அரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா?

modiஜம்முவில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் பிரதம வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான திரு.நரேந்திர மோடி அவர்கள், அரசியல் ஷரத்து 370வது பிரிவு காஷ்மீர் மக்களுக்கு நன்மை அளிக்கிறதா என்பது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்’  என்றார்.  மோடி தெரிவித்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் வழக்கம் போல் தங்களது எதிர்ப்பை தெரிவித்து விட்டார்கள்.  இவர்களுடன் கூட்டு சேர்ந்துக் கொண்டு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காஷ்மீரில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.  ஆனால் மக்கள் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பின் காரணமாக  தெரிவித்த கருத்து வன்மையாக கண்டிக்க தக்கது.  ‘காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு நிரந்தரமானது அதை ரத்து செய்ய முடியாது.  அதை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றத்தால் கூட முடியாது’ என முப்தி முகமது சயீத் தெரிவித்துள்ளார்.  இவர்கள் கூறுவது சரியானதுதானா அல்லது மோடி கூறியது போல் முழு விவாதம் நடத்த வேண்டுமா என்பதை பற்றிய கருத்து தற்போது அலை வீச தொடங்கியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியை தவிர மற்றவர்கள், அரசியல் ஷரத்து 370 னால், காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்துள்ளது என்றும், பாரதிய ஜனதா கட்சியும், தேசிய ஒருமைப்பாட்டில் முழு நம்பிக்கை கொண்ட மற்றவர்களும், இந்த ஷரத்தினால் காஷ்மீர் மாநிலம் தனி நாடாக உள்ளது என்றும் கூறுகிறார்கள். ஆகவே இது பற்றிய முழு விவாதம் நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி, தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மற்றும் கம்யுனிஸ்ட் கட்சிகள் கூட இந்த ஷரத்து பற்றி விவாதிக்க தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் 565 சமஸ்தானங்களை இணைக்கும் போது இப்பிரச்சினை எழவில்லை.  காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இந்த அந்தஸ்து தர வேண்டிய அவசியம் என்ன? நாடு விடுதலை பெறும் போது இருந்த சூழ்நிலையையும் கவனிக்க வேண்டும்.

370aஇந்திய விடுதலை பெறுவதற்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு இந்திய விடுதலை சட்டம் 1947 என்று பெயர். 1947 ம் வருடம் ஜீலை மாதம் 4.ந்; தேதி விவாதிக்கப்பட்டு ஜீலை மாதம் 18ந் தேதி இச் சட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.  இந்தக் சட்டப்படி 1947ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ந் தேதி இரண்டு அரசுகள் உருவாக்கப்படும், ஒன்று இந்தியா இரண்டாவது பாகிஸ்தான்.  இந்த சட்டத்திலேயே பாகிஸ்தான் பகுதிகள் எவை எவை என்பதையும் தெளிவாக குறிக்கப்பபட்டுள்ளது   ஆங்கில ஆட்சிக்கு உட்படாத சமஸ்தானங்களுக்கு ஆங்கில அரசு சில நிபந்தனைகளை விதித்தது.   அதில் சமஸ்தானங்கள் ஒன்று இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ள வேண்டும் அல்லது சுதந்திர நாடாக இருக்க  வேண்டுமானால் ஆங்கில அரசாங்கத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.  ஆகவே இந்தக் சட்டத்தின்படி ஜம்மு- காஷ்மீர் சமஸ்தானம் எந்த பகுதியுடனும் இணையாலம். கேள்வி கேட்க எவருக்கும் உரிமை கிடையாது.   ஆனால் நாடு விடுதலை பெற்ற கால கட்டத்தில் காஷ்மீர் மாநிலத்தில் நிலவிய சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதில் ஒன்று எல்லை வரையரை பிரச்சினையாகும்.

பாகிஸ்தான் இந்திய எல்லைக்கோடு வரையரை செய்ய இங்கிலாந்து அரசு ஒரு குழு அமைத்தது , இந்தக் குழுவின் பரிந்துரைகளை இங்கிலாந்துக்கு அனுப்பட்டு ஒப்புதல் பெற்ற பின் இரு நாட்டு எல்லை இறுதி செய்யப்படும் என்று முடிவானது.  இது 1947 ஆகஸ்ட் 15க்கு பின்னும் முடிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏன் என்றால் பஞ்சாப் பகுதி பிரிக்கப்டும் போது கலவரம் ஏற்படலாம் என்பதால் இங்கிலாந்து அரசால் நியமிக்கபட்ட குழு இந்த கருத்தை தெரிவித்தது. இந்த முடிவில் தான் சிக்கல் ஆரம்பமானது.

kash5முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகள் எல்லாம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை இந்த குழு ஏற்றுக் கொண்டது.  இதன்படி எல்லை மாகாணமான பஞ்சாபைப் பிரித்தால், ஜம்மு-காஷ்மீருக்கு செல்லும் பிரதான சாலைகள், ரயில்வே லைன்கள் போன்ற அனைத்தும் பாகிஸ்தானுடன் சென்று விடும் என்பது கவனித்தது.  இதன் அடிப்படையில், ஹரிசிங் ஆண்ட நிலப்பகுதியை பாகிஸ்தானுடன் இணைத்தால் தான், பொருள் போக்குவரத்து, வர்த்தகம் என பல விஷயங்களிலும் காஷ்மீருக்கு  கூடுதல் பலன் கிடைக்கும். அதிக வாய்ப்புகளைப் பெறும் என்ற நிலையும் ஏற்படும். இந்நிலையில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைத்தால்;, அத்தியாவசியப் பொருட்கள் கூட அதிக தூரம் பயணப்பட்டுத்தான் அதாவது பாகிஸ்தான் பகுதியான லாகூர் வழியாக தான் காஷ்மீரை சென்றடையும், இதற்கு முறையான சாலை வசதிகள் கிடையாது. இதன் காரணமாக பஞ்சாபை பிரிப்பதில் சிக்கல்கள் மிகுந்திருந்தன.  இந் நிலையில் பஞ்சாபின் 3 முக்கிய தாலுக்காகள் குருதாஸ்ப்பூர் உட்பட இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற புதிய கோரிக்கை எழுந்தது. குருதாஸ்ப்பூர் இந்தியாவுடன் இணைந்து விட்டால், காஷ்மீர் மாநிலத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதில் எவ்வித சிரம்மும் இருக்காது என்று தெரிந்தும் கூட,  இப்படி செய்தால் பாகிஸ்தானில் கலவரம் பெருகும் என்பதை உணர்ந்த பிரிட்டீஷார் சுதந்திரம் அறிவிக்கும் வரை நாட்டின் எல்லைகளையும் அறிவிக்காமல் இருப்பதுதான் நல்லது என நினைத்தனர். ஆகவே உண்மை இவ்வாறு இருக்க, எந்த சமஸ்தானத்திற்கும் இல்லாத சிறப்பு சலுகை காஷ்மீர் சமஸ்தானத்திற்கு மட்டும் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதுபற்றிய முழு விவாதம் நடத்தப் படவேண்டும்.

ஜம்முவில் மோடி பேசிய பின்னர் பல்வேறு காஷ்மீர் தலைவர்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்கள்.  காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ” மோடி இந்தியாவின் பிரதமராக 10 முறை வந்தாலும், அரசியல் ஷரத்து 370-ஐ ரத்து செய்ய முடியாது.” இதை விட ஒரு படி மேலே காங்கிரஸ் கட்சியின் தலைவரான சைபுதீன் சோஸ் என்பவர், மோடி ஒரு குழப்பவாதி என்றும், அரசியல் சாசன சட்ட அறிவு அற்றவர் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.  ” அரசியல் ஷரத்து 370 காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துள்ளது, ரத்து செய்யப்படுமானால் காஷ்மீர் இணைப்பே கேள்வி குறியாகிவிடும்” (Article 370 which connects Jammu and Kashmir with India and if it is scrapped, Kashmir’s accession with India automatically become redundant  )  என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவியான மெகபுபா முப்தி கூறியதுடன் மேலும் ” அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த்து போல் இதை ரத்து செய்ய முடியாது”  எனவே அரசியல் ஷரத்து 370-ஐ விவாத்திக்க வேண்டும் என்றால், காஷ்மீரில் உள்ள தலைவர்களின் புலம்பல்கள் நன்கு தெரிகிறது.  இதற்குறிய காரணம் என்ன என்பதை விவாதிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாடு உள்ளது.

shyam01( 1) நாட்டிற்குள் ஒரு நாடு, காஷ்மீர் மாநிலத்திற்கு என தனி அரசியல் சட்டம், தனி தேசிய கொடி, தனிச் சின்னம், நாட்டின் பிரதமர் என்ற வார்த்தை Sadr-i-Riyasat  என பயன்படுத்துவது சரியா என்று விவாதிக்க வேண்டும்.

(2) இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 356-ன்படி ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக மத்திய அரசுக்கு மாநில ஆளுநர் அறிக்கை கொடுத்தால், இப்பிரிவின் படி சட்ட மன்றத்தை கலைத்து விட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வரலாம்.  இச் சட்ட பிரிவு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது.  2009-ம் வருடம் ஜனவரி மாதம் 9ந் தேதி காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக இருந்த என்.என். வோரா குடியரசு தலைவர் ஆட்சியை அமுல் படுத்திய போது, மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் ” காஷ்மீர் மாநில அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 92-ன்படி மாநில சட்ட சபை கலைக்கப்பட்டு, ஆளுநரின் ஆட்சி அமுல் படுத்தப்படுகிறது.” என்றும்  இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தர வேண்டும்.“ என அறிக்கை அளித்தார்.  இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு இல்லாத சலுகை காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் ஏன்? என்பதை பற்றி முழு அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.  இதுவரை இந்தியாவில் 120க்கு மேற்பட்ட முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன.  காஷ்மீர் மாநிலத்தில் கூட 1977,1986, 2002,2009 ஆகிய வருடங்கள் சட்ட மன்றம் கலைக்கப்பட்டது, ஆனால் அரசியல் ஷரத்து 356-ன் படி கலைக்கப்பட வில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

(3) 1954-ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலின் போது காஷ்மீர் மாநிலத்தில் மொத்த சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100, இதில் 25 சட்ட மன்ற தொகுதிகள் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதிக்குறிய தொகுதியாகும், இன்று வரை அங்கு சட்ட மன்ற தேர்தலுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்தியாவின் மற்ற மாநிலங்களில் சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டவோ அல்லது குறைக்கவோ, மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு.  காஷ்மீர் மாநிலத்தில் சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானத்தின் மூலமாகவே சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்திக் கொள்ளலாம். காஷ்மீர் மாநில அரசியல் அமைப்பு சட்டத்தின் 48வது பிரிவின் படி தற்போது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 111வும், இதில் 25 சட்ட மன்ற தொகுதிகள் காலியாக இருப்பதாகவும் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுபற்றிய முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும்.

(4) இந்திய அரசு சார்பாக நாடாளுமன்றத்தல் இயற்றும் சட்டங்களை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலாக்க விரும்பினால், முதலில் அம்மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். அமைச்சரவை சம்மதம் மூலம் மாநில அரசு தரும் ஒப்புதலை, பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநில அரசியலமைப்பு சட்ட அவையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.  அப்படி ஒப்புக் கொண்டால்தான், அந்த சட்டத்தை காஷ்மீரில் அமலாக்க முடியும்.  அதனால், அம்மாநில சட்டசபையின் காலவரம்பு முடியும் நிலையிலோ, அது கலைக்கப்பட்டு தேர்தலுக்காக காத்திருக்கும் கால கட்டத்திலோ, ஜம்மு காஷ்மீரில் புதிய சட்டங்களை அறிமுகம் செய்யவே முடியாது.  இந்திய அரசின் விருப்பத்திற்கு மாநில அரசின் ஒப்புதல் கிடைத்தாலும், சட்ட மன்ற ஒப்புதலைப் பெற முடியாது என்பதால் ஏற்கனவே நடப்பில் உள்ள அம்மாநில அரசியல் சட்டமே செல்லுபடியாகும்.  இச் சலுகை மற்ற மாநிலங்களுக்கு கிடையாது.  பாராளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேறினால், அது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆகவே இது பற்றி விவாதிக்க வேண்டுமா இல்லை என்பது இஸ்லாமியர்கள் மூலமாக அரசியல் ஆதாயம் அடையும் கட்சிகள் வாய் மூடி மௌனியாக இருக்கிறது.

(5) மாநிலங்களின் பரப்புரிமை மத்திய அரசிடம்தான் இருக்கும்.  காஷ்மீர் மாநிலத்தை பொறுத்தவரை அங்குள்ள நிலங்களின் பரப்புரிமை காஷ்மீர் மாநில அரசிடம் தான் இருக்கும்.  இதன் காரணமாக காஷ்மீரில் மற்ற மாநிலத்தவர்கள் நிலம் வாங்க முடியாது.  தொழிற்சாலை அமைப்பது போன்றவற்றில் கூட தன்னிச்சையாக எவரும் செயல்பட முடியாது.  அரசியல் ஷரத்து 370-ன்படி மாநில அரசின் அதிகாரத்தின் படி நிலம் தொழிற்சாலை அமைக்க வாங்கி தர இயலும்.  இந்திய அரசு விரும்பினால் மற்ற மாநிலங்களின் எல்லைகளை திருத்தி அதன் வரம்புகளை மாற்றியமைக்க முடியும்.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைகள் மீது எவரும் கை வைக்க முடியாது.  அம்மாநில சட்ட மன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.

(6) இந்திய நிர்வாக பணி நியமனமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற நியமனங்களை காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது.

(7) இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அதிகாரம், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு பொருந்துவது போல், காஷ்மீருக்கும் பொருந்தாது.  அதாவது மாநில அரசு செய்த செலவுகளுக்கு அதன் சட்ட மன்றம் ஒப்புதல் கொடுத்து விட்டால், மீண்டும் அந்த கணக்கு வழக்குகளை தோண்டி துருவி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை உருவாகிறது.

(8) ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சார்ந்த பெண் வேறு மாநிலத்தை சார்ந்தவரை திருமணம் செய்து கொண்டால், அம்மாநில உரிமைகள் அனைத்தும் இழந்து விடுவார்.  அதாவது நிரந்தர குடியிரிமை வழங்கப்பட மாட்டாது.   ஒரு சம்பவத்தை குறிப்பிட்ட காட்டலாம், டாக்டர் ரூபினா நஸ்ரூல்லா என்ற பெண் மருத்துவ மேல் படிப்பிற்காக அரசு மருத்துவ கல்லூரியில் விண்ணப்பித்திருந்த்து.  தனது நிரந்திர இருப்பிட சான்றிதழ் இணைக்க வேண்டும் என்பதற்காக, அரசிடம் கேட்ட போது, திருமணத்திற்கு பின் நிரந்திர குடியிருப்பு சான்றிதழ் தர மறுத்து விட்டனர்.  அந்த பெண் வெளி மாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டதால், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுவதாக கூறப்பட்டது.  11.2.1985-ல் இது சம்பந்தமாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.  இந்த வழக்கு சம்பந்தமாக 7.10.2002ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.  பெருவாரியான நீதிபதிகள், வெளி மாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டால் உரிமைகள் அனைத்தும் இழப்பதாக கூறுவது சட்டத்திற்கு மாறானது, அவருக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என தீர்ப்பு வழங்கினார்கள்.  இன்று பெண்களுக்கு முழு சுதந்திரம் இருப்பதாக பொது மேடைகளில் முழங்கும் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆட்சியில் இருக்கும் போது நடந்த சம்பவம், அரசின் அட்வகேட் ஜெனரல் எம்ஏ.கோனி என்பவர் உயர் நீதி மன்றத்தில் வழக்காடும் போது, வெளி மாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டால், அந்த பெண்ணுக்கு எந்த உரிமையும் கிடையாது என வாதிட்டார்.  காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்ட பிரிவு 6-ன் படி எவ்வித உரிமையும் கிடையாது என்றார்.  ஒமர் அப்துல்லா அரசு தீர்ப்பிற்கு எதிராக சிறப்பு விடுமுறை பெட்டிஷன் தாக்கல் செய்த்து.

2003-ல் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியில் இருக்கும் போது , நீதி மன்ற தீர்ப்பிற்கு ஆதரவாக சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.  சட்டமன்றத்தில் திருத்தம் நிறைவேறிய பின்னர், மேலவைக்கு சென்ற போது, மேலவை தலைவர் விவாதம் செய்யாமலே, திருத்த்த்தை திருப்பி அனுப்பி விட்டார், இதன் காரணமாக சட்ட திருத்தம் மேற் கொள்ளவில்லை.  இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் 2010-ல் தனி நபர் மசோதா ஒன்று தாக்கல் செய்தார், இது நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிரான மசோதாவாகும்.  ஆகவே காஷ்மீர் மாநிலத்தில் பெண்களுக்கு சம்மான உரிமை கிடையாது என்பதை பற்றிய விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக மோடி கூறியது தவறான கருத்து என புலம்பும் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

(9) இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 352-ன்படி அவசர நிலை பிரகடனம் செய்யும் போது, நாடு முழுவதும் ஒரே மாதிரி நடவடிக்கை எடுக்க முடியும், ஆனால் காஷ்மீர் மாநிலத்தில் சில வரம்புகள் வழங்கப்பட்டுள்ளதால், அங்கு அவசரநிலை முழமையாக பிரகடனப்படுத்த இயலாது.  இதை போலவே அரசியல் சட்ட பிரிவு 360-ம் அவசர நிலை சம்பந்தப்பட்டதாகும்.  இந்த பிரிவை காஷ்மீர் மாநிலத்தில் அமுல் படுத்த இயலாது.  எனவே இது பற்றிய விவாதம் நடத்தப்பட வேண்டுமா  இல்லையா என்பதை மாநில முதல்வர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றால், மோடிக்கு அரசியல் சட்டம் தெரியாது என விமர்சனம் செய்கிறார்கள்.

மோடி கூறியதால், காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்யும் போது, அரசியல் சட்டம் தெரியாமல் பேசுகிறார் என்கிறார்கள்.  காஷ்மீர் பிரச்சினை விஷ்வ ரூபம் எடுத்த்தற்கு முக்கியமான காரணகர்த்தா நேரு என்பதை மறந்து விடக் கூடாது. அரசியல் ஷரத்து 370 ஐ கொண்டு வரும் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஒருவருக்கு கூட இதில் உடன்பாடு கிடையாது. 14.11.2004ந் தேதி ஆர்கனைசர் இதழில் திரு.பால்ராஜ் மதோக் எழுதியுள்ள கட்டுரையில் ” Mr.Abdullah , you want that India should defend Kashmir.  India should develop Kashmir and Kashmiris should have equal rights as the citizens of India, but you don’t want India and any citizen of India to have any rights in Kashmir.  I am the Law Minister of India.  I cannot betray the interest of my country.”  என குறிப்பிட்டுள்ளதை காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் படித்து பார்க்க வேண்டும்.  மேற் படி கருத்து அம்பேத்கார் அப்துல்லாவிடம் கூறியது.

(10) 1976-ம் வருடம் கொண்டு வரப்பட்ட நில உச்ச வரம்பு சட்டம், இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும், ஆனால் நில உச்ச வரம்பு சட்டம் காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் பொருந்தாது. மற்ற மாநிலங்களில் கையில் செங் கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடத்தும் காம்ரேட்டுகள் காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் கொடி பிடிப்பதில்லை ஏன்? இதற்கு விளக்கமான பதில் கொடுப்பதற்கு பதிலாக, மோடி மீது பாய்வது வேடிக்கையாக இருக்கிறது.

370bஅரசியல் ஷரத்து 370 தற்காலிகமானது என பாராளுமன்றத்தில் நேரு கொடுத்த உறுதி மொழி என்பதையும் இச் சமயத்தில் சுட்டிக் காட்ட வேண்டும்.  மேலும் 1992-ம் வருடம் டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பிரச்சினைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்டவுடன், குடியரசு தலைவர் உத்திர பிரதேச அரசை கலைத்து விட்டு, குடியரசு தலைவர் ஆட்சி அமுல் படுத்தப்பட்டது.  காஷ்மீர் மாநிலத்தில் நூற்றுக் கணக்கான இந்து கோயில் இடிக்கப்பட்ட போது, அங்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டது, ஆனால் குடியரசு தலைவர் காஷ்மீர் மாநிலத்தின் மீது எவ்வித அரசியல் சட்ட நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை, அரசியல் ஷரத்து 370-ன்படி எடுக்க இயலாது. முன்னாள் வெளியுறவுத் அமைச்சராக இருந்த எம்.சி.சாக்ளா ஐ.நா.சபையில் பேசும் போது, காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட அரசியல் ஷரத்து 370 நீக்கப்படும் என்று தெரிவித்த்தும், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் பக்சி குலாம் முகமது, ஜீ.எம்.சாதிக் ஆகிய இருவரும், ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள் என்பதையும் மறந்து விட்டு காங்கிரஸ் கட்சியினர் புலம்புகிறார்கள்.

2 Replies to “அரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *