ஜனாப் ஜவஹரும் போதிசத்வரும்

morning_hindutvaபிரிவினையைத் தொடர்ந்து நடந்த அந்த மிகப்பெரிய நிகழ்வு மக்கள் இடப்பெயர்வு. இதை குறித்து பேசியதுமே நினைவுக்கு வருவது பஞ்சாபில் நடந்த அந்த அகதிகள் வரவுதான். ஆனால் வங்கத்தின் கதை என்ன? ஏன் பஞ்சாபிலிருந்து சிந்துவிலிருந்து வந்தது போல வங்கத்திலிருந்து அகதிகள் வரவில்லை? இல்லை. வந்தார்கள். ஆனால் அப்படி ஒரு அகதிகள் இருப்பதே வங்கத்துக்கு வெளியே தெரியவில்லை. தெரியவிடப்படவில்லை. எப்படி ஈழத்தமிழர்களின் அகதி நிலை தமிழ்நாட்டுக்கு வெளியே தெரிவதில்லையோ அதை போல. இந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் நம் முதல் பிரதம மந்திரி  ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம், ரோஜாவின் ராஜா, சாச்சா ஜவஹர்லால் நேரு அவர்கள்தான்.

பிரிவினையால் மிகவும் கஷ்டமடைந்தவர்கள் இந்துக்கள். முஸ்லீம்களுக்கு அவர்களுக்கு என்று பாகிஸ்தான் ஜனித்திருந்தது. ஆனால்  இந்துக்களுக்கு  பாகிஸ்தானில் (கிழக்கு & மேற்கு) எவ்வித வாழ்க்கை நிச்சயமும் இல்லை.  அகதிகளாக இந்தியா வந்தால் அங்கும் வாழ்க்கை நிச்சயமில்லை. நேருவிய அரசு அவர்கள் வாழ்க்கை எத்தனை அவமானகரமாக்க முடியுமோ அத்தனை அவமானகரமான ஒன்றாக மாற்றியிருந்தது. இதனுடைய உச்ச கட்டம்தான் 1971 இனப்படுகொலை. அதில் வங்க தேச இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டார்கள். ஆனால் மதரீதியில் பாகிஸ்தானிய இராணுவத்தால் வேட்டையாடப்பட்டவர்கள் இந்துக்கள்தான். 1971 இனப்படுகொலையின் போது பாகிஸ்தானிய ராணுவம் ஒரு வங்காளி இந்துவா இல்லையா என சோதிக்கும் புகைப்படம் அங்கு வாழும் இந்துக்களின் நிலை என்ன என்பதை காட்டும்.

1971

இந்த சூழலில் இந்துக்களை வாழ வைத்து அவர்களை அவமானப் படுத்தி மடிய வைக்கும் ஆரம்பத்தை ஆணவத்துடன் உருவாக்கியவர் ஜனாப் ஜவஹர்லால் நேருவேதான். அதை அன்றே பல தலைவர்கள் உணர்ந்தனர். எனவேதான்  ஒட்டுமொத்த இந்து தலைவர்களுக்கு ஜவஹர்லால் மீது ஒரு நம்பிக்கையற்ற தன்மை இருந்தது.

இந்த சூழலில்தான் இந்து சிவில் சட்ட முன்வரைவு அருமையான ஒரு வாய்ப்பாக கிடைத்தது ஜவஹருக்கு. அதை கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர். பாபா சாகேப் அம்பேத்கரின் எதிர்பார்ப்பு வேறு. ஜவஹரின் சிந்தனை வேறு. ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத் தன்மை கொண்ட இந்து சிவில் சட்டம் என்பது இந்து சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் செலுத்தும் என்பது பாபா சாகேப் அவர்களின் எண்ணம். இந்தியா இந்துக்களுக்கான பாதுகாப்பான தேசமாக இருக்க இது அவசியம் என்பது அவர் எண்ணம். நாளைக்கு இதுவே இந்தியாவின் பொது சிவில் சட்டமாக வேண்டும் என்பது அவர் எதிர்பார்ப்பு.  அவருடைய வார்த்தைகளை அப்படியே கூறினால் இன்றைய  போலி-மதச்சார்பின்மைவாதிகள் ’பெரும்பான்மை வகுப்புவாதம்’ என்றும் பாசிசம் என்றும் கூச்சலிடுவார்கள். பாபா சாகேப் கூறினார் (11-ஜனவரி-1950):

(இந்து சிவில் சட்ட) முன்வரைவு முற்போக்கானது. இந்திய சட்டத்தின் கீழ் அனைத்து மக்களுக்கும் ஒரே சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சி இது. சட்டம் இந்து மத சாஸ்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்த சட்டம் மேற்கத்திய இறக்குமதி அல்ல என்பதையும் இந்து சாஸ்திரங்களின் அடிப்படையிலானது என்பதையும் கவனிக்கவும். தொடர்ந்து ஒரு செயல்திட்டத்தின் முன்னோடி என்பதையும் அந்த செயல்திட்டம் அனைத்து பாரதியர்களுக்குமான ஒரு பொது சிவில் சட்டம் என்பதையும் அந்த பொது சிவில் சட்டத்தின் முதல் அடிப்படையாக இந்து சிவில் சட்டத்தை பாபா சாகேப் அம்பேத்கர் முன்வைப்பதையும் கவனிக்கவும். பாபா சாகேப் அம்பேத்கருக்கு இது ஆரோக்கியமான இந்து சமுதாயத்தை உருவாக்கும் ஒரு பெரிய வாய்ப்பு. அதன் மூலம் இந்தியாவில் இந்துக்களை ஒரு பலமான ஜனநாயக சமுதாயமாக மாற்றுவது அவர் இலக்கு. நேருவின் கணக்குகள் வேறு. இதன் மூலம் எப்படியும் தம்மை இந்து ஆச்சாரவாதிகள் எதிர்ப்பார்கள். அதனை வைத்து அவர்களை பிற்போக்குவாதிகளாக காட்டிவிட முடியும். எனவே இந்து ஆச்சாரவாதிகள் மனதில் இந்த சட்டம் ஏதோ நேருவால் இந்து மதத்துக்கு எதிராக கொண்டு வரப்படுவது போன்ற உணர்வு திட்டமிட்டு பரப்பப்பட்டது. நேருவை எப்போதுமே பாஸிடிவ்வான கேலிச்சித்திரங்கள் மூலம் விதந்தோதும் ’சங்கர் வீக்லி’ போன்றவை துரிதமான பிரச்சாரத்தில் இறங்கின.

துரதிர்ஷ்டவசமாக இந்து தலைவர்கள் நேருவின் இந்த தந்திர வலையில் வீழ்ந்தனர்.  இது இந்துத்துவம் நழுவவிட்ட ஒரு வரலாற்று வாய்ப்பு. நேருவின் மீதான ஐயப்பாட்டால் பாபா சாகேப் அம்பேத்கரின் ஈடியணைற்ற ஒரு சாதனையை போற்றி வரவேற்காமல் அவரை காயப்படுத்திவிட்டனர். இதில் வீர சாவர்க்கர் மட்டுமே விதிவிலக்கு. ஆனால் அப்போது அவரும் பிரதான அரசியல் குரலாக இல்லை. இதுவே பாபா சாகேப் அம்பேத்கரையும் அவர் தள்ளிப்போட்டிருந்த பௌத்த மதமாற்றத்தை நோக்கி நகர்த்தியது. ஜவஹர் எதிர்பார்த்தது நடந்தது. ஹிந்துத்துவர்களை ஒட்டுமொத்தமாக ஹிந்து ஆச்சாரவாதிகள் என முத்திரை குத்தி ஒதுக்க முடிந்தது. அத்துடன் ஹிந்துக்களை பாதுகாப்பது என்பதையே ஹிந்து வகுப்புவாதமென அவரால் பேசமுடிந்தது.

ஆனால் பாபா சாகேப் அம்பேத்கர் இதனால் நேருவின் மதச்சார்பின்மை எனும் மாயவலையில் விழவில்லை.  பாபா சாகேப் முன்வைத்த மதச்சார்பின்மை என்பது கோஷமல்ல. இந்துக்களின் நன்மையை பாதுகாப்பை அரசு காப்பாற்றுவதென்பது என்பது வேறு இந்து மத மேன்மையை அரசு தூக்கி பிடிப்பதென்பது வேறு. இதில் பாபா சாகேப் தெளிவாக இருந்தார். கம்யூனிச சீனாவும் இஸ்லாமிய நாடுகளும் மதமாற்ற சக்திகளும் செயல்படும் சூழலில் இந்துக்களின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் கடமை என்பதில் பாபா சாகேப் தெளிவாக இருந்தார். நேருவிய மதச்சார்பின்மை என்பது கோஷமும் வேஷமும் மட்டும் நிரம்பியது. ரோசாவின் ராசாவே அப்படிப்பட்ட நிலைபாடுடையவர்தான். ஹஜ் யாத்திரைக்கு மான்யமும், காஷ்மீருக்கு தனி அந்தஸ்தும்  என மதச்சார்பின்மைக்கு புது விளக்கம் கொடுத்தவர் மனிதருள் மாணிக்கம். எனவேதான் ஆசியஜோதியின் அமைச்சரவையிலிருந்து பதவிவிலகிய போது சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தில் பாபா சாகேப் அம்பேத்கர் சுட்டிக்காட்டினார்:

பாகிஸ்தானுடனான நம் உறவில் பிரச்சனை அளிக்கும் இரு அம்சங்கள் உள்ளன. ஒன்று காஷ்மிர் மற்றொன்று கிழக்கு வங்கத்தில் நம் மக்களின் நிலை. நாம் காஷ்மீரை விட கிழக்கு வங்கத்தில் நிலவும் சூழல் குறித்தே  அதிக கவலைப்பட வேண்டும். ஏனென்றால் கிடைக்கும் எல்லா செய்திதாள்களின் படியும் காஷ்மீரைக் காட்டிலும் நம் மக்களின் நிலை அங்கு தான் சகிக்க முடியாததாக உள்ளது. அதெல்லாம் குறித்து babasaheb1கவலைப்படாமல் நாம் காஷ்மீர் குறித்தே அனைத்து கவனத்தையும் செலுத்துகிறோம். இங்கு கூட நாம் உண்மையற்ற விஷயத்தில்தான் அக்கறை செலுத்துகிறோம். யார் செய்தது சரி தவறு என்பதல்ல எதை செய்வது சரி என்பதுதான் கவனம் செலுத்த வேண்டிய உண்மையான விஷயம். இந்த முக்கியமான விஷயத்தில் என்னுடைய பார்வை எப்போதுமே காஷ்மீரை பிரிவினை செய்துவிட வேண்டும் என்பதுதான். ஹிந்து – பௌத்த பகுதிகள் இந்தியாவுக்கும் முஸ்லீம் பகுதி பாகிஸ்தானும் அளிக்கப்பட்டு விடவேண்டும். நமக்கு காஷ்மீரின் முஸ்லீம் பகுதி குறித்து கவலையில்லை.  அது பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் முஸ்லீம்களுக்குமான பிரச்சனை. அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை செய்துவிட்டு போகட்டும். அல்லது உங்களுக்கு வேண்டுமென்றால் அதை மூன்றாக பிரியுங்கள்.  போர்-நிறுத்த பகுதி, சமவெளி பகுதி, ஜம்மு-லடாக் பகுதி. இதில் விருப்பத்துக்கான தேர்தல் (நேரு வாக்களித்த -’proposed plebiscite’) சமவெளி பகுதியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.   ஆனால் (நேருவின் வாக்குறுதிப்படி ) அனைத்து பகுதிகளுக்கும் இணைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் காஷ்மீரின் ஹிந்துக்களும் பௌத்தர்களும் அவர்கள் விருப்பத்துக்கு எதிராக பாகிஸ்தானுக்கு இழுத்துச் செல்லப்படுவர். நாம் மீண்டும் கிழக்கு வங்காளத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

ஏன் நம் ஆசியஜோதி கிழக்கு வங்க அகதிகளை குறித்து கவலை கொள்ளவில்லை? பிரிவினை குறித்த வரலாற்றாசிரியர் ஒருவர் விளக்குகிறார்:

இன்றைக்கு யோசிக்கும் போது ஆச்சரியமளிப்பதாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் மத்திய அரசோ பிராந்திய அரசோ ஹிந்து சிறுபான்மையினர் கிழக்கு வங்காளத்திலிருந்து பெருமளவுக்கு குடி பெயர்ந்து பாரதத்துக்கு வருவார்கள் என கருதவில்லை. …. இறுதியாக தயங்கி தயங்கி அரசாங்கம் அகதிகளை ஒரு யதார்த்தமாக கணக்கில் எடுக்க தொடங்கிய போது கூட அவர்களின் முக்கிய நோக்கம் அகதிகளை எப்படியாவது தடியை பயன்படுத்தியோ அல்லது சில சலுகைகளை காட்டியோ எங்காவது விரட்டி விடுவதாகவே இருந்தது. இவையெல்லாம் அகதிகளாக வந்தவர்களின் முகத்தில் அறைவதாக இருந்தது….

refugees1

இந்த மிக மோசமான அதிகாரபூர்வ அரசு நிலைபாட்டில் பாதி பங்கு டெல்லியில் உள்ள நேரு அரசாங்கத்தினுடையது. அகதிகள் மறுவாழ்வு என்பது மத்திய அரசின் தற்காலிக அதிகாரத்துக்குள் வருவதாக ஆக்கப்பட்டிருந்தது. எனவே மேற்கு வங்காள அரசு அகதிகளுக்கான நிவாரண நிதியளிக்கும் வழிகாட்டுதலுக்கும் மத்திய அரசையே நம்ப வேண்டியதாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு மத்திய அரசு கிழக்கு வங்காளத்திலிருந்து அகதிகள் வருகிறார்கள் என்பதையே ஏற்கவில்லை. நெருவே கிழக்கு வங்காளத்திலிருக்கும் சூழ்நிலை ஒன்றும் அங்குள்ள ஹிந்து சிறுபான்மையினர் கவலைப்பட்டு ஓடிவர வேண்டிய அளவுக்கு மோசமானதாக இல்லை என்று கருதிக் கொண்டிருந்தார். ஹிந்துக்கள் அகதிகளாக ஓடிவருவதற்கு காரணம் தேவையற்ற அச்சம், வதந்திகள்தானே தவிர இந்துக்களின் உயிருக்கோ உடமைகளுக்கோ எவ்வித ஆபத்தும் உண்மையில் இல்லை என உறுதியாக இருந்தார். …

ஆனால் 1950 இல் தெள்ளத் தெளிவாக புறக்கணிக்க முடியாத அளவு இந்து சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெடித்த போது நேரு- லியாகத்  ஒப்பந்தத்தை நேரு கையெழுத்திட்டார்… நேருவின் முக்கிய முதன்மை நோக்கம் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகள் பாரதத்துக்குள் வருவதை தவிர்ப்பதுதான். அது நல்ல நோக்கம். ஆனால் அந்த திட்டத்தையே அவர் பிடித்துக் கொண்டிருந்தது இந்திய அரசாங்கம் வங்க அகதிகளுக்கு நிலமைக்கும் நேரத்துக்கும் தகுந்த ஒரு நிவாரணத்தை அளிப்பதிலிருந்து தடுத்துவிட்டது. (நேருவின்) டெல்லி அரசாங்கம் கிழக்கு வங்காளத்திலிருந்து வரும் (ஹிந்து-பௌத்த) அகதிகளின் மறுவாழ்வு என்பது தேவையற்றது என்றும் தீவிரமாக தவிர்க்கப்பட வேண்டியது என்றும் வலியுறுத்தி வந்தது.

– ஜோயா சாட்டர்ஜி, The Spoils of Partition, Cambridge University Press, 2010, பக்.128-31

அப்போது வங்க முதல்வராக இருந்த பிரபுல்ல சந்திர கோஷ் கிழக்கு வங்க அகதிகளுக்கு ஆதரவளித்தார் என்ற காரணத்துக்காக சாச்சா நேரு அவரை பதவியிறக்கினார். பின்னர் மேற்கு வங்காளத்தின் முதல்வரான டாக்டர் பிதன் சந்திர ராய்க்கு ஆசிய ஜோதி மனிதருள் மாணிக்கம் ஒரு எச்சரிக்கை கடிதம் எழுதுகிறார்:

கிழக்கு வங்காளத்திலிருந்து (அதாவது பாகிஸ்தானிலிருந்து) ஹிந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் வருவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்பதில் நான் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருக்கிறேன்… அங்கே போரே ஏற்பட்டாலும் கூட அப்படி (இந்துக்கள்) இடம் பெயர்வதை நான் தடுப்பேன்.

1951 இறுதியில் இத்தனை அவமானங்களை இந்திய அரசு அவர்கள் முகங்களில் விட்டெறிந்து ஜனாப் ஜவஹர் தன் காலால் இந்துக்களை உதைத்த பிறகும் 25 இலட்சம் இந்துக்கள் இந்துக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்களென்றால் கிழக்கு வங்கத்தில் (பாகிஸ்தானில்) நிலை எப்படி இருந்திருக்க வேண்டும்? (அதே காலகட்டத்தில் மேற்கு பஞ்சாபிலிருந்து வந்த இந்து-சீக்கிய அகதிகளின் எண்ணிக்கை 24 இலட்சம்).

nehru3ஆக ஜவஹர்லால் நேருவிடம் வெளிப்படுவது மனித நேயம் அல்ல. மதச்சார்பின்மை அல்ல. இங்கு வெளிப்படுவது அப்பட்டமான வெறுப்பு. இந்துக்கள் மீதான வெறுப்பு. தப்பிக்கும் யூதர்களை பிடித்து வதை முகாம்களில் அடைத்த நாசிகளின் வெறுப்புதான் துல்லியமாக நேருவிடமும் வெளிப்பட்டது. எவ்வளவுக்கு எவ்வளவு இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதுதானே. சாகிற இந்துக்களுக்காக சங்கடப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் மனிதர்களே அல்ல. ஹிட்லரும் ஸ்டாலினும் மாவோவும் மக்கள் உயிர்களை குறித்த அலட்சியத்தை வெளிப்படையாக பேசினார்கள். ஆனால் ஆசிய ஜோதி புத்திசாலி. அவர் இனிமை நிரம்பிய வார்த்தைகளால் ஜனநாயக லட்சார்ச்சனையும் மகாத்மா அஷ்டோத்திரமும் சொல்லியபடியே இந்துக்களை பாகிஸ்தானிய வதை முகாம்களில் தள்ளுவதில் கவனமாக இருந்தார்.

1971 இல் பாகிஸ்தானிய ராணுவம் கிழக்கு வங்காளத்தில் ‘எத்தனை இந்துக்களை இன்று நீ கொன்றாய்?’ என அப்பட்டமாக கேள்வி கேட்டு ராணுவ அதிகாரிகளை முடக்கிவிட்டு இனப்படுகொலை நடத்திய போது நேரு உயிருடன் இருந்திருந்தால்?

அதை நடத்திய பாகிஸ்தானிய ராணுவ தளபதி யாஹியாகானுக்கு ஒரு இந்திய ரசிகர் கிடைத்திருப்பார். யாஹியாகான்- ஜவஹர் ஒப்பந்தம் இந்திய அமைதி விரும்பிகளுக்கு ஒரு சாதனையாக அமைந்திருக்கும். கொல்லப்பட்ட இந்து குழந்தைகளின் ரத்ததில் நேரு மாமாவின் ரோசா இன்னும் சிவந்திருக்கும்.

மீண்டும் தேநீருடன் நாளை காலையில் சந்திப்போம்.

ஜோகேந்திரநாத் மண்டல் சுதந்திரப் போராட்டக் காலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பொதுவான ஹிந்து சமூகத்திற்கே உரித்தான் நன்னம்பிக்கை மனநிலையில் முஸ்லீம் சமூகத்தோடு ஹிந்து சமூகம் நல்லிணக்கத்தோடு வாழமுடியும் என்று நம்பியவர். பாகிஸ்தான் உருவாகக் காரணமான முகம்மது அலி ஜின்னாவின் நண்பர். பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்று பேசியவர்.

ஆனால் பிரிவினைக்குப் பிறகு உருவான இஸ்லாமிய கிழக்கு பாகிஸ்தானில் நாமதாரிகள் போன்ற தலித் சமூகங்கள் உட்பட எல்லா இந்துக்களுக்கும் கொல்லப்பட்டு அழிக்கப்பட்டு அல்லது துரத்தப் படுவதே விதியாகி விட்டதை நேரடியாகக் கண்டு தவித்தார் அவர். நன்னம்பிக்கை சிதறிப்போய், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது அவர் எழுதிய உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அந்த ராஜினாமா கடிதத்தின் மொழி பெயர்ப்பு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளது. அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிய ஒரு முக்கிய ஆவணமாக இது உள்ளது.

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்

பகுதி 1, 2, 3, 4

17 Replies to “ஜனாப் ஜவஹரும் போதிசத்வரும்”

  1. நேரு ஒரு வக்கிர புத்தி படைத்த பேர்வழி என்பது தெளிவாக தெரிகிறது. பல கோடி இந்துக்களைக் கொன்ற ஜவஹர்லால் நேரு பற்றி வாய் திறக்காமல் இந்த விஷயங்களை மூடி மறைக்கும் எந்த அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் தீயசக்திகளே ஆகும்.

  2. மறைக்கப்பட்ட வரலாறு; இது நாள் வரையும் வரலாறு என்ற பெயரில் நேருஜியை கதாநாயகனாக வைத்து குளுகுளு வண்ணப்படம்தான் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்; தேசப் பிரிவினையின் சோக வரலாறு என்றைக்குத்தான் வரலாற்றுப் பாடமாக அறியக்கிடைக்குமோ?

  3. நேருவின் தவறுகள் தான் பாரதத்தை வாட்டி கொண்டு இருக்கிறது இது என்று எல்லா சராசரி ஹிந்துக்களுக்கும் தெரிகிறதோ அன்றுதான் அவர்கள் கொணடடபடுவது நிற்கும்

  4. நேருவை புரிந்து கொள்ளவேனுமானால் காந்திக்கும் நேருக்கும் நடந்த உரசல்களை தெரிந்து கொள்ளுங்கள் எப்படி நேரு யாரால் வளர்க்கபட்டார் என்பதை புரிந்து கொள்ளமுடியும்; காந்தியை நடை பிணமாய் கொன்றவர் நேரு என்பதை நெருக்கமாக வரலாறை அறிந்தவர் புரிய முடியும் …
    உதாரணம் :
    Indira Gandhi, daughter of Jawaharlal Nehru, She was named Indira Priyadarshini Nehru. She fell in love and decided to marry Feroze Khan, a family friend. Feroze Khan’s father, Nawab Khan, was a Muslim, and mother was a Persian Muslim. Jawaharlal Nehru did not approve of the inter-caste marriage for political reasons (see https://www.asiasource.org/society/indiragandhi.cfm)
    .. If Indira Nehru were to marry a Muslim she would loose the possibility of becoming the heir to the future Nehru dynasty. At this juncture, according to one story, Mahatma Gandhi intervened and adopted Feroze Khan, gave him his last name (family name/caste name) and got the name of Feroz Khan changed to Feroz Gandhi by an affidavit in England . Thus, Feroze Khan became Feroze Gandhi.
    The Indira Gandhi was not Gandhi but Indira gained the surname “Gandhi” by her marriage to Feroze Gandhi. She had no relation to Mahatma Gandhi, either by blood or marriage.

  5. In Parliament N.C. Chatterjee, the Hindu Mahasabha leader, and S.P. Mokerjee protested vehemently against what they took to be a threat to file stability and integrity of traditional forms of marriage and the family in Hindu society.

    Nehru And The Hindu Code Bill https://www.outlookindia.com/article.aspx?221000

    In a single year, 1949, the R. S. S. organized as many as 79 meetings in Delhi where effigies of Nehru and Ambedkar were burnt, and where the new Bill was denounced as an attack on Hindu culture and tradition.

    Changes made (1) For the first time, the widow and daughter were awarded the same share of property as the son; (2) for the first time, women were allowed to divorce a cruel or negligent husband; (3) for the first time, the husband was prohibited from taking a second wife; (4) for the first time, a man and woman of different castes could be married under Hindu law; (5) for the first time, a Hindu couple could adopt a child of a different caste.

    Reforming The Hindus https://ramachandraguha.in/archives/reforming-the-hindus.html

  6. Destinity of our motherland in the hands of malikapur, nadhirsha, Ourangazeb and east indian company british was determined cruelly for centuries. So after 1947 though the nation is out of foreign hands did not fully changed. The so called machaley education must be changed to bring India developed. As long as the present education system exists it can only produce the minds of roseflowers who emerged as good out look but utter failure in the welfare of own countrymen, character and culture. I pray Arunachaleswarar to awaken our people from their long sleep due to the drug effect of machaley education system. Wish u all the best to expose the truths. Vande madharam, Jaihind.

  7. இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணம் இந்துக்கள் ஒரு ஒருங்கிணைக்கப்படாத சமூகம் என்பதுதான். நேரு ஒரு மனிதாவிமானமற்ற இந்து விரோதி என்பது தெளிவாக பாக்கிஸ்தான் பிாிவினை பற்றிய கட்டுரைகள் காட்டுகிறது. இன்றும் இந்து நலன் களை நசுக்கி தங்களை மதச்சாா்பற்றவர்களாக காட்ட முயலும் நீச அரசியல்வாதிகளால்தான் பயங்கரவாதம்போன்ற பல பிரச்சனைகளில் எந்த தீர்வும் எட்ட முடிய வில்லை. இன்றும் பல இந்துக்கள் பிற மதத்தவா்களால் இந்துக்களுக்கு ஏற்படும் அநியாயமான பிரச்சனை குறித்து பேசுவதில்லை. காபீர் என்ற சொல்லை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைய வேண்டும். இந்து்களின் வருங்கால வாழ்வுக்கு திட்டம் என்ற எனது கட்டுரை என்ன ஆயிற்று? படித்து முடிக்கவில்லையா?

  8. ஜனாப் ஜனாப்தான் போதிசத்துவர் போதிசத்துவரேதான். மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் ஜவகருக்கும் பாபாசாஹிப்புக்கும் உள்ளது என்பதை அ நீ ஆணித்தனமாக நிறுவி உள்ளார்.

  9. In one way I support sunnygreen as Hindusthan might not have been divided. In the name of jihad many massacre might not have been happened. But it would be more difficult to predict whether we continue to be Hindus as we are now due to the influence of missionary schools by the Govt support and our rose flower would have enjoyed more by his tip tongue English pronounciation.

  10. திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் சுட்டிக்காட்டும் இச்செய்திகள் தமிழக மக்களுக்குப் புதியனவாக இருக்கும்.

    நேருவின் இந்த இந்து விரோத நிலை, நேருவின் மதச்சார்பற்ற தன்மையாகவே இங்கு {தமிழகத்தில்} பார்க்கப்படுகிறது. ஆங்கிலத்தில் நேரு குறித்து கிடைக்கும் பல கட்டுரைகளும், புத்தகங்களும் தமிழில் கிடைப்பதில்லை. குறிப்பாக Ram Swarup, Seetharam Goel, Koenrald elst, Stephen Knapp போன்றோர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, {நல்ல விளம்பரத்துடன்} வெளியிட வேண்டும்.

    அ.நீ. போன்றோர் இப்படி எடுத்துரைக்கும்போதுதான், இது போன்ற செய்திகள் தமிழர்களை எட்டுகிறது.

    இதுபோன்ற கட்டுரைகள் பல வரவேண்டும். மதச்சார்பற்றவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் முகமூடி மனிதர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்.

  11. Hello! What happened to the to-day’s tea? I have been waiting for long at your TEA STALL BENCH . Is to-day holiday for your tea stall? OK Let me ponder over the taste of yesterday’s tea.

    அந்த காலத்தில் நேரு திமுகவை “Nonsense ” என்றார். அவர் வழி வந்த ராகுல் இன்று “Singh ” ஐ “Nonsense ” என்கிறார். என்ன தவறு? நேருவின் genes தானே ராகுலின் உடலிலும் உள்ளது.! இப்படி இங்க்ளிஷில் திட்டியதால்தான் நேரு இங்கிலிஷில் புலி என்றார்களோ? இங்க்லீஷ் தெரிந்தால் மட்டும் போதாது (நேரு) மாமா கொஞ்சம் இங்கிதமும் தெரியணும். ஆமா!

    Antonia Mino (இத்தாலி இறக்குமதி) நம் மோடியை “Merchant of death ” என்று கூறினார். ஆனால் அவர்களது சின்னம் ஒரு ” Blood -stained hand ” என்று சொன்னதும் EC நோக்கி ஓடுகிறார்கள் ஏன்? அப்படியானால் “அன்னையின் கை அன்னமிட்ட கையா? அல்லது அரசு கஜானாவை கன்னமிட்ட கையா? சொல்லுங்கள். மேனாட்டு படிப்பு படித்த நேருவின் தொண்டர்களின் கீழ்கண்ட பேச்சை கேளுங்கள் பின்பு அவர்கள் முகத்தில் காரி காரி துப்புங்கள்.
    1) Beni prasad verma compared Modi with a DOG.
    2)Congress MP Hussain Delwai referred to Modi as a MOUSE
    3) Salman Kurshid called Modi a MONKEY
    4) Mani shankar aiyar called Modi as a SNAKE & SCORPION
    5) Rahul called the BJP as a party of THIEVES.(source Indian express நாள் 17.11.13)

    இலங்கை வடக்கு மாகாண CM திரு விக்னேஸ்வரன் TNA councillors களிடம் “மோடியின் பொருளாதார வளர்ச்சி MODEL யை பின்பற்றுமாறு” கூறினார் (இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 13.10.2013)

    “மத்திய பிரேதேச முதல்வரின் குடும்பம் அந்த மாநிலத்தை கொள்ளையடித்த குடும்பம்” என்று காங்கிரஸ்காரர்கள் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்துள்ளனர். இது “பாரீர்! பாரீர்! ஏழை பங்காளன் வாழும் மாடி வீட்டை” என்று கர்ம வீரர் காமராஜர் மீது அபாண்ட பழி போட்டு பொய்யான போஸ்டர் ஒட்டிய கருணாநிதியை எனக்கு ஞாபகப் படுத்துகிறது. ஆகவே நாட்டோரே நல்லோரே! யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நன்றாக யோசித்து முடிவெடுங்கள்.

    (Edited and published)

  12. // ஆக ஜவஹர்லால் நேருவிடம் வெளிப்படுவது மனித நேயம் அல்ல. மதச்சார்பின்மை அல்ல. இங்கு வெளிப்படுவது அப்பட்டமான வெறுப்பு. இந்துக்கள் மீதான வெறுப்பு. தப்பிக்கும் யூதர்களை பிடித்து வதை முகாம்களில் அடைத்த நாசிகளின் வெறுப்புதான் துல்லியமாக நேருவிடமும் வெளிப்பட்டது. எவ்வளவுக்கு எவ்வளவு இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதுதானே. சாகிற இந்துக்களுக்காக சங்கடப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் மனிதர்களே அல்ல. ஹிட்லரும் ஸ்டாலினும் மாவோவும் மக்கள் உயிர்களை குறித்த அலட்சியத்தை வெளிப்படையாக பேசினார்கள். ஆனால் ஆசிய ஜோதி புத்திசாலி. அவர் இனிமை நிரம்பிய வார்த்தைகளால் ஜனநாயக லட்சார்ச்சனையும் மகாத்மா அஷ்டோத்திரமும் சொல்லியபடியே இந்துக்களை பாகிஸ்தானிய வதை முகாம்களில் தள்ளுவதில் கவனமாக இருந்தார். //

    இங்கே தெரிவது வெறுப்பு அரசியல்தான். அ.நீ.யின் வெறுப்பு அரசியல். அ.நீ.யின் தார்மீக நேர்மை மீது இது வரை இருந்த மரியாதை இன்று தகர்ந்துவிட்டது.

  13. ஆர் வி அவர்களே , அநீ எழுதியுள்ளது உண்மை. உண்மை கசக்கும். உண்மை சுடும். உங்களுக்கு நேர்மை இருந்தால் தான் உண்மையை ஏற்க முடியும். காங்கிரஸ் மற்றும் நேருவைப்போன்ற போலிகளால் இந்தியாவுக்கு நேர்ந்த கெடுதல்கள் ஏராளம்.

  14. ஆர்.வி, உங்களைப் பொறுத்த வரையில், கிழக்கு வங்கத்தில் இந்துக்களின் படுகொலையை உறைந்த மனத்துடன் பார்த்திருந்த நேருவின் அரசியல் வெறுப்பரசியல் அல்ல. திக்கற்று ஓடிவந்த இந்து அகதிகளுக்கு உதவினார் என்ற ஒரே காரணத்திற்கான தன் கட்சி முதல்வரையே நேரு நீக்கியது வெறுப்பரசியல் அல்ல. ஆனால் அந்த வரலாற்று உண்மைகளை எடுத்து எழுதி, நேரு மாமா குறித்த பிம்பங்களை உடைக்கும் அ.நீ செய்வது வெறுப்பரசியல். நல்ல நியாயம். நல்ல அறம்.

    இப்படித் தான் இருக்கிறது இங்கு விமர்சிக்கும் எல்லா நேருவிய ஆதரவாளர்களின் மறுமொழிகளும்.

  15. பள்ளிகூடங்களில் போதிக்கப்பட்ட பொய் வரலாறுகளைப் படித்த RV க்கு இப்போது Reverse ல் அல்லது Versus ல் படிக்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அந்த அதிரசசியில்தான் அந்த RV க்கு உண்மைகள் கசக்கிறது. அதனால் தான் “அ.நீ(tea )” யை “அநீதி” யானது என்று புலம்புகிறார்.

  16. //கிழக்கு வங்காளத்திலிருந்து (அதாவது பாகிஸ்தானிலிருந்து) ஹிந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் வருவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்பதில் நான் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருக்கிறேன்… அங்கே போரே ஏற்பட்டாலும் கூட அப்படி (இந்துக்கள்) இடம் பெயர்வதை நான் தடுப்பேன்.//

    இதை நேருவின் வார்த்தைகள் என்றால் ….. வருத்தமாக இருக்கிறது . உதிர் தப்பிக்க வருபவர்களை தடுப்பது கண்டிப்பாக தவறுதான்.
    நேரு பஞ்ச காலங்களில் உலக நாடுகளிடம் கையேந்தி மக்களை காப்பாற்றியவர் என்றும் படித்திருக்கிறேன். குழப்பமா தான் இருக்கு 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *