இந்தியப் பாராளுமன்றத்தில் அடித்துக் கொள்வார்கள், சட்டையைக் கிழித்துக் கொள்வார்கள், கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொள்வார்கள், மைக்கால் அடிப்பார்கள், பேப்பர் வெயிட்டுகளை எறிவார்கள் ராக்கெட் விடுவார்கள், சட்டசபைகளில் வேட்டிகளைக் கிழிப்பார்கள், புடவையைப் பிடித்து இழுப்பார்கள், அசிங்கமாக ஏசுவார்கள், விட்டால் ரேப் செய்யக் கூட முயல்வார்கள். பாராளுமன்றம் என்றைக்காவது கூச்சல் குழப்பம் இல்லாமல் ஒழுங்காக நடந்திருக்குமா என்பதே சந்தேகம் தான். நான் இந்திய பாராளுமன்றம் நடக்கும் பொழுது பார்க்கப் போன நேரத்தில் எந்தவிதமான சண்டை சச்சரவுகளும் இல்லாமல் அமைதியாக நடந்தது ஏனென்றால் சபையில் மொத்தமே எண்ணி 20 பேர்கள்தான் இருந்தார்கள் அதில் பாதிப் பேர்கள் குறட்டை விட்டுத் தூங்க மீதி பேர்கள் தியானத்தில் இருந்தார்கள். என்ன சண்டை போட்டாலும் சட்டம், பட்ஜெட் எல்லாம் யாருக்கும் தெரியாமல் நிறைவேறி விட்டதாகச் சொல்லி விடுவார்கள். ஓட்டுடெடுப்புத் தேவையானால் அதற்கும் ஆளைப் பிடித்து சிபியை ஏவியோ காசு கொடுத்தோ கேசை வாபஸ் வாங்கியோ எப்படியோ சட்டங்களை நிறைவேற்றி விடுகிறார்கள். சண்டை போட்டுக் கொள்வதினால் நாடு ஸ்தம்பித்து நிற்பதில்லை அது அது பாட்டுக்கு நாளொரு ஊழலும் பொழுதொரு சலுகையுமாக ஜோராக நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கோட்டு சூட்டுப் போட்டுக் கொண்டு கனவான்களாக வந்து மைக்கைப் பிடித்து விடாமல் பத்து மணி நேரம் 20 மணி நேரம் என்று பேசினாலும் கடைசியில் பட்ஜெட்டைக் கூட இன்று வரை ஆமோதித்த பாடில்லை. இவர்களுக்குள் சண்டை வந்தால் கோட்டு சூட்டுக்களைக் கிழித்துக் கொண்டு திரிவதில்லை ஆனால் அதை விட அபாயகரமாக வேறு இடத்தில் வேலையைக் காட்டி விடுகிறார்கள். ஒட்டு மொத்த அமெரிக்காவையுமே நிறுத்தி விட முடிகிறது. அதற்கு வேட்டியைக் கிழித்துக் கொண்டு பட்டா பட்டி டவுசருடன் அலைந்தாலும் நடக்க வேண்டியதை அனுமதிக்கும் இந்தியப் பாராளுமன்றம் எவ்வளவோ தேவலை என்றாக்கி விட்டிருக்கிறார்கள்.
அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளுக்குத் துறை ரீதியாக பட்ஜெட் ஒதுக்கீட்டைச் செய்து அதை ஓட்டெடுப்புக்கு விட்டு அதன் மேல் விவாதித்து ஓட்டெடுப்பு நடத்தி தேவைப்பட்டால் அதில் கூட்டல் குறைகளைச் செய்து மெஜாரிட்டி ஓட்டு பெற்றவுடன் கீழ் சபையில் இருந்து மேல் சபைக்கு அனுப்பி வைத்து அவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பி வைத்தோ அல்லது தாங்களும் ஓட்டுப் போட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியோ வைப்பார்கள். அப்படி செலவீனங்களுக்கு இரு சபையினரும் ஓட்டுப் போட்டு அனுமதி அளித்த பின்னர் ஜனாதிபதி கையெழுத்துப் போட்டு நிதியை ஒதுக்கி வைப்பார்கள். அதை அந்தந்த துறையினர் செலவு செய்வார்கள். இதில் மத்திய அரசின் துறைகளான ராணுவம், தபால், உளவுத் துறை, ஆராய்ச்சி நிலையங்கள், தேசிய பூங்காக்கள், மத்திய வருமான வரித்துறை, நிதித் துறை, நீதித் துறை என்று ஏகப் பட்ட துறைகளுக்கான பட்ஜெட்டுகள் அமெரிக்கப் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப் படுகின்றன. அது போலவே அமெரிக்க அரசின் ஒட்டு மொத்த வருடாந்திர வரவை விட செலவு அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் செலவுக்கான அனுமதியையும் இந்த இரு சபைகளும் அங்கீகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்கா அரசு கடன் காரர்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போய் விடும். இந்த வருடம் இந்த இரண்டு விஷயங்களுக்குமே கீழ் சபை முட்டுக் கட்டை போட்டிருக்கிறது.
*****
இப்பொழுது அமெரிக்காவின் பட்ஜட்டை அதன் காங்கிரஸ் எனப்படும் பாராளுமனறம் ஓட்டுப் போட்டு அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் என்றாலே எங்கும் விவகாரம்தான். அவை அங்கீகரிக்காதபடியால் அமெரிக்க மத்திய அரசின் பெரும்பாலான நிறுவனங்கள் முடக்கப் பட்டுள்ளன. அதில் வேலை பார்க்கும் ஆட்களுக்கான சம்பளம், அலுவலக வாடகை, கரெண்ட் பில், கம்ப்யூட்டர் செலவுகள், உதிரிச் செலவுகள் என்று எந்தவொரு செலவுக்குமான நிதி ஆதாரம் அளிக்கப் படாதபடியால் பட்ஜெட்டை இரு சபைகளும் அங்கீகரித்து ஒரு முடிவுக்கு வரும் வரை ஒரு சில பணியாளர்கள் தவிர பிறர் வேலைக்கு வர வேண்டாம் வீட்டில் இருங்கள் அல்லது பீச்சுக்குப் போங்கள். பின்னால் சொல்லி அனுப்புகிறோம் என்று கட்டாய சம்பளமில்லாத விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். சம்பளமில்லாத லீவில் பெரும்பாலானோர் சென்றிருக்கிறார்களே அன்றி நமது தமிழ் பத்திரிகைகளின் அமெரிக்க நாட்டு வல்லுனர்கள் எழுதுவது போல எவரும் டிஸ்மிஸ் செய்யப் படவில்லை அமெரிக்கா நிதி இல்லாமல் மஞ்சக் கடுதாசிக் கொடுத்து போண்டியாகவும் இல்லை. இங்கு நிதிப் பற்றாக்குறையினால் இந்த பட்ஜெட் நின்று போகவில்லை. பட்ஜெட் நிறைவேற்றப் படாததற்கு உண்மையான காரணத்தைச் சொல்ல வேண்டும் என்றால் அது மிகவும் அசிங்கமானது. இந்தியாவில் ஜாதி வேறுபாடு இருப்பதாக குற்றம் சாட்டும் அமெரிக்கா தன்னுடைய நிதி திட்டத்தைக் கூட நிறைவேற்ற முடியாமல் இன்று முட்டுச் சந்தில் நிற்கும் காரணம் நிற வெறி என்பதுதான் உண்மைக் காரணம். அந்தக் காரணத்தைப் பற்றி பேசும் முன்னால் குத்து மதிப்பாக அமெரிக்க அரசு இயங்கும் விதத்தைச் சற்று பார்க்கலாம்.
இந்திய தேர்தல் அமைப்பை விட அமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று மாறுதலானது. அமெரிக்காவில் ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படும் எலக்டோரல் காலேஜ் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுபவர். இந்தியாவில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிக இடங்கள் பெற்ற கட்சியானது தங்களுக்குள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறது. அவர் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தே தனது மந்திரி சபையைத் தேர்வு செய்து அமைத்துக் கொள்கிறார். இந்தியாவின் ஜனாதிபதி பெரும்பாலும் ஆளுங்கட்சிக்குக் கட்டுப் பட்ட ஒரு அதிகாரமற்ற பதவியாக மட்டுமே செயல் படுகிறார். அவருக்கு இருக்கும் அதிகாரங்களை அவர் அனேகமாகப் பயன் படுத்துவது கிடையாது. அமெரிக்காவின் சாசனப் படி மூன்று விதமான அரசியல் நிர்ணய அமைப்புக்கள் உள்ளன. இந்த மூன்று அமைப்புகளும் இணைந்தே அமெரிக்காவின் சட்டங்களை இயற்றியும், செயல்படுத்தியும் வருகின்றன. ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும்(இந்த அமைச்சர்களை ஜனாதிபதி தேர்ந்தெடுத்து பாராளுமனறத்தின் ஒப்புதலை வாங்கிக் கொள்வார் மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை) நிர்வாகத் தூணாகவும், காங்கிரஸ் எனப்படும் பாராளுமன்றம் மற்றொரு தூணாகவும், நீதி மன்றங்கள் மூன்றாவது தூணாகவும் இருந்து அமெரிக்காவை ஆட்சி செய்கின்றன, சட்டங்களை உருவாக்கி அமுல் படுத்துகின்றன.
காங்கிரஸ் எனப்படும் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையில் செனட் என்ற மேல் சபையும், ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ் என்ற கீழ் சபையும் உள்ளன. இரு சபைகளும் அவைகளுக்கு உரிய கடமைகளைச் செயலாற்றுகின்றன. மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனை ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ் உறுப்பினர்கள் என்று தீர்மானிக்கப் படுகிறார்கள். பெரிய மாநிலமான கலிஃபோர்னியா மாநிலத்தில் 53 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். செனட் உறுப்பினர்களாக மாநிலத்திற்கு இரு உறுப்பினர்கள் என மொத்தம் 100 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். நிதி சம்பந்தப் பட்ட சட்ட மசோதாக்களை உருவாக்குவது, தவறு செய்யும் ஜனாதிபதியை தண்டிப்பது போன்ற கடமைகள் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டிவ் சபைக்கு உள்ளன.
காங்கிரஸ் என்பதில் செனட், ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் பிரதிநிதிகள் சபை என்று இரண்டு சபைகள் உள்ளன. செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள். செனட் உறுப்பினரின் பதவிக் காலம் 6 வருடங்கள். ஒரு மாநிலத்திற்கு இரண்டு உறுப்பினர் வீதம் மொத்தம் 100 செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இதற்கு நமது பாராளுமன்றம் போல ஒட்டு மொத்தத் தேர்தல் இருக்காது, நமது ராஜ்ய சபை போல பதவி முடிய முடிய, தேர்வுகள் இருக்கும். பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் அவர்களின் பதவிக்காலம் 2 வருடம், ஒவ்வொரு இரட்டைப் படை இரண்டாவது வருடத்திலும் 435 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும். நவம்பரில் நடந்த தேர்தலுக்குப் பின்னர் செனட் எனப்படும் மேல் சபையில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக 55 உறுப்பினர்களும், ரிபப்ளிக்கன் கட்சியினர் சார்பில் 45 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். செனட் சபையில் டெமாக்ரடிக் கட்சி மெஜாரிட்டியாக உள்ளது. பிரதிநிதிகள் சபையில் 234 ரிபப்ளிக்கன் கட்சி உறுப்பினர்களும், 201 டெமாக்ரடிக் உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இங்கு அதிபர் ஒபாமாவின் டெமக்ரடிக் கட்சி மைனாரிடியாக உள்ளது. தற்பொழுதைய நிலைப் படி செனட்டில் ஆளும் கட்சியும், பிரதிநிதி சபையில் எதிர்க் கட்சியினரும் பெரும்பான்மை வகிக்கிறார்கள். அதனால் பட்ஜெட் உட்பட எந்தவொரு சட்டத்தையும் ஜனாதிபதியினால் எளிதில் நிறைவேற்ற முடிவதில்லை.
பொதுவாக ரிபப்ளிக்கன் கட்சியானது மத விசுவாசமுள்ள கன்சர்வேடிவ் கொள்கைகள் உடைய கட்சி. ரிபப்ளிக்கன் கட்சி கிறிஸ்துவ மத நிறுவனங்களின் மதக் கொள்கைகளையே தனது சமூகக் கொள்கைகளாகக் கொண்டிருக்கும் ஒரு கட்சி. ரிபப்ளிக்கன் கட்சியின் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள் தீவீர கிறிஸ்துவ மதப் பற்றுடையவர்களே. வெள்ளை அமெரிக்கர்களால் பெரிதும் ஆதரிக்கப் படுவது. சர்ச்சுக்களின் ஆதரவினைப் பெற்ற கட்சி. ரிபப்ளிக்கன் கட்சி வடக்கு, தெற்கு மற்றும் உள் அமெரிக்க மாநிலங்களில் அதிகமாக வசிக்கும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்துவர்களின் ஆதரவினைப் பெற்ற கட்சி. ரிபப்ளிக்கன் கட்சியின் முக்கிய கொள்கைகளானவை:
ஜனாதிபதி ஒபாமாவின் டெமாக்ரடிக் கட்சியானது லேசான இடதுசாரி கொள்கைகள் உடைய கட்சியாகக் கருதப் படுகிறது. புலம் பெயர்ந்து வந்த குடியேறிகள் அதிகம் வசிக்கும் கடற்கரையோர மாநிலங்களிலும், தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் நிறைந்த மாநிலங்களிலும் டெமாக்ரடிக் கட்சி அதிக ஓட்டுக்கள் பெற்று வென்று வருகின்றது. கலிஃபோர்னியா, நியூயார்க், ஓரேகான், வாஷிங்க்டன், நியூஜெர்சி, நெவேடா போன்ற பெரும் மக்கள் தொகையும் அதிக அளவு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தோர் வசிக்கும் மாநிலங்களில் வழக்கமாக டெமாக்ரடிக் கட்சி வெற்று பெறுகிறது. எலக்டோரல் காலேஜ் ஓட்டுக்கள் இந்த மாநிலங்களில் அதிகம் இருப்பதினால் குறைந்த அளவு மாநிலங்களிலேயே ஒபாமா வெற்றி பெற்றிருந்தாலும் அதன் எண்ணிக்கை பலத்தால் ஒட்டு மொத்த அதிக எண்ணிகையிலான எலக்ட்ரோரல் ஓட்டுக்களைப் பெற்று அவரால் வெற்றி பெற முடிந்தது.
******
ரிபப்ளிக்கன் கட்சியின் முக்கிய கொள்கைகளானவை:
1. கருக்கலைப்பு தவறானது. எந்த நிலையிலும் கருக்கலைப்பு அனுமதிக்கப் படக் கூடாது. கற்பழிக்கப் பட்டு கரு உருவாகியிருந்தாலும், அறியாமையினால் கரு உருவாகியிருந்தாலும் கூட அந்தக் கரு கலைக்கப் படக் கூடாது. இதற்கான சட்டங்களை ஆதரித்து அமுல் படுத்த முயல்வது ரிபப்ளிக்கன் கட்சி.
2. உலகத்தை ஆண்டவன் மட்டுமே படைத்தான் என்பதில் நம்பிக்கையுள்ளது. பள்ளிப் பாடங்களில் பரிணாமத்துவத்துடன் அதை மறுக்கும் உலகம் கடவுளால் உருவாக்கப் பட்டது என்ற பாடமும் போதிக்கப் பட வேண்டும் என்ற கொள்கையுடையது.
3. ஓரினத் திருமணத்தை ரிபப்ளிக்கன் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது மட்டுமே என்ற கொள்கையுடையது.
4. அரசாங்கம் சிறியதாக இருக்க வேண்டும் எனப்து ரிபப்ளிக்கன் கட்சியின் பொருளாதாரக் கொள்கை. அரசாங்கத்தின் பங்கு குறைவானதாகவும் தனியார் நிறுவனங்களின் பங்கு பெரிதானதாகவும் இருக்க வேண்டும் என்பதும், வருமான வரி குறைவாகவும், ராணுவச் செலவு அதிகமானதாகவும் பெரிய பலமுள்ள ராணுவமாக இருக்க வேண்டும் என்பதும் ரிபப்ளிக்கன் கட்சியின் கொள்கைகள். முதலாளித்துவத்திற்கு பெருத்த ஆதரவையும் அவர்களுக்கு வரிச் சலுகைகளையும் ஆதரிக்கும் கொள்கையுடையது ரிபப்ளிக்கன் கட்சி. அவுட் சோர்சிங் போன்ற பெரு நிறுவனங்களுக்கு வசதியான விஷயங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க விரும்பாத கட்சி.
5. இமிக்ரேஷன் சட்டங்கள் கடுமையானதாக இருக்க வேண்டும் என்பதும் கள்ளத்தனமாக அமெரிக்காவில் நுழைந்தவர்கள் வெளியேற்றப் பட வேண்டும் என்பதில் ரிபப்ளிக்கன் கட்சி உறுதியாக உள்ளது.
6. அமெரிக்காவுட ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடிக்கும் வெளிநாடுகளை அமெரிக்கா தன் ராணுவ வலிமை கொண்டும் போர்கள் மூலமாகவும் அடக்கப் பட வேண்டும் என்பது ரிபப்ளிக்கன் கட்சியின் முக்கியமான வெளிநாட்டுக் கொள்கை. ச்
7. ஸ்டெம் செல் ரிசர்ச் போன்றவை தடை செய்யப் பட வேண்டும். மரபுசாரா எரி சக்தி போன்ற ஆராய்ச்சிகளுக்குப் பணம் அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை, பருவ நிலை மாற்றம் போன்ற விஷயங்கள் குறித்து அதிகமாகக் கவலையடைந்து ஆராய்ச்சிகள் வேண்டியதில்லை, அமெரிக்காவின் எண்ணெய் வளத்தை சுற்றுச் சூழல் இயக்கங்களின் எதிப்புகளைக் கண்டு கொள்ளாமல் அதிகமாக பயன் படுத்த வேண்டும் போன்றவையும் ரிபப்ளிக்கன் கட்சியின் முக்கியமான கொள்கைகள்.
மேற்சொன்ன முக்கியமான கொள்கைகள் தவிர இன்னும் ஏராளமான முக்கியமான பிரச்சினைகளில் ரிபப்ளிக்கன் கட்சி டெமாக்ரடிக் கட்சியுடன் கடுமையாகக் கொள்கை அளவில் வேறு படுகிறது.
டெமாக்ரடிக் கட்சியின் முக்கிய கொள்கைகள்:
1. கருக்கலைப்பு செய்வது அவரவர் தேர்வு என்பதும், ஓரினத் திருமணத்தைச் சட்டப் படி தடை செய்யத் தேவையில்லை கிறிஸ்துவ திருச்சபையின் கொள்கைகளைப் பொது மக்கள் மீது திணிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள்.
2. டெமாக்ரடிக் கட்சியோ பணக்காரர்களிடம் அதிக வரி விதித்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையும்,குறைந்த ராணுவச் செலவு, குறைந்த போர்கள், அதிக அளவிலான ஆராய்ச்சிச் செலவுகள், வெளிநாட்டுக்குச் செல்லும் வேலைகளைத் திரும்பக் கொணர்தல், தனியார் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகம் இருக்க வேண்டும் போன்ற பொருளாதாரக் கொள்கைகளை உடையது.
இரண்டாவது முறையாக ஜெயித்து வந்த ஒபாமா மீது ரிபப்ள்கிக்கன் கட்சியின் அடிப்படைவாதிகள் பலருக்கும் கடுமையான வெறுப்பும் காழ்ப்பும் இருக்கிறது. அவர் கருப்பர் என்பதினால் பல நிறவெறி பிடித்த ரிபப்ளிககன் கட்சியினரின் கோபம் இன்னும் பலமாக இருக்கிறது. ஆரம்பம் முதலாகவே அவரை செயல் பட விடாமல் தடுப்பதில் குறியாக இருந்து வந்துள்ளனர். பட்ஜெட்டை அனுமதிக்காமல் இழுப்பதன் மூலமாகவும் கடன் வாங்கும் சக்தியை அதிகரிக்க விடாமல் முட்டுக்கட்டை போடுவதன் மூலமாகவும் அவருக்குத் தொடர்ந்து கடுமையான தடைகளை விதித்து வருகிறார்கள்.
ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ் எனப்படும் கீழ் சபையில் அவரது டெமாக்ரடிக் கட்சி மைனாரிடியாக இருந்தபடியால் அவரால் வேகமாக எந்தவிதத் திட்டங்களையும் அமுல் படுத்த முடியவில்லை. அவரது திட்டங்களைத் தோற்கடிப்பதையே முதல் குறிக்கோளாக ரிபப்ளிக்கன் கட்சியினர் கருதியதால் அவர் பெரும் பின்னடைவுகளைச் சந்திக்க நேர்கிறது. முக்கியமாக ஒபாமாவினால் கொணரப் பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம், வருமான வரி சீர்திருத்தங்கள் ரிபளிக்கன் கட்சியினர் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இப்பொழுது பிரச்சினை துறைரீதியான நிதி ஒதுக்கிடு செய்வதில் கிடையாது. ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றாமல் வாபஸ் பெறக் கோரியே ரிபப்ளிக் கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு இருக்கும் சொற்ப மெஜாரிட்டியைக் கொண்டு கிட்டத்தட்ட ஒபாமாவின் அரசை ப்ளாக் மெயில் செய்து வருகிறார்கள். நீ கொண்டு வந்த திட்டத்தைக் கை விட்டால் மட்டுமே நாங்கள் பட்ஜட்டை அனுமதிப்போம் இல்லாவிட்டால் அமெரிக்காவே நாசமாகப் போனாலும் கவலையில்லை என்று மிரட்டி வருகிறார்கள். ஹவுஸ் எனப்படு சபையில் அவர்கள் நிறைவேற்றும் தீர்மானத்தை டெமாக்ரட் கட்சியினர் மெஜாரிட்டியாக இருக்கும் செனட் என்ற சபை நிராகரித்து மீண்டும் ஹவுசுக்கே அனுப்பி வைக்கிறது. கிட்டத்தட்ட பிங் பாங் விளையாடுவது போல இருவரும் மாற்றி மாற்றி அனுப்பி செப்டம்பர் 30 தேதி இரவுடன் புதிய நிதி ஆண்டு ஆரம்பிக்கும் நேரம் வரை ஒரு முடிவுக்கு வராத படியால் அமெரிக்க அரசு இப்பொழுது ஸ்தம்பித்து நிற்கிறது.
ஃபிஸ்கல் க்ளிஃப் என்று அழைக்கப் படும் நிதிப் பிரச்சினையே. சென்ற டிசம்பர் 31ம் தேதிக்குள் ஒபாமாவும், இரு கட்சியினரும் ஒரு சமரச முடிவுக்கு வந்து ஒரு உடன்பாட்டை எட்ட முடியாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து இப்பொழுது அக்டோபர் 17 அன்று கெடுவில் வந்து அந்த பிரச்சினையும் முட்டிக் கொண்டு நிற்கிறது. . செனட்டில் டெமாக்ரட் கட்சியினர் மெஜாரிடியாக இருந்தாலும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ் சபையில் அவர்கள் மைனாரிடியாக இருப்பதால் ஒபாமா ஜெயித்து ஜனாதிபதியாக இருந்தாலும் கூட ரிபப்ளிக்கன் கட்சியினரின் தயவு இல்லாமல் இந்த சிக்கலைத் தீர்க்க முடியாது. பட்ஜெட் அனுமதியை விட இன்னும் மோசமான விளைவுகளை அந்த பிரச்சினை ஏற்படுத்தவிருக்கிறது.
*****
தினமலர், தமிழ் த(றுதலை) கிண்டு, தட்ஸ் தமிழ் போன்ற் பத்திரிகைகளில் இந்த பட்ஜட் பிரச்சினை குறித்து வரும் கட்டுரைகளைப் படித்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. குறைந்தபட்ச பொது அறிவு கூட இல்லாதவர்கள் கூட இதை விட உருப்படியாக செய்திகளை வெளியிட முடியும். தமிழ் பத்திரிகைகளில் வருவதை போல முதலில் அமெரிக்கா நிதி இல்லாமல் பட்ஜெட் நிறைவேற்றாமல் திண்டாடவில்லை. பட்ஜெட் நிறைவேற்றப் படாத காரணம் எதிர்க்கட்சியினரான ரிபப்ளிக்கன் கட்சியினர் ஒரு சபையில் மெஜாரிட்டியுடன் இருப்பதினாலும் அவர்கள் ஒபாமாவையும் அவரது திட்டங்களையும் இனவெறியுடன் எதிர்ப்பதினாலேயும் ஒபாமாவின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இந்த பட்ஜட் தடையைப் பயன் படுத்தி வருகிறார்கள்
அமெரிக்க மத்திய அரசின் துறைகள் மட்டுமே செயல் படாமல் இருக்கின்றன. ராணுவம் தபால், சமூக ஓய்வூதியம் போன்றவை வழக்கம் போல செயல் பட்டு வருகின்றன. நீங்கள் இப்பொழுது அமெரிக்காவுக்கு வந்தால் சுதந்திர தேவி சிலையுள்ள தீவுக்குப் போக முடியாது, கிராண்ட் கான்யனைப் பார்க்க முடியாது,யெல்லோ ஸ்டோன் யோசிமிடி காட்டுக்குள் போக முடியாது. பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்கள் இந்த பிரச்சினை முடியும் வரை வேலைக்குச் செல்ல முடியாது அவ்வளவுதான். எவரும் டிஸ்மிஸ் செய்யப் படவில்லை நிரந்தரமாக வேலை இழக்கவில்லை. இந்த பிரச்சினை தீரும் பொழுது அனைவரும் ஒரிரு வாரங்களுக்குள்ளாக மீண்டும் வேலைக்குத் திரும்பி விடுவார்கள். அவ்வளவுதான். தினமலரும், த கிண்டுவும் சொல்லுவது போல எவரும் பிச்சைப் பாத்திரம் ஏந்தித் தெருத் தெருவாக அலையவில்லை.
ஆனால் ஒரு முடிவுக்கு வராமல் இந்த பிரச்சினை இழுக்கப் படும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மட்டும் அல்லாமல் தனியார் துறைகளும் ஒட்டு மொத்த பொருளாதாரமும் பெரும் அளவில் பாதிக்கப் படும். அந்த அளவுக்குச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். இதைப் போலவே முன்பு க்ளிண்டன் ஆட்சியிலும் இதே ரிபப்ளிக்கன் கட்சியினர் கொடுத்த குடைச்சலில் மத்திய அரசு செயல் படாமல் 22 நாட்கள் ஸ்தம்பித்திருக்கிறது. அப்பொழுது வேலைக்கு ஆளில்லாமல் வாலண்டியராக வந்த மோனிக்கா லிவின்ஸ்கியுடன் க்ளிண்டன் உறவு கொண்டது வேறு விபரீதத்திற்குக் கொண்டு சென்றது. அது போல எந்தவொரு விபரீதமும் நடக்கும் முன்னால் இந்த இழுபறியையும் நிறுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் நிதி வழங்கப் போவதில்லை அது ஏற்கனவே நிறைவேற்றப் படத் துவங்கியுள்ளது. இது ரிபப்ளிக்கன் கட்சியினர் நிகழ்த்தும் ஒரு ப்ளாக்மெயில் மிரட்டல் அரசியல் மட்டுமே. மேலும் ஆப்கான் போருக்கும் சிரியா போருக்கும் இந்த பட்ஜெட் விவகாரத்திற்கும் சம்பந்தமில்லை. இது முழுக்க முழுக்க ஒபாமாவை மிரட்டப் பயன் படுத்தப் படும் ஒரு மிரட்டல் கருவி மட்டுமே. பத்து லட்சம் பேர்களுக்கு அல்ல பத்து பேர்களுக்குக் கூட வேலை போகப் போவதில்லை. அனைவரும் மீண்டம வெுேலைக்குச் செல்லப் போகிறார்கள். எவரையும் யாரும் வீட்டுக்கு அனுப்பி விடவில்லை. இது ஜெயலலிதா போட்ட டிஸ்மிஸ் ஆர்டர் கிடையாது. நிதி ஒதுக்கீடு கிடைக்கும் வரையிலும் கட்டாய விடுமுறை விடப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.
அமெரிக்கா இன்னும் முழுகி விடவில்லை.
துரிதமான பதிவு. பாராட்டுக்கள்.
It is a good and detailed article.
உண்மை. அமெரிக்கா குறித்த சரியான தகவல்கள் இங்கிருக்கும் மக்களைச் சென்றடையவில்லை. இதே கட்டுரை வெகுஜனப் பத்திரிகைகளில் வந்திருந்தால் பல தரப்பினருக்கும் போய்ச் சேரும் என்ற எண்ணத்தையும் தவிர்க்க முடியவில்லை. நன்றி.
அவர்கள் எப்படியோ போகட்டும் இந்த கேடுகெட்ட பாகிஸ்தானுக்கு எந்த உதவியும் கொடுக்காமல் இருந்தால் சரி.
உங்கள் கட்டுரையை படிக்கும் போது தான் சிரிப்பு சிரிப்பாக வருகிறது திருமலை.
டெமோக்ரடிக் கட்சியின் பொது குழு உறுப்பினர் போல எழுதியுள்ளீர்கள்.
அமெரிக்கா தற்போது பணத்தை அச்சடிக்கும் வேகத்தில், பிச்சை பாத்திரம் ஏந்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
ரிபப்ளிக்கன், டெமோக்ரடிக் கட்சிகளை தாண்டி அமெரிக்காவில் ஆளும்கட்சி ஒன்று இருக்கிறது, அது “வால் ஸ்ட்ரீட்”. அவர்கள் செய்த சில மிக பெரிய கொள்ளைகளில் இருந்து கவனத்தை திருப்ப இப்போதைய விளையாட்டை ஆடுகிறார்கள்.
அமெரிக்கா முளுகுகிறதோ இல்லையோ, இந்தியா தற்போது கொஞ்சம் அமெரிக்காவை விட்டு தள்ளி இருப்பது நமக்கு நல்லது.
ஒபாமா கருப்பர் என்பதனால் மட்டும் ஆதாரத்து விடாதீர்கள் குடியரசுக்கட்சி ஓரளவுக்காவது இந்தியாவுக்கு ஆதரவளித்தது .புஷ் , பாக்- இந்தியா விஷயத்தில் ஒபாமா மட்டுமல்ல, எந்த ஜனநாயகக்கட்சியினரும் பகிஸ்தானைத்தான் ஆதரிப்பார்கள் . பாகிஸ்தானின் அத்து மீறல்களை ஒரு தடவை கூட அவர்கள் கண்டிக்கவில்லை மாறாக மன்மோகன் சிங்கைத்தான் அனுசரித்து போகும்படி சொல்லி அனுப்பினார் ஒபாமா . இவர் எக்கேடு கேட்டல் தான் என்ன? காந்தியடிகள் கருப்பர்களுக்குத்தான் பிடித்தவர் என்பதெல்லாம் சும்மா. இஸ்லாமிய பயங்கர வாதத்துக்கு இறை யானவர்கள் அமெரிக்கர்களும் இந்தியர்களும் தான் என்று புஷ் சொன்னார். ஆனால் இந்த ஒபாமா விடம் இருந்து இந்தியா விற்கு ஆதாரவாக ஒரு வார்த்தை கூட வரவில்லை. இவர் அமெரிக்காவை ஆண்டால் என்ன அளாவிட்டால் என்ன? குடியரசுக்கட்சி ஆட்சி வந்தால் தான் இந்த நிலைமை ஓரளவுக்காவது மாறும்.கவிழட்டும் இவரது ஆட்சி.
ராஜ்குமார்
நான் ஒபாமாவுக்குத்தான் ஆதரவாக ஓட்டுப் போட்டேன் அதற்காக அவரது திட்டங்கள் பாலிசிகள் அனைத்தையும் ஆதரிப்பதாக அர்த்தம் கிடையாது. இங்கு நமக்கு ஒபாமா பிடிக்கிறதா பிடிக்கவில்லையா அவர்கள் பொருளாதாரக் கொள்கைகள் சரியா தவறா என்பது விவாதம் அல்ல. அவர் ஒரு முறை அல்ல இரு முறை ஜெயித்திருக்கிறார். இரு முறைகளிலும் அவர் தன் இன்ஷூரன்ஸ் திட்டத்தை நிறைவேற்றப் போவதாகச் சொல்லியே ஓட்டுக் கேட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். மேலும் அந்த இன்ஷூரன்ஸ் திட்டம் சுப்ரீம் கோர்ட்டாலும் சட்டபூர்வமான ஒன்று தீர்ப்பளிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு மேலும் ரிபப்ளிக்கன் அவரை தங்கள் மெஜாரிட்டியை வைத்து மிரட்டுவது நியாயமில்லை. அவர்கள் தேர்தலில் நின்று தங்கள் நிலையைச் சொல்லி ஜெயித்து வந்து அவரது திட்டங்களை ரத்து செய்வதே முறையான செயலாக இருக்கும். இப்பொழுது அவர்கள் செய்வது பச்சையான ப்ளாக் மெயில் மட்டுமே
There are more reasons than what Thirumalai has given against the republicans and in support of democratas.1.The whites feel what the majorityin india feel.that they are losing their hard earnedsocial ethos and coherence of the evolved American society.It is nolonger one from themany.MUshroom growthof a dominant minority but demiogra[phically welded racial and linguistic groups have undermined the polity.This is what India has been seeing in the last decades.Secondly most of the Indians forget the very same factors that made them migrate are gradually occurring in USAIt is anirony despite seein socialism and communism failing inRussia and China how Obama brand can bring a permanent Utopia in acountry which gave all its hard earned resurces for thebetterment of theneedy..Whites have a grievance which they have to project and get it sorted out.And they do it the only constitutional method,Thirumalaishould remember nancy Peosies obstruction during BUsh regime.Thiruvengadam
கொஞ்சம் விஷயம் தெரிஞ்சு எழுதுங்க சார். நீங்கள் டெமாக்ரட் ரிபப்ளிக்கன் கட்சிகளின் கொள்கையை தவறாக புரிந்து கொண்டு குழம்புகிறீர்கள். வெள்ளை இனத்தவரை விட கறுப்பர் இனத்தவரே தீவிர கிருத்துவர்கள். ஒபாமா ஜெயித்தது கறுப்பர் மற்றும் ஹிஸ்பானிக் ஓட்டுகளாலே தவிர நாட்டு பற்றினால் அல்ல. காங்கிரஸ் பாரதத்தில் வெல்வதும் கறுப்பர் ஓட்டை கொண்டு ஒபாமா வென்றதும் கிட்டத்தட்ட ஒன்றே. அமெரிக்காவில் எப்பொழுதுமே இரண்டு மன்றங்களுக்கும் நடுவே சமரசம் செய்து கொள்வது பழக்கம். ஒபாமா மட்டுமே இப்பொழுது அஹன்காறதால் ஒற்றை காலில் நிற்கிறார்.
African-Americans belonging to evangelical churches are the most likely to say homosexuality should be discouraged by society (58 percent), while religiously unaffiliated African-Americans are least likely to discourage homosexuality (32 percent).
-From christianpost.com
திரு.ச.திருமலை அமேரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை பட்டியலிட்டுள்ளார். குடியரசுக் கட்சிக்குத்தான் முழு பொறுப்பும் என்று சரியாகவே
எழுதியுள்ளார்.
ஆனால், வேறு சில விஷயங்களையும் இங்கு சேர்த்துத்தான் புரிந்து கொள்ள முடியும்.
அடிப்படையில் நான் வலதுசாரித்துவ பொருளாதார சிந்தனைகளை ஆதரிப்பவன். ஆகவே இயற்கையாகவே அமேரிக்க குடியரசுக் கட்சியை, அக்கட்சியை
மட்டுமே நான் ஆதரிக்க முடியும். நான் நடுநிலையாளன் அல்ல.
(அ) அமேரிக்க அரசு நிர்வாகத்திற்கு பூட்டு போட்டிருக்கும் குடியரசுக்கட்சிக்கு என் மனமுவந்த பாராட்டுதல்கள். வாழ்த்துக்கள். அரசியல் ரீதியாக வெகு சீக்கிரம்
விலக்கிக் கொள்வார்களா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.
(ஆ)குடியரசுக் கட்சி, அரசை ஸ்தம்பிக்க வைத்ததற்கு கூற நினைக்கும், ஆனால் வெளியில் கூற முடியாத காரணங்கள் இருக்கின்றன. வெளியில் கூறும்
காரணங்கள் இருக்கின்றன. நான் கூற முடியாத காரணங்களை எழுத முனைகிறேன்.
(1) வரவுக்கு உட்பட்டுத்தான் செலவு செய்ய வேண்டும். வரவு இல்லையெனில் செலவை வெட்டத்தான் வேண்டும். சிலர் பாதிக்கப்படத்தான் செய்வார்கள்.
(2) ஓசி கல்வி, ஓசி மருத்துவம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. இந்தியாவில் இது பேருக்கு கொடுக்கப்பட்டு, ஆனால் கேவலமான தரத்துடன்
அளிக்கப்படுகிறது. ஆனால் அமேரிக்காவில் ஓசி கல்வி என்பது, மிகக்குறைந்த வட்டியுடன் கல்விக்கடன் என்ற மானியத்துடன், ஒரு பருப்புக்கும் பயன்படாத,
தண்டங்களுக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்டு, கல்வி கொடுக்க பிரயத்தனப்பட்டு, அந்த தண்டங்கள் படிப்பையும் முடிக்காமல், வேலைக்கும் போகாமல், 1
ட்ரில்லியன் டாலர் என்ற அளவுக்கு மொத்த கடன் வந்தபின்னும், வாராக்கடன் அதிகரித்தும், இது தவறு என்று ஒப்புக்கொள்ளவும் முடியாமல், பேசவும்
முடியாமல் நாறிக் கொண்டிருக்கிறது அந்த சமூகம்.
வேலை பார்க்கும் பெரும்பாலான மக்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும், கிட்டத்தட்ட 20 கோடி பேருக்கு, பல பிரச்சினைகளை உள்ளடகத்தில் உடைய
மருத்துவ காப்பீடு அளிக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 6 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீட்டை ஓசியில் அல்லது பெரும் மானியத்தில் அளிக்கிறேன் பேர்வழி
என்று ஆரம்பித்து, ஓசியின் உச்சத்திற்கு சென்றும், அடுத்த 10 ஆண்டுகளில் அமேரிக்க பொருளாதாரமே ஆட்டம் காணும் என்ற பயத்தைப் பற்றி எந்த
அச்சமும் இன்றி, அடுத்த தலைமுறை குறித்து கவலைகளின்றி ஜனநாயகக் கட்சி கொண்டு வந்திருக்கும் மருத்துவத் துறை சீர்திருத்தம் ஒரு புறம்;
காலம் மாறியுள்ளது. 60 வயது என்பதை முதிய வயது என்று கூற முடியாது என்று தைரியமாக பேச முடியாமல், அனைத்து முதியவர்களுக்கும் மானிய
மருந்துகளையும், மருத்துவத்தையும் (Medicare and Medicaid) கொடுத்துக் கொண்டிருந்தால், கஜானா டூபாராகி விடும் என்பதையும் மறைக்கும் கருணைக்
காவலர்களை என்ன சொல்வது? முதியவர்களுக்கு வரைமுறையற்ற மானிய மருத்துவம் கொடுப்பதை விட அவர்கள் இறப்பதை ஏற்றுக் கொள்வது
தவறில்லை என்று யார் பூனைக்கு மணி கட்டுவது?
(3) பெத்து பெத்து போடுமாம் ஒரு ஜோடி-கல்வி, மருத்துவம், வளர்ப்பு என்று ஒன்றுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாதாம். குழந்தைகளுக்கு அரசாங்கம்
அதாவது சமூகம் அதாவது பிற சமூக அங்கத்தினர்கள் ஓசி மானியம் அளிக்க வேண்டுமாம்!
(4)கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, திரு.மிட் ராம்னி அவர்கள் பெரும் பணக்காரர்களுடன் ஒரு ஹோட்டலில் பேசிக்கொண்டிருந்ததை ரகசிய காமிரா மூலம்
வெளிக்கொண்டு வந்தது, அவர் தோற்றதற்கு ஒரு காரணமாக அமைந்தது. அப்படி என்ன கூறினார்? 53 சதவிகித மக்கள் உழைத்து, சம்பாதித்து, வரி கட்டினால்
47 சதவிகிதத்தினர், ஓசியிலோ, மானியத்திலோ வாழ்ந்து கொண்டிருப்பதை தொடர்ந்து அனுமதித்தால், அமேரிக்க சமூகம் உடைந்துதான் போகும் என்றார்.
அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?
(5)ஜனநாயகக் கட்சியின் தகர டப்பாக்கள், ராபின் ஹூட்டின் வேலையை கனகச்சிதமாக செய்ய முயல்கின்றனர். பணக்காரர்களின் உழைப்பை ஏழைகளுக்கு
மடை திறந்து விடுவார்களாம். ஏன் என்று கேள்வி கேட்டால், ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என்ற அதே பல்லவி. மேலும் கேட்டால், ஏழைகளின்
விரோதி. மனிதத்தன்மை அற்றவன் என்று பட்டப்பெயர்கள்.
சும்மா சோம்பித்திரியும் சொம்புகள் நாறித்தான் போக வேண்டும். சமூகமாக மக்கள் வாழ ஆரம்பித்தது மகிழ்ச்சி, துயரம் ஆகியவற்றின்போது பங்கெடுத்துக்
கொள்ளவும், பாதுகாப்புக்காகவும், ஆபத்துக்காலத்தில் பொருளாதாரத்தை சிறிது பங்கு போட்டு கொள்ளவும்தான்! சோம்பேறிகளுக்கும், தம்புடிக்கு
பிரயோஜம் இல்லாதவர்களுக்கும் அள்ளிக்கொடுக்க அல்ல!
அமெரிக்காவுக்கு எது நல்லது என்பது ஒருபுறம் இருக்கட்டும்……பொதுவாகவே டெமாக்ரட்டிக் கட்சியினர் இந்திய விரோதிகள்…….ஒபாமா வந்தவுடன் இந்தியர்களின் தலையில்தான் கைவைத்தார் என்பது நினைவிருக்கட்டும்…. ரிபப்ளிக் கட்சியினர் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவானவர்கள்…..டெமாக்ரட் கிளிண்டன விதித்த பொருளாதார தடைகளை ரிபப்ளிகன் புஷ் தான் வந்து விலக்கினார்…..
இந்தியா போல் அல்லாமல் அமெரிக்காவில் வரி கட்டுவோர் அதிகம்…..ரிபப்ளிகன் கட்சி அவர்களின் பிரதிநிதியாக செயல்படுகிறது…… அவர்களின் பணத்தை எடுத்து ஒபாமா கேர் போன்ற வீணாய்ப்போன திட்டங்களுக்கு ஒபாமா செலவழிப்பதை ரிபப்ளிகன் கட்சி எதிர்க்கிறது……இது சரியான வலதுசாரிப்பார்வை…… அதற்காக டெமாக்ரடிக் கட்சியினரை வில்லன் போலவும் , ஒபாமாவை உலகை உய்விக்க வந்தவர் போலவும் சித்தரிப்பது ஏற்புடையதல்ல…..
நம் நாட்டில் ஹிந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கும் , கிறித்தவர்களின் ஜெருசேலம் யாத்திரைக்கும் அள்ளிவிடப்படுகிறது…..[ அவர்களின் சொத்துக்கள் மட்டும் முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ] ஏனென்று கேட்க நாதியில்லை…..அட்லீஸ்ட் அமெரிக்காவிலாவது பெரும்பான்மை மக்களின் குரலுக்கு மதிப்புக்கொடுப்பது நல்ல விஷயமே…….
vittalanand தெரிவித்தவைகள் உண்மை.
ஒபாமா ஒரு கருப்பர் என்பதனால் மட்டும் அவரை ஆதரிப்பதும்,
பிராபாகரன் ஒரு தமிழ்பேசுபவர் என்பதால் மட்டும் அவர் பாதிரிகளின் அடிவருடியாக, ஒரு பயங்கரவாதியாக இருந்தாலும் அவரை ஆதரிக்க வேண்டும் என்பதும் தமிழர்கள் ஒருபகுதியினரது மிக தவறான சிந்தனைகள்.
சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட சரியான தகவல். சிறப்பான கட்டுரையை எழுதிய திருமலை அவர்களுக்கு நன்றி
தே ஹிந்து பத்திரிக்கையின் மூக்கை உடைத்தது இன்னும் சிறப்பு. அங்கு உட்கார்ந்து கொண்டு இருக்கும் பாதிக்கு மேல் உள்ளவர்கள், பகுத்தறிவு லைசன்ஸ் வாங்கி உள்ளவர்கள். பின்னாள் போகாமல் முன்னால் போகக் கூடிய முற்போக்குகள்.
இவர்களிடம் அறிவை எதிர்ப்பார்ப்பதும், காளை மாட்டில் பாலை எதிர்பார்ப்பது போன்றது.
விட்டல் ஆனந்தின் கருத்தை ஏற்கிறேன்.பொதுவாக அமெரிக்க அரசியல்வாதிகளில் இந்திய அனுதாபிகள் அதிகம் இருப்பது ரிபப்ளிக்கன் கட்சியில்தான்.டெமாக்ரேட் கட்சி பாக் ஆதரவாளர்கள் மிகுந்த கட்சி.ஒபாமா ஒரு கறுப்பர் என்பது முழு உண்மையல்ல.அவருடைய தாய் ஒரு வெள்ளையர்.ஆக,ஒபாமா ஒரு அரை கருப்பர்தான்.ராகுல் காந்தி எப்படி அரை இந்தியரோ ,அதைப்போல !!!
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் தீர்த்துக்கொள்ளட்டும். என்னுடைய கருத்து என்னவெனில் தமிழ் இந்துவிற்கு, அதாவது தமிழ் பேசும் மற்றும் தமிழ் தாய் மொழியாக கொண்ட இந்துக்களுக்கு அமெரிக்காவில் நடைபெறும் இந்த விஷயம் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கருதுகிறேன். தமிழக மீடியா பொறுப்பற்ற முறையில் தவறான தகவல்களை தந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன என்பது உண்மை தான். அதிலும் தி ஹிந்து பத்திரிக்கையை பற்றி சொல்லவே வேண்டாம். இடது கம்யூனிஸ்டுகளின் ஏஜெண்டான அது, அவசர நிலை ( எமெர்ஜென்சியின்) போது , சர்வாதிகாரி இந்திராவுக்கு சல்யூட் அடித்து , கால் கழுவி அரசு விளம்பரங்களை பெற்ற பத்திரிகை. திரு திருமலை அவர்கள் இந்த கட்டுரையை மிக சுருக்கமாக விளக்கி, ஒரே பாராவில் எழுதி முடித்திருக்கலாம். அதாவது இப்போது அமெரிக்காவில் ஏற்பட்டிருப்பது பணப்பிரச்சினை அல்ல. ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளுக்கிடையே எழுந்துள்ள அரசியல் ஈகோ என்பதை மட்டும் சுட்டிக்காட்டினாலே போதும்.
Vellai Varanan, Balaji and others
For your information this was not a full article written by me. It was several pieces of status that I posted in my FB page that was compiled and posted as a single article here by TH editors. Had I written for TH.com it would have been in a different format and in a different balanced tone. So please don’t consider this as a regular article compiled for TH.com.
Any way many Hindus here are of the opinion that Republicans are most soft towards India than democrats. None of the parties are India lovers, their interest lies only in America and if supporting India suits America they will support India on selective basis. Many of our Hindus hate Obama as he is half muslim and think Republican party is the natural extension of BJP in India. I don’t see such similarities.
If democrats waste the tax dolloars on freebies like medical insurances etc Republicans wasted more tax dollars on wars. Although many African Americans are staunch christians the bible belt republicans don’t like them just because they are evangelists. The divide is there. I need to write a separate article on the so called Obama care. Many hard working Americans too could not afford the high insurance costs and they stay away from obtaining a health insurance and obtaining any health treatments. Life is very tought here when there is no job or poor pay where crucial medical needs can not be attended without medical insurance. There may be some pitfalls in Obama care but an affordable health insurance is the need for this country for many lower middle class. On any day i will support wasting billions of dollars on an Iraq war to wasting the same dollars on an affordable medical care.
America has no friends. It has only ” American interests”. USA will sell it’s mother if it’s interest are threatened.The latest drama being played out is a hoax. Basically, USA is bankrupt and needs over a billion dollars a day from rest of the world to manage it’s economy. Take away the dollar oil nexus and America will go belly up the next day. Neither the Democrats nor the Republicans run their country. The Wall street Bankers run the USA and their mighty military. Without their approval and support, this Government shut down would not have taken place.The question should be” Who benefits from this shut down” ?
Sorry for going over the same points again.
This documentary is an eye opener. It shows how the American financial system works.
The Banking sectors of America absolutely have no ethics or morals and totally corrupt. In collusion with the politicians, they have bankrupted the country.Not that USA is a wide eyed innocent angel. In the past they have bombed out Vietnam out of existence. Collateral damage (!!!) AKA genocide of millions of civilians, including women and children in Iraq gets no coverage in world media. USA has been the chief supporter of Pakistan. I have no sympathy for USA.
https://archive.org/details/cpb20120505a
திரு.ச.திருமலை,
உங்கள் மறுமொழியின் கடைசி 2 வாக்கியங்கள்.
“There may be some pitfalls in Obama care but an affordable health insurance is the need for this country for many lower middle class. On any day i will support wasting billions of
dollars on an Iraq war to wasting the same dollars on an affordable medical care.”
முதலில் கீழ்-நடுத்தர மக்களுக்கு சாத்தியபடும் மருத்துவ காப்பீடு வேண்டும் என்பது. நோக்கம் உயரியது. சந்தேகமேயில்லை. ஆனால் நடைமுறை
சாத்தியமா? என்றால் என் பதில் சத்தியமாக இல்லை என்பதுதான். உங்கள் வாக்கியத்திலிருந்தே வேறு விஷயத்தையும் விளங்கிக்கொள்ளலாம்.
அமேரிக்காவில் உள்ள மருத்துவ காப்பீடே இல்லாத 6 கோடி ஏழைகளுக்கு ஓசி மருத்துவம் வழங்கவும்-
நீங்கள் கூறும் கீழ் நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் காப்பீடு வழங்கவும்
நடுத்தர மற்றும் அதற்கு மேலுள்ள மக்களிடம் ஆகும் செலவை அப்படியே வாங்கிவிடவும்
முடியவேண்டும்.
அப்போதும் செலவு எகிறுமே! ஓசி மற்றும் மானியத்திற்கு பொது கஜானாவை எம் பாரத அன்னை சோனியாவைப்போல் ஆட்டையைப் போட
வேண்டும். பச்சையான பொதுவுடைமை.
பழங்கால மருத்துவம் இலைகள், வேர்கள், கஷாயம், சூர்ணம் போன்றவற்றோடு நின்று விடும். வருபவர்களுக்கெல்லாம் அள்ளித்தந்து விடலாம். நாம் வாழும்
இந்த நவீன உலகில் மருத்துவம் பல கூறுகளை உள்ளடக்கியுள்ளது. அதற்கான எல்லைகள்-தொடர்ந்த ஆராய்ச்சியின் மூலம் எல்லைகள் சுருங்குவது-புதிய
கிருமிகளால் மீண்டும் எல்லைகள் விரிவடைவது-சந்தை பொருளாதாரத்தினால்(தான்) புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவது-ஆகவே Generic மருந்துகள்
உற்பத்தி 9 அல்லது 11 ஆண்டுகள் கழித்து வரும் வரை அதிக விலையுடன் விற்கப்படுவது-அமேரிக்காவில் கிட்டத்தட்ட அனைத்து மருத்துவர்கள் மற்றும்
மருத்துவமனைகள் மீதும் வழக்குகள் தொடுக்கும் நிலைமை உள்ளதால்-இழப்பீடுகளை சமாளிக்கவும் மருத்துவர்கள் தனியாக காப்பீடு எடுத்துக் கொள்வது-
அந்த செலவுகளும் நோயாளிகள் மீதே திணிக்கப்படுவது-அரசு கண்காணிப்பு துறை, அரசு மற்றும் தனியாரின் ஆராய்ச்சித்துறை,
மருத்துவமனைகள், மருத்துவர்கள், இவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க, மிகப்பெரிய நீதிபரிபாலன முறைகள்.
இவற்றைத்தாண்டி Clinical Trials மூலம் இன்னும் சந்தைக்கு வராத மருந்துகளை சோதித்துப் பார்க்கும் வேலைகள் என்று அமேரிக்க மருத்துவத்துறை
பல்வேறு வலைப்பின்னல்களை உள்ளடக்கியது.
சரி தீர்வுதான் என்ன? So Simple. ஏழை முதியவர்களை மற்றும் Costly நோய்களை உடைய முழு செலவையும் ஏற்றுக்கொள்ள முடியாத முதியவர்களை
முதல்கட்டமாக சாக விடுவது. ஒரு மனிதனால் இப்படியெல்லாம் பேச முடியுமா? அரசியல்வாதிகளால் பேச முடியாது. என்னால் பேச முடியும்.
சமூகத்தில் ஓசி மருத்துவத்தை பின் யாருக்குமே அளிக்கக்கூடாதா? நான் அப்படி கூறவேயில்லை. மிகச்சிறிய ஒரு தொகுதி மக்களுக்கு, அவர்கள்
குடும்பத்திற்கும் சேர்த்து ஓசி மருத்துவம் அளிக்க வேண்டும். யார் அந்த மக்கள் தொகுதி. சமூக முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பவர்கள். உதாரணமாக
அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், சிற்பிகள், பெரும் புள்ளிகள் போன்றோர். பாரதியாரின் பேரனுக்கு ஓசி மருத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் எனக்கு
ஓசி மருத்துவம் அளிக்கப்படக்கூடாது. விளங்கிவிட்டதா!
இப்படியெல்லாம் பேசலாம். உங்களுக்கு வந்தாத்தான் தெரியும். வந்தது. அந்த அனுபவத்தையே எழுதுகிறேன். என் அம்மாவின் அம்மாவிற்கு, பாட்டிக்கு,
20 வருடங்களுக்கு முன்னால், இரத்த புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. வயதோ 75க்கும் மேலே! என் அப்பாவையும் சேர்த்து எந்த மாப்பிள்ளையும்
தம்புடி கொடுக்க மாட்டார்கள். ஒரே மகன். அவரும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இல்லை. ஆகவே என்ன செய்தோம். So Simple. வலி
நிவாரணத்திற்கு மருந்து வாங்கி கொடுத்தார்கள். 2 வருடம் கழித்து இறந்து போனார் என் பாட்டி. மேலும் ஒரு விவரம் இதில் அவசியம் சொல்ல வேண்டும்.
அப்படியே, செலவு செய்து மருத்துவம் எடுத்துக் கொண்டாலும், சில வருடங்கள் அதிகமாக வாழலாம். ஏனெனில் வயது ஆகி விட்டது என்ற நிலை.
20 வருடங்களுக்கு முன்னால் நடந்தது. இன்றும் கிட்டத்தட்ட இதே நிலைதான். இதே நிலை தொடர வேண்டும் என்பதே என் வாதம். அமேரிக்காவில்
இந்த நிலையை மாற்ற முனைந்துள்ளார்கள்.
சரி, இப்பொழுது உங்கள் மறுமொழியின் கடைசி வாக்கியம். ஈராக் போர் செலவிற்கு பதிலாக மருத்துவ செலவை செய்யலாம் என்பது. நல்ல யோசனை.
என்ன? ஒரு 10 வருடம் தாக்கு பிடிக்கும். பிறகு திவால்தான். நன்றாக யோசிக்க வேண்டும். CBO-Congressional Budget Office அளிக்கும் மருத்துவ செலவுக்கான
மதிப்பீடுகளை அமேரிக்கர்கள் படிக்கிறார்களோ இல்லையோ, நான் படிக்கிறேன். இதே நிலை தொடர்ந்தால், அமேரிக்கா திவால்தான். எனக்கு
சந்தேகமேயில்லை.
என் அம்மாவிற்கு இப்பொழுது இரத்த புற்று நோய் வந்தால் நான் என்ன செய்வேன். So Simple. வலி நிவாரண மாத்திரைகள்தான். 35 இலட்சம் செலவிற்கு
நான் எங்கே போவது? சரி. என் பொருளாதாரத்திற்கு உட்பட்ட செலவுடன் நோய் வந்தால், மருத்துவ காப்பீடு எடுத்திருக்கிறேன். அந்த அளவிற்கு
நிவாரணம் பெறலாம். 10 இலட்சம் 15 இலட்சம் என்று ஏற்பட்டு என் வீட்டை விற்க வேண்டிய நிலை வந்தால். அது என் பிரச்சினை. சமூக பிரச்சினை
அல்ல.
மறுபடியும் எழுதுகிறேன். சமூகத்தில் பெரும் பங்களிப்பு செய்பவர்களை specialஆக பராமரிக்க வேண்டும். மற்றவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்
கொள்ள வேண்டும். பொது கஜானாவில் கை வைப்பது, சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஈடானது. அடுத்த தலைமுறையை அதள
பாதாள கடன் சுமைக்கு தள்ளுவது.
சிலராவது உண்மையை தைரியமாக, பச்சையாக பேச ஆரம்பிப்போம்.
பாலாஜி
உங்கள் கருத்து கறாரான ரிபப்ளிக்கன் கட்சிக்காரருடையது. ஜனநாயகத்தில் அவை சாத்தியமில்லை. சீனா போன்ற சர்வாதிகார நாடுகளில் சாத்தியப் படலாம். சீனாவில் ஷாங்காய் போன்ற நகரங்களுக்குள் திறமையாளர்களையும், தொழில்நுட்பம் தெரிந்தவர்களையுமே பாஸ்போர்ட் கொடுத்து உள்ளே அனுமதிக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல கஜானாவில் இருந்து ஏழைகளுக்கு (இவர்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களே) இலவசமாக செலவிடுவதும், உணவுக்காக அனைவருக்குமே பெரும் அளவு மான்யம் வழங்கப் படுவதும் மிக மிக அதிகமே. இங்கு பெரிய பிரச்சினை சோம்பேறியாக இல்லாமல் பர்க்கர் கிங்கிலோ, வால்மார்ட்டிலோ வேலை பார்க்கும் குறைந்த வருவாய் ஊழியர்களுக்குக் கூட மெடிக்கல் இன்ஷூரன்ஸ் சாத்தியப் படாமல் இருப்பதுதான். வேலைக்குப் போகாமல் இருப்பவர்களுக்கு மான்யம் தர வேண்டிய அவசியம் இல்லை என்று நாம் சொல்லலாம் ஆனால் அரசியல்வாதிகளினால் சொல்ல முடியாது. நீங்கள் சொல்வது போல திட்டவட்டமாக நல்ல வேலை பார்த்து சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவ உதவி அளிக்கப் படும் மற்றவர்கள் எல்லாம் சாகட்டும் என்று சொல்லி ரிபப்ளிக்கன் கட்சியினர் ஜனாதிபதி பதவியையும் செனட்டையும் பிடித்திருந்தால் தாராளமாக அதைச் செய்து கொள்ளலாம். ஆனால் இரண்டு முறை தோற்ற பின்னால் வென்றவர் எடுக்கும் முடிவுகளை தடுக்கும் மெஜாரிடியோ அதிகாரமோ இவர்களுக்குக் கிடையாது. இவர்கள் அடுத்த தேர்தல் வரை பொறுத்திருந்தே இந்த ஒபாமா கேர் எனப்படும் இன்ஷீரன்ஸ் திட்டத்தை ரத்து செய்வதையோ அல்லது சீர்திருத்தம் செய்வதையோ செய்ய முடியும். இந்தியாவில் சோனியா செய்து வரும் நூறு நாள் வேலைத் திட்டத்தையும், உணவு பாதுகாப்பு மசோதா என்னும் பிச்சைக்கார வளர்ப்பு மசோதாவையும் எதிர்க்கட்சியான பா ஜ க தடுக்க முடியாது. அவர்கள் ஜெயித்து ஆட்சிக்கு வந்தால்தான் ஏதாவது செய்ய முடியும். ஆனால் இங்கு ரிபப்ளிக்கன் அரசாங்கத்தையே முடக்கி விட முடிகிறது. கண்மூடித்தனமான மான்யங்களுக்கு நான் ஆதரவாளன் கிடையாது ஆனால் ரிபப்ளிக்கன் கட்சியினரும் அதைத் தடுப்பதில்லை மாறாக வேறு வகையில் அவர்கள் செலவு செய்கிறார்கள். இலவசங்கள் அளிப்பதில் இவர்களும் சளைத்தவர்கள் கிடையாது. புஷ் ஆட்சியில் எங்களுக்கு எல்லாம் ஆயிரம், இரண்டாயிரம் என்று வீட்டுக்குச் செக் அனுப்பி வைத்தார்கள். வரியைக் குறைத்தார்கள் அதே நேரத்தில் அரசாங்கத்தை பெரிதாக குறைத்தது போலத் தெரியவில்லை மாறாக இரண்டு பெரும் போர்களுக்கு பல பில்லியன் டாலர்கள் செலவாவின. ஆக ரிபப்ளிக்கன் கட்சியினர் அப்படி ஏதும் சேமிப்பு செய்ததாகத் தெரியவில்லை. க்ளிண்ட்டன் ஆட்சியின் பொழுது விட்டு வைத்து விட்டுப் போன உபரி எல்லாம் பல ட்ரில்லியன் டாலர்கள் கடனாக மாறியது புஷ் ஆட்சியின் பொழுதுதான்.
அமெரிக்கா ஏதாவது ஒரு முட்டுச் சந்தில் முட்டி நிற்கும் பொழுது அதை சரியாக திசை திருப்பி விடுவதற்கான சக்தியும்,அறிவும் எல்லாவற்றையும் விட பிருமாண்டமான ராணுவமும், அளவிட முடியாத இயற்கை வளங்களும் அவர்களுக்கு நிறைந்துள்ளன. அந்த திமிர் இருக்கும் வரை இவை போன்ற கோமாளித்தனங்களும் கடன் வாங்குதல்களும் தொடரவே செய்யும்.
திரு.ச.திருமலை,
முதலில் நன்றிகள் பல. என்னைப்போல் சித்தாந்த ரீதியாக, (என்னைப் பொறுத்தவரை உண்மையாக) எழுதுபவர்களை கட்டம் கட்டுவது சமூக இயல்பு.
நேர்மையான விவாதத்தில் ஈடுபடுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. நானும் முயற்சி செய்கிறேன்.
உங்கள் கடைசி மறுமொழியில் உள்ள பலவற்றுடன் நான் ஒத்துப் போகிறேன். ஜனநாயகக்கட்சியைப் போன்றே குடியரசுக் கட்சியும் பல மானியங்களை
அளித்துள்ளது. மேலும் அளிக்கும் போன்ற வரலாற்று உண்மைகள்.
என்னைப் பொறுத்தவரை, இருப்பதிலேயே, வலதுசாரித்துவ பொருளாதார பார்வையை முன்வைக்கும் கட்சி குடியரசுக் கட்சிதானே! அதற்கு மாற்று
தற்பொழுதைக்கு இல்லை.
“இங்கு பெரிய பிரச்சினை சோம்பேறியாக இல்லாமல் பர்க்கர் கிங்கிலோ, வால்மார்ட்டிலோ வேலை பார்க்கும் குறைந்த வருவாய் ஊழியர்களுக்குக் கூட
மெடிக்கல் இன்ஷூரன்ஸ் சாத்தியப் படாமல் இருப்பதுதான்.”
நான் நினைப்பது சரியானால், மருத்துவ செலவுகள் வானாளாவ உயர்ந்திருப்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எதிர்காலத்தில் பொருளாதார பூகம்பம் வரலாம்
என்பதையும் உங்கள் மனசாட்சி கூறத்தான் செய்யும். ஆனாலும், எதார்த்தத்திற்கு விரோதமான, நடைமுறை சாத்தியமற்ற கருணையினால் நீங்கள்
பாதிக்கப்பட்டுள்ளீர்கள்.
நான் என் மறுமொழிகளில் பல தகவல்களை அளித்துள்ளேன். மேலும் சில
(1)https://www.washingtonpost.com/opinions/charles-krauthammer-the-way-out/2013/10/10/9dc2e70a-31e2-11e3-9c68-1cf643210300_story.html
Obama insists he won’t negotiate on the debt ceiling as a matter of principle. It’s never been used as leverage for extraneous (i.e., non-budgetary) demands, he claims.
Nonsense. It’s been so used dozens of times going back at least to 1973 when Ted Kennedy and Walter Mondale tried to force campaign finance reform on President Nixon.
Obama himself voted against raising the debt ceiling when he was a senator in 2006.
ஆகவே ஒபாமாவும் கடந்த காலங்களில் அரசியல் செய்திருக்கிறார் என்பதை மட்டும் இங்கே நினைவில் கொள்ளவும். அன்று சபையில் பெரும்பான்மை
இருந்திருக்க வில்லை. இருந்திருந்தால் கடந்த காலங்களில் ஜனநாயகக் கட்சியும் அரசுக்கு மூடுவிழா நடத்தியிருக்கும். இது அரசியல்.
இனி எனக்குப் பிடித்த பொருளாதார தகவலுக்கு வரலாம்.
After all, Social Security, Medicare, Medicaid and other health programs – plus interest payments – already claim more than half the federal budget. And they are poised
to explode, eating up (estimates the Congressional Budget Office) 97 percent of projected revenue in one generation.
நீங்கள் ஒரு அமேரிக்க பிரஜை. உங்கள் நாடு அதல பாதாள குழிக்கு சென்று கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு அநாசின் மாத்திரையினால் உபயோகம்
இல்லை. வெட்டிப் போடுங்கள் உதவாத பாகத்தை. இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா?
(2)பெரும் பணக்காரர் திரு.வாரன் பஃபேட் (Warren Buffet) கடந்த வருடம், தன் வருமான வரி சதவிகிதம், தன் உதவியாளரின் வரி சதவிகிதத்தை விட
குறைவாக உள்ளது. இது மாற்றப்பட வேண்டும் என்றார். அதாவது பணக்காரர்களிடமிருந்து அதிகமாக வரி வசூலிக்கப்பட வேண்டும் என்றார். இதை
மேடை தோறும் முழங்கினார் ஒபாமா. சரி, ஆனால் அதே வாரன் பஃபேட், அமேரிக்க பொருளாதாரத்தை கூண்டோடு அழிக்க வல்ல வெடிகுண்டு அமேரிக்க
ஓய்வூதிய திட்டங்கள் (Time Bomb) என்றும் கூறினார். அக்கருத்தை ஒருவர் கூட சீண்டவில்லை.
(3)தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் 50 சதவிகிதம் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு செலவிடப்படுகிறது. இங்கும் அதே பிரச்சினைதான்.
(4)Detroit நகராட்சி திவாலானதே! 3 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் ஓய்வூதிய திட்டங்கள் மறுஆய்வுக்கு உட்படத்தானே செய்யப்போகின்றன.
(5)So Simple Thirumalai, மனிதனின் சராசரி ஆயுள் 65 வயது என்று இருக்கையில் போட்ட ஓய்வூதிய, மானிய மருத்துவ திட்டங்கள், 80, 90 என்று மாறும் போது
உடைந்து போகும் என்பது பெரிய Algebraவா! சாதாரண மனக்கணக்கே போதுமே!
(6) மேலும் ஒரு குடும்ப நிகழ்ச்சி. என் அப்பா சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்தவர். வேலை பார்க்கும் காலத்தில், சுமார் 20 வருடங்களுக்கு முன்,
என் அம்மாவிற்கு கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்பட்டது. சென்னையில் உள்ள சென்னைத் துறைமுக மருத்துவமனையில் பார்க்கையில், கர்ப்பப்பையை
அகற்ற வேண்டும் என்றார்கள். அதற்கு ஒரு Quota-Queue System இருப்பதாகவும், 9 மாதங்கள் கழித்து Operationக்கு நாள் குறித்தார்கள். ஒரு நகையை விற்று
7000 ரூபாய் செலவில், ஒரு தனியார் மருத்துவமனையில், என் அம்மாவிற்கு அறுவைசிகிச்சை நடந்தது. நான் கூற வருவது, எல்லோரையும் ஒரு
குழுவில் வைத்து, “எல்லோரும் ஒன்று” என்று கும்மி அடித்தால் Rationingதானே கிடைக்கும்.
(7) இந்தியாவின் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும், Quota-Queue Systemதான் இன்றும். இதய அறுவைசிகிச்சைக்கு, கிட்னி அறுவை சிகிச்சைக்கு என்று
அனைத்துக்கும் Queueதான். ஓசியில் வந்தால் இப்படித்தானே இருக்க முடியும். (Quota என்றால், மாதத்திற்கு, அந்த அரசு மருத்துவமனையின் Resources
மற்றும் Budgetக்கு ஏற்ப ஒரு அறுவை சிகிச்சை எண்ணிக்கையை வரையறை செய்து கொள்வார்கள். ஆனால் Queue அதிகமாக இருக்கும்)
(8)மேலும் ஒரு மருத்துவ தகவல் Open-Heart Byepass Surgeryஐ பற்றி நமக்குத் தெரியும். இதில் 55 சதவிகிதத்தினருக்கு மூளைத்திறன் குறையும் என்பது ஒரு
Side Effect. மூளைக்கு செல்லும் இரத்தம் சில விநாடிகளுக்கு நிறுத்தப்படுவதால் ஏற்படுவது. ஆனால் தற்பொழுது, Beating Heart Open-Heart Surgery மூலம் இந்த
பிரச்சினைக்கு நிவாரணம் கிடைக்கிறது. எங்கள் பிரதமருக்கு சில வருடங்களுக்கு முன் இம்முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மனசாட்சியைத் தொட்டு
சொல்லுங்கள்! எங்கள் நாட்டில் Bye-Pass Surgeryக்கே நாங்கள் Rationing வைத்துள்ளோம். புதிய முறையின் செலவுகளுக்கு நாங்கள் எங்கே போவது?
(9)பெரிய வியாதிகளைக் குறித்து நான் இதுபோன்று எழுதிக்கொண்டே போக முடியும். நேரம் இருந்தால் Ministry of Health and Family Welfare இணையதளத்தில்
இந்தியாவில் உள்ளவர்களுக்கு எந்தெந்த நோய்கள் எவ்வளவு பேருக்கு வருகிறது என்பதை பாருங்கள். அதற்கு Market Rateஐ நீங்களே கணக்கு போட்டு பார்த்துக்
கொள்ளலாம். நாங்கள் கொள்ளைதான் அடிக்க வேண்டும்.
எங்கள் கஜானா டோட்டல் காலி. ஆதலால் என் கருணையும் காலி.
(10) சிகாகோவைப் பற்றி நான் கூற வேண்டியதில்லை. 3000 Gangs அந்த பிராந்தியத்தில் உள்ளார்கள். ஒரு Gangல் 10 பேர் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு தெருவில் வேறோரு கும்பல் நுழைந்தால் துப்பாக்கி சூடுதான். தெரு நாய்களைப் போன்று அனுதினமும் அடித்துக் கொள்ளவில்லை. சுட்டுக் கொள்கிறார்கள். சரி, சுட்டு செத்தால் பரவாயில்லை, குண்டடிபட்டு, மருத்துவமனைக்கு வந்தால் ஓசி வைத்தியத்தை உங்கள் நாடு பார்க்கிறது. திமிர் பிடித்து, தறி கெட்டு அலைபவர்களுக்கு ஓசி வைத்தியம் அளித்தால், திமிர் அதிகமாகாமல் குறையவா செய்யும்.
உங்கள் நாட்டில் துப்பாக்கி குண்டைப் போலவே, மனித குண்டு பிரச்சினையும் உள்ளது. வரைமுறையற்ற நொறுக்கு தீனியை தின்று விட்டு, குண்டாகி
பெருத்துள்ளவர்களுக்கும், கஞ்சா அடித்து விட்டு சுற்றுபவர்களுக்கும், உங்கள் அதிபர் ஓசி மருத்துவம் அளிக்க முயல்கிறார். எந்த ஒரு ஒழுக்க நடைமுறைக்கும்
ஒத்துவராத, அனுசரிக்காத ஜன்மங்களுக்கு, ஓசி மருத்துவம் அளிப்பது சரியா என்று நீங்கள்தான் விளக்க வேண்டும்.
(11) மானியம் என்பது நெடுங்கால நோக்கில் எந்த அளவு நாறும் என்பதற்கு எங்கள் நாட்டில் 2 உதாரணங்கள். மும்முனை (Three Phase) மின்சார வசதி உள்ள
வீடுகளுக்கும், மீட்டர் பழுதானால் மானிய விலையில் வழங்கப்படுகிறது. 10000 ரூபாய் விலையுள்ள மீட்டர் 1000 ரூபாய்க்கு அளிக்கப்படுகிறது. மும்முனை
மின்சாரம் உடையவர்கள் ஏழைகளாம்!
எங்கள் நாட்டு இரயிலில், மூதாட்டிகளுக்கு 50 சதவிகிதமும், முதிய ஆண்களுக்கு 40 சதவிகிதமும் கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் உங்களுக்குத்
தெரியுமா? குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளிலும் இந்த கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது. பணக்கார முதியவர்களும் பாவம்தானே!!!
(12) கடைசியாக, பலர் முன்வைப்பது. முன்னேறிய நாடான அமேரிக்காவில், ஓசி மருத்துவம், அதாவது பிரிட்டனில், கனடாவில் உள்ளதைப் போன்று
ஒரே தரத்தில் அனைவர்க்கும் மருத்துவம் அளிக்காதது தவறுதான். மேலோட்டமாக பார்த்தால் சரியென்றுதான் தோன்றும். ஆனால் ஒரு முக்கிய
தகவலை நாம் மறந்து விடுகிறோம். பிரிட்டனின் மக்கள் தொகை 4 கோடி. ஐரோப்பாவின் பல நாடுகளின் மக்கள் தொகை 1 அல்லது 2 கோடிதான். வரவோ
எக்கச்சக்கம்.Industrial Economy. ஆகவே பிரச்சினை இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுது அங்கேயே பல நாடுகளில் மானியங்கள்
அதிகமானதால் கை மீறிச்சென்று கொண்டிருக்கிறது.
அமேரிக்காவிலோ 35 கோடி மக்கள் தொகை. அதிலேயே இவ்வளவு பிரச்சினை. ஐயகோ, நாங்கள் 120 கோடியை உருவாக்கியுள்ளோம். ஓசி மருத்துவத்தை
நாங்கள் அளிப்பது கனவில் மட்டுமே சாத்தியம்.
(13)இப்போது மீண்டும் உங்கள் தரப்பு வாதம்.
“”இங்கு பெரிய பிரச்சினை சோம்பேறியாக இல்லாமல் பர்க்கர் கிங்கிலோ, வால்மார்ட்டிலோ வேலை பார்க்கும் குறைந்த வருவாய் ஊழியர்களுக்குக் கூட
மெடிக்கல் இன்ஷூரன்ஸ் சாத்தியப் படாமல் இருப்பதுதான்.”
மெடிக்கல் இன்ஷூரன்ஸ் என்று பொத்தாம் பொதுவாக எழுதுவது கருணையில். நான் எழுதுவது பொருளாதார எதார்த்தத்தில். மெடிக்கல் இன்ஷூரன்ஸ்
என்பதற்கு எல்லைகள் எவை என்று வரையறை செய்ய வேண்டும் என்பது. தனிமனித செயல்களின் விளைவுகளுக்கு இது போன்று கம்பெனிகளில் வேலை
பார்க்கும் ஊழியர்களும் ஆட்படவேண்டும். மேலும் சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
(14) உங்கள் நாட்டின் medicare மானியத்தில் 5 சதவிகித நோயாளிகள் 80 சதவிகித செலவை பெற்று விடுகிறார்கள். அதாவது 100 பேருக்கு 100 டாலர்
ஒதுக்கும் போது, ஐந்தே பேர், 80 டாலர்களை அள்ளிக்கொண்டு விடுகிறார்கள். பெரிய வியாதிகள் என்னும் போர்வையில். நான் கூறுவது, அந்த ஐந்து பேரை
முதல் கட்டமாக சாக விட்டு விடுங்கள். 80 டாலர்கள் மிஞ்சி விடும்.
கடைசியாக, என் தரப்பு வாதத்தை நீங்களே உங்கள் மறுமொழியில் அளித்து விட்டீர்கள்.
“அமெரிக்கா ஏதாவது ஒரு முட்டுச் சந்தில் முட்டி நிற்கும் பொழுது அதை சரியாக திசை திருப்பி விடுவதற்கான சக்தியும்,அறிவும் எல்லாவற்றையும் விட பிருமாண்டமான ராணுவமும், அளவிட முடியாத இயற்கை வளங்களும் அவர்களுக்கு நிறைந்துள்ளன. அந்த திமிர் இருக்கும் வரை இவை போன்ற கோமாளித்தனங்களும் கடன் வாங்குதல்களும் தொடரவே செய்யும்.”
கடன் வாங்குவது தவறு என்று நீங்களே கூறி விட்டீர்கள். ஆகவே வரும் 17ம் தேதி, கடன் வாங்கும் தகுதியை அமேரிக்கா இழக்க (Debt Limit) உங்கள்
சபை நடவடிக்கை எடுக்கட்டும். சில நாட்கள் / மாதங்கள் அமேரிக்கர்கள் நாற வாழ்க்கை வாழ வேண்டும். பெரிய அளவில் கண் மண் தெரியாமல்
செலவுகளை வெட்ட வேண்டும்.
அதாவது தனிமனிதனான நான் உண்மையை கூற முடியும். ஆனால் அரசியல்வாதிகளால் கூறமுடியாது என்று நீங்கள் கூறுவதை நானும் வழி
மொழிகிறேன். பொருளாதார நிலைமை கவலைக்கிடத்திற்கும் கீழே சென்றுவிட்டால், உண்மையைக் கூறாவிடினும், செலவு வெட்டுகள் என்ற செயல்
நடந்துதானே ஆக வேண்டும். எனக்கு அது போதும். இந்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கும் அமேரிக்க குடியரசுக் கட்சிக்கு என் மனமுவந்த
வாழ்த்துக்கள்.
உங்கள் நாட்டைப் பார்த்து பலர் திருந்த வேண்டும். எங்கள் நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட் கொரில்லாக்களும், சோஷலிஸ்டுகளும், இடது சாரி சிந்தனையாளர்களும் தடுமாற வேண்டும். நாங்களும் சிக்கன / செலவு வெட்டு பாதையை தொடர வேண்டும்.
இப்படி நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் நடக்குமா தெரியவில்லை.
நான் மானியங்கள் குறித்து ஒரு தொடரை இதே இணைய தளத்தில் எழுதியுள்ளேன். நேரம் இருந்தால் படிக்கவும்.
https://tamilhindu.com/2012/09/why-communism-socialism-is-bad-10/ 10 பாகங்களுடைய நெடுந்தொடர் இது. முதல் 9 பாகங்களுக்கான சுட்டியும் கடைசி பாகமான இதே
பக்கத்தில் உள்ளது.
முத்தாய்ப்பாக, உங்கள் நாட்டின் குடியரசுக் கட்சியினரை குரங்குகளாக நான் பார்க்கவில்லை. அவர்களின் அரசியல் நோக்கம் ஏதாவதாக இருந்துவிட்டு
போகட்டும். ஆனால் செயலில் கில்லி.
திரு.ச.திருமலை,
மருத்துவ செலவுகள் ஒருபுறம் இருக்கட்டும். பொதுவாகவே மானிய
அடிப்படையில் இயங்கும் ஒரு பெரிய தொகுதி மக்களை சமூகத்தில் நீண்டகாலம்
வைத்திருக்க முடியுமா என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நான் இரு பார்வைகளை முன்வைக்கிறேன். ஓய்வில் இருக்கும் போது யோசித்துப்
பாருங்கள் புரிந்து விடும்.
முதல் பார்வை-உங்கள் பார்வை- அனைவர்க்கும் மருத்துவம், கல்வி, ஓய்வூதியம்-
இதற்கு சந்தைப் பொருளாதாரத்தின் உச்சகட்ட வளர்ச்சியை முதலில் அடைய
வேண்டும்-அதன் மூலம் அதிகமான வரி வருமானம்-வருமானத்தைக் கொண்டு
ஓசியில் அல்லது மானியத்தில் பெரும் தொகுதி மக்களுக்கு வசதிகள்- நவீன
மருத்துவத்தை நீங்கள் அளிப்பதால் யாரும் 90 வயதுக்கு முன் இறக்க
மாட்டார்கள்-பெரிய அளவில் முதியவர்களின் எண்ணிக்கை-அவர்களுக்கான
வசதிகளை, அவர்கள் வேறு வேலையே செய்யாது போனாலும் அளிக்க வேண்டும்-
ஏற்கெனவே அடைந்த சந்தை பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவது-
மேன்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டியிருக்கும்-மக்கள் தொகை
பெருகிக் கொண்டே போகுமே!
2வது பார்வை-பலர் பேச நினைப்பது-ஆனால் பேச முடியாதிருப்பது-நுகர்வு
கலாச்சாரத்தை அரசு சட்டங்கள் மூலம் கிட்டத்தட்ட ஒழித்துக் கட்டுவது-
உள்ளதை அனைவர்க்கும் சமமாக பகிர்ந்தளிப்பது-ஆடம்பரமே இருக்காது-சந்தை
பொருளாதாரமும் கிடையாது-மருத்துவம் முன்னேறாது-ஆகவே இறப்பு ஏற்பட்டுக்
கொண்டே இருக்கும்-இருக்கும் வளர்ச்சியை தக்கவைத்துக் கொண்டாலே
போதும்.-பச்சையாக கூறுவதானால் மனிதர்களை ரோபோட்களாக மாற்றி விடுவது
முதல் பார்வையைப் பொறுத்தவரை, அது ஒரு Ponzi Scheme-டுபாகூர் வட்டி திட்டம்-
இன்றில்லாவிட்டால், நாளை, நாளை இல்லாவிட்டால் அடுத்த நாள் திவாலாவது
உறுதி.
2வது பார்வையைப் பொறுத்தவரை-மனித சக்திக்கு, வளர்ச்சிக்கு, திறமைக்கு,
உழைப்புக்கு அங்கீகாரம் கிடையாது-மருத்துவருக்கும் ஒரே சம்பளம்-
கம்பௌண்டருக்கும் ஒரே சம்பளம்-க்யூபாவைப் போன்று-அது மனித சமூகமாக
இருக்காது.
இன்று பெரும்பாலான நாடுகளில் இருப்பது கலப்புப் பொருளாதாரம்-ஒரு புறம்
சந்தை பொருளாதாரம்-மறுபுறம் மானியங்கள்-பொருளாதாரம் சரிந்தால் செலவு
வெட்டு-மீண்டும் பொருளாதாரம் வளர்ந்தால், மானியங்கள் அதிகரிப்பு-ஆனாலும்
அனைவர்க்கும் மானியத்தை அளிக்கவும் முடியவில்லை-So ரெண்டும் கெட்டான்
நிலை.
நான் கூறுவது-இயற்கையான பார்வை-மனிதர்கள் அனைவரும் சமம் அல்ல.
என்பதை ஏற்றுக் கொள்ளும் பார்வை-வளங்களை பொதுவில் வைக்காமல்
தனிப்பட்ட மனிதர்களின் அறிவு, திறமை, உழைப்பு, ஆபத்தை எதிர்கொள்ளும்
திறன், கடைசியாக அதிர்ஷ்டம் போன்ற குணாதிசயங்களின் அடிப்படையில் ஒரு
தொகுதி மக்களுக்கு மட்டும் ஆடம்பர வாழ்வு-பிறருக்கு சாதாரண வாழ்வு-இது
Perfect பார்வை என்றோ, தவறே (ஊழல்,துஷ்பிரயோகம்) நிகழாது என்றோ
கூறவில்லை.
சித்தாந்த அடிப்படையில் வைக்கப்படும் இரு பார்வைகளை விட, இன்று நடப்பில்
இருக்கும் கலப்பு பார்வையை விட, என் பார்வை நேர்மையானது- மீளாய்வு
செய்யப்பட்டு சரிசெய்யப்பட்டுக் கொள்ளும் சாத்தியங்களை உள்ளடக்கியது.
தொலை நோக்கு பார்வையில் மனித சமூகம் மேன்மேலும் உச்சகட்ட வளர்ச்சியை
அடைய இவ்வழிதான் சிறந்தது என்பதே என் வாதம்.
வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல. கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மீகம் என்று அனைத்து துறைகளிலும் சமூகங்கள் சிறக்க இதுவே
ஒரே வழி என்பதுதான் என் வாதம்.
பொதுவாகவே அமெரிக்காவைப்பற்றி கவலைப்படாத ஒரு பாரதீயன் நான் என்றாலும் அமெரிக்காவின் ஆதரவாளர் வலது சாரி ஆதரவாளர் ஆர் பாலாஜிக்கு பதில் அளிக்கவிளைகின்றேன்.
“(1) வரவுக்கு உட்பட்டுத்தான் செலவு செய்ய வேண்டும். வரவு இல்லையெனில் செலவை வெட்டத்தான் வேண்டும். சிலர் பாதிக்கப்படத்தான் செய்வார்கள்”
இது தவறான வாதம். அரசின் வரவு என்ன என்பதை நிர்ணயிக்கும் முழு அதிகாரம் அரசுக்கு உள்ளது. பொது வரவு என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று அன்று. அரசு வேண்டிய அளவுக்கு வரவினை வரிவிதிப்பின் மூலம் நிர்ணயீக்க முடியும். வரவுக்குத்தகுந்து செலவு செய்யவேண்டும் என்பது தனினபர்களுக்கே பொருந்தும். செலவுக்கு தக்கபடி வரிவிதித்து வருவாயைப்பெருக்கிக்கொள்ளவேண்டும்.பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகளை கணிசமாகக்குறைக்க வசதி படைத்தோர் மீது வரிவிதிப்பு அவசியமே. வரியை ஒழுங்காக வசூல் செய்தாலே அரசுக்கு போதிய வருவாய் கிடைக்கும். அதைவிட்டு வரிகளை பணக்காரர்களிடம் ஒழுங்காக அரசு அதிகாரிகள் வசூல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது என்பதை வலது சாரிகள் உணரட்டும்.
“(2) ஓசி கல்வி, ஓசி மருத்துவம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. இந்தியாவில் இது பேருக்கு கொடுக்கப்பட்டு, ஆனால் கேவலமான தரத்துடன்
அளிக்கப்படுகிறது”. இதுவும் தவறான வாதம். அரசால் மானியத்துடன் நடத்தப்படும் ஐஐடி, ஐஐஎம்கள் இந்தியாவில் தானே உள்ளன. அவை சிறப்பாக செயல் படவில்லையா. தமிழகத்தில் எவ்வளவோ சிறந்த கல்லூரிகள் அரசுத்துறையில் சிறப்பாக இயங்கவில்லையா? கதைவிடாதீர்கள் பாலாஜி!. கல்வியியல் பொருளாதா ஆய்வுகள் நீடித்த க்கல்வி வளர்ச்சி அரசால் அனைவருக்கும் வழங்கப்படவேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. கல்விக்கு போதிய ஒதுக்கீடு அரசால் செய்யபடாததாலும் ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நிகழ்வதாலும் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத்துறையில் சாதனைபடைக்கும் பல பொறியாளர்கள் அரசு கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள்.
Is it possible to put a mute button for Balaji’s comments on Tamil Hindu site?
ர.பாலாஜி அவர்களின் கருது வரவேற்பிற்குரியது .திரு விபூதிபுஷன் சொல்லுவது போல தரமான கல்வி அளிக்கப்பட்டு அந்த இலவச கல்வி பின்னணியால் நோபெல் விருது பெற்ற மாணவர்களை சுட்டிக்காட்ட முடியுமா கண்டிப்பாக இல்லை. இங்கு செயல் முறையிலான ஆக்கபுர்வமான கல்வி இங்கு கிடைப்பது இல்லை.நீங்கள் சொல்வது போல் நாட்டின் பெரிய மத்திய பல்கலைகழகங்களில் இலவச கல்வி பயிலும் மாணவர்கள் பின்னலில் அதே மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்த படுகிறார்கள் . அவர்களின் அளப்பரிய அறிவுத்திறன் இலவசகல்வி வேலை வாய்ப்பு என்ற பெயரால் நடைமுறையில் உள்ள சாதனங்களையும் தொழில்நுட்பங்களையும் பராமதிற்பதர்க்காகவே பெரும்பாலும் வீனடிகபடுகின்றன .
//கல்விக்கு போதிய ஒதுக்கீடு அரசால் செய்யபடாததாலும் ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நிகழ்வதாலும் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத்துறையில் சாதனைபடைக்கும் பல பொறியாளர்கள் அரசு கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள்.//
இது முழுக்கச்சரியான தகவலன்று.
அரசு பொறியியல் கல்லூரிகள் மாவட்டதுக்கொன்று இருக்கிறது. அதற்கு மேலும் இருக்கலாம். கவுன்சிலிங் போது அக்க்ல்லூரிகளில் ஓரிரண்டைத்தவிர மற்றவைகளில் மாணவர்கள் சேரவிரும்புவதில்லை. அவ்வோரிரண்டு கல்லூரிகளிலிருந்து வருவோர்கள்தான் தகவல் தொழிநுட்பத்த்துறையில் சாதனைபடைக்கிறார்கள். மற்றபடி எல்லா அரசு பொறியியில் கல்லூரிகள் வெறும் பாழடந்த கிடங்குகள்தான்.
அரசு ஒதுக்கீடு அதிகரித்தாலும் ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல இல்லையென்றாலும் அரசு கல்லூரிகள் திருந்தா. காரணம் அரசு என்றாலே மெத்தனம்தான். அதற்கு மேலும் பலகாரணங்கள் உள. அவை இங்கு தேவையில்லை./
ரொம்ப நாளாச்சு, சிவஸ்ரீ.விபூதிபூஷணோடு விவாதம் செய்து!
வரவு-செலவைப் பற்றி சரியாக பேசுவதாக நினைத்துக் கொண்டு, முழுவதும் தவறாக பேசுகிறார். இது குறித்து எழுதுவதற்கு முன்,
விபூதிபூஷண் எப்படிப்பட்டவர் என்று தெரியவில்லை. எப்போதுமே, முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு, இந்த நாட்டின் கலாச்சார பண்பாடு போன்ற
பரி-பாலணங்களைக் கட்டி காப்பாற்றவே அவதாரம் செய்திருப்பது மாதிரி வாழ்பவரா இல்லை சாதாரணமாக சுக-துக்கங்களை அனுபவித்துக் கொண்டு,
சிரித்துக் கொண்டு, கிண்டல் கேலியுடன் வாழ்பவரா தெரியவில்லை.
தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படம். அதில் கதாநாயகனுக்கு சந்தானம் ஒரு க்ளாஸ் எடுப்பார். எப்படி “சமத்துக்குட்டி சமந்தா”வை
ப்ராக்கெட் போடுவது என்று! 3 வித Sceneriosஐ விளக்கி கதாநாயகன் எவ்வாறு React செய்வான் என்று கேட்பார்.
சந்தானம் கதாநாயகனிடம் கேட்பது.
நீ மழைக்காக பஸ் ஸ்டாண்ட்ல ஒதுங்கியிருக்கே! சமந்தா தன் ஸ்கூட்டியில் வருகிறாள். உன்னிடம் வந்து லிஃப்ட் கேட்கிறாள். அப்போது என்ன செய்வாய்?
கதாநாயகன் – என்கிட்டே வண்டி இல்லைனு சொல்லுவேன்.
சந்தானம் – நான் சொல்றது உனக்கு புரியலேனு நினைக்கிறேன். இப்போ வேற மாதிரி கேட்கிறேன். உன்கிட்டேயும் வண்டி இருக்குனு வைச்சுக்கோ.
இப்போ சமந்தா Lift கேட்டா என்ன செய்வே?
கதாநாயகன் – உங்ககிட்டதான் நல்லா ஓடற வண்டி இருக்கேனு சொல்லிடுவேன்.
சந்தானம் – நான் சொல்றத நீ சரியா கவனிக்கல;நல்லா கவனி;சமந்தா உன்னோட நெருக்கத்துக்காக வந்து பேசுறா;நீ மூஞ்சி காமிக்கிறே;இப்போ கடைசியா
ஒரு டெஸ்ட்;ஒரு தியேட்டர்லே கார்னர் சீட்ல 2 டிக்கெட்ட சமந்தா வாங்கிருக்கா;ரெண்டு பேரும் தியேட்டர்ல போய் சீட்ல உட்கார்ந்தவுடனே என்ன செய்வே?
கதாநாயகன்-எனக்கு தியேட்டர்ல தூக்கம் வரும்;படம் முடிஞ்சவுடனே எழுப்புனு சமந்தாகிட்ட சொல்லிட்டு தூங்கிடுவேன்.
சந்தானம் வெறுப்புடன்-நீ எல்லாம் நல்லா வருவே!
இதே typeலே விபூதிபூஷணுடன் உரையாட முயற்சிக்கிறேன்.
“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்” அப்படினு சொல்றார் விபூதிபூஷண். இந்த குறியீட்டை (அவர் பார்வையில்) சமந்தா என்று வைத்துக் கொள்வோம்.
சந்தானம் என்கிற நான் “சிலருக்கு எல்லாம்-பலருக்கு சில வசதிகள்தான்” என்பதை சமந்தா என்கிறேன். விபூதிபூஷணிடம் நீங்கள் தனியாக சமந்தாவை
ட்ராக் செய்து கொள்ளுங்கள். ஆனால் எல்லாருக்கும் சமந்தா கிடைக்க முடியாது என்கிறேன்.
(1)வரவுக்குள்ள செலவு செய்திடணும் என்கிறேன் நான்.
அது எப்படி என்று கேட்கிறார் விபூதிபூஷண்? செலவுக்கு தக்கபடி வரிவிதிப்பு செய்ய வேண்டும் என்று Counter கொடுக்கிறார்.
(2)நான் சொல்றத நீங்க கவனிக்கல-எம் பழம்பெரும் பாரத அன்னை, இந்திரா பிரியதர்ஷிணியின் ஆட்சியில், கம்பெனிகளுக்கு 90 சதவிகிதம் வரை
வரிவிதிப்பு இருந்தது. தொழிலதிபர்களுக்கு ரெண்டே சாய்ஸ்தான். பொய் கணக்கு எழுதி வரிவிதிப்பை Avoid செய்ய வேண்டும். கருப்பு பணம் பெருகியது.
பதுக்கல் இருந்தது. சில பொருட்கள் இருந்தும் பற்றாக்குறை உருவாக்கப்பட்டது. தொழில் விருத்திக்கு ஊக்கம் இருக்காது. இல்லனா அந்தம்மாவோட
கொள்கைகள் எப்போ சமாதியடையும்னு Wait பண்ணனும்.91ல மாற்றம் வந்தது. இப்போ 2013ல, 90 சதவிகித வரிவிதிப்ப செஞ்சா, தொழிலதிபர்கள் தங்கள்
சொத்துக்கள் முழுதையும் வித்துட்டு, பொண்டாட்டி-குட்டிகளோட சூப்பரா வெளிநாட்டில செட்டில் ஆகிடுவாங்க. இதுக்கு என்ன பதில் சொல்றீங்க?
விபூதிபூஷண்-அதல்லாம் இல்ல. பாரதீயர்கள் எல்லாரும் நல்லவங்க.அக்மார்க் புடம் போட்டவங்க. கலாச்சாரம் பண்பாடும் நமக்கு இருக்கு. ஏழைகளுக்கு
எல்லா வசதிகளையும் கொடுக்கணும்.
(3)நான் சொல்றது உங்களுக்கு புரியல. நான் பணம் எங்கேனு கேட்டா, கலாச்சாரம் பண்பாடுனு ஆரம்பிச்சுடறீங்க. வேற மாதிரி விளக்கறேன்.
https://centreright.in/2013/10/india-needs-economic-growth-not-redistribution/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+centreright+%28Centre+Right+India%29
இக்கட்டுரையில் இருந்து ஒரு பகுதி.
“Even if all the goods and services produced within the country were distributed equally, Indians would still have abysmally low
standards of living even in comparison to people living in neighboring countries. Therefore, India must focus on wealth creation rather than
redistribution.”
ஏதாச்சும் புரிஞ்சுதா! இருக்கறத 120 கோடி மக்களுக்கு பிரிச்சு கொடுத்தா, பொழப்பு நாறிடும். இப்போ ஒரு தொகுதி மக்களுக்குத்தான் நாறுது. மொத்த
சமூகமும் நாறும். இந்தியாவில உள்ள 100 கம்பெனிகளுக்கு 90 சதவிகித வரிவிதிப்பு செஞ்சு, சில காலத்தில அனைத்தும் முடங்கறத விட. 10000
கம்பெனிகள நாம உருவாக்கணும். அவங்களுக்கு நியாயமான வரிவிதிப்பு செஞ்சா, மேன்மேலும் தொழில் விருத்தி அடஞ்சு, மேன்மேலும் வரிவருமானம்
கிடைக்கும். ஆனாலும், அனைவர்க்கும் எல்லா வசதிகளும் கிடைக்காது. இதுதான் ட்விஸ்ட். இத நீங்க புரிஞ்சுக்கல.
இன்னும் கொஞ்சம் விளக்கறேன். நீங்க நினைக்கறது, அதாவது, “எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும்” அப்படிங்கற சமந்தா எல்லாருக்கும் கிடைக்கணும்னா,
100 கம்பெனிகள்ளேருந்து, பெரிதும் சிறியதுமாக 1 கோடி கம்பெனிகள உருவாக்கணும். அவங்க எல்லார்கிட்டயும் 90 சதவிகித வரிவிதிச்சு நொங்க கழட்டணும். அவங்க எல்லாம் உங்கள மாதிரியே, இந்த நாட்டோட பரி-பாலனங்கள கட்டிக் காப்பாத்தனும் அப்படிங்கறதேயே 24 மணிநேரமும் சிந்திக்கரவங்களா
இருக்கணும். அவங்க குழந்தைகளும், குழந்தைகளோட குழந்தைகளும் இப்படியே, முகத்த உம்முணு வச்சுகிட்டு, கலாச்சாரம் பண்பாட்டுக்காகவே வாழணும்.
விபூதிபூஷண் (குமாரு)!உங்களுக்கு சமந்தா கிடைக்க நீங்க முயற்சி எடுங்க;தோத்து போனீங்கன்னா அது உங்க பிரச்சினை;வேற ஒருத்தருக்கு கிடச்சுடுவா. அத விட்டுட்டு, ஊருல இருக்கற எல்லாருக்கும் சமந்தாவ கொடுண்ணா, “சின்ன புள்ளத்தனமாவுல இருக்கு”.
யாருக்கெல்லாம் அறிவு, திறமை, உழைப்பு, ஆபத்தை எதிர்கொள்கிற திறன், அப்புறம் அதிர்ஷ்டம் இதல்லாம் இருக்கோ, அவங்களுக்கெல்லாம் சமந்தா,
மத்தவங்களுக்கு வெறும் சோறு. சோறு மட்டும்தான்.
கடைசியா என்ன பத்தி சொல்றதாயிருந்தா, “சம்சாரம் அது மின்சாரம்” படத்தில ரகுவரன் சொல்வாரு ஒரு வசனம்.
“நான் சாப்பிட்டதுக்கு எனக்கு பில் கொடுங்க. ஆனா அடுத்தவன் சாப்பிட்டதுக்கெல்லாம் பில்ல ஏன் என் தலையில கட்டறீங்க?”
கொஞ்சமாவது விளங்கிடுச்சா.
கலாச்சாரம் பண்பாடெல்லாம் காலத்துக்கு ஏத்தமாதிரி மாறிகிட்டே இருக்கும். திறமையை வளர்த்துகிட்டு சமந்தாவ புடிங்க. சந்தோஷமா வாழுங்க.
ஸ்ரீ புதுமைப்பித்தர்
“திரு விபூதிபுஷன் சொல்லுவது போல தரமான கல்வி அளிக்கப்பட்டு அந்த இலவச கல்வி பின்னணியால் நோபெல் விருது பெற்ற மாணவர்களை சுட்டிக்காட்ட முடியுமா கண்டிப்பாக இல்லை”
நோபல் பரிசு நல்லவர்களுக்கு மக்களுக்கு சேவை செய்பவர்கலுக்கு கிடைக்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது. தாகூருக்கு கிடைத்தது பாரதிக்கு கொடுக்கப்படவில்லை. மஹாத்மா காந்திக்கு கொடுக்கப்படவில்லை. யாரெல்லாம் அமெரிக்காவுக்கும் சந்தைப்பொருளாதாரத்திற்கும் பலனளிக்கும் ஆய்வுகளை செய்கிறார்களோ. சாதகமான பரிந்துரைகளை த்தருகிறார்களோ அவர்களுக்கே கொடுக்கப்படும் நோபெல் பரிசு. ஆக நோபெல் பரிசை ஒரு அளவீடாக கொள்ளவேண்டிய அவசியம் பாரதப்பாரம்பரியத்தில் திழைக்கும் எமக்கில்லை.
ஸ்ரீ புதுமைபித்தர்,
“நாட்டின் பெரிய மத்திய பல்கலைகழகங்களில் இலவச கல்வி பயிலும் மாணவர்கள் பின்னலில் அதே மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்த படுகிறார்கள் . அவர்களின் அளப்பரிய அறிவுத்திறன் இலவசகல்வி வேலை வாய்ப்பு என்ற பெயரால் நடைமுறையில் உள்ள சாதனங்களையும் தொழில்நுட்பங்களையும் பராமதிற்பதர்க்காகவே பெரும்பாலும் வீண்டிகபடுகின்றன.
இதுவும் மிதமிஞ்சியக்கற்பனை. ஐஐடிகள், ஐஐஎம்கள், மத்தியப்பல்கலைக்கழகங்களில் குறைந்தக்கட்டணத்தில் நிறைய வசதிகளுடன் தரமானக்கல்வி வழங்கப்படுகின்றது. அடியேன் மையப்பல்கலைக்கழகங்களில் எதிலும் படிக்கவில்லை. ஆனால் அதிலொன்றில் ஆசிரியனாகவே பணியாற்றுகின்றேன்.மாநிலப்பல்கலைக்கழகங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீட்டை
மாநில அரசுகள் செய்யாததாலும் ஆசிரியர் நியமனத்தில் அரசியல் ஊழல் விளையாடுவதாலும் தரம் தாழ்ந்துவிட்டது.
அரசு கல்வி நிறுவனங்களில் கல்வித்தரம் உயரவேண்டும் என்றால் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், முக்கிய அரசியல் தலைவர்கள் பிள்ளைகள் எல்லாம் அரசுப்பள்ளிகளுக்கு மட்டுமே கட்டாயமாக செல்லவேண்டும். இன்னும் ஒன்று மத்திய மானில பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் அரசுக்கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களுக்கும் மட்டுமே சேர்க்கை அளிக்கவேண்டும். மத்திய கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் தாழ்ந்திருக்கிறது என்றால் ஐஐடி ஐஐ எம், ஜே என் யூ ஆகியவற்றின் சேர்க்கைத்தேர்வுகளுக்கு அத்துனை கூட்டம் ஏன். அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் என் ஐ டி களுக்கும் இதே நிலை. அரசு கல்வி நிறுவனங்களால் தரமான கல்வி தரமுடியாது என்பது கரடி. கல்வியிலும் மருத்துவத்திலும் கொள்ளை அடிக்க நினைக்கும் எத்தர்களின் சதி செயல்.
எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டும் ஸர்வே ஜனா சுகினோ பவந்து என்பதே பாரதியப்பண்பாட்டின் அடி நாதம். அதைவிட்டு எத்தர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் முழங்குவது அன்று.
திரு.ச.திருமலை,
மேலும் ஒரு கணக்கு.
https://articles.washingtonpost.com/2013-03-28/world/38097452_1_iraq-price-tag-first-gulf-war-veterans
போர் செலவுகளால் அமேரிக்க பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உங்கள் வாதமாக இருந்தது.
இந்த கணக்கை கவனியுங்கள்.
அமேரிக்காவின் வெளிநாட்டு கடன் தொகை – 16 ட்ரில்லியன்
உள்நாட்டு கடன் தொகை – 9 ட்ரில்லியன்
மொத்த கடன் தொகை – 25 ட்ரில்லியன்
ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போரினால் அமேரிக்காவிற்கு இதுவரை ஆன செலவு – 2 ட்ரில்லியன்
(காயமடைந்த வீரர்களுக்கு ஆகப்போகும் மருத்துவ செலவு மற்றும் பிற செலவுகள் – 2 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்பது வருங்கால செலவு)
இதிலிருந்து நான் புரிந்து கொள்வது.
ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில், அமேரிக்கா படை எடுக்காமல் இருந்திருந்தாலும் அமேரிக்க பொருளாதாரம் 23 ட்ரில்லியன் டாலர் கடனுடன்
நாறியிருக்கும். பிரச்சினை தீவிரமாகியுள்ளது என்பது உண்மை. போர் இல்லாமல் இருந்திருந்தால், சில ஆண்டுகளுக்கு பிறகு நாறியிருக்கும்.
அடுத்து, நான் செலவுகளை கண் மண் தெரியாமல் வெட்ட வேண்டும் என்னும் போதே, அதற்கான எதிர்வினை சமூகத்தில் இருக்கும் என்பது எனக்குப்
புரிகிறது. இன்று நான் படித்தது. https://www.nytimes.com/2013/10/16/opinion/europes-populist-backlash.html?partner=rssnyt&emc=rss&_r=0
க்ரீஸ், இத்தாலி, போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள கடன் பிரச்சினைகளை சமாளிக்க ஜெர்மனி அந்நாடுகளுக்கு கடன் கொடுக்கிறது.
ஆனால் கொடுக்கும் போதே, சில கட்டுப்பாடுகளையும் சேர்த்தே போடுகிறது. அரசு செலவு வெட்டுகள்தான். இதனால் ஏற்படும் சமூக பிரச்சினைகளை
அந்நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன. நான் இவற்றை அறிந்தே உள்ளேன்.
சரி, உதாரணத்திற்கு, இந்த செலவு வெட்டுகளுக்கான எதிர்ப்பு போராட்டக்காரர்களின் கட்சிகள் வென்று ஆட்சிக்கு வந்தாலும், என்ன ஆக போகிறது?
செலவுகளை வெட்டா விட்டால், ஜெர்மனியோ, பிற நாடுகளோ கடன் அளிக்காது. கஜானாவில் பணமும் இல்லை. என்னதான் ஆகும்? சில மாதங்களோ அல்லது
அதிகபட்சமாக, சில வருடங்களோ தாக்குப் பிடிக்க முடியும். பிறகு யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும், செலவு வெட்டுகளை செய்துதான் தீர
வேண்டும்.
மற்றுமொரு தகவல்.
https://www.firstpost.com/world/us-debt-debate-is-hogwash-uncle-sam-has-already-defaulted-1173125.html
The real debt ceiling for all of us is the one imposed by Mr Market and it is no different for the US
government. Instead of the self-imposed charade being any real barricade to the amount of debt
that the US government can afford, it will be runaway inflation that will end this mindless increases
in government spending. Till such point, it’s going to be a series of dramas for the consumption of
the gullible public, but with a pre-defined outcome. There will be a supposed meeting of minds in
the greater interest of society and the world economy and we will be back to business-as-usual
before long. How long will Mr Market tolerate all this nonsense without mayhem in the currency
and treasury markets? Who knows? But with trillion dollar deficits becoming the norm, the day of
reckoning cannot be far into the future.
வரவுக்கு மேல் செலவு செய்தது மட்டுமே பிரச்சினையல்ல. எப்படி இருந்தாலும் பெரும்பாலானோர்க்கு மானியம் கிடைக்கும் என்ற உத்திரவாதத்தை அளிக்க
ஆரம்பித்தார்களே அங்கேதான் ஆரம்பித்தது கிரகச்சாரம். ஒரு ரவுண்ட் முடிந்து
ஓயும்போது, சில நிவாரணம் கிடைக்கும். கிடைத்துத்தானே ஆக வேண்டும்.
அமேரிக்காவைப் பற்றி நான் அதிகபட்சமாக கவலைப்படுகிறேன். அதற்கு ஒரு காரணமும் உள்ளது. அதுவும் சுயநலம்தான்.
என் கருத்துப்படி இவ்வுலகில், மனிதத்திற்கும், மனித நாகரீகத்தில் நாம் இதுவரை அடைந்த வளர்ச்சிக்கும், (மானுட அறம் என்னும்படியான மனித உரிமை,
பெண்ணுரிமை போன்றவை) ஆகக்கூடிய பெரும் சவாலாக தற்காலத்தில் இருக்கும் சித்தாந்தங்கள் இரண்டு. பயங்கரவாதம், தீவிரவாதம் போன்றவற்றை
நேரடியாகவோ மறைமுகமாகவோ முன்னெடுத்துச்செல்லும் இஸ்லாமிஸம் என்னும் அரசியல் இஸ்லாம் (Islamism, Political Islam). அடுத்து பொதுவுடைமை
என்னும் கம்யூனிஸமும் அதன் பங்காளியான சோஷலிஸமும்.
இவ்விரண்டு சித்தாந்தங்களில் சோஷலிஸத்தின் கொடூர முகத்தை நாங்கள் நேரடியாகவும், இஸ்லாமிஸத்தின் கொடூரத்தை ஒரு அளவிற்கும் அனுபவித்து
உள்ளோம் / வருகிறோம். இவ்விரண்டு சித்தாந்தங்களையும் நேரடியாக / நேருக்கு நேர் எதிர்த்துக் கொண்டிருக்கும் சமூகமான அமேரிக்கா, பொருளாதார
நிலையில் கீழ்நோக்கி பயணித்தால் அதன் விளைவுகள் எங்களையும் பாதிக்கும். OPEC என்ற இஸ்லாமிய நாடுகளின் எண்ணெய் பொருளாதார
முன்னெடுப்புகளால் ஒருபுறம் இஸ்லாமிஸமும், சீன கம்யூனிஸத்தின் கோரத்தை மற்றொருபுறமும் சந்திக்க வேண்டிவரும். அவற்றை தன்னந்தனியாக
எதிர்கொள்ளும் நிலையில் எங்கள் பொருளாதாரமோ, தொழில் நுட்பமோ இல்லை.
கடந்த காலங்களில் அமேரிக்காவில் நடக்கும் அரசியல் கூத்துகள் பெரும்பாலும் மக்களை கவர்ந்ததில்லை. ஏனெனில், எப்படியிருப்பினும், அரசியல் பேரங்கள்
நடந்து விடும் என்பது அனைவர்க்கும் தெரிந்தே இருந்தது. இன்றும் அதே நிலைதான் என்றாலும், சிலர், வெகு சிலர் உண்மையை தைரியமாக பேசவும்
எழுதவும் ஆரம்பித்துள்ளனர். முத்தாய்ப்பாக, இவர்களும் ஒரு காலத்தில் ஓசி, மானிய ஜோதியில் ஐக்கியமாகி களித்தவர்கள்தான். எவ்வளவுதான் வசதிக்கு
மீறி அனுபவித்தாலும், வேறு ஒருவர் பில்லை கட்டிவிடுவார் என்ற தைரியம் இருந்தது. ஆனால் சாப்பிட்டதற்கு பில் கொடுக்கப்பட்டவுடன், ஏன் இவ்வளவு
சாப்பிட்டோம் என்ற உதறல் ஏற்பட்டிருக்கிறது. Atleast செலவுகள் குறித்து குறிப்பிடத்தக்க விவாதம் ஆரம்பித்திருக்கிறது. பார்ப்போம்!
https://www.nytimes.com/2013/10/16/opinion/friedman-sorry-kids-we-ate-it-all.html?partner=rssnyt&emc=rss&_r=0
இக்கட்டுரை ஆசிரியர் தலைப்பையே அழகாக வைத்துள்ளார். Sorry, Kids. We Ate It All
முதியோர், தற்கால குழந்தைகளிடம் “நாங்கள் அனைத்தையும் சாப்பிட்டு விட்டோம் குழந்தைகளே! நீங்கள் முதியவர்களாக மாறும்போது, சோற்றுக்கு
லாட்டரி அடிக்க வேண்டும்” என்பதான தலைப்பு மிகவும் அருமை.
With graph after graph, they show how government spending, investments, entitlements and poverty alleviation have overwhelmingly benefited the elderly since the 1960s and how the situation will only get worse as our over-65 population soars 100 percent between now and 2050, while the working population that will have to support them — ages 18 to 64 — will grow by 17 percent.
இக்கட்டுரை ஆசிரியர், சந்தை பொருளாதாரத்தை ஆதரிப்பவர் என்றாலும், பல்வேறு மானியங்களை அளிக்கத்தான் வேண்டும் என்று தொடர்ந்து எழுதி
வருபவர். இப்பத்திரிகையோ முற்றும் முழுவதுமாக இடதுசாரித்தனத்தை முன் நிறுத்துவது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கட்டுரை இன்று வெளிவந்துள்ளது.
“முதியோர்களின் எண்ணிக்கை 100 சதவிகிதமாக 2050க்குள் உயரும் அதே வேளையில் அவர்களுக்கும் சேர்த்து உழைப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 17
சதவிகிதம்தான் உயரப்போகிறது”
மீண்டும் மீண்டும் இவ்வாக்கியத்தை நாம் அனைவரும் படிக்க வேண்டும். இன்று இதற்கான விடைகளை நாம் தேட ஆரம்பிக்கவில்லையெனில், என் சொல்வது?
சமூகங்கள் உச்சகட்ட அழிவுக்கு செல்லும். இது ஜோசியமோ Prophecyயோ அல்ல. நிதர்சன உண்மை.
திரு.சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களே…….
ஓவர் சுதேசியும் உடம்புக்கு ஆகாது……காலத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்……. இருப்பதை எல்லாம் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பதே பாரதீயப்பண்பாடு என்பதை நீங்கள் ஸ்தாபிக்க விரும்பினால்., நாம் மீண்டும் நேரு – இந்திரா கும்பலின் ” சோஷியலிச பொற்காலத்துக்கு ” திரும்பவேண்டும்…..வேண்டாம் சார்……விட்டுடுங்க…….. நாடு பிழைச்சுப்போகட்டும்……..
திரு.திருமலை அவர்களின் கருத்துக்கே பதில் அளிக்க இருந்தேன்….தவறிவிட்டது….. என்னளவில் சீனியர் – ஜூனியர் புஷ்களின் வளைகுடா யுத்தங்களை [ சுய நல நோக்கில் ] ஆதரிக்கிறேன்……. இந்த ஒபெக் [ ] கும்பலை ஒரு கட்டுக்குள் வைக்காவிட்டால் ரொம்ப சிரமம்…..இப்பவே இவனுக போடற ஆட்டம் தாங்க முடியவில்லை….. [ இஸ்லாமிய பயங்கரவாதத்தின் புரவலர்கள் எண்ணை முதலாளிகளே ]……………..
அமெரிக்கா வளமாக நலமாக இருப்பது அவசியம் என்று அன்பர் பாலாஜி எழுதியிருக்கிறார். அமெரிக்கப்பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் உலகமே நலம் பெரும் என்பது அடியேனின் கணிப்பு. அமெரிக்கவின் பொருளாதாரம் வீழ்ந்தால் இந்தியப்பொருளாதாரம் உயரும்.அமெரிக்காதான் அல்கொயிதாவை பின் லேடனை வளர்த்தது, பாகிஸ்தானை கொம்பு சீவிவிட்டது என்பதையெல்லாம் நினைவு கொண்டாகவேண்டும். பன்றியைப்போல் அளவில்லாமல் தின்னுங்கள் என்பதே அமெரிக்கா போன்ற முதலாளித்துவ பொருளியல் நோக்கு. அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது. பன்றி வயிறு வெடித்து சாகும் இல்லையென்றால் சாப்பிட எதுவும் கிடைக்காமல் சாகும்.
ஐயா சான்றோன் உண்மையிலேயே உங்களை சான்றோராகவே கருதிவந்திருக்கிறேன். ஆனாலும் இந்திராகாந்தி நேரு பொருளாதாரக்கொள்கைகளை ஸ்வதேசி என்று கூறுகிறீர்களே இது நியாயமா? நிச்சயம் இல்லை. உள் நாட்டுதொழில் வளர்ச்சிக்கு தடையை உருவாக்கிய லைசென்ஸ் கோட்டா ராஜ் அன்று ஸ்வதேசி. ஸ்வதேசி என்பது உள் நாட்டின் வேளாண்மை தொழில் வளர்ச்சியை பாரம்பரிய தொழில் நுட்பம் அறிவியல் துணையோடு வளர்ப்பதே. அன்னியரிடம் கற்றுக்கொள்ளவேண்டியதை அவசியம் கற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் ஆனால் அன்னியமயாமாகி விடக்கூடாது. தன்னிறைவு தற்சார்பு இவையெல்லாம் மிக அவசியமானவை. வேளாண்மையில் இயற்கை வேளாண்மையையும் மருத்துவத்தில் இயற்கை மருத்துவம், யோகம், ஆயுர்வேதம், சித்தமருத்துவம் யுனானி, போன்றவற்றை போற்றவேண்டும். வளர்க்கவேண்டும் பரவலாக்கி மக்களுக்கு நோயற்றவாழ்வை ஏற்படுத்தவேண்டும். இதுவே மெய்யான ஸ்வதேசி. கிராமப்புறத்தொழிகளும் வேளாண்மையும் வளராமல் இந்திய ஒரு நாளும் முன்னேறாது. அன்னிய முதலீட்டால் பெரும் வளர்ச்சி வராது. சுற்றுச்சூழல் சீர்கேடும் நம் மக்களின் வாழ்வாதார இழப்பும் நிகழும்.ஆக்வே ஸ்வதேசி வேண்டும். ஹிந்துத்வா என்றா ஸ்வதேசி. ஸ்வதேசி என்றால் ஹிந்துத்வா.
எந்த நாடாயினும் வாழ்வு சிறக்க வேண்டும் என்றால், உணவுஉற்பத்தி , உடை , வீட்டு வசதிகள் ,சாலை வசதிகள், கல்வி நிலையங்கள், சுகாதார வசதிகள் போன்ற அனைத்து உற்பத்தியும் ,அதிகரிக்க வேண்டும். உற்பத்திக்கு இடையூறு செய்யும் எதுவும் நாட்டில் இருக்க கூடாது. வேலை நிறுத்தம், கதவடைப்பு, ஜன்னல் அடைப்பு, காற்று அடைப்பு என்று எந்த அடைப்பும் இருக்க கூடாது. உற்பத்திப் பெருக்கம் மட்டுமே வாழ்வின் தரத்தை உயர்த்தும். கம்யூனிசம் உற்பத்திப் பெருக்கத்துக்கு தடை செய்யும் கொடிய இயக்கம். எனவே கம்யூனிசம் தடை செய்யப்பட வேண்டிய ஒரு இயக்கம் ஆகும்.
சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரு சமுதாயம் மட்டுமே புதிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து உயர்வடையும். சுதந்திரம் இல்லாத அடிமை சமுதாயத்தில், வன்முறை, அடக்குமுறை, பெண்ணடிமை, சர்வாதிகாரம் , ஒரு சில குடும்பங்களின் ஆதிக்கம் ஆகியவை மட்டுமே நிலவும். இஸ்லாமிய நாடுகளில் பெண்ணடிமை, சர்வாதிகாரம், ஷியாக்களை கொல்லுதல், அகமதியாக்களின் இறந்த பிணங்களை , புதைகுழியில் இருந்து எடுத்து மீண்டும் வேறு இடங்களில் புதைத்தல், தீவிரவாதம், வெடிகுண்டு கலாசாரம், தற்கொலைப்படை, பின்லேடன், பின்லேடனுக்கு மறைமுகமாக திருட்டு தனமாக உதவி செய்தல் போன்ற தீய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வருகின்றனர். எனவே, கம்யூனிசம், இஸ்லாம் இரண்டுமே மனித இனத்துக்கு விரோதமானவை. திரு ஆர். பாலாஜி அவர்களின் கருத்துக்களில் மறைந்துள்ள உண்மைகள் நிதர்சனமானவை.
மேலும் மலாலா போன்ற பெண்ணியக்க தலைவிகளை சுட்ட தாலிபான்கள் வெறும் பேடிகளே. தாலிபான் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு உலகில் இனி எந்த நாட்டிலும் இடம் கிடையாது. பெண் கல்வி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது என்று உலகமே நினைக்கும் அளவுக்கு தாலிபானீயர்கள் பல கொடுமைகளை செய்துள்ளனர். தாலிபான் விரைவில் அழிக்கப்படும்.
அம்மையார் அத்விகா
“கம்யூனிசம், இஸ்லாம் இரண்டுமே மனித இனத்துக்கு விரோதமானவை. திரு ஆர். பாலாஜி அவர்களின் கருத்துக்களில் மறைந்துள்ள உண்மைகள் நிதர்சனமானவை”. கம்யூனிசம் இஸ்லாமிய பயங்கரவாதம் மட்டுமன்று அமெரிக்காவின் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவத்தினை அடிப்படையாகக்கொண்ட வலது சாரி முதலாளித்துவமும் ஆபத்தானது தான். ஒரே கடவுள், ஓரே புனித நூல் மற்றும் ஒரே தூதுவர்(ஒரே வழி) என்றக்கருத்துதான் ஒரே சந்தை என்ற அமெரிக்க மைய முதலாளித்துவத்திற்கும் அடிப்படை. ஒரே சந்தைக்கு கலாச்சார சமய பன்மை உதவாது ஆகவே மாறுபட்ட பண்பாடுகளை சமயங்களை அழிப்பதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது. கல்சுரல் ரிலிஜியஸ் ஹோமோஜீனைசேசன் மற்றும் மார்கெட் இண்டெக்ரேசன் இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்.
சுருக்கமாக சொன்னால் ஆர் பியின் கம்யூனிச, இஸ்லாமிய பயங்கரவாதப்பூச்சாண்டி எம்மை அமெரிக்க இவாஞ்சலிக்கல் பெரும் பூதத்தின் ஆதிக்கத்தினை ஏற்கவைக்காது.
https://www.firstpost.com/economy/debt-ceiling-absurdity-how-the-us-fed-is-running-a-ponzi-scheme-1177519.html
In fact, as bonds being bought by the Federal Reserve from the US government, come up for maturity they will be repaid by getting the Federal Reserve to print money and buy new bonds. Hence, the Federal Reserve will be printing money to repay itself. If that isn’t absurd, I don’t know what is. The US Federal Reserve is currently helping the US government run its Ponzi scheme by printing money and buying bonds.
The US government does not earn enough to repay maturing bonds. Hence, it has to borrow money to repay bonds. This is a perfect Ponzi scheme where the government is paying off old debt by issuing new debt. A Ponzi scheme is essentially a financial fraud where the money that is due to older investors is repaid by raising fresh money from newer investors. The scheme keeps running till the money brought in by the new investors is greater than the money that needs to repaid to older investors. The moment this reverses, the scheme collapses.
என்னதான் தீர்வு இந்த சீட்டு கம்பெனி திட்டத்திற்கு? யாருக்கு தெரியும்? அடுத்த தலைமுறையினரின் வாழ்வைக் குறித்த எந்த அச்சமும் இன்றி, மிருக புத்தியுடன் வாழும் அமேரிக்க அதிகார வர்க்கம், அதை ஊக்குவிக்கும் பைத்தியக்கார கருணைக் காவலர்கள், ஏழைகள் பாவம், தொழிலாளர்கள் பாவம், முதியவர்கள் பாவம் என்று குத்தாட்டம் போடும் கணக்கு புரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத மக்கள், பணக்காரர்களால்தான் ஏற்பட்டது பிரச்சினை என்று சந்தில் சிந்து பாடும் இடதுசாரி கொரில்லாக்கள், தகுதிக்கு உட்பட்டுத்தான் வாழ வேண்டும், வரவுக்கு உட்பட்டுத்தான் செலவு செய்ய வேண்டும் என்று யார் கூறினாலும் கட்டம் கட்டும் “போலி ஏழை விசுவாசிகள்” என்று “எல்லார்க்கும் எல்லாம்” என்ற நடைமுறை சாத்தியமற்ற சிந்தனைதான் இவ்வளவுக்கும் காரணம்.
கடைசியாக என்று வீழும் அமேரிக்க பொருளாதாரம்?சீட்டுக் கம்பெனி என்றாவது வீழ்ந்துதானே ஆக வேண்டும்.
But till when can this Ponzi scheme go on? Ultimately all Ponzi schemes collapse. The only question is when.
சிவஸ்ரீ.விபூதிபூஷணுடன் விவாதிப்பதில் எனக்கு எப்பவுமே ஒரு கிக் இருக்கிறது. இக்கட்டுரைக்கு இதுவரை நான் பல ஆதாரங்களை தெளிவாக எழுதியுள்ளேன். நான் எங்கே சுற்றினாலும், காசு எங்கே? என்ற கேள்விக்கு வந்து விடுகிறேன்.
அவரோ, “சந்தைக்கு போணும்;ஆத்தா வையும்;காசு கொடு” என்று ஏழைகளுக்காக மானிய தொழிற்சாலை கட்டணும் என்கிறார். மேலும், “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பாவா” என்றும் காமெடி பண்றார்.
ராமாயணத்தைப் பற்றி எழுதியவுடன் எனக்கு மேலும் ஒரு உதாரணம் நினைவுக்கு வருகிறது. கலாச்சாரம், பண்பாடு என்பதான பரி-பாலனங்களைக் கட்டி காப்பாற்றும் விபூதிபூஷணுக்காக ராமாயணத்திலிருந்தே ஒரு உதாரணம் தருகிறேன். சீதையை காட்டிற்கு அனுப்பும் செயலுக்கு மூலாதாரமாக விளங்குவது ஒரு வண்ணானின் வார்த்தைகள் என்று நமக்கு தெரியும். உபதேசத்தை விடுங்கள். பொருளாதாரத்தைப் பாருங்கள். ராமனும் அவன் சுற்றத்தாரும் வசித்தது அரண்மனைகளில். ஆனால் வண்ணான் எங்கே வசித்திருப்பான்? சிறிதாவது விளங்குகிறதா?
ராம ராஜ்ஜியம் என்பதாக நான் புரிந்து கொள்வது. Human Dignityஐ ராமன் எவ்வாரு அனைத்து பிரஜைகளுக்கும் அளித்தான் என்பதை. வண்ணானின் வார்த்தையையும் செவி கொடுத்து கேட்டவன் ராமன். ஆனால் வண்ணானுக்கு அரண்மனை வாசத்தை கொடுத்து விட வில்லை.
Monarchyல் ஒரு பிரச்சினை இருந்தது. அரசனின் சந்ததியினர் மட்டுமே சுக வாழ்வு வாழ முடியும் என்ற நிலை. ஆனால் நாம் இருக்கும் நவீன சமூகங்களில்
வண்ணானும் உழைத்து முன்னுக்கு வர முடியும். (இரயில் பெட்டி ஒன்றில் டீ விற்றவர் ஒருவரைத்தானே நானும் அடுத்த பிரதமராக வேண்டும் என்று
ஆதரிக்கிறேன்.)
டீ விற்பவர்கள் அனைவரையும் நான் ஆதரிக்க மாட்டேன். டீ விற்பவர்களையும் சேர்த்து, பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவர்க்கும் வாய்ப்புகள்
தருவேன் என்று முழங்குகிறாரே! அதனால்தான் ஆதரிக்கிறேன்.
“எல்லார்க்கும் எல்லாம்” சாத்தியமற்றது. ஆனால் “எல்லார்க்கும் சம வாய்ப்புகள்” நேர்மையானது.
//Monarchyல் ஒரு பிரச்சினை இருந்தது. அரசனின் சந்ததியினர் மட்டுமே சுக வாழ்வு வாழ முடியும் என்ற நிலை. ஆனால் நாம் இருக்கும் நவீன சமூகங்களில்
வண்ணானும் உழைத்து முன்னுக்கு வர முடியும்.
“எல்லார்க்கும் எல்லாம்” சாத்தியமற்றது. ஆனால் “எல்லார்க்கும் சம வாய்ப்புகள்” நேர்மையானது.//
எங்க சார் இருக்கு சமவாய்ப்பு? கிடைச்சத பெட்டரா பண்ணலாம்னு வேலை பார்கறவன் தான் இங்க அதிகம். 1200 க்கு 1190 எடுத்தாலும் டாக்டர் சீட் இலவசமா கிடைக்காத நாட்டில் தான் இருக்கோம். காசு, பணம், துட்டு, மனி, மனி…. சினிமாவில் திறமையாளர்கள் சிலர் சொந்தக்காலில் நின்று சோபிக்கலாம். அரசியலில் சிலர் புதிதாக நுழைந்து பேர் வாங்கலாம். அதெல்லாம் விதிவிலக்குகள் சார்.
கூட்டமாக செல்லும் மந்தைஆடுகள் போல எல்லாருமே இன்ஜினியரிங் படிக்க காத்து கிடந்து அதையும் படிச்சுட்டு வேலை கிடைக்காம நாறிப் போனவன் நெறைய பேரு. Information Technology அல்லது Computer Science பின்புலம் இல்லாமலே ஒரு Mechanical, Civil, EEE, ECE இப்புடி கிடைச்ச இடத்துல ஒரு டிகிரிய பேருக்கு முடிச்சு வெச்சுட்டு அழிஞ்சவன் நிறைய பேரு. இப்ப கொஞ்ச நாளா MBA. யாரைக் கேட்டாலும் MBA. அதிலும் Finance/ Marketing/ Systems/ International Business னு உட்பிரிவுகள். ஒரு தெளிவான ஐடியா இல்லாமலேயே படிச்சுட்டு வேலை கிடைக்காம சுத்தும் ஆட்கள் ஏதோ கிடைக்கற வேலையைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை தான் இருக்கு. இதுக்கு காரணம் கல்வி வியாபாரமாக்கப் பட்டது தான். அதிலே அபரிமிதமான மார்கெடிங் செய்யப்பட்டுவிட்டது தான். “MCA படிச்சா 5 வருஷத்துல சம்பளம் 8 லட்சம் வாங்கலாம்.” இப்படிப்பட்ட “Word of Mouth” ரீதியிலான விளம்பரங்கள் மூலமே பெற்றோர்கள் கடனை உடனை வாங்கி லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைக்க தூண்டுகிறது. காசு உள்ளவன் பணத்தைக் கட்டி CAT, MAT, ZAT, எல்லாம் படித்து வேலை வாங்கி விடலாம். காசில்லாத மாத வருமானம் பார்ப்பவர்களின் பிள்ளைகள்? எவ்வளவு புத்திசாலிகளாக இருந்தாலும் அவர்களுக்கு அது ஒரு கடினமான விஷயம் தான். நான் பெயர் சொல்லவிரும்பவில்லை. ஒரு தனியார் பல்கலைக்கழகம் செம துட்டு வாங்கி இன்ஜினியரிங் மாணவர்களை பண்டல் பண்டலாக வருடாவருடம் வெளியேற்றுகிறது. 100% ரிசல்ட் வருடாவருடம் காண்பித்தால் தான் அடுத்த வருடம் மாணவர் சேர்க்கை அதிகம் இருக்குமாம். ஒன்றுமே தெரியாத மாணவர்கள் கூட எஞ்சினீயராகி விடலாம். என்னுடைய ஒரு காலி பணியிடத்திற்கு 180 இல் ஒருவர் கூட தேர்வாகவில்லை. வேலைவாய்ப்பு தொடர்பாளரான ஒரு ஆசிரியரிடம் விளக்கம் கேட்டேன். சரியான பதில் இல்லை. அத்தனை பேரும் என்ன செய்யப்போகிறார்கள்?
ஒருவர் விருப்பபட்டு ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து அதைச் சிறப்பாக செய்து பயனீட்டினால் அது ஆரோக்கியம் எனலாம். ஆட்டுமந்தை போல் கூட்டம் கூட்டமாக தனக்கு என்ன வேண்டும், எது நமக்கு மனதுக்குகந்த வேலை, எது விருப்பம், எது வரும் என்பதையெல்லாம் யோசிக்காமல் எல்லாரையும் போல் விளம்பரத்தில் மதியிழந்து தானும் ஓடினால் இப்படி தான் ஆகும். காசுக்கு காசும் போய், படித்த படிப்புக்கு உண்டான கல்வியறிவும் கிடைக்கப் பெறாமல், கிடைத்ததை செய்ய வேண்டியது தான். சமவாய்ப்பு பெயருக்கு தான் இருக்கிறது.
உண்மையான சமத்துவம் என்னவெனில் அவரவருக்கு வந்த கலையை, விருப்பமான தொழிலை அவரவரே தேர்ந்தெடுத்து முயன்று வெற்றி பெறுதல் தான். ஆனால் இங்கே எல்லாமே விளம்பர மோகத்தில் ஊறிப் போயிருக்கிறது. 32 பற்களுக்கு 32,000 பேஸ்டு விளம்பரங்கள் வந்தால் சமூகம் ஏன் மயங்காது? இந்த விளம்பரங்கள் தான் ஒன்றை அழித்து தான் மட்டும் வாழும் மனப்பான்மையை வளர்க்கும் கருவிகள். உதாரணம் சன் பிக்சர்ஸ். ஒரு பய படத்தை ரிலீஸ் பண்ண விடலையே. ஊரில் உள்ள எல்லா அரங்கங்கிலும் அவர்கள் படம் தான் ஓடியது. முன்பே சொன்னது போல திரைஉலகில் Monarchy செட் ஆகவில்லை. ஆட்சி மாற்றத்திற்குப் பின் அடங்கிப் போனார்கள். ஆனால் மற்ற துறைகளில்? இன்றும் ஒரே ஒரு bovonto தான் Coke, Pepsi யை மீறி வாழ முடிகிறது. எல்லாமே ஒரு விளம்பரம் தான்.
அன்பர் பாலாஜி அடியேனுடன் விவாதிப்பதில் ஒரு கிக் இருப்பதாகக்கூறுகிறார். எனக்கு கிக் ஹை இவற்றில் எந்த ஒரு ஆர்வமும் இல்லை. போதை ஜாகிரி வஸ்த்துக்கள் எம்மை போன்ற ஆத்யாத்மிக பாசுபதர்களுக்கு எப்போது விலக்கப்பட்டவை.எது போதை தருகிறதோ அடிமையாக்குகிறதோ அவையெல்லாம் விலக்கத்தக்கவை ஒதுக்கத்தக்கவை என்பதே அடியேனின் நிலை. எல்லாருக்கும் எல்லாம் சாத்தியமில்லை என்பதிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை.எல்லாருக்கும் சம வாய்ப்பை எப்படி அளிப்பது யார் அளிப்பது என்பதில் தான் கருத்துவேறுபாடு. அந்த சமவாய்பினை சந்தை மட்டுமே நிச்சயம் அளிக்கமுடியாது. அங்கே வலுத்தவன் வைத்ததே சட்டமாக இருக்கும். அளிப்பும் தேவையும் மட்டுமே விலையை நிர்ணயிப்பதில்லை. உழைப்பால் மட்டுமே உயர்ந்துவிட முடியும் என்பது அங்கே எல்லோருக்கும் சாத்தியம் இல்லை.ஆகவே அரசின் பங்கே அங்கே அவசியமாக இருக்கிறது. சட்ட திட்டங்களை கொண்டுவருவதின் மூலம் அமைதி சட்டம் ஒழுங்கை மட்டுமே அரசு செய்தால் போதாது. எல்லாருக்கும் கல்வி, மருத்துவம், போன்ற அடிப்படைவசதிகளை அரசு செய்தே ஆகவேண்டும்.
ஸ்ரீ ராம ராஜ்ஜியம் வேண்டும் என்பதில் நிச்சயம் அடியேனுக்கு நம்பிக்கை உண்டு.கொள்பவன் இல்லையே கொடுப்பவனும் இல்லை என்ற நிலை இன்றும் சாத்தியமே.சத்திய யுகம் க்ருதயுகம் என்றெல்லாம் சொல்லப்படுவது எல்லாருடைய அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்யும் சமூக அரசியல் பொருளாதார அமைப்பே நிலையே.அப்படியின்றி மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள், நாடுகள் வறுமையிலும், கல்லாமையிலும் பிணியிலும் உழலும் சூழல் அமைதியற்றதாக வன்முறை மலிந்ததாகவே அமையும்.
அமேரிக்கா குரங்குகள் கையில் சிக்கியுள்ளதா இல்லையா என விவாதிக்கப்பட்டுள்ளது. அமேரிக்கா யார் கையில் சிக்கியிருந்தாலும்……*நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்* என்று தனிக்காட்டு ராஜாவாக கையில் சவுக்கெடுத்துக்கொண்டு கண்டவனையும் அடிக்கும் நாட்டாமைக்காலம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்பது மட்டும் திண்ணம்.
இந்தக் கருத்தை ப்ரதிபலிக்குமுகமாக விஜயவாணியில் பதிவான சில வ்யாசங்கள்
https://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2977
https://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2976
https://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2975
Not to miss Article by Israel Shamir :- (some of the commentors have alleged him as *whacked out christian*.. Neverthless a nice article on Alexander Dugin)
Putin’s Wise Counsellor
https://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2849
உலகத்தின் ஒற்றை நாட்டாமையான அமேரிக்கா காலவதியானால் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி விடுவார்களே என்றும் கேழ்வியெழும் தான்.
ஒற்றை நாட்டாமையான அமேரிக்கா சொல்வதை சிரியா கேழ்ப்பதில்லை. ரஷ்யாவின் புட்டின் ….நீ சொல்றதை சொல்லு….நான் செய்வதை செய்வேன்……சீனா…..சந்தடி சாக்கில் புட்டினுடன் தோஸ்தி கொண்டாடுவது……வேறு வழியில்லாது அமேரிக்கா……ஈரானுடன் பரமாணு சக்திக்கு பேச்சு வார்த்தை என கீழிறங்குவது…..இஸ்ரேல் கடுப்பாவது…….சவூதி ராஜகுடும்பம் மிகமிகக் கடுப்பாகி……..ஐக்ய நாடுகள் சபையில்……ரெண்டுவருஷ பாதுகாப்பு கவுன்சில் சீட் எனக்கு வேண்டாம் என அமேரிக்காவின் மூஞ்சியில் அடிக்காத குறையாக ……. சிணுங்குவது…….இதுக்கப்புறமும் அமேரிக்கா…….நானே எனக்கும் என்றும் நிகரானவன் என்று சவுக்கு சுத்துவது……இதைப்பார்க்கையில் பல்லு பிடுங்கிய பாம்பு சீறுவது மாதிரி இருக்கிறது.