விவசாயிகளைப் பாதுகாப்போம்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை.

என்பார் திருவள்ளுவர். இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ வேண்டுமானால், அனைவருக்கும் உணவளிக்கும் உழவுத் தொழில் பொலிவுடன் விளங்கியாக வேண்டும். விவசாயமே உலகின் ஆதித் தொழில். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையாத தேசங்களில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுவதைக் காண்கிறோம். எனவே விவசாயம் நாட்டின் ஆணிவேர் ஆகிறது. விவசாயம் சார்ந்ததாக இருந்ததால் தான், ‘’கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு’’ என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், நமது நாட்டின் விவசாயம் தற்போது என்ன நிலையில் இருக்கிறது?

மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்ப்பா பகுதியில் மட்டுமே வங்கியில் வாங்கிய விவசாயக் கடனைக் கட்ட முடியாததால் பலநூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் விவசாயிகள் தற்கொலையில் முதலிடம் வகிக்கிறது. இத்தனைக்கும் இந்த விவசாயிகள் விளைவித்த பருத்திக்கு சந்தையில் கிராக்கி. எங்கோ தவறு நடப்பதை இந்த விவசாயிகளின் தற்கொலைகள் காட்டுகின்றன.

பல்லாயிரம் கோடி ஊழல் புரிந்த அரசியல்வாதிகள் புன்னகையுடன் பத்திரிகைகளில் ‘போஸ்’ தருகிறார்கள். அடுத்தவர் பணத்தை மோசடி செய்து வயிறு வளர்க்கும் நிதி மோசடி நிறுவனங்களின் அதிபர்கள் புன்னகையுடன் காவலர்கள் சூழ உலா வருகிறார்கள். லஞ்சம் வாங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் கூட வழக்குரைஞர் வைத்து வாதாடுகிறார்- தான் தவறிழைக்கவில்லை என. ஆனால், சில லட்சம் அல்லது சில ஆயிரம் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பித் தர முடியாத அவமானத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் இதே காலகட்டத்தில் நமது நாட்டில் தான் இருக்கிறார்கள். எங்கோ ஒரு சிக்கல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்தச் சிக்கல் என்ன? விவசாயிகளை வாழ்வின் இறுதிக்குத் தள்ளும் காரணிகள் எவை? என்பதை ஆராய்கிறது, ஈரோடு சு.சண்முகவேல் எழுதியுள்ள விவசாயிகளைப் பாதுகாப்போம் என்ற இந்தப் புத்தகம்.

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் போன்ற தன்மானத்துடன் வாழப் பழகிவிட்ட, சொந்தக் காலில் நின்று பழகிப்போன உழவர்கள், தாங்கள் இத்தனை காலம் நம்பிவந்த விவசாயம் தங்களைக் கைவிட்டு விடுவதைத் தாள முடியாமல் தான் இறுதி முடிவு எடுக்கிறார்கள். அவர்களை மீள முடியாத விஷச் சூழலில் தள்ளிவிடுகிறது வட்டியும், கடனும்.

விவசாயம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்பது தான் முக்கியமான சிக்கல். இதற்கு விவசாயத்தை திட்டமிட்ட முறையில் அணுகாத விவசாயிகளும் ஒரு காரணம். விவசாயிகளை இந்த விஷச் சூழலில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசும் ஒரு காரணம். மொத்தத்தில் இப்போதுள்ள விவசாய முறையே விவசாயிகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பதைக் காண்கிறோம். இந்த நிலையில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பது எப்படி?

விவசாயிகளைப் பாதுகாப்பது ஏன் முக்கியமாகிறது? ஏனெனில், நாட்டின் பொருளாதாரத்தில் சரிபாதிக்கு மேல் பங்களிப்பது விவசாயம் தான். நாட்டு மக்களுக்கு பசியாற உணவளிப்பது விவசாயம் தான். நாட்டு மக்கள் தொகை 130 கோடியாகிவிட்ட சூழலில், இன்றும் 60 சதவீதம் பேருக்கு வேலை அளிப்பது விவசாயமே. நாட்டின் ஊரக, கிராமப் புறங்களை இன்றும் வாழச் செய்வது விவசாயமே. விவசாயம் குலையுமானால், நாட்டின் சட்டம் ஒழுங்கும் சீர்குலையும். பஞ்சம் தாண்டவமாடும். தேசிய ஒருமைப்பாடும் கானல்நீராகும். இவை வெறும் கற்பனை மிரட்டல்கள் அல்ல. ஆப்பிரிக்காவில் விவசாயம் நொடிந்ததால் தத்தளிக்கும் தேசங்கள் பல. ஒருகாலத்தில் பொன்னுலகாக வர்ணிக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் கூட விவசாயிகளின் வீழ்ச்சியால் தான் ஏற்பட்டது. தொழில்மயமாதலுக்கு விவசாயத்தை ஒப்புக் கொடுத்த ரஷ்ய சர்வாதிகாரிகளின் கொடுங்கோன்மையால், 1990களில் ரஷ்யாவில் கடும் உணவுப்பஞ்சமும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவும் நேரிட்டன. இவை சமீபகால சரித்திரங்கள்.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் தெரியாமல் அந்தக் குறளை (104-1) சொல்லி விடவில்லை. அதனால் தான் விவசாயத்தைக் காத்தாக வேண்டியுள்ளது. அதற்கு, விவசாயத்தை குலத்தொழிலாகக் கொண்ட விவசாயிகளைக் காத்தாக வேண்டும். அதற்கு விவசாயம் தற்போது சந்திக்கும் சிரமங்களைக் கண்டறிந்தாக வேண்டும். ”நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்பதும் திருவள்ளுவர் கூறிய இலக்கணம் அல்லவா?

அந்த அடிப்படையில் தான் இந்த நூலை எழுதி இருக்கிறார் சு.சண்முகவேல். அடிப்படையில் அவர் ஒரு விவசாயி. தற்போது ஈரோட்டில் பதிப்புத் துறையில் பணிபுரிந்தாலும், அவரது மனம் ஒட்டன்சத்திரம் – கன்னிவாடி அருகில் உள்ள தனது குக்கிராமத்தில் இருக்கும் விவசாய நிலம் மீதே செல்கிறது. வானம் பார்த்து செய்யும் சாகுபடி, விளைச்சல் தந்தாலும் வீட்டு அலமாரியை நிறைப்பதில்லை என்ற உண்மையை சிறுவயது முதலே அவர் கண்டு வந்திருக்கிறார். அவர் தொழில் மாறியதற்கும் காரணம் இதுதான். எனினும், தனது குலத் தொழிலின் மீட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமே இந்த நூலை எழுதுமாறு அவரைத் தூண்டி இருக்கிறது.

விவசாயத்தின் அடிப்படை இயற்கை. வான்மழை பொய்த்தால் விவசாயம் தாங்காது. அப்படியே தாக்குப் பிடித்தாலும், இறுதியில் கிடைக்கும் விளைபொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காவிட்டால் என்ன பயன்? ”காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்?” என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திரைப்பாடல் இன்றும் பொருத்தமாக இருப்பது நிதர்சனம் அல்லவா? ஆக, விவசாயம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அதன் களச் சிக்கல்கள் தவிர, வர்த்தக சிக்கல்களையும் சரிப்படுத்தியாக வேண்டும். சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

அண்மையில் ஈரோட்டில் கூடிய மஞ்சள் விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளுக்கு குவின்டாலுக்கு ரூ. 9,000 வழங்க வேண்டும் என்று விலை அறிவித்தனர். ஒரு குவின்டால் (100 கிலோ) மஞ்சள் உற்பத்தி செய்ய செலவினமே விவசாயிக்கு ரூ. 6,000க்கு மேல் ஆகிறது. ஆனால், சந்தையிலும் அரசு சார்ந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் அதற்கு கிடைக்கும் விலை ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை மட்டுமே. அதே சமயம், மஞ்சள் தூள் விலை கிலோ ரூ. 200 ஆக இருக்கிறது! எனவே தான், தாங்கள் விளைவித்த பொருளுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்வோம் என்று களம் இறங்கி இருக்கிறார்கள் விவசாயிகள். இந்தப் போராட்டம் இன்னமும் வெற்றியை முழுமையாக எட்டவில்லை.

ஆந்திரப் பிரதேசத்தில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கட்டுபடியான விலை கிடைக்காததால் பாலை சாலையில் கொட்டினர் என்பது மற்றொரு செய்தி. கிணத்துக்கடவு தக்காளி மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியால் (கிலோ ரூ. 2க்கு கூடப் போகாத நிலைமை!) கொந்தளித்த விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த தக்காளிகளை திரும்பக் கொண்டுசெல்ல மனமின்றி (அதற்கும் செலவாகுமே!) சாலையோரம் கொட்டிச் சென்றனர் என்பது மற்றொரு செய்தி.

விவசாயிகள் ஒரு பொருளை உற்பத்தி செய்ய 24 மணி நேரமும் பாடுபடுகின்றனர். அதற்குத் தேவையான இடுபொருள்களான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகளின் விலை அதிகரித்திருக்கிறது. விவசாயக் கூலியாட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறி இருக்கிறது. இயற்கை வஞ்சித்தால் தண்ணீர்ப் பற்றாக்குறை வேறு பாதிக்கிறது. நதிநீர்ப் பிரச்னைகளும் விவசாயிகளுக்குத் தான் சம்மட்டி அடி கொடுக்கின்றன. இத்தனைக்கும் பிறகு விளைபொருளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்றால், ஒரு விவசாயி எதற்காகப் பாடுபட வேண்டும்? அரசும் விவசாயிகளைக் கைதூக்கிவிடத் தயாரில்லாதபோது, அவர்கள் விவசாயத்தைக் கடாசிவிட்டு வேறு தொழிலுக்கு மாறுவது நியாயம் தானே?

சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், நம்மால், விளைபொருள்களைப் பாதுகாக்கும் சேமிப்பு, பதனக் கிடங்குகளை மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவிலும்கூட அமைக்க முடியவில்லை. அரசு அளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலைகளும் கூட எல்லா விளைபொருளுக்கும் கிடைப்பதில்லை. கஷ்டப்பட்டு விளைவிக்கும் விவசாயி அடைய வேண்டிய பயன்களை பதுக்கல்காரர்களும், பெரு வர்த்தக நிறுவனங்களுமே அடைகின்றனர். அரசியல்வாதிகள் அவர்களைச் சார்ந்திருப்பதால் விவசாயி கைவிடப்படுகிறான். இந்நிலையை மாற்ற வேண்டும் என்கிறார் இந்நூலாசிரியர்.

அதற்கான 5 செயல்திட்டங்களையும் சண்முகவேல் இந்நூலில் அளித்திருக்கிறார்.

முதல் செயல் திட்டத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்தல், நிலத்தை வரைமுறைப் படுத்துதல், இலக்குகளை நிர்ணயித்தல், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தல் ஆகியவை குறித்து விளக்கி இருக்கிறார்.

இரண்டாவது செயல்திட்டத்தில், தகவல் மையங்கள், அரசு விவசாய மையம், அரசு விவசாய வங்கி ஆகியவை குறித்தும் அவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் தேவை குறித்தும் விளக்குகிறார்.

மூன்றாவது செயல் திட்டம் பயிர்க்கடன் வழகுவது, அதை வசூலிப்பது, அரசு விவசாய வாகனம் (இது தற்போது குஜராத்தில் உள்ளது; தமிழகத்தில் பரீட்சார்த்தமாக பொங்கல் விழா சமயத்தில் நடைமுறையானது) குறித்து அலசுகிறது.

இயற்கை மற்றும் செயற்கைக் காரணங்களால் விவசாயி பாதிக்கப்படும்போது அவனைக் கைதூக்கிவிட ஓர் உறுதியான கரம் தேவை. அதற்கு பயிர்க் காப்பீடு அவசியம். இதில் முறைகேடு நடக்காமல் தடுக்க தகுந்த அமைப்பும் ஆய்வும் அவசியம். இதனை செயல்திட்டம்- 4 விளக்குகிறது.

அடுத்து விளைபொருள்களை சேதமின்றிப் பாதுகாக்கவும், விலை குறையும் தருணங்களில் விலை வீழ்ச்சியைத் தடுக்கவும் கிடங்குகளின் தேவை குறித்து விளக்குகிறார். விளைபொருளின் மாற்றுப் பயன்பாடுகளையும் விவசாயிகளே கூட்டுறவு முறையில் மேற்கொள்வதும் (உதாரணம்: தக்காளி ஜாம் தொழிற்சாலை) குறிப்பிடப்படுகிறது. இந்தப் புதிய செயல் திட்டத்தால் அரசுக்கும் லாபம்; மக்களுக்கும் லாபம்; விவசாயிகளுக்கும் லாபம் என்கிறார், நூலாசிரியர். சொல்வது யார்க்கும் எளியதே. எனினும், இதை ஆராயும் கடமை அரசுக்கு அல்லவா இருக்கிறது?

இறுதியாக, ‘விவசாயிகளும் தொலைநோக்கில் சிந்திக்க வேண்டும்; நவீன உத்திகளைக் கையாள வேண்டும்; இயற்கை விவசாய முறைகளுக்குத் திரும்ப வேண்டும்; மாற்று விவசாய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்; விவசாயம் சார்ந்த அரசு நிர்வாக முறையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்- அப்போது தான் நிலையான வேளாண்மை தொடர முடியும்’ என்கிறார்.

மொத்தத்தில், வேளாண்மை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் செய்ய வேண்டிய அரும்பணியை இந்நூலாசிரியர் செய்திருக்கிறார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார். ”வீழ்ந்து கிடக்கும் விதைகளை மேலெழுப்புவதற்காகவே பெய்யும் மழைத்துளி போல, மாற்றுக்கருத்துக்கள், மாற்றுச் சிந்தனையாளர்களால் இந்த மண்ணை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் என்பதற்கான மெய்யான சான்றே இந்நூல்” என்று தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார் நம்மாழ்வார். இது ஒன்றே போதும் நூலின் சிறப்பை விளக்க.

இதுவல்லாமல், சுதேசி இயக்க மாநிலத் தலைவர்களுள் ஒருவரும் சுதேசி பொருளாதார சிந்தனையாளருமான பேராசிரியர் ப.கனகசபாபதி இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கி இருக்கிறார். ‘திருப்பூர் அறம் அறக்கட்டளை’ இந்நூலை சிறப்பாக வெளியிட்டிருக்கிறது. இப்பணியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

இந்நூலின் துவக்கத்தில் 1870 ம் ஆண்டுகால கடும் பஞ்சக் காட்சிகளை வெளியிட்டு உருவகமாக நம்மை மிரட்டி இருக்கின்றனர் நூல் வெளியீட்டாளர்கள். விவசாயம் காக்கப்படாவிட்டால் கடைசியில் அது தானே நடக்கப் போகிறது?

விவசாயம் புறக்கணிக்கப்பட்ட துறையாக இருப்பதற்கு இத்துறையில் வரும் நூல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே சாட்சி. அந்தக் குறையைப் போக்குவதாகவும் இந்நூல் உள்ளது. விவசாயம் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இந்த நூல்.

விவசாயிகளைப் பாதுகாப்போம்
– சு.சண்முகவேல், ஈரோடு.
பக்கங்கள்: 80
விலை: ரூ. 40
வெளியீடு: அறம் அறக்கட்டளை,97/98, மிஷன் வீதி, திருப்பூர்- 641 604.

தொலைபேசி: 72008 55666.
மின் அஞ்சல்: aramtirupur@gmail.com
வலைத்தளம்: https://aramtirupur.blogspot.in/

27 Replies to “விவசாயிகளைப் பாதுகாப்போம்”

  1. மதிப்பிற்குரிய சேக்கிழான் அவர்களுக்கும், தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை சமர்பிக்கிறேன். ஒரு சிறிய கிராமத்தில், ஒரு சிறு விவசாய குடும்பத்தில் பிறந்த நான், எனது அனுபவங்களைக்கொண்டு விவசாய துறையை எவ்வாறு சரிசெய்ய முடியும் என்பதை
    ஒரு தொகுப்பாக அளித்துள்ளேன். இத்திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது? என்பது குறித்து இத்துறை சார்ந்த வல்லுனர்கள் சிந்திக்க வேண்டும் என்பது நமது விருப்பமாகும்.
    “இனியொரு மனித பேரழிவு உணவு பஞ்சத்தால் உண்டாகக்கூடாது என்பதே நமது நோக்கமாகும். உலகிற்கே உணவளிக்கும் உழவனைக்காக்க எல்லோரும் சிந்திப்போம்.

    நூல் பெற விரும்புவோர் :
    கீழ்க்கண்ட வங்கி கணக்கிற்கோ அல்லது மணியார்டர் மூலமாகவோ பணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். நூல் விலை ரூ.40 கூரியர் செலவு : ரூ.25

    Bank Account Details :

    Bank : Axis Bank
    A/c. Name : S.Shanmugavel
    A/c. No. : 118010100143660
    Branch : Perundurai Road, Erode
    IFSC Code No. : UTIB0000118.
    ——————————————–
    M.O Address :
    S.Shanmugavel
    Viswa Designer
    315, Arun Complex,
    Near Savitha Bus Stop,
    Erode-638 001.
    Mobile : 99655-04428

  2. விவசாயத்தை பாதுக்காக்க வேண்டும் இல்லையேல் பஞ்சம் வருவது தவிர்க்க இயலாததாகி விடும். விவசாயத்தைப் பாதுக்காக்க விவசாயியை பாதுக்காக வேண்டும். என்ற கருத்துக்கள் சிந்தனைக்குரியவை. நூலாசிரியர் ஸ்ரீ சண்முகவேல் மற்றும் கட்டுரையாளர் ஸ்ரீ சேக்கிழான் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். நூலை அவசியம் படிக்கத்தோன்றுகிறது.
    இந்திய விவசாயத்தின் மோசமான நிலைக்கு பசுமைப்புரட்சியின் தொழில் நுட்பமே பெரும் காரணம்.
    விவசாயியைக் கடனாளியாக்கி விளைநிலத்தை மலடாக்கி அடுத்த தலைமுறையையே விவசாயத்தை விட்டு நகர்புறம் நோக்கி ஓடவிட்டது அரசின் பசுமைப்புரட்சி. பசுமை புரட்சித் தொழில் நுட்பத்தின் சந்தை வலையிலிருந்து சுழலில் இருந்து நம் உழவர்கள் மீழவேண்டும். இரசாயன உரமும் பூச்சிக்கொல்லியும் நம் விவசாயத்தை லாப மயக்கத்தில் உழலச்செய்யும் பிசாசுகள் என்பதை உணரவேண்டும். இல்லையேல் நமது விவசாயம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடகு போகும் துர்பாக்கியம் ஏற்படும். உணவுப்பாதுகாப்பு மட்டுமல்ல உணவு சுதந்திரமே கேள்விக்குறியாகும்.
    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
    உழவன் மகன்
    விபூதிபூஷன்

  3. மிக அருமையான தகவல்கள்,,,,,,
    பயனுள்ள கட்டுரை,,,,,,
    வாழ்க தமிழ் ஹிந்து,காம்

  4. திரு.சேக்கிழான்,

    இக்கட்டுரையின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் புத்தகத்தின் நோக்கம் உயரியதாக இருந்தாலும், நடைமுறை சாத்தியமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    அடிப்படையில் இது குறித்து எழுதப்படும் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளில் உள்ள குறை இதிலும் உள்ளது. விவசாயம் புனிதமானது என்ற மனநிலைதான் அது. என் கட்டுரை ஒன்றிலும் இது குறித்து எழுதியிருந்தேன். சில விவரங்களை மீண்டும் எழுதுகிறேன்.

    மாறிவரும் காலகட்டத்தில், பார்வை மாற்றம் அவசியம்.
    – விவசாயம் ஒரு தொழில்-இலாபமும் நஷ்டமும் வரக்கூடிய ஒரு தொழில்
    – நவீன வாழ்க்கை முறைமைகளை ஏற்றுக்கொண்டு விட்டபிறகு, விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு மாறுவது சாதாரண சமூக மாற்றமே! இந்த மாற்றத்தில் சிலர் பாதிக்கப்படவே செய்வார்கள். உலகளவில் இது நடக்கவே செய்தது. இந்தியாவிலும் கடந்த 50 வருடங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் மாற்றங்கள் ஏற்படப்போவது சர்வ நிச்சயம்.
    – சமூகத்தில் விவசாயிகளுக்கு அந்தஸ்து இல்லை. இதை சத்தியமாக வலுக்கட்டாயமாக புகுத்த முடியாது.
    – விவசாயத்தில் ஈடுபட பெரும்பாலான விவசாயிகளுக்கு விருப்பம் இல்லை.

    உழவன் மகன் திரு.விபூதிபூஷணுடனான என் கருத்து மோதல் தொடரவே செய்கிறது. நான் 3 விவரங்களைத்தர விரும்புகிறேன்.
    (1) பசுமைப் புரட்சியினால்தான் விவசாயம் சீரழிந்ததாகவும், இரசாயண உர பூச்சாண்டியையும் உலகில் பலர் மீண்டும் மீண்டும் உரக்க கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

    கொஞ்சம் நம் வரலாற்றை திரும்பி பார்ப்போமா?
    வருடம் 1961-என் அருமை அமேரிக்க தோழர் திரு.ராபர்ட் போர்லாக் ஒட்டு விதை ரகங்களை கண்டுபிடிக்கிறார். நம் பிரதமர் நேருவும் அதை இந்தியாவில் அறிமுகப்படுத்த முயல்கிறார். ஆனால் திரு.சிவஸ்ரீ. விபூதிபூஷண் அவர்களின்
    ஒன்றுவிட்ட நண்பர் குழாமில் அன்று இருந்த விவசாயிகள், பல போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். திரு. நேரு முயற்சியை கைவிடுகிறார்.

    காட்சி மாற்றம்-காலம் மாற்றம்.
    வருடம் 1963-இந்தியாவில் வரலாறு காணாத வரட்சி, பஞ்சம், பட்டினி- தானியங்கள் வேண்டிய அளவு இல்லை. திரு.நேரு தன் சித்தாந்த முன்னோடிகளான கம்யூனிஸ்ட் கொரில்லாக்களின் படி யோசித்திருந்தால், திறமை உள்ளோர் தப்பித்துக் கொள்ளட்டும். மற்றோர் மாண்டு போகட்டும் என்ற நியாயமான(!) முடிவை எடுத்திருப்பார். ஆனாலும் இந்திய சிந்தனையும்,
    அவர் ஒதுக்கித்தள்ளிய நம் மரபும் அவரை வேறுவிதமாக சிந்திக்கத் தூண்டின. திரு.எம்.எஸ். சுவாமிநாதனை அனுப்பி என இனிய அமேரிக்க நண்பர் திரு.ராபர்ட் போர்லாகிடமிருந்து ஒட்டு விதைகளை வாங்கி வந்தார். 1963லிருந்து 1965 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தானிய உற்பத்தி 10 மடங்கு அதிகரித்தது. 20 மில்லியன் டன் தானிய உற்பத்தியிலிருந்து 200 மில்லியன் டன்னாக ஆனது. தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்தது.

    கொசுரு செய்தி. 1961ல் வானுக்கும் பூமிக்குமாக திரிவிக்ரம அவதாரம் எடுத்த நம் விவசாயிகள் வரட்சியைக் கண்டவுடன் ஒட்டு விதையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்கள்.

    Moral-ஒட்டு விதைதான்-இரசாயண உரம்தான்-அவைதான் இந்தியாவிற்கு உணவு பாதுகாப்பை அளித்தது. இயற்கை விவசாயமும், இயற்கை உரமும் நம்மை மீளாத்துயரத்திற்குத்தான் கொண்டு சென்றன. பச்சையான உண்மை இதுதான்.

    உழவன் மகன் திரு.சிவஸ்ரீ. விபூதிபூஷண் ஒன்றை மட்டும் கூறிவிட்டு பிறகு பசுமை புரட்சியை விமர்சிக்கட்டும். வரட்சி, பஞ்சம், பட்டினி போன்றவை வந்தாலும் பரவாயில்லை. இயற்கை உரத்தினால் சாகாத பூச்சிகளால் மகசூல்
    குறைந்தாலும் பரவாயில்லை. மக்களில் ஒரு தொகுதியினர் இறந்தாலும் பரவாயில்லை. இரசாயண உரத்தை நாம் உபயோகிக்கக் கூடாது. இப்படி மட்டும் அவர் கூறட்டும். நான் அவரை பாராட்டுவேன்.

    (2)ஒரு கணக்கு-இந்தியாவில் இருக்கும் விளைநிலங்களில் இயற்கை விவசாயத்தைக் கொண்டு அவ்வப்போது வரட்சி, பட்டினி, சாவு போன்றவற்றை சகித்துக் கொண்டுதான் நம் சமூகம் வாழ்ந்து வந்தது. உலகம் முழுவதும்
    இந்த நிலைதான் இருந்தது. விளைநிலங்களின் அளவு அப்படி ஒன்றும் அதிகமாகவில்லை. காட்டை அழிக்கக்கூடாது என்று சிலர் வேறு உரண்டை இழுக்கிறார்கள். ஆனால் மக்கள்தொகை அதிகரிப்பில் நம் ஆட்கள் சளைப்பதே இல்லை. அதே அளவு விளைநிலங்களைக் கொண்டு, இயற்கை விவசாய முறைகளைக் கொண்டு, வரலாறு காணாத மக்கள் தொகைக்கு எவ்வாறு உணவு அளிப்பது?

    உழவன் மகன் திரு.சிவஸ்ரீ.விபூதிபூஷண் ஒன்றை மட்டும் கூறட்டும். 121 கோடி மக்கள்தொகையில் பாதிக்கு பாதி இறந்தாலும் பரவாயில்லை. இயற்கை விவசாயத்தைத்தான் அனுசரிக்க வேண்டும் என்று கூறட்டும். நான் அவரை
    மனதார பாராட்டுவேன்.

    (3)இயற்கை உரம்-மாட்டு சாணி.
    திரு.சிவஸ்ரீ.விபூதிபூஷண் மட்டுமல்ல. அவரைப் போல் சிந்திக்கும் பலர் உலகளவில் உள்ளார்கள். மாட்டு சாணியைக் குறித்து கொஞ்சம் எழுதித்தான் ஆகவேண்டும்.

    ஒரு கதை. 1950களில் என் தாயார் திருச்சிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவர் வீட்டில் 2 அல்லது 3 பசுக்கள் இருக்குமாம். அப்பசுக்களை குளிப்பாட்டுவது, இடத்தை சுத்தபடுத்துவது, குறிப்பாக சாணியை அள்ளி ஒரு இடத்தில் சேகரித்து வைப்பது போன்ற வேலைகளை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒருவர்தான் செய்திருக்கிறார். சில மாதங்கள் கழித்து எருவாக மாறிய அந்த சாணிக்குவியலை வயலில் தெளிப்பதும் அவரேதான்.

    நான் இன்று வசிப்பதும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்தான். பழைய கதைகளை பேசும் அனைவரும் “என் வீட்டில் பசுக்கள் இருந்தன-பாலை நாங்கள் வெளியில் வாங்கியதே இல்லை-இன்றுதான் பாலுக்காக இப்படி அலைய
    வேண்டியுள்ளது” என்ற வசனங்கள் வந்துகொண்டே இருக்கும்.

    இப்பொழுது ஏன் நீங்கள் பசு வளர்ப்பதில்லை?-இதற்கு எளிமையான ஒரே பதில்-யார் அதை பராமரிப்பது? ஒருவரும் வேலைக்கு கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் பலமுறை சாணி அள்ள வேண்டும்; குளிப்பாட்ட வேண்டும்.சுத்தம் செய்ய வேண்டும்;மாட்டுக்கொசுவின் பிரச்சினையை பொறுத்துக் கொள்ள வேண்டும்;

    நானோ, என் நண்பர்களோ, உறவினர்களோ, அவர்களின் சந்ததியினரோ மாட்டு பராமரிப்பில் ஈடுபடப்போவதில்லை. இது போன்ற வேலைகளுக்கு ஆட்களும் கிடைக்கப்போவதில்லை.

    மாட்டு சாணியை சேகரித்து பசுக்களை பராமரித்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பான்மையானோர் வேறு வேலைக்கு சென்று விட்டனர்.

    மாட்டு சாணி, பசு பராமரிப்புக்கு ஆள் பற்றாக்குறை; இந்த பிரச்சினைகளைப் பற்றி பேசாமல் மீண்டும் மீண்டும் இயற்கை உர புராணத்தை பாடி யாரை நாம் ஏமாற்றப் போகிறோம்? நம்மையா? மற்றவர்களையா?

    இயற்கை முறையிலான பூச்சிக் கொல்லி மருந்துகளை தயாரிப்பதிலும் இதே நிலைதான்.

    கடைசியாக இப்படி முடிக்கிறேன்.
    இரசாயண உரத்தால்தான் இன்று இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. அதனால் சில பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான். யாரும் அதை மறுக்கவில்லை. இதற்கு மாற்று என்பது அறிவியல்
    ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தி இந்த பக்கவிளைவுகளைக் குறைப்பதுதான். அதுவும் அடுத்த 25 முதல் 50 வருடங்களில். அது வரை என்ன செய்வது? நன்றாக இரசாயண உரத்தை உபயோகப்படுத்துவதுதான். இரசாயண உரத்தினால் விளைந்த
    நன்மைகளே அதிகம். தீமைகள் மிகவும் குறைவு.

    இரசாயண உர பயன்பாட்டை உடனடியாக நிறுத்தினால், கோடி கோடியாக மக்கள் மடிந்து வீழ்வர். அப்படி நடப்பதை நான் ஆதரிக்கவில்லை.

    விவசாயத்தைப் பொறுத்தவரை, என் கருத்து இதுதான். பெரிய ஸ்கேலில் இந்தியாவின் சில பிராந்தியங்களில் பரிட்சார்த்த முறையில் பெரும் பணக்காரர்களினால் நடக்க வேண்டும். மிகப்பெரிய முதலீடு இன்று விவசாயத்துறைக்கு தேவைப்படுகிறது. 1 அல்லது 2 ஏக்கர் நில உரிமையாளர்களால் பெரியதாக ஒன்றும் செய்து விட முடியாது. உடனடியாக
    நில உச்சவரம்பு திட்டம் நீக்கப்பட வேண்டும். அந்நிய முதலீட்டையும் நான் ஆதரிக்கவே செய்கிறேன். குறிப்பாக இஸ்ரேலின் விவசாயிகள் சொட்டு நீர் பாசன தொழில் நுட்பத்தில் தலைசிறந்து விளங்குகிறார்கள். தெரியாததை
    அடுத்தவர்களிடமிருந்து தெரிந்து கொள்வது கௌரவ குறைச்சலில்லை. ஆனால் சும்மா ஓசிக்கு எதுவும் நடக்காது. விவசாயக் கொள்கைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு அவர்களை இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும். தொழில்நுட்பம் நமக்கு அவசியம். மேலும் இந்தியாவில் உள்ள தனியார் பணக்காரர்களை விவசாயத் தொழிலுக்கு இழுக்க வேண்டும்.

    அரசாங்கம் எல்லா விஷயத்திலும் தலையிடாது என்ற நிலையை அரசு எடுத்தால்தான் முதலீடு வரும். தொழில்நுட்பம் வரும். உற்பத்தி பெருகும்.

    நான் ஏற்கெனவே எழுதியதைப் போல் இரசாயண உரத்தின் சில சிரமங்களிலிருந்து நிவாரணத்தை அறிவியல் ஆராய்ச்சியின் மூலமாகவே எதிர்காலத்தில் நாம் பெற முடியும்.

    அறிவியலின் மூலம்தான் மனிதன் இன்று நெடுநாள் வாழ்கிறான். வசதியுடன் வாழ்கிறான். சந்தோஷமாக வாழ்கிறான். என் முப்பாட்டனும் அவனுக்கு முப்பாட்டனும் வசதியின்றி, தொழில்நுட்பமின்றி, மருத்துவமின்றி, போக்குவரத்து
    வசதிகளின்றி, தொலைத்தொடர்பு வசதிகளின்றி சராசரியாக 30 வயது வரைதான் வாழ்ந்தான். ஆனால் நான் சந்தோஷமாகவே வாழ்கிறேன். 75 வயதுவரை சராசரியாக மனிதன் வாழ்கிறான்.

    இன்றுள்ள பிரச்சினைகளையும் வரும்கால அறிவியல் தீர்த்து விடும். கற்கால நாகரீகத்திற்கு என்னைக் கொண்டு செல்லும் எந்த சித்தாந்தத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. சுதேசி பொருளாதாரத்தையும் சேர்த்து.

  5. அன்புள்ள ஆர்.பாலாஜி அவர்களுக்கு, பசுமைப் புரட்சி என்று இன்று அழைக்கப் படும் காலகட்டத்தில் பல்வேறு விதமாக வேளாண் செயல்பாடுகள் நிகழ்ந்தன – ரசாயன உரங்களின் பயன்பாடு, வீரிய ஒட்டு விதை ரகங்கள் போன்றவை அதன் சிறு பகுதிகள் மட்டுமே தவிர அவற்றின் தாக்கமே முழு முற்றானவை என்றூ சொல்லி விட முடியாது.

    60களில் இந்திய விவசாயத்தின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை ஆராய்ந்த உலக விவசாய அறிஞர்களில் பலர், உலகத்திலேயே மிக அதிக output தரக்கூடிய விளைச்சலாக இந்தியாவின் அப்போதைய விவசாயம் இருந்திருப்பதற்கு சான்று பகர்ந்திருக்கிறார்கள். மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஈடாக அது scale செய்யப் படவில்லை என்பது மட்டுமே அதன் குறைபாடு.

    பசுமைப் புரட்சியின் மிக முக்கியமான செயல்பாடு என்பது ஏராளமான தரிசு நிலங்களை விளைச்சலுக்கு கொண்டு வந்ததும், மாபெரும் அணைக் கட்டுகளையும், நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளையும் உருவாக்கியதே – இது மட்டுமே அந்தக் குறைபாடுகளை சரி செய்திருக்கக் கூடும். இவை இந்திய அரசின் உள்நாட்டு செயல்பாடுகள், இவற்றில் அன்னிய நிறுவனங்களுக்கான சந்தையோ, அவற்றின் பங்களிப்போ எதுவும் இல்லை.

    ஆனால் பசுமைப் புரட்சியின் சந்தடி சாக்கில், ரசாயன உரங்களும், வீரிய விதைகளும் தடாலடியாக கொண்டு வந்து இறக்கப் பட்டன. அவற்றுக்கான இந்திய அரசு அளித்த மானியத்தின் பெரும்பகுதி மேற்கத்திய கம்பெனிகளுக்குப் போயிற்றூ.. சில பத்தாண்டுகள் பிறகு இந்தியக் கம்பெனிகளே உரத்தயாரிப்பில் பெருமளவு ஈடுபட்டபோது, அந்த ரசாயன உரங்கள் மாபெரும் சூழியல் அழிவை ஏற்படுத்துபவை என்றும், மேற்கத்திய நாடுகளிடம் அதை விட சிற்ப்பான உரங்கள் உள்ளன என்றும் அதே “நிபுணர் குழுக்கள்” ராகம் பாடின. இப்போது நமது சுய புத்தியைப் பயன்படுத்தியே இந்த உரங்களும், செயற்கை விதைகளும் எப்படி நமது மண்ணையும், அதன் வளத்தையும் அழித்திருக்கின்றன என்று நாமே தெரிந்து கொண்டிருக்கிறோம்.

    பசுமைப் புரட்சியின் மோசமான அம்சம் இது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். காலச்சுவடு இதழில் சங்கீதா ஸ்ரீராம் எழுதிய தொடர் கட்டுரைகளில் இதனை விரிவாக அலசியுள்ளார்.. விரைவில் அது புத்தகமாகவும் வர இருக்கிறது. கட்டாயம் நீங்கள் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

    இயற்கை வேளாண் முறைகள் என்றால் அது மாட்டுச் சாணி மட்டும் அல்ல, பல்வேறு விதமான செயல்பாடுகளை உள்ளடக்கிய விஷயம் அது. அறிவியல்பூர்வமாக பல்வேறூ புதிய வழிமுறைகளுக்கான சாத்தியங்கள் அதில் உண்டு.. உதாரணமாக, மாட்டுச் சாணியின் இடத்தை பெருகி வரும் நகர்ப்புறங்களின் மட்கும் குப்பைகள் இட்டு நிரப்பக் கூடும். அவற்றை பயனில்லாமல் landfillகளில் கொட்டி மூடுவதை விட இயற்கை உரமாக மாற்றி விட முடியும், இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பமே அதற்கு சிறந்த முறையில் உதவக் கூடும்.

  6. ஸ்ரீ பாலாஜிக்கும் அடியேனுக்கும் உள்ள மாறுபாடுகள் அடிப்படை சார்ந்தவை. அவை தொடரட்டும். என்னைப்பொறுத்தவரை நம் பாரம்பரியத்தில் முழுமையான நம்பிக்கைக்கொண்டவன். ஆன்மிகம் மட்டுமல்ல அதன் வேளாண்மை, மருத்துவம், இலக்கியம் போன்ற பலதுறைகளிலும் நம்முடைய பாரதப்பரம்பரியம் மகோன்னமானது. பொருளாதார வளர்ச்சிக்கு அன்னியரை சார்ந்து தன்னை இழந்துதான் ஆகவேண்டும் என்பது வெறும் காலனிய மாயை. ஹிந்து என்பதும் ஹிந்துத்துவம் என்பதும் பாரம்பரியத்தைக் காத்தல் பின்பற்றுதல் அது வெறும் அடையாளம் அன்று.
    ஸ்ரீ பாலாஜியின் வினாக்களுக்கு ஸ்ரீ ஜடாயு அருமையாக பதில் வழங்கியுள்ளார். நன்றி அவரது கருத்து முற்றிலும் ஏற்கத்தக்கது. என்பங்கிற்கு அடியேனும் பதில் சொல்ல விளைகிறேன்.
    ௧. “வரட்சி, பஞ்சம், பட்டினி போன்றவை வந்தாலும் பரவாயில்லை. இயற்கை உரத்தினால் சாகாத பூச்சிகளால் மகசூல்
    குறைந்தாலும் பரவாயில்லை. மக்களில் ஒரு தொகுதியினர் இறந்தாலும் பரவாயில்லை. இரசாயண உரத்தை நாம் உபயோகிக்கக் கூடாது”.
    இயற்க்கை வேளாண்மையை ப்பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள். இயற்கை வேளாண்மையில் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும். ரசாயன உரத்தினால் பூச்சிக்கொல்லிகளால் வீரிய விதைகளால் தான் பூச்சி பெருகுகிறது. Pest resurgence என்று அதை சொல்வார்கள். நிலம் மலடாகிறது, இயற்கை வேளாண்மை செய்கிற விவசாயிகளும் வேகமாக பெருகி வருகிறார்கள், முன்னேறி வருகிறார்கள். இயற்கை வேளாண்மையால் உணவு உற்பத்தி குறையும் என்பது பன்னாட்டு கம்பெனிகள் பாலாஜி போன்ற அவர்களது ஆதரவாளர்களின் பொய் பிரச்சாரம் . ஸ்ரீ சுபாஷ் பாலேகர், நம்ம ஐயா ஸ்ரீ நம்மாழ்வார், தினமணியில் கட்டுரை எழுதும் ஆர். எஸ் நாராயணன் ஐயா ஆகியவர்களின் கட்டுரைகளை நூல்களைப்படித்து. ஒன்றிரண்டு இயற்க்கைப்பன்னைகளுக்கு சென்றுவந்து சத்தியத்தை ஸ்ரீ பாலாஜி போன்ற வலது சாரிகள் உணரவேண்டும். உணவு உற்பத்தி பசுமைப்புரட்சி த்தொழில் நுட்பத்தால் அல்ல நீர்பாசனத்தால், அதிக சாகுபடிப்பரப்பினால், அரசுடைமையான வங்கிகளால் வழங்கப்பட்ட கடனால் விளைந்தது என்பதே உண்மை. பாரம்பரிய விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது என்பதை பல வரலாற்று ஆய்வுகளும் நிருபித்துள்ளன.
    ௨. “ஒரு கணக்கு-இந்தியாவில் இருக்கும் விளைநிலங்களில் இயற்கை விவசாயத்தைக் கொண்டு அவ்வப்போது வரட்சி, பட்டினி, சாவு போன்றவற்றை சகித்துக் கொண்டுதான் நம் சமூகம் வாழ்ந்து வந்தது”. இது பொய் பஞ்சம் என்பது காலனி ஆதிக்கத்தின் விளைவு அன்றி நமது பாரம்பரிய விவசாயத்தின் அதன் தொழில் நுட்பத்தின் தாக்கம் அன்று. அந்நிய முகலாயர் காலத்தில் கூடப்பஞ்சம் வந்ததாக த்தெரியவில்லை.
    ௩.”இயற்கை உரம்-மாட்டு சாணி”. இயற்கை வேளாண்மையை மாட்டுச்சாணியோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவேண்டாம்.மாடு மட்டுமல்லை பன்றியைக்கூட அழகாக இயற்க்கை வேலான்மைக்குப்பயன் படுத்தலாம் என்று ஸ்ரீ சுறா பாலரின் விருக்ஷ ஆயுர் வேதம் கூறுகிறது. ஸ்ரீ நாராயணன் ஐயா அந்த அற்புத நூலை தமிழில் பெயர்த்துள்ளார். படித்துப்பாருங்கள்.
    “மாட்டு சாணியை சேகரித்து பசுக்களை பராமரித்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பான்மையானோர் வேறு வேலைக்கு சென்று விட்டனர்”. மாட்டு சாணி புனிதமானது அதை எல்லோரும் கையாண்டனர். நானும் கூட பள்ளியில் படித்தக்காலத்தில் விடுமுறையில் ஆடு, மாடு மேய்த்திருக்கிறேன். இன்றும் எனது சொந்த உரில் அம்மாவும் அப்பாவும் மாடு வளர்கிறார்கள். இன்றும் மாட்டு சானத்தைபயன் படுத்தி ஸ்ரீ தபோல்கரின் அமிர்தக்கரைசல் ஸ்ரீ பாலேகரின் ஜீவாமிர்தம் தயாரிக்கிறேன் வீட்டுத்தொட்டத்திற்காக. பசு மாட்டை வளர்ப்பதற்கு எந்த உண்மையானவிவசாயும் தயார்தால். ஸ்ரீ பாலேகர் சொல்கிறார் நம் நாட்டு மாடு ஒரு ஜோடி இருந்தால் முப்பது ஏக்கர் விவசாயம் செய்யலாம் என்று. சத்தியத்தை உணர்ந்துக்கொள்ளக்கூட உணர்வு வேண்டும். பக்தி நம்பிக்கை இதிலும் கூட அவசியமே. ஸ்ரீ சுபாஷ் பாலேகர் சொல்கிறார் விவசாயம் கூட அத்வைத அனுபவம் என்று.
    ௨. “பெரிய ஸ்கேலில் இந்தியாவின் சில பிராந்தியங்களில் பரிட்சார்த்த முறையில் பெரும் பணக்காரர்களினால் நடக்க வேண்டும். மிகப்பெரிய முதலீடு இன்று விவசாயத்துறைக்கு தேவைப்படுகிறது”. இது தான் நடைமுறையில் சாத்தியமில்லாதது. எல்லோரையும் தொழிலாளியாக்கும் உங்கள் வலது சாரி மனோபாவம் இதிலும் புலப்படுகிறது. வேளாண்மை நிர்வாகவியல்(farmmanagement) ஆய்வுகள் கூட உற்பத்தித்திறன் சிறு விவசாயிகளிடம் அதிகம் இருப்பதாகசொல்லும். அமெரிக்க பெரிய பண்ணைகள் அரசின் மிக அதிகப்படியான மானியத்தை ச்சார்ந்துள்ளன. ஒருகால் பெரிய பண்ணைகள் விவசாயத்தில் ஆதிக்கம் செலுத்தினால் உணவுப்பாதுக்காப்புக்கு ஆபத்து ஏற்படும். அதிலும் அந்நிய முதலீடு ஆபத்து உணவு முழுதும் விசமாகிவிடும். உணவுப்பொருள்களின் விலையேற்றம் விண்ணை முட்டிவிடும்.
    ௫. “இரசாயண உரத்தின் சில சிரமங்களிலிருந்து நிவாரணத்தை அறிவியல் ஆராய்ச்சியின் மூலமாகவே எதிர்காலத்தில் நாம் பெற முடியும்”. ஒருகாலத்திலும் ஆராய்ச்சிகள் அந்த நோக்கில் செய்யப்படாது, ஆய்வகங்கள், பாலாஜி போன்ற அறிவியலார் ஆகியோர் பன்னாட்டு கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார். இவர்கள் புத்தியெல்லாம் பணம் பாண்ணும் குயுக்திதான். சுற்றுச்சுழலைக்காக்கும் தொழில் நுட்பம் பண்ணையிலேயே கிடைக்கும். அதற்கு பெரும் முதலீடு சார்ந்த நுட்பங்கள் தேவையில்லலை. அவற்றின் விலை மிக அதிகம். தும்பைவிட்டு வாலை ஏன் பிடிக்க வேண்டும்.
    இறுதியாக சொல்கிறேன் Small is beautiful. Truth is simple. இயற்கையோடு இணைந்த வாழ்வே இனிமையானது.
    சத்யமேவ ஜெயதே
    விபூதிபூஷன்

  7. எவ்வளவு ஆரோக்கியமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. திரு.ஆர்.பாலாஜி பொருளாதாரச் சிந்தனையில் இந்த மறுமொழியைக் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அதற்கு ஜடாயுவின் பதிலும் அருமையாக இருக்கிறது.

    கட்டுரை அருமை. அதைவிட மறுமொழிகள் அருமை.

    மக்களைச் சிந்திக்க வைக்கும் தளமாக தமிழ்ஹிந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு நண்பர் என்னிடம் கூறும்போது இத்தளம் மதக்காழ்ப்புக்காக மட்டுமே (!) இயங்குவதாக விமர்சித்தார். அவருக்கு தமிழ்ஹிந்துவில் வரும் இதுபோன்ற கட்டுரைகளை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன். பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

  8. திரு. ஆர். பாலாஜி அவர்களுக்கு ….

    (1) கி.பி. 1500 வரை மேற்கத்திய நாடுகளில் அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ அறிஞர்கள்கூட இயற்கை குறித்த தவறான கருத்திலேதான் இருந்தார்கள். ஆனால், நம் நாட்டில் கி.மு.900 ஆண்டுகளிலேயே விவசாயம் துவங்கி விட்டதாக ஆய்வு நூல்கள் கூறுகிறது.

    ஆங்கிலேயர்கள் நம் நாட்டை அடிமைப்படுத்த இரண்டு விசயங்களை கையாண்டனர். ஒன்று : குருகுலக்கல்வி ( மெக்காலேய கல்வி முறை மூலம் இன்று ஓரளவு அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் ). இரண்டு : நாட்டு பசுவை மையமாக வைத்து நடைபெற்ற இயற்கை விவசாயம். (1760 ல் ராபர்ட் கிளைவ் பசுவதை கூடங்களை நிறுவினார். அதில் ஒரு நாளைக்கு முப்பது ஆயிரம் பசுக்கள் படுகொலை செய்யப்பட்டது. 1947 க்கு பிறகு பிரதமரான நேரு 350 என்றிருந்த பசுவதை கூடங்களை முப்பத்தியாறு ஆயிரம் என்று அதிகப்படுத்தினார். திட்டமிட்டு நாட்டு பசுக்களை அழித்தார்கள். இதன் விளைவாக நாம் உரங்களுக்கு வெளி நாட்டவரை நாட வேண்டி வந்தது. அப்போதுதான் ரசாயன உரமான யூரியா, பாஸ்பேட் போன்றவை நம் நாட்டுக்குள் நுழைந்தது.

    1962 ல் ஏற்பட்ட சீன போரும், 1965 ல் ஏற்பட்ட பாகிஸ்தான் போரும் அதே ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியும் மக்களை நிலைகுலையசெய்தது. விவசாயத்தை சீர்குலைத்தது. இந்த சூழ்நிலையில்தான் பசுமை புரட்சி திட்டம் அறிமுகப்படுத்தபட்டது.

    (2) அடுத்த சந்திப்பில்….

  9. திரு. பாலாஜி அவர்களே……

    இயற்கை விவசாயம் குறித்த தங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை……தாது வருட பஞ்சமும் சரி…அதன் பின்பு வந்த பஞ்சங்களும் சரி…… விநியோக முறையில் ஏற்பட்ட குளறுபடிகள்……சில வருடங்கள் தொடர்ந்து மழை இல்லாமல் போவது வெகு அரிதாக நடந்தது…..அதையும் கூட நம் மக்கள் வரமாகவே ஏற்றுக்கொண்டனர்……[ நன்கு காய்ந்து வெடித்துள்ள பூமியில் நீர் ஆழமாக இறங்கும்……ஒட்டுண்ணிகள் முழுமையாக மடிந்து கருகும் ] வறட்சியை எதிர்கொள்வதில் நம் மக்கள் நிபுணத்துவம் பெற்றிருந்தனர்…..

    இயற்கை விவசாயத்தில் பசுமாடு ஒரு முக்கிய அங்கம்……பசுக்களை பராமரிப்பது சிரமம் என்பதால் அவற்றை கேரளாவுக்கு அடிமாடாக அனுப்புவதுதான் நல்லது என்று கூறமாட்டீர்கள் என்று நம்புகிறேன்…….

    பசுமைப்புரட்சியும் சரி , நவீன வேளாண்மையும் சரி , உரம் மற்றும் பூச்சி மருந்து கம்பெனிகளின் நலனை பேணிக்காப்பவை……விவசாயியின் நலம் அதில் இரண்டாம் பட்சம்தான்…….

    சங்கீதா ஸ்ரீராம் அவர்களின் ” பசுமை புரட்சியின் கதை ” நூலுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய ” இந்திய வேளாண்மையின் துயரக் காவியம் ” எனும் கட்டுரையை படித்துப்பாருங்கள்…….

  10. நான் என் முந்தைய மறுமொழியில் குறிப்பாக 2 பிரச்சினைகளை எழுப்பியிருந்தேன். (1) இயற்கை விவசாய முறைகளால் 121 கோடி மக்களுக்கும் உணவை உற்பத்தி செய்ய முடியாது. (2)இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் சமுதாய மாற்றங்கள் பாரம்பரிய விவசாயத்தின் முதுகெலும்பை உடைத்துவிட்டன.

    திரு.ஜடாயுவும் சரி, திரு.சிவஸ்ரீ.விபூதிபூஷனும் சரி, அவர்களின் கருத்தை, நோக்கத்தை, ஆசையை கூறியிருக்கிறார்களே தவிர, சான்றுகளை அல்ல.

    (1)முதல் கேள்விக்கான அவர்களின் மறுப்பும் என் புரிதலும்:

    திரு.ஜடாயு, சில விவசாய நிபுணர்கள், இந்தியாவின் பாரம்பரிய விவசாய முறைகளைக் கொண்டே இந்திய மக்கள் தொகைக்கு ஈடான உணவு உற்பத்தியை எட்டியிருக்க முடியும் என்று 1960களில் கருதியதாக கூறுகிறார். பழைய
    கதையை விட்டு விடுவோம். இயற்கை விவசாயத்திற்கென்று ஒரு மிகப்பெரிய விஞ்ஞானிகள் கூட்டம், இயற்கை ஆர்வலர்கள், அபிமானிகள் உள்ள காலகட்டத்தில்தானே நாம் இருக்கிறோம்.

    தோராயக்கருத்துகளைக் கொண்டோ (Hypothesis), ஏன் கோட்பாடுகளைக் (Theory) கொண்டோ கூட கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது என்பதை நான் கூற வேண்டியதில்லை. ஒரு எளிய பரிட்சார்த்த விவசாய ஆய்வை சிறிய Scaleல் நடைமுறைபடுத்தி காட்டட்டும். என் புரிதலில் கள ஆய்வு இவ்வாறு இருக்கலாம்.

    இந்தியாவின் 10 பிராந்தியங்களில், தலா 5000 ஏக்கர் நிலத்தில் அவர்கள் கூறும் பாரம்பரிய முறையில் விவசாயம் நடத்தட்டும். காவிரி டெல்டா, கட்ச், கோங்கன் போன்ற 10 பிராந்தியங்களில் தட்ப வெப்ப நிலை, நீர்ப்பாசன வசதிகள், விளை பொருட்கள் போன்றவை வேறு வேறு நிலையில், வகையில் இருக்கும். விவசாய அமைச்சகத்தின் நடுநிலையான அதிகாரிகள் 6 மாதங்களுக்கு இதை மேற்பார்வை செய்து மகசூலின் அளவை ஆவணப்படுத்தட்டும். இரசாயண உரமே இல்லாமல் இதை செய்து காட்டட்டும்.

    இந்தியாவில் 45 கோடி ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 50000 ஏக்கர் நிலத்திலிருந்து கிடைத்த அறுவடையை, Scale செய்து நிலவரத்தை தெரிந்து கொண்டு விடலாமே!

    Subjective Experienceக்கு அறிவியல் முக்கியத்துவம் அளிக்காது. அளிக்கவும் முடியாது. Objective Proofsதான் வேண்டும்.

    (1A)இரசாயண புராணம்

    இந்த இரசாயண புராணம் அளவு கடந்து சென்று கொண்டிருக்கிறது. விபூதிபூஷனுடன் சேர்ந்து திரு.ஜடாயும் அதே ஜோதியில் ஐக்கியமாகி விட்டார்.

    நாளை உயிர்கள் அழியப் போகின்றன. நாளை மறுநாள் பிரளயம் வரப்போகிறது. பாவிகளே வாருங்கள் என்று பூச்சி காண்பிக்கும் டுபாக்கூர் கிறிஸ்தவ பாதிரியார்களின் அளவிற்கு இது சென்று விட்டது.

    இரசாயணம் என்றாலே கெட்டது என்று மீண்டும் மீண்டும் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வரும் ஃபேஷன் காலமிது. 1960களில் ஆரம்பித்த பசுமைப்புரட்சியும் இரசாயண பயன்பாடும் 2 தலைமுறைகளாக தொடர்கிறது.

    திராட்சை தோட்டத்தில் ஒவ்வொரு கொத்தையும் இரசாயணத்தில் அமிழ்த்து எடுக்கிறார்கள்-அதுவும் பலமுறை. மாம்பழத்தை இரசாயணத்தைக் கொண்டே பழுக்க வைக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவித பயத்தை
    உருவாக்குவது தொடர்கதையாகி விட்டது.

    ஒவ்வொரு இரசாயண மூலக்கூறும், எந்தளவில் உடலில் சேர்வதால் ஆபத்தில்லை என்றேல்லாம் அறிவியலின் உதவியுடன் பிரச்சினையை அணுகாமல் மரணம்,வியாதிகள், மலட்டுத்தன்மை என்று மனிதனின் தொன்ம பயக்கூறுகளை
    தட்டி எழுப்புவது அவசியமா?

    இரண்டு தலைமுறைகளாக நானும் என் உறவினர்களும் இரசாயணத்தால் உருவான விளைச்சலைத்தானே உண்டு வருகிறோம். என்ன வியாதி எங்களுக்கு வந்து விட்டது? இரசாயணத்தால் எவ்வளவு பேர் இறந்துள்ளார்கள்? சிலருக்கு
    ஏற்படும் மலட்டுத்தன்மைக்கு இரசாயண உணவு மட்டும்தான் காரணமா? Objective Analysis என்பதே இல்லாமல், சான்றுகளுக்கு எந்த அறிவியல் பூர்வமான Scientic Studyக்களையும் மேற்கோள் காட்டாமல் இந்த வியாபாரம் தொடரத்தான்
    வேண்டுமா?

    எங்கள் பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களில், தண்ணீரில் இரும்பு அதிகம் இருக்கிறது. TWAD Board Laboratoryஇல் ஆய்வு செய்தால், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இரும்பு அதிகம் இருக்கிறது. மாங்கனீஸ், பொட்டாசியம் போன்றவை
    அதிகமாக இருக்கிறது. அந்த குறிப்பிட்ட அளவிற்குள் எந்த பொருளும் இருப்பதால் உடலுக்கு எந்த தொந்தரவும் இல்லை என்றுதான் அறிக்கை தரப்படும்.

    எந்தளவிற்கு இரசாயணத்தை பயிர்களில் இடுகிறோம் என்பது ஒரு பொருட்டே இல்லை. விளைந்த பொருட்களில் ஒவ்வொரு இரசாயணக்கூறும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருக்கிறதா என்பது மாத்திரமே பிரச்சினை. இது ஒரு சராசரி
    மனித உடலின் தாங்கும் சக்தியை பொறுத்தது.

    நம் உடல் தாங்காத அளவிற்கு இரசாயணம் இருந்தால், கடந்த 60 வருடங்களில் பெரிய அளவில் நோய்கள் வந்திருக்கும். எந்த அரசும் அந்தளவுக்கு மக்களின் உணவைக் குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது.

    (1B) கிருமிகள் வலுவடைந்து விட்டன.
    Pest Resurgence என்று திரு.விபூதிபூஷன் கூறும் விஷயமும் அடிப்படை பரிணாம வளர்ச்சிக்கூறுகளை புரிந்து கொள்ளாததுதான். கிருமியாக இருந்தாலும் சரி, பூச்சிகளாக இருந்தாலும், மனிதனாகவே இருந்தாலும் சரி, தன்னை
    புதுப்பித்துக்கொள்வதும், மாறும் சூழலுக்கேற்றபடி தன்னை மாற்றிக் கொள்வதும், எப்படியாவது உயிரை காப்பாற்றிக் கொள்ள முனையும் உயிர்களின் இயற்கை உந்துதல் சக்திதான்.

    “இப்பொழுதெல்லாம் கிருமிகள் வலுவடைந்து விட்டன” என்று ஒரு விளம்பரத்தில் கூறப்படுவதெல்லாம் இந்த பரிணாம வளர்ச்சிக் கூறை புரிந்து கொள்ளாததால்தான்.

    “கிருமிகள் வலுவடைந்து விட்டன” என்னும் வாதத்திற்கு ஒரு அறிவியல் ஆதரவாளனான என் நிலைப்பாடு என்பது “So What?”

    1960களில் கொசுவிற்கான எதிர்மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சந்தை படுத்தியபின் 10 வருடங்களில் கொசு தன்னை புதுப்பித்துக் கொண்டு, அந்த மருந்தை மீறி உயிர் வாழ ஆரம்பித்தது. பின் அதற்கான மருந்தும் வேறு வகைகளில் உருமாற்றம் செய்யப்பட்டு கொசுவை அழித்தது. அடுத்த 10 வருடங்களில் மீண்டும் இதே கதைதான்.

    வைரஸ், பாக்டீரியா போன்றவற்றிலும் இதே கதைதான். அறிவியல் அக்கிருமிகளை அழிக்க ஒரு மருந்தை கண்டு பிடிக்கிறது. கிருமி தன்னை மாற்றிக் கொண்டு உயிர் வாழ முயற்சிக்கிறது. மீண்டும் அறிவியல் புதிய மருந்தை
    கண்டளிக்கிறது.

    1835ல், திரு.டார்வினுக்கு பரிணாம வளர்ச்சிக்கான அடிப்படை அம்சம் புரிந்ததே, தென் அமேரிக்க காடுகளில் ஸ்புரித்ததே இதே Birds Resurgence தான். ஒரு பறவை இனம்தான் இத்தனை விதமான பறவை இனங்களாக பரிணமித்துள்ளது
    என்பதற்கு ஆதாரமாக டார்வின் முன்வைத்தது இதே விஷயத்தைத்தான். பறவைக்கும் தாவர வகைகளுக்கும் இடையே நடந்த இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்த போராட்டம் தான் பறவை மற்றும் மரங்களின் Bio Diversity.

    இதே கதைதான் விவசாய பூச்சிகளுக்கும். பயிரை அழிக்க விரும்பும் பூச்சிகள்-அவற்றை அழித்து நம் உணவை பெற முயற்சிக்கும் மனிதர்கள். பூச்சிகளும் தங்களை புதுப்பித்துக் கொண்டு பயிர்களை தாக்குகின்றன. நாமும் “சும்மா!-அடித்தால் அந்தரங்கமே ஆட வேண்டும்” என்ற வகையில் எதிர்தாக்குதல் நடத்துகிறோம். இதில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் தீர்மானிக்கப்படாது. போராட்டம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    உடனடியாக எனக்கு நினைவுக்கு வருவது-பிரிட்டனில் 90களில் நடந்த Vaccineகளுக்கு எதிரான போராட்டம். இந்த எதிர்ப்பு மருந்துகளினால்தான் (அவற்றில் கலந்துள்ள மிக மிக சிறிய அளவிலான பாதரஸத்தினால்தான்) சில
    குழந்தைகளுக்கு Autism என்னும் மூளை வளர்ச்சி குன்றிய நோய் வருகிறது என்று ஒரு விஞ்ஞானி சுயநலத்திற்காக வெளியிடுகிறார். அந்த பயத்தை ஊடகங்கள் பெரியதாக ஊதிப்பெரிதாக்கின. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு
    எதிர்ப்பு ஊசிகளை போட மறுத்ததால், போலியோ மற்றும் அம்மை நோய்கள் தாக்கின. சில குழந்தைகள் இறந்தன. பல குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் ஊனமடைந்தன.

    பிறகு மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அந்த சிறிய பாதரஸமும் தற்பொழுது சேர்க்கப்படுவதில்லை. குறிப்பாக பாதரஸத்தினால்தான் சில குழந்தைகளுக்கு Autism வந்தது என்பது நீருபிக்கப்படவே இல்லை.

    பாமரனாவது, புரிதல் இல்லாமல் பயப்படுகிறான் என்று கூறலாம். நம்மைப் போன்றவர்கள் இரசாயணத்தின் பயன்பாடுகளை பொதுவாக, அதன் அனைத்து பரிமாணங்களிலும் அவதானித்தே முடிவெடுக்க வேண்டும் என்பதே என்
    கருத்து.

    (1C) நிலம் மலடாகிறது.
    இரசாயண உரத்தால் சில மாற்றங்கள் நிலங்களில் ஏற்பட்டுள்ளன என்பது உண்மைதான். அதை யாரும் மறுக்கவில்லை. அதற்காக நிலம் மலடாகிறது என்பது வெறும் rhetoricதான். 60 வருடங்களாக மலடாக உருமாறிக் கொண்டிருக்கும் நிலம் எப்போது முழுமையாக மலடாகப் போகிறது? இன்னும் 250 வருடங்களிலா? 500 வருடங்களிலா (தோராயமாக). அதற்குள், அந்த இரசாயண விளைவுகளை சரிசெய்யும் தொழில்நுட்பத்தையும் நாம் பெற்று விடுவோம்.

    (2)விவசாயத்துறையில் சமுதாய மாற்றம்

    தஞ்சாவூரில் நான் வசிக்கும் கிராமத்தில் அதிகமாக கரும்புதான் பயிரிடப்படுகிறது. கரும்பை அறுத்து ஆலைகளுக்கு அனுப்ப உள்ளூரில் ஆட்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலானோர் கட்டிட வேலைக்கு சென்று விட்டனர். பண்ருட்டி
    பகுதியிலிருந்துதான் ஆட்கள் தருவிக்கப்படுகின்றனர்.

    மாட்டு சாணியைப் பற்றி கூறினால், பன்றி சாணியையும் பயன்படுத்தலாம் என்கிறார் விபூதிபூஷன். பிரச்சினை சாணியின் பயன்பாட்டைப் பற்றியது மட்டுமல்ல. யார் அந்த வேலையை செய்வது என்பதுதான்.

    நாற்று நடுவது, களை எடுப்பது, அறுவடை செய்வது, பிற விவசாய வேலைகளுக்கெல்லாம் ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக மாறி விட்டது. இதில் சாணி அள்ளுவதற்கு ஆளை ஆப்பிரிக்காவிலிருந்துதான் தருவிக்க வேண்டும்.

    கடைசியாக இப்படி முடிக்கிறேன்.
    திரு.ஜடாயுவும் சரி, திரு.விபூதிபூஷனும் சரி, இரசாயண உரம் இல்லாமலேயே, பாரம்பரிய முறைகளில் விவசாயத்தை இன்றே ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    ஆனால் நான், என் அன்புக்கு பாத்திரமான பணக்காரர்களுக்கும் ஒரு சிறிய இடத்தை இந்த சமூகம் அளிக்கட்டும். பரிட்சார்த்த முறையில் சில பிராந்தியங்களில் பெரும் பண்ணை விவசாயம் தொடங்கட்டும் என்கிறேன். முடிவுகளைக் கண்டவுடன் வேறு பிராந்தியங்களுக்கும் இதை நடைமுறை படுத்தலாம்.

    மறுமொழியை முடிப்பதற்கு முன், இயற்கை வளம் ஒன்றை மீட்டெடுத்த தகவலை தந்து முடிக்கிறேன். இந்தியாவில் Water Table எனப்படும் பூமிக்குள் இருக்கும் தண்ணீரின் ஆழம் மற்றும் அளவு குறைகிறது என்று எக்கச்சக்கமாக
    Rantingஉடன் கூறப்பட்டுக் கொண்டே வருகிறது. வெறும் பத்தே ஆண்டுகளில் விவசாய உற்பத்தியையும் அதிகப்படுத்தி, Water Tableஐயும் உயர்த்த ஒரு மாநிலத்தால் முடிந்துள்ளது. மழைநீர் சேகரிப்பு, தடுப்பு அணைகள் போன்றவற்றை
    அறிவியல் முறைப்படி நடைமுறைபடுத்தி இது சாதிக்கப்பட்டுள்ளது.

    அந்த மாநிலம் இந்தியாவில்தான் இருக்கிறது. அது குஜராத்.

    ஒன்றும் இங்கு அழியவில்லை. வளரும் மக்கள்தொகைக்கு ஏற்ப சில வளங்கள் அதிகமாக தேவைப்படுவதால் நாம் உபயோகித்துக் கொள்கிறோம். அவற்றை குறைப்பது, நிறுத்துவது, மீள் உருவாக்குவது என்பதையெல்லாம் தாராளமாக
    செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் குஜராத். எதிர்காலம் எனக்கு பிரகாசமாகவே தெரிகிறது. இன்றிருப்பதை விட மேலும் வசதியாக என் அடுத்த தலைமுறையினர் வாழ்வார்கள், நெடுநாள் வாழ்வார்கள் என்றே நான் நம்புகிறேன்.

  11. இயற்கை விவசாயத்தால் எல்லாருக்கும் உணவு உற்பத்தி செய்ய இயலாது என்பது அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளின் அடிமைகள், கைகூலிகள் கிளப்பும் புரளி. பசுமைப்புரட்சி அதன் வெற்றி தொடர்பான ஆய்வு முடிவுகள் கற்பிதம்.வேண்டுமெண்டே கணக்கில் காட்டப்பட்டவை மெய்யல்ல. இயற்கை விவசாயத்தின் விளைச்சல் திறனை பண்ணையில் நடை முறையில் ஸ்ரீ சுபாஷ் பாலேகர் நிரூபித்துள்ளார். கள ஆய்வாளராக பசுமைப்புரட்சி த்தொழில் நுட்பத்தின் தோல்வியை நேரில் கண்டு ஆவணப்படுத்தியிருக்குறார் ஸ்ரீ ஆர் எஸ் நாராயணன். இயற்கை வேளாண்மையின் வெற்றியையும் அவரே வாழ்ந்து காட்டிகொண்டிருக்கிறார். ஆய்வகங்களின் ஆய்வுமுடிவுகளைக்காட்டிலும் பண்ணையில் வெளிப்படும் முடிவுகளே மெய்யானவை.

  12. நிலம் மலடானதும் அதை தடுக்க இயற்கை உரத்தினை பயன்படுத்தும் படி பரிந்துரை செய்வதும் நாடறியும்.
    பூச்சிகள் எதிர்ப்பு சக்தி பெற்று பயிரை அழித்ததால் தற்கொலை செய்த இந்திய விவசாயிகள் எத்துனை பேர் என்பதை உலகறியும்.
    வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் இயற்கை விவசாயம் செய்ய அதிகம் மாடுகள் தேவையில்லை விவசாயியே வளர்க்க முடியும் ஒன்று அல்லது இரண்டு மாடுகளை. மாடு மேய்க்க மாட்டோம் அந்த மாட்டு சாணியை அல்ல மாட்டோம் என்று எந்த விவசாயியும் சொல்ல மாட்டார். அப்படி சொன்னால் அவன் யார் பாலாஜி தான் கூறவேண்டும்.

    இந்த நிலத்தடி நீர் மட்டம் உயர்வை சிலாகிக்கிற பாலாஜி அது நம் நாட்டில் காலம் காலமாக இருந்தது. பாலாஜி போன்ற நவீன் நத்துவர்கள் ஆட்சியில் அழிந்துவிட்டன அம்முறைகள். அவைகள் மீட்டுருவாக்கப்படவேண்டும் என்று நாங்கள் சொல்லகிறோம். பெரும் அணைகள் ஆபத்து அணுகுண்டு என்று சொல்கிறவர்களும் இயற்கை வேளாண்மையை ஆதரிக்கின்றனர் என்பது உண்மை. நிலத்தடி நீர் சேகரிப்பு பசுமை இயக்கத்தினரின் கொள்கை.
    விபூதிபூஷண்

  13. இப்போது நம்நாடு இருக்கிற சூழலில். இயற்கை வேளாண்மை, பாரம்பரிய மருத்துவ முறைகள்(இயற்கை, சித்த, ஆயுர்வேதம், யுனானி ஹோமியோ கூட) ஆகியவற்றை வளர்க்கும் பாரதீய ஸ்வதேசி இயக்கம் அவசியம். அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நேரடி முதலீடு மூலமாக நம் நாட்டை கபளீகரம் செய்ய துடிக்கின்றன. உலக வங்கியின் அடிவருடிகளான காங்கிரஸ் காரர்கள் அமேரிக்கா பன்னாட்டு கம்பெனிகள் இக்கொள்கைகளை ஆதரிப்பது ஒருபுறம் .தங்களை ஹிந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்களும் இதை ஆதரித்துவருகிறார்கள். ஸ்ரீ பாலாஜி போன்றவர்களும் இத்தகையவர்களே. ஹிந்துத்துவம் சங்கக்குடும்பம் இத்தகு அமெரிக்க ஆதரவாளர்களை அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும். வாழ்க வெல்க ஸ்வதேசி இயற்கை வேளாண்மை, பாரம்பரிய மருத்துவமுறைகள்.

  14. கட்டுரை மற்றும் பகிர்ந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி !

    சாப்பிடும் முறை மாறிவிட்டதை நீங்க கவனிக்க தவறுகிறீர்கள் பாலாஜி !
    //இயற்கை விவசாய முறைகளால் 121 கோடி மக்களுக்கும் உணவை உற்பத்தி செய்ய முடியாது. //

    முன்பு நமது உணவு முறை பெரும்பாலும் அரிசியை மட்டுமே சார்ந்து இருக்கவில்லை; பல் வேறு தானியங்களுக்கும் இடம் இருந்தது; அது மாற்றப்பட்டது என்று உணரவில்லையா !

    உழைப்பில் ஈடுபட்டவர்கள் கம்பு கேழ்வரகை பிரதான உணவாக உண்டு வந்தார்கள் !
    food for need is never a problem but greed ?

  15. பாலாஜி இவைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ! முயற்சிகள் தொடங்கி வெகு காலம் ஆகிவிட்டன !

    1. https://restore.org.in
    2. https://earth.org.in/
    3. https://www.goodnewsindia.com/
    4. https://goodnewsindia.com/pR/
    5. https://kaani.org
    6. https://koodu.in/farming/ (எல்லா பகுதிகளையும் படிக்கலாம் )

  16. “Subjective Experienceக்கு அறிவியல் முக்கியத்துவம் அளிக்காது” – இப்படி சொல்கிறார் பாலாஜி; விவசாயத்தை விஞ்ஞாயனத்தின் பெயரால் Stanrdardise பண்ணுவதும் அபத்தம்; இதைத்தான் ரசாயன விவசாயம் செய்யகிறது; அப்படிச் செய்வதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது; இதைத்தான் அலோபதி வைத்தியத்திலும் செய்கிறார்கள்;

  17. அன்புக்குறிய கண்ணன் மற்றும் க்ஷத்ரியன் ஆகியோருக்கு நன்றி.
    ஸ்ரீ க்ஷத்ரியன் கூறுவது நாம் பசுமைப்புரட்சியால் இலந்துவிட்ட பல சிறுதானியங்களை அவற்றின் மூலம் கிடைத்த சத்துக்களை நினைவூட்டுகிறது. தானியங்களின் வகைகள் மட்டுமல்ல மாடுகளையும் நாம் இழந்துவிட்டோம். இன்று பால்கொடுக்கும் அன்னிய நாட்டு மாடுகள் மாடுகளே அல்ல பன்றிகள் என்கிறார் இயற்கை வேளாண்மை வித்தகர், அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நூறு சத பூஜ்ய செலவு வேளாண்மையை இந்தியப்பாரம்பரியத்தில் வடிவமைத்த ஸ்ரீ சுபாஸ் பாலேகர்.
    ஸ்ரீ கண்ணன் கூறும் அக அனுபவமும் முக்கியமே என்ற கருத்தும் சிறப்புடையது. இயற்கை வேளாண்மையின் வெற்றி நிச்சயம் புறவய(Objective) ஆய்வுகளாலும் நிருபிக்கப்பட்டுள்ளன. சரியாக சொன்னால் ஸ்ரீ பாலேகர் தனது ஆன்மிக வேளாண்மை முறைமையை அறிவியல் பூர்வமாக கள ஆய்வின் மூலமே சோதனை செய்திருக்கிறார். அவர் நூல்களைப்படித்துவிட்டு தொலை பேசியில் இயற்கை விவசாயிகளை பேட்டி கண்டேன். அவர் கூற்றை அவர்களும் உண்மை என்று சான்று பகன்றனர்.
    ஸ்ரீ கண்ணன் கூறும் standardisation ஒரு படித்தன்மையாக்கும்செயல் மிக ஆபத்தானது. அதன் மூலம் அபிராகாமியத்தின் ஒரு கடவுள், ஒரு தூதுவர், ஓரே வழி, ஒரே வழி என்பது. ஒரே சந்தையை உருவாக்கவும் ஒரே மாதிரியான நுகர்வோரையும் உருவாக்க வழிவகுப்பதே இதன் நோக்கம். அதன் மூலமே சந்தையை சமூகத்தை ஒருசிலர் கட்டுப்படுத்த இயலும் மேலாதிக்கம் செலுத்த இயலும். பல்வேறு வகையான உணவுகள், தானியங்கள், பண்பாடு அத்தகைய பொருளாதார அரசியல் அதிகாரக்குவிவுக்கு மையப்படுத்துதலுக்குப் பயன்படாது எதிரகவே அவை போராடும். வெறும் அரசியல் காலனிகளை உருவாக்குவதை விடவும் ஒரே சந்த்தை ஒரே பண்பாடு மூலம் வளந்த நாடுகளின் ஒரு சில ப்பண்ணாட்டுக்கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு அனைவரையும் உட்படுத்தும் முயற்சியின் முக்கிய பங்கு பசுமைப்புரட்சித்தொழில் நுட்பத்திற்கு இருக்கிறது என்பது தெளிவு.

  18. ஸ்ரீ க்ஷத்ரியன் அவர்கள் சுட்டிய வலை தளங்களுக்கு சென்று வந்தேன். அத்துணையும் அருமை. இயற்கை வாழ்வியல் வேளாண்மை வெற்றிகளும் அதனை வென்றெடுக்கும் முயற்சிகளும் நாடுமுழுவதும் பரவி வருவது கண்கூடு. இயற்கை வேளாண்மையை குறை சொல்வோர் ஒரு இயற்கை அங்காடிக்காவது சென்று உணவுப்பொருள்களை வாங்கி ஒரு நாள் மட்டுமாவது அவற்றை உண்டு உண்மையை உணரவேண்டும்.

  19. பாலாஜி அவர்களின் கவனத்திற்கு:

    “இரசாயன உர பயன்பாட்டை உடனடியாக நிறுத்தினால், கோடி கோடியாக மக்கள் மடிந்து வீழ்வர்” – இது நடைமுறை அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகவில்லை; நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய விவசாயத்தில் ரசாயன உர பயன்பாட்டை நிறுத்திவிட்டேன்; உற்பத்தி குறையவில்லை; மாறாக எனது இயற்கை விவசாய நண்பர்கள் பலர் உற்பத்தியை அதிகரித்துக் காட்டியிருக்கிறார்கள்.

    “நம் உடல் தாங்காத அளவிற்கு இரசாயனம் இருந்தால், கடந்த 60 வருடங்களில் பெரிய அளவில் நோய்கள் வந்திருக்கும்” – ஆம், வந்திருக்கிறதே! அதிகமான ரசாயன பயன்பாட்டால்தான், புற்று நோயும், சிறு நீரக சீரழிவும் அதிகமானபேரைப் பீடிப்பதாக அறிவியலாளர்களே கூறுகிறார்களே; கேரள முந்திரி விவசாயத்தில் என்டோஸல்ஃபானின் பயன்பாடு ஏற்படுத்திய விளைவும், பஞ்சாபில் ஒரு ரயிலுக்கே ‘கான்ஸர் எக்ஸ்ப்ரஸ்’ என்ற பெயர் வைக்கும் நிலை வந்துள்ளதும் உலகம் அறிந்த விஷயமாயிறே; தமிழகத்தில் 2010 இல் மிக அதிகமானபேர் சுமார் 39000 நபர்கள் புற்ரு நோயால் இறந்துள்ளதாக அரசு தகவல் கூறுகிறது.

    “தஞ்சாவூரில் நான் வசிக்கும் கிராமத்தில் அதிகமாக கரும்புதான் பயிரிடப்படுகிறது.
    கரும்பை அறுத்து ஆலைகளுக்கு அனுப்ப உள்ளூரில் ஆட்கள் கிடைப்பதில்லை” – ஆட்கள் பஞ்சம் எல்லாத் தொழிலையும் பீடித்துள்ளது; கூடவே கரும்பு வெட்ட மற்ற வேலைகள் அனைத்திற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன.

    “சமூகத்தில் விவசாயிகளுக்கு அந்தஸ்து இல்லை. இதை சத்தியமாக வலுக்கட்டாயமாக புகுத்த முடியாது” – அந்தஸ்து வருமானத்தைக் கொண்டு வருகிறது; விளை பொருளுக்கு தகுந்த விலை கிடைக்கட்டும் தானாகவே அந்தஸ்த்து வந்துவிடும்; அரசாங்கம் இதர தொழில் துறைகளுக்குக் கொடுப்பதைப் போன்ற முகக்கியத்துவத்தை விவசாயத் தொழிலுக்கும் கொடுக்கட்டும் தானாகவே அந்தஸ்து வந்துவிடும் – கார் தொழிற்சாலைக்கு ஒப்பந்தம் போட்டு 24 மணி நேரம் மின்சாரம் கொடுக்கபப்படுகிறது; தவறினால் அரசு பதில் சொல்ல வேண்டும்; விவசாயத்திற்கு? இன்று ஐ.ட்டி தொழிலாளருக்கு தொடங்கும்போதே 25-30 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது – அவர்களது பெற்றோர் 20 வருட சர்வீஸுக்குப் பிறகு பெறும் தொகையை இவர்கள் தொடக்கத்திலேயே பெருகிறார்கள்; அந்தஸ்து வந்துவிடுகிறது!

    “அறிவியலின் மூலம்தான் மனிதன் இன்று நெடுநாள் வாழ்கிறான்” – இருக்கலாம்; அறிவியல் என்பது DAP, Urea மட்டும்தான் என்று உங்களுக்கு யார் சொன்னது? பசுஞ்சாணமும், பசு மூத்திரமும் ரஸாயனப் பொருள் இல்லையென்றும் அறிவியல் ஆராய்ச்சிக்குள் வராது என்றும் நீங்கள் சொல்கிறீர்களா?

    எஎம்.எஸ்.சுவாமிநாதன், போர்லாக் பேரெல்லாம் சொல்கிறீகள் சரி, கட்டாக் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரிச்சார்யா என்று ஒருவர் இருந்தாரே அவர் பெயர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருக்கு நமது நேருஜி அரசு ஏற்படுத்திய கதி தெரியுமா?

  20. சுவாமிநாதன் ஒரு தண்டிக்க பட வேண்டிய குற்றவாளி

  21. சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு – இதை அழிந்து கொண்டிருக்கும் இந்திய விவசாயியின் கண்ணோட்டத்திலிருந்து ஜெயமோகன் அலசியிருக்கிறார் – https://www.jeyamohan.in/?p=31009. விவசாயிகளைப் போல் அல்லாமல் சிறுவணிகர்கள் கூட்டாக இயங்கும் ஒரு மாஃபியா என்றும் அவர்களது ஆதிக்கம் கட்டுப்படுத்த வேண்டும் என்றூம் வாதிடுகிறார். முக்கியமான ஒரு கட்டுரை –

    // இன்று அன்னியநேரடிமுதலீட்டுக்கு எதிராகத் தெருவுக்கு வந்து போராடும் சிறுவணிகர்களும் அவர்களின் ஆதரவு அரசியல்வாதிகளும் ஒன்றும் அவர்களுக்காகப் போராடவில்லையாம். விவசாயிகளின் எதிர்காலத்துக்காகப் போராடுகிறார்களாம்! விவசாயிகளின் கொள்முதல் விலையை வால்மார்ட் குறைத்துவிடும் என்பதற்காகக் கொடிபிடிக்கிறார்களாம். சந்தையில் அள்ளிக்கொட்டிவிட்டுப் போவதையும் சும்மா கொடுப்பதையும் கண்டுகொண்டிருக்கிற விவசாயிகளிடம் இதைச் சொல்கிறார்கள். இன்றிருப்பதை விட விளைபொருள் விலையைக் குறைக்க எப்படி முடியும்? பூஜ்யத்தைவிட மதிப்புக்குறைவான எண் உண்டா என்ன?…

    சந்தைப்பொருளியல் தேவையா என்று கேட்டால் என்னுடைய பதில் வேறு. தேவையில்லை. இந்தியக் கிராமங்களை ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டுவினியோக அமைப்பு உருவாக முடிந்தால் இந்தப் பிரச்சினையைத் தாண்டமுடியும். அதற்கான காந்தியப்பொருளியல் சார்ந்த வழிகாட்டல்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னதாகவே ஜெ.சி.குமரப்பா போன்றவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சந்தைப்பொருளியலுக்குள்கூட அமுல் போன்ற காந்திய அடிப்படைகொண்ட மக்கள்கூட்டமைப்புகள் இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிக்கமுடியும்.

    ஆனால் இன்றைய உடனடி யதார்த்ததில் இந்தியாவின் பெருந்தொழில்நிறுவனங்களை இத்தளத்தில் முதலீடுசெய்யவைப்பதுதான் சரியான வழியாக இருக்கமுடியும். நாம் இன்றுவாழும் உலகமயமாக்கப்பட்ட சந்தைப்பொருளியல் சூழலில் விவசாயிக்குச் சாதகமான போட்டியை அனுமதிப்பதே முறை. ஆனால் அதற்கான நிதியை உருவாக்க இந்தியப் பெருந்தொழில்நிறுவனங்களால் முடியவில்லை என்கிறார்கள்.

    இன்று சிறுவணிகர்களை இந்தியாவின் அருந்தவப்புதல்வர்களாகக் காட்டி இடதுசாரிகள் கண்ணீர் சொட்டுகிறார்கள். வலதுசாரிகள் நரம்பு புடைக்க கத்துகிறார்கள். ஆனால் அப்பட்டமான உண்மை, ஒவ்வொரு விவசாயிக்கும் தெரியும் உண்மை அந்த மாஃபியா உடனடியாகக் கட்டுப்படுத்தப்படவேண்டும், இல்லையேல் இந்திய வேளாண்மை முழுமையாக அழியும் என்பதுதான் //

  22. உண்மைதான்; ‘அமுல்’ போன்ற ஒரு தீர்வுதான் பலன் கொடுக்கக்கூடியது; ஆனால், ‘அமுல்’ ஒரு விதிவிலக்காகவே இரருக்கிறது; நாட்டின் எல்ல கூட்டுறவு நிறுவனங்களும் அரசியல் மையங்களாகி நாசமாகிவிட்டன; அவற்றின் முக்திக்கு வழியே தெரியவில்லை.

  23. அன்புள்ள ஜடாயு,
    எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரையில் நிச்சயமாக உண்மை இருக்கிறது. சில்லரை வணிகத்தில் மாபியா இருக்கிறது என்பது உண்மையே. வணிகர்களிடையே ஒரு நெட்வொர்க் collusion இருக்கிறது விலையை நிர்ணயம் செய்வது அது தான். உழவனுக்குக் கட்டுபடியாகாத விலை கிடைக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் சில்லரை வணிகர்கள் தமக்குள் போட்டி போடாமல் ஒருங்கிணைந்து செயல் படும் போக்கு என்பது நிச்சயம் உண்மை. காய்கறி மார்கெடிலிருந்து நெல் பருத்தி மார்கெட்வரை இந்த னெட்வொர்க் தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது ஒரு விவசாயி வீட்டுப்பிள்ளையாக உணர்ந்து இருக்கிறேன். ஸ்ரீ ஜெயமோகன் இந்த நெட்வொர்க்கை மாபியா என்பது கொஞ்சம் மிகையாகத் தோன்றினாலும் அவர் உண்மையைத்தான் சொல்கிறார். அதில் எள்ளளவும் பொய் இல்லை.
    அடியேனைப் பொறுத்தவரையில் அன்னிய முதலீடு கூடாது என்பதற்கு க்காரணம் மிகச்சிறு வணிகர்கள் இல்லாமல் போவார்கள் என்பது. இரண்டாவது மொத்த வணிகர்களையும் இல்லாமல் செய்துவிட்டால் விவசாயிகள் இருக்கும் கோவணத்தையும் இழக்க வேண்டிவருமே என்ற அச்சம். மூன்றாவது மரபணு மாற்றத்தொழில் நுட்பம் போன்றவற்றை பன்னாட்டுக்கம்பெனிகள் வலியுறுத்துவார்களோ? என்பது.
    விபூதிபூஷண்

  24. நான் விவசாயம் சார்ந்த ஒரு தொழிலில் இருக்கிறேன். . மற்ற மாநில விவசாயிகள் தங்கள் வாய்க்கால்கள், ஏரிகள் எல்லாம் பராமரிக்கிறார்கள்.ஆற்றில் மணல் அள்ள விடுவதில்லை. ஒற்றுமையாய் இருந்து தங்களுக்கேற்ற விலையைப் பெறுகிறார்கள். ஆந்திர, கர்னாடக, மராட்டிய பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்தது போய் தற்போது bt காட்டன் போன்றவற்றால் சற்று முன்னேறி இருக்கிறார்கள். அதே சமயம் அதிகம் உரம் பூச்சி மருந்து உபயோகிப்பது மட்டுமே குறை.

    நமது விவசாயிகள் அவ்வளவு கடும் உழைப்பாளிகள் இல்லை தவிர ஒற்றுமையானவர்கள் இல்லை.தங்கள் நீர் ஆதாரங்கள் அழிவதைக் கண்டு கொள்ளவே இல்லை. ஒற்றுமையும் இல்லை. நான் பலமுறை மன்றாடி அவர்களை கேட்டுள்ளேன். நீங்களே ஏன் ஒற்றுமையாய் நெல்லை மில்லில் அரைத்து அரிசியாக பக்கத்து நகரங்களில் விர்க்கக் கூடாது? ஆனால் இவர்களிடம் ஒற்றுமை இல்லை. கூட்டுறவு சங்கங்களையும் உருக் குலைத்து விட்டார்கள். நம் விவசாயிகள் ஒன்று பட்டால், இந்த மாபியா அடங்கும். இவர்கள் குறைந்தது 400 % லாபம் வைத்துக் கொள்ளை அடிக்கிறார்கள்.

  25. ஜெயமோகன் கருத்து சரி இல்லை ..
    //சிறுவணிகர்கள் கூட்டாக இயங்கும்// கொத்தாக தான் இயங்கவேண்டும் ஆனால் அவர்களிடையே கருத்து மட்டும் தான் மாற்றப்பட வேண்டும் ! அதற்கு மாபியா என்று சொல்வது அபத்தம் ! அவர்கள் அப்படி இயங்க விற்பவர்கள் ஒரு காரணம் என்பதை வசதியாக மறக்கிறோம் !

    மறுபடியும் தற்போதைய பொருளாதாரம் நிலை இங்கு அறியப்படவில்லை
    //ஆனால் அதற்கான நிதியை உருவாக்க இந்தியப் பெருந்தொழில்நிறுவனங்களால் முடியவில்லை என்கிறார்கள்.//

    நெறைய நிறுவனங்கள் பணம் கேஷாகவே வைத்து கொண்டு வாய்மூடி பேசாமல் இருக்கிறார்கள் இன்றைய அரசின் கோரமுகத்தினால் இது தான் உண்மை !

    முடியவில்லை என்பது அரசியல் தற்காலிகம் தான் !

  26. பணம் வைத்திருக்கும் பெரிய நிறுவனங்கள் அரசுகளை நம்ப மறுக்கிறது. இது ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை. ஆனால் விவசாயிகளை நம்பி பெரிய கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கலாமே! ஏன் செய்ய மறுக்கிறார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *