இக்கட்டுரைத் தொடரில் ஒரு மறுமொழியாக ஒரு நண்பர் ராமச்சந்திர குஹாவின் ‘Reforming the Hindus’ கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து போடுகிறார். அது சொல்கிறது:
1949 எனும் ஒரு ஆண்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் டெல்லியில் 79 கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அவற்றில் நேரு, அம்பேத்கர் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. அக்கூட்டங்களில் இந்து சட்ட மசோதா இந்த பண்பாட்டின் மீதும் இந்து பாரம்பரியத்தின் மீதும் செய்யப்பட்ட தாக்குதல் என கூறப்பட்டது.[1]
உண்மையில் இந்து சட்ட எதிர்ப்பு இயக்கம் ராம்ராஜ்ய பரிஷத் என்கிற அமைப்பைச் சார்ந்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களில் கட்சி கடந்து காங்கிரஸ், இந்து மகாசபை என இந்து ஆச்சாரவாதிகள் கலந்து கொண்டார்கள். ஆனால் இந்து சட்ட எதிர்ப்புக்கான அகில இந்திய அமைப்பு தொடங்கப்பட்டது மார்ச் 1949 இல். அப்போது ஆர்.எஸ்.எஸ் மீது தடை இருந்தது. ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கப்பட்டது ஜூன் 1949 இல். அதற்கு பிறகும் ஆர்.எஸ்.எஸ்ஸுடைய முக்கிய நோக்கம் அதன் செயல்பாடுகள் மீதான பல கட்டுப்பாடுகளை நீக்குவதும் அதற்காக உழைப்பதுமாகவே இருந்தது.
அக்டோபர் 1949 இல் குருஜி கோல்வல்கர் டாக்டர் அம்பேத்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உடனிருந்தவர் சங்கரானந்த சாஸ்திரி எனும் தலித் தலைவர் ஆவார். அவர் ஆர்.எஸ்.எஸ்ஸை கடுமையாக எதிர்ப்பவர். இந்த சந்திப்பைப் பற்றி தனது புத்தகத்தில் எழுதும் போதே “ஆர்.எஸ்.எஸ் ஒரு மனுவாத பிராம்மணீய அமைப்பு” என்றெல்லாம் வசை பாடுகிறார் சாஸ்திரி. ஆனால் அதிர்ஷ்டவசமாக பாபா சாகேப் அம்பேத்கர் குருஜி கோல்வல்கரிடம் என்ன கூறினார் என்பதை சுருக்கமாக அதே சமயம் நேர்மையாக அவர் பதிவு செய்தும் இருக்கிறார் –
“சர்தார் படேலுக்கு தேசத்தின் சூழ்நிலை சிறப்பாக தெரியும். எனவே அவர்கள் ஆர் எஸ் எஸ்ஸின் நேர்மை குறித்து சர்தார் படேலை நம்ப வைக்க வேண்டும் என்று பாபா சாகேப் கூறினார் …. சர்தார் படேல் அனுபவமும் அர்ப்பணிப்பும் கொண்ட தேச பக்தர். எனவே கட்டாயமாக இது விஷயமாக படேல் கவனித்தில் கொண்டு ஆவன செய்வார் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ் விஷயமாக அமைச்சரவையில் விவாதங்கள் எழும் போது தடைகளை நீக்க வேண்டுமென்கிற ஆர்.எஸ்.எஸ்ஸின் கோரிக்கைகளுக்கு தாம் ஆதரவு அளிப்பதாகவும் பாபா சாகேப் கூறினார்” [2]
இதில் உள்ள மற்றொரு சுவாரசியத்தை கவனியுங்கள். இங்கு மேற்கோளுக்குள் ‘…’ என புள்ளிகள் வைத்த இடத்தில் இருப்பது ஆர்.எஸ்.எஸ் குறித்த இந்த ஆசிரியரின் வசை. ஆக, டாக்டர். அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ்ஸை வசை பாடவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களின் விஷயத்தில் அவர்களுக்காக அமைச்சரவையில் பேசுகிறேன் என்கிறார். ஆனால் அவரது சீடராக தன்னை கருதுகிறவரோ, ஆர்.எஸ்.எஸ் சாதிய அமைப்பு என்றால் அதை ஆதரித்து ஏன் பாபா சாகேப் பேச வேண்டும் என்று கூட யோசித்துப் பார்க்காமல் அதை வசை பாடுகிறார். வெறுப்பு மனநிலைகளின் விபரீத விளைவுகள்!
ஜூன் 1949 இல் தடை நீக்கப்பட்டு, அக்டோபர் 1949 இல் பாபா சாகேபை சந்தித்து அவரது ஆதரவை பெற முயற்சி செய்யும் அமைப்பு, அதே ஆண்டில் டெல்லியில் 79 இடங்களில் பாபா சாகேப் அவர்களுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் செய்து உருவ பொம்மைகளை எரித்ததாக கூறுகிறார் ராமசந்திர குஹா.
2007 இல் வெளியான ‘காந்திக்கு பிறகான இந்தியா’ எனும் நூலில் இந்த 79 கூட்டங்கள் ஒரு “ஆர்ப்பாட்டமாக” மாறிவிட்டது டிசம்பர் 11 1949 இல் ஆர்.எஸ்.எஸ் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும் அதன் மறுநாள் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு அம்பேத்கர் உருவ பொம்மையை எரித்ததாகவும் ஷேக் அப்துல்லாவின் காரை சேதப்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார் [3]
குஹாவின் மேம்போக்கான ’ஆராய்ச்சி’யின் விளைவு இது. ஏனென்றால் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு எதிரான பல கிளர்ச்சிகள் இப்படித்தான் முத்திரை குத்தப்பட்டன – ஆர்.எஸ்.எஸ் செய்யும் கிளர்ச்சி என்று. குறிப்பாக இடதுசாரி பத்திரிகைகளும், அறிவுஜீவிகளும், நேருவியர்களும் ராமராஜ்ய பரிஷத்தின் ஆர்பார்ட்டங்களை ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆர்பாட்டங்கள் என்றே கருதினர். எழுதினர். 1949 இல் குஹாவின் கணக்குப்படி டெல்லியில் மட்டும் 79 ஆர்பாட்டங்களை இந்து சட்ட மசோதாவுக்கு எதிராக நடத்திய ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபை, 1950 இல் கூடிய போது இந்து சட்ட மசோதாவுக்கு எதிராக ஒரு தீர்மானமும் இல்லை! அதே சமயம் கிழக்கு பாகிஸ்தான் அகதிகள் குறித்தும் அவர்களுக்கு செய்ய வேண்டிய நிவாரண பணிகள் குறித்தும் விரிவான தீர்மானங்கள் இருப்பதை காணலாம் [4].
மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்.
’காந்திக்கு பிறகான இந்தியா’ நூலில் ராமசந்திர குஹா இந்து சட்ட மசோதாவுக்கு எதிராக போர் கொடி உயர்த்திய கரபாத்ரி மஹராஜ் என்கிற துறவியின் வாதங்களை தருகிறார். அவர்தான் இந்த மசோதாவுக்கு எதிரான கிளர்ச்சியை உருவாக்கியவர் என்பதை சொல்கிறார். ஆர் எஸ் எஸ் தொடங்கிய இயக்கம் ஒன்றில் கரபாத்ரி தன்னை இணைத்து கொண்டார் என்றால், அது பசு வதை தடை சட்டத்துக்கான இயக்கத்தில் மட்டும் தான். ஆனால், அதில் கரபாத்ரி மட்டுமல்லாமல் ஆரிய சமாஜம், சமண அமைப்புகள் ஆகிய போன்ற பல்வேறு அமைப்புகளும் பங்கேற்றன. ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸையும் கரபாத்ரியையும் இணைத்து ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார் குஹா.
அதே சமயம் அதே கரபாத்ரி ஆர்.எஸ்.எஸ்ஸின் குருஜி கோல்வல்கரை இந்து மதத்துக்கு ’கெடுதல் செய்பவர்’ என கூறுகிறார்.
“கோல்வல்கர் தீண்டாமையும் சாதியும் வேரும் வேரடி மண்ணுமற அழிய வேண்டுமென நினைக்கிறார் ஆனால் இது தர்ம சாஸ்திரங்களுக்கு விரோதமானது”
என்கிறார் கரபாத்ரி [5]. குறைந்த பட்ச நேர்மையுடன் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் கரபாத்ரிக்குமான இந்த அடிப்படை சித்தாந்த மோதலை ஒரு வாக்கியத்தில் பதிவு செய்யும் எண்ணம் கூட குஹாவுக்கு இல்லை என்பது இயல்பான விஷயம்தான்.
பிம்பங்களை கட்டமைக்கும் அதிகார வரலாற்றாடலில் உண்மைகளுக்கு இடமிருப்பதில்லை. ஆனால் இது சத்தியசீலராக முன்னிறுத்தப்படும் காந்தியின் பெயரால் சந்தைப்படுத்தப் படுவதுதான் முரண்நகை.
ஹிந்து சட்ட மசோதாவை பொறுத்தவரையில், ஆர் எஸ் எஸ் நிலைப்பாடு என்னவாக இருந்தது? குருஜி பொதுவாக அரசு சட்டங்கள் அரசு இயந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாதவர். ஜனசங்கம் என்ற அரசியல் கட்சி உருவாவதில் கூட அவருக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் மத்தியில் இயல்பாக மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது.
ஆனால் இந்த நிலைபாட்டை கூட குருஜி பின்னாட்களில் மாற்றிக் கொண்டு விட்டார். சாதியம் ஒரு ஆபத்தான வீட்டை போல இடித்து அழிக்கப்பட வேண்டும் என்றே அவர் கூறியது பதிவாகியுள்ளது.
9-ஆகஸ்ட்-1963 இல் சாகித்ய சங்க தலைவரான ஸ்ரீரிஷ் கதலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குருஜி கோல்வல்கர், பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து கூறுகிறார்:
மதிப்பிற்குரிய டாக்டர் அம்பேத்கரின் புனித நினைவுக்கு வணக்கம் செலுத்துவது என் இயற்கையான கடமை என உணர்கிறேன். ஒடுக்கப்பட்டோர், ஆதரவற்றோர், கல்வியறிவு மறுக்கபப்ட்டோர், ஏழைகள் ஆகியோரே என் தெய்வம் அவர்களுக்கு உதவுவதே இறை தொண்டு என்றார் சுவாமி விவேகானந்தர். அதை முழுமையாக நம்பியவர் பாபா சாகேப் அம்பேத்கர். நம் சமுதாயத்தின் மோசமான குணமான தீண்டாமையை அவர் உணர்ந்திருந்தார். எனவே அவர் சம்பிரதாயங்களைத் தாக்கி புதிய விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தினார். அரசியல் சமுதாய அறியாமைகளால் ஆத்திரமடைந்த அவர் நேரடியான சமுதாய சீரமைப்புகான அழைப்பை விடுத்தார். அறியாமையால் ஒதுக்கபப்ட்டு அவமானப்படுத்தப்பட்ட நம் சமுதாயத்தின் முக்கியமும் முதன்மையும் வாய்ந்த ஒரு பகுதிக்கு மீண்டும் கௌரவத்தை விடாத முயற்சியால் பெற்றுத் தந்தார். அவர் செய்தது அற்புதமான செயல். அவர் அளித்த அளப்பரிய பெரும் நன்மைக்கு நன்றிக்கடன் செலுத்துவது என்பது இயலாத செயலாகும்.[6]
நம் மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் 1995 களுக்கு பின்னர்தான் டாக்டர் அம்பேத்கர் குறித்து பெரிய அளவில் பேச ஆரம்பித்தார்கள் என்பதை இங்கு நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
இந்து சட்ட மசோதா எதிர்ப்பு இயக்கத்தை எப்படி பார்ப்பது? இந்த எதிர்ப்பில் எப்படி சில காங்கிரஸ்காரர்கள் சேர்ந்தார்களோ அப்படியே ஆர்.எஸ்.எஸ் தனிநபர்கள் அந்த எதிர்ப்பில் இணைந்திருந்தனர்.நேருவின் காஷ்மீர் நிலைபாடு, நேருவின் கிழக்கு வங்க அகதிகள் நிலைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இந்துக்களின் நிலையால் இந்துத்துவ அரசியல் இயக்கத்தினர் நேருவின் எந்த முயற்சியையும் ஹிந்து எதிர்ப்பு என்றே நினைத்து எதிர்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டனர்.
இஸ்லாமியரின் உணர்ச்சிகள் குறித்து இஸ்லாமிய வகுப்புவாதிகளின் மனநிலையிலிருந்து சிந்தித்து செயல்பட்ட நேரு, இந்துக்களின் நியாயமான உணர்ச்சிகளையும் கூட பிற்போக்குத்தனம் என முத்திரை குத்த இந்த இந்து சட்ட மசோதாவை நன்றாக பயன்படுத்தி கொண்டார்.
டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப் பட்ட ஹிந்து சட்ட மசோதா பல இந்து ஆச்சார வாதிகளையும், கடும் மாற்றங்களை ஜீரணிக்க இயலாத சாதாரண பொது மக்களையும் கூட சீண்டியிருந்தது. கட்சி வேறுபாடில்லாமல் இதற்கு எதிர்ப்பு இருந்தது. டாக்டர். ஷியாமா பிரசாத் முகர்ஜி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் இதை எதிர்த்தனர்.
முகர்ஜி போன்ற தலைவர்கள் இதனை எதிர்த்த வரலாற்று பிழைக்கு ஓரளவாவது பரிகாரம் இருக்கத் தான் செய்தது. ஹிந்துத்துவ சார்பு தன்மை கொண்ட காங்கிரஸ் தலைவர்களிடமிருந்தே இதற்கு ஆதரவும் கிடைத்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, நர்ஹர் விஷ்ணு காட்கில் படேல் அணியைச் சார்ந்த காங்கிரஸ் தலைவர். லியாகத்-நேரு ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர். குறிப்பாக இஸ்லாமியருக்கு அவர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு செய்ய நேரு முயன்ற போது அதை மிகத் தீவிரமாக எதிர்த்து அந்த ஆபத்தை களைந்தவர். வீர சாவர்க்கரின் பக்தர். இவர் ஹிந்து சிவில் சட்ட முன்வரைவை அதே தீவிரத்துடன் ஆதரித்து பேசினார்.
சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றின் ஆசிரியரான தனஞ்ஜெய் கீர் எழுதுகிறார் – “பாராளுமன்றத்தில் காட்கில் இந்து சட்ட மசோதாவை ஆதரித்து உயிரோட்டமான ஒரு உரையை நிகழ்த்தினார். சட்டத்தை பொதுவான ஒரு ஒழுக்க விதிக்கு கொண்டு வர இந்த சட்டம் தேவையானது என்று அவர் கூறினார் “[7]. ஹிந்து மகாசபை தலைவர்களான மூஞ்சே, ஜெயகர் ஆகியோருடன் நெருக்கமான பண்டிட் குன்ஸுரு இதை ஆதரித்தார்.
ஆக, நேரு vs படேல் அல்லது போலிமதச்சார்பின்மை vs இந்துத்துவம் என்பதை குஹா சாமர்த்தியமாக ஹிந்து சட்ட ஆதரவு- vs எதிர்ப்பு என்பதுடன் இணைக்கிறார். இதன் மூலம் இந்துத்துவம் ஜனநாயக இந்தியாவுக்கு எதிரானது என ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். இந்த இணைப்பு பொருந்தாத விஷயம். நியாயமாக இணைத்து பார்க்கப்பட வேண்டியது, கிழக்கு வங்க அகதிகள் விஷயத்தில் நேரு செய்த நேரு-லியாகத் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட எதிர்ப்பில், ஒவ்வொருவரும் எந்த அணியில் இருந்தார்கள் என்பதைத்தான்.
போலி மதச்சார்பின்மையை உயர்த்தி பிடித்த தருணங்களில் எல்லாம் நேரு ஜனநாயக விரோதமாக நடந்திருப்பதையும் பார்க்கலாம். இன்றைய போலி மதச்சார்பின்மை – இந்துத்துவ சித்தாந்த மோதல் என்பது ஹிந்து சட்ட மசோதா மோதலின் நீட்சி அல்ல. நேருவின் கிழக்கு வங்க அகதிகள் விஷய நிலைப்பாட்டின் நீட்சி என்பதுதான் உண்மை. இன்னும் சொன்னால், போலி மதச்சார்பின்மை தன்னை அரசியல் சட்ட முகப்பில் நுழைத்து கொண்ட தருணம் இந்தியா இந்திராவின் பாசிச இருளில் இருந்த காலகட்டம். எனவே, போலி மதச்சார்பின்மைக்கு எதிரான இந்துத்துவத்தின் எதிர்ப்பு இந்திய ஜனநாயகத்துக்கு ஆதரவானது; ஜனநாயக எதிர்ப்புசக்திகளான பாசிச -மார்க்ஸிய-வகாபிய அணிகளுக்கு எதிரானது.
நாளை காலை தேநீருடன் மீண்டும் சந்திப்போம்.
ஒரு சிறு பின்குறிப்பு: இங்கு எழுதப்படுபவை ஆராய்ச்சி கட்டுரைகள் அல்ல. சில பார்வை பகிர்வுகள்தான். ஆனால் அவற்றில் உள்ள தரவுகளை தேடிப் போவதில் நம் இன்றைய காந்திய -நேருவிய இணைய ஆர்வலர்களுக்கு பிரச்சனைகள் இருப்பதால், அதனால் அவர்கள் இதயங்கள் வேதனைப்படுவதால் இம்முறை தரவுகளின் மூலங்கள் முழுமையாக அளிக்கப்படுகின்றன. உஸ்ஸு… முடியல…
பார்க்க:
[1] ராமசந்திர குஹா, Reforming the Hindus, ‘தி இண்டு’, 18/7/2004
[2] சங்கரானந்த சாஸ்திரி, My Experiences & Memories of Dr.Babasaheb Ambedkar, Gautam Book Centre, 1989, பக்.61-62)
[3] ராமசந்திர குஹா, India After Gandhi: The History of the World’s Largest Democracy, Pan Macmillan,2011, பக்.230-1
[4]பார்க்க: ஆர்.எஸ்.எஸ் தீர்மானங்கள்: ஆன்லைன் ஆவணங்கள்: https://www.archivesofrss.org/index.php?option=com_book&task=showFile&bookid=9
[5]சுவாமி கரபாத்ரி, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்க் அவுர் ஹிந்து தர்மா, மஹந்த வீரபத்ர மிஸ்ரா, வாரணாசி, 1970, பக்.32, (மேற்கோள் காட்டப்பட்ட நூல் ருது கோக்லி, Political Ideas of M.S. Golwalkar: Hindutva, Nationalism, Secularism, Deep and Deep Publications, 1993, பக்.91
[6]மகேஷ் சர்மா, Shri Guruji Golwalkar,Diamond Pocket Books (P) Ltd., 2006, பக்.101
[7] தனஞ்ஜெய் கீர், Doctor Ambedkar, Life and Mission, Popular Prakashan, 1995,பக்.432
மத சார்பற்ற அரசியலென்று சொல்லிக்கொண்டு முஸ்லீம் லீகுடன் கூட்டணி அமைத்து அரசியலில் தேர்தல்களை சந்தித்த காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும், திமுக , அதிமுக போன்ற இயக்கங்களும் மத சார்பு இன்மை என்பதற்கு விளக்கம் கொடுக்க கூட தகுதியற்றவை. ஆர் எஸ் எஸ் ஐப்பற்றி பொய்யாக , பொய்களை மட்டுமே எழுதிய ராமச்சந்திர குஹா மிக கடுமையான் பாவங்களை செய்திருக்கிறார். கடவுள் தான் இவரை மன்னிக்க வேண்டும்.
சரித்திரம் என்பது 80 விழுக்காடு ஆளுவோரின் கஜானாவிலிருந்து சலுகைகளைப்பெற , ஆளும் கட்சி, அல்லது ஆளும் அரச குடும்பம், அல்லது ஆளும் சர்வாதிகாரி, அல்லது ஆளும் ராணுவம் இவற்றிடம் இருந்து பல பொற்கிழிகளை பெரும் ஒரே நோக்கத்துடன் , சில சொம்புகளால் எழுதப்படுவது. எனவே அதில் 20 சதவீதம் உண்மை கலக்கப்பட்டிருந்தாலே அதிகம். எங்கள் பள்ளி நாட்களில் எங்கள் சரித்திர ஆசிரியரே , சரித்திரம் படிக்க சுவையானது, அதே சமயம் அதில் உண்மை ஏதாவது கலந்திருக்கிறார்களா என்று கண்டுபிடிப்பது மிக சிரமம். ஏனெனில் நம் நாட்டு சரித்திரம் வெள்ளையர்களால் அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தகுந்தபடி திரித்து எழுதப்பட்டது- எனவே அதில் உண்மைகள் ஏராளம் திரிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உள்ளன என்று சொல்லியது இன்னமும் நினைவில் உள்ளது. 1940-50 களில் நடந்த உண்மை நிகழ்ச்சிகளை அநீ- எழுதி 2013-லே தான் உண்மை வெளிவருகிறது. இன்னமும் காங்கிரஸ்காரர்கள் திரித்த பொய்கள் எவ்வளவோ ? இந்த ராமச்சந்திர குஹா போன்ற பொய்யர்கள் , பிழைக்கும் பிழைப்பு மிக கேவலம். இவருக்கு எந்த வெளிநாட்டு ஏஜென்சிகள் மூலம் கையூட்டு வருகிறது என்று விசாரித்துப் பார்க்கவேண்டும். ஒருவேளை இவர் காங்கிரஸ் கட்சியின் பினாமி ஆக இருப்பாரோ ?
குஹாவைத் தோலுரிக்கும் இந்த இரண்டாவது கட்டுரை RSS இயக்கத்துக்கு எதிரான பரப்புரையை பொய்களின் மூலமாக ‘அவர்கள்’ கட்டமைக்க நினைக்கும் சதியை அம்பலப்படுத்துகிறது.
It’s pity that Aravind Neelakantan readers never read good books just browse google . Aravind Neelakantan just an another bloke who read books , weave a story of his own. He never sits in Library , do research work on letters to write a story. He believe in books he read. It’s also pity anyone who read books can write anything and can create history te perceive. Books he gave for this article which are all RSS- Hindutva books except Guha’s book itself article is one sided. He shud also read Communist version , Gandhian Version and Many more letters to write an article which may not create a big picture but Atleast bring closer to big picture. Atleast I believe , this is how we have to do justice in writing an article not like Aravind Neelakantan’s cut copy paste from RSS-Hindutva books. I was asked to visit this site and give opinion on Aravind Neelakantan article. I just found he is an another propaganda writer whose main motive is to popularise himself
Udayasoorian CN,
from whom — you were asked to visit this site and give opinion about AN articles? And before you register this comment, how many articles you have read and made this conclusion?
சி என் உதயசூரியன் அவர்களே,
கம்யூனிஸ்டுகள் கட்டுச்சோற்றுக்குள் வைத்துக் கட்டப்பட்ட பெருச்சாளியைப் போன்றவர்கள். நேருவால் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி தெளிவாக பேசும் தொடரை கம்யூனிஸ்டுகளால் எப்படி ரசிக்கவோ, ஒப்புக்கொள்ளவோ முடியும். கம்யூனிஸ்டுகள் மூன்றாவது அணி என்று சொல்லி பிலிம் காட்டுவது எல்லாம் தேர்தலுக்கு பிறகு காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கினால் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கத்தான். தேர்தலுக்கு முன்னரேயே காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கினால் 3-வது அணி கோவிந்தா தான் என்பதை புரிந்து கொண்டுவிட்ட கம்யூனிஸ்டுகள் ஆடும் நாடகம் அனைவரும் அறிந்ததே. அநீ- எழுதிய தொடரில் தெரிவித்த கருத்தை மறுத்து, ஆணித்தரமாக ஒரு வாக்கியம் கூட எழுதமுடியாத நீங்கள் வீணாக ஏனய்யா இங்கு வந்து குழப்புகிறீர்கள். கவலைப்படாதீர்கள், தேர்தலுக்கு பிறகு காங்கிரசுக்கு நீங்கள் பல்லக்கு தூக்கும் மற்றும் சொம்பு தூக்கும் பணிகளை செய்ய முடியாது. ஏனெனில் நீங்கள் வெற்றிபெறப்போவதில்லை. இந்த தேர்தலில் உங்கள் மூன்றாவது அணி கனவு முற்றிலும் கலைந்துவிடும். உங்கள் கனவு களைய நம் வாழ்த்துக்கள்.
திரு அ நீ எழுதிய குற்றசாட்டுகளுக்கு நேரடியான பதில் சொல்ல தெரியவில்லை. ஆனால் அவர் book படிக்கவில்லை நூலகத்தில் போய் உட்காரவில்லை.கூகுளை நோண்டி நோண்டி கண்டபடி article எழுதுகிறார். என்றெல்லாம் தேவையற்ற குற்றசாட்டுகளை வைக்கிறார். அ நீ வைக்கும் குற்றசாட்டுகள் அனைத்தும் தவறு.என்று ஆதாரத்தோடு சொல்லு. அப்படி சொல்ல இருக்குதா தில்லு.? இல்லையெனில் அப்படி தள்ளி நில்லு. உதயசூரியன் என்று இவருக்கு பேரு. இந்தச சூரியனை communism என்ற eclipse பிடித்திருப்பதால்தான் ஞானம் என்ற வெளிச்சம் குன்றி போயுள்ளது. Hundutva books எல்லாம் onesided ஆனால் communism books மட்டும்தான் twosided . இவர் சொல்கிறார் எல்லாரும் கேளுங்கப்பா! Communism குடி கொண்டிருக்கும் மனதில் கண்டிப்பாக Communalism ம் குடியிருக்கும் அதன் வெளிப்பாடுதான் இவர் எழுத்து.
இந்து மதத்தில் தீண்டாமை சாதி கொடுமை அதிகமாக இருந்தது. இப்போ குறைந்து கொண்டு வருகிறது. இன்னும் குறைய வேண்டும். No doubt . இந்த சாதி ஒன்றிற்காக இந்து மதத்தையும் இந்துக்களையும் இப்படியா வெறுப்பது? சரி. கிறிஸ்தவ மதத்தில் சாதி வேறு பாடு இல்லையா? ஆதாரத்தோடு கூறமுடியுமா? இஸ்லாமில் ஷியா முஸ்லிம்கள் சன்னி முஸ்லிம்களை குண்டு வைத்து எதற்கு கொல்கிறார்கள்?
இப்படி இந்து மதத்தையும் மக்களையும் கேவலமாக பேசுவோர் நாற வாயை அடைக்க இந்து அமைப்புகள் ஜாதி அமைப்பை அழிக்க உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு பார்ப்பனர்கள் வழி விடவேண்டும். காஞ்சி சங்கராச்சாரியார் “தீண்டாமை எவ்விதத்திலும் கூடாது அது பெரும் பாவம்” என்று அறிக்கை விட வேண்டும். “இந்துக்கள் அனிவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள். எனவே நம்மிடையே சாதி பூசல் வேண்டாம்” என்று சொல்லவேண்டும்.
I expected this kind of frustration among Aravind Neelakantan’s fans . I’m not a communist or follow any ism . I told my opinion as how an article has to be written . Article Can’t be written just by reading books and forming our opinion based on those books . I am a voracious reader who read many books including latest Guha’s Gandhi Before India where Guha writes early life of Gandhi . Though I read many different genre books I never felt I have two horns in my head and started to think myself as authority of anything . Instead of criticising me , better read Good books , Good History books and compare those writings with Aravind Neelakantan . Also try to visit many places in our country , speak with many humans of different mind set , births , status, religion .you will come to know Humanity stands first not any ism or propaganda. I strongly believe Aravind Neelakantan kinda propaganda writers will certainly become popular than making popular of their cause i.e Spreading Hindutva. India is land of conflicts . These writers just divide it. They don’t have any concrete frame work to uplift it .
‘Man was born before books and Religon’. I believe this quote strongly . Also We cannot hold time . These Hindutuva or other religion people who propagate their views think they can hold time and recreate Glorious Past which they believe . Humanity and tears stands first than rest. I hope this reply is enough .
Udayasoorian CN,
I don’t see any differences between your first comment and then another one. same content you just copy / paste it . And you are happily saying that others are doing copy /paste job. in the comment section itself you are not in the position to explain your view properly. Earlier you said – “He shud also read Communist version , Gandhian Version”. Based on your knowledge can you explain the major differences between these two versions.
It is disappointing to read articles from Arvindan Neelakandan (AR). History is not few quotes from books and articles. You have to know the basis on which the social process moves. Certainly it is not moving on the basis on any relegion including hinduism. Mr. Pandian, you have to read atleast few important books of Marx and Engels to know the real history and the absurdity of AR’s writings. Just saying Marxism ecclipse, demon etc. will not improve your knowledge.
//Mr. Pandian, you have to read atleast few important books of Marx and Engels to know the real history //
real history of What? what do you mean by REAL HISTORY?
கோவை குமரன் அவர்களே,
மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவர் நூல்களையும் படித்தால் மனநிலை பாதிக்கப்படும், அவ்வளவுதான் கண்ட பலனாக இருக்கும். இருவருமே குழப்ப வாதிகள். பொருளாதாரம் பற்றிய உண்மை புரியாமல் கற்பனை உலகில் வாழ்ந்த மனிதர்கள். அவர்கள் இருவருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக. இருவரின் சிந்தனையுமே முற்றிலும் UTOPIAN THOUGHTஆகும். மார்க்சின் நூல்களை தாங்கள் உண்மையிலேயே படித்திருந்தால் , உங்களைப்பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறு வழி இல்லை. அய்யகோ !
மற்றவர்களை மார்க்சின் நூல்களை படிக்கச்சொல்லும் முன்னர் தாங்கள் படித்தீர்களா ? நிச்சயம் படித்திருந்தால் இவ்வளவு அபத்தமான முறையில் எழுத மாட்டீர்கள். கம்யூனிசம் என்ற குழப்பத்தில் , கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
1. மக்களுக்கு சுதந்திரம் , அதாவது எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம் , பத்திரிகை சுதந்திரம் ஒன்றுமே கம்யூனிசத்தில் கிடையாது. எனவே அது ஒரு சர்வாதிகார, காட்டுமிராண்டி தத்துவம்.
2. அரசாங்கமே இல்லாத ஒரு நாட்டினை கம்யூனிசம் கற்பனை செய்கிறது. அது நடைமுறை சாத்தியமா ? மன்னரோ, ஜனாதிபதியோ , ராணுவத்தலைவரோ, பிரதமரோ, அல்லது அட்லீஸ்ட் ஒரு சர்வாதிகாரி தலைமையிலோ ஒரு அரசாங்கம் என்ற அமைப்பு இல்லாமல் உலகில் மனித இனம் வாழமுடியாது. எனவே கம்யூனிசம் என்பது நடைமுறைக்கு உதவாத குப்பை. அது ஒரு கொடிய வைரஸ்.
3. நாட்டின் சொத்துக்கள் எல்லாமே அரசின் உடைமை என்று உளறுகிறார்கள். சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆனால், எல்லா சொத்தும் விரைவில் நூற்றுக்கு நூறு அழிந்து விடும். ஒரு மன்னர் பாலூற்றுங்கள் என்று சொன்னபோது எல்லோரும் தொட்டியில் தண்ணீர் ஊற்றி , மறுநாள் காலையில் ப ர்த்தபோது, தொட்டி முழுவதும் தண்ணீராக இருந்தது என்பதாக ஒரு கதை உண்டு. அரசாங்கத்தின் சொத்து என்றாலே ஒழுங்காக பராமரிக்க மாட்டார்கள் என்பது உண்மை. எனவே, சமுதாய அழிவுக்கே இது வழி வகுக்கும்.
4. ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களால் முடிந்த அளவு உழைப்பு பெறப்படும். ஆனால் கூலி மட்டும் அனைவருக்கும் ஒரே அளவாக இருக்கும். இது நடைமுறை சாத்தியமா ? ஒரு தொழில் சாலையில் 100 மூடியை தூக்கி சுமப்பவனுக்கும் ஒரே கூலி, ஐந்து மூட்டை தூக்கி சுமப்பவனுக்கும் ஒரே கூலி என்ற தத்துவம் ஒரு முழுப் பைத்தியக்காரத் தனம் இல்லாமல் வேறு என்ன ? மன நிலை பாதிக்கப்பட்டவன் தான் இப்படி ஒரு முழு லூசுத்தனமான ஒரு தத்துவத்தை உளறி இருக்க முடியும். எல்லோருக்கும் ஒரே சம்பளம் என்றால் எவனுமே உழைக்க மாட்டான்.
5. முதலாளிகளுக்கும், உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையே வர்க்கப்போர் உண்டாகும். இது எந்த நாட்டிலும் நடக்கவில்லை. முதலாளித்துவ நாடுகளில் தான் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை நடத்த உரிமை உள்ளது. கம்யூனிச நாடுகளில் போராட்டம் செய்த கோடிக்கணக்கான தொழிலாளர்களை உடனே சுட்டு கொன்று விடுகிறார்கள். ஆம். அங்கு தொழிலாளர்களுக்கு உள்ள ஒரே உரிமை/ சுதந்திரம் சாவது தான். சாவதை தடுக்க மாட்டார்கள். அதற்கு மட்டும் உரிமை கொடுத்துள்ளனர்.
6.வெளிநாட்டு மூலதனம் உள்ளே வரக்கூடாது. இதுவும் நடைமுறை சாத்தியமற்ற கருத்து. இன்று வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிக்காத நாடே உலகில் இல்லை. ஏனெனில் ஆனானப்பட்ட கம்யூனிஸ்ட் சீனாவே தனி நபர் சொத்துரிமையை அனுமதித்து அரசியல் சட்டத்தை திருத்தி விட்டது. மேலும் பர்மாஷெல் உட்பட ஏழு எண்ணெய் அரசிகளிடம் ( seven oil sisters ) கடலில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியை வெளிநாட்டு பகாசுர கம்பெனிகளிடம் ஒப்படைத்துவிட்டது.
7. கம்யூனிசத்தின் அபத்தங்களை பட்டியலிட்டால் 10,000 பக்கங்களை தாண்டும். தனிமனித முயற்சிகளுக்கு அங்கு எவ்வித ஊக்கமும் கிடையாது. கம்யூனிச நாடுகளில் சமுதாயமே ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட சமுதாயம் ஆகிவிடுகிறது.
8. மதம் ஒரு அபின். கடவுள் நம்பிக்கை ஒரு அபின் என்றார் லெனின். ஆமாம் , கம்யூனிசத்தை விட பெரிய அபின் உலகில் இல்லை. கடவுள், மதம் இரண்டுமே கம்யூனிசத்தைவிட குறைந்த தீங்கு பயப்பவையே ஆகும்.
9. கம்யூனிஸ்டு புரட்சி என்ற பெயரிலும், கலாசாரப்புரட்சி என்ற பெயரிலும் முறையே ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் கோடிக்கணக்கான மக்களை கொன்றது ஒரு சாதனை அல்ல. உண்மையான கம்யூனிசம் பற்றி அறிய பல்லவி அய்யர் எழுதிய சீனாவை பற்றிய நூலை வாங்கி படித்து பயன் பெறுங்கள் .
10. கடவுள் நம்பிக்கை ஒழிந்தால், மதங்கள் ஒழிந்தால் மனித இனத்துக்கு 500 சதவீதம் நன்மை விளையும். இது ஒரு மறுக்கமுடியாத உண்மை. ஆனால் கம்யூனிசம் ஒழிந்தாலோ மக்களுக்கு 10,000 சதவீதம் நன்மை விளையும்.எனவே கம்யூனிசமே முதலில் ஒழிக்கப்படவேண்டும்.
11. மனித இனத்தின் மகிழ்வு , பல பொருள்களை துய்ப்பதால் தான் கிடைக்கிறது. பொருள்கள் அதிக அளவில் உற்பத்தி ஆனால் தான் மனித சமுதாயம் நன்கு வாழ முடியும். ஆனால் கம்யூனிசம் , கதவடைப்பு, ஜன்னல் அடைப்பு, வேலை நிறுத்தம், மூக்கடைப்பு, என்று பலவிதமான அடைப்புக்களை ஏற்படுத்தி உற்பத்தி குறைவையே உருவாக்குகிறது. நாடு உருப்படுமா ?
12. மனித இனத்தையே கேவலப்படுத்தும் ஒரு தத்துவம் அது. மனிதனை மரத்தைவிட கேவலமாக ஒரு இயந்திரத்தைவிட கேவலமாக மனித இனத்தை மதிக்கும் தத்துவம் தான் கம்யூனிசம்.மனித இனத்துக்கே எதிரானது கம்யூனிசம்.
13. கம்யூனிசம் என்பது ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் அதிக அளவில் வழி வகுக்கும் ஒரு தத்துவம். சுப்ரீம் சோவியத் மற்றும் சீன கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் உலக அளவில் அதிக ஊழல் செய்யும் ஊழல் நாயகர்கள். நமது டூ ஜி, நிலக்கரி, சுரங்கம் ஆகிய இந்திய ஊழல்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் செய்யும் ஊழலுக்கு பக்கம் நிற்கவே முடியாது.
14. கம்யூனிசம் என்ற பெயரே ஒரு அழுக்காக ஆகிவிட்டது. முதலாளித்துவம் எவ்வளவோ மாறி, தேவையான அளவு திருந்தி விட்டனர். கம்யூனிசம் மாறவும் இல்லை, திருந்தவும் இல்லை. காலத்திற்கு ஏற்ப மாறாத கொள்கை அழியும். கம்யூனிசம் 75 சதவீதம் அழிந்துவிட்டது. விரைவில் எஞ்சிய 25 சதவீதமும் அழியும். ஏனெனில் அழிவுக்கான விதைகள் கம்யூனிசத்தின் உள்ளேயே இருக்கின்றன.
இப்போது கோவையிலிருந்து திரு. குமரன் வந்திருக்கிறார். வாங்கய்யா வாங்க! அவர் சொல்கிறார் ” History is not a few quotes from BOOKS” பிறகு அவரே சொல்கிறார். “You have to read a few BOOKS of Marx to know the REAL history” எனக்கு புரியவில்லை. அவர் என்ன கூற வருகிறார் என்று வேறு யாருக்கேனும் புரிந்தால் கூறுங்களேன். எவரேனும் “மார்க்சிசம் பேய” என்று ஏதாவது உளறினால் அவ்வளவுதான் உங்களுக்கு knowledge வளரவே வளராது.ஆகவே குமரனின் அறிவுரையை கேட்டு நடங்கோ. “அ..நீ அவர்களே! நீ சொன்னது இது இது தவறு அதற்கு ஆதாரம் இதோ” என்று எழுதுவார்கள் என்று பார்க்கிறேன். ஆனால் அவர்கள் அறிவுரை கூறுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். அறிவுரை கூற துட்டா துகாணியா!
திரு உதயசூரியன் என்பவர் “Communist version ஐ படி” என்பாராம் ஆனால் அவர் ஒரு பொது உடமைவாதி இல்லையாம்! இவர் “Humanity stands first ” என்கிறார். இவர் கூறும் மனிதாபிமானம் சீனாவில் உள்ளதா? ரஷியாவில் உள்ளதா? Can you it with your hand on your heart ? உங்கள் தலையில் கொம்பு முளைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். திரு நீலகண்டன் தனக்கு தலையில் 2 கொம்பு முளைத்திருக்கு என்று எப்போதாவது சொன்னாரா? எதற்கு வீண் பேச்சு?
நாம் டிவியில் debate நிகழ்ச்சிகளை பார்த்தால் கம்யூனிஸ்ட் ஆட்கள் இந்து மதம் மீதும் இந்து மக்கள் மீதும் வெறுப்பை கொட்டுவார்கள். மற்ற மதங்களில் “சமத்துவம் சகோதரத்துவம் கொடி கட்டி பறக்கிறதாம்! இஸ்லாமும் கிறிஸ்தவமும் முறையே குர்ஆனில் விவிலிய நூலில் ஆதாம் பற்றி கூறுகிறது. அந்த ஆதாமின் மகன் Cain என்பவன் தன தம்பியை கொன்று விட்டான். இவர்களின் சகோதரத்துவம் அப்போதே அடிபட்டுபோய் விட்டது. இஸ்லாமிய மதத்தில் சன்னி, ஷியா, ஷாபி,ஹனபி, ஹம்பலி, மாலிகி, அகமதியா, பஹாய், சலபிகள், வஹாபிகள், சூதுபிகள், என பல பிரிவுகள் உள்ளன. ஈரானில் ஷியா முஸ்லிம்கள் அதிகம். சௌதி அராபியாவில் சன்னி முஸ்லிம்கள் அதிகம். எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்ற ரீதியில் ஈரானின் எதிரியான இஸ்ரேலுடன் ரகசிய ஒப்பந்தத்தை சௌதி செய்துள்ளது. சூப்பர் சகோதரத்துவம்!
இந்து மதத்தில் குறைகள் உள்ளன. அதை மறுக்கவில்லை. ஒரு மதத்திலுள்ள குறைகளை அழிக்காமல் அந்த மதத்தையே அழிக்க நினைப்பது எப்படி இருக்கிறது என்றால் நம்மை ஈன்றெடுத்த தாய்க்கு ஒரு நோய் வந்து விட்டால் நோயை அழிக்க நினைக்காமல் அந்த தாயையே அழிக்க நினைப்பது போலாகும். கம்யூனிஸ்ட்களான நீங்கள் தாயை அழித்து விட்டால் அங்கே தயாராக ஒரு பேயும் (இஸ்லாம்) ஒரு நாயும் (கிறிஸ்தவமும்) காத்துக் கொண்டிருக்கின்றன. இப்படி இவர்கள் இந்து மதத்தை தைரியமாக விமர்சனம் செய்கிறார்கள். அதை வரவேற்கிறேன். ஆனால் இவர்கள் அதே போல இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களை மேடைகளில் ஏறி விமர்சனம் செய்ய முடியுமா? செய்தால் என்ன ஆவார்கள் என்று நான் சொல்ல தேவை இல்லை. நான் இன்று மேடை ஏறி பேசினால் நாளை எனக்கு பாடைதான். என் வீட்டில் சாவு மேளம்தான் சாம கோளம்தான் வங்க தேச பெண் எழுத்தாளர் (தஸ்லிமா நஸ்ரின்) தலைக்கு உலை வைத்து அதற்கு விலை (5 லட்சம்) தருவதாக Taukir Raza என்ற மௌலானா அறிவித்துள்ளார். நாம் சொல்லுவதை புரிந்து கொண்டால் நல்லது. ஆனால் முடியாது என்று அடம் பிடித்தால் “”திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம். வருந்தாத உள்ளங்கள் வாழ்ந்தென்ன லாபம்” என்று பாட்டு பாடி விட்டுவிட வேண்டியதுதான். வேறு வழி?
Dear Mr.CNU,
If Mr.AN is doing just copy-paste from google and not reading good books, without knowing how to write an article, please be generous enough to pardon that pathetically ignorant man.
Being a voracious reader, please set an example and show him the way how to write one. That way, not only AN, but the entire TH reader community will get benefited too.
We’re so earnestly waiting for your eye-opening article, which’ll be the first of its kind.
NB : Please, also, guide him – again, not only him, but all the readers of TH as well – what’re all the good books that he should read to become a voracious reader like you.
To counter my point on Aravind Neelakantan’s point means , I will become another Aravind Neelakantan which I don’t like it . Also I am here not to spoonfeed TamilHindu readers. Ter is no point of arguing to a fanatic . Even after conversation is over he will not accept it . Aravind Neelakantan’s articles are very similar to Jesus Calling article ( thanks to my friend who told me ) , communist propaganda or ism propaganda writers. I practice yoga and meditation . My opinion is always not to put so much of ism hurdles around us nd waste our live . Better come out, read books , meet people and realise ourself and others. Propaganda people like Aravind Neelakantan can easily convince many things to us but it won’t last long but to convince ourself even a single statement , we need to explore world , realise it . This will take time but it will last long . Spoon feeding won’t stay for ever. Also it’s more important to take care our health . No ism going to come for your help when u fell ill. It’s your Will power nd many good people around us ( ir respective of religion ) will help us to become better .I hope this is enough . After reading many books , hear many stories come to conclusion , don’t get spoonfeed by these fanatic writers whose intension is to popularise themselves than the cause.
Don’t try to tease me. The way you tease is too old and boring . Please do something interesting . . Have a good taste in teasing . I m not a person who sit in desktop and give my comments. So don’t want to reply here after
” I m not a person who sit in desktop and give my comments. So don’t want to reply here after”
@Udayasoorian CN
This is a cop out. Accuse someone without proof and then run away. If you disagree with Mr AN, refute with primary evidence. We don’t care whether you do meditation or Namaz 10 times a day. All we want is solid evidence that supports your stand. As they say in Oz, put up or shut up.
What to Prove ? I say Aravind Neelakantan never writes History. He writes fiction which is also very cheap propaganda fiction and earn his name by accusing respected historian like Guha . Could you argue ur facts with fiction ? It’s useless and waste of time . Arguments with fools and fanatics is always useless .
Dear Mr.CNU,
Thanks so very much for the enlightenment. Couldn’t have been substituted by even hundreds of books.
\\\ better read Good books , Good History books and compare those writings with Aravind Neelakantan .\\ read atleast few important books of Marx and Engels to know the real history \\
Adnausea left have been thriving on a propoganda that the skewed version of hate history they twist and present is sort of real history or good history.
நெஞ்சுக்கு நீதி பஞ்சுக்கு பீதி – இத்யாதி பெயரெல்லாம் அலுத்து CN அண்ணாதுரை யாக இல்லாது பாசம் பொங்க உதயசூரியனாக உதித்துள்ள புதிய அவதாரத்துக்கு நல்வரவு.
அவதார வரிஷ்டர்களை அடையாளம் கண்டு கொள்வது புதிதல்ல. புதிய மொந்தையில் பழைய கள்.
விவேக் ஹாஸ்ய காட்சியில் புதிய ஆளாகக் காண்பிக்க ஒருவர் ஒரு மச்சம் இன்னொருவர் கடா மீசை வைத்துக்கொண்டு வருவார். அது தான் ஞாபகம் வருகிறது.
அது எப்படி விடாக்கண்டராக பெயரே மாறினாலும் கொடாக்கண்டராக ஜோவென விதண்டாவாதம் மட்டுமே செய்ய முடியுமோ? தெரியவில்லை? தேவரீர் மகா மகோ பரந்த வாசிப்பு உள்ளவர் என்பது லோகம் அறிந்ததே. அதே போல் உலகம் அறிந்த விஷயம் அ.நீ தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து பல தளங்களில் இருக்கும் பல மதத்தினரைச் சார்ந்த மக்களுடனும் பழகுபவர் என்று.
Well for a change, instead of deciding what is a good book or a bad book – Whether AN has been just doing copy paste – indulging in continuous red herring – et al et al — Why don’t you come on board – and confront wrong facts with right facts.
Instead of beating around the bush, boldly confront the issue you feel wrongly portrayed with facts
That you can never do. huh!
பின்னூட்டங்களால் வ்யாசத்தின் போக்கையே மாற்றும் திறனெல்லாம் ஓகே. விஷயம் சாராத வெட்டி விவாதத்தால் யாருக்கு என்ன பயன்.
\\\ This is a cop out. Accuse someone without proof and then run away \\
oh! ஸ்ரீமான் ராமா, அந்தர்தானமாகுபவர் வேறு புதிய பெயரில் ஆவிர்பாவமாவது ஒன்றும் புதிதல்ல. அது எப்படி எந்த அவதாரமாக இருந்தாலும் விவாதாஸ்பத விஷயத்தைப் பற்றி மட்டும் பேசவே மாட்டேன் என்று ஹடம் பண்ண முடியுமோ தெரியவில்லை.
Let us wish our friend, better luck in the next new avatar with real change of mindset for a healthy exchange of facts.
அரவிந்தன் நீலகண்டன் மேலே தெளிவாக குஹா எழுதியது அனைத்தும் குறிப்பாக ஆர் எஸ் எஸ் சைப்பற்றி முழுவதும் தவறு என்று நிரூபித்துள்ளார். குஹா எழுதியது உண்மை என்று நிரூபிக்க ஏதாவது ஆதாரம் கொடுக்கவேண்டியது , குஹாவின் பொய்களின் ஆதரவாளர்களே . எவ்வளவு தடவை பொய்களை திருப்பி திருப்பி சொன்னாலும் பொய் பொய் தான்.,
Udayasoorian CN
since you have explained – “So don’t want to reply here after” — better stick on your point of view. even I don’t want to waste my time to reply. since you have vast knowledge, you explore so many things, read so many books – that too you have so much knowledge to identify which one is right and which one is wrong, experience to ignore isms – its really surprise for me you to come here and read this article, advice to people.
Ramachandra guha Is the missionaries supported Historian who gets funds similar to journalists like Ram whose daughter studied journalism in a prime institution in London with scholarships sponsored by missionaries whose only aim is to distort the actual original history and put a spanner on hindu dharma. Guha is the product like this and hence we can not expect his respect to the heritage, culture,tradition and belief of ancients of our soil since these people brains were washed by colonial and missionaries NGOs. Udayasoorian is one among them like “Asthamanasoorian” to give darkness
to the light given by tamilhindu by enlighting us with actual facts of history.
இந்த உதயசூரியன் என்ன சொல்ல வர்ரார்னு புரியல. ஏதோ சொல்ல வந்து அப்புறம் மறுமொழிக்கு பதில் சொல்ல முடியாமல், பாவம். இவர் தியானம் யோகா பண்ணினால் என்ன பண்ணாவிட்டால் என்ன? அநீ சொல்வது தவறு என்றால், தகுந்த ஆதாரத்துடன் பதில் எழுத வேண்டும் அதை விட்டுவிட்டு என்ன உளறுகிறார் என்றே புரியவில்லை.மேம்போக்காக உளறுவது மற்ற இணையதளத்தில் இயலும், இங்கே விசயத்தோடு வரவேண்டும், சும்மா விதண்டவததில் பயன் இல்லை
இந்த தேசத்தின் இன்றைய சீரழிவிற்கு காரணம்,
1. சீனாவிற்கு தலையையும், ரஷ்யாவிற்கு வாலையும் நீட்டும் கம்யுனிஸ்டுகள்,
2. கடவுள் இல்லை என்று சொல்லி இந்துக்களை மட்டுமே இழித்தும், பழித்தும் வருகின்ற ஈ. வெ. ரா கூட்டங்களான கருணாநிதி குடும்பம்
3. மதச்சார்பின்மை போர்வையிலே சிறுபான்மையினரை திருப்திபடுத்தி, பெரும்பான்மை இந்துக்களை சொந்த நாட்டிலே அகதிகளாக்கிய, வெளிநாட்டுக்காரனால் ஆரம்பிக்கப்பட்டு, வெளிநாட்டுக்காரியால் முடிக்கப்படவுள்ள காங்கிரஸ்.
இவயெல்லாம், நமது பாரதத்தை வஞ்சிக்கும் குள்ள நரிகள்.