ஆகஸ்டு-20: யஜுர்வேத உபாகர்மம் (பூணூல் அணி விழா)

நமக்கு வந்த இந்த அழைப்பிதழை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அன்புடையீர்,

வேத நெறிப்படி வாழ நாம் எடுக்கும் சங்கல்பம் அல்லது உறுதியே யக்ஞோபவீத தாரணம் அல்லது பூணூல் அணிதல். உபநயனம் என்ற கல்விக் கண் திறக்கும் சடங்கின் புற அடையாளமாக பூணூல் அணியப் படுகிறது. பிறகு ஒவ்வொரு வருடமும் இந்த உறுதியை நினைவுறுத்தும் வகையில் பாரத தேசத்தில் சில பகுதிகளில் உபாகர்மம் அல்லது ஆவணி அவிட்டம் என்ற சடங்கு வைதீக நெறியில் ஒழுகுபவர்களால் கடைப்பிடிக்கப் படுகிறது.

அதன்படி வருகின்ற ஆவணி மாதம் 4ஆம் நாள் (20/08/2013) செவ்வாய் கிழமை ஆவணி அவிட்டம் நாளில் காலை 9 மணிக்கு யஜுர் வேத உபாகர்மம் நடைபெறும். அது சமயம் புதிதாக பூணூல் அணிய விருப்பம் உள்ளவர்கள் யாரும் இதில் கலந்து கொண்டு யக்ஞோபவீத தாரணம் செய்து கொள்ளலாம்.

தகுதி: மனிதராக பிறந்த அனைவரும்

தக்ஷிணை : வேதங்கள் காட்டும் வழியில் வாழ்வதே

இடம் : ஆர்ய சமாஜம்,
28, எச்.எம்.ஏ தெரு,
திருவல்லிக்கேணி
சென்னை- 600 005.
(ஜாம் பஜார் காவல் நிலையம் எதிரில்)

ஆர்வலர்கள் கிழே கொடுத்துள்ள அலை பேசியில் முன் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.

திரு. அருள் மொழி
9791017700

இங்ஙனம்
ஆரிய சமஜாம் – மத்திய சென்னை

arya-samaj-poonool-ani-vizha

29 Replies to “ஆகஸ்டு-20: யஜுர்வேத உபாகர்மம் (பூணூல் அணி விழா)”

 1. நல்ல முயற்சி கண்டிப்பாக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்…..

 2. முயற்சி என்னவோ நல்லது தான். ஆனால் உபாகர்மாவின் பொருளே மாறிச் சொல்லப் பட்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது.
  https://sivamgss.blogspot.in/2012/07/blog-post_8877.html இங்கே பார்க்கவும். இது சும்மா வெறும் பூணூல் அணியும் சம்பிரதாயமான சடங்கு இல்லை. மற்றபடி நோக்கம் நன்மை தரும் நோக்கம். பகிர்வுக்கு நன்றி.

 3. பார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் “அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்” என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்“ என்றும் வலியுறுத்தியது. “இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் “என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.

  ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் “இந்து மத உரிமை“ என்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள் இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.

  இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.

 4. நல்ல நோக்கம்… ஆனால் பூணூலுக்கும் வேத நெறி வாழ்வுக்கும் இன்று என்ன சம்பந்தம்…? அதுவும் உபாகர்மம் அன்று புதிதாக பூணூல் போடலாமா? உபாகர்மம் என்பது வெறும் பூணூல் அணியும் நிகழ்ச்சியா? பொதுவாக, பாரம்பரியமாகப் பூணூல் அணிபவர்களிடம் இருந்து வரும் நித்யம் சந்தியாவந்தனம், சமிதாதானம் அல்லது அக்னிஹோத்ரம், சைவஉணவே உண்ணுதல் போன்ற மரபுகள் இப்பூணூல் அயிபவர்களுக்கும் பொருந்துமா..?

 5. எந்த விஷயத்திலும் பாவனை தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணி அவிட்டம் என்பது அனைவரும் வேதம் பயில துவங்கும் ஒரு பொருள் பொதிந்த சடங்கு தான். இதனை எந்த நாளில் வேண்டுமானாலும் அனைத்து ஜாதியினரும் செய்யலாம். வேத மாதா மனித இனத்துக்கும் , மனிதன் உட்பட அனைத்து ஜீவா ராசிகளுக்கும் நன்மை அருள்வாள். வையகம் வளமுடன் வாழ்க.

 6. //தகுதி: மனிதராக பிறந்த அனைவரும்//

  ஆஹா! ஆஹா!! ஆஹா!!! வார்த்தைகளின் சக்தி வேறு எதற்கும் இல்லை. Pen is mightier than the sword என்று சும்மாவா சொன்னார்கள்..

  வாழ்க ஆரிய சமாஜம்! வளர்க தர்ம நெறி!! சுவாமி தயானந்த சரஸ்வதி நம்முடன் துணை நிற்கட்டும்!!!

 7. உத்தர பாரதத்தில் ஹரியாணா, பஞ்சாப், தில்லி போன்ற ப்ரதேசங்களில் ஆர்ய சமாஜம் வெகுவாகப் பலராலும் ஆச்ரயிக்கப்படுகிறது. தமிழகத்திலும் ஆர்ய சமாஜம் தன் கார்யங்களைத் துவக்குவது வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் உரியது. அதில் ஒரு முக்யமான அங்கமாக இவர்களது பூணூல் அணிவிக்கும் ப்ரக்ரியை.

  ஹிந்துஸ்தானத்தில் பலகோடி மக்களின் ப்ரேமைக்கு பாத்ரராய் இருக்கும் பூஜ்ய ஸ்வாமி ராம்தேவ் பாபா (பூர்வாஸ்ரமத்தில் ராமக்ருஷ்ண யாதவ்) அவர்கள் ஆர்ய சமாஜத்தில் வேதம் பயின்றவரே.

  \\ அதுவும் உபாகர்மம் அன்று புதிதாக பூணூல் போடலாமா? \\

  மதிப்பிற்குறிய ப்ரம்மஸ்ரீ மயூரகிரி சர்மா மஹாசய, கூடாது (முழு தக்ஷிணாயனத்திலும்) என்பது ஸூத்ரகாரர்களின் அபிப்ராயம் என்ற படிக்கு தங்கள் ப்ரச்னம். ஆயினும் ஆர்ய சமாஜத்தினரின் கர்மானுஷ்டானங்களின் அலகீடுகள் (முழுதும்) ஸூத்ர க்ரந்தங்களை ஒட்டி அல்ல

  \\ பொதுவாக, பாரம்பரியமாகப் பூணூல் அணிபவர்களிடம் இருந்து வரும் நித்யம் சந்தியாவந்தனம், சமிதாதானம் அல்லது அக்னிஹோத்ரம், சைவஉணவே உண்ணுதல் போன்ற மரபுகள் இப்பூணூல் அயிபவர்களுக்கும் பொருந்துமா..?\\

  அலகீடுகள் வேறானவை என்பதால் பாரம்பர்யமான அனுஷ்டானங்கள் அப்படியே இருக்காது.

  தக்ஷிணாயனத்தில் உபநயனம் கூடாது என்பதும் ஸூத்ரகாரர்களின் அபிப்ராயமாயிற்றே. போடுவது மஜ்பூரி அல்லது நாகரிகமாகிவிட்டதே.

  மேலும் க்ஷமிக்கவும். தாங்கள் மேற்சொன்ன அலகீடுகளும் மிகப்பெரும்பாலும் தக்ஷிண பாரதீய பாரம்பர்யத்தை மட்டிலும் ஒட்டியவை. அங்கும் சிகை, புண்ட் ரதாரணம் எல்லாம் போய், ம்லேச்ச வேஷ தாரணம் மிகுந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனப்பாரம்பர்யம் ஒரு புறம் தேய்ந்து வருகிறது. ஆயினும் ஒருபுறம் விடாது பாரம்பர்யம் போற்றும் அனுஷ்டாதாக்களும் வளர்ந்து வருகின்றனர். எல்லாம் பகவத் சங்கல்பம்.

  பஞ்ச த்ராவிட ப்ரதேசங்களிலேயே கொங்கணம் மற்றும் பெரும்பாலும் கௌட தேசம் (ஒரிஸ்ஸா, வங்காளம், பீஹார்) மேலும் இன்றைய கிழக்கு உத்தரப்ரதேசம் மற்றும் உத்தராகண்ட், காஷ்மீரம் போன்ற ப்ரதேசங்களில் பாரம்பர்யமாக யக்ஞோபவீதம் அணிபவர்களும் பாரம்பர்யமாக மாம்சாஹாரிகள்.

  ஸ்வாமி ராம்தேவ் பாபா போன்ற ஆர்யஸமாஜத்தைச் சார்ந்த மஹநீயர்கள் சைவ ஆஹாரத்தை வெகுவாக ப்ரசாரம் செய்து ஹிந்துஸ்தான முழுதும் அதற்கு ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். உத்தர பாரதத்தில் இதை வைஷ்ணோ போஜன் என்று சொல்கின்றனர்.

  ஹிந்துஸ்தானத்தில் மக்களுக்கு ஆன்மீகத்தில் வழிகாட்ட மலர்ந்த எத்தனையோ ஸுகந்த புஷ்பங்களில் மலர்ந்து மணம் பரப்பும் புஷ்பம் ஆர்ய ஸமாஜம். அவர்களது வழி பாரம்பர்ய வழியிலிருந்து வேறாக இருக்கலாம். வேதம் கற்க வேண்டும் வைதிக அனுஷ்டானங்கள் செய்ய வேண்டும் என்பதில் ஆசை உள்ள பல அன்பர்களுக்கு தங்கள் வழிமுறைப்படி உபகாரம் செய்கிறது இந்த ஸ்தாபனம். வாழ்த்துக்கள்.

 8. அருமையான முயற்சி. சாதி மதம்(சைவம், வைணவம் போன்றவை), ஆண் பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் உரியது வேதம். அதனை கற்றுக்கொள்ள துவங்குமுன் அனைவருக்கும் உபநயனம் அவசியம். ஒரு காலத்தில் அனைவருக்கும் உரியதான இந்த சடங்கு இன்று ஒருசிலருக்குமட்டுமே உரித்தானதாகிவிட்டது. அதை மீண்டும் அனைவருக்கும் வழங்கிடும் முயற்சி பாராட்டிற்குரியது. யசெய்தியைவெளியிட்ட தமிழ் ஹிந்து ஆசிரியர்குழுவிற்கும் பாராட்டுக்கள் நன்றி. ஹிந்துத்துவ நண்பர்கள் இந்த செய்தி அனைவருக்கும் சென்று சேர வழிவகை செய்தல் நன்று.

 9. ஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்களுக்கு ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசர் அருமையாக பதில் அளித்துள்ளார்.
  ப்ரம்மோபதேசம் பெருகிறவர்கள் சந்த்யாவந்தனம் தினசரி செய்யவேண்டும் என்று ஆர்ய சமாஜத்தவர்களும் உபதேசிக்கிறார்கள். கற்றும் கொடுக்கிறார்கள். சமீபத்தில் ஹவன் சந்த்யா என்ற சிடியை அக்னிகார்ட் என்ற அவர்களது இணைய தளத்தின் மூலம் வாங்கினேன். அவர்களே யக்ஞமு கற்றுத்தருகிறார்கள். இல்லறத்தார் வேதவேள்விகளை செய்யவேண்டும் என்பது வேதம் விதித்தது அல்லவா.
  தென்னகத்தில்தான் பிர்மோபதேசம் பெற்றவர்கள் புலால் உண்பதில்லை. வட நாட்டு பிராமணர்கள் புலால் உண்பதை வடகிழக்கில் கூடப்பார்க முடிகிறது. அது அவரவர் விருப்பம். பிரம்மோபதேசத்தின் போது புலால் உண்ணாமையைக்கட்டாயமாக்காமல் இருத்தல் நன்று.

 10. \\ பொதுவாக, பாரம்பரியமாகப் பூணூல் அணிபவர்களிடம் இருந்து வரும் நித்யம் சந்தியாவந்தனம், சமிதாதானம் அல்லது அக்னிஹோத்ரம், சைவஉணவே உண்ணுதல் போன்ற மரபுகள் இப்பூணூல் அயிபவர்களுக்கும் பொருந்துமா..?/
  இந்தக் கருத்து நியாயமானதே. பூணூல் அணிவது இவ்வொழுக்கங்களைப் பேணிப் போற்றுவதற்கே. இவ்வொழுக்கங்களில் நில்லாமல் சாதிமரபினைப் பின்பற்றிப் அணியப்படும் பூணூல் முது சொரிவதற்கே யாகும். மதுரையாதீனத்துச் சம்பிரதாயத்தில் ( ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகப் பரமாச்சாரிய சுவாமிகள் வரை) விசேட தீக்கை பெற்று சிவபூசையும் திருமுறை பாராயணமும் மேற்கொண்டவர்கள் முப்புரி அணிவிக்கப் பெற்றனர். சிவபூசை செய்யும்போது பூணூல் அணிந்து மற்றையபோது பெட்டகத்தில் வைத்துவிடுவர். இந்த ஒழுக்கங்களை உயிரளவுள்ளவரை கைக்கொண்டு ஒழுகுவதாகச் சத்தியப் பிரமாணம் செய்பவருக்கே பூணூல் அணிவது பெருமை தரும்.

 11. தஞ்சை சதா அவர்களின் கருத்தில் சில விவரங்கள் இடிக்கின்றன. முதலில் பார்ப்பனர்கள் எல்லோரும் எல்லா கோயில்களிலும் பூசை செய்ய முடியாது. சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் ஆகியோர் பரம்பரை மற்றும் குடும்ப உரிமையாக தான் பூஜை உரிமையை வைத்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீக்ஷிதர்கள் தவிர வேறு பார்ப்பனர்கள் பூஜை செய்ய முடியாது. அதே போல சிவாச்சாரியார்கள் பூஜை செய்யும் கோயில்களில் பட்டாச்சாரியார்கள் பூஜை செய்ய முடியாது. பட்டாச்சாரியார்கள் பூஜை செய்யும் வைணவ கோயில்களில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்யமுடியாது. இதனை போலவே திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை செய்யும் உரிமை ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மலையாள பிராமணருக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அங்கும் பிற பார்ப்பனர்கள் பூஜை செய்ய முடியாது. திருப்பெருந்துறை மாணிக்க வாசகர் கோயிலிலும் ஒரு குறிப்பிட்ட பார்ப்பன பிரிவினர் மட்டுமே பூஜை செய்ய முடியும். உண்மை நிலை இப்படி இருக்க , பார்ப்பனர்கள் மட்டும் எல்லா கோயிலிலும் பூஜை செய்யமுடியும் என்றும் மற்ற சாதியினருக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்பது முழு தவறு. இது சாதி சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. வழக்கம் ( custom ) சம்பந்தப்பட்ட விஷயம்.

  எது எப்படி இருந்தாலும் , அனைத்து சாதியினருக்கும் ஆகம முறைப்படி பயிற்சி அளித்து , அனைவரையும் பூஜை செய்ய அனுமதிப்பது என்பது அனைவரும் வரவேற்க வேண்டிய ஒன்று. அது சரி , நாட்டுக்கு அதிக பட்ச கெடுதல்களை செய்ய இந்திய அரசியல் வாதிகள் நம் அரசியல் சட்டத்தை திருத்தி நூற்றுக்கு மேற்பட்ட முறை மாற்றினார்களே, உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை நீற்றுப்போக செய்வதற்கு ஏனிவர்கள் அரசியல் சட்ட திருத்த மசோதாவை கொண்டுவரவில்லை ? எனவே கடந்த 1989- ஆம் ஆண்டு முதல் 2013 வரை இருபத்து நாலு வருடத்தில் , திமுகவினர் மத்திய ஆட்சியில் இல்லாத 1991-96, 1998 ஆகிய ஆறு வருடம் நீங்கலாக எஞ்சிய 18- வருடத்தில் , அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசியல் சட்ட திருத்தத்துக்கு அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ? எல்லாம் வெற்று மேடை பேச்சுமட்டுமே.

  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது காலத்தின் கட்டாயம். அது நடைமுறைப்படுத்த தடையாக இருப்பது கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொண்டு, இந்துமத இறைவழிபாட்டு முறைகளை கேவலப்படுத்தும் திக போன்ற சில போலி நாத்திக இயக்கங்களும் அவர்களின் அடிவருடிகளுமே. நமது கேள்வி என்ன வென்றால், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆனால் , கடவுள் உண்டு என்று இவர்கள் ஏற்கத்தயாரா ? கடவுள் இல்லை கடவுளை நம்புபவன் முட்டாள், கடவுள் நம்பிக்கையை பரப்புபவன் அயோக்கியன் என்ற வாசகங்களை பெரியார் சிலைகளின் அடிப்பகுதிகளில் இருந்து நீக்க தயாரா ?

  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற சீர்திருத்தம் தமிழகத்தில் மட்டும் கொண்டுவந்தால் போதாது. காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கும் திமுகவினர் அகில இந்தியாவிலும் இந்த சீர்திருத்தத்தை செய்ய நடவடிக்கை எடுக்க தயாரா ? அது சரி , ஒரு சாதியினருக்கு மட்டும் பூஜை உரிமை இருக்கிறது என்பதே ஒரு தவறான பிரச்சாரம். வர்ணாசிரம தர்மம் என்ற பொய்யான பூதத்தை சுட்டிக்காட்டி, பிராமணர்கள்/பார்ப்பனர்கள் மட்டுமே பூஜை செய்கிறார்கள் என்பது முழு பொய் தான். பார்ப்பனர்களில் ஒரு சில பிரிவினர் மட்டுமே பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர் என்பதே உண்மை. நல்ல சீர்திருத்தங்கள் இவ்வளவு காலம் அமல் செய்ய முடியாமல் போனதற்கு திகவினர் மற்றும் அவர்களின் சொம்புகள் தான் காரணம். கடவுள் இல்லை , கடவுள் நம்பிக்கை ஒரு முழு மூடத்தனம் என்று சொல்லிக்கொண்டு , இந்து மத கடவுள் நம்பிக்கைகளை மட்டுமே பொருளற்ற விமரிசனம் செய்யும் திகவினர் தான் இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம்.

 12. நான் மேலே கூறியுள்ளவை எல்லாம் ஆகம முறைப்படி உள்ள கோயில்களில் மட்டுமே. இதர கோயில்களில் எல்லா சாதியினரும் ஏற்கனவே அர்ச்சகர்களாக உள்ளனர். அகில இந்திய அளவில் இந்த சீர்திருத்தங்கள் செய்தால் தான் உலகமே நம்மை பாராட்டும். ஊழல்களை செய்ய கூடுதல் ஒதுக்கும் கொள்ளையர்கள் , உண்மையான சீர்திருத்தங்கள் செய்ய , தேவையான அரசியல் சட்ட திருத்தங்களை எப்போதோ செய்திருக்க முடியும். இனியாவது உடன் செய்க. தாமதம் வேண்டாம். புரட்சி சீர்திருத்தம் என்ற வார்த்தைகள் மக்களை ஏமாற்றுவதற்கு என்று இல்லாமல், உண்மையிலேயே சீர்திருத்தம் செய்யுங்கள். நிச்சயம் மக்கள் உங்களை பாராட்டுவார்கள். ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது , ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி தரும் விஷயம் ஆகும். இந்து கடவுள் நம்பிக்கைகளை மட்டும் கொச்சைப்படுத்தும் திமுக, திக போன்ற கட்சிகள் இனியாவது திருந்தினால் நாட்டுக்கு நல்லது. இந்த ஜென்மங்கள் திருந்துவார்களா ?

 13. //தகுதி: மனிதராக பிறந்த அனைவரும்//

  இந்த ஆண்டு வாய்ப்பு நழுவி விட்டது.

  அடுத்த ஆண்டு இந்த விளம்பரத்தை போடும்போது கவனிக்க வேண்டியது.

  ஆவணி அவிட்டம் அன்று ஆரிய சமாஜத்திற்குச் சென்று எத்தனை ‘மனிதராக பிறந்தவர்கள் ‘ அதாவது பார்பனரல்லாதோர் பூணுல் அணிவிக்கப்பட்டனர் என்றறிந்து படங்களையும் போடுமாறு ஓராண்டுக்கு முன்னரே விண்ணப்பித்துக்கொள்கிறேன்.

  என தனிப்பட்ட கருத்து மஹாசயர்களுக்கு மிகவும் வலிக்கும்.

  அதாவது –

  இந்தச்சடங்கை இந்துமதம் கடாசி விடுவது மதத்திற்கு நல்லது. இன்று இது தமிழ்ப்பார்ப்பனர் சடங்கு. அவர்கள் தங்கள் ஜாதியுணர்வைப்பெருக்கிக்கொள்ள இந்துமதச்சாயத்தை பூசிக்கொள்ள உதவுகிறது. இதை ஏன் கடாச வேண்டும்? இது போன்ற இன்ன பிற சாதிச்சடங்குகளும் களையப்பட வேண்டும். அவர்கள் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு மதச்சாயம் பூசக்கூடாது.

  இப்படிச்செய்தால், பல்லாயிரக்கணக்காணோர் தாய் மதம் திரும்புவர்.

  மஹாசயர்கள் மல்லுக்கட்டுவார்கள். பயப்படக்கூடாது. மதம் வேண்டுமென்றால் கடுமையான சிகிச்சையும் தேவை.

 14. அனைத்து சாதியினரும் அர்ச்சராக முடியவில்லையே என்ற ஆதங்கத்தினை திரு தஞ்சை சதா அவர்கள் தெரிவித்துள்ளார். அதற்கு முதல் படியே அனைவருக்கும் உபனயனம் செய்வித்தலே ஏன் எனில் வேதமந்திரங்களை ஓதும் தகுதி அதனால் அமைகிறது. உப நயனம் பெருவதற்கு சாதிபேதம் ஆண் பெண் என்ற பேதம் சைவ உணவினர் அசைவ உணவு உண்போர் என்ற பேதம் தேவை இல்லை. ஆனால் மற்றைய ஆச்சாரங்கள் புலன் மனத்தூய்மைக்குறியன அவசியம். புலாலை நிறுத்த சொன்னால் இன்றைய நிலையில் பெரும்பாலானோர் தீக்கை வாங்கவே வரமாட்டார்கள்.

 15. \\இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.\\

  முட்டாள் தனத்தின் உச்சம் மேற்படி வார்த்தைகளில் தெரிகிறது. சாதிக்கும் கோயிலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மேலும் கோயிலில் எந்த சிவாச்சாரியாரும் எந்த கோயிலுக்கும் பூஜை செய்யலாம் என்று உரிமையும் கிடையாது.

  பல ஆயிர கணக்கான கோயில்களில் அரசின் பல்வேறு வகையான சாதி பிரிவுகளில் உள்ளவர்களும் (தலித்துகள் உட்பட) பூஜை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் கோயில்களில் பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் (அ) பட்டாச்சாரியார்கள் (அ) பண்டாரங்கள்… சாத்தானிய (அ) ஸ்தானிக பொறுப்பில்… அல்லது பிரிட்டிஷ் வழக்க முறையில் மிராசு முறையில் … இந்திய அரசியல் சட்ட தனி மனித மத உரிமை ப்படி ஒரு குடும்ப சொத்து என்ற முறையில் பூஜை செய்து கொண்டு இருக்கிறார்கள். இது பல நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் தனி மனித மத சுதந்திரத்தின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  மீண்டும் சொல்கிறேன். மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அனைத்து கோயில்களிலும் நடைபெறும் பூஜைகளை செய்பவர்கள் ஸ்தானிகர்களே… அதாவது கோயில் கருவரையில் இருக்கும் மூலவருக்கு பூஜை செய்யும் உரிமை பரம்பரை பரம்பரையாக கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்தானிகம் என்பது சாதி அடிப்படையிலான விசயம் அல்ல. அது ஒரு குடும்பம் சம்மந்தமானது. இது குடும்ப உரிமை.

  கடந்த 60 ஆண்டுகாலத்தில் மேற்படி பணி செய்பவர்களுக்கு ஒரு பைசா சம்மளமும் வழங்கப்படவில்லை. ஒரு வாரத்தில் குறைந்தது 72 மணி நேரம் கோயிலில் பணி புரியும் இவர்களுக்கு தட்டில் விழும் காசுகள் தான் ஜீவாதாரம். தமிழக அரசின் குறைந்தப் பட்ச ஊதிய வரம்பு கூட இவர்களுக்கு இல்லை. மேற்படி கோயில்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கட்டிபாட்டில் தான் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

  மேற்படி உரிமை தவறு எனில், தாத்தா சொத்து பேரனுக்கோ, அப்பன் சொத்து பிள்ளைக்கோ செல்வது தவறு. ஆக நேரு குடுமத்தின் சொத்தும் கருணாநிதி குடும்ப சொத்து கூட சம்மந்தப்பட்ட மனிதரின் காலத்திற்கு பிறகு அரசாங்கத்தின் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட வேண்டும்.

  பல நூறு புராதான கோயில்களில் யாருமே செல்லாத நிலையிலும் தொடர்ச்சியாக சம்மந்தப்பட குடும்ப உறுப்பினர்கள் காலம் காலமாக பூஜை செய்து வருகின்றனர். கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் இந்து அறநிலை துறை குண்டர்களின் கட்டுபாட்டில் உள்ளது. அதில் உள்ள வருமானம் இந்த குண்டர்களின் வயிற்றிற்கு சென்று கொண்டு இருக்கிறது.

  நீதிமன்ற தீர்பை வேண்டும் என்றே திரித்து இதற்கு சில திராவிட பொறுக்கிகள் சாதி வர்ணத்தை பூச முயற்சி செய்கின்றனர். வாய் கிழிய பேசும் இந்த பகுத்தறிவை குத்தகைக்கு எடுத்த 2ஜி புகழ் குடும்ப கோயிலில் காலம் காலமாக பூசாரி(பண்டார வகுப்பை) தானே பூஜை செய்து கொண்டு இருக்கிறார். முதலில் அந்த இடத்தில்… குறைந்த பட்சம் மாற்று சாதி காரனை வைத்து பூஜை நடத்தட்டும். பிறகு மற்ற கோயில்களை பற்றி விமர்சனம் செய்யட்டும்.

  பல கோடி வருமானம் கொண்ட தில்லை நடராஜர் சன்னதிக்கு சொந்தமான சொத்துகள் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே அரசாங்கத்திடம் தான் இருந்தது. ஆனால் அந்த சொத்தில் இருந்த வருமானத்தில் ஒரு ரூபாய் கூட கோயிலுக்கு அரசாங்கம் வழங்கவில்லை. உண்மை இப்படி இருக்க வழக்கம் போல திராவிட பெருச்சாளிகள் வகை வகையாக கட்டு கதைகளை எழுதி ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறது.

  ஆகம் விதிமுறைகளின் படியும் பல நீதிமன்ற தீர்ப்புகளின் படியும் கோயில் என்பது மத வழிபாட்டு தளம் அல்ல.. அது இறைவன் இருக்கும் வீடு. ஒருவர் வீடு எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்ய அரசாங்கத்திற்கு உரிமை இல்லை.

  இந்திய அரசாங்கமே ‘TRANSFER OF POWER’ என்ற அடிப்படையில் தான் இயங்கி கொண்டு இருக்கிறது. உண்மையில் எந்த RELIGIOUS DENOMINATION சமூகமும் இந்திய அரசாங்கத்திற்கு அங்கிகாரம் செய்யவில்லை. ஆக RELIGIOUS DENOMINATION சம்மந்தப்பட்ட கோயில்களில் அவர்களுடைய வழக்கத்தை மாற்ற அரசாங்கத்திற்கு தார்மீக அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட RELIGIOUS DENOMINATION மக்களுக்கு கொடுக்கப்பட்ட மத சுதந்திரத்தின் அடிப்படையிலும் எந்த உரிமையும் கிடையாது

 16. \\ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் \\

  திராவிட பெருசாளிகள் ஞான சூனியங்கள் என்பது அனைவரும் அறிந்ததே… இதை மீண்டும் இந்த நபர் நிறுபனம் செய்து உள்ளார். உடன் கட்டை ஏறுவதற்கும் ஹிந்துவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, உடன் கட்டை ஏறுதல் என்பது சில சாதி குழுக்களில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறை. இந்த வழக்கம் கூட தனிமனித விருப்பத்திற்கு ஏற்றவாறு தான் நடைபெற்றதே தவிர, வற்புறுத்தல் மூலம் நடைபெற்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

  மேலும் இந்த நடைமுறை ஆரேபிய காட்டுமிராண்டிகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பல வீரர்களின் பெண்கள் தனது மானத்தை காப்பாற்றி கொள்ள தனது உயிரை மாய்த்து கொண்டார்கள்.

  பால்ய விவாகம் என்பது உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்ட ஒன்று,. இதற்கும் ஹிந்து மதத்திற்கும் எப்படி முடிச்சு போட இயலும். ஆனால் திராவிட பெருசாளிகளால் இது சாத்தியமான ஒன்றே..

  பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும்,,, இது தான் நகை சுவையின் உச்சம்,,, மனைவியார், துணைவியார் என்று வைத்து கொண்டு இருக்கும் பகுத்தறிவு தலைவர்களை வைத்து கொண்டு இவர்கள் பேசுவது காமெடியின் உச்சம். இதில் மதத்திற்கு எந்த பங்கும் இல்லை. வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பல வனவாசிகளுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பலதார மணத்திற்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளதே… இன்றும் தமிழகத்தில் பல வனவாசிகள் இந்த முறையை கடைபிடிக்கின்றனர். ஹிந்து மதத்தை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று கேனத்தனமாக எழுதியுள்ளது நகைசுவையின் உச்சம்.

  கடைசியாக தேவதாசி முறை என்பது ஹிந்து சமூகத்தில் கடைபிடிக்கப்பட்ட ஒன்றே. கிறித்துவ மதமாற்ற வைரஸ்கள் மூலம் தவறாக திரிக்கப்பட்ட ஒன்று, அது சரி இவர்களுக்கு சொந்தமான இனாம் நிலத்தை எல்லாம் உங்கள் மானங்கெட்ட திராவிட பெருச்சாளிகள் ஏன் திருடின, இவர்களுக்கு வழங்கப்பட்ட பல ஆயிரம் கோடி நிலங்கள் என்ன ஆனது. இதை பற்றி கொஞ்சம் ஆய்வு செய்தால் இவர்கள் ஏன் தேவதாசி முறையை ஒழித்தனர், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சமுதாய உரிமைகள் ஏன் திட்டமிட்டு அழிக்கப்பட்டன் போன்ற பல உண்மைகள் வெளிவரும். கண்டிப்பாக தற்போதைய நிலவரப்படி இந்த ஊழல் 2ஜி ஊழலை கண்டிப்பாக தாண்டும்.

 17. //இந்தச்சடங்கை இந்துமதம் கடாசி விடுவது மதத்திற்கு நல்லது. இன்று இது தமிழ்ப்பார்ப்பனர் சடங்கு. அவர்கள் தங்கள் ஜாதியுணர்வைப்பெருக்கிக்கொள்ள இந்துமதச்சாயத்தை பூசிக்கொள்ள உதவுகிறது. இதை ஏன் கடாச வேண்டும்? இது போன்ற இன்ன பிற சாதிச்சடங்குகளும் களையப்பட வேண்டும். அவர்கள் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு மதச்சாயம் பூசக்கூடாது.//

  திரு. தமிழ்!! முன்னாடி தீமிதியை கடாசி விட்டனர் என்றனர். இப்போது அதையே சில பன்னாட்டு கார்பரேட் ட்ரைனிங் நிறுவனங்கள் தன்னம்பிக்கை ட்ரைனிங் என்ற பெயரில் 5000, 10000 வாங்கிக் கொண்டு தீயில் நடக்க விடுகின்றனர். கேட்டால் தன்னம்பிக்கை அதிகரிக்குமாம். வாழ்வில் மேடு பள்ளங்கள், சிக்கல்கள், இன்னல்கள் போன்ற வித விதமான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு தீயில் நடப்பது ஒரு நல்ல பயிற்சி என்று நம்மிடம் காசை கிரெடிட் கார்டில் கறந்து கல்லா கட்டுகிறார்கள்.

  இப்போது இந்த தமிழ் என்பவர் கூறுவதைப் போல் அப்படியே பூணூலைக் கடாசி விடுங்கள். நாளைக்கு வேதத்தை கடாசி விடலாம். நம்மிடையே உள்ள நல்ல விஷயங்களை வெள்ளைக்காரன் அவனின் “hi-fi paint” அடித்து, ஆங்கில சாயம் பூசி நம்மிடமே விற்பான். மானம் கெட தமிழ் போன்றோர் அப்புறம், ஜாலியாக சமதர்மம் தழைத்தது என்று பேசித் திரியலாம்.

  ”ஆவணி அவிட்டம் அன்று ஆரிய சமாஜத்திற்குச் சென்று எத்தனை ‘மனிதராக பிறந்தவர்கள் ‘ அதாவது பார்பனரல்லாதோர் பூணுல் அணிவிக்கப்பட்டனர் என்றறிந்து படங்களையும் போடுமாறு ஓராண்டுக்கு முன்னரே விண்ணப்பித்துக்கொள்கிறேன்//

  அட… நல்ல கதையா இருக்கே! நாங்க என்ன மத மாற்றிகளா? போட்டோ புடிச்சு உங்ககிட்ட குடுத்து துட்டு வாங்க? அவரவர்க்கு வருவதற்கு விருப்பம் என்று ஒன்று வேண்டும். இப்போது ஆரம்பித்துள்ள இந்த விஷயம் ஒரு நல்ல துவக்கம். வருடாவருடம் நிறைய பேர் ஆர்வமாக வருவதற்கு ஏதுவாக இருக்கும்! இவ்ளோ அக்கறையா ரிசல்ட பத்தி கேக்கற நீங்க பூணூல் போட்டுக்க போனீங்களா திரு. தமிழ்? நீங்களே போகலைனா போறவன மட்டும் விட்ரவா போறீங்க? ஏங்க பிராமணர்கள் மேல இவ்ளோ காஜி உங்களுக்கு?

 18. இந்த சடங்கை கடாசிவிடலாம் என்று தமிழ் என்ற அன்பர் கூறுகிறார். இது கருணா நிதியின் கருத்து. எல்லோருக்கும் உப நயனம் செய்விக்கப்படவேண்டும் என்பதற்கு மகாகவி வழிகாட்டினார். அப்படி செய்தால் ஹிந்துக்களிடையே ஆன்ம நேய ஒருமைப்பாடு வந்துவிடுமே என்பதால் இவர்கள் எதிர்க்கின்றனர். வேதகாலத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்ட உப நயனம் இன்றும் அனைவருக்கும் வழங்கப்படவேண்டும் என்ற ஆர்ய சமாஜத்தின் நிலை அனைவராலும் ஏற்கத்தக்கது.
  இது போன்ற சிறந்த நிகழ்ச்சிகளின் செய்தித்தொகுப்பு, புகைப்படத்தொகுப்பு ஆகியவற்றையும் தமிழ் ஹிந்து வெளியிடவேண்டும். அவை ஹிந்துமக்களிடையே எழுச்சியை உருவாக்குவதோடு ஹிந்து ஒற்றுமைக்கு எதிரானவர்களிடையே கலக்கத்தினையும் ஏற்படுத்தும்.

 19. \\\ மானம் கெட தமிழ் போன்றோர் அப்புறம், ஜாலியாக சமதர்மம் தழைத்தது என்று பேசித் திரியலாம். \\\ இவ்ளோ அக்கறையா ரிசல்ட பத்தி கேக்கற நீங்க பூணூல் போட்டுக்க போனீங்களா திரு. தமிழ்? நீங்களே போகலைனா போறவன மட்டும் விட்ரவா போறீங்க? ஏங்க பிராமணர்கள் மேல இவ்ளோ காஜி உங்களுக்கு? \\ இந்த சடங்கை கடாசிவிடலாம் என்று தமிழ் என்ற அன்பர் கூறுகிறார். இது கருணா நிதியின் கருத்து.

  பலப் பலப் பல பெயர்களில் தளம் தளமாகப் கருத்துப்பதிபவர் ப்ரகாண்ட பண்டிதரான அன்பர் தமிழ் அவர்கள். பொழுது போக்கத் தான் கருத்துப்பதிகிறேன் என்று இத்தளத்தில் தெளிவாகக் கருத்துப் பதிந்துள்ளார்.

  பொழுது போகாதவர்கள் பொழுதைப் போக்க இவருக்குப் பதிலளிக்கலாம்.

  ஸ்ரீ ப்ரசன்னா அவர்கள் இந்த தளத்தில் தமிழ் என்ற அன்பர் ஜோ என்ற பெயரில் பதிந்துள்ள கருத்துக்கள்…..இவர் ஸ்ரீமான் கந்தர்வன் மற்றும் ஸ்ரீமான் சாரங்க் அவர்களுடன் *சிரி* வைணவம் என்று கிண்டலடித்து எழுதிய விஷயங்களையும் கந்தர்வன் மற்றும் சாரங்க் போன்றோர் *ஸ்ரீ* வைஷ்ணவ சம்ப்ரதாயம் மற்றும் தமிழ் இலக்கணம் இத்யாதியெல்லாம் இவருக்குப் போதித்துள்ளதைப் பார்த்தால் இந்த அன்பர் அவர்களைப் பற்றி விகஸிதமாக அறியலாம். குறிப்பாக இந்த அன்பர் க்றைஸ்தவ தள் அன்பர்களுடன் நிகழ்த்திய உரையாடல்.

  இந்த அன்பர் பலப் பல பெயர்களில் ஒளிந்து கொண்டு கருத்துப் பதியினும் அனைத்துப் பெயர்களிலும் காணப்படும் ஒற்றுமை இவரது ஜபர்தஸ்தியான தமிங்கில நடை. மட்டற்ற ஆப்ரஹாமிய ப்ரேமை. ப்ராம்மணத்வேஷம். இத்யாதி. ஸ்ரீமான் சிவஸ்ரீ அவர்களுக்கு இதெல்லாம் முன்னமே தெரிந்திருக்கலாம். ஸ்ரீ ப்ரசன்னா அவர்கள் மேற்கண்ட உரையாடல்களைத் தளத்தில் தேடினால் அன்பர் தமிழ் அவர்களது கருத்துக்களைப் பற்றி அறியலாம். ஒருமுறை இந்த விஷயங்களைத் தொகுத்து ஒரு உத்தரத்தில் கொடுத்துள்ளேன். தேவையானால் மீண்டும் அதைத் தேடிக் கொடுக்கிறேன்.

  \\ இந்தச்சடங்கை இந்துமதம் கடாசி விடுவது மதத்திற்கு நல்லது.\\

  பொடி வைத்துள்ளார்.

  இந்தச்சடங்கை இந்துமதம் கடாசி விடுவது ———- மதத்திற்கு நல்லது என்று டேஷை சைலண்டாக வைத்துள்ளார். இந்த அன்பரின் ஆப்ரஹாமிய ப்ரேமைக் கருத்துக்களை வாசித்தால் டேஷை பூர்த்தி செய்யலாம்.

  அவ்வளவு தான் விஷயம்.

 20. அன்பர் தமிழ் அவர்கள் பல பெயர்களில் ஒளிந்து கொண்டு எழுதும் போக்கை நான் வெளிப்படியாகக் குறை கூறியுள்ளேன். திண்ணை தளத்தில் தள நிர்வாகிகள் பல பெயர்களில் உத்தரங்களைப் பகிர்வதைச் சுட்டிக்காட்டி அவ்வாறு செய்யக்கூடாது என்று கருத்துப் பதிந்துள்ளனர்.

  அன்பர் அவர்கள் தன் நிலைப்பாடு சரி என்ற கருத்துக்கொண்டவர். மற்றைய பலர் இந்த நிலைப்பாட்டை ஒப்புக்கொள்வதில்லை.

  இது சம்பந்தமாக சுவையான விவாதம் சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் இந்த உரலில் பார்க்கவும்.

  https://siliconshelf.wordpress.com/2011/11/21/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/

  பின்னும் விவாதத்தின் gist :-

  jeyamohan :

  ருத்ரா காவ்யா என்றெல்லாம் பலவேசமாகி வரும் அண்ணன் இணைய வடிவேலு பேராசிரியர் பரமசிவம் அவர்களுக்கு ஜே…

  RV

  ஜெயமோகன், // ருத்ரா காவ்யா என்றெல்லாம் பலவேசமாகி வரும் அண்ணன் இணைய வடிவேலு பேராசிரியர் பரமசிவம் அவர்களுக்கு ஜே… // இந்த மாதிரி சின்னதாக hint கொடுத்தால் என்னை மாதிரி ஆட்களுக்கு எப்படி சார் புரியும்?

  Kavya (அன்பர் அவர்கள் ஒளிந்து கொள்ளும் மற்றொரு பெயர்)

  In writing in blogs, internets, I am very happy to deceive people. When will they just read the views for comments, instead the persons who wrote them If the views are written unanimously, they will just read them, dont they? I think the wild goose chase may have give some thrills to them. If so, good. It is a pity a person who is called as an eminent writer in modern Tamil scene descends to rummage the bio data of the commenter, cleverly side stepping the comments themselves. I could never know why people do that !

  virutcham

  RV ரொம்ப சுலபாமாக நீங்கள் புரிந்து கொள்ள – பல தளங்களில் கட்டுரைகளின் போக்கை தனது பின்னூட்டக் கட்டுரைகளால் மாற்றியதால் எதிர்வினையாற்றியே ஓய்ந்து விட்டவர்களால் தாங்கமாட்டது மட்டறுக்கப்பட்டதால் காவ்யாவாகி விட்ட திருவாளர் ஜோ .

  இதற்கு ஒரு பக்க பின்னூட்டக் கட்டுரை காத்திருக்கிறது. உங்கள் பொறுமைக்கு பாராட்டுக்கள்

  Kavya

  Views, not the viewer, is of paramount importance;
  and comments on the views will enliven the debate in any blog,
  least of all in this blog which is well known for worthy debates; and, alas!
  comments on the commenter will drag the blog into the pit of petty mindedness.

  Virutcham, these are my further comments in Just 5 sprung lines but 1 sentence only. :-

  virutcham

  கருத்துக்கள் தான் முக்கியம். கருத்தை சொல்பவர்கள் கருத்தின் மேல் சவாரி செய்யும் போது தான் கருத்து சொல்வது யார் என்று பார்க்கப்படுகிறது.
  பெயர் மாற்றங்கள் செய்தாலும் குறிப்பிட்ட கருத்துகளின் மேலேயே
  பயணம் செய்வதால் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது.

 21. வேதங்கள் என்பவை நூல்கள்; சொற்கள்; அவற்றை ஓதுவதும் கூட ஒரு ஜாதியினர்தான் செய்ய வேண்டுமென்றே இருந்தது. திருமழியிசையாழ்வார் வந்த போது வேதம் ஓதிக்கொண்டிருந்த பிராமணர்கள் நிறுத்திவிட்டார்கள். ஒரு தலித்து – எவ்வளவுதான் உயரிய ஆன்மிக நிலையிலிருந்தாலும் – அவன் காதில் வேத ஒலி விழக்கூடாதென்பதற்காக. இல்லையா?

  இன்று அப்படி யாரும் செய்யவில்லை. வேதத்தை பார்ப்பன்ர்களே ஓதி யாகம் நடாத்தினாலும் அங்கு குzhumiயிருப்பவர் என்ன ஜாதியினர் என்று எவரும் சட்டை செய்வதில்லை.

  இப்படி பலபல சடங்குகள் மாற்றப்பட்டன. இந்துமதம் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை.

  இந்த பூணூல் சடங்கு எவ்வளவுதான் உயர்ந்த தத்துவங்களின் அடிப்படையைக் கொண்டிருந்தாலும் அதை ஒரே ஒரு ஜாதியினர் மட்டுமே கடைபிடிக்கின்றார்கள். அவர்கள் நோக்கம் தாங்கள் இன்ன ஜாதியினர் என்ற உணர்வை பெருக்கிக்கொள்ளவே. மேற்சொன்ன தத்துவ அடிப்படைகள் இருக்கின்றன என்பதற்காக அன்று. பார்ப்பன ஜாதியினர் மண அழைப்பிதழ் மாதிரி உபனயனச்சடங்கு அச்சடித்து அவர்கள் உற்றார் உறவினருக்கு மட்டுமே தெரியப்படுத்தி இச்சடங்கைச்செய்கின்றனர். வேறேந்த நோக்கமுமிருப்பதாக தெரியவில்லை எனக்கு. இதோடு மட்டுமன்று; சங்கங்களில் பலகைகளில் தமிழ் ஹிந்து காமில் போட்ட மாதிரி போடுவார்கள். ஒரே ஒரு வேறுபாடு. அங்கு அவர்கள் இச்சடங்கில் கலந்து கொள்ளும் பிராமணக்குடும்பங்கள்….என்று தொடங்குவார்கள். இவ்வறிப்ப்பை எல்லா மககளும் படிப்பர். தமிழ்ச்சங்கங்களில் காணலாம். கல்கி, கலைமகள், மங்கையர் மலர் போன்ற பத்திர்க்கைகளிலும் இப்படிப்பட்ட அறிவுப்புகள் வரும்.

  இச்சடங்கு இந்துமதச்சடங்குமாக விருப்பதால்தான் நாம் கவலை கொள்ளவேண்டியதாகிறது. வெறும் ஜாதிச்சடங்குக்ள பிற்ரும் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை மாபெரும் இந்துமதத்தத்துவ அடிப்படியில் செய்கிறோம் என்று சொல்லி நான் கேள்விப்படவில்லை.

  ஏன் கவலை கொள்ளவேண்டியதாகிறது? இதன் சமூக விளைவுகளுக்காகத்தான். அட போப்பா இந்து மதம் ஒரு பார்ப்பன மதம். அவர்களுக்குத்தான்.நமக்கென்ன நாம் வேறிடம் பார்ப்போம் என பிறர் விலக வேண்டியதாகிற்து. மேலும் இதை இந்து மத விரோதிகள் தாராளமாக சுட்டிக்காட்டி எங்களிடம் வாருங்கள். சாதிவாரியாக சடங்குகள் இங்கு கிடையா. எல்லாருமே தாடி வைக்கலாம். குல்லா போடலாம். இன்ன் சாதிதான் என்று எம்மிடம் கிடையாது. என்று தாராளமாக சொல்லலாம்.

  எனவே இசசாதிச்சட்ங்கால் இந்து மதத்துக்கு இன்றைய தினம் தீமையே தவிர நன்மையில்லை. பார்ப்ப்னர்கள் க்டாசி விடுங்கள் எனச்சொல்ல எவராலும் முடியாது. அவர்கள் சாதிச்சடங்கு என விட்டுவிடுவார்கள்.

  இந்துமதத்தை வளர்க்க நினைபோர் – அவர் எவராக இருந்தாலும் – இச்சடங்குக்கு விளம்பரம் இந்து மதம் என்ற போர்வையில் கொடுக்ககூடாது என்பதுதான் என் வாதம்.

 22. மிக்க நன்றி திரு. கிருஷ்ணகுமார் அவர்களே!

  //பொழுது போகாதவர்கள் பொழுதைப் போக்க இவருக்குப் பதிலளிக்கலாம்.//இவருக்கெல்லாம் பதிலளிப்பது நேரவிரயம் என்று சும்மா இருந்து விட்டால், இவரின் கருத்தின் தீமையை நாம் எதிர்க்க வேண்டாம் என்று விட்டு விட்டதாக ஆகுமே என்று தான் பதிலளித்தேன்! இவர்களைப் போன்றவர்கள் தான் சொந்த நாட்டையே காட்டிக் கொடுக்கத் தயங்காதவர்களை உரம் போட்டு வலுப்படுத்துகிறார்கள். பார்ப்பனீயத்தை ஒழித்து விட்டால் தான் ஹிந்து மக்களில் பதில் கேள்வி கேட்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்ற மனக்கணக்கில் விளையாடிப் பார்க்கிறார்கள். நாம் இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் அது பெரிய தீமையில் கொண்டு விடும் அபாயமுள்ளது என்பது என் கருத்து. பூணூல் போட்டுக் கொள்கிறவர்களையும் கெடுக்கும் கயமை இவர்களிடத்தில் ஒளிந்து கொண்டுள்ளது! இவரைப் போன்றோர்கள் பரப்பும் கருத்துக்களின் தீமையை நாம் எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டியது அவசியமாகிறது!

  இவரின் தீய கருத்துக்களை நாம் எதிர்ப்பது ஹிந்து மத மேன்மைக்கு நல்லது என்பது ஒருபுறம் இருக்க, ஒட்டுமொத்த மனித குலத்துக்கே நன்மையை விளைவிக்கும்!

 23. //சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீக்ஷிதர்கள் தவிர வேறு பார்ப்பனர்கள் பூஜை செய்ய முடியாது. அதே போல சிவாச்சாரியார்கள் பூஜை செய்யும் கோயில்களில் பட்டாச்சாரியார்கள் பூஜை செய்ய முடியாது. பட்டாச்சாரியார்கள் பூஜை செய்யும் வைணவ கோயில்களில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்யமுடியாது. இதனை போலவே திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை செய்யும் உரிமை ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மலையாள பிராமணருக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அங்கும் பிற பார்ப்பனர்கள் பூஜை செய்ய முடியாது. திருப்பெருந்துறை மாணிக்க வாசகர் கோயிலிலும் ஒரு குறிப்பிட்ட பார்ப்பன பிரிவினர் மட்டுமே பூஜை செய்ய முடியும். உண்மை நிலை இப்படி இருக்க , பார்ப்பனர்கள் மட்டும் எல்லா கோயிலிலும் பூஜை செய்யமுடியும் என்றும் மற்ற சாதியினருக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்பது முழு தவறு. இது சாதி சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. வழக்கம் ( custom ) சம்பந்தப்பட்ட விஷயம்.//

  மேற்கூறிய பதிலில் உடன்பாடு இல்லாதவர்கள் திமுக தலைவர் பதவிக்கு கருணாநிதிக்குப் பின்னர் ஏன் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத, வாரிசுகளில் ஒருவர் அல்லாத, ஒரு தனிமனிதன் வரக்கூடாது என்ற கேள்விக்கு விடையளித்து விட்டு பதில் கேட்க வரட்டும். காங்கிரஸ் தலைமைப் பதவியை சோனியாவிற்குப் பிறகு ராகுல் எவ்வளவு தான் தகுயில்லாதவராக இருந்தாலும் அவருக்குத் தாரை வார்க்க விரும்பும் ஆட்கள் மாறுவார்களா? ஆட்சியில் அமர்ந்து சுகத்தைக் கண்டார்கள் விட்டுக் கொடுப்பார்களா? இப்போது உள்ள போப் ஆண்டவர் பதவியை ஒரு மதம் மாறிய தமிழக மீனவனுக்குக் கொடுப்பார்களா? ஏன் வேறு தகுதியான ஆட்களே இல்லையா? கோவில் பூஜையை பரம்பரை பரம்பரையாக செய்பவனை மட்டும் அவ்விடத்தை விட்டுத் துரத்தப் பார்த்தால் அவன் மட்டும் விட்டு விட்டு வேறு வேலைக்குப் போக வேண்டுமா?

  //இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.//

  தீண்டாமை என்பது வேறு! ஆச்சாரம் என்பது வேறு! அர்ச்சகர் உம்மைக் கருவறையில் வைத்துக் கட்டிகொண்டால் உம் தீண்டாமை எண்ணம் விலகி விடுமா? கருவறையினில் உள்ள அர்ச்சகர்கள் பார்ப்பனர்களையும் தான் தொடுவதில்லை. எப்படி ஒரு தாயின் வயிற்றில் கர்ப்பத்தில் சிசு வளர்கிறதோ, அந்த கர்ப்பவதியை மிகவும் கவனமாக சுத்தமான முறையில் பாதுகாக்கின்றோமோ அது போல கர்ப்பக்ரகத்தின் உள்ளே இருக்கும் தெய்வச் சிலையின் மீதிருந்து வெளிப்படும் சக்தியின் வீச்சைப் பாதுகாக்க சுத்தம் என்பது அவசியமாகிறது. அடியேனின் சிற்றறிவுக்கெட்டிய வரையில் இது தான் காரணம். விவரம் தெரிந்தவர்கள் பதிலளித்து உதவலாம்.

  இதே தமிழ் ஹிந்து தளத்தில் பெரியவர் திரு. சுப்பு அவர்கள் எழுதிய போக போகத் தெரியும் பாகம் 4 ஐ படித்துப் பாருங்கள். ஓரளவிற்கு தெளிவு கிட்டும்.

 24. ஸ்ரீ ப்ரசன்னா, நீங்கள் சொல்வது சரி தான்.

  அன்பர் தமிழ் அவர்களுடைய குதர்க்கமான கருத்தை மறுதலிப்பது என்ற படிக்கு மட்டிலும் இது சாத்யம்.

  அன்பர் தமிழ் அவர்கள் மிக விரிவான வாசிப்பனுபவம் உடையவர் என நான் அறிகிறேன். அதை நான் மதிக்கிறேன்.

  ஆயினும் அன்பர் அவர்கள் வாதம் செய்யும் முறை மிகவும் பிழை பொருந்தியது. தவறான வாதங்களை பாரதீய ந்யாய சாஸ்த்ரத்தில் கு-தர்க்கம், சுஷ்கதர்க்கம், விதண்டாவாதம் என்றெல்லாமும் வாதங்களில் உள்ள பொருந்தா ந்யாயங்களை பற்பல தோஷங்களாலும் சுட்டுவர். இதையே மேற்கத்திய ந்யாய சாஸ்த்ரத்தில் Fallacies என்று குறிப்பிடுவர்.

  Red herring, Argumentum adhominem – போன்ற Fallacies – மற்றும் விதவிதமான Fallacies க்கு அன்பர் அவர்களின் வாதங்களிலிருந்து உதாஹரணங்கள் கொடுக்க இயலும். அன்பர் அவர்கள் எந்தப் பெயர் தாங்கினாலும் எடுத்தாளும் வாதப்பிறழ்வு முறைகள் அவரைத் தொடர்ந்து வருகின்றன. பெயர் மாறினாலும் வாஸனா க்ஷயம் ஆவதில்லையே.

  திண்ணை தளத்தில் அன்பர் அவர்களுக்கு (காவ்யா என்ற பெயரில் நினைவு) அவர் வாதத்தில் உள்ள அபத்தத்தை முறையாக Western Logic மற்றும் Indian Logic இவற்றின் பால பாடங்களை எடுத்து உதாஹரணங்கள் கொடுத்து தெளிவு செய்தது நினைவுக்கு வருகிறது.

  ஆனால் கோலத்தில் பாய்ந்தால் தடுக்கில் பாயும் endless meaning less வாதங்கள் சலிப்பையே அளிக்கும்.

  இதைத் தான் வ்ருக்ஷம் அவர்கள் சொல்லியுள்ளமை,

  \\\ பல தளங்களில் கட்டுரைகளின் போக்கை தனது பின்னூட்டக் கட்டுரைகளால் மாற்றியதால் எதிர்வினையாற்றியே ஓய்ந்து விட்டவர்களால் தாங்கமாட்டது மட்டறுக்கப்பட்டதால் காவ்யாவாகி விட்ட திருவாளர் ஜோ .\\\

  பின்னும் அன்பர் தமிழ் அவர்கள் இங்கு பதிந்துள்ள சில கருத்துக்களில் உள்ள அடிப்படைப்பிழை இன்னமும் சுட்டப்படவில்லை. அதை சுட்டுதல் என்ற படிக்கு எனது அடுத்த உத்தரம்.

 25. அன்பின் தமிழ் அவர்களது கருத்துக்களில் பிழை பொருந்தியவை :-

  \\\ ஆவணி அவிட்டம் அன்று ஆரிய சமாஜத்திற்குச் சென்று எத்தனை ‘மனிதராக பிறந்தவர்கள் ‘ அதாவது பார்பனரல்லாதோர் \\\

  இதன் மூலம் அன்பர் தமிழ் அவர்கள் சுட்ட விழைவது பார்ப்பனர்கள் என்பவர் மனிதரே இல்லை. இது மட்டற்ற த்வேஷத்தின் பாற்பட்ட கருத்து. இது அன்பர் அவர்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.

  ஆனால் ஹிந்து ஒருங்கிணைப்பு என்பது இந்த தளதின் குறிக்கோள். அதை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் விதந்தோதுவது தளத்தின் செயல்முறை.

  ஹிந்து சமூஹத்தின் நலன் விழைபவர் வெறும் த்வேஷத்தை மட்டிலும் அடித்தளமாகக்கொண்டு satereotyping இல் இறங்கவொண்ணார் என்பது விஷயம். அப்படி இறங்குவது வெளிப்படையான முரண். அப்படி இறங்கவும் செய்து ஹிந்து சமூஹத்தின் நலன் விழைதல் என்றும் சொல்லுதல் ஹாஸ்யம் பொருந்திய முரண்.

  ஸ்ரீமான் ப்ரசன்னா அவர்கள்,

  \\\ பார்ப்பனீயத்தை ஒழித்து விட்டால் தான் ஹிந்து மக்களில் பதில் கேள்வி கேட்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்ற மனக்கணக்கில் விளையாடிப் பார்க்கிறார்கள். \\

  என அன்பர் தமிழ் அவர்களது கருத்தை பார்ப்பனீயத்தை ஒழிப்பது என்பதாக அவதானித்துள்ளார். ஆனால் அன்பர் தமிழோவெனில் பார்ப்பனீயத்தைச் சாடுவது என்று கூட இல்லாது….. மாறாக பார்ப்பனர்கள் மனிதர்களே இல்லை என்ற படிக்கு த்வேஷமிக அவதானித்ததை கவனிக்கவும்.

  \\\\ இந்தச்சடங்கை இந்துமதம் கடாசி விடுவது மதத்திற்கு நல்லது. இன்று இது தமிழ்ப்பார்ப்பனர் சடங்கு. \\\

  பற்பல பிழைகள் பொருந்திய சாரமில்லா கருத்து மேற்கண்ட கருத்து.

  முதலில் தமிழ்ப்பார்ப்பனர் சடங்கு என்பது சிறிதேனும் தமிழகத்தில் புழங்கும் சடங்கு பற்றிய புரிதல் இல்லாமல் பகிரப்பட்ட விஷயம். தமிழகத்தில் பார்ப்பனர்களைத் தவிர செட்டியார் என்ற ஜாதியிலும் பற்பல பிரிவினர் இந்த சடங்கை ஒழுகுகின்றனர். பற்பல ஜாதிகளில் விசேஷங்களின் போது பூணூல் அணிதலும் வழக்கில் உண்டு.

  அன்பர் தமிழ் அவர்கள் குறைந்த பக்ஷம் பகிரப்பட்ட உத்தரங்களை பொறுமையுடன் வாசித்திருந்தால்………

  பழுத்த அனுபவசாலியான ஸ்ரீ முத்துக்குமாரசாமி மஹாசயர் அவர்கள் பகிர்ந்த கருத்தான,

  \\\\ மதுரையாதீனத்துச் சம்பிரதாயத்தில் ( ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகப் பரமாச்சாரிய சுவாமிகள் வரை) விசேட தீக்கை பெற்று சிவபூசையும் திருமுறை பாராயணமும் மேற்கொண்டவர்கள் முப்புரி அணிவிக்கப் பெற்றனர். சிவபூசை செய்யும்போது பூணூல் அணிந்து மற்றையபோது பெட்டகத்தில் வைத்துவிடுவர். \\\\

  கருத்தை வாசித்திருக்கலாம்.

  ஆக இச்சடங்கு தமிழ்ப்பார்ப்பனர் சடங்கு என்பது சாரமில்லா பிழை பொருந்திய கருத்து.

  ஹிந்து மதம் என்பது மிகப்பெரிய ஆலவ்ருக்ஷம். இதில் ஒரு தனிப்பட்ட வாழ்முறை என்பது என்றும் என்றென்றும் ஒட்டு மொத்த சமூஹத்தின் வாழ்முறையாக இருந்ததில்லை. இப்போதும் இருக்கவும் இல்லை. நாளை இருக்கவும் இருக்காது. இதுவே இந்த சமூஹத்தின் பெருமை சார் அடையாளம்.

  அன்பர் தமிழ் அவர்கள் ஆப்ரஹாமிய ப்ரேமையின் விளைவாக ஹிந்து மதத்தையும் ஒரு நூல் ஒரு தேவன் ஒருமுறையின் படி நோக்க முனைந்ததின் பிறழ் மேற்கண்ட சாரமில்லாக் கருத்து.

  வேதமோத விழைபவர்களுக்கு அதற்கு வேண்டியோ அல்லது ஹிந்து மதத்தின் விவித சம்ப்ரதாயங்களில் ஒரு அங்கமாகவோ பூணூல் எனும் யக்ஞோபவீதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம் ஆசார்யா அவர்கள் அத்யக்ஷகராய் இருக்கும் ஹரித்வாரத்தைச் சார்ந்த காயத்ரி பரிவார் என்ற அமைப்பில் காயத்ரி மந்த்ரத்தை ஓத விரும்புபவர்களுக்கு எந்த ஜாதியைச் சார்ந்தாலும் ஆணானாலும் பெண்ணானாலும் பூணூல் அணிவிக்கப்படுகிறது. ஆர்ய சமாஜத்தைச் சார்ந்தவர்களுக்கு சமாஜ விதிப்படி ஒழுகவேண்டி பூணூல் அணிவிக்கப்படுகிறது. ISKCON எனும் ஹரே க்ருஷ்ண இயக்கத்தைச் சார்ந்த அன்பர்களுக்கு புவன முழுதும் இயக்க விதிமுறைகள் பாற்பட்டு தீக்ஷையின் அங்கமாக பூணூல் அணிவிக்கப்படுகிறது. இத்தனைக்கும் சைதன்ய மஹாப்ரபு காலத்திலிருந்து ஸ்ரீ பக்திவேதாந்த ப்ரபுபாதர் காலம் வரை இந்த சம்ஸ்காரம் இயக்கத்தில் இல்லை என அறிகிறேன். தவறானால் விபரம் தெரிந்தவர்கள் பிழை திருத்தவும். ஸ்ரீல ப்ரபுபாதர் காலத்தில் இந்த சம்ஸ்காரம் நடைமுறையில் வந்துள்ளது. இந்த விபரங்கள் அன்பர் தமிழ் அவர்கள் சொல்லிய கருத்தான —- பூணூல் சடங்கு தமிழ்ப் பார்ப்பனருக்கான சடங்கு என்பது பிழை பொருந்திய கருத்து என்பதைச் சுட்டுகிறது.

 26. பூணூல் அணியமலும் கூட இறையறிதலை அனுபவித்தல் சாத்யமே என்பதே சாரமான கருத்து.

  ஆதிசங்கரருடைய பாஷ்யத்தில் ஞானமடைந்தவர்களாகச் சொல்லப்படும் தர்மவ்யாதர் என்ற கசாப்பு வ்யாபாரி, கார்கி போன்ற நாரீமணிகள் பூணூல் அணியாதே ஞானமடைந்தவர்கள் தாம்.

  அறுபத்துமூவரில் எத்தனையோ நாயன்மார்களும் பன்னிரு ஆழ்வார்களில் பல ஆழ்வார்களும் பக்தி சம்ப்ரதாயத்தில் கபீர்தாஸர் அவர்தம் மகனாகிய கமால் மற்றும் பரம பாகவதோத்தமர்களான ரஹீம், ரஸ்கான், கண்ணனிடம் ப்ரேமை கொண்ட ஹமீதா ஹஸீனா தோழிகள்……போன்றோருக்கு இறையறிதலுக்கு பூணூல் அவசியமாக இருக்கவில்லை என்பது மட்டிலும் சாரமான விஷயமன்று…….பூணூல் அணிந்த பலராலும் வணங்கப்படுபவர்கள் இவர்கள் என்பதும் நோக்கத் தகுந்தது.

  பூணூல் சம்ஸ்காரம் என்பது பற்பல இயக்கத்தினரால் பற்பல காரணங்களுக்காக விதிக்கப்படுகின்றது.

  இந்த சம்ஸ்காரம் ஆப்ரஹாமிய முறைப்பாடுகளின் படி வ்யாபார யுக்தியாக எந்த இயக்கத்தினராலும் மேற்கொள்ளப்படுவதில்லை. மீளா நரகம் என்பது போன்ற ஆப்ரஹாமிய பயமுறுத்தல் முறைப்படி திணிக்கப்படுவதும் இல்லை. இயக்க வழிமுறைகளை மேற்கொள்ள விழையும் அன்பர்களுக்கு ஒரு வழியாக மட்டிலும் காண்பிக்கப்படுகிறது. அந்தந்த இயக்க வழிமுறைகளை ஏற்பவர்கள் அந்த வழிமுறைகளை மேற்கொள்ளலாம். அப்படி ஏற்காதவர்களுக்கு ஹிந்துமதம், மாறான எண்ணிறந்த வழிமுறைகளைத் தன்வசம் கொண்டுள்ளது என்பது ச்லாகிக்கத் தக்கது.

  ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயர் தன் உத்தரத்தில் பகிர்ந்தபடி,

  \\\ பூணூலுக்கும் வேத நெறி வாழ்வுக்கும் இன்று என்ன சம்பந்தம்…? \\\

  என்பது ஆழமான கருத்து. பூணூல் அணியாதோரும் வேத நெறிப்படி வாழ இயலும் என்பதனை மறுக்கவே இயலாது. மேற்சொன்ன பற்பல ஞானிகள் மற்றும் பக்தர்களின் சரித்ரங்கள் இதற்குச் சான்று.

 27. ஹிந்து என்று சொல்லடா இறுமாந்து நில்லடா

  கடல் அலையை தடுக்க முடியமா ஹிந்து மதத்தை அழிக்க முடியமா

 28. திரு தமிழ் அவர்களே,

  //வேதங்கள் என்பவை நூல்கள்; சொற்கள்; அவற்றை ஓதுவதும் கூட ஒரு ஜாதியினர்தான் செய்ய வேண்டுமென்றே இருந்தது. திருமழியிசையாழ்வார் வந்த போது வேதம் ஓதிக்கொண்டிருந்த பிராமணர்கள் நிறுத்திவிட்டார்கள். ஒரு தலித்து – எவ்வளவுதான் உயரிய ஆன்மிக நிலையிலிருந்தாலும் – அவன் காதில் வேத ஒலி விழக்கூடாதென்பதற்காக. இல்லையா?

  இன்று அப்படி யாரும் செய்யவில்லை. வேதத்தை பார்ப்பன்ர்களே ஓதி யாகம் நடாத்தினாலும் அங்கு குzhumiயிருப்பவர் என்ன ஜாதியினர் என்று எவரும் சட்டை செய்வதில்லை.

  இப்படி பலபல சடங்குகள் மாற்றப்பட்டன. இந்துமதம் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை.//

  கெட்டுத்தான் போய் விட்டது ஐயா. அப்படிக் கெடாமல் இருந்திருந்தால் இன்று மூடப் பழக்கங்களேல்லாம் ஹிந்து சமுதாயம் தான் ஊட்டி வளர்த்தது என்ற பொய்ப்ரசாரம் எடுபடாமல் போயிருக்கும். ஒரு காலத்தில் நான்கு வருணத்தவருமே பூணூல் அணிந்திருந்தனர் என்பது மறைக்கப்பட்டு ஏதோ பிராமணர்களுக்கு மட்டுமே உண்டான பழக்கமாகத் திரிக்கப்பட்டிருக்காது.

  கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை தொடரவும். இந்த தளம் ஒரு பெரிய ஆலவிருட்சம். ஒவொரு கிளையும், விழுதுகளும் தகவல்களை அள்ளித் தருகின்றன. இதன் 70வது அத்தியாயத்தில் ஒரு பத்தி வருகிறது. அது ஒன்று போதும்.
  //மக்கள் வகை ஏழு என்று

  சொல்லும் புறத்திணை இயல் 74 ஆவது சூத்திரத்தில்

  பல விவரங்கள் புதைந்துள்ளன. (பகுதி 61).

  அந்தச் சூத்திரத்தைப் படித்து விட்டு,

  பார்ப்பனன் முதலான நான்கு வர்ணங்கள் மட்டுமே இருந்தனர்

  என்று திராவிட போதை கொண்டவர்கள் நினைக்கின்றனர்.

  அதே சூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள

  அறிவன், தாபதர், பொருநர்

  என்னும் வகைகளையும் சேர்த்தே

  ”அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்

  தொகை நிலை பெற்றது என்மனார் புலவர்”

  என்று தொல்காப்பியம் சொல்வதை

  ஏனோ அவர்கள் பார்க்க விரும்பவில்லை.

  அவர்கள் பார்த்தார்கள் என்றால்

  இந்த வகைகள் எந்த அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டன

  என்ற விவரம் புலனாகி இருக்கும்.

  உயர்வு- தாழ்வு என்ற அடிப்படையிலோ,

  பிறப்பு அடிப்படையிலோ

  நம் முன்னோர்கள் இந்த வகைகளை உண்டாக்கவில்லை.//

  கீழுள்ள இணைப்பில் ஒரு இடுகையில் இந்தத் தொடரின் ஆசிரியர் கூறுவது என்னவெனில் அவரின் ஆராய்ச்சியில் தெரியவந்தது நால்வருணத்தவருமே பூணூல் அணிந்திருந்தனர் என்பது தான். அதைச் சுட்டத்தான் நானும் இதை தங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். நேரம் இருந்தால் பொறுமையாக படிக்கவும்.

  https://thamizhan-thiravidana.blogspot.co.uk/2011/12/blog-post.html

 29. அன்புள்ள பிரசன்னா சுந்தர்,

  நால் வருணத்தார் பிறவி அடிப்படையில் உருவாக்கப்படவில்லை. தொழில் திறன் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டனர். மேலும் சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி பார்ப்பன சாதியை சேராத வேற்று சாதி ஆண்மகனை மணந்ததாக புராணம் கூறுகிறது. அதாவது சாதிக்கலப்பு திருமணத்துக்கு அந்த காலத்தில் தடை எதுவும் இருக்கவில்லை. மேலும் பெண்கள் சுயம்வர அடிப்படையில் தங்கள் கணவர் யார் என்பதை தீர்மானம் செய்து முடிவெடுத்தனர். அந்த நாலு வர்ணம் போகட்டும், இன்று UPSC / SSC / மற்றும் TNPSC / ஆகிய அமைப்புக்கள் மூலம் ஆட்களை அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கும்போது , சுமார் 700 சாதிகளின் பெயர்களை FC/BC/OBC/MBC/DNT/SC / ST என்ற பெயர்களில் வகைப்படுத்தியுள்ளனரே, இந்த சாதிகளை யார் உருவாக்கியது. இந்த சாதிகளை நிச்சயம் மதம் உருவாக்கவில்லை – சமுதாயமே உருவாக்கிய பிரிவுகள் தான் இவை. தமிழ் நாட்டில் அதிக சாதிகளை உருவாக்கியவை திராவிட இயக்கங்களே. வெள்ளையர் ஆட்சியில் வெளியிடப்பட்ட பழைய மாவட்ட ஆவணங்களை பார்த்தால், சுதந்திரத்துக்கு முன்பு இருந்ததைவிட , சுதந்திரத்துக்கு பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய சாதிகள் முளைத்து, FC இலிருந்து BC , BC இலிருந்து OBC/MBC, அல்லது MBC – இலிருந்து SC /ST – என்று கால் முளைத்து பயணம் செய்வதையும் , ஒவ்வொருவரையும் மேலும் அதிக விழுக்காடு ரிசர்வேஷன் வேண்டும் என்ற கூக்குரலையும் கேட்கலாம்.

  இணைய தளத்தில் ஒரு இஸ்லாமிய பிரச்சாரகர் சாதியை ஒழிக்க இஸ்லாத்துக்கு வந்து விடுங்கள் அப்போதுதான் சாதியை ஒழிக்க முடியும் என்று பொய்யான புனைபெயர்களில் கூவி அழைப்பதை காண்கிறேன். அங்கோ இஸ்லாத்தில், ஷியாக்களையும், அகமதியாக்களையும், சுபிக்களையும் தினசரி வேட்டையாடி , கொன்று குவித்து வருகிறார்கள். எனவே, சாதி ஒழிப்பு என்பது , திராவிட இயக்கங்கள் இருக்கும்வரை சாத்தியம் இல்லை தமிழ் நாட்டில். சாதிகளை அடை காத்துவருவது போலிப்பகுத்தறிவு வாதிகளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *