தமிழகத்தை சிந்திக்கவைத்த ஆடிட்டர் ரமேஷ்!

2013, ஜுலை 19.

சேலத்தில் அன்றிரவு தூங்காத இரவாக மாறிப்போனது. கடந்த 36 ஆண்டுகளாக ஓய்வின்றி இந்து சமுதாயத்திற்காக உழைத்த ஆடிட்டர் ரமேஷ் என்ற களப்பணியாளர் அன்றிரவு சிந்திய ரத்தம், தமிழகம் முழுவதும் பெரும் தார்மிக ஆவேசத்தை உருவாக்கி, செயலிழந்த மாநில அரசையும் உலுக்கி இருக்கிறது.

.

அற்புதமான செயல்வீரர்:

rameshji02
நமது பொய்த் தூக்கத்தைக் கலைத்த
அமரர் சேலம் ஆடிட்டர் ரமேஷ்

சேலம் பகுதியில் இந்து இயக்கப் பணிகளில் இடையறாது ஈடுபட்டு வந்தவர் ஆடிட்டர் ரமேஷ். வெங்கட்ராமன் என்ற வங்கி ஊழியரின் மூன்றாவது மகனாகப் பிறந்த இவருக்கு (பிறந்த நாள்: 05.07.1961) இரு சகோதரர்கள்; மூன்று சகோதரிகள்; நடுத்தர வர்க்கக் குடும்பம்.

கல்லூரியில் படிக்கும் போதே (1977) ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொடர்புக்கு வந்த ரமேஷ், மிக விரைவில் இயக்கத்தின் முக்கிய ஊழியராக உருவானார். அந்தக் காலகட்டம் தான் தமிழகத்தில் சங்கம் வேகமாக வளர்ந்த காலம். அந்த வேகத்தில் ரமேஷும் உடன் பயணித்தார்.

ஆரம்பத்தில் அஸ்தம்பட்டி பகுதியின் செயலாளராகப் பணி புரிந்த அவர், தனது கடும் உழைப்பாலும் செயல்பாடுகளாலும், மாவட்டச் செயலாளராக உயர்ந்தார். தம்மம்பட்டியில் (1989) செல்வராஜ் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டபோதும், தென்கனிக்கோட்டையில் (1990) ராமர் ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோதும், ரமேஷின் தலைமை தாங்கும் பண்பு வெளிப்பட்டது. அசாதாரணச் சூழல்களில் நிலைகுலையாமல் இயக்கத்தை வழிநடத்துபவரே சிறந்த தலைவர். அதனை ரமேஷிடம் காண முடிந்தது.

1991-ல் ரமேஷ் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதன் பல்வேறு மட்டங்களில் பொறுப்புகளை வகித்த அவர், கடைசியாக மாநில பொதுச்செயலாளர் என்ற நிலையை அடைந்தார். கட்சியின் எதிர்காலத் தலைவர்களுக்கான பட்டியலில் நம்பிக்கை அளிக்கும் உதாரணமாகத் திகழ்ந்தார். ஒரு சங்கச் செயல்வீரர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் அற்புதமான முன்னுதாரணமாக விளங்கினார்.

நாம் வாழும் பகுதியில் உள்ள அனைவருடனும் சுமுகமான உறவைப் பேணுவது அசாத்தியமானது. அதிலும், கட்சி பேதம் மிகுந்த அரசியல் உலகில் பிற கட்சியினரின் மரியாதையைப் பெறுவது மிகவும் கடினம். அதையும் ரமேஷ் சாதித்தார். ஆர்ப்பாட்டமின்றி அவர் செய்துவந்த பல நற்பணிகள், அவரது மறைவுக்குப் பின்னர் தான், பயனாளிகள் சொல்லித் தெரிய ஆரம்பிக்கின்றன.

இவர் கணக்குத் தணிக்கையாளர் ஆனதே பொதுசேவைக்காகத் தான். வேறெந்தப் பணிக்குச் சென்றாலும் தனது சமூகப் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதாலேயே, அவர் ஆடிட்டர் ஆனார். அவரது 25 ஆண்டுகால ஆடிட்டர் பணியைப் பாராட்டி இந்த ஆண்டு தான் அவருக்கு சேலம் மாவட்ட தணிக்கையாளர் சங்கம் பாராட்டு விழா நடத்தியது. ஆடிட்டர் பணி மூலமாக சமூத்தின் பலதரப்பட்ட மக்களை எளிதாக அணுகும் வாய்ப்பும், சுதந்திரமாக இயங்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தன. அந்தச் செல்வாக்கை இயக்கப் பணிகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

அதே சமயம் குடும்பத்தையும் இயக்கப் பணிகளையும் அவர் குழப்பிக் கொண்டதில்லை. மனைவி சுபா, 11-ம் வகுப்பு படிக்கும் மகள் ஸ்மிருதியுடன் அன்பான குடும்பத்தின் தலைவராகவும் அவர் இருந்தார். அவரது பணி அலுவலகம் எப்போதும் இயக்கச் செயல்வீரர்களுக்குத் திறந்திருக்கும்.

இவ்வாறு அன்பான குடும்பத்தின் தலைவராக, அற்புதமான இயக்க செயல்வீரராக, மக்களின் அன்பை வென்ற தலைவராக, அமைதியாகக் கருத்துகளை வெளிப்படுத்தி கொள்கைகளை விளக்கும் சித்தாந்தியாக, சிரித்த முகமும் இனிய சுபாவமும் கொண்ட எளிய மனிதராக விளங்கிய அவரது இழப்பு கண்டிப்பாக ஈடு செய்ய இயலாததே.

சிலர் மட்டுமே மிகக் குறுகிய காலத்தில் பெரும் தலைவர்களாக உருவெடுக்கிறார்கள். அத்தகு வாய்ப்பு பெற்றிருந்த சேலம் ஆடிட்டர் ரமேஷ், கொலைகாரர்களால் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார். விழியோரம் துளிர்க்கும் கண்ணீர்த் துளிகளை ஒதுக்கியபடி, அவர் எதற்காக வாழ்நாளெல்லாம் உழைத்தாரோ அதற்காக உழைக்க கங்கணம் பூண வேண்டிய தருணம் இது.

***

.

கொலைவெறியர்களின் இலக்கு என்ன?

coimbatore_bomb_ramakrishnan_body
1998 கோவை குண்டுவெடிப்பு:
மறக்க முடியுமா அந்த மாபாதகத்தை?

1984-ல் மதுரையில் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான ராம.கோபாலன் முதற்கொண்டு இப்போது சேலத்தில் கொல்லப்பட்டுள்ள ஆடிட்டர் ரமேஷ் வரை, கொலைகாரர்களின் பிரதானக் குறிக்கோள் இந்து இயக்கங்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதே.

அடுத்து, இந்து இயக்கங்கள் மக்களிடையே பெற்றுவரும் ஆதரவு, தேசவிரோதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மக்களிடையே பீதியை உருவாக்குவதன் மூலமாக இந்து இயக்கங்களின் ஆதரவுத் தளத்தை அழிப்பதும் அவர்களது நோக்கம்.

மூன்றாவதாக, அரசியல் கட்சியினரிடையே நடுக்கத்தை உருவாக்கி அரசியல் அரங்கில் இந்து இயக்கங்களையும் பாஜக-வையும் தனிமைப்படுத்துவதும் பயங்கரவாதிகளின் இலக்காக இருந்து வருகிறது.

காவல்துறை மற்றும் அதிகார வர்க்கத்தை எப்போதும் அச்சத்தின் பிடியில் வைத்திருப்பதன் வாயிலாக, தாங்கள் சார்ந்த சமுதாயத்துக்கு அச்சத்துடன் கூடிய மரியாதையை ஏற்படுத்துவதும் இஸ்லாமிய கொலைக் கும்பலின் திட்டம்.

இந்த நான்கு குறிக்கோள்களையும் இதுவரை வெற்றிகரமாக நிறைவேற்றி வந்திருக்கிறார்கள், தொழில்முறை கொலைகாரக் கும்பலைக் கொண்ட இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புக்கள். ஒவ்வொரு முறை இந்து இயக்க நிர்வாகிகள் வெட்டிச் சாய்க்கப்படும்பொதும், மௌனமாக அழுதபடி, கண்ணீரைத் துடைக்க நீளும் கரங்களின்றியே தான் இத்தனை காலமும் இந்து இயக்க வீரர்கள் பணி புரிந்து வந்திருக்கிறார்கள்.

இந்துக்களின் உரிமைகளைக் காக்க காவல்துறையின் துப்பாக்கிக்கு அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சென்ற கன்னியாகுமரியின் குமாரும் (1981), தம்மம்பட்டியின் செல்வராஜும் (1989) தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்திருக்கிறார்கள். தவிர, கொலைவெறியர்களின் தாக்குதலுக்கு இரையானவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்தவர்கள். அவர்களது நெஞ்சை உருக்கும் பட்டியல் இது…

கழுகுமலையின் ராமர் (1983), கோவையின் வீரகணேஷ் (1989), சிவகுமார் (1991), ராஜேந்திரன் (1995), மேட்டுப்பாளையம் கார்த்திகேயன் (1995), ரகுபதி (1997) முருகேசன் (2002); மதுரையின் ராஜகோபாலன் (1994),  பேராசிரியர் பரமசிவம் (1998); திருச்சியின் மருத்துவர் ஸ்ரீதர் (1998);  சென்னையின் கண்ணுதல் (1991), பிரபு (1995), ராம்ஜி (1997), ரங்கநாதன் (1997); உத்தமபாளையத்தின் ஆறுமுகம் (1996),  வரதராஜன் (1997), மேலப்பாளையத்தின் மருத்துவர் செல்வகுமார், கண்ணன், சங்கர், முத்துகிருஷ்ணன் (1997), திண்டுக்கல்லின் நாகராஜன் (1990), மாணிக்கம், செல்வராஜ் (1997); ராமேஸ்வரத்தின் முனியசாமி (1993), பத்தமடையின் ராமசாமி (1998); நாகையின் தங்கம் முத்துகிருஷ்ணன் (1995), புகழேந்தி (2012), தென்காசியைச் சேர்ந்த குமாரபாண்டியன் சகோதரர்கள் (2007), பரமக்குடியின் முருகன் (2013);  வேலூரின் மருத்துவர் அரவிந்த ரெட்டி (2012), வெள்ளையப்பன் (2013)…

இந்தப் பட்டியலில் விடுபட்ட பெயர்களும் இருக்கலாம். கிட்டத்தட்ட 50-க்கு மேற்பட்டவர்கள் முஸ்லிம் குண்டர்களின் கொலைவெறிக்கு நேரடியாக ஆளாகி இறந்திருக்கிறார்கள். இவையல்லாது கொலைவெறித் தாக்குதலில் தப்பிப் பிழைத்த ஜனா.கிருஷ்ணமூர்த்தி, திருக்கோவிலூர் சுந்தரம் (கோவை- 1982), பாஸ்கர் (திண்டுக்கல்- 2009),  ஆனந்தன் (மேட்டுப்பாளையம் -2012), எம்.ஆர்.காந்தி (குமரி- 2013) உள்ளிட்ட பலர் முஸ்லிம் பயங்கரவாதத்தின் சாட்சிகளாக இருக்கின்றனர்.

தவிர, சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டுவெடிப்பில் (1993) 11 பேரும், இந்து முன்னணி அலுவலக குண்டுவெடிப்பில் (1995) ஒருவரும், கோவை அத்வானி பொதுக்கூட்ட குண்டுவெடிப்பில் (1998) 60 பேரும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இத்தனை ஊழியர்கள் செங்குருதி சிந்தி தமிழகத்தின் இந்து இயக்கங்கள் வளர்க்க பாடுபட்டிருக்கின்றனர். தங்கள் இன்னுயிரை இவர்கள் ஈந்த போதெல்லாம், நமது சமூகம் யாருக்கோ நடப்பதாக வேடிக்கை பார்த்து வந்தது. அரசும் பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்து வாக்குவங்கியைக் காப்பதில் கவனம் செலுத்தியது. ஊடகங்களெல்லாம் நமக்கெதற்கு வம்பு என்று வாளாயிருந்தன. அரசியல்வாதிகள் இந்தக் கொடிய சூழல்களிலும் வெட்டப்பட்டவர்களைக் கைவிட்டு, வெட்டியவர்களுக்கு வக்காலத்து வாங்கி வந்தனர்.

அந்த இழிவு நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சேலம் ஆடிட்டர் ரமேஷ், தனது களபலியால். தனது தீவிர செயல்பாடுகள், தனிப்பட்ட செல்வாக்கு, ஆளுமை வளர்ச்சி, இனிய குணநலன்களால் மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் தனது உயிர்ப்பலியால் சிந்திக்கச் செய்திருக்கிறார் ரமேஷ். அவருக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

***

.

எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?

 

ரமேஷின் இறுதி ஊர்வலத்தில்சேலமே திரண்டு கண்ணீர் விட்டது
ரமேஷின் இறுதி ஊர்வலத்தில்
சேலமே திரண்டு கண்ணீர் விட்டது

இந்து இயக்க நிர்வாகிகள் தாக்கப்படும்போதெல்லாம் வேடிக்கை பார்த்த மக்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகள், காவல்துறை உள்ளிட்டோர் இம்முறை அதிசயிக்கத் தக்க அளவில் கிளர்ந்தெழுந்த்து எப்படி?

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை குறித்து உண்மையான செய்திகள் எந்த மழுப்பலும் இன்றி இம்முறை அச்சு ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் வெளியாகின. வேலூரில் இந்து முன்ன்ணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்ட போதே (08.07.2013) தமிழகத்தில் அதற்கு எதிரான அலை உருவாகத் துவங்கி இருந்தது. அந்த மனக் கொந்தளிப்பு, சேலத்தில் ரமேஷ் படுகொலையை அடுத்து (19.07.2013), எரிமலையாக வெடித்தது.

இதுவரை கொல்லப்பட்ட தியாகியர் பட்டியலை மனதிற்குள் நினைந்து அழுது கொண்டிருந்த இந்து இயக்க தொண்டர்களுக்கு, இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகத்தை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்த ரமேஷின் உயிர்த் தியாகம் வாய்ப்பை அளித்தது. கொடியவர்கள் மிருகத்தனமாக நடந்துகொண்ட போதும், இந்து இயக்கங்கள் பொறுமை காத்தன; மிகவும் உனர்ச்சிகரமான சூழலிலும் இந்து இயக்கத் தொண்டர்கள் காட்டிய அசாத்திய அமைதி ஊடகங்களின் கருத்தோட்டத்தை மறுபரிசீலனை செய்ய வைத்தது.

தவிர, ரமேஷின் தனிப்பட்ட ஆளுமையும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்குரல் வெளிப்பட காரணமானது. கடந்த 30 ஆண்டு கால வரலாற்றில், இந்து இயக்க நிர்வாகி ஒருவரது படுகொலையை தமிழகத்தின் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் கண்டித்தது இதுவே முதல்முறை!

தமிழக முதல்வரின் கண்டனம் தாமதமாக வந்தபோதும், அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்த்தியது. திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், மதிமுக- தலைவர் வைகோ, பாமக தலைவர் ராமதாஸ்,  விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் திருமாவளவன், உள்பட பல தலைவர்களும் ஆடிட்டர் ரமேஷின் படுகொலையைக் கண்டித்தது எதிர்பாராத ஒன்று. இது பயஙகரவாதிகளின் பகல் கனவில் மண்ணைப் போட்டது. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, பல்வேறு சமூக அமைப்புகளும் கொலைவெறியர்களின் தொடர் தாக்குதல்கலைக் கண்டித்தனர்.

இம்முறை, பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமையும் இவ்விஷயத்தை தேசிய விவகாரமாக மாற்றியது. அதன் தலைவர் ராஜ்நாத் சிங் நியமித்த பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான மூவர் குழுவின் ஆய்வு, பல இடங்களில் அதிர்ச்சிகரமான உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. பாஜக தேசியத் தலைவர்களின் கண்டனங்களும் அரசியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தின.

இதைவிட முக்கியமானது, பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் அழைப்பு விடுத்த கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்திற்கு (22.07.2013) மாநிலம் முழுவதும் கிடைத்த ஆதரவு. இந்தக் கடையடைப்பு எந்த முன்னேற்பாடும் இல்லாமல், எந்த தீவிர முயற்சிகளும் இல்லாமல் நடத்தப்பட்டது. பாஜகவின் அழைப்பை ஏற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்தக் கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது- எந்த அசம்பாவிதமும் இல்லாமல். இந்து இயக்கங்கள் இதுவரை சிந்திய ரத்தம் வீணாகி விடவில்லை என்பதை அன்று காண முடிந்தது. மக்கள் எப்போதும் அநீதியை சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது பயங்கரவாதிகளுக்கு புரியவைக்கப்பட்டது.

இந்தக் கடையடைப்பின் வெற்றியும், சேலத்தில் ரமேஷின் இறுதி ஊர்வலத்துக்குத் திரண்ட மக்கள் கூட்டமும் தான் நமது அரசியல்வாதிகளைச் சிந்திக்கச் செய்தன. இதுநாள் வரை இஸ்லாமியர்களின் வாக்குவங்கிக்காக பெரும்பான்மை மக்களை கிள்ளுக்கீரையாக நடத்திவந்த அரசியல் கட்சிகள், இம்முறை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை உணர்ந்துகொண்டன. இந்துக்களுக்கும் வாக்குவங்கி உள்ளதை அனைவரும் புரிந்துகொண்டதன் விளைவே, பலதரப்பில் இருந்தும் குவிந்த கண்டனங்கள்.

இதுவரை பல இந்து இயக்கத் தலைவர்கள் கொல்லப்பட்ட போதெல்லாம், அதை தனிப்பட்ட விரோத, தொழில்போட்டிக் கொலைகளாக கதைகட்டிவந்த காவல்துறை இம்முறை நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. மாநில முதல்வரே இந்தப் பிரச்னையில் நேரடியாகத் தலையிட்டு சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை அமைத்திருக்கிறார். இதுவரை பலியானோரின் உயிரிழப்புகளுக்கும் இப்போது அர்த்தம் கிடைத்திருக்கிறது.

இவ்வாறாக, சேலம் ஆடிட்டர் படுகொலை நிகழ்வு- சமூகம், அரசியல்வாதிகள், அரசு நிர்வாகம், ஊடகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலும் நிலவி வந்த மெத்தனப் போக்கை மாற்றி இருக்கிறது. இந்த விழிப்புணர்வு,  சேலம் ஆடிட்டர் ரமேஷின் உயிர்த் தியாகத்தால் அமைந்தது. அவருக்கு நமது கண்ணீர் கலந்த நன்றிகளும் வீர வணக்கங்களும் என்றும் உண்டு.

 

 

19 Replies to “தமிழகத்தை சிந்திக்கவைத்த ஆடிட்டர் ரமேஷ்!”

 1. நாட்டிக்கு எதிராக செயல்படும் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டம்கள் , தமிழர் அமைப்புகளை கொண்டு முன்எடுக்கப்பட வேண்டும்.அவ்வாறான தமிழ் அமைப்புகளை உருவாக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் இந்தியாவை ஆக்கிறமித்தபொது தமிழ் மன்னர்களும் பிற இந்திய மன்னர்களும் அன்னீய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போரட்டமாகவே முன்எடுத்தார்கள். வெறும் ஹிந்து மதத்திட்கு எதிரான ஆக்கிரமிப்பாக எண்ணவில்லை.ஆங்கிலேயறுக்கு எதிரான போரட்டமும் அப்படித்தான்.பெரும்பான்மை முஸ்லிம்கள் தமது முன்னோர்களை இந்தியர்களாக எண்ணுவது இல்லை.அது போல் முஸ்லிம்களுக்கு எதிரான மலையாளி, தெலுங்கு போன்ற அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். சிறந்த எடுத்துக்காட்டாக இங்கிலீஷ் டிபன்ஸ் லீக் என்ற அமைப்பை கூறலாம்.இன உணர்வு மக்களை விரைவாக அணிதிறட்ட உதவும். இவ்வாறான அமைப்புகள் இந்தியாவின் உடைவுக்கு வழி அமைக்கும் என எண்ண கூடாது. இந்து அமைப்புக்களினால் மட்டும் இந்தியாவுக்கு,இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக இயங்கும் முஸ்லிம்களை எதிர்க்க முடியாது.ஹைதராபாத்தில் எல்லா இந்துகளையும் கொல்ல போவதாவ சொல்பவன் தெலுங்கனோ அல்லது இந்தியனோ இல்லை. தமிழை காபிர்களின் மொழி என்பவன் தமிழன் இல்லை. பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தியர் ,தமிழர் என்ற போர்வைகுள் மறைத்து உள்ளார்கள். இதை உடைப்பதற்கு இன அமைப்புகலே உதவும்

 2. பைபிள் சண்முகம்,கொமலிஸ்வரன்பேட்டை ரெங்கநாதன், Rss ஆபீஸ் குண்டு வெடித்துது.

 3. என்ன இன்னும் விழிக்க வில்லையா ? நீ இந்துவா ?

 4. ஹிந்துக்களின் அடுத்த தலைமுறை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் திமுக , அதிமுகவுக்கு ஒட்டு போடவே கூடாது .
  துட்டு குடுத்து சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாம்

 5. இந்த கொலைகார கும்பலை இன்னமும்

  கண்டுபிடிக்காமல் இருப்பது வியப்பின் உச்சம்

  காவல்துறை அக்கறை கொள்ளவேண்டும்.

 6. இங்கே சில புல்லுரிவிகளும் கருத்து தெரிவிக்க (தமிழன், நிரஞ்சன்) வருவார்கள். தணிக்கை செய்தே மறுமொழிகளை பிரசுரிப்பது நல்லது. ஏனென்றால், கல்லெறிய, கள்ளகடத்தல் செய்ய, கள்ளநோட்டு அடிக்க / மாற்ற, கலவரம் செய்ய, குண்டுவைக்க என்று தேசத்துரோகிகள் அணி அணியாக வேலை செய்வதுபோல் இப்பொழுது புனிதமான ஊடகங்களிலும் விஷமத்தனமான கருத்துக்களை பரப்ப ஊடுரிவியுள்ளனர்கள் – இந்த நாசகார, மனிதகுல விரோதிகள். நாம் ஒவ்வொருவரும் முதலில் சங்க பரிவார் அமைப்பில் ஏதாவது ஒன்றில் இணைந்து, இந்து ஒற்றுமைப்பணியில் ஈடுபட்டு, பலிதானிகள் விட்டு சென்ற பணியை இன்னும் பல மடங்கு வேகமாக முன்னெடுத்து செல்லுவோம். பாழாய்ப்போன கிரிக்கட்டை பார்க்க, விமர்சிக்க மணிக்கணக்காய் செலவழிக்கின்றோம். இனி நமது ஹிந்து சமுதாயத்தை பற்றி நினைப்போம். நான்குபேர் சேர்ந்தால் அங்கு நமது கலந்துரையாடல் இவ்வாறே இருக்க வேண்டும். ஞாயிறு என்றால் கிறிஸ்தவ ஆணும் பெண்ணும் என்ன ஓட்டமாய் சர்ச்சுக்கு ஓடுது. அதுபோல் வெள்ளிக்கிழமையில் முஸ்லிம். நமக்கு தினசரி ஷாகா. மனது வைத்தால் நிச்சயமாக முடியும். காவிக்கொடி பறக்காத இந்து வீடே இல்லை என்ற நிலையை ஏற்ப்படுத்துவோம். இந்து ஓட்டு வங்கியை ஏற்படுத்துவோம். நாம் மக்களை தொடர்புகொள்ள எத்தனையோ வாய்ப்புக்களை நமது சமயம் அள்ளித்தந்துள்ளது (விநாயகர் சதுர்த்தி, திருவிளக்கு பூஜை, விவேகானதர் ஜெயந்தி, சத்ரபதி சிவாஜி ஜெயந்தி, பௌர்ணமி கிரிவலம், ஆடி செவ்வாய், தேர் திருவிழா). முடியும் என்பவனுக்கு மலை கூட மடுவே. முடியாது என்பவுனுக்குத்தான் மடு கூட மலை. நாம் பகீரதன், சாவித்த்ரியின் வம்சத்தினர். சாதிப்போம். போலி மதசர்பின்மைவாதிகளை நம் காலடியில் மண்டியிட வைப்போம். தர்மமே வெல்லும்.
  .

 7. Sorry, All I see is a lot of advise on how Hindus should progress and unite, etc, etc but zilt on any initiative by any Hindus here.. As they say, only action can be louder than words. Having said that, my apology also.Living abroad, my contribution is so far is only financial to Hindu charities in India, mainly for rural education .

 8. ஆடிட்டர் ரமேஷ் ஜியின் படுகொலை வீரமரணம். அந்த மாவீரனுக்கு வீரவணக்கம். இந்தப்படுகொலையை செய்த ஜிகாதிவெறியர்கள் தமது அடாவடித்தனத்திற்கு பதில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை.
  அமரர் ரமேஷ்ஜி யின் ஆன்மா அமைதிபெற முக்கண் எந்தை அருள் செய்ய இறைஞ்சுகிறேன்.
  சிவஸ்ரீ.

 9. அன்பு சகோதரர் திரு (இந்து) கண்ணன் தனது மறுமொழியில் புல்லுருவிகளை பற்றி எழுதி அங்கே இருவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்வதுபோல “நிரஞ்சன்” என்பவன் நிச்சயமாக புல்லுருவி தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் திரு தமிழ் என்பவர் அவ்வாறா என்று எனக்கு தெரியவில்லை. அவர் கூறும் கருத்து நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது நோக்கம் இந்து மதத்தை சாடுவதாக எனக்கு படவில்லை. பிறகு உங்கள் விருப்பம். By the by ,

  முஸ்லிம்கள் போன்ற சொக்கதங்கம் உலகில் யாருமில்லை என்று நம்முடைய “துலுக்கதாசர்கள்” (=psuedo secularists ) அடித்து கூறுகிறார்கள் நேற்று இன்று ஆகிய 2 நாள் செய்திதாள்களில் இருந்து கீழே சில செய்திகளை கூறுகிறேன். (தினம் தினம் இது போன்ற செய்திகள் வருகின்றன)
  1.ஈராக்கில் மகிழுந்து (=car ) வெடிகுண்டால் 51 பேர் கொல்லப்பட்டனர்——— (தி ஹிந்து நாள் 30-7-2013 பக்கம் 12)
  2. நைஜீரியா குண்டுவெடிப்பு சாவு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது—–(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 31-7-2013)
  3. தாலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஒரு சிறைகூடத்தை தாக்கி 250 தீவிரவாதிகளை விடுவித்து 14 பேரை கொன்று உள்ளனர்————— (இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 31-7-2013)
  4. சூடான் நாட்டில் Misseriya என்ற ஓர் அராபிய tribe இனத்தவர் அவர்களது rival tribe இனமான Salamat என்ற இனத்தவர்கள் 100 பேரை கொன்றுள்ளள்ளனர் ————— (இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 31-7-2013)
  இப்படி 2 நாள் பேப்பரில் 4 கொலை செய்திகள் வருகின்றன. அதுவும் இப்போது ரம்ஜான் மாதம் என்று சொல்லபடுகிற புனித (?!?!?!?!?) மாதமாம்! ஆக, இந்த மாதமும் புனிதமில்லை அவர்களது மதமும் புனிதமில்லை. இங்கே நம் கண்ணுக்கு தெரிந்து நமது 2 ராணுவ வீரர்களின் தலைகளை கொய்து சென்றார்கள். அவர்கள் தினமும் ஆட்டை வெட்டி வெட்டி பழக்கப்பட்டு அவர்களுக்கு ஆளை கொள்வதும் ரொம்ப ரொம்ப சாதாரணமாக ஆகிவிட்டது அந்த வகையில் திரு வெள்ளையப்பன் மற்றும் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை கொன்றது இரண்டு ஆடுகளை பிஸ்மில்லா என்று கூறி கொன்றதற்கு சமம். குண்டு வைப்பது என்பது அந்த பிற்போக்குகளின் அன்றாட பொழுதுபோக்கு.

  எல்லா விஷயங்களும் நன்றாக தெரிகிறது ஆனால் secularism என்ற கருப்பு கண்ணாடி போட்டுகொண்டால் அந்த விஷயங்கள் எல்லாம் அப்படியே முழுவதும் மறைந்து போய் விடுகின்றன. பாவம் அந்த ஒட்டு பொறுக்கிகள் என்ன செய்வார்கள்.? ஒட்டு என்றால் தான் பெற்ற பெண் பிள்ளைகளையும் தாலி கட்டிய மனைவியும் கூட காட்டி கொடுப்பார்கள் அல்லது கூட்டி கொடுப்பார்கள். இந்த கேடு கெட்ட இழிந்த ஈன பிறவிகள். இவர்கள் இந்துக்கள் என்ற பெயரில் உலவும் ஜந்துக்கள். இவர்களுக்கு மானம் ரோஷம் சூடு சொரணை ரத்தம் சீவு இவை ஏதாவது இருந்தால்தானே நாம் கேட்கும் கேள்விகள் அவர்களின் காதுகளில் கேட்கும். ஒட்டு,ஒட்டு, ஒட்டு என்பதுதான் அவர்களது. ஒரே குறிக்கோள்..

 10. This article amazes me. It endorses many of my points I have mentioned in another article. Thanks for the writer or writers for a well analysed article.

  என் கருத்துகள் பலவற்றை இக்கட்டுரை எடுத்தியம்புகிறதைப் பார்த்து வியப்படைகிறேன். நன்கு அலசப்பட்ட கட்டுரை.

  If majority of the members of comments area don’t like me to write my comments here, good and good bye

 11. கண்ணை மூடிக் கொண்டு ஹிந்து இயக்கங்களை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். எனெற்றால் ஒரு கட்சி விடாமல் , ஒரு பத்திரிகை விடாமல் ,ஒரு அறிவு ஜீவி என்று சொல்லப்படுபவர் விடாமல் எல்லோரும் துருக்கர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தொடர்ந்து முதுகு சொரிந்து கொண்டிருப்பதே வேலையாக ,எதோ ஹிந்துக்கள் இங்கு பிள்ளையார் கோயில் ஆண்டிகள் போலவும், போனால் போகட்டும் ஒரு மூலையில் ஒண்டிக் கிடக்கட்டும் ஆனால அதற்கு மேல் வாயைத் திறக்கக் கூடாது என்பது போல் நடந்து கொள்வதும் , இந்தத் தெருவில் ஊர்வலம் போகதே, அந்த வழியில் ஊர்வலம் போகாதே என்பதும் ,ஹிந்து மதத்தை இழிவு செய்தால் ‘அட கிடக்கட்டும்’ என்பது போலவும் இஸ்லாத்தையோ, க்ரிஸ்தவத்தையோ (எங்கேயோ அமெரிக்காவிலோ , ஆப்பிரிக்கவிலோ கூட ) நையாண்டி செய்தால் இவர்கள் பொங்கி எழுவதும், ஆகா ஊகூ என்று முஸ்லீம்களுக்கு முன் இவர்கள் எகிறிக் குதிப்பதும்- அட என்ன நடக்கிறது நம் நாட்டில்?

  இவர்கள் பிரதமர் ,முதல்வர் என்றெல்லாம் அதிகாரம் செலுத்த- ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து நம் முன்னோர் வளர்த்த ஹிந்து தர்மத்தையும் ,கலாசாரத் தையும் அழிப்பார்க்களாம் . நாம் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்க வேண்டுமாம் .

 12. If Tamil is a Hindu he should not be writing in such tone and tenor. If he is a Muslim or a christian he has to come back to the Mother Dharma. Otherwise he has no business to criticise Hindu Dharma.

 13. sitharanukku pathil

  ஹிந்து தர்மா என்றால் என்ன என்றறியோம்;
  ரிக், யஜூர், சாம, அதவர்வ வேதங்கள் அறியோம்.
  வடமொழியறியோம்.
  சடங்குகள், பூஜைகள் புன்ஸ்காரங்கள் அறியோம்.

  எங்களுக்கறிந்ததெல்லாம் இதோ சுப்ரமணிய பாரதியார் சொல்வதே:

  ‘அண்ணே காட்டுவழிதனிலே கள்ளர் பயமறிந்தால்
  எங்கள் வீட்டுக்குலதெயவம் வீரம்மை காக்குமடா!”

  ‘அண்ணே நிறுத்திவண்டியென்றே கள்ளர் நெருங்கிக்கேட்கையிலே
  எங்கள் கறுத்தமாரியின்பேர் சொன்னால் காலனுமஞ்சுமடா!”

  (வண்டிக்காரன் பாட்டு)

  எங்கள் கறுத்த மாரி எங்களை நிச்சயம் காக்குமென நாங்கள் நம்பிவாழ்கிறோம். வண்டிக்காரனுக்கும் சுமைதூக்குபவனுக்கும் கழிவுகளைக்கழுபுவனுக்கும் உழபவனுக்கும் கறுத்த மாரியும் வீர்ம்மையும் கண்டிப்பாக கருணை காட்டுவாள்ன்று திடமாக நம்பி வாழ்கிறோம்.

 14. ஹிந்து எழுற்சியாலர்களே அனைவரும் ஒன்றுபடுவோம்,ஹிந்து மதம் காப்போம். தீவிரவாதம் ஒழிப்போம், மதமாற்றம் தடுப்போம்.

 15. ஹிந்து இயக்கங்கள் இன்னும் பலம் பெற வேண்டும். மக்கள் ஒன்று பட வேண்டும். வாழ்க பாரதம்!

 16. மகேஷ் அவர்கள் குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில் ஒரு வாசகம்’ வாக்குகளைச் சிதறடிக்காமல் ஒற்றுமையுடன் அதிக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வோம்’.

  ஹிந்துக்களே கண்ணைத் திறவுங்கள்
  ஹிந்துவாக வோட்டளியுங்கள்.
  இல்லையென்றால் பாகிஸ்தான், ஆப்காநிஸ்தான், பங்களா தேசம், மலேசியா இங்கெல்லாம் ஹிந்துக்களுக்கு நேர்ந்த, நேருகின்ற கதிதான் உங்களுக்கும் ( நமக்கும் )

 17. அன்புள்ள தமிழ்
  தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடத்தில் தெருவுக்கு ஒரு மசூதி ,சர்ச் கட்ட விடுவதும், அதே தெருவின் வழியாகத் தங்கள் ஊர்வலம் போகக் கூடாது என்று அரசும் அவர்களும் சொன்னால் ‘அடியேன் அப்படியே’ என்று குனிவதும் ,தங்களுக்கே இல்லாத உரிமைகளை முஸ்லீம்களுக்கும், கிரிஸ்தவர்களுக்கும் அளிப்பதும், அவர்களும் அரசியல் , மீடியா மற்றும் போலி அறிவு ஜீவிகளும் சேர்ந்து கொண்டு ‘உங்கள் சமயம் மட்டமானது, நீங்கள் முட்டாள்கள் ,உங்களுக்கு நாங்கள் கொடுப்பதுதான் உரிமை, மேலே பேசாதீர்கள் , பேசினால் அவ்வளவுதான் , உங்களுக்கு இங்கு வாழ உரிமை இல்லை ‘என்று சொல்வதை சிரித்துக் கொண்டே கடலை சாப்பிட்டுக் கொண்டு கேட்டுக் கொண்டிருப்பதும்

  தாங்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் பெரும்பான்மையினர் தங்களை நசுக்குவதை -ஒன்று சத்தம் போடாமல் சகித்துக் கொள்வது அல்லது அங்கிருந்து எப்படித் தப்பித்து ஓடுவது ,அல்லது அவர்கள் போடும் எலும்புத் துண்டுகளைக் ( சம்பளம் ) கவ்விக் கொண்டு அவர்களுக்கு அடிமைகளாகவும் பயந்து கொண்டும் ,தங்கள் சமயம், கலாச்சாரம் பற்றிப் பேசவோ , வெளிக்காட்டிக் கொள்ளவோ பயந்து நடுங்குவதும் –

  இதுதான் ஹிந்து தர்மம் – போதுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *