முந்தைய பகுதி: பாகம் 1
சென்ற பதிவில் ருவாண்டா எப்படி ஜெர்மனி ஆட்சியின் கீழ் வந்தது என்பதை பற்றி பார்த்தோம். முதல் உலக போரில் அடைந்த தோல்வியால் ருவாண்டாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஜெர்மனி படைக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் ருவாண்டாவிற்கு அருகில் இருந்த காங்கோ என்ற நாட்டை ஆக்கிரமித்து இருந்த பெல்ஜியம் ஜெர்மனி படையை விரட்டி ருவாண்டாவிற்குள் புகுந்தது. ருவாண்டா மன்னர் பெல்ஜியத்தின் காலனி நாடாக மாற்ற ஒப்புக் கொண்டார். ருவாண்டாவை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தவுடன் பெல்ஜியம் செய்த முதல் வேலை, தனது நாட்டுப் பாதிரியார்களை அங்கு இறக்குமதி செய்தது தான். ஜெர்மனி அதிகாரிகள் மிஷனரிகளை பயன்படுத்தி கொண்டார்களே தவிர அவர்களை ஆயுதமாக பயன்படுத்தவில்லை. ஆனால் பெல்ஜியமோ அவர்களை தனது இராணுவ பிரிவாகவே பயன்படுத்தியது.
1920 ஆம் ஆண்டு பெல்ஜிய காலனிய உயர் அதிகாரி காங்கோ மற்றும் அதன் சுற்றியுள்ள தனது கட்டுபாட்டில் உள்ள நாடுகளின் கிறித்துவ மிஷனரிகளுக்கு ஒரு சுற்றிக்கையை அனுப்பினார். இந்த சுற்றறிக்கை ஒவ்வொரு மதம் மாறிய இந்திய கிறித்துவரும் படிக்க வேண்டிய ஒன்று …. அவர் கூறியதின் ஒரு சில பகுதிகள் மட்டும் இங்கு தமிழாக்கம் செய்துள்ளேன்.
காலனி நாடுகளில் உள்ள கிறித்துவ மிஷனரிகளுக்கான கடமைகள்:
நீங்கள் இங்கு இருப்பது மதமாற்றம் செய்வதற்கு. உங்களின் முக்கிய வேலை கடவுளை பற்றிய விசயங்களை அவர்களுக்கு சொல்வது கிடையாது, கடவுளிடம் எவ்வாறு பிராத்திப்பது என்பது கருப்பர்களுக்கும் தெரியும். கொலை செய்வதும், திருடுவதும் தவறு என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் மதமாற்றம் செய்ய வந்து இருப்பது அவர்களுக்கு இறைவனை பற்றி சொல்வதற்கு அல்ல… நமது தேவைகளை பூர்த்தி செய்ய…..
இதற்காக கீழ் கண்ட விசயங்களை நீங்கள் மிக கவனமாக கடைபிடிக்க வேண்டும்
(1) நமது காட்டுமிராண்டிக் கருப்பர்களைச் செல்வங்களின் மீது பற்று இல்லாதவர்களாக மாற்ற வேண்டும். ஏழைகள் தான் கடவுளை அடைய முடியும் என்றும் செல்வம் சேர்ப்பது கடவுளுக்கு எதிரான விசயம் என்று பிரச்சாரம் செய்யுங்கள்.
(2) நமது ஆட்சி முறையாலும் நமது தொழிலதிபர்களாலும் பல விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படலாம். அவ்வாறு நடக்கும் பொழுது அதற்கு எதிராக எவரும் போராட்டம், பழிவாங்கல் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை உண்டாக்குங்கள். துறவிகளை உதாரணம் காட்டி, அவர்கள் எவ்வாறு தனக்குத் தீங்கு இழைத்தவர்களை மன்னித்தார்கள், தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எவ்வாறு பொறுத்துக் கொண்டார்கள் போன்றவற்றை சொல்லி அவர்களைக் கோழைகளாக மாற்றுங்கள்
(3) அவர்களின் ஒற்றுமையான சமுதாயத்தை சீர்குலைத்து ஒவ்வொருவரையும் தனிமைப் படுத்துங்கள். நம்முடன் இருப்பது தான் தனக்குப் பாதுகாப்பு என்று நம்மை தேடி தானாக வருவார்கள். இது போன்ற செயல்களை வயதானோர்கள் எதிர்ப்பார்கள். ஆனால் அவர்களைப் பற்றி கண்டு கொள்ளாதீர்கள். அவர்கள் ஒரு சில வருடங்களில் இறந்துபோவார்கள். உங்களின் முக்கிய நோக்கம் வருங்கால சந்ததியினர் தான்.
(4) முதல் கட்ட மதமாற்ற செயல்களிலேயே உங்களிடம் பணிவோடு இருக்கும் பழக்கத்தைக் கற்று கொடுங்கள். உங்கள் பள்ளிகளில் எக்காரணத்தை கொண்டும் உங்களிடம் கேள்வி கேட்கும் பழக்கத்தை மட்டும் அனுமதிக்காதீர்கள்.
(5) கருப்பர்களின் கடவுள் உருவங்கள் மற்றும் பண்பாட்டு சின்னங்களைச் சாத்தான்களின் உருவங்கள் என்று கூறுங்கள். அவர்கள் பண்பாட்டுச் சின்னங்களை எல்லாம் அருங்காட்சியகத்திற்கு மாற்றுங்கள். கருப்பர்களின் நினைவில் இருந்து அவர்கள் மூதாதையர்களை பற்றிய எண்ணங்களை முழுமையாக மறந்திடச் செய்யுங்கள்.
(6) உங்களை ‘ MY FATHER’ என்றே அழைக்க வேண்டும் என்பதை வற்புறுத்துங்கள். அவர்களை மனதளவில் உங்களின் அடிமைகளாக மாற்றுங்கள்.
அரசாங்கம் உங்களுக்கு முழு உதவியாக இருக்கும். கத்தோலிக்க மிஷனரி பள்ளிகள் கட்டவும், மதம் மாற்றம் செய்யவும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கிடைக்கும், எந்த நிலம் தேவைப் பட்டாலும் உடனடியாகக் கொடுக்கப்படும். வேலை ஆட்கள் இலவசமாகக் கொடுக்கப் படுவார்கள். நான் சொன்ன அனைத்து விசயங்களுக்கும் பெல்ஜியம் மன்னர் அனுமதி அளித்துள்ளார். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நமது நாட்டிற்காக பாடுபடுவோம்.
வாழ்க பெல்ஜியம் மன்னர் !! வாழ்க பெல்ஜியம் நாடு !!
Source: A Classic colonial distortion of African history and its catastrophic consequences by Ntaganzwa
பெல்ஜிய மன்னர் உத்தரவிட்டு விட்டார், பணமும் கிடைத்து விட்டது. சரி…. அதை எவ்வாறு செய்து முடிப்பது? இது போன்ற வேலைகளை செய்வதற்கு என்றே அந்த காலத்தில் பல பல்கலைக் கழகங்களையும் பல பேராசிரியர்களையும் வைத்து இருந்தனர் ஐரோப்பிய அதிபுத்திசாலிகள். அப்படி பட்ட ஒருவர் தான் GAMALIEL. அவர் சொன்ன விசயத்தை அப்படியே இங்கு பதித்து உள்ளேன்.
For missionaries to succeed in “saving African souls,” they must first acquire political power, economic power, social power and cultural power in order to obtain massive, fast and long lasting conversions – Gamaliel
இவரின் பரிந்துரைப்படி கத்தோலிக்க மிஷினரிகள் பெல்ஜிய அரசாங்க உதவியுடன் மத மாற்றத்தைத் தீவிரப்படுத்தின. மிஷினரிகளின் மதம் மாற்றும் செயல்கள் ருவாண்ட மன்னர் முஸிங்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மன்னர் மத மாற்றத்திற்கு ஒரு மிகப் பெரிய தடைக் கல்லாகவே இருந்தாலும், கத்தோலிக்க மிஷனரிகள் மதம் மாறிய அரசியல் தலைவர்கள் மற்றும் மன்னர் குடும்ப உறுப்பினர்களை வைத்துத் தனது காரியங்களை சாதித்துக் கொண்டனர். ஆரம்ப காலத்தில் மன்னருடன் நேரடிச் சண்டையில் கத்தோலிக்க மிஷனரிகள் ஈடுபடவில்லை. இதற்கான முக்கிய காரணம் மன்னரின் அரசவையில் உள்ள அனைவரையும் மதம் மாற்றி அதன் மூலம் மன்னரைத் தனது கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது தான். அவர்கள் எதிர்பார்த்தது போலவே மத மாற்றம் நிகழ்ந்தது. முதலில் சாதுவாக நடந்து கொண்ட மிஷனரிகள், மன்னரின் அரசவையில் உள்ளவர்களை போதுமான அளவு மதம் மாற்றி பெரும்பான்மை பெற்ற உடன் தனது சுய உருவத்தைக் காட்டத் தொடங்கினர். மன்னரை முடக்கும் செயல்களில் இறங்கினர். மன்னரோ அவர்களின் மிரட்டலுக்கு அடி பணியாமல் தொடர்ந்து மிஷினரிகளின் மதம் மாற்றும் செயல்களுக்கு இடையூறாகவே இருந்தார்.
முடிவில் பெல்ஜியத்தின் உதவியுடனும் மதம் மாறிய மன்னர் குடும்பத்தினரின் உதவியுடன் மன்னர் முஸிங்காவை பதவி நீக்கம் செய்து நாடு கடத்தினர். கத்தோலிக்க கிறித்துவராக மதம் மாறிய அவருடைய மகன் முடாரா III என்பவர் மன்னராக்கப்பட்டார். முடாரா III மன்னர் ஆன பிறகு பெல்ஜியத்தை பாராட்டி அவர் கூறிய வார்த்தைகள்…
“Christ the King to have given Rwanda the divine light of Belgian colonial administration along with its science of good government”.
(குறிப்பு: முடாரா III கத்தோலிக்க பாதரியார்களால் அவர்களின் பள்ளியில் வார்த்து எடுக்கப்பட்டவர். அவர்கள் அளித்த அந்த கல்வியே தந்தையையே நாடு கடத்தும் அளவுக்கு கொண்டு சென்றதோடு மட்டும் அல்லாமல் அவர்களது அடிமையாக இருப்பது தனக்குப் பெருமை என்று சொல்லும் அளவுக்கு அவரை மாற்றியது. பாரதத்தில் இருந்த பல மன்னர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் குழந்தைகள் இது போன்று வெளி நாடுகளில் படித்து அங்கு உள்ள பல்கலைக் கழகங்களில் வார்த்து எடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)
முடாராவின் மத மாற்றம் ருவாண்டாவை இருண்ட காலத்திற்கு அழைத்துச் சென்றது. மன்னரே நாட்டுபற்று இல்லாமல் எதிராளியின் கைப்பாவையாகச் செயல் பட்டதால் அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் காலனி அதிகாரிகள் மற்றும் வெள்ளைப் பாதிரியார் அமைப்பின் கீழ் வந்தது. சுருங்க சொன்னால் கத்தோலிக்க வெள்ளை பாதிரியார்கள் அமைப்பு ருவாண்டாவின் மன்னராட்சிக்கு இணையான ஒரு மாற்று அரசாங்கமாகத் திகழ்ந்தது.
ருவாண்டாவின் மேற்கத்திய முறையிலான கல்வி கூடங்களில் உயர் சாதி என்று கருதப்பட்ட துட்ஸி இனமக்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். அவர்கள் பாடத்திட்டத்திலும் நமது நாட்டில் இருந்தது போல் குமாஸ்தா அளவிலான கல்வி முறையே போதிக்கப்பட்டது. பெல்ஜியம் உருவாக்கிய வறுமையின் காரணமாக மக்கள் பட்டினியால் உயிர் இழந்தனர். பலர் தங்கள் குழந்தைகளை மிஷனரிகளிடன் பணத்திற்காகவும் உணவிற்காகவும் விற்றனர். பல இடங்களில் குழந்தைகள் சர்வ சாதாரணமாகக் கடத்தப்பட்டு அனாதைகளாக மிஷனரிகளில் விற்கப்பட்டனர். இவ்வாறு விற்கப்பட்ட குழந்தைகளே பிற்காலத்தில் கத்தோலிக்கத்தின் ஆயுதங்களாக மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் ருவாண்டா, புருண்டி மற்றும் காங்கோ பகுதிகளில் ஏராளமான சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சுரங்கங்களில் பணி செய்ய ஏராளமான மக்கள் தேவைபட்டனர். நாட்டின் பெரும்பான்மை மக்கள் விவசாய தொழிலை செய்து வந்தனர். பெல்ஜியத்தினருக்கு சுரங்க வேலைக்கு ஆட்கள் எளிதாக கிடைக்கவில்லை. இதனால் பெல்ஜிய காலனி ஆதிக்கவாதிகள் ருவாண்டாவின் விவசாயத்தை நாசம் செய்தனர். இதன் காரணமாக மிகப் பெரிய பஞ்சம் உருவானது. துட்ஸி மக்களை வைத்து ஹுடு இன மக்களை கொடுமைப்படுத்தி பெல்ஜிய காலனி அதிகாரிகளின் சுரங்கங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்ய வைத்தனர். பல ஆயிரம் கோடி மதிப்பு மிக்க கனிம பொருட்களை பெல்ஜியம் கொள்ளை அடித்தது (இந்த பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட யுரேனிய தனிமங்கள் தான் இரண்டாம் உலக போரில் ஜப்பானில் வீசப்பட்ட போன்ற அணுகுண்டுகளுக்கு பயன்படுத்தபட்டதாக ஒரு தகவலும் உண்டு).
இதை எல்லாம் பற்றி மன்னர் முடாரா கண்டு கொள்ளாமல் தூங்கி கொண்டு இருந்தார். சுருக்கமாக சொன்னால் முடாரா இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி மாதிரி செயல்பட்டார். பெல்ஜியம் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் கொள்ளை அடித்த கணக்கில் வந்த கனிம வளங்களின் விவரங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது.
30 ஆண்டு கால காலனி அட்சியில் உருவான மேற்கத்திய பொருளாதார கொள்கையில் ஒட்டு மொத்த நாடே வறுமையில் வாடியது. துட்ஸி இன மக்கள் மட்டுமே காலனி அரசாங்கத்தில் வெள்ளையர்களுக்கு அடிமை வேலை செய்ய அனுமதிக்கப் பட்டதால் அவர்கள் நிலை மட்டும் சற்று பாதிக்கபடாமல் இருந்தது. 80% ஹுடு இன மக்கள் பொருளாதார மாற்றத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். கத்தோலிக்க கிறித்துவ அமைப்பு ஒடுக்கப்படும் ஹுடுகளுக்காக எந்த உதவியும் செய்யவில்லை. இந்த நிலையைப் பயன்படுத்தி கத்தோலிக்க கிறித்துவ மிஷினரிகளின் கீழ் வராத பிற கிறித்துவ அமைப்புகளான புரொட்டஸ்டண்ட் போன்ற அமைப்புகள் ஹுடு மற்றும் துட்சி சாதிகளுக்கு இடையே இருந்த பொருளாதார மற்றும் சமுதாய ஏற்றத் தாழ்வு பிரச்சனைகளை முன் வைத்து வளர முயற்சித்தன. கத்தோலிக்க அமைப்பு ஆளும் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்ததால், புரொட்டஸ்டண்ட் அமைப்புகள் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்த போராளிகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டன.
நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களுக்கு என்று ஒரு தொழிற் சங்கங்களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் பெறுவது போல், ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தங்களுக்கு என்று ஒரு கிறித்துவ மதமாற்ற நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் தங்களது வியாபார மற்றும் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றி கொள்கின்றன (கூடம்குளம் அணுமின் நிலையத்தை வரவிடாமல் செய்ய வைப்பது போன்று). இதன் காரணமாக பல்வேறு கிறித்துவ அமைப்புகளுக்கு இடையேயும் தங்களது செல்வாக்கை நிலைநாட்ட பல்வேறு சண்டைகள் ஆப்பிரிக்க நாடுகளில் நடந்தன.
புதிதாக வந்த கிறித்துவ மிஷனரிகள் பெல்ஜியத்தின் பொருளாதார சூழ்ச்சியினால் சமுதாயத்தின் கீழ் நிலைக்கு சென்ற ஹுடு இனத்தின் தலைவர்களை மதம் மாற்றியதோடு மட்டும் அல்லாமல், துட்சி இனத்தவர் ஹுடு இனத்தவர்களை காலம் காலமாக அடக்கி ஆள்வதாக பிரச்சாரமும் செய்தனர். இந்த பிரச்சாரங்கள் தனது பாரம்பரியம் மற்றும் வரலாற்றை மறந்த புதிய தலைமுறை ஹுடு மக்களுக்கு பழியுணர்ச்சியை தூண்டியது. ஹுடு இனத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பையும் கொடுத்து அவர்கள் அரசாங்கத்தின் முக்கிய தலைமை பதவிகளை அடைய புதிய கிறித்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். இதன் விளைவாக ஹுடு சாதிகள் முழுமையும் மிகக் குறைந்த காலத்தில் வேகமாக மதம் மாறின. ஹுடு இன பாதரியார்கள் துட்சி இனத் தலைவர்களுக்கு எதிராக செய்த பிரச்சாரத்தின் காரணமாக நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடிக்க தொடங்கியது. ஹுடு இனத்தில் மத மாற்றமும் ருவாண்டாவில் கலவரமும் ஒரே விகிதத்தில் வளர்ந்தன. மிஷினரிகளின் இந்த பொய் பிரச்சாரத்தால் நாடே எரிந்து கொண்டு இருக்க… பெல்ஜியம் எந்த பிரச்சனையும் இன்றி கனிம வளத்தைக் கொள்ளை அடித்துக் கொண்டு இருந்தது. வேறு சொற்களில், பெல்ஜியம் கொள்ளை அடிப்பதை மக்களிடம் இருந்து திசை திருப்பவே பாதிரியார்கள் மூலம் இது போன்ற செயல்களை செய்தார்கள், பாதிரியார்கள் அதற்கு முழுவதுமாக ஒத்துழைத்தார்கள் என்றும் கூறலாம்.
இரண்டாம் உலக போர் முடிவுற்று ஐக்கிய நாடுகள் சபை உருவானது. 1919 ஆம் ஆண்டு ருவாண்டாவை ஆளும் அதிகாரத்தை பெல்ஜியத்திற்கு வழங்கிய League of Nations ஆணை ரத்து செய்யப்பட்டு, ருவாண்டா ஐநா சபையின் நேரடி கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டது. பெல்ஜியம் ருவாண்டாவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. வெளியேறும் முன்பு அனைத்து வளங்களையும் சுரண்டும் செயலில் பெல்ஜியம் அதிகாரிகள் இறங்கினர். மக்களிடம் பல்வேறு இன மோதல்களை உருவாக்கி, ருவாண்டா தன்னாட்சி நடத்தும் அளவுக்கு முன்னேறம் அடையவில்லை என்று கூறி, சர்வதேச நாடுகளையும் ஏமாற்றினர். ஆண்டுகள் பல கழிந்தன. ருவாண்டாவின் அனைத்து கனிம வளங்களையும் வரை முறையின்றி சுரண்டின. ஐநாவின் தொடர் வலியுறுத்தலின் காரணமாகவும், “கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சாதி பிரச்சனைகள் எழுந்ததன்” காரணமாகவும், பெல்ஜியம் ருவாண்டா நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தது. 1959 ஆம் ஆண்டு இது குறித்த வரைவு திட்டத்தை உருவாக்க முடாரா III மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் பொழுது மர்மமான முறையில் மன்னர் உயிர் இழந்தார். பெல்ஜிய மருத்துவர் மன்னருக்கு கொடுத்த தடுப்பூசியினால் தான் மன்னர் உயிர் இழந்தார் என்று குற்றம் சாட்டப் பட்டது. விசாரணை ஏதும் இன்றி அவர் உடலடக்கம் நடைபெற்றது.
அவர் உடலடகத்தின் பொழுது ஆப்பிரிக்காவின் பல்வேறு முக்கிய தலைவர்களும் பங்கு கொண்டனர். புருண்டி மன்னரும் கலந்து கொண்டார். புருண்டி மன்னர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே காலனிய ஆதிக்க நாடுகளையும் கிறித்துவ மிஷினரிகளையும் எதிர்த்தார் என்பது குறிப்பிடத் தக்கது. புருண்டி மன்னரிடம் அவர் ஏன் இன்னும் கிறித்துவராக மதம் மாறவில்லை என்ற காரணத்தை ஐரோப்பிய கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கேட்டார் அதற்கு அவர் கூறிய பதில் –
“You want to know why I was never baptized? Look at the one you baptized, he is in a coffin!”
முராட்டா III மன்னர் உயிர் இழந்த பின்பு கிகேலி V பதவியேற்றார். புதிய மன்னர் பெல்ஜியத்தை கடுமையாக எதிர்த்தார். அரசியல் நிலையற்ற தன்மையையும் சாதி கலவரங்களையும் கட்டுபடுத்த பெரும் முயற்சியை செய்தார். ஆனால் மத மாற்றத்தின் மூலம் மக்களை தனது கட்டுபாட்டில் வைத்து இருந்த ஹுடு பாதரியார்களின் போராளி குழுக்களை அவரால் கட்டுபடுத்த முடியவில்லை.
1959 ஆம் ஆண்டு ஹுடு பாதிரியார்களின் தலைமையில் உருவான ஹுடு போராளி குழு அவர்களின் வாழ்வாதாரத்தை பறித்த பெல்ஜியம் அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்தாமல் அதிகாரத்தில் இருந்த துட்சி இனத்தவர்களை தாக்கியது. சுமார் 20,000 துட்சி இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். நிலைமையை உணர்ந்த கத்தோலிக்க அமைப்பும் பெல்ஜிய காலணி ஆதிக்க நாடுகளும் அரசு மற்றும் சர்ச்சின் தலைமை பதவிகளில் இருந்த துட்சி இனத்தவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்து ஹுடு இனத்தவர்களை அமரவைத்தனர். அதிகாரத்தை கைப்பற்றிய ஹுடு இனத்தவர்கள் உடனடி தேர்தலை நடத்தி மன்னரை ஆட்சியில் இருந்து இறக்கினர். 1961 ஆம் ஆண்டு ருவாண்டாவின் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1962 ஆம் ஆண்டு ருவாண்டா சுதந்திர நாடாக பிரகடனப் படுத்தப்பட்டு முழுமையான ஹுடு இனத்தவர்கள் தலைமையிலான அரசாங்கம் கறைபடிந்த கைகளோடு உருவானது.
இது வரை ஐரோப்பிய காலணி ஆதிக்கத்தின் விளைவால் துட்ஸி மற்றும் ஹுடு இனத்தவர்களிடம் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை பற்றியும், மத மாற்றத்தின் காரணமாக முராடா மன்னர் தானும் அழிந்து தனது நாட்டையும் எவ்வாறு அழிவு பாதைக்கு கொண்டு சென்றார் என்பதை பற்றியும் கண்டோம். ஆனால் இது மட்டுமே 10 இலட்சம் மக்களை கொல்லும் அளவுக்கு ஒரு சமுதாயத்தை கொண்டு செல்ல முடியாது. அதற்கு வேறு ஒரு சக்தி வாய்ந்த காரணம் இருந்தது. அது என்ன என்பதை அடுத்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
(தொடரும்)
கோமதி செட்டி,
உங்களை மனமுவந்து பாராட்டுகிறேன். தொடருங்கள்.
.
இந்தியாவிலும் ருவாண்டாவிலும் ஒரே மாதிரியான strategy கையாளப்பட்டிருக்கிறது.. இனியாவது நாம் விழித்துக்கொள்வோம்..
அருமையான கட்டுரை கோமதி செட்டி அவர்களே ….ஒஸ்தி !!!!!!!!!!!!!!
ஐரோப்பியர்களின் நாடு புடிக்கும் வேட்கைக்கு உறுதுணையாக இருந்தது அவர்களின் மத மாற்ற பீரங்கிகளே,ஆப்பிரிக்காவில் காணப்பட்ட மத அடையாளங்களை எச்ச சொச்சம் எதுவும் இன்றி அழிக்க ஆயுதம் பயன்படுத்த பட்டிருக்கமாயின் அங்கு புரட்சி படைகள் உருவாகி கொள்கை இன்னும் உறுதியாகி இருக்கும்..மத பிரசாரம் மூலம் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி பிரிவனை ஏற்படுத்தும் யுக்தியை பயன்படுத்தியதன் விளைவு ,இன்று ஆபிரஹமிய மதங்களின் கூடாரமாக உள்ள ஆப்ரிக்கா தன்னிலை இழந்து உலக நாடுகளை பார்த்து கை ஏந்தி நிற்கின்றது…பிரித்து ஆளும் சூழ்ச்சியை சிறப்பாக கை ஆள்வதால் தான் ஆங்கிலேயர்கலக்கு தமிழில் “பிரித்தானியர்” என்று பெயர் வந்தது என சொல்வதுண்டு..
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழர்கள் மத்திய இலங்கையின் தேயிலை தோட்டங்களில் பணிக்கு அமர்த்தபட்டு குறைந்த கூலிக்கு வேலைவாங்க பட்டனர்.அவர்களக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளோ,கல்வி உரிமையோ வழங்கப்படவில்லை.குதிரை லயங்கள் போல மனித லயங்கள் உருவாக்கபட்டு குடி அமர்த்த பட்டனர்.சொல்ல போனால் குடிஎரியவர்கலக்கு இலங்கையில் பிறந்த குழந்தைகழக்கு இலங்கை குடிமகன் அந்தஸ்து கூட வழங்க படவில்லை.இவ்வாறு அவர்களை பிரித்து வைத்து ஆட்சியை சிங்களவர்களிடம் அளித்த போது சிங்களவர்களும் அதையே தொடர்ந்தனர்.இன்று வரை அம்மக்களின் வாழ்வாதாரம் நாள் கூலி அடிப்படையிலே உள்ளது….இதனை சாதகமாக பயன்படுத்தும் சுவிஷேச சூழ்ச்சியாளர்கள்,”தேவனிடம் இளைப்பாறுதல் பெற ஓடி வாருங்கள் ” என கூவி கூவியே கூட்டம் கூட்டமாக மதம் மாற்றுகின்றனர்.ஒப்பீட்டளவில் கொழும்பை விட தமிழ் கிறிஸ்தவ சபைகள் பின் தங்கிய மத்திய மாகாணத்தையே குறி வைத்து வியாபித்து வருகின்றன.தலைகளை கூட்டுவதும் சபைகளை பெருக்குவதும் சபைகளின் குறிக்கோள் கூற்றிலேயே கானகூடியாதாய் உள்ளது.இவாறு மதம் மாறி போகும் மக்களக்கு சபைகள் உதவி செய்கிறதோ இல்லையோ ,தசமபாகம் (அ) சந்தாப்பணம் கட்டாயமாக அரவிடபடுகிறது.மற்றும் இயல்பாகவே அவர்களின் சொந்த உறவினர்களை கூட சாத்தானாக பார்க்க பழக்க படுத்தபடுகின்றனர்….ஈழ தமிழர்களுக்காக தம் இன்னுயிரையும் துறந்த எத்தனையோ தமிழ் சகோதர சகோதரிகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.ஆயினும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட மலையக தமிழர்களை பற்றி தமிழர்கள் பலர் அறியாமல் போனது துரதிஷ்டவசமே ……
காலனியம் ஒரு தேசத்தை அழித்து ஒழித்த வரலாற்றை அருமையாக எழுதிச் செல்கிறீர்கள் கோமதி செட்டி.. இந்தியர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய வரலாறு இது.
// சமுதாயத்தின் கீழ் நிலைக்கு சென்ற ஹுடு இனத்தின் தலைவர்களை மதம் மாற்றியதோடு மட்டும் அல்லாமல், துட்சி இனத்தவர் ஹுடு இனத்தவர்களை காலம் காலமாக அடக்கி ஆள்வதாக பிரச்சாரமும் செய்தனர். இந்த பிரச்சாரங்கள் தனது பாரம்பரியம் மற்றும் வரலாற்றை மறந்த புதிய தலைமுறை ஹுடு மக்களுக்கு பழியுணர்ச்சியை தூண்டியது.//
இந்த பிரசாரங்களுக்கு ஒரு தெளிவான pattern உள்ளது. இதன் வேர் பைபிளில் பழைய ஏற்பாட்டில் உள்ள ஒரு கதையில் உள்ளது. அந்தக் கதைப்படி நோவாவின் மூன்று மகன்களில் ஒருவனது சந்ததியினர் உலகை ஆள்வதற்காக வரமளிக்கப் பட்ட இனம். Ham என்ற இன்னொருவனது சந்ததியினர் நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி சபிக்கப் பட்டவர்கள். இடைப்பட்டவர்கள் முதலாம் இனத்திற்கு ஏவலாளர்களகவே இருக்கும்படி ஆணையிடப் பட்டவர்கள். இது குறித்து Breaking INdia புத்தகத்தில் ஒரு அத்தியாயமே உள்ளது.
மிஷநரிகள் காலனியாதிக்கத்தின் ஐந்தாம் படையாக தாங்கள் சென்றவிடங்களில் எல்லாம், அங்கிருந்த மக்கள் குழுக்களை இந்த இனவாதக் கதையின் கதாபாத்திரங்களுக்கு map செய்தனர். பிறகு அதற்கு கற்பிதமான வரலாற்று சான்றுகளை ஏதோ தீவிர ஆய்வு போல் உருவாக்கி உலாவ விட்டு மூளைச் சலவை செய்தனர். பல நூற்றாண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த சமூகங்களை உடைத்து ரத்த விளாறாக்கி அழித்தனர்.
இனியும் மதம் மாறி போக நினைக்கும் இந்து நெஞ்சங்கள் முடிவு எடுக்க முன் அறிவு சார் ஆராய்ச்சிக்கு பின் தங்கள் முடிவை எடுக்குமாறு கேட்டுகொள்கிறேன்.குடும்ப கஷ்டம் மரணம் வலி வேதனை துக்கம் குனபடுத்த முடிய வேதனைகள் கொண்ட கிறிஸ்தவ குடும்பங்கள் அணைத்து நாடுகளிலும் உள்ளது.அவர்களை கைவிட்ட தேவன் உங்களை தூக்கி விடுவான் எனும் கருத்தை உங்களக்குள் நீங்களே கேட்டுகொள்ளுங்கள்.மற்றும் பாரம்பரியம் பண்பாடு கட்டுகோப்பு போன்ற முன்னோர்கள் கட்டிகாத்த விடயங்களின் தொடர்ச்சியும் முடிவும் அவர்களின் சந்ததி ஆகிய தங்களின் கைகளிளியே உள்ளது என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.மாட்சிமையின் தேவன் அனைவரக்கும் பொதுவானவன்,உலகை படைத்த இறைவன் ஒருவனே அவனே உண்மையுள்ள தேவன் என கூச்சல் போடும் அனைவரக்கும் வெளிநாட்டு பணமே பட்டுவாடா ஆகிறது.கொழும்பின் ஒரு கத்தோலிக் அல்லாத கிறிஸ்தவ சபை கட்டிடம் கட்டப்பட்டது தென் கொரியா உதவியில்…இவை அனைத்தும் வெளிநாடுகள் 3m உலக நாடுகளில் காலூன்ற மேற்கொள்ளபடும் தந்திரங்களே என உணருங்கள்.இந்திய கிறிஸ்தவ ஊடகம் ஒன்றில் தாடிவ்ச பாதிரி ஒருவர் வெக்கமே இல்லமால் தேவ ஆணை படி மத எந்த தேசத்தை விட இஸ்ரவேல் தேசத்துக்கு அதிகமாக பிரார்த்திக்க சொல்கிறார்…தன் வீட்டில் நெருப்பு எரிய பக்கத்துக்கு வீட்டை பற்றி கவலைபடுகிறார்?????இஸ்ரவேல்,ஐரோப்பிய யூனியன் வட-அமெரிக்க நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் சதிவலையில் மாறிக்கொள்ள போவது நாமும் நம் சந்ததிகளுமே
Hitherto unknown facts are now known about African evangelism. Thanks.
The christian missionaries had started under the garb of Holy God, Christ the unholy varieties of wrong doings only only to loot the locals. This method is continued to this day in every part of the world.
I now boldly confirm, Islam, and Christianity are on equal footing in this respect. For Islam 1000s of episodes can be given from 7th century. There is nothing as God, Spiritualism anywhere. It is only Political Power to spread their tentacles throughout the world. Islam called as Dar-ul-Islam. Christians called it Christ way to occupy the world for their ultimate country’s economic benefit.
கிருஸ்தவ மிஷனரிகள் நாட்டை அடிமை ஆக்கும் தந்திரத்தை மிகவும் தெளிவாக குறிப்பிட்டு உள்ளீர்கள் தங்களுக்கு எனது நன்றிகள் !!!
I am reminded of the statement made by Rev. Desmond Tutu of South Africa —-
” When they came we had the land and they had the Bible. Then we closed our eyes to pray. After the prayer, we had the Bible and they had the land” . Christianity is very dangerous as they preach compassion and love , equality and growth etc and slowly destroy civilizations and societies. They are like cancer , which kills from within without the person realizing what is wrong.