தமிழில் சிறந்த படங்கள் அதிகமாக வருவதில்லை. ஒரு சில படங்களை நல்ல படங்கள் என்று சொன்னாலும் அவை நல்ல முறையில் வருவதில்லை. அந்தப் படங்களுக்கு மார்க்கெட் இருப்பதில்லை. வந்த வேகம் தெரியாமல் தியேட்டர்களை விட்டு வெளியேறி விடுகின்றன. நல்ல கதையமைப்பு, சிறந்த நடிப்பு, பெரிய நடிகர்கள் கொண்ட படங்கள் குறைவே. அந்த குறையைத் தீர்த்து வைக்கிறது அக்டோபர் 12-ஆம் தேதி வெளியான ‘மாற்றான்’ திரைப்படம்.
மரபணு விஞ்ஞானியான ராமச்சந்திரனுக்கு விமலும், அகிலனும் (இரட்டை வேடம்) ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். தனக்கு இயற்கையாகப் பிறக்கும் குழந்தைகளைக்கூட மரபணு முறையிலேயே பெறத் துடிக்கும் மரபணு வெறியர். மரபணு முறைகளைத் தெரிந்துகொண்டு சென்னையில் குழந்தைகளுக்கான பவுடரைத் தயாரிக்கும் வியாபாரம் செய்கிறார் ராமச்சந்திரன். ரஷ்ய நாட்டுப் பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவரது தொழிற்சாலையைப் பற்றிய உண்மைகளை சேகரிக்கிறார். அந்தப் பெண் இறக்கும் நேரத்தில் தனது தந்தையின் அநியாயங்களைப் பற்றித் தெரிந்துகொள்கிறான் விமல். அந்தப் பத்திரிகையாளர் சேகரித்த விபரங்கள் விமலின் கையில் சிக்குகின்றன. விபரங்களைப் பிடுங்கும்போது விமலும் பலியாகிறான். தன்னுடன் ஒட்டிப் பிறந்தவன் பலியான அதிர்ச்சியில் அகிலன் உறைந்துபோகிறான். தனது சகோதரனின் மரணத்திற்குத் தனது தந்தைதான் காரணம் என்பதைக் கண்டறிகிறான். தந்தை தயாரிக்கும் மரபணு பால் பவுடரின் மூலம் முன்னாள் சோவியத் நாடான உக்ரைனில் இருப்பதை அறிகிறான். தனது காதலியுடன் ரஷ்யாவுக்குச் செல்கிறான். மரபணு பால் பவுடரின் ரகசியத்தைக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்து எப்படி அகிலன் நாட்டைக் காப்பாற்றுகிறான் என்பதுதான் மீதிக்கதை. நமது நாட்டில் மரபணு விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நகரத்து மக்களிடம் இல்லை. அதை ஏதோ கிராமத்து மக்களின் வெற்றுக் கூச்சல் என்று நினைக்கிறார்கள். அது தவறு என்பதை இந்தப் படம் கோடிட்டுக் காட்டுகிறது. மரபணுத் தொழிற்சாலை அமைந்தால் மாடுகளின் நிலை என்ன என்பதையும் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு என்று ஓவர் டோஸில் போய்கொண்டிருக்கும் மத்திய அரசு, அடுத்தது மரபணு விவசாயத்தையும் ’ஒரு கை’ பார்க்கும் தீராத வெறியில் இருக்கிறது. சரியான நேரத்தில் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. இனிமேலாவது விழித்துக் கொள்ளட்டும்.
இந்தப் படத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொரு சிறப்பம்சமும் இருக்கிறது. சென்ற தலைமுறை காலத்தில் அமெரிக்காவுக்கு எதிரான வலுவான சக்தியாக ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா இருந்தது. தாங்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றியடைவதற்காக உலகிலுள்ள அயோக்கியத்தனங்கள் அனைத்திலும் ஈடுபட்டது. அந்தத் தகிடுதத்தங்களின் மூலம் கிடைத்த வெற்றிகளைக் காண்பித்துதான் நம்மூர் லெனின்களும் ஸ்டாலின்களும் ஓலமிடுகிறார்கள். 1990-களில் சோவியத் யூனியன் சின்னாபின்னமான பிறகுதான் கம்யூனிஸ்டுகளின் அநியாயங்கள் சோவியத்தின் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களால் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. கம்யூனிஸ்ட்டுகளின் மர்ம முடிச்சுகள் இந்தப் படத்திலும் அவிழ்க்கப்பட்டுள்ளன.
தனது முயற்சியில் கதாநாயகன் சூர்யா வெற்றியடையும்போது தங்களுடைய விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்தை உட்கொண்டுதான் போட்டிகளில் வெற்றியடைந்தார்கள் என்பதை சொன்னால் தங்கள் நாட்டின் மரியாதை உலக அரங்கில் சீர்குலையும் என்று உக்ரைன் நாட்டு உயரதிகாரி கெஞ்சும் காட்சியில் கம்யூனிசத்தின் நிலை அந்தோ பரிதாபம்!. தைரியமாகப் படம் எடுத்து கம்யூனிஸ்ட்டுகளின் அக்கிரமங்களை வெளிப்படுத்திய இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு வாழ்த்துகள். இயக்குநரை பல இடதுசாரிகள் வலைத்தளங்களில் திட்டி வருகிறார்கள். திருடனுக்குத் தேள் கொட்டினால் வியர்க்கத்தானே செய்யும்?.
பாரதத்தின் கலைகளை சீனாவுக்குக் கொண்டுசென்ற போதிதர்மரைப் பற்றிய ‘ஏழாவது அறிவு’ படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படிப்பட்ட படங்களை அவர் தேர்ந்தெடுத்து நடிக்கிறாரா? அல்லது இயற்கையாகவே அவரை வாய்ப்புகள் தேடி வருகின்றனவா?. எப்படியிருந்தாலும் அவருக்குப் பாராட்டுக்கள்.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ’கால் முளைத்த பூவே’ மட்டுமே சொல்லும்படியாக இருக்கிறது. கம்யூனிஸத் தொழிற்சங்கத் தலைவர்களின் உண்மை சொரூபம் என்ன என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களைச் சரியாக நடித்திருக்கிறார்கள்.
நாயகனை விவேகானந்தர், டெண்டுல்கர் ஆகியோரின் மரபணு மூலமாகப் பெற்றெடுப்பது, நாட்டின் உயரதிகாரிகள், விஞ்ஞானிகளாலேயே முடியாததை நாயகன் தனியாக இருந்து சாதிப்பது, நினைத்தவுடன் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இருக்கும் குஜராத்திற்குச் சென்று வில்லனைப் பிடிப்பது போன்ற அபந்தங்களையும் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மக்களின் மனதில் மாற்றத்தை ‘மாற்றான்’ வழியாகவும் கொண்டுவர முடியுமே!
நல்ல விமர்சனம். நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. ஏற்கனவே கோ படத்தில் எப்படி கம்யூனிஸ்டுகள் எங்கும் ஊடுருவிவிடுவார்கள் என்பதை இயக்குனர் கே.வி.ஆனந்த் கோடிட்டுக் காட்டியிருப்பார். இந்தப் படத்தில் இன்னும் வெளிப்படையாகச் சொல்லியிருப்பார் போல. அவசியப் பார்க்க வேண்டும். உங்கள் விமர்சனம் அப்படி என்னைத் தூண்டுகிறது.
விநோதமான விமர்சனம்.
படம் படு குப்பை.
பணம் விரயமாக்கப்பட்டிருக்கிறது.
படு மொக்கையான படம்! தயவு செய்து தியேட்டருக்கு போய் காச வேஸ்ட் பண்ணிடாதீங்க. சூர்யாவின் திறமை வீணடிக்கப்படுகிறது 🙁
தண்டகர்மாந்திரமான படம். இந்த படத்துக்கு விமர்சனம் செய்வதே வேண்டாத வேலை, இதுல தமிழ் ஹிந்துவில் எதற்கு இந்த விமர்சனம்.
திரு பாலாஜி தண்டம் என்று சொல்வது அவசியம் இந்தப்படத்தைப்பார்க்கத்தூண்டுகிறது. உலகத்தில் இருக்கிற உயிர் பன்மையை அழித்துவிடக்கூடிய அபாயத்தை சுட்டிக்காட்டினால் பாலாஜி போன்ற நவீன தொழில் நுட்பங்களின் மீது அபார நம்பிக்கை அமெரிக்காவின் காருண்யத்தின் மீது அதீத விஸ்வாசம் கொண்டவர்களுக்கு கோபம் வருவது இயல்புதான். ஆயிரம் ஆண்டுகள் நம் முன்னோர்கள் காப்பாற்றிவைத்த விதைகளை அழித்து தங்கள் நாசாகார விதைகள் இடுபொருள்களை விற்பதற்கு பன்னாட்டுக்கம்பெனிகள் முயல்கின்றன. அறிவோடு உணர்வுடையோர் இந்த சூழ்ச்சியை உணர்வதற்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதை அறிந்து போற்றுகிறேன். பாரத நாடு அதன் சுதந்திரத்தைக்காக்கவேண்டுமானால் அதன் பாரம்பரியம் ஆன்மிகத்திலும் தத்துவத்திலும் மட்டுமன்றி அறிவியல்,தொழில் நுட்பம்,வேளாண்மையிலும், மருத்துவத்திலும் போற்றிப் பாதுக்காக்கப்படவேண்டும். இது ஒன்றும் இடதுசாரிகளுக்குமட்டும் எழுதிவைக்கப்பட்ட சாசணம் அன்று. வந்தேமாதரம். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
சிவஸ்ரீ.
k v anand ஒரு krishthava verian avan padathil villankalellam hinduvaha irupparkal
intha padathilum ” avanudaya alleluya ” krishthava matha pricharam varum
narendra modiyai kevalapaduthi irupparkal ” surendra lodi ” endru
k.v. anand udaya pettikalai youtube ill kekungal avan ovvoru muraum jesus alathan ippdi valanthiruken
jesus ennoda irukaru appdi ipddinu petti kuduppan
avan kuduthuttu pottum thappillae aana hindukala kevala paduthra mathri ‘ko’ padathila kuda niraya dialogues varum.
k.v anand hindus ah mattum pidikathavan illa indians ayum pidikathavan nu ninaikren athan america sarpave padam edukran
india yukku unmailae help panra naadu russia than ippdi padma eduthu russian language russians patha india russia uravu keda kooda chance irukku
avan padakaluli
ayan :
das( christian ) nallavan
settu payyan ( koduramana villan nethila viboothiyoda iruppan ) avan kettaven
ko:
hindukal thiviravathi nu katrathu kandiye naxalities ah kamichu hindu pera solli thiviravthingrathu
athula bathroom kulla vachu kovila pathi kindala pesura mathri scene
matran:
itha solla ve venam
rama chandran villan
narendra modi intha mathri viyaparikalukku help panravaru
‘heroine christian pastor”
ivanuku vakkalathu vanka intha pravin kumar sir
karumam
திரைப்பட விமர்சனம், தனிப்பட்ட விருப்பு வெறுப்பை பொறுத்தது. ஆனால் அதில் முன்வைக்கப்படும் கருத்துகளைக் குறித்து எழுதுவது வேறு விஷயம்.
நான் பாட்டுக்கு பேசாமல்தான் இருந்தேன். திரு.சிவஸ்ரீ.விபூதிபூஷன் என்னை உரண்டை இழுக்கிறார். மறுமொழி இட்ட பாலாஜி வேறு, அமேரிக்க ஆதரவு,
பணக்கார ஆதரவு, கார்பொரேட் நிறுவனங்களுக்கு ஆதரவு, நவீன
தொழில்நுட்பத்திற்கு ஆதரவு;மொத்தமாக நவீன நாகரீக வாழ்க்கைக்கு ஆதரவு
என்று முடிந்தவரை சாம்பிராணி போடும் இந்த ஆர். பாலாஜி வேறு.
சரி பரவாயில்லை. பெயர் ஒன்றாயிருந்ததால் அவரின் என்மீதான விமர்சனத்தை
நான் என் சித்தாந்தத்திற்கு கிடைத்த பரிசாகவே ஏற்கிறேன்.
“அந்த பாலாஜி! ஐயோ பாவம்!”
இத்திரைப்படத்தைப் பொறுத்தவரை மருத்துவத்துறை மற்றும் அதன் முதுகெலும்பான மருந்துத்துறை (Pharmateutical Industry) பற்றி சிறிது கூட புரிதல்
இல்லாமல், பணக்கார பன்னாட்டு கார்பொரேட் பெருநிறுவனங்களை இழிவு
படுத்தி, அனைத்து மருந்து கம்பெனிகளும் ஒன்றாம் நம்பர் அயோக்கிய கூடாரம்
என்ற ரீதியில் இன்று ஊடகங்களில் வெளியாகும் பிரச்சாரத்தின் அடிப்படையில்
உருவாக்கப்பட்ட படமிது.
கடைசி காட்சியில் ஒரு வசனம் வருகிறது. “கோடிக்கணக்கான குழந்தைகளை
பாதுகாக்கும் என் மருந்தினால் சில இலட்சம் குழந்தைகள் மாண்டு போனால்தான்
என்ன?” இது போன்று Clinical Study என்ற முறைமையை குறித்து லவநேசமும்
புரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில், குருட்டாம் போக்கில், வெறுப்பை
உமிழ்ந்து விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறார்களா?
மனிதன் உள்ளவரை பேராசையும், சுயநலமும் இருக்கும். அதுவரை தவறுகள்
நிகழத்தான் செய்யும். அதற்காக, சில நிறுவனங்கள் சிலமுறை தவறு செய்கின்றன
என்பது உண்மை என்றாலும் கூட, அனைத்து நிறுவனங்களயும் இழுத்து
மூடி விட வேண்டுமா?
சரி அது இருக்கட்டும். பணக்கார கார்பொரேட் நிறுவனங்கள் மட்டும்தான்
உலகமகா அயோக்கியர்கள்; சிறு வணிகர்கள் நேர்மையின் சிகாமணிகள் என்று
பல்லக்கு தூக்குகிறார்கள்.
கடந்த வாரத்தில் சில செய்திகள் வந்தன.
(1)பண்டிகை காலமான தற்பொழுது வட இந்தியாவில், பாலை உபயோகித்து
இனிப்பு பலகாரம் செய்யும் வணிகர்கள், அதில் உள்ள கலப்படம் போன்றவற்றை
செய்தியாக்கியது இந்த செய்தி தொகுப்பு.
https://www.ndtv.com/video/player/ndtv-special-ndtv-india/video-story/252502?hp
ஒரு கிலோ இனிப்புக்கு குறைந்த பட்சம் மும்பையில், 300 ரூபாய்க்கு விற்றால்தான்
தூய்மையாக தயாரிக்க முடியும் என்கிறார், தைரியமாக பேட்டி அளிக்கும் ஒரு
பணக்கார இனிப்பு வணிகர். ஆனால் 200 ரூபாய்க்கு விற்கப்படும் இனிப்பு
பலகாரங்களை பெரும்பான்மையாக உற்பத்தி செய்வது சிறு வணிகர்கள்தான்.
தயவுசெய்து அடிக்கோடிட்டு கொள்ளவும்.
(2) சரி, இனிப்புக்கு வேண்டிய பால் எவ்வளவு தூய்மையாக இருக்கிறது? என்று ஒரு
வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய அரசு வாதாடும்போது,
இந்தியாவில், 65 சதவிகித பால் கலப்படம் செய்யப்படுகிறது. பெயிண்ட், டிடர்ஜெண்ட் போன்றவை கலக்கப்படுகின்றன. பணக்கார பால் உற்பத்தி
நிறுவனங்கள் மட்டுமல்ல, அதைவிட அதிகமாக சிறு வணிகர்களிடமிருந்து
நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளும் பாலின் இலட்சணமும் அதேதான்.
பணக்கார நிறுவனங்களை திட்டிவிட்டால், சரி அனைத்தையும் மூடிவிட்டால்
உலகிற்கு விமோசனம் என்ற “கானல் நீர்” கனவில்தான் பலர் இருக்கின்றனர்.
இந்த விமர்சனத்தைப் பொறுத்தவரை, கட்டுரையாளர் 2 விஷயங்களை முன்வைத்து திரைப்படத்தை ஆதரிக்கிறார்.
(1)கம்யூனிஸ எதிர்ப்பு (2) மரபணு மாற்றப்பட்ட விதைகள் அபாயம்தான்
கம்யூனிஸ எதிர்ப்பு என்பது எனக்கு உயிர் போன்றது. ஊக்க மருந்தை பொறுத்தவரை தற்பொழுதை லேன்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்க் சரியான உதாரணம். எவ்வளவு பெரிய விளையாட்டு வீரரானாலும் சரி, அமேரிக்காவின் நீதித்துறை
தவறிழைத்தவர்களின் மீது சீறிப்பாயும் என்பதற்கு உதாரணம் இது.
இரத்தத்திலோ, சிறுநீரிலோ வெளிக்காட்டாத ஊக்கமருந்தே இல்லை. எனினும்
படைப்பு சுதந்திரத்தின் அடிப்படையில் அதை விட்டு விடலாம்.
அடுத்து, மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பொறுத்தவரை, நான் உண்மையான
அறிவியலுக்கு தயாராகவே இருக்கிறேன். “மரபணு பூச்சாண்டி” என்று சத்தம்
போடும் குழு, பயத்தினாலேயே சத்தம் போடுகிறது. வரும் காலத்தில் தெள்ளத்
தெளிவான ஆதாரங்களுடன் மனிதனுக்கு எந்த கெடுதலும் இல்லாத விதைகளை
இந்தியாவில் ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை.
Breaking News: அமேரிக்காவில் ஏற்கெனவே மரபணு மாற்றப்பட்ட விதைகள்
விவசாயத்திற்கு வந்தாகி விட்டது. ஐரோப்பாவில் Cloning செய்யப்பட்ட
விலங்குகளிடமிருந்து பாலும், இறைச்சியும் சந்தைக்கு வந்து விட்டன.
அங்கிருப்போர் யாரும் இதுவரை சாகவில்லை. எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளவில்லை.
சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்த செய்தி. 1940களில் தமிழ்நாட்டில் மின்சார
இணைப்பை வாங்கிக் கொள்ளுங்கள் என்று மின் துறை அதிகாரிகள் வீடு வீடாக
சென்று பிரச்சாரம் செய்வார்களாம். பக்கத்து தெருவில் ஒருவருக்கு “ஷாக்”
அடித்துவிட்டது. எங்களை சாகச்சொல்கிறீர்களா? என்று மக்கள் கேட்பார்களாம்.
ஆனால் இன்று மின்சாரம் இல்லாமல் ஒருநாளும் ஒருவராலும் இருக்க
முடியவில்லை.
மக்களுக்கு புதியதைக் கண்டவுடன் பயம் ஏற்படவே செய்யும். அதற்காக
அறிவியலை நிறுத்த முடியாது. இல்லையேல் கலிலியோவினால் வான்
ஆராய்ச்சியில் சாதித்திருக்க முடியாது. டார்வினால் பரிணாம வளர்ச்சி
கொள்கையை எழுதியிருக்க முடியாது. CERN ஆராய்ச்சிக் கூடத்தால் Higgs Bosonஐ
கண்டுபிடித்திருக்க முடியாது. (இந்த ஆராய்ச்சியால் உலகமே அழிந்து விடும் என்று
காமெடி செய்தவர்கள் உண்டு.)
1960களில் ஒட்டு விதைக்கும் இந்தியாவில் எதிர்ப்பு இருக்கவே செய்தது.
வரட்சிக்குப்பின் உள்ளே நுழைந்தது. சொல்ல முடியாது அடுத்த வரட்சிக்குப் பின்
“மரபணு மாற்றப்பட்ட விதைகள்” இந்தியாவிற்குள் வரத்தான் போகிறது. எனக்கு
பயமில்லை. அந்த விளைபொருட்களையும் சாப்பிட்டு விட்டு சந்தோஷமாக
வாழத்தான் போகிறேன்.
திரு ஆர் பாலாஜி
“சரி பரவாயில்லை. பெயர் ஒன்றாயிருந்ததால் அவரின் என்மீதான விமர்சனத்தை
நான் என் சித்தாந்தத்திற்கு கிடைத்த பரிசாகவே ஏற்கிறேன்”.
பொய்யும் புரட்டும் வணிகம் அவையன்றி இல்லை பொருளியல் என்பது உங்கள் சித்தாந்தம் அதை நாம் பாராட்டவும் இல்லை நீங்கள் பரிசாக ஏற்றாலும் எமக்கு கவலையில்லை. பாலாஜிக்கு முன்னால் ஆர் இல்லை அதனால் தெரியவில்லை அவ்வளவே.
“Clinical Study என்ற முறைமையை குறித்து லவநேசமும்
புரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில், குருட்டாம் போக்கில், வெறுப்பை
உமிழ்ந்து விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறார்களா?”
இது கதையல்ல நிஜம் இந்த அபாயமான தொழில் நுட்பங்களை வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு கம்பெனிகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சோதனை செய்ய முனைந்துள்ளது உண்மை. இதற்கு அந்த மக்களிடையே எந்த அனுமதியையும் பெறாது இவர்கள் செய்கிறார்கள் என்பது மிகப்பெரிய உண்மை. ஏன் மரபணுத் தொழில் நுட்பத்தை அதன் மூலம் உட்பத்தியான பொருள்களை அந்த வளரும் நாடுகளின் ஏன் பயன்படுத்துவதில்லை. மரபணு விதைகளை முதலில் அந்த முன்னேறிய நாடுகள் பயன்படுத்தட்டும்.
“சரி அது இருக்கட்டும். பணக்கார கார்பொரேட் நிறுவனங்கள் மட்டும்தான்
உலகமகா அயோக்கியர்கள்; சிறு வணிகர்கள் நேர்மையின் சிகாமணிகள் என்று
பல்லக்கு தூக்குகிறார்கள்”.
சிறுவணிகர்களை யாரும் நீங்கள் அமெரிக்காவை, அன்னிய தொழில் நுட்பத்தைக்கண்ணை மூடிக்கொண்டு தோளில் சுமப்பது போல் யாரும் தூக்கவில்லை. ஒரு சிறுவணிகர் தவறு செய்தால் அவரை தண்டிப்பது எளிது. ஆனால் அமெரிக்காவோ அல்லது பன்னாட்டு கம்பெனிகளோ அப்படி அல்ல. பாகாசூர அசுரர்கள் அவர்களுக்கு நாடுகளே அடிமையாகும் அபாயம் உண்டு.
“ “மரபணு பூச்சாண்டி” என்று சத்தம்
போடும் குழு, பயத்தினாலேயே சத்தம் போடுகிறது. வரும் காலத்தில் தெள்ளத்
தெளிவான ஆதாரங்களுடன் மனிதனுக்கு எந்த கெடுதலும் இல்லாத விதைகளை
இந்தியாவில் ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை”.
நன்றி மரபணு விதைகளால் சுற்றுச்சூழலுக்கும், பாரம்பரிய விதை பன்மைக்கும் மனித சுகாதாரத்திற்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதற்கு த்தெளிவான ஆதாரங்கள் இல்லை என்பதை ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள். முதலில் அதனை முன்னேறிய நாடுகளில் செயல் படுத்திக்காட்டுங்கள். அப்புறம் பார்க்கலாம்.
“அதற்காக அறிவியலை நிறுத்த முடியாது. இல்லையேல் கலிலியோவினால் வான்
ஆராய்ச்சியில் சாதித்திருக்க முடியாது. டார்வினால் பரிணாம வளர்ச்சி
கொள்கையை எழுதியிருக்க முடியாது. CERN ஆராய்ச்சிக் கூடத்தால் Higgs Bosonஐ
கண்டுபிடித்திருக்க முடியாது”.
அறிவியல் வேறு தொழில் நுட்பம் வேறு. அறிவியலுக்கு நல்லது கெட்டது தெரியாது. தொழில் நுட்பம் அப்படியன்று அதில் நல்லதும் கெட்டதும் உண்டு. அதை ஆய்ந்து உணரவேண்டும்.தொழில் நுட்பத்தைக்கொண்டு எமது உணவு சுதந்திரத்தை பறிக்காதீர்கள். எம்பாரம்பரியத்தை அழிக்காதீர்கள். என்கிறோம் அவ்வளவுதான்.
“1960களில் ஒட்டு விதைக்கும் இந்தியாவில் எதிர்ப்பு இருக்கவே செய்தது.
வரட்சிக்குப்பின் உள்ளே நுழைந்தது”.
இன்று மரபணுத்தொழில் நுட்பத்துக்கு இருக்கிற எதிர்ப்பு அன்று இருந்திருந்தால் நிச்சயம் அந்த பாழாய் போன ஒட்டுவிதையை தடுத்திருப்போம். போலியாக வறட்சியையும் பஞ்சத்தையும் ஏற்படுத்த தயங்காத கூட்டம் நாட்டை ஆண்டாலும் இந்தியா அறிவுத்துறையில் வேக மாக முன்னேறி வருவதால் அது நிகழாது. தன்னுடைய ஹிருதயத்தையும் மூளையையும் அன்னியமாக்கிக் கொண்டவர்கள் அன்னை நாட்டை ஆளும் சூழல் விரைவில் மாறும்.
சிவஸ்ரீ
திரு.சிவஸ்ரீ.விபூதிபூஷனுடனான என் விவாதத்தில் Ceasefireஓ Win-Lossஓ இருக்க
வாய்ப்பில்லை. எப்பொழுதும் போலவே Fight-to-finish கருத்து மோதல்தான். ஆனால்
முடிந்தவரை இதை தனிமனித தாக்குதலாக இல்லாது இருக்க முடிந்தவரை
வார்த்தைகளை எழுதுகிறேன். நான் தேர்ந்த எழுத்தாளன் இல்லை. ஆகவே சில
நேரங்களில் தவறுகள் நேரலாம்.
“மரபணு விதைகளை முதலில் அந்த முன்னேறிய நாடுகள் பயன்படுத்தட்டும்.”
அதாவது முன்னேறிய நாடுகள் விவகாரமான புதிய தொழில்நுட்பங்களை ஏழை
நாட்டு மக்களின் மீது திணிக்கும். ஒரு தீய விளைவும் இல்லை என்பது
தெரிந்தவுடன்தான் தன் மக்களை பயன்படுத்த அனுமதிக்கும். இதுதான் அவர் கூற
வரும் விஷயம். ஆனால் மரபணு மாற்றப்பட்ட விதைகளை பொறுத்தவரை இது
“முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போன்றது.)
நான் தெளிவாகவே இதை எழுதியுள்ளேனே!. மேலும் Wikipediaவில்
சர்வசாதாரணமாக இது குறித்த செய்திகளை காணலாம். (நிபுணத்துவம்
தேவைப்படாத விஷயங்களுக்கு இது போன்ற இணைய தளங்களை
பயன்படுத்துவது தவறாகாது).
https://en.wikipedia.org/wiki/Genetically_modified_food
இந்த பக்கத்திலிருந்து ஒரு பகுதி.
Papaya has been genetically modified to resist the ringspot virus. The New York Times stated that
“in the early 1990s, Hawaii’s papaya industry was facing disaster because of the deadly papaya
ringspot virus. Its single-handed savior was a breed engineered to be resistant to the virus. Without it, the state’s papaya industry would have collapsed. Today, 80% of Hawaiian papaya is
genetically engineered, and there is still no conventional or organic method to control ringspot
virus.
Breaking News: ஹவாயி பிரதேசம் அமேரிக்காவில்தான் உள்ளது.
சரி,மேலும் ஒரு பகுதி.
Most vegetable oil used in the US is produced from GM crops. Vegetable oil is sold directly to
consumers as cooking oil, margarine, and shortening, and is used in prepared foods.
மேலும் சில பகுதிகள்:
As for soybeans, approximately 95% of the US crop is GM.
As of 2005, about 13% of the zucchini grown in the US was genetically modified to resist three
viruses;
Canola, of which 93% of the US crop is GM, is mainly used to produce vegetable oil. The genetic
modifications are for resistance to herbicides (glyphosate or glufosinate) and for improved oil
compositions.
86% of the US maize crop was genetically modified in 2010 and 32% of the worldwide maize crop
was GM in 2011
Cottonseed oil is used as a salad and cooking oil, both domestically and industrially.
Approximately 93% of the US cotton crop is GM.
After deregulation in 2005, glyphosate-resistant sugar beet was extensively adopted in the United
States. 95% of sugar beet acres in the US were planted with glyphosate-resistant seed in 2011.
Sugar beets that are herbicide-tolerant have been approved in Australia, Canada, Colombia,
EU, Japan, Korea, Mexico, New Zealand, Philippines, Russian Federation, Singapore, and USA.
The food products of sugar beets are refined sugar and molasses. Pulp remaining from the
refining process is used as animal feed
மேற்குறிப்பிட்ட இந்த பகுதியின்படி, உலகின் முன்னேறிய நாடுகள் சர்க்கரை உற்பத்திக்கு “மரபணு மாற்ற தொழில் நுட்பத்தை” பயன்படுத்துகின்றன. அந்நாட்டு
மக்கள் அதை சாப்பிட்டுவிட்டு நன்றாகவே இருக்கிறார்கள். சக்கையை
விலங்குகளுக்கு அளித்து பின் அவ்விலங்குகளையும் மனிதர்கள் சாப்பிடுகிறார்கள்.
திரு.சிவஸ்ரீ.விபூதிபூஷண் எழுதுவது, நான் ஏற்கெனவே கூறியபடி “மரபணு
பூச்சாண்டி”.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறேன். இன்னும் எந்த நாட்டிலும்
அரிசி, கோதுமை விதைகளை உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை (எனக்கு
தெரிந்தவரை). நிபுணர்களுக்கு (மட்டும்) இதற்கான சந்தேகங்கள் இருக்கும்வரை
இது சந்தைக்கு வராது. நாளையே வரவேண்டும் என்று நான் அடம்பிடிக்கவில்லை.
அடுத்த 10 வருடங்களில் மேலும் தொழில்நுட்பம் வளர்ந்தபிறகு, இந்த விதைகளும்
முன்னேறிய நாடுகளில் (அடிக்கோடிட்டு கொள்ளவும்) சந்தைக்கு வந்துவிடும்.
நேரத்தை வீணடித்தது போதும். இந்தியா உடனடியாக ஏற்கெனவே சந்தைக்கு
வந்துவிட்ட மரபணு மாற்றப்பட்ட விதைகளை உபயோகப்படுத்த தொடங்க
வேண்டும். அல்லது நாம் இந்த போட்டியில் பின் தங்க மாட்டோம்.
வெளியேற்றப்பட்டு விடுவோம்.
சிவஸ்ரீ.விபூதிபூஷணைப் போன்றவர்கள் இந்த விதைகளை ஏற்றுக்கொள்வது
நடக்கவே நடக்காது. சந்தைக்கு வந்து விட்டால் அவர்களால் ஒன்றும் செய்ய
முடியாது.
செயற்கையே வேண்டாமென்றால், அவரைப் போன்றவர்கள் சத்தியமங்கல
காட்டிற்கோ, முதுமலைக் காட்டிற்கோ சென்று இயற்கையான வாழ்வை வாழ்ந்து
கொள்ளட்டும். அங்கேயும் விவசாயம் செய்யக்கூடாது. சுமார் 40000
வருடங்களுக்கு முன் காட்டை அழித்து விவசாயத்தை நம் முன்னோர்கள்
ஆரம்பித்தார்களே, அதுவே செயற்கைதான். மொழிகள் உருவாவதற்கு முன்
“ஆஆஆஆஆ” “ஊஊஊஊஊ” “மேமேமே” “மாமாமா” என்று நம் முன்னோர்கள்
கத்திக்கொண்டு, கனிகளையும், கிழங்குகளையும், விலங்குகளையும் உண்டு
வாழ்ந்தார்களே, அதைப் போன்றே இவர்கள் வாழட்டும்.
நீங்கள் நிம்மதியாக வாழவில்லையென்றாலும், எங்களை வாழவிடுங்கள்!
மரபணுத்துறையில் சர்ச்சைகளுக்கு பஞ்சமேயில்லை. ஆகவே சிலர்
எதிர்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். கூடங்குளத்தில் திரு.உதயகுமார்
அடம்பிடிப்பதைப் போல் சிலர் அடம்பிடிக்கிறார்கள். அவர்களுக்கென்று சில
நிபுணர்கள் இருக்கவே செய்வார்கள். 100ல் 95 நிபுணர்கள் ஒப்புக்கொண்டுவிட்டால்
விவாதம் முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம். அந்த 5 தனித்துவிடப்பட்ட
நிபுணர்களை மேற்கோள் காட்டிக்கொண்டிருப்பது வெட்டிவேலை.
சமீபத்தில், நம் பிரதமர் ஒரு வெளிநாட்டு பத்திரிகைக்கு பேட்டி அளிக்கையில்,
கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து நன்கொடைகள்
வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். அதே பேட்டியில், “மரபணு மாற்ற
தொழில்நுட்பத்தை” இந்தியா நடைமுறைபடுத்தக் கூடாது என்ற கருத்தை சில
இந்திய தொண்டு நிறுவனங்கள் பிரச்சாரம் செய்கின்றன. அவற்றுக்கும்
வெளிநாட்டு அமைப்புகளிலிருந்து நன்கொடை வருகிறது என்றார் என்பதை இங்கு
அவதானிக்கலாம்.
Finishing Touch: எனக்கும் கலை, இலக்கியம் போன்றவற்றிற்கும் ஸ்நான பிராப்தி
கூட இல்லை. ஆனால் ஒரு சமூகத்திற்கு இவை எவ்வளவு முக்கியம் என்பது
எனக்கு நன்றாகவே தெரியும். திரு.சிவஸ்ரீ.விபூதிபூஷண் இகழும் “பொருளியல்”
துறையில், இந்தியா 22 சதவிகித உலக வர்த்தகத்தை 1700கள் வரை
கொண்டிருந்ததால்தான், நமக்கென்று பாரம்பரியம் இருக்கிறது. அந்த
பாரம்பரியத்தைதான் ஆதாரமாக, ஆதார புருஷர்களாக உருவகிக்கிறார். ஆனால்
நாம் பொருளியல் துறையில் பின் தங்கியிருந்தால், நம் அனைத்து பாரம்பரியமும்
செல்லாக்காசாகி விடும். முற்றாக அழிந்துவிடும். மாமல்லபுரத்தையோ,
எல்லோராவையோ பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல, மேலும்
அற்புத படைப்புகளை உருவாக்க, பழங்கதைகளை பேசிக்கொண்டிருந்தால் போதாது. துட்டு வேண்டும்.
நன்றாக வியாபாரம் செய்வோம். உலக வர்த்தகம் செய்வோம்.
கடைசியாக ஒரு விண்ணப்பம்: இந்த திரைப்படம் மரபணு மாற்ற
தொழில்நுட்பத்தைப் பற்றி பேசுவதால் நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த கட்டுரைக்கு அவசியமில்லாதது என்று ஆசிரியர் குழு நினைத்தால் நான் என்
மறுமொழிகளை நிறுத்தி விடுகிறேன். வேறு ஒரு தோதான கட்டுரையில் எங்கள்
மோதலை வைத்துக் கொள்கிறோம்.
அன்பார்ந்த ஸ்ரீமான் ஆர். பாலாஜி அவர்களே ஆசிரியர் குழு அபிப்ராயத்திர்காக ஏன் காத்திருக்க வேண்டும். இந்த வ்யாசம் திரைப்படம் சம்பந்த பட்டது. அது பற்றிய விவாதத்தை முறையாக தொடர விடுங்கள். எனக்கும் மரபணு விதைகள் அவை சார்ந்த தொழில் நுட்பம் சம்பந்தமாக சில சம்சயங்கள் உண்டு. தாங்கள் அவசியம் இவை பற்றியும் சிறு வணிகர்கள் வால் மார்ட், லாயட், மேக் டானல்ட் போன்ற கும்பனிகள் பற்றி தனியாக வ்யாசம் சமர்ப்பிக்க வேண்டும் என விக்ஞாபிக்கிறேன்.
திரு ஆர் பாலாஜி
திரு.சிவஸ்ரீ.விபூதிபூஷனுடனான என் விவாதத்தில் Ceasefireஓ Win-Lossஓ இருக்க
வாய்ப்பில்லை
அவசியம் எதுவும் இல்லை. விவாதம் தொடரட்டும் தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம். உண்மையே வெல்லும் என்ற மறை மொழியில் முழுமையான நம்பிக்கை அடியேனுக்கு உண்டு. ஆகவே வெற்றி தோல்வி என்பதைக்காலம் கூறும். அதனை இன்றைக்கே முடிவு செய்துவிட முடியாது. எண்பதுகளில் கம்யூனிசம்தான் சிறந்த முறை என்பதை கம்யூனிஸ்டுகள் பறைசாற்றிவந்தார்கள். அது மனித நேயமற்றது என்பதை சோவியத்தின் வீழ்ச்சி தியன்மென் சதுக்க கொலைகள் வெளிக்காட்டின. அமெரிக்காவின் பெரும் வல்லமை ஜிகாதிகளின் செப்டம்பர் தாக்குதலால் வீழ்ந்தது. கொஞ்சம் பொறுத்திருக்கவேண்டும் அமெரிக்க பொருளியல் வல்லமை வீழ்வதையும் காணலாம்.
ஸ்ரீ பாலாஜி
“சிவஸ்ரீ.விபூதிபூஷணைப் போன்றவர்கள் இந்த விதைகளை ஏற்றுக்கொள்வது
நடக்கவே நடக்காது. சந்தைக்கு வந்து விட்டால் அவர்களால் ஒன்றும் செய்ய
முடியாது”.
ஆம் ஆமாம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் பாலாஜி. வீட்டில் நல்ல சோறு இருக்கும் போது காசுகொடுத்து ஹோட்டல் சாப்பாடு சாப்பிட நான் மடையன் அல்லன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எம் முன்னோர்கள் பயன்படுத்திய விதைகள் இருக்க விபச்சார பிடி விதைகளை பயன்படுத்துவதற்கு. விதைகளையும் விவசாயி வாங்கினால் அவனது உற்பத்திப்பொருளுக்கு கிடைக்கும் சந்தைவிலை அவனை ஓட்டாண்டி ஆக்கிவிடும். கடனில் மூழ்கி அவன் தற்கொலை செய்வது ஒன்றே வழி என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
ஸ்ரீ பாலாஜி
“செயற்கையே வேண்டாமென்றால், அவரைப் போன்றவர்கள் சத்தியமங்கல
காட்டிற்கோ, முதுமலைக் காட்டிற்கோ சென்று இயற்கையான வாழ்வை வாழ்ந்து
கொள்ளட்டும். அங்கேயும் விவசாயம் செய்யக்கூடாது”.
செயற்கையே வேண்டாம் என்பதல்ல. எங்கு இயற்கை இல்லையோ அங்கே செயற்கைப்பயன்படுத்தப்படலாம். மனிதனுக்கு ஆபத்தில்லாத செயற்கை நுட்பங்கள் அவசியமே. விவசாயம் செய்யக்கூடாது இன்று விவசாயிகளை விவசாயத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் சொல்லுவதுவும் முறையோ.
ஸ்ரீ பாலஜி
“மரபணு மாற்ற
தொழில்நுட்பத்தை” இந்தியா நடைமுறைபடுத்தக் கூடாது என்ற கருத்தை சில
இந்திய தொண்டு நிறுவனங்கள் பிரச்சாரம் செய்கின்றன. அவற்றுக்கும்
வெளிநாட்டு அமைப்புகளிலிருந்து நன்கொடை வருகிறது என்றார் என்பதை இங்கு
அவதானிக்கலாம்”.
இந்தியத்திரு நாட்டின் வரலாற்றில் சக்தியற்ற மவுணரின் கருத்துக்களை ஏற்பதற்கில்லை. புத்தியையும் உணர்வையும் அமெரிக்காவிற்கு அடகுவைத்தவரின் கருத்துக்களை ஒரு துளியேனும் மதிப்போம் இல்லை. அன்னிய நாட்டில் வருகிற உதவியைப்பெறுகிற தன்னார்வ த்தொண்டு நிறுவனங்கள் யாவும் அயோக்கியர் அல்லர். அன்னிய நாட்டிலும் எம் நாட்டைப் போன்ற வளரும் நாடுகளின் அதன் சமூக மேம்பாடு மனித மேம்பாட்டிற்கு பாடுபடும் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அன்னிய சித்தாந்தத்தை அமெரிக்காவின் மேலாதிக்கத்தை, பன்னாட்டுகம்பெனிகளின் வளர்ச்சிக்கு பாடுபடும் சோனியா மவுணமோகனர் ஆகியோருக்கு ஏன் பாலாஜி போன்றோருக்கு அன்னிய உதவியைப் பற்றிப் பேசுவதற்கும் அருகதை இல்லை.
ஸ்ரீ பாலாஜி
“ஆனால் நாம் பொருளியல் துறையில் பின் தங்கியிருந்தால், நம் அனைத்து பாரம்பரியமும் செல்லாக்காசாகி விடும். முற்றாக அழிந்துவிடும். மாமல்லபுரத்தையோ,
எல்லோராவையோ பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல, மேலும்
அற்புத படைப்புகளை உருவாக்க, பழங்கதைகளை பேசிக்கொண்டிருந்தால் போதாது. துட்டு வேண்டும்”.
ஆஹா ஆஹா அஹ் ஹா. பன்னாட்டுவர்தகம் என்பது வளர்ச்சிக்கு அவசியம் என்பது மாயை. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட கலை பொக்கிஷங்கள் யாவும் உள் நாட்டின் உழைப்பை உற்பத்தியை சார்ந்து அமைந்தன. உண்மையான வளர்ச்சி தற்சார்பிலிருந்தே முகிழும் திகழும். அடுத்தவரை சார்ந்த வளர்ச்சி அடிமைத்தனம். கலை இலக்கியம் யாவும் இந்த நாட்டில் வளர்ந்து கொண்டுள்ளன. அதன் வளர்ச்சித்தொடரும்.
சிவஸ்ரீ
மரபணு விதைகள் மற்றும் சிறு வணிகர்கள் விஷயம் பற்றி தங்கள் தரவுகள் தனியொரு வ்யாசத்தில் கோர்வையாக ஆழத்துடன் சொல்லப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்ற படிக்கு மேற்படி உத்தரம் எழுதப்பட்டது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ஸ்ரீமான் ஆர். பாலாஜி அவர்களுக்கு.