சுதேசி விழிப்புணர்வு இயக்கத்திலிருந்து நமக்கு வந்த செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த இயக்கத்தைச் சேர்ந்த இராம. நம்பி நாராயணன் அவர்கள் இது தொடர்பாக அளித்த நேர்காணல் இங்கே.
*******
அன்புக்குரிய தேசபக்தர்களுக்கு,
இனிய வணக்கங்கள்.
சுதேசி விழிப்புணர்வு இயக்கம், இந்திய நாட்டை உலக அரங்கில் உன்னத நிலைக்கு இட்டுச் செல்லும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஓர் அகில பாரத அமைப்பு என்பதை அறிவீர்கள்.
கடந்த சில மாதங்களாக, மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவை நாம் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை இழக்கும் வகையிலும், நமது அடிப்படை வாழ்வாதரங்களை அந்நிய நிறுவனங்களுக்கும், அரசுகளுக்கும் தாரை வார்க்கும் வகையிலும் இருந்து வருகின்றன என்பது கண்கூடு. இந்த பிரசினையை மையப் படுத்தி சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பாக ஒரு விழிப்புணர்வு பாத யாத்திரை மேற்கொள்ளப் படுகிறது.
மூன்று முக்கிய குறிக்கோள்களைக் கொண்டதாக யாத்திரை அமையும்.
1) சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய மூதலீடு என்ற ஆபத்திலிருந்து நமது வர்த்தகத்தக் காப்பாற்ற..
2) முழுமையாக அந்நியரின் கைகளுக்குள் சென்று கொண்டிருக்கும் நமது விவசாயத்தை மீட்டெடுக்க…
3) வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்திய கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவர…
சுதேசி விழிப்புணர்வு இயக்கம்- பாத யாத்திரை ஏன்?
– சேக்கிழான் கட்டுரை
இந்த சுதேசி விழிப்புணர்வு யாத்திரை மார்ச், 5, 2012 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம் வழியாக ஏப்ரல், 5, 2012 அன்று சென்னையை வந்தடையும். விரிவான விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
யாத்திரை நோக்கத்தின் முக்கியத்துவம் கருதி, அந்தந்தப் பகுதிகளில் உள்ள தேசபக்தர்க அன்பர்கள், விவசாயிகள் வர்த்தகர்கள் சிறு உற்பத்தியாளர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரை அழைத்து கொண்டு வந்து, அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
யாத்திரை வழித்தட விவரம்
தேதி |
தொடக்கம் |
நிறைவு |
கிலோமீட்டர் |
பொதுக்கூட்டம் / இரவு தங்கல் |
05.03.12 |
கோயம்புத்தூர் |
நகரினுள் |
20 |
1 |
06.03.12 |
கோயம்புத்தூர் |
சூலூர் |
23 |
|
07.03.12 |
சூலூர் |
பல்லடம் |
21 |
|
08.03.12 |
பல்லடம் |
திருப்பூர் |
17 |
2 |
09.03.12 |
திருப்பூர் |
நகரினுள் |
20 |
|
10.03.12 |
மக்கள் கருத்துக் கேட்பு, காரில் பெருந்துறை பயணம் (101 கி.மீ) |
|||
11.03.12 |
பெருந்துறை |
ஈரோடு |
18 |
|
12.03.12 |
ஈரோடு |
நகரினுள் |
20 |
3 |
13.03.12 |
ஈரோடு |
திருச்செங்கோடு |
21 |
அட்டயம்பட்டி பயணம் காரில் |
14.03.12 |
அட்டயம்பட்டி |
சேலம் |
22 |
|
15.03.12 |
சேலம் |
நகரினுள் |
20 |
4 (ராசிபுரம் பயணம் காரில்) |
16.03.12 |
ராசிபுரம் |
நாமக்கல் |
32 (கார் & பாதயாத்திரை) |
|
17.03.12 |
நாமக்கல் |
பரமாத்தி |
18 |
|
18.03.12 |
பரமாத்தி |
கரூர் |
32 (கார் & பாதயாத்திரை) |
|
19.03.12 |
கரூர் |
நகரினுள் |
20 |
|
20.03.12 |
கரூர் |
குளித்தலை |
40 (கார் & பாதயாத்திரை) |
|
21.03.12 |
குளித்தலை |
திருபராய்த்துறை |
20 |
|
22.03.12 |
மக்கள் கருத்துக் கேட்பு, திருச்சி பயணம் (10 கி.மீ) |
|||
23.03.12 |
திருச்சி |
நகரினுள் |
20 |
5 (விழுப்புரம் பயணம் காரில்) |
24.03.12 |
விழுப்புரம் |
திருக்கோவிலூர் |
39 (கார் & பாதயாத்திரை) |
|
25.03.12 |
திருக்கோவிலூர் |
திருவண்ணாமலை |
36 (கார் & பாதயாத்திரை) |
|
26.03.12 |
திருவண்ணாமலை |
போளூர் |
35 (கார் & பாதயாத்திரை) |
|
27.03.12 |
போளூர் |
ஆரணி |
25 |
|
28.03.12 |
ஆரணி |
வேலூர் |
25 |
6 |
29.03.12 |
வேலூர் |
ராணிப்பேட்டை |
25 |
காஞ்சிபுரம் பயணம் காரில் |
30.03.12 |
காஞ்சிபுரம் |
நகரினுள் |
20 |
7 |
31.03.12 |
மக்கள் கருத்துக் கேட்பு, ஸ்ரீபெரும்புதூர் பயணம் (33 கி.மீ) |
|||
01.04.12 |
ஸ்ரீபெரும்புதூர் |
பூந்தமல்லி |
24 |
|
02.04.12 |
பூந்தமல்லி |
தாம்பரம் |
19 |
8 |
03.04.12 |
மக்கள் கருத்துக் கேட்பு, சென்னை பயணம் (20 கி.மீ) |
|||
04.04.12 |
சென்னை |
நகரினுள் |
20 |
|
05.04.12 |
சென்னை |
நிறைவு விழா |
oru vellai Tirunelveli, Kanyakumari, Madurai, Theni, Virdhu Nagar ellam vara nada?? or nanga vethasi ya?
why Coimbatore ill irunthu yatheerai start?
ராஜேஷ்…
உங்கள் பகுதிக்கும் யாத்திரையை வரச் சொல்வதற்கு இதுவல்லவே நல்ல வழி..!