கிகாலி முதல் பரமக்குடி வரை – 1

ஜாதி – படித்த அறிவு ஜீவிகளின் மத்தியில் எப்பொழுதும் அனல் பறக்க விவாதிக்கப்படும் ஒரு விவாதப் பொருள். ஜாதியை ஆதரிப்பவர்களும் தலைவர்களாகிறார்கள். ஜாதியை எதிர்ப்பவர்களும் தலைவர்களாகிறார்கள். அந்த அளவுக்கு ஜாதி ஒரு சக்தி மிக்க வார்த்தை. அவ்வளவு ஏன்…. என் வாழ்க்கைப் பயணத்தை மாற்றியதும் ஜாதி தான். பள்ளிப் பருவத்தில் நான் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன். இருட்டு என்றால் சொல்லவே வேண்டியது இல்லை. இரவு நேரங்களில் வீட்டுப் பாடங்கள் எழுதும் பொழுது எனது பயத்தைப் போக்க தொலைக்காட்சியைச்  சத்தமாக வைத்துக்  கொண்டு எழுதுவது எனது வழக்கம். ஒரு நாள் சன் டிவியில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. அதில் பாஜக தலைவர் இல.கணேசனும், தி.க.வைச்  சேர்ந்த ஒரு தலைவரும் விவாதித்துக் கொண்டு இருந்தனர். வழக்கம் போல் சாதியை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் ஹிந்து மதத்தைப் பற்றியும் பகவத் கீதையைப் பற்றியும் தி.க. தலைவர் விமர்சனம் செய்து கொண்டு இருந்தார். எப்பொழுதும் அவர்கள் செய்யும் விமர்சனம் தான். ஆனாலும் எனது வாழ்க்கையில் அப்பொழுது தான் முதன் முறையாக இது போன்ற விஷயங்களைக் கேட்டேன்.

வர் அன்று கேட்ட கேள்விகள் தான் ஜாதியைப்  பற்றி ஒரு கட்டுரை எழுதக் கூடிய அளவுக்குச் சிந்திக்க வைத்தது. அதற்காக நான் தி.க.காரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் நான் பகவத் கீதையைப் படிக்க ஆரம்பித்ததே ஜாதியைப் பற்றிய அவர்கள் விமர்சனத்தில் இருக்கும் உண்மையைத் தெரிந்து கொள்ளத்தான். அதன் தொடர்ச்சியாகவே மதம், பண்பாடு,  அரசியல் என்று அனைத்தைப் பற்றியும் ஆராயும் பழக்கம் ஏற்பட்டது. சரி,  விஷயத்திற்கு வருவோம். பரமக்குடி என்ற கிராமத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தக் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேவேந்திர குல வெள்ளாளர் சமுகத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. காவல் துறையினரின் இந்தச் செயலுக்குச் சாதிச் சாயம் பூசி, தலித் அடக்கு முறை என்ற பெயரில்,  முற்போக்குவாதிகள்,  சர்வதேச ஆங்கில ஊடகத்தில் தொடங்கி உள்ளூர்ப்  பத்திரிக்கை வரை பல நூறு கட்டுரைகளை எழுதினார்கள். உயர்சாதி என்று சொல்லப்படும் தேவர் இனத்தவர்கள் தலித் இனமான தேவேந்திர குல வெள்ளாளர்களைக் கொடுமைப்  படுத்துகிறார்கள் என்றும் இதற்குக் காரணம் ஆரிய வந்தேறிகளின் பார்ப்பனீய ஹிந்து மதம் தான் என்றும்,  அதனால் மக்களிடம் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க பார்ப்பனீய மதமான ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்துமே எல்லாக் கட்டுரைகளும் இருந்தன.

யார் எதைச் சொன்னாலும் அதையும் அப்படியே நம்பக் கூடாது; கேள்வி கேட்பவன் தான் பகுத்தறிவாதி என்று ராமசாமி நாயக்கர் சொல்வார். அதனால் நானும் பகுத்தறிவாளனாக என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். தேவர் சமுதாயம் உயர்ந்த சாதியா? தேவேந்திர குல வெள்ளாளர் சமுதாயம் தாழ்ந்த சாதியா? ஜாதியை உருவாக்கியது ஆரிய பார்ப்பனர்களா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். சரி,  இதற்கான விடைகளை ஆராயும் முன்பு மே 17-ஆம் தேதி உலகச் செய்திகளில் முக்கிய இடம் பிடித்த ஒரு செய்தியைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.


அகஸ்டின் பிசிமுங்கு(Augustine Bizimungu) என்ற ருவாண்டாவின் முன்னாள் இராணுவ அதிகாரிக்கு, 1994-ம் ஆண்டு 10 இலட்சம் பேர் கொல்லப்படக் காரணமாக இருந்த இனக் கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி,  சர்வதேச நீதிமன்றம் 30 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை விதித்தது.

லகிலேயே பிறப்பை அடிப்படையாக வைத்துச் சொல்லப்படும் சாதியம் என்ற பண்பாடு இந்தியாவில் ஹிந்துக்களிடம் மட்டும் தான் உள்ளது என்று திராவிட மற்றும் கம்யூனிஸ அறிவுஜீவிகள் காலம் காலமாகச் சொல்லி வந்துள்ளனர். 15000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் க்யூபாவை பற்றிப் பக்கம் பக்கமாக எழுதத் தெரிந்த கம்யூனிஸ்டுகளுக்கு 7000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ருவாண்டாவில் இருக்கும் சாதியைப் பற்றித் தெரியாமல் போனது ஆச்சரியத்திற்குரிய விஷயம்.

மது நாட்டில் உள்ளதைப் போல் தொழிலை அடிப்படையாகக் கொண்ட சாதிகள் ருவாண்டாவிலும் இருந்தன. அந்த நாட்டில் டுட்சி(Tutsi), ஹுடு(Hutu) மற்றும் ட்வா(Twa) என்று மூன்றே சாதிகள் தான் இருந்தனர். டுட்சி இனத்தவர்கள் ஆட்சியாளர்களாகவும், மாடு வளர்க்கும் தொழிலையும் செய்து வந்தனர். ஹுடு இனத்தவர்கள் விவசாயத்தைத் தொழிலாகச்

செய்து வந்தனர். ட்வா இனத்தவர்கள் வனவாசிகள். இதையே நமது பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய சாதி பிரிவின் அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்றால் கீழே உள்ளவாறு பிரிக்கலாம்.

டுட்ஸி – உயர் சாதியினர்; ஹுடு – பிற்படுத்தப்பட்டவர்கள்; ட்வா – தாழ்த்தப்பட்டவர்கள்

இவர்களின் சாதி அமைப்பு விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒரு விசயம் என்பதால் இதைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதவுள்ளேன்.

ந்த மூன்று சாதிகளில், ஹுடு என்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் டுட்சி என்ற உயர் சாதிகளுக்கும் இடையே 1994 ஆம் ஆண்டு மிகப் பெரிய சாதிக் கலவரம் வெடித்தது. ஹுடு சாதியைச் சேர்ந்த ருவாண்டா அதிபர் ஜூவெனல் ஹப்யாரிமானவும்(Juvénal Habyarimana)  மற்றும் புருண்டியன் அதிபர் சைப்ரியனும்(Cyprien Ntaryamira) சென்ற விமானம் சர்ச்சைக்குரிய முறையில் வெடித்துச் சிதறியது கலவரம் தொடங்கக் காரணமாக அமைந்தது. ருவாண்டாவை ஆட்சி செய்த ஹுடு சாதி அரசாங்கம் டுட்சி சாதியைச் சேர்ந்த போராளிகள் தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார்கள் என்று குற்றம் சாட்டியது. அரசாங்கத்தின் குற்றச்சாட்டை நம்பிய ஹுடு மக்கள் டுட்சி மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஹிட்லர், ஸ்டாலின், மாவோ மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் செய்த கொலைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் வகையில் ஹுடு சாதியினர், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட டுட்சி ஜாதியினரை மூன்றே மாதத்தில் (APR ’94 to JUN ’94) படுகொலை செய்தனர். அதாவது நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் மூன்று மாதங்களில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

ந்தக் கலவரத்திற்கு அவர்களிடம் காலங்காலமாக இருந்த வந்த சாதிய  ஏற்றத்  தாழ்வுகளும் அடக்கு முறையும் (Caste) தான் காரணம் என்று பெரும்பாலான மேற்கத்திய அறிவுஜீவிகள் எழுதினர். கம்யூனிஸ்டு அறிஞர்களோ ஒரு படி மேலே போய் கம்யூனிஸச் சித்தாந்தம் இல்லாததாலும், முதலாளித்துவப் போக்காலும் தான் இந்தக் கலவரம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தனர். ஆனால் இவர்களின் கருத்துக்களுக்கு எல்லாம் முற்றிலும் மாறான ஒரு பார்வையை ஐக்கிய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு ஆய்வறிக்கை வழங்கியது.

19-ஆம் நூற்றாண்டில் ருவாண்டாவை ஆட்சி செய்த மேற்கத்தியக் காலனி நாடுகள் டுட்சி மற்றும் ஹுடு இனத்தவரிடையே உருவாக்கிய பொருளாதார ஏற்றத் தாழ்வும், சாதியை (Caste) இனவாதமாக (Race) மாற்றிய அவர்களின் மத நிறுவனங்களும் தான் கலவரத்திற்குக் காரணம் என்று அவர்களின் ஆய்வறிக்கை குற்றம் சாட்டியது.

ம் நாட்டில் ஏற்படும் சாதிக் கலவரங்களுக்கு அந்நிய நாட்டுக் கைகூலிகள் தான் காரணம் என்று சில அமைப்புகள் குற்றம் சாட்டுவதுண்டு. இந்தக் குற்றச்சாட்டுக்கள் பார்ப்பன ஆதிக்க சாதிகளின் பொய்கள் என்று திரிக்கப்பட்டு நிராகரிக்கப் படுகின்றன. ஆனால் ஆப்பிரிக்கக் கூட்டமைப்பின் இந்தக் குற்றசாட்டுகளை மேற்கத்திய அறிவு ஜீவிகளால் திரிக்கவோ மறைக்கவோ முடியவில்லை.

லவரங்கள் என்பது ஒரே ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே ஏற்படுவதில்லை. தொடர்ச்சியான பல பிரச்சனைகளின் கூட்டு விளைவாகவே கலவரங்கள் ஏற்படுகின்றன. ஹுடு சாதியை சேர்ந்த அதிபர் கொல்லப்பட்டதனால் மட்டுமே பத்து இலட்சம் டுட்சி சாதியினரை ஹுடு சாதியினர் படுகொலை செய்யவில்லை. டுட்சி மற்றும் ஹுடு இனத்தவர்களிடம் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பிரச்சனைகளின் விளைவாகவே இந்தப் படுகொலைகளைச் செய்தனர். இந்த இரண்டு சாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட இந்தப் பிரச்சனைகளுக்கான காரணங்களை அரசியல் மற்றும் பொருளாதாரப் பார்வையிலும், சாதி மற்றும் இனவாதப் பார்வையிலும் எழுதியுள்ளேன்.

18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஜெர்மனி மத்திய ஆப்பிரிக்கப் பகுதிகளைக் குறிப்பாக ருவாண்டாவை ஆக்கிரமிக்கத் தொடங்கின. எத்தனையோ மிகப் பெரிய நிலப்பரப்புகள் இருக்க, ஜெர்மனி,  ருவாண்டா என்ற இந்தச் சிறிய நிலப்பகுதியை ஆக்கிரமிக்கச் சில காரணங்களும் இருந்தன. வடக்கில் இருந்து பரவிக் கொண்டு இருந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் தெற்கில் இருந்த தாதுக்களைக் கொள்ளை அடிக்கவும்,  இயற்கை வளங்கள் மற்றும் மலைகள் சூழ்ந்த பாதுகாப்பான பகுதியும், ஜெர்மனிக்குத் தேவைப்பட்டது. இதன் காரணமாக ருவாண்டவின் மீது தாக்குதல் நடத்தியது.

ருவாண்டா என்று தற்பொழுது அழைக்கப்படும் இந்தப் பகுதியைப் பல நூறு ஆண்டுகளாக டுட்ஸி சாதியில் இருந்து உருவான முவாமி என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டு வந்தார்கள். ஜெர்மனிப் படை ருவாண்டாவைத் தாக்கும் பொழுது முவாமி குடும்பத்தைச் சேர்ந்த முஸிங்கா என்பவர் தான் மன்னராக இருந்தார். முஸிங்காவின் படைகள் ஜெர்மனிப் படைகளுடன் பல வருடங்களாகச் சண்டையிட்டன. போரைத் தொடர விரும்பாத மன்னர் முஸிங்கா, ஜெர்மனிப்  படையுடன் ஒரு உடன்பாடு செய்து கொண்டார். உடன்பாட்டின் படி 1890-ல் ஜெர்மனியின் காலனி நாடாக ருவாண்டா மாறியது. ஏனைய காலனி நாடுகளில் செய்தது போல் மன்னர் முஸிங்காவை பொம்மையாக வைத்து மறைமுக ஆட்சியை ஜெர்மனி நடத்தியது. மன்னரை முன் நிறுத்தி ஏனைய மத்திய ஆப்பிரிக்கப் பகுதிகளையும் ஜெர்மனிப் படை ஆக்கிரமித்தது. ஏனைய பகுதிகளைக் (தான்சானியா மற்றும் கென்யாவை) கட்டுபடுத்தியது போல் இந்த பகுதியை ஆக்கிரமிப்பது மேற்கத்திய நாடுகளுக்கு எளிமையாக இருக்கவில்லை. காரணம் அவர்களின் ஆட்சி மற்றும் அதிகார முறை.

காலனி நாடுகளைப் போல் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகாரம் மன்னரிடம் (centralized) மட்டும் இல்லாமல் பரவலான

மன்னர் முஸிங்கா மற்றும் அவரது அமைச்சர்கள்

அதிகாரம் கொண்டவையாக இருந்தன (கிராமப் பஞ்சாயத்து மாதிரி). மன்னரினம் டுட்ஸி இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் கிராமத் தலைவர் பதவியிலும் மற்றும் மன்னரின் ஆலோசனைக்  குழுக்களிலும் ஹுடு இனத்தவர்களே அதிகம் இருந்தனர். இந்த அதிகாரப்  பரவல் ஜெர்மனிக்கு மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. இதற்கு முடிவு கட்டும் வகையில் ஜெர்மனி படை ஹுடு இனத்தவர்கள் அனைவரையும் பதவியில் இருந்து நீக்கி மேற்கத்திய நாடுகளில் இருந்தது போன்று அனைத்து அதிகாரங்களையும் மன்னரின் கீழ் கொண்டு வந்தது. இதன் காரணமாக ஹுடு மற்றும் டுட்சி இனத்தவர்களுக்கு இடையே மிகப் பெரிய பிளவு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் கத்தோலிக்க மிஷினரிகள் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் மத மாற்றத்தைச் செய்ய தொடங்கின. (ஐரோப்பிய நாடுகளை விட ருவாண்டா வரலாற்றில் கத்தோலிக்க அமைப்புகளின் தாக்கம் தான் மிக அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது)

1900-ஆம் ஆண்டு The Society of Our Lady of Africa என்ற அமைப்பின் மூலம் கிறித்துவ மிஷினரி (வெள்ளைப் பாதிரியார்கள்) இயக்கம் உருவாக்கப்பட்டது. Monseigneur Lavigerie என்ற பாதிரியார் தான் ருவாண்டா நாட்டு மக்களை கிறித்துவர்களாக மதம் மாற்றுவதற்கான முதல் வரைவுத் திட்டத்தை உருவாக்கினார். இந்த வரைவுத் திட்டத்தின்படி அனைத்து கிறித்துவ மிஷினரிகளும்,  அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களை மதம் மாற்றும் செயலைத் தொடங்கினர். அரசியல் தலைவர்களை மதம் மாற்றினால் மற்றவர்கள் தானாக மதம் மாறிவிடுவார்கள் என்று Monseigneur கருதினார். ஒட்டு மொத்தக் கிறித்துவ மிஷினரிகளும், அரசியல் தலைவர்கள், உள்ளூர் தலைவர்கள், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைக் கிறித்துவர்களாக்கும் செயலில் இறங்கின. பெரும்பாலான மிஷினரிகள் தலைவர்களை மட்டும் மதம் மாற்றிக் கொண்டு இருந்த காரணத்தால் எண்ணிக்கை அடிப்படையில் அவர்கள் குறைவாகவே இருந்தனர். ஆனாலும் தலைவர்களை மதம் மாற்றும் கிறித்துவ மிஷினரிகளின் இந்தச் செயல்பாடுகள் ஜெர்மனிய காலனி ஆதிக்கம் பரவ மிகவும் உபயோகமாக இருந்தது.

Monseigner Hirth (வெள்ளைப் பாதிரியார்கள் அமைப்பை ஆப்பிரிக்காவில் உருவாக்கியவர்)

Monseigneur Hirth ஜெர்மனி படை ருவாண்டாவை ஆக்கிரமிப்பதற்கு முன்பே மன்னர் முஸிங்காவுடன் தொடர்பில் இருந்தார். ஐரோப்பிய நாடுகள் எந்த நாட்டை ஆக்கிரமிக்க வேண்டுமோ அந்த நாட்டிற்கு முதலில் தங்கள் பாதிரியார்களை அனுப்புவார்கள். சுருங்கச்  சொன்னால் பாதிரியார்கள் ஐரோப்பியக் காலனி நாடுகளின் ஒரு இராணுவப் பிரிவாகவே செயல்பட்டனர். இவர்களின் தந்திரம் தெரியாமல் மன்னர் முஸிங்கா வெள்ளைப் பாதிரியார் கூட்டமைப்பிடம் ஏமாந்தார். ருவாண்டாவின் முதல் கத்தோலிக்க மிஷினரி சர்ச்சை Monseigneur Hirth கட்டினார். ருவாண்டாவை ஜெர்மனியின் அடிமையாக மாற்றியதில் இவரின் பங்கு மிக அதிகம். இந்தப்  பாதிரியாருக்குக் கொடுத்த இந்த அனுமதியினால், தன் மகனாலேயே நாடு கடத்தப்படுவோம் என்பது மன்னர் முஸிங்காவுக்கு அப்பொழுது தெரியவில்லை…. பாவம்!

Monseigneur Hirth ருவாண்டாவில் ஆற்றிய அரிய பணிக்கான ஒரு சான்று:

1913-ஆம் ஆண்டு ருவாண்டுவுக்கான ஜெர்மனியின் காலனிய அதிகாரி, வெள்ளைப்  பாதிரியார் அமைப்பின் தலைவர் Monseigner Hirth என்பவருக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

நீங்கள் ருவாண்டாவின் வடக்குப் பகுதியில் உருவாக்கிய மிஷினரி அமைப்புகளின் மூலம் சுதந்திரத்திற்காகப் போராடுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததோடு மட்டும் இன்றி ஜெர்மனி அதிகாரிகளிடம் மிக மரியாதையாக நடந்து கொள்கின்றனர். இதன் மூலம் தேவையற்ற இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறைக்கப்பட்டுள்ளது. இது போன்ற மிஷினரிகளை நாட்டின் பிற பகுதிகளிலும் அமைத்துக் காலனி ஆதிக்கத்தை விரிவுபடுத்தி ருவாண்டாவின் சுதந்திர வேட்கையை அழிக்க வேண்டும்.

முதல் உலகப் போரில் ஜெர்மனி கடும் தோல்வியை அடைந்து பின்பு அதன் ஆளுகைக்கு உட்பட்ட மத்திய ஆப்பிரிக்க நாடுகளை பெல்ஜியம் படை ஆக்கிரமித்தது. 1919-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் League of Nations (அந்தக் காலத்து NATO போல) என்ற அமைப்பை ஏற்படுத்தி ஜெர்மனியின் காலனி நாடுகளை அதிகார பூர்வமாக ஐரோப்பிய நாடுகள் பகிர்ந்து கொண்டன. இதில் என்ன காமெடி என்றால் இது போன்ற ஒரு விசயம் நடந்து கொண்டு இருக்கிறது என்பது கூட ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவர்களுக்குத் தெரியாது. பெல்ஜியத்தின் ஆட்சியில் முதலை வாய்க்குள் சென்ற மானை போல சிக்கிச் சின்னபின்னமானது ருவாண்டா. இனி வரும் பதிவுகளில் ருவாண்டா மக்களின் வாழ்க்கையில் மேற்கத்திய நாட்டு பொருளாதாரக் கொள்கையும் அவர்தம் இறையியலும் சேர்ந்து நடத்திய மாற்றங்களை விரிவாகக்  காணலாம்.

(தொடரும்..)

15 Replies to “கிகாலி முதல் பரமக்குடி வரை – 1”

 1. நான் மிகவும் விரும்பிய ஒரு கட்டுரை இது. ருவாண்டாவில் நடந்த இன படுகொலையில் ஒரு கத்தோலிக்க சிஸ்டரும் பன்னாட்டு நீதி மன்றத்தால் தண்டிக்க பட்டுள்ளார்கள்.மேலும் கென்யாவில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நடந்த கலவரத்தில் ஒரே கிறிஸ்தவர்கள் தங்களுக்குள்ளே மோதிக்கொண்டனர். கிக்குயு,லூயா மற்றும் கலந்ஜின் என பல இன குழுக்கள் வன்முறையில் இறங்கி மோதிக்கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பல சர்ச்சுக்கள் தீக்கிரையக்கப்பட்டன . இந்த தகவல்களை எல்லாம் இங்கே இருக்கும் ஹிந்துக்களுக்கு எடுத்து சொன்னால் ஒருவரும் கிறிஸ்தவராக மாற மாட்டார்கள்

 2. பாப்டிசம் , அடிப்படை இறை கொள்கை இவைகளால் பிரிந்துள்ள கிறித்துவ மதம் இன்றும் , ஒரு சபையை இன்னொரு சபை அந்தி கிறிஸ்து என்று விமர்சிப்பதில் குறைவில்லை . ” நான் சமாதனதே தர வந்தேன் என்று நினைத்தீர்களோ – சமாதானத்தையல்ல பிரிவினையே உண்டாக்க வந்தேன்” என்று ஒரு வசனம் – பட்டயத்தை அனுப்பவந்தேன் – அக்னியை போட வந்தேன் – அது இப்போதே பற்றி எரிய வேண்டும் என்று விரும்புகிறேன் . இப்படியல்லாம் ஏசுவின் வசனம் விவிலியத்தில் சொல்லுகிறது . இப்படியான ஒரு கருதுடையவரின் சீடர்கள் எப்படி இருப்பார்கள்?

 3. அறிவு பூர்வமான நல்ல தொடர். வாழ்க கோமதி செட்டி.

 4. அய்யா தயவு செய்து தோழர்.பி.ராமமூர்த்தி எழுதிய ஆரிய மாயையா? திராவிட மாயையா? புத்தகம் எங்கு கிடைக்கும்?தேடி ஓய்ந்து விட்டேன்.கொஞ்சம் உதவுங்க!!

 5. கோமதி செட்டி அவர்களே, நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. “ஹிஸ்ட்ரி சநேல்” பார்த்தல் இந்த உண்மை மேலும் விளக்கப்படுத்தப்படும். தொடருக்கு நன்றி, எப்படி மேற்கத்தைய மதமும் மதவாதிகளும் அப்பாவி மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள், கொன்று அழித்தார்கள், நாடு கடத்தினார்கள் போன்ற மிகக் கொடுமையான இந்த வரலாற்று நிகழ்வுகளை தமிழில் பதியும் உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
  மயிலாடுதுறையான்.

 6. நல்ல கட்டுரை. ஹோட்டல் ரூவாண்டா என்றொரு ஆங்கில படம் இந்த இன படுகொலை பற்றியது. அருமையான படம். ஒரு ஹோட்டல் ஊழியர், கலவரத்தின் போது வேற்றின மக்கள் சில பேரை காப்பாற்றுவது பற்றிய கதை. மனதை உலுக்கும் திரைகதை. அதில் ஒரு வசனம் எப்படி இந்த இன வெறி ஆரம்பித்தது என்பதை சொல்லும். பெல்ஜிய பாதிரியார்கள் சகோதரர் போல இருந்த டுட்சி மற்றும் ஹுடு மக்களை, இனமாக பிரித்து, ஒருவர் உயர்ந்தவர், மற்றவர் தாழ்ந்தவர் என்று வேருபடுதினர்கள் என்று வரும். கிருத்துவர் கால் வய்த்த இடம் எல்லாம் இன கலவரங்கள் வெடிப்பதில் வியப்பில்லை.

 7. அருமையான தொடர். அருமையான எழுத்து நடையில் கோமதி செட்டி கலக்குகிறார்.

  சரியான படங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் கீழே பட விளக்கங்கள் கோர்த்து, எழுத்துப் பிழைகள் தவிர்க்கப்பட்டு, ஒற்று மிகும் மிகா இடங்கள் கவனிக்கப்பட்டு….

  கலக்குற சந்த்த்ரூ !!

  .

 8. மிகவும் நல்ல தொடர். என்னிடம் மேற்கு ஆப்பரிக்க “கானா” நாட்டின் திரைப்படம் ஒன்று உள்ளது. அவர்கள் நாட்டிலுள்ள கோயிலின் பூசாரியை கலங்கபடுத்தி அந்த கிராமத்தையே கிறிஸ்துவத்திற்கு மதம் மாற்றுவதை அப்படம் கட்டுகிறது. இந்த கட்டுரையுடன் ஒத்து போகிறது. அந்த படத்தை என்னிடம் கொடுத்த கானா பையனுடன் பேசினேன், கிறிஸ்துவ பாதிரிகள் பேசுவது போலவே பேசினான். நன்றாக சலவை செய்யப்பட்டவனென்று விட்டுவிட்டேன்.

 9. நண்பர் நம்பியார் குறிப்பிட்டது போலவே,பல சபைகள் மற்ற சபைகலக்கு செல்ல கூடாது,ஒரு இடத்தில தன இருக்க வேண்டும் போன்ற போதனைகளை விசுவாசிகளக்கு aduki வருகின்றன.அப்படி போய்டா சபைவருமானம் பாதிக்க படுமே .அதிலும் நான் கண்ட ஒரு கோமாளி பாஸ்டர் சாது சுந்தர் செல்வராஜ்.தினசரி இரவு 11 மணிக்கு இவர் பேச்சில் எப்போதுமே உலக அழிவு ,இறுதிநாட்கள்,விக்கிரக ஆராதனை செய்யும் மக்கள் அழிக்கபடுவர் போன்றவையே ஆகும்.இவரின் சமீபத்திய செய்தி இறுதி நாட்களில் நட்சத்திரங்கள் கிரகங்கள் அனைத்தும் இடிந்து பூமி மேல் விழும்.அதை கேட்ட நிகழ்ச்சி நடத்துனர் அடுத்த நிகழ்ச்சியில் இரவு வானை பார்க்கும் போது thankku பயம் ஏற்படுவதாக கூறுகிறார்…பூச்சாண்டி காட்டி தேவ வல்லமையை ஏன் parappa வேண்டும் ??? வெகுசன தொடர்பு சாதனங்களில் இவ்வாறு அடிப்படை ஆதாரம் அற்ற செய்திகளை தினசரி pattiyaliduvathu இன்னும் சட்டத்தின் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது என்ன மாயம்????

 10. கிருத்துவம் என்ற வைரஸ் கிருமிக்கு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மெடிசின் இந்துத்வம்

 11. எனது நண்பர் ஒருவர் முக நூலில் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலை தங்களுடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கட்டுரைக்கு பொருத்தமானதாக இருக்கும்…

  “I know their game, explained the Ethiopian Emperor Tewodros II (1818 – 1868) s…hortly before he was defeated by a British invasion and committed suicide. First traders and missionaries, then ambassadors, then the cannon. It’s better to get straight to the cannon.”

 12. கிறிஸ்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்கான நேரம் இதுவே….சாதியை சொல்லி சொல்லியே ஆன்மாக்களை அறுவடை செய்துகொண்டிருக்கும் சபைகளுடன் நேரடி விவாதம் மற்றும் தொலைகாட்சிகளில் இந்து மதம் பற்றி தவறான விமர்சனங்களை கூறுபவர்கள் மீது சட்டநடவடிக்கைகள் என்பன மேற்கொள்ள பட வேண்டும்.உலக அழிவு பற்றி சரியான ஆதாரங்கள் இன்றி ஒரு புத்தகத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு மக்கள் மனதில் பீதி ஏற்படுத்தும் செயல் சட்டப்படி குற்றம் என்பது தமிழ் இந்து தள வாசகர்கள் அறிந்ததே..சபைகள்,கிறிஸ்தவ ஊடகங்கள் கிறிஸ்தவத்தில் காணப்படும் நல்ல விடயங்களை பற்றி பேசுவதும் மக்கள் நன்மைக்காக மேட்கொள்ளபடும் நடவடிக்கைகளும் வரவேற்க படுகின்றன.ஆயினும் இன்னொரு சமூகத்தின் தகுதி அறியாது அவர்களை பாவிகளே என கூறுவதும்,விக்கிரக வழிபாடுகள் அனைத்தும் அழிக்க பட்டு உலகமே தேவ ராச்சியத்தின் கீழ் வரும் எனவும் பிதற்றுவது அறியாமையின் உச்சமே அன்றி வேர் ஒன்றும் இல்லை.பாமியன் புத்த சிலை உடைப்பும் இந்த தேவ செயலின் ஒரு பகுதியே என்றும் பல்லூடகத்தில் தெரிவிக்கின்றனர்.அப்படி ஆயின் தலிபான் என்ன தேவ தூதர்களா???

  விஜய் டிவி சம்பவத்திற்கு எதிராக கொதித்து எழுந்த இந்திய அன்பர்கள் நான் குறிப்பிட்ட சம்பவத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்

  வெற்றிவேல்,
  கொழும்பு தமிழன்

 13. க்றைஸ்தவ மதத்தினர் ஆப்பரிக்க நாடுகளை எப்படி அடிமையாக்கினர் என்பதைத் தெளிவாக விளக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  \\\\League of Nations (அந்தக் காலத்து NATO போல) என்ற அமைப்பை\\\\ இன்றைய ஐக்ய நாடுகள் சபையின்(United Nations) முந்தைய அவதாரம் அல்லவா League of Nations.

 14. VIJAY TV EVERYDAY EVENING MUSIC PROGRAMME FOR SMALL CHILDREN KNOWN AS
  ‘AIRCELL KONDATAM ‘ SUDDENTLY CHANGED ITS COLOR – LAST MONTH ALL CHILDREN CAME FOR SINGING SONGS TO SHOW THE TALENTS IN THEIR TRADITIONAL DRESS WITH TILAK AND VIBUDHI ON THEIR FOREHEAD BESIDES WEARING THEIR KAPPU RED ROPE IN THEIR HEAD. SUDDENTLY THIS MONTH IN THE LAST ONE WEEK, ALL CHILDREN WHO COME FOR PARTICIPATION ARE COMPLELLED BY THE ORGANISERS TO WEAR PURE WHITE GOWN AS ANGEL DRESS, NO TILAK , NO VIBHUDI, NO RED KAPPU IN HAND AND COME WITH SHOES BY THEM FOR OBVIOUS REASONS TO PROLIFERATE AND INSTILL WESTERN CULTURE AND INCULTURATION DURING THIS MONTH OF CHRISTMAS . EACH AND EVERY PARENT HAS TO PAY THROUGH NOSE BIG MONEY TO BUY WHITE GOWN RAYON CLOTH
  AND CHANGE THEIR STYLE TO WESTERN CULTURE.

  PL TAKE UP STRONGLY WITH VIJAY TV BY HINDU MAKKAL KATCHI MR. ELANGOVAN OR MR. SAMPTH OR SOMEONE BY TELLING THEM TO STOP THIS NONSENSE.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *