தஸ்லிமா நஸ்ரின் எழுதிய “லஜ்ஜா” நாவல் – தமிழில்

lajja_taslima_nasreen_book_coverஸ்லிமா நஸ்ரின் எழுதிய லஜ்ஜா (அவமானம்) நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நாவலின்  ஆங்கில மொழிபெயர்ப்பு 1994ல் வெளியான போது வாசித்திருக்கிறேன்.   அப்போது பெரும் அதிர்வலைகளை இந்தியா முழுவதும் இந்த நாவல் ஏற்படுத்தியது.

தாமதாகவேனும் தமிழுக்கு இந்த நாவல் வந்திருக்கிறது என்பது முக்கியமான விஷயம்.  தமிழில் சரளமாக மொழிபெயர்த்திருக்கும்  கே.ஜி.ஜவர்லால் மற்றும் கிழக்குப் பதிப்பகத்திற்குப் பாராட்டுக்கள்.

இந்த நாவலின் காரணமாகத் தான் தஸ்லிமா நஸ்ரின் பங்களாதேஷில் கொலை மிரட்டல் விடுக்கப் பட்டு நாட்டை விட்டே ஓடும் படியானது. இன்று வரை என்னேரமும் ஜிகாதிகள் அவரைக் கொலை செய்யலாம் என்ற நிலையில் உயிருக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. அவர் “இஸ்லாமுக்கு எதிராக” எழுதியதால் இப்படி ஜிகாதிகள் கொலைவெறி பிடித்து அலைகிறார்கள் என்றூ பொதுவாக பிரசாரம் செய்யப் படுகிறது. அது உண்மையல்ல. இந்த நாவலில் இஸ்லாமைக் குறித்து ஒன்றூமே இல்லை. காலங்காலமாக தங்களுடன் வாழ்ந்து வந்த இந்துக்களை எப்படி இஸ்லாமிய மதவெறியூட்டப் பட்ட பங்களாதேஷிகள் கொடூரமாகக் கொன்று அழித்தார்கள், இந்துப் பெண்களை குரூரரமாக வன்புணர்ந்தார்கள், சொத்துகளைப் பிடுங்கிக் கொண்டார்கள், விரட்டியடித்தார்கள், பங்களாதேஷ அரசு, காவல் துறை, அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் எப்படி இந்தப் பேரழிவை ஆதரித்து அங்கீகரித்தார்கள் – இதைத் தான் பக்கம் பக்கமாக இந்த நாவலில் ஏறக்குறைய செய்திப் பத்திரிகையில் உள்ளது போன்ற நடையில் அவர் எழுதியிருக்கிறார்.. இந்த நிகழ்வுகள் பங்களாதேசிகளை அவமானத்தில் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன என்பதே நாவலின் செய்தி. அந்தக் கொடூரங்களின் உறைக்கும் உண்மையும் ஒரு சக மனுஷியாக பாதிக்கப் பட்ட இந்துக் குடும்பங்களின் துயரத்தை உணர்ந்து அவர் எழுதியிருப்பதும் தான் வாசிப்பவர்களைப் பதைபதைப்பக்கச் செய்கிறது. இந்த அப்பட்டமான உண்மையை ஒரு படைப்பாளியாக எழுதியதற்காகத் தான் அவருக்கு எதிராக ஃப்த்வா விடுக்கப் பட்டது. இன்று வரை ஹைதரபாத்தின் ஜிகாதிகள் உட்பட அவரை அழிக்க வேண்டும் என்று கொலை வெறி பிடித்து அலைகிறார்கள். இந்த நாவலைப் படிக்கும் தமிழ் வாசகர்களுக்கு பங்களாதேச இந்துக்களுக்கு நிகழ்ந்த மாபெரும் கொடுமைகளின் ஒரு சித்திரத்தை இந்த நாவல் அளிக்கும் என்று நம்புவோம்.

ஆழம் இதழில் இது குறித்து வந்துள்ள புத்தக அறிமுகம் இதோ –

lajja_taslima_nasreen_book

“1992ல் ராமர் மசூதி இடிக்கப்பட்டதை.. ” என்று வருகிறது. ஒன்று ராமஜன்ம பூமி, அல்லது பாபர் மசூதி அல்லது பாபர் கும்மட்டம் என்று சொல்ல வேண்டும்.. அதென்ன ராமர் மசூதி என்ற குழப்படியான பிரயோகம்?

புத்தக அறிமுகம் இந்தியாவின் சிறுபான்மை முஸ்லிம்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றிய நிதர்சனத்தை சொல்கிறது. குஜராத் கலவரத்தையும் பங்களாதேச கொடூரங்களையும் ஒப்பிட்டு உண்மை நிலையைக் கூறூகீறது. செக்யுலர் வியாதியால் பீடிக்கப் படாத ஒருவர் இந்த அறிமுகத்தை எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது. அவருக்கும் நன்றிகள்.

(ஜடாயு  பேஸ்புக்கில் எழுதியது)

8 Replies to “தஸ்லிமா நஸ்ரின் எழுதிய “லஜ்ஜா” நாவல் – தமிழில்”

 1. உருது மொழியில் “லஜ்ஜா” என்றால் வெட்கம் என்று பொருள் படும். “அவமானம்” என்பதற்கு உருதுவில் “ஷர்ம்” என்று சொல்வார்கள். “வெட்கக்கேடு” என்று மொழி பெயர்த்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.
  அடுத்தபடியாக செக்குலரிசம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். எந்த ஒரு சமயத்தையும் உயர்த்தவோ தாழ்த்தவோ செய்யாத நிலை என்பதே பொருளாகும். அப்படிப் பார்த்தால் தமிழ் நாட்டை ஆண்ட அனைத்து மன்னர்களுமே செகுலரிச்ட்டுகல்தான். ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் சைவர்களாக இருந்தபோதிலும், வைணவம், பௌத்தம், சமணம் முதலிய சமயங்களுக்கும் கொடை கொடுத்து அச்சமய வழிபாடுகளுக்கோ, வழிபட்டுத் தலங்களுக்கோ இடையூறு வராவண்ணம் பார்த்துக்கொண்டார்கள்.
  அத்தகைய தமிழ் மன்னர் ஆட்சி உலகெங்கும் நிலவினால் சமயப்பூசலால் மக்கள் துயருறுவது தடுக்கப்படும்.

 2. please all see- Wafa sultan Omar Bakri debate in you tube-
  He says only three options for kafirs convert to islam or enter into a contract with them -that is pay jiziya or ready fight.

  Suvanapriyan, meeran -this is for your attention pl.

 3. மதம்மாற கட்டாயப்படுத்துகிறார்கள் :
  நறிக்குறவர்கள் மறியல் nakkheeran.in/Users/frmNews.aspx?N=115011

 4. Mr. Muthukumar,
  What you are trying to convey? You have quoted that ‘somebody’ has told in Youtube, that all Hindus (Kafirs as derogatorily called by Muslims) should convert either to Islam (no choice for them), or pay unfair tax, or fight to death? What is your choice? Do not quote what somebody has told in you tube. Share what you feel in your heart.

 5. திரு ஒரு அரிசோனன் அவர்களே

  முத்துக்குமார் அவர்களின் பக்கம் எனக்குத் தெளிவாகவே புரிகின்றது. தாங்கள் எழுதிய பதில்தான் அவரது கருத்தும். சுவனபிரியன், மீரான் என்று எழுதி இருப்பதைப்
  பார்க்கவும் இவர்கள் இருவரும் ஜிசியா வரியை எதிர்க்காதவர்கள்.

 6. நன்றி ரங்கன் அவர்களே.

  Mr.Arizonan,The muslims here and the USA try to project islam as a peaceful religion.In USA they say, sharia can co exist with US laws.But, this man Omar Bakri ( i think he is Sharia court judge in Lebonon ) clearly states that ,kafirs can never be equal to any muslim. Please watch the full video in youtube.Once they become majority they will show their real face.Even in Tamil Nadu in some areas where they majority others can not enter that place.
  This is what I wanted to convey.
  “தமிழ் நாட்டை ஆண்ட அனைத்து மன்னர்களுமே செகுலரிச்ட்டுகல்தான். ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் சைவர்களாக இருந்தபோதிலும், வைணவம், பௌத்தம், சமணம் முதலிய சமயங்களுக்கும் கொடை கொடுத்து அச்சமய வழிபாடுகளுக்கோ, வழிபட்டுத் தலங்களுக்கோ இடையூறு வராவண்ணம் பார்த்துக்கொண்டார்கள்”.
  இதற்குக் காரணம், எல்லா வழிகளும் இறைவனையே அடைகின்றன என்ற உயர்ந்த இந்து மதக் கொள்கையினால்தான்.

 7. திரு ரங்கன், திரு முத்துக்குமார், விளக்கம் தந்தமைக்கு நன்றி. நான் ஒரு யு.எஸ்.ஏ குடிமகன். இங்கு அனைவருக்கும் ஒரு சட்டம்தான். இந்தியாவில் இருப்பதுபோல முஸ்லிம்களுக்கு என்று தனியான சட்டம் கிடையாது. எல்லா மதங்களும் ஒரே மாதிரியாகத்தான் அரசாங்கத்தால் பார்க்கப் படுகின்றன. எந்த ஒரு சமயத்தின் வழிபாட்டுத் தளங்களையும் அரசினால் எடுத்துக் கொள்ள இயலாது. இங்கு பேச்சு, மற்றும் செய்தி (press) உரிமை இருப்பதால், கலவரத்தைத் தூண்டாமல் இருக்கும் வரை யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். ஆனால் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்து விட முடியாது. எனவே ஷாரியாவை அமுலுக்குக் கொண்டுவருவது என்பது யுஎஸ்ஏவைப் பொறுத்தவரை ஒரு பகல்கனவுதான். தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களே தங்களுக்குள் ஷாரியாவை அமுல் படுத்தத் துணிந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாவார்கள். ஷா பானு விஷயத்தில் இந்தியாவில் அரசியல் அமைப்பையே ஓட்டுக்காக திருத்தியமாதிரி இங்கு திருத்த இயலாது.
  நண்பர் முத்துக்குமார் கடைசியில் எழுதியதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், உயிரைக் காத்துகொள்ளத் தன்னைக் கொல்லவரும் பசுவையும் கொள்ளலாம் என்பதுபோல, நமது சமயத்திற்கு தீங்கு வரும் என்றால், அதைத் தகுந்த முறையில் எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இந்து சமயக் கடவுளர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தியவாறு காட்சி அளிப்பதின் நோக்கத்தையும் நாம் என்றும் நினைவில் கொள்ளவேண்டும். மற்ற உயிர்களைக் கொல்லாத பசுவிற்கும் கொம்பை இறைவன் கொடுத்திருப்பது தர்காப்பிற்குத்தான்.

 8. We(Hindus ) have been keeping very quiet to the shabby and inhuman treatment meted out to Kashmir Pandits in Kashmir most of whom who are still refugees and are unable to get to their own places with full honour and security.
  There was no big or spontaneous protest / continuous agitation from (West) Bengal much and far less from rest of India when these atrocities had taken place, nowithstanding the fact that India played a major and decisive role in liberating the so called Bangla Desh. On the contrary the illegal immigration of Bangladeshis have been freely alllowed into India (more particularly in Assam /N.E states) for electoral gains.
  We (hindus) are satisfied with the exchange of mails/messages, postings and forget the whole matter quickly.
  However, thanks are due to Taslima Nasreen for exposing the atrocities in the form a novel..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *