ஜெயேந்திரர் விடுதலை…

morning_hindutvaகாஞ்சி சங்கர மடாதிபதிகளான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியும்,  ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதியும் சங்கரராமன் கொலை வழக்கில் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். சங்கரராமனை உண்மையில் கொலை செய்தது யார் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஏறக்குறைய ஒன்பதாண்டுகள் தீவிர விசாரணைக்கு பிறகு உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத நிலையில் காவல்துறை உள்ளது என்று கருத வழியில்லை. காவல்துறை இந்த விஷயத்தில் ஜெயேந்திரரை சிக்க வைக்க வேண்டும் சங்கர மடத்துக்கு எத்தனை அவப்பெயரை ஏற்படுத்த முடியுமோ அத்தனை அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்கிற ஒற்றை நோக்கத்தில் செயல்பட்டது என்பதுதான் உண்மை. குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என்பதை விட சங்கர மடத்துக்கும் சங்கராச்சாரியாருக்கும் முடிந்த அளவு  கெட்ட பெயரை பெற்றுத் தர வேண்டும் என்பதே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டது காவல்துறை. இதை உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியது:

JayendraIt leads to an inference that state machinery is not only interested in securing conviction of the petitioner (seer) and other co-accused but also bringing to a complete halt the entire religious and other activities of the various trusts and endowments and the performance of pooja and other rituals in the temples and religious places in accordance with the customs and traditions and thereby create a fear psychosis in the minds of the people

வேண்டுமென்றே செய்திகள் கசிய விடப்பட்டன. அவற்றில் பல அப்பழுக்கற்ற பொய்கள்; சில பொய்களும் உண்மைகளும் கலந்த வதந்திகள். தமிழகத்தின் ‘புலனாய்வு’ பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இந்த செய்திகளை வெளியிட்டன – கூடவே தம் கைசரக்கையும் சேர்த்து கொண்டன. ஒரு தனிமனிதனை – அந்த ஆள் எத்தனை மோசமானவராக இருந்தாலும்- எந்த அளவு அவதூறு செய்யப்பட முடியுமோ அந்த அளவு ஜெயேந்திரர் மீது அவதூறுகள் வைக்கப்பட்டன.

இந்த கட்டுரையாளனுக்கு காஞ்சி மடம் முன்வைக்கும் அத்வைதத்தின் மீது, அவர்கள் சொல்லும் வரலாற்றின் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியின் மீது மரியாதை உண்டு. அவர் தமது மீதிருந்த பாரம்பரியத்தின் பளுவைத் தாண்டி சமூக தளத்தில் இறங்கி செயல்பட்டார். தீண்டாமை தவறு என பகிரங்கமாக அறிவித்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை கொள்கை அளவிலாவது ஏற்றார். இதெல்லாம் ‘too little and too late’ என்கிற வகையைச் சார்ந்ததுதான். என்ற போதிலும் இந்த விஷயங்களில் அவர் அவரது முந்தைய பீடாதிபதிகளையும் மற்ற பல சம்பிரதாய அமைப்புகளைக்  காட்டிலும் பல மடங்கு உயர்ந்து நின்றார்.

ஆனால் அவர் ஒன்றை செய்ய தவறிவிட்டார். அவரது முந்தைய பீடாதிபதி சமூக தளத்தில் எத்தனையோ பிற்போக்கான கருத்துகளையும் பார்வையயும் கொண்டிருந்தார். தலித்துகள் ஆலய பிரவேச உரிமையை குறித்த அவரது செயல்பாடுகள் என்றைக்கும் இந்து மதவரலாற்றில் ஒரு மோசமான பக்கம். paramacharyaஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் காட்டிய ஒழுக்கமும், எளிமையும், வெளிப்பாடான தன்மையும் அபரிமிதமானது. ஆன்மிகவாதிகள் மட்டுமல்லாமல் அரசியல் சமூக வாழ்க்கையில் ஈடுபடுவோர் கடை பிடிக்க வேண்டியது. இதை மிகவும் திட்டமிட்டு கடைபிடித்தவர் காந்தி. அவரது பிரம்மசர்ய பரிசோதனைகளை  அவரே மறைக்கவில்லை. மற்றபடி அவரது வாழ்க்கை மிக மிக வெளிப்படையானது.அதைக்காட்டிலும் வெளிப்படையான தன்மையும் எளிமையும் நிரம்பியதாக இருந்தது ஒரு தனிமனிதத் துறவியாக ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாழ்க்கை.

அந்த எளிமையை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கடைபிடித்திருக்க வேண்டும். ஏனென்றால் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைக் காட்டிலும் ஸ்ரீ ஜெயேந்திரர் பயணித்த பாதை கடும் முட்களும் விஷ பாம்புகளும் நிரம்பியது. ஒவ்வொரு தலித் பகுதிக்கும் சென்றது, தலித் பூசகர்களிடம் கை நீட்டி பிரசாதம் வாங்கியது, தலித் தொழில் முனைவோருக்கு மடத்தின் சார்பில் உதவி வழங்கியது- என மடத்தின் போக்கை மாற்றியவர் அவர்.பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. தலித்துகள் குளித்து கோவிலுக்கு வர வேண்டும் என்று அவர் சொன்னதாக வெளிவந்த கருத்து ஆட்சேபத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது என்பதில் ஐயமில்லை. அதே போல பெண்கள் குறித்த அவரது கருத்துகளும் உதறித் தள்ளப்பட வேண்டியவை. ஆனால் அவரது மடத்தின் சூழலிலும் வரலாற்றிலும் அவர் எடுத்த முயற்சிகள் நிச்சயம் மிகப் பெரிய முன்னகர்வு. அதற்கான துணிவு அவரிடம் இருந்தது. இதை திராவிடர் கழகத்தைச் சார்ந்த சின்ன குத்தூசியே 1980களில் அவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியுடன் எடுத்த -பின்னர் பல சர்ச்சைகளை உருவாகிய- பேட்டியின் இறுதியில் ஒத்துக் கொண்டார்.

சங்கரராமனின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதை செய்தவர் எத்தனை உயர்ந்தவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென்பதிலும் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் நம் ஊடகங்களுக்கு அந்த நீதியா முக்கியம்? இன்றைக்கு பிறழ் சாட்சிகள் குறித்து மட்டுமே பேசி ஐயத்தை எழுப்பும் முற்போக்குகள் பலர் மிக கவனமாக தீர்ப்பின் இந்த பகுதியை மறந்துவிடுகின்றனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் புலன் விசாரணையில், தேவையற்ற தலையீடும், சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் செய்துள்ளது தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள கருத்து வழக்கு விசாரணையின்போது சாட்சி வாயிலாக தெரியவந்துள்ளது. காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் புலன் விசாரணையில் தலையிட்டதுடன், தலைமை புலன் விசாரணை அதிகாரி (சக்திவேல்) தன்னிச்சையாக, பாரபட்சமின்றி சட்டத்துக்கு உட்பட்டு புலன்விசாரணை செய்ய அனுமதிக்கப்படவில்லை. புலன் விசாரணையின்போது உள்ள சான்றுகளை நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்த புலன்விசாரணை அதிகாரி தவறிவிட்டார். சில சாட்சிகள் (அரசு சாட்சி 30-கண்ணன்) வேண்டுமென்றே புகுத்தப்பட்டுள்ளனர். சில சாட்சிகள் குற்றவியல் நடவடிக்கை சட்டம் 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் தர அச்சுறுத்தப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டோரில் கதிரவன், சின்னா ஆகியோர் சட்டத்துக்கு புறம்பாக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின்போது தலைமை காவலராகவும், தற்போது சார்பு ஆய்வாளராகவும் இருக்கும் கண்ணனை (அரசு தரப்பு சாட்சி 154), குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164-ன் கீழ் வாக்குமூலம் தரவேண்டி இடைக்கால பணிநீக்கம் செய்துவிட்டு, வாக்குமூலம் தந்த பிறகு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்பிரிவின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலம் அச்சுறுத்தல் பெயரில் பெறப்பட்டது தெரியவந்துள்ளது.

ஏன் தீர்ப்பின் இந்த பகுதி பேசப்படவில்லை.

நீதி மன்றம் சுட்டிக்காட்டும் இந்த பிரேம்குமார்தான் வழக்கு நடக்கும் போது ஜெயேந்திரருக்கு எதிராக அவதூறுகளை ஊடகங்களில் கசியவிட்டவர் என கூறப்படுகிறது. இன்றைக்கு ஜெயேந்திரரின் விடுதலைக்கு இந்த காவல்துறை அதிகாரியின் முறையற்ற செயல்பாடு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. ஒரு வாதத்துக்கு ஜெயேந்திரர் உண்மையான குற்றவாளி என வைத்து கொள்வோம். என்றால், நீதியை விரும்பும் பத்திரிகைகள் என்ன செய்திருக்க வேண்டும்? பிரேம்குமாரின் விசாரணை சரியான போக்கில் செல்கிறதா என்பதை அல்லவா கவனமாக கண்காணித்து அதை நெறிப்படுத்தியிருக்க வேண்டும்? ஆனால் நம் ஊடகங்கள் என்ன செய்தன? இதோ ஒரு இந்து மதத்துறவி கிடைத்துவிட்டார். அவரை எத்தனை கேவலப் படுத்துகிறோமோ அத்தனைக்கு தனக்கு ஒரு முற்போக்கு ஒளி வட்டம் கிடைக்கும் (ஜெயேந்திரர் விஷயத்தில் அரசாங்கத்தின் அருட்பார்வையும்) – இதுதானே இங்கே முக்கியமாக இருந்தது. காவல்துறை வீசி எறிந்த வதந்தி எலும்புத்துண்டுகளுக்கு வெறியுடன் பாய்ந்தன தமிழகத்தின் ஊடக ஓநாய்கள். இதில் மஞ்சள் பத்திரிகைகள், இலக்கிய பத்திரிகைகள், பெண்ணுரிமை பேசும் பத்திரிகைகள் என்றெல்லாம் பேதம் இல்லை. காலச்சுவடு என்கிற முற்போக்கு இலக்கிய பத்திரிகை, மஞ்சள் பத்திரிகைகளுடன் போட்டியிட்டு இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டது:

கேட்டுக்கொண்டிருந்த நான் சொன்னேன்: “சார், நீங்கள் ஜெயேந்திரரைத் தவறாக நினைக்கக் கூடாது. அவர் எல்லோரையும்தான் சட்டையை அவிழ்க்கச் சொல்கிறார். ஆண்களிடம் வெளியில் வைத்துக் கேட்பார். பெண்களிடம் உள்ளே வைத்துக் கேட்பார். அவ்வளவுதான் வித்தியாசம்.

மடத்துக்கு செல்கிற பெண்களை குறிவைத்து வீசப்பட்ட இந்த ஆபாச வார்த்தைகளுக்கு முற்போக்கு பெண்ணிய முகாம்களில் எந்த ஆட்சேபணையும் எழவில்லை. ஒப்பீடாக, பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ நிறுவனத்துக்கு செல்லும் பெண்கள் அனைவரையும் கேவலப்படுத்துவது போல இத்தகைய வாசகம் ஒன்றை காலச்சுவடால் வெளியிட முடியுமா? இந்து சன்னியாசி என்றால் என்னவென்றாலும் அவமானப்படுத்தலாம். இந்துக்கள் கையாலாகாதவர்கள் அவர்களை என்னவென்றாலும் சொல்லலாம். ஏன் அதன் பிறகு அதே மடத்தின் பக்தர்களான ஒரு வர்த்தக குழுமத்திடமிருந்தே விளம்பரங்களைப் பெற்று அந்த அவமானப்படுத்தும் அவதூறுகளை பிரசுரிக்கலாம். இலக்கிய தர்மம்!

premananda1

இன்றைக்கு பிரேமானந்தா என்கிற பெயர் ஏறக்குறைய போலி சாமியார் என்பதற்கு இணையான பெயராகிவிட்டது. ஆனால் அதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது இன்றைக்கும் மர்மம்தான். நகைச்சுவை நடிகர் செந்தில் போன்ற உருவம் கொண்டவர் பிரேமானந்தா. இதனால் ஊடகங்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிட்டது. அவரை குறித்து விதம் விதமாக கதைகள் பரப்பப்பட்டன. திரைப்படங்கள், நகைச்சுவைகள் என அவர் தொடர்ந்து ஒரு கேலிப் பொருளாக மாற்றப்பட்டார். இன்றைக்கு அவரது வழக்கு விசாரணை எப்படி குற்றவியல் மரபணு மூலக்கூறு பரிசோதனைகளில் தவறுகள் செய்யப்படலாம் என்பதற்கான textbook case என்றே அறியப்படும் சூழல். அந்த மனிதர் குறித்து சாட்சியம் அளித்த பல பெண்கள் அடித்து துன்புறுத்தி சாட்சி கூற வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பின்னர் அவரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட பல பெண்கள் அவை எல்லாம் பொய் என கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார்கள். பிரேமானந்தா வளர்ந்திருந்தால் இலங்கை பிரச்சனையில் தமிழ் ஹிந்துக்களுக்கு ஒரு அழுத்தமான குரலாக இயங்கியிருந்திருப்பார். ஆனால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டார். இது குறித்த காணொளி இங்கே.

அதே சமயம் தொடர்ந்து கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஓமலூர் சுகன்யா நினைவிருக்கிறதா? omallur2ஆகஸ்ட் 2010 இல் சிபிசிஐடி ரிப்போர்ட்டின் படி சுகன்யா 50 வயதுக்கு மேற்பட்ட 5 பேரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பான அறிக்கையை சி.பி. சி.ஐ.டி. போலீசார் கடந்த மாதம் வெளியிட்டனர். இது குறித்து ஏதாவது ஊடக பரபரப்பு ஏற்பட்டதா? ஜெயேந்திரரிடம் நடந்த அதே ஊடக ஓநாய்த்தனத்துடன் ஊடகங்கள் பாதிரிகளிடம் நடந்தனவா? வாராவாரம் விசாரணை செய்திகள் வதந்திகளாக ஊடகங்களில் காவல்துறையால் கசிந்துவிடப்பட்டனவா? எதுவும் இல்லை.

தொடர்ந்து கடலூர் புனித அன்னாள் பள்ளி மாணவி ஆனந்தவள்ளி மர்மமான முறையில் இறந்தார். FE_2310_MN_08_Cni-ph-1பள்ளியிலேயே தூக்கில் தொங்கினார். ஊடகங்களுக்கு அது அன்றைக்கு மட்டுமேயான செய்தி. இந்து குழந்தைகளுக்கு கிறிஸ்தவ பள்ளிகளில் நடக்கும் சித்திரவதையால் இறந்த குழந்தைகள் வரிசையும் உள்ளது. அனைவர் முன்னாலும் விவிலிய வாசகங்களை சொல்லச் சொல்லி அதற்காக அவமானப்படுத்தப்பட்டதால் தன்னைத் தானே எரித்து கொண்டு இறந்த பள்ளி மாணவி ரஞ்சிதா, இம்மானுவல் மெதோடிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி வி.ரம்யா(வயது 14) 19-செப்டம்பர் 2011 இல் வீட்டிற்கு வந்து தூக்கில் தொங்கினார். காரணம் அவர் பொட்டும் பூவும் வைத்து பள்ளி சென்ற போது ஆசிரியை அனைவர் முன்னாலும் அவமானப்படுத்தியதுதான். வளைகுடா நாடொன்றில் பணி செய்து கொண்டிருந்த தந்தையின் வார்த்தைகளில்:

அந்தப் பள்ளி, மாணவிகளை பூ மற்றும் பொட்டு வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவதை அனுமதிப்பதில்லை. இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு எரிச்சலூட்டும்படி நடந்துகொண்டிருக்கிறாள் ரம்யா. அதற்காக நாங்கள் பலமுறை அவளை தேற்றியிருக்கிறோம். ஆனால், இப்போது நாங்கள் எங்கள் மகளை இழந்துவிட்டோம். (தினமணி, செப்டம்பர் 19,2011)

ranjitha-killed-by-christianity… பட்டியல் நீள்கிறது. ஆனால் இப்படி நடைபெறும் தொடர் கொலைகள்/தற்கொலைகள் குறித்து எவ்வித கேள்வியும் ஊடகங்களில் ஏற்படவில்லை.

இவற்றுக்கெல்லாம் ஆதார அடிப்படையாக விளங்கும் மதச்சார்பற்ற கல்வியை அளிக்கும் நிறுவனங்களுக்கு மத அடிப்படையில் சிறுபான்மை உரிமையை ஒரு மதச்சார்பற்ற அரசு அளிப்பதில் இருக்கும் அபத்த முரணைப் பற்றி  ஒரு பேச்சு இல்லை.

அதனால் ஏற்படும் எதிர்மறை கல்வி பாரபட்சம் (educational apartheid எனலாமா?) குறித்தும் கூட ஒரு முனகல் அளவில் கூட விவாதம் இங்கு. இல்லை.

ஜெயேந்திரர் தீர்ப்பினால் நீதி மறுக்கப்பட்டு விட்டது என்றோ அல்லது தர்மம் ஜெயித்துவிட்டது என்றோ சொல்ல வரவில்லை. இன்னும் சொன்னால் ஒரு உயரிய பீடத்தில் இருக்கும் இந்து மத துறவி கூட சட்டத்தின் முன்னால் சரிசமம் என்றவிதத்தில் இந்த கொலை வழக்கு ஒரு இயல்பான சமுதாயத்தில் ஆரோக்கியமான போக்கு என்றே கருதலாம். ஆனால் பிராம்மண வெறுப்பு எனும் நாசி மனநிலையை காட்டும் வாய்ப்பாக திராவிட கும்பல்களும் இந்து மத வெறுப்பை கக்க ஒரு வாய்ப்பாக முற்போக்குவாதிகளும் அதை பயன்படுத்தினரே தவிர நீதி என்பதோ ஜனநாயகம் என்பதோ அங்கே இல்லை. ஜெயேந்திரர் மீதான குற்றத்தை ஊடகங்களே நீதிபதிகளாகி உறுதிப்படுத்தினர். அவர் மீது எத்தனை வக்கிர அவதூறுகளை வீச முடியுமோ அத்தனை வக்கிர அவதூறுகளை வீசி எறிந்தனர். ஒரு இந்து துறவி உண்மையாகவோ அல்லது ஊடகமாயை மூலமோ வீழ்ந்துவிட்டால் உடனே ஹிந்து விரோத ஹிந்து வெறுப்பு சக்திகள் வல்லூறுகளாக பாய்கின்றன – அவர் மீதும், அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் மீதும், கூடவே ஹிந்து மதத்தின் மீதும்.

இந்நிலை மாற வேண்டுமென்றால் தேவை இந்துக்கள் அரசியல் பெரும்பான்மை பெறுவது. டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியதுதான். இந்துக்கள் இந்தியாவில் வகுப்புவாரி பெரும்பான்மையினர்தான் அரசியல் பெரும்பான்மையினர் இல்லை.

இந்த நிலை மாறவேண்டுமென்றால் அதற்கு சுவாமி விவேகானந்தரின் சமுதாய பார்வை வேண்டும். சங்கர வேதாந்தம் செயல்முறை வேதாந்தமாக மாற வேண்டும். இன்றைய சூழலில் அதை செய்யும் நிலையில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி இருக்கிறார்.  ஆனால் இதை அவர் செய்வாரா? அதை செய்ய அவரைச் சுற்றி உள்ள சூழ்நிலை விடுமா? சாதியத்தால் பலனடையும் அரசியல் சக்திகளும் மதமாற்ற சக்திகளும் சும்மா இருக்குமா? அப்போது அவருக்கு துணையாக இந்து சமுதாயம் ஒருங்கிணைந்து குரல் கொடுக்குமா? கேள்விகள்.

மீண்டும் நாளை சந்திப்போம்.

101 Replies to “ஜெயேந்திரர் விடுதலை…”

 1. அரவிந்தனின் சிந்தனைகள் மிக சரியானவை. நமது மீடியாவில் பரபரப்புக்காக பிரேமானந்தா சாமியார் அவர்களுக்கு எதிராக பயமுறுத்தல் மற்றும் வன்முறையை பயன்படுத்தி ஏராளம் சாட்சியங்களை காவல் துறையினர் சேகரித்தனர் என்று தெளிவாக மேற்கண்ட வீடியோ மூலம் தெரிகிறது. சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே காவல் துறை மீது பல புகார்கள் வருகின்றன. இதுபோன்ற குறிப்பிட்ட தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், காவல் துறைமீதும் அரசு எந்திரத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சி மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.

  இரண்டு நாட்களுக்கு முன்னர் ராஜீவ் கொலை வழக்கில் , ஒரு சி பி ஐ அதிகாரி , பேரறிவாளன் சொன்ன வாக்கு மூலத்தை மாற்றிப் பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார். ராஜீவ் படுகொலை செய்யப்பட்டபிறகு 23 ஆவது வருடத்தில் , இந்த காவல் துறை அதிகாரியின் மனசாட்சி விழித்துக்கொண்டது . இந்த மனசாட்சி எப்படி விழித்தது ? இந்த மனசாட்சி இவ்வளவு நாள் செயல்படாமல் தூங்கியது ஏனுங்க ? இப்போது விழிக்க ஏதாவது சூட்கேஸ் மருந்து கொடுத்து விழிக்க செய்திருப்பார்களோ என்னவோ ? யார் கண்டது ? அதுசரி, பேரறிவாளன் தூக்கில் இடப்பட்டிருந்தால் என்ன செய்ய முடியும் ? இந்திரா காந்தி காலத்தில் இருந்தே சி பி ஐ என்பது மத்திய ஆளுங்கட்சியின் ஏவல் நாயாக மட்டுமே செயல்படுகிறது. எனவே சி பி ஐயை உடன் கலைக்க வேண்டும். இதுபோல எத்தனை வழக்குகளில் எத்தனை போலீசுக்காரர்கள் மாற்றிப்பதிந்தனரோ, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். அட கடவுளே ? ஜெயந்திரருக்கு எதிரான வழக்கில் நடந்தது அனைத்தும் மீடியா வக்கிரமே ஆகும்.

  இந்த வழக்கு விசாரணையில் ஒரு உண்மை தெரியவருகிறது. நடு ரோட்டில் அல்லது நீதி மன்றத்தில் உள்ளே புகுந்து பல கொலைகள் செய்யப்படுவதை பத்திரிகைகளில் படிக்கிறோம். ஆனால் கொலை செய்யப்படுபவர்களின் மனைவிக்கு ஐந்து லட்சம் பணம் கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் கணவர்கள் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் படுகொலை செய்யப்பட்டால் தான் இறந்தவர் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் கிடைக்கும். எனவே நாட்டில் இருக்கும் பிற கொலைகாரர்கள் எல்லோரும் திருக்கோயில்களை கொலை செய்யும் இடமாக மாற்றாமல் இருக்குமாறு , அந்த இறைவன் தான் அருளவேண்டும். கடவுள் நம்பிக்கை இருப்பது பாவமில்லை. ஆனால் மதங்கள் என்ற பெயரில், மத சட்டம் என்று சொல்லிக்கொண்டு மனிதன் பெண்ணடிமை, வன்முறை, பிற மதத்தினரை கொல்லுதல் , மத மாற்றம் ஆகிய கொடிய கிரிமினல் செயல்களை செய்கிறான், அதுவும் இவற்றை மதத்தின் பெயரால் செய்கிறான் என்பது தெளிவு. எனவே மதங்களை ஒழிப்போம். மதங்கள் அனைத்தும் ஒழிந்தால் மனித வாழ்வு சிறக்கும். உண்மையில் மதங்கள் தான் மனித வாழ்வில் விஷம் போன்றவை. மதம் என்றால் வெறி, விஷம் என்று பொருள். மேலும் இறைவழிபாட்டு இடங்களை, பள்ளிக்கூடம், மருத்துவமனை ,அல்லது அரசு அலுவலகம் என்று மாற்றிப் பயன்படுத்துவது நாட்டுக்கு நல்லது. என் கருத்தில் தவறு இருந்தால் தயவு செய்து திருத்துங்கள்.

 2. நல்ல நடை…. அ. நீ யின் பார்வையில் ஒரு தெளிவு தெரிகிறது… இன்னும் நிறைய நிறைய பேசலாம்… சத்யமேவ ஜெயதே..

 3. கட்டுரை மிகுந்த நடுநிலையுடனும் நேர்மையுடன் எழுதப்பட்டுள்ளது;

  ஆனால், “……இந்த விஷயங்களில் அவர் அவரது முந்தைய பீடாதிபதியை காட்டிலும் பல மடங்கு உயர்ந்து நின்றார்”. என்பதுபோன்ற ஒப்பிடுதல்களைத் தவிர்ப்பது என்பது இன்னும் சிறப்பாக இருக்கும். இருவரும் இருவேறு பெருமைகள் உடையவர்கள்; குறைகளைக் காணமுயன்றாலும் அப்படியேதான். இந்த முன்னகர்வு என்பது இருவரது காலத்திலும் வெவ்வேறு தளங்களில், வழிகளில் நடந்தது.

 4. முழுவதும் எழுதுவதற்கு முன் உள்ளிடுக பட்டனை அழுத்திவிட்டேன்.

  அ.நீ. மீது எனக்கு எந்த ஜென்ம விரோதமும் இல்லை என்பதை வலியுறுத்தவே இந்தச் சுட்டியைத் தந்திருக்கிறேன். சந்திரசேகரர் vs ஜெயேந்திரர் விஷ்யத்தில் எங்கள் சிந்தனை முறை நிறைய ஒத்துப் போவதைப் பார்க்கலாம்.

  ஊடகத்தின் சதியோ, அரசின் அதிகார துஷ்பிரயோகமோ, இல்லை நிறுவ முடியாத குற்றமோ ஜெயேந்திரர் மேல் படிந்த கறை முழுவதும் போகாது என்றே நினைக்கிறேன். அரசு எந்திரம் எப்படி எல்லாம் செயல்படக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த வழக்கு.

 5. //பிரேமானந்தா வளர்ந்திருந்தால் இலங்கை பிரச்சனையில் தமிழ் ஹிந்துக்களுக்கு ஒரு அழுத்தமான குரலாக இயங்கியிருந்திருப்பார். ஆனால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டார்//

  ithuvarai kelvipadatha seithyaga irukkirathu…..

 6. நானடைந்த சந்தோஷத்திற்கெல்லையில்லை. ஜெயேந்திரஸ்வாமியை சுமார் 40 வருடங்களாக அறிவேன். எல்லாம் பெரியவரின் அருள்.

 7. இவரை உயர்த்த மஹா பெரியவரை குற்றம் சொல்லியிருப்பதைக் கண்டிக்கிறேன் இதை அனுமதித்த தமிழ் ஹிந்துவுக்கும் எனது கண்டனங்கள்

 8. இந்து சமயம் விவாதத்தை ஊக்குவிக்கின்ற ஒரு சமயம். சிவ பெருமானையே பார்த்து குற்றம் குற்றமே என்று சொல்லும் சமயம். ஆனால் எதுவுமே ஆதாரபூர்வமாக இருக்க வேண்டும். ஸ்வாமிகள் மீது பல ஹிந்துக்கள் உட்பட எந்த ஆதாரமும் இல்லாமல், கண்ணை மூடிக்கொண்டு அவதூறு செய்தார்கள். இந்த விஷயத்தில் நடு நிலைமையோடு செயல் பட்ட பத்திரிக்கைகளில் தி ஹிந்து சிறப்பாக செயல்பட்டது. ( ஆனால் அவர்களும் சக்தி, பக்தி மாதிரி அவதூறுக்கு ப்ரண்ட் லைன் வைத்துக் கொண்டார்கள் ).

 9. இன்றைய காலைத் தேநீரில் சங்கரமடம் சார்ந்த நீதி பரிபாலனத்தில் ஊடக நடத்தைப் பற்றிய தீவிர விமர்சனத்தை வைத்திருக்கிறார் அரவிந்தன் நீலகண்டன். இது ஊடகங்களைச் சாடும் நேரமா என்று தெரியவில்லை. 9 ஆண்டுகள் நீடித்த ஒரு பரபரப்பான வழக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இது முடிவுக்கு வந்த விதத்தில் பல சோகங்கள் இருக்கின்றன. முதன்மையாக யாருக்கும் நீதி நிலைநாட்டப்படவில்லை. அத்தோடு அரவிந்தனால் வன்மையாகச் சாடப்படும் ஊடகங்களின் நோக்கம் நிறைவேறவில்லை. பாதிப்பை ஏற்படுத்தாத ஊடகத்தைச் சாடித்தான் என்ன பயன்?

  இன்றைய தேநீர்க் கட்டுரை இந்த தீர்ப்பினூடே பல செய்திகளைச் சொல்லிச் செல்கிறது. சந்திரசேகரர் ஜயேந்திரர் இவர்கிடையிலான ஒப்பீடு, முந்தையவரின் எளிமை, பிரேமானந்தா வழக்கு, சுகன்யா ரஞ்சிதா ஆகியோரின் மரணம் இன்னும் தீண்டாமை இவையெல்லாமும் கூட கலந்து கட்டிய சங்கரமட ஆறுதலாக இக்கட்டுரை இருக்கிறது. ஆனால் இவ்வழக்கின் தன்மையும் நடத்தப்பட்டவிதமும் தீர்ப்பும் தரும் நேரிடையான செய்திகள் முற்றிலும் வேறானவை. அவை முன்னிறுத்தப்படவில்லை.

  இவ்வழக்கு சங்கரராமன் என்பவரின் கொலை வழக்கா அல்லது ஜயேந்திரர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப் பற்றிய வழக்கா? மொத்த கட்டுரையும் சங்கரராமனைப் பற்றி ஒற்றை வாக்கியத்தை மட்டுமே சொல்கிறது. படுபயங்கரமாக ஒரு கோயில் வளாகத்தில் கோயில் பணியாளர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க இந்துமதம் தொடர்புடைய வழக்கு. இவ்வழக்கில் ஜயேந்திரர் சேர்க்கப்பட்டதற்கு பல அரசியல் பின்னணிகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் இருக்கும் உண்மைகளால் ஜயேந்திரர் குற்றமற்றவர் என்று சொல்ல இயலாதவரையில் இவ்வழக்கு இவ்வளவு நீண்ட காலம் நடந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களையும் நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தையும் கொண்டிருக்கும் ஒரு மடாதிபதியால் ஜாமின் கூட பெற முடியாத அளவுக்கு வழக்கில் சாரம் இருந்ததால்தான் ஊடகங்களும் வெகுமக்களும் இவ்வழக்கில் அவ்வளவு அக்கறை காட்டினர். உண்மையில் ஜயேந்திரர்தான் கொலை செய்தார் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட பன்முக வல்லமை கொண்ட அவர் மீது வழக்கு போட்டுவிடமுடியுமா? ஜெயலலிதாவைத் தவிர அவரை குற்றவாளிக் கூண்டிலேற்றும் துணிச்சல் எவருக்கும் வந்திருக்காது அவ்வகையில் நமது ஜனநாயகத்துக்கும் நீதி பரிபாலனத்துக்கும் இது மிகப்பெரிய முன்னகர்வு.

  எத்தனையோ அரசியல் மற்றும் செல்வாக்கு உள்ளவர்களின் குற்றங்களை மூடி மறைத்து விடுவதை சர்வ சாதாரணமாக பார்க்கும் நமக்கு இப்படி ஒரு பன்முக வன்மையுள்ள மடாதிபதி குற்றம் சாட்டப்படுவதே நமது நாட்டின் நீதி பரிபாலனத்தின் ஆகப்பெரிய முன்னகர்வு. இவ்வழக்கில் ஊடகங்களின் பங்களிப்பை அவ்வளவு எளிதில் புறம் தள்ள முடியாது. தமிழ்நாட்டில் ஈவெரா வளர்த்தெடுத்த படு கேவலமான பிராமண மற்றும் இந்து வெறுப்பு அரசியலில் ஒரு பக்க ஊடகங்கள் எல்லா நாகரிக எல்லைகளையும் தகர்த்தெரிந்து தங்கள் பரப்புரைகளையும் பரபரப்புரைகளையும் செய்துகொண்டிருப்பது கண்கூடு. ஆனால் இந்த வழக்கு விவகாரத்தில் ஊடகங்களின் முன்னெடுப்பே வழக்கை நீதியின் பால் செலுத்துவதற்கு காரணியாய் இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஜயேந்திரர் போன்ற பன்முக வல்லமை கொண்ட ஒருவருக்கு அவர் குற்றமற்றவராக இருந்திருந்தால் நம் நாட்டில் நீதி கிடைக்காமல் போகாது என்பது வெள்ளிடைமலை. எடுத்த எடுப்பிலேயே அது கிட்டியிருக்கும். அரவிந்தன் நீலகண்டன் சொல்வது போல ஊடகங்கள் மடாபதிக்குரிய மரியாதையோடு அணுகியிருந்தால் குற்றம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மரியாதைக்கே மரியாதை நிகழ்ந்திருக்கும். நீதி மன்றத்தின் இருபக்க வாதங்களைப் போலவே வெளியில் ஊடக விமர்சனங்கள் இருபக்கமும் இருக்கின்றன. அவற்றின் இயல்புக்கேற்ப பல நீளத்தில் அதீதமாக இருக்கின்றன.

  இவ்வழக்கு ஒன்றை தீர்மானமாகச் சொல்கிறது. [Edited] ஜெயேந்திரர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதே. மேலும் இதை இன்னும் முதன்மைப் படுத்தும் விதமாக அப்படி நிரூபிக்கத் தவறியதையே காவல்துறை மீது குற்றமாகச் சுமத்துகிறது இத்தீர்ப்பு. இந்தத் தீர்ப்பின் மிகப்பெரிய செய்தி இதுதான். இது மட்டும்தான். ஏனென்றால் இது ஒரு கொலைக்கான நீதி இன்னும் செய்யப்படவில்லை என்பதன் பட்டவர்த்தமான வாக்குமூலம்.

  சங்கரராமனை கொலை செய்ய வேண்டுமென்றால் அதற்கான நோக்கம் யாருக்கெல்லாம் இருந்தது என்பது புலன் விசாரணையின் முதன்மை அம்சம். இந்த அம்சம் சர்வ நிச்சயமாக ஜயேந்திரரையும் சங்கரமடத்தையும் சுட்டிக் காட்டுகிறது. ஆன்மிகத்தையும் வாழ்க்கை வழிமுறையையும் பாவ புண்ணியத்தையும் கற்றுத்தரும் நமது பாரம்பரிய இந்து அமைப்பின் மீது விழுந்திருக்கும் இந்தக் கறை துடைக்கப்பட்டிருக்கிறதா? ஜயேந்திரரின் விடுதலையை விட இது நமக்கு முதன்மையில்லையா? ஓர் இந்துவாக நாம் பெருமைப்படும் தருணம் அதுவாகத்தானே இருக்க முடியும்? சங்கர மடத்தின் ஆயிரக்கணக்கான பக்தரும் இப்போது அவதூறுக்காக ஊடகங்களைப் பழிக்கும் அரவிந்தன் நீலகண்டனும் இதற்காக என்ன செய்தார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்?

  சஙகரராமனை விடுங்கள். பாவம் ஒரு சாதாரண இந்து. செத்துப் போய்விட்டார். அவர் கொலைக்குக் காரணம் இந்த மடம் இல்லை என்பதை கண்டு பிடித்துத் தாருங்கள். அதுவரை ஓர் ஆத்மார்த்த இந்துமனம் உள்ளுக்குள் அதற்காக அலறிக்கொண்டே இருக்கும், மிக மௌனமாக.

 10. பொது விவாதம் என்று புனிதமான விஷயங்களை பொறம்போக்கு சமாச்சாரங்களுடன் கலந்து படைத்த இந்த கட்டுரை மிகவும் கண்டனத்துக்கு உரியது. நம்பிக்கை தூண்டும் உத்சாஹா மிகுதியால் படபடப்புக்கு உள்ளாகி நிதானம் தவறுவது சகஜம் என்பது உண்மையானாலும், இப்படி தமிழ்இந்து தரம் குறைந்து போனது வேதணை.
  பராசக்தி துணை.
  ஸ்ரீநிவாசன். V

 11. Comparing Jeyander with “periava” is rather a cheap stunt and also bringing out Christian preists sexual dalliance in this article. There are plenty of small time Hindu preists who indulge in various criminal acts just like small time christian preists do. But Kanchi kamakotti peetam is respected by Hindus of whole world and if something happens in this Peetam naturally it will be published more. It will happen if Pope or Bishop of CSI is caught. This case got squahed due to help from Karunanidhi regime and as Karunanidhi did with Madani case in cooimbatore blasts case to get some votes.Blind followers can follow but Truth is known to people who did the intial investigation.

 12. இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்களில் வெளியாகியுள்ள திரு எஸ் குருமூர்த்தி அவர்களின் கட்டுரையையும் படித்தால் பல உண்மைகள் மேலும் விளங்கும். இந்த வழக்கு தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமே, குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கமின்றி, ஜெயேந்திரர், சங்கரமடம் என்ற இரண்டினையும் பிரித்துப் பார்க்க தவறிய காவல்துறையினரின் அவசரமும், அந்த காவல் துறைக்கு பின்னே ஊக்கம் தந்த திராவிட மோசடி கும்பலும் தான். சங்கர மடம் என்பதற்கும் இந்த கொலை வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

  ஜெயேந்திரர் என்ற தனி நபர் மீது குற்றம் சொல்லும் வழக்காக நடத்தாமல், தேவை இல்லாமல் மடத்தினையும் இழுத்து, வழக்கை குழப்பியதால் தான் இந்த வழக்கு கோவிந்தா ஆனது. ஒரு அரசு ஊழியர் ஒரு கிரிமினல் குற்றத்தை செய்தால், அந்த அரசே அந்த கிரிமினல் குற்றத்தை செய்ததாக ஆகாது. ஒரு மருத்துவர் குற்றம் செய்தால், அவர் படித்த மருத்துவக் கல்லூரி அந்த குற்றத்துக்கு உடந்தை என்று சொல்வது தவறு. அதே மருத்துவக் கல்லூரியில் படித்த மற்ற மருத்துவர்கள் எல்லோரும் குற்றம் செய்கிறார்களா என்பது தான் நமது கேள்வி. எனவே, எதனையும் generalise – செய்யாமல் , குறிப்பிட்டு சொல்வதே நல்லது. பீடாதிபதி என்ற பதவியில் இருக்கும் தனி நபரையும், அந்த பீடத்தையும் பிரித்துப் பார்ப்பதே முறை. மடம் என்பது பல லட்சக்கணக்கான நபர்கள் சம்பந்தப்பட்ட ஒரு அமைப்பு. அதில் சிலர் ஒரு தவறை செய்கிறார்கள் என்றால் தவறு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அந்த மடத்தின் வருமானம் குறைந்து, அந்த மடத்தின் மூலம் நடைபெறும் பல தர்ம காரியங்கள் தடைப்படும் விதத்தில் செயல் படக்கூடாது. மத்திய அரசில் டூ ஜி, நிலக்கரி, ஆதர்ஷ், காமன்வெல்த் என்று கணக்கில் அடங்காத ஊழல்கள் நடந்துள்ளன என்று உலகமே சிரிக்கிறது. அதற்காக மத்திய அரசையே வேண்டாம் என்று கலைத்து விட முடியுமா ? இப்போது உள்ள மத்திய அரசுக்கு பதிலாக புதிய அரசை தேர்ந்தெடுத்து , முன்னாள் ஊழல் வாதிகள் மீது விசாரணை, வழக்கு என்று போவதுதான் முறை. அரசாங்கமே இருக்க கூடாது என்று சொல்வது முறை அல்ல. நமது ஊடகங்களும் 2004-லே விஷத்தை கக்கின. ஒரு மாவட்ட கலெக்டரே தவறு செய்தால் கூட, அவருக்கு பதிலாக அந்த நிர்வாகத்தை நடத்த வேறு ஒரு புதிய கலெக்டரை நியமித்து, அதன் பிறகே பழைய கலெக்டரிடம் விசாரணை செய்ய முடியும். காஞ்சி மடத்துக்கு புதிய சங்கராச்சாரியார்கள் இருவரை நியமித்து, மடத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில், தக்க ஏற்பாடுகளை செய்துவிட்டு, அதன் பின்னர் விசாரணைகள் செய்யப்பட்டிருந்தால் , எல்லோரும் பாராட்டியிருந்திருப்பார்கள். அநீ- மேலே தெளிவாக சுட்டிக் காட்டியிருப்பது போல, இதுவே ஆபிரகாமிய மத தலைவர்களுக்கு எதிரான வழக்காக இருந்தால், செய்தி தாள்களில் ஒரு நாள் செய்தியுடன் போயிருக்கும் . ஊடகங்கள் ஒரு வருடம் மஞ்சள் புலனாய்வு மட்டுமே செய்தன. ஜெயேந்திர சரஸ்வதி அவர்களும், விஜயேந்திரரும், மடத்தில் அனைத்து ஜாதியனருக்கும் சமஉரிமை கொடுத்து , எல்லோரையும் சமபாவனை செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு ஒரு அடித்தளம் அமைத்தனர் என்பது யாரும் மறைக்க முடியாத உண்மை. இன்றைய நிலையில், இரு பீடாதிபதிகளும் புதியவாரிசுகளை அமர்த்திவிட்டு, ,அவர்களுக்கு வழி காட்டிக்கொண்டு , பீடத்திலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. காஞ்சி மடத்தின் பெருமை மேலும் சிறக்க இதுவே வழியாகும்.

 13. //இந்த கட்டுரையாளனுக்கு காஞ்சி மடத்தின் மீது, அவர்கள் முன்வைக்கும் அத்வைதத்தின் மீது, அவர்கள் சொல்லும் வரலாற்றின் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியின் மீது மரியாதை உண்டு. அவர் தமது மீதிருந்த பாரம்பரியத்தின் பளுவைத் தாண்டி சமூக தளத்தில் இறங்கி செயல்பட்டார். தீண்டாமை தவறு என பகிரங்கமாக அறிவித்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை கொள்கை அளவிலாவது ஏற்றார். இதெல்லாம் ‘too little and too late’ என்கிற வகையைச் சார்ந்ததுதான். என்ற போதிலும் இந்த விஷயங்களில் அவர் அவரது முந்தைய பீடாதிபதிகளையும் மற்ற பல சம்பிரதாய அமைப்புகளைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்து நின்றார்//
  பீடத்திலேயே உட்கார்ந்திராமல் இறங்கி வந்து வளர்ச்சிக்காக முயற்சி செய்த விஷயத்தில், அவர் நெறைய காலத்திற்கான மாற்றம் கொண்டுவந்ததிற்காக எழுதப்பட்ட வரிகள் நான் சரியாக புரிந்து கொள்கிறேன் என்று நினைக்கிறேன்.

 14. நீதி மன்றங்கள் தங்களுக்கு முன் வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்க முடியும். இந்த வழக்கில் காவல் துறை தேவை இல்லாமல் தடம் மாறி பயணித்து உள்ளது என்று உச்ச நீதி மன்றமே ஒரு குட்டு வைத்தபோதே வழக்கு கோவிந்தா என்று தெளிவாக தெரிந்துவிட்டது.

  1.அநீ- அவர்கள் காட்டியுள்ள ஒப்பீடுகள் சிந்திக்க வைக்கும். இன்றைய தினமணி- இந்தியன் எக்ஸ்ப்ரஸில் வந்துள்ள திரு எஸ் குருமூர்த்தி அவர்களின் கட்டுரையிலும் சிந்திக்க வைக்கும் ஏராளமான தகவல்கள் நன்கு தொகுத்து தரப்பட்டுள்ளன.

  2. அத்வைதம் என்பதையும் காஞ்சி மடம் என்பதையும் நமது தளத்தில் பல அன்பர்கள் அடிக்கடி முடிச்சுப் போடும் போது, ஏதோ அத்வைதம் என்பதே இங்கு மட்டுமே உள்ளது போல நினைத்து எழுதுகிறார்கள். இந்தியா முழுவதும் என்ன உலகெங்கும் அத்வைத வழி வந்தோர் பரவிக்கிடக்கின்றனர். காஞ்சி மடமும் அவற்றில் ஒன்றே ஆகும். மேலும் இந்து மதத்திலும் அத்வைதம் என்பது ஒரு முக்கியப்பிரிவு அவ்வளவுதான். இந்து மதத்தில் எந்த பிரிவுமே , தங்கள் பிரிவு மட்டுமே இந்துமதம் என்று முற்றுரிமை கொண்டாட முடியாது.

  3.காஞ்சி மடத்தின் நலத்தினை கருதி, இரு பெரியவர்களும் , புதியதாக இருவரை பயிற்றுவித்து, பொறுப்பை அவர்களிடம் கொடுத்துவிட்டு, தாங்கள் விலகி நின்று , புதியவர்கள் மடத்தினை நடத்த வழிகாட்டுவது , அந்த மடத்துக்கு நல்லது.

  4. சங்கரராமனை கொலை செய்த கொடியோரும், அவனைப்போன்ற மூடர்களை ஒரு புனிதமான திருக்கோயிலில் வைத்து கொலை செய்த பாவத்தினையும், எந்த ரூபத்திலாவது அனுபவிக்கத்தான் நேரிடும்.

  5. இந்த வழக்கில் தனி நபர்கள் சிலர் செய்த குற்றங்களை விசாரிக்கும் விதம் என்ன என்பது புரியாமல் , ஒரு பழைய மடத்தின் பெயரையும் தேவை இல்லாமல் இழுத்து, பிரேம் குமார் குழப்பி விட்டார் என்பது வருந்த தக்கது.

 15. தமிழ்ஹிந்துவில் வந்த முக்கியமான கட்டுரைகளுள் இதுவும் ஒன்று. கட்டுரையாளருக்கு காஞ்சி மடத்தின் ஆதார அம்சங்களான அத்வைதம் மற்றும் வரலாற்று இருப்பு ஆகியவற்றோடு ஒப்புமை இல்லை என்பதை சொல்லி, பழைய பீடாதிபதியின் மீது கட்டுரையாளருக்கு இருக்கும் விமர்சனங்களையும் சொல்லியிருப்பது தமிழ்ஹிந்து இணைய இதழானது வெளிப்படையான, சகலவிதமான விமர்சனங்களையும் வெளியிடக்கூடிய, முற்போக்கு இந்துத்துவ சிந்தனை கொண்டது என்பதை நிரூபிக்கின்றது.

  கடவுள் அருளால் தமிழ்ஹிந்து மேலும் மேலும் விரிவடைந்து அனைத்து தமிழர்களையும் சென்றடைந்து சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடட்டும்.

 16. நீதியரசர் ஓகை நடராசன் அவர்கள் அருமையான கேள்வி கேட்டிருந்தார். ஜெயந்திர சரஸ்வதி (சுவாமிகள்) கொலை செய்யவில்லை என்றால், சங்கரராமன் தற்கொலை செய்து கொண்டு, தன்னைத் தானே வெட்டிக்கொண்டு இறந்தாரா? தான் இறந்தால் அதற்குக் காரணம் ஜெயந்திர சரஸ்வதி (சுவாமிகள்) தான் என்று ஏற்கெனவே சங்கரராமன் போலீசில் எழுதிக் கொடுத்திருந்த போது எப்படி கொலையாளியை எவ்வித தண்டனையும் இன்றி வெளியே விட்டார்கள் ? என்று நீதியரசர் ஓகை நடராசன் கேட்டிருக்கும் கேள்விக்கு பகுத்தறிவுச் செம்மல், பிரம்மா ஞான அறிவியலாளர் அரவிந்தன் பதில் சொல்லியே தீர வேண்டும். இதே கொலையை ஓரு [edited] கசாப்புக் கடைக்காரர் செய்திருந்தால் சங்கராச்சாரியாரை விட்டால் போல வெளியே விட்டிருப்பார்களா? என்று கேட்டிருக்கும் ஓகை நடராசன் அவர்களின் சமூக நீதிபக்தி ஓங்குக.

 17. எது உண்மை என்று புரியாமல் இருந்தேன். இந்த கட்டுரை வாசிக்க வில்லை என்றால் நானும் தவறாகத்தான் புரிந்து கொண்டிருப்பேன் .நன்றி அண்ணா .

 18. அற்புதமான கட்டுரை. நன்றி அரவிந்தன்!

  தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இது ஒரு பொய்வழக்கு என்று மட்டுமே சொல்லவில்லை. உண்மையில் இவ்வழக்கே ஐபிஎஸ் அதிகாரி அசோக்குமாரின் கைங்கர்யம். அதுவும் ஜெயலலிதாவுக்காகச் செய்தது. தெய்வம் நின்று கொல்லும்.

  அசோக் குமாருக்கு தண்டனை கிடைத்துவிட்டது. இன்னொருவரைத் தண்டிக்க பெங்களூரு நீதிமன்றம் காத்திருக்கிறது.

  இத்துடன் தினமணி நாளிதழில் இன்று (28.11.13) வெளியாகியுள்ள திரு. எஸ்.குருமூர்த்தி அவர்களின் கட்டுரையும் படிக்கப்பட வேண்டியது.
  அதன் சுட்டி:
  http://dinamani.com/editorial_articles/2013/11/28/சங்கராச்சாரியார்-வழக்கு/article1915075.ece

 19. //seenuerodu on November 28, 2013 at 7:12 am
  //பிரேமானந்தா வளர்ந்திருந்தால் இலங்கை பிரச்சனையில் தமிழ் ஹிந்துக்களுக்கு ஒரு அழுத்தமான குரலாக இயங்கியிருந்திருப்பார். ஆனால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டார்//

  ithuvarai kelvipadatha seithyaga irukkirathu…..//

  சீனு,
  பிரேமானந்தவை சிஷ்யர்கள் கிருத்துவ பாதிரிகளை அழைப்பது போல் ‘அப்பா’ என்றே அழைத்தனர். 60 துக்கும் மேற்பட்ட அநாதை சிறார்களை வைத்திருந்து ஆசிரமம் நடத்தினார். இச்சிறுவர்களை வைத்து ‘கருணை இல்லம்’ நடத்தினால் வெளிநாடுகளில் இருந்து தலைக்கு பத்தாயிரம் கிடைக்குமே என்று அனதைகுழந்தைகளைத் தருமாறு பேரம் பேசினார் பாதிரியார்கள். மிரட்டியும் பார்த்தார்கள்.

  இலங்கையில் சிந்தும் ரத்தம் தங்களுக்கு கிருத்துவத்தை பரப்ப உதவும் என்று நினைத்த பாதிரிகளுக்கு பிரேமானந்தா பேசினால், அவர் இலங்கை மக்களுக்கு பிரதிநிதியானால் தங்கள் அறுவடை போய்விடும்.. தடுக்க எதையும் செய்யலாம் என்று பாதிரியார்களும் கிருத்துவ நீதிபதி பானுமதியும் சேர்ந்து செய்த காரியம் தான் இது.

  இப்போது இலங்கை வடக்கு மாகாண தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட விக்னேஸ்வரன் அவர்களின் பேட்டி இதோ: http://www.sundaytimes.lk/130721/news/im-not-a-politician-i-only-wish-to-serve-my-suffering-people-53745.html இதில் ‘Swami Premananda’ என்று தேடுங்கள். இலங்கை மக்கள் அவரை எவ்வளவு மதித்தார்கள் என்பதும், தமிழ் நாடு அரசை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதும் தெரியும்.

 20. மனசாட்சியை முழுவதுமாக அடகு வைத்து விட்டு எழுதப்பட்ட கட்டுரை. ‘கொலை மிரட்டல் எங்களுக்கு இல்லாதிருந்திருந்தால் நாங்கள் மாற்றி பேசியிருக்க மாட்டோம்’ என்ற புதிய தலைமுறையின் சங்கர ராமனின் மனைவியின் பேட்டியை அநீ போன்றோர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது நல்லது. மனு நீதி ஆட்சி செய்கிறது. வேறு என்ன சொல்ல…

 21. மிகக் கவனத்துடன் அக்ஷரம் பிசகாது வடிக்கப்பட்ட வ்யாசத்திற்கு நன்றி ஸ்ரீ அ.நீ.

  ந்யாயாலயம் குற்றமற்றவர் என்று சங்கராசார்யர்களை விடுவித்த பின்பும் அவர்கள் மீது குற்றம் சுமத்த விரும்பும் ஊடக க்றீச்சல்களில் வெறுப்பும் காழ்ப்பும் மட்டும் உள்ளனவே அன்றி — சாக்ஷிகள் ந்யாயாலயத் தீர்ப்பு இவற்றின் அடிப்படையில் — இன்னமும் வெறுப்புமிழ்வாளர்கள் ஏன் இவரைக் குற்றம் சாட்ட விழைகின்றனர் என்ற அறிவு சார்ந்த விவாதம் அறவே இருக்காது.

  \\\ காஞ்சி மடத்தின் நலத்தினை கருதி, இரு பெரியவர்களும் , புதியதாக இருவரை பயிற்றுவித்து, பொறுப்பை அவர்களிடம் கொடுத்துவிட்டு, தாங்கள் விலகி நின்று , புதியவர்கள் மடத்தினை நடத்த வழிகாட்டுவது , அந்த மடத்துக்கு நல்லது. \\\

  க்ஷமிக்கவும் ஸ்ரீமதி. அத்விகா.

  ஆப்ரஹாமிய வெள்ளை சர்ச்சை சேர்ந்த திரைமறை குழுவினர் குற்றம் இருந்தாலும் இல்லாவிடினும் ஒவ்வொரு — ப்ரபலமாகும் — சமூஹத்தின் கவனத்தை ஈர்க்கும் பெரியோர்களை குறி வைத்து — க்றைஸ்தவ ஊடக பலத்தின் துணை கொண்டு விஷம ப்ரசாரம் செய்வது எதிர்காலத்திலும் தொடரும்.

  இந்த வழக்கு அளிக்கும் பாடம் ஊடக துஷ்ப்ரசாரத்திற்கு அடிபணிந்து ஹிந்து இயக்கத்தைச் சார்ந்த யாரும் தங்கள் சமய மற்றும் சமூஹப் பணிகளிலிருது விலகாது தொடர வேண்டும் என்பதே.

 22. //அவரது முந்தைய பீடாதிபதி சமூக தளத்தில் எத்தனையோ பிற்போக்கான கருத்துகளையும் பார்வையயும் கொண்டிருந்தார்//

  அ நீ – திராவிட அன்பர்களிடம் கேட்டால் மதம் என்ற ஒன்றே பிற்போக்கானது என்று சொல்வர். அதை நீங்கள் ஏற்ப்பீர்களா? இந்த பிர்ப்போக்கு முற்ப்போக்கு என்பதெல்லாம் அவரவர் மனநிலை மற்றும் வாழ்கை முறையை பொருத்தது. உங்களுக்கு ஒரு விடயம் ஒத்து வரவில்லை என்றால் அது பிர்ப்போக்காக ஆகிவிடுமோ? பாரம்பரிய வாழ்க்கை முறையை பின்ப்பற்றுவது என்ன அவ்வளவு கேவலமான ஒன்றா? இந்தியர்கள் (குறிப்பாக பிராமணர்கள்) சந்திரமண்டலதிர்க்கே குடி போனாலும் சில பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். Tradition and modernity are not contradictory for them. அதில் உங்களுக்கென்ன பிரெச்சனை? அப்படிபட்ட பாரம்பர்யமிக்க சிந்தனைகளை (அ) வாழ்க்கை முறையை மற்றவர் மீது திணிக்கக்கூடாது என்று சொல்லுங்கள் ஒத்துக்கொள்ளுகிறேன். ஆனால் அதை பிர்ப்போக்குவாதம் என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

 23. க்ஷமிக்கவும். ஊடக துஷ்ப்ரசாரத்திற்கு அடிபணியாது என்று இருக்க வேண்டும்.

 24. சங்கரராமனின் கொலை வழக்கு தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்று. பொய் வழக்கு போட தூண்டியவர் யார் நாடு அறிந்த உண்மை . துணை போன காவல் அதிகாரி மரணம் என்ற தண்டனை அடைந்துவிட்டார். தூண்டியவர் மக்கள் மத்தியில் உலா வந்துகொண்டுஇருக்கிரர். உலாவிற்கு மக்கள் முற்றுபுள்ளி வைப்பர் விரைவில் தர்மம் வெல்லும்.

 25. சுவனப்பிரியன் போன்றவர்கள் இங்கு வந்து மனசாட்சி பற்ரி பேசுவது அதிர்ச்சியாக இருக்கின்றது. தவிர, உண்மையாக எங்காவது தவறு நடக்கும்போது கூட எல்லாம் அவர்கள் முஸ்லிம் குடிதாங்கிகள் என்று ஒரு வரி சப்பை கட்டு கட்டுவதற்க்கு நம் மதத்தில் ஒரு KEYWORD இல்லையா என்று கோவமும் வருகின்றது .

 26. //suvanappiriyan on November 28, 2013 at 11:21 am
  மனசாட்சியை முழுவதுமாக அடகு வைத்து விட்டு எழுதப்பட்ட கட்டுரை. ‘கொலை மிரட்டல் எங்களுக்கு இல்லாதிருந்திருந்தால் நாங்கள் மாற்றி பேசியிருக்க மாட்டோம்’ என்ற புதிய தலைமுறையின் சங்கர ராமனின் மனைவியின் பேட்டியை அநீ போன்றோர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது நல்லது. மனு நீதி ஆட்சி செய்கிறது. வேறு என்ன சொல்ல…//
  suvanappiriyan
  பிரேமானந்தாவின் சிஷ்யைகள், போலீசாரால் கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதனால்தான் பிரேமானந்தாவுக்கு எதிராக சாட்சி சொன்னதாக சொல்லி இருக்கிறார்கள்.
  மோடிக்கு எதிராக சாட்சி சொன்ன பெஸ்ட் பேக்கரி சொந்தக்காரி, பொய் சாட்சி சொல்லச் சொல்லி மிரட்டப் பட்டதால்தான் பொய் சொன்னேன் என்றும், தான் கொலை செய்ததாக சாட்சி சொன்ன ஹிந்துக்கள் நிரபராதிகள் என்றும் சொன்னார்.
  மேல் சொன்ன இரண்டிலுமே தண்டனைக்கு ஆளானவர்களின் எதிரான சாட்சியங்கள் தாங்கள் பொய் சொன்னதாக ஒத்துக்கொண்டன.
  இந்த இரு நிகழ்சிகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

 27. அன்புள்ள அ.நீ அவர்களுக்கு,

  முகநூலில் இது பற்றி ஒரு பதிவை இட்ட பிறகு இதனைப் படித்தேன். அருமையாக கொண்டு சென்றிருக்கிறீர்கள். முற்போக்கு என்று பேசும் பிற்போக்குவாதிகள் இந்த சூழ்நிலையில் தங்களுக்கு என்ன கிடைக்கும் எரிகிற வீட்டில் பீடி பத்த வைக்க நெருப்பு கிடைக்குமா என்ற நிலையில்தான் சங்கரராமன் கொலையை அணுகியிருக்கிறார்களே தவிர எந்தவிதமான மனித நேயமும் வெங்காயமும் இல்லை. அநேகமாக நீங்கள் இது விஷயமாக தீர்ப்பிற்கு பிறகே பேசியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அனைவரும் பொறுத்திருந்து அனைவருக்கும் பொதுவான நீதி என்ற நிலையில் நின்றிருக்கிறார்கள். இந்த மண்ணின் குணம் மகிழ்ச்ச்சியைத்தருகிறது.

 28. // ‘கொலை மிரட்டல் எங்களுக்கு இல்லாதிருந்திருந்தால் நாங்கள் மாற்றி பேசியிருக்க மாட்டோம்’ // ஒரே டவுட்டு, இதை மீடியா முன் பேசும் அளவிற்கு தைரியமுள்ளவர்கள் ஏன் கோர்ட்டில் பேசவில்லை. மிரட்டியவர்கள் ஒரு வேளை மீடியாவில் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள், கோர்ட்டில் மட்டும் பேச வேண்டாம் என்று கனிவுடன் வேண்டிக் கொண்டார்களா?

  அரசே முன்வந்து வெகு தீவிரத்துடன் நடத்திய வழக்கு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கி தருவதில் அரசிற்கு எவ்வளவு முனைப்பு இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்க யாரோ கொலை மிரட்டல் விடுத்ததால பயந்து போனோம் என்று கூறுவதையெல்லாம் நம்ப முடியவில்லை.

 29. //காஞ்சி மடத்தின்
  நலத்தினை கருதி,
  இரு பெரியவர்களும் ,
  புதியதாக
  இருவரை பயிற்றுவித்து,
  பொறுப்பை அவர்களிடம்
  கொடுத்துவிட்டு,
  தாங்கள்
  விலகி நின்று ,
  புதியவர்கள்
  மடத்தினை நடத்த
  வழிகாட்டுவது ,
  அந்த
  மடத்துக்கு நல்லது.//
  இது ஒன்றும் அரசியல் கட்சி அல்ல. தவறு செய்யாத அவர்கள் ஏன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும். விட்டால் வாக்கெடுப்பு நடத்துவார்கள் போல் உள்ளது. சுவாமிகள் தம் பணியை இடையூரின்றி தொடர இந்துக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தலித் சமுதாயத்தில் அவர்களின் முயற்சி வரவேற்கப் பட வேண்டியது.

 30. கொலை மிரட்டல் இல்லாவிட்டால் எத்தனை பேர் இஸ்லாத்தில் இருந்து வெளியேறி வருவார்கள் என்பதை முதலில் சுவனப்பிரியன்கள் சிந்திக்கட்டும். இஸ்லாம் வளர்ந்ததே, முகமது நபி காலத்தில் இருந்தே, கொலை மிரட்டல் மூலமாகத்தானே? முதலில் அதைப் பற்றி இஸ்லாமிய வலைத்தளங்களில் சென்று விவாதித்துவிட்டு பிறகு தமிழ்ஹிந்துக்கள் பக்கம் வரட்டும்.

 31. \\ சங்கரராமனின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதை செய்தவர் எத்தனை உயர்ந்தவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென்பதிலும் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் நம் ஊடகங்களுக்கு அந்த நீதியா முக்கியம்? \\

  மனசாட்சியை முழுவதுமாக அடகு வைத்து விட்டு ஜெனாப் அவர்கள் எழுதியுள்ள உத்தரம் என்பதனை மேற்கண்ட வ்யாசத்தின் வாசகங்கள் முரசடிக்கின்றன

  \\ மனு நீதி ஆட்சி செய்கிறது. வேறு என்ன சொல்ல…\\

  ஷா பானோ வழக்கு முடிந்து அமரர் ராஜீவ் காந்தி முஸல்மான் களுக்கு ஆதாரவாக சட்டமியற்றியதிலிருந்து ஹிந்துஸ்தானத்தில் ஷரியத் தானே ஆட்சி செய்து வருகிறது.

  ஹிந்துக்களிடமிருந்து வசூல் செய்யப்படும் வரிப்பணத்தை முஸல்மான் கள் ஹஜ் யாத்ரைக்கு செல்லுவதற்கு ஹிந்துஸ்தான சர்க்கார் பயன்படுத்துமானால் அது ஹிந்துக்களின் மீதான ஜிஸியா வரி ஆகிறதே. நிலைமை இப்படி இருக்கையில் நடப்பது ஷரியத்தின் ஆட்சியல்லாமல் மனு நீதி என்பது எப்படி சரி?

 32. மஹா பெரியவரை இவர் இங்கு விமர்சித்தது துரதிஷ்டமானது

 33. குருமூர்த்தியின் கட்டுரை காவல்துறையை மட்டுமே சாடியுள்ளது. அதனைத் தூண்டிய, அப்போதைய அரசாங்கத்தின் (ஜெயலலிதா அரசின்) போக்கை கண்டிக்கவே இல்லை.
  நவம்பர் 2004ல், சட்ட மன்றத்தில், முதல்வர் ஜெயலலிதா, இவ்வழக்கைப் பற்றி விரிவாகப் பேசினார். கனத்த மனதுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றெல்லாம் பேசினார். தன்னுடைய கட்டுரையில், குருமூர்த்தி இவற்றைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை.

 34. திலகர் ப்லேக்கு எதிராக எலிகளை கொல்லக்கூடாது என்று சொன்னதாக ஒரு தவறான ஆதாரம் இல்லாத ஒரு காபீ/பேஸ்ட் ஆர்டிகல் தனது ப்ளோகில் போட்டு மகிழ்ந்தவர் இந்த கவனப்பிரியன் . பின்புலம் – இவர்கள் நடுராத்திரி சங்கு ஊதுவதுக்கு , சதுர்த்தி இடைஞ்சல் என்று

  .R NAGARAJAN – தனது கட்டுரையில் தான் எப்படி விசாரணை வலையத்தில் வந்தேன் என்று கோடி காட்டிவிட்டார் . நீங்கள் எதிர்பார்ப்பது அரசியல் . அது சக அரசியல்வாதிதான் பன்ண முடியும்

 35. //மஹா பெரியவரை இவர் இங்கு விமர்சித்தது துரதிஷ்டமானது//

  நானும் அப்படிதான் இதில் பார்க்கின்ரேன் . தனக்கென ஒரு அப்பிப்பிராயம் கொண்டு அதில் உறுதியாக இருந்தால் சரி. இல்லை என்றால் அண்ணா ஹசாரே மாதிரி அடுத்தவர் சொல்லுவதற்கெல்லாம் ஒரு மாதிரி கருத்து சொல்லி இன்று காணாமல் போயிவிட்டார். இங்கு வரும் தின நல்ல கட்டுரைகள் இதனால் பாதிக்காமல் இருக்கவேண்டும்

 36. //மஹா பெரியவரை இவர் இங்கு விமர்சித்தது துரதிஷ்டமானது//

  அ.நீ போன்றவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்ப்போதேல்லாம் இதை தவறாமல் செய்துவிடுகிறார்கள். கேட்டால் கருத்துச்சுதந்திரம் என்கிறார்கள். இன்றைக்கு யார் வேண்டுமானாலும் யாரைவேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்கிற காலக்கட்டம் வந்த பிரகு இதெல்லாம் சகித்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். அ நீ போன்ற சிந்தனையாளர்கள் சமத்துவம் என்கிற பெயரில் Abrahamic Hinduism என்ற ஒன்றைத்தான் உருவாக்க முனைகிறார்கள். இதற்கும் கிறிஸ்துவ/இஸ்லாத்திற்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இருக்கப்போவதில்லை. வைதீக வாழ்க்கை முறையை மூடநம்பிக்கை என்று விமர்சிப்பவர்களுக்கு கோயில் என்பதே மூடநம்பிக்கைகளின் கூடாரம் என்று சொல்வதற்கு எவ்வளவு காலம் பிடிக்கபோகிறது? இப்படிப்பட்ட செயல்கள் நமது மரபு மற்றும் பண்பாட்டை அழிவின் பாதையை நோக்கியே நகர்த்திக்கொண்டு செல்லும்.

 37. மகா பெரியவரைப் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டோர் அவர் சாதி உயர்வு தாழ்வு விலக இன்னமும் பெரிய அளவில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும் என்று எதிபார்க்கிறார்கள். அதில் தவறும் இல்லை. ஆனால் மகாபெரியவர் வாழ்ந்த கால கட்டத்தில் அவர் மடாதிபதி என்ற சிறைக்குள் இருந்ததாலும், வேறு காரணங்களாலும் பல சீர்திருத்தங்களை செய்ய முடியாமல் போயிருக்கலாம். வைதீக வாழ்க்கைமுறை மூட நம்பிக்கை என்று இங்கு யாரும் கருதவில்லை. வைதீகம் என்பது சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. ” Abrahamic Hinduism “- என்று ஒன்று இருக்க முடியாது. இந்துயிசம் என்பதே தன் வழியை பின்பற்றுவது , அதே சமயம் பிறவழிகளை இகழாமை- என்பதில் அடங்குகிறது. மேலும் எல்லைகள் இன்மை என்பதும் இந்துயிசத்தின் சிறப்பு. ஆபிரகாமிய மதங்களுக்கு எல்லைகள் மட்டுமே ஒரு பெரிய கால்கட்டு போல. புதிய சிந்தனைகளை ஹிந்துமதம் கிரகித்துக் கொள்ளும். ஆபிரகாமியர் புதிய சிந்தனைகளை கண்டு அச்சுறுகிறார்கள். கோயில் என்பது மூடநம்பிக்கைகளின் கூடாரம் என்று எந்த இந்துவும் கூறமாட்டான். எல்லா சாதிக்காரனும் கோயிலில் பூஜகர் ஆகும் நாளில் இந்த வேறுபாடுகள் அனைத்தும் ஒழிந்து , புதிய பாதைகள், புதிய மறுமலர்ச்சி தோன்றும்.

 38. தமிழ் ஹிந்து வெப்சைட் ஹிந்து சமுதாயத்தை சீர்திருத்தவா? அல்லது மேலும் அழிக்கவா?

 39. இந்த கட்டுரையின் நோக்கம் தான் தமிழ் ஹிந்து வெப்சைட் இன் இலட்சியமாக எடுத்துக்கொள்ளலாமா?

 40. நான் மிகவும் பிற்பட்ட வகுப்பை சார்த்தவன் ஆனால் ஸ்ரீ.ஜெயேந்திர சுவாமிஜி கீழ் தட்டு மக்களுக்கு ஆன்மிகத்தை எடுத்து சென்றார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை, சேரிக்கும் சென்று சங்கர மடத்து பணியை செய்தார் என்பது நான் அனுபவத்தில் உணர்த்து, ஆனால் ஏன்? இப்படி பலி , கொலை பேர் வர வேண்டும்? கடவுளே!!! இல்லாமல் புகையும்மா?

 41. நாத்திக அரசாங்ககளின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் கோயில்களை முதலில் எப்படி காப்பாற்றலாம் என்பதே நாம் யோசிக்க வேண்டியது.
  கோயில்களில் அரசாங்கங்கள் நடத்தும் கூத்தை இங்கே பல முறை பலர் எழுதியாயிற்று. இப்படியே போனால் சில வருடங்களில் நாம் போய் அழக் கூட ஒரு இடம் இருக்காது .
  கோயில் பூஜை உரிமை என்று பேசும் முன்னால் -வெகு வெகு முன்னால் —ஒரே ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும்.யோசிக்க இயலும் -ஆனால் யோசிப்பதில்லை. காரணங்கள் யான் அறியேன்.
  எத்தனையோ அர்ச்சகர்கள், பிராமணர் அல்லாத பூசாரிகளும் வயிற்ரை கழுவக் கூட வழியில்ல சம்பளம்-ஒரு முறையாவது கண்டனம் தெரிவித்தொமா ?ஏழை ஹிந்துவின் உண்டியல் பணம் அவர்களையும் , அவர்கள் கோயில்களையும் அழிக்க பயன்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தோமா? அது முற்போக்கு அல்லவே.

  நம் சொந்த வீடு மாற்றான் கையில் சிக்கி அழிந்து கொண்டிருக்கும் நிலையில் நாம் மராமத்து செய்வதை பற்றியா யோசித்து கொண்டிருப்போம்?

  இது ஒரு புறம் இருக்க ,இதற்கிடையில் இந்த் வழக்கில் -தீர்ப்பு வந்த நிலையிலும்-கவனிக்க- அன்று ஆடிய ஆட்டமென்ன என்று ஆடிய கூட்டங்கள் -குறிப்பாக வெகுஜன பத்திரிக்கை தர்மவான்கள் இதைப் பற்றி பெரிதாக பேசவில்லை.
  இந்த தீர்ப்புக்குப் பின்னரும் மடாதிபதிகள் இருவரும் பதவி விலக மென்மையாகக் கோரும் கோரிக்கைகளில் சாரம் சுத்தமாக இல்லை.
  இந்த லாஜிக்கின் படி பார்த்தால் ஒரு இந்து மட அமைப்பை ஒழித்து தன ஆட்களை அங்கே அமர்த்த ஒரு கேஸ் போட்டாலே போதுமானது. மற்றதை பத்ரிக்கை நண்பர்கள் , மற்ற வெறுப்பாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
  அதாவது தான் கண் வைத்திருக்கும் வீட்டைக் கைப்பற்ற ஒரு பேட்டை ரௌடி வீடு தலைவன் மேல் அவதூறு கிளப்பினாலே போதுமானது.
  சாய்

 42. suvanapriyan,
  You must answer Sri.Krishnakumar’s comment. You people are running Sharia law in India. You have triple Thalaq law, Haj subsidy. How do you say it is Manu’s smrithi?

 43. ஜெயேந்தரர் மீது குற்றம் சாட்டப் பட்டதே கூட களங்கமே . மறைந்த மகாப்பெரியவரை யாரேனும் அப்படி நினைக்கக் கூட முடியாது அல்லவா? ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கும் அடியார்கள் கானல்நீர் தானா?

 44. //மகா பெரியவரைப் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டோர் அவர் சாதி உயர்வு தாழ்வு விலக இன்னமும் பெரிய அளவில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும் என்று எதிபார்க்கிறார்கள்.//

  அவர் என்றைக்கு பிராமன சாதி ஒசந்தது என்று சொன்னார்? அவர் தன் வாழ்க்கை முழுவதும் பிராமணன் பிற தொழில்களை களைந்துவிட்டு வேத அத்யயனம் செய்யவேண்டும் என்றே சொல்லி வந்தார். தெருவில் இறங்கி பிரசாரம் செய்வதற்கு அவர் என்ன ஈ.வே.ரா.வா? நீங்கள் கூறுவதை பார்த்தால், மந்திரிகள் அதுனைப்பெரும் பொது மக்களுக்கு தண்ணீர் வரவில்லை என்பதற்க்காக தெருவில் இறங்கி கோஷம் போடவேண்டும் என்று சொல்வீர்கள் போலிருக்கிறது.

  //ஆனால் மகாபெரியவர் வாழ்ந்த கால கட்டத்தில் அவர் மடாதிபதி என்ற சிறைக்குள் இருந்ததாலும், வேறு காரணங்களாலும் பல சீர்திருத்தங்களை செய்ய முடியாமல் போயிருக்கலாம்.//

  மடாதிபதியாக இருப்பது ஒரு சிறைவாசமா? அது ஒரு பொறுப்பான பதவி. அவ்வளவு தான். அப்படியானால் ஒரு தாயாக இருப்பது ஒரு சிறை தான். அதற்காக தாய்மையே வேண்டாம் என்று சொல்லிவிடமுடியுமா?
  நீங்கள் எதை சீர்திருதிங்கள் என்று சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. சாதி ஒழிப்பு சீர்திருத்தமா? வேற்றுமை வேண்டும் வேற்றுமை வேண்டும் என்று கூப்பாடு போடும் நீங்கள் சாதி வேற்றுமையை மட்டும் ஏன் ஏற்க்க மறுக்குறீர்கள்? சாதி அடக்குமுறையை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுங்கள், ஒத்துக்கொள்கிறேன், ஆனால் சாதியே வேண்டாம் என்று சொன்னால் எப்படி?

  //இந்துயிசம் என்பதே தன் வழியை பின்பற்றுவது//

  தன் வழி தன் வழி என்று கூறுகிறீர்களே, இந்த வழி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? உங்கள் பாரம்பர்யதிளிருந்து தானே? உங்கள் சாதி , உங்கள் பாரம்பர்யத்தின் குறியீடு தானே? இந்த சாதியை ஒழித்து விட்டால் நீங்கள் சொன்ன “தன் வழி” எப்படி பாதுகாக்கப்படும்? இந்த அபத்தம் தான் இப்பொழுது நடந்துக்கொண்டிருக்கிறது. ஹிந்து மதத்தின் வேற்றுமையை ஒழித்துவிட்டு விஞான வளர்ச்சி என்ற பெயரில், அதை இன்னொரு ஆபிரகாமிய மதமாக்கும் முயற்சி தான் இங்கே நடந்துக்கொண்டிருக்கிறது. ஹிந்து மதத்தின் வேற்றுமை அதன் சாதி மற்றும் அதற்குரிய வழிபாடுகளில் தான் இருக்கிறதே தவிர, அதன் கடவுள்களில் இல்லை. நாம் இப்பொழுது சாதி மற்றும் அதன் வழிபாடுகலையெல்லாம் ஒழித்துவிட்டு வெறும் கடவுள்களை வைத்து என்ன செய்யப்போகிறோம்?

 45. ஆடிட்டர் ரமேஷும், வெள்ளையப்பனும் இஸ்லாமிய மதவெறியர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு வீதிகளில் கிடந்தபோது…… இரக்கமே இல்லாமல், நடந்த கொடூரத்தைக் கண்டிக்காமல், பெண்தொடர்பு, ரியல் எஸ்டேட் விவகாரம் என்று மனம் போன போக்கில் நீதி வழங்கியவர்கள்,…பிலால் மாலிக்கையும், பன்னா இஸ்மாயிலையும் வெடிகுண்டுகளோடுகாவல்துறை கைது செய்தபோது தங்களது ஏழாம அறிவைக்கொண்டு தீவிரவாதிகளுக்காக கண்ணீர் வடித்தவர்கள்… இன்று சங்கரராமனுக்காக நீதிகேட்டு உருகிக் கொண்டிருக்கிறார்கள்.”

 46. நன்றி திரு.கார்கில் ஜெய்.

  சுவாமி பிரேமானந்தா பற்றி தகவல்களை தந்ததற்கு …..

  – சீனு ஈரோடு.

 47. // ஜெயந்திர சரஸ்வதி (சுவாமிகள்) கொலை செய்யவில்லை என்றால், சங்கரராமன் தற்கொலை செய்து கொண்டு, தன்னைத் தானே வெட்டிக்கொண்டு இறந்தாரா? தான் இறந்தால் அதற்குக் காரணம் ஜெயந்திர சரஸ்வதி (சுவாமிகள்) தான் என்று ஏற்கெனவே சங்கரராமன் போலீசில் எழுதிக் கொடுத்திருந்த போது எப்படி கொலையாளியை எவ்வித தண்டனையும் இன்றி வெளியே விட்டார்கள் ? //

  Kargil Jay,

  That is for the police to investigate. What were they doing for 9 years ?
  If someone writes a letter and die, will it be just taken as a perfect prediction of what is going to happen ?

 48. ராஜா,
  அந்தக் கேள்விகள் நீதியரசர் ஓகை நடராஜன் கேட்டது. நான் கேட்டதல்ல. அவரின் பதிவையே நான் வழிமொழிந்தேன்.

  சங்கர ராமன் கொலைக்கு காரணம் வேறு யாருமல்லர்; அவரேதான். கோவிலுக்கு வரவேண்டி இருந்த பல லட்சக் கணக்கான குத்தகை பாக்கிகளை அவர் வசூல் செய்தார். கோடிக்கணக்கில் குத்தகை பாக்கி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு செய்திருந்தார். பொதுவாக இது மாதிரி குத்தகை எடுத்து, பாக்கி கொடுக்காமல் இருப்பவர்கள் திராவிட பாரம்பர்யத்தில் உள்ளவர்களே. சில முஸ்லீம்களும் லட்சக் கணக்கில் கோவில்களுக்கு பாக்கி கட்டாமல் ஏமாற்றுவது வழக்கம். இதற்கு முன் இது மாதிரி கோவில் குத்தகையை கறாராக வசூலித்தார் ஈ.வே.ராமசாமி. திராவிட பாரம்பர்யம் உள்ளவர்கள் பிராமணன் மிரட்டினால் வெட்டாமல் விடுவார்களா? புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டால் போல ஈ.வே.ரா வைப் போல பாசாங்கு செய்து சங்கரராமன் துள்ளினார். மேலும் குத்தகை பாக்கியுள்ளவர்கள் அவரை எளிதாகக் கொலை செய்து தப்பிக்கும் வகையில் “நான் கொலை செய்யப்பட்டால் அதற்கு சங்கராச்சாரியார்தான் காரணம்” என்று போலீசில் எழுதிக் கொடுத்தார்.
  இதனால் அவர் மிக எளிதான இலக்கானார்.

  பிராமணர்கள் மிக உஷாராக, பிற ஜாதிக்கார்களிடம் பணிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கொல்லப் படுவார்கள். நான் கம்யூனிச பிராமணர் கொலை செய்யப்பட பொது காமறேட்கள் வாய் பொத்தி எதுவும் நடவாதது போல் இருந்து பார்த்திருக்கிறேன்.

 49. வணக்கம்
  //ஜெயந்திர சரஸ்வதி (சுவாமிகள்) கொலை செய்யவில்லை என்றால், சங்கரராமன் தற்கொலை செய்து கொண்டு, தன்னைத் தானே வெட்டிக்கொண்டு இறந்தாரா? தான் இறந்தால் அதற்குக் காரணம் ஜெயந்திர சரஸ்வதி (சுவாமிகள்) தான் என்று ஏற்கெனவே சங்கரராமன் போலீசில் எழுதிக் கொடுத்திருந்த போது எப்படி கொலையாளியை எவ்வித தண்டனையும் இன்றி வெளியே விட்டார்கள் ? //
  இதை என்னால் ஏற்க முடியவில்லை. திரு சங்கரராமன் கொலையும் அவர்கள் குடும்பத்தின் சோகமும் என்னால் உணர முடிகிறது. இரண்டு பேர்களுக்கு இடையில் விரோதம் இருக்கின்றபோது ஒருவர் இன்னொருவர் மீது எந்தக் குற்றத்தையும் சாட்டலாம். நான் ஒன்றும் சங்கர மடத்தின் பக்தை அல்ல. ஆதி சங்கரரின் வாதத் திறமையையும் அத்வைத வேதாந்தத்தையும் மதிப்பவள் தான், சங்கர மடத்தின் பெருமையைக் குறைக்க திரு சங்கர ராமனுக்கு யாராவது எதிரிகள் இருந்திருந்தால் அவர்கள் செய்திருக்கக் கூடாதா? என்ற கேள்விகள் எழுவது நியாயமே.
  அன்புடன்
  நந்திதா

 50. இந்தப் பெருஞ்சூதின் விதைகள் 90 ‘களின் ஆரம்பத்திலேயே விதைக்கப்பட்டன. ஜயேந்திரர் சேரிகளுக்குள் புக ஆரம்பித்த காலகட்டத்திலேயே. இதன் ஒரே தீர்வு ஒரு தலித் குழந்தையை சங்கரமடம் தத்தெடுத்து ஆச்சார்யனாய் ஆக்குவதே; அதுவே கலிமுடிந்து சத்யயுக ஆரம்பமாயிருக்கும்.

 51. கார்கில் ஜெய்!

  //suvanapriyan,
  You must answer Sri.Krishnakumar’s comment. You people are running Sharia law in India. You have triple Thalaq law, Haj subsidy. How do you say it is Manu’s smrithi?//

  இது போன்ற சலுகைகள் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல. மத சம்பந்தமான நிகழ்வுகளை அவரவர் மத்தின்படியே நடத்திக் கொள்ள நமது சட்டம் அனுமதி அளிக்கிறது. இந்து, முஸ்லிம், கிறித்தவர், பவுத்தர்,ஜைனர், என்று பலரும் இந்த சலுகைகளை அனுபவிக்கின்றனர். எனது தாய் நாடான இந்தியாவை இத்தனை ரணங்களுக்குப் பின்னும் நான் உளமாற நேசிப்பது எனது மார்க்கத்தை சுதந்திரமாக பின்பற்ற அனுமதிப்பதாலேயே.

  ஆனால் கிரிமினல் சட்டங்களைப் பொறுத்த வரை எல்லோருக்கும் பொதுவானதே… பாபரி மசூதி இடிப்பாகட்டும், மும்பை கலவரம், குஜராத் கலவரம், மாலேகான் குண்டு வெடிப்பு என்று எங்குமே முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால் பல சாட்சிகள் இருந்தும் அனைவரையும் மிரட்டி இன்று சட்டத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளதைத்தான் நான் குறிப்பிட்டேன். தமிழகத்தின் சாதாரண அடித் தட்டு மக்களுக்கும் தெரியும் சங்கரராமன் யாரால் கொல்லப்பட்டார் என்று. அதைத்தான் சுட்டிக் காட்டினேன்.

 52. suvanappiriyan ,
  கைது , கோர்ட் , ஜாமீன் , விசாரணை என்று பல படிகள் தாண்டிதான் நீதி வருகின்றது. உடன நடுவீதியில் தண்டனை கொடுக்க இது ஒன்றும் தலபான்களை கொண்ட நாடு இல்லை. மத சம்பந்தமான நிகழ்வுகளை அவரவர் மத்தின்படியே நடத்திக் கொள்ள நமது சட்டம் அனுமதி அளிக்கிறது என்பத பொய். ஓட்டுக்கு சட்டத்தை வலைத்தீர்கள் அதைதான் க்ரிஷ்னகுமார் தெளிவாக சொன்னது . ஹஜ் யாத்திரை என்பது நீங்கள் உங்க சொந்த பணத்தில் போக வேண்டியது – அதைதான் உங்கள் மதம் சொல்லுகின்றது. குடிமக்களின் வரிப்பணத்தில் இல்லை .

 53. பாண்டியன்!

  //ஹஜ் யாத்திரை என்பது நீங்கள் உங்க சொந்த பணத்தில் போக வேண்டியது – அதைதான் உங்கள் மதம் சொல்லுகின்றது. குடிமக்களின் வரிப்பணத்தில் இல்லை .//

  இந்த சலுகையை எந்த முஸ்லிமும் கேட்கவில்லை. அது அவசியமும் இல்லை. ஏனெனில் ஹஜ் கடமை என்பதே உடல் வலிமையும், பொருளாதார வலிமையும் உள்ளவருக்கே கடமை என்று குர்ஆன் கூறுகிறது. இந்த சலுகையை ரத்து செய்தால் முதலில் சந்தோஷப்படுபவன் நானாகத்தான் இருக்கும்.

  முஸ்லிம்கள் எதிர் பார்ப்பது அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடே…. தொப்பி போட்டுக் கொள்வது, நோன்பு கஞ்சி குடிப்பது, மணி மண்டபம் கட்டுவது போன்ற மத்தாப்பு திட்டங்களை எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கவில்லை. உரிய வேலை வாய்ப்புகள் கிடைத்தாலே வழி தவறி செல்லும் பல இளைஞர்களை நேர் வழிக்கு கொண்டு வரலாம். அதைத்தான் பல கமிஷன்களும் சுட்டிக் காட்டுகின்றன.

 54. ஜெயமோகனின் கட்டுரை. இங்கு நடக்கும் விவாதப் பொருளைக் கொண்டிருக்கிறது. நடுவு நிலை என்பது இப்படி இருப்பதே நன்று என்று சொல்லும்படி உள்ளது.

  http://www.jeyamohan.in/?p=26158

 55. Great aravindhan sir. Even the case of abhaya sister murder is sleeping. All these people should read the story of sister jesme. The pope benedict left the papacy because of the rise in thesexual harassment cases against the catholic fathers and mothers. The tamil guy joseph palanivel jeyapaul case in america is forgotten in tamilnadu

 56. \\\ தமிழகத்தின் சாதாரண அடித் தட்டு மக்களுக்கும் தெரியும் சங்கரராமன் யாரால் கொல்லப்பட்டார் என்று. அதைத்தான் சுட்டிக் காட்டினேன்.\\\

  தமிழகத்தின் சாதாரண அடித்தட்டு மக்களுக்கும் தெரியும் சங்கரராமன் கொல்லப்பட்டதில் சங்கராசார்யர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஹிந்து மத த்வேஷத்தால் இவர்கள் இந்த வழக்கில் அரசால் திணிக்கப்பட்டனர் என்று.

  ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் சொன்ன விஷயத்தை – அவர் பாணியில் – அப்படியே குஜராத் கலஹங்கள் பற்றியும் திருப்பிப் போடலாம். குஜராத்தின் அடித்தட்டு மக்கள் அனைவரும் (- இதில் – ஹிந்து முஸல்மாணிய மற்றும் க்றைஸ்தவ சமூஹத்தினர் அனைவரும் அடக்கம்) அறிவர் – ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்கள் குஜராத் கலஹங்களை அடக்கி அதைக் கட்டுக்குள் கொண்டுவர பாடுபட்டவர் என்றும் — மதசார்பற்றவர் என்ற போர்வையில் மதவெறியர்கள் முன்வைக்கும் ஒரு பிம்பம் போல் அவர் கலஹத்துக்குக் காரணமானவர் என்று.

  தமிழகத்தின் அடித்தட்டு மக்கள் அனைவரும் அறிவர் — தமிழகத்தில் ஒரு வருஷ காலமாக ஹிந்து இயக்கத்தவரின் கொலைகளுக்குப் பின் உள்ள சக்திகள் எவை என்று – இல்லையா ஐயன்மீர்?

  \\\ இந்து, முஸ்லிம், கிறித்தவர், பவுத்தர்,ஜைனர், என்று பலரும் இந்த சலுகைகளை அனுபவிக்கின்றனர். \\\

  எப்படி ஐயன்மீர், ஹிந்துக்கள் அனுபவிக்கும் சலுகையாக தாங்கள் சொல்வது ஹிந்துக்கள் சமர்ப்பிக்கும் ஜிஸியா வரியையா?

  ஒருபுறம் முஸல்மான் கள் ஹஜ் யாத்ரை செல்வதற்கு ஹிந்துக்கள் தங்கள் வியர்வை சிந்தி சர்க்காருக்கு அளிக்கும் வரிப்பணம் செலவிடப்படுகிறது

  இன்னும் ஒரு புறம் – அமர்நாத் யாத்ரைக்கு செல்லும் ஹிந்துக்கள் — தேசத்தின் அவக்கேடான ஷரத்து 370 என்ற அவலத்தின் காரணமாக – அமர்நாத் யாத்ரை செல்வதற்கு வரிப்பணம் கட்டிச் செல்கிறார்கள். இதை தாங்கள் சலுகை என்ற பதத்தில் அடக்குவீர்கள் போலும். அமர்நாத் யாத்ரைக்கு செல்லும் பயணிகள் போதுமான தங்குமிடம் இல்லாது – விரைக்கும் குளிரில் மடிந்தது சில வருஷங்களுக்கு முன் நிகழ்ந்தது நினைவிலிருக்கும் – அவர்கள் யாத்ரை சமயத்தில் தங்குவதற்கு நிரந்தரமாகக் கட்டடம் கட்ட முனைகையில் – இஸ்லாமிய மதவெறி சக்திகள் – ஹிந்துஸ்தானத்தில் உள்ள ப்ரதேசமாகிய ஒரு இடத்தில் ஹிந்துக்கள் வருஷம் ஒரு முறை சென்று வரும் யாத்ரையில் – குளிரிலிருந்து தங்களைப் பாதுகாக்க ஒரு கட்டிடம் எழுப்புவதை – இஸ்லாமிய மதவெறி சக்திகள் முனைந்ததை —

  ஹிந்துக்கள் அனுபவிக்கும் சலுகை என தாங்கள் குறிப்பிடுகிறீர்களா ஐயன்மீர்.

  எனது தாய் நாடான ஹிந்துஸ்தானத்தை இத்தனை ரணங்களுக்குப் பின்னும் நான் உளமாற நேசிப்பது — இம்மையிலும் மறுமையிலும் இதனுடன் என் வாழ்வு பிணைக்கப்பட்டுள்ளது என்பதால் ஐயன்மீர்.

  இணைய தளத்தில் கடுமையான உத்தரங்களுக்கும் மிகப் பணிவான பதங்களால் உத்தரம் கொடுக்கும் வினம்ரதை என்ற விஷயத்தை நான் இன்று வரை அவதானித்து வருவது தாங்கள் உத்தரங்கள் பகிர்ந்து வரும் முறைமையால் ஐயன்மீர்.

  தாங்கள் “மனசாட்சியை அடகு வைத்து” என்று அ.நீ அவர்களை குறிப்பிட்டமையையும் ந்யாயாலயம் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்த பின்பும் –எந்த முகாந்தரமும் எந்த ஒரு மேற்தகவலும் இல்லாது — வெறும் வெறுப்பின் அடிப்படையில் தாங்கள் ந்யாயாலயத்தால் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நபரை — குற்றக்கூண்டில் அடைக்க விரும்புவதை —-

  தங்களது பொதுவில் வினம்ரதையுடன் உத்தரம் பகிரும் பாங்கிலிருந்து விதிவிலக்காக நான் எடுத்துக்கொள்கிறேன்.

  எனது உத்தரம் தங்கள் மனதை புண்படுத்த அல்ல. ஆயினும் தங்கள் உத்தரம் என்னைப்போன்று பல ஹிந்துக்களது மனதை ரணப்படுத்தியுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.

  நாம் ஒருவருடன் உரையாட வேண்டியது மிகவும் அவசியம். தங்களுடைய நிதானம் சார்ந்த உத்தரம் பகிரும் முறையை நான் தொடர்ந்து அவதானித்து வருவேன். விதிவிலக்குகள் என்றும் விதியாகாது என்ற நம்பிக்கையில் ஐயன்மீர்

  குதா ஹாஃபீஸ்

 57. \\\ அவர் கலஹத்துக்குக் காரணமானவர் என்று. \\\.
  கலஹத்துக்குக் காரணமானவர் அல்ல என்று இருக்க வேண்டும். க்ஷமிக்கவும்

 58. ////////இந்த சலுகையை எந்த முஸ்லிமும் ………………………………….குர் ஆன் கூறுகிறது//////////——— ஆக, குர்ஆன் கூறுவதற்கு விரோதமாக பொருளாதார வலிமை உள்ளவர்களும் அரசு தரும் மானியத்தை வாங்குகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்குமா? தனது குரானுக்கு விரோதமாக நடப்பவர்களை அல்லா மன்னிப்பாரா?.

  ////இந்த சலுகையை …………………………………………………..,நானாகத்தான் இருக்கும்//////.
  அமெரிக்காவில் எவனோ “நபி” பற்றி படம் எடுத்ததற்கு சென்னை மவுண்ட் ரோட்டில் போராட்டம் நடத்தி two wheeler களை கொளுத்தி நாசம் செய்த முஸ்லிம்கள் “”எங்களுக்கு குரானுக்கு விரோதமான ஹஜ் மானியம் தேவை இல்லை”” என்று ஒரு போராட்டம் நடத்த வேண்டியதுதானே! யார் தடுத்தது உங்களை?

  ////முஸ்லிம்கள்………………………………………………………………………………………….ஒதுக்கீடே////
  ஜனங்களே! இவர் சொல்வதை கேளுங்கப்பா! இது மதசார்பற்ற நாடாம்! ஆனால் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையாம்! UP CM முசாபர் நகரில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் கோடி கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்து மற்றவர்களுக்கு துரோகம் செய்ததை Supreme court கண்டித்ததை பற்றி எந்த டிவி சேனலாவது விவாத மேடையில் விவாததித்தா? மோடி எதை சொன்னாலும் உடனே காங்கிரஸ்காரனையும், கம்யூனிஸ்ட்காரனையும் .(ஞானி போன்ற உதவாக்கரை) பத்திரிகைகாரர்களையும்
  அழைத்து விவாதிக்கும் போது இதப்பற்றி ஏன் விவாதிப்பதில்லை.? இதற்கு பெயர்தான் Pseudo – secularism. இதனால்தான் நாடு குட்டிசுவராகிறது.

  ////நோன்பு கஞ்சி…………………………………….எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கவில்லை////
  நோன்பு கஞ்சிக்கு அதிமுக அரசு கொடுத்த 4000 டன் அரிசி எங்களுக்கு வேண்டாம் என்று திருப்பி அனுப்பினீர்களா? அதை வாங்கி கஞ்சி குடித்து ஏப்பம் விட்டு விட்டு இப்போது அதையெல்லாம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று பெருமையாக கூறுவதில் ஒண்ணும் குறைச்சல் இல்லை.

  ////////அதைத்தான்……………………………………………………………..சுட்டி காட்டுகின்றன////////
  அந்த மடத்தனமான கமிஷன்கள் உங்கள் வறுமை என்ற permanent problem க்கு temporary solution சொல்லி உள்ளன. மதசார்பின்மை பேசும் மனசாட்சியின்மை வாதிகளான கம்யூனிஸ்ட்களின் கனிவான பார்வைக்கு கீழ்கண்டதை சமர்பிக்கின்றேன்.”””வறுமைக்கு காரணம் அதிகப்படியான ஜனப் பெருக்கமே”” என்று காரல் மார்க்ஸ் என்று கூறுகிறார். அந்த கமிஷன்களில் ஏதேனும் ஒன்றாகிலும் “முஸ்லிம்கள் தங்கள் ஜனத்தொகையை குறைத்து கொள்ள வேண்டும்” என்று பரிந்துரை செய்ததா? ஒவ்வொருவரும் 4 பெண்டாடிகளை கட்டிக் கொள்ள அந்த அல்லாவே அனுமதி கொடுத்து விட்டார். ஒவ்வொரு பெண்டாட்டிக்கும் தரித்திர பட்சம் 2 வாரிசு என்றாலும் 8 வாரிசுகள் உருவாகி விடும். திரு சுவனப்பிரியன் இங்கே ஒரு கேள்வி கேட்கலாம். எல்லா முஸ்லிம்களும் குரான்படி 4 wives களை மணம் புரிவதில்லை. இது உண்மையாக இருக்கலாம். நான் அதை மறுக்கவில்லை. ஆனால் ஒரு பெண்டாட்டி கட்டினாலும் 8 குழந்தைகளுக்கு குறைவாக பெறுவதே இல்லை. நான் கூறுவது சத்தியம். குழந்தைகளை குறைத்தால் மட்டுமே வறுமையை ஒழிப்பது சாத்தியம். ஆனால் ஜனத்தொகையை பெருக்கி இந்தியாவை சீக்கிரம் இன்னொரு பாகிஸ்தானாக ஆக்க கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள் நான் பொய் சொல்லவில்லை. நாடு விடுதலையின் போது இந்துக்களின் ஜனத்தொகையையும் முஸ்லிம்களின் ஜனத்தொகையையும் ஒப்பிடுங்கள். இன்றைக்கு அவ்விரு இனத்தவர்களின் ஜனத்தொகையையும் ஒப்பிட்டு பாருங்கள். உண்மை புரியும்.

  ////////உரிய வேலைகள்…………………………………………………………………கொண்டு வரலாம்///
  IT படித்து நல்ல வேலையில் இருக்கும் எத்தனையோ முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக ஆகிய கதை யாருக்கும் தெரியாதா?

  திரு கணேசன் சொல்வது போல இந்து சாமியார்கள் கிறித்துவ போதகர்கள் மட்டும் இழி செயலில் ஈடுபடுவதில்லை. திரு சுவனப் பிரியன் அவர்களே கீழே உள்ளதை படியுங்கள். “””””Maulavi Shahzad (25) sodomised and strangled a 12 year old student at Abrar Uloom MADRASSA in U.P. (muzaffar nagar Dt) Maulavi has admitted to committing the crime . He was arrested from Buntla village.””””””” இது போதுமா?

  பார்சி இனத்தவர்கள் இந்தியா (குஜராத்துக்கு) வந்தபோது இந்து அரசனிடம் 3 உறுதிமொழிகளை கேட்டனர். அந்த 3 உறுதிமொழிகளை நிறைவேற்றியபின்னர் திருப்பி நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் என்று அரசன் கேட்டான். அதற்கு பார்சி தலைவன் ஒரு cup பாலை கொண்டு வர சொன்னான். பால் வந்தவுடன் தலைவன் தன்னிடமிருந்த sugar யை அதில் கலந்து அரசனிடம் கொடுத்து “இதில் இப்போது பாலிலுள்ள sugar உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா? என்று கேட்டான். இல்லையென்றான் அரசன். குடித்து பாருங்கள் என்றான் தலைவன். இனிப்பாக இருக்கிறது என்றான் அரசன். இதைப் போலத்தான் நாங்களும் இங்குள்ள சமூகத்துடன் ஒன்றி இனிப்பாக இருப்போம் என்றான் தலைவன். ஆனால் நீங்கள்? Do in Rome as the Romans do என்றொரு பழமொழி உள்ளது. அப்படி நடக்கிறீர்களா என்று ஒரு கணம் யோசித்து பாருங்கள்.

 59. சுவனப்ரியன்,
  //இந்த சலுகையை ரத்து செய்தால் முதலில் சந்தோஷப்படுபவன் நானாகத்தான் இருக்கும்//

  உங்களுடைய சந்தோஷத்தால், உங்களுடைய கருத்துக்களால், உங்கள் சிந்தனையால் எந்த உபயோகமும் இல்லை. கால விரயம் மட்டுமே.

  ஹஜ் யாத்திரை மான்யம் வாங்குவது அறுவது வருடங்களாக முஸ்லீமகள் செய்யும், செக்யூலர் அரசாங்கம் செய்யும் குற்றம். அம்பேத்கர் எழுதிய சட்டத்துக்கு புறம்பான குற்றம் செய்து வருகிறீர்கள். இதை கூடாது என்றால் முகம்மதிய ரவுடிகள் சேர்ந்து கலாட்ட செய்கிறீர்கள். குற்றத்துக்கு சாதகமாக சட்டத்தை மாற்றி எழுதுகிறீர்கள். இதையெல்லாம் செய்து விட்டு தொட்டிலை ஆட்டும் உங்கள் சிந்தனையால் என்ன உபயோகம்?

  மலேசியாவில் ஹிந்துக்கள் கோவில் கட்டுவது சட்டப்படி சரி. ஆனால் முகம்மதியர்கள் சேர்ந்து கொண்டு ஹிந்துக்களை தாக்கி, பசுவின் தலையை வெட்டி எடுத்து வந்து எறிந்தனர். சட்டத்துக்கு எதிராக கோவில் பணியை நிறுத்தி, முகமது என்ன சொன்னானோ அதை நிறைவேற்றினர். இதையெல்லாம் செய்து விட்டு தொட்டிலை ஆட்டும் உங்கள் சிந்தனையால் என்ன உபயோகம்?

  இலங்கை, மலேசியா, பங்களாதேஷ் முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரையின் பொது அவதிப்படுகின்றனர். ஆனால் இந்திய முகம்மதியர் மட்டும், ஹிந்துக்கள் வரிப்பணத்தில் பெரும்பணம் செலவழித்து 105 ஊழியர்களுடன் பெரும் மருத்துவமனை, தங்கும் வசதிகளுடன் சந்தோஷமாக அனுபவிக்கின்றனர். அதை அனுபவித்த முஸ்லீம்கள், ஹிந்துக்களுக்கு அமர்நாத் யாத்திரை செய்ய தங்க கட்டிடம் கட்ட முயற்சித்தால் ‘இது முகம்மதியர் பூமி..இதில் கட்டக் கூடாது’ என்று ரவுடித்தனம் செய்கின்றனர்; ஹிந்துக்கள் இறக்கின்றனர். இதையெல்லாம் செய்து விட்டு தொட்டிலை ஆட்டும் உங்கள் சிந்தனையால் என்ன உபயோகம்?

 60. இதற்கு முன்னர் நடந்தவைகளை பற்றியும், மடத்தலைவருக்குகொலைப்பழி வந்தது பற்றியும் ஊடகங்கள் அவற்ற்றை பிரமாண்டமாக வர்நித்ததைப்பற்றியும் திரும்பிப்பார்கவீண்டும். அவருக்கு நெருக்கடி 100 கோடி ரூபாய் மடத்துக்கணக்கில் வைத்து பிறகு பெற்றுக்கொள்வதாகவும் இதற்காக மடத்தின் பார்வையிலிருந்த மருத்துவமனையை ஈடாக பெற்றுக்கொள்வதாகவும் ஒரு கும்பல் அணுகியதாகவும், இந்த முறைகேடுகளை சுவாமியார் மறுத்ததாகவும் அதன் விளைவாக சுவாமிகளை கொலைப்பழியில் சிக்க வைத்ததாகவும் ஒரு செய்தி பெசப்பத்தஹ்டாக தெரிகிறது. மேலும், சிறி ரங்கம் உஷா என்பவரோடு சுவாமிகளுக்கு தகாத உறவு இருந்ததாகவும் அதி காலை 5மனி அளவில் அவர் அந்த அம்மையாருடன் இருந்ததாகவும் அனுராதா ரமணன் அவர்கள் அதிகாலையில் 5 மணிக்கு அதை நேரில் கண்டதாகவும் ஜோடிக்கப்பட்டது. ஏன்அனுராதா அந்த வேளையில் (அதிகாலையில்) அங்கு சென்று சுவாமிகளின் அறைக்கு சென்றார் என்று யாருமே கேட்கவில்லை..இந்த பொய் சாட்சி கட வுளின் தண்டனையாக இறந்து போனார்.ஏற்பாடு ஏற்பாடு செய்த போலீஸ் அதிகாரியும் இறந்துபோனார்.இவற்றை கட வுளின் தண்டனையாக கருதுகிறேன்.

 61. //ஆனால் ஒரு பெண்டாட்டி கட்டினாலும் 8 குழந்தைகளுக்கு குறைவாக பெறுவதே இல்லை. நான் கூறுவது சத்தியம்.//

  ஹானஸ்ட் மேன்! எழுத்திலும் ஹானஸ்ட் இருக்க வேண்டும்.

  தமிழகம் முழுவதும் எடுத்துக் கொண்டால் 8 பிள்ளைகள் உடைய இஸ்லாமியர்களை உங்களால் ஒரு சதவீதம் கூட காட்ட முடியாது. இதில் சத்தியம் வேறு செய்கிறீர்கள்.

  இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இந்தியாவில் உயருவதற்கு காரணம் பெரும்பாலான பிறபடுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தை தழுவுவதே. காரணம் இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம கோட்பாடு.

  //தன் வழி தன் வழி என்று கூறுகிறீர்களே, இந்த வழி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? உங்கள் பாரம்பர்யதிளிருந்து தானே? உங்கள் சாதி , உங்கள் பாரம்பர்யத்தின் குறியீடு தானே? இந்த சாதியை ஒழித்து விட்டால் நீங்கள் சொன்ன “தன் வழி” எப்படி பாதுகாக்கப்படும்? இந்த அபத்தம் தான் இப்பொழுது நடந்துக்கொண்டிருக்கிறது. ஹிந்து மதத்தின் வேற்றுமையை ஒழித்துவிட்டு விஞான வளர்ச்சி என்ற பெயரில், அதை இன்னொரு ஆபிரகாமிய மதமாக்கும் முயற்சி தான் இங்கே நடந்துக்கொண்டிருக்கிறது. ஹிந்து மதத்தின் வேற்றுமை அதன் சாதி மற்றும் அதற்குரிய வழிபாடுகளில் தான் இருக்கிறதே தவிர, அதன் கடவுள்களில் இல்லை. நாம் இப்பொழுது சாதி மற்றும் அதன் வழிபாடுகலையெல்லாம் ஒழித்துவிட்டு வெறும் கடவுள்களை வைத்து என்ன செய்யப்போகிறோம்?//

  இதே பதிவில் வியாஸ் என்பவரின் பின்னூட்டமே நாம் பார்ப்பது. இவ்வளவு சாதிப் பிடிப்பும் தீண்டாமையும் இருந்தால் அநீ பயப்படுவது போல் இந்து மதத்தை இன்னும் 100 ஆண்டுகளில் இந்தியாவில் தேட வேண்டியிருக்கும். பார்ப்பனர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். மொகலாயர்களின் காலத்தை விட இன்றுதான் அதிக அளவில் மத மாற்றங்கள் நடந்து வருகிறது. அதற்கு காரணம் இந்து மத வர்ணாசிரமம் என்றால் மிகையாகாது.

 62. திரு க்ருஷ்ணகுமார்!

  //எனது உத்தரம் தங்கள் மனதை புண்படுத்த அல்ல. ஆயினும் தங்கள் உத்தரம் என்னைப்போன்று பல ஹிந்துக்களது மனதை ரணப்படுத்தியுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.//

  உங்களின் மனதை சங்கடப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இந்த வழக்கைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. பாதிக்கப்பட்ட குடும்பம் சம்பந்தப்பட்டவர்களை மன்னித்து விட்டால் இடையில் நமக்கு பேச ஒரு அதிகாரமும் இல்லை. இஸ்லாமும் அதைத்தான் சொல்கிறது.

  //குதா ஹாஃபீஸ்//

  நான் உர்து முஸ்லிம் என்ற எண்ணத்தில் பின்னூட்டத்தை இவ்வாறு முடித்துள்ளீர்கள். எனது தாய் மொழி தமிழ். எனது பெற்றோருக்கு தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரியாது. பத்து வருடங்களுக்கு முன்பு தான் எனக்கும் உருது மொழி தெரிய வந்தது. அதுவும் சவுதியில் வந்து கற்றுக் கொண்டதே.

 63. இந்த வழக்கு தொடுக்கப்பட்ட காலத்திலேயே விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. காவல் துறை அதிகாரி பிரேம்குமார் அதிகப்பிரசங்கியாக நடந்து கொண்டார். அதிக விளம்பரம் கொடுக்கப்பட்டது, ஜெயேந்திரர் மீது கசப்பு உணர்சி இருக்க காரணங்கள் இருந்தன. ஒரு கொலை நடந்திருக்கிறது, அதிலும் கொலையுண்டவருக்கும், மடாதிபதிக்கும் இடையே கசப்பு இருந்திருக்கிறது. இவர் சீனாவுக்கு போவதை அவர் எதிர்த்தார். மடாதிபதி தனக்கு உண்டான பணிகளில் கடமைகளில் கவனம் செலுத்தினாரோ இல்லையோ, விளம்பரத்துக்காகவும், வியாபாரம், சொத்து வாங்குவது, விற்பது இவற்றில் ஒரு துறவி ஈடுபடுவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். “நக்கீரன்’ பத்திரிகைக்கு இவர் கொடுத்த பேட்டியே இவரது மன நிலையைக் காட்டியது. சம்பந்தமே இல்லாமல் இவரைப் பிடித்து கைது செய்து உள்ளே வைத்திருந்தார்கள் என்பதுதான் உங்கள் வாதமா? சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு ஆன்மீக வாதி ஆன்மீகத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அரசியல் வாதி என்றால் அவன் ஆன்மீகமும் பேசலாம், அரசியலும் பேசலாம், அக்கப்போரும் பேசலாம். மகா பெரியவரை பிற்போக்காளர் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. சாட்சிகள் பிறள் சாட்சியாக மாறியதால் தீர்ப்பு இப்படி வந்திருக்கிறது. இந்த விஷயத்தை இதற்கு மேலும் அலசுவது நன்றாக இருக்காது. உயிரைப் பறிகொடுத்த அந்த பிராமணனின் குடும்பத்துக்கு யார் பதில் சொல்வது? அவர் மகன் சொன்னது போல அவரே தன்னை வெட்டிக் கொண்டாரா என்று யோசிக்க வேண்டிய நிலைமைதான் இன்று.

 64. //இந்து மதத்தை இன்னும் 100 ஆண்டுகளில் இந்தியாவில் தேட வேண்டியிருக்கும். பார்ப்பனர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர்//

  இந்த உள்குத்து வேலையை நீங்கள் நிறுத்த போவது இல்லை ஆகவே உங்கள் பாணியில் இதற்க்கு பதில் –அப்படி ஒன்று நடக்கும்போது கவலை படாதீர்கள் — கொஞ்சம் ரெட்டி, நாயக்கர் மற்ரும் முதலியார்களும் இருப்பார்கள். பேதி கட்சி என்று ஒன்றை கொண்டுவந்து உங்கள் வயிர்ரில் பேதி வரவைப்பார்கள் .

 65. Alijanab Alhaj சுவனப்ரியன் Sahib அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!
  நான் எழுப்பிய 5 கேள்விகளுக்கு 1 கேள்விக்கு மட்டும் ஏதோ ஒரு பதில் என்ற வகையில் எழுதி உள்ளீர்கள். மீதி 4 கேள்விகளும் சரியானவை என்பதுதானே பொருள்.? அருள்கூர்ந்து அவைகளுக்கு பதிலளித்தால் நன்றாக இருக்குமே! 2) உலகிலுள்ள 52 முஸ்லிம் நாடுகளில் கூட ஹஜ் மானியம் தராத நிலையில் மதசார்பற்ற அரசு என்று மார்தட்டிகொள்ளும் மானங்கெட்ட மத்திய அரசு ஒட்டு வங்கிக்காக முஸ்லிம்களுக்கு மானியம் தருகிறது அந்த மானியம் பெறுவது உங்கள் குரானுக்கு விரோதமானது என்று நன்கு தெரிந்தும் 100 கோடி இந்துக்கள் செலுத்தும் வரியிலிருந்து அதை பெறும் நீங்கள் எல்லோரும் honest men ஆனால் நான் dishonest man ரொம்ப சந்தோசம். (கூடுதல் தகவல்கள்:– (1)ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து 1-70 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் செல்கின்றனர். (2) 2011 ல் மானியத்திற்காக 685 கோடி அரசு செலவழித்தது.)
  3) முஸ்லிம்கள் majaority ஆக வாழும் பகுதியில்தான் நான் வாழ்கிறேன். அவர்களின் குடும்ப சூழல் எனக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு குடும்பத்திலும் மரக்கால், படி, அரைப்படி,கால்படி, சட்டாக்கு, ஆழாக்கு என்று வரிசையாக குழந்தைகளை பெற்று அல்லல்படுவதும் எனக்கு தெரியும். மத மாற்றத்தால் மட்டும் உங்கள் ஜனத்தொகை பெருகவில்லை. வங்காள தேசத்திலிருந்து கள்ளத்தனமாக முஸ்லிம்கள் இந்தியா வருவதாலும் பெருகுகிறது.. குடும்பகட்டுபாடு கூடாது என்று எங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்று வச வச வென்று பெற்று கொள்வதாலும் பெருகுகிறது. குர்ஆனில் கூறப்பட்டது உங்களுக்கு சாதகமானால் சாந்தமாக இருப்பீர்கள். அதுவே பாதகமானால் பாய்ந்து பாய்ந்து குதிப்பீர்கள்.(கொள் என்றால் வாயை திறக்கும் மற்றும் கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்ளும் குதிரையை போல)

  திரு வியாஸ் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள் அவர் போன்ற சாதிவெறி பிடித்த நபர்களால்தான் இந்துமதம் இன்றைக்கு இழிநிலைக்கு போயுள்ளது.

  நான் வீரமணி போன்று Athiest ம் அல்ல.ஞானி மற்றும் அருணன் போன்று இந்து விரோதியும் அல்ல. உண்மையை மட்டும் சொல்கிறேன். உண்மை கசக்கத்தான் செய்யும். பொய் இனிக்கத்தான் செய்யும். சர்க்கரை இனிக்கும். பாவற்காய் கசக்கும் உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்கள் சக்கரையை தவிர்க்கணும். இந்து மதத்தில் அக்கறை உள்ளவர்கள் சாதியை ஒழித்து சமத்துவத்தை சேர்க்கணும்.ஆனால் என்ன சொன்னாலும் எது சொன்னாலும் யார் காதிலும் விழப் போவதில்லை. Waste of time!. Waste of enegy!.

  (edited and published)

 66. “சாட்சிகள் பிறள் சாட்சியாக மாறியதால் தீர்ப்பு இப்படி வந்திருக்கிறது. இந்த விஷயத்தை இதற்கு மேலும் அலசுவது நன்றாக இருக்காது. உயிரைப் பறிகொடுத்த அந்த பிராமணனின் குடும்பத்துக்கு யார் பதில் சொல்வது? அவர் மகன் சொன்னது போல அவரே தன்னை வெட்டிக் கொண்டாரா என்று யோசிக்க வேண்டிய நிலைமைதான் இன்று”.

  அவர் அந்த மடத்தின் முன்பிருந்த பாரம்பர்ய வழிமுறைகளிலிருந்து மாறினார்; சொத்துக்கள் வாங்குவதிலும் பண ப்ரிவர்த்தனைகளிலும் ஈடுபட்டார் என்பது கொலை குற்றம் சாட்டுவதர்கான தறுகள் இல்லை; ஆனால், இவற்றில் எதிர்பார்ப்புக்களுடன் இருந்த ஆளுவோரால் விழுந்த பனம்பழம் இந்த காக்கையால்தான் என்று முடிச்சுப்போடு முடிந்தது; அதற்கு மேற்சொன்ன துறவுக்கு ஏற்பில்லாது முன் சொன்ன தறுகள் பலவீனங்களாக அமைந்தது; அதைவிடக்கொடுமை, அந்த நம்க்குப்பிடிக்காத அந்த பலவீனங்களினால் இந்தக் கொலைப்பழியையும் அவர் ஏற்கவேண்டியதுதான் என்பது போன்ற அதி நியாயவாதம் – நம்மை உச்சபட்ச நியாயவான்களாக நிறுவிக்கொள்ள துரோகத்தின் எல்லையில் நிற்கிறோம்.

  சங்கரராமன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டிருக்க வேண்டும் அல்லது ஜயேந்திரர்தான் வெட்டியிருக்க வேண்டும் என்ற தெளிவான தீர்ப்பைக்கொடுக்கும் நீதிபதிகளாகிவிட்டோம் நாம். இந்த வழக்கில், விசாரணை அதிகாரி ஆளுவோரின் அடிப்பொடியாய் இருந்து செயல்பட்டதெல்லாம் நீதிமன்ற தீர்ப்பில் வெளிப்பட்டாலும் நாம் அதையெல்லாம் புறந்தல் நம் நியாயாதிபத்யத்தை நிலை நாட்டி தூய சனாதனியாய் மிளிர்வோம்.

 67. suvanapriyan,
  // பார்ப்பனர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். மொகலாயர்களின்//
  உங்கள் இஸ்லாமிய அரபு அடிமை புத்தி சங்கரராமன் என்னும் பிராமணரின் மரணத்துக்காக சிறிதளவும் பரிதாபப் படாது. ஜெயேந்திரர் என்னும் பிராமணருக்கு தண்டனை கிடைக்கவில்லையே என்றே வருத்தப்படும். அதை மறைக்கப் பாடுபட்டீர்கள். ஆனால் ஆத்திரத்தில் வெளிப்படுத்தி விட்டர்கள். நன்றி.

 68. மடம் என்ற ஒன்றே மதத்தைக் காக்கவேண்டும் என்றுதான் உருவானது. அரசர்கள் காலத்தில் நிலங்கள் கொடுத்தார்கள். ஜனநாயக காலத்தில் நிலங்கள் எல்லாம் போயின. நிர்வாகம் நடக்க சொத்து வேண்டும். இன்று கிராமத்துக் கோவில் பூசாரிக்கும், குருக்களுக்கும் அந்தக் கோவில் அறநிலையத் துரையின் கீழ் இருந்தால் இருனுரோ முன்நூரோ சம்பளம். ஆனால் காஞ்சி மடம் அத்துணை பூசாரிக்கும், குருக்களுக்கும் ( பெருமாள் கோவில் உட்பட) மாதம் ஆயிரம் ருபாய் மணி ஆர்தர் செய்கிறது. சொத்து இருந்தால்தான் செய்ய முடியும். மீதி ஹிந்துக்கள் வெட்டியாக ஒன்றும் செய்யாமல் இருக்கும்போது காஞ்சி மடம் ஒவ்வொன்றையும், மத மாற்ற எதிர்ப்பு உட்பட செய்து வருகிறது. சீசரின் மனைவி மீது யார் வேண்டுமானாலும் குற்றப் பத்திரிகை கொடுப்பார்கள் என்று சீசரின் மனைவி ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது. மடமும் பெரியவரும் எதைக் கண்டும் கலங்காமல் தங்கள் பணியை செய்து வருகிறார்கள்.

  பிறழ் சாட்சி என்றால் ஏதோ இந்த எண்பது சாட்சிகளும் கொலையை நேரில் பார்த்தவர்களோ, சதியை கேட்டவரகளோ இல்லை. எல்லாம் போலீஸ் தயாரித்த சாட்சிகள். சுப்ரேம் கோர்ட் பெயில் கொடுத்தபோதே இந்த சாட்சிகளின் தரத்தை தெளிவாக சொல்லிவிட்டது. சங்கரராமனின் மனைவி கொலையையும் பரதவர் இல்லை. கொலைகாரனையும் பார்த்தவர் இல்லை. அவருடைய சாட்சி, கதிரவன் அவரிடம் வந்து சார் எங்கே என்று கேட்டதாகவும், இவர் அவனிடம் சார் கோவிலிலே இருக்கிறார் என்று சொன்னதாகவும் சொன்னதுதான் சாட்சி. பிறகு குறுக்கு விசாரணையில் நான் பார்க்கவில்லை, பொலிசில் போட்டோ காட்டி சொல்ல சொன்னார்கள் என்று சொன்னார். கொலைகாரன், இதுதான் அவர் சாட்சி. இன்னொரு சாட்சி, நான் பெரியவரிடம் முதல் முறையாக பிரசாதம் வங்க கையை நீட்டிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் அவனை போட்டு தள்ளிவிடு என்று சொன்னார்.என்று சொன்னார். சுப்ரீம் கோர்ட் முன்ன பின்ன தெரியாதவன் எதிரில் கொலை செய்ய சொன்னாரா என்று கேட்டது? இதுதான் சாட்சிகளின் லட்சணம்.

 69. சீனாவுக்கு சீன அரசின் அழைப்பின் பேரில் தான் மடாதிபதி செல்வதாக இருந்தது. ஆனால் சங்கரராமன் வழக்கு தொடர்ந்ததால் , தனது உத்தேச பிரயாணத்தை கைவிட்டார் மடாதிபதி. இந்த கட்டுரையின் நோக்கம் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வழக்கில் என்ன வழக்கமாக நடைமுறை பின்பற்றப்பட்டிருக்கிறதோ அதனை விட தேவையில்லாமல் கூடுதல் விஷயங்களில் மூக்கை நுழைத்து, தேவையானதை கோட்டை விட்டுள்ளனர்.

  ஆபிரகாமிய மத பீடங்கள், நாட்டில் பெரும் நிலப்பரப்பையும், ஏராளம் கல்வி நிலையங்களையும் கைப்பற்றி, அவற்றை தங்கள் மதமாற்ற சதி திட்டத்துக்கு ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன என்பது யதார்த்தமான உண்மை. எனவே, இந்து மடாதிபதிகளும் கல்விநிலையங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், அனாதை சிறார் இல்லங்கள் ஆகியவற்றை நடத்துவதிலும் , தாழ்த்தப்பட்ட மக்கள் மதமாற்றம் என்ற விஷ சூழலில் மாட்டாமல் காப்பதிலும் அக்கறை காட்டவேண்டியது இக்கால கடமை ஆகும். பவுத்த துறவியர் தங்களை தற்காத்துக்கொள்ளும் திறன் இன்றி , கையாலாகாதவர்களாக இருந்ததால் தான் , நாலந்தா பல்கலையும் சுமார் 8000 புத்த ஆசிரியர்களும் இஸ்லாமிய தீவிரவாத வன்முறையாளர்களின் படையெடுப்பில் தீக்கு இரையாக்கப்பட்டும், வெட்டிக்கொல்லப்பட்டும் ஒரு கலாசாரமே நாசமானது இங்கு நினைவு கூறத்தக்கது. மேலும் மடத்தில் தேவை இல்லாத சக்திகள் நடமாட்டமில்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. காஞ்சி மடத்துக்கு சந்திர மவுலீச்வரர் -மகாதிரிபுர சுந்தரி பூஜை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தியானம் செய்வதும்.

 70. //மொகலாயர்களின் காலத்தை விட இன்றுதான் அதிக அளவில் மத மாற்றங்கள் நடந்து வருகிறது. அதற்கு காரணம் இந்து மத வர்ணாசிரமம் என்றால் மிகையாகாது.//

  அது எப்படி சுவனப்ரியன் சார்? மொகலாயர்கள் காலத்திலே வர்ணாசிரம தர்மம் அப்போது இல்லையா? இல்லாத ஒன்றைக் காட்டித் தான் இத்தனை நாட்களாக ஹிந்துக்களை ஜாதி ரீதியில் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறதா? சார், வர்ணாசிரம தர்மம் செத்து சுண்ணாம்பான பிறகு தான் மத மாற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதன் காரணம் வர்ணாசிரம கான்செப்டையே பிறப்பின் அடிப்படையில் மாற்றியது தான். 7 ஆம் நூற்றாண்டில் துவங்கி 8 ஆம் நூற்றாண்டில் கூட ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று அனைத்து சாதியினரும் ஒன்றாக இணைந்து தான் பக்தி இலக்கியங்களை வளர்த்து எடுத்திருக்கிறார்கள். அப்போது இல்லாத சாதி பேதம் எப்போது சார் பெரிதாக உருவெடுத்தது? களபிரர்கள் காலமாகிய 3 முதல் 6 ஆம் நூற்றாண்டு வரையில் கூட ஒற்றுமையுடன் இருந்து அதன் பிறகு தமிழையும், பக்தியையும் முன்னெடுத்துச் சென்று இருக்கிறார்களே சார்?

  மொகலாயர்கள் காலத்திலே மாறவில்லை, ஆங்கிலேயர் காலத்திலே மாறவில்லை ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் மாறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் ஆங்கிலேயன் விட்டுப் போன ஹிந்து சிந்தனைகள் பற்றிய தவறான பிரச்சாரங்கள் தான் சார். அவன் விட்டுப் போன அதே கல்வி முறையை இன்னைக்கும் படிக்கிறோம். அடிமை புத்தி ஊறிப் போய் தான் சார் அவனவனும் மதம் மாறுறான். 8 ஆம் நூற்றாண்டில் நாயன்மார்களிடம், அழ்வார்களிடம் இல்லாத தீண்டாமை இப்பவும் இருக்குன்னா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோமே, அது என்னனு தான பாக்கணும். வர்ணாசிரம தர்மம்கறீங்க! ஒண்ணுமே புரிய மாட்டேங்குது! என்னமோ போங்க சார்!

 71. \\\ உயிரைப் பறிகொடுத்த அந்த பிராமணனின் குடும்பத்துக்கு யார் பதில் சொல்வது? அவர் மகன் சொன்னது போல அவரே தன்னை வெட்டிக் கொண்டாரா என்று யோசிக்க வேண்டிய நிலைமைதான் இன்று. \\

  ஏன் சந்தேகம். இந்த வழக்கை முனைந்து தடம் புரள வைத்த தமிழக சர்க்கார் அன்றி வேறு யார்?

  சங்கராசார்யர்களின் மீது வீணாகப் பழி சுமத்த வேண்டி குற்றவாளிகளைக் காப்பாற்ற தமிழக சர்க்கார் முனைந்ததாகவே வழக்கின் போக்கு கருதப்பட வேண்டும். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்ற மன நிலையில் தமிழக சர்க்கார் செயல்பட்டிருந்தால் குற்றவாளி இன்றைய திகதியில் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

  இந்த அவலட்சணத்தில் தமிழகத்தில் பொழுது போகா கம்யூனிஸ கும்பலான மக இக போராட்டமாம் ஆசார்யர்களை நிரபராதியாக தீர்ப்பு அளித்ததற்கு. நீதி என்பது ந்யாயாலயத்தில் வழங்கப்படாது நடுத்தெருவில் வெறுப்பு இயக்கங்களின் வெறுப்பு சார்ந்து வழங்கப்பட வேண்டும் போல.

  மத்தளத்திற்கு இருபுறமும் அடி.

  மடாதிபதிகள் சமூஹப் பணி ஆற்றினால் ஏதோ அவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடாததாக ஒரு பிம்பம் கட்டமைக்கப் படுவதும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காண்பித்தால் சமூஹப்பணிகளில் இவர்கள் ஈடுபடாததாக வேறு பிம்பம் கட்டமைக்கப் படுவதும் வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்ததாக இருக்கும்.

  நான் இந்த மடத்துடன் சம்பந்தப் படாதவன். ஆயினும் ஹிந்து மதத்தைச் சார்ந்த எந்த ஒரு சன்யாசியையும் காரணமின்றி எதிர்க்கும் போக்கை ஜீரணிக்க முடியாதவன்.

  பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமின: அவர்கள் ப்ரம்ம சூத்ரத்துக்கு அருளிய வ்ருத்தி உரை பற்றி அறிந்தவன். மடத்துடன் சம்பந்தமில்லாத வ்யக்தியான எனக்கு ஆன்மீகத்தில் பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகள் ஆற்றி வரும் பணிகளில் நாட்டமுள்ளதால் இது பற்றி அறிய நேர்ந்தது. காரணமின்றிக் குற்றம் சுமத்த வேண்டுமானால் அவர் ஆற்றி வரும் ஆன்மீகப் பணிகளை முனைந்து புறக்கணிக்க இயலுமே.

  இது போன்ற விதண்டாவாதங்களில் பங்கு கொள்வது அயர்வைத் தருகிறது. இதுவே இந்த திரியில் எனது கடைசீ உத்தரம். நன்றி.

 72. திரு சுவனபிரியன் அவர்கள் நான் கேட்ட 5 கேள்விகளில் ஒன்றுக்கு மட்டும் பதில் என்ற பெயரில் எதையோ கூறியுள்ளார். மற்ற கேள்விகளுக்கு பதில் ஏதும் இல்லையென்றால் அவை சரியே என்று அர்த்தம் கொள்ளலாமா?

  0) குரானுக்கு எதிராக ஹஜ் மானியம் பெறும் முஸ்லிம்கள் அனைவரும் Honest people . குறைகளை கூறும் நான்தான் dishonest fellow . ரொம்ப சந்தோசம்.Thank U .

  .1) திப்பு சுல்தானுக்கு 12 ஆண் மக்கள் மற்றும் 8 பெண் மக்கள் அதாவது மொத்தம் 20 வாரிசுகள் இருந்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாது எனின் தயவுசெய்து நூலகத்திற்கு சென்று படியுங்கள்.

  2)நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே டி.என்.புதுக்குடியை சேர்ந்த முகமது இக்பால் என்பவர் நெல்லையை சேர்ந்த பாத்திமா (49) என்பவரை 7 வது(seventh ) மனைவியாக மணந்து 4 குழந்தைகளை பெற்றெடுத்தார். இப்போது பாத்திமா மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் இக்பாலுக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு ஏற்படவே அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு நெல்லை பஸ் நிலையத்தில் பாத்திமா தன கணவனை கத்தியால் குத்தினார். மனைவியை போலீஸ் கைது செய்துள்ளது. (ஆதாரம்:: தினமலர் நாள் 30-11-13) இவை எல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

  3)நான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில்தான் வாழ்கிறேன். அதனால் அவர்களை பற்றி நன்கு தெரியும். ஒவ்வொருவர் வீட்டிலும் மரக்கால், படி, அரைப்படி, கால்படி, சட்டாக்கு, ஆழாக்கு என்று வரிசையாக வசவச வென்று குழந்தைகுட்டிகள் இருக்கும். வாழ்நாள் முழுவதும் வறுமைதான்.ஆனால் Family planning என்பது அவர்கள் கேள்விபடாத வார்த்தைகளாகும். Poverty எப்படி Sir ஒழியும்? உங்கள் இனத்தவருக்கு 10% இட ஒதுக்கீடு அல்ல 100% ஒதுக்கீடு கொடுத்தாலும் poverty தீராது.

  4) அது சரி. பாகிஸ்தானில், இந்தோனேசியாவில், வங்காள தேசம் போன்ற நாடுகளில் இந்து சிறுபான்மையருக்கு இட ஒதுக்கீடு உண்டா? அங்கே President மற்றும் vice president , CM , காபினெட் அந்தஸ்துள்ள அமைச்சர்களாக எத்தனை இந்துக்கள் இதுவரை இருந்தார்கள்? இப்போது இருக்கிறார்கள?
  உங்களால் புள்ளிவிவரங்களை தரமுடியுமா?

 73. வணக்கம்.

  திரு சுப்பு மூலம் தான் தமிழ் ஹிந்து தளமே நான் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன் .
  அவரது திராவிட மாயை தொடராக வந்த போதிலிருந்தே படித்து வருகிறே தமிழ் ஹிந்துவில் விளம்பரப்படுத்தப் பட்ட . பல புத்தகங்களை வாங்கியிருக்கிறேன்.

  அவர் திடீரென்று “இனி நான் தமிழ் ஹிந்துவில் எழுத மாட்டேன்’ என்று ஒற்றை வரியில் சொல்லியிருக்கிறரே ?

  என்ன காரணம் என்று நான் கேட்கலாமா?

 74. பாண்டியன்!

  //கொஞ்சம் ரெட்டி, நாயக்கர் மற்ரும் முதலியார்களும் இருப்பார்கள். பேதி கட்சி என்று ஒன்றை கொண்டுவந்து உங்கள் வயிர்ரில் பேதி வரவைப்பார்கள் .//

  முஸ்லிம்களான எங்களின் வயிற்றில் பேதி வர வழைக்க பாடுபடுவீர்கள்: ஆனால் தலித்களை சகோதரனாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்! சாதிப் பிடிப்பையும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்! அப்படித்தானே…. வாழ்த்துக்கள். பல தலைமுறைக்கு முன்னால் எனது முன்னோர்கள் பின் பற்றிய இந்து மதம் இந்த அளவு சீர் கெட்டு போயுள்ளதை நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை.

  இஸ்லாம் இந்தியாவில் வளர நாங்கள் பிரசாரம் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. உங்களைப் போன்ற ஒன்றிரண்டு பேர் இந்து மதத்தில் இருந்து கொண்டு சாதி வெறிக்கு தூபம் போட்டுக் கொண்டிருங்கள். இஸ்லாம் தானாக வளரும். நன்றி!

 75. ஹஜ் மானியம்- இவர்கள் குரான் படி , காபிர் பணம்தானே ? வெட்கம் இல்லாமல் அந்த பணத்தில் போய் வருவதை நிறுத்துங்கள் ! இது மதவெறியன் கஜினி காலம் இல்லை . மோடி காலம் . காஞ்சி காமாட்சி பக்தனை கைவிடவில்லை ! கருப்பு சட்டை கும்பலுக்கு இந்த தீர்ப்பு சரியான மரண அடி ! தர்மம் வென்றது !

 76. //இஸ்லாம் இந்தியாவில் வளர நாங்கள் பிரசாரம் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. உங்களைப் போன்ற ஒன்றிரண்டு பேர் இந்து மதத்தில் இருந்து கொண்டு சாதி வெறிக்கு தூபம் போட்டுக் கொண்டிருங்கள். இஸ்லாம் தானாக வளரும். நன்றி!//

  இல்லாததையெல்லாம் எல்லாம் எழுதி கொண்டு உங்களுக்கு நீங்களா சந்தோச பட்டு கொள்ளுங்கள். சூடானில் நீங்கள் பண்ணிய பாவம், குர்தி இன மக்களுக்கு
  நீங்கள் பண்ணிய பாவம் எல்லாம் நாங்களும் அறிவோம். முதலில் உங்கள் அழுக்கை பாருங்கள் . புத்தி சொல்லுபவன் முதலில் யோக்கியமானவனாக இருக்க வேண்டும்.

 77. //ஹஜ் மானியம்- இவர்கள் குரான் படி , காபிர் பணம்தானே ? வெட்கம் இல்லாமல் அந்த பணத்தில் போய் வருவதை நிறுத்துங்கள் ! //

  சரியாக சொன்னீர்கள் . அது தவிர இங்கு இருந்து போய் பாகிஸ்தான், BANGLADESHல் குண்டு வெடிப்பு கோர்ஸ் அடென்ட் பண்ணுவதை விட உழைத்து பிழைப்பது எப்படி என்று கற்ரு கொண்டு வாருங்கள்.

 78. Suvanap priyan,
  Ramanujar coined the word ‘harijan’ and managed to teach veda for harijans and turned them as Brahmins. Hindus started these kind of corrections 500 years back. Even now muslims did not change themselves. You have to correct muslims first before advising Hindus. உதாரணத்துக்கு நாமக்கல்லில் ஒரு முஸ்லீம், அவருடைய மகள் செருப்புத் தைக்கும் தொழிலாளி மகனை மணந்ததால், அந்த தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்தார். இதுதான் முஸ்லீம்கள் தலித்துக்கு கொடுக்கும் மரியாதை. Not just that, you have to correct more things. Sharia law, a father can rape daughters. Fix it first. That is what Shajahan did to Mumtaj’s daughter. That is what hakkim did to his daughter: http://www.maalaimalar.com/2013/11/14104718/girl-torture-father-in-coimbat.html

 79. திரு சுவனப்பிரியன் அவர்களே! அன்பான வணக்கம்!
  1)இந்து மதத்தில் சாதி பிரச்சனை இருக்கிறது நான் அதைஇல்லையென்று மறுக்கவேய் இல்லை.ஆனால் . மத மாற்றத்திற்கு சாதிதான் காரணமா? அ)காதல் சின்னம் கட்டிய Shah jahan ன் தாய் பிறவியில் ஒரு இந்து. அவர் சாதி கொடுமையால்தான் முஸ்லிமாக மாறினாரா?(ஆ)Jujhan Singh என்ற இந்து மன்னனின் குடும்ப பெண்களை Shahjahan ன் வீரர்கள் பிடித்து வந்து முஸ்லிம்களாக மாற்றினர் அந்த மன்னனின் 2 மகன்கள் 1 பேரக் குழந்தை ஆகியோரை முஸ்லிமாக Shahjahan மாற்றினான். (ஆதாரம்: Abdul Lahori யின் “Badshah Nama ” (இ) Mahmud Segrah 1469 ல் Junagadh மீது படையெடுத்து அந்நாட்டு அரசன் Mandalis ஐ முஸ்லிமாக மாற்றினான். இப்படி கட்டாய மதமாற்றம் செய்து விட்டு சாதிதான் காரணம் என்று பொய் சொல்லக் கூடாது. அன்பரே நண்பரே!

  2. மும்தாஜ் Shahjahan ன் மனைவியாக 1612 ல் ஆகி 1631 ல் இறந்தாள். அவளது 19 வருட திருமண வாழ்க்கையில் 14 குழந்தைகளை பெற்றெடுத்தாள். 14 வது குழந்தை பெற்றதுமே இறந்து விட்டாள். (இல்லையென்றால் இன்னும் பல குழந்தைகளை பெற்றிருப்பாள் அந்த மக்களைப் பெற்ற மகராசி) போதுமா இவ்வளவு குழந்தைகள்? பரம திருப்திதானே திரு. சுவனபிரியன்?

  3. திரு சுவனபிரியன் அவர்களே! உங்களை அன்புகூர்ந்து எனது கீழ்கண்ட 7கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வேண்டி விரும்பி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். பதிலளிக்காமல் அமைதியாக இருந்துவிடாதீர்கள். நீங்கள் நல்ல முஸ்லிம் என்று திரு கிரூஷ்ணகுமார் கூறுவதால் பதிலளிப்பீர்கள் என்று பெரிதும் நம்புகிறேன் எனது நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது.

  i ) முஸ்லிம்கள் Pork சாப்பிடகூடாது என்று அல்லா கூறியிருக்க ஜின்னா wine & PORK ஆகியவற்றை சாப்பிட்டு அல்லாவை அவமதித்தார். அப்படிப்பட்ட ஜின்னாவின் முஸ்லிம் லீகை முஸ்லிம்கள் ஏன் பின்பற்றினார்கள்? நாட்டை துண்டாடினர்?
  ii )Surah 5.33 ல் “இறைநிராகரிப்பளர்கள் கொலை செய்யப்படவேண்டும் அல்லது கை கால்களை துண்டிக்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளதே. அது உண்மைதானே? இது சரியா? நியாயமா? தர்மமா?அடுக்குமா?
  iii )”பயங்கரவாதத்தின் மூலம் நான் வெற்றியாளனாக ஆக்கபட்டுள்ளேன்” என்று நபி பெருமைபட்டார் (ஆதாரம் புகாரி 4:52.200) நபி பெருமைப்பட்ட அந்த பயங்கரவாதம்தானே இன்று உலகம் முழுவதும் தலை விரித்தாடுகிறது?
  iv ) இறைநம்பிக்கை கொண்ட ஓர் “”அடிமையை”” விடுதலை செய்யவேண்டும். (4:92.93) கடவுளால் படைக்கப்பட்ட அனைவரும் சமம் என்று கூறுகிறீர்கள். அப்படியானால் “”அடிமை”” என்பது யார்? சகோதரத்துவம் எங்கே?எங்கே?எங்கே?
  v ) மூசாவிடம் இறைநிராகரிப்பாளர்கள் “”அல்லாவை எங்களுக்கு வெளிப்படையாக காட்டுவீராக!” என்றனர். இவ்வாறு அவர்கள் “”அக்கிரமாக”” நடந்து கொண்டதால் திடிரென ஒரு பேரிடி தாக்கியது. (ஆதாரம் 4:153.162) அல்லாவை நேரடியாக காட்டு என்றுதானே கேட்டனர்? அது ஒரு “”அக்கிரமமான”” செயலா? அந்த பேரிடியை அனுப்பிய அல்லாவே அதற்கு பதிலாக நேரில் வந்து காட்சி தந்திருக்கலாமே (அல்லா என்று ஒருவர் உண்மையில் இருந்தால்தானே நேரில் வரமுடியும். எல்லாம் நபியின் மூளையில் உதித்த கற்பனைதானே அல்லா!) அப்பப்பா! இஸ்லாம் மதத்தில் நியாயமான கேள்வியே கேட்ககூடாதுடா டோய்!
  vi )திண்ணமாக நாம் “”தவ்ராத்””தை இறக்கினோம்.அதில் யூதர்கள் மீது உயிருக்கு பதில் உயிரும் கண்ணுக்கு பதில் கண்ணும் மூக்குக்கு பதில் மூக்கும் காதுக்கு பதில் காதும் பல்லுக்கு பதில் பல்லும் பழி வாங்கப்படும் என்று நாம் விதியாக்கினோம் (ஆதாரம்: 4:44.45) இதற்கு பெயர் அமைதி மதமா? யூதர்களை கொன்று குவித்த இட்லெர் ஒரு கொடியவன் என்றால் அதே யூதர்களை பழிவாங்க சொல்லும் அல்லாவும் அவரது தொண்டர்களும் மிக மிக மிக மிக மிக நல்லவர்களா? இது என்ன சார் நியாயம்?
  vii )நாம் “””ஒவ்வொரு”” சமூகத்திற்கும் ஒரு தூதரை அனுப்பினோம் (16:35.37) அராபிய சமூகத்திற்கு ஒரு நபியை அனுப்பினீர்கள். OK இங்குள்ள இந்து சமூகத்தினர் ஏன் அராபிய சமூகத்தை சேர்ந்த நபியை பின்பற்றவேண்டும்? எங்க இந்து சமூகத்திற்கு என்று ஒரு தூதரை அவர் அனுப்பி இருப்பாரில்லையா? அவர் வழியை நாங்கள் பின்பற்றிவிட்டு போகிறோம்.

  அன்பும் பண்பும் நிறைந்த திரு சுவனபிரியன் அவர்களே! மேற்கண்ட எனது 7கேள்விகளுக்கு மறுக்காமல் மறைக்காமல் மறக்காமல் பதில் அளிக்குமாறு கனிவோடு பணிவோடு அதே நேரத்தில் துணிவோடு கேட்டு கொள்கிறேன். கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை உங்கள் எதிர்வினைகளுக்காக கண் விழித்து காத்திருப்பேன். நன்றி வணக்கம்.

 80. The larger Qn. is about justice. Hindu or xian is totally irrelevant. If the culprit cant be identified & punished then we have failed miserably as a just society. If its all a “prefabricated” case then those behind the prefabrication should be punished & there are no two ways about it.

 81. ஜெயேந்திரர் விடுதலை பற்றி அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்கள் திசை மாறி போய்க்கொண்டிருக்கிறது. முக்கிய அம்சத்தை விட்டுவிட்டு விவாதம் எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறது. சுந்தரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவர் விடாமல் அத்தனை பேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். ஆனால் சுந்தரராமன் என்பவர் கோயில் வளாகத்தினுள்ளேயே வெட்டி சாய்க்கப்பட்டார் என்பது மட்டும் உண்மை. அவரை கொலை செய்தவர் என்று யாரோ சிலர் இருக்க வேண்டுமல்லவா? அந்தக் கொலையைச் செய்தவர்களுக்கே விரோதம் இருந்து செய்தார்களா அல்லது யாரோ தூண்டிவிட்டு கூலிக்கு இதனைச் செய்தார்களா என்பதுதான் விசாரணை செய்திருக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது நிலைமை என்ன? யார் கொலை செய்தார்களோ, அவர்கள் இன்னமும் வெளியில்தான் இருக்கிறார்கள், தண்டிக்கப்படவில்லை. இந்த நிலைமை வினோதமாக இல்லையா? உண்மையில் இந்தக் கொலையில் பங்கு உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது அல்லவா? இந்த வழக்கை முதலில் விசாரித்த பிரேம்குமார் எனும் போலிஸ் அதிகாரி தன்னை சினிமா ஹீரோ போல நினைத்துக் கொண்டு விளம்பரத்துக்காக பல செயல்களைச் செய்தார். சிலர் கைதானார்கள். அவர்கள் கைதுக்கு அப்போது காரணங்கள் கொடுக்கப்பட்டன. ஒருவர் இறந்து போனார். மீதம் இருந்தவர்கள் அத்தனை பேர் மீதும் நடந்த வழக்கில் ஆதாரம் இல்லை என்று சொல்லி விடுதலை ஆகிவிட்டார்கள். இப்போது நம் நண்பர்கள் விவாதிப்பது அதை விட்டு எங்கு சென்று கொண்டிருக்கிறது? கொலைக்கு நோக்கம் இருந்திருக்க வேண்டும். அந்த நோக்கம் என்ன என்பதை நிரூபிக்க வேண்டும். அந்த கோணத்தில் விவாதியுங்கள். இதில் மற்ற தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விடுங்கள். இந்து மதத்தின் மீதோ, மதத்தின் காவலர்களாக விளங்கும் பீடாதிபதிகள் மீதோ வெறுப்பினால் யாரும் குற்றம் கண்டுபிடிக்கவில்லை என்பதை ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு விடுதலை ஆன சுவாமிகளுக்கு ஆதரவாக வாதிடுபவர்கள் எழுதுவதைப் பார்த்தால், இந்தத் தீர்ப்புக்கு எதிராக பேசுபவர்கள் அனைவருமே இந்து மத எதிரிகள் போலவும், காஞ்சி மடத்தின் விரோதிகள் போலவும், அவர்கள்தான் மடத்தையும் இந்து தர்மத்தையும் காக்கப் புறப்பட்டவர்கள் போலவும் எழுதுகிறார்கள். இந்த மதத்தாலும், மடாதிபதியாலும் பயனடைந்தவர்கள், அல்லது அவர்கள் மீது மரியாதை அல்லது பக்தி இருப்பதாலும் அவர் மீது குறை சொல்வதை ஜீரணிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அது ஒன்றே அவர்கள் வாதத்தை ஏற்றுக் கொள்ள சரியான காரணமாக இருக்க முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள், கொலையுண்டவருக்கு யார் யாரிடம் எந்தெந்த காரணங்களினால் விரோதம் இருந்தது, இந்த அளவுக்குப் போய் அவரது உயிரைப் பறிக்குமளவுக்கு யார் இருந்திருக்க முடியும் என்பதைத்தான் விவாதிக்க வேண்டும். இந்த சங்கரராமன் நல்லவரோ, போக்கிரியோ, வம்பு இழுப்பவரோ, அல்லது துஷ்டனோ நமக்கெல்லாம் தெரியாது. ஆனால் அவரை ‘துஷ்டன்’ என்று ஒதுக்கியவர்கள் இருந்தால் அவர்கள் மீது சந்தேகம் எழத்தானே செய்யும். வேறு ஒரு இந்து மடாதிபதியோடு இவரை ஒப்பிட்டுவிட்டால் போதும், ‘ஓஹோ’ வென்று ஓசை எழுப்பிக்கொண்டு சண்டைக்கு வந்து விடுகிறார்கள். இவரை, இவர் போன்ற பிற மடாதிபதிகளோடு ஏன் ஒப்பிடக்கூடாது. ஒரு குறிப்பிட்ட பதவியில் இருப்பவர்களுக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. அவற்றை அவர் சரிவர செய்து வந்தால், அல்லது தேவை இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்தால் பிறர் அதைச் சொல்லிக் காட்டத்தான் செய்வார்கள். யாருமே விமர்சனம் செய்யக் கூடாது என்றால் எப்படி? ஒரு இந்து மடம் அல்லது எந்த மத நிறுவனமும் ஆனாலும் தர்ம காரியங்கள் செய்யத்தான் செய்வார்கள். அதற்காக பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனை, உதவி இல்லங்கள் இவைகளை நடத்தத்தான் செய்வார்கள். ஆனால் அவை அனைத்தையும் அந்த மடம் அல்லது நிறுவனத்தின் தலைவரே நேரடியாக அன்றாட வேலைகள் அனைத்தையும் கவனிக்க முடியாது. விற்பதோ வாங்குவதோ அவருக்குக் கீழ் உள்ளவர்கள் பேசி தலைவரிடம் சொல்லி அவர் அனுமதி தந்த பிறகு செயல் படுத்துவார்கள். அவைகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஒரு நிர்வாகிதான் கவனித்துக் கொள்வார் . தலைவர் எல்லாவற்றையும் மேற்பார்வையில் வைத்துக் கொள்வாரே தவிர ஒவ்வொன்றிலும் தலையிட மாட்டார். விலை பேசுவது நிர்வாகிகள் செய்துவிட்டு, தலைவரின் ஒப்புதலைத்தான் வாங்குவார்கள். தலைவரே பேரம் பேசுவதில்லை. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மடாதிபதி தர்ம காரியங்கள் செய்வதை குறை கூறலாமா என்று கேள்வி கேட்பது சரியல்ல. இந்த பிரச்சினையை கட்டுரையாளர் அரவிந்தன் நீலகண்டன் ஒரு தலை பட்சமாகத் தொடங்கி வைத்துவிட்டது கிணறு வெட்டு பூதம் புறப்பட்ட கதையாக ஆகிவிட்டது. நடந்தது நடந்துவிட்டது. கொலை நடந்தது. விசாரணை நடந்தது. தீர்ப்பு வந்துவிட்டது. மேல் முறையீடு செய்வதோ, செய்யாமல் இருப்பதோ அரசின் விருப்பம். இந்த நிலையில் நாம் ஒவ்வொருவரும் நீதிபதியாக இருந்துகொண்டு எதிரெதிர் கட்சி பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொண்டால் நன்மை பயக்கும் என்பது என் தாழ்மையான எண்ணம். இதை கட்டுரை ஆசிரியர் அரவிந்தன் நீலகண்டனே செய்துவிடுவது சரியாக இருக்கும். நன்றி.

 82. //கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்கள் திசை மாறி போய்க்கொண்டிருக்கிறது//
  Sri Tanjai v Gopalan,
  It is true. But tamilhindu editors failed to control suvanap priyans comments. So I need to rebut despite i knew it was diverting.

 83. ஹானஸ்ட் மேன்!

  அ)காதல் சின்னம் கட்டிய Shah jahan ன் தாய் பிறவியில் ஒரு இந்து. அவர் சாதி கொடுமையால்தான் முஸ்லிமாக மாறினாரா?……. இப்படி கட்டாய மதமாற்றம் செய்து விட்டு சாதிதான் காரணம் என்று பொய் சொல்லக் கூடாது. அன்பரே நண்பரே!

  அரச வாழ்வுக்கு மயங்கியும் மாறியிருக்கலாம். அதனை அந்த தாயின் உள் மனதே அறியும். நானோ நீங்களோ எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்?

  //2. மும்தாஜ் Shahjahan ன் மனைவியாக 1612 ல் ஆகி 1631 ல் இறந்தாள். அவளது 19 வருட திருமண வாழ்க்கையில் 14 குழந்தைகளை பெற்றெடுத்தாள். 14 வது குழந்தை பெற்றதுமே இறந்து விட்டாள். (இல்லையென்றால் இன்னும் பல குழந்தைகளை பெற்றிருப்பாள் அந்த மக்களைப் பெற்ற மகராசி) போதுமா இவ்வளவு குழந்தைகள்? பரம திருப்திதானே திரு. சுவனபிரியன்?//

  14 குழந்தைகள் என்பது அந்த காலத்தில் சர்வ சாதாரணம். அதற்கு ஏற்ற பொருளாதார வசதி சாஜஹானிடம் இருந்தது. நூறு வருடங்களுக்கு முன்பு இந்துக்களில் கூட 8 குழந்தை, 10 குழந்தை பெற்ற தாய்மார்களை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். தற்போது அனைத்து மக்களிடத்திலும் குழந்தை பெற்றுக் கொள்வது கணிசமாக குறைந்து விட்டது.

  (Edited and published)

 84. Hindus and our swamis are hunted in India. Many such cases. False cases are filed aplenty. So many cases are filed so Hindus lose respect and confidence in our culture and swamis. The idea is political. To prevent Hindus from uniting to express their collective will politically. This is to render them powerless. The exercise is to get minority votes
  This is abuse of legal powers by many governments. Abuse by police under political orders
  There must be an investigation into these cases whether there was/is a prima facie case and if they were/are politically motivated
  There must be an inquiry set up immediately. I think this is very important
  Jai Hind

 85. ” “HONEST MAN” on December 1, 2013 at 1:10 pm’-

  அன்புள்ள ஹாநெஸ்ட்மேன்,

  தங்கள் கேள்விகள் மிக சரியானவை.

  இதே போன்ற பல கேள்விகளை முன்னாள் இஸ்லாமிய அன்பர்கள் பலர் , இஸ்லாத்திலிருந்து விலகி , பகுத்தறிவாளர்களாக மாறி , 1. tamil .alisina .org -2. iraiyillaislam , 3.senkodi .wordpress .com – மற்றும் பல வலைத்தளங்களில் தொடர்ந்து தொடர் கட்டுரைகள் எழுதி கேட்டு வருகிறார்கள்.

  அதற்கு அவர்கள் பதிலாகப் பெறுவது, மிரட்டலும் , பலவகை சாடல்களும் , திட்டுக்களும் தான்.

  அதில் , முக்கியமாக டாக்டர் அலிசினா அவர்கள் பாகிஸ்தானில் தனது கணவனாலேயே கவுரவக் கொலை என்ற பெயரில், உயிருடன் எரிக்கப்பட்ட ஒரு இஸ்லாமியப் பெண்மணியை, பாகிஸ்தானில் ஒரு ஆஸ்பத்திரியில், அவர் உயிரை விடும் முன்னர் கடைசி சில நிமிடங்களில் சந்தித்தார். விரிவாகப் பேசமுடியாத நிலையிலும் , அப்பெண்மணி தனக்கு நேர்ந்த இதே கொடுமை பல இஸ்லாமியப் பெண்களுக்கும் நேருகிறது. இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட ஏதாவது செய்யுங்கள் என்று கெஞ்சினார். அதன் பிறகே , டாக்டர் அலிசினா அவர்கள், இஸ்லாத்தில் ஏனிப்படி நடக்கிறது என்பதை அறிய, குர்ரான் மற்றும் ஹதீசுகளை படித்துவிட்டு, இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.

  இஸ்லாமியர்கள் தனிப்பட்ட முறையில் நல்லவர்களாய் இருந்தாலும், பிற மதத்தினரை கொல்லவேண்டும் என்ற கட்டளைகளை வழங்கும் , அவர்களது மத நூல்களைப் படித்தும், பெண்களுக்கு எதிராக பல வக்கிரமான தண்டனைகளை வழங்கும் ஆணாதிக்க அயோக்கியர்களின் பித்தலாட்டங்களை ஆதரிக்கும் பல விஷயங்கள் மதத்தின் பெயரால் கட்டளை என்று இருப்பதால், அதனால் தான் இஸ்லாமியர்களில் சிலர் தீவிரவாதம் என்னும் கொடிய விஷத்தை பின்பற்றுகின்றனர். இது தவறு என்று கருதும் மிதவாத முஸ்லீம்களோ, அவர்களை கண்டித்து திருத்த முடியாத நிலையில் உள்ளனர். இவை எல்லாம் திரு அலிசினா அவர்களின் உண்மையான கண்டுபிடிப்புக்கள்.

  இந்த கேள்விகளுக்கு அந்த நண்பர்களிடம் ஒரு பதிலும் கிடையாது. சில இஸ்லாமிய நண்பர்களிடம் நான் இதே கேள்விகளையும், இன்னும் சில கூடுதல் கேள்விகளையும் கேட்டேன்.( கூடுதல் கேள்விகள் – பெண்களுக்கு சொத்தில் ஆணுக்கு சமமான பங்கு வழங்கப்படாதது பற்றியும், இஸ்லாமிய சாட்சிய சட்டத்தில் இரண்டு பெண்கள் அளிக்கும் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்துக்கு சமம் என்று இருப்பதை பற்றியும் தான் )

  அதற்கு அவர்கள் குர்ஆனில் சொல்லி இருப்பது , இறைவனே சொன்னது.அதனை நாம் கேள்வி கேட்க கூடாது என்பது தான். இறைவன் எல்லாவற்றையும் அறிவார். மனிதராகிய நாம் அவருடைய ஆணைக்கும், அறிவுரைக்கும் – பணிந்தால் நல்லது. இல்லை என்றால், மீளா நரகத்தில் பல கொடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும். அவர் சொன்னதை கேட்டாலோ, சொர்க்கமும், அதில் குளிர்ந்த நீர் ஊற்று, அழகிய கன்னிப்பெண்கள், ஒட்டகம், பேரீச்சம் பழம், இனிய திராட்சை ரசம், என்று இன்னும் பிற வசதிகள் கிடைக்கும். – இந்த பாணியில் அவர்கள் பதில் இருந்தது. உண்மைகளை எந்த முஸ்லீமாவது ஏற்றுக்கொண்டால், இந்த தீவிரவாதிகள் மலாலாவை சுட்டுக்கொல்ல முயற்சித்ததுபோல, தங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்து சொல்லும் , யாரையும் கொன்றுவிட முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் பதில் இல்லை. இதில் தமிழகத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பேச்சாளர் தனது வலைத்தளத்திலும், உரைகளிலும் , பெண்களுக்கு ஆண்களுக்கு கொடுக்கும் சொத்தில் பாதி சொத்து கொடுப்பது சரிதான் என்று வாதாடி எழுதவும் பேசவும் செய்கிறார். என்ன சொல்வது பாவம். அவர்கள் திருந்துமாறு பல சூழ்நிலைகள் எதிர்காலத்தில் உருவாகும் என்று நம்புவோம்.

 86. Thanjai V.Gopalan
  After 9 years of investigation, the judge,taking everything into account, has found that there was no evidence to implicate Shri Sankarachariyar in the murder case of Sundarraman. End of matter. Tamil Hindu readers have no duty to solve this case. It is the TN police who have deliberately failed due to political pressure ( brought on by Christian mob).Who as TH readers are we to solve the case and to what end? We are not exactly employed as TN Police. Of course we will fight tooth and nail,at baseless accusations against our respected Madathipathis, Ask honestly yourself this question. Would Jayalalitha have dared to arrest an Imam or a Cardinal on the eve of Ramadan or Christmas based on spurious allegations? Hindu leaders can be trashed by any Tom, Dick and Harry and by any 2 cent politician, knowing fully well that there will not be any backlash. Pseudo secular, liberal and lethargic Hindus are the curse of our time.Far worse are the so called intellectuals who defend the above mob.On top of this, this Islamist suvanappiriyan chucks in some casual barbs on Hinduism. He probably does not understand the judgement as it not written in Urdu or Arabic. He should worry more about the regular thrashings Indian Muslims are getting at the hands of Saudi Sheiks. May be he has no time or enthusiasm to do this. After witnessing the routine Friday noon be-headings and lashings in Saudi, one can understand his reluctance. He surly values his head and does not want to be on chopping block in his beloved Saudi Arabia.

 87. இந்தத் தீர்ப்புக்கு எதிராக பேசுபவர்கள் அனைவருமே இந்து மத எதிரிகள் போலவும், காஞ்சி மடத்தின் விரோதிகள் போலவும், அவர்கள்தான் மடத்தையும் இந்து தர்மத்தையும் காக்கப் புறப்பட்டவர்கள் போலவும் எழுதுகிறார்கள் –

  தீர்ப்பு பல ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. சுவாமிகள் கைது செய்யப்பட்ட மூன்றாவது மாதமே சுப்ரீமே கோர்ட் இந்த சாட்சிகள், சதி, பணம் கொடுத்ததாகக் கூறுவது எதுவுமே ஆதாரமற்றவை என்று தெஇல்வாகக கூறிவிட்டது. ஆனால் எதுவுமே இல்லாமல் நக்கீரன் சொல்வது, விடுதலை சொல்வது, மதிமாறன் சொல்வது எல்லாம் ஆதாரம் என்று எழுதினால் என்ன சொல்ல்வது?

 88. Dear Mr.Honest Man,Kargil Raja and Pandiyan,
  I welcome all the valid questions put infront of suvanapriyan.Hatsoff to all !!

 89. மெல்லிய வெங்காயச் சருகு போன்ற சேலை உடுத்தித் தனது வயதுக்கு ஒவ்வாத அளவுக்கு முக அலங்காரமும், பூச்சுக்களும் செய்து கொண்டு, நட்சத்திர ஹோட்டலில் வாரத்தில் மூன்று முறை தனது வயதை விடவும் ஐந்து வயதாவது குறைந்த வெவ்வேறு ஆண்களுடன் வந்து போகின்ற எழுத்தாளப் பெண்மணி சொன்னவற்றை இன்னமும் உண்மை என்று பலர் நினைப்பது நமது மக்களை எந்த அளவுக்குப் பத்திரிகைகள் ஏமாற்றக் கூடும் என்பதைத்தான் காட்டுகிறது.

  அந்த எழுத்தாளர் குறித்து நான் சொன்னது, எனது கண்களால் கண்டது, உண்மை. நாகரிகம் கருதி இதற்கும் மேல் விவரங்களை எந்த ஹோட்டல் என்பது, யார் யார் அந்த இளைஞர்கள் (அவர்களில் சிலர் பிரபலமான எழுத்தாளர்களே) என்பது உள்பட எழுதவில்லை.

 90. In 60 years, I have not come across a more irrational essay than what is written here by Mr Aravaindan Neelakantan. Mr O Kai Natarajan has been very polite and decent in his remarks while he raised important questions which should be thought about seriously. One would have expected the concerned Judge to start prosecution proceedings against all the hostile witnesses who had earlier deposed before a magistrate, – before delivering a judgment that left most of the public dissatisfied with it. Puthiyathalaimurai.tv has provided statistics based on a survey made through facebook, twitter, etc, that 88% of the people are of the opinion that justice has not been done in this case.
  It is another wonder how Mr Neelakantan is defending the Kanchi seer who had made slanderous remarks about another seer (Nityananda) and later on patched up with him shamelessly. How can you call such a person spiritual? Also the Kanchi seer has been widely quoted by the media that some of his disciples might have killed Sankararaman. How can you digest this and advocate such person’s cause?

 91. ஜெயேந்திரரின் முற்போக்கான நடவடிக்கைகளினால் தான் இந்த வழக்குகள் போடப்பட்டன என்பது ஒப்புக்கொள்ள முடியாதது. ஏனென்றால் பல வழக்குகளில் அவர் சிக்கியிருக்கிறார். வேறு எந்த மடத்தலைவ்ரும் இப்படி பல வழக்குகளை சந்தித்தாக நினைவில்லை. எனவே யாரும் சந்தேகப்படும் விதமாக அவர் செயல் பட்டதாகத் தோன்றுகிறது. மேலும் இந்த நீதி மன்றம் அவர்மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று தான் கூறி இருக்கிறது. அதனால் அவர் நிரபராதி என்று திட்டவட்டமாக சொல்லமுடியாது. சந்தேகம் மக்கள் மனதில் இருந்துகொண்டு தான் இருக்கிறது!

 92. //Puthiyathalaimurai.tv has provided statistics based on a survey made through facebook, twitter, etc, that 88% of the people are of the opinion that justice has not been done in this case.
  //
  புல்லரிக்கின்றது எனக்கு. இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் வேலை இல்லாமல் இருக்கும் வெள்ளிக்கிழமை பார்க்கும்போது சத்தம் போட்டு சிரிக்கவும் வசதியாக இருக்கின்றது. பேசாமல் ஸர்வே ரிஸல்ட்டை ஜட்ஜீடம் கொடுத்து தீர்ப்பை “வாங்கிவிடலாம்” இனேமேல். இருந்தாவது

  நிற்க – இவர்களின் நாற்ரமே இங்கு தாங்கமுடியவில்லை;

  http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1860:2013-07-31-18-39-25&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19

  வோட்டு போட்டவன் எல்லாம் படித்த தற்கூறிகளா என்ன? இரண்டு – பேசாமல் இதை அவர்களிடம் கொடுத்து நம்ப தேஜ்பால் மாதிரி 6 மாச தண்டனை கொடுத்துகொள்ள சொல்லுங்கள்!??!

  ஸர்வே எடுப்பவன் அயோக்கியன் என்று யாரும் சிந்திக்கவில்லயா ?

 93. ஜெயேந்திரர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லமுடியாதபடி அவர் பல வழக்குகளில் சிக்கிக்கொண்டது தான் இந்த மடத்துக்கு அவக்கேடு வர மிகவும் சோகமான காரணம். ஆதி சங்கரர் எந்தக் குறிக்கோளுடன் முதன்முதலில் மடங்களை ஏற்படுத்தினரோ அதே குறிக்கோளுடன் ஜெயேந்திரர் செயல்பட்டிருந்தால் இப்படியெல்லாம் அவக்கேடு வந்திருக்க முடியாது. மகாபெரியவர் வழியிலிருந்து பிசகி நடந்ததால் தான் இப்படி நிலைமை மாறியது. ஆகவே மடத்து பக்தர்கள் ஜெயேந்திரரை, விஜயேந்திரரையும் அவர்களது மடாதிபதி பதவியிலிருந்து விலக்கினால் தான் மடத்தின் கௌரவம் மீண்டும் நிலைபெற வாய்ப்புண்டு. மற்றபடி முற்போக்கு பிற்போக்கு என்பதெல்லாம் சப்பைக்கட்டு அரசியல்வாதி கூறும் வாதங்கள்.

 94. நீங்கள் சொல்லுவது சரிதான். பேசாமால் உங்களிடமே மடத்தை ஒப்படைக்கலாம். புதிய தலைமுறை பற்றி இங்கு நான்தான் முதலில் சொன்னது , எனவே அவர்கள் கொஞ்ச நாள் என்னிடம் அதை கொடுத்துவிட வேண்டும். அண்ணா அறிவாலயம் – கட்சி தலைவரின் கண் முன்னரே அவரின் மனைவியை CBI enquire பன்ணியது. என்வே அதன் புகழும் மங்கி விட்டது. அதை இந்த blog இன் குழுவில் இருக்கும் ஜடாயுவிடம் ஒப்படைக்க சொல்லிவிடலாம்!!

 95. திரு பாண்டியனின் பதில்கள் மட்டுறுத்தல் செய்யப்படவில்லை போல் இருக்கின்றன.
  He is crossing decency limits and does not deserve my response! I am closing my comments with this one, as some persons who could not find valid answers to my questions, start personal attacks. They do not believe in reason and logic. Goodbye!

 96. R S Iyer –
  என்னுடிய கருத்தில் ஒழிந்து இருக்கும் நகைச்சுவை புரியாத ஒன்றா என்ன? எல்லா ப்லோக்ம் , எல்லா பிந்நூடடங்களும் இப்படிதான் கொலைவெறியோடு இருக்கின்றது. ஏதோ கட்டுரை எல்லாம் தனிப்பட்ட தாக்குதல் போல, என் பின்னூட்டம்தான் தீர்ப்பு என்பது போல.
  ஏன் என்னையக்கூடத்தான் அதில் நான் கேலி பன்ணிக்கொண்டு உள்ளேன். தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் – என்று ஜெயகாந்தான் சொன்னதுபோல. உங்களுக்கு ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் அதை ரிமூவ் பண்ணுவது நல்லதுதான். ஆசிரியர் அதை நீக்கிவீடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *