கு சொல்லுவேன். இல்லாவிடில் நீங்களும் என்னை போலவே உங்களுக்கே கேள்வியை கேட்டு நீங்களே உங்களுக்கு என்னை போல பதில் சொல்லிக் கொல்லலாம்.
எல்லை இல்லா வாழ்க்கை எல்லை இல்லா பேச்சு – டோகோமோ செல் போன் விளம்பரம் போல கேக்க நல்லா இருக்கு.
சார்வாகன் வேதத்தை மறுக்கிறான், புத்த ஜைனர்கள் மறுக்கிறார்கள். இஸ்லாமியனும். கிறிஸ்தவனும் மறுக்கக் கூடாதா என்று கேட்கிறீர்கள். உங்களுக்கு பதில் ம்ம்ம்ம் இந்த ரெட்ன்டு கோஹ்டியினரின் மறுப்புக்கும் வித்யாசம் இருக்கு அது கூட உங்களுக்கு புரியவில்லையே என்றெல்லாம் கேட்டு உங்களை குழப்ப மாட்டேன்.
ஒரு அல்ப வைரஸ் வந்து மனுஷனை கொல்லுது, ஒரு கொசு கொல்லுது அஜ்மல் கசாப் கொல்லக் கூடாதா. கொசுவையோ வைரஸையோ நம்ம அநியாயமாக ஜெயில்ல வெச்சு பிரியாணி கிரியாணி எல்லாம் போட்டு, அப்பப்போ கோர்ட்டு கேசுன்னு அலையை விட்டு கஷ்டப் படுத்தரோமா, அப்புறம் அஜ்மல் கசாபுக்க்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்.
ச இந்த ஹிந்துத்தவ வாதிகளே இப்படித்தான்.
ஆர்.வி,
நடராஜர் குறித்த உங்கள் பார்வை தவறு என்று நான் சொல்லவில்லை. அதை நீங்கள் சொல்ல உரிமை உண்டு. ஆனால் அது கட்டாயம் இந்து/இந்தியப் பண்பாட்டுப் பார்வை அல்ல. கலை என்பதும், தரிசனம் என்பதும் ஒட்டுமொத்தமான பேரனுபவங்கள என்றே நம் மரபு கருதுகிறது.. நடராஜர் குறி்த்த ஆன்மீகப் புரிதல் இல்லாமல் ‘வெறு்ம்’ சிற்பக் கலையாகவே பார்க்கும் பார்வையயை பிழைபட்டது என்றே நம் மரபு கூறும். பண்பாட்டுக் கூறுகளை பிய்த்து எடுத்து deconstruct செய்வது மேற்கத்திய அகாடமிக் அணுகுமுறை. அதை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு இந்துப் பண்பாட்டை அணுகுவது தான் சரி என்று நீங்கள் முரண்டு பிடிக்கிறீர்கள். அதற்கு மாற்றான பரிபூரண பார்வையை பிழைபட்டது என்றும் குறுகியது என்றும் முத்திரை குத்துகிறீர்கள்..
இது போன்ற குழப்பம் நான் பெயர் குறிப்பிட்டிருந்த எந்த இஸ்லாமியப் பெரியவர்களுக்கும் ஏற்படவில்லையே, ஏன்? என்று கேட்டிருந்தேன். நீங்கள் அந்தக் கேள்வியைப் பற்றி சிந்திக்கவே இல்லை, அதை அப்படியே தள்ளி விட்டு, சவடாலுக்காக வாதம் செய்கிறீர்கள். ராமேஸ்வரம் கோயிலில் அர்ச்சனை செய்வதும், ராகவேந்திர மடத்தில் தரிசனம் செய்வதையும், வீணை வாசிப்பதையும், ஸ்ரீஅரவிந்தரின் சிந்தனைகள் குறித்து விசாரம் செய்வதையும் எல்லாம் அப்துல் கலாம் ஒட்டுமொத்த பண்பாட்டுப் பிரவாகமாகத் தான் பார்க்கிறார். பிய்த்துப் பிய்த்துப் பார்ப்பதில்லை. உஸ்தாத் பிஸ்மில்லாகான் கங்கையும் காசி விஸ்வநாதருமே தன் இசையின் ஜீவன் என்று சொல்லி லண்டன் மாநகர குடியுரிமையை நிராகரிக்கிறார். இவர்கள் வாழ்ந்து காட்டிய ஆதர்சங்கள். பிரபலங்கள் என்பதால் நமக்குத் தெரிகிறது. நமக்குத் தெரியாமலும் ஏராளமான இஸ்லாமியர்கள் இப்படி இருக்கலாம்.
// இதை நீங்கள் உறுதியாக நம்பினால், ஆபிரகாமிய மதத்தவரோடு இணக்கமாக ஹிந்துக்களால் ஒரு நாளும் வாழ முடியாது என்று corrolary வருகிறது. என் லாஜிக் சரியா, இல்லை ஏதாவது தவறான முடிவுக்கு வந்துவிட்டேனா?//
மேலே இருப்பதைப் படிக்கவும். இணக்க்மான வாழ்வுக்கு இதை விட நல்ல உதாரணங்கள் கிடைக்குமா?
இஸ்லாம்/கிறிஸ்தவ மதக் கொள்கைகளை, கருத்தாக்கத்தை விமர்சிப்பது வேறு. இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களை கண்மூடித்தனமாக வெறுப்பது வேறு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
மேலும் ஹிந்துத்துவம் இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்கும் சித்தாந்தம் என்று நான் தெளிவுபடுத்திய பிறகும் நீங்கள் எதையாவது சொல்லி என் வாயைப் பிடுங்க முய்ற்சிப்பது போலத் தெரிகிறது :))
// // நான் இதுவரை பரிந்துரைத்துள்ளவற்றில் எதையாவது படித்து விட்டு வந்து நீங்கள் வாதம் செய்தால் தான் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். // அடடா, இதை இப்போதுதான் பார்க்கிறேன். மேலே பேச உங்களுக்கு விருப்பம் இல்லை என்று புரிந்து கொண்டேன். எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிடுகிறேன். உங்கள் கருத்தை பொறுமையாக முன் வைத்ததற்கு நன்றி.//
ஆர்.வி, விருப்பம் இல்லை எனபதல்ல. எனக்குக் கிடைக்கும் நேரத்தில் இத்தகைய சுருக்கமான கட்டுரைகளைத் தான் எழுத முடியும். ஆனால் சொல்ல வேண்டியது ஏராளம் உள்ளது. அத்னால் தான் இதில் தொட்டுக் காட்டிய விஷயங்கள் குறித்து மேலும் அறிய பாயிண்டர்களும் கொடுக்கிறேன். ஒரு சித்தாந்தத்தை விமர்சிக்கும் போது அது பற்றிய ஓரளவு விரிவான வாசிப்பும் அவசியம் என்று நினைக்கிறேன். நீங்களும் அதை ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் அவ்வாறு கூறினேன். தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி.
// sarang on December 9, 2011 at 10:34 am
ஜடாயு அவர்களே ,
“இஸ்லாமிய ஆன்மிகம்” என்றால் என்ன. கொஞ்சம் புரியும்படி விளக்குங்கள். //
இஸ்லாம் என்ற ஆபிரகாமிய கருத்தியலில் ஆன்மிகம் இல்லாதிருக்கலாம்.
ஆனால் இஸ்லாமியர்களாக உள்ள மனிதர்களிலும் ஆன்மீக உணர்வும், ஏன் ஆன்மிக சித்தியும் கொண்டவர்கள் கூட இருப்பார்கள் என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும், இல்லையென்றால் அது வேதாந்தத்திற்கே முரணாகும். நமது மகான்களின் வரலாறுகளிலும், ஏன் சமகாலத்திலும் கூட ஆன்மிக நெறிப்படி செல்லும் இஸ்லாமியர்களை நாம் காண்கிறோமே.. இதனுடன் வன்முறையை ஊக்குவிக்காத, ஆன்மிக நோக்கு கொண்ட சில சூஃபி ஞானிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அதைப் பற்றித் தனியாகவே எழத வேண்டும்.
இது எனது புரிதல். ஆர்.வி அந்தச் சொற்றொடரால் இதைத் தான் குறித்தாரா தெரியவில்லை.
//
கிரேக்க பண்பாட்டையும், கிரேக்க பாகன் மத+ஆன்மீகத்தையும் குழப்பி நிறைய எழுதி இருக்கிறீர்கள். கிரேக்க சிந்தனையே இன்றைய மேலைச் சிந்தனையின் அடிப்படை. அரிஸ்டாட்டிலும் பிளேட்டோவும் சாக்ரடீசும் அருங்காட்சியகத்து சுவடிகளில் மட்டும் இல்லை. பழைய கிரேக்க கலாசாரம் எப்படி அழியும்? ஹோமரை விடுங்கள், போரடிக்கும் ஈஸ்கைலஸ் கூட இன்னும் மறக்கப்படவில்லை! இன்னும் ஒலிம்பிக் விளையாட்டுகள் கூட நடக்கின்றன? ஜீயசும் ஹீராவும் அதீனவும்தான் அருங்காட்சியகத்துக்கு போய்விட்டார்கள். அதாவது மதக் கூறுகள் மட்டுமே அழிந்திருக்கின்றன. மீண்டும் மீண்டும் கிரேக்கப் பண்பாடு செத்துவிட்டது என்று எழுதி இருக்கிறீர்களே! ஒரு வேளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த கிரேக்க கலாசாரத்துக்கும் இன்றைய மேலை நாட்டுக் கலாசாரத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று சொல்ல வந்தீர்களோ? அதில் என்ன வியப்பு? இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட இந்திய கலாசாரத்துக்கும் இன்றைய கலாசாரத்துக்கும் கூடத்தான் எக்கச்சக்க வித்தியாசம் இருக்கிறது
//
இந்தியா ஏன் ஒலிம்பிக்ஸ்ல மெடல் ஜெயிக்கலன்னு இப்போ புரியுது நமக்கு கிரேக்க பண்பாடு சரியாய் புரியல வரல
//
இஸ்லாம் என்ற ஆபிரகாமிய கருத்தியலில் ஆன்மிகம் இல்லாதிருக்கலாம்.
ஆனால் இஸ்லாமியர்களாக உள்ள மனிதர்களிலும் ஆன்மீக உணர்வும், ஏன் ஆன்மிக சித்தியும் கொண்டவர்கள் கூட இருப்பார்கள் என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்
//
இது உண்மை, கபீர் தாஸ் இல்லை என்றால் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்.
அனால் எப்போ ஒருவன் ஆன்மீக வாதியாக மாறிவிடுகிரானோ அவனை இஸ்லாம் இஸ்லாமிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது அவனை கொன்றுவிட சொல்கிறது. இதற்கு ஏராளமான சுராக்களும் ஹதீஸ்களும் சான்றுகளாக உள்ளன.
//ஆனால் ஆபிரகாமிய மதங்கள் அவற்றைப் பின்பற்றுபவர்கள் மனதில் இந்து மதத்தின், பண்பாட்டின் மீது விதைக்கும் வெறுப்பு அந்த மதங்களின் ஒற்றைப் படையான, பன்மையை மறுக்கும் தன்மையினாலும் தீர்க்கதரிசி மதங்களுக்குரிய அடிப்படைவாத தன்மையினாலும் வருவது.//
// இதை நீங்கள் உறுதியாக நம்பினால், ஆபிரகாமிய மதத்தவரோடு இணக்கமாக ஹிந்துக்களால் ஒரு நாளும் வாழ முடியாது என்று corrolary வருகிறது. என் லாஜிக் சரியா, இல்லை ஏதாவது தவறான முடிவுக்கு வந்துவிட்டேனா?//
‘இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் ஆப்ரஹாம், இஸமவேல், இஸ்ஹாக், யாகோப், மற்றும் அவர்களின் சந்ததிகளுக்கு அருளப்பட்டதையும் மோசே, ஏசு மற்றும் தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களில் எவருக்கிடையேயும பாரபட்சம் காட்டமாட்டோம். நாங்கள் ஏக இறைவனுக்கே கட்டுப்பட்டவர்கள்’ என்று கூறுவீராக.
-குர்ஆன் 3:84
இந்த பதிவில் ஆர்வியும் ஜடாயும் விவாதித்த அத்தனை விஷயங்களுக்குமான தீர்வை இந்த ஒற்றை குர்ஆன் வசனம் தெளிவாக்குகிறது.
ஹிந்து, ஹிந்துத்துவம், ஹிந்துராஷ்டரம் – என்ற புத்தகத்திலிருந்து – ஆர்.பி.வி.எஸ்.மணியன் (ஹிந்தத்துவத்தின் தரிசனம்)
ஒரு ஹிந்துவை பார்க்க முடிகிறது. ஹிந்துக்கள் நாடான ஹிந்துஸ்தானமும் கண்களுக்கு புலப்படும் ஒன்றுதான். ஆனால் “ஹிந்துத்துவம்“ “ஹிந்துத்துவம்“ என்று ஏதோ ஒன்றை சொல்கிறீர்களே அது எங்களுக்கு ஒன்றும் புரியவில்லையே என்று பலர் கேட்கிறார்கள்.
ஹிந்தத்துவம்தான் இந்த நாட்டின் தேசியம். தேசம் ஊனக்கண்ணுக்குப் புலம்படும் ஒன்று. ஆனால் தேசியம் அப்படி ஊனக்கண்ணால் உணரக்கூடிய ஒன்றல்ல. நம் உடம்பு கண்ணுக்கு தெரிகிறது அதனுள் உறையும் ”நாம்” அதுதான் “ஆத்மா“ அது கண்ணுக்கு தெரிவதில்லை தானே. உடம்பின்றி ஆத்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலாது. ஆனால் ஆத்மா அற்ற உடம்பு ஜீவனற்ற சவம் தானே.
பாரதத்தின் ஆன்மா ஹிந்துத்துவம். அது இந்த தேசத்தின் கனுக் கனுவிலும் அணு அணுவிலும் விரவி நிற்கிறது. அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நாம் அதை அனுபவிக்கிறோம்.
க்ருத, த்ரேதா, துவாபர, கலி என்று யுகந்திரமாக தர்மத்தின் வழி நடந்து அதர்மத்தை துரத்திய செயல் ஹிந்துத்துவம். வசுதேவ குடும்பம் என்ற ஹிந்து கோட்பாடு பல அன்னிய மதத்தவரான பாரசீக, யூத, சிரிய மதத்தவர்களுக்கு அடைகலம் தந்ததுதான் ஹிந்துத்துவம்.
cont….
… வங்கபோரில் பிடிபட்ட 1 லஷ்ம் பாகிஸ்தானிய கைதிகளை ஒருவருடம் பத்திரமாக பாதுகாத்து சோறுபோட்டு திருப்பி அனுப்பினோமே அந்த கருணை செயல் ஹிந்துத்துவம். மாறாக கார்கில் போரில் பிடிபட்ட நமது பாரத வீரர்களை கொடுமைபடுத்தி அவர்களது ஆண் உருப்புகளை வெட்டி கண்களை தோண்டி நமது எல்லையில் வீசி எறிந்தார்களே அந்த செயல் இஸ்லாமியத்துவம்.
“ஹைந்த வீ ஸ்வராஜ்” என்ற ஹிந்து சாம்ராஜ்யத்தை அமைத்த சிவாஜியின் வீரச்செயல் ஹிந்துத்துவத்தின் வெளிபாடு. தென்னகத்திற்கு இஸ்லாமியர்களால் ஆபத்து வரக்கூடாது என்று விஜயநகர சாம்ராஜ்யத்தை ஹரிஹரர் புக்கர் மூலம் உருவாக்கினாரே சுவாமி வித்யாரணய்ர் அந்தச் செயல் ஹிந்துத்துவத்தின் வெளிப்பாடு.
பலவந்தமாக இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாமிய மன்னர்கள் சித்திரவதை செய்து கொன்றபோதும் தங்கள் தர்மத்தை விடமாட்டோம் என்று உருதியாக இருந்தார்களே சீக்கிய குருமார்கள் கோவிந்த சிம்மனின் இரு புதல்வர்களான பத்தேசிங், ஜொராவர்சிங் சிவாஜியின் மகன் சம்பாஜி பந்தாபைராகி இவர்களது அந்த உறுதி ஹிந்துத்துவம்.
பசுவை கோமாதா என்று போற்றி வணங்கிப் பசுவைப் பாதுகாக்க முன்வரும் மனோபாவம் இருக்கிறதே அது ஹிந்துத்துவம். பசுவதைத் தடைசெய்யப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த காந்திஜி, வினோபாஜி இவர்களின் செயல் ஹிந்துத்துவம். பீஜப்பூர் தெருவில் பசுவை வெட்ட முனைந்த இஸ்லாமிய கசாப்புக் கடைக்காரன் கையை வெட்டினானே சிறுவன் சிவாஜி அந்த செயல் ஹிந்துத்துவம். பசுவைக் கொல்ல வந்த சிங்கத்திற்குத் தன்னையே பலியாகத்தர முன்வந்தானே மன்னன் திலீபன் அவனது அந்த செய்கை ஹிந்துத்துவம். 19ஆம் நூற்றாண்டில் பசுக்களைப் பாதுகாக்க முன்வந்து தம்முயிர் ஈந்த குக்கே சீக்கியர்களின் செயல் ஹிந்துத்துவம்.
cont…..
கங்கை நதியைப் புனித நதியாக கங்கா மாதாவாகக் காணும் பார்வை ஒரு முறையாவது அங்கே சென்று நீராடவேண்டும் என்ற எண்ணம் ஹிந்துத்துவம். கீதையை ”கீதே” கீதமாயி” என்றெல்லாம் உணர்ச்சிப் பெருக்கொடு வழிபடும் உள்ளம் ஹிந்துத்துவம். கீதைக்கு விளக்கவுரை எழுதி அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்த திலகரின் செயல் காந்திஜியின் செயல் வினோபாஜியின் செயல் ஹிந்துத்துவமே அன்றி வேறல்ல.
தான் தொட்டுத் தாலி கட்டிய பெண் ஒருத்தியைத் தவிர மற்ற எல்லாப் பெண்களையும் தாயாகப் பார்க்கும் மனோபாவம் இருக்கிறதே அது ஹிந்துத்துவம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏகபத்னி விரதனாக வாழ்ந்தானே ஸ்ரீராமன் அவனது அந்த செயல் ஹிந்துத்துவம். மாற்றானின் கையில் சிக்கிக் கற்பிழப்பதைவிட செந்தீயில் கருகிச் சாவதே மேல் என்று அன்று சித்தூரிலும் மற்றும் பல நகரங்களிலும் ஆயிரக்கணக்கில் தீக்குளித்து மாண்ட பத்தினிகளின் செயல் ஹிந்தத்துவம். தன் குடும்பமே தனக்கு எல்லாம் என்று கணவனுக்காக பெற்றெடுத்த பிள்ளைகளுக்காக ஸர்வgupபரித்யாகம் செய்து அதில் சுகம் காண்கிறாளே குடும்ப தலைவி அவளது அந்த செயல் ஹிந்துத்துவம்.
எத்தனை முறை படையெடுப்பாளர்கள் தகர்த்து எறிந்தாலும் அத்தனை முறையும் மீண்டும் மீண்டும் அந்த கோபுரங்கள் உயர்ந்து எழுந்தன. அது தான் நமது தேசிய ஜீவசக்தி அதுதான் ஹிந்துத்துவம். சோமனாதபுரம் காசி விசுவநாதர் ஆலயமும் எண்ணற்ற பிற ஆலயங்களும் நமக்கு உணர்த்துவது இதுதான்.
cont….
சுவனப்ரியன்
கேக்க நல்லா இருக்கு. இதெல்லாம் நபிகள் இஸ்ரளையர்களின் தயவு தேவையான போது அவுத்து விட்டது.
தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள். இஸ்லாமில் இருக்கையில் எல்லா கேனத்தனத்தையும் ஆதிரிக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு வரும்.
இதை எல்லாம் கொஞ்சம் படியுங்கள் – அல்லாகுவின் (சாரி சாரி – நபிகளின் வார்த்தைகளை) . அன்பு கொட்டிக் கிடக்கு. இதில் ஒன்றையாவது சப்பை கட்டு கட்டாமல் மனிதாபிமானத்துடன், திறந்த இதயத்துடன் மூளையை சரியாக உபயோகம் செய்து ஆராய்ந்து (இஸ்லாமிய ஆராச்சி முறையை கைவிட்டு) இறைவனின் வார்த்தைகள் தான் என்று உங்களால் சொல்ல முடியுமா
Surely those who are Jews, Christians, and Sabians, whoever believes in Allah and the Last day and does good, they shall have their reward from their Lord, and there is no fear for them, nor shall they grieve. 2:62
We said to the Jews who transgressed in the matter of the Sabbath: “Be ye apes, despised and rejected.” 2:65
The Jews and the Christians should be disgraced in this life and would be punished in the next world for believing in parts of their scripture and not in other parts 2:85
Allah has cursed them on account of their unbelief; 2:88
Jews are the greediest of men for life (greedier) than even those who are polytheists; 2:96
Allah is the enemy of those who reject faith 2:98
None rejects Islam except those who are perverse 2:99
Whoever disbelieves in Islam it is a loser. 2:121
Those who reject the clear proofs of Islam will be cursed by Allah and those who curse shall curse them (too). 2:159
Those who die in disbelief, on them is the curse of Allah and the angels and men all. 2:161
And they shall not come forth from the fire. 2:167
They are deaf, dumb and blind and do not understand 2:171
The Christians and Jews who conceal any part of the Book that Allah has revealed and take for it a small price, they eat nothing but fire into their bellies, and Allah will not speak to them on the day of resurrection, nor will He purify them, and they shall have a painful chastisement. 2:174
The unbelievers beckon you to fire. It is better not to marry them until they believe. 2:221
They [Christians and Jews] say: The fire shall not touch us but for a few days; and what they have forged deceives them in the matter of their religion. However they are mistaken and will not fair well in the Day of Judgment 3:24-25
Allah does not like the unbelievers 3:32 and Muslims should not take them as friends 3:28
Believe no one unless he follows your religion [Islam]. 3:73
Muslims should not take for intimate friends from among others than their own people. 3:118
And we will cast terror in the heart of the disbelievers [like the Jews in Medina , Khaibar and other places]. Their adobe will be the fire 3:151
Those who ascribe a partner to Allah (like Christians who believe in [the] Trinity) will not be forgiven. They have “invented a tremendous sin.” 4:48, 4:116
As for those who disbelieve in Our communications, [do not convert to Islam] We shall make them enter fire; so oft as their skins are thoroughly burned, We will change them for other skins, that they may taste the chastisement; surely Allah is Mighty, Wise. 4:56 [Yep, great wisdom]
Those who assert that they believe in what has been revealed to you and what was revealed before you, [Christians and Jews] they desire to summon one another to the judgment of Satan, though they were commanded to deny him, and Satan desires to lead them astray into a remote error. 4:60
Those who do not believe in Muhammad are “hypocrites turning away from you with (utter) aversion.” 4:61
Those who believe fight in the way of Allah, and those who disbelieve fight in the way of Satan. Fight therefore against the friends of Satan. 4:76
Jews will suffer a painful chastisement because they lend money. 4:161
Allah made a covenant with the children of Israel , ..But on account of their breaking their covenant We cursed them and made their hearts hard;… and you shall always discover treachery in them excepting a few of them; 5:12-13
[With the] Christians, We made a covenant, but they neglected a portion of what they were reminded of, therefore We excited among them enmity and hatred to the day of resurrection. 5:14 [Nice work! And you thought God wants peace on Earth.]
In blasphemy indeed are those that say that Allah is Christ the son of Mary. 5:17
Don’t take Jews and Christians for friends; they are friends of each other; and whoever amongst you takes them for a friend, then surely he is one of them. 5:51
Jews and Christians are losers 5:53
Don’t take Jews and Christians as guardians who mock your religion. 5:53
Most of the Jews and Christians are transgressors. 5:59
Those who befriend those who disbelieve; certainly evil is that which their souls have sent before for them, that Allah became displeased with them and in chastisement shall they abide. 5:80
Jews called some of messengers of God liars and some they slew.5:70
Christians will go to hell for saying Jesus is God. “Surely whoever associates (others) with Allah, then Allah has forbidden to him the garden, and his abode is the fire”. 5:72
Fight against Christians and Jews “until they pay the tax in acknowledgment of superiority and they are in a state of subjection.” 9:29
Jews and Christians imitate the saying of those who disbelieved before; may Allah destroy them. 9:30
Islam must “prevail over all religions, however much the disbelievers are averse to it” [through force]. 9:33
Many [Jewish and Christian] doctors of law and the monks eat away the property of men falsely, and turn (them) from Allah’s way; and (as for) those who hoard up gold and silver and do not spend it in Allah’s way [give to Muhammad], announce to them a painful chastisement. [which was done by Muhammad] 9:34
One Day He [Allah] will say, [to Christians] “Call on those whom ye thought to be My partners,” and they will call on them, but they will not listen to them; and We shall make for them a place of common perdition. 18:52
//வங்கபோரில் பிடிபட்ட 1 லஷ்ம் பாகிஸ்தானிய கைதிகளை ஒருவருடம் பத்திரமாக பாதுகாத்து சோறுபோட்டு திருப்பி அனுப்பினோமே அந்த கருணை செயல் ஹிந்துத்துவம். மாறாக கார்கில் போரில் பிடிபட்ட நமது பாரத வீரர்களை கொடுமைபடுத்தி அவர்களது ஆண் உருப்புகளை வெட்டி கண்களை தோண்டி நமது எல்லையில் வீசி எறிந்தார்களே அந்த செயல் இஸ்லாமியத்துவம்
//
இந்தியர்கள் விட்டார்கள். பாகிஸ்தான் படையினர் ஒரு அறிவுகெட்ட முல்லா பங்களாதேஷ் காரர்கள் எல்லாம் காபிர்கள் என்று சொன்னதற்காக ஒரு லட்சம் பங்கலாதேஷியர்களை கொன்று குவித்து பெண்களை கற்பழித்து காட்டு மிராண்டி தனத்தை அவிழித்து விட்டனர். இதை அனைத்தும் குரான் சுறாக்களையும் ஹதீஸ்களை காட்டி நபிகள் செய்ததை தான் நாங்கள் செய்தோம் என்று சொன்னனர். முமீங்களுக்கே இந்த நிலைமை என்றால் நாளை நம்மை என்ன செய்வார்களோ ரெம்ப பீதியா இருக்குப்பா
பிரயாகையில் வடவிருஷ்த்தை வெட்டி வீழ்த்தி ஈயத்தை காய்ச்சி உருக்கி ஊற்றியபோதும் மாற்றார் மனம் கலங்க மீண்டும் துளிர்து எழுந்த அந்த வடவிருஷ்ம் (ஆலமரம்) ஹிந்துத்துவம்
திருவிழாக்களைத் தடைசெய்து யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று இஸ்லாமியர்கள் சட்டங்கள் இயற்றியபோது அந்தச் சட்டங்களைச் சுக்குநூறாக்கி பல்லாயிரக்கணக்கில் கும்பமேளாவிலும் பிற விழாக்களிலும் பங்கேற்றார்களே அந்த ஹிந்துக்கள் அவர்களது செயல் துணிச்சல் ஹிந்துத்துவம். இறைவன் திருநாமத்தைப் பாடிக்கொண்டு யாரும் பஜன் செய்யகூடாது என்று தடைகள் விதிக்கப்பட்டபோது அந்தத் தடைகளைத் தகர்த்து எறிந்து தெருவீதிகளிலெ இறங்கி நாமஸங்கீர்தனம் செய்தார்களே அந்த பக்தர்கள் அவர்களது ஜால்ரா ஒலி ஹிந்துத்துவம்.
கருவில் உருவாகும் நாள் தொடங்கி சுடுகாட்டுக்குச் செல்லும் வரை எத்தனை எத்தனையோ ஸம்ஸ்காரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்களே அந்த ஸம்ஸ்காரங்கள் ஹிந்துத்துவம். திருப்பதியிலும் சமயபுரத்திலும் பழனியிலும் முடியிறக்கி மொட்டை போடுவது ஹிந்துத்துவம். கடல் கடந்த நாட்டிலும் கடவுளை மறவாமல் தீமிதித் திருவிழா நடத்துகிறானே தமிழன் அவனது தீமிதி ஹிந்துத்துவம். காவடி ஏந்திக் கொண்டு பாதயாத்திரையாக பல நூறு மைல்கள் நடந்து பழனிக்கு வருகிறானே தமிழன் அவனது காவடி தூக்கும் செயல் ஹிந்துத்துவம். நேர்த்திக்கடன் தீர்க்க அலகு குத்திக்கொள்வதும் அக்கனி சட்டி ஏந்தவதும் ஹிந்துத்துவம்.
எல்லோரும் இன்புற்றிருக்க ”ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து” என்ற உபநிஷத கூற்றும் ஹிந்துத்துவம்
”நத்வஹம் காமயே ராஜ்யம் ந ஸ்வர்க்கம் ந அபுனர்பவம்
காமயே துக்கதப்தானாம் ப்ராணினாம் ஆர்த்திநாசனம்” என்ற ராஜா ரந்திதேவனின் வேண்டுகோள் ஹிந்த்துவம்
சதுர்வித புருஷார்த்தங்களின்படி வாழ்க்கை நடத்துவது ஹிந்துத்துவம்.
வர்ண தர்மம், ஆசிர தர்மம் ஹிந்துத்துவம்
ராமாயணமும் மஹாபாரதமும் பேசுவது ஹிந்துத்துவம்
காந்திஜி கண்ட ஸத்யாக்ரஹ போராட்டம் ஹிந்துத்துவம்
வழிபாட்டில் சதந்திரம் ஹிந்துத்துவம்
மதசார்பற்று அரசு விளங்கவேண்டும் என்ற சிந்தனையே ஹிந்துத்துவம்
அமாவாஸ்யை அன்றும் சூர்ய க்ரஹணம் சந்திர கிரஹணத்தன்றும் புனித நீராடி நீர்க்கடன் கொடுப்பது ஹிந்துத்துவம்
சூரியனுக்கும் மாட்டுக்கும் நன்றி தெரிவித்து தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் ஹிந்துத்துவம்
வீடுகளின் முன்பு முற்றத்தில் சாணி தெளிப்பதும் கோலமிடுவதும் மாவிலை கட்டுவதும் ஹிந்துத்துவம்
நாதஸ்வர இசை, கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், நாட்டுபுறபாடல்கள், தெருகூத்து, சிலம்பு ஆட்டம், கதகளி, ஒடிஸி, தாண்டியா ஆட்டம் மற்றும் இந்த பாரதமண்ணிற்கே உரியதான பலகலைகள் ஹிந்துத்துவம்
யோகாசனம், பிராணாயம் ஹிந்துத்துவம்
மகளிர் மஞ்சள் பூசி குளிப்பது, நெற்றியில் பெண்கள் குங்குமம் அணிவது, பெண்கள் கழுத்தில் அணியும் மஞ்சள் கயிறு (தாலி சென்டிமென்ட்), மெட்டி அணிவது ஹிந்துத்துவம்
”வந்தே மாதரம்” , ”பாரத் மாதாகீ ஜெய்” என்ற கோஷம் ஹிந்துத்துவம்
cont…
ஹிந்துவின் வாழ்வில் ”ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாய ச” என்பதே அவனுக்கு ஊன்றுகோலாக இருந்து வந்துள்ளது தெரியும். தன்னுடைய ஆண்மீக ஈடேற்றத்திற்காக முயற்சிக்கும் அதே வேளையில் அவன் சமுதாய உணர்வோடும் அக்கறையோடும் வாழ வேண்டும்.
இஷ்டம், பூர்த்தம் இவை இரண்டும் நமக்குப் புலப்படுத்தும் உண்மை இதுதான். இஷ்டம் என்பது தனது இஷ்ட தேவதையின் உபாஸனைக்காக ஒருவன் மேற்கொள்ளும் யாக, யக்ஞாதிகள். பூர்த்தம் என்பது துன்பப்படும் சங்கடபடும் ஜீவர்களின் துன்பங்களைப் போக்கும் விதத்தில் ப்ரத்யக்ஷமாக சில வேலைகளைச் செய்வது – கிணறு வெட்டி வைத்தல், குளம் கட்டுதல் தண்ணீர் பந்தல் அமைத்தல், ஆதீண்று குற்றி நிறுவுதல் முதலானவை. இதுதான் ஹிந்துத்துவ வாழ்க்கை முறை.
வாழ்கையின் தொடக்கத்திலிருந்தே தனது இறுதி லக்ஷிசியமான மோக்ஷத்தின் பால் தனது பார்வையை நிலைநிறுத்தி தர்மத்தின் நியமங்களைக் கடைப்பிடித்து ஒழுகி தர்மத்தின் வழி நின்று பொருள் ஈட்டி தர்மத்திற்கு விரோதம் இல்லாமல் வாழ்க்கை இன்பங்களைச் சதுர்வித புருக்ஷார்த்தங்களின் ஆதாரத்தில் துய்த்து எனது வாழ்வின் நோக்கம் புண்ணியங்களைச் செய்து வெறும் சுவர்க்கத்தை அடைவதே அல்ல மாறாக சாஸ்வதமான பற்றற்ற லக்ஷியத்தை அடைவதே என்று ஒரு ஹிந்து நினைக்கிறான்.
cont…
உலகின் பல்வேறு வேறுபாடுகளுக்கு இடையேயும் இழையோடி இருக்கும் பரமாத்ம ஸ்வரூபத்தை ஹிந்துவால் பார்க்க முடிகிறது. அவற்றுக்கு இடையே இழையோடும் ஸுத்திரத்தை அவன் மறப்பதில்லை. இதனாலேயே ஹிந்துவின் வாழ்வில் ஒருமைப்பாட்டு உணர்வு இருக்கிறது. இணைந்து வாழும் தன்மை இருக்கிறது. வேறுபாடுகளிடையே அன்றாட பணிகளை அவன் செய்து கொண்டிருந்தாலும் ஒருமைப்பாட்டை அவன் ஒருபோதும் மறப்பதில்லை.
ஒரு குடும்பத்தில் கணவன் சிவபக்தனாகவும், மனைவி விஷ்ணு பக்தையாகவும் இருக்க முடிகிறது. அவனது குழந்தைகள் தேவியை உபாஸக்க முடியும். உறவினர்கள் கணபதியை வழிபட முடியும்.
பல்வேறு திசைகளிலிருந்தும் ஓடிவரும் நதிகள் இறுதியில் ஒரே ஸமுத்ரத்தைச் சென்றடைகின்றன. அதுபோலவே ”ஸர்வ தேவ நமஸ்கார கேசவம் ப்ரதி கச்சதி” என்று ஹிந்து நினைக்கிறான். இத்தகைய வேறுபாடுகளுக்கிடையே வாழ்வதில் அவனுக்கு சிக்கல் ஏதும் இல்லை.
வழிபடும் அனைத்து தெய்வங்களுக்கிடையேயும் அவன் உறவுகளைக் கற்பித்து ஒரே குடும்பமாகப் பார்கும் மனோபாவம் படைத்தவனாக விளங்குகிறான். பார்வதி சிவனின் மனைவி என்றால் கணபதி அவனுக்கு மகனாகிறான். அதே பார்வதி விஷ்ணுவுக்கு ஸகோதரி ஆகிறாள். ஹனுமன் விஷ்ணுவின் ஸேவகன் என்றால் பைரவர் சிவனின் ஸேவகன். சிவன் பார்வதிக்கு ராமனது பெருமையை எடுத்துரைக்கிறார். ராமரோ ராமேஸ்வரத்தில் சிவனை ப்ரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்.
cont…..
முன்னோர்களை மறக்காமல் ஹிந்து அவர்களுக்கு ஆண்டுதோறும் திதி கொடுக்கிறான். அவர்களது பிறந்த நாட்களை புண்யதிதிகளாகக் கருதி நினைவு கூர்கிறான். மாதம்தோறும் தர்பணம் செய்கிறான். இத்தகைய சடங்குகள் மூலம் தலைமுறை தலைமுறையாகத் தங்களது முன்னோர்களிடத்தே சிரத்தையும் பக்தியும் கொண்ட ஸமுதாயம் உருவாகிறது.
வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு கணுவிலும் ஒவ்வொரு நிகழ்விலும் அவனது விசேஷமான மனோபாவம் பளிச்சிடுகிறது. இந்த தேசத்தின் மீது எங்களுக்கு மிகவும் பிரியமானது என்பது அது செல்வவளம் மிக்கது என்பதால் அல்ல இந்த அளவு கடந்த ப்ரேமை. மாறாக இந்த பூமி எனது தாய் விஷ்ணு பத்னி அவளே துர்கை. அவளுக்காகவே வாழ்வதும் அவளுக்காகவே வீழ்வதும் எங்கள் வாழ்க்கை விரதமாகிறது. ”வந்தே மாதரம்” என்பதே எங்கள் தாரக மந்திரம். ”பாரத் மாதா கீ ஜெய்” என்பது எங்கள் கோஷம்.
அனாதி காலந்தொட்டு பாய்ந்தோடி வரும் ஹிந்துத்துவத்தின் இந்த ப்ரவாஹம் முடிவேயில்லால் பாய்ந்தோடிக் கொண்டேயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹிந்து தர்மத்தைப் பற்றி தவறான விஷயங்களைக் கூறி அவர்கள் நெஞ்சங்களில் விஷத்தை ஊற்றி வெறுப்பை வளர்த்திருக்கிறார்கள். இன்றைக்கு நம்மை ஹிந்துக்கள் என்று கூறிக்கொள்ளவே கூசும் அளவுக்கு இந்த ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்கள் நம் மனத்தில் வெறுப்பை வளர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
cont…..
ஆனால் இந்த ஒரு சூழ்நிலையிலும் நமது தேசத்தின் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி முஹம்மது கரீம் சாக்ளா போன்ற பல முஸ்லீம்கள் தங்களை ஹிந்துக்கள் என்றே அடையாளம் காட்டிக் கொள்வதில் பெருமைப்பட்டனர்.
ஒரு சில நல்ல அறிவுடைய முஸ்லீம்களே தங்களை ஹிந்துக்கள் என்று கூறி கொள்வதில் பெருமைப்படும்போது தங்கள் சுயமறதியை தன்மானமற்ற தன்மையைத் தூக்கி எறிந்துவிட்டு நம்மை நாமே உணர்ந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
end
https://siliconshelf.wordpress.com/2012/05/27/அரவிந்தன்-நீலகண்டனின்-ஹ/