முருகனின் பல்வேறு தோற்றங்கள்

muruga002இந்து தெய்வங்களில் பல கடவுட்களும், பெண் தெய்வங்களும் உண்டு. அவர்களில் மூல தெய்வங்கள், மற்றும் அதற்கு அடுத்த நிலை தெய்வங்கள் என பிரிவுகளும் உண்டு. சிவன், சக்தி, விஷ்ணு, லஷ்மி, சரஸ்வதி, கணபதி மற்றும் முருகன் போன்றவர்கள் மூல தெய்வங்கள். அய்யனார், மாரி அம்மான், முனீஸ்வரன், மற்றும் மதுரை வீரன் போன்றவர்கள் கிராம தெய்வங்கள். அவர்கள் அனைவரையும் விட தமிழர்கள் அதிகமாகப் போற்றி வணங்குவது தமிழ் கடவுள் என கருதப்படும் முருகனைத்தான்.

முன்னொரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்திருந்த இடங்களை ஐந்து பிரிவுகளாக பிரித்திருந்தார்கள். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாளை என்பன. குறிஞ்சி என்ற பகுதி மலைப் பகுதியாக இருந்ததினால் அங்கிருந்த மலைவாழ் மக்கள் முருகனையே போற்றி வணங்கினார்கள். சங்க இலக்கியத்தில் அவரை சேயோன் அல்லது கொற்றவை செல்வன் என்றே குறிப்பிட்டு உள்ளார்கள். முருகன் எனும் தமிழ் கடவுள் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும் சமிஸ்கிருத மொழிப் பெயரான கார்த்திகேயர், சுப்பிரமணியர் மற்றும் ஸ்கந்தன் என்றும் வணங்கப்பட்டு வந்துள்ளார். அவருடைய ஆலயங்கள் பெரும்பாலும் மலைகளிலேயே அமைந்து உள்ளன என்பதின் காரணம் அவர் மலைப் பிரதேசத்தை சேர்ந்த கடவுளாகக் கருதப்படுவதுதான்.

முருக பக்தனுக்கு முருகன் பெரிய கடவுள் என்றாலும், ஆராய்ச்சியாளர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு எண்ணம் இல்லை. ஆராய்ச்சியாளரின் எண்ணத்தில் முருகன் தனித் தன்மை வாய்ந்தவர், மற்றும் அவருக்கு பல முகங்கள் (நிலைகள்) உண்டு என்பதே. இந்தக் கட்டுரை அவற்றை விவரிக்கின்றது. முருகன் யார்?

சிவபெருமானுக்குத் தகுந்த மகன்
கிருத்திகைப் பெண்களினால் வளர்க்கப்பட்டவர்
கணேஷா எனும் வினாயகரின் அன்புச் சகோதரர்
தேவர்களின் படைத் தலைவர்
அசுரர்களை அழித்தவர்
தேவசேனாவின் கணவர்
வள்ளியின் அன்புக்குரியக் கணவர்
மலை வாழ் கடவுள்
சிவபெருமானுக்கே குருவானவர்
பந்தங்களைத் துறந்தவர்
சங்கக் கடவுள்
அகஸ்தியருக்கு ஆசிரியரானவர்
ஐந்து பெரும் கடமைகளை செய்பவர்
அறியாமை மற்றும் செருக்கை அகற்றுபவர்
அழகும், இளமையும் நிறைந்தவர்
பக்தர்களுக்கும், பகைவர்களுக்கும் நன்மை அளிப்பவர்
ஞானத்தை தந்து அருள் புரிபவர்
பழங்குடியினர், நகரத்தார், அரசவம்சத்தினர், தெய்வீகம், மிருகங்கள் மற்றும் பறவைகளின் சிறப்பியல்புகளை வெளிப்படுத்துபவர்
ஒற்றுமையை நிலை நாட்டுபவர், முஸ்லிம் சமுதாயத்தினராலும் வணங்கப்படுபவர்
இந்திய கலாச்சாரம் மற்றும் பண்புகளை எடுத்துக் காட்டுபவர்.
இவை அனைத்தையும் வெளிப்படுத்தும் நூல்களும், ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியவைகளும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இரண்டாம் நிலை ஆதாரங்கள். சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பரிபாடல் , குறுந்தொகை மற்றும் சிலப்பதிகாரம் போன்றவை. அவற்றைத் தவிர திருமந்திரம் , திருப்புகழ் ,கந்தர் ஷஷ்டி கவசம், கந்தர் அலங்காரம் ,கந்தர் அனுபூதி , கந்தரான்ததி, ஷண்முகக் கவசம் , முத்துக்குமாரஸ்வாமிபிள்ளைத் தமிழ், சுப்பிரமணிய புஜாங்கம்,தணிகை புராணம் மற்றும் குமார சம்பவம் போன்றவையும், முருகனின் பல ஆலய தல புராணங்கள் போன்றவை முதல் நிலை அதாவது மூல நிலை ஆதாரங்களாக உள்ளன. முருகனின் ஆறுபடை வீடு மற்றும் பிற தலங்களையும் ஆதாரங்களாகக் கொள்ள முடியும்.

சிவபெருமானுக்குத் உகந்த மகன்

muruga05முருகனைப் பற்றி எழுதி உள்ள பல புராணங்களும் முருகனும், சிவபெருமானும் ஒருவரே என்றே தெரிவிக்கின்றன. சிவபெருமானின் ஒளியே ஆறுமுக முருகனான கந்தனைப் படைத்தது. அவரும் சிவபெருமானும் ஒருவரே (திருமந்திரம்: இன்தை பெருமானுக்கு இருமூன்று வட்டமாய்). சிவபெருமானுக்கும் ஆறு முகங்கள், அது போல முருகனுக்கும் ஆறு முகங்கள் உள்ளதினால் இருவரும் ஒன்றே (திருமந்திரம் ஆறுமுகத்தில் ஆடிப்பாடி). தம்மை துன்புறுத்தி வந்த அசுரர்களை அழிக்க ஒருவரைப் படைக்குமாறு தேவர்கள் வேண்டிக் கொண்டதினால், சிவபெருமான் அவரைப் படைத்தார். தன்னுடைய மூன்றாவது கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தி, அதை வாயு பகவானிடம் கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்டவர், அதைக் கொண்டு போய் கங்கையில் போட, கங்கையோ அதைக் கொண்டு போய் ஹிமயமலை அடிவாரத்தில் இருந்த சரவணப் பொய்கையில் தள்ளியது.

ஆறு தீப் பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுக்க , அவற்றை எடுத்து கிருத்திகைகள் வளர்க்க, சிவனும், பார்வதியும் அந்த இடத்துக்குச் சென்றப் பின், பார்வதி அந்த ஆறு குழந்தைகாளையும் எடுத்து அணைத்துக் கொள்ள, அந்த ஆறு குழந்தைகளும் ஒரே உடலைக் கொண்ட குழந்தையாக, ஆனால் ஆறு முகங்கள், பன்னிரண்டு கண்கள் மற்றும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட குழந்தையாக மாறியது. அந்தக் குழந்தை அசுரர்களை அழித்து, பக்தர்களுக்கு அருள் புரியும் , ஞானக் குழந்தையாக ஆயிற்று என்பதினால் சிவபெருமானுக்கு உகந்த மகனாக கருதப்பட்டது. சிவபெருமானே ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவர். முருகனின் பிறப்பு, இயற்கையின் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு இருந்தது.

சக்தி தேவியின் செல்லப் பிள்ளை

கொற்றவை, பார்வதி மற்றும் உமா என்ற பெயர்களைக் கொண்ட சக்தி தேவியானவள் பெரும் சக்தி மிக்க கடவுள் ஆவார். அவளே அனைத்தையும் படைத்தவள் எனப்படுபவள். நேர்மை மிக்க சக்தி தேவி, நீதியை நிலை நாட்ட சிவபெருமானிடம் கூட சண்டை இடத் தயங்காதவள். சிவபெருமானுடன் சேர்ந்து அவள் அகண்டத்தில் ஆடிய நடனம் முனிவர்களுக்கும், தத்துவ ஞானிகளுக்கும் பல தத்துவங்களை எடுத்தக் காட்டியது. அசுரர்களின் தலைவனான சூரபத்மனை அழிக்க சக்தியே முருகனுக்கு சக்தி வேல் என்ற ஆயுதம் ஒன்றை தந்தாள். அவனை அழிப்பதற்குச் சென்ற முருகப் பெருமான் ஒரு மாமரத்தை அந்த வேலைக் கொண்டு இரண்டாகப் பிளந்து அவற்றில் இருந்து சேவல் மற்றும் மயிலை தோன்ற வைத்தார். சங்க இலக்கியங்களில் அவரை சிவப்பானவர் அல்லது ஒளிமயமானவார் என்ற பொருளில் சேயோன் என்றும், கொற்றவை செல்வன் எனவும் அழைத்தார்கள். மாம்பழப் போட்டியில் தோற்றுப் போய் பழனி மலைக்குச் சென்று அமர்ந்த முருகனின் கோபத்தை சாந்தப்படுத்த எந்த அளவு சக்தி தேவி கவலையில் ஆழ்ந்தாள் என்பதில் இருந்தே அவர் மீது சக்தி கொண்டிருந்த அன்பின் அளவு புரியும் என்று புராணங்கள் கூறுகின்றன.

கிருத்திகை மகளினரின் வளர்ப்பு மகன்

muruga06அவதார தத்துவத்தை நன்கே அறிந்திருந்த சிவபெருமான், ஆறுமுகனைப் படைத்து, பார்வதியின் சகோதரரான திருமாலின் கட்டளைப்படி அவரை வளர்க்கும் பொறுப்பை கிருத்திகைகளிடம் ஒப்படைத்தார். கந்த புராணம் மற்றும் இன்னும் சில இலக்கியங்களில் அந்த செவிலித் தாய்கள் அந்தக் குழந்தையை எப்படி ஆதரவாகவும், அன்பாகவும் வளர்த்து வந்தார்கள் என்பதை விவரமாகக் கூறுகின்றது. முருகனை அந்த ஆறு கிருத்திகை செவிலித் தாயார்களும் எடுத்து வளர்த்ததினால்தான் அவர் கார்த்திகேயர் என்ற பெயரையும் அடைந்தார். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வரும் கிருத்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதமாகும். அது போல ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று முருகனின் ஆலயங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

கணேசரின் அருமை சகோதரர்

கணேசர் அல்லது யானை முக கணபதி எனும் விக்னேஸ்வரக் கடவுளே முருகனின் மூத்த சகோதரர் ஆவார். நாரதர் கொடுத்த மாம்பழத்தை அடைவதில் இருவருக்கும் கருத்து வேற்றுமைகள் இருந்தது என்றாலும், கணேசரின் உதவியைக் கொண்டே முருகப் பெருமானால் வள்ளியை திருத்தணியில் மணக்க முடிந்தது. இதில் இருந்தே ஆரம்பம் எதுவும் நல்ல முறையில் முடிந்தடைய வினாயகரின் துணை தேவை என்பது புலனாகும். விநாயகரை துதித்தால் நமது தடைகள் விலகும். முருகன் அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளவர் என்றாலும், அவர் விரும்பியதை அடையவும் அவருக்கு அவருடைய சகோதரரான வினாயகரின் துணையே தேவையாக இருந்தது.

அசுரர்களை அழித்தவர். தேவர்களின் படைத் தலைவர்

தேவேந்திரனின் மகனான ஜெயேந்திரா மற்றும் பிற தேவர்களைப் பிடித்து சிறையில் அடைத்து துன்புறுத்திய சூரபத்மனைக் கொல்லவே முக்கியமாக முருகன் அவதரித்தார். சூரபத்மனைத் தவிர அவனுடைய சகோதரர்களான தாரகா, சிங்க முகன் மற்றும் அவனுடைய சகோதரியான அஜமுகி போன்றவர்களும் தேவர்களை துன்புறுத்தி வந்தார்கள். சிவபெருமானின் மூன்றாம் கண்ணில் இருந்து வெளி வந்ததினாலும், சக்தி வேலை பார்வதியிடம் இருந்து பெற்றதினாலும் முருகன் தேவர்களின் படைத் தலைவரானார். அவருக்கு அந்த யுத்தத்தில் துணை புரிய, சக்தியின் சிலம்பில் இருந்து வெளிவந்த நவ சக்தி எனப்பட்ட வீரபாகுவும், அவருடைய எட்டு சகோதரர்களும் ஒரு லட்ஷ வீரர்களுடன் வெளி வந்தார்கள். தன்னுடைய பெற்றோர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு யுத்தத்திற்கு முருகன் புறப்பட்டு சென்றபோது அந்த நவ சக்திகளும், ஒரு லட்ஷப் படையினரும் அவருடன் சென்றார்கள்.

யுத்த தர்மத்தின்படி முதலில் வீரபாகுவை முருகன் சூரபத்மனிடம் தூதுவராக அனுப்பி தேவர்களை விடுதலை செயுமாறுக் கூறினார். ஆனால் சூரபத்மனோ அதை ஏற்க மறுத்து, முருகனை கேவலமாக ஏச, அங்கிருந்து வீரபாகு தப்பி வந்து முருகனுக்கு அந்த செய்தியை கூறினார். உடனே முருகனும் யுத்தத்திற்கு கிளம்பிச் சென்றார். முதலில் அவர் கதிர்காமனில் தனது படையினருடன் இளைப்பாறியப் பின் அங்கிருந்துக் கிளம்பி திருச்செந்தூருக்குச் சென்றார். யுத்தம் பத்து நாட்கள் தொடர்ந்தது. சூரன் அதில் பல உபாயங்களையும் கையாண்டான். அவனுடைய படையினர் தோற்று ஓடியதும் அவன் தன்னை ஒரு மாமரமாக உருமாற்றிக் கொண்டான். ஆனால் அதை புரிந்து கொண்ட முருகன் தனது சக்தி வேலினால் அந்த மரத்தை இரண்டு துண்டுகளாகப் பிளக்க ஒரு துண்டு சேவலாகவும், இரண்டாவது மயிலாகவும் மாறின. இப்படியாக தேவர்களின் படைத்தலைவர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி யுத்தத்தில் வென்றார். இந்து சமயத்தில் ஆற்றல், பலம் மற்றும் வெற்றி போன்ற அனைத்தையும் முருகனை ஒப்பிடுகிறார்கள். அந்த சூரனை வெற்றி கொண்ட தேவசேனாபதி , சூரபத்மனால் சிறைப் பிடிக்கப்பட்டு இருந்த அனைத்து தேவர்களையும் விடுதலை செய்தார்.

தேவசேனாவின் கணவர்

சூரபத்மனை அழித்து தேவர்களுக்கு விடுதலை கொடுத்த ஸ்கந்தனுக்கு பரிசு கிடைத்தது. ஸ்கந்த புராணத்தில் முருகனுடன் தேவசேனாவிற்கு திருமணம் ஆன செய்தி விரிவாக தரப்பட்டு உள்ளது. ஜெயந்தாவும் தேவர்களும் சூரபத்மனின் பிடியில் இருந்து விடுதலை ஆனதும் தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றார்கள். சூர சம்ஹாரத்துக்குப் பிறகு திருச்செந்தூரில் இருந்து கிளம்பி திருப்பரம்குன்றத்துக்குச் சென்ற முருகனை இந்திரனும் பிரும்மாவும் சந்தித்தார்கள். அங்கு அவரை சந்தித்தவர்கள் அவரை தேவசேனாவை மணந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். திருமணத்துக்கான நல்ல நேரத்தை பிரும்மா பார்த்து முடித்ததும் முருகனின் பெற்றோர்கள் மற்றும் அனைவர் முன்னிலையிலும் தேவசேனாவை முருகன் மணந்து கொண்டார். இந்து சமய முறையில் எப்படி ஒரு பெண்ணின் பெற்றோர்கள் தமது பெண்ணை மணமகனுக்கு தானமாகக் கொடுத்து திருமணத்தை நடத்துவார்களோ அப்படியேதான் அவருடைய திருமணம் நடந்தது என்ற விரிவான செய்தியை ஸ்கந்த புராணத்தில் கூறி உள்ளார்கள். ஸ்கந்தனுடனான தேவசேனாவின் திருமணம் முறைப்படி அனைவராலும் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றது என்றால் வள்ளியுடன் முருகன் செய்து கொண்ட திருமணம் களவு மணம் அதாவது இரு ஜாதியினர் செய்து கொண்ட காதல் திருமணம் என்பதாகும். முருகன் அழகானவர், இளமையானவர், தேவர்களை அசுரனிடம் இருந்து விடுவித்தவர் போன்ற பல குணங்களைக் கொண்டவர். அது போலவே தேவசேனாவும் அரச குடும்பத்தை சேர்ந்தவர், நல்ல பண்புகளைக் கொண்டவர், நன்கு வளர்க்கப்பட்டவர், பெரியவர்களுக்கு கீழ் பணிந்து நடந்தவர் போன்ற குணங்களைக் கொண்டு இருந்தார்.

வள்ளியின் பிரிய நாயகர்

muruga04தேவர்களின் படைத் தலைவரான முருகன் மலைவாழ் பெண் வள்ளியின் கரத்தைப் பிடித்தது இன்னொரு கதை ஆகும். வள்ளியை மணந்ததின் மூலம், தான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை சர்வ வல்லமை பெற்ற கடவுளான முருகன் அனைவருக்கும் காட்டினார். நம்பிராஜன் என்ற வேடனால் வளர்க்கப்பட்ட வள்ளி, முருகன் மீது மையல் கொள்ள, அவளை தன் வசப்படுத்தி அவளது காதலை அடைய வேண்டும் என்று எண்ணிய முருகன் ஒரு வேடவர் போல, மரத்தைப் போல, ஒரு கிழவரைப் போல பல ரூபங்களைக் எடுத்துக் கொண்டார். ஆனால் தன்னுடைய சகோதரரான கணேசரின் துணையை பெற்றுக் கொள்ளும்வரை அவரால் அவளை அடைய முடியவில்லை. அவருடைய மூத்த சகோதரர் ஒரு யானையின் உருவில் வந்து வள்ளியை பயமுறுத்தி முருகனை ஏற்றுக் கொள்ள வைத்தார். அவளுடைய வேடவர்களின் குடும்பத்தின் குலதெய்வம் முருகன் என்றாலும் , வள்ளியின் காதலர் வேலனே என்பதை அறிந்து கொள்ளா முடியாத அவர்கள் கார்த்திகேயரை தாக்க முயன்றாலும், அவர்களையும் அவரால் வெல்ல முடிந்தது.

முருகனை யார் என்று அடையாளம் கண்டு கொண்டதும் தமது தவறை உணர்ந்தவர்கள் அவருக்கு வள்ளியை திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தார்கள். திருத்தணியில் அவர்களது திருமணம் நடைபெற்றது. வள்ளி வலது பக்கத்திலும், தேவசேனா அவருடைய இடது பக்கத்திலுமாக காட்சி தருகிறார்கள். அவருடைய வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் இருந்தாலும், வள்ளியின் கையில் உள்ள தாமரை மலரோ , இல்லை தேவசேனாவின் கையில் உள்ள லில்லிப் பூவோ வாடவில்லை. அந்த இரண்டு தெய்வீக பெண்களுடனான திருமணத்தின் மூலம் முருகன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றும் காதல் திருமணம் என்ற இரண்டையுமே அங்கீகரிப்பதைக் காட்டுகிறது. பக்தர்களும், புலவர்களும் முருகன் மீது வள்ளி கொண்டு இருந்த ஆதிக்கத்தைக் எடுத்துக் காட்டி உள்ளார்கள்.

மலைக் கடவுள்

குறுஞ்சி மலையின் கடவுளே முருகப் பெருமான். அநேகமாக அனைத்து மலைகளிலுமே முருகனின் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் விசேஷமாக கூற வேண்டியது அவர் வசிப்பதாக கூறப்படும் ஆறு இடங்களான ஆறுபடை வீடுகள் என்பன. திருப்பரம்குன்றத்தில் அவர் தேவசேனாவை மணந்து கொண்டார். திருச்சிரளைவை (திருச்செந்தூர்) என்ற இடத்தில் அவர் சூரபத்மனை வதம் செய்தார். திருவாவினன்குடியில் துறவறம் கொண்டு பழனி ஆண்டவரானார். பிரணவ மந்திரத்தை அவருடைய தந்தைக்கு ஓதிய இடமே திருவேரகம் (ஸ்வாமிமலை). குன்றுதோரட்டல் மற்றும் பழமுதிர்சோலையில் வள்ளி மற்றும் தேவசேனாவுடன் இருப்பவர். ஆறுபடை வீடுகளைப் பற்றி எழுதி உள்ள இலக்கியங்களில் முருகப் பெருமானின் பராக்கிரமங்களைப் பற்றிக் கூறி உள்ளார்கள். அகநானூறு, புறநானூறு, கலித்தொகை , நாரினை, தொல்காப்பியம், குறிஞ்சிப்பாட்டு, மலைப்பாடுகளம் போன்றவற்றில் முருகனை பற்றிக் குறிப்பிடுகையில் அவரை மலைகளின் கடவுள் எனப் பாடி உள்ளார்கள்.

விசேஷ நாட்களில் பக்தர்கள் கிராமியப் பழக்கத்தை எடுத்துக் காட்டும் விதமாக மலை மீது காவடி ஏந்திச் சென்று தமது பக்தியைக் காட்டுகிறார்கள். தைபூசம், கிருத்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், போன்ற தினங்களில் வேலனுக்கு விசேஷமான வழிபாட்டை செய்கிறார்கள். தற்காலத்தில் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களைப் போலவே, முருகனை தரிசனம் செய்ய பாதயாத்திரையாக செல்பவர்கள் நாற்பது நாட்கள் விரதம் இருக்கின்றார்கள். அதில் காவடி முக்கியப் பங்கு பெறுகிறது. முருகனின் பல வீடுகள் எனப்படும் ஆலயங்களைப் பற்றி செய்திகள் திருமுருகாற்றுப் படை மற்றும் திருப்புகழ் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிஞ்சிக் கடவுள் மலைகளில் உள்ள பல ஆலயங்களிலும் வழிபடப்படுகிறார்.

சிவபெருமானுக்கு குருவானவர்

muruga07முருகனை தகப்பன் ஸ்வாமி அல்லது ஸ்வாமினாதன் என்பார்கள். அதாவது தந்தைக்கே குருவானவர் என்று அர்த்தம். ஸ்வாமிமலைக்கு அப்படி பெயர் வந்ததின் காரணக் கதை ஒன்று உண்டு. ஒருமுறை கைலாயத்துக்குச் சென்ற முருகனை பிரும்மா அவமதித்து விட்டார். ஆகவே அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய முருகன் பிரும்மாவிடம் பிரணவ மந்திரமான ஓம் என்பதற்கு அர்த்தம் தெரியுமா என்று கேட்டார். ஆனால் பிரும்மாவினால் அதற்கு பதில் கூற முடியாததினால் அவர் தலையில் ஓங்கி அடித்த முருகன் அவரை பிடித்து சிறையிலும் அடைத்து விட்டார் (ஆதி சங்கரரின் ஸ்ரீ சுப்பிரமணிய புஜாங்கம்- ஸ்லோகம் 12). பிரும்மா சிறை வைக்கப்பட்டதினால் படைப்புக்கள் நின்று விட சிவபெருமானே முருகனை சந்தித்து அதன் விளக்கத்தை தனக்குக் கூறுமாறு முருகனிடம் கேட்க, சிவபெருமானிடம் அவர் தனக்கு சிஷ்யனாக இருந்து அதைக் கேட்க சம்மதித்தால் அதன் அர்த்தத்தைக் கூறுவதாகக் கூறினார். அதை ஏற்றுக் கொண்ட சிவப்பெருமான் சிஷ்யனாக மாற குருவான முருகன் அதன் அர்த்தத்தைக் கூறினார். (குமரகுருபரர், கந்தர்கலை வெண்பா 90 –98).

ஆகவே அவரை ஸ்வாமினாதன் அல்லது குருநாதன் என அழைத்து அவர் தங்கி இருந்த மலைவீட்டை ஸ்வாமி மலை அல்லது திருவேரக்கம் என அழைத்தார்கள் (அருணகிரிநாதர், திருப்புகழ் ). சர்வ வல்லமைப் படைத்த சிவபெருமானோ தன்னுடைய மகன் முன்பு அடங்கி நிற்க வேண்டி இருந்தது. இதன் தத்துவம் என்ன என்றால் அதீத ஞானம் படைத்தவர்கள் யாராக, எந்த நிலையில் இருந்தாலும், அவர்களுக்கு முன்னாள் சர்வ வலிமைப் படைத்தவர்களும் அடங்கியே இருக்க வேண்டும் என்பதே. அருணகிரிநாதரின் கூற்றின்படி முருகப் பெருமானே பிரணவ மந்திரம் என்றும், சிவனும் முருகனும் ஒன்றே என்றாலும், அதன் அர்த்தத்தை அவருடைய வாயால் கேட்பதே மகிழ்ச்சியை அளிக்கும் என்றே இறைவன் கருதினார் (கந்தரலங்காரம், v. 55 / கந்தர் அனுபூதி v. 36) என்றார். ஞானப் பண்டிதரான முருகன் (Tiruppukal 100) அடக்கமே நற்பண்பு என்பதையும், தற்பெருமையுடன் கூடிய ஞானம் அழிவிற்கு காரணமாகி விடும் என்று இதன் மூலம் காட்டுகிறார்.

ஆசைகளைத் துறந்தவர்

நாரத முனி ஒரு மாம்பழத்தை கைலாசத்திற்கு கொண்டு போய்க் கொடுத்து கணேஷா மற்றும் முருகனுக்கு இடையே மனக்கசப்பை ஏற்படுத்தினார் (பழனி ஸ்தலபுராணம் ). முருகன் அதில் ஏற்பட்ட போட்டியில் தோல்வியடைந்ததினால் தன்னிடம் இருந்த அனைத்து செல்வம், மற்றும் அரசைத் துறந்து விட்டு ஆவினன்குடி அல்லது பழனியை அடைந்தார். அவரை அங்கு முற்றிலும் துறந்தவர் என்று அழைக்கின்றார்கள். அங்கு மிகச் சிறிய உடையை மட்டுமே அணிந்து கொண்டு, ருத்ராக்ஷா மற்றும் ஒரு தண்டத்தை ஏந்திக் கொண்டு நிற்கின்றார் (திருப்புகழ் , 117). அவரே விவேகப் பழமான ஞான பண்டிதர். தலைகனம் மற்றும் செருக்கு தோல்வியையே தரும் என்றும், அடக்கமும், முன் யோசனையும் மட்டுமே வெற்றியைக் கொடுக்கும் என்பதை வெளிப்படுத்துவதே இந்த சம்பவம் நடந்துள்ளது. அடக்க குணமும் மற்றும் எளிமையும் நிறைந்த கணேஷா அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர். ஒவ்வொருவரும் கோபத்தை துறக்க வேண்டும். சாதாரணமான ஒரு மாம்பழத்திற்காக முருகன் பெரிய நாடகமாடி விட்டதாக இது தோற்றத்தை தந்தாலும், பின்னர் அவர் தண்டாயுதபாணி கோலத்தை மேற்கொண்டதின் மூலம் அதிக ஆசையும், அவசர காரியங்களும் முடிவாக அனைத்தையும் துறக்க வைக்கும் மன நிலையில் கொண்டு சென்றுவிடும் என்பதை உணர்த்துகின்றது.muruga003

தமிழ்க் கடவுள் மற்றும் தமிழ் சங்கத் தலைவர்

முருகனை தமிழ் கடவுள் என்றும் இரண்டாம் சங்கத்தின் தலைவர் என்றும் கூறுவார்கள். முருகன் சங்கத்தின் முதல் தலைவரான அகத்தியருக்கே தமிழைக் கற்றுக் கொடுத்தவர் என்றும் கூறுகிறார்கள். இது தமிழுக்குக் கிடைத்துள்ள பெருமையும், அதன் புனிதம் மற்றும் மேன்மையையும் எடுத்துக் காட்டுகின்றது. தமிழ் சங்கத்தில் மெத்தப் படித்த அறிவு ஜீவிகளே உறுப்பினர்களாக இருந்ததினால் அதன் நடைமுறைகளும் நன்கே இருந்தன. தமிழ் மொழியும் முருகனுடன் இணைந்தே இருந்தது.

இளமையும் அழகையும் கொண்டவர்

முருகன் என்றால் இளமையானவர், மணம் மிக்கவர், தெய்வீக அழகுடையவர் என்று பொருள். குமரன் என்றாலும் இளமையானவர் என்றே பொருள். அழகு என்பது இதயத்தை சுத்தப்படுத்துகிறது. இளமை என்பது நோய் நொடிகள் அற்ற தன்மையைக் கொடுக்க, மணம் என்பது சுத்தமான சூழ்நிலையில் இருக்க வைக்க, தெய்வீக அருள் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடன் இருக்க வைக்கின்றது. அழகையும், இளமையையும் குறிக்கும் விதத்தில் அவரை முருகன், அழகன், குமரன் போன்ற பெயர்களில் அழைக்கின்றார்கள். சங்க இலக்கியங்களில் கார்த்திகேயரின் இந்த குணங்களைக் குறித்து நிறையவே எழுதப்பட்டுள்ளன.

(கட்டுரை ஆசிரியர் – திருப்புகழ் செல்வர் , உபன்யசதிலகம், AIR ‘A’ grade உபன்யாசகர் திரு.M.முத்துக்கிருஷ்ணன்)

9 Replies to “முருகனின் பல்வேறு தோற்றங்கள்”

 1. வணக்கம்
  நல்ல பொருள் பொதிந்த பதிவு. நன்றி
  என் கருத்தைப்பதிவிட அனுமதி வேண்டுகிறேன்
  ” வாக் ஏஷா வை சுப்ரஹ்மண்யம் ஆஸீத் என்ற வேத வாக்கியத்தின் படி மொழிக்கு இறைவன் ஆனான் முருகன். வர்ணம் ஸ்வரம் மாத்ரை பலம் சாம சந்தானம் என்ற ஆறும் முருகனுக்குத் திருமுகங்களாயின. மேலும் வாக் என்பதனை அக்னி என்று நிருக்தம் கூறும், கார்த்திகை நட்சத்திரங்கள் அக்னி நட்சத்திரங்கள் என்று சோதிட நூல்கள் நுவலும். அருட்திரு அருணகிரிநாதரும் ” ஆறு முகமான பொருள் நீ அருள வேண்டும் என்கின்றார்.

  சாம வேதம் உபாசனா காண்டம் எனப் படும், உபாசனை என்பது இதயத்துள் இறைவனைத் தேடுதல் சாம வேதம் பயிலும் மாணவன் சிகை நீக்கி தண்டம் ஏந்தித் தான் பயில்வது முறை, இதனை விளக்குவதற்காகத்தான் அத்திருக்கோலம் பூண்டார் என்பது என் கருத்து. தவறு இருப்பின் திருத்தினால் ஏற்பேன்.
  அன்புடன்
  நந்திதா

 2. முத்துக்ருஷ்ணன்
  “இந்து தெய்வங்களில் பல கடவுட்களும், பெண் தெய்வங்களும் உண்டு”.
  கடவுள் என்று வரும் ஆனால் கடவுட்கள் என்றபதமே தவறு. கடவுளர் என்பதும் தவறு.
  அதே போன்று இறைவன் என்ற வார்த்தையும் இறைவர்கள் என்று பன்மையில் வராது. தெய்வங்கள் பல உள்ளன ஆண் பெண் வடிவில். ஆனா இறை ஒன்றே ஏகம் ஸத் என்ற வேதவாக்கியம் அதைப்பறை சாற்றும்.ஆறு சமயத்தவரும் தத்தம் தெய்வமே முழுமுதற் பொருள் என்பர். ஆகவே இறை ஒன்றே என்பதே ஹிந்து சமய் நம்பிக்கை.

 3. முருகனின் சிறப்பம்சங்கள், செய்திகள் இக் கட்டுரையின் வாயிலாக சிறப்பாக உள்ளது. இதை எழுதிய திருப்புகழுக்கு மேலும் புகழ் சேர முருகனை வேண்டுகிறேன்.

  இப்படிக்கு
  இரா. தண்டாயுதபாணி

 4. //குறிஞ்சி என்ற பகுதி மலைப் பகுதியாக இருந்ததினால் அங்கிருந்த மலைவாழ் மக்கள் முருகனையே போற்றி வணங்கினார்கள்.//

  அப்படி இல்லை. “குறிஞ்சி நிலத்து மக்கள் முருகனையே போற்றி வணங்கினார்கள்”, “முல்லை நிலத்து மக்கள் திருமாலையே போற்றி வணங்கினார்கள்”, “மருத நிலத்து மக்கள் இந்திரனையே போற்றி வணங்கினார்கள்” முதலான கருத்துக்கள் சரியல்ல. ஏனெனில் சங்க இலக்கியச் சான்றுகளுக்கே இது முரணானது. பின்வருவனவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்:

  (1) முல்லை நிலத் தெய்வமாகச் சொல்லப்படும் திருமாலுக்கு குறிஞ்சி நிலங்களாகக் கொள்ளப்படும் திருவனந்தபுரத்திலும், திருவேங்கட மலையிலும், திருமாலிருஞ்சோலை மலையிலும் உள்ள இன்றைய பிரசித்தமான கோயில்கள் அன்றைக்கே இருந்தன என்பதற்குச் சங்க இலக்கியங்களில் மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன. அதே போன்று நெய்தல் நிலங்களாகிய திருவரங்கத்திலும், திருவெஃகாவிலும் (காஞ்சீபுரம்) திருமாலின் திவ்ய தேசங்கள் அன்றே இருந்தன என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இதற்கான சான்றுகள் இக் இக்கட்டுரைகளில் காணப்படும்: https://tamilhindu.com/2011/06/tamils-and-vedanta-5/ https://tamilhindu.com/2011/08/tamils-and-vedanta-6/

  (2) “நின் சேவடி தொழாரும் உளரோ, அவற்றுள்
  கீழேழ் உலகமும் உற்ற அடியினை” என்று பரிபாடல் திருமாலைக் குறித்துக் கூறும். இதனால் எல்லா நிலங்களிலும் மக்கள் திருமாலைப் போற்றித் துதித்தனர் என்று தேறுகிறது.

  (3) முருகனுக்குக் குறிஞ்சி நிலத்தில் மட்டுமல்ல, நெய்தல் நிலமாகிய “சீறலை வாய்” என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டு வந்த திருச்செந்தூரிலும் கோயில் இருந்ததாகச் சங்க இலக்கியம் கூறும்.

  (4) இந்திரனுக்கோ, வருணனுக்கோ முறையே மருத நிலத்திலும், நெய்தல் நிலத்திலும் கோயில் இருந்ததாக சங்க இலக்கியத்தில் எங்குமே இல்லை.

  அப்படியானால் தொல்காப்பியத்தில் “மாயோன் மேய காடுறை உலகமும்…” முதலான தொல்காப்பியச் செய்யுளுக்கு என்ன பொருள் என்று ஆராய வேண்டும். ஒரு மாபெரும் தமிழறிஞர் கூறியிருப்பது இங்கு நினைவிற்கொள்ள வேண்டும்:

  // இங்கு ‘மாயோன்’ என்றது திருமாலின் அவதாரமான கண்ணனை. ‘மேய’ என்றதற்கு ‘ரட்சகனாகப் பொருந்திய’ என்று பொருள். கண்ணன் காடுவாழ் சாதியாகப் பிறந்து, ஆயர்களைத் தன் உயிருக்கும் மேலாக ரட்சித்தவன். அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனைக் காடும் காடு சார்ந்த நிலமுமான முல்லைநிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். முருகன் மலைப்பாங்கான நிலத்தில் வாழ்ந்த வேடர்களின் செல்வியான வள்ளியை மணந்து அந்நிலத்திலே பல வீரவிளையாட்டுக்களைப் புரிந்தவன். அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனை மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்திற்கு ரட்சகனாகக் கொண்டார்கள். இந்திரன் மழை பொழிவிக்கும் தெய்வம். வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதநிலம் மழையின்றேல் அழிந்துவிடும். அதனால் தமிழகச் சான்றோர்கள் அவனை மருதநிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். வருணன் கடலுக்கு அதிதேவதை. அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனைக் கடலும் கடல்சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். //

  இதுவே மேற்கண்ட சான்றுகளோடு ஒத்து வரும்.

 5. என்ன கட்டுரை இது? கொஞ்சம் கூட ஜீவனே இல்லாமல், வளவளவென்று
  இருக்கிறது.

  // முருகனின் பிறப்பு, இயற்கையின் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு இருந்தது. //
  // தமிழ் சங்கத்தில் மெத்தப் படித்த அறிவு ஜீவிகளே உறுப்பினர்களாக இருந்ததினால் அதன் நடைமுறைகளும் நன்கே இருந்தன. தமிழ் மொழியும் முருகனுடன் இணைந்தே இருந்தது. //

  இது போன்று, ஜுனூன் தமிழ் மாதிரி ஏதோ ஒரு வினோதமான தமிழில், பொருத்தமில்லாத வார்த்தைகளுடன் தான் இந்தக் கட்டுரையின் எல்லா வாக்கியங்களும் உள்ளன. ஆங்கிலத்தில் யோசித்து தமிழில் எழுதியது மாதிரி இருக்கிறது. முருகன் என்றால் யார் என்றே தெரியாதவர்களுக்காக, வெள்ளைக் காரங்களுக்காக சொல்வது போலவும் இருக்கிறது. புதிதாக எந்த ஒரு விஷயமும் இல்லை. ஏமாற்றம் தரும் கட்டுரை.

 6. VADA MOZHIYIL, MATTRUM HINDI MOZHIYIL ‘MURGA’ YENDRAL ‘SEVAL PATCHI’ YENDRU ARTHAM. MURUGAN KAIYIL ‘SEVAL KODI’ IRUPPADAL AVARUKKU ‘MURUGAN’ YENA PEYAR VANDADHU. THAVIRA, ‘MURUGU’ YENDRAL ‘AZHAGU’ YENDRU ARTHAM. MIGAVUM AZHAGANA KADAVUL AAGA IRUPPADALUM AVARUKKU ‘MURUGAN’ YENDRA PEYAR SAALA PORUNDHUM.

 7. தமிழ் கடவுள் முருகனின் முழுப் பரிமாணமும் தெரிந்து, உணர முடிந்தது. கட்டுரை ஆசிரியர் முத்துகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள்.

 8. I am posting here a response to a controversy raised with Krishnakumar and this magazine editor about the author of Skandashashti Kavasham. I could not find out where it went. If the editor can trace that, I request him to shift my response there. Thanks in advance. I gave up interest in writing in this web magazine for private reasons. I hope this will be allowed to set matters right.

  கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்துவிட்டது. எல்லாரும் காப்புக்கட்டிக் கொண்டுவிட்டார்கள். எங்கள் குடுமப்த்தில் பலர். இருவர் காவடி தூக்குகிறார்கள். இவர்களுக்கும் மற்றும் வந்தவர்களுக்கெல்லாருக்கும் கந்த சஷ்டி கவசம் சிறு நூலைக்கொடுத்தார்கள். எங்கள் வீட்டில் போனவாண்டு திருச்செந்தூரில் சூரசம்ஹார நாளன்று சென்ற போது சங்கர் சிமென்டாரும் மற்றும பலரும் கொடுத்த அதே நூல் இருந்தாலும் பிறருக்குக் கொடுக்கலாமே என்று வாங்கிக்கொண்டார்கள்.

  மேலே சொன்னவை இங்கு முக்கியமன்று. இனிசொல்லப்போவதுதான்.

  நான் எல்லா நூல்களையும் புரட்டிப்பார்த்தேன். ஆசிரியர் பெயர போடப்படவில்லை. பின்னர் நூலகள் வாங்கிய்வர்களையெல்லாம் கேட்டுப்பார்த்தேன். தெரியவில்லை; ஒருவேளை அருணகிரிநாதராக இருக்குமே என்றுதான் சொன்னார்கள்.

  ஆக, நான் சொன்னது பொய்யில்லை. பொய்யுரைத்தல் இந்து தர்மமாகாது. இல்லையா? கந்த சஷ்டிக்கவசத்தின் ஆசிரியர் பால தேவராயர் என்பது இத்தளத்தார் எழுதியபோதிலிருந்தே எனக்குத் தெரிந்தது. அதன்பின்னர் நானும் தெரியாதவர்களுக்கெல்லாம் சொல்கிறேன் இப்போது.

  காவடி தூக்குதலும் காப்புக்கட்டிதலையும் நான் சொன்னது தில்லி மலைமந்திர் முருகனுக்குத்தான். புதன் கிழமை கிருஸ்ணகுமார் வந்தால் என்னை என்குடும்பத்தாருடன் சந்திக்கலாம். நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *