பயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்

அரசின் சலுகையில் உயர் படிப்பு– அரசுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள்

2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன. கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பேர்கள் பெங்களுரிலும், ஐவர் ஹுப்ளியிலும் கைது செய்யப்பட்டார்கள்.  மேலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் ஒருவரும், தொடர்ந்து பெங்களுரில் ஒருவரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி கைது செய்யப்பட்டார்கள்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பத்திரிகையாளர், ஒருவர் மருத்துவர், வேறு ஒருவர் ராணுவத்தில் ஆய்வு மற்றும் விரிவாக்கத் துறையில் ஜூனியராக ஆய்வுப் படிப்பு படிப்பவர். கைது செய்யப்பட்டவர்கள், கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுகின்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள்; மெத்த படித்த படிப்பாளிகள் என்பது உண்மையாகும்.  இவ்வாறு படித்தவர்கள் அனைவரும் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பயின்றவர்கள்.  ஆகவே அரசின் சலுகையில் கல்வி பயின்று, அரசுக்கு எதிராகவே பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துகிறார்கள். இது, இவர்களை பற்றிய ஒரு ஆய்வாகும்.  பெங்களுரில் இவர்கள் கைது செய்யப்பட்டதின் காரணமாக பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள்.


2005ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் சில விஷயங்கள் வெளிவந்துள்ளன.  கட்டுரையின் தலைப்பு, “தி மித் ஆஃப் தி மதரஸா” (The Myth of the Madrassa) . இந்தக் கட்டுரையில் 75 பயங்கரவாதிகளை சுய ஆய்வு செய்த போது 53 சதவீதமான பயங்கரவாதிகள் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் என்பது தெரியவருவதாக குறிப்பிட்டு இருந்தார்.  இதே கட்டுரையில் அலிகார் பல்கலைக் கழகத்தில் துவக்கிய சிமி இயக்கத்தின் உறுப்பினர்களில் பெரும்பாலோர் பட்ட படிப்பு படித்தவர்கள் என்பதும், பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவருகிறது.  இவ்வாறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்களில் ஐ.டியில் பொறியியல் படிப்பு படித்தவர்கள், மருத்துவர்கள், மற்றும் தொழில்நுட்பப் படிப்பு படித்தவர்கள் மிக அதிகம் .

2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மற்றும் செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய ஒரு ஆய்வை முதலில் பார்ப்போம்.  இவர்கள் அனைவரும் இந்தியர்கள், இஸ்லாமியர்கள், இவர்கள் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவுடனும், பங்களா தேஷ் நாட்டிலிருந்து செயல்படும் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமிய அமைப்பினருடனும் தொடர்ப்பில் உள்ளவர்கள் என்பதெல்லாம் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இரண்டு அமைப்புகளுக்கும் பெங்களுர், ஹைதராபாத், மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள நான்டேட் பகுதியிலும் செயல்படும் அமைப்புகள் உள்ளன. சொசைட்டி பார் தி ஸ்டேடி ஆப் பீஸ் அன்ட் கான்ஃபிளிட்(Society for the study of Peace and Conflict) என்ற அமைப்பினர் தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானதாகும். “ஏழை இஸ்லாமியர்கள் அதிக அளவில் சந்தோஷமாக வாழ்கிறார்கள், எல்லாம் அல்லாவை சார்ந்தது என வாழ்கிறார்கள்.  ஆனால் படித்தவர்கள், நல்ல வசதி படைத்தவர்கள் மட்டுமே பயங்கரவாத செயலுக்கு மாறுகிறார்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.

2008-ம் ஆண்டு அகமதாபாத் நகரில்  நடந்த  தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அபு பசீர் (Abu Bashar) என்கிற பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். இவனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்கள் பட்டப் படிப்பு படித்தவர்கள் என்றும், அவர்கள் படித்த கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள் என்பதும் தெரியவந்தது. 2008-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த முகமது அன்சார் (Mohammed Ansar) , முகமது சாதிக் ஷேக் (Mohammed Sadiq Sheikh) ஆகிய இருவரும் மும்பையில் உள்ள கல்லூரியில் சாஃப்ட்வேர் என்ஜினியரியங் படித்தவர்கள்.  உத்திரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அப்சல் உஸ்மானி கேட்டரிங் டெக்னாலஜி படித்து விட்டு ஒரு ஹோட்டலில் வேலை பார்பவன்.  2008-ஆம் ஆண்டு அகமதாபாத், ஜெய்பூர், டெல்லி ஆகிய நகரங்களில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்திய குண்டுகளைத் தயாரித்தவன் அப்துல் சுபான் குரேஷி அகா தக்கீர் (Abdul Subhan Qureshi Aka Tauqeer) என்பவன்.  இவன் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கியத் தலைவன்.  மும்பையில் உள்ள இன்ஸ்டிட்யூடில் தொழிற்சாலை எலக்ட்ரானிக்ஸ் கல்வி படித்தவன். இந்தப் படிப்பைப் பயன்படுத்தி மும்பையில் உள்ள பல கம்யூட்டர் நிறுவனங்களில் பணியாற்றியவன்.  சிமி இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளார் என்பதும் குறிப்பிட தக்கது.


முகமது சாதிக் இஸ்ஸார் ஷேக் (Mohammed Sadiq Israr Sheikh) கொல்கத்தாவில், அமெரிக்கத் தூதரகத்தின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியவன்.  2005-ல் வாராணாசியில் நடந்த குண்டு வெடிப்பிலும், 2008-இல் இந்தியன் முஜாஹிதீன் நடத்திய அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களிலும் ஈடுபட்டவன்.  ஆஸம்கார் நகரைச் சார்ந்தவன், பின்னர் மும்பையில் நிரந்தரக் குடியிருப்பாக மாறியவன், டோங்கிரி (Dongri) என்ற ஊரில் உள்ள ஹேபீப் டெக்னிக்கல் இன்ஸ்டியுட்டில் (Habib Technical Institute) குளிர்சாதனங்கள் பழுது பார்க்கும் படிப்பில் டிப்ளேமா படித்தவன். இந்த நிறுவனம் அரசு உதவி பெறும் நிறுவனமாகும்.  சிமியின் பின்புலத்தில் பல முறை பங்களாதேஷ் நாட்டிற்குச் சென்று வந்தவன். பங்களாதேஷ் நாட்டிலிருந்த பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பாவின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவன்.

 

2005-இல் வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்பிலும், 2006-இல் மும்பை ரயிலில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களிலும் பங்கு பெற்றவன் ஷானவாஸ் ஆலம் (Shahnawaz Alam) என்பவன்.  லக்னேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகிறான். உத்திர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றவன். இவனது மூத்த அண்ணன் டெல்லி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவன் இவனும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிட தக்கது, இவனது பெயர் முகமது சபீ (Mohammed Saif). இந்தியத் திருநாட்டில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும்  இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை ஏற்படுத்தியவன் ரியாஷ் பட்கல்(Riyaz Bhatkal) என்பவன்.  2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பிற்கு 35 கிலோ வெடிமருந்து கொடுத்தவன்.  இவன் ஒரு என்ஜினியர் என்பதும், கர்நாடாக மாநிலத்தில் உள்ள பட்கல் நகரில் படித்தவன்.  இவனுடன் இக்பால் பட்கல்(Iqbal Bhatkal) என்பவன் ஐ.டியில் பட்டப் படிப்பு முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், அனைத்து ஊடகங்களுக்கும் இமெயில் அனுப்பும் பணியை செய்வது இவனது வேலையாகும். 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பின்போது இக்பால் பட்கல் அனுப்பிய இமெயில் அனைத்தையம், வை ஃபை (Wi Fi connections) இணைப்பைத் திருட்டுத்தனமாகப் பயன்படுத்தியே செய்துமுடித்தவன் முகமது மன்சூர் அஸ்கார் பீர்பாய் (Mohammed Mansoor Asgar Peerbhoy) என்பவன். புனாவில் உள்ள விஷ்வகர்மா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் சாஃப்ட்வேர் என்ஜினியரிங் படிப்பு படித்தவன். இவன் பல்வேறு சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிந்தவன். இறுதியாகப் பணிபுரிந்தது யாஹூவில். ஆகவே திருட்டுத்தனமாக வை ஃபை இணைப்பைப் பயன்படுத்துவதில் திறமையானவன்.


ஹிந்து அரசியல்வாதிகளைக் கொன்றதாக, இந்துக்களுக்கு ஆதரவாகக் கட்டுரை மற்றும் செய்திகளை வெளியிடுபவர்களைக் கொல்வதற்கும் முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் முத்தி-உர்-ரஹிமான் சித்திக் (Muti-Ur-Raman Siddiqui) மற்றும் டாக்டர் ஜப்பார் இக்பால் (Dr.Jaffer Iqbal). இருவரும் இந்தத் திட்டத்திற்காக இந்தியன் முஜாஹிதீனால் அமர்த்தப்பட்டவர்கள். முத்தி-உர்-ரஹிமான் சித்திக்கின் (Muti-Ur-Raman Siddiqui) பூர்வீகம் உத்திரபிரதேசமாகும்.  1970-ஆம் ஆண்டே ஹூப்ளிக்கு பிழைப்புத் தேடி வந்துவிட்டவர்கள்.  பெங்களுரில் உள்ள பாரதிய வித்யா பவனில் இதழியலில் பட்ட மேற்படிப்புப்  படித்தவன்;  டெக்கான் குரானிக்கல் பத்திரிகையில் பணிபுரிகிறவன். டாக்டர் ஜப்பார் இக்பால் (Dr.Jaffer Iqbal) சி.இ.டி. தேர்வில் அகில இந்திய அளவில் 104-வது இடத்தைப் பிடித்தவன்.  ஹூப்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான கிம்ஸ் (KIMS)-இல் டாக்டர் பட்டம் பெற்றவன்; மங்களுரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் படிப்பில் பட்ட மேற்படிப்புப் படித்தவன். இவனும் கர்நாடக அரசால் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன். இவர்களைப் போலவே கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமான இன்னொருவன் அஸிஸ் அகமது மீர்ஸா (Aijaz Ahmed Mirza). பாகல்கோட் நகரில் உள்ள பஸவேஸ்வரா என்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. படித்து முடித்தபின், ராணுவத்தின் ஆய்வு மற்றும் விரிவாக்கத் துறையில் இளநிலை ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தவன். இவனது படிப்பிற்கு மத்திய அரசு முழுக் கல்விக் கட்டணச் சலுகை கொடுத்தது, இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இக்கல்வியைக் கற்க சேர்த்துக் கொள்ளப்பட்டவன்.  ஹூப்ளியில் உள்ள நேரு கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு படித்த 26 வயது நிரம்பிய வாஹித் ஹுசைன்(Wahid Hussain) என்பவனும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன்.

இவர்களுடன் 24 வயது நிரம்பிய எம்.சி.ஏ படிப்பு படித்த ஷோகிப் அகமது மீர்சா (Shoaib Ahmed Mirza) என்பவனும் கைது செய்யப்பட்டான்.  பெங்களுரில் உள்ள அல் அமீன் கல்லூரியில் படித்தவன். மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள்.  பட்டப் படிப்பும், பட்ட மேற்படிப்பும், மருத்துவ படிப்பும் படித்தவர்கள்.  இவர்கள் அனைவரும் அரசுக் கல்லூரிகளில் படித்தவர்கள்; அரசுக் கல்வி உதவித்தொகை பெற்று படித்தவர்கள்.  மேலும் இவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் சிமியின் அங்கத்தினராக இருந்தவர்கள்.  ஆகவே அரசு கொடுத்த சலுகையில் நல்ல படிப்பும் படித்துவிட்டு, அரசுக்கும் பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்குத் துணைசெல்லும் இவர்களின் பின்னே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும், பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பும் உள்ளன. இது சென்ற மாதம் பெங்களுரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் இதற்கு முன்பாக கைது செய்யப்பட்டவர்களின் பின்புலத்தைப் பார்த்தால் நன்கு புரியும். 

ஆனால் நாட்டில் உள்ள மதச்சார்ப்பற்றவைகளாகக் காட்டிக் கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு கல்வி கிடைப்பதில் பாகுபாடு இருப்பதாகக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

7 Replies to “பயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்”

  1. this article throws open more complicated dimensions of the problem.
    whether educated or not the demographic problem because of non adherence
    to family planning is one dimension this point discussed is another very serious
    issue..

  2. முஸ்லிம்களில் ஏழைகள் மகிழ்ச்சியோடு உள்ளார்கள், படித்தவர்கள் பயங்கரவாதிகளாக மாறுகின்றனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஏழைகள்தான் தீவிரவாதத்திற்கு மாறுவார்கள் என்பது பழையக் கதைதான் போலும் … முழு ஆய்வு அனைத்து மதத்தினரிடையே நடத்த வேண்டும்.

  3. பொதுவாக இந்திய முஸ்லிம்கள் விஷயத்தில் உயர் கல்வியும், அறிவுத் துறைகளும் அவர்களது சிந்தனைப் போக்கை விசாலப் படுத்துவதில்லை. மாறாக இவை அளிக்கும் திறன்களை மேலும் மேலும் தங்கள் மதவெறியையும் அடிப்படை வாதத்தையும் வளர்க்கவும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவுமே அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும்.

    பணம் படைத்த, உயர்கல்வி கற்ற இளைஞர்கள் கொண்ட முஸ்லிம் குடும்பங்களிலும் பெண்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. கருப்பு பர்தா அணீயக் கட்டாயப் படுத்துவது, பெண்களின் சுதந்திரத்தை பெருமளவில் கட்டுப்படுத்துவது எல்லாம் நடக்கிறது. இந்துக்களில் மத்திய தர, மேல்தட்டு குடும்பங்கள் அனைத்தும் குடும்பக் கட்டுப்பாடு முறைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் எந்த மாநிலத்தின் மக்கள் தொகைக் கணக்கு விவரங்களையும் எடுத்துப் பாருங்கள் – மத்திய தர, மேல்தட்டு முஸ்லிம் குடும்பங்களில் கூட மக்கள் தொகைப் பெருக்கத்தின் வளர்ச்சி, சராசரியை விட மிக அதிகமாக உள்ளது.

    முஸ்லிம்களுக்கு அளிக்கப் படும் கல்விச் சலுகைகள் இப்படித் தான் விழலுக்கு இறைத்த நீராக ஆகிக் கொண்டிருக்கின்றன. இதை சரிசெய்ய சில வழிகல் –

    1) முஸ்லிம்களுக்கான கல்வி சலுகைகளில் கட்டாயமாக 33% சதவீதத்தை முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். ஆண்களுக்கு வழங்கக் கூடாது.

    2) குடும்பக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் முஸ்லிம்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் வழங்கப் படவேண்டும்.

  4. Our politicians keep saying that poverty and illiteracy are the reasons for islamic terrorism

    It has been proved wrong .

  5. the article needs more clarity how madarssa education and islamic schools teach terrorism. what is the driving force behind it, how they get funds? we expect more inputs from you sir.

  6. ” லண்டன், டிச. 7- 2012.

    இந்தியாவை சேர்ந்த யூசுப் (38) என்பவர் தனது மனைவி சாராவுடன் (33) பிரிட்டனின் கார்டிப் என்னுமிடத்தில் வசித்து வருகின்றார். இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கற்கச் சொல்லி மனைவி சாரா தனது மகனை அடித்து வந்திருக்கிறார்.

    குரானை மனப்பாடம் செய்ய இயாலாமல் தவித்த யாசின் மீது கோபமடைந்த சாரா கடந்த 2010-ம் ஆண்டு மிருகத்தனமாக அடித்து இருக்கிறார். இதில் யாசின் இறந்து போயிருக்கிறான். பிறகு யாசின் உடலை மறைக்க எண்ணை ஊற்றி எரித்து புதைத்து இருக்கிறார்.

    இந்த செய்தி காவல் துறையினருக்கு தெரியவர சாரா மீது கார்டிப் கிரௌன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோபம் தாங்காமல் குச்சியால் அவனது முதுகில் ஒரு நாயை அடிப்பது போன்று அடித்தேன். இதில் அவன் இறந்துவிட்டான் என்று தீவிர விசாரணைக்கு பிறகு அவள் ஒத்துக் கொண்டிருக்கிறாள்.

    பின்னர் குற்றாவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாள். கணவன் யூசுப் நிரபராதி என அறிவிக்கப்பட்டார்.”-

    கொலை செய்யப்பட்ட சிறுவனின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்திப்போம். மனித இனத்தின் ஆபிரகாமிய வெறி என்று அடங்குமோ அன்றே அமைதி உலகெங்கும் தவழும்.

  7. // the article needs more clarity how madarssa education and islamic schools teach terrorism. what is the driving force behind it, how they get funds? we expect more inputs from you sir. -Dr
    J Viswanathan //
    1. எல்லா வகையிலும் அனைவரையும் முகமதியராக்கிவிட வேண்டும் என்கிற உந்துதல்தான் இதன் பின்னால் இருப்பது. மிகப் பெரும்பாலும் வன்முறையின் மூலம்தான் முகமதியம் திணிக்கபட்டு வந்துள்ளது. எண்ணிக்கையைப் பெருக்கி மேலாதிக்கம் செலுத்தும் வாய்ப்பைப் பெறவேண்டும் என்பதே நோக்கம் (ஹஸ்கே லியா பாகிஸ்தான், லட்கே லேங்கே ஹிந்துஸ்தான்)..
    2. ஹவாலா முறையில் ஏராளமான பணம் வந்து சேருகிறது. மேலும் சிறுபான்மையினர் நிறுவனம் என்ற சலுகையில் வெளியிலிருந்து தாராளமாக நன்கொடை பெறவும் முடிகிறது. சவூதி இரட்டை வேடமாடும் ஒரு பிரதான நன்கொடையாளர். மசூதிகள் கட்ட, மதரஸாக்களுக்கு என்ற சாக்கில் நிறையப் பணம் வருகிறது. பிரமாண்டமான மசூதிகள் நாடு முழுவதும் புற்றீசல்களாக முளைத்து வருவதைக் கண்ணுள்ளோர் கண்டுகொள்வார்களாக.
    3. முகமதிய பயங்கரவாதிகள் ஹிந்துஸ்தானத்தை ஒரு மிகச் சுலபமான இலக்கு (ஸாஃப்ட் டார்கெட்) என்றே எள்ளி நகையாடுகிறார்கள். இங்குள்ள அரசு நிர்வாகங்ளின் மெத்தனம், ஆளுங் கட்சிகளின் ஓட்டுப் பொறுக்கிப் போக்கு, முதலான காரணங்களால் ஹிந்துஸ்தானம் முகமதிய பயங்கரவாதத்தைச் சரியாக ஒடுக்காமல் இருப்பது மட்டுமின்றி, அதனை ஊக்குவிக்கும் வகையிலும் நடந்துகொள்கிறது என்று சர்வ தேச அரங்கில் அபிப்ராயம் உருவாகி வருகிறது.
    4. குரானைக் கற்பிப்பதே வன்முறையைத் தூண்டுவதுதான். காலவரிசைப்படி குரான் வாசகங்கள் அமைந்த விவரம் புரிந்த பிரக்ஞையோடு குரானைப் படித்தால் அதன் வன்முறைப் போக்கு விளங்கும்.
    4. கட்டுரை எழுதுவோர் ஒரு வரம்புக்குள்தான் விவரங்களைப் பதிவு செய்ய முடியும். உளவுத்துறை உயர் அதிகாரிகள் மட்டுமே ஆதாரப் பூர்வமான தகவல்கள் தர முடியும். ஆனால் அவர்களுக்கு வாய்ப் பூட்டு போடப் பட்டிருக்கிறது. தனிமையில் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை பகிரங்கமாக செய்தியாளர் கூட்டங்களில் அறிவிக்க மாட்டார்கள். ஆட்சியாளர்கள் நமது பாதுகாப்பு, காவல் துறைகளை பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தாலே போதும். மதரஸாக்களின் சாயத்தை நொடியில் வெளுக்க வைத்துவிடுவார்கள். ஆனால் முகமதியப் போக்கிரிகள் எதிர்ப்பு, மறியல் என்ற போர்வையில் நடத்தும் அட்டகாசங்களை அடக்கக் கூட அவர்களுக்கு அதிகாரம் இல்லை. கல்லடிபட்டுக் கொண்டு நிற்கிறார்கள். கோவையில் காவல் துறை தொடக்கத்தில் சரியாகச் செயல் பட்டதும் இப்போது கோட்டைமேடு வழியாகப் போகும்போதே அடக்க ஒடுக்கமாகப் போவதும் ஓர் உதாரணம்.
    -மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *