திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்!

உண்மையில், திராவிட இயக்கம் என்பதாக ஒன்று இருந்ததுண்டா? அப்படியே இருந்தாலும், அதன் நூற்றாண்டைக் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்த அளவுக்கு வாரிசுரிமை உண்டு? திராவிட என்ற சொல்லின் பின்னால் உள்ள அரசியல் என்ன? நீர்த்துப் போய்விட்ட இந்தச் சொல்லுக்கு மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்கச் சிலர் துடிப்பது ஏன்?

ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரையில் திராவிட அரசியலை உயர்த்திப் பிடித்தவர்களின் பின்னணி, நோக்கம், நிலைப்பாடு என்று அனைத்தையும் ஆராயும் இந்தப் புத்தகம், இதுவரையில் நாம் அப்படியே ஏற்று நம்பிக்கொண்டிருக்கும் சில ஆதாரமான கருத்தாக்கங்களையும் நம்பிக்கைகளையும் நிர்த்தாட்சண்யமாக உடைத்தெறிகிறது.

கூர்மையான வாதங்களையும் இலக்கிய, வரலாற்று, சமூகச் சான்றுகளையும் முன்நிறுத்தி வாதிடும் நூலாசிரியர் மலர்மன்னனின் இந்தப் புத்தகம் சமகால அரசியல் களத்தில் ஒரு சிறு புயலைத் தோற்றுவிக்கப்போவது நிச்சயம்.

திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்
ஆசிரியர்: மலர்மன்னன்
பக்கங்கள்: 200
விலை: ரூ. 135/-
கிழக்கு பதிப்பக வெளியீடு.

இணையம் வழியாக இங்கே வாங்கலாம்.

சென்னையில் தொலைபேசி மூலம் வாங்க: 94459 01234.

நேரில் வாங்க:

1. கிழக்கு பதிப்பகப் புத்தகக் கடை: 23 ராமேஸ்வரம் சாலை, தி. நகர், சென்னை 600 017 (மாம்பலம் ரயில் நிலையம் அருகே ரங்கநாதன் தெரு சமீபம்) தொலைபேசி: 044-4261 5044 | 2434 3611

2. கிழக்குப் பதிப்பகப் புத்தகக் கடை: 57, PMG காம்ப்ளெக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600 017 ( தி. நகர் பஸ் ஸ்டான்டு அருகே, ரத்னா பவன் ஹோட்டல் எதிரே) தொலைபேசி: 4286 8126

35 Replies to “திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்!”

  1. நான் சமீபத்தில் திரு.மலர் மன்னன் அவர்களின் இந்த ”திராவிட இயக்கம் – (புனைவும்-உண்மையும்) என்ற நூலைப் வாங்கி படித்தேன். இதில் திராவிட இயக்கம் என்பதே ஒரு போலி திராவிட அரசியல்தான் இதில் பிராதானம். திராவிட என்ற சொல்லை பலர் பலவிதங்களில் அரசியலுக்காக பயன் படுத்தியிருக்கிறார்கள். இயக்கம் என்றால் என்ன ? இல்லாத இயக்கத்தை தாங்கள்தான் அதற்கு பாத்தியதை என்று சொல்லி நூற்றாண்டு விழா கொண்டாடும் அபத்தம் என்பன பற்றி பல புதிய உண்மை விளக்கங்களை அளித்துள்ளார். அதில் முக்கியமாக சில தலைப்புகளில் உள்ள உண்மை விளக்கங்களைப் படித்தால் துபாஷிகளாக முதலில் மாறியவர்கள் யார்? யார்? என்பது நன்கு விளங்கும். அந்த முக்கிய தலைப்புக்கள் 1.பந்திக்கு முந்தியவர்கள் 2.தமிழ் நாட்டு பிராமிணர் 3.பிராமிணர் சுய விமரிசனம் 4.வைதீக பிராமிணரின் நேயர். இதை தவிற எல்லிஸ் செய்த தமிழ் தொண்டை கால்வெல்ட் எப்படி பூசி மொழிகினார் போன்ற புதிய செய்திகளை கொடுத்துள்ளார்.
    இரு மொழி கற்றவர்களை துபாஷி என்கின்றோம். வெளிநாட்டிலிருந்து இங்கு வியாபாரம் செய்வந்த பிரிடிஷ் பிரெஞ் கம்பெனிகளுடன் வியாபார நிமித்தமாக அரைகுறை (பட்லர் பாஷை) ஆங்கில பிரெஞ் மொழியை கற்றவேண்டிய நிர்பந்தம் நம் நாட்டில் வாணிகத்திலும் மற்ற தொழிலிலும் ஈடுபட்டவர்களுக்கு இருந்தது. இல்லாவிட்டால் அவர்கள் வியாபாரம் கல்லாகட்ட முடியாது. அன்று சென்னை ராஜதானி என்பது தமிழகம் கேரளம் ஆந்திரா (தெலிங்கான நீங்கலாக) தென் மேற்க்கு கர்நாடகம் ஒரிசாவின் வடக்கு எல்லை என ஐந்து மொழி பேசும் மக்களைக் கொண்ட மாகாணமாக இருந்தது.
    ஏன் துபாஷிகளாக மாறினார்கள் என்றால் 1.வியாபார நோக்கத்திற்காக 2.சமூகத்தில் தாழ்தப்பட்டவர்கள் மதம்மாறி வெளிநாட்டவருக்கு சேவகம் செய்தலில் திருப்தி (அடிமை புத்தி-நன்றியுள்ள நாய் குணம்) 3.வெளி நாட்டவர் பாதுகாப்பு படைகளில் வேலைக்கு சேர்ந்த்து 4. கிராம நிர்வாகத்தில் கர்ணம் போன்ற வேலைகளில் சேர்ந்தது இவற்றிற்கெல்லாம் முந்திக்கொண்டு சென்றவர்கள் பிராமிணர்கள் அல்ல. அன்று சென்னை ராஜதானி ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாய் இருந்தவர்கள் ஆனந்தரங்கம் பிள்ளை-சுங்கு ராமச் செட்டியார்-பச்சைஅப்ப முதலியார்-மணலி முத்துகிருஷ்ண முதலியார்-நாரயண பிள்ளை என்று நீளும் பட்டியலில் பிராமிணர்கள் முதலில் பங்கு கொள்ளவில்லை
    1841 ஆம் ஆண்டுதான் முதல் உயர்நிலை பள்ளி (மெக்காலே கல்வி) தோற்றவிக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டுதான் முதல் கல்லூரி தொடங்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டுதான் பல்கலை கழகம் ஏற்படுத்தப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. 1857 முதல் 2012 ஆண்டுவரை 155 ஆண்டுகள். இதில் மூன்று தலைமுறைகள் அடக்கம் என்று எடுத்துக்கொண்டால் அதில் முதல் தலைமுறையினர்களில் கல்விகற்பதில் நகர்புறங்களில் முந்திக்கொண்டு சென்றவர்கள் பிராமிணர்களே. அவர்கள் யாரையும் கல்விகற்கவிடாமல் தடை செய்வில்லை. சட்டத்தின்படி அவர்களது சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்கள். இரண்டாம் தலைமுறையில் பின்னடைவை சந்திக்க தொடங்கினார்கள். காரணம் நீதிகட்சி பச்சைஅப்பன் கல்லூரி சென்னை பல்கலைகழகம் போன்றவற்றில் முதலிமார்களும் மற்ற உயர்ஜாதி ஹிந்துக்களின் ஆக்ரமிப்பு. இவர்களின் பங்களிப்பு தமிழ் மொழியை கெடுத்தது தமிழனை இரண்டுதலைமுறைகளாக தனிதமிழ் தமிழர்மதம்வேறு ஹிந்துமதம் வேறு திராவிட நாடு என்று பல புரட்டுகளை பரப்பி இலக்கியங்களையும் சரித்திர நிகழ்வுகளையும் திரித்து பிராமிண துவேஷத்தை வேர்ஊன்றி ஜாதி துவேஷத்தையும் தீண்டாமையும் அதிகமாக்கி தமிழனை கெடுத்ததை தவிற வேறு எதுவும் சாதிக்கவில்லை.

  2. திராவிட திருட்டு இயக்க அரசுகள், எந்த தொழில் செய்தாலும் உருப்படாது. எனவே, இன்றைய இளைஞர்கள் அரசுவேலைக்கு அலையாதீர்கள். எதிர்காலத்தில் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பென்ஷன் என்று சொல்லப்படும் ஓய்வூதியம் கிடைக்காது. மேலும் அரசியல்வாதிகள் , மக்களுக்கு இலவசமாக பல்லுப்பொடி முதல் பன்றி ஆடு மாடு சிங்கம் புலிகரடி யானை என்று பல மிருகங்கள் மற்றும் கால்நடைகளை எல்லாமே இலவசமாக தருகிறோம் என்று சொல்லி வாக்குறுதி கொடுத்து , மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முயற்சிக்கின்றனர். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். எல்லா வாக்குறுதிகளும் வெறும் காகித அளவிலேயே நிற்கும். அரசு நம் நாட்டில் எதிர்காலத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட அரசு கஜானாவில் காசு இருக்காது. ஏனெனில், அரசுக்கு சேரவேண்டிய டூஜீ, நிலக்கரி, சுரங்கம் , இன்னும் எவ்வளவோ ஊழல் பணத்தை பல வெளிநாடுகளுக்கு நம் அரசியல் வாதிகளும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் எடுத்து சென்றுவிட்டனர். நம் தமிழ் நாட்டில் இன்று மாநிலம் முழுவதும் ஒரே இருட்டு. மின்சாரம் இல்லாமல் சிறுதொழில், பெருந்தொழில் எல்லாமே முடங்கி கிடக்கிறது. என்ன காரணம் தெரியுமா ? மின்சார உற்பத்தி செய்யும் மூன்றுவகை நிலையங்களான அனல் ( நிலக்கரி ), புனல் ( நீர்) , காற்றாலை , ஆகியவை சரியாக பராமரிக்கப்படாததால் , அவற்றில் பழுதான யூனிட்டுகளை புதிய உதிரிப்பாகங்கள் மற்றும் இயந்திரங்களை வாங்கி முதலீடு செய்ய , 2006- முதல் இன்றுவரை இருக்கும் திமுக மற்றும் அதிமுக அரசுகள் நூற்றுக்கு நூறு தவறி விட்டன. இனிமேலாவது விழித்தெழுந்து , மின்பராமரிப்பு மற்றும் உற்பத்தியில் போதிய கவனம் செலுத்தவேண்டும். கூடாங்குளம் அணுமின் நிலையத்தை உடனே செயல்பட செய்து, அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தினை தமிழ் நாட்டுக்கு மட்டும் ஓரிரு வருடங்களுக்காவது , நூறு சதவீதமும் பெறவேண்டும். இதற்கு காங்கிரஸ், மற்றும் திமுக ஆகிய மத்திய ஆளுங்கட்சிகள் எவ்வித தடை செய்தாலும் , அவர்களை நம் தமிழ் நாட்டு மக்கள் அடையாளம் கண்டு கொண்டு, அவர்களுக்கு தேர்தல் வரும் போது நல்ல கூலி கொடுத்து அரசியலை விட்டே ஓடச்செய்ய வேண்டும். தமிழகத்தில் மாநில கட்சிகள் மற்றும் சாதிக்கட்சிகளுக்கு ஒட்டுபோடாமல் தவிர்த்து தேசீய கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்தால் தான் , தமிழகத்தின் இழிநிலை மாறும்.

  3. திராவிட இயக்கம் என்றாலே அரைகுறைகள் என்பதும் லூசுகள் என்பதும் விதியாகி விட்டது. இவர்களை மனநல மருத்துவ மனையில் தான் சேர்க்கவேண்டும். மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் கோயிலில் பெரியார் திகவினர் 24-12-2012 அன்று கருவறை நுழைவு போராட்டம் என்று நடத்தினர்.

    நமக்கு என்ன தோன்றுகிறது என்றால், கருவறை நுழைவு செய்ய இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே தகுதி உண்டு. கடவுள் இல்லை , இல்லவே இல்லை, கடவுள் நம்பிக்கையை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி, என்ற நாத்திக வசனம் பேசுவோருக்கு , கர்ப்பக்கிரகத்துக்குள் என்ன வேலை? அவர்கள் கருத்தின்படி கோயில்கள் எல்லாம் கொடியவர்களின் கூடாரம் அல்லவா? அப்படியிருக்க, கொடியவர்கள் கூடாரத்துக்குள் நுழைய , ஏனிப்படி பித்தலாட்டமான செயல்களில் இறங்குகிறார்கள் ?

    திராவிட இயக்கங்களுக்கு தைரியம் இருந்தால், இந்து கோயில்வாசலில் , கடவுள் மறுப்பு மற்றும் கடவுள் எதிர்ப்பு வாசகங்களை எழுதுவதை போல, இஸ்லாமிய, கிறித்துவ, மற்றும் இதர விடுபட்டுப்போன மத வழிபாட்டு தலங்களில் , அவற்றின் எதிரே இதுபோல செய்யும் தைரியம் உண்டா ?

    இந்து மதத்தில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், அவற்றை எதிர்த்து போராடி , நியாயத்தை நிலை நாட்ட முடியும். ஆனால், சில பிற மதங்களிலோ, பெண்களுக்கு வழிபாட்டு தலங்களில் நுழையக்கூட முடியாது தடுக்கப்பட்டுள்ளார்கள். மேலும், ஆபிரகாமிய மதங்களில் பெண்கள் மதகுருமார்களாக ஆகமுடியாது. இந்த கொடுமைகள் தாங்காமல் தான், அந்த ஆபிரகாமிய நாடுகள் மனநோய் பிடித்த நாடுகளாகிவிட்டன.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று தான் , அரசு பயிற்சி அளித்தது. ஆனால் , மஞ்சளார் ஆட்சிக்காலத்திலேயே , பயிற்சி முடித்த மாணவர்களுக்கு , திருக்கோயில்களில் வேலை கொடுத்திருக்க வேண்டும். அதனை செய்யாமல் , திருக்குவளை திலகம் ஏனப்பா தாமதம் செய்தது என்று , இந்த கருவறை நுழைவு போராட்டக்காரர்கள் சிந்திப்பார்களா? நாத்திகர்களுக்கு கோயில்களில் என்ன வேலை?

    இந்தியாவில் அனைத்து இந்து திருக்கோயில்களிலும் பூஜை செய்யும் பணியில் பெண்களுக்கு ஐம்பது சதவீத இடஒதுக்கீடு செய்யாவிட்டால், எதிர்காலத்தில் , இந்த கோயில்களை பெண்களே கைப்பற்றி, அங்கிருக்கும் ஆண் பூஜகர்களை விரட்டிவிட்டு, பெண்களே அனைத்து கோயில்களிலும் பூஜை செய்வார்கள். இது நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  4. பிற மொழி கும்பல் பிழைக்க திராவிடம் பேசினார்கள். திராவிட மாயை விலக ஆரம்பித்து உள்ளது.

  5. மலர் மன்னன் அவர்கள் திராவிட இயக்கத்தினரின் பித்தலாட்டங்களை தோலுரித்து காட்டியுள்ளார். திராவிடம் என்றாலே பித்தலாட்டம் என்று அகராதியில் எழுதவேண்டியதுதான். கனகலிங்கம் என்ற ஆதிதிராவிட அன்பருக்கு பாரதியார் ஹோமம் வளர்த்து பூணூல் அணிவித்து, காயத்திரி மந்திரம் உபதேசம் செய்தார் என்பதும், அந்த நிகழ்ச்சியின் போது, அவருக்கு ஆதரவாக பேராசிரியர் சுப்பிரமணிய ஐயர் உட்பட , புரோஹிதர்கள் சிலரும் வந்து வேத மந்திரங்கள் சொல்லி சடங்குகளை செய்வித்தனர் என்பதும் படிக்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது போன்ற உண்மைகளை போலி திராவிட இயக்கங்கள் ஆகிய பெரியார் திடலும், மஞ்சள் கோபாலபுரமும் மூடி மறைத்து வாழ்கின்றன என்பதும் உண்மை. காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும். பெரியவர் மலர்மன்னன் அவர்களின் தொகுப்பு மிக அற்புதமாக உள்ளது. ஒரே மூச்சில் படித்து முடித்தேன். எல்லாம் வல்ல புள்ளிருக்கு வேலூர் ஸ்ரீ முத்துக்குமாரசாமி அருளால் பெரியவர் மலர் மன்னனின் பணி மேலும் சிறக்கட்டும். தீமைகள் நன்மை ஆக மாறட்டும். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

  6. புள்ளிருக்கு வேலூர் என்று இருப்பதை புள்ளிருக்கு வேளூர்- என்று திருத்தி படிக்க வேண்டுகிறேன். தட்டச்சு பிழைக்கு மன்னிக்கவும்.

  7. பெரியார் மேல் உங்கள் அனைவருக்கும் ஏன் பெரும் பகை?
    காய்தல் உவத்தல் அகற்றி ஆய்வு செய்யுங்கள்.

  8. பெரியார் மேல் உங்கள் அனைவருக்கும் ஏன் பெரும் பகை?
    காய்தல் உவத்தல் அகற்றி ஆய்வு செய்யுங்கள்//

    பெரியார் ஒன்றும் நடுனிலை நாய(க்)கர் அல்ல. அவருக்கு திருப்பி தாக்காத ஒரு இலக்கு தேவைப்பட்டது. அது பிராமணர்கள் என்ற ஜாதி வசமாய் கிடைத்தது. தனது வியாபாரத்தை நன்றாக நடத்தினார்.60களில் அவருடைய ‘சிஷ்ய கேடிகள்’ நடத்திய வெறியாட்டம் தனி வரலாறு.

    பொதுவாழ்விலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒழுக்கம் தேவையில்லை என்று புதிய சித்தாந்தைக் கண்டுகொண்டு தமிழகத்தை நாசம் செய்தவர்கள் திக, திமுகவினர். தமிழ்ப்பண்பாடு,மொழிப்பற்று என்று நாடகமாடி இன்றைய தினம் தமிழ்நாட்டில் தமிழைக் கொன்று வருபவர்களும் இவர்களே. பெரியார் சிந்தனைகளை ஆரம்பத்திலேயே காய்ச்சியிருந்தால் இந்த அளவு பண்பாடற்ற டாஸ்மாக் கடைகளில் புகலிடம் தேடுபவனாய் தமிழன் தரம் கெட்டுப் போயிருக்க மாட்டான்.

  9. பெரியார் மேல் யாருக்கும் பகை கிடையாது. பெரியவர் மலர் மன்னனின் புத்தகத்தை படித்தால் தான் அவருடைய முழு வரலாறு தெரியும். கடவுள் நம்பிக்கை இல்லாமை ஒரு குற்றம் இல்லை. அது அவருடைய கருத்து. ஆனால் கடவுளை நம்புபவன் முட்டாள் என்று சொல்ல அவருக்கு மட்டுமல்ல யாருக்குமே எந்த அருகதையும் இல்லை.

    கடவுள் பற்றி சொன்னதை கூட மன்னித்துவிடலாம். ஆனால் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்னதை சோற்றில் உப்பிட்டு உண்ணும் எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான்…அவரை தமிழர் தலைவன் என்று சொல்லுபவர்கள் யாராயினும் மோசடிக்காரர்களே ஆகும்.

  10. இந்த திராவிட புரட்டுக்காரர்கள் இப்படியெல்லாம் ஹிந்து விரோத ஆட்டம் போட முக்கியக் காரணம் ரோமிலிருந்தும் , ரியாத்திலிருந்தும் வரும் சூட் கேஸ்களும் ,கிறிஸ்தவ, முஸ்லீம்களின் மொத்த வோட்டுக்க்களும்தான்

    இதற்கு வேட்டு வைத்தால் இவர்கள் கொட்டம் அடங்கி விடும் .

  11. ஈவெரா மற்றும் அவரது தம்பிகள் என்று சொல்லிக்கொண்ட துரோகிகள் தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும் செய்த துரோகங்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. எந்த ஒரு மனித இனமும் உயிர்வாழ தண்ணீரும், நிலமும் அடிப்படை ஆகும். திராவிட இயக்கங்கள் பெரியார் வழிவந்தவை என்று சொல்லிக்கொண்டு, தமிழினத்தை திட்டமிட்டு அழித்தன. எப்படி:-

    1. 1974- ஆம் ஆண்டில் முடிவடைந்த காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் , போண்டா சாப்பிட்டுக்கொண்டிருந்தார் அப்போதைய முதல்வர் மற்றும் மூத்த தலைவர் கருணா. அதன் விளைவாக தமிழகம் வறண்டு , பாலைவனம் போல ஆகிவிட்டது. தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்துவிட்டது.

    2. கச்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த இந்திரா அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்யாமல், விஞ்ஞான முறை ஊழல்களை செய்ததாக சர்காரியாவிடம் சான்றிதழ் பெற்றார். இதன் விளைவு ராமேசுவரம் மற்றும் தமிழக மீனவர்கள் நியாயமான எல்லைக்குள் கூட மீன் பிடிக்க முடியாமல் , சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லபடுகிறார்கள்.

    3. தமிழகம் முழுவதும் சாராய அடிமை ஆக்கி, 1-9-1972 முதல் மதுவை அறிமுக படுத்தி இளைய சமூகத்தினரை பாழாக்கினார் திராவிட திருவாரூர் தலை.

    4. இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி சிவிலியன் தமிழரை கொல்ல , சோனியாவின் படைக்கு சலாம் போட்டு , தன்னுடைய மக்களுக்கு துரோகம் செய்தார்.

    5. இந்தி எதிர்ப்பு என்று சொல்லி மாணவர்களை தூண்டிவிட்டு, கடந்த நாற்பத்தேழு வருட காலமாக , தமிழக மாணவர்களை தெருவில் நிறுத்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டார். வெளிமாநிலங்களுக்கு போய்க்கூட பிழைக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டார். ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய திராவிட மாணவர்கள் இந்தி படித்து, இந்தியா முழுவதும் நல்ல வேலை வாய்ப்புக்களை பெறுகிறார்கள். ஆனால் தமிழக மாணவர்களை மட்டும் இந்தி படிக்காதே என்று சொல்லி , நாட்டையே பாழ் படுத்திய பாவிகள் தான் திராவிட திருட்டு இயக்கத்தினர். இந்த தலிவரின் குடும்ப பேரன்களும், கொள்ளுபேரன் பேத்திகளும் மட்டும் இந்தி, ஜெர்மன், ஸ்பானிஷ் என்று பல மொழிகளை கற்கின்றனர். ஊருக்கு தானடி உபதேசம், உனக்கும் இல்லை எனக்கும் இல்லை.

    6. புற்றீசல் போல ஆங்கில மீடியம் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்து, தமிழை புதை குழிக்கு தள்ளினார்கள். தமிழ் காட்டுமிராண்டி மொழி , தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்ன ஆளை , தமிழர் தலைவர் என்று கூறி, தமிழனுக்கு அவமானத்தை உண்டுபண்ணினர்.

    திராவிட மோசடி இயக்கங்களால் தமிழுக்கும், தமிழனுக்கும் விளைந்த இன்னல்களை பட்டியல் போட்டால் நாற்பது புத்தகங்கள் எழுதலாம். திராவிட இயக்கங்களான திக மற்றும் திமுக மற்றும் அதன் அடிவருடிகளான விசி போன்றவை தற்குறி இயக்கங்களே ஆகும். இந்த இயக்கங்கள் முற்றிலும் ஒழிக்கப்படாவிட்டால், தமிழகம் இனி தலை எடுக்கவே முடியாத இழிநிலை ஏற்படும்.மக்கள் இந்த மோசடி இயக்கங்களை புரிந்து கொண்டுவிட்டனர். விரைவில் நல்ல பாடம் கொடுக்க இருக்கின்றனர்.

  12. 7. இந்திரா பேச்சை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த காவிரி நதிநீர் வழக்கை வாபஸ் வாங்கி , தமிழக விவசாயிகள் முதுகில் குத்தினார் மஞ்சளார்.

    8. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1989- ஆம் ஆண்டில் , ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு புதிய பள்ளியை அனைத்து வசதிகளுடனும் தலா இரண்டுகோடி ரூபாய் செலவில் மத்திய அரசின் முழு உதவியுடன் நவோதயா வித்யாலயா என்ற பெயரில் வழங்கினார். ஆனால் கலைஞர் அரசு அதனை ஏற்க மறுத்ததால் அந்த பள்ளிகள் கூடுதலாக ஆந்திர மாநிலத்துக்கு சென்றுவிட்டன. திமுக செய்தது எல்லாமே தமிழக மக்களுக்கு துரோகம் மட்டுமே.

  13. அத்விகா சார்
    விருப்பு வெறுப்பு இல்லாமல் பாருங்கள் உண்மை புரியும்.
    மத்திய அரசு பணியில் பல வெளிமாநிலங்களில் பணி புரிந்தவன்,புரிகிறவன் என்பதால் தான் திராவிட இயக்கத்தை ஆதாரங்கள் இல்லாமல் திட்டுவதை எதிர்க்கிறேன்
    முன்பு திரு வெங்கட்சாமிநாதன் அவர்களின் கட்டுரையில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு காட்டிய ஆதரங்களையும் சற்று பாருங்கள்

    https://tamilhindu.com/2012/04/dravidian-movement-and-tamil-nadu-a-criticism/

    எந்த மாநிலத்தில் எண்ணிக்கை அதிகம் இல்லாத சாதிகளை சேர்ந்தவர்கள் தலைவர்களாக ஐம்பது ஆண்டுகளாக ஆண்டு வருகிறார்கள் என்று பாருங்களேன்
    எந்த மாநிலத்தில் BC /SC பிரிவினர் அதிக இடங்களில் மருத்துவம்,பொறியியல் ,சட்டம் போன்றவற்றில் படிக்கிறார்கள்,வேலை செய்கிறார்கள் என்று ஒப்பிட்டு பாருங்களேன்
    எந்த மாநிலத்தில் இருந்து வருபவர்கள் மத்திய அரசு பணிகளில் உள்ள ஒதுக்கீட்டு இடங்களை அதிக அளவில் பிடிக்கிறார்கள் என்பதையும் பார்க்கலாமே
    பேராசிரியர்கள் ,மாவட்ட,உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்பதில் எந்த மாநிலத்தை சேர்ந்த ஒதுக்கீட்டு வகுப்பினர் முன்னணியில் இருக்கிறார்கள் என்று பாருங்களேன்
    வேறு சாதிகளை சேர்ந்தவர்களை எந்த மாநிலத்தை சார்ந்த ஒதுக்கீட்டு வகுப்பினர் அதிக அளவில் மண முடித்துள்ளனர் என்பதை கூட பார்க்கலாமே
    சாரிசாரியாக பிழைப்புக்காக தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு ஓடியது திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்
    இப்போது இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் வட மாநிலங்கள்,ஒரிசாவிலிருந்து லட்சக்கணக்கில் மக்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள்

    நீர் பிரச்சினை இந்தியா முழுவதும் மாநிலங்களுக்கு மத்தியில் உள்ளது.lower riparian states உரிமையை ,பங்கை ஒத்து கொள்ளும்,புரிந்து கொள்ளும் மனநிலை உருவாகும் வரை இந்த குழப்பங்கள் நீடிக்கும்.உச்ச நீதிமன்ற உத்தரவை ஒத்து கொள்கிறார்களா என்ன ,மக்கள் ஆட்சியில் நதிநீர் பங்கீடு 1974 இல் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும் அதை வறட்சி காலங்களில் ஒத்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்ப்பது கானல் நீர் தான்
    மன்னர் ஆட்சிகளில் போரில் வென்று,அல்லது மிரட்டி ஒப்பந்தங்கள் போடப்பட்டன

  14. மாணவ மாணவிகள் தங்கும் வசதி கொண்ட நவோதய பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம்
    கல்வி மாநில அரசின் கீழ்.மாநில அரசு நிலம் தர வேண்டும்.அதி மத்திய அரசு பள்ளிகள் நடத்தும்
    அதை விருப்ப பாடமாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து ,தமிழகத்தை இந்தியாவின் ஒரு மாநிலம் என்று எண்ணாமல் இன்று வரை நவோதயா பள்ளிகளை துவங்கவில்லை.அவைகளை வேறு எந்த மாநிலத்திற்கும் திருப்பி விட முடியாது .இப்போது இந்த திட்டம் வந்தால் மாநில அரசின் சுயாட்சியில் குறிக்கிடுகிறது என்று மோடி முதல் எல்லா எதிர்கட்சி முதல்வர்களும் குதிப்பர்
    டுட்ச் அரசோ ,அமரிக்க நிறுவனமோ மாணவர்கள் கட்டாயமாக விவிலியம் படிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அரசு இடத்தில இலவச பள்ளிகள் நடத்த வந்தால் அனுமதிக்க வேண்டும் என்று குதிப்பீர்களா

    https://articles.timesofindia.indiatimes.com/2012-04-07/india/31304525_1_private-hospitals-institutional-deliveries-kerala

    The good news is that several states recorded very low births by untrained functionaries. They include Kerala at 0.2%, Tamil Nadu 0.9%, Andhra Pradesh 1%, Punjab 2.6%, Delhi 5.3%, Gujarat 8.8%, Haryana 6.3% and Karnataka 9.3%.
    பத்தில் ஒரு பங்கு எம் பி க்களை கொண்ட கட்சியின் தலைவர் ஆட்சியின் போது ஒன்றுமில்லாத விஷயத்திற்காக 1991 தி மு க ஆட்சி கலைக்கப்பட்டது
    இதில் கச்சதீவு பிரட்சினையில் மிக பெரும்பான்மை கொண்ட இந்திராவின் முடிவை மாநிலம் எதிர்த்திருக்க வேண்டும் என்று கூறுவது வியப்பு தான்
    கூட்டணி ஆட்சிகள் என்ற 1989 பின் நிலை தான் மாநிலங்கள் ஓரளவிற்காவது சிறிது உரிமை இல்ல நிலைக்கு காரணம்
    மாநிலங்களின் உரிமையை மத்திய அரசுக்கு வலியுருத்தியத்தில்,பெற போராடியதில் திராவிட கட்சிகளின் பங்கு அதிகம்

  15. பூவண்ணன் அவர்களே….

    //இப்போது இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் வட மாநிலங்கள்,ஒரிசாவிலிருந்து லட்சக்கணக்கில் மக்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள் //

    காமெடி பண்ணாதீங்க சார்…..தமிழர்கள் எல்லோருக்கும் வேலை கிடைத்துவிட்டதா என்ன ?

    உண்மை நிலவரம் என்ன தெரியுமா?

    பெரும்பாலான தமிழக உழைப்பாளிகள் கழகங்களின் புண்ணியத்தால் முழு குடிகாரர்கள் ஆகிவிட்டார்கள்……இவர்களால் கடினமான வேலைகளை செய்ய முடிவதில்லை……

    இலவசங்களின் புண்ணியத்தால் உழைக்காவிட்டாலும் பிழைத்துக்கொள்ள முடியும் என்ற நிலை வந்துவிட்டது……அவ்வளவுதான்….

  16. //இதில் கச்சதீவு பிரட்சினையில் மிக பெரும்பான்மை கொண்ட இந்திராவின் முடிவை மாநிலம் எதிர்த்திருக்க வேண்டும் என்று கூறுவது வியப்பு தான் – பூவண்ணன//

    கச்சத் தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உரியது என்பதோடு அது தொடர்ந்து பாரதத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்து வந்துள்ளது. மேலும் நமது தமிழ் நாட்டு மீனவர்களுக்கு கச்சத் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதி எந்த அளவுக்கு வாழ்வாதாரமாக உள்ளது என்பதை கருணாநிதி உணரவோ பொருட்படுத்தவோ இல்லை. அவருக்கு இப்படியொரு பிரச்சினை உள்ளது என்றே தெரியவும் தெரியாது! எப்பொழுது கச்சத்தீவை தாரை வார்க்க மத்திய அரசு முடிவு எடுக்கிறதோ அப்போதாவது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் முதல் அமைச்சர் என்ற முறையில் கச்சத்தீவு பற்றிய நிலைமைகளைத் தெரிந்துகொள்ள முனைய வேண்டாமா? கிழக்குக் கடலோரம் பாறைகள் மிகுந்துள்ள பகுதி. எனவே மீன் கிடைக்க வேண்டுமானால் அதைத் தாண்டித்தான் நம் மீனவர்கள் சென்றாக வேண்டும். கச்சத் தீவைக் கொடுத்துவிட்டால் நமது கடல் எல்லை சுருங்கி பாறைப்பகுதியிலேயே முற்றுப் பெற்று மீனவர்களின் வாழ்வாதாரம் சீர் குலையும் என்பதையெல்லாம் ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. இக்கடமையிலிருந்து கருணாநிதி தவறினார். இது பற்றியெல்லாம் கவலைப்பட அவருக்கு நேரம் எங்கே இருந்தது? பதவியை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்து செல்வம் திரட்டலாம் என்பதில் அல்லவா அவரது கவனம் இருந்தது? கச்சத் தீவை தாரை வார்ப்பதால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களை மாநில அரசு முறைப்படி ஆராய்ந்திருந்தால் பாதகங்களே மிஞ்சும் என்பது விளங்கி இருக்கும். மத்திய அரசின் முடிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அக்கறையும் ஆதங்கமும் இருந்திருந்தால் அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவு, சட்ட சபையில் ஒருமனதான எதிர்ப்புத் தீர்மானம், உச்ச நீதி மன்றத்தில் வழக்கு என்றெல்லாம் படிப்படியாக நடவடிக்கைகள் எடுத்திருக்க முடியாதா? பெரிய போராட்டங்களை எல்லாம்கூட முன்னின்று நடத்தி இருக்கலாமே! அன்று இந்திரா காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அல்லவா கூத்தடித்துக் கொண்டிருந்தார் கள்! இந்திரா காந்தி எம் ஜி ஆரை வளைத்துப் போட்டுவிட்டதால் எப்படியாவது இந்திராவை மீண்டும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற கவலைதானே கருணாநிதிக்கு இருந்தது? 1974-ல் எல்லாம் நான் செய்தி ஆசிரியராக மட்டுமின்றி , கோட்டைக்குச் சென்று வரும் செய்தியாளனாகவும் இருந்தேன். கச்சத் தீவு விவகாரத்தில் கருணாநிதி அரசு எவ்வளவு அலட்சியமாக இருந்தது என்று எனக்கு நேரடியாகவே தெரியும். இதே அளவு அண்ணா தி. மு.க.வின் எம் ஜி ஆரும் அலட்சியம் செய்தார். மாநில நலனில் உண்மையான நாட்டம் இருந்தால் அல்லவா உரிமைக்குப் போராட முடியும்? வெறும் வாய்ச் சொல் வீரர்கள்தானே இவர்கள்! உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று பொதுக் கூட்ட மேடைகளில் வீராப்புப் பேசினால் போதுமா? செயலில் சிறிதாவது காட்ட வேண்டாமா? இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாமே! கம்யூனிஸ்டுகளாவது கவலைப் பட்டார்களா என்றால் அவர்களும் அலட்சியமாக இருந்தனர். தமிழக மீனவர்கள் வாழ்க்கைக்கு மட்டுமா, பாரதத்தின் பாதுகாப்புக்கே அல்லவா உலை வைத்து விட்டார்கள்!
    -மலர்மன்னன்

  17. நவோதயா பள்ளிகளின் பாடத் திட்டம் என்ன வென்று பூவண்ணன் அறிவாரா? அதில் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும்படியான எந்த அம்சமாவது உள்ளதா? பின் ஏன் மோதி உள்ளிட்டவர்கள் குதிக்க வேண்டும்? இன்று தமிழ் நாட்டில் மிகப் பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் அனைவருமே ஹிந்தியை வெறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை என்பது பூவண்ணனுக்குத் தெரியுமா? தட்சிண ஹிந்தி பிரசார சபையின் புள்ளி விவரங்களைப் பார்த்தால் தமிழ் நாட்டில் ஹிந்தி படிப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு லட்சக் கணக்கில் அதிகரித்து வருகிறது என்பதாவது பூவண்ணனுக்குத் தெரியுமா? விவிலியம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் வேதப் புத்தகம். ஹிந்தி நம் நாட்டின் முக்கிய மொழிகளுள் ஒன்று. விவிலியத்துக்கும் ஹிந்தி மொழிக்கும் முடிச்சுப் போடுவதில் ஏதாவது பொருள் உண்டா? நானும் வட மாநிலங்களில் இருந்தவன் மட்டுமல்ல, அந்தச் சமுதாயத்தில் இரண்டறக் கலந்து பழகியவன். அங்கே எந்தச் சாதியினர் பிற சாதியார் படிக்கவோ அரசாங்க அலுவலகங்களில் வேலை பார்க்கவோ முட்டுக் கட்டை போட்டார்கள்? இட ஒதுக்கீட்டு முறை நியாயமில்லை என்று எதிர்ப்புக் காட்டியிருக்கலாம். இட ஒதுக்கீடு எல்லை மீறிப் போவதால் அல்லவா எதிர்ப்பு வந்தது? சாதி அடிப்படையிலான இந்த இட ஒதுக்கீட்டு முறையால்தானே சாதிகளிடையே மோதலே வருகிறது? பொருளாதார அடிப்படையில் இருந்தால் வருமா? பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட என்றெல்லாம் வகை பிரித்து சாதிகளிடையே விரோதம் வளர்ப்பானேன்? எந்த சாதிக் காரனும் வேறு சாதிக்காரன் படிக்கவோ வேலைக்குப் போடியிடவோ தடையாக இல்லை. நகர்ப்புற- கிராமப்புற வசதி வாய்ப்புகள் வேறுபாட்டால் கிராமப் புற இளைஞர்களுக்குப் பின்னடைவு ஏற்படக்கூடும். இது எல்லாச் சாதியினருக்கும் பொதுவான பிரச்சினை. எனவே நகர்ப்புறம்- கிராமப் புறம் என்று வேண்டுமானால் பிரித்துப் பார்த்து, சலுகை முறையில் சிறப்புப் பயிற்சி வழங்கி ஈடு செய்யலாம். இதல்லவா சுமுகமான அணுகுமுறை?
    -மலர்மன்னன்

  18. கச்சத்தீவு என்ன இந்திரா காந்தியின் பாட்டன் வீட்டு சொத்தா இலங்கைக்குதத் தாரை வார்க்க?
    ஒருவர் தனது தனிப்பட்ட சொத்தை மற்றவருக்கு தானமாகக் கொடுக்கலாம் .
    ஆனால் நாட்டின் ஒரு பகுதியைக் கொடுக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.

    ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம் முன்னோர்கள் வாழ்ந்தும், போற்றியும் , தங்கள் காலடிச் சுவடுகளை விட்டும் சென்ற புண்ணிய பாத தூளிகள் அந்த இடங்கள் .
    அது நம் ஒட்டு மொத்த சமுதாயத்தின் சொத்து ஆகும்.
    நாமெல்லாம் அதன் காப்பாளர்கள் அல்லது ‘டிரஸ்டீக்களே’
    அதை நாம் மேலும் பெருக்காவிட்டாலும் , இருப்பதை அப்படியே பாதுகாத்தாவது அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்.

    இந்திரா காந்தி செய்த தவறினால் இன்று நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் குண்டடி பட்டு மாய்ந்து கொடிருக்கின்றனர்.

    இரா.ஸ்ரீதரன்

  19. மலர்மன்னன் ஐயா,

    நவோதயா பள்ளிகள் 6லிருந்துதான் சேர்கை துவங்குகின்றன. 8 வரை தாய்மொழியை பயிற்று மொழியாகக் கொள்ளலாம். பின்னர் அறிவியல் பாடமானால் ஆங்கிலம் வழி பயிலலாம். அல்லது ஹிந்தி. ஹிந்தியை மொழிப்பாடமாக கட்டாயம் பயில வேண்டும்.

    எல்லா நவோதயா பள்ளிகளும் CBSE பாடதிட்டத்திற்குட்பட்டது. இப்பள்ளிகள் நல்ல தேர்ச்சியைக் கொடுக்கின்றன. மேலும் இப்பள்ளிகளில் எல்லா அடுக்கு மக்களும் சேர்கின்றனர். இதில் தமிழகம் மட்டும் தனிமைப் படுத்தப்பட்டது.

    ஹிந்தியை மைய அரசு திணிப்பதை தவிர்க்காது. திராவிட கட்சிகளும் பதவி கிடைத்ததும் சோரம் போயின. தேசியவாதிகள் இதில் உள்ள உண்மையை புரிந்துகொள்ளக் கூட முனைவதில்லை.

    ஹிந்தியை மூண்டாம் பாடமாகவும் (தொலைகிறது உடனே மறந்து விடலாம்) ஆங்கில வழியை மட்டும் ஏற்றும் இதைக் கைக்கொண்டிருக்கலாம்.

    மைய அரசின் நிலை மாநில நலன்களுக்கு எதிரானதே. அதைக் காக்கும் மாநில கட்சிகளும் இல்லை.

  20. அன்புள்ள ஸ்ரீ ராம்கி,
    தயை செய்து சொல்லுங்கள். தமிழ் நாட்டில் இன்று உண்மையிலேயே ஹிந்திக்கு எதிர்ப்பு இருக்கிறதா? ஒருவேளை எதிர்ப்பு இருந்தால் அது நல்லதுதானா? அது தேவையா?

    பாரதத்தில் உள்ள எல்லா மாநிலங்களும் ஹிந்தியை இயல்பாக ஏற்றுக் கொண்டுள்ளனவே, அவையெல்லாம் தத்தம் தாய்மொழியை நேசிக்கவில்லையா? அங்கெல்லாம் அந்தந்த மாநில மொழிகளின் வளர்ச்சியில் எதும் தொய்வு ஹிந்தியின் காரணமாக ஏற்பட்டுள்ளதா? அல்லது ஹிந்தியால் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?

    இன்று ஹிந்துஸ்தானம் முழுவதும் அமெரிக்க ஆங்கில மொழியின் தாக்கமும் அமெரிக்க கலாசார மோகமும் தானே தலைவிரித்தாடக் காண்கிறேன்? இது நமக்கு நல்லதா?

    இன்னொன்று கேட்கிறேன். இன்று தமிழ் நாட்டின் கிராமப்புறங்களில் கூடப் பெண்கள் ஸல்வார் கமீஸுடன் நடமாடுகிறார்களே, அதை யார் அவர்கள் மீது திணித்தார்கள்?

    எனக்குத் தெரிந்தவரை ஹிந்தி நம்நாட்டு மொழி. ஆங்கிலத்தை த் தயக்கமின்றி ஏற்கும் நாம் ஹிந்தியை ஏற்பதில் தவறில்லை. தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு என்பது வெறும் அரசியலே என்பதையும் தக்க ஆதாரங்களுடன் எனது ‘திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்’ என்ற நூலில் எழுதியுள்ளேன். 1965-ல் ஈ.வே.ரா.வே ஹிந்தியை ஆதரித்துப் பேசியதையும் குறிப்பிட்டுள்ளேன்.

    ‘வேலைக்குப் போற இடத்திலே ஹிந்தி படிக்கணும்னு சொன்னா படிச்சுட்டுப் போயேன்’ என்று சொன்னவர் அவர்! ஹிந்தி எதிர்ப்பு வெறும் அரசியல்தான் என்றும் அப்போது வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்!

    ஹிந்தி ஓர் இளமையான மொழி. அதில் நவீன இலக்கியம் நன்கு வளர்ந்து வருகிறது. மத்திய அரசு பல துறைகளில் மாநில நலன்களைப் பொருட்படுத்துவதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் எல்லா மாநிலங்களாலும் ஒன்று சேர்ந்து உருவாக்கப் பட்டதுதானே, மத்திய அரசு? அது சுயம்புவாக உருவானது அல்லவே?

    எல்லா மாநிலங்களும் மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்றத்தில் இடம் பெற்று அதன் அடிப்படியில் உருவாகும் மத்திய அரசு, மாநில நலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொள்கிறது என்றால் எங்கோ கோளாறு இருக்கிறது, அதைக் கண்டு பிடித்துக் களைய வேண்டும். இதற்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு?

    எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டில் பெற்றோர், மாணவர்களிடையே ஹிந்தியைக் கற்கலாகாது என்ற எண்ணம் இல்லை. இன்று தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளைப் பெறலாம் என்பதுதான் நிலவரம்.

    இதில் வேடிக்கை ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றெல்லாம் வீர வசனம் பேசித் திரிபவர்களே இங்கு ஆள்வோர்! கடந்த 45 ஆண்டுகளாக இங்கு நடப்பது திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான்!
    இன்னும் ஏன் ஆங்கிலத்தையே நடைமுறையில் வைத்திருக்கிறீர்கள், இவ்வளவு பெரிய தேசத்தில் உங்களுக்கென்று தகுதி வாய்ந்த சொந்த மொழி ஒன்றுகூடவா இல்லை என்று கேட்கும் அயல் நாட்டினருக்கு என்ன பதில் சொல்வது?

    எங்களுக்குள் நடக்கும் நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற உட்பூசல்தான் காரணம் என்றா? உட்பூசலால் தானே அந்நியரிடம் அதிகாரத்தை இழந்தீர்கள், இன்னுமா புத்தி வரவில்லை என்று கேட்பார்களே, அதற்கு என்ன பதில் சொல்லலாம்?

    -மலர்மன்னன்

  21. //பத்தில் ஒரு பங்கு எம் பி க்களை கொண்ட கட்சியின் தலைவர் ஆட்சியின் போது ஒன்றுமில்லாத விஷயத்திற்காக 1991 திமுக ஆட்சி கலைக்கப்பட்டது- பூவண்ணன்//

    ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்த கருணாநிதி மாநில அரசு கைவசம் உள்ள வசதியின் காரணமாகத் தகவல்களைக் கசிய விடுகிறார் என்பதாலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

    பாரத ராணுவம் இலங்கையிலிருந்து திரும்பி வந்தபோது அலட்சியம் செய்தது மட்டுமின்றி அதனைத் தாக்கியும் பேசியவர் எப்படி பாரதத்தைச் சேர்ந்த மாநிலம் ஒன்றின் முதலமைச்சராக இருக்க முடியும்?

    தமிழ் நாடு என்ன வெளிநாடா? அவருக்கு இந்த விவகாரத்தில் ஏதும் கருத்து வேறுபாடு இருந்தால் அதை ரகசியமாக மத்திய அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். அதுதான் முறையே தவிர, பொதுக் கூட்டத்தில் பேசுவதுபோல் பகிரங்கமாகப் பேசுவது முதலமைச்சர் பதவியில் இருப்பவர் செய்யக் கூடிய காரியமல்ல. பதவியில் நீடிக்கத் தகுதி இல்லாத அரசு நீக்கப் பட்டது.

    இதே கருணாநிதி அரசை 1976-ல் இந்திரா காந்தி நீக்கியபோது அதைக் கண்டித்து எழுதினேன். பத்திரிகைத் தணிக்கை காரணமாக அது பிரசுரிக்கப்படவில்லை. கருணாநிதி, ஆட்சி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்திருந்தால் விசாரணை செய்யலாம், முடிவு தெரிந்தபின் நடவைடிக்கை எடுக்கலாம் என எழுதியிருந்தேன்.

    -மலர்மன்னன்

  22. ஐயா
    ஹிந்தியை ஏற்காதவர்கள் இக்கல்வி பெற வழியில்லை என்பது எந்த மாதிரியான நியாயம் என்பது எனக்குப் புரியவில்லை. இதை மாணவர்களின் (பெற்றோர்களின்) விருப்பத்திற்கேற்றவாறு கல்வியளிப்பதில் என்ன தடை? ஹிந்தி எனக்கு தேவையா இல்லையா என நான் முடிவு செய்யலாகாதா?
    திராவிட இயக்கங்களின் விமர்சனமோ அல்லது ஹிந்தி எதிர்ப்பு பற்றிய விவாதங்களும் நம்மை எங்கோ கொண்டு சேர்க்கும்?
    இந்த தளத்திலேயே எழுதிச் சலித்தது. அந்த ஆதங்கத்தையும் என் முன் பதிவில் சொல்லியிருந்தேன்.

  23. மலர்மன்னன் ஐயா

    கல்வி மாநில அரசின் கீழ் வருவது. அதை மத்திய அரசு தன் கீழ் கொண்டு வரும் முயற்சி தான் நவோதயா பள்ளிகள். மத்திய அரசு பள்ளிகள் பணியில் இருக்கும் வெளி மாநில மக்களுக்காக, வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாய்ப்புள்ளவர்களின் குழந்தைகளுக்காக தான். அவற்றுக்கும் மாநில அரசுக்கும் தொடர்பு கிடையாது.

    மாநில அரசின் பாட திட்டத்தை ஏற்காத,மொழி கொள்கையை ஏற்காத பள்ளிகளை மாநிலங்களின் மேல் திணித்தல் மாநிலங்களின் உரிமையை பறிப்பது ஆகாதா?

    https://swaminomics.org/?p=548

    C N Annadurai, first DMK chief minister of Tamil Nadu. He is remembered mainly for ending Congress hegemony and Brahmin supremacy in the state. But today we should see him in a new light: he saved India from Hindi imperialism, ensured the continuation of English, and so made possible the outsourcing revolution that is moving lakhs of jobs from the West to India.

    In the state election of 1967, the DMK won a landslide victory. The party has (in one of two factional avatars) ruled the state ever since. Many people think South India resisted Hindi. Not really. The resistance was specifically Tamil. Former foreign minister Dinesh Singh, from Uttar Pradesh, once complained bitterly to me that Hindi would have triumphed but for Tamil Nadu.

  24. மத்திய அரசு கல்வியை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு நமது அரசியல் சட்டத்தை திருத்துவதே நாட்டுக்கு நல்லது. பூவண்ணன் போன்றோருக்கு பல உண்மைகள் தெரியாது. மத்திய அரசில் வேலை பார்த்ததாக சொல்வதிலிருந்தே பல விஷயங்கள் புரிகின்றன.

    1. மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதிலிருந்தே , மாநில மொழிகளில் பாடத்திட்டங்களை வகுத்து , மாநில மொழிகளில் பாடப் புத்தகங்களை மலிவு விலையில் அச்சிட்டு , மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக , நேரு பிரதமராக இருந்தகாலத்தில் இருந்து , மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி வழங்கி வருகிறது.

    2. இந்த நிதியை தமிழ் நாட்டில் இருந்த திமுக அரசு செலவழிக்காமல் , வருட முடிவில் பல காலம் மத்திய அரசுக்கே நிதி ஆண்டின் இறுதியில் திருப்பி அனுப்பி வந்தது என்ற உண்மை பூவண்ணனாருக்கு தெரியாது போலும். கழகங்களின் தமிழ்ப்பற்று அவ்வளவு தான்.

    3. மாநிலங்களின் பொறுப்பில் கல்வியை முழுவதும் விட்டால், தமிழ் மட்டுமல்ல இன்னும் ஏனைய மாநிலங்களின் மாநில மொழிகளும் புதைகுழிக்கு போய்விடும். அவர்கள் குடும்பத்துக்கு மட்டும் ” சன் டி வி ” தான் . மற்றவர்களுக்கு தான் பரிதி, எழுஞாயிறு எல்லாம். இலங்கை தமிழரை சோனியாவுடன் சேர்ந்து திமுக அழித்தது போதும். தமிழகத்து தமிழர்கள் மட்டுமாவது பிழைத்து போகட்டும். திமுக போன்ற , தேசவிரோத, தமிழ் விரோத கட்சிகளை ஒழிப்போம்.

    4. பூவண்ணனார் போன்றோருக்கு இதனை சொல்லி என்ன செய்ய ?

  25. I am working as a HR in a private concern. So far the communication skills of the freshers coming from Rural areas wrt English is very bad. Ok. They might have studied in tamil medium during their schooling all the way. Check out their tamil speaking skills. Almost 80% of the fresh Engineering/ Arts & Science graduates are not able to write & speak in proper tamil.

    Mostly students from urban backgrounds get jobs in MNCs which pay decent money for freshers but this too upon one condition that the candidate hired should have decent English communication. Tamil plays no role in getting a job in IT/ITES sector mainly. Apart from this there are plenty of voice process jobs flooding in BPO companies. But due to sheer lack of communication, companies dont get suitable candidates from Engineering/ Arts& Science background.

    Dravidian parties have completely thrashed the growth & development of abundant young man power by holding false principles on languages. Coming to Hindi, students who opt Hindi as their second language are in a safer side in getting jobs in India outside Tamilnadu. There was a program done by an MNC BPO for voice process requirements in Kolkata. But predominantly candidates from the rural parts of Tamilnadu were not getting that advantageous edge over these jobs as they were really afraid of not knowing Hindi. These are all the key factors you have to consider when you want to determine where you have to work and how you will survive. Either you need to encourage tamil medium students to thrive in the market by improving the standard of education, or you need to show them the other avenues for getting through with the competetive scenario.

    I also have pursued my graduation in a Government College. But during that time when the interviewer asked one of the candidates of our college “How long will you work for the company?”, he replied “Twelve Kilometers”. This is the way our students of rural area comprehend a language. This reply was given from an English Literature Student. This is just an example but there are plenty of cases like this only. So, people who tend to think that some thing is purposefully dumped to us, they need to think of the consequences also. For anything there is a choice. And choices have consequences. This young tamil generation is facing the consequences of the choices of Dravidian parties who never sought to understand the need for knowing either foreign or sibling languages.

  26. திராவிடக் கட்சிகள் தமிழ் பேரைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்பதையே உணராத மரமண்டையை என்ன செய்வது. ஒரு மலையாள திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் “அய்யா தமிழர்தானுங்கோ ஆனால் அவர் தமிழை தமிள் னுதான் சொல்வாருங்கோ ” அதுதான் உண்மை. தமிழையும் கற்பிக்காமல் ஹிந்தியையும் வரவிடாமல் அரைகுறை ஆங்கிலத்தை வளர்த்தது தான் திராவிடக் கட்சிகள் செய்த சாதனை. ஆனால் முகவின் பேரன்களோ மும்மொழி அறிந்ததால் தான் 2g எனவும் வேறு பல ஊழல்களை லாவகமாய் செய்ய முடிந்தது. சாதாரணத் தமிழன் தொலைகாட்சியிலும் டாஸ்மாக் கடையிலும் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறான்.

  27. // Many people think South India resisted Hindi. Not really. The resistance was specifically Tamil. //
    பிரத்தியட்ச நிலையைக் காண மறுப்பதேன்? தமிழ் நாட்டு மக்கள் ஹிந்தியை ஏற்க மறுக்கும் நிலை இன்று இல்லை. ஹிந்தி அரக்கி என்றெல்லாம் பேசி பூச்சாண்டி காட்டி அச்சுறுத்தி வெறுப்பு அரசியல் நடத்தியதால் மருண்ட தலைமுறைகளின் காலம் முடிந்துவிட்டது. பிற மாநிலங்கள் ஹிந்தியை ஏற்றுக் கொண்டதால் அங்கெல்லாம் ஆங்கிலத்தின் இடம் பறிபோய்விடவில்லை. பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புப் பெற்று வழ்பவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல.
    இந்த சுவாமிநாதன் போன்ற ஆங்கில மோகிகள் தாய் மொழி உட்படத் தேசிய மொழிகளில் பரிச்சயமில்லாதவர்கள். இப்படிப் பல இதழாளர்கள் நம்மிடையே உள்ளனர். நமது தேசிய மொழி இதழாளர்களைக் கண்டாலே இவர்களுக்கு இளப்பம். எனக்குத் தமிழில் சரியாக எழுதவோ படிக்கவோ வராது என்று பெருமையடித்துக் கொள்வார்கள். நான் ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்தித் தமிழில் எழுதத் தொடங்கியதை முட்டாள்தனம் என்று சொன்ன சக பத்திரிகையாளர்கள் பலர் உண்டு. ஹிந்திஎதிர்ப்பை ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்த அரசியல்வாதிகளுக்கு சப்பைக்கட்டுக் கட்டிய இதழாளர்களின் பிரசார பலத்தால் தமிழ் நாட்டில் செயற்கையாக ஹிந்தி மீது எதிர்ப்பு உருவாகியது. ஹிந்தி வந்தால் ஆங்கிலம் மகிமை இழக்கும், நமது பிழைப்பில் மண் விழும் என்ற அச்சம் காரணமாகவே இவர்கள் ஹிந்தி எதிர்ப்புக்குத் துணை நின்றார்கள். மத்திய அரசு என்பது மாநிலங்களால் உருவானதேயன்றி வானத்திலிருந்து குதித்துவிட்டது அல்ல. இவர்கள் வாதத்தின்படி மத்திய அரசின் திட்டங்கள் எல்லாமே மாநிலங்கள் மீதான திணிப்புதான். அதைச் செய்வது மாநிலங்களிலிருந்து சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்! ஹிந்தியை அறிமுகம் செய்வதைத் திணிப்பு என்று ஏன் கருத வேண்டும்? மக்கள் நலனுக்காக மத்திய அரசின் திட்டங்களும் மானியங்களும்கூட திணிப்புதானா? மாநிலக் கட்சிகள் பிளாக் மெயில் செய்யும் நிலையில் மத்திய அரசு இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. மாநில உரிமை என்ற பெயரில் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நடத்தும் கொள்ளையும் பேரப் பேச்சுகளும் மத்திய அரசைக் கையால் ஆகாததாக்கிவிடும்.
    நாட்டில் இரு பிரதான அரசியல் கட்சிகளே இருக்க முடியும், மாநிலக் கட்சிகள் கூடாது. தேசியக் கட்சிகளின் மாநிலக் கிளைகள் தத்தம் மாநில நலன்களை எடுத்துக் கூறும் பொறுப்பை வகிப்பதும், தேசியத் தலைமைகள் அதற்கு மதிப்புக் கொடுப்பதுமே நாட்டுக்கு நல்லது. அரசியல் கட்சிக்ள் தனிக் கொடி வைத்துக் கொள்ளவும் கூடாது. தேசியக் கொடி ஒன்று மட்டும் அனைத்துக் கட்சிகளுக்கும் போதுமானது.
    -மலர்மன்ன்ன

  28. //He is remembered mainly for ending Congress hegemony and Brahmin supremacy in the state.//
    பிராமண ஆதிக்கம் இருந்ததாகச் சொல்வது வடிகட்டிய பொய். ஈ.வே.ரா. பச்சைத் தமிழர் என்று வர்ணித்த காமராஜர்தான் செல்வாக்குடன் இருந்து வந்தார். நீதிக் கட்சி காலத்திலிருந்தே அப்படியொரு நிலைக்கு இடமில்லை. அதற்கு முன்பாவது இருந்ததென்றால் அதற்கும் ஆதாரம் இல்லை. திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் இதைத்தான் வலியுறுத்துகிறது.
    -மலர்மன்னன்

  29. திமுக தனது அடுத்த தலைவராக தனது மூன்றாவது மகன் திரு சுடாலின் அவர்களை தேர்ந்தெடுக்க தந்தை தனது விருப்பத்தை சமீபத்திய கூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இதனை சுமார் 15 வருடத்துக்கு முன்னரே அவர் செய்திருக்கவேண்டும்.

    இனி பொதுக்குழு கூடி தலைவரின் விருப்பத்தை நிறைவேற்ற தீர்மானம் இயற்றும் உரிமை பொதுக்குழுவுக்கு உண்டு. திமுக சங்கர மடம் அல்ல என்பதும், சங்கரமடத்தினை விட சற்று மட்டம் தான் என்பதும், திமுக ஒரு குடும்ப கட்சிதான் என்பதும், 1949-2012 கால கட்டத்தில் சுமார் அறுபத்து மூன்று ஆண்டுகள் வளர்க்கப்பட்ட அந்த இயக்கத்தில் , தலைவரின் குடும்பத்தை தவிர மற்றவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்பதும் வெள்ளிடைமலை ஆகிவிட்டது.

    சங்கர மடங்கள் இனி பெருமை பட்டுக்கொள்ளலாம் . திமுக தம்மை விட மட்டம் தான் என்பதை உணர்ந்து. காலரை சிறிது தூக்கி விட்டுக்கொள்ளலாம்.

    திராவிடம் என்றாலே மோசடி, பித்தலாட்டம், புனைசுருட்டுதான் என்பது தெளிவாகிவிட்டது.

  30. //In the state election of 1967, the DMK won a landslide victory//
    தி.மு.க. வின் அபார வெற்றிக்கு என்ன காரணம்?
    கூட்டணி என்ற பெயரால் வெறும் தொகுதி உடன்பாடு செய்துகொண்டு காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் பார்த்துக் கொண்டார்கள். பெரும் அளவு தொகுதிகளைத் தங்களுக்கு வைத்துக் கொண்டு மற்ற கட்சிகளுக்கு வாய்க்கரிசி போட்டார்கள். அவையும் தனித்து நின்றால் ஓட்டைப் பிரிக்கிற ஆற்றல்தான் தங்களுக்கு உண்டே தவிர வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொண்டு தி. மு.க. கொடுத்ததைப் பெற்றுக் கொண்டன. ஒரு புறம் சுதந்திரா மறுபுறம் இடது கம்யூனிஸ்ட். இதன் பெயர் கூட்டணி! தமிழரசுக் கழகத்துக்கு எத்தனை இடம் என்று ம. பொ.சி. கேட்டார். உங்களுக்கு என் இத்யத்தில் இடம் கொடுத்திருக்கிறேன் என்றார் அண்ணா! ம. பொ.சி. தனக்கு மட்டுமாக ஒரு இடம் பெற்று உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு ஜயித்தார்! அதிகார பூர்வமாக அவரும் தி. மு. க. எம் எல் ஏ தான்! இதுதான் லான்டுஸ்லைடு வெற்றியின் கதை!
    -மலர்மன்னன்

  31. IT IS NOT A PROBLEM THAT KAVERI PACT IS NOT RENEWED BY KARUNA. LET KAVERI DELTA PEOPLE DIE.
    IT IS NOT A PROBLEM THAT KACHATHEEVU HANDED OVER TO SRILANKA. LET FISHERMAN SUFFER.
    LET POOR PEOPLE NOT STUDY HINDI. NO PROBLEM. WE WANT THESE TYPE OF PEOPLE FOR PARTY WORKS. BECAUSE MOST OF THE NON BRAHMINS WHO ARE HAVING MONEY ARE STUDYING HINDI THRO MATRICULATION SCHOOLS.
    OTHER STATE WORKERS ARE COMING HERE TO WORK JUST LIKE SLAVES. IN SAME WAY SOME POOR PEOPLE FROM TAMILNADU ARE WORKING AS SLAVES IN OTHER STATES. WE SHOULD NOT WORRY ABOUT POOR PEOPLE.
    THE IOMPORTANT THING IS THAT 2% BRAHMIN COMMUNITY PEOPLE SHOULD BE ANNIHILATED.
    THIS IS WHAT I UNDERSTOOD FROM Mr. POOVANNAN’S ARGUEMENT.
    GOOD THINKING!

  32. இங்கே நண்பர்கள் எழுதுவதை பார்த்தால் மத்திய அரசு பணிகள் ,வெளிநாடுகளில் மென்பொறியாளர் ,மருத்துவர்,செவிலியர்,மருந்தாளுனர் முதல் டிரைவர் வரை உள்ள வேலைகளில் தமிழர்கள் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களை விட மிகவும் பின்தங்கி உள்ளனர் போன்ற மாயையான தோற்றம் தான் புலப்படுகிறது

    ஏன் இந்த பொய்.மற்ற மாநிலங்களை விட கல்வி,வேலை வாய்ப்பு,மருத்துவ வசதிகள்,அனைத்து பதவிகளிலும் அதிக அளவில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பெருமளவில் வருவது என்று தமிழகம் மேலே தானே உள்ளது

    மது விலக்கு இருக்கும் குஜராத்தை விட பத்து மடங்கு அதிக அளவில் தமிழகத்தில் இருந்து ராணுவத்தில்,துணை ராணுவ படைகளில் இங்குள்ளோர் சேருகிறார்கள்,அதே அளவில் மத்திய அரசு,பணிகள்,பொது துறை நிறுவனங்களிலும் பணியில் இருக்கிறார்கள்.வெளிநாட்டில் பணிபுரியும் (சொந்தமாக தொழில் செய்பவர்களை தவிர்த்து )இந்தியர்களில் தமிழர்கள் கணிசமான பங்கு வகிக்கிறார்கள்.அவர்களை விட அதிக ஆண்டு வாழ்கிறார்கள்,குழந்தை பிறப்பு பெரும்பாலும் மருத்துவமனைகளில். திட்டங்கள் சென்றடையாத மக்கள் வெகு குறைவு.

    பெண் கல்வியில் ,பெண் வேலைவாய்ப்பில் மக்கள் தொகை குறைப்பு நடவடிக்கைகளில்,குடும்ப கட்டுப்பாடு திட்ட நிறைவேற்றுதல்களில் கேரளத்திற்கு அடுத்து தமிழகம் தான் சிறந்த மாநிலம். குட்டி சுவரான மாநிலம் என்று எழுதுவதன் உள்நோக்கம் என்ன

  33. தமிழகத்தில் சமுதாய சமத்துவ கருத்தாக்கங்களும், தலித் உரிமைப் போர்களும் பரவலாகாது போனதற்கும், சாதி வெறி இன்றைக்கும் நீடிப்பதற்குமான ஒட்டுமொத்தக் குற்றவாளி ஈ.வெ.ராவும் திராவிட இயக்கமுமே.

    தருமபுரி கலவரங்களை முன்வைத்து ஜெயமோகன் இன்று எழுதியுள்ள அருமையான கட்டுரையில் இதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார் – https://www.jeyamohan.in/?p=33488

    பூவண்ணன் போன்றவர்களது எண்ணப் போக்கையும், தொடர்ந்து அவர்கள் பேசிவரும் சில போலி பாவனைகளையும் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

  34. \\\\\இதில் கச்சதீவு பிரட்சினையில் மிக பெரும்பான்மை கொண்ட இந்திராவின் முடிவை மாநிலம் எதிர்த்திருக்க வேண்டும் என்று கூறுவது வியப்பு தான்\\\\\

    இந்த மாதிரி சொல்லிவிட்டு

    \\\\மத்திய அரசு பணியில் பல வெளிமாநிலங்களில் பணி புரிந்தவன்,புரிகிறவன் என்பதால் தான் திராவிட இயக்கத்தை ஆதாரங்கள் இல்லாமல் திட்டுவதை எதிர்க்கிறேன்\\\\

    இப்படியும் சொல்வது வியப்புத் தான்.

    ஸ்ரீமான் பூவண்ணன் அவர்கள் எப்போதாகிலும் வங்காளத்திலும் உத்யோகம் செய்திருக்கலாம். அல்லது சஞ்சிகைகளில் ஹிந்துஸ்தானம் மற்றும் பாங்க்ளாதேசமிடையில் நிலப்பட்டுவாடா ப்ரச்னைகள் பற்றி வாசித்திருக்கலாமே.

    தேசப்பிரிவினையின் போது பதவி வெறி புகழ் வெறி போன்றவற்றால் எந்தெந்தக் கண்றாவிகள் அரங்கேறின தேசம் எப்படி பிரிவினை செய்யப்பட்டது என்பது இப்போதைக்கு நான் பேச விரும்பும் விஷயம் இல்லை.

    முதலில் கிழக்குப் பாகிஸ்தானாக ஆகி பின்னர் பாங்க்ளாதேசமாக அவதாரம் எடுத்தபின் பாங்க்ளாதேசத்திற்கும் ஹிந்துஸ்தானத்திற்கும் இடையே நாம் தீன்பீகா தானமளிப்பது பற்றியும் அவர்களிடமிருந்து தொக்கின்பேருபாடி (தக்ஷிண பேருபாரி) தானம் வாங்குவது பற்றியும் உடன்பாடு ஆன விஷயத்தை பூவண்ணன் சார் அறிந்திருப்பாரே

    1974ம் வருஷத்திய ஷேக் முஜிபுர்ரஹ்மான் – இந்திராகாந்தி ஒப்பந்தப்படி தீன்பீகா நிலத்தை ஹிந்துஸ்தானம் பாங்க்ளா தேசத்திற்குக் கொடுக்க வேண்டும். ஆனால் வங்காளிகள் அதற்குத் தயாரில்லை. “ஜான் தேபோ ப்ராண் தேபோ தீன்பீகா தேபோ நோய்” – உயிரையும் கொடுப்போம் ஆனால் தீன் பீகா கொடுக்க மாட்டோம் என்று வங்காளிகள் போராடினர். 2011ம் வருஷம் சர்தார் மன்மோஹன் சிங்க் பாங்க்ளாதேசத்திற்குப் போய் தீன்பீகாவை தாரை வார்க்கும் சமயம் வரை குமாரி மம்தா பேனர்ஜி அவர்கள் தானத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஹிந்துஸ்தான நிலத்தை எதிரி தேசங்களுக்கு பூதானம் செய்வது என்பது மதசார்பின்மைக் காரர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆயிற்றே ஆதலால் நிலத்தை தானம் செய்ய இயலாவிடினும் பாங்க்ளாதேசத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளனர்.

    இந்தக் கண்றாவியை கீழ்க்கண்ட விக்கியில் வாசிக்கலாம்

    https://en.wikipedia.org/wiki/Tin_Bigha_Corridor

    ஹிந்துக்கள் இருக்கும் enclave ஐ பாங்க்ளாதேசத்திற்கு தாரைவார்த்துக்கொடு. முஸல்மான் கள் இருக்கும் enclave ஐ ஹிந்துஸ்தானத்திற்குத் தானம் கொடு என மதசார்பற்ற காங்க்ரஸ் ஏன் முழக்கமிடும் என்பதை வாசகர்கள் அறிவர். பூவண்ணன் சாரும் அறிவார்.

    கச்சத்தீவை தானம் கொடுக்ககூடாது என த்ராவிட இயக்கத்தவர்கள் உண்ணாவ்ரதம், மனிதசங்கிலி, தீக்குளியல் என என்னென்ன உத்திகளை ஸ்ரீமதி இந்திராகாந்திக்கு எதிராகக் கையாண்டனரோ தெரியாது. ஆனால் தம் கட்டியிருந்தால் தானம் செய்யாது குத்தகைக்கு விட்டு பின்னர் குத்தகையை ரத்து செய் என்றாவது போராடலாமே?

    அதெல்லாம் சரி ஒரு குமாரி மம்தா பேனர்ஜி அவர்களுக்கு இருக்கும் பிடிவாதத்தில் தேசநலனில் கிஞ்சித்தாவது தமிழினத்தலைவர் த்ராவிட மடத்தின் மடாதீசர் ஸ்ரீமான் கருணாநிதி அவர்களுக்கு ஏன் இருக்க வேணும் என ஸ்ரீமான் பூவண்ணன் ஹடம் பண்ணுவது புரிகிறது தான்.

    81 ப்ராயம் முதிர்ந்த பார்வதி அம்மையார் (மறைந்த ஸ்ரீ ப்ரபாகரனின் தாயார்) சிகித்சைக்காக ஹிந்துஸ்தானம் வர நிபந்தனை விசாவாம். அதைத் த்ராவிட இயக்கத்தினர் போராடிப் பெற்றார்களாம். ஆனால் மும்பையில் குண்டுவெடிப்புகள் மூலம் 300க்கும் அதிகமான அப்பாவிகளைக் கொலை செய்து மேலும் சில நூறு பேர்களை காயப்படுத்திய பயங்கரவாதி தாவூத் இப்ரஹீமின் சம்பந்தி ஜெனாப் ஜாவேத் மியாண்டாட் ஹிந்துஸ்தானத்தில் கிரிக்கெட் மேச் பார்க்க வருவதற்கு நிபந்தனையற்ற விசாவாம். கொடுக்கத் தயாரானது மதசார்பற்ற கேந்த்ர சர்க்காரும் அவர்களுக்கு ஆமாம் சாமி போடும் த்ராவிட கட்சியும். இதோ நாளன்னைக்கு வந்தேவிடப்போகிறார் என்ற நிலையில் டிவி காரர்கள் போட்டுக் கிழி கிழி என்று கிழித்தெடுத்ததில் அசடு வழிந்த காங்க்ரஸ் அவர் வருகையை தடை செய்தது. த்ராவிட மடத்தினர் வாயையாவது திறந்திருப்பார்கள்? ஒருவேளை மியாண்டாடுக்காக தலையாட்ட வேண்டிய மதசார்பின்மைக் கோட்பாடு த்ராவிட இயக்கத்தினரின் தமிழ்ப்பற்றை விட மேலான கோட்பாடு போலும்?

    ஸ்ரீமான் பூவண்ணன் த்ராவிட மடத்திற்கு மட்டும் சாமரம் போடக்கூடாது மதசார்பின்மையில் த்ராவிட மடத்துடன் போட்டி போடும் காங்க்ரஸ் மடத்திற்கும் கூட நன்றாக சாமரம் போட வேண்டும்.

  35. ஜடாயு சார்

    ஜெயமோகன் அவர்களின் கூற்றில் ஏதாவது உண்மை இருந்தால் வாதிடலாம்.அதிலிருப்பது முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சி தான்

    நத்தங்கொட்டாய் கிராமத்தில் மட்டும் இது வரை ஒன்பது சாதிமறுப்பு திருமணங்கள் நடந்துள்ளன

    சாதித்த காந்தி என்று ஜெயமோகன் கொண்டாடும் காந்தி அவர்களின் பிறந்த மாநிலத்தில் எத்தனை தலித் மக்கள் உயர் சாதியினரோடு சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர் ,பெண்களை அரசியலுக்கு வருக என்று அழைத்த வரவழைத்த மகாத்மா அவர்களின் பிறந்த மாநிலத்தில்,இல்லை ஹிந்துத்வா இயக்கங்கள் வலுவான நிலையிலுள்ள மாநிலங்களில் எத்தனை பெண்கள் அரசு பணியில்,தனியார் துறையில்,காவல் துறையில் இருக்கிறார்கள் என்று பார்த்து விட்டு பேசலாமே,அவரும் எழுதலாமே என்று சொல்லுங்கள் சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *