பீஷ்ம பிதாமகருக்கு …

எங்களின் வணக்கத்திற்குரிய ஆச்சார்யர் அவர்களுக்கு,

ad2மிகவும் அசாதாரணமான ஒரு நிலையில் இதை எழுத துவங்குகிறேன் . இந்த தேசம் ஒரு அசந்தர்ப்பமான சூழலை சந்தித்து கொண்டிருக்கிறது. எதிரிகள் வெடி வெடித்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கயவர்களும், கம்யூனிஸ்ட் கயவர்களும் உங்களின் ஜன நாயக மாண்பின் பகுதிகளை தப்பும், தவறுமாகவும், மிகுந்த கயமைத்தனத்தோடும் பிரித்து பொருள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் . இந்த தேசத்தை அழிக்க வேண்டும் என நினைக்கும் பிரிவினைவாத சக்திகள், அயல் நாட்டு ஆதிக்க சக்திகள் மிகுந்த குயுக்தியோடு தங்களின் ஊடகங்களில் அவதூறை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. இந்த பாரத தேசத்தின் மக்களிடையே அவ நம்பிக்கையையும் அச்சத்தையும் விதைப்பதற்காக பல்வேறு உத்திகளை உபயோகிக்கின்றன.

advani1

துரோக எண்ணம் கொண்ட சிலரும், கூட இருந்து குழி பறிக்கும் சிலரை நட்பாக தேர்ந்தெடுத்த சிலரும் நம் வெற்றியை பறிக்க  திட்டம் இடுகிறார்கள்.  ஊடகங்கள் உங்களை பிரித்து மேய்கின்றன. பாஜகவின் மீது சேற்றை வாரி இறைக்கின்றன. அவதூறு செய்கிறார்கள் நம் சகோதர காவிப்படையை, நம் சொந்த கார்யகர்த்தாக்களை கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் மதிப்பீடு செய்து மலினப்படுத்துகிறார்கள். இதை எல்லாவற்றைவும் தாண்டி மக்கள் அதிர்ச்சியோடு பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இந்த தேசத்திற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பழுக்கற்ற பாரத புதல்வர்களுக்கிடையே கூட கருத்து வேறுபாடு இருக்குமா?  என புரியாமல் குழம்புகிறார்கள். தேசத்தின் நலனை விட தனி நபர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கெல்லாம் என்ன முக்கியத்துவம் என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

 

நேற்று வரை உங்களை காவி பயங்கரவாதி என்றும், கொலைகாரர் என்றும் வசை பாடிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி இன்று உங்களை பற்றி கவலைப்படுவதாக நடிக்கிறார்கள். தீனதயாள் உபாத்யாயாவை கொலை செய்த காங்கிரஸ் கட்சி, சியாமா பிரசாத் முகர்ஜியை காஷ்மீரில் கொலை செய்த கயமைத்தனம் நிரம்பிய காங்கிரஸ் கட்சி நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இது எல்லாம் ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்படுவதை ஒத்த நியாயம் தான் என்பதை உணராதவர்கள் யார் ? என்று மக்கள் கேட்கிறார்கள்.  நீங்கள் தான் காந்தியின் வாரிசு என்று இன்று சொல்லும் காங்கிரஸ்  நேற்று வரை உங்களை மதவாதி என்றும், மரண வியாபாரி என்று குற்றம் சாட்டிக்கொண்டு இருந்தார்கள் . இன்று நரேந்திர மோடியின் வளர்ச்சியை, வியூகத்தை பார்க்கும் எதிரிகளும் துரோகிகளும் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

 

modi05நரேந்திர மோடியை மக்கள் மன்றத்தில் தேர்தல் மூலமாக இல்லாமல் ஊடகங்கள் மூலமாகவும் அவதூறுகள் மூலமாகவும் வெற்றி கொள்ள முயற்சி செய்கின்றன. அதற்கு உங்களை, உங்களின் சில முடிவுகளை பகடைக்காயாக உபயோகப்படுத்தி வெற்றி கொள்ள முயற்சி செய்கின்றது. உங்களின் முடிவை வைத்து கொண்டு பாஜகவை பலவீனப்படுத்துவதன்  மூலம் மேலும் அதிகமான பேர ( bargain ) சக்தியை பெற முடியும் என்று நம்முடன் ஒன்றாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம்  நினைக்கிறது. கூட இருந்து குழி பறிக்கும் துரோகிகளை இனம் காண்பதற்கு உங்களின் தர்ம ஆவேசம் நமக்கு பயன்பட்டிருக்கிறது. திக்விஜய் சிங்குகள், முலாயம் சிங்குகளும் ஆதரித்தாலே அது எவ்வளவு ஆபத்தான விஷயமாக இருக்கும் என்று தேசத்தை பற்றி 60 ஆண்டுகளுக்கு மேலாக சிந்தித்து கொண்டிருக்கும் உங்களுக்கு தெரியாதது அல்ல. மோடியின் உயர்வு நாட்டுக்கு நல்லதல்ல என்று முல்லா முலாயம் கூப்பாடு போட்டு ஒப்பாரி வைப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் மோடியின் தலைமை என்பது எப்படி பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று. லாலு பிரசாத் யாதவ் என்ற மூன்றாந்தர மனிதன் உங்களை கைது செய்து அரசியல் லாபம் பார்த்த கேவலமானவன் உங்களுக்கு சான்றிதழ் வழங்கியா நீங்கள் தேசபக்தர் என்று நாடு தெரிந்து கொள்ள வேண்டும்.

 

சஞ்சய் ஜா, அபிஷேக் மனு சிங்வி, இடது சாரி வியாபாரிகள், மதச்சார்பற்ற வியாபாரத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் தேச துரோகிகள் தானே இப்போது உங்களை ஆராதித்து கொண்டு பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ் ஐயும் தூற்றி கொண்டு பாஜகவின் வெற்றிக்கு ஊறு விளைவிக்க ஊக்கமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். சங்கமோ, எந்த இந்துத்துவ இயக்கமோ என்றாவது நாட்டு நலனை விட பெரிதாக மதித்து முடிவுகளை இந்த 90 ஆண்டுகளில் எடுத்திருக்கிறதா? இன்று வரை நாட்டிற்கு மட்டுமே முதலிடம்,.  நாட்டு நலனே முதல் என்று தானே ஒவ்வொரு ஸ்வயம் சேவகர்களும் இருக்கிறார்கள். டாக்டர்ஜியும் குருஜியும் அப்படித்தானே நமக்கு சொல்லிக்கொடுத்தார்கள். அப்படியான ஒரு அப்பழுக்கற்ற வாழ்க்கையைத்தானே வாழ்ந்து மறைந்தார்கள்.  நம் இயக்கத்திற்காகவும் , தேசத்திற்காகவும் உயிர் துறந்த ஆயிரக்கணக்கானவர்களின் ஆசை பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்பது. இந்த தேசம் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டு இருக்கிறது. எங்கு நோக்கினும் ஊழல், பிரிவினைவாதம் நம்மை அரித்து கொண்டிருக்கிறது. அந்நிய சக்திகள் வசதியான வாய்ப்பிற்காக நம்மை காலனியாக்க துடித்து கொண்டிருக்கிறது. எல்லையிலே அசாதாரணமான சூழ்னிலை நிலவுகிறது. மக்களின் வாழ்க்கை தரம் நசிந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரம் முடிவே அற்ற ஆழத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.

ad5நம் நாட்டின் வளங்கள், அந்நிய சக்திகளால் சூறையாடப்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த தேசத்தை ஒட்டு மொத்தமாக பிளாட் பிரித்து விற்று ஒழித்து விட மக்கு மன்மோகனும், இத்தாலிய கைக்காரி சோனியாவும் முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்கள் எப்படியாவது சீனாவிடம் நாட்டை அடிமையாக்கி விட்டால் நமக்கு ஆதாயம் ஏதாவது கிடைக்கும். பீகிங்கிலும், ஹாங்காங்கிலும் மையக்குழு கூட்ட்த்தில் பங்கேற்கலாம் என்பது போன்ற அற்ப காரணங்களுக்காக நாட்டை காட்டி கொடுத்தும், ஆக்ரமிப்புக்கு துணையாகவும் இருக்கிறார்கள். அபாயகரமான அளவில் பெருகும் இஸ்லாமிய மக்கள் தொகை, சிறுபான்மையின சக்திகளின் பலம் அதிகரித்து கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகள், மாவோயிஸ்ட்கள், அந்நிய சக்திகளின் பலம் பெருகி கொண்டிருக்கிறது . தொழில் வளமும், விவசாயிகளின் வாழ்க்கை தரமும், விவாசாயமும் நலிந்து போவதற்காகவே காங்கிரஸ் திட்டமிட்டு நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கிறது.

 

சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் மிகையான சலுகைகள் பெரும்பான்மை அப்பாவி இந்துக்களின் வாழ்க்கை தரத்தை கீழிறக்கி கொண்டிருக்கிறது. அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பிலான முன்னுரிமையை தடை செய்து அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கிறது. இந்துக்கள் சொந்த நாட்டில் அகதிகள் போன்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கையில் சிறுபான்மை சமூகம் நம் மக்களின் சலுகைகளையும் உரிமைகளையும் உறிஞ்சிக்கொண்டு வாழ்ந்து கொழுத்து கொண்டிருக்கிறது. தேசம் ஒரு அவசரமான இருண்ட யுகத்திற்குள் சென்று கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் இந்த தேசத்தை வழி நடத்த வீரமும், விவேகமும், ஆண்மையும் அறிவும், திண்மையும் கூடிய லட்சிய உறுதி மிக்க இணையற்ற போர் வீரனை நீங்கள் அடையாளம் கண்டு வளர்த்தெடுத்தீர்கள். பாழ்பட்டு நிற்கும் நம் பாரத அன்னையின் துயரை துடைப்பதற்காக ஒரு நல்ல ஆச்சார்யராக இருந்து மோடியை வளர்த்தீர்கள். ராஜ தர்ம்ம் என்றால் என்ன என்று விளக்கினீர்கள். இந்த தேசத்தை உலகிற்கே முன்மாதிரியான தேசமாக வளர்த்தெடுக்க அவரை ஆயத்தப்படுத்தினீர்கள். இறைவன் அருளால் , இந்த பாரத அன்னையின் ஆசியால் அந்த முயற்சிகள் வெற்றி அடைய இருக்கிறது.

namo01

1942 ல் சங்கத்தில் நீங்கள் இணைந்ததிலிருந்து எண்ணற்ற குருமார்களும், ஆச்சார்யர்களும் இந்த தேசத்திற்கு பணியாளர்களை உருக்கி உருவாக்கியபடியே தான் இருக்கிறார்கள். நீங்களும் எண்ணற்ற சிஷ்யர்களை, அப்பழுக்கற்ற ஆசான்களை உருவாக்கி இந்த நாட்டிற்கு அளித்துள்ளீர்கள். ஆச்சார்யர் துரோணருக்கு அர்ச்சுனன் எப்படியோ அப்படி மோடியை வார்த்தெடுத்தீர்கள். ஒவ்வொரு முறையும் அவருக்கு சரியான வழி முறையை கற்பித்தீர்கள். அர்ச்சுனனின் காண்டீபத்தை போல சொல்லாற்றலை மோடிக்கு பாரத அன்னை வழங்கி இருக்கிறாள் . ஆச்சார்யாரிடம் தனுர் வேதம் படித்த அர்ச்சுனன் தன் தபசால் சிவபெருமானிடமிருந்து பாசுபதாஸ்த்திரத்தை பெற்றது போல மக்களிடமிருந்து மிகுந்த அன்பையும், அவர்களின் நம்பிக்கையையும் நரேந்திர மோடி பெற்று இருக்கிறார். தெளிவான சிந்தனையோடும், தீராத தேசபக்தியோடும் துணிவோடும் நம் தேசத்தை மறு கட்டமைக்க துல்லியமாக முயற்சித்து கொண்டிருக்கிறார். அவரின் முடிவுகள் , அவரின் எழுச்சி எதிரிகளுக்கு பாஞ்சஜன்யத்தின் ஓலியால் ஏற்படும் பீதியை தோற்றுவிக்கிறது. நரேந்திரமோடியின் சிங்க நாதத்திற்கு துரோகிகளும், எதிரிகளும் அஞ்சி நடுங்குகிறாரகள். அவர்களின் அனைத்து அஸ்த்திரங்களும் பயனற்று போகின்றன.

ad7பகவான் கிருஷ்ணர் எப்படி அர்ச்சுனனுக்கு துணை நின்றாரோ அப்படி நீங்களும் துணை நின்று வழிகாட்டி வெற்றி தேடித்தருவீர்கள் என்று இந்த தேசமே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. பகவான் கிருஷ்ணரின் வழிகாட்டுதல் எப்படி பரத கண்டத்திற்கு நன்மை விளைவித்ததோ அப்படியான வழிகாட்டுதலை உங்களிடம் இந்த தேசம் கோருகிறது.  நீங்கள் எங்களின் பீஷ்ம பிதாமகர் தான் என்றென்றும். இந்த தேசத்திற்காக, கட்சிக்காக நீங்கள் செய்த தியாகங்களை ஒவ்வொரு ஸ்வயம் சேவகனும் நியாபகத்தில் கொண்டிருக்கிறான். எங்களுடைய இதய சிம்மாசனத்தில் நீங்கள் தான் என்றென்றும் சக்ரவர்த்தி.

 

குருவும், சிஷ்யனும்..
குருவும், சிஷ்யனும்..

உங்களை பார்த்து தான் , உங்களுடைய அயராத தியாகத்தால் பெருமிதப்பட்டு தான் நான் ஸ்வயம் சேவகனாக ஆனேன். உங்களுடைய ரத யாத்திரை தான் எங்களுக்கு எல்லாம் எழுச்சி ஊட்டியது. குழந்தை ராமனுக்கு ஆலயம் அமைத்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு செங்கற்களை சேகரித்த பசுமையான , என் வாழ்வின் முழு அர்த்த்தோடும் வாழ்ந்த நாள்களை இன்றும் பெருமிதத்தோடு எண்ணாத நாள் இல்லை. பிரதமர் பதவி உங்களை தேடி வர வாய்ப்பிருந்த போதும் அதை வாஜ்பாயி அவர்கள் தான் அலங்கரிக்க வேண்டும் என்று நீங்கள் மனதார சொன்ன போது உங்கள் வீரமும், விவேகமும் எங்களுக்கு மேலும் துலங்கியது. இந்த தேசத்தின் எந்த மூலையில் இந்து சகோதரர்களுக்கு பிரச்சினை என்றாலும் அயராது ஓடும் உங்கள் இளமை . உங்கள் தவிப்பு இதை நாங்கள் என்றைக்கும் நினைவில் கொள்வோம். எத்தனை எத்தனை மாரதர்களை, அர்ப்பணிப்பு மிகுந்த தலைவர்களை நீங்கள் உருவாக்கி அளித்திருக்கிறீர்கள் என்று பார்த்தால் பெருமிதத்தில் நெஞ்சு அடைத்து கொள்ளும்.

ad8பாரத அன்னையின் பெருந்தவத்தால் தான் நீங்கள் எங்களுக்கு குருவாக கிடைத்தீர்கள் . இந்த தேசத்தின் நலனை ஒவ்வொரு அணுவிலும் கொண்டிருக்கும் உங்களை விமர்ச்சிக்கவோ, ஆலோசனை கூறவோ இந்த உலகில் யாருக்கும் தகுதி கிடையாது. நீங்கள் எப்படியான தியாகத்தை இந்த தேசத்திற்காக , இந்த தேச நலனுக்காக செய்திருக்கிறீர்கள் என்று அனைவரும் அறிந்திருக்கிறோம். ஊடகங்கள் உங்களை அவதூறு செய்கின்றன. அவர்களுக்கு உங்களை தெரியாது, உங்களை பதவிக்காக இப்படி செய்தீர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு உண்மை புரியாது. நீங்கள் யார் ? எப்படிப்பட்டவர் ? என்ன விதமான பண்பாட்டு பயிற்சியில் வந்தீர்கள் என்று எதுவும், தெரியாது. காளிதாஸின் ரகு வம்சத்தில் ஒரு காட்சி வரும் அகண்டு விரிந்திருக்கும் தன் குல வாரிசு ரகுவின் தோள்களை பார்க்கும் திலீபன் அப்போதே துறவறம் பூண்டு மொத்த அரசாட்சியையும் ரகுவிடம் ஒப்புவித்து விட்டு கானகம் ஏகுவான். அது போன்ற ஒரு தூய பெருமிதமான தகப்பன் நிலையில் தான் நீங்கள் இப்படியான முடிவை எடுத்திருப்பீர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஒவ்வொரு ஸ்வயம் சேவகனும் அப்படியே நம்புகிறான். சரியான நேரத்தில் ராமபிரானுக்கு பட்டம் சூட்ட தசரதன் எடுத்த முடிவை போலத்தான் நீங்களும் மோடிக்கு பட்டம் சூட்டி வாழ்த்தி அவரை வழி நடத்துவீர்கள் என்று ஒவ்வொரு இந்தியனும் மனதார விரும்புகிறான் .

 

இந்த தேசத்திற்காக எண்ணற்ற சமூக சிற்பிகளை நீங்கள் வடிவமைத்து உருவாக்கி இருக்கிறீர்கள். எவ்வளவோ தன்னலமற்ற தலைவர்கள் உங்கள் பாசறையிலிருந்து பயிற்சி பெற்று மகத்தானவர்களாக வெளி வந்து மக்கள் சேவை ஆற்றி இருக்கிறார்கள். இப்போதும் தேசமே தெய்வம் என்று தலையால் சுமந்து கொண்டு தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான உங்கள் சீடர்களில் முதன்மையானவர் தான் இந்த தேர்தலில் தேசத்தை வழி நடத்த இருக்கிறார். வணங்காத வீரம், மண்டியிடாத மானத்திற்கு சொந்தக்காரனான பாரத அன்னையின் சேவையாளர் நரேந்திர மோடியை இந்த தேர்தலில் கணக்கற்ற தீமையான காங்கிரஸை எதிர்க்க மக்கள் பணிக்கிறார்கள். உங்களின் சீடரை உலகமே உச்சி முகர்ந்து பாராட்டுகிறது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் ஸ்தானத்திலிருந்து தான் நீங்கள் இதை அணுகுவீர்கள் என்று தான் அனைவரும் நினைக்கிறோம். வீர சிவாஜியை எப்படி சமர்த்த ராமதாஸர் உருவாக்கினோரோ அப்படி நீங்கள் பெருமித்த்தோடு மோடியை உருவாக்கி இருக்கிறீர்கள். சமர்த்த ராமதாஸரை போல நீங்களும் மோடியை வழி நடத்துவீர்கள், இந்த தேசம் மீண்டும் விஸ்வ குருவாக மாறும் என ஒவ்வொருவரும் மனதில் நினைத்து கொண்டிருக்கிறோம்.

 

ad6ராஜதர்மத்தில் அரசாட்சி எப்படி ஒரு பகுதியோ அப்படி வானபிரஸ்தமும் ஒரு ராஜநீதி தான் என்ற புரிதல் உள்ள உங்களை பலரும் தவறாக அர்த்தப்படுத்துகிறார்கள். உங்களை குற்றம் சொல்ல ஒருவருக்கும் தகுதியில்லை. நீங்கள் எப்போதும் இந்த தேசத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மட்டும் தான் செயல் பட்டு வந்திருக்கிறீர்கள் இனியும் அப்படித்தான். இந்த தேசத்தின் ஒட்டு மொத்த தீமைகளையும் அழிக்க ஒவ்வொரிடம் இருக்கும் தங்களின் சிறப்புகளை எல்லாம் திரட்டி ஆயுதமாக்கி நரேந்திர மோடியின் அம்புறாத்துணியில் அங்கமாக்க வேண்டியது நம் கடமை. வரலாறு சில நேரங்களில் தான் இப்படியான மகத்தான தலைவரை படைக்கிறது. உங்களைப்போன்ற குருமார்களையும் தோற்றுவிக்கிறது. அறிவு நேர்மையும் ஆற்றலும் இல்லாத இடது சாரிகளும், ஊடகங்களும், காங்கிரஸ் களவாணிகளும் இந்த தேச மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக செயல்படுகின்றன . மோடியை மக்கள் விரோத சக்தியாக சித்தரிக்கின்றன, . பாஜகவில் உள்ள சில மக்கள் ஆதரவற்ற தலைவர்களும் இப்படி சொல்வதாக ஊடகங்கள் திரிக்கின்றன. பாஜகவின் ஒட்டு மொத்த குரலும் மோடிக்காக ஓங்கி ஒலிக்கும். இந்த தேசத்தின் மீட்பராகவே இறைவனால் வரம் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டவராகவே இப்போது நரேந்திர மோடி இருக்கிறார். மக்களின் அபரிமிதமான அன்பாலும் நம்பிக்கையாலும் அவர் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்து இருக்கிறார்.

துரோணரை மிஞ்சும் அர்ச்சுனனாக மோடி விளங்குகிறார். துரோணரை போன்றே நீங்களும் அர்ச்சுன்னின் செயல் திறனுக்கு பெருமிதம் தான் படுவீர்கள் என்று உங்களை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். ஒரு குருவிற்கு தன் சீடன் தன்னை மிஞ்சுவதை ஒரு தகப்பன் எப்படி தன் மகனின் வளர்ச்சியை பார்ப்பானோ அப்படியான பெருமிதத்தோடு தான் நீங்கள் பார்ப்பீர்கள் என்று பலரால் நம்ப முடியாமல் இருக்கலாம் . அவர்களின் பண்பாட்டு பயிற்சி அப்படி, நீங்கள் கற்று வந்த பாரத பண்பாட்டு பயிற்சி உங்களுக்கு அதைத்தான் கற்று கொடுத்திருக்கும். வரலாற்றில் பிம்பிசாரனோடு உங்களை ஒப்பு நோக்குகிறார்கள் , அசோகனால் தான் பிம்பிசாரனுக்கு பெருமை என்பது போல மோடியால் தான் உங்களுக்கு பெருமை என்று சொல்கிறார்கள். நான் உங்களை ஆச்சார்யர் துரோணராகத்தான் பார்க்கிறேன். அர்ச்சுன்னின் ஒவ்வொரு அஸ்த்திரமும் காற்றில் துரோணரின் பெருமையையும் , அறிவையுமே எழுதிச்செல்வதாக வியாசன் சொல்வது போல நரேந்திர மோடியின் ஒவ்வொரு வெற்றியும் உங்களின் பெருமையையும், ஆற்றலையும் உலகிற்கு உரத்து சொல்வதாகவே இருக்கும்.

 

bharathmatha1இந்த தேசம் இருக்கும் அவலமான நிலையில் இருந்து மீட்க வரலாறு ஒரு மனிதனை மக்கள் கூட்டத்திலிருந்து முன்னிறுத்துகிறது. இது ஒரு அபூர்வமான தருணம். இதற்கு முன் இந்திரா பிழை செய்து மக்கள் தங்களிலிருந்து ஒரு யுக புருஷனை அளித்தார்கள் . ஒற்றுமை இல்லாததால் ஜனதா ஆட்சி இழந்து மீண்டும் பின்னோக்கி பயணித்தோம். 98ல் நமக்கு ஒரு வரலாற்று நாயகன் கிடைத்தார். இந்த தேசத்தை நிரமாணிப்பதற்கு 2004ல் மீண்டும் ஆட்சியை இழந்து விட்டோம். இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பை வரலாறு நமக்கு அளிக்க முன் வந்திருக்கிறது . ஒரு யுக புருஷனை பாரத அன்னை நமக்கு வழங்கி இருக்கிறாள். அவரை சரியாக பயன்படுத்தி இந்த தேசத்தை மறுகட்டுமானம் செய்ய வேண்டிய அவசியம் உங்கள் தோள்களில் இருக்கிறது. மூத்த ஆச்சார்யர்கள் வழி நடத்தி சென்று சங்கத்தின் வழி காட்டுதலோடு இந்த தேசத்தை ஒரு மகோன்மத நிலைக்கு கொண்டு வர இறைவன் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறான் .  அதை வீணாக்க நமக்கு உரிமை இல்லை. உங்களின் காலடியில் இந்த தேசம் பணிந்து கேட்பதெல்லாம் ஆச்சார்யரே வாருங்கள் வரலாற்றை வழி நடத்துங்கள். சமர்த்த ராமதாஸருக்கு தான் சத்ரபதி சிவாஜியை விட சிறப்பு. இந்த தேசத்தை வழி நட்த்திட உங்கள் பாதம் பணிந்து இறைஞ்சுகிறோம் . வாருங்கள் ஒரு வளமான , வலிமையான பாரதத்தை உருவாக்குவோம்.  இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்.

பாரத அன்னையின் பாதம் பணிந்து கேட்கும்,

ஒரு சாமனிய மனிதன்

இணைப்பு :

ஆடு நனைவதாக புலம்பும் ஓநாய்களின் ஒப்பாரி :

திக்விஜய் சிங் : http://www.indianexpress.com/news/digvijay-singh-cautions-rajnath-singh-against-modi/1127245/

துரோகிகள், எதிரிகள் : http://www.deccanchronicle.com/130610/news-politics/article/beginning-bjps-degeneration-says-congress-surprised-leaders-react

முல்லா முலாயம்  : http://www.firstpost.com/politics/is-modi-phobia-guiding-mulayams-praise-for-advani-674672.html

கொலை குற்றவாளி ஆசம் கான் : http://m.rediff.com/news/report/modi-s-appointment-unfortunate-azam-khan/20130610.htm

40 Replies to “பீஷ்ம பிதாமகருக்கு …”

 1. அற்புதம் ராஜமாணிக்கம்.சிறந்த பதிவு.நினைவில் என்றும் நிற்கும். திமுகவுடன் கூட்டு சேர்ந்ததால் தான் மேலும் பெயர் கெட்டது. உலகளாவிய பயங்கரவாதத்தை வஹாபி இஸ்லாம் பிரிவினர் மூலம் பரப்பி , வளர்த்து வரும் இந்த நேரத்தில் , தங்கள் அழைப்பு தெளிவானது. வாழ்த்துக்கள். தேசம் காப்போம். காங்கிரஸ் கயவர்கள் பிடியிலிருந்து தேசம் காப்பாற்றப்படும். இது உறுதி.

 2. வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழி உடையும் கதை போல் காங்கிரஸ் மீது இருக்கும் வெறுப்பை மக்கள் காட்டி அதை தோற்கடிக்க தயாராக இருக்கும் நேரத்தில் இப்படி அத்வானி பேசுவது செயல்படுவது மனதுக்கு வேதனை தருகிறது. இந்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டால் BJP க்கு பிறகு எப்போதும் வாய்ப்பே கிடைக்காது. Personality பெரிதாக கருதாமல் Principles பெரிதாக கருதி எல்லோரும் ஒன்றுபடுங்கள். நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் நம்மை நாளைய வரலாறு மன்னிக்காது. மறப்போம் மன்னிப்போம் என்று அடிப்படையில் நீங்கள் மனபெதங்களை குப்பை கூடைக்கு தூக்கி எரிய வேண்டும் . நீங்கள் இப்போது வேறுபட்டு நின்றால் இந்துக்கள் வாழ்வு அதோ கதிகதிதான். சற்று யோசித்து முடிவு எடுங்கள்.

 3. மிகுந்த மன வருத்ததோடு எழுதி முடித்து விட்டு 12 மணி நேரம் கழித்து தான் பல பகுதிகளை நீக்கி விட்டு தான் அனுப்பி இருக்கிறேன். வெண்ணெய் திரண்டு வரும் போது தாளியை உடைப்பது போன்ற இந்த செயல் மிகுந்த ஏமாற்றம் அளிப்பது போல இருக்கிறது. இறைவன் தான் இவற்றை சரி செய்ய வேண்டும்.

 4. காலம்தான் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கிறது. இந்த தேசத்தில் நடந்த எத்தனையோ அசந்தர்ப்பமான சூழ்நிலைகளையும், எண்ணற்ற போர்களையும் காலம்தான் மாற்றி அமைத்துள்ளது. நண்பர்களே! நம்பிக்கையுடன் இருங்கள்.

  “ஒவ்வொரு நிகழ்வும், ஏதோ ஒரு மாற்றத்திற்கான விதைதான்”

  நம்புங்கள்! இதை உறுதியாக நம்புங்கள் !!

 5. வணக்கம்,

  மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம், இலக்கை நோக்கிய செயல்முறையும் அணுகுமுறைகளும் காலத்தால் மாற்றமடைவது இயற்கையே, அம்மாற்றம் நிகழ்ந்தால்தான் முன்னேற்றம் என்பது சாத்தியமாகும்.

  ஆகவேதான் நமதுபண்பாட்டில் அடுத்ததலைமுறைக்கு, தர்மத்தையும் நெறிமுறைகளையும் கற்பித்துவிட்டு உரியகாலம் வந்தவுடன் மூத்ததலைமுறையினர் பொறுப்புகளிலிருந்து முழுமையாகத் தங்களை விடுவித்துக்கொண்டனர், இந்த யுக்தி, மூத்த தலைமுறையினருக்கு மன அமைதியைத்தருவதாகவும், புதிய சாத்தியக்கூருகளைக்கண்டு துடிப்புடன் முன்னேற இளையதலைமுறையினருக்கு ஊக்கம் தருவதாகவும் இருந்தது.

  சம்பந்தப்பட்டவர்கள் இந்த யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட்டால் நல்லது. எல்லாம்வல்ல இறைவன் அனைவருக்கும் நல்வழிகாட்டட்டும்.

 6. Since, I am in a hurry, I am typing out in English. Many apologies for the same.

  When I was a youngster, we use to compare Advaniji and Atalji and at that age when Ramjanambhumi Andolan was going on with Advaniji’s (Narendrabhai Modi behinds) organising capabilities and the way he was articulating Hindutva ideology…. he was looked upon by many of us with awe.

  But, yes one should have the magnanimity to take the sidelining in politics. Advaniji is not the first person in Hindutva veterans who had to face sort of being felt to have been sidelined. Actually, he has not even been sidelined. Only, his very strong opinion on a particular issue had been democratically deliberated in the party and party leaders unanimously took a stand that vary with his.

  Stalwarts like Mananeeya Nanaji Deshmukh, Balraj Sahni have never stooped to such level of painting the party of deshbakthas in black when at some part of time they were sidelined. They had magnanimity to deploy their energies by continuing to tirelessly work for the nation from other platforms. Why could not you go further in their footsteps Advaniji? (still that step is too far since cajoling your goodself is going on in the party)

  And it is the Sangh parampara to digest one’s own personal opinion against the overwhelming opinion of Sangh elite irrespective of the position one holds. Paramapujaneeya Guruji showed this. Anybody who is pro or anti Sanghparivar would list stand on 3 things which differentiate BJP and all other parties of Hindusthan. 1. common civil code 2. Ramjanambhumi Mandir Nirmaan 3. Ban on cow slaughter. Many of our friends may not be aware that Parampujaneeya Guruji was not that particular about common civil code. (See Gurujis Biography on net) But when that became a strong stand of Sangh parivaar as such, he took his opinion as that of his personal opinion and did not try to thrust his personal opinion upon the parivaar. Thats the parampara, Shri Advaniji, of Sangh. Why do you deviate from the established parampara?

  Respected Advaniji, when you wanted to bulldoze your choice against the will and wish of all leaders of the party, for a moment could you just think of Parampujaneeya Guruji’s Magananimity in giving weight to opinion of mass against the opinion of self?

  And worst, it is undigestable that you have said that BJP is not the same as one that has been established and nurtured by mananeeya Panditha Shyama Proshad Mukherji and the likes of Shri Deen Dayal Upadhyay and Nanaji Deshmukh. Thats a slur on selfless souls who are tirelessly working for the welfare of the nation. I would not even suggest that if you have scores to settle , do it with individuals. cause thats not the sangh’s way. Still, if you want to settle scores, please do it individually. Do not belittle lakhs and crores of karyakarthas who are tirelessly working for the welfare of the ation and do not belittle the party which was very passionately built by veteran elders including your goodself.

  Respected Advaniji, it is harsh, but yes, A mother is not supposed to liquidate her offspring.

  Bharat matha ki jai
  vandemataram.
  Akhand hindusthan Amar rahe

 7. மிக நேர்த்தியான எழுத்தாடல் மிகுந்த கட்டுரை. முதலில் பாராட்டுகிறேன். நீங்கள் குறிப்பிட்ட ரகுவம்சத்திலாகட்டும், ராமாயனத்திலாகட்டும் எந்த மகனும் தந்தையை எதிர்க்க வில்லை. அணி சேர்ந்து கலகக் குரல் எழுப்ப வில்லை. அறிவிப்பை அப்பா தானே அறிவித்தார். ஆனால் இங்கு அறிவிக்க நிர்பந்தப் படுத்தும் போது நோக்கம் சந்தேகத்தை அல்லவா எழுப்பி விடுகிறது.
  போகட்டும்? நாட்டு நலன் என்கிற வாசனையில் அத்தனை முடை நாற்றத்தையும் சகித்துக் கொள்வோம்.
  இந்த அறிவிப்பை மூத்த தலைவரான அத்வானியின் அனுமதியோடு அறிவிக்க பொறுமையாக இருந்தால் என்ன?
  கர்நாடகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு எடியூரப்பா விஸ்வரூபமெடுத்த போது நாம் அவரைக் கொண்டாடினோம். தனி மனிதனின் துதிபாடல் தமிழகம் வரைக் கேட்டது. ஆனால் காலம் எடியூரப்பா கட்சி வளர்ச்சிக்கு எத்தனை இடையூராய் மாறினார் என்பதை அழகாக உணர்த்தி விட்டது. 2 பாராளுமன்ற உறுப்பினரில் இருந்து ஆட்சியைப் பிடிக்கும் எண்ணிக்கை வரை கொண்டு வந்தது கட்சியின் தனித்த முகங்கள் இல்லை. அமைப்பின் தத்துவம். பாஜகவின் அடிநாதமான கொள்கை.
  ஆனால் இன்று நடப்பது என்ன?
  நரேந்திரமோடி என்கிற முகம் தான் ஆட்சிக் கட்டிலுக்கான விசிட்டிங் கார்டு என எல்லோரும் நம்புகிறார்கள். அல்லது பேச வைக்கப் படுகிறார்கள். இது எப்படி தத்துவத்தை முன்னிறுத்தி போராடும் ஒரு அமைப்புக்கு அழகாகும்.
  பாஜக வின் ஒரு பகுதி கார்ப்பரேட் முதலாளிகளின் விரலசைவுக்கு தலையாட்டும் நிலைக்கு வந்து விட்டதாகவே கருத வேண்டி உள்ளது.
  அத்வானி அவர்களின் விட்டுமுன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியது சத்தியமாக பாஜக உறுப்பினர்க்ள் இல்லையா?
  மோடிக்கு தெரியாதா?
  மிக அழகாக இதுங்கிக் கொள்ளுங்கள் உங்களுக்கு வயசாச்சு என்று வேறுபாணியில் சொல்கிறீர்க்ள். அத்வானிக்கான மரியாதை தர மறந்தது யார் தவறு?
  கல் உள்ளே விழுவதால் தானே எதிரிகள் பரிதாப தூபம் போடுகிறார்கள். விரிசலுக்கு யார் காரணம். நாம் தானே?
  மோடி என்கிற மாயமுகத்தை மட்டும் நம்பி கட்சி இருந்தால்… நாளை மோடி கட்சியின் கட்டுப்பாட்டை மீறினால் என்ன செய்வீகள்?
  கர்நாடகாவில் ஒரு எடியூரப்பா போல நாடு முழுக்க பலரை சந்திக்க வேண்டி வருமே…
  ஆக, மோடி பிரதமராவதில் யாருக்கும் வருத்தம் இல்லை. அது மிக நல்ல விதமாக அத்வானி உள்ளிட்டோரின் அனுமதியோடு நடக்க வேண்டும். இல்லா விட்டால் விரிசல் பெரிதாகி காங்கிரஸ் நரி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும்.
  பிரபலம்… வெற்றி… என எல்லாவற்றையும் தாண்டி மன தர்மம் முக்கியம்.
  அத்வானிஜி ஆசி வழங்கிக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள் என சொல்வது நன்றி கெட்டத் தன்மைக்கு உச்சமாகிவிடும்.
  யாரோ சிலரின் அவசரத்துக்கும் ஆசைக்கும் கட்சியின் ஆத்மாவை அடகு வைக்கக் கூடாது

 8. வீர.ராஜமாணிக்கம் மிகுந்த வருத்தத்தோடு கட்டுரையை எழுதியிருக்கிறார். அந்த வருத்தம் அடியேனுக்கும் உண்டு. ஸ்ரீ அத்வானி ஒரு மகத்தான தலைவர் ஆனால் பிதாகமர் இல்லை என்பது அவரது சமீபகால நடவடிக்கைகளில் தெரியும் வருத்தமான உண்மை. தேவவிரதன் எனப்பட்ட் சாந்தனு மகாராஜனின் மகன் தனது தந்தைக்காக வாழ் நாள் முழுதும் பிரம்மசரிய விரதம் பூண்டு பட்டத்தினை துறந்து விரத வீரர் பீஸ்மர் என்று பெயர் பெற்றார். ஆனால் தனது சீடனை பாரத தேசம் முழுதும் தலைமை ஏற்க அழைக்கின்ற போது அதற்கு முட்டுக்கட்டைப்போடும் குருவாக ஸ்ரீ அத்வானி ஜி இருப்பது வருத்தமளிப்பதில் ஆச்சரியமன்று. அவருக்கு நேரம் சரியில்லை போலும். வயதாகிவிட்டதால் இயலாமையால் இப்போது ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால் அவரது முடிவு துரதிர்ஷ்டவசமானது என்றாலும் வெண்ணை த்திரண்டு வரும்போது தாழியை உடைத்தக் கதையன்று. வெண்ணை த்திரண்டு வருவது உண்மை. ஆனால் தாழியை ஸ்ரீ அத்வாணி ஜியால் உடைக்கமுடியாது. ஸ்ரீ மோதி ஜி பாரதப்பிரதமாரவது உறுதி. காரணம் மக்கள் அவர் பக்கம் இளையதலைமுறையும் அவருடனே. ஆர் எஸ் எஸ்சும் அவர் பக்கமே. பாரத அன்னைக்கு வெற்றி வெற்றி வெற்றி. ஸ்ரீ அத்வாணி ஜி அமைதியாக ஓய்வெடுக்கட்டும்.

 9. You are projecting him as a misguided angel. He is basically a very selfish man. He has a set of chamchas around him and he distribute all the critical posts to them. His only ambition is PM chair
  and not bothered about any principles. Even all the corruption scams which have made UPA weak are raised by Dr. Subramanya swamy and aravind kerjrival & co his contribution is nil He completely destroyed BJP in Karnataka with the help of his friend Santhosh Hegde, He was attacking Modi with his friend Nitish and Thakre of siva sena. He destroyed karnataka BJP as he could not get cm post to his chamcha. Same thing he will do at centre if he can not get PM post. Fortunately people around him have no political base and BJP should use this opportunity to throw him out.

 10. ஐயா, வீர ராஜமாணிக்கம் அவர்களே, குள்ளனரிக்கூட்டங்கள் பா ஜா க வின் இன்றைய சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விடத்த்துடிக்கின்றன. திரு அத்வானிஜி அவர்கள் பெரும் தலைவர் மற்றும் வழ்கட்டியாக உள்ளபோதிலும் தற்சமய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திரு மோடி அவர்களை அங்கீகரிக்கவேண்டும் மேலும் இது காலத்தின் kattaayam. தங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. திரு அத்வானிஜி அவர்கள் இதற்க்கு இணங்குவார் என்று நம்புகிறேன்.

 11. Dear senthilkumar,
  From your writing, I understand you are interested in Hindutva forces coming to power. And your reservations are with respect to the hurry in which the decision is taken.

  Probably, you might not have read my comment before yours (much less time gap)

  Well, decisions in political parties shall not be kept waiting for infinite time. For long, the debates have been going on with regard to this topic in media and among sangh parivar. In any democratic set up, differences are but natural. But Sangh has a parampara which I have elaborated in my above comment with instances. No need to repeat.

  With due respects to your points of views, some of the points where I differ from yours :-

  \\\ ரகுவம்சத்திலாகட்டும், ராமாயனத்திலாகட்டும் எந்த மகனும் தந்தையை எதிர்க்க வில்லை. \\\

  True. But you have instance of Prahlada who totally differed from the view point of his father. pertinent to add, he had to face innumerable hardships. But he was prepared for that and mature enough to face that. And at last the truth triumphed.

  \\போகட்டும்? நாட்டு நலன் என்கிற வாசனையில் அத்தனை முடை நாற்றத்தையும் சகித்துக் கொள்வோம்\\\

  The reference is ambiguous. by “mudai natram” you mean the ongoing heckling, jeering et al or Sh.Narendrabhai Modi. If its the latter, I do not agree with you for reasons well known to the successful efforts of Sh.Modi to cnsolidate overwhelming public opinion, even the opinions of learned moslem brothers in his favour. He is one such, exceptional BJP leader to do that even against organised ill propoganda by vested interests.

  \\\\இந்த அறிவிப்பை மூத்த தலைவரான அத்வானியின் அனுமதியோடு அறிவிக்க பொறுமையாக இருந்தால் என்ன?\\\

  mmmm… I could not but remember the famous tamizh proverb
  “iyer vara varai amaavasai kaththu irukkaadhu”

  \\\அமைப்பின் தத்துவம். பாஜகவின் அடிநாதமான கொள்கை.
  ஆனால் இன்று நடப்பது என்ன?
  நரேந்திரமோடி என்கிற முகம் தான் ஆட்சிக் கட்டிலுக்கான விசிட்டிங் கார்டு என எல்லோரும் நம்புகிறார்கள். அல்லது பேச வைக்கப் படுகிறார்கள். இது எப்படி தத்துவத்தை முன்னிறுத்தி போராடும் ஒரு அமைப்புக்கு அழகாகும்.\\\

  Somewhere down the line, to some extent, I agree with your point. An individual is never above the organisation. That had been the parampara. And it is one thing that Narendrabhai differ from some one and another thing about his sabhyatha. Keshubhai said all blah blah against Narendrabhai but he never retorted badly. And was gracious enough to get blessings of keshubhai after victory.

  I feel Narendrabhai has sort of bulldozing his views. To that extent, I agree with your views. Equally, I feel he constantly changes and moulds himself. From “Hum char hamare solah” fame comments on *mianlog*, there was a new modi handshaking with bohra moslem brothers.

  But yes, when bulldozing personal opinion becomes the Norm, Hindusthan may not digest that like that of Gujarat, even if that is for good. Narendrabhai should be well of this. If he is not time would teach him lessons on that.

 12. வீர.ராஜமாணிக்கம் அவர்களின் சோகம் இழையோடும் வீரமிக்க கட்டுரையை கண்கள் நீர்சோர படித்து முடித்தேன். ஏராளமான தேசபக்தர்களின் உள்ளக் கிடைக்கையை உண்மையாக வெளியிட்டிருக்கிறீர்கள். எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத, அப்பழுக்கற்ற உண்மையான தேசாபிமானியான அத்வானி ஏன் இப்படி அவசரப்பட்டு பானையை உடைத்தார் என்பதுதான் மர்மமாக இருக்கிறது. எல்லோரும் நினைக்கின்றபடி மோடி விவகாரம் காரணமல்ல, ஆர்.எஸ்.எஸ்.சின் அத்துமீறிய தலையீடுதான் என செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. பாஜக. ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் காட்டிலும் அதிக அளவு பரபரப்பாயிருப்பவர்கள் காங்கிரசாரும், ஆங்கில ஊடகங்களும்தான். நாட்டு நடப்பு எல்லாமே காங்கிரசின் வீழ்ச்சி நிச்சயம், பாஜகவின் எழுச்சி கண்ணுக்குத் தெரிகிறது என்று நம்பியிருந்த நேரத்தில் இப்படிப்பட்ட அதிர்ச்சி. இதிலிருந்து மீள இன்னமும் பல ஆண்டுகள்கூட பிடிக்கலாம். அடாவடி காங்கிரசாருக்குத் தக்க பதிலடி கொடுக்கும் திறமை மோடிக்கு அதிகம் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆகவே போர்க்களத்தில் இன்னாரை இன்னார்தான் எதிர்த்துப் போரிடவேண்டுமென்ற கட்டுப்பாடு உண்டு. இந்திரஜித் போருக்கு வந்தால் இலக்குவந்தான் எதிர்கொண்டு போராடுவான். அதுபோல நடக்கவிருக்கும் தர்ம யுத்தத்தில் ஊழல் காங்கிரசுக்கு தோல்வியைத் தர மோடியின் தலைமையில் ஒன்றுகூடி போராட, பீஷ்ம பிதாமகர் அருள் புரிய வேண்டும்.

 13. \\\பாஜக வின் ஒரு பகுதி கார்ப்பரேட் முதலாளிகளின் விரலசைவுக்கு தலையாட்டும் நிலைக்கு வந்து விட்டதாகவே கருத வேண்டி உள்ளது.\\\

  may be true partly. What requires change is the attitude of some of the leaders. true

  \\அத்வானிக்கான மரியாதை தர மறந்தது யார் தவறு?\\
  incorrect. Everybody including Narendrabhai respects Advani. It is another thing that overwhelming opinion of the party differs from that of him. He should be gracious enough to properly position himself. The party is still solidly behind him respecting him. Rather Advaniji should look upon Nanaji and Balraj madok / Sahni. (I may be corrected if I take wrong name)

  \\மோடி என்கிற மாயமுகத்தை\\

  incorrect, Narendrabhai is the real face. No mayajal. His peformance speaks for himself. Be it development be his attitude of welfare of all and appeasement of none policy of Hindutva, He is there to demonstrate them by his deeds.

  \\நாளை மோடி கட்சியின் கட்டுப்பாட்டை மீறினால் என்ன செய்வீகள்?
  கர்நாடகாவில் ஒரு எடியூரப்பா போல நாடு முழுக்க பலரை சந்திக்க வேண்டி வருமே…\\\

  Oops! yeddi is not the first. you have a long list dear friend. After all devathas did not straight away got *amrit* by churning the Ksheeraabdhi. First what they got was poison.

  There was Shankar Singh Vaghela, Kalyan Singh, Sadhvi Uma Bharathi…… the first two even had Sangh background. yeddi is the latest addition. But the party in spite of such debacles and *Paribhavam* grows strengths and bounds. If Narendrabhai does not meet my expectations and the expectations of crores of Hindusthanis and he toes the lines you fear, within no time the world would show him the exit. Behold, the party would still survive. Thats not superstition. committed belief. Sangh has been moulding people generation after generation for what? Nation Building. That would smoothly continue. And Sangh parivar history proves that.

  \\அது மிக நல்ல விதமாக அத்வானி உள்ளிட்டோரின் அனுமதியோடு நடக்க வேண்டும்.\\\
  போகாத ஊருக்கு வழி தேடுகிறீர்களே அன்பரே.
  It would be in vain to search for a lion with a horn or a bull with out horn

  \\காங்கிரஸ் நரி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும்.\\
  I too agree with your fears. But one who do not take risks could never reap the fruits. Lets hope for the best.

  \\பிரபலம்… வெற்றி… என எல்லாவற்றையும் தாண்டி மன தர்மம் முக்கியம்.
  அத்வானிஜி ஆசி வழங்கிக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள் என சொல்வது நன்றி கெட்டத் தன்மைக்கு உச்சமாகிவிடும்.\\

  Till now the entire party including Narendrabhai have not said to Advani…..go to sidelines…..still they respect him. It is for the patriarch to see the writing on the wall. Why could not he become another respected Nanaji?

 14. Dear Brother,
  Certainly you are correct on your criticism against the corrupt globalization policies of Congress government..But i feel BJP must give an alternative based on the SWEDESI Ideology based on a decentralized economic policies.Particularly it is painful to recollect what happened in Karntaka.
  In GUJARATH also MNC and Indian corporates are given red carpet welcome and it will certainly affect BARATH the nation of the poor.
  I WANT YOU TO KINDLY HELP ME to UNDERSTAND THIS PARADOX.

 15. சமாதானம் எட்டப்பட்டுவிட்டது………திரு. அத்வானி அவர்கள் தன ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொண்டுவிட்டார்…… ஆனால் ….enough damage has been already done…..

  பா.ஜ.க நண்பர்களின் சூழ் நிலையை புரிந்துகொள்ள முடிகிறது…….அவர்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள்…….எதிர்பாராத நேரத்தில் , எதிர்பாராத இடத்தில் இருந்து தாக்கப்பட்டுள்ளார்கள்……எதிரியோடு போராட தயார் செய்துகொண்டுள்ள நேரத்தில் , தன்னுடைய தரப்பில் இருந்தே முதுகில் குத்தப்பட்டதுபோன்ற அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்………

  ஆனால் நான் இதை ஓரளவு எதிர்பார்த்தேன்…… ராம்ஜெத்மலானி குறிப்பிட்டதைப்போல , திரு .அத்வானி அவர்கள் ஒருவிதமான senility க்கு ஆளாகிவிட்டாரோ என்று கூட எனக்கு தோன்றியது……

  சில மாதங்களுக்கு முன்பாக , மதச்சார்பற்ற தலைவர் ஒருவர்தான் தேசிய ஜனநாயககூட்டனிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்…..இந்த ஜல்லியடியைத்தான் நிதிஷ் குமார் [ மோடி அவர்களை ஓரம் கட்ட ] காலம் காலமாக உபயோகித்து வருகிறாரே? இது திரு . மோடி அவர்களின் மீதான நேரடி தாக்குதல்……

  கர்நாடக தேர்தல் தோல்விக்கு பின் கட்சியின் மீதே பழி சுமத்தி சேம்சைடு கோல் போட்டார்…… எடியூரப்பாவை , தொடர்ந்து வெறுப்பேற்றி கட்சியை விட்டே விலக முக்கிய காரணமாக அமைந்தவர் அத்வானி அவர்களின் தீவிர ஆதரவாளரான ஆனந்த்குமார் குமார்தான்…..இது அவருக்குத்தெரியாதா?

  சமீபத்தில் தேவையே இல்லாமல் மோடி அவர்களை மத்தியப்பிரதேச முதல்வர் திரு.சிவராஜ் சிங் சவுகான் அவர்களோடு ஒப்பிட்டு மட்டம் தட்டினார்……நல்லவேளை …..திரு .சவுகான் பெருந்தன்மையாக நடந்துகொண்டு , மோடி அவர்களை முன் நிறுத்தினார்……

  சித்தாந்தம் தான் முக்கியம்…..தனி நபர்கள் அல்ல…..என்பதெல்லாம் வெறும் ஜல்லியடி……. நேரு குடும்பம் வெறும் தனி நபர் செல்வாக்கிலேயே நாட்டை பல காலமாக ஆண்டுவருகிறது…….உலகம் முழுவதும் இதே நிலைதான்….. பில் கிளிண்டன் தேர்தலில் போட்டியிட்ட போது , அவர் அழகாக இருக்கிறார்…..அதனால் அவருக்குத்தான் வாக்களிப்பேன் என்று ஒரு டாக்சி டிரைவர் அளித்த பேட்டியை நான் படித்தேன்…..அமெரிக்காவிலேயே அப்படி என்றால் நம் நாட்டின் நிலையை சொல்ல வேண்டியதே இல்லை…… எம்ஜிஆர் , என் . டி. ஆர் என்று பெரும் பட்டியலே நம்மிடம் உண்டு…..

  2009 தேர்தலின் போது பல மாதங்களுக்கு முன்பாகவே அத்வானி அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்…….நடந்தது என்ன? போதாகுறைக்கு , பாகிஸ்தான் சென்று ஜின்னாவுக்கு மதச்சார்பற்றவர் என்று பட்டம் வழங்கினார்…..அதை சமாளிப்பதற்குள் சங்கப்பரிவாரங்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது …..

  டெல்லி தேர்தலில் கூட வெற்றி பெறமுடியாத சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்த திரு. அத்வானி அவர்கள் விரும்பினால் , தேர்தல் வேலைபார்க்க எவரும் இருக்க மாட்டார்கள்……

  திரு. மோடி அவர்கள் எவராலும் திணிக்கப்பட்டவர் அல்ல…..பல தேர்தல்களில் தன்னை நிரூபித்தவர்…..தெளிவான செயல்திட்டங்களை முன்வைக்கிறார்…..தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறார்…..கட்சி சாராத வாக்குகளையும் கவரக்கூடியவர்……அவரை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தி தேர்தலை சந்திப்பதே பாஜக முன் உள்ள ஒரே வழி…… நிதிஷ்குமாரின் ஊளை மிரட்டலுக்கெல்லாம் பயந்துகொண்டிருந்தால் வேலைக்காகாது….

  வெறும் வாயை மென்றுகொண்டிருப்பவர்களுக்கேல்லாம் கிலோ கணக்கில் அவலை அழைப்பதுதான் பிதாமகருக்கு அழகா?

 16. திரு லால் கிருஷ்ண அத்வானி அவர்கள் நம் மதிப்புக்குரியவர்.அவர் தன் விலகலை திரும்பப் பெறுவார் என்று நம்புகிறேன். இந்த பிரச்சினை இறைவன் அருளால் நல்லவிதமாக தீர்க்கப்பட்டு விடும் என்று நம்புகிறேன். திரு அத்வானி அவர்களை கடுமையாக பலமுறை பலகாலம் விமரிசித்த காங்கிரஸ் ஓநாய்கள் , கம்யூனிஸ்ட் குழப்பவாதிகள் , அத்வானி மீது திடீர்ப்பாசம் காட்டி , அறிக்கை தருவது யாரை ஏமாற்ற? வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைவது உறுதியாகி விட்டது. எனவே ஆட்சிப்பீடம் ஏறப்போவது பாஜக தலைமையில் ஆன கூட்டணி அரசு தான். பாஜகவின் உட்கட்சி விவகாரங்களால் தாங்கள் சிறிது குளிர் காயலாம் என்று நினைக்கும் காங்கிரஸ் கூடாரம் வாலறுந்த நரிகள் கூடாரம் தான்.

 17. கர்நாடகத்தில் எடியூரப்பா அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கியிருந்தால் , கட்சிக்கு மேலும் கவுரவம் கிடைத்திருக்கும். எனவே எடியூரப்பா விஷயத்தில் கட்சி செய்த தவறுக்கு அத்வானி அவர்கள் எந்த விதத்திலும் பொறுப்பு அல்ல. காங்கிரஸ் மீண்டும் வென்றதற்கு , பாஜகவின் முதலமைச்சர்களை தேவை இல்லாமல் மாற்றியதும் ஒரு காரணம். சதானந்த கவுடா மாற்றப்பட்டது தேவை இல்லாதது. வரும் தேர்தலில் பாஜக வெற்றி உறுதியாகிவிட்டது. அனைத்து துறைகளிலும் உற்பத்தியை பெருக்குவோம், நாட்டை வெற்றிப்பாதையில் நடத்திச்செல்வோம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் .

 18. ராமர் கோவிலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியை இழக்க முடியாது என்றும் , ஜின்னா சமரசவாதி என்றபோதும் அத்வானியை பற்றிய மதிப்பு அதலபாதள நிலைக்கு சென்றுவிட்டது ,மோடியின் வரவுக்கு பிறகு அத்வானியின் மதிப்பு வெகுஜன மக்களிடத்து குறைந்துவிட்டது

 19. எது எப்படி இருப்பினும் ஸ்ரீ லால் க்ருஷ்ண அத்வானி அவர்கள் பாஜகவிற்காக தன்னை அற்பணித்து உழைத்தமையை ஒதுக்கவியலாது. அவர் முந்தைய காலத்தில் செய்தது ச்லாகிக்கத் தகுந்தது.

  ஆனால் உலகம் நிகழ்காலத்தில் இயங்குகிறது எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து.

  மஹாபாரதத்தில் புத்ர பாசத்தால் மதி குலைந்த த்ருதராஷ்ட்ர மஹாராஜன் நூறு பிள்ளைகளையும் யுத்தத்தில் பறி கொடுத்தான். யுத்தம் முடிந்த பின் பல கஷ்டங்களுக்கு ஆளாயின பின்னும் பாண்டவர்கள் பிள்ளைகளற்ற மஹாராஜனை பரிபாலிக்கத் தயாராக இருந்தனர். மஹாராஜனை பார்க்க வந்த பாண்டவர்களில் பீமசேனனைத் தழுவ மஹாராஜன் முனைகையில் கண்ணன் பீமனுக்குப் பதிலாக லோஹத்தினாலான பதுமையை அவனருகில் வைக்க மஹாராஜன் தன் பிள்ளையைக் கொன்றவன் என்ற ஆக்ரோஷத்தில் மனதில் அடக்கி வைத்திருந்த துயரமும் வெறுப்பும் குமைச்சலும் பொங்க பீமன் என்று நினைத்து லோஹப்பதுமையைத் தன் வலுமிகத் தழுவ லோஹம் சுக்கு நூறாக உடைந்தது.

  அத்வானி ஜி பரம்பூஜனீய சர்சங்க சாலக் மஹோதயர் சொன்ன பேச்சைக் கேட்டு மனம் மாறுதல் பெற்றிருந்தார் என்றால் நிஷ்களங்கமான மனதுடன் பத்திரிக்கைக் காரர்களை நேரடியாகக் சந்தித்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. வரும் காலத்தில் தனது தளத்தில் நிதீஷ்பாபு, உத்தவ்தாக்ரே இத்யாதிகளின் நலன் கருதி (அல்லது ஸ்வய நலன் கருதி) இடக்கு மடக்காக நரேந்த்ரபாய் மோடிக்கு ப்ரதிகூலமாக எழுதவும் செய்யலாம்.

  அத்வானி மஹாசயர் பீஷ்ம பிதாமஹரா அல்லது வெறுப்புடன் புகைந்து கொண்டிருக்கும் குமைந்து கொண்டிருக்கும் அந்தகனான த்ருதராஷ்ட்ர மஹாராஜனா என வரும் காலம் தான் பதில் சொல்ல்லும்.

  யஷ்வந்த் சின் ஹா, சத்ருகன் சின் ஹா, ஜஸ்வந்த் சிங்க், சுஷ்மா ஸ்வராஜ், அனந்த் குமார், வெங்கையா நாயுடு, சர்தார் அஹ்லுவாலியா, விஜய் கோயல் இத்யாதி தலைவர்கள். ஜே சொல்ல ஆளில்லாத தலைவர்கள். ம்…..ஆனாலும் தங்களால் இயன்ற படிக்கு கட்சிக்கு சேவை செய்தவர்கள்.

  நரேந்த்ரபாய் அவர்களின் குஜராத் செயல்பாடு கேஷுபாய்படேல், சங்கர்சிங்க் வகேலா, ஹரேன் பாண்ட்யா, சுரேஷ்பாய் மெஹ்தா போன்றவர்களை புறந்தள்ளிச் சென்றபடிக்கு மேற்சொன்ன இத்யாதிகள் பக்ஷம் விரோதமின்றி ராஜநீதி நடத்துவாரா என்பதையும் காலம் தான் சொல்லவேண்டும்.

  வெசவோ வெசவென வெட்டுப்பழி குத்துப்பழியுடன் அம்மணி ஹில்லாரியும் ஒபாமாவும் தேர்தலுக்கு முன் சாடிக்கொண்ட பின்னும் தேர்தல் முடிந்தபின் ஒபாமா அம்மணியை மனமுவந்து சம்மானித்த பெருந்தன்மையை நரேந்த்ரபாய் உள்வாங்க வேண்டும்.

  நாம் நாலு நமக்குப் பதினாறு என்றெல்லாம் ஒருகாலத்தில் கோஷம் எழுப்பியவர் தான் போஹ்ரா முஸல்மான் சஹோதரர்களுடன் ஸத்பாவனா நிகழ்ச்சியில் உபவாசம் இருந்தார். இது தன்னை தேவைக்கு ஏற்றபடி சரியான அளவுகோலுடன் மாற்றிக்கொள்ளத்தக்கவர் என்பதை உலகுக்குக் காண்பித்தார் (அதற்காக செக்யுலர் நாடகமாடிகள் போல முஸல்மாணி டோபியை ஏற்றுக்கொள்ளவில்லை) என்பதையும் மறப்பதற்கில்லை. செக்யுலம் வ்யாபார முஸல்மான் கள் வேண்டுமானால் நரேந்த்ரபாய் அவர்களை வெறுக்கலாம். சாதாரண முஸல்மான் கள் அவர்பால் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது க்யாதி வாய்ந்த சித்திக்கி, வஸ்தான்வி போன்றவர்களால் தெரிய வருகிறது.

  முஸல்மான் சஹோதரர்களின் உண்மையான நலனில் அக்கரையில்லாத நாடகமாடிகள் தான் அவர்கள் முன் நாடகமாட தங்கள் தலையில் டோபி போட்டுக்கொண்டு பின்னர் தங்கள் பதவியைத் தக்க வைக்க மதக்கலவரங்கள் நிகழ்த்தி ஒட்டு மொத்த முஸல்மாணியர் சமூஹத்திற்கே அவர்கள் அறியாவண்ணம் டோபி போடுபவர்கள். முல்லா முலாயம் என்று க்யாதி வாய்ந்த சிகப்பு டோபியணியும் முலாயமின் புத்ர ரத்னம் அகிலேஷ் பாபு ஆட்சியில் தான் எத்தனை கலவரங்கள். எத்தனை உயிரிழப்பு?

  2002ஐ விடாது ஜபம் செய்யும் NGO பணத்தாசைக்காரர்கள் 2002க்கு அப்புறம் குஜராத்தில் எத்தனை கலவரம் நிகழ்ந்தது அல்லது பாஜக ஆட்சி செய்யும் ப்ரதேசங்களில் எத்தனை கலவரம் நிகழ்ந்தது என்பதைப் பற்றி மூச்சு விட மாட்டார்கள்.

  இப்படியெல்லாம் சாலை முழுக கண்ணிவெடிகள் உள்ள அரசியல் களத்தில் சாமர்த்யமாக ப்ரயாணம் செய்யத் துணிவுள்ளவர் நரேந்த்ரபாய் என்பதைத் தன் பிற்கால அரசியல் வாழ்க்கை மூலமும் தற்போது மிகவும் த்ருடமான தன் முடிவு மூலம் இத்யாதிகளை பணியவைத்ததன் மூலமும் சங்கத்தினரை சரிவர சம்மானித்தது மூலமும் நிரூபித்துள்ளார்.

  ஜய விஜயீ பவ
  வெற்றி வேல் வீரவேல்

 20. இவ்வளவும் நிகழ்ந்து வருகையில் மிக முக்யமான இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டியது அவசியம்.

  காங்க்ரஸ் என்பது பரங்கிக்கும்பினிக்காரர்களால் பரங்கியர் நலனுக்காக ஹிந்துஸ்தான சேவுகர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. பெருங்காயம் காலியானாலும் டப்பாவில் மணமிருப்பது போல் இன்றுவரை கும்பினிக்காரன் புத்தியுடன் செயல்பட்டு வருகிறது காங்க்ரஸ். இது மட்டும் இந்த கட்சிக்குப் பரிச்சயமில்லை. ஹிந்துஸ்தானத்தின் கொடூரமிகுந்த இயக்கம் என்ற பரிச்சயமும் உண்டு.

  லிஸ்ட் பார்த்தால் மலைக்க வைக்கும்.

  காஷ்மீரத்துக்கு தனிக்கொடி தனி அரசியல் சாஸனம் தனி ப்ரதம மந்த்ரி தனி ராஷ்ட்ரபதி என்ற காங்க்ரஸின்…..காந்தியடிகளின் செல்லப்பிள்ளையான…..நேருமாமாவின் பித்துக்குளித்தனத்தை எதிர்கொண்ட ஹிந்துமஹாசபையின் பண்டித ஷ்யாம ப்ரசாத முகர்ஜி அவர்களை ஸ்ரீ நகரில் பாழடைந்த கட்டிடத்தில் வைத்து காவு வாங்கியது காங்க்ரஸ். செத்த அவரது உடலுக்கு ப்ரேத பரிசோதனை கூட செய்யவில்லை. முகர்ஜியின் தாயார் நேருமாமாவிடம் மன்றாடியும் மர்மமான சாவு விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படவும் இல்லை.

  ஜனசங்கத்தின் பண்டித தீன் தயாள் உபாத்யாய் காங்க்ரஸின் பெருந்தலைவலி. 1968ம் வருஷம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கையில் மர்மமான முறையில் மரணித்தவர்.

  லால் பஹதூர் சாஸ்த்ரி. நேருமாமா காலமானபின் ஹிந்துஸ்தானம் குடும்ப சொத்தாக ஆகாது தேசத்தைக் காப்பாற்றியவர். இவர் காலத்திய குடியரசு தின அரசு ஊர்வலத்தில் முப்படைகள், பள்ளிகள், சாரணர்கள் இவர்களுடன் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தினரையும் இவ்வூர்வலத்தில் அனுமதித்த பெருந்தகை. பாக்கிஸ்தானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்காக தாஷ்கண்ட் சென்றபோது காவு வாங்கப்பட்டவர்.

  சஞ்சய் காந்தி – வருண்காந்தியின் தகப்பனார். எமர்ஜென்சியின் போது தில்லி துர்க்மான் கேட்டில் இவர் செய்த அட்டகாசங்கள் ஜகப்ரசித்தி. இவர் குண்டர் படைகளை ஏவி ஆட்களைப் பிடித்துப் பிடித்து கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு செய்தமையும் தில்லிக்காரர்கள் நினைவு கூர்வர்.எப்படி விபத்தில் மரணமானார் என்பது சஸ்பென்ஸ் தான். விபத்து ஸ்தலத்தில் தாயார் இந்திராகாந்தி பிள்ளையைக் கூட தேடாது ஏதோ கடிகாரத்தைத் தேடியதெல்லாம் சரித்ரம்.

  இந்த மரணங்களெல்லாம் ஹிந்துஸ்தான அரசியல் பகைமையால் மட்டும் நிகழ்ந்தனவா அல்லது வெளிதேசக்காரர்களுக்கு இதில் பங்குண்டா என்பதெல்லாம் கேழ்விகளே. ஹிந்துஸ்தானத்தி வளர்ந்து வரும் அரசியல் வாதிகள் வாழ்வு எதிர்பாராத வகையில் முடிவுற்றமை க்யாதி வாய்ந்த அரசியல் வாதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதைக்காட்டுகிறது என்றால் மிகையாகாது.

  காங்க்ரஸ் காரராகவே இருப்பினும் அமரர் ராஜீவ்காந்தி இறந்ததும் அம்மணி இந்திராகாந்தி இறந்தமையும் கூட விசனமிகுந்ததே. ஹிந்துஸ்தானத்தைப் பிளந்து உருவான அண்டை நாடுகளின் தலைவர்களும் தலை தூக்குமுன்னரே கதை முடிக்கப்பட்டமை விதிவிலக்கு என்றில்லாது விதியாகவே தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்தமையும் புறக்கணிக்கத் தக்கதல்ல.

  இது போன்றதொரு சூழ்நிலையில் நரேந்த்ரபாய் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பையும் மறுபரிசீலனை செய்து தேசத்தின் உயர்ந்த நிலை பாதுகாப்பு பெறும்படியான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். கட்சி இதற்காக கண்டிப்பாக ஆவன செய்ய வேண்டும்.

  நூறாண்டு காலம் வாழ்க. நோய் நொடியிலாது வாழ்க.
  வெற்றி வேல். வீரவேல்.

 21. நரேந்த்ரபாய் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பையும் மறுபரிசீலனை செய்து தேசத்தின் உயர்ந்த நிலை பாதுகாப்பு பெறும்படியான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். கட்சி இதற்காக கண்டிப்பாக ஆவன செய்ய வேண்டும்.

 22. அரசியலில் அதிகம் கருத்தைச் செலுத்தாத என்னைப் போன்ற இந்துத்வ வாதிகளுக்கு அத்வானி, மோடி இருவரும் இன்றியமையாதவர்களே. இந்த மனப்பிரிவுக்குக் காரணம் என்னைப் போன்ரவர்களுக்கு அதிர்ச்சியும் அச்சத்தையும் அளிக்கின்றது. இந்துத்வ வாதிகளிடம் பிரிவினையை ஏற்படுத்திவிடுமோ எனற பயம் நீடிக்கின்றது. எமக்கு இருவரும் தேவை. பாரதன்னை அருள்க.

 23. கருத்து வேற்றுமை ,சுய நல அரசியலை உதறிவிட்டு காங்கிரஸ் என்னும் நச்சு கோடியை வேருடன் பிடுங்கி எறிய வேண்டிய தருணம் அதற்கு சரியான தேர்வு மோடியகவே இருப்பார் .எனவே அத்வானி மோடியை ஆசிர்வதித்து அனுப்பியிருக்க vendum

 24. //அத்வானி அவர்களின் விட்டுமுன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியது சத்தியமாக பாஜக உறுப்பினர்க்ள் இல்லையா?//

  செந்தில் குமார் அவர்களே, நீங்கள் சொன்ன நிகழ்வு கண்டனத்துக்கு உரியதுதான். ஆனால் ராஜமாணிக்கத்தின் இந்தக் கட்டுரை உணர்த்துவதுபோல் உணர்ந்த எண்ணற்ற பாஜகவினர் மௌனமாக மனதுக்கும் குமுறியபோது சிலர் முறைதவறி நடந்துகொண்டுவிட்டனர். ஆனால் இது அத்வானி அவர்களின் செயல்பாட்டை நியாயப்படுத்துவது போல் நீங்கள் எழுதியிருப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. இன்றைய பாஜகவின் பிதாமகர்களின் ஒருவர் பாஜக பெருந்தரப்பு உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போனது மிகவும் வருந்தத்தக்கது.

 25. Congratulations to the author. Great article.I understand the author’s frustration and veiled anger on Advani. But,I refuse to compare Advani with the great soul Bhishma. It is an insult to the grand sire Bhisma.
  Advani is being selfish and nothing more. His personal agenda and ambition of becoming PM of India by any means, including the destruction of BJP in that process, is the root cause of his recent tantrum. Mind you, he did not resign from the party or from the parliament.Past good deeds does not entitle one to atrocious behaviour and back stabbing. By withdrawing his resignation, he is going to be a ongoing nuisance and sore wound to Namo and to BJP. The part should have accepted his resignation and ALSO should have demanded his resignation from the parliament. This would have shown their solidarity to Modi and would have send shivers up the spine of the looting mob aka UPA.

 26. ஆண்டவன் புண்ணியத்தில் அத்வானி ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுவிட்டார். ரொம்ப மகிழ்ச்சி. இந்து தலைவர்கள் ஒன்றாகிவிட்டனர்.அதேபோல இந்தியாவில் வாழும் இந்துக்களும் ஒன்றாகி நின்றால் நினைத்ததை சாதிக்கமுடியும்.
  மோடி மீது ஏன் போலி மதசார்பற்றவாதிகளுக்கு இவ்வளவு வெறுப்பு? கோத்ரா ரயில் நிகழ்ச்சிதானே? முஸ்லிம்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் என்று இவர்கள் சொல்கிறார்கள். சபர்மதி express இல் S -6 coach இல் 59 கர சேவர்களை கொன்ற 31 குற்றவாளிகளில் 11 பேருக்கு மரணதண்டனை 20 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி ஸ்பெஷல் ஜட்ஜ் P .R படேல் தீர்ப்பு அளித்தார். இதில் 31 பேரும் முஸ்லிம்கள் ஆவார்கள். இவர்கள் அப்பாவிகளா?ஒன்றும் தெரியாதவர்களா? வாயில் விரல் வைத்தாலும் கடிக்க தெரியாத பச்சை குழந்தைகளா?
  11.5.2005 இல் பார்லிமெண்டில் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் 2002 குஜராத் கலவரத்தில் 790 முஸ்லிம்கள் மற்றும் 254 இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்று அறிக்கை வாசித்தார். 790 முஸ்லிம்களை கொன்றது இந்துக்கள் என்றால் 254 இந்துக்களை கொன்ற பாவிகள் யார்? அவர்கள் அப்பாவிகளா?
  1.11.1984 அன்று நடந்த சீக்கியர்கள் படுகொலை குறித்த “Ahuja committee அறிக்கையின்படி டெல்லியில் மட்டும் 2733 பேர் கொல்லப்பட்டனர். மொத்தமாக 3 நாளில் எல்லா இடங்களிலும் சேர்த்து சுமார் 3000 பேர் கொல்லப்பட்டனர். இறந்த முஸ்லிம்கள் 790 எண்ணிக்கை பெரிதா? அல்லது இறந்த சீக்கியர்கள் 2733 எண்ணிக்கை பெரிதா? எனக்கு கணக்கு தெரியாது. யாராவது விளக்கினால் புரிந்துகொள்வேன். காங்கிரஸ் செய்த கொலை பட்டியல் அது மட்டுமா? Blue
  Star ஆபரேஷன் போது சுமார் 1000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இவைகளை செய்த காங்கிரஸ்காரன் யோக்கியன். ஆகிவிட்டான் உத்தமன் ஆகிவிட்டான் உங்கள் கண்களுக்கு.
  குஜராத்தில் 3.78 கோடி வாக்களர்களில் 9.8 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் ஆவர். பிஜேபியில் primary member களாக உள்ள முஸ்லிம்களின் என்னிக்கை1.90 லட்சம். கோத்ரா நகர் palika வின் மின் வாரிய தலைவர் ஒரு முஸ்லிம் saeed khan pathan (பிஜேபி) மாநில பெண்கள் பொருளாதார வளர்ச்சி வாரிய டைரக்டர் rajaiyya hussainwala (பிஜேபி) பொது மராமத்து துறை தலைவர் சோபியா ஜமால் (பிஜேபி) கோத்ரா நகர் Palika வில் சுகாதார கமிட்டி தலைவர் Mehboob படேல்.
  மோடி ஒரு முஸ்லிம் விரோதி என்கிறார்கள். அப்படியானால் முறைப்படி அரசு அனுமதி பெறாத இந்து கோவில்களை இடிக்க உத்திரவு பிறப்பித்துள்ள அவர் இந்துக்களின் விரோதியா? நல்லவனை கெட்டவன் என்பதும் கெட்டவனை நல்லவன் என்பதும் எதற்காக? ஒட்டு!. அதுதான் ஆளை ஆட்டுகிறது. முஸ்லிம்கள் en bloc ஆக ஒட்டு போடுகிறார்கள்.அதனால் அவனை தாஜா செய்கிறான். இந்துக்கள் அப்படியா? மொழியால் இனத்தால் சாதியால் பிரிந்துகிடக்கின்றனர். ஆகவே அவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு அணியில் நின்றால் நினைத்ததை சாதிக்க்கலாம். சாதிக்கநினைபதை சாதிக்கவிடாமல் தடுப்பது அந்த பாழாய்ப்போன சாதி தான். அந்த சாதியை மோதி உடை அப்புறம் மோடி PM ஆவதற்கு இல்லை தடை. I am sure people will be HAPPY if you select and elect BJP in the ensuing election Modi
  is the best selection ஆகவே இந்துக்களே நாம் ஒன்றுபடுவோம் தேர்தலை வென்றுவிடுவோம்

 27. அன்புள்ள ராமா,
  அத்வானிஜி அவர்களை பீஷ்மருடன் ஒப்பிட்டது நிச்சயம் தவறல்ல. அத்வானி அவர்கள் இந்த தேசத்தின் நலனைத்தவிர வேரு விஷயங்களை சிந்திக்காதவர். அவர் செய்த தியாகங்கள் அளப்பரியது. மோடியை விட அத்வானி அவர்களை மீடியா மிகக்கேவலமாக அவமானப்படுத்தி இருக்கிரது. அவரின் நேர்மையை உரசி இருக்கிறது. அத்தனையிலும் புடம் போட்ட தங்கமாக வெளியே வந்தவர் அவர். ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். இந்த 90 வயதில் கருணானிதி போன்றவர்களை செருப்பாலடித்தாலும், குடும்பத்தையே ஜெயிலில் போட்டாலும் ராஜினாமா என்று ஒரு நாளும் சொல்ல மாட்டார், அதே அத்வானி ஜி அவர்கள் ஜெயின் ஹவாலா வழக்கில் தன் மீது அவதூறாக குற்றம் சாட்டப்பட்ட உடன் தன் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படும் வரை பொறுப்புகளை வகிக்க மறுத்தார். பொது வாழ்வில் , அதுவும், இந்திய அரசியல் சூழலில் தூய்மையானவர்கள், கொள்கை பிடிப்பு கொண்டவர்கள் அபூர்வம். அத்வானிஜி அவர்கள் ஒரு மாணிக்கம். அவரை நாம் இகழ்தல் நிச்சயம் முறையன்று. அவருடைய என் தேசம் படித்து பாருங்கள். எப்படி ஒரு தியாகமான தலைவர் என்று தெரிய வரும்.

 28. Advani will surely make a better PM than modi.

  Also, he has more acceptance.

  Modi, outside Gujarat is yet to be tested.

  But Modi seems to be the current darling of the masses if we were to go by media reports.

  Advani does not have age on his side.

  Considering the ground reality, he should gracefully give way to modi.

  It will be disappointing for him personally but he has to face the harsh reality.

 29. Dear Shri Rajamanickam,
  Thank you Sir for your kind response. True, as you say that Mr Advani had done tremendous work for the nation and each and everyone us acknowledge this. But, let us all not forget his shortcomings too. His unwanted comments about Jinnah was the beginning of his downfall. With all the scams of UPA this corrupt government should have been floored to the ground. Dr Swamy was doing all the hard work of the opposition. Can anyone be honest and admit that he was an effective opposition leader? As a leader of the opposition, he was non entity and that is being kind to him.
  I am sorry Sir. There can only be one Grand sire Bhishma Ji. Even Lord Krishna with folded arms was listening to him when he was educating Yudishtra on Dharma while he was on his death bed. Comparing Bhishma Ji to Mr Advani,is an insult to a Dharmic icon. My apologies upfront if I have upset you in anyway with my immature comments.

 30. அன்புக்குறிய வீர.ராஜமாணிக்கம்.
  ஸ்ரீ அத்வானிஜி ஹிந்துத்துவ இயக்கத்தின் பிதாகமர் என்பது எள்ளளவும் மறுக்கமுடியாத உண்மை. அவரது பணி அளப்பரியது. ஆனால் அவர் பீஸ்மரா என்பது விவாதத்திற்குரியது. அவரது மதிப்பு அவர் ஜின்னாவை உயர்வாகப்பேசியதிலிருந்து ஹிந்துத்துவர்களிடையே குறைய ஆரம்பித்தது. அது ஸ்ரீ மோதி ஜியின் நியமனத்திற்கு ஸ்ரீ அத்வாணி காட்டிய எதிர்ப்பில் பாதாளத்தில் விழுந்திருக்கிறது. ஆனாலும் கூட சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று ராஜினாமாவை திரும்பபெற்றதின் மூலம் தான் ஒரு கட்டுப்பாடான ஸ்வயம் ஸேவவக் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அவர் முதுமை அடைந்திருப்பதால் முதியவர்களுக்கே உரிய உடல் நலக்குறைவு அவரை பாதித்திருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றுகிறது.
  எப்போதும் அரசியலில் அதிகார மாற்றம் குறிப்பாக தலைமை மாற்றம் கடினமானதகவே துக்ககரமாகவே இருந்திருக்கிறது.
  மற்றக்கட்சிகளைவிட எளிதாகவே மாற்றத்தினை பாஜக ஏற்றுக்கொண்டிருக்கிறது எனவே நினைக்கிறேன். பாஜக மீண்டும் ஸ்ரீ நரேந்திர மோதியின் தலைமையில் ஆட்சிக்கட்டில் ஏறும் நாள் தொலைவில் இல்லை.
  வெல்க பாரதம்.
  சிவஸ்ரீ.

 31. I fully agree with Mr.Rama. It will be a big insult to Bishma to call Advani by that name. In Mahabharatha when war was not coming to an end due to strong Bhishma , Krishna send Pandavas to him to enquire about the meathod to conquer him. He also explains his weaknes and Pandavas use it to eliminate him. Bhishma is embodiment of sacrifice and a karma yogi. Advani is neither of that.
  Though, he is an Hindutva icon,he is not following Bhagvat Geetha, even at his very old age. Even doctors say , after 80 consider every day as a bonus to a person.He can not be called as a Karma yogi like Kamaraj or Rajaji. A karma yogi is a person, who keeps working and don’t have any attachment to fruits of his work. Krishna says only if a person is destined ,he will get the fruits of his work. A Karma yogi takes in the same spirit success or or failure in getting the fruit and continue his good work. He is just an ordinary politician who created his own group in party and considered self interest above the interest of paty and its policy

 32. too much euphamism and too much of lies.lkadvani had proved himself worse a person than sonia, rahul and nitishkumar.i was impressed by modiji after reading writings of the greatest credible intellectual of india- madam Madhu kishwar.lkadwani will again create problem in future.not to be worried. modiji will take the people with him BY SERVING THEM.lkadwani must be handled harshly by the party.

 33. BJP என்ற ஆணும் JD (U ) என்ற பெண்ணும் கூட்டணி என்ற திருமணம் செய்துகொண்டு 17 வருடங்கள் ஆனபிறகு divorce செய்துகொள்ள பெண் விரும்பினால் அந்த பெண் நல்லவளாக இருந்தால் ஆட்சி என்ற தாலியினை கழற்றி கொடுக்கவேண்டும். அந்த தாலியோடு மற்றொருவருடன் இன்னொரு கூட்டணி என்ற திருமணம் செய்துகொள்ள விரும்புவது என்ன நியாயம் என்று சொல்லுங்கள் என் மதிப்பிற்குரிய திரு நிதிஷ் அவர்களே.
  ஒரு நன்றாக படிக்கும் மாணவனை பார்த்தால் மட்டி மாணவனுக்கு பிடிக்காது. அவன் அந்த மாணவன் மீது இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்வான். அவனைபார்த்தல் முகம் சுழிப்பான். சுமார் 55 ஆண்டுகளாக ஆட்சிபுரியும் காங்கிரஸ் ஆல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறக்கின்றனர். வேலை இல்லாத்திண்டாட்டம் தலைவிரித்து கொண்டாட்டம் போடுகிறது. ஊழல் இல்லாத இடமே இல்லை. சுமார் 13 ஆண்டுகளில் குஜராத் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. ஊழல் இல்லை. காமராஜர் போல ஒரு பிரம்மச்சாரி. நாட்டு நலனே குறிக்கோளாக இருக்கிறார். இப்படிப்பட்டவரை பார்த்தால் எரிச்சல்தானே வரும். அதனால் தான் அவரை மதவாதி என்று (மட்டி மாணவனை போன்று) என்றும் BJP ஒரு divisive force என்றும் வீண் பழி போடுகின்றனர்.
  மக்களை பிளவுபடுத்தும் சக்தி எது என்பதை கீழே விவரமாக பார்ப்போம்.
  1.Minority மாணவர்களுக்கு கல்வி கடன் உண்டு. ஆனால் இந்து மாணவர்களுக்கு கிடையாதாம். இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்று கூறப்படுகிறது. படிக்கும் மாணவர்களிடையே பிரிவினை ஏற்படுத்துவது யார்?
  2. RTE Act இன் படி பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினை சேர்ந்த மாணவர்களுக்கு 25% ஒதுக்கீடு செய்யவேண்டும். ஆனால் minority யினர் நடத்தும் பள்ளிகளுக்கு இந்த condition கிடையாது. இது பிரிவினை இல்லையா?
  3. அரபு நாடுகளில் கூட ஹாஜ் செல்ல subsidy முஸ்லிம்களுக்கு கிடையாது. ஆனால் மத சார்பற்ற நாடு என்று பெருமை அடித்துகொள்ளும் காங்கிரஸ் இங்குள்ள முஸ்லிம்களுக்கு subsidy தந்து இந்துகளுக்கு அதுபோல யாத்திரை சென்றால் subsidy கிடையாது. அந்த காலத்தில் ஔரங்கஷிப் இந்துக்கள் மீது ஜசியா வரி விதித்தான். அவனைவிட மோசமானவர்கள் இந்த காங்கிரஸ் காரர்கள். ஒவ்வொரு ஆண்டும் 1.70 லட்சம் முஸ்லிம்கள் மெக்கா செல்கின்றனர். 2011 யில் மட்டும் 685 கோடி மானியம் வழங்கப்பட்டது. இந்த பணம் யார் கட்டிய வரி? முஸ்லிம்கள்தான் பஞ்சைகள் பராரிகள் என்று சச்சார் கமிட்டி அறிக்கை சொல்லுகிறதே. அப்படியானால் தினம் கஞ்சிக்கே லாட்டரி அடிக்கும் அவர்கள் கண்டிப்பாக வரி கட்டிய்ருக்கமாட்டர்கள். எனவே அந்த அறிக்கைப்படி செல்வத்தில் புரளும் இந்துக்கள்தான் கட்டியிருக்கவேண்டும். குர் ஆனில் வசதிபடைத்தவர்கள் மட்டுமே மெக்கா செல்லலாம் என்று கூறும்போது அரசிடம் பிச்சை வாங்கி தான் மெக்கா செல்லவேண்டுமா?
  4. மத சார்பற்ற நாட்டில் எதற்கு ஒவ்வொரு மதத்திற்கு தனி தனி சட்டம்? மதத்தால் மக்களை பிரிக்காமல் மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம்(common civil code ) வேண்டுமென்று கூறுவோர்கள் பிரிவினைவாதிகள் என்றால் எந்த சுவரில் போய் முட்டிகொள்வது?
  5. முலாயம் சிங் வாயை திறந்தாலே BJP ஒரு மதவாத கட்சி என்று சொல்லிவிட்டுதான் மீதியை பேசுவார். அவரது மகன் நடத்தும் ஆட்சியில் இருக்கும் ஒரு மந்திரி “It is MY (= muslim + yaadav ) government ” என்று கூறுகிறார். அதாவது UP அரசு முஸ்லிம்களுக்கும் யாதவர்களுக்கும் மட்டும்தானா? மற்ற இனத்தவர்கள் எல்லாம் எங்கே போவது? இப்படி மக்களை பிரிக்கும் இவர்கள் பிரிவினை வாதிகள் இல்லையாம்! எல்லாருக்கும் இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி அன்பது போல இருக்கவே இருக்கு இளிச்சவாய கட்சி BJP அவனை பிரிவினைவாதி என்று பழி போட்டுவிட்டால் உண்மையான பிரிவினைவாதி தப்பித்துகொள்ள்ளலாமே!
  6. மத சார்பற்ற நாடாம் இது. ஆனால் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வேலையில் reservation தரலாமா?
  7. Secularism என்றால் மதங்கள் அனைத்துக்கும் வித்தியாசம் இன்றி ஒரே மாதிரியாக நடத்துதல் என்று பொருள். ஆனால் கருணாநிதி முஸ்லிம் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதும் இந்து பண்டிகைகளுக்கு எதுவும் சொல்வதில்லை. ஆனால் இவேறது டிவியில் மட்டும் விடுமுறை சிறப்பு நிகழ்சிகள் என்று கூறி விளம்பரத்தின் மூலம் வரும் பணத்தை இழப்பதில்லை.

 34. நிதீஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகி விட்டார் என்ற தேனான செய்தி நம் காதில் விழுந்துள்ளது. பாஜக , ஐக்கிய ஜனதா தள கூட்டு உடைந்ததில் , லல்லூவுக்கே லாபம். காங்கிரசுக்கு நேரடியாக ஒரு லாபமும் இல்லை. ஆனால் காங்கிரசுக்கு லல்லு தொடர்ந்து கூஜா தூக்குவாரா அல்லது கூஜா தூக்கும் பணியை நிதீஷ் குமார் செய்வாரா என்று காலம் தான் தீர்ப்பு வழங்கும். நிதீஷின் இந்த தற்கொலை முடிவு நம் நாட்டுக்கு நல்லதே. பாஜகவை பிடித்த பீடை ஒழிந்தது. தமிழகம், பீகார், ஆந்திரா, பாண்டிச்சேரி , உபி , மேற்குவங்காளம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பூஜ்யம் தான். ஒரே ஒரு சீட்டு கூட ஜெயிக்காது. இந்த மாநிலங்களில் 266 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இவைபோக மீதி இருக்கும் 277 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 50 தொகுதிகள் ஜெயிப்பது கூட கடினம். எனவே, 3-வது அணித்திருடர்கள் கம்யூனிஸ்ட் குழப்பவாதிகளுடன் சேர்ந்து, ஒரு உருப்படாத அரசை அமைத்து , நாட்டை மீண்டும் அழிவுப்பாதையில் அழைத்து செல்ல , சதி செய்கிறார்கள். இந்த நிலை வராமல் தடுக்க, பாஜகவுக்கு 250 தொகுதிகளாவது கிடைத்தால் தான் , நல்லது. காலம் தான் மே 2014-லே தீர்ப்பு வழங்கவிருக்கிறது. இந்தியாவின் எதிர்காலம் நம்பிக்கை ஊட்டுவதாக இன்னமும் இருக்கிறது.

 35. நிதீஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகி , தனித்தோ, காங்கிரசுடன் சேர்ந்தோ வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்பதற்கான அச்சாரம் தான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே அவர் மத்திய அரசிடம் கேட்ட பிச்சை காசான ஒரு லட்சம் கோடி. பேச்சுவார்த்தை இறுதியில் 44000 கோடியில் முடிவடைந்தது. முதல் கட்ட தொகையான 22000 கோடி பீகாருக்கு வழங்கப்பட்டு விட்டது. நிதீஷ் குமார் 44000 கோடிக்கு ஏலம் போய்விட்டார். ஆனால் தமிழ் நாட்டுக்கும் , பீகாருக்கும் என்ன வித்தியாசம் என்றால், இங்கு திமுக தலைவர்கள் மத்திய அரசுடன் பேரம் பேசி, தங்கள் குடும்ப மகன், மகள், பேரன் என்று வம்சாவளியினருக்கு மந்திரி பதவி வாங்கி கொள்ளை அடிப்பார்கள். கொள்ளை அடித்த பணம் குடும்பத்துக்கு போய்ச்சேரும். ஆனால் நிதீஷ் குமார் வாங்கிய லஞ்சப்பணம் பீகார் அரசின் கஜானாவுக்கு போய்ச்சேருகிறது. எனவே, காங்கிரசிடம் விலைபோன திமுகவைவிட, காங்கிரசிடம் விலைபோன நிதீஷ் குமார் சிறிது பரவாயில்லை. ஏனெனில் நிதீஷ் குமாரிடம் சுயநலம் இல்லை. முட்டாள் தனம் மட்டுமே உள்ளது.

 36. ஆச்சாரியர் பல விஷயங்களைக் கடும் ஒழுங்குடன் கற்றுத் தந்தவர். கற்றுத் தந்த பாடத்தின் படி வாழ்ந்து வந்தவர். தேசத்தின் உயர்வுக்குப் பாடுபடும் உள்ளங்களை வழிநடத்த அவரைவிடத் தகுதியானவர்கள் வேறு யாரும் இலர். அவருக்கு அடுத்தபடியில்தான் பார்த்தனையே வைக்க இயலும். குருவா சீடனா என்றால் குருவுக்குப் பிறகே சீடன் என்பது இன்றும் மனம் யோசிக்காமல் சொல்லும் விஷயம்.

  ஆனால் சமீபத்தில் நடந்த விவரங்களை அசைபோடுகையில் ஆச்சாரிய துரோணர் குருக்ஷேத்திரத்தில் நடந்தது போல பார்த்தனின் திறமையைத் தாமே பரீட்சித்துப் பார்க்க எண்ணுகிறாரோ என்று தோன்றுகிறது. உடனிருப்பர் என்று நம்பிய பலர் சல்லியன் போல வஞ்சத்துக்குப் பலியாகி நீங்கிச் சென்றாலும் பரந்தாமன் அருளால் பார்த்தனுக்கு வெற்றி என்ற வரலாறு மீண்டும் நிகழ வேண்டும் என்பதே விருப்பம்.

  கட்டுப்பாடும் தியாகமும் கற்றுத் தந்த ஆச்சாரியர் கற்பித்ததைச் சற்றே மீறிப் பார்க்கிற போது போர்க்களத்தில் வரிசை கட்டி நிற்கும் சீடர்களில் சிலர் வருந்துவதும், சிலர் சீறுவதும் இயல்பே. எதிரிகள் குதூகலிப்பதும் இயல்பே. ஆனால் மனமுடைந்து உற்சாகத்தை நீக்கிவிட்டு யாரும் களம்நீங்கிடாது காக்கவேண்டிய கடமை ஒவ்வொரு ஸ்வயம் சேவகருக்கும் உள்ளது.

  நாம் கற்ற பாடத்தின்படி தேசமே முக்கியம். தேசத்தின் நலனே லட்சியம். ஆச்சாரியர்கள் ஆயிரம்பேர் வருவர். வரலாற்றில் நிற்பர். தேசம் தன் மாட்சிமையை மீட்டால்தான் ஆச்சாரியர்களைக் கொண்டாட சீடர்கள் மிஞ்சுவர். தொன்மத்தை அழித்து தம்விதி நாட்ட விழையும் விஷநரிகளின் வலையில் தேசம் விழாது காக்கவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. ஆச்சாரியர் நல் வழிநடத்தினால் களிப்புடன் அவரடி தொடர்ந்து களம் காண்போம். அவர் தவங்கினால் வருத்தம் துடைத்தெறிந்து பார்த்தனின் பின் நின்று தேசம் காப்போம்.

 37. 1. K.P Shipy kalambaram (39 years) (முன்னாள் கேரள கதோலிக priest ) என்பவர் தனது 160 பக்க நூலில் சொல்கிறார்: Seminaries ல் Homosexual உறவுகள் கொடிகட்டி பறக்கிறது. மேலும் அவர் ” பல priest கள் widows மற்றும் nuns களை பாலியல்ரீதியாக exploit செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.
  2.ஜார்கண்ட் கோர்ட் ஆனது Christadas (48) பிரின்சிபால், புனித ஜோசப் ஸ்கூல், Guhiyajori (குறிப்பு இவர் ஒரு தமிழ் கிறிஸ்தவர்) என்பவருக்கு 3 வருடம் கடுங்காவல் சிரைதணனை விதித்து தீர்பளித்தது. காரணம் அவர் 14 வயது பள்ளி சிறுவனை sodomy செய்த குற்றத்திற்காக.
  3. Changanacherry Archdiocese யில் Parish Priest ஒரு 15 வயது சிறுமியிடம் 2 வருடம் தகாத உறவு வைதுகொண்டதால் 1998 ல் அப்பெண் ஒரு குழந்தைக்கு தாய் ஆனாள். (உங்களுக்கு ஒரு செய்தி தெர்யுமா? இயேசுவின் தாயார் கன்னி மேரி Holy Spirit மூலம் கர்ப்பமானபோது 12 வயதுதான்.)
  4. கேரளாவிலுள்ள கோட்டயம் இந்தியாவின் வாடிகன் என்று கூறலாம். Priest களின் காமவெறிக்கு பலிஆனோர் விவரம் கீழே:- அ) Abayaa (19) Pius x கான்வென்டின் student cum nun என்பவரை ஒரு Priest மற்றும் ஒரு nun சேர்ந்து கொன்றனர். பி) Ancy (32) Bethany கான்வென்ட் இவர் கிணற்றில் பிணமாக கிடந்தார். சி) அனுபமா மேரி என்பவர் ஒரு சீனியர் nun இன sexual
  harassment னை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார். டி) முன்னாள் nun sister Jesme எழுதிள்ள “Amen Autobiography ” என்ற நூலில் கத்தோலிக்க கான்வென்டில் நடக்கும் sexual abuse பற்றி விவரமாக எழுதிஉள்ளார் இ) லிசா
  (புனித Francis Clarist Convent ) என்பவரை 23.6.2006 இல் விஷம் கொடுத்து சாகடித்தனர். ஈ) அஞ்சோ (22) என்பவர் 29.12.2003 யில் மின்விசிறியில் தூக்கு போட்டுகொண்டு இறந்தார்
  5. 22.2.2013 ல் கத்தோலிக்க Priest வின்சென்ட் டோப்போ என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்பிகாபூர் என்ற மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் கைது செய்யபட்டார். காரணம் என்ன தெர்யுமா? நான்கு minor tribal பெண்களை
  கற்பழித்துள்ளார். அந்த பெண்களின் மெடிக்கல் examination அதை confirm செய்துள்ளது. இப்படிபட்டவர்கல்தான் நாங்கள் பரிசுத்தமானவர்கள் என்று பீத்திக்கொண்டு திரிகின்றனர்.
  மலை பிரசங்கம் என்று கூறுகிறார்களே அது என்ன தெர்யுமா? “கப்பர் நகூம்” என்ற ஊருக்கு அருகே 500 அடி உயரத்தில் ஒரு குன்று உள்ளது. அங்கிருந்து செய்த பிரசங்கம் தான் மலை பிரசங்கம் ஆகும்.அந்த பிரசங்கம் இதோ: ” உணவு உடைகளுக்காக கவலைப்பட்டு காலத்தை கழிக்காதீர்கள். பறவைகளை பாருங்கள் அவை விதைப்பதில்லை அறுவடை செய்வதில்லை. பரம பிதா அவற்றை வாழ வழி செய்கிறார். அவற்றைவிட மேலான் உங்களை கைவிடமாட்டார். எப்போதும் இறைவனின் அருளை பெற முயலுங்கள். கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் (குறிப்பு:- இந்த வசனம் ரொம்ப பிரபலம் converted கிறிஸ்துக்கள் அந்த பரலோகத்திலுள்ள ஆண்டவனை எல்லாவற்றையும் கேட்கவேண்டியதுதானே அதைவிடுத்து இந்த நாட்டை ஆண்டுகொண்டிருப்பவனை எங்களுக்கு reservation வேண்டும் வீடு கட்டி தரவேண்டும் படிக்க scholarship வேண்டும் என்று கேட்பதேன்? பரம பிதாவை கேட்டல் தரமாட்டானா? கதவை தட்டமாட்டீர்களா? அவர் திரக்கமாட்டரா?)இப்போது கதைக்கு வருவ்வோம். இன்று எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை தாரும் பரமண்டதிளிருக்கும் எங்கள் பிதாவே! உமது நாமம் ரத்சிக்கபடுவதாக! இதுதான் மலை பிரசங்கம் (என் கேள்வி உணவு உடைக்கு கவலைப்பட கூடாதாம் கேட்டால் கிடைக்குமாம் அன்றைக்கு அன்றைக்கு தேவையான ஆகாரதைகேட்டால் பரம பிதா தந்துவிடுவராம்! அப்புறம் நாம் எதற்கு உழைக்க வேண்டும்? பயிர் பண்ணவேண்டும்? மலை பிரசங்கம் என்பது ஒரு சோம்பேறி (இயேசு) நம்மை ஒரு படு சோம்பேறி ஆக ஆகுவதற்கு உபதேசித்த பிரசங்கம் ஆகும்

  அந்த இயேசுவின் தற்கால சோம்பேறிகள் ஒரு ஜெபத்தால்( prayer ) அணைத்து மெடிக்கல் treatment களையும் செய்து விடுவதாக கூறுகிறார்கள் அப்புறம் cmc மருத்துவமனை எதற்கு? இழுத்து மூடுங்கள் ஒரு முறை எங்கள் ஊரில் நற்செய்தி கூட்டம் நடந்தது. அதற்கு நானும்(நான் இந்து) என்னுடன் சிறுவயதில் பள்ளியில் படித்த ஒரு கிறிஸ்தவ நண்பரும் போனோம் என் நண்பருக்கு aids உள்ளது. அங்கு ஆமென், ஆலலுயா போன்ற சுத்த தமிழ் வார்த்தைகள் என் காதில் விழுந்தன மேடையில் ஒருவர் உங்கள் உடலில் நீண்ட நாட்களாக சொஸ்தமாகாமல் இருக்கும் தொந்திரவு கொடுக்கும் உடல் உறுப்பின் மீதுஉங்கள் கையை வையுங்கள் நான் ஒரு ஸ்பெஷல் ஸ்தோத்திரம் ஜெபிக்கபோகிறேன் அதுவரை கையை அங்கிருந்து எடுக்காதிர்கள் என்றார். என் நண்பர் “அந்த” இடத்தில் கையை வைத்துக்கொண்டார். அவர் ஜெபித்தார். பிறகு வீடு வந்துவிட்டோம் அந்தோ பரிதாபம் அந்த நண்பர் சில மாதங்கள் கழித்து இறந்துவிட்டார். இதுதான் prayer யின் மகிமையோ மகிமை! Glory to our Lord !
  பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறுகிறார்கள். இந்த வாரம் பூரா நாம் செய்த sins அனைத்தும் coming sunday அன்று பைசல் ஆகிவிடும் எங்கள் பக்கத்துக்கு தெருவில் வசிக்கும் ஒருவர் (கிறிஸ்தவர்) ஒரு சண்டே சர்ச்க்கு போய் prayer செய்தார். கண்டிப்பாக அவர் செய்த அணைத்து பாவங்களுக்கும் remission கிடைத்திருக்கும். ஆனால் prayer எல்லாம் முடிந்து வெளியில் வந்து தனது scooter ஐ எடுத்துகொண்டு கொஞ்சம் தூரம்தான் போயிருப்பார் ஒரு லாரியில் மாட்டிகொண்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.அவர் செய்த பாவம் எல்லாம் zero ஆகிவிட்டபிறகு மரணத்தை ஏன்கிறிஸ்து அவருக்கு கொடுத்தார்?இதற்கு எந்த கிறிஸ்தவ சகோதரராவது பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

 38. அத்வானிஜி யாக இருந்த நமது பிதாமகர் இன்று அதவானி சி….யாகத் தெரிகிறார் இந்த நாட்டிற்கு ஒரு நல்லது நடக்கும் சமயத்தில் போர்ப் படைத் தளபதியே எதிரியின் சைதன்யத்திற்குள் புகுந்து கொண்டதைப் போல இருக்கிறது இந்த மாபெரும் தலைவனின் நடவடிக்கை.

 39. அத்வானி தலைமை வகித்த போதும், கட்சியில் தன் அதிகாரத்தை கொண்டிருந்தபோதும் மற்ற தலைவர்கள் கட்சி தலைமையில் இருந்தபோதும் கட்சியின் வளர்ச்சி விகிதத்தை ஒப்பிட்டு பாருங்கள்.
  கட்சியை மட்டுமல்ல கட்சியை வழி நடத்த நல்ல தலைவர்களையும் வளர வழி செய்தவர்.இவர் வளர்ந்துவிட்டால் தன் தலைமைக்கு எதிராகிவிடுவார்கள் என்று கருதாமல் அனைவரையும் வளர ஊக்கமளித்தவர்.இன்றைய தலைவர்கள் தன்னை வளர்த்து மாற்று கருத்து கொண்டவர்களை ஓரங்கட்டியவர்கள்.தீவிரவாதிகள் தன் மீது குறி வைத்திருப்பது தெரிந்தும் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தவர்.தெளிவான கருத்தும் உறுதியான முடிவும் எடுத்து நடைமுறைபடுத்தியவர்.
  மோடியை தேர்ந்தெடுத்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தாரே தவிர மோடியை அல்ல.இதே கருத்து பல பேர்க்கும் இருந்தும் தங்களுடைய அரசியல் எதிர்காலம் தனிமைபடுத்தபடும் என்றெண்ணி அமைதியாகிவிட்டனர்.அத்வானிக்கு அந்த பயம் இல்லை.ஏனெனில் கட்சி தலைவர் என்ற முறையில் தனக்கு வந்த வாய்ப்பை வாஜ்பாயிக்கு அளித்து அவர் பிரதமர் ஆவதற்காக தன்னுடைய தலைமயில் நாடு முழுவதும் பிரச்சராவும் செய்தார்.மட்டுமல்ல வாஜ்பாயின் அமைச்சரவையில், தாழ்வுமனப்பான்மையில்லாமல் அமைச்சராகவும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.தன்னலம் கருதாமல் நாட்டு நலம் கருதி செயல்பட்டவருக்கு பிரதமர் பதவி ஒரு பொருட்டே அல்ல. அத்வானி செயல்பட்டது போல் பா.ஜ.க.வின் மற்ற தலைவர்கள் கட்சிக்காக கடுமையாக உழைத்திருந்தால் பா.ஜ.க.வின் ஆட்சியும் தொடர்ந்து அத்வானியும் பிரதமராகியிருப்பார்.சேஷன் தேர்தல் கமிஷனுக்கு பெருமை சேர்த்தார் என்றால் அத்வானி பா.ஜ.கவிற்கு பெருமை சேர்த்தார்.இன்றைய தலைவர்களில் பலர் கட்சியின் பெயரால் தன்னை முன்னிலைப்படுத்தி பிரபலமாகின்றனரே தவிர கட்சிக்கு உதவவில்லை.. என் அபிமான பா.ஜ.கவின் அகில இந்திய, மாநில,மாவட்ட தலைவர்களே உங்களின் கடந்த ஒரு வருட கால கட்சி பணியை சீர்தூக்கிபாருங்கள்.முன்னேற்றமிருந்தால் முன்னேறுங்கள் இல்லையேல் முன்னேற்றத்திற்கு வழிவிடுங்கள்.மற்ற தலைவர்களின் தலைமையின் கீழ் கட்சி பணியாற்றவும் மனதை பண்படுத்திகொள்ளுங்கள்
  .மோடி பிரதமராகி பா.ஜ.க ஆட்சியமைத்தால் அதில் பெருமை தனக்குதானே என்று தெளிவுபட கூறியவர். தனி நபர் வழிபாட்டை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ் வழி வந்த பா.ஜ.க தனி நபர் துதிபாடுகிறதே என்ற அச்சத்தில், தன் கருத்தை பொருள்படுத்தாத காரணத்தால் ராஜினாமா முடிவிற்கு வந்திருக்கிறார்.
  பல பேர் கூறியது போல் அத்வானி பீஷ்மருமல்ல, பிதாமகருமல்ல.சாதாரண மனிதர்.ஆனால் தெளிவான,உறுதியான,நேர்மையான,தைரியமான, சீரான,நம்பகத்தன்மை உடைய தன்னலமற்ற இரும்பு மனிதர்.

  பத்மனபாபுரம் சுனித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *