சாமி சரணம்

morning_hindutva1991ம் வருடம் டிசம்பர் மாதம். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். சபரிமலைக்கு மாலை போட்டிருந்தேன். கட்டுக் கட்டி பயணத்தை ஆரம்பித்ததும், பெரிய பாதையில் வரும் முதல் ஸ்தலமான எரிமேலியை எங்கள் குழு சென்றடைந்தது. சபரிமலை யாத்திரை நியமப் படி கிராத சாஸ்தா கோயிலில் கும்பிட்டோம். வாவர் பள்ளியில் தொழுதோம்.

மசூதியின் அமைப்பு கொண்ட வாவர் பள்ளியில் உள்ளே விக்கிரகங்கள் எதுவும் கிடையாது. வாவர் சுவாமியின் வாள் வைக்கப் பட்டிருக்கும். காணிக்கை உண்டியல் உண்டு. பக்தர்கள் அங்குள்ள பெரிய உருளியில் வாவர் சாமிக்கு உகந்த நிவேதனமான குறுமிளகை இடுவார்கள். சபரி யாத்திரை பருவத்தின் போது வாவர் பள்ளியைச் சுற்றியும் அந்த வட்டாரம் முழுவதுமே நாள் முழுவதும் விடாது சரண கோஷம் கேட்டுக் கொண்டிருக்கும். பக்தர்கள் ஐயப்ப திந்தகத் தோம் ஆட்டங்கள் ஆடிக் கொண்டிருப்பார்கள்.

நாடு முழுவதும் ராம ஜன்ம பூமி இயக்கம் அலையடித்துக் கொண்டிருந்த நேரம் அது. நாங்கள் உட்பட அங்கு வந்திருந்த ஐயப்பன் மார்களில் ஏராளமான பேர் அயோத்தி இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளன் பாபர் கட்டிய கும்மட்டத்தை அகற்ற போராடுபவர்களாக இருந்தோம். ஆயினும் வாவர் பள்ளியில் சென்று வணங்குவதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. ஐயப்பனின் மெய்யடியாராகிய வாவர் சுவாமியின் பிரசன்னம் அங்கு உறைவதாகவே அனைவரும் கருதினோம்.

erumeli_vavar_masque

ஆயினும், அந்த காலகட்டத்தில் வரலாற்று ஆர்வலனாக ஆகத் தொடங்கி இருந்த என் மனதில் கேள்விகள் ஓட ஆரம்பித்தன. ஐயப்பனுடைய புராணக் கதையில் எப்படி இஸ்லாமிய வாவர் வந்து இணைந்தார்? பின் நவீனத்துவ, மாய யதார்த்த நாவல்களை எல்லாம் நான் படிக்கத் தொடங்கியிராத காலம் அது.

ஐயப்பன் வழிபாடு குறித்து அது போன்று பல கேள்விகள், புதிர்கள் உள்ளன. வரலாற்று ஆர்வமும் தேடலும் கொண்டவர்கள், ஏன் சில பக்தர்கள் கூட இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். வெகுஜன இந்துமதம் ஓரளவுக்கு சரியான செல்திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம் இது.

ஐயப்ப வழிபாடு என்பது பழங்குடி மரபுகள், வைதீக புராண தொன்ம மரபுகள், பிற்கால வரலாற்று, சமய தாக்கங்கள் ஆகிய மூன்று பண்பாட்டு இழைகளின் சங்கமமாகும். ஒருவகையில், எல்லா இந்து தெய்வங்களின் தன்மைகளிலும் இதைக்  காணலாம் என்றாலும், ஐயப்பன் விஷயத்தில் வெளிப்படையாகவும் தெளிவாகவும் இந்த விஷயம் புலப்படுகிறது.

முதலாம் அடுக்கில், ஐயன் என்ற தொல்பழங்குடிக் கடவுள் இருக்கிறார். தமிழகத்தின் கிராமங்கள் தோறும் காவல் தெய்வமாகவும், பற்பல சமூகங்களின் குலதெய்வமாகவும் ஐயன், ஐயனார், சாஸ்தா விளங்குகிறார். ஐயன் வழிபாடு குடும்பத் தந்தை, குடித்தலைவர், மூதாதையர், தெய்வம் என்ற அடுக்கில் வளர்ந்து, பெருங்கற்கால (megalithic)  நாகரீக காலகட்டம் முதலே இருந்து கொண்டிருக்கும் ஒரு பழங்குடி மரபு என்று சிந்துவெளி ஆய்வாளர் Asko  Parpola  கருதுகிறார்.  சபரிமலையைப் பொறுத்த வரையில், அது மிகப் பழங்காலம் முதலே சபரர்கள் என்று அழைக்கப் பட்ட மலைச்சாதியினர் மற்றும் வேடர்களின் உறைவிடமாக இருந்திருக்கிறது. ராமாயணத்தில் வரும் மகா தபஸ்வியான சபரியும், அவளது குருவான மதங்க முனிவரும் இந்த சமூகத்தைச் சார்ந்தவர்களே. இதை வைத்தே பிற்காலத்தில் சபரிமலையின் ஸ்தல  வரலாற்றில் ராமாயணத்துடன் ஒரு தொடர்பு ஏற்படுத்தப் படுகிறது. சங்க இலக்கியங்களின் “எயினர்” இதே போன்ற சமூகத்தினர் தான். இந்த மலைச்சாதியினரின் வழிபடு தெய்வமாக இருந்த கொற்றவையும் ஐயனும் தான் மாளிகைப் புரத்தம்மன் மற்றும் சபரிகிரீசனின் ஆதி மூலங்களாக இருக்கக் கூடும்.

சபரிமலை வழித்தடத்தில் உள்ள கல்லிடும் குன்று, சரங்குத்தி ஆல், காளைகட்டி, எரிமேலி (எருமை கொல்லி) ஆகிய தலங்களும், அந்தத் தலங்களில் இன்றும் பக்தர்கள் நிகழ்த்தும் சடங்குகளும் இந்தப் பழங்குடித் தொடர்புகளை உறுதி செய்கின்றன என்கிறார் வரலாற்று ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன். சபரிமலையில் பருவமடைந்த பெண்கள் வந்து வழிபடுதல் கூடாது என்று உள்ள வழக்கம் வைதிக ஆசாரவாதிகள் ஏற்படுத்தியது என்றே பொதுவாகக் கருதப் படுகிறது. ஆனால், இந்த விலக்கம் தெளிவாகவே பழங்குடி வேர்கள் கொண்டது என்று அவர் விளக்குகிறார். “அணங்குடை முருகன் கோட்டத்தில் கலம் தொடா  மகளிர்” – முருகன் கோயிலில் உணவு சமைக்கும் கலங்களைத் தொடுவதற்கு அனுமதிக்கப்படாத மாதவிடாய்க் காலப் பெண்கள் புகுந்தால் சுருண்டு விழுந்துவிடுவர் என்ற  குறிப்பு புறநானூற்றில் உள்ளதை சுட்டிக் காட்டுகிறார் [1].

sabarimala_temple

இரண்டாம் அடுக்கில், சாஸ்தா தொடர்பான பல புராணக் குறிப்புகளைக் காண்கிறோம். சாஸ்தா (ஆள்பவர், சாசனம் செய்பவர்) என்ற சொல் யஜுர் வேதத்திலேயே உள்ளது. சிலப்பதிகாரத்தில் வரும் சாத்தன் மலைத் தெய்வமாக அல்ல, நகரத்துள் கோட்டத்தில் வழிபடும் கடவுளாக இருக்கிறான். குடித்தலைவரான ஐயனார், பூத நாதராக, சிவபூதகணங்களின் தலைவராக, சிவனாரின் திருமகனாக ஏற்றம் பெருகிறார்.  ”சாத்தனை மகனா வைத்தார்” என்று சிவபெருமானைப் பாடுகிறது அப்பர் தேவாரம்.  ஸ்கந்த புராணத்தில் திருமால், சிவன் இருவருக்கும் திருமகனாக, ஹரிஹர புத்திரனாக, சாஸ்தா குறித்த தொன்மம் வளர்ச்சியுறுகிறது. வேதகாலம் முதலே ரிதம் – சத்யம் என்ற இரு தத்துவங்களின் இணைப்பாக ஹரி-ஹர வடிவம் கருதப் பட்டு வந்துள்ளது. அதன் இயல்பான நீட்சியாகவும், நடைமுறையில் சைவ, வைணவ மோதல்களைத் தவிர்த்து இணக்கம் உண்டாக்கும் வகையிலும் ஹரிஹரசுதன் குறித்த புராணம் எழுந்திருக்கலாம்.

அங்கண்  மேவி  அரிகர புத்திரன்
சங்கையில் பெரும் சாரதர் தம்மொடும்
எங்குமாகி இருந்து எவ்வுலகையும்
கங்குலும் பகல் எல்லையும் காப்பனால்

என்று 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த கந்த புராணம் கூறுகிறது. ஹரிஹர புத்திரனான சாஸ்தாவும் காவல் தெய்வமான ஐயனாரும் ஒன்றாகவே இதில் அடையாளப் படுத்தப் படுவதை கவனிக்க வேண்டும். “காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கியாளும்  ஹரிஹரசுதன்” என்று ஐயப்ப பக்தர்கள் இன்று முழங்கும் சரண கோஷத்தின் அடி நாதம் இங்கிருந்தே வருகிறது.

shasta_with_purna_pushkalaமேகம் திறைகொண்ட ஐயனார், அருஞ்சுனை காத்த ஐயனார், சொரிமுத்தையனார் போன்று பற்பல பெயர்களில் சாஸ்தா ஆலயங்கள் தமிழகம் எங்கும், குறிப்பாக நெல்லை, மதுரை, குமரி பிரதேசங்களில் அதிக அளவில் உள்ளன. எங்களது குலதெய்வக் கோயிலான பெருவேம்புடையார் சாஸ்தா ஆலயம் நெல்லை – கன்யாகுமரி மாவட்டங்களின் எல்லையில் நாங்குனேரிக்கும் வள்ளியூருக்கும் இடையில் உள்ளது. கருவறையில் மூன்று லிங்கங்கள் உள்ளன. ஐயப்பன் பூரண புஷ்கலா தேவியருடன் (பூரணி பொற்கலை) காட்சி தருவதாக ஐதிகம். தென் தமிழகத்தில் குறைந்தது ஆயிரம் வருடப் பழமை கொண்ட பல சாஸ்தா கோயில்களில் சிலா ரூபமாக இரு தேவியருடன் சாஸ்தா அமர்ந்திருக்கும் திருவுருவங்கள் உள்ளன. வேறுபட்ட பல சமூகங்களின் இணைப்பை வலுப்படுத்தும் முகமாக பூரண புஷ்கலா தேவியருடன் சாஸ்தா மணக்கோலம் கொண்டது குறித்த புராணங்கள் உருவாகியிருக்கலாம். உதாரணமாக, தமிழக கேரள எல்லையில் உள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் வருடம் தோறும் ஐயப்பன் – புஷ்கலா தேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதைக் கோலாகலமாக நடத்தி வைப்பவர்கள் மதுரையின் சௌராஷ்டிர சமூகத்தினர். புஷ்கலா தேவி தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்றே அவர்களிடம் ஒரு கர்ணபரம்பரைச் செய்தி உள்ளது.

shasta_ayyappan_on_tigerமூன்றாம் அடுக்கில், கேரளத்தில் பந்தள ராஜகுமாரனாகத் தோன்றிய மணிகண்டனின் சரிதம் வருகிறது. 12ம் நூற்றாண்டில் மதுரையில் அரசிழந்த பாண்டிய ராஜவம்சத்தின் ஒரு பிரிவினர் சேர நாட்டில் குறுநில மன்னர்களாக அரசு புரிகின்றனர். இந்த வம்சத்தவனான ராஜசேகர பாண்டியன் காட்டில் கண்டெடுத்த வளர்த்த இளவரசனான மணிகண்டன் தெய்வீக அம்சம் பொருந்தி நாடு போற்றும் ஒரு வீரனாகத் திகழ்கிறான். ராணிக்காக புலிப்பால் கொண்டு வரக் கோருவது போன்ற அரண்மனை சதிகளை முறியடிக்கிறான். அந்தக் காட்டு பகுதியில் மக்களுக்குப் பல கொடுமைகளை செய்து வந்த உதயணன் போன்ற கொள்ளைக் காரர்களை  கடுத்தன், கருப்பன், வாவர், வில்லன் – மல்லன் ஆகிய படைத் தளபதிகளின் உதவியுடன் முறியடிக்கிறான். சபரிமலையில் யோகத்தில் அமர்கிறான். வரலாற்று நாயகனான இந்த வீர மணிகண்டன் சாஸ்தாவின் திரு அவதாரமாகவே மக்களால் கொண்டாடப் படுகிறான், ஸ்ரீராமனையும் ஸ்ரீகிருஷ்ணனையும் போல. மணிகண்டனின் இந்த திவ்ய சரிதங்கள் இதே காலகட்டத்தைச் சேர்ந்த கேரள மகாத்மியம் என்ற சம்ஸ்கிருத நூலில் பூதநாதோபாக்யானம் என்ற பகுதியில் விவரிக்கப் படுகின்றன.  ஐயப்பன் குறித்த புராணங்களை ஆய்வு செய்து “மஹா சாஸ்தா விஜயம்” என்ற தமிழ் நூலை அளித்திருக்கும் சாஸ்தா உபாசகர் திரு. அரவிந்த் சுப்ரமணியம், இந்த சரிதங்களைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார் [2]. தமிழகத்தைப் போலவே கேரளத்திலும் பல்வேறு வகைப் பட்ட சாஸ்தா கோயில்கள் உள்ளன. பாரம்பரியமான சாஸ்தா பாட்டுக்கள், தாந்திரீக பூஜை முறைகள், ஐயப்பன் தீயாட்டு போன்ற உக்கிரமான சடங்குக் கலைகள் கேரள சாஸ்தா வழிபாட்டின் சிறப்பு அம்சங்களாகும்.

மணிகண்டனின் அவதார காலகட்டத்தில் கேரள கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டிலும் இஸ்லாமியர்கள் பல இடங்களில் வசிக்கத் தொடங்கி விட்டனர். இவர்களில் ஒரு பிரிவினரின் தலைவனான வாவர்  மணிகண்டனால் ஆட்கொள்ளப் பட்டு அவனது அடியாராகவும், சேனைத் தலைவராகவும் ஆகியிருக்க வேண்டும். மதத்தால் இஸ்லாமியராக இருந்தாலும் ஐயப்பனின் தெய்வீக அருளுக்குப் பாத்திரமானவர் அவர் என்பதால் மற்ற எல்லா பரிவார தெய்வங்களுடனும் சேர்த்து அவருக்கும் ஒரு வழிபாட்டிடம் சபரிமலைப் பிராந்தியத்தில் அமைந்திருக்க வேண்டும். அதுவே இன்று நாம் காணும் வாவர் பள்ளி.  வட இந்தியாவில் பக்தி இயக்க முன்னோடியாக விளங்கிய கபீர் தாசர், சய்யத் இப்ராஹீம் என்ற இயற்பெயர் கொண்ட மாபெரும் கிருஷ்ண பக்தரான ரஸ்கான் ஆகியோரை அருளாளர்களாக ஏற்று பல நூற்றாண்டுகளாக வணங்கி வரும் இந்துக்கள் அதே போன்று தான் வாவர் சுவாமியையும் வழிபடுகிறார்கள். இதில் வியப்புக்கும் முரணுக்கும் இடம் ஏதுமில்லை.

padmapaniசாஸ்தாவின் யோக ரூபமும், சரண கோஷங்கள், புலனடக்கத்தை வலியுறுயத்தும் விரதங்கள் போன்ற ஐயப்ப வழிபாட்டு நெறிகளும் பௌத்த சமயக் கூறுகளை இந்து சமயம் தன்னுள் ஈர்த்துக் கொண்டதன் விளைவே என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கால்களை மடித்து யோக பட்டத்துடன் யோக உபவிஷ்ட நிலையில் அமர்ந்திருக்கும் ஐயப்பனின் திருவடிவமும், கையில் செண்டு ஏந்தியுள்ள ஐயனார் திருவடிவமும் அவலோகிதேஸ்வரர், பத்மபாணி போன்ற பௌத்த கடவுளரின் திருவுருவங்களில் இருந்தே உருவானவை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இது ஆதாரபூர்வமானதே என்று கருத இடமிருக்கிறது. ஆனால் இதன் பொருள் பௌத்தத்திலிருந்து வைதீக இந்து மதம் திருடிக் கொண்டது என்பதல்ல. பௌத்த அவலோகிதேஸ்வரரின் மூலத்தை ஆராய்ந்தால் அது வேத தெய்வமான வருணனின் மீள் உருவாக்கம் என்பது புலனாகும். பாசக் கயிற்றுடன் உயிர்களின் மீது ஆணை செலுத்தும் வருணன் தான், அந்தக் கடுமையைத் தவிர்த்து புன்னகை புரியும் போதிசத்வராக புத்த இறையியலில் உருமாறுகிறான். “அமித்ர தெய்வங்களை மித்ர தெய்வங்களாக்கினேன்” என்று அசோகரின் கல்வெட்டு ஒன்று வெளிப்படையாகவே இதனைக் கூறுகிறது.  பிறகு இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து, அதே அவலோகிதேஸ்வரர் தனது யோகப் பேரொளியுடனும் அதே சமயம் பூதநாதராகவும் ஐயப்பனாக உருக்கொள்கிறார்! இந்திய வரலாற்றில் இங்கு தோன்றிய எல்லா சமய மரபுகளுமே இங்குள்ள மற்ற சமய மரபுகளுடன் விவாதித்தும், கொண்டும், கொடுத்தும், ஊடியும், கூடியும் வளர்ச்சியடைந்துள்ளன. எந்த ஒரு சமய மரபும் இதற்கு விதிவிலக்கல்ல.

பொதுவாக, உள்நோக்கங்களும், காழ்ப்புணர்வுகளும், ஒருபக்கச் சாய்வுகளும் கொண்ட ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் இந்த வரலாற்றை சமூக மோதல்களும், பகைமைகளும், அதிகாரப் போராட்டங்களும் மட்டுமே கொண்ட தட்டையான கதையாடல்களாக முன்வைக்கிறார்கள். அந்த அணுகுமுறை அடிப்படையிலேயே எதிர்மறை நோக்கம் கொண்டது. இந்த மண்ணின் பண்பாட்டு அசைவுகள் குறித்த எந்த பிரக்ஞையும் இல்லாதது.  ஆனால் எந்த அறிவுஜீவித் தனமும் இல்லாத சாமானிய இந்துக்களுக்குக்  கூட இந்தப் பண்பாட்டு இணைப்புகள் தங்கள் கலாசாரப் பின்புலத்தின் காரணமாக இயல்பாகவே உணரக்  கூடியதாக இருக்கின்றன. அந்த இயல்பு இருக்கிறதே, அது தான் இந்துத்துவம்.

சரணம் ஐயப்பா என்று உள்ளம் உருக விளிக்கும் பக்தன், அங்கே சிவனும் சக்தியும் விஷ்ணுவும் புத்தனும், பிரபஞ்சமும், தானும் ஆன அழியாத சத்திய ஸ்வரூபத்தையே அழைக்கிறான்.

சாமி சரணம்!

நாளை மீண்டும் சந்திப்போம்.

சான்றுகள்:

[1] https://www.sishri.org/sabariprint.html

[2] https://shanmatha.blogspot.in/2011/10/blog-post.html

 

45 Replies to “சாமி சரணம்”

  1. சூப்பர் செய்தி சாமிமார்கள் தேவை ஜி நன்றி…..

  2. இது போன்ற கிராம அல்லது வன தேவதை வழிபாடு என்பது மூட நம்பிக்கையின் காரணமாகக் கண்மூடித் தனமாகப் பின்பற்றப்படுகின்றன. இதில் அறிவு பூர்வமான விஷயங்களைத் தேடினோமானால், ஒவ்வொன்றுக்கும் அதற்கு ஏற்றாற்போல சில பதில்களை ஆத்திகர்கள் வைத்திருக்கிறார்கள். இவர்களது மூட வாதத்தை எதிர் கொள்வது வீண் வேலை. அவரவர்க்குத் தோன்றியபடி சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டு இதுபோன்ற வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சபரி மலை யாத்திரையின் போது வழியில் ஒருவன் ஒரு ஓணானை கல்லெறிந்தான் என்று வைத்துக் கொள்வோம், பின்னால் வருபவர்களும் அந்த இடத்தில் நின்றுகொண்டு எங்காவது ஒரு ஓணான் இருக்கிறதா அடிக்க என்று பார்த்துக் கொண்டு நிற்பார்கள் . பக்தி மார்க்கம் வளர்ச்சியடைந்திருக்கிற அதே நேரத்தில் அதில் மூடப் பழக்க வழக்கங்கள் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. எது எப்படியோ, வருடத்தில் குறைந்த நாளிலாவது தவறுகள் செய்வது தடுக்கப்படுவது நல்ல விளைவு.

  3. தளம் தளமாக தர்ம சாஸ்தா வழிபாடு பற்றிய அலசல் அருமை

    வனவாசிகள், நாட்டார் வழிபாட்டிலிருந்து விதவிதமாக தர்மசாஸ்தா வழிபாடு விளக்கப்பட்டுள்ளது

    வாவர் என்ற முஸல்மாணிய அடியார் போற்றிய ஐயப்பன்.

    பௌத்த வழிபாடுகளில் ஆர்ய அவலோகிதேஸ்வரர் மற்றும் தர்மசாஸ்தா வழிபாடுகளில் சாம்யதைகள் என் கவனத்தை ஈர்த்தது. விவிதமான வழிபாட்டு முறைகளிடையே சம்வாதமும் பரிவர்த்தனமும் இருந்தது தெரிய வருகிறது.

    ஆர்ய அவலோகிதேஸ்வர சதநாம ஸ்தோத்ரத்தில்

    धर्मराज महाशुद्ध सत्त्वराज महामते

    தர்மராஜ மஹாசுத்த ஸத்வராஜ மஹாமதே

    என அவலோகிதேஸ்வரர் தர்மராஜனாக ஸ்துதிக்கப்படுவதை கவனிக்கிறேன்.

    அவலோகிதேஸ்வரரை பத்மபாணி என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

    ஓம் மணிபத்மே ஹும் என்ற ஷடாக்ஷர மந்த்ரத்தால் உபாஸிக்கப்படுபவர் இவர்.

    சம்ஸ்க்ருத கவிதைகள் யாக்கப்படுவதில் வைதிக மூர்த்திகளுக்கும் பௌத்த மூர்த்திகளுக்கும் யாக்கப்பட்ட கவிதைகளில் சாம்யதை.

    இப்போது பௌத்தத்தில் பிக்ஷுணி (பெண் பிக்ஷு) இருக்கிறார்களா தெரியவில்லை

    அவலோகிதேஸ்வர ஸ்தவம் என்ற ஸ்தோத்ரம் சந்த்ரகாந்தா என்ற பிக்ஷுணியால் யாக்கப்பட்டுள்ளது.

    ஓரிரு வரிகள்

    भुवनत्रयवन्दितलोकगुरुम् अमराधिपतिस्तुतब्रह्मवरम्

    புவனத்ரய வந்தித லோககுரும் அமராதிபதிஸ்துத ப்ரம்ஹவரம்

    अमिताभतथागतमौलिधरं कनकाब्जविभूषितवामकरम्

    அமிதாபததாகத மௌலிதரம் கனகாப்ஜ விபூஷித வாமகரம்

    கனகாப்ஜ விபூஷித வாமகரம் என்ற படிக்கு இடக்கரத்தில் பொற்றாமரையை ஏந்தியவராக இந்த பிக்ஷுணி ஸ்துதிக்கிறார்.

    சம்ஸ்க்ருத யாப்பிலக்கணம் விவித சம்ப்ரதாயத்தினரிடையே பொதுவானது தானே

    மேற்கண்ட ஸ்தவத்தில் இருக்கும் வ்ருத்தம் (பா முறை) நமக்கு மிகவும் பரிச்சயமான சம்ஸ்க்ருத ஸ்தோத்ரத்தை நினைவுருத்துகிறது பாருங்கள்

    வெங்கடேச சுப்ரபாதத்தினூடே வரும்

    கமலா குச சூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதனோ

    என்ற ஸ்தோத்ரத்தின் வ்ருத்ததுடன் ஒத்துப்போகும் அழகைப் பாருங்கள்.

  4. ஸ்ரீ ஜடாயு சாமி ஐயப்ப வழிபாட்டை நன்கு ஆய்ந்து எழுதியுள்ளார். தென்னகம் முழுவதும் பரவி மஹாராஸ்டிரம் வரை செழித்துள்ளது ஐயப்ப பக்தி இயக்கம். அதனை சமூகவியல் நோக்கில் ஆய்வு செய்தால் என்ன என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த எண்ணத்திற்கு வலுவூட்டுவதாக இந்தக்கட்டுரை அமைந்துள்ளது. ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு நன்றி.

  5. ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசய
    ஒரு ஐயம் ஓம் மணிபத்மே ஹும் என்பது சரியா ஓம் மணிபத்மே ஹம் என்பது சரியா.அப்படி ஜபிப்பவர்களை டார்ஜிலிங் சிக்கிம் பகுதிகளில் பார்த்தேன்.

  6. இந்த வாவர் வழிபாடு எப்போதிருந்து இருக்கிறது என ஏதேனும் ஆராய்ச்சி நடந்திருக்கிறதா? அந்த மசூதி எப்போதிருந்து அங்கே இருக்கிறது என ஏதேனும் வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறதா?

    ராஜசங்கர்.

  7. ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசய,

    ஓம் மணிபத்மே ஹூம்

    மற்றைய பௌத்த தேசங்களில் அந்தந்த தேச பாஷைக்குத் தக மந்த்ரத்தின் phonetics மாறுபடுகிறது.

    https://en.wikipedia.org/wiki/Om_mani_padme_hum

    இது மிகவும் ப்ரபலமான கரந்த வ்யூஹ சூத்ரங்களில் காணப்படும் மந்த்ரம்.

    கரந்த வ்யூஹ சூத்ரம் மஹாயான சூத்ரம்.

    அன்பர் விநோத் இது சம்பந்தமான குறிப்புகளை கீழே காணும் சுட்டியில் கொடுத்துள்ளார்.

    https://www.virtualvinodh.com/mantra/142-stotra-karanda-vyuha-avalokitesvara

    வாசித்துப் பார்க்கவும்

  8. \\\ பௌத்த அவலோகிதேஸ்வரரின் மூலத்தை ஆராய்ந்தால் அது வேத தெய்வமான வருணனின் மீள் உருவாக்கம் என்பது புலனாகும். பாசக் கயிற்றுடன் உயிர்களின் மீது ஆணை செலுத்தும் வருணன் தான், அந்தக் கடுமையைத் தவிர்த்து புன்னகை புரியும் போதிசத்வராக புத்த இறையியலில் உருமாறுகிறான். “அமித்ர தெய்வங்களை மித்ர தெய்வங்களாக்கினேன்” \\\

    மஞ்சுஸ்ரீ என்ற இன்னொரு போதிசத்வர் சொன்னதாக அபரிமிதாயு சூத்ரம் என்ற சூத்ரம் தீர்க்க ஆயுளுக்கு சொல்லப்படுகிறது..

    ஆயினும் ஆர்ய அவலோகிதேஸ்வரரும் உடல் நலன் அருளும் போதிசத்வராக வணங்கப் படுகிறார்.

    சந்த்ரகாந்தா பிக்ஷுணி தன் ஸ்தவத்தில் சொன்ன படி

    बहुपुण्यमुपार्जितलब्धवरं ज्वरव्याधिहरं बहुसौख्यकरम्

    பஹுபுண்யமுபார்ஜித லப்தவரம் ஜ்வரவ்யாதிஹரம் பஹுசௌக்யகரம்

    உடற்கேடுகளைக் களைந்து சுகத்தைக் கொடுப்பவராக அவலோகிதேஸ்வரரை ஸ்துதி செய்கிறாள்.

    அவலோகிதாஷ்டகம் என்ற மற்றொரு ஸ்துதியில் அந்த ஸ்தோத்ரத்தின் பலச்ருதியாக சொல்லப்படுவது

    स्लोकाष्टकं प्रतिदिनं खलु ये पठन्ति ते प्राप्नुवन्ति सहसा धनपुत्रमोक्षान्।

    कुष्ठादिरोगनिकरं क्षमतां प्रयाति वन्दामहे च नितरां तव पादयुग्मे

    ச்லோகாஷ்டகம் ப்ரதிதினம் கலு யே படந்தி தே ப்ராப்னுவந்தி ஸஹஸா தனபுத்ரமோக்ஷான்

    குஷ்டாதி ரோக நிகரம் க்ஷமதாம் ப்ரயாதி வந்தாமஹே ச நிதராம் தவ பாதயுக்மே

    இந்த அஷ்டகத்தை ப்ரதிதினமும் படிப்பவர்கள் தனம், புத்ரபாக்யம் மற்றும் மோக்ஷம் பெறுவதுடன் குஷ்டம் இத்யாதி ரோகங்களிலிருந்தும் சுகம் பெறுவர்.

  9. \\\ ஐயப்ப வழிபாடு என்பது பழங்குடி மரபுகள், \\\

    பழங்குடி மரபுகள் என்பது இடதுசாரியினரின் சொல்லாடல்

    ஹிந்துத்வ உரையாடலில் புழக்கத்தில் இருந்த சொல்லாடல் வனவாசி அல்லது தமிழ்ச் சூழலில் நான் நமது தளத்தில் அதிகம் வாசித்துப் பழகிய சொல்லாடலான நாட்டார் வழிபாடு (உண்மையான அர்த்தத்தைக் கொடுக்கும் சொல்)

    இஸ்லாமும் க்றைஸ்தவமும் வந்தேறி மதங்கள் என்பதை ஹிந்துக்கள் சொல்வதை மறுக்குமுகமாக பழங்குடிகள் என்பவர் தனி. ஹிந்துக்களும் வந்தேறிகள் என்ற அர்த்தத்தில் வஞ்சகமாக இடதுசாரிகள் கையாண்ட சொல்லாடல்கள் பழங்குடி, ஆதிவாசி – இத்யாதி சொல்லாடல்கள்.

    இது போன்ற சொல்லாடல்கள் தமிழ் ஹிந்து தளத்தில் வரும்போதெல்லாம் இதை சுட்டிக் காட்டி என் அபிப்ராய பேதத்தைத் தெரிவித்துள்ளேன். அது தொடர்கிறது.

    தவிர்க்கப்பட வேண்டிய வஞ்சகம் மிகுந்த இடதுசாரிச் சொல்லாடல்.

  10. தினமணியில் வந்த ஒரு சைய்தியை யாரும் கவனிக்கவில்லை – ருஷ்சியாவில் இருந்து பல வருடங்களாக இருமுடிக்கட்டி வரும் ருஷ்யா பக்தர்களின் பேட்டி தினமணியில் வந்து இருந்தது .

  11. Sorry, but is Mr Thanjai V.Gopalan , the new Hindu basher?

    இது போன்ற கிராம அல்லது வன தேவதை வழிபாடு என்பது மூட நம்பிக்கையின் காரணமாகக் கண்மூடித் தனமாகப் பின்பற்றப்படுகின்றன. இதில் அறிவு பூர்வமான விஷயங்களைத் தேடினோமானால், ஒவ்வொன்றுக்கும் அதற்கு ஏற்றாற்போல சில பதில்களை ஆத்திகர்கள் வைத்திருக்கிறார்கள். இவர்களது மூட வாதத்தை எதிர் கொள்வது வீண் வேலை”
    As human beings, we have very limited perceptions. What you see is not what is there. We can only see through certain bandwidth, hear only certain frequency and our sense of smell is very limited. So, what we perceive as scientific in only a guess work.With all our limitation, I think one is being arrogant to declare someone else’s belief as ” unscientific” which itself is a western construct. Today’s Science is a White man’s domain. To fit in, we have to to discard age old practices as they are DEEMED unscientific! I believe recently, Costco, had to reclassify ” Bible” from fiction to ” History”!! I cannot see any” Scientific American” jumping up and down protesting on this. Oh! Some of us Hindus are soooo secular, we have to show our scientific credentials every now and then to denigrate Hinduism.

  12. திருநெல்வேலிபக்கத்தில் சைவ வேளாலர்களுக்குச் சாஸ்தா பலபெயர்களில் குலதெய்வமாக விளங்குகின்றார்.. எடுத்துக்காடாக, இன்று பாளையங்கோட்டை அருகில் உள்ள மகாராஜா நகர் மகாராஜா என்னும் சாஸ்தாவின் பெயரால் அமைந்ததாகக் கூறப்படுகின்றது. நீதியரசர் ம்காராஜன் அவர்களின் குலதெய்வம் மகாராஜன் என்னும் சாஸ்தா என அறிகின்றேன். என்னுடைய நண்பர் ஒருவரின் பெயர் புலியூருடையான். அது அவர்களுடைய குலதெய்வமான சாஸ்தாவின் பெயர் என்று அறிந்தேன். கொங்கு நாட்டில் குலதெய்வங்கள் பெண்தெய்வமாகவும் காட்டு வேளாண்மையுடன் தொடபுடையதாகவும் இருக்க, திருநெல்வேலி வேளாளர்களுக்கு ஸாஸ்தா எனும் ஆண்தெய்வம் குலதெய்வமாக இருத்தல் ஆராயத் த்க்கது. கொங்கு வேளாளர்களின் குலகுருக்களான சிவாச்சாரியர்களுக்கு அவ்வக்குல பெண்தெய்வங்களே குலதெய்வமாக இருத்தலும் அவ்வாறே திருநெல்வே பிராமணர்க்ளுக்கு வேளாளர்களின் குலதெய்வமே குலதெய்வமாகவும் கொண்டாடப்படுதல் அறியத்தக்கது.,

  13. // பழங்குடி மரபுகள் என்பது இடதுசாரியினரின் சொல்லாடல் //

    இல்லை க்ருஷ்ணகுமார் ஐயா. ஆதிவாசி (aboriginal) என்பது காலனிய சொல்லாடல். அதற்கு மாற்றாக நாம் வனவாசி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆனால் பழங்குடி (tribal) என்ற சொல் அப்படிப் பட்டதல்ல. அது சரியான சொல் தான்.

  14. முத்துக்குமார சுவாமி ஐயா அவர்களுக்கு, வேளாளர்களும் பிராமணர்களும் மட்டுமல்ல, நெல்லை, குமரி மாவட்டங்களில் அனேகமாக எல்லா சமூகங்களுக்கும் சாஸ்தா அல்லது சாஸ்தாவின் பரிவார தெய்வங்களில் ஒருவர் தான் (மாடன், யட்சி, பூதத்தான், பிரமரட்சசி, பட்டராயன்…) குலதெய்வமாக இருக்கிறார். இதில் தென்கலை ஐயங்கார்கள் போன்ற வைணவத்தைப் பின்பற்றும் சமூகங்களும் அடக்கம்.

  15. தஞ்சை கோபாலன் ஐயா, இந்து மதத்தின் எல்லா வழிபாட்டு நெறிகளிலும் “குருட்டு நம்பிக்கை” (மூட என்ற சொல்லைத் தவிர்க்கிறேன்) என்று சொல்லக் கூடிய அம்சங்கள் இருக்கின்றன. எனவே, ஐயப்ப வழிபாட்டு சடங்குகளை குறிப்பிட்டு நீங்கள் விமர்சிப்பதில் அர்த்தமில்லை.. குறிப்பாக, சபரிமலை வழித் தடத்தில் கல்லிடும் குன்று என்ற ஸ்தலத்தில் கல்லை வீசுவது, சரங்குத்தி ஆலில் அம்பைப் போடுவது எல்லாம் சமீபத்தில் யாரோ கிளப்பி விட்ட “மூட நம்பிக்கை” அல்ல. பழங்காலத்தில் இருந்தே வரும் சடங்குகள் தான் இவை. அதற்கு அந்த ஸ்தலப் பெயர்கள் சாட்சி. சிலரது நோக்கில் இந்த சடங்குகளில் “ஆன்மீகமான” எதுவும் தோன்றாதிருக்கலாம்… அவர்கள் அதை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாலை போட்டு மலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் எல்லா சடங்குகளையும் செய்து தான் ஆகவேண்டும் என்பதில்லை.. நான் அறிந்த சில வல்லிய ஐயப்ப குருசாமிகள் விரத காலத்திலும் மலை ஏறும் போதும் எல்லாம் வெள்ளை வேட்டி தான். பொதுவாக எல்லாரும் அணியும் வண்ண வேட்டிகள் கூட கிடையாது.

  16. கீழ பம்பாவில் குளியல் வரை காவி வேஷ்டியும் அதன்பின் வெள்ளை வேஷ்டியுடன் மலை மீது ஏறி தரிஷ்ணம் பண்னியவருடன் நானும் சென்று, பார்த்து இருக்கின்றிரன்

  17. குலதெய்வம் விசயத்தில் தென்கலை வைஷ்ணவர்களும் அடக்கம் என்பது சரி இல்லை.

  18. https://shanmatha.blogspot.in/2011/10/blog-post.html
    சான்றுகள் என்று கட்டுரையின் முடிவில் குறிப்பிடப்பட்ட இரண்டாவது சுட்டி மேலே.
    ஐயப்பன் வரலாறு பல்லாயிரம் வருடங்கள் பழமையானது என்கிறார் .ஆரியன் கேரள வர்மனைப் பற்றியும் சுவையான தகவல்கள்.

    அதே தளத்தில் மற்றொரு சுட்டி கீழே.
    https://shanmatha.blogspot.ae/2013/10/blog-post.html

    பூத நாதோபாக்யானம் என்ற புத்தகத்திலிருந்து மேற்கோளிடும் இவர் , எருமேலியிலிருந்து பதினெட்டாம் படி வரை உள்ள ஏழு கோஷ்டங்களில் [ கோட்டைகள்] முதல் கோஷ்டத்தின் வாபுரன் [ வாவர் அல்ல] என்ற பூதப் பரிவார மூர்த்தியை -[சிவ பூதம் ] -வணங்க வேண்டும் என்கிறார்.
    அவரும் ஐயப்பனின் சேவகனே ஒழிய நண்பர் என்று எங்கும் குறிப்பிடப் படவில்லை.

    அங்கே வாபுரனது சாந்நித்யம் விளங்குவது ஆச்சரியம் அல்ல. பூத கணங்கள் , ” வன தேவதைகள் ” மனிதர்கள் சிறிது உபாசனையின் மூலமே உணர இயலும். அது பொய் அல்ல. மனித பிரக்ஞைக்கு மிக அருகில் இருக்கும் ஆக்க சக்திகள் அவர்கள். முனிஸ்வரன் , மதுரை வீரன் கோயில்களில் இதை உணர்ந்திருக்கிறேன்.

    நான் சந்தித்த கேரளாவை சேர்ந்த ஒருவர், தனது ஒன்றாவது வயதிலிருந்து சபரி மலை செல்பவர் வாபுரன் பற்றி இதே போன்ற ஒரு கருத்தை கூறினார் .

    இது ஒரு புறம் இருக்க, பழங்குடி என்ற வார்த்தை / கருத்தாக்கம் திரு கிருஷ்ணகுமார் அவர்கள் சொல்வது போல தவறான் பொருளைத் தான் தருகிறது.

    “பழங்குடி மதம் ” தனி , வேத மதம் தனி என்று எல்லாவற்றையும் தனித்தனி கம்பார்ட்மெண்டுகளில் அடைக்க நினைக்கும் தவறான மேற்கத்திய கருத்தாக்கத்திற்கு இது வழி விட்டு விடும்,

    நமது சனாதன தர்மம் என்னும் ஆல மரத்தின் எல்லா விழுதுகளும் ஒன்றோடு ஒன்று மூல வேர் மூலம் தொடர்பு உடையவை தான்.

    பத்மபாதர் ஆன சனந்தனர் விடாமல் நரசிம்ம ஜபம் செய்து காண முடியாத நரசிம்மத்தை காட்டின் வேடன் சத்தியத்தின் சக்தியால் [ ” மிருகம் ” கிடைக்காவிட்டால் பிராண தியாகம் செய்வதாக சத்தியம் செய்திருக்கிறான் சனதனரிடம்] , அந்த வடிவத்தை பற்றிய ஐகாக்ரிய சிந்தையால் , அப்படி ஒரு ” வினோத மிருகம்” நிஜமாகவே இருக்கிறது என்ற ஒரு பிடியான நம்பிக்கையால் ஆம் நம்பிக்கையால் — ,காண்பது என்ன , காட்டுக்கொடியால் கட்டி இழுத்துக் கொண்டும் வருகிறான்.

    சனந்தனர் அப்போது காண்பதெல்லாம் “Bermuda Triangle” என்ற ஆங்கில படக்காட்சி போல வெறும் காட்டுக்கொடி கயிறு மட்டுமே . என்னமோ கட்டபட்டிருக்கிறது என்று மட்டுமே புரிகிறது.

    ஆக மந்திர ஜபமோ, மனதின் ஒருமையோ, பஜனையோ , ஆகம விதிப்படி பூஜையோ வேறொருவர் ஈடு சொல்ல முடியாத கண்ணப்ப பக்தியோ ஒரே இடத்தில் தான் கொண்டு விடுகிறது.
    ஆல மரத்தின் விழுதுகளில் இவையும் அடங்கும்.
    அன்புடன்
    சாய்

  19. அய்யா தஞ்சை வெ. கோபாலன் அவர்கள் தெரிவித்த கிராம அல்லது வன தேவதை வழிபாடு பற்றிய கருத்து நமக்கு ஏற்புடையது அல்ல. இறை வழிபாட்டின் பல்வேறு அம்சங்களுமே மிக உயர்வானவையே ஆகும்.

    பசுமாட்டின் சாணம், களிமண், சந்தனம், குங்குமம், அரிசி மாவு, வெள்ளெருக்கு , கருங்கல், பித்தளை, வெண்கலம், ஸ்படிகம், வெள்ளி, தாமிரம், தங்கம், பிளாட்டினம் என்று எதிலே செய்தாலும் பிள்ளையார் பிள்ளையார் தான். தங்கத்தில் செய்த பிள்ளையார் உயர்வு, களிமண்ணில் செய்த பிள்ளையார் மட்டம் என்று நினைப்பது நமது அறியாமை என்று நாம் உணர்வோமா ?

    கிராம அல்லது வனதேவதை வழிபாடு மிக மிக உயர்ந்த ஒன்றே, அது மூட நம்பிக்கை என்று கருதுவது நமது தவறே ஆகும். வனதேவதை வழிபாடு மூட நம்பிக்கை என்றால், எந்த மதத்தினர் செய்யும் எவ்விதமான வழிபாட்டினையும் மூட நம்பிக்கை என்று விமரிசிக்க முடியும். இதெல்லாம் போகட்டும் கடவுள் நம்பிக்கையை கேலி செய்து கொண்டு , பெரியாருக்கு சிலைவைத்து ஆண்டுதோறும் சமாதிக்கும், சிலைக்கும் மலர் வளையம், மலர் மாலைகள் வைத்து வழிபடும் சடங்கை விட பெரிய மூடநம்பிக்கை உலகில் எது இருக்கிறது.?

    திருப்பதிக்கு போகும் வழியெல்லாம் – அதாவது கீழ்த்திருப்பதியிலிருந்து திருமலை என்று சொல்லப்படும் மேல்திருப்பதிக்கு போகும் வழியில் வனத்துறையினர் ஏராளமான பெயர்ப்பலகைகள் வைத்துள்ளனர். அவற்றில் எல்லாம் வன வெங்கடேஸ்வரலு, விருக்ஷ வெங்கடேஸ்வரலு என்று எழுதியிருப்பதை அனைவரும் காணலாம். இறைவன் தான் மரம், செடி , கொடி, விலங்குகள், மனிதன், பஞ்ச பூதங்கள் என்று அனைத்து வடிவங்களிலும் இருக்கிறான் என்பதே உண்மை. வனம் இறைவனே என்னும்போது வனதேவதையும் இறைவனே. அது மூட நம்பிக்கை என்று சொல்லுவது, நமது அறிவு மேலும் விரிவடைய வேண்டும் என்பதை மட்டுமே காட்டுகிறது. இதையே பாரதி எங்கெங்கு காணினும் சக்தியடா என்றான். வனதேவதை வழிபாடு மிக உயர்ந்த இறை வழிபாட்டின் ஒரு அம்சமே ஆகும்.

  20. Our village in Palakkad is basically Smartha Vaishnavite village but our village temple is a Sastha temple. We did Kumbabishekam a couple of years back.

  21. நான் திருநெல்வேலி சமர்த்த பிராமன வகுப்பை சார்ந்தவன்.

    எனது தாய் வயிற்று குடும்பத்தின் குல தெய்வமும் சாஸ்தாவே.

    அது பழைய திருவிடன்கூர் சமஸ்தானத்தை சார்ந்த கிராமம்.

    அங்கு எங்களது சாஸ்த கோவில் உள்ளது,

  22. ஐயா தஞ்சை கோபாலன் அவர்களின் கிராமதேவதைகள் வழிபாட்டைப்பற்றியக்கருத்து ஏற்புடையது அன்று. ஒரு ஹிந்துத்துவர் இப்படி எழுதுவது வருத்தம் அளிக்கிறது. குலதெய்வங்கள் என்று வணங்கப்படும் தெய்வங்களும், கிராமதேவதைகளும் நம்முடைய முன்னோர் வழிபாட்டோடும். கடந்தகாலத்தில் ஊருக்காக, நாட்டுக்காக தியாகம் செய்த பெரியோரைப்போற்றும் பண்டைய நடுகல் வழக்கத்தின் தொடர்ச்சியாகும்.இன்றைக்கு நாம் பெருந்தெய்வமாக வழங்கப்படும் தெய்வங்கள் பல்வேறு பகுதிகளில் குலங்களில் குடிகளில் வணங்கப்பட்ட தெய்வங்களின் ஒருங்கிணைப்பு என்றும் சொல்லலாம்.
    பல்வேறு வழிபாட்டு முறைகளையும் இருந்த இடம் தெரியாமல் அழித்தொழித்துவிட்டு ஏக இறைவன், ஒரே வழிபாடு என்ற அபிரஹாமிய சித்தாந்தத்திற்கு ஒரு சரியாக மாற்றான நம் பண்பாட்டின் ஒரு சிறந்த பண்பாட்டுக்கூறாகும்.
    வடகிழக்கு மானிலமொன்றில் தற்போது பணியில் இருக்கும் அடியேன் ஒரு சில ஆண்டுகளுக்குமுன் ஒரு ராணுவ முகாமில் இருந்த கோயிலுக்கு சென்றிருந்தேன். அன்று பவுர்ணமியாதலால் சத்ய நாரயண பூஜை நடந்தது. நிறைவாக சத்ய நாராயண சுவாமிக் ஜெய் என்று பண்டிதர்(பூஜாரி) முன்சொல்ல அனைவரும் சொன்னார்கள். அவர் மேலும் சொன்னார் அப்னே அப்னே கிராமதேவதாகி ஜெய். அப்னே அப்னே குலதேவதாகி ஜெய். அடியேனுக்கு அன்று மட்டுமல்ல இப்போதும் கூட அதை நினைக்கின்றபோதும் மெய் சிலிர்க்கிறது. இது தான் பல்வேறு வழிபட்டுமுறைகள், தெய்வங்கள், முன்னோர்கள் இவற்றை அனைத்தும் அரவணைத்து ஏற்றுக்கொள்ளும் பண்பாடே ஹிந்து தர்மம். என்ற உணர்வுக்கு வலுவூட்டியது இந்த நிகழ்ச்சி.

  23. மதிப்பிற்குறிய வ்ருத்தரான ஸ்ரீமான் தஞ்சை கோபாலன் அவர்களுக்கு நமஸ்காரம். அவர்களது பல வ்யாசங்களையும் நான் கருத்துடன் வாசித்து வருகிறேன். அதில் கூறப்பட்ட பல கருத்துக்கள் எனது புரிதல் மேம்பட வழிவகுத்துள்ளன மேலும் எனது ஆன்மீக வாசிப்புக்களை ஊக்குவித்துள்ளன என்றால் மிகையாகாது.

    பின்னும் அபிப்ராய பேதங்கள் கசப்பில்லாது நம்மிடையே பகிரப்பட வேண்டும் என்ற படிக்கு இங்கு பேசப்பட்டுள்ள கருத்தில் உள்ள அபிப்ராய பேதத்தையும் பொதுவில் பக்தி என்பது இந்த தளத்தில் பேசப்படும் விதத்தையும் இங்கு என் புரிதலின் பாற்பட்டு பகிர்ந்து கொள்கிறேன்.

    ஒரு புறம் பக்தி என்ற கோட்பாடு பகவத் கீதை, பாகவதம், நாரத மற்றும் சாண்டில்ய பக்தி சூத்ரங்கள், பக்தி ரசாம்ருத சிந்து, ஹரிபக்தி விலாசம் போன்ற க்ரந்தங்களில் சொன்ன படிக்கு அவதானிக்கப்படாது கிட்டத்தட்ட பச்சைமிளகாயை கடித்து விட்ட ஒருவர் நான் சாப்பிட்ட மாம்பழம் மிகவும் காரமாக உள்ளது என்று சொல்லும் படிக்கான கருத்துக்கள் பகிரப்படுகின்றன. அது போன்றே சடங்குகள் பற்றிய அடிப்படைப் புரிதல் கூட இல்லாது சடங்குகள் பற்றிய மட்டற்ற எதிர்மறைக் கருத்துக்கள். பூர்வ மீமாம்சகர்கள் தான் முதன் முதலில் பௌத்தம் என்ற கருத்தாக்கத்தை தர்க்க பூர்வமாக சப்த நித்யத்வாதமூலம் எதிர் கொண்டனர் என்றாலும் பூர்வ மீமாம்சகர்கள் என்றால் ஏதோ சடங்கில் ஆரம்பித்து சடங்கில் முடிந்து விடும் கருத்தாக்கம் என்று கட்டமைக்கப்படும் சித்திரங்கள். ஏதோ சடங்குகளும் பக்தியும் காலம் சார்ந்த மரபுகளும் மட்டும் ஹிந்து மதத்தை வீழ்த்துவது போல ஒரு தவறாகக் கட்டமைக்கப்படும் பிம்பம்.

    இது இங்கு தாங்கள் பகிர்ந்த கருத்துடன் சம்பந்தப்படாதது. ஆயினும் பக்தி பற்றி புரிதலற்ற பார்வையுடன் பக்தி என்ற கோட்பாடு (கூடவே சடங்குகளும் மரபுகளும்) போதையூட்டும் மற்றும் சமூஹத்திற்குப் பயனளிக்காத கருத்து என்ற த்வனியில் பொதுவில் மற்றும் சில மூத்த எழுத்தாளர்களாலும் பகிரப்பட்ட கருத்துக்களுடன் வேறுபட்டு இந்த கருத்து பகிரப்படுகிறது.

    மாறாக ஹிந்துஸ்தானத்தில் இஸ்லாமிய வெறித்தனத்தை அரசியல் அஹிம்சா வ்யாதிகள் கையாண்ட விதத்தில் ஹிந்துக்கள் அடைந்த பின்னடைவு என்பது அளவிட முடியாதது.

    அதற்கு எதிராக சைதன்ய மஹாப்ரபு, அத்வைதாசார்யர், ஹிந்துவாகப் பிறந்து முஸல்மாணிய ராஜனுக்குத் தொண்டூழியம் புரிந்து கிட்டத்தட்ட முஸல்மானாக மாறி பின்னர் மஹாப்ரபுவால் மீட்டெடுக்கப்பட்ட ரூப சனாதனர்கள், முஸல்மானாகப் பிறந்து பின்னர் அத்வைதாசார்யரால் ஹிந்துவாக மாறி ஹிந்துவாக ஏற்கப்பட்டு ஒளிவீசிய ஹரிதாசர் என்ற மஹான், ரஹீம், ரஸ்கான், கபீர், மீரா போன்ற பக்திமான் கள் பக்தியின் மூலம் இஸ்லாமிய வெறித்தனத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்ததும் அன்றி ஹிந்துக்களை காலத்துக்கு ஒவ்வாத கட்டுப்பட்டித் தனத்தில் இருந்து வெளியே கொணர்ந்து ஜாதி மற்றும் மதம் கூட சாராது மனிதர்களை இறைவனுடைய குழந்தைகள் என்ற கருத்துருவாக்கத்தில் இணைக்கும் பெரும் கார்யத்தைச் செய்தனர் என்றால் மிகையாகாது. இன்றைக்கு வங்காளத்தில் ஹிந்துக்கள் இன்றைய அளவில் மிஞ்சியுள்ளார்கள் என்றால் அதற்கு அங்கிருந்த பக்திமான் களின் பங்களிப்பு தான் மிக முக்ய காரணம் என்றால் மிகையாகாது.

    தாங்கள் பக்தியில் காணப்படும் மூடப்பழக்கவழக்கங்கள் பற்றி பொதுவான கருத்துப் பகிர்ந்துள்ளீர்கள். ஆயினும் சபரிமலையில் புழங்கும் சம்ப்ரதாயங்களில் குறிப்பாகத் தாங்கள் ஒப்புக்கொள்ளா சம்ப்ரதாயம் எது என்று பகிராது மிகவும் தவறான முறையில் ஓணான் மீது கல்லெறிதல் போன்ற இழிவான செயலை ஒப்புமையில் கொடுத்து மூடபக்தியை எதிர்மறையாக விமர்சித்துள்ளீர்கள். அது போன்றே நாட்டார் வழிபாடுகளிலும்.

    மூடப்பழக்க வழக்கங்கள் பக்தியில் மட்டும் தான் காணக்கிட்டுகிறதோ? மிகவும் வ்யாபாரமயமான உலகில் யோகம் மெய்ஞானம் என்று பயிற்றுவிக்கப்படும் விஷயங்களில் மௌட்யம் நம் கண்களில் காணக்கிட்டுவதில்லை போலும். எந்த சாஸ்த்ரங்களிலும் காணப்படாத படிக்கு புதிது புதிதான பெயர்களில் யோகம் மற்றும் ஞான சாஸ்த்ரங்களை எத்தனை எத்தனை பேர் அதிகம் இவற்றில் பரிச்சயமில்லாத ஜனங்களுக்கு தவறான முறையில் போதனை செய்து வருவதைக் காண்கிறோம். இவற்றை யாரும் விமர்சனம் செய்து நான் பார்த்ததில்லை.

    பயிலும் மற்றும் பயிற்றுவிக்கும் அன்பர்களிடையே பயிற்சிக்கான விஷயத்தில் நேர்மை மற்றும் ஆர்ஜவம் இருந்தால் இது போன்ற பிறழ்தல்களில் சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கும். ஆர்ஜவம் இல்லாவிடத்தில் அது பக்தியாக இருந்தாலும் யோகமாக இருந்தாலும் ஞான சாஸ்த்ரங்கள் பயிலுவதாக இருந்தாலும் பிறழ்வுகள் கண்டிப்பாக இருக்கத் தான் செய்யும்.

    விரிவாகப் பேச வேண்டிய விஷயம். ராமாயணம் பற்றிய ஒரு வ்யாசத்தின் நிலைப்பாடுகளில் எனது கவனம் இருப்பதால் தற்சமயம் இத்துடன் அமைகிறேன்.

  24. \\ இந்து மதத்தின் எல்லா வழிபாட்டு நெறிகளிலும் “குருட்டு நம்பிக்கை” (மூட என்ற சொல்லைத் தவிர்க்கிறேன்) என்று சொல்லக் கூடிய அம்சங்கள் இருக்கின்றன. \\

    agree with this stand to a great extent.

  25. நமது தெய்வத் திரு வடிவங்கள் எல்லாமே மனிதர்களின் சாதாரண பிரக்ஞையில் பிறந்து ,நூற்றாண்டு காலப் போக்கில் வேற்று மத பாதிப்பில் பரிணாம ” வளர்ச்சி” அடைந்தவை என்பது மேற்கத்தியப் பார்வை மட்டுமே.ஆனால் இதுவே இன்று பரவலாக படித்த இந்துக்களிடையே நிலவும் பார்வை. இதை நானும் ஏற்றுக் கொண்டது உண்டு ஒரு காலத்தில் . என் வீட்டில் சிறு வயதில் இருந்தே இது போன்ற நீண்ட விவாதங்கள் நடப்பதுண்டு.

    ஆனால் உண்மை என்ன?

    யோசித்துப் பார்த்தால் யோக சாஸ்திரம், மந்திர , தந்திர , யந்திர சாஸ்திரம்.இதன் அடிப்படையில் எழுந்த நூல்கள், இத்துறை வல்லுனர்கள் எதையும் மேற்கத்திய இந்தியவியலாளர்கள் பொருட்டாக மதிப்பதில்லை. மேலே சொன்னவை திரு ராஜீவ் மல்ஹோத்ரா சொல்வது போல மேற்கின் பெருவெளியில் கொஞ்சம் ஜெரிக்கப் பட்டும் விட்டன. இவை ஹிந்து மதத்திற்கு சம்பந்தப் படாதவை என்று பிரசாரமும் செய்யப் படுகிறது.

    இன்ன தெய்வத்தின் இந்த கரத்தில் இந்த முத்தரை, அல்லது இன்ன ஆயுதம் என்ற சில்ப விதி அந்த தெய்வத்தின் மூல மந்திர அட்சரங்களுடன் தொடர்பு கொண்டது என்று மந்திர யோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் சொன்னார்.

    இந்தியரோ, அமெரிக்கரோ ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மூல மந்த்ரத்தை முறைப்படி சொல்லி சித்தி [siddhi ] அடையும் போது அவர்கள் பெரும் அனுபவம் ஒன்றாகவே இருக்கும் என்றும் கூறினார்.
    ஆகாஅய்யப்ப மூல மந்தரம் சொல்லும் எவரும் காணும் ஐயப்ப வடிவத்தின் தரிசனம் அதீத பிரக்ஞை நிலையில் ஒன்று போலவே இருக்கும். அது மனிதர்களின் சாதரண பிரக்ஞையில் உண்டானது அல்ல.

    யோக பட்டம் அணிந்த ஐயனின் திருவுருவம் யோக நரசிம்மருக்கு தான் மிக அருகில் உள்ளது,வித்யாசம் இதுவே-ஸ்ரீ யோக நரசிம்மர் பாதங்கள் மட்டும் ஒன்றின் குறுக்கே ஒன்றாக இருக்கும். [ crossed posture] அய்யன் நைஷ்டிக பிரம்மசாரியானதால் திருப்பாதங்கள் நேராக இருக்கும்.

    எந்த தெய்வத் திருவுருவதுக்கும் உக்ர மற்றும் சாந்த ரூபங்கள் உண்டு. முறையே துஷ்ட நிக்ரஹ , சிஷ்ட பரிபாலன வேலைகளை செய்ய. முன்னதை செய்தால் தான் பின்னதை சாதிக்க முடியும்.
    அவலகொடிஸ்வரருக்கும் ஹிந்து மதத்தை அடியொற்றியே ஒரு உக்ர ரூபமும் உண்டு என்கிறார்கள்.

    திபெத்திய பௌத்தத்தில் தர்மபாலர்கள் என்ற தண்டிக்கும் உக்ர தேவதைகளும் உண்டு. ஹிந்து தெய்வங்களை மிதிக்கும் நிலையில் உள்ள த்ரைலோக்ய விஜய போன்று. இது ஒரு கால கட்டத்திய அவர்களது மனநிலையின் வெளிப்பாடே. சில மேற்கத்திய பௌத்தர்களை இவ்வடிவங்கள் தற்போது கவர்ந்து இழுக்கின்றன.

    அமித்திர தெய்வங்கள் மற்றும் மித்ர தெய்வங்களைப் பற்றி வல்லமை வாய்ந்த அரசர் அசோகர் சொல்வது மேலே சொன்னவற்றோடு பொருத்திப் பார்க்கப் பட வேண்டியதே.

    நான் மதிக்கும் வேறு ஒருவரும் , முதல் முதலில் தெய்வமாக வணங்கப் பட்ட
    [ ஆக்கபபட்ட] மனிதன் முருகனே , ராமன் அல்ல என்று எழுதியிருந்தார். முருகன் , ராமன் என்று ஆத்திகர்கள் சிலர் விவாதம் வேறு செய்து கொண்டிருந்தார்கள்! ஆச்சர்யமாக இருந்தது. இதுவே இடது சாரிகளின் வெற்றி.

    தினம் படிக்கும் சஷ்டி கவசம் ஒரு எளிய தீக்ஷை தேவைபடாத மந்திர கவசம் அதை படித்து உள்ளில் முருக தரிசனம் பெற்ற எளிய தாய்மார்களை நான் அறிவேன். முருக வடிவமும் பலப் பல காலக்கட்டங்களில் பலரது சாதாரண பிரக்ஞையில் உருவானது அல்ல.

    பண்டைய கலாச்சாரங்களின் தொல்லியல் வளம் , அவர்கள் வரலாறு எல்லாமே அவர்களை ஆக்கிரமிப்பு செய்த மேற்குலக கலாச்சாரங்களின் கையில். அன்று ஐரோப்பியர்கள். இன்று அமெரிக்கர்கள். அவர்களது இந்திய நேருவிய அரசாங்க பிரதிநிதிகள்.

    அப்படியிருக்கையில் தெய்வ வடிவங்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் இந்த முக்கிய கருத்தாக்கத்தை [ மந்திர, யோக சாஸ்திர கோணங்கள்-அவற்றை அனுசரிப்போர்-எளிய பூசாரிகள், , சாதனா மார்க்கம் பின்பற்றுவோர் ] கணக்கில் கொண்டால் மட்டுமே தான் ஒரு முழுமையான பார்வை கிடைக்கும் .

    சாய்

  26. அன்புக்குறிய ஜடாயு,
    ஐயப்ப வழிபாட்டுக்கும் மஹாயான பௌத்தத்தர்களால் வழிபடப்படும் பத்மபாணி வழிபாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக யூகிக்கிறீர்கள். இதில் அடியேனுக்கு ஒரு சிறு ஐயம் தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் மஹாயான பௌத்தம் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள், தரவுகள் உள்ளனவா. இலங்கையில் காணப்படும் தேரவாத பௌத்தம் ஹீனயாண சமயம் என்பது மட்டும் தெரிகிறது. தென்னகத்தில் காணப்படும் ஜைனசமயம் திகம்பர சமணம் என்பதற்கு வழிபாட்டில் உள்ள ஏறாழமான ஜினாலயங்கள் சான்று பகர்கின்றன.
    விக்ரஹாராதனம் ஜைனர்களிடமிருந்து வைதீகர்கள் பின்பற்றிய வழிபாட்டுமுறை என்று ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சத்யார்த்தப்ரகாசத்தில் கூறுகிறீர். சுவாமி விவேகானத்தரோ அது மஹாயான பௌத்தத்திலிருந்து வைதீக சமயிகள் பெற்றது என்கிறார். சிந்து சமவெளி அகழ்வாய்வுகள் அங்கே வழிபாட்டில் இருந்த லிங்கம், முத்திரைகளை காட்டுகின்றன. தங்களிடம் ஏதேனும் முடிவுகள் இவை குறித்து உள்ளனவா?

  27. அன்பின் சிவஸ்ரீ ஐயா,

    தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் மகாயான பௌத்தமும் பெரிதும் செழித்திருந்தது. மணிமேகலையில் கூறப் படும் பௌத்தமும் மகாயானம் தானே? பௌத்தமும் தமிழும் (மயிலை சீனி.வேங்கடசாமி) நூலில் இதற்கான இலக்கிய சான்றுகள் உண்டு. மற்ற வரலாற்று ஆதாரங்கள் (கோயில்கள், கல்வெட்டுகள்.. ) தென்னிந்திய வரலாறு குறித்த ஆங்கில நூல்களில் இருக்கலாம்.

    இதில் நான் சான்றாகத் தந்துள்ள எஸ்.ராமச்சந்திரன் கட்டுரையிலேயே ஒரு தரவு உள்ளது –

    // கேரள மாநிலத்தைப் பொருத்தவரை, பெளத்த சமய மரபுகள் வைதிக இந்து சமய வழிபாட்டு நெறிகளுக்குள் ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ளப்பட்ட நடைமுறை கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. தென்கேரளப் பகுதியைச் சேர்ந்த வேணாட்டு ஆய் மன்னர்களின் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையத்துச் சாசனம் பெளத்த சமயத் தொடர்புடையதாகும்.3 இச்செப்பேடு, “சுத்தோதனன் மகனான புத்த பகவான் மூன்று உலகங்களையும் குறைவின்றிக் காப்பாற்றுவாராக” என்றும், “பெளத்த தர்மம், பெளத்த சங்கம் என்பவை பூமிதேவியின் கண்களாகத் திகழ்க” என்றும், “அமுதைப் பொழியும் நிலவொளிக்கு ஒப்பான அவலோகித போதிசத்வரின் கருணைப் பார்வை குறைவற்ற செல்வத்தை அருளட்டும்” என்றும் துதிக்கிறது. இச்செப்பேடு திருமூலபாதத்து படாரர் எனப்பட்ட இறைவனுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையைப் பதிவுசெய்துள்ளது. திருமூல பாதத்து படாரர் என்பது ஸ்ரீமூலவாஸம் என்ற தலத்தில் எழுந்தருளியிருந்த, லோகநாதர் என அழைக்கப்பட்ட போதிசத்வ அவலோகிதேஸ்வரரைக் குறிக்கும்.//

    https://www.sishri.org/sabariprint.html

  28. பொருத்தமான ஆதாரங்கள் அருமையான பதில் ஸ்ரீ ஜடாயுவுக்கு நன்றி. மணிமேகலையில் புத்த பீடிகையை மணிமேகலை வணங்கினாள் என்று படித்த நினைவு அது ஹீனயாணமாக இருக்குமோ என்று நினைத்துவிட்டேன்.

  29. ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் உங்களுடைய பல ப்ரச்னங்களில் ஒன்றுக்கு உத்தரமளித்து தெளிவு படுத்தியுள்ளார்.

    நான் இப்போது விட்டுப்போன ப்ரச்னங்களுக்கு உத்தரமளிக்க விழைந்து உங்களை படுத்தப்போகிறேன். அல்லது குழப்பப்போகிறேன். அதாவது எனக்கு அரைகுறையாகத் தெரிந்த விஷயங்களின் வாயிலாக. என் தகவல் தவறு என்றால் விபரமறிந்தவர்கள் திருத்தலாம்.

    \\\ ஐயப்ப வழிபாட்டுக்கும் மஹாயான பௌத்தத்தர்களால் வழிபடப்படும் பத்மபாணி வழிபாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக யூகிக்கிறீர்கள். \\\

    சரியாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் வெளிப்படையாகக் காணப்படும் சாம்யதைகள் (ஒருமைப்பாடுகள்?).

    ஆனால் அதை மட்டும் வைத்து — இந்த விஷயம் இங்கிருந்து அங்கு போனது அல்லது அங்கிருந்து இங்கு வந்தது — என்பது போன்றன முடிவுக்கு இட்டுச் செல்லாது. மாறாக விவாதாஸ்பதமானதாகவே இருக்கும்.

    \\\ இலங்கையில் காணப்படும் தேரவாத பௌத்தம் ஹீனயாண சமயம் என்பது மட்டும் தெரிகிறது. \\\

    ம்ஹும்…..இன்னும் அதிகமான குழப்பங்கள்.

    ஹீனயானம் என்பதை விக்ரஹ உபாசனமற்றது என்று கொண்டால் தவறு என்பது எனக்குத் தெரிந்த விபரங்கள் படி.

    தேராவாத பௌத்தத்தில் விஷ்ணு உபுல்வன் (உப்பலவன்ன – பாலி – உத்பலவர்ண – சம்ஸ்க்ருதம் – நீலத்தாமறை நிறமுடையான்) என்ற தர்மபாலராக உபாஸிக்கப்படுகிறார். மேலதிகமாக

    https://www.virtualvinodh.com/religion/233-vishnu-in-buddhism

    லங்காபுரியில் வசிக்கும் ஸ்ரீ மயூரகிரி ஷர்மா அவர்கள் மேலதிகமாய்த் தகவல் பகிர இயலும்.

    கரந்த வ்யூஹ சூத்ரம் வாசித்தபடி மஹாபலி, சிவன், உமா, யமன் போன்றோர் பௌத்தத்தில் எப்படி பார்க்கப்படுகின்றனர் என்று பார்த்திருப்பீர்கள்.

    தேராவாதம் மஹாயன ரஹிதமானது என்பதும் முழுதும் சரியல்ல

    \\\ The Mahāvihāravāsins reject the Mahāyāna and practice the Hīnayāna, while the Abhayagirivihāravāsins study both Hīnayāna and Mahāyāna teachings and propagate the Tripiṭaka. \\\

    https://en.wikipedia.org/wiki/Theravada

    ஒன்றினில் இருந்து ஒன்றைப் பிரித்து பளிச்சென இது அது என நிர்த்தாரணம் செய்வது கடினம்

    சம்ஸ்க்ருத Prosody என்ற விஷயத்தை மட்டிலும் – அதில் உள்ள ருசியை மட்டிலும் — ஆதாரமாக வைத்து நான் அணுகி அறிந்த விஷயங்கள் இவை. பகிர்ந்த வரைக்கும் சரியானவை என்பது என் புரிதல்

    \\ விக்ரஹாராதனம் ஜைனர்களிடமிருந்து வைதீகர்கள் பின்பற்றிய வழிபாட்டுமுறை என்று ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சத்யார்த்தப்ரகாசத்தில் கூறுகிறீர். சுவாமி விவேகானத்தரோ அது மஹாயான பௌத்தத்திலிருந்து வைதீக சமயிகள் பெற்றது என்கிறார். \\

    பௌத்தம் என்ற சமயம் புழக்கத்தில் வருவதற்கு முன் பாஞ்சராத்ரத்தை ஆதாரமாய்க் கொண்ட பாகவத மதம் (வைஷ்ணவம்) இருந்திருக்க வேண்டும் என்பது திண்ணம். இந்த மதத்தில் விக்ரஹாராதனம் இருந்தது வெள்ளிடைமலை.

    இவை என் புரிதலின் படி.

  30. அன்பார்ந்த ஸ்ரீமான் சாய்

    \\\ நமது தெய்வத் திரு வடிவங்கள் எல்லாமே மனிதர்களின் சாதாரண பிரக்ஞையில் பிறந்து ,நூற்றாண்டு காலப் போக்கில் வேற்று மத பாதிப்பில் பரிணாம ” வளர்ச்சி” அடைந்தவை என்பது மேற்கத்தியப் பார்வை மட்டுமே. \\\

    மிகவும் சரியான நோக்கம்.

    மந்த்ர சாஸ்த்ரம் என்பது தனியே பூர்ணமாக உள்ளது. வேறெந்த மானுஷ ப்ரக்ஞையையும் சாராது. தெய்வத் திருவடிவங்கள் மனித ப்ரக்ஞையில் பரிணாமம் அடைந்தவை என்பதை இந்த ஆதாரத்தைக் கொண்டால் நிர்தாக்ஷண்யமாக மறுதலிக்க வேண்டும்.

    \\ ஹிந்து தெய்வங்களை மிதிக்கும் நிலையில் உள்ள த்ரைலோக்ய விஜய போன்று. \\\

    த்ரைலோக்ய விஜய மந்த்ர கவசம் வைதீக புராணத்தின் ஒரு அங்கமும் கூடவாகுமே.

    ஹிந்து தெய்வங்களை மிதிக்கும் நிலையில் உள்ள த்ரைலோக்ய விஜய பௌத்த மூர்த்தி என்பது நான் அறியாத விஷயம்.

    பல மூர்த்திகள் வைதிகம் – பௌத்தம் இரண்டிலும் காணக்கிட்டுகின்றன

    வைதிகம் – தாரா – பௌத்தம் – ஆர்யதாரா

    வாராஹி – வஜ்ரவாராஹி
    பைரவ – வஜ்ரபைரவ

    சிலவே உதாரணங்கள்.

    ஒற்றுமை என்பது பெயரில் காணப்பட்டாலும் உபாசனா பத்ததி, உபாசனா பலம் போன்ற விஷயங்களில் எண்ணிறந்த வேற்றுமைகளும் காணக்கிட்டும்.

    \\ ஹிந்து தெய்வங்களை மிதிக்கும் நிலையில் உள்ள த்ரைலோக்ய விஜய போன்று. இது ஒரு கால கட்டத்திய அவர்களது மனநிலையின் வெளிப்பாடே. சில மேற்கத்திய பௌத்தர்களை இவ்வடிவங்கள் தற்போது கவர்ந்து இழுக்கின்றன. அமித்திர தெய்வங்கள் மற்றும் மித்ர தெய்வங்களைப் பற்றி வல்லமை வாய்ந்த அரசர் அசோகர் சொல்வது மேலே சொன்னவற்றோடு பொருத்திப் பார்க்கப் பட வேண்டியதே.\\

    கரந்தவ்யூஹ சூத்ரங்களை வாசித்துப் பார்க்கையில் புரிகிறது.

    ஆர்யதாரா அஷ்டோத்தரத்தில் பௌத்த தாராவை “வேதமாதா” எனவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளமை காணக்கிட்டுகிறது. யூகிக்க முடிகிறது. 🙂

    வேதாந்திகள் மற்றும் பௌத்தர்களிடையே தத்வ விசாரங்கள் தொடர்கின்றன என்பது தாங்கள் அறிந்திருக்கக் கூடும். சமீபத்தில் அப்படி ஒரு விசாரத்தினூடே விக்ரஹ ஆராதனையை இழித்து பௌத்தர் மத்தியில் ஒரு வேதாந்தி ப்ரசங்கம் செய்ய மற்றொரு வேதாந்தி அதைக் காட்டமாக மறுதலித்ததும் — விக்ரஹ ஆராதனை பௌத்தர்கள் மத்தியில் இகழப்பட்டது பௌத்தர்களுக்கே ஜீர்ணமாகாததும் — மாறாக அவ்வாறு இகழ்வது தர்மபாலர்களின் கோபத்துக்கு ஹேதுவாகும் என பௌத்தர்கள் எண்ணியதைப் பற்றியும் தாங்கள் வாசித்திருக்கலாம்.

  31. ம்…..குழப்பத்தில் குழப்பம்

    ஹீனயானம் விக்ரஹ உபாசனமற்றது என்பது சொல்ல வரவில்லை

    தேராவாதம் விகரஹ உபாசனமற்றது என்றால்…. என்று இருக்க வேண்டும்.

  32. அன்பார்ந்த ஸ்ரீ கிருஷ்ணகுமார் அவர்களே,

    “வேதாந்திகள் மற்றும் பௌத்தர்களிடையே தத்வ விசாரங்கள் தொடர்கின்றன என்பது தாங்கள் அறிந்திருக்கக் கூடும். சமீபத்தில் அப்படி ஒரு விசாரத்தினூடே விக்ரஹ ஆராதனையை இழித்து பௌத்தர் மத்தியில் ஒரு வேதாந்தி ப்ரசங்கம் செய்ய மற்றொரு வேதாந்தி அதைக் காட்டமாக மறுதலித்ததும் — விக்ரஹ ஆராதனை பௌத்தர்கள் மத்தியில் இகழப்பட்டது பௌத்தர்களுக்கே ஜீர்ணமாகாததும் — மாறாக அவ்வாறு இகழ்வது தர்மபாலர்களின் கோபத்துக்கு ஹேதுவாகும் என பௌத்தர்கள் எண்ணியதைப் பற்றியும் தாங்கள் வாசித்திருக்கலாம்.”

    https://www.kamakotimandali.com/blog/index.php?p=1346&more=1&c=1&tb=1&pb=1

    இங்கே உள்ள கட்டுரையைக் குறிப்பிடுகிறீர்கள் என எண்ணுகிறேன்.

    எனக்கும் படிக்கையில் தர்மபாலர்கள் நமது தெய்வங்களின்உக்ர வடிவங்களை ஒத்தவை என்று தோன்றியது.

    https://www.kamakoti.org/kamakoti/brahmandapurana/bookview.php?chapnum=16

    இங்கே ஒரு த்ரைலோக்ய விஜயர் மந்த்ரம் குறிப்பிடபடுகிறது- ]- சஷ்டி கவசம் போல ஒவ்வொரு அங்கத்துக்கும் ரக்ஷை வேண்டுகிறது.

    . https://huntington.wmc.ohio-state.edu/public/index.cfm?fuseaction=showThisDetail&ObjectID=4297&detail=largeZoom

    மேலுள்ள இணைப்புகளில் அதே பெயரில் திபெத்திய பௌத்த வடிவங்களைக் காணலாம்.
    இதோ வஜ்ரபாணி
    https://www.univie.ac.at/rel_jap/an/Ikonographie:Myoo/Vajrapani
    https://www.kamakotimandali.com/blog/index.php?p=895&more=1&c=1&tb=1&pb=1
    மேலே மற்றொரு கட்டுரை.
    இவ்வடிவங்களுக்கு மேற்கில் நல்ல மார்க்கெட் போலும். -ஈ-பெயில் [e bay ] நிறையக் காணக் கிடைக்கின்றன.

    ‘மந்த்ர சாஸ்த்ரம் என்பது தனியே பூர்ணமாக உள்ளது. வேறெந்த மானுஷ ப்ரக்ஞையையும் சாராது. தெய்வத் திருவடிவங்கள் மனித ப்ரக்ஞையில் பரிணாமம் அடைந்தவை என்பதை இந்த ஆதாரத்தைக் கொண்டால் நிர்தாக்ஷண்யமாக மறுதலிக்க வேண்டும்.”

    உண்மை . சில்ப சாஸ்திரம் கூட மந்திர சாஸ்திரத்தின் உறைந்த நிலையின் , அதாவது வடிவத்தின் விதி முறைகளே. இவை கணக்கில் எடுக்கப் படுவதில்லை.

    ” விக்ரஹ” வழிபாடு என தவறாக அழைக்கப் படும் முறைப் படுத்தப் பட்ட மூர்த்தி வழிபாடு ஹிந்து மதத்திற்கு வெளியில் இருந்து வந்தது எனும் போது வேதம் வேறு-மந்திர-தந்திர, என்ற சாஸ்த்ரங்கள் வேறு -ஆகமம் , சில்பம் வேறு வேறு , என பல சொல்ல முடிகிறது. 🙂

    மகாபாரத காலம் பௌத்த காலத்திற்கு மிக முற்பட்டது -அதில் ஸ்ரீ ருக்மிணி கிருஷ்ணருக்கு செய்தி அனுப்பி விட்டு தேவி கோயிலுக்கு [ குல தெய்வம் கான்செப்ட் வேறு !] செல்கிறாள். கோயில், ” விக்ரஹ” வழிபாடு!

    மந்திர சாஸ்திரம் , மற்றும் சில்ப துறை சாஸ்திர வல்லுனர்கள், ஸ்தபதிகள் , பூசாரிகள் போன்றோர் அத்துறை வல்லுனர்களாக கருதப் பட்டால் சரியான விவரங்கள் கிடைக்கும்.

    “ஒற்றுமை என்பது பெயரில் காணப்பட்டாலும் உபாசனா பத்ததி, உபாசனா பலம் போன்ற விஷயங்களில் எண்ணிறந்த வேற்றுமைகளும் காணக்கிட்டும்”

    ஆமாம் .உண்மை தான்.
    சாய்

  33. அன்பார்ந்த ஸ்ரீமான் சாய்,

    பௌத்தத்திலிருந்து அல்லது ஜைனத்திலிருந்து வைதிக வழிபாட்டுமுறைகளில் விக்ரஹாராதனம் அல்லது வேறு விஷயங்கள் வந்தன என்பது extremely subjective and broadly unsubstantiated view என்றே நானும் கருதுகிறேன்.

    இங்கே பேசப்படும் விஷயத்துடன் சம்பந்தம் இருப்பதால், சம்பந்தமுள்ள இன்னொரு வ்யாசத்தையும் இங்கு நினைவு கூர்கிறேன்.

    https://www.kamakotimandali.com/blog/index.php?p=470&more=1&c=1&tb=1&pb=1

    குறிப்பாக விஷயத்தை அணுகுபவர் எந்த சமயத்தை ஒழுகுபவர் என்பதை வைத்து அவர் பார்வை அமையும் என்ற நோக்கு அருமையாக இந்த வ்யாசத்தில் பகிரப்பட்டுள்ளது.

    \\\ That Hindu tantra may have influenced Buddhist tantrayAna or vice- versa is not the point here. And anyway, so far whatever has been written about this so called influence by one or the other has always depended on which school the writer belonged to. If he is a Hindu non-Tantric (who felt uneasy with Hindu Tantra), he felt that Tantra come into Hinduism through Buddhism. If he was a Hindu Tantric, he felt that Hindu Tantra is found in the Vedas and the Buddhist copied it. If he was a Non-Tantric Buddhist, again he wrote that the later Buddhist copied Tantra from Hinduism and so on. However, we must understand that all these are hypothesis and no solid historical proof can be given to prove any of these. There are other hypotheses too about vajrayAna but that is besides the topic. \\\

    பௌத்த சமயம் வைதிக சமயத்தை நிராகரிக்கும் சமயம். வேதத்தை நிராகரிக்கும் சமயம். ஆனால் வஜ்ரயான பௌத்தத்தில் ஆர்யதாரா அஷ்டோத்தரசதநாமத்தில் கீழ்க்கண்ட ச்லோகம் பார்க்கலாம்

    ச்லோகம் எண் 35

    रक्षणी मोहनी शान्ता कान्तारी द्रावणी शुभा।

    ब्रह्माणी वेदमाता च गुह्या च गुह्यवासिनी॥ ३५॥

    ரக்ஷணீ மோஹனீ சாந்தா காந்தாரீ த்ராவணீ சுபா
    ப்ரம்ஹாணீ வேதமாதா ச குஹ்யா ச குஹ்யவாஸினீ

    வேதத்தை நிராகரிக்கும் சமயத்தில் உபாஸிக்கப்படும் ஆர்யதாராவின் ஸ்தோத்ரத்தில் பௌத்த தாராதேவி *வேதமாதா* எனக்குறிப்பிடப்படுவது *மித்ர அமித்ர* விஷயத்தை புரிய வைக்கிறது 🙂

    *லே* நகரத்துக்கு அருகில் பல பௌத்த மடாலயங்களுக்கும் சென்றுள்ளேன். பௌத்த லாமாக்களுடன் உரையாடியுள்ளேன். மிகவும் ப்ராசீனமான ஆல்சி மடாலயத்தில் அவலோகிதேஸ்வரர், மஞ்சுஸ்ரீ மற்றும் மைத்ரேய பௌத்த மூர்த்திகள் காணக்கிட்டின. லே நகரத்தில் குன்றின் மேல் வஜ்ரைபைரவர் கோவில். லே நகரத்தைச் சார்ந்த என் சாரதி (லே நகர பௌத்தர்) நான் உங்களை காளி மாதா மந்திருக்கு அழைத்துச் செல்கிறேன் என்று இந்த கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

    தாங்கள் பகிர்ந்த உரல்களை கவனித்தேன். தகவல்களுக்கு நன்றி.

    மூர்த்திகளீன் பரிணாம வளர்ச்சி என்ற விஷயம் ஜீர்ணமாகாத விஷயம். அதையும் பகிர்கிறேன்.

  34. தகவல்கள் மற்றும் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அன்பார்ந்த ஸ்ரீ கிருஷ்ணகுமார் அவர்களே
    தாங்கள் கொடுத்த இணைப்பில் இருந்த கட்டுரையையும் படித்தேன்.
    தளத்தினர் “[Not exactly accurate, especially regarding tantra and advaita, but nevertheless a good read]”என்றும் சொல்கிறார்கள். உண்மை தான். பயனுள்ள ஒரு கட்டுரை .

    மாறுபடும் கருத்துகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற முறையில். அதற்கு சம்பந்தமுள்ளதாக தோன்றுவதால் கீழே

    https://www.kamakoti.org/tamil/part1kurall29.htm

    சங்கரரால் வாதில் வெல்லப் பட்ட பின் அமரசிம்மன் [ ஜைனர் ] தன் நூல்களை த்தானே எரிக்கப் போக , விஷயம் அறிந்த சங்கரர் அதைத் தடுக்க விரைகிறார். அமரகோசம் மட்டுமே மிஞ்சுகிறது.

    ” ஸம்ஸ்கிருதத்தில் இருக்கிற பிரசித்தமான அகராதிக்கு அமரகோசம் என்று பெயர்.”
    “அமரசிம்மன் மகாபுத்திமான். இந்த நிகண்டுவைப் பார்த்தால் அறிவில் அவனுக்கு ஈடு உண்டா என்று பிரமிப்பு உண்டாகும். இவன் ஹிந்து அல்ல. அமரசிம்மன் ஒரு ஜைனன். ஜைனர்களில் படிப்பாளிகள் அதிகம். . ”
    “இப்போதுகூட நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களில் ரொம்பப்பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால் வெங்கடரமண ஸ்வாமிக்கு வேண்டிக் கொள்கிறார்கள்” [ :-)]
    ” இந்த ரீதியில்தான் ரொம்பக் காலம் முந்தியே ஹிந்து மதத்தைக் கண்டனம் பண்ணும் கிரந்தங்களை எழுதிய அமரசிம்மன், அவை நன்றாக அமைய
    வேண்டும் என்று, ஹிந்து மதத்தின் வாக்குத் தேவதையையே உபாஸனை செய்தான். ”

    இந்த மேலே சொன்ன வரி சிந்திக்க வைக்கிறது. சில உபாசனா முறைகள் பலருக்கும் தேவைபட்டிருகின்றன. ஏனென்றால் அவை tried and tested methods ,

    சஷ்டி கவசம் பற்றி பின்னொரு முறை பகிர்கிறேன்.

    சம்பு என்ற வார்த்தைக்கும் இந்திரா என்ற லக்ஷ்மியைக் குறிக்கும் வார்த்தைக்கும் அமரம் அளிக்கும் ஸ்தோத்ரம் போன்ற பொருளை சுவாமிகள் குறிபிடுகிறார்.

    படிக்கப் படிக்க சங்கரர் மேல் மட்டுமல்ல ,அமரசிம்ஹன் மேலும் நமக்கு மரியாதையே நிறைகிறது.

    குஹ்ய தாரா- குஹ்ய காளி கருத்தாக்கத்தில் இருந்து தோன்றியதாக இருக்கலாம் .

    தாங்கள் பகிர்ந்த லே பற்றிய தகவல் வியப்பளிகிறது. மூல மந்த்ரங்கள் ஒன்றாக இருக்கலாமா ஒரு வேளை? அல்லது பல ஒற்றுமைகளுடன் இருக்கலாமோ?

    சாய்

  35. தந்திர சாஸ்திரம் வேறு , அது வேத மதத்திற்கு முற்பட்டது [24000 வருஷம் என்று கணக்கு வேறு சொல்கிறறர்கள் ] என்று அதில் திடீர் நாட்டம் கொண்ட மேற்கத்தியர் பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் பலம் நம் அறியாமை மற்றும் மௌனத்தில் தான் உள்ளது .

    எனக்கு தெரிந்த வரை தந்த்ரம் மந்திர யந்த்ரன்களோடு சேர்த்து நோக்க வேண்டியது.
    சாதகனின் சூட்சும சரீரத்துடன் நேரடி தொடர்பு கொள்வது.
    வேதத்தில் தந்த்ரத்தின் மூலம் உள்ளது.சிம்பாலிகான பல விஷயங்கள் மந்த்ரங்கள் ஓதும் போது செய்யப்படுகின்றன.
    பின்னும் ஒரு விஷயம்
    அடி தொழுதல் என்பது பௌத்தக் கோட்பாடே என்பது போல திரு ராமசந்திரன் சொல்வது பொருத்தம் அல்ல .
    [“இந்து சமயத்தில் நிலவுகிற ஸ்ரீபாத வழிபாடு என்பது ஹீனயான பெளத்த மரபினை மூலமாகக் கொண்டதே ஆகும்”].

    வேத கால ஆதாரம் தான் வேண்டும் என்றால் மந்த்ரம் துவங்கும் முன் [ அதை நமக்கு திருஷ்டியில் பார்த்து அளித்த ]த்ரஷ்டா ஆன ரிஷியின் பெயரை சொல்லி தலையை சிம்பாலிக்காக தொட வேண்டும் என கேள்விபப்ட்டிருக்கிறேன்.

    அதாவது அவர் திருவடி நம் தலை மேல் உள்ளதாக பாவிக்க வேண்டும்.

    அடி தொழுதல் மகாபாரதம் முழுக்க வருகிறது. [ தீர்த்த யாத்திரையும் தான் ] ராமாயணத்தின் பாதுகா பட்டபிஷேகமோ அனைவரும் அறிந்ததே.

    வேதம் ,உபநிஷதம் மட்டும் தான் பிரமாணம் , இதிகாசங்கள், புராணங்கள் பிரமாணம் அல்ல என்று எடுத்துகொண்டாலும் கூட,[ அது unsubstantiated பார்வை ஆனால் அறிவுலகுக்கு உவப்பாக இருப்பது ] இன்றைய பண்பாட்டின் பல கூறுகள் வேதத்திலேயே உள்ளன.

    நாம-ரூபம் with attributes [ குணங்கள்] கொண்ட சகுண பிரமம் ஸ்ரீ ருத்ரம், ஸ்ரீ சூக்தம், புருஷ சூக்தம் இவற்றில் காணக் கிடைகிறது. ஹிந்து மதத்தின் ” ரத்ன த்ரயம்” [ மூன்று ரத்தினங்கள் வழிபாடு ] அதன் தொடர்ச்சியே கோயில்கள், வழிபாடுகள் எல்லாம்.

    சாய்

  36. அன்பார்ந்த ஸ்ரீ சாய் அவர்களுக்கு

    தாங்கள்

    http://www.dsbcproject.org

    மேற்கண்ட உரலையும் பார்க்க வேண்டும்.

    விவிதமான ஸூத்ரங்கள்; ஸ்தவங்கள் – பௌத்தபரமாக இருந்தாலும் — சைவ வைஷ்ணவ ஸ்தோத்ரங்களில் காணப்படுகின்ற ஸ்தோத்ரம் அமைக்கும் பத்ததிப்படி முதலில் ஸ்தோத்ரம் அப்புறம் பலச்ருதி என ஒழுங்குமுறையை பல ஸ்தோத்ரங்களில் காணலாம். மிகப்பல அருமையான கத்யங்கள்.

    ஆனால் சைவ வைஷ்ணவ தேவதைகள் அப்படியே இங்கும் பார்ப்பது ஆச்சர்யமளிக்கிறது

    ஸ்ரீமான் கந்தர்வன் அவர்களிடம் இங்கே காணப்பட்ட புதிய ஸ்தவமான ஹயக்ரீவ வித்யா பற்றி சம்சயம்

    https://www.dsbcproject.org/node/3970

    மேற்கண்ட உரலில் ஹயக்ரீவ வித்யா என்ற கத்ய ரூபமான ஒரு மந்த்ரமும் பலச்ருதியும் காணக்கிடைக்கிறது.

    கரந்த வ்யூஹத்தில் மஹாபலி, யமன், சிவன், உமா போன்றோர் அவலோகிதேஸ்வரரை ஸ்துதிப்பது காணக்கிட்டுகிறது.

    ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே

    என அனைத்து வித்யைகளுக்கும் ஆதாரமான ஹயக்ரீவரை எப்படி பௌத்தர்கள் உபாஸிக்கிறார்கள்?

    அதுவும் இந்த வித்யையை அவலோகிதேஸ்வரர் உபதேசிப்பதாக உள்ளது

    इदमार्यावलोकितेश्वरमुखोद्‍गीर्णं

    இதம் ஆர்யாவலோகிதேச்வர முகோத்கீர்ணம்

    ஆனால் கவலை போக்க , பயம் போக்க என்பதுடன் வித்யை பற்றியும் சேர்கிறது

    नमः सर्वसत्त्वव्यसनघातिने। नमः सर्वसत्त्वभयप्रशमनकराय। नमः सर्वसत्त्वभयोत्तारणकराय। नमः सर्वविद्याधिगताय।
    நம: ஸர்வஸத்வ வ்யஸனகாதினே —- நம: ஸர்வ ஸத்வ பய ப்ரசமனகராய — நம: ஸர்வ ஸத்வ பயோத்தாரண கராய — நம: ஸர்வ வித்யாதிகதாய

    என்றெல்லாம் — கடைசியில் நீளமாக பலச்ருதி – எப்படி எப்படி வாசித்தால் என்னென்ன பலன் கிட்டும். கிட்டத்தட்ட இந்த்ராக்ஷி போல

    என் சம்சயம் — ஹயக்ரீவரை பௌத்தர்களும் உபாசித்துள்ளனரா? அதுவும் இஹ சௌக்யங்களை அடைய. பரசௌக்ய ப்ரதமாக இந்த ஸ்தவத்தில் ஏதும் காணக்கிட்டவில்லை. (அல்லது எனக்குப் புரிபடவில்லை).

  37. ஸ்ரீமான் கந்தர்வன், ஸ்ரீமான் சாய்
    அமர சிம்மன் என்ற (பௌத்தன் / ஜைனன்) வாக்சித்திக்காக சரஸ்வதியை உபாசித்தான்
    ஆர்ய அவலோகிதேஸ்வரர் ஹயக்ரீவ வித்யையை உபதேசிக்கிறார்.
    தலை சுற்றுகிறது.
    ஆனால் வைதிக அவைதிக சமயங்களிடையே வெட்டுப்பழி குத்துப்பழி இல்லை என்பதும் புலனாகிறது.
    அவைதிக சமயங்கள் வைதிக சமய தேவதைகளை ஒரு புறம் உள்வாங்குவதும் மறுபுறம் ஏறிமிதிப்பதும் – ஒரே த்வம்சம்.

  38. ஸ்ரீ கிருஷ்ணகுமார் அவர்களே

    தாங்கள் அளித்த சமீபத்து தரவையும் , முந்தைய தரவையும் யோசித்து பார்க்கையில் மேலும் சில எண்ணங்கள் [ தமிழ் ஹிந்து தளத்தினருக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் -வேறெங்கே விவாதிக்க முடிகிறது?]

    *வேதத்தில் இருக்கும் ரூபத்யானம் -மந்த்ரங்கள் குறிப்பிட்ட தெய்வ ரூபங்களின் ஒலி வடிவங்கள் -[ உ-ம் -ஒரு சாஸ்தாவின் பதினெட்டுக்கும் மேற்பட்ட மூல மந்த்ரங்கள் ]-இப்படி பல தெய்வ வடிவங்களின் பல வித ரூபங்கள் [உக்ர, சாந்த , யோக மற்றும் -நாற்கர, எண்கர , பதினெண் கர ] அவற்றிற்கேற்ற மந்த்ரங்கள் -இவை வேத /சனாதன மதத்தின் அம்சங்கள் என்பது தெளிவு.

    மந்திர சாஸ்திரம் ஒரு exacting science . அதற்கு தேவை குரு வழிகாட்டுதல் ,புலனடக்கம் . இடை விடாத பயிற்சி.

    புத்த /ஜைன மதங்கள் உருவான போது இந்த சாஸ்திரத்தின் சக்தியை உணர்ந்தோர் வேத மதத்தின் இக்கூறுகளை உள்வாங்கியிருக்க வேண்டும்.புலனடக்கம் , குரு , சிஷ்ய முறை இதற்கு பெரிதும் உதவி இருக்கலாம்.

    ஜைன அமரசிம்மன்வேத வாக் தேவி உபாசனை செய்து சக்தி பெற்று வேத மதஸ்தர்களை வெல்கிறான். [ தெய்வத்தான் ஆகாதெனினும் …] சங்கரர் விஷயம் அறிந்ததாலும் , அமரசிம்மன் உபாசனை பலன் முடிவுக்கு வந்ததாலும் தோற்கிறான்.

    சங்கர விஜயம் நூல்கள் ஒரு பிரமாணமே அல்ல என்று யாரும் சொன்னாலும் இதோ உங்கள் தரவு பௌத்தர்களின் ஹயக்ரீவ உபாசனை பற்றி பேசுகிறது.

    கல்வி, வித்யை இவற்றிற்கு ஜைன -பௌத்தர்கள் அளித்த முக்கியத்துவம் இதில் தெரிகிறது.
    பெரும் சாம்ராஜ்ய மனனர்கள் [ வடக்கிலும், தெற்கிலும்] புதிய மதத்தை ஏற்று கொள்ளவும், மக்களிடையே பரப்பவும் இந்த உபாசனை சக்தி -மற்றும் பல தெய்வ வடிவங்களின் உபாசனையும் கூட -பெரும் உதவியாக இருந்திருக்கலாம்.

    இதற்கெலாம் அஸ்திவாரமாக மந்திர சாஸ்திரம் இருந்திருக்கலாம்.

    தெய்வங்கள் அவதார் படத்தில் சொல்வது போல ” Don’ t take sides ” என்பதும் தெரிகிறது.:-)

    சாய்

  39. மதிப்பிற்குரிய திரு கிருஷ்ணகுமார் அவர்களே,

    // என் சம்சயம் — ஹயக்ரீவரை பௌத்தர்களும் உபாசித்துள்ளனரா? அதுவும் இஹ சௌக்யங்களை அடைய. பரசௌக்ய ப்ரதமாக இந்த ஸ்தவத்தில் ஏதும் காணக்கிட்டவில்லை. (அல்லது எனக்குப் புரிபடவில்லை). //

    மன்னிக்கவும்… உங்கள் கேள்விக்கு விடை தெரியவில்லை. பௌத்தத்திலும் பௌத்த வரலாற்றிலும் அவ்வளவாக எனக்குப் பரிச்சயம் இல்லை. க்ஷமிக்கவும்.

    ஆனால் விக்கிபீடியாவில் “ஹயக்ரீவர் அவலோகிதேஸ்வரர் தன்னிச்சையாக எடுத்துக்கொண்ட உக்ர ரூபம்” என்று உள்ளது:

    “In Tibetan and Japanese Buddhism, Hayagriva is a wrathful manifestation of Avalokiteshvara. There are believed to be 108 forms of Hayagriva.”

    இது வைதிக மதத்தில் காணப்படும் அவதாரக் கொள்கையைக் காப்பியடித்தது போல உள்ளது.

    சரஸ்வதியைப் பற்றிய விக்கியிலும்

    “Saraswati is known as a guardian deity in Buddhism who upholds the teachings of Gautama Buddha by offering protection and assistance to practitioners.”

    என்று உள்ளது.

    வைஷ்ணவத்தில் ஹயக்ரீவ அவதாரம் எடுத்தபொழுது பெரியபிராட்டியும் வாக் தேவி (ஸரஸ்வதி) வடிவத்தில் அவதாரம் செய்ததாக உண்டு. இந்த ஸரஸ்வதி பிரம்மாவின் மனைவியாராகிய ஸரஸ்வதியினின்று வேறுபட்டவர் என்றும் கூறுவர். போதாயன ஸூத்ரகாரர்கள் (ஸ்மார்த்த/வைஷ்ணவ விபாகமற) தேவ தர்ப்பணத்தில், கேசவ முதல் தாமோதர ஈறாக பன்னிரண்டு நாம தர்ப்பணம் செய்த பின், “ஶ்ரியம் தேவீம் தர்பயாமி, சரச்வதீம் தேவீம் தர்ப்பயாமி” என்று லக்ஷ்மியுடன் ஸரஸ்வதி என்ற நாமத்தைத் தரித்துள்ள விஷ்ணுபத்னியைப் படிப்பதுண்டு.

  40. . வைதிகத்தில் இருந்து தங்களுக்கு பயன் படக்கூடிய பல விஷயங்களை [ Tried and tested ] அன்றைக்கு வந்த புதிய மதங்கள் நன்றாகவே உள் வாங்கியிருக்கின்றன. பயன்படுத்தவும் செய்திருகின்றன ,தேவையில்லை என்று பட்டவைகளைப் பின் தள்ளவும் செய்திருக்கின்றன .

    படித்து யோசிக்க யோசிக்க இது தெளிவாகிறது.

    இதே மந்திர சாஸ்திரம் தீமை விளைவிக்கவும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது
    தீமை விளைவிக்கும் நோக்கில் செய்யப் பட்ட மந்திர பிரயோகம் பதில்- பிரயோகத்தால் எதிர் கொள்ளப் படவில்லை பக்தி யோகத்தாலேயே எதிர் கொள்ளப் பட்டு வெற்றி கொள்ளப் பட்டிருக்கிறது என்று நாயன்மார்கள் கதை காட்டுகிறது.

    சாய்

  41. தகவல்களுக்கு நன்றி ஸ்ரீமான் கந்தர்வன், ஸ்ரீமான் சாய்

    பௌத்தர்கள் உபாசிக்கும் ஹயக்ரீவர் அவலோகிதேஸ்வரருடைய அவதாரம் என்பதைப் புரிந்து கொண்டேன். பௌத்தர்கள் தரப்பிலான inculturation ஆக இருந்திருக்கலாம்.

    மூர்த்திகளின் பரிணாம வளர்ச்சி என்ற விஷயம் மரபின் படி அநாதிகாலமாக இருக்கும் சாஸ்த்ரங்கள் என்ற ஆதாரம் சார்ந்து ஏற்கவொண்ணா விஷயம்.

    சமூகவியல் சார்ந்து எல்லா விஷயங்களுக்கும் ஒரு கால நிர்ணயம் செய்வார்கள். வேதங்களிலேயே ஒவ்வொரு வேதத்துக்கும் ஒரொரு காலம் என.

    மூர்த்திகளின் பரிணாம வளர்ச்சி என்ற விஷயம் சமூகவியல்காரர்களால் மிகவும் பொத்தாம் பொதுவாக ஒரு Presumption ஆக மட்டிலும் வைக்கப்படுகிறது. மாறாக substantiated fact இல்லை என்று தான் புரியவருகிறது.

    விளக்கங்களுக்கும் கருத்துப்பரிமாற்றங்களுக்கும் மிக்க நன்றி

  42. ஐயப்பன் வழிபாடு அனைத்து தெய்வங்களின் வழிபாடு. ஐயப்பன் என்றால் அய்யா விஷ்ணு அப்பா சிவன் என்பதாகும். சாஸ்தா முதலில் தோன்றிய அவதாரம். மகிஷி போன்ற கெட்டவர்களை அழிக்க வந்தவர் சாஸ்தா. எருமை முகம் கொண்ட மகிஷி வதம் நடந்த இடம் தான் எருமேலி என்ற எருமைகொல்லி. வதம் முடிந்த பின்பு சாஸ்தா தவம் புரிய காந்தமலை சென்று பொன்னம்பலமேட்டில் இறையோடு ஐக்கியமானார். இன்றும் தேவர்களும் முனிவர்களும் மகாசங்கிராந்தி அன்று மகர விளக்கு வழிபாடு நடத்துவது தெரிந்த விஷயம். வனவாசிகள் நடத்துகிறார்கள் என்பது இன்னமும் ஆதாரபூர்வமாக அறியப்படவில்லை. அருவ வடிவில் இருக்கும் முனிவர்களால் தான் மகர விளக்கு வழிபாடு நடத்தபடுகிறது என்றும். அந்த நேரத்தில் ஐயப்பன் ஜோதிசொருபமாக நட்சத்திர வடிவில் முனிவர்கலுக்கும் நமக்கும் தெரிகிறார் என்பது கண்கூடு. இரண்டாவது அவதாரம் பூர்ணா புஷ்கலா சமேத அய்யனார். இவர் தான் இரு சக்திகளோடு எல்லா கிராமங்களிலும் காட்சி தரும் கிராம தேவதை. கிராம மக்களை பசி, பிணி & துஷ்ட ஆவிகளிடமிருந்து நம்மை காக்க நாடு நாடாக சுற்றி திரிந்து தம்மை கிராமங்களில் ஐக்கிய படுத்தி கொண்டவர். முன் அவதாரத்தில் யோக சந்நியசியாகிய சாஸ்தாவை விரும்பிய பெண்கள் தான் பூர்ணா புஷ்கலா என இரு சக்திகளாக அய்யனாரை மணந்துகொண்டு அருள் புரிகிறார்கள். மூன்றாவது அவதாரமாகிய மணிகண்டன் பிறப்பு தான் நமேல்லோறாலும் வணங்கபடுகின்ற ஐயப்பன். ஆம் 12ம் நூற்றாண்டில் பாண்டிய நாடு சோழ வசமாகிவிட்ட படியால் பாண்டிய வம்சாவளியினர் சேர நாட்டின் சிறு சிறு சமஸ்தானங்களை கொண்ட பிரதேசங்களை ஆண்டனர். அதில் ஒன்று தான் பந்தளம். அருகில் தான் சபரி மலை உள்ளடக்கிய 18 மலைகள் உள்ளன. பந்தளம் சுற்று வாட்டார பகுதிகளில் பெரும் கொள்ளைக்காரனாகிய உதயணன் மற்றும் அவனது நண்பர்களை அழிக்க தான் ஐயப்பன் மணிகண்டனாக ஒரு சாஸ்தா கோவில் பூசாரிக்கு மகனாக பிறந்தான். பூசாரியும் அவரது மனைவியும் மணிகண்டனை மன்னனுக்கு மகனாக தத்து கொடுக்கின்றார்கள். அதன் பிறகு மணிகண்டன் வாவர் எனும் மனம் திருந்தும் அராபிய கொள்ளைக்கரனை மன்னித்து நண்பனாக ஏற்றுகொள்வதும், கறுப்பர், வாவர், கடுத்தார், கொச்சுகடுத்தார், மல்லன், வில்லன், மாரப்பன், சீரப்பன், போன்ற தளபதிகளின் உதவியோடு அழுதாமலை, கரிமலை, நீலிமலை, சபரிமலை & காந்தமலை எனும் ஐந்து மலைகளில் பதுங்கி இருந்த உதயணன் மற்றும் அவனது நண்பர்களை அழித்தார் என்பது வரலாறு. நாம் பெருவழி பாதையில் செல்லும்போது உணரலாம். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களே சாட்சி. காந்தமலை பொன்னம்பலமேட்டில் தவக்கோலம் பூண்ட ஐயப்பனை தரிசிப்பது சாத்தியமில்லை ஏனனில் கொடிய விஷ ஜந்துக்கள் உள்ள பகுதி என்பதாலும், சபரி அன்னையின் வேண்டுதலாலும் சபரி மலையில் ஐக்கியமாக எண்ணுகிறார் ஐயப்பன் அதன் விளைவாகத்தான் போர் முடிந்த பிறகு வீரர்களுக்கு முக்தியளித்து சபரிமலையில் குடிகொல்கிறார். பிறகு வரத்து வளர்ப்பு தந்தையாகியாகிய ராஜசேகர பாண்டியனால் 18 படிகள் அமைத்து ஆலயம் அமைக்கப்பட்டு இன்றும் வழிபடபடுகிறது. இதுதான் அய்யனின் சத்தியமான வரலாறு. சான்றுகள். 1.அயப்பனின் பரிவாரங்கள் எருமேலியில் ஆயுதங்கள் ஏந்தி ஆடிபாடி புறப்படுகிறார்கள். அதுவே நாம் பேட்டை துள்ளி எருமேலியில் இருந்து யாத்திரை புறப்படுவது. 2. அழுதா நதியில் குளித்துவிட்டு கல்லிடும் குன்றில் கல் இடுவது வதம் செய்யப்பட்ட கொள்ளைக்கார வீரர்களின் புதைவிடம் என்பதே உண்மை. 3. கரிமலை ஏறி இறங்கினால் வரும் பம்பை நதி மாண்ட வீரர்களுக்கு திதி செய்ததின் நினைவாக நாமும் திதி செய்கிறோம். 3. இறுதியாக நீலி எனும் தேவதை நினைவாக உள்ள நீலி மலையை கடந்தால் சபரி பீடம் சபரி அன்னைக்கு ஸ்ரீ ராமர் அளித்த வரம் சாஸ்தாவால் முக்தி கிடைக்க பெற்றார் அதன் அடையாளம் தான் சபரிபீடம். இங்கிருந்து சபரிமலை ஆரம்பமாகிறது. 4. சரங்குத்தியில் வெற்றி பெற்ற வீரர்கள் தங்கள் ஆயுதங்களை விடுத்தது பக்தியோடு சுவாமியை காண சென்றதன் நினைவாக நாமும் சரம் எனும் சிறிய ஆயுதங்களை சொருகி, ஆணவம், கன்மம், மாயை, ஆசை, கோபம், தாபம், காமம், மதம், மாச்சர்யங்கள் போன்ற தீய குணங்களை விடுத்து சுவாமியை உள்ளன்போடு தரிசிக்க செல்வது. சுவாமியை கண்ட பின் பரவசபேறின்பம் கொள்ளாதவர் யாரோ!

  43. ரமேஷ் உங்களுடைய விளக்கம் மிகும் அருமை! முதன் முறையாக இணையத்தளத்தில் பதிவிடுகிறேன் அந்த தயக்கம் தான் முழுமையாக எழுத முடியவில்லை. தகவலுக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *