ஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்

ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption) அமைப்பின் தன்னார்வலர் தில்லிக் காரர் கௌரவ் ஷர்மா இந்தக் கேள்விகளை எழுப்புகிறார்.

மூலம்: கௌரவ் ஷர்மா (பேஸ்புக்கில்)
தமிழில்: ஜடாயு

எனது நண்பர்கள் திடீரென்று அலையலையாக எழுந்து அர்விந்த் கேஜ்ரிவால் அவர்களை வாழ்த்த ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களது தனிப்பட்ட கருத்துக்கு மரியாதை அளித்து, அதே நேரம் சில கேள்விகளையும் கேட்க விரும்புகிறேன்.

aap_manifesto_new_360நண்பர்களே, தில்லி ஜந்தர் மந்தரில் நடந்த அண்ணா ஹசாரே இயக்கத்தின் எல்லா போராட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டவன் நான் (உங்களில் பெரும்பாலானவர்கள் அப்போது பேஸ்புக்கில் அண்ணா ஆதரவு பிரசாரத்துக்கு லைக்குகள் கூட போட ஆரம்பித்திருக்கவில்லை). எனவே அர்விந்த் கேஜ்ரிவாலை எனக்கு ஓரளவு நன்றாகத் தெரியும் என்று நான் கூறுவது சும்மா விளையாட்டுக்காக அல்ல. அவரது விசிறியாக இருந்து  இப்போது விமர்சகனாக ஆவதற்கு எனக்குப் பல மாதங்கள் பிடித்தன. எனது கருத்தியல் என்ன, நான் அவரை எதிர்க்க காரணங்கள் உள்ளனவா என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் பாஜக ஆதரவாளன் அல்ல (குறைந்தது, குருட்டுத்தனமான விசிறி அல்ல).  எனது தாய்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல நேர்மறையாக உந்துதல் அளிக்கும் என்ற அளவில் தேசியவாத கருத்தியலை நான் ஆதரிக்கிறேன்.

என்னுடைய கேள்விகளை திறந்த மனதுடன் அணுகி, இந்த ஒவ்வொரு விஷயத்திலும் உங்களது நிலைப்பாடு என்ன என்று நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

1. நீங்கள் பயங்கரவாதிகளை ஆதரிப்பவரா? இல்லை என்றால், எப்படி உச்சநீதி மன்றத்தில் பயங்கரவாதிகளின் வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டிருப்பவரை நிறுவனராகக் கொண்ட கட்சியை ஆதரிக்கிறீர்கள்?

(ஆ.ஆ.பா நிறுவனர்களில் ஒருவரான பிரஷாந்த் பூஷன், பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நசீர் மதானி தரப்பு வழக்கறிஞர்)

2. காஷ்மீர் தனிநாடு ஆவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லை என்றால், அதை தீவிரமாக ஆதரிப்பவர்களை கமிட்டி உறுப்பினர்களாக்க் கொண்ட கட்சியை எப்படி ஆதரிக்கிறீர்கள்?

3. மாவோயிசத்தை, நக்சல்வாதத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லை என்றால் நக்சல் தலைவர்களை தங்கள் கூடவே அழைத்துச் செல்லும் தேசிய செயற்குழுவைக் கொண்ட கட்சியை எப்படி ஆதரிக்கிறீர்கள்?

4. இந்திய ராணும் வகுப்புவாத தன்மை கொண்டது என்றும் மனித உரிமைக் குற்றவாளி என்றூம் நீங்கள் கருதுகிறீர்களா? இல்லை என்றால் சகட்டுமேனிக்கு இத்தகைய கருத்துக்களை வைத்துக் கொண்டு, சர்வதேச கருத்தரங்குகளில் இந்திய ராணுவத்தை அவதூறு செய்யும் தலைவர்கள் நிரம்பிய, அப்படிப் பட்டவர்களால் நிறுவப் பட்ட கட்சியை நீங்கள் எப்படி ஆதரிக்கிறீர்கள்?

5. ஊழலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லை என்றால் போலி ரசீதுகள் மூலமாகவும், குறுக்கு வழிகள் மூலமாகவும் நன்கொடைகளை வசூலித்து முறைகேடுகள் செய்த கட்சியை எப்படி ஆதரிக்கிறீர்கள்?

6. காங்கிரசை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லை என்றால், அர்விந்த் கேஜ்ரிவாலை எப்படி ஆதரிக்கிறீர்கள்? இந்திய தணிக்கைப் பணி (IRS) அதிகாரியாகப் பணியாற்றும் போது இடமாற்றம் செய்யப் படும், சோனியா காந்தியின் தனிப்பட்ட பரிந்துரையின் பேரில அது ரத்து செய்யப் பட்டு, தில்லியிலேயே பணிக்காலம் நீட்டிக்கப் பட்டவர் அவர் என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

7. நீங்கள் மாஃபியாக்களை ஆதரிப்பவரா? இல்லை என்றால் உள்ளூர் மாஃபியாக்களும்  ரவுடிகளுக்கும் தேர்தலில் நிற்க சீட்டு அளித்த கட்சியை எப்படி ஆதரிக்கிறீர்கள்?

8. நீங்கள் சோஷலிச பொருளாதாரத்தை ஆதரிப்பவரா? ஆ.ஆ.பா கட்சியின் தேர்தல் அறிக்கையை நீங்கள் படிப்பது நல்லது.  தில்லி தேர்தல் முடிந்து விட்டது என்றாலும், அதை நீங்கள் படித்தால் அந்தக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது புரியும்.

9. நீங்கள் இலவசங்கள் வழங்கள் படும் அரசியலை ஆதரிப்பவரா? ஆ.ஆ.பா கட்சி இலவசமாக தண்ணீரையும், பாதிக் கட்டணத்தில் மின்சாரத்தையும் தில்லி போன்ற ஒரு நகரத்தில் வழங்குவோம் என்று கூறியது நினைவில் உள்ளதா?

10. கடைசியாக, வகுப்புவாதத்தையும் வாக்கு வங்கி அரசியலையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா? உ.பி பரெய்லி மதக்கலவரங்களில் நேரடியாக ஈடுபட்ட, பங்களாதேஷி எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை கொலை செய்ய ஃபத்வா வெளியிட்ட மௌலானா தவ்கீர் ரஜா என்பவரிடம் பிச்சை கேட்காத குறையாக்க் கெஞ்சினார் அர்விந்த் கேஜ்ரிவால். அவரை எப்படி ஆதரிக்கிறீர்கள்?

இந்தக் கேள்விகளில் பெரும்பாலானவற்றுக்கு “இல்லை” என்பது தான் உங்கள் பதில் என்றால், நீங்கள் எதனால் ஆஆபா கட்சியை ஆதரிக்கிறீர்கள் முட்டாள் நண்பர்களே? அது நல்ல ஃபேஷன் என்பதற்காகவா?

நீங்கள் எந்தக் கட்சியையும் ஆதரியுங்கள். அதற்கு முன்பு அது பற்றிய உண்மையான விவரங்களைத் தெரிந்து கொண்டு பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். சும்மா என்.டி.வி.வி தொலைக் காட்சி சொல்வதை நம்பிக் கொண்டிருக்காதீர்கள்.

ஆம் ஆத்மி கட்சியின் இந்த பிடிவாதத்தினால் ஆறு மாதங்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ய இடம் ஏற்படுத்தித் தந்து மறைமுகமாக காங்கிரஸ் கட்சிக்கு உதவி செய்கிறது. மேலும் மறு தேர்தல் நடத்துவதன் மூலமாக பல கோடி வீண் செலவுக்கு நிர்பந்திக்கிறது. ஊழலை ஒழிப்பதற்காகக் கிளம்பிய கட்சி பொது மக்களின் வரிப்பணத்தை வீணாகச் செலவு செய்ய கட்டாயப் படுத்துகிறது. வீணாக ஒரு தேர்தல் நடத்தக் கட்டாயப் படுத்துவதும் ஒரு வகையில் பொது ம்க்களின் வரிப்பணத்தின் மீதான அநாவசிய செலவுதானே? ஊழலினால் விரையமாகும் வரிப்பணத்திற்கும் இதற்கு என்ன வித்தியாசம் ? இதுதான் நேர்மையான ஆட்சியைத் தரப் போகும் கட்சியின் லட்சணமா?

– விஸ்வாமித்ராவின் அதிரடி கட்டுரையிலிருந்து

34 Replies to “ஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்”

  1. மோடியை வீழ்த்த பத்திரிக்கை உலகம் கண்மூடித்தனமாக உசுப்பேத்திவிடும் மாயவலையில் விழுந்தவர் அவர். அவரின் பேட்சே அந்த ஸ்டைல் ஆ சரி இல்லை. இவரை நம்பி அல்லது கிரண்பேடி போன்ற நடுநிலையர்களின் உதவி உடன் BJP போகவே கூடாது. வாஜ்பாயி 13 நாள் , பிகார் சட்டவிரோத கலைப்பு –பின் நடந்தது போல , ஆளுநர் அழைத்தால் 1 வாரம் அவகாசம் அதன் பின் மெஜாரிடீ இல்லை, சட்டமன்றம் கூட கூட்டி அதை நீருபிக்க போவது இல்லை என்று BJP வெளியில் வந்தால் பின்பு முழு பலத்துடன் வரலாம்.

  2. மிகவும் நல்ல பதிவு. தேசத்துரோகிகளின் நண்பர்கள், நக்சல் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள், பிரிவினை வாதிகளின் அடிவருடிகள், மக்கள் விரோத அடிப்படைவாதிகளின் பாதுகாவலர்கள் ஆகிய அனைத்து உண்மைகளையும் சாதுர்யமாக மறைத்து, மக்களிடம் நல்லவர்கள் போல நடிக்கும் இந்த நடிகர்களை மக்கள் மத்தியில் தோலுரிக்க வேண்டியது மிகவும் அவசியம். உடனடியாக இந்த உண்மை மக்களை சென்றடையவில்லை என்றால் நிறைய பொதுமக்களின் பணம் மற்றும் உழைப்பில் தேசத்துரோகிகள் ஊட்டம் பெறுவார்கள்.

  3. congress ன் நரி தந்திரத்தை மனதில் வைத்து என் கருத்தை போட்ட 10 நிமிடத்தில் நான் கண்ட செய்தி இது;
    –ல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆம்ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 70 இடத்தில் 36 இடங்களை பெறும் கட்சியே ஆட்சியமைக்கமுடியும். ஆனால் மெஜாரிட்டி இல்லாததால் பாஜக மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் ஆட்சி அமைக்க மறுப்பு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண்பேடி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி இணைந்து ஆட்சியமைக்கலாம் என யோசனை தெரிவித்தார். இந்நிலையில் இவரது யோசனையை காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் ஆதரித்துள்ளார்.

    இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளதாவது; நேற்று கிரண்பேடி ஒரு புத்திசாலித்னமாக யோசனையை தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் ஆம் ஆத்மி இணைந்து தில்லியில் ஆட்சியமைக்கலலாம் என்றும் இருவரும் இணந்து பொதுவான அரசினை அமைக்கலாம் என்று கூறியுள்ளார். இது சரியானது தானே. ஏன் ஆட்சி அமைக்ககூடாது. என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  4. ஆ.ஆ.பா காங்கிரசின் (Sister Concern )

    AAP Just another front of the congress party – By Meenakshi Lekhi

    Be it Tamil Nadu, Punjab, Kashmir or the entire North East including Assam, creating and nurturing social groups with hate for the majority community has been Congress’ strategy for long. The ideology of ” hate for nationalist forces like BJP” also brings in a diverse bunch of congress-dummies such as BSP, SP, DMK, MIM, UDF, IUML and many such parties.
    The most unfortunate aspect of such a hate coalition is the hiring of Leftists to provide intellectual, ideological, communication and academic fire power needed to eliminate a nationalist party like BJP from the Indian political landscape. Their support system extends several foreign powers wanting to destroy the very idea of Indian nationalism. A Congress sponsored Stalin style leftist media and academic architecture is designed to unleash a vicious hate propaganda against BJP or any nationalist voice. Therefore, one sees such a hostile media manned by propagandists posing as self-styled journalists.
    The emergence of Aam Aadmi Party must be looked from the above perspective. Its functioning and control is pretty much Congress in style and substance. Appeasement of anti-BJP forces, propaganda support from Congress sponsored self-styled journalists, anchors and media houses, and – most importantly – use of dirty foreign money defines AAP as a catalyst for the making of an urban Naxalbari in Indian metros.
    The AAP boss Arvind Kejriwal recently met Tauqeer Raza Khan, the controversial cleric who is charged with rioting cases. Arvind’s support to such hardline elements as Khan suggests a Congress style of communal politics. AAP Cadres are mostly Student Federation of India (SFI) activists whose ideological affinity with Maoists is quite obvious. Intelligence experts must analyse commonalities between AAP and Naxals in Bengal’s Naxalbari village way back in the sixties. Shocking similarities between both movements would emerge. Grossly anti-national in character, such forces land up becoming ‘supari killers’ for the Congress run hate coalition. In the days to come AAP would in fact become another dark ugly and violent face of congress party.
    The Congress party is sinking due to corruption, price rise and many issues, therefore it has created Aam Aadmi Party to cut its losses and proxy rule Delhi again by getting AAP to eat into BJP’s victory.
    AAP’s functioning for the Nehru Family is too very evident in Robert Vadra’s case. The Secretary of Delhi Pradesh Congress Committee Mr Sunit Madhur runs Cicero Associates which looks after Aam Aadmi Party’s propaganda. AAP has hired them for political consultancy as well. Even the AAP website is being designed and funded by Cicero Associates which has Sunit Mathur’s control.
    Baring cosmetic gestures, Anna Hazare, Baba Ramdev, Sri Sri Ravishankar and many have distanced themselves from AAP. The mobilization and support which AAP enjoyed in those days, simply fizzled out despite all out efforts by congress sponsored propaganda machines and the likes. The AAP is a congress creation to simply deflect voter attention from real issues and deceive the electorate . Delhi voters must not fall into this Congress trap called “Aam Aadmi Party” and set themselves into another era of violence, mayhem, poverty , corruption and lawlessness.
    Source: Economic Times

  5. Dear Jatayu,

    Why this article now ? Are we getting unnecessarily nervous ?
    Would you have come up with this article if AAP has ended up with a single digit mandate ?

    Regards,
    Raja

  6. அரவிந்த் கேஜ்ரிவால் கொள்கை பிடிப்போ அல்லது ஜனநாயகத்தில் நம்பிக்கையோ உள்ளவராகத் தெரியவில்லை. காரணம் இருக்கும் சூழ்நிலையில் டெல்லியில் ஒரு அரசு அமைய வேண்டும் இல்லையேல் ஜனாதிபதி ஆட்சி ஆறு மாதம் வரும் என்பது தெரிந்தும் வீம்பு பிடிப்பது தன்னுடைய இயலாமையினால்தானே தவிர கொள்கையால் அல்ல. பாஜகவுக்கு ஆதரவு தந்தால் இவர் கட்சி ஆளும் கட்சியாகவோ அல்லது ஆளும் கூட்டணியாகவோ இருக்கும், அப்போது இவர் முன்பு எழுப்பிய பிரச்சினைகளை இவரால் தீர்க்க முடியுமா? முடியாது நிச்சயமாக. அப்போது இவரது செல்வாக்கு விழுந்து விடும். அதனால் வீம்பு பிடிக்கிறார். கட்சியில் ஒருவர் பாஜகவுக்கு சில நிபந்தனைகளோடு ஆதரவு தரலாம் என்கிறார், இவர் அவர் கருத்தை மதிக்கவும் இல்லை, மாறான கருத்தை சர்வாதிகாரத் தன்மையோடு சொல்கிறார். இவர் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய ஜனநாயகம் பாழ்பட்டு போகும். இவர்களெல்லாம் எங்கேயாவது குறிப்பிட்ட பிரச்சினைகளுக்காகத் தெருவில் போராட மட்டும்தான் லாயக்கானவர்கள். அரசாங்கம், ஆட்சி இதெல்லாம் இவர்களுக்கு எட்டாக் கனி.

  7. ஆம் ஆத்மி பார்ட்டி சரியான மாங்காய் (ஆம்) மடையர்களுக்கான பார்ட்டி போலிருக்கிறது.

  8. கேஜ்ரிவாலைப் போலவே தமிழக அரசியல் வாதி விஜயகாந்த் அவர்களும் வானளாவ பேசினார். மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறமை இருக்குமானால் டெல்லி சென்று பிரச்சாரம் செய்துவிட்டு வரும்போது அங்கு அவர் கட்சியினருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பாரா? வெற்றி பெறுவது இருக்கட்டும், யாராவது ஜாமீன் தொகையையாவது திரும்பப் பெற்றார்களா? எதற்கு வீண் ஜம்பம். எதார்த்தத்தை உணர்ந்து செயல்படுவதுதான் ஒரு நல்ல அரசியல் வாதிக்கு அழகு. அந்த வகையில் திரு வை.கோ. நல்ல பண்பட்ட அரசியல்வாதி. இப்போது பாருங்கள் திறமைசாலியான பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பதவி உட்பட கட்சி பதவிகளிலிருந்தே விலகிவிட்டார். அறிவு பூர்வமாக சிந்தித்துப் பேசக்கூடிய ஒரு அறிய தலைவரை அந்தக் கட்சி இழந்துவிட்டது. காரணங்களைச் சற்று யோசிப்பார்களா? அரசியலில் தலைமை வகிப்பது என்பது திறமைசாலிகளால் மட்டுமே முடியும்.

  9. Dear Raja, this is not my article, but questions from a Delhi person, an erstwhile ardent supporter of Anna movement. I felt these questions are very pertinent, so I just translated his FB post, which is widely circulated in the net.. It is important that the sudden young supporters of AAP mushrooming over the cities know the real facts about the party and the people behind it.

  10. /BJP should have guts to ask AAP for conditional support.//
    why should? if BJP had any pre poll alignment then you should ask this question but in this case no pre poll alignment with any party except AD. one hour before congress declared the unconditional support to AAP. why don’t AAP consider and form a govt since support is unconditional. you should ask this question to AAP Supporters.

  11. இந்த கட்டுரையை எலோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் . மீடியா ஆம் ஆத்மியை அதன் உண்மை முகத்தை மறைத்து இந்தியாவிற்கு கிடைத்த விடிவெள்ளி போல் சித்தரிகின்றது.
    இவர்கள்(மீடியா ) என்று திருந்துவார்களோ , நம் துர்அதிர்ஷ்டம் இவர்கள் ,அதுவும் தமிழில் இந்துத்துவம் சார்ந்த ஒரு கட்டுரையை கூட வெகுஜ இதழிலில் நான் கண்டதில்லை,சிற்றிதழ்களிலும் . நமிகிருக்கும் ஒரே வழி தமிழ் ஹிந்து போன்ற இந்துத்துவ ஊடகங்களை எல்லோரிடமும் கொடு செல்வதே .

  12. பத்தொடு பதினொன்று

    ஆம் ஆத்மி பார்ட்டியினர் *வேலை* செய்து கொடுப்பதற்காக பேரம் பேசி அது காமிராவில் க்ளிக் செய்யப்பட்ட அவலம்.

    கட்சியினர் தாங்களாகவே ஒரு குழு அமைத்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களை நிரபராதி என கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர்.

    இந்த கட்சி காங்க்ரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும். சந்த்ரசேகர் சர்க்காரைப் போல் இந்த ஆப் சர்க்கார் அல்லது பாப் சர்க்காரை காங்க்ரஸ் கவிழ்க்க வேண்டும்.

    இந்த கட்சியினர் தெருவில் கூட்டம் போட்டு பொதுச் சொத்துக்களை நாசம் செய்வதற்கு மட்டிலும் தேர்ச்சியான கட்சி.

    ஆட்சிக்கு வந்து திட்டங்கள் வகுத்து வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு – இது லாயக்கில்லாத கட்சி.

    தவறிக்கூட இந்த அவலக் கட்சியின் ஆதரவைப் பெற்று பா.ஜ.க தில்லியில் ஆட்சி அமைக்கக் கூடாது.

  13. நாங்கள் ஆம் அத்மியை அறிகிறோம் . ஆனால் மோடி கட்சி எப்படி? தேர்வாளர்கள் எப்படி ? சீட் வழங்குவது எப்படி? எடிஉரப்ப எப்படி? இன்னும் பல பல இத்யடி எப்படி ? நான் கேட்பது ஆதரித்து pesa,,,,

  14. அரவிந்த் கேஜ்ரிவால் கூடங்குளத்தில் நடத்திய கூத்தை எப்படி மறந்தீர்கள்?

    என்னோரு விஷ்யத்தை கவனித்தீர்களா?

    அன்னா ஹசாரேவை Rss முகமூடி என்று TVகளில் விமர்சித்த ஞானி, தற்பொழுது ஹசாரேவை குரு என்று கூறும் கேஜ்ரிவாலை உச்சி குளிர புகழ்கிறார்!

  15. இது இந்திய திருநாட்டின் அரசியலின் தலையெழுத்து. தேர்தலில் நின்று வெற்றி பெறுவதற்கு முன் பேசிய பேச்சு வேறு, வெற்றி பெற்றபின் பேசும் பேச்சு வேறு. மதசார்பின்மையால் பி.ஜே.பி ஐ குறைகூறும் இவர் எந்த முகத்தை வைத்துகொண்டு பங்களா தேஷ் எழுத்தாளருக்கு பட்டுவா கொடுத்தவரிடம் போய் கெஞ்சுகிறார். இது ஆரோக்கியமான அரசியலா? பயங்கரவாதிகளுக்கு நீதி மன்றத்தில் வாதாடும் நண்பர்களுடன் அரசியல் பண்ணினால் இது தான் வரும். தொழில் வேறு அரசியல் வேறு என்றால், ஹிந்து மதம் வேறு அரசியல் வேறு என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமே? பி. ஜே.பி.யை மதவாதி கட்சி என்று அறைகூவல் விடும் இவர்கள், முஸ்லிம் மத தலைவர்களை பார்த்து ஜால்ரா அடிப்பது என்ன? இது ஒரு பச்சோந்தி காங்கிரஸ் பாணி அரசியல். இதற்குத்தான் டெல்லி மக்கள் இவருக்கு ஒட்டு போட்டார்களா? இந்த நாட்டின் அரசியல் என்று தான் ஆரோக்கியமாகும்?

  16. மக்கள் விருப்பம் மகேசன் விருப்பம் . பி ஜே பி தனி பெரும் கட்சி பெரும்பான்மை இல்லை என்பதால் அரசு அமைக்க வய்ப்புஇன்மை சரியான முடிவுஆகாது. இக்கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் இக்கட்சி தவறினால் ஆதுமியை அழைக்கவேண்டும் இதுவும் தவறினால் மாற்று ஏற்பாடு மறுதேர்தல் அல்லது குடியரசு ஆச்சி நடத்தலாம்

  17. IF AAP AND KEJRIVAL (CONGRESS “B” TEAM) IS HAVING THE GUTS, THEY SHOULD ACCEPT THEIR INVISIBLE LEADER’S (CONGRESS) SUPPORT AND FORM A GOVT.
    IF THEY ARE HAVING GUTS, AND IF THEY ARE REALLY WILLING TO SERVE THE PEOPLE, THEY SHOULD FORM THE GOVT. THEY SHOULD REDUCE THE POWER TARIFF AND GIVE FREE WATER SUPPLY TO ALL, AS THEY PROMISED. OR IF THEY ARE HVING GUTS, THEY SHOULD APOLOGIZE TO THE PEOPLE. FOR GIVING FALSE PROMISES.
    IF BJP ARE HAVING GUTS, THEY SHOULD NOT HAVE ANY LINK WITH AAP.

  18. நான் ஏன் ஆஆ கட்சியை வெறுக்கிறேன் என்பதற்கு என் காரணங்கள்;

    1. கோஜெரிவால் கூறுவது: ” நான் சொல்வதை நீ ஒப்புக்கொண்டால் உனது கொள்கை சரியானது”. (You are always correct so long you agree with me), இல்லாவிட்டால் தவறு இது முதல் அழிச்சாட்டியம். எனக்கு ஒரு தடவை வாய்ப்பைக்கொடு. நான் செய்து காட்டுகிறேனா இல்லையா பார் என்பது Post dated cheque எனக் கூறுவார்கள். கேஜெரிவாலுடைய பிரசாரம் எல்லாமே எல்லாமே எதிர்மறையானது. நடைமுறையில் நிரூபிக்காதது.

    2. மேற்கூறிய ஸ்ரீ ஜடாயூ கட்டுரையின்படி கேஜெரிவால் ஒழுக்கக் கேட்டுக்கு அப்பாற்பட்டவரல்ல.

    3. ஆஆகட்சி பெரும்பான்மையான மத்தியதர மக்களின் அறியாமையை நன்கு பயன்படுத்துகிறது.

    4. ஆஆகட்சி ஆட்சிக்கு வந்தால் பத்தே நாட்களில் “லோக் பால்” முறையை கொண்டுவருவதாக தன் தலைத் தொப்பியில் உறுதியளித்துள்ளனர். இன்று உள்ள பல சட்டசபை நீதிமன்ற உறுப்பினர்கள் கையூட்டு வாங்காதவர்களென்றே முதன் முதலில் தேர்வு செய்கிறோம். ஆனால் பின்னர் இவர்களே லாயக்கில்லாதவர்கள் ஒழுக்கக் கேடுடையவர்கள் எனத் தங்களை நிரூபித்துக் கொள்ளவில்லையா? ஆக, ஆஆ கட்சி சொல்லும் லோக் பால் என்ன ஆவாரோ. உங்களில் பலருக்கு முன்னாள் எலெக்ஷன் கமிஷணர் நவீன் சாவ்லாவை ஞாபகம் இருக்குமென நம்புகிறேன். லோக்பால் கூட கேஜெரிவாலால் நியமிக்கப்படுபவராக இருக்கும் போலிருக்கிறது? அப்புறம் ஆட்டம் க்ளோஸ்.

    5. ஆஆகட்சி தன் நிலையை இன்னும் கூறாதவைகள்; இவைகள் தேசீயத்தில் மிக மிக்கியமானவை. ஆனால் பா.ஜ கட்சி இதில் தன் நிலையை வெட்ட வெளிச்சமாகக் காட்டியுள்ளது.

    1. ஆர்டிகிள் 370
    2, பசு வதை (cow slaughter)
    3, பொதுவாக அனுசரிக்கவேண்டிய சட்ட ஒழுங்குமுறை(Uniform Civil code)
    4. ராம் மந்திர்

    6. பாபா ராம்தேவ் ஜெயபிரகாஷ் நாராயணன் வழியில் பாரத ஸ்வாபிமான் இயக்கமென கூறி காரியத்தில் காட்டுவதில் கோடியில் ஒரு பங்கு கூட கேஜெரிவாலால் ஆற்ற என்றுமே இயலாது. பாபா ராம்தேவ ஓசைப்படாமல் பாரத மாதாவுக்குத் தொண்டுசெய்பவரென என் கருத்து.

    7. இவரை நான் Game spoiler எனவே என்றும் அழைப்பேன்.

    சேஷாத்ரி ராஜகோபாலன்.

  19. Seshadri Rajagopalan on December 11, 2013 at 1:15 pm
    Your comment is awaiting moderation.

    7. இவரை (கேஜெரிவாலை) நான் Game spoiler எனவே என்றும் அழைப்பேன்.

    சேஷாத்ரி ராஜகோபாலன்.

  20. பல முக்கியமான கேள்விகளை எழுப்பி இருக்கிறீர்கள்.

    ஆனால் ஒரு முரண்பாடு பெரிதும் இடிக்கிறது. மூத்த பா.ஜ.க. தலைவரான ராம் ஜெத்மலானியைப் பார்த்து இதே மாதிரி கேள்விகளை எழுப்பியதுண்டா? ஜெத்மலானி கனிமொழிக்கும் வாதாடுகிறார்; இந்திரா காந்தியைக் கொன்ற பயங்கரவாதிக்களுக்கு ஆஜரானார். ஹாஜி மஸ்தானுக்கு ஆஜரானார். சொல்லிக் கொண்டே போகலாம். ஜடாயு போன்றவர்களுக்கு என்னை விட அதிகம் தெரிந்திருக்கும். வாஜ்பேயி ஜெத்மலானியை மந்திரியாக நியமித்தார் என்றால் வாஜ்பேயி இந்திரா காந்தியைக் கொன்ற பயங்கரவாதச் செயலை, காலிஸ்தான் கோரிக்கையை ஆதரித்தார் என்றா பொருள் கொள்ள முடியும்? வாஜ்பேயி/ஜெத்மலானிக்கு ஒரு அளவுகோல், கெஜ்ரிவால்/பிரஷாந்த் பூஷனுக்கு வேறு அளவுகோலா வைப்பது?

  21. திரு.RV அவர்களின் கருத்து சரிதான். ஒரு வழக்கறிஞர் தன தொழில் தர்மபடி யாருக்கு வேண்டுமானாலும் வாதிடலாம். அதே நேரத்தில் பிரிவினை வாதத்தை ஆதரித்தோ,நச்சல் குழுக்களை ஆதரித்தோ செயல்படுவது ஏற்கமுடியாதது.நாங்கள் ரொம்ப யோக்கியமானவர்கள் என்று காட்டிகொள்ளும் இவர்கள் பி.ஜே.பி மற்றும் காங்கிரசின் அதிருப்தி வேட்பாளர்களை தங்கள் கட்சியில் சேர்த்து வேட்பாளர் ஆக்கியதும் ஏற்க முடியாத ஓன்று.

  22. AAP was formed just when it was clear that the corruption, loot, criminality, arrogance, anti -people policies etc of the congress will wipe it out in the next elections. AAP ‘s task is to further the agenda of its anti-national masters – to prevent the benefit of the anti-congress votes going to the BJP. AAP is a clever and cunning hotch- potch comprised of maoists, communists, crusaders of the church, jihadis , black money stashers etc. If Modi becomes the PM he will surely take efforts to find out the Black money holders and the anti-national financiers of these parties and so-called NGOs.. There are reports that AAP has received donations from some American foundation. They will be exposed if BJP and Modi come to power.Hence AAP will never bring back the black money and never fight corruption.

  23. The author should give more details and specifically name the persons for his allegations in points 2,3,4,5,7 of his article.

  24. Seshadri Rajagopalan ஐயா, நீங்கள் இன்னும் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள். வாஸ்தவமான பிரசினைகள் அவை.

    ஆர்.வி, ஆமாம். அந்தக் கேள்வி ஒரு grey area தான். ஜெத்மலானி, பிரசாந்த் பூஷண் இருவரிடமும் கேட்டால், அது வழக்கறிஞரின் தொழில்முறை நீதி (ப்ரொபஷனல் எதிக்ஸ்) என்று கூறுவார்கள். குற்றம் நிரூபிக்கப் படாதவகையில் பயங்கரவாதி என்று எப்படி சொல்லலாம் என மடக்குவார்கள். வக்கீல்கள் ஆச்சே.. ஆனால், இருவர் செய்ததுமே தவறு என்பது என் தனிப்பட்ட கருத்து. ஜெத்மலானியை ஆதரித்து அமைச்சர் ஆக்கிய பாஜகவை நோக்கியும் கட்டாயம் அந்தக் கேள்வி எழுப்பப் பட வேன்டும்.

  25. ஜடாயு, சேஷகிரி, நம் கருத்துக்கள் சில சமயம் ஒத்தும் போவது மகிழ்ச்சி!

    இந்தப் பதிவின் context-இல் இன்னுமொரு கேள்வி. பா.ஜ.க. சார்புள்ள ஹிந்துத்துவர்கள் பா.ஜ.க.-வைக்கோ கூட்டணியை எப்படி அணுகுகிறீர்கள்? வைக்கோ வாஜ்பேயி மற்றும் அத்வானியின் நம்பிக்கைக்குரிய கூட்டணித் தலைவராக இருந்தார் என்று நினைவு. அவரது புலிகள் சார்பு நிலை, IPKF எதிர்ப்பு நிலையோ ஊரறிந்த ஒன்று…

  26. //அவரது புலிகள் சார்பு நிலை, IPKF எதிர்ப்பு நிலையோ ஊரறிந்த ஒன்று…
    //
    வைகோ மிக பெரிய புத்திசாலி . கருத்து சுதந்திரம் என்ற வகையில் அவரது பேட்சு எந்த சட்ட சிக்கலையும் உண்டு பண்ணாது. ஆனால் இதில் வாஜ்பாயி மிக பெரிய அதிஷ்டசாலி என்றுதான் சொல்லவேண்டும். அவர் ஆஃபர் பன்ணிய மத்திய அமைச்சர் என்ற பதவியயை வைகோ ஏற்ருக்கொண்டு , பதவி பிரமாணம் எடுத்து, பேசி இருந்தால் ??

    புலிகள் இல்லை என்ற இன்றைய நிலையில் — திரும்ப அவர் கூட்டணிக்கு வந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆலே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துவது போன்ருதான் இருக்கும் அந்த டெம்ப்‌லேட் பேட்சுகள்.

  27. //வக்கீல்கள் ஆச்சே.. ஆனால், இருவர் செய்ததுமே தவறு என்பது என் தனிப்பட்ட கருத்து. ஜெத்மலானியை ஆதரித்து அமைச்சர் ஆக்கிய பாஜகவை நோக்கியும் கட்டாயம் அந்தக் கேள்வி எழுப்பப் பட வேன்டும்//

    மைய வெளியும் , மந்தை வெளியும் என்று யாரோ ஒரு இலக்கியவாதி சொன்னால் சரி என்று தலையை ஆட்டிவிடுவோம். அதையே ஒரு வக்கீல் தொழில் வேறு, அரசியல் வேறு என்று சொன்னால் ஒப்பூகொள்ள முடியவில்லை. பூஷன் வழக்கில் ஆஜராவது மட்டும் இல்லை, காஷ்மீர் விசயதிலும் பயங்கரமான கருத்து வெளியிட்டவர். ஜெத்மாலினி – கனிமொழிக்கு வாதடும்போது – ஏலம் முறை சரி என்று சொன்னதில்லை. காலிஸ்தான் தேவை என்று சொன்னதில்லை.

  28. // பூஷன் வழக்கில் ஆஜராவது மட்டும் இல்லை, காஷ்மீர் விசயதிலும் பயங்கரமான கருத்து வெளியிட்டவர். ஜெத்மாலினி – கனிமொழிக்கு வாதடும்போது – ஏலம் முறை சரி என்று சொன்னதில்லை. காலிஸ்தான் தேவை என்று சொன்னதில்லை. // அப்போது பூஷனின் காஷ்மீர் கருத்தைப் பற்றி அல்லவா பேச வேண்டும்? வழக்கைப் பற்றி குறிப்பிடுவதைப் பற்றி உள்ள முரண்பாடு போய்விடாதே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *