பாகிஸ்தானை நம்பக் கூடாது

சில தினங்களுக்கு முன் ஜனவரி மாதம் 8ம் தேதி பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுபாட்டு கோட்டின் அருகே இந்தியப் பகுதியில் காவல் செய்து கொண்டிருந்த இந்தியப் படையினரைத் தாக்கி இரண்டு ஜவான்களைக் கொன்றதுடன், இருவரின் தலையையும் வெட்டி, உடலை சின்னா பின்னப்படுத்தி, ஒரு ஜவானின் தலையை தங்கள் வெற்றியின் பரிசாக எடுத்துச் சென்ற சம்பவம் இந்தியர்களின் மனதில் சொல்லொணாத் துன்பத்தை கொடுத்துள்ளது. இந்த சம்பவத்தின் மூலம் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தனது அயோக்கிய தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.

pak-beheads-indian-soldier

இந்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. 1947லிருந்து பாகிஸ்தான் பாரத நாட்டை துண்டாட முயலும் போதொல்லாம் ஓட்டுக்காக இந்திய அரசியல்வாதிகள், இஸ்லாமியர்களை தாஜா செய்யும் விதமாக, பாகிஸ்தானுக்கு பதில் கொடுப்பதாக எண்ணிக்கொண்டு அகிம்சை போதிக்கின்றார்கள். இந்தக் கட்டுரையில் பாகிஸ்தானின் நம்பகத் தன்மையை பற்றி பல்வேறு சம்பவங்களை சுட்டிக் காட்டுவதுடன், மதசார்பற்ற அரசியல்வாதிகள், இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக பாகிஸ்தானை சமாதானப்படுத்தும் செயல்பாடுகளையும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் ஊடுருவுல்களும் இந்தியாவின் இறையான்மைக்கு சவால் விடும் செயலாகும், எவ்வாறு பாகிஸ்;தான் இந்தியாவில் தங்களது பயங்கரவாத செயல்களை அறங்கேற்றம் செய்கிறார்கள் என்பதை சற்றே அலசுவோம்.

முந்தைய சம்பவங்கள்

1971-ல் நடந்த யுத்தத்திற்கு பின் பல முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய துருப்புகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்கள். கார்கில் போர் முடிந்து ஏழு மாதங்களுக்கு பிறகு 2000 –ம் வருடம் பிப்ரவரி மாதம் ரஜோரி மாவட்டத்தில் நௌஷேராவில் ஏழு இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தானின் பி.ஏ.டி.எஸ். திடீர் தாக்குதல் நடத்தி கொன்றது. 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக ஜெனரல் பர்வேஸ் அஷ்பாக் கயானி (General Pervez Ashfaq Kayani) பொறுப்பு ஏற்ற பின் எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் அருகே நடத்தும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்ததுள்ளது. 2009-ம் ஆண்டு குளிர்காலத்தில் நான்கு 107 மி.மீட்டர் ராக்கெட் மூலம் புல் கஞ்சரி (Pul Kanjari) எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது இந்தப் பகுதி பஞ்சாப்பின் அட்டாரி கிராமத்திற்கு அருகே உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே 2009-ல் 28 முறையும், 2010-ம் ஆண்டு 44 முறையும், 2011-ல் 60 முறையும், சென்ற ஆண்டு 2012-ல் 117 முறையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்தின் மீது நடத்திய துப்பாக்கி சூடாகும். இம்மாதிரியான துப்பாக்கி சூடு நடத்தப்படும் போதொல்லாம், இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுகிறார்கள் என்று அர்த்தமாகும், ஏன் என்றால் எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் அருகே பணிபுரியும் ராணுவ வீரர்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த தாக்குதல் என முன்னாள் ராணுவ அதிகாரி தெரிவித்தார். எல்லைக் கட்டுப்பாடுக் கோட்டை தாண்டி வந்து இந்திய வீரர்களை கொல்வதற்காகவும், இந்திய வீரர்களை தாக்குவதற்காகவும் , பாகிஸ்தான் சிறப்பு சேவை குழு கமாண்டோக்கள், எல்லை அதிரடி குழுக்கள் என இரண்டு பிரிவுகளை அமைத்துள்ளது. கார்கில் போரில் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, உடல் சின்னா பின்னமாக்கப்பட்டு, உயிரிழந்த கேப்டன் சௌரப் காலியா என்ற இளைஞர் மற்றும் அவரது சகாக்களை கொன்றதற்கு இன்னும் பாகிஸ்தான் எவ்வித பதிலும் கொடுக்கவில்லை. இந்திய அரசும் இது சம்பந்தமாக பாகிஸ்தானிடம் தனது எதிர்ப்பபை எழுத்து மூலமாக மட்டுமே காட்டியதே தவிர பாகிஸ்தான் அரசு அஞ்சும்படியான நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை.

soldier-at-the-border

வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்து:

இந்த சம்பவம் நடந்தவுடன் இந்திய அரசு டெல்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதரை அழைத்து இது தொடர்பாக கேள்விகள் எழுப்பியதாக செய்திகள் வெளிவந்தன, ஆனால் இந்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு பாகிஸ்தானிய தூதர் கொடுத்த பதில் என்ன என்பது எவருக்கும் தெரியாது. இதே வேளையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சாராக இருக்கும், சல்மான் குர்ஷித் உதிர்த்த முத்துக்கள்,” நடந்த சம்பவத்திற்கான நமது ரியாக்ஷன் அளவுக்கு மீறியதாக இருந்துவிடக் கூடாது.” என தெரிவித்துள்ளார். நமது நாட்டின் துரதிஷ்டம், வெளியுறவுத் துறை அமைச்சர் பயங்கரவாத செயல்களை மட்டுமே செய்துவந்த சிமி இயக்கதிற்கு 2001-ல் தடை விதித்தவுடன், உச்ச நீதிமன்றத்தில், சிமி மீதான தடையை நீக்க வேண்டும் என சிமிக்காக ஆஜரான அட்வகேட். மேலும் நாம் ஏதாவது நடவடிக்கை எடுக்க முற்பட்டால் நல்லுறவு முயற்சிகள் குலைந்து விடும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் தனது கவலையை தெரிவித்துள்ளார். ராணுவ அமைச்சர் தெரிவித்த கருத்து பாகிஸ்தான் அச்சப்பட வைக்கும் வகையில் தெரிவிக்கவில்லை, ஆகவே இந்திய அரசு நடந்த சம்பவத்திற்க தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கும் அதே வேளையில், பாகிஸ்தான் அச்சப்பட வைக்கும் வகையில் இப்பிரச்சினையை ஐ.நா. சபைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் , நடந்த சம்பவம் குறித்த உண்மைகளை சர்வதேச சமூகத்தின் முன்பு வைக்க வேண்டும் என அருண் ஜேட்லி கூறிய கருத்து தற்போதையா உடனடி நடவடிக்கையாகும் என்பது பலரின் கருத்தாகும்.

பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பு:

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் ஹபீஸ் முகமது சயீத் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்ததாக உள்துறை அமைச்சர் திரு ஷிண்டே கூறியது தவறான தகவல் என பாகிஸ்தான் அரசும், சயீத்தும் மறுத்துள்ளார்கள். ஆனால் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 மற்றும் 26ந் தேதி காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்கள் ஹபீஸ் முகமது சயீத்தை பாகிஸ்தானில் சந்தித்தித்துள்ளார்கள். காஷ்மீரில் உள்ள ஹூரியத் தலைவர்களான மீர்வாஸ் உமர் பரூக், பிலால் கனி லோன், பேராசிரியர் அப்துல் கனி பட், மௌல்வி அப்பாஸ் அன்சாரி, ஹசன், முஸ்டாக் அகமது வாஸா, போன்றவர்கள் லஷ்கர்-இ-தொய்பாவின் ஹபீஸ் முகமது சயீத் மற்றும் சயீத் சலாலுதீன் என்பவர்களை சந்தித்து பேசியுள்ளார்கள். இவர்கள் பாகிஸ்தானில் சந்தித்து பேசியது மத்திய அரசுக்கு தெரிந்தும், இதுவரை இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை பல்வேறு காலக் கட்டங்களில் காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினையை வலியுறுத்தி பேசி வரும் இவர்களுக்கு, மத்திய அரசு எவ்வாறு அனுமதி கொடுத்தது.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் குறிப்பாக காஷ்மீர் எல்லையில் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் 42 அமைக்கப்பட்டுள்ளன. இதில் 25 பயிற்சி முகாம்கள் ஆஸாத் காஷ்மீர் பகுதியிலும், 17 பயிற்சி முகாம்கள் பாகிஸ்தான் எல்லையிலும் அமைந்துள்ளது. 2010ம் ஆண்டு 489 முறை பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் குறிப்பாக கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே ஊடுருவியுள்ளார்கள். 2012ம் வருடம் நவம்பர் மாதம் காஷ்மீர் பகுதியில் ஊடுருவியவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இந்தியாவின் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இயங்குகின்றன. சில நாட்களுக்கு முன் டைம் ஆப் இந்தியா நாளிதழில் வந்த ஒரு செய்தி ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளான ஜெய்சல்மர் (துயளையடஅநச ) கங்கா நகர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு எதிரான பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாத பயிற்சி முகாம் இருப்பதாகவும், இந்தக் பயிற்சி முகாம்களில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பது பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரியான கர்னல் அன்வர் அலி என்பவர் என்றும், இதனால் இந்த எல்லைப பகுதிகளில் பதட்டம் நிலவுவதாக செய்தி வந்துள்ளது. குறிப்பாக ஜெய்சல்மீர் பகுதிக்கு 50 கி.மீ. தூரத்தில் உள்ள Ghotaki என்ற பாகிஸ்தான் பகுதியில் தான் பயங்கரவாத பயிற்சி முகாமில் அதிக அளவில் பயிற்சி பெறுகிறார்கள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் துப்பாக்கி சூடு நடக்கும் போது இந்தப் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

pakistan_cia_isi

இந்தியாவில் ஐ.எஸ்.ஐயின் செயல்பாடுகள்:

இந்திய அரசு உண்மையிலேயே பாகிஸ்தானை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகளை முடக்க வேண்டும், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக எடுக்க வேண்டும். நேபாளம் மற்றும் பங்களா தேஷ் வழியாக ஊடுருவும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று உத்திர பிரதேசம் இவ்வாறு ஊடுருபவர்களின் கேந்திரமாக விளங்குகிறது. ஜம்மு கட்டுப்பாடு எல்லைக் கோடு அருகே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலால் ஊடுருவிய 78 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். 1999ல் டெல்லியில் ஐ.எஸ்.ஐயின் முயற்சியின் காரணமாக வெடி மருந்து 51 கி.லோ வைத்திருந்த மூன்று காலிஸ்தான் பிரிவினை வாதிகள் கைது செய்யப்பட்டார்கள். பாகிஸ்தானின் ஒற்றர் முகமது ஷெரீப் என்பவன் கைது செய்யப்பட்டு விசாரித்த போது, பாகிஸ்தானின் உளவு பிரிவின் ஆலோசனையின் படி அலிகார் நகரில் ஒரு பெட்டி கடை வைக்கவும், இந்தியாவில் தனது பெயரை மன்சூர் அகமது என மாற்றிக் கொண்டு, அலிகாரில் உள்ள சிமி இயக்கத்தினருக்கு ஏ.கே.47, ஏ.கே.56 துப்பாக்கிகளை கொடுத்தாகவும் தெரிவித்தான் (ஆதாரம்: The Monstrous Face of ISI, page 87)

இஸ்லாமிய பயங்கரவாதத்தில் காஷ்மீர் பெண்களின் பங்கு:

இந்தியா நேபாளம் எல்லை வழியாக ஊடுருவும் பாகிஸ்தான் உளவாளிகளுக்கும், லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாதிகளுக்கும் உதவி புரிவிதற்காகவே பெண்கள் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. துக்தரான்-இ-மில்லத் (Dukhtaran-e-Millat) என்கின்ற இந்த அமைப்பு லஷ்கர்-இ-தொய்பாவின் பெண்கள் பிரிவு. 1987ல் துவக்கப்பட்டது,; காஷ்மீர் மாநிலத்தில் முதலில் துவக்கப்பட்டது என்றாலும், பின்னாளில் இந்தக் அமைப்பு மற்ற மாநிலங்களுக்கும் பரவியது. துவக்கத்தில் இவர்களின் நோக்கம் காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் செயல்பட்டது. இதன் தலைவர் திருமதி ஆய்ஷா ஆண்ட்ராபி (Ayesha Andrabi ) என்பவர். லஷ்கர்-இ-தொய்பாவின் மற்றொரு பிரிவான லஷ்கர்-இ-ஜாப்பர் என்ற அமைப்பு 2001-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ந் தேதி, இஸ்லாமியப் உடை அணியாத இரண்டு பெண்கள் மீது திராவகம் வீசிய நிகழ்ச்சிக்கு பின்னர் தான் இந்த அமைப்பை பற்றிய உண்மை வெளியே தெரியவந்தது. துக்தரான்-இ-மில்லத் இந்த நிகழ்ச்சிக்கு முழு ஆதரவு கொடுத்த பயங்கரவாத அமைப்பாகும். இது சம்பந்தமாக ஆய்ஷா ஆண்ட்ராபி செப்டம்பர் மாதம் 9-ம் தேதியும், 10 தேதியும் வெளியிட்ட அறிக்கை இவர்களின் உண்மை சொரூபம் தெரிய வந்தது அதாவது இரண்டு பெண்கள் மீது ஆசிட் வீசிய சம்பவத்திற்கு பின் beginning of a comprehensive social reform movement based on true Islamic thought என்று அறிக்கை வெளியிட்டார்

பாதுகாபற்ற நிலையில் எல்லைப் பகுதிகள்:

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே அடிக்கடி அத்து மீறல்கள் நடத்தினாலும், தொடர்ச்சியாக பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதில் பாகிஸ்தான் அரசும், பயங்கரவாத அமைப்புகளும் தொடர்ந்து அதை செவ்வனே செய்து வருகிறார்கள். இதன் காரணமாக இந்தியாவின் எல்லைப் பகுதிகள் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளது. 4.11.2006ந் தேதி பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு ஸ்ரீபிரகாஷ் ஜெய்வால் தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானதாகும், “ பாகிஸ்தானிய தீவிரவாதிகள் பதுங்குமிடமாக நேபாளம் விளங்குகிறது. நேபாளத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல் நடைபெறுகிறது” என்றார். நேபாள எல்லை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் செயல்பாட்டிற்கு உகந்த இடமாக பல ஆண்டுகளாலமாக இருக்கிறது. 1,751 கி.மீ. தூரம் கொண்டு நேபாள எல்லை இந்தியாவின் 20 மாவட்டங்களில் அமைந்துள்ளது. புpகார், உத்திரபிரதேசம், சிக்கிம், மேற்கு வங்காளம், மற்றும் உத்திரகாண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் எல்லைப் பகுதி அமைந்துள்ளது.

2000-ம் ஆண்டு 78 பக்கம் கொண்ட உளவுத்துறையின் அறிக்கை அரசுக்கு கொடுக்கப்பட்டது. “ நேபாளத்தில் பாகிஸ்தானின் இந்திய விரோத நடவடிக்கைகள் “ என்ற தலைப்பில் அந்த அறிக்கை கொடுக்கப்பட்டது. இந்தக் அறிக்கையில் நேபாளத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் செயல்பாடுகளும், அதற்குறிய நடவடிக்கைகளும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மீது இதுவரை மத்திய அரசு எவ்வித நடவடிக்கைகளும், தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்ததானால், பாகிஸ்தானின் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முடியவில்லை. ஆனால் நேபாளத்தின் எல்லையில் 19 இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட இமிகிரேஷன் செக் போஸ்ட்களும், 22 வர்த்தக வழிகளும், 15 இடங்களில் மூன்றாவது நாட்டின் போக்குவரத்து பாதைகளும், ஆறு இடங்களில் தேசீய வழி பாதைகளும் உள்ளதால், பல இடங்களில் உள்ள சிறு துவாரங்களை பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் ஊடுருவுகிறார்கள். மேலே குறிப்பிட்ட பல செக் போஸ்ட்களில் முறையான கண்காணிப்புகள் கிடையாது, ஏன் என்றால் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட 1950ம் வருட ஒப்பந்தப்படி கண்காணிப்புகள் கடுமையானவையாக இருக்க முடியாது. எனவே பாகிஸ்தானின் அடாவடி நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்றால் முதலில் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு கடுமையாக்கப்பட வேண்டும்.

11.7.2006ந் தேதி மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும், 7.3.2006ந் தேதி வாரணாசியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திலும், 29.10.2005ந் தேதி டெல்லியில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களிலும் பங்கு பெற்ற பயங்கரவாதிகள் நேபாளத்திலிருந்து கோரக்கப்பூர் வழியாகவும், பிகார் மாநிலத்தில் உள்ள கிஷான்கஞ்ச் எனுமிடத்திலிருந்து ஊடுருவியவர்கள். ஆகவே மத்திய அரசு பாகிஸ்தானின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால், எல்லைப் பகுதிகளிலிருந்து பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் ஊடுருவாமல் இருக்கும் வகையில் 1,751 கி.மீ தூரம் வரை வேலி அமைத்து முழு கண்காணிப்பு செய்ய வேண்டும்.
madrasa_students313
மதராஸக்களின் பங்கு:

இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள மதராஸக்களும் பயங்கரவாதத்திற்கு ஊக்கம் கொடுப்பதுடன், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பும், ஊடுருவுவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது. நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்திய பகுதியில் மட்டும் 343 மசூதிகளும், 300 மதரஸாக்களும், 17 மசூதி அடங்கிய மதரஸாக்களும் உள்ளன. எல்லையில் உள்ள நேபாளத்தின் பகுதியில் 282 மசூதிகளும், 181 மதரஸாக்களும் உள்ளன. இந்த மசூதிகளுக்கும், மதரஸாக்களுக்கும், அரபு நாடுகளிலிருந்து கோடிக் கணக்கில் நிதி வருகிறது. இந்த நிதியை பயங்கரவாத செயல்பாட்டிற்கு பயன்படுத்துவதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. குறிப்பாக நேபாளத்தில் உள்ள டீசையவயெபயச யனெ முசiளாயெ யேபயச பகுதியிலிருந்து இந்தியாவிற்குள் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழகத்தில் விடுகின்றனர். இவ்வாறு எல்லைப் பகுதியிலிருக்கும் மசூதிகளிலும், மதரஸாக்களிலும் பயங்கரவாதிகளுக்கு உதவி புரியும் செயல்பாட்டையும் கட்டுக் கொள் கொண்டு வர வேண்டும்.

ஆகவே பாகிஸ்தானின் பசப்பு வார்த்தைகளை நம்பி, ஏமாந்து போக கூடாது. எவ்வளவு முறை பாகிஸ்தானும், இந்தியாவும் பேச்சு வார்த்தை நடத்தினாலும், பாகிஸ்தான் என்ற குள்ள நரி, சீனா என்ற ஓநாய் அருகில் இருக்கும் வரை சமாதான நடவடிக்கைக்கு ஒத்து வரமாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டு, பாகிஸ்தானின் வாலை ஒட்ட நறுக்க வேண்டும்.

பாகிஸ்தான் வாலை ஒட்ட நறுக்க வேண்டுமானால், இந்தியாவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருக்கும் தேசத் துரோகிகளை களையெடுக்க வேண்டும், இந்திய அரசுக்கு துணிவு வரவேண்டும்.

10 Replies to “பாகிஸ்தானை நம்பக் கூடாது”

 1. எப்படியாவது ராகுலை சிம்மாசனத்தில் உட்கார வைத்து விட்டு ‘மீதி இருக்கும்’ கொஞ்ச நஞ்சத்தையும் கொள்ளை அடித்து விட வேண்டும் என்றும் , பாரதத்தை ஒரு பாகிஸ்தான் போலவும், ஆப்கனிஸ்தான் போலவும் மாற்றி விட வேண்டுமென்றும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இத்தாலிய மாதுவின் சர்க்காரும் , அதன் ஏக போக அடிமைகளும், எட்டப்பன்களுமாகிய பசி போன்றவர்களும் இருக்கும் வரை இது நடக்குமா?

 2. சார் …பாகிஸ்தானெல்லாம் நமக்கு பிரச்சினையே கிடையாது……..பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளால் தூண்டப்படும் ஹிந்து பயங்கரவாதம் தான் நாட்டுக்கு பெரிய ஆபத்து…… நம்ம உள்துறை அமைச்சர் சொல்லிட்டாரு…….

  மதவாத பூச்சாண்டிக்கு ஹிந்துக்களே ஆதரவு தரும் வரை இந்தக்கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்…….

  நிதிஷ்குமாரின் பொறாமையால் அல்லது பா.ஜ.க மேல்மட்ட [ மக்கள் செல்வாக்கு இல்லாத ] தலைவர்கள் சிலரின் தகுதி அற்ற ஆசையால் மோடி அவர்களும் பிரதமர் வேட்பாள‌ராக அறிவிக்கப்படப்போவதில்லை………அவரைவிட்டால் மக்களை கவரக்கூடிய தலைவர்கள் பி.ஜே.பியில் வேறு யாரும் இல்லை…..

  2014 -ல் மாநிலக்கட்சிகளின் அவியல் கூட்டணியை பார்த்து வெறுத்துப்போகும் மக்கள் அடுத்த நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரசையே மீன்டும்தேர்ந்தெடுப்பர்…..

  ந‌ல்லது நடக்கும் என்ற நம்பிக்கை நாளாக நாளாக குறைந்து வருகிறது……………..

  நாம் ஹிந்துவாக இருக்கிறோம்….. ந‌மது மகனோ , பேரனோ ஹிந்துவாகவே இருப்பானா?

  வர வர ரொம்ப பயமா இருக்கு……….

 3. சுடும் உண்மைகள்.

  \\\\\\\\இந்த சம்பவத்தின் மூலம் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தனது அயோக்கிய தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.\\\\\

  பாக்கி ஸ்தானத்தின் 29 பலோசி ரெஜிமெண்ட் சம்பவத்துக்குக் காரணமாகச்சொல்லப்படுகிறது. இதற்கு முன் கேப்டன் சௌரப் காலியா மற்றும் பல ஹிந்துஸ்தான ஜவான் களை சித்ரவதை செய்து வதம் செய்ததும் இதே ரெஜிமெண்ட் என்றும் சொல்லப்படுகிறது. பாங்க்ளாதேச யுத்தத்தின் போதும் இது போன்ற சித்ரவதைகளை செய்ததான சிறுமைக்கு உடைத்தாகியது இந்த ரெஜிமெண்ட். பாக்கி ஸ்தானத்தின் தற்போதைய ராணுவ ஜெனரல் ஜெனாப் அஷ்ஃபாக் பர்வேஸ் கயானி (Jb.Ashfaq Parvez kayani) அவர்கள் தலை பல கொய்த சிறுமை பெற்ற இந்த ரெஜிமெண்டில் பணிபுரிந்த சிறப்புப் பெற்றவர்.

  \\\\எல்லைக் கட்டுப்பாடுக் கோட்டை தாண்டி வந்து இந்திய வீரர்களை கொல்வதற்காகவும், இந்திய வீரர்களை தாக்குவதற்காகவும்\\\

  ஹிந்துஸ்தான ராணுவம் எல்லை தாண்டா வ்ரதத்தை அனுஷ்டிக்கையில் பாக்கி ஸ்தான ராணுவம் எப்போது எல்லை தாண்டலாம் என்பதிலேயே குறிப்பாக உள்ளது என்பது முக்யமான விஷயம்.

  சாம்பா செக்டரில் (ஜம்மு அருகில்) பெருச்சாளிகளையெல்லாம் தோற்கடிக்கும் திறன் பெற்ற பாக்கி ஸ்தான ராணுவம் பூமிக்கடியில் ஊடுருவ வேண்டி சுரங்கமெல்லாம் தோண்டியுள்ளது.

  \\\நாம் ஏதாவது நடவடிக்கை எடுக்க முற்பட்டால் நல்லுறவு முயற்சிகள் குலைந்து விடும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.\\\\

  பாக்கி ஸ்தானம் நரித்தனம், பெருச்சாளித்தனம் போன்ற இணையற்ற செயல்பாடுகளில் இறங்கும் போது ஹிந்துஸ்தானத்தின் ஆதர்சம் வெண்புறா.

  \\\\\ஆகவே இந்திய அரசு நடந்த சம்பவத்திற்க தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கும் அதே வேளையில், பாகிஸ்தான் அச்சப்பட வைக்கும் வகையில் இப்பிரச்சினையை ஐ.நா. சபைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் , நடந்த சம்பவம் குறித்த உண்மைகளை சர்வதேச சமூகத்தின் முன்பு வைக்க வேண்டும் என அருண் ஜேட்லி கூறிய கருத்து தற்போதையா உடனடி நடவடிக்கையாகும்\\\\\

  மூன்றாம் நபர் காஷ்மீர ப்ரச்னையில் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது என்பது ஹிந்துஸ்தானத்தின் நிலைப்பாடு. ஆக வேறு யாரிடமாவது போவதைப்பற்றி யோஜிப்பது சரிதான். ஆனால் ஹிந்துஸ்தானம் தன் தரப்பிலிருந்து calibrated response ஏதேனும் கொடுப்பதற்கு மூன்றாவது நபரை நாட வேண்டிய அவசியமில்லை.

  \\\\\1947லிருந்து பாகிஸ்தான் பாரத நாட்டை துண்டாட முயலும் போதொல்லாம் ஓட்டுக்காக இந்திய அரசியல்வாதிகள், இஸ்லாமியர்களை தாஜா செய்யும் விதமாக, பாகிஸ்தானுக்கு பதில் கொடுப்பதாக எண்ணிக்கொண்டு அகிம்சை போதிக்கின்றார்கள்\\\\

  முதல் கோணல் முற்றிலும் கோணல். ஆன்மீகத்தில் எடுத்தாளப்பட வேண்டிய கோட்பாடான அகிம்சை அரசியலில் அராஜகமாக விதைக்கப்பட்டு அதன் பலன் களை இன்றைக்குத் தேசமானது கொடூரமான ஹிம்சைகள் மிக அனுபவிக்கிறது என்றால் உண்மை சுடும் ஆனால் மிகையாகாது.

  ஹிந்தி சீனி பாய் பாய் (hindi chini bhai bhai) என்று கோஷமிட்டுக்கொண்டே சீனர்கள் ஹிந்துஸ்தானத்தைக் கபளீகரம் செய்தது சரித்ரம். அடல்ஜீயுடன் சமாதானம் பேசிவிட்டுப் பின்னர் பாக்கி ஸ்தானம் கர்கில் யுத்தத்தில் இறங்கியதும் சரித்ரம்.

  பாக்கி ஸ்தானத்துடன் அமைதி அமைதி என்று பேசுவதையோ அல்லது கோஷமிடுவதையோ ஹிந்துஸ்தான சரிக்கார் இன்னும் உரக்கச் செய்யலாம்.

  ஆனால் பாக்கி ஸ்தான ராணுவம் என்ற நரிக்கும்பலின் வாலையும் கூடவே நறுக்க முயல்வதற்கு ஏன் யோஜிக்க வேண்டும். பாக்கி ஸ்தான ராணுவம் கறுப்பு உடை அணிந்தோ பச்சை உடை அணிந்தோ நம் எல்லையில் நுழைவதை புத்தி கொண்டும் பலம் கொண்டும் தடுப்பதில் ஹிந்துஸ்தானம் முனைப்பு காட்டலாமே. எல்லை தாண்டாவிட்டாலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயல்படும் எதிரி போஸ்ட்களை செயலிழக்கச்செய்யும் வகையில் பதில் தாக்குதல் தொடுத்திருக்க வேண்டுமே.

  இவையெல்லாம் இன்றைய கேந்த்ர சர்க்காரிடத்தில் எதிர்பார்க்க முடியாது

 4. இந்த மாதிரி தலையை வெட்டி எடுத்துச்செல்ல காரணமே நம்ம துப்பாக்கி சினிமா தான், அதுல தான நம்ம விஜய் சொல்றாரு “பாகிஸ்தான் மில்டரி இந்திய ராணுவ வீரரின் கண்களை நோண்டி எடுத்து அதுல பீர் பாட்டில சொருகி டார்ச்சர் பண்ணி கொலை பண்ணிடங்கனு”. அந்த படத்துல சொன்னங்க, இங்க செஞ்சுடங்க…

 5. சான்றோன் கருத்துக்கு முழு ஆதரவு. நமது கடமை விழிப்புடன் இறுதல் ஆகும். 2014 மற்றும் எந்த therthallilலும் காங்கிரஸ் அல்லது எந்த கூட்டணி கடசிஉம், மாயாவதி,முலாயம் லாலு கும்பல் உட்பட வராமல் பார்துகொள்ளவேண்டும் .

 6. பாரத நாட்டின் தீவிரவாதத்திற்கு எதிரான போரை மழுங்கடிக்கும் விதமாகவே அமைந்துள்ளது மத்திய அமைச்சர் ஷிண்டேவின் பேச்சு பல லட்சக்கணக்கான மக்களின் பங்களிப்போடும் பல உள்ளீடான அமைப்புகளின் பங்களிப்புடனும் வரலாற்றில் நெடுங்காலம் செயலற்றீயுள்ள ஆர .எஸ் .எஸ் போன்ற அமைப்புகளை அவதூறு செய்வதை விட்டு விட்டு தேசத்தை காக்க முன் வர வேண்டும் தேச பக்தர்களை அவதூறு செய்வதை நிறுத்த வேண்டும்
  வீர .பாலமுருகன் சித்தமல்லி

 7. WITHIN 50 YEARS, SHARIYA LAW WILL BE ENFORCED IN INDIA. WE ARE MOVING TOWARDS THAT ONLY.

 8. ஸ்டீபன் என்பவர் துப்பாக்கி படத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

  ஐயா, துப்பாக்கியில் காட்டியிருப்பது மிகவும் குறைவு (சென்சாருக்குப் பயந்து). நிதர்சன நிஜம் இன்னும் கொடூரமானது. இஸ்லாமிய ஆதரவாளரான கமல் விஸ்வரூபம் பிரச்சனையில் அவர்களிடம் மாட்டிக் கொண்டு படும்பாடைப் பாருங்கள். அவர் இந்து முன்னணி இராமகோபால் எதிர்ப்பார் என்றுதான் எதிர்பார்த்தாராம், ஆனால் அவரது நண்பர்களே அவர் மார்பில் கத்தி வைக்கின்றனராம்.

  சரி, தேவையில்லாமல் விஸ்வரூபத்தை இழுக்கிறேன் என்று யாரும் நினைக்காதீர்கள். இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும். மலேசியா, யூ.ஏ.இ. , அரபுநாடுகள் போன்ற நாடுகளில் வெகு விரைவாக அப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டதே இதிலிருந்து அவர்களின் வலை எவ்வளவு அகன்றதாக இருக்கிறது என்று புரியவில்லையா என்பதைச் சொல்லவே விஸ்வரூபம் குறித்துச்சொன்னேன்.

  கமல் என்னதான் மண்ணின்மைந்தர்களுக்கு விரோதியாக இருந்தாலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சிக்கிக் கொண்டு அவதிப்படுவதைப் பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கிறது.

  ஸ்டீபன் போன்றோர் எப்போதுதான் உண்மையை உண்மை என்று ஏற்பார்களோ தெரியவில்லை.

  முகநூலில் அருமையான கார்டூன் ஒன்று பார்த்தேன். அதில் ஒபாமா எங்களைத் தாக்கினால் உங்கள் மீது போர் தொடுப்போம் என்பார். இஸ்ரேலிய பிரதமர் எங்களைத் தாக்கினால் உங்களை அழித்துவிடுவோம் என்பார். நம் நாட்டு மன்மோகன் சிங் எங்களைத் தாக்கினால் நாங்கள் உங்களுடன் கிரிகெட் விளையாட மாட்டோம் என்பார்.

  இதுதான் இந்தியாவின் தற்போதைய நிலையாக இருக்கிறது.

  வலிமையா இந்தியா மலர, காலங்களும் காட்சிகளும் மாற வேண்டும்.

 9. தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கு உதாரணம் கமலின் நிலை
  கொஞ்சம் கூட மன சாட்சியே இல்லாமல் நாத்திகவாதி என்று சொல்லிக் கொண்டு அதே சமயம் ஹிந்து தர்மத்தை மட்டும் இழிவு படுத்திக் கொண்டு ஆனால் மற்ற மதங்களை உயர்வாகக் காட்டியும் அல்லது அவைகளைப் பற்றி வாய் மூடிக் கொண்டும் இருந்ததற்கு இப்போது யாரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினாரோ அவர்கள் மூலமாகவே தண்டனை கிடைக்கிறது.

  காஞ்சி சங்கராச்சாரியாரை ஜெயா அரசு கைது செய்த போது தேவை இல்லாமல் ஆஜர் ஆகி கமல் குடும்பத்தில் சிலர் அதற்கு ஓடோடி வந்து ஆதரவாகப் பேசியது நினைவிருக்கிறது .

 10. கமல் மீது அவ்வளவாக அனுதாபம் வர மாட்டேனென்கிறது. ஏனென்றால் நம் ஹிந்து கடவுள்களைப் பற்றியும், மத நம்பிக்கைகளைப் பற்றியும் இதுவரை அவ்வளவு மதிப்பு கொடுத்திருகிறார். அவருக்கு இப்போது துணை நிற்க கடவுள் நம்பிக்கை உடைய ரஜினி தான் வருகிறார். கமல் இப்போதாவது புரிந்து கொள்ளட்டும். யார் தீவிரவாதிகள், யார் செக்யூலரிஸ்டுகள் என்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *