சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின ஆண்டை (2013-2014) பாரத நாடும், உலகெங்கும் உள்ள இந்துக்களும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இதையொட்டி, சுவாமிஜியின் சிந்தனைளை, படைப்புகளை, வாழ்க்கைக் குறிப்புகளை இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்துடன் தேசிய சிந்தனை கழகம் என்ற அமைப்பு விவேகானந்தம்-150 என்ற இணையதளத்தை சில மாதங்களாக நடத்தி வருகிறது.
சுவாமி விவேகானந்தரின் பன்முகப் பரிமாணங்களையும் போதனைகளையும் வெளிப்படுத்துவதாக இந்த இணையதளம் திகழ்கிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட பழைய, புதிய எழுத்தாளர்கள் சுவாமி விவேகானந்தர் குறித்து பல்வேறு விதமான பதிவுகளூம், நல்ல மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் இந்தத் தளத்தில் உள்ளன. மேலும், தினந்தோறூம் புதிய எழுத்தாளர்கள் எழுதும் பதிவுகளும் வெளியிடப் படுகின்றன.
சுவாமி விவேகானந்தர் மீது அன்பு கொண்ட ஒவ்வொருவரும் பார்க்க, படிக்க வேண்டிய இணையதளம் இது. இத்தளத்தைத் தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் நண்பர்களூக்கு அறிமுகம் செய்யுங்கள். உங்கள் படைப்புகளையும் கருத்துக்களையும் அனுப்புங்கள்.
நன்றி,,,
A GREAT SERVICE. THANKS.
ஸ்வாமி விவேகானந்தரின் பெயரையும் செய்தியையும் பரப்பும் தொண்டு நிகரில்லாத சிறப்புடையது. அதனை முன்னெடுத்துள்ள இவ்வலைத் தளத்தினருக்கு ‘எடுத்த காரியம் யாவினும் வெற்றி’ என்னும் பாரதியின் மன உறுதியே துணை இருக்கட்டும். தேசிய சிந்தனைக் கழகம் வளர்க.