முந்தைய பகுதிகள் :
சென்ற பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாதம் எவ்வாறு தலைதூக்கியது என்றும், மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு உதவிகரமாக சிமி எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையிலும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் நடந்த சில சம்பவங்கள் மூலம் பயங்கரவாதிகள் செயல்பட்டது பற்றிய விவரங்களை சிலவற்றை மட்டும் பார்க்கலாம். குறிப்பாக பூனாவில் ஜெர்மன் பேக்கரியில் நடத்திய குண்டுவெடிப்பு முக்கியமானதாகும். இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் முக்கிய காரணம் என தெரிந்தும், இந்திய அரசு பாகிஸ்தானை தனிமை படுத்த எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்ற ஆதங்கம் நாட்டு மக்களிடையே அதிக அளவில் இருந்தது என்பதையும் மறுக்க இயலாது.
புனேயில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடாந்து இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடர வேண்டுமா என்கின்ற கேள்வி எழுந்தது. நாட்டைச் சீர்குலைக்க பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திவரும் சூழ்நிலையில் இது அவசியமா என பல்வேறு தரப்பினர் கேள்வியை எழுப்பினார்கள். 1981-ஆம் ஆண்டு காலிஸ்தான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிக்க முன்வந்த போதும் இம்மாதிரியான கேள்விகள் எழுந்தன. இது போன்ற கேள்விகள் எழுவதற்கு முக்கியமான காரணங்கள் இருந்தன. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தூண்டுதலின் பேரில் லஷ்கர்-இ-தொய்பா தாக்குதலை நடத்துகிறது, இவர்களுக்கு உதவி புரிவதற்காகவே இந்தியாவில் சிமி இயக்கத்திற்கு முழு ஆதரவை பாகிஸ்தான் கொடுத்து வருகிறது என்ற உண்மை தெரிந்ததால் இந்த கேள்வி எழுகிறது.
இந்த நாட்டின் துரதிர்ஷ்டம் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தவுடனே, ஆளும் கட்சியினர் சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக குண்டுவெடிப்பின் காரணங்களைத் திசைதிருப்பக் கூடிய செயலும் நடைபெறுகின்றது. ஆனால் புனே குண்டு வெடிப்பு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்பாடுதான் என்று உள்துறை அமைச்சர் திரு ப.சிதம்பரம், மற்றும் அதிகாரிகளின் அறிக்கையும் கூட இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் என உறுதிப்படுத்த பட்டன. ஆனால், ஏன் ஜெர்மன் பேக்கரியில் மட்டும் குண்டு வைத்தார்கள்? அதுவும் நேஷனல் இன்வெஸ்டிகேட்டிவ் ஏஜென்ஸி துவக்கப்பட்ட போது இந்த தாக்குதல் நடந்துள்ளது, என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருனமாகும்.
புனே குண்டு வெடிப்பு சம்பந்தமாக சில கேள்விகள் எழுகின்றன. இந்த குண்டுவெடிப்பின் குற்றவாளிய லஷ்கர்-இ-தொய்பாவின் பொறுப்பாளர் பயங்கரவாதி ஹெட்லி மற்றும் அவனது கூட்டாளி ஹுசைன் ரானா ஆகியோரின் இந்திய பயனம் பற்றிய விசாரணை இன்னும் நடைபெறவில்லை. இதற்கான காரணங்கள் அமெரிக்காவின் மீது சுமத்தினாலும் இந்திய அரசு இது சம்பந்தமாக எவ்வித முழு முயற்சியும் எடுக்கவில்லை. புனேவில் உள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என ஹெட்லி கூறியதாக அமெரிக்காவின் உளவு நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் இஸ்ரோலியர்கள் அதிக அளவில் வந்து போகும் இடமான சத்பாத் ஹவுஸும் மேற்கத்தியர்கள் அதிக அளவில் வந்து போகும் ரஜ்னீஷ் ஆஸ்ரமும் ஜெர்மன் பேக்கரிக்கு அருகில் இருந்தும் அவை இரண்டும் தாக்கப்படவில்லை. இஸ்ரேலியர்களை குறி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட வேறு முக்கியமான நோக்கம் இருப்பதாக தெரிகிறது. இது பற்றிய முழு விவரங்களும் முறையான விசாரணை நடத்தப்படும் போது தெரியவரும். 2002ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது உத்திரப்பிரதேசம், ஜெய்பூர் பெங்களுர்,
அகமதாபாத், டெல்லி, மும்பை போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்கள் ஒரே நாளில் பல இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ஆனால் புனேவில் நடந்த தாக்குதல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இதற்குரிய காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தச் சதி திட்டத்திற்குப் பின்னால் ஒருவர் மட்டும் இருந்தாரா அல்லது இதற்கு பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டதா என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை எளிதில் மறக்க இயலாது. இந்த தாக்குதல் சம்பந்தமாக அமெரிக்காவில் ஹெட்லியும், ராணாவும் கைது செய்யப்பட்டதே ஒரு தனிக் கதையாகும். இந்தியாவில் நடந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு ஏன் வந்தது. இந்தக் கேள்விக்கு சரியான பதில், மும்பை தாக்குதலில் 166 பேர்கள் கொல்லப்பட்டார்கள், கொல்லப்பட்டவர்களில் அமெரிக்காவைச் சார்ந்தவர்கள் ஆறு பேர்கள். இறந்து போன ஆறு பேர்களுக்காக சிகாகோவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் காரணமாக சிகாகோ காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டார்கள்.
இந்தத் தீவிர விசாரணையில் 2009ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் டேவிட் கோல்மென் ஹெட்லியும் அவனது கூட்டாளியான தகாவ்வுர் ஹுசைன் ராணா என்பவனையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். கைது செய்யப்பட்டு தொடர் விசாரணையின் போது, இந்தியாவில் அல்கொயிதாவினர் இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ கொடுப்பதாகவும் தெரியவந்தது. அல்கொய்தா என்ற பயங்கரவாத அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்து செயல்பட்டவன் ஹெட்லி, பலசரக்குக் கடை நடத்தி வந்த ராணாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதின் விளைவாக ராணாவும் அல்கொய்தா இயக்கத்தின் மீது அதி தீவிர ஈடுபாடு கொண்டதால், இருவரும் சேர்ந்து அல்கொய்தாவில் பயிற்சி பெற்றார்கள்.
இவர்கள் இருவரும் மும்பை தாக்குதலுக்கு திட்டம் வகுத்தவர்கள் மட்டுமில்லாமல், டென்மார்க்கில் இருந்து வெளிவரும் ஒரு தினப்பத்திரிகை மத ரீதியிலான சர்ச்சைக்குரிய கார்ட்டூனை வெளியிட, அது உலகம் முழுவதும் கொந்தளிப்பானது. இதன் காரணமாக அந்தக் கேலிச்சித்திரத்தை வரைந்த பத்திரிக்கையைத் தாக்கிய சம்பவத்தில் இருவருக்கும் தொடர்ப்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்தத் தாக்குதலைப் போலவே லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு கொண்டு பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமாக விளங்கியவர்கள் என்பதும் இவர்களது விசாரணையில் ஒப்புக் கொள்ளப்பட்ட வாக்குமூலமாகும்.
இவர்களது வாக்குமூலத்தின்படி இந்தியாவை சுக்கு நூறாக உடைக்க வேண்டும் என்பதுதான் லஷ்கர்-இ-தொய்பாவின் அடிப்படை நோக்கமாகும். இந்த நோக்கம் பாகிஸ்தான் இந்தியாவின் மீது எந்த விதமான நோக்கத்தை கொண்டுள்ளதோ அதே நோக்கத்தை லஷ்கர் அமைப்பும் கொண்டுள்ளது. மும்பை குண்டு வெடிப்பிற்காக 32 பேர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும், இவர்களில் 13 பேர்கள் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையிடமான முரிக்கேயில் பயிற்சி பெற்றவர்கள் என்றும், இவர்களில் 16 பேர்களுக்கு ஜாகியுர் ரஹ்மான் ரகசிய ஆப்ரேஷனுக்காக தனியாகப் பயிற்சி கொடுத்தான் என இவர்களில் ஒருவனான கசாப் மும்பை போலீசிடம் தெரிவித்தான். மும்பை தாக்குதலுக்கு ஒருங்கிணைப்பு நடந்த இடம் பொது மக்களின் பார்வையிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் தலைநகரான முசாஃபராபாதின் ஷவாய் நாலா என்ற பகுதியாகும். இந்த பகுதி லஷ்கர்-இ-தொய்பாவின் ஆயுதக் கிடங்கு உள்ள பகுதியாகும்.
இந்தியாவில் அல்காயிதா
மும்பை குண்டு வெடிப்பிற்கு பின் இந்தியாவில் அல் காயிதா அமைப்பினர் இருப்பதாக தகவல்கள் வெளி வரத் தொடங்கின. ஆனால் 1993லிருந்து அல் காயிதாவுக்கு ஆதரவான இயக்கங்கள் காஷ்மீர் மாநிலத்தில் இருந்தன. அல் காயிதாவிற்கு ஆதரவான இயக்கங்களான ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, லஷ்கர், ஹர்கத்-உல்-முஜாஹிதின் போன்ற அமைப்புகள் காஷ்மீரில் ஊடுருவ பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு செயல்படுத்தியது. 2008 நவம்பர் மாதம் 26ந் தேதி மும்பையில் நடந்த தாக்குதல்களில் லஷ்கர்-இ-தொய்பாவின் நேரடி தொடர்ப்பு இருந்தாலும், இவர்களுக்கு முழு பயற்சி கொடுத்தது அல் காயிதா இயக்கத்தினர் என்பது கசாப்பின் விசாரணணயில் தெரியவந்தது. மும்பைத் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் அகமது சயீத் அல் காயிதாவின் பயிற்சியாளர் என்பது முக்கியமான செய்தியாகும்.
அல் காயிதாவின் முதல் உறுப்பினர் முகமது நியாய் (Mohammad Niaz) என்பவன். இவன் திருச்சியைச் சார்ந்த பொறியாளர். இவன் தனது 21வது வயதில் சிமி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவன். இவன் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள Charles de Caulle Airport ல் மே மாதம் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டான். இந்தத் தகவல்களை 24.5.2011ஆம் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வெளியிட்டார். 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஃபிரான்ஸ் அரசு தேடப்படும் பயங்கரவாதிகளாக 7 நபர்களை அறிவித்திருந்தது, அறிவித்த ஏழு பேர்களில் முகமது நியாய் ஒருவன். ஹர்கத்-உல்-முஜாஹ_தின் மற்றும் பங்களாதேஷ் நாட்டிலிருந்து செயல்படும் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஆகிய இரண்டு அமைப்புகளும் அல் ஜிகாத் என்ற பெயரில் தனியாக இயங்கின. இந்த இயக்கத்தைத் துவக்கியவர்கள் அல் காயிதாவினர் என்பது முக்கியமானதாகும். இந்த இயக்கத்தின் திட்டமானது Jihad against the Crusaders என்பதாகும், இது பின்லேடனின் முக்கிய நோக்கமாகும். 1999இல் இன்டர்நேஷனல் இஸ்லாமிக் ஃபரண்ட் என்ற அமைப்பில் ஹுஜி மற்றும் லஷ்கர் அமைப்பும் இணைந்தது. ஆகவே இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களும் ஏதேனும் ஒரு வழியில் அல் காயிதாவுடன் தொடர்பு கொண்டு செயல்படுகின்றன.
புனா தாக்குதல் நடந்து சில நாட்கள் கழிந்த பின் அல் காயிதாவின் முக்கிய கமாண்டரான இலியாஸ் காஷ்மீரி என்பவன் விடுத்த செய்தி முக்கியமானதாகும். மீடியாவிற்கு கொடுத்த செய்தியில் காஷ்மீர் மாநிலத்தில் 313 பிரிகேட்கள் அல் காயிதாவின் பிரிவுகளாக செயல்படுகின்றன, இந்திய ராணுவம் காஷ்மீரிலிருந்து வெளியேறவில்லை எனில் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் தொடரும் என செய்தி கொடுக்கப்பட்டது. இதற்காக டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காகவே உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக 2010இல் இந்தியாவில் நடக்கும் உலக ஹாக்கி போட்டி, இந்தியன் பிரிமியர் லீக் விளையாட்டு போட்டி, காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் எவரும் கலந்து கொள்ள கூடாது, மீறிக் கலந்து கொண்டால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்பது போல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ( “ We warn the international community not to send their people to the 2010 Hockey World Cup, the Indian Premier League and Commonwealth Games – to be held inNew Delhilater this year. Nor should their people visitIndia-if they do, they will be responsible for the consequences.”) புனோ குண்டு வெடிப்பிற்கு பின் இந்திய அரசானது, இந்தக் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் ஜமாத்-உத்-தவா என்ற அமைப்பும் லஷ்கர்-இ-தொய்பாவும் கூட்டு சதி செய்தது, இவர்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது அல் காயிதா என்ற இயக்கம் என தனது அறிக்கையில் வெளியிட்டார்கள்.
2010ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிமித்த காஷ்மீர் பகுதியில் காஷ்மீர் ஒற்றுமை தினம் (Kashmir Solidarity Day) கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாடத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியது: “அல்காயிதா, லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தவா ஆகிய மூன்றும் இணைந்துதான் இந்தியாவில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டன.”
இதற்கு வலு சேர்க்கும் விதமாக பின்லேடனின் இயக்கமான அல்காயிதாவில் வெளிநாடுகளில் நடத்தும் தாக்குதலுக்கு என தனியாக ஒரு அமைப்பு உள்ளது, அதற்கு இன்டர்நேஷனல் இஸ்லாமிக் ஃப்ரண்ட் எனப் பெயர்; இந்த அமைப்பில் நான்கு முக்கியப் பிரிவுகள் உள்ளன; அவை ஹர்கத்-உல்-முஜாஹ_தின், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஜெய்ஜி முகமது, லஷ்கர்-இ-தொய்பா என நான்கு பிரிவுகள் உள்ளது. இந்த பிரிவுகள் அனைத்தும் ஜம்மு காஷ்மீர் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.
மும்பை தாக்குதல்களில் பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள் அதிக அளவில் தாக்குதல்களில் ஈடுபட்டார்கள். பிடிப்பட்ட அஜ்மல் அமிர் கசாப் பாகிஸ்தானின் ஒகாரா என்ற ஊரைச் சார்ந்தவன். தாஜ் ஹோட்டலைத் தாக்கியவர்கள் அப்துல் ரஹ்மான் முல்தான் மாவட்டத்துக்காரன், ஒகாரவைச் சேர்ந்தவன் அபு அலி என்பவன், அபு சோயிப் பாகிஸ்தானின் சியால்கோட்டைச் சார்ந்தவன், அபு உமர் ஃபைஸாலாபாத்தைச் சேர்ந்தவன். தூஸ் ஹோட்டலை தாக்கியவர்கள் பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள் என்றால் ட்ரைடன்டை தாக்கியவர்களும் நரிமன் ஹவுஸை தாக்கியவர்களும் பாகிஸ்தானை சார்ந்தவர்கள். ஆகவே அல்காயிதாவின் திட்டமான அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் ஆதரவான நாடுகளை தாக்குவது என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை தாக்குகின்ற காரியங்களை செய்து வருகிறார்கள்.
பயங்கரவாதச் செயல்கள் செய்வதற்கு ஆட்களைத் தேர்வுசெய்வதில் கூட இவர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் வித்தியாசமானவையாகும். பாகிஸ்தான் முழுவதும் இவர்களுக்கு அலுவலங்கள் உள்ளன. பஞ்சாபில் உள்ள ஜமாத் உத் தவா என்கிற அமைப்பின் அலுவலங்கள் மூலமாகவே ஆட்கள் எடுக்கப்படுகிறார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களை பைதுல் முஜாகிதீனுக்கு அனுப்பப்பட்டு அங்கே அவர்களுக்கு அடையான அட்டை தரப்படுகிறது. இந்த அடையான அட்டையின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் குடும்பங்களை ஐ.எஸ்.ஐ மற்றும் லஷ்கர் மூலமாக கண்காணிக்கப்படுகிறார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உம்மல்குரா எனும் அடர்ந்த காட்டுப்பகுதியில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கு முழுப் பயிற்சி என முக்கியமான ஏழு விதமான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளைக் கொடுப்பதற்காகவே பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முக்கியமான நம்பகமான ராணுவ அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்தப் பயிற்சியில் ஆயுதங்கள் கையாள்வது, சுடுவது, உளவு மற்றும் தொடர்பு பற்றிய நுட்பமான பாடங்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியுடன் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் இடத்தின் அமைப்புகள் மற்றும் அங்குள்ளவர்களின் மனநிலையைக் கூட பாடமாக போதிக்கிறார்கள்.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆட்கள் கிடைத்தவுடன் அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதில் கூட அல் காயிதாவின் போதனைகள் அதிக அளவில் உள்ளன. ஜிகாதிகளுக்கு மூளைச்சலவை செய்வதற்காகவே காஷ்மீர் ஜல் ரஹா ஹை என்ற பிரசாரப்படம் காண்பிக்கப்படுகிறது; அதாவது காஷ்மீர் எரிந்து கொண்டிருக்கிறது என்ற படமாகும். இந்த பிரசாரப்படத்தைப் போலவே காஷ்மீரில் கொல்லப்படும் வீரர்களைப் போற்றிப் பாடுவது, இதன் மூலம் காஷ்மீர் பகுதியிலிருந்து தங்களின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு வருபவர்களின் மனநிலையை அதிகரிப்பதும் இந்த திட்டத்தின் ஒரு அம்சமாகும்.
இவர்களுக்கு ஏழுவிதமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டாலும், ஐந்து வகைப் பயிற்சிகள் முக்கியமாக இந்த பயங்கரவாத ஜிகாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தௌர்-இ-ஆம் இந்த பயிற்சி 21 நாட்கள் அடிப்படை பயிற்சியாகும், இதில் ஏகே.47 ரக துப்பாக்கி, 9 எம்.எம்.கைத் துப்பாக்கி இலகு ரக எந்திரத் துப்பாக்கி, கையெறி குண்டு கையாளுதல் போன்ற பயிற்சிகள் சொல்லித் தரப்படும். தௌர்-இ-காஸ் என்பது இரண்டாவது பயிற்சியாகும். இது மூன்று மாத சிறப்பப் பயிற்சி. துப்பாக்கிகளைக் கழற்றி மாட்டுதல், வரைபடங்கள், ஜி.பஜ.எஸ் பயன்படுத்துதல், கொரில்லா தாக்குதல் கற்றுத் தரப்படும், அதிரடித் தாக்குதல்கள், பதுங்கி நடத்தும் தாக்குதல், எவ்வாறு ஒளிந்து கொள்வது, உயிர் பிழைத்திருப்பது என்பது பற்றி கற்றுத் தரப்படும். மூன்றாவது பயிற்சியின் பெயர் பைதுல் ரிஸ்வான் என்பது, இது நதிகளைக் கடக்கவும், வெடிகுண்டுகளைக் கையாளவும் கற்றுத் தரப்படுகிறது. நான்காவது பயிற்சியின் பெயர் தௌர்-இ-ரிபாத் என்பதாகும். இந்த நான்காவது பயிற்சியில் பிரசாரம், உளவு சேகரிப்பு, ஏஜென்டுகளைக் கையாளுதல், சதித் திட்டங்களைக் கையாளுதல் முதலிய துறைகளின் நுணக்கங்களைக் கொண்ட உளவுப் பயிற்சியாகும். இறுதியான ஐந்தாவது பயிற்சியின் பெயர் ஃபிதாயீன் பயிற்சி. அதாவது 200 தன்னார்வல்களில் ஒருவன் மட்டும் தற்கொலைப் படையில் சேர முன்வருகிறான். மன உறுதி, உடல் உறுதியை ஏற்படுத்த அவனுக்கு பல்வேறு பயிற்சிப் பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
ஆகவே பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு தேர்வு செய்யப்படும் ஆட்களுக்கு முக்கியமான ஐந்து பயிற்சிகள் கட்டாயமாகக் கொடுக்கப்படுகிறது. 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி மும்பை குண்டுவெடிப்பு நடந்த அதே காலகட்டத்தில் அமெரிக்காவில் திரவ எரி பொருள் கொண்டு குண்டு வீசி 10 விமானங்கள் நாசம் செய்யப்பட்டன. இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பு லஷ்கர்-இ-தொய்பாவாகும் என்பது விசாரனையில் தெரியவந்தது. இந்த விசாரணையில் செய்தி வெளிவந்தவுடன், பல்வேறு தரப்பிலிருந்து லஷ்கர்-இ-தொய்வாவிற்கும் அல்காயிதாவிற்கும் உள்ள தொடர்பு பற்றி கேள்விகளும், விசாரணணகளும் அதிக அளவில் எழத் துவங்கின.
ஓசாமா பின்லோடன் ஒரே சமயத்தில் இரண்டுவிதமான பொறுப்புகளை வகித்து வந்தார். இதற்காக இஸ்லாமிய மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து விதமான இஸ்லாமிய இயக்கங்களை ஒருங்கிணைத்து இண்டர்நேஷனல் இஸ்லாமிக் ஃப்ராண்ட் என்ற அமைப்பும், இந்த அமைப்பின் கீழ் உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும் உள்ளடக்கியது, இதன் தலைவர் ஒசாமம பின்லோடன், இதைப் போலவே அல்காயிதா இயக்கதின் தலைவரும் இவரே, என இரண்டு தலைமை பதவிகளையும் தன்னகத்தே வைத்திருந்தார்.
உண்மையில் அல் காயிதா இயக்கத்திற்கு இந்திய இஸ்லாமியர்கள் அதிக அளவில் தங்களை இணைத்துக் கொண்டார்களா என்பதை பற்றிய ஆய்வு செய்த போது, இன்னும் பல தகவல்கள் கிடைத்தன. 1980இல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போதே, இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் தீவிரமயமாதல் என்ற எண்ணம் தலைதூக்கத் துவங்கிவிட்டது. ஜம்மு-காஷ்மீர் பகுதியிலிருந்து இஸ்லாமிய இளைஞர்களில் சில குழுக்கள் எல்லைக் கோட்டை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்றனர். பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ மூலம் பயங்கரவாதப் பயிற்சி பெற்றவர்களில் சிலர் மேலும் பயிற்சி பெறுவதற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கான் முஜாஹிதீனிடம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மூலம் அனுப்பிவைக்கப் பட்டார்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள உளவுத் துறையான முர்யுனு இந்த செயல்பாடுகளைக் கண்டுபிடித்தது. இந்த விஷயம் ஆப்கான் நாட்டின் குடியரசுத் தலைவர் நஜ்ஜிபுல்லா மூலம் ராஜீவ் காந்திக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த போதே காஷ்மீர் மாநிலத்திற்கு வெளியிலிருந்து அதாவது கேரளத்திலிருந்து சிமி இயக்கத்தின் பொறுப்பாளரான பஷீர் கள்ளத்தனமாக பாகிஸ்தான் சென்று ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவரான காஸி ஹுசைன் அகமது (Qazi Hussain Ahmed) என்பவனைச் சந்தித்தான். மேலும் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பின் பயிற்சி முகாமில் கலந்து பயிற்சி பெற்றான்; இவனுக்குப் பயிற்சி கொடுத்தவர் சூடான் நாட்டைச் சார்ந்தவர். இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட போது ஐ.எஸ்.ஐ, மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பினர் இந்தியாவில் காஷ்மீரில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் பஞ்சாபில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும் சிமி அமைப்பினர் உதவி புரிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தத் தகவல்கள் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சிமி அமைப்பினரைக் கைது செய்து விசாரித்த போது தெரியவந்தது. மறைமுகமாக சிமி இயக்கத்தினர் பாகிஸ்தான் சென்று பயிற்சி எடுத்த விவரம் கூட இந்தியாவில் உள்ள உளவு அமைப்புகளுக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாகும். 1992இல் உத்திரபிரதேசத்திலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளியைக் கைதுசெய்து விசாரித்த போது தெரியவந்த செய்தியாகும். இந்த விசாரனையில் ஜலாலுதீன் என்பவருடன் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பின் முக்கிய பொறுப்பாளரும் சேர்ந்து கள்ளத்தனமாக உத்திர பிரதேசத்தில் உள்ள சிமி இயக்க பொறுப்பாளர்களுடன் வருங்கால திட்டங்கள் பற்றிய விவாதம் நடைபெற்றது.
1993ஆம் ஆண்டிலிருந்தே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யின் துணையுடன் உருவாக்கப்பட்ட பயங்கரவாத ஜிகாதிகள் இந்தியாவில் ஊடுருவத் துவங்கினார்கள். முதலில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஊடுருவினாலும், பின்னர் நாடு முழுவதும் ஊடுருவினார்கள். இவ்வாறு ஊடுருவிய ஜிகாதிகளுக்கு மூன்றுவிதமான கட்டளைகளை ஐ.எஸ்.ஐ அல்காயிதாவின் ஆலோசனையின் படி வழங்கியது. காஷ்மீர் அஜென்டா அதாவது காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானுடன் இணைப்பது, இரண்டாவது இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பகையை மூட்டி வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் மூலம் மேலும் இரண்டு சுதந்திர இஸ்லாமிய நாடுகளை உருவாக்க வேண்டும்; இத்திட்டத்திற்கு இந்திய அஜென்டா எனப் பெயரிட்டார்கள். மூன்றாவது, இதன் மூலம் இன்டர்நேஷனல் இஸ்லாமிக் கலிப்பா என்ற திட்டத்தைச் செயல்படுத்துவது. ஆகவே ஐ.எஸ்.ஐ இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு தெளிவாக தங்களது திட்டங்களை வெளிப்படுத்தியது .
அல்காயிதாவின் அடிப்படைச் சித்தாந்தங்களை செயல்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இந்த திட்டத்திற்காக முதலில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் நேரடியாக இதில் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த இஸ்லாமியர்கள்- அதாவது அரபு நாடுகளில் பணியின் நிமித்தமாகச் சென்றவர்கள், இத்திட்டத்திற்கு இசைந்து, இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டை எடுத்து கூறியே இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள்.
இதற்காகவே லஷ்கர்-இ-தொய்பாவின் கிளைகளை துபாய், சௌதி அரேபியாவிலும், ஹுஜியை துபாயிலும் துவக்கப்பட்டது. இந்த கிளைகளின் முக்கிய நோக்கமே இந்திய முஸ்லிம்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இந்தியாவிற்கு எதிரான மனோபாவத்தை உருவாக்குவது என்பதாகும்.
(அரசுகள் உறங்கும் வரை …தொடரும் )
எல்லா மதங்களையும் சமமாய் கருத வேண்டும், அதைவிடுத்து தன்னுடைய மதம் தான் பெரியது என கருதக்கூடாது.