நரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும் – புதிய புத்தகம்

மோடியை நீங்கள் சந்திக்கச் சென்றீர்களானால் அவர் கவனம் முழுவதும் உங்களிடம் மட்டுமே தான் இருக்கும். உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது எந்தவித இடையூறுக்கும் ஆட்பட மாட்டார். மோடி, மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வார். மற்றவர்களை விட தான் தான் உயர்ந்தவன் என்று ஒருபோதும் காட்டிக்கொள்ள மாட்டார். மோடியுடன் உரையாடுவது ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போன்றது…. எஸ்.பி.,சொக்கலிங்கம் எழுதியுள்ள இந்த நூல் 2002 குஜராத் கலவரத்தின் பின்னணி, அது தொடர்பான பல்வேறு விசாரணை கமிஷன்கள், நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் நூல் விலாவாரியான செய்திகளைத் தருகிறது. தொடர்ந்து மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் குஜராத்தில் மோடியின் தலைமையில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றதற்குக் காரணம் மாநில அரசின் செயல் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று தீண்டியிப்பதால் தான் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுகிறது…

View More நரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும் – புதிய புத்தகம்

நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்

மோதியின் அரசியல் வாழ்க்கையின் முக்கியப் புள்ளிகளை சுருக்கமாக ஆனால் முழுமையாகத் தொட்டுச் செல்கிறது அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல். “டீக்கடைப் பையன்” முதல் “பிரதம மந்திரி மோடி?” வரை பதினாறு அத்தியாயங்களில் மோடியின் தொடக்க காலம், ஆர் எஸ் எஸ் பிரசாரக்கிலிருந்து குஜராத் முதல்வர் வரை அவர் படிப்படியாக வளர்ந்து வந்த அரசியல் வரலாறு, அவரது சாதனைகள், மோடி எதிர்ப்பாளர்களின் குற்றச் சாட்டுகள், அதற்கான எதிர்வினைகள் என்று கச்சிதமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் மோடியின் வாழ்க்கை சம்பவங்களை மட்டுமல்லாமல், அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல் பின்னணியையும் சேர்த்தே சொல்லிச் செல்வது இளம் வாசகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமான ஆதாரபூர்வமான தரவுகளை உள்ளடக்கி, அதே சமயம் எல்லா விதமான வாசகர்களும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழி நடையில் உள்ளது இந்த நூல்..

View More நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்

மோதியின் வரலாற்றுத் தவறுகள்

நேருவியர்களின் போலி மதச்சார்பின்மைக்கும், இந்துத்துவர்களின் ஒருங்கிணைந்த தேசியவாதத்திற்கும் இடையேயான மோதல் தான் இது. இதில், தங்கள் கட்சியின் முது பெரும் தலைவரான படேல், தங்களுக்கு எதிர்த் தரப்பில் போய் நின்று கொண்டிருப்பதை அசௌகரியத்துடனும், திகிலுடனும் காங்கிரஸ் உணர ஆரம்பித்திருக்கிறது… குஜராத் கலவரம் தொடர்பாக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டால், எனக்குத் தண்டனை கொடுங்கள்; மோதியை தூக்கில் போடுங்கள். சும்மா மன்னிப்பு கேட்க சொல்லி விட்டு விடாதீர்கள் என்று தைரியமாக காமிராவுக்கு முன் எகிறுகிறார்… இதற்கு நடுவில், ஏதோ பயங்கரமான பரபரப்பு செய்தி தருவதாக எண்ணிக் கொண்டு “மோடியின் தள்ளி வைக்கப்பட்ட மனைவி” என்று பேஸ்புக்கில் பழைய குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்….

View More மோதியின் வரலாற்றுத் தவறுகள்

பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்

எல்லாவிதமான தடுப்பு முயற்சிகளும் வேலை செய்யாத கடைசி நிலையில் மோடியின் பிருமாண்டமான கூட்டத்தை நிறுத்தும் கடைசி முயற்சியாக இஸ்லாமிய பயங்கரவாதத்தின் துணையை நாடியிருக்கிறார் நிதிஷ். பீஹார் மாநில போலீஸ் இப்படி அலட்சியமாக இருந்திருக்க நியாயமில்லை. எந்தவிதமான குறைந்த பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அளிக்க பிடிவாதமாக மறுக்கச் சொல்லி உத்தரவு இருந்திருக்கிறது….. அன்று மோதியும் பிற பா ஜ க தலைவர்கள் அவர்களுக்கு மேலாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் காட்டிய பொறுப்புணர்வும் முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்தின் மீதும் அதன் மக்களின் மனப்பக்குவம் மீதும் மாபெரும் நம்பிக்கையை உருவாக்கி விட்டன… மக்கள் எந்தவிதமான வன்முறையும் கலவரமும் இல்லாமல் அமைதியாக எவருக்கும் இடையூறு விளைவிக்காமல் பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டும் என்று அக்கறையுடன் அவர் அன்று விடுத்த கோரிக்கை இந்தியாவுக்கு ஆண்டவன் அனுப்பி வைத்துள்ள ஒரு கொடை அவர் என்பது உறுதியானது. அவரையும் இந்தியா தவற விடுமானால் அதற்கு மன்னிப்பே இல்லாமல் போய் விடும். ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னும் வாராது போல வந்த மாமணியைத் தோற்பதற்கு இந்தியாவுக்கு நேரமும் வளமும் கிடையாது…

View More பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்