உத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …

uthar3கடந்த 16 ஆம் தேதி இந்துக்களின் வணக்கத்திற்குரிய புனித ஸ்தலமான கேதர் நாத், பத்ரி நாத் அமைந்துள்ள பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு மிகப்பெரிய பேரழிவு நடைபெற்று இருக்கிறது. புனித கங்கை அன்னையும், யமுனை அன்னையும் தன் ஊழி நடனத்தை ஆடியிருக்கிறார்கள். இந்துக்களின் புனித யாத்திரைக்காலமான இந்த நாள்களில் உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசங்களில் பெய்த பெரு மழையால் கங்கையிலும், யமுனையிலும் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வழியில்  நதியின் பாதைக்கு இடையூறாகவும் ஆக்ரமித்தும் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் விடுதிகளோடு அருகில் இருந்த கட்டிடங்களையும், வழிபாட்டு தடங்களையும்  நகர்த்தி விட்டது. தனக்கான பாதையை நதிகள் ஏற்படுத்தி கொண்டது.  அலக்நந்தா, பாகீரதி, மந்தாகினி நதிகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெய்த கனமழை பெருவெள்ளமாக மாறி விட்டது. மிகப்பெரிய பேரழிவை இந்த வெள்ளமும், அதனால் நதிக்கரைகளிலும் , மலைப்பாதைகளிலும் ஏற்பட்ட  நிலச்சரிவு பெருந்துயரத்தை ஏற்படுத்தி விட்டது. 3 நாள்களாக இடை விடாத பெய்த மழையால் ஏற்பட்ட அபரிமிதமான நீர்ப்போக்கு பெரும் நிலச்சரிவை கரை யோரங்களிலும், பெருமழை தன் பங்கிற்கு மலைபகுதிகளில் பெரும் நிலச்சரிவையும் ஏற்படுத்தி உத்தரகாண்ட் மாநிலத்தை தேசத்தின் பிற பகுதிகளில் இருந்து பிரித்து விட்டது .

uthar1பெருவெள்ளமானது இந்துக்களின் பல புனித திருத்தலங்களை உழுக்கி எடுத்து விட்டது. கேதார் நாத், பத்ரி நாத் மற்றும் சமேலி ,கெளரிகுண்ட் ஆகிய இடங்களில் வழிபட்டு கொண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களின் உடமைகளை இழந்து மாட்டிக்கொண்டார்கள். அந்த மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் தங்களின் இருப்பிடத்திலேயே வீடு மற்றும் பொருட்களை இழந்து அனாதைகளாக இருக்கிறார்கள். தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் தங்கள் முன்னோர்களுக்கு நீர் கடன் செய்வதற்கும், தங்களின் உயிருக்கும் மேலாக இருக்கும் இறைவனை தரிசிப்பதற்காகவும் வந்தவர்கள் ஆதரவின்றி நிற்கிறார்கள். சாலை வழியாகவோ, இருப்பு பாதைகள் வழியாகவோ அவர்கள் மலை பிரதேசங்களிலிருந்து சமவெளிக்கு வருவதற்கு எந்த மார்க்கமும் இல்லை. தொடர்ச்சியாக பெய்யும் பெரு மழை, மலைபிரதேசங்களுக்கே உரிய ஊடுருவும் குளிர்,  நிராதாரவான நிலை ஏற்படுத்தி இருக்கும் அச்சம் என அங்குள்ள பக்தர்கள் மிகவும் பயந்து போய் இருக்கிறார்கள். உணவுப்பொருட்கள் குறைபாடு, பெரும்பாலும் வயதான பக்தர்களுக்கான மருத்துவ வசதிகள் . மூப்பும், தகவல் தொடர்பு குளறுபடிகளும் பக்தர்களை இன்னும் பெரிய குழப்பத்தில் ஆழ்த்தி வருத்தப்பட வைக்கிறது.

uthar2இதற்கிடையில் சுமாராக 90 சதுர கிலோமீட்டர் அளவிற்கு  நதிக்கரை ஓரங்களில் இருந்த கட்டிடங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. பேருந்துகள், மகிழ்வுந்துகள், கார்கள், வீடுகள் அப்படியே வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சிகள் நமக்கு பெரும் அச்சத்தை ஊட்டுகின்றன. கேதார் நாத், பத்ரி நாத் பகுதிகளில் ஆலயம், புண்ணிய ஸ்தலங்களை சுற்றி சிறிய அளவில் கடை வைத்திருந்த சுமார் 5000 பேருக்கு மேல் என்ன ஆனார்கள் என்ற விவரம் இல்லை. கழுதைகளையும், குட்டை குதிரைகளையும் கொண்டு பக்தர்களை மேலே ஏற்றி சென்று சேவை செய்து கொண்டிருந்த சேவையாளர்களும், கால் நடைகளும் இப்போது இல்லை. மலை மீது வயதானவர்களை தூக்கி சுமந்து செல்லும் டோலிகள் என்ன ஆனார்கள் என்ற விபரம் இல்லை. பல மாநிலத்தை சேர்ந்தவர்களை பற்றிய விபரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்க வில்லை. வெள்ளகாட்சிகளை காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. மனம் பதை பதைப்புடன் ஒரு வித அதிர்ச்சி மன நிலையில் உறைந்து பார்த்து கொண்டிருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இது நிச்சயம் மிகப்பெரிய மானுட சோகமாக காலத்தில் உறைந்து தான் இருக்கப்போகிறது.

uthaஇதில் நமக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டு நம்மையும், பாதிக்கப்பட்டவர்களையும் ஆசுவாசப்படுத்தியது ராணுவத்தினரும் , ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் தான் . இவ்வளவு பெரிய மானுட சோகம் நடந்து கொண்டிருக்கையில் மாநில அரசும், மத்திய அரசும் தங்களின் செயல்படாத தன்மையிலிருந்து விழித்து கொள்ள 2 நாள்கள் ஆனது. அதற்குள் மரணங்களின் எண்ணிக்கை 10,000த்தை தாண்டியிருந்தது. 2,00,000க்கும் மேலான மக்கள் துண்டிக்கப்பட்ட நிலத்தில் நிராதரவாக நின்றார்கள் . 585 பிணங்கள் கங்கையிலேயே எடுக்கப்பட்டது. ஆனால் அரசு இன்னும் சாவு எண்ணிக்கை 5000க்குள் தான் இருக்கும் என்று பொய் சொல்லி வருகிறது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் விஜய் பகுகுணா தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த பேரிடரை சமாளிக்க முடியாமல் ஸ்தம்பித்து பின்னரே தாமதமாக நடவடிக்கையில் இறங்கியது. மத்திய அரசும், பேரிடர் மேலாண்மை மையமும் 2 நாள்கள் கழித்தே விழித்து ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்த போது வெள்ளம் பெருமளவு உயிர்களை பலி கொண்டு, பலருடைய வாழ்வாதரங்களை சிதைத்து முடித்திருந்தது.

uthar14
மீட்பு, மறு சீரமைப்பில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்

ராணுவ வீரர்களும், இந்திய ராணுவத்தின் விமானப்படை வீரர்களும் உடனடியாக களம் இறங்கி மீட்பு பணிகளில் தங்களை அர்ப்பணித்து கொண்டு மக்களை காப்பாற்றினார். அவர்களுக்கு உறுதுணையாக ராணுவத்தின் பொறியாளர் பிரிவும், மருத்துவர்கள் பிரிவும் உடனடியாக செயல்பட்டு பல மனித உயிர்களை காப்பாற்றினார்கள். உத்தரகாண்ட்டின் கேதார் மலை பிரதேசம் முழுக்க சாலை மார்க்கமாக அணுக இயலாதவாறு துண்டிக்கப்பட்டு விட்டது. ராணுவ பொறியாளர்கள், வீரர்கள் இணைந்து அவசர வழிகளையும், சாலை மார்க்கங்களையும் சீர் செய்ய முயன்று சாதித்தார்கள். நதிகளை கடக்க ரோப்கள் வழியாகவும், அங்கேயே கிடைத்த மூங்கில்கள், கயிறுகள் கொண்டும் தற்காலிக பாலங்களை அமைத்தும் மக்களை சமவெளிக்கு கடத்தினார்கள். ரிஷிகேஷின் பரமார்த்த  நிகேதன் ஆசிரமத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான சிவன் சிலையின் கழுத்து வரை ஒடிக்கொண்டிருந்த வெள்ள நீரை காண்பித்தார்கள். ஆற்றின் விஸ்வரூபம் . இயற்கையின் ஊழி மனித பிரயத்தனங்களின் எல்லையை காட்டி விட வல்லது.

uthar4ராணுவ வீரர்கள் 2000 பேருக்கு மேல் 17ம் தேதி முதல் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய ராணுவத்தின் விமானப்படை,இந்தோ-திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை வீர்ர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்களுடன் இணைந்து மீட்பு பணியை ஆரம்பித்தார்கள். பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பு மிக முக்கியமான ஒரு சேவையாகும் . அது முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்தது. ராணுவத்தின் பொறியாளர்கள் பிரிவு தகவல் தொடர்பை செயற்கை கோள் உதவியுடன் மீள் கட்டமைப்பு செய்தார்கள். முதல் 3 நாள்களில் 32772 நபர்களை இந்தோ திபெத் படையும் பேரிடர் மீட்பு படையும் மீட்டது. நேற்று வரை சுமாராக 76000 பேர் வரை மீட்கப்பட்டிருக்கிறார்கள் என அதிகார பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போது 6800 ராணுவ வீரர்களும் 40 ராணுவ ஹெலிகாப்டர்களும் களத்தில் இருக்கின்றன. 1 லட்சம் கிலோவிற்க்கு மேலான உணவுப்பொருட்களை ராணுவம் வழங்கி இருக்கிறது. 6 பிரசவங்கள் ராணுவ மருத்துவர்களால் பார்க்கப்பட்டு இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் தேசம் சந்தித்த பெரிய அழிவு மற்றும் சவால் இது என்று சொல்லலாம். ராணுவ வீர்ர்களின் அயராத முயற்சியும், இந்திய விமானப்படைக்கும் உயிருள்ள வரை ஒவ்வொரு இந்துவும் கடமைப்பட்டவனாக இருக்கிறான்.

uthar13பாதிக்கப்பட்ட பகுதிகளை மறு சீரமைக்க தனியான துறை ஒதுக்கப்பட்டு வேலை செய்தாலே குறைந்தது 1 ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்படுகிறது. மீண்டும் மழை அங்கே துவங்கி இருக்கிறது. மீட்பு பணிகளை அது பாதித்து இருக்கிறது. அரசு கொஞ்சம் அசமஞ்சமாக இல்லாமல் விரைந்து செயல் பட்டிருந்தால் இன்னும் உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும்,.மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நிர்வாக ரீதியில் சுத்தமாக ஒருங்கிணைந்து செயல்படாததால் மீட்பு, நிவாரணப்பணிகள் தாமதமாகிக்கொண்டே சென்றன. இதற்கிடையே குஜராத் முதல்வரும்,பிரதமர் வேட்பாளருமான  நரேந்திர மோடி அவர்கள் விரைந்து வந்து அங்குள்ள மக்களுக்கு தன் அரசு நிர்வாகம் மூலமும், தங்களுடைய பேரிடர் மேலாண்மை கட்டமைப்பு மூலமும் உதவிகள் செய்ய ஆரம்பித்தார். களத்தில் இறங்கி. மக்களை காப்பாற்றி அவர்களை அப்புறப்படுத்த தன்னலமற்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் 1000க்கும் அதிகமானோர் ராணுவத்துடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தங்கள் மாநில மக்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என முயற்சித்தனர். ஏனென்றால் செயல்படாத காங்கிரஸ் அரசுக்கு அதை பற்றி எந்த அக்கறையும் இருக்காது என்பதை உணர்ந்தே இப்படி செயலாற்றினார்கள். வழக்கம் போல சோனியாவும், மன்மோகனும் வெள்ளம் பாதித்த பகுதிகளை தரையில் இருந்து 800 அடி உயரத்தில்; பார்த்து விட்டு பீட்ஸா சாப்பிட்டு விட்டு அப்படியே பறந்து விட்டனர். காங்கிரஸின் அவல இளவரசர் ஸ்பெயினில் தன் மாபியா காதலியுடன் இருந்தார். அதனால் அவரால் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட கூட வர முடிய வில்லை.

uthar7

பேரிடர் மேலாண்மையில் ஒரு பகுதியாக உலகத்தின் சிறந்த தேடுதல் தளமாக உள்ள கூகுள் நிறுவனம் தன் பங்கிற்கு கூகுள் பர்சன் ஃபைண்டர் என்ற வசதியை மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறது. இதன் மூலம் நம் சொந்தங்களை தேடிக்கொள்ள வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது கூகுள் நிறுவனம் அதற்கு நம் வாழ்த்துக்கள் . .https://google.org/personfinder/2013-uttrakhand-floods/

வருங்கால பிரதமராக முன்னிற்கும் மோடி தன் அரசாங்கத்தின் அதிகாரிகளுடனும், மருத்துவர்கள், பொறியாளர்களுடனும் நேரடியாக களத்திற்கு வந்தார். மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். மக்களுக்கு ஆறுதல் கூறினார். ராணுவ வீர்ர்களுக்கும், மீட்பு குழுவினருக்கும் உணவு ஏற்பாடுகளை செய்தார். மக்கள் சமவெளியை அடைவதற்காக போக்குவரத்து ஏற்பாடுகளை செய்தார். தன் சொந்த செலவிலும், குஜராத் செலவிலும் 4 விமானங்களையும், 25 பேருந்துகளையும், 800 இன்னோவா கார்களையும் வரவழைத்தார். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும், ராணுவ வீரர்களும் மீட்ட மக்களை அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.மேலும் வேறு என்ன விதமான உதவிகள் கேட்டாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். பாஜகவின் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்கள் இந்த பேரிழப்பை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பாஜகவின் எம்.பி. எம்,எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியத்தை வெள்ள நிவாரண நிதிக்கு கையளிக்க உத்தரவிட்டார். முதல் நாளிலேயே 2 கோடி ரூபாய் நிதியை தேசிய பேரிடர் மேலாண்மைக்கு மோடி அளித்தார். மேலும் மருந்து பொருட்களையும் , குளிர் தாங்கும் உடைகளையும் வழங்கினார். ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக இருந்து ராணுவ வீரர்களை பாராட்டி விட்டு ஊக்குவித்த மோடிக்கு நம் நன்றிகள். மோடியை மீட்க வந்த ராம்போ என வட இந்திய பத்திரிக்கைகள் தலைப்பு செய்தியில் கொண்டாடின.

uthar11மோடியின் செயலாற்றலுக்கு கிடைத்த வரவேற்பை கண்ட காங்கிரஸிம், மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் ஒரு சாராரும் மோடியை வசை மாறி பொழிந்து கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்,எஸ் அமைப்பின் சேவை இது போன்ற பேரிடர் நேரங்களில் என்றுமே மிக முக்கியமானதாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் . சங்க அலுவலகர்களும் ஸ்வயம் சேவக்குகளும் ராணுவத்துடன் இணைந்து மீட்பு பணிகளில் பெருமளவு ஈடுபட்டனர். அது பற்றிய செய்திகளை அறவே தவிர்த்து விட்டு மட்டுமே பிரசுரிக்கும் இதழ்கள் இந்த முறை கொஞ்சம் அவற்றை மாற்றிக்கொண்டன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவைகளை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி 30 நிமிடங்கள் சிறப்பு காட்சிகளாக ஒளிபரப்பியது. காங்கிரஸ் கட்சியின் ஊது குழல்கள் மறு சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் மோடியை விமர்சித்து கொண்டு தங்கள் வயிற்று எரிச்சலை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்கள்.

uthar15இந்திய தேசிய ராணுவத்தை கறித்து கொட்டும் சீமான் கும்பல்கள்,திராவிட இயக்க குறுங்குழுக்கள், இஸ்லாமிய அமைப்புகளுக்கு எல்லாம் இது ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும். இப்படியான ஒரு தியாக அமைப்பை இனி குறை சொன்னால் அவர்களை நாம் சகித்து கொண்டிருக்க கூடாது என்ற நிலைக்கு சாமானியர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்திய விமானப்படை வீரர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும், அங்கு பாரத அன்னையின் சேவையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு சகோதரனின் நலனுக்காகவும், அவர்களின் குடும்ப நலனுக்காகவும் பிரார்த்தித்து கொள்வது நம் கடமை. அங்கு இருக்கும் பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ஒவ்வொருவரும் குடும்பத்தோடு இணைய நம் பிரார்த்தனைகளை இறைவனிடம் வைப்போம். மீட்பு, மறு சீரமைப்புக்காக நம் ஒவ்வொருவரும் நம்மாலன உதவிகளை செய்வோம். வாருங்கள் வளமான எதிர்காலத்தை உருவாக்க கை கோர்ப்போம். வாழ்க பாரதம்.

uthar16உங்களின் மேலான உதவிகளை நீங்கள் உங்கள் ஊரில் உள்ள சேவாபாரதி அமைப்பின் அலுவலகத்தில் சேர்ப்பித்து விடலாம். அல்லது  பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் சேர்ப்பித்து விடவும். இது நம் கடமை.

உத்தராகண்ட் வெள்ளப் பேரிடர்: பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுங்கள்

மோடிக்கும், மன்மோகன் சிங், சோனியா கும்பலுக்கும் உள்ள வேறுபாடுகள்:

uthar10uthar12மோடி தானே களத்தில் இறங்கி மீட்பு, மறுசீரமைப்பு வேலைகளை ஊக்குவித்து மக்களை காப்பாற்றினார். காங்கிரஸ் கும்பல் அதை மறைக்க தன் மீடியா அடிமைகளை கட்டவிழ்த்து விட்டு மறைக்க முயற்சித்தார்கள். மக்களே முன் வந்து சமூக ஊடகங்களில் அதற்கு எதிர்வினை ஆற்றி மோடிக்கு நன்றி தெரிவித்தார்கள். பிறகு மன் மோகனும் , சோனியாவும் தனியாக சொகுசு விமானத்தில் உட்கார்ந்து கொண்டு வெள்ளக்காட்சிகளை வேடிக்கை பார்த்ததை அனைவரும் விமர்சித்தனர். அதை பற்றி எல்லாம் கொஞ்சமும் வெக்கமில்லாமல் பாஜகவையும் மோடியையும் விமர்சிக்க கிளம்பி விட்டது காங்கிரஸ். மேலும் சில அதிர்ச்சியை பார்க்கலாம். வெள்ளத்தில் இறந்தவர்களை தரையில் கொண்டு வந்து உறவினர்களிடம் அளிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்யாமல் தனியார் ஹெலிகாப்டர் ஏஜென்சிகளுக்கு அந்த காண்ட்ராக்டை அளித்து விட்டது. தனியார் ஏஜென்சி என்றால் அது நிச்சயம் ஒரு பிராடு கம்பெனியாகத்தானே இருக்கும். அதில் மிக முக்கியமாக ஒரு கம்பெனி புளு ப்ரீஸ் சார்ட்டர் சர்வீஸ் அதன் கட்டண விபரம் பின் வருமாறு உயிருடன் vadraஇருப்பவர்களை காப்பாற்றி தரையிறக்க ரூபாய் 2 லட்சம் / ஒரு நபருக்கும், இறந்த உடலை எடுத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைக்க 1 லட்சம்/ஆள் என்ற கணக்கில் வசூலிக்கிறது.  (https://inagist.com/all/349463767689601024/) இந்த கம்பெனியின் முதலாளி யார் என்றால் இத்தாலிய அன்னையின் மருமகன் ராபர்ட் வதேராவுடையது. சுக்தேவ் விகார், டெல்லி என்ற ராபர்ட் வதேராவின் பெயரில் உள்ள கட்டிடத்தில் இயங்குவதாக கம்பெனி பற்ரிய புரபைலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்படியான பேரழிவிலும் காசு பார்க்கும் ஈன பிறவிகளை என்ன சொல்லி திட்டுவது.மேலும் இவர்களின் இளவரசன் ராகுல் ஸ்பெயின் உல்லாச பயணம் முடிந்து வரும் வரை தேசம் முழுக்க உள்ள அனைவரும் உத்தரகாண்ட் மக்களுக்கு வழங்கிய 13 டாரஸ் லாரி முழுக்க இருந்த உணவு, மருந்து பொருட்களை காங்கிரஸ் கட்சி அலுவலக வாசலிலேயே வைத்திருந்து பிறகு 3 நாள்கள் கழித்து உல்லாச பயணம் முடித்து ராகுல் வந்த பிறகு அந்த நிவாரணப்பொருட்கள் உத்தரகாண்ட் நோக்கி சென்றன. எவ்வளவு பெரிய பேரழிவு நிகழ்ந்தாலும் அதில் கூட வெக்கமில்லாமல் அரசியல் செய்வது தான் காங்கிரஸ் ஈனப்பிறவிகளின் செயல் என்று வெறுப்போடு மக்கள் முணு முணுக்கிறார்கள். செவிடர்களின் காதில் இது ஏறட்டும். ( https://www.facebook.com/RealityOfKhangress/posts/405835099532800 )

uthar6

 

இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி தற்போது செய்திகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் MI 17 ரக உலங்கு வானுர்தி விபத்திற்குள்ளாகி 8ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 19 பக்தர்கள் அதே இடத்தில் இறந்து விட்டார்கள். காங்கிரஸ் அரசால் ரஷ்யாவின் தயாரிப்பான இந்த வகை ஹெலிக்காப்டர்கள் உலக நாடுகள் அனைத்தாலும் வாங்கப்பட்டுள்ளது . இது வரை மொத்தமே 14 முறை மட்டுமே விபத்திற்குள்ளான MI 17 வகை ஹெலிக்காப்டர்கள் 5 முறை இந்தியாவில் மட்டுமே விபத்திற்குள்ளாகி இருக்கிறது. 2008 ஆம் ஆண்டிலிருந்து 1500 கோடி ரூபாய்க்கு மேல் ரஷிய அரசுக்கு கொடுத்து வாங்கப்பட்டிருக்கும் இந்த வகை வானுர்தி. இது வரை 80 பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களையும், அதிகாரிகளையும் பலி வாங்கியுள்ளது. அனைத்திலும் கமிஷன் வாங்கி இந்த தேசத்தை அழிக்கும் கொலைகார காங்கிரஸ் கட்சியின் இந்த ஊழல் தேச பக்தர்களை பலி வாங்குவதை இன்னும் பார்த்து கொண்டு தான் இருக்க வேண்டுமா ?

3 Replies to “உத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …”

  1. இந்துவாக இரு தர்மகாரியங்கள் செய்ய தானாகவே பழகிப் போகும் ……

  2. சற்று காலதாமதமாயினும் இந்தத் துயர நிகழ்ச்சிகளை மற்றும் மீட்புப் பணிகளைத் தொகுத்து வ்யாசமாக வழங்கிய ஸ்ரீ ராஜமாணிக்கம் அவர்களுக்கு நன்றிகள். வ்யாசம் சம்பந்தமாக சில கருத்துக்கள்.

    ஐயன்மீர், மாகாணத்தின் பெயர், *உத்தராகண்ட்*———–*உத்தரகாண்ட்* அல்ல. வ்யாசத்தில் பலமுறை இச்சொல் தவறாக வருவதால் இதைத் திருத்துமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன். பல தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் தவறாகவே இந்த மாகாணத்தின் பெயரை உச்சரித்து வருகிறார்கள்.

    பேரிடர் நிகழ்ந்த பின் காந்தி குல்லாய் போட்டு காங்க்ரஸ் காரர்கள் நிகழ்த்தி வரும் ஊழலும் ராஜமாதாவின் மருமகப்பிள்ளை பிணக்குவியலுக்கிடையே பணக்குவியலை சுருட்டும் பாங்கையும் உலகத்திற்கு சுட்டியதிற்கு நன்றி.

    இந்தப்பேரிடர் ஏன் நிகழ்ந்தது; நிகழ்ந்த பின் அது எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பதைப் பற்றி ஸ்ரீ அருண் ஸ்ரீவாஸ்தவா அவர்களும் விஜயவாணி தளத்தில் ஒரு வ்யாசம் சமர்ப்பித்துள்ளார். சில துளிகள்.

    https://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2844

    சுற்றுச்சூழல் ஆய்வறிக்கைகள், CAGன் புனல்மின் திட்டச் சுற்றுச்சூழல் சம்பந்தித்த ஆய்வறிக்கைகள் —– இவை நாலைந்து வருஷமுன்பே பெரு புனல்மின் திட்ட ப்ராஜக்டுகள் ஹிமாலயப் பகுதிகளுக்கு எப்படி குந்தகம் விளைவித்து வருகிறார்கள் என்று சுட்டியுள்ளன.

    பேரிடர் நிகழ்ந்த பின் ராணுவம், RSS, VHP, மற்றும் ஹிந்து இயக்கங்கள் இவற்றில் பங்கெடுத்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது காத்து ரக்ஷித்தது ஒரு புறம். பாரத சர்க்கார் மற்றும் உத்தராகண்ட் சர்க்கார் தூங்கி வழிந்து கொட்டாவி விட்டு நிலைமையை சமாளிக்க முனைந்தது சுட்டப்பட வேண்டிய ஒன்று.

    மிக முக்யமாக, வ்யாசத்தின் கீழ்க்கண்ட பகுதியை சுட்ட விழைகிறேன்.

    \\\\The grave situation was known on June 16, right across Uttarakhand. The Indian Army’s response time is 45 minutes from the time a disaster is declared to reaching the spot to commence rescue and communication restoration. In these parts, soldiers trained in mountain warfare are placed. But the army can’t move unless the Army Chief orders it. General Bikram Singh (about whom the less said the better) did not order his men to move for two days when the Kokrajhar events happened last year. He sat over the Chinese ‘incursion’ in Ladakh. Why did he not order his army to stay on full alert and move? Was he waiting for the district administration’s request? Doesn’t India know that the district civilian administration has effectively ceased to exist?\\\

    பேரிடர் நிகழ்ந்தது – 45 நிமிஷங்களுக்குள் ராணுவம் தன் பணியை ஆரம்பித்தல் – பணி, காலம் கடந்து ஆரம்பிக்கப்பட்டமை — இவை கேந்த்ர மற்றும் ராஜ்ய சர்க்காரால் சரியான படி விசாரிக்கப்பட்டு —- இனிமேலாவது இது போன்றதொரு குறைபாடு நேராத வண்ணம் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளலாமே.

    புனல் மின்சாரம் சம்பந்தபட்ட விஷயங்களில் ஊழல் —— சுற்றுச்சூழல் கேடு —- சர்க்காரின் மெத்தனப்போக்கு — ஸ்ரீ ராஜமாணிக்கம் அவர்கள் இது சம்பந்தமாக தனி வ்யாசம் எழுத வேண்டும்.

  3. //ஆர்.எஸ்,எஸ் அமைப்பின் சேவை இது போன்ற பேரிடர் நேரங்களில் என்றுமே மிக முக்கியமானதாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் . சங்க அலுவலகர்களும் ஸ்வயம் சேவக்குகளும் ராணுவத்துடன் இணைந்து மீட்பு பணிகளில் பெருமளவு ஈடுபட்டனர்.//

    நாட்டின் இரண்டாவது இராணுவம் போல் தன்னலமற்ற ஆர்.எஸ்,எஸ் அமைப்பின் சேவையை எவ்வளவு போற்றினாலும் தகும். கட்டுரைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *