யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரம்பு மீறிப் பேசியுள்ளார்.  பாரதிய ஜனதா கட்சி தனது பொதுக்கூட்டங்களில் “காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம் ” என்று  பேசி வருவதை ஜீரணிக்க முடியாத ராகுல் காந்தி,  மேற்படி பொதுக்கூட்டத்தில்  “இந்தியாவிலிருந்து பிரிட்டீஷாரை வெளியேற்றியது  போல்,  பாஜகவையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்”  என்று கொக்கரித்துள்ளார்.  யார் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற் கேள்விக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பதில் கொடுப்பார்கள்.

1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நாடு விடுதலை பெற்ற தினத்திலிருந்து, இன்று வரை நாட்டிற்கு துரோகம் இழைத்த கட்சி எது என்று பார்த்தால் அது காங்கிரஸ் கட்சி மட்டுமே என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க இயலும்.  நாடு பிளவுபடுவதற்குத் துணை போன காங்கிரஸ் கட்சியினர், இன்று தேசியவாதிகளான பாரதிய ஜனதா கட்சியினரை நாட்டை விட்டு வெளியேற்றுவதாகக்  கொக்கரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு,  “யோக்கியன் வருகிறான் செம்பை எடுத்து  உள்ளே வை ” என்பார்கள். நாட்டை விட்டு வெளியேற வேண்டிய இத்தாலியர்கள், இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என்பது ஆங்கில ஏகாதிபத்தியத்தை நினைவுப்படுத்துகிறது. ராகுல் காந்தியின் பேச்சு, ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை துரத்துவது போல உள்ளது,

ராகுலுக்கு தகுதி கிடையாது

சோனியா குடியுரிமைச் சான்றிதழ்

ராகுல் காந்தியின் தாயார் திருமதி சோனியா காந்தி, இந்த நாட்டின் குடியுரிமையை விரும்பிப் பெற்றார் என்று எவராவது சவால் விட்டுக் கூறத் தயாரா?   1968-ம் வருடம் பிப்ரவரி மாதம் 25-ம் தேதி ராஜீவ் காந்தி சோனியாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், 1983 வரை சோனியா காந்தி இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பக்கவில்லை.  அவர் தொடர்ந்து இத்தாலியப் பிரஜையாகவே வாழ்ந்து வந்தார்.

பலருக்குத் தெரியாத ஒரு விஷயம், குறிப்பாக காங்கிரஸ் கட்சியினருக்கே தெரியாத தகவல்,  மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில், பத்ரி நாராயண் சுக்லா என்பவர்  தாக்கல் செய்த மனுவே, சோனியா இந்தியக் குடியுரிமை பெற முக்கியமான காரணமாக அமைந்தது என்பதாகும்.  பிரதம மந்திரி வீட்டில் நாட்டினுடைய பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்கள் போன்ற முக்கியமான தஸ்தாவேஜுகளை சாதாரணமாக வைத்திருப்பதாலும், அவையெல்லாம் வெளிநாட்டவரான சோனியாவின் பார்வைக்கு வரக்கூடிய ஆபத்து இருப்பதாலும், சோனியா அந்த வீட்டில் இருக்கக் கூடாது என மனு தாக்கல் செய்த காரணத்தினால் தான்,  கட்டாயத்தின் அடிப்படையில் அன்டோனியா மைனோ (அவர் தான் சோனியா) இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பத்தார். இதை வெளிப்படையாகக் கூற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி முன்வருவாரா?

திருமதி அன்டோனியா சோனியாவாக மாறிய பின்னரும் கூட,  இத்தாலியக் குடியுரிமையை ரத்து செய்யவில்லை.  இதன் காரணமாக ராஜீவ் காந்திக்கும், திருமதி அன்டோனியாவிற்கு பிறந்த பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் சட்டப்படி இத்தாலிய பிரஜையாகவே (அம்மா வழியில்- இத்தாலிய குடியுரிமை சட்டப்படி) மாறிவிடுகிறார்கள். அவர்களுக்கு இன்றும் இத்தாலிய குடியுரிமை உண்டு.

பாரதிய ஜனதா கட்சியை நாட்டை விட்டே வெளியேற்றுவோம் என்று கொக்கரிக்கும் திருவாளர் ராகுல் காந்தி தனது இத்தாலிய குடியுரிமையை ரத்து செய்து விட்டாரா என்பதை முதலில் மக்கள் முன்னிலையில் தெரிவிக்க வேண்டும்.

இந்தியத் திருநாட்டின் சட்டம், இரட்டைப் பிரஜா உரிமையை அனுமதிக்கவில்லை;  ஆனால் பிறப்புரிமை காரணமாக இன்னொரு நாட்டு (இத்தாலி) பிரஜையாக அந்த நாட்டுச் சட்டம் கருதுவதைத் தடுக்காது.   1992-ல் இத்தாலிய குடியுரிமைச் சட்டம் மாற்றப்பட்டு, ஓர் இத்தாலிய பிரஜை வேறு நாட்டுப் பிரஜையாகவும் இருக்க அனுமதி அளிக்கும் விதமாக திருத்தம் கொண்டுவந்து, அது சட்டமாக்கப்பட்டுள்ளது. (யாருக்காக? இது யாருக்காக?)   இதன் அடிப்படையில் ராகுல் காந்தி இத்தாலிய பிரஜையாக உள்ளார். எனவே அந்நிய நாட்டு குடியுரிமையை தன்னிடம் வைத்திருக்கும் ராகுல் காந்தி தேசியவாதிகளான பா.ஜ.க.வை நாட்டை விட்டே வெளியேற்றுவோம் என்பது முரண்நகை அல்லவா? இதைத் தான்  ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பார்கள்!

நாடு விடுதலை பெற ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த வார்த்தை  ‘வந்தேமாதரம்’ என்ற இனிய சொல்.  2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7- ம் தேதி நாடு முழுவதும்  ‘வந்தேமாதரம்’  பாடப்பட்டது.  இது காங்கிரஸ் தலைமையில் நடக்கும் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்திரவு. ஆனால் தில்லியில் நடந்த  நிகழ்ச்சியில் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை.  ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது இதுவரைக்கும் எவருக்கும் தெரியாது.  நாடு முழுவதும் கோடிக் கணக்கானவர்கள் தங்களது ஜாதி, மதம், பிரதேசம், மொழி போன்ற எல்லா பிரிவினைகளையும் மறந்து இப்பாடலைப் பாடினார்கள்.  ஆனால் இத்தாலிய மணிமேகலை மட்டும் பாடவில்லை.

இந்த நாட்டின் தேசிய கீதமான வந்தேமாதரத்தைப் பாட மறுத்த சோனியாவை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமா, அல்லது தேசியவாதிகளான சங்க பரிவார் இயக்கங்கங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா? வரும் நாடாளுமன்றத் தேர்தல் நல்ல பதில் அளிக்கும்.

உண்மையில், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாகும். கடந்த காலத்தில் நடந்த இரண்டு சம்பவங்களில் சோனியா காந்தியின் செயல்பாடுகள் மேற்படியான கேள்வி எழுப்பக் காரணமாக உள்ளன.

முதலாவது, 1971-ம் வருடம் இந்தியா பாகிஸ்தான் இடையே யுத்தம் மூண்டபோது நிகழ்ந்தது.  அப்போது இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகத்தில் பணியாற்றும் எந்த விமான ஓட்டியும் விடுப்பில் செல்ல அனுமதி கிடையாது என்று விதி இருந்தது.  இது நடைமுறையில் இருந்த போர்க்கால நிலைப்பாடு.  அப்போது 1971-ல் திருவாளர் ராஜீவ் காந்தி இந்தியன் ஏர்லைன்ஸில் விமான ஓட்டியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  அரசின் விதிமுறைக்கு மாறாக சோனியா காந்தியின் நிர்பந்தம் காரணமாக விடுப்பு எடுத்துக்கொண்டு, தனது மனைவி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அனைவரும் இத்தாலிக்குச் சென்றதும், இந்திய- பாகிஸ்தான் யுத்தம் முடியும் வரை அவர்கள் இந்தியா திரும்பாததும் ஏன்?  இம் மாதிரி நடக்க வேண்டிய அவசியம் என்ன?  இதுதான் நாட்டுப் பற்றா?

இரண்டாவது, 1977-ல் இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியடைந்து ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தவுடன்,   சோனியா காந்தி தனது இரண்டு குழந்தைகளுடன் இத்தாலித் தூதரகத்தில் பாதுகாப்புக் கோரி தஞ்சம் புகுந்த சம்பவம். பின்னர் இந்திரா காநதி, சஞ்சய் காந்தி மற்ற உறவினர்கள் அனைவரும் கேட்டுக்கொண்ட பின்னரே தூதரகத்தை விட்டு அவர் வீடு திரும்பியபோது,  சோனியா காந்தியின் ‘நாட்டுப் பற்று’ வெளிச்சத்திற்கு வந்த்து.

ஆகவே இரண்டு சம்பவங்கள் மூலமாக சோனியா காந்தியின் நாட்டுப் பற்று உலகறிந்த விஷயமாகும்.  இப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டில் உலா வந்தபோது, 1962-ல் இந்திய- சீனா யுத்தம் நடந்த போது, யுத்தம் நடந்த எல்லைப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த பாரதிய ஜன சங்கத்தினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவி புரிந்து கொண்டிருந்தார்கள். இந்த தேசபக்தர்கள்  நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ராகுல் காந்தி பேசுவது வேடிக்கையானது.

ஆகவே இந்தியா மீது சீனாவோ அல்லது பாகிஸ்தானோ படையெடுத்தால்,  சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியையும், மகள் பிரியங்காவையும் இத்தாலிக்கு அழைத்துச் செல்ல மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க இயலுமா?  இப்படிப்பட்டவர்கள் இந்தியத் திருநாட்டில் வாழலாம், இந்த தேசத்திற்காகவே உயிரை தியாகம் செய்தவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் எனக் கொக்கரிப்பதும், அதை ஊடகங்கள் எந்தக் கேள்வியும் இன்றி பிரசுரிப்பதும் எவ்வகையில் நியாயம்?

எல்லைகளை விட்டுக் கொடுத்தவர்கள் யார்?

கச்சத்தீவை தாரைவார்த்தது யார்?
கச்சத்தீவை தாரைவார்த்தது யார்?

நாடு விடுதலை பெற்ற பின்னர், நாட்டின் எல்லைகளை அந்நிய நாட்டிற்கு விட்டுக் கொடுத்தது யார் என்பதையும் பார்க்க வேண்டும். நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் தான் நாட்டின் எல்லையைக் காக்கத் தவறியவர்கள்.

நேரு சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் நமது நாட்டின் எல்லைகளைத் தாரைவார்த்துக் கொடுத்தவர்.  பின்னர் வந்த இந்திரா காந்தியோ கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர்,  நரசிம்ம ராவ் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தீன்பிகா என்ற பகுதியை பங்களாதேஷ் நாட்டிற்கு குத்தகைக்கு விட்டவர்.  ஆகவே இந்த நாட்டின் எல்லையைப் பாதுகாக்கத் தவறிய காங்கிரஸ் கட்சியினர், நாட்டின் எல்லையைக் காக்கத் தவறிய காரணத்தால் வெளியேறி இருக்க வேண்டியவர்கள்.  இது பற்றிய முழுமையான விளக்கங்களைப் பார்த்தால் யார் வெளியேற வேண்டும் என்பது நன்கு புலனாகும்.

நாடு விடுதலை பெற்றவுடன் 60 நாட்கள் முடிவதற்குள், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்தியா மீது போர் தொடுத்த்து. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக அன்றைய பிரதமர்  நேரு இருந்ததால், உடனடியாக பாகிஸ்தானின் காட்டுமிராண்டிக் கூட்டத்தை கட்டுப்படுத்தத் தவறினார்.  இதன் காரணமாக ஏற்பட்ட போரினால்,  இந்தியா தனது பகுதிகளை பாகிஸ்தானிடம் இழந்துவிட்டு, இன்னும் அதை மீட்க முடியாமல் அது  ‘ஆஸாத் காஷ்மீர்’ என்றும்,  ‘பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்’ (PoK)என்றும் பெயரை வைத்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக அப்பகுதி மாறியது யாரால் என்று பார்த்தால், நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சக்திகள் எவை என்பது நன்கு புரியும்.

இன்று நாடு பயங்கரவாதத்தால்  தத்தளிப்பது யாரால்  என்பது ராகுல் காந்திக்கு தெரியுமா, தெரியாதா? இந்த இழிநிலைக்குக் கொண்டு சென்றவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் நேரு என்பதும்,  உலக அளவில் தனது செல்வாக்கு கூட வேண்டும் என்ற ஆசையில் இந்தியாவின் பகுதிகளை விட்டுக் கொடுத்தவரின் வாரிசு தாங்களே என்பதையும் ராகுலுக்கு எந்த ஊடகமும் சொல்வதில்லையே ஏன்?

1999-ல் பாகிஸ்தான் கள்ளத்தனமாக ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் ஊடுருவிய போது, ஊடுருவிய பாகிஸ்தானியர்களை முற்றிலுமாக வெளியேற்றிய முதல் பிரதமர் வாஜ்பாய் என்பதை மறந்துவிடக் கூடாது. ஊடுருவல்காரர்களை முற்றிலுமாக வெளியேற்றிய பின்னரேஅமெரிக்க அதிபரின் தொலைபேசிக்கு மதிப்புக் கொடுத்தார் வாஜ்பாய்.  இது ராகுல் காந்திக்கு தெரியுமா?

உலக வரலாற்றில் சீனாவிற்கு அங்கீகாரம் கொடுத்த நாடு இந்தியா என்பதையும் மறந்துவிட்டு, நாடு பிடிக்கும் ஆசையில் சீனா இந்தியா மீது யுத்தம் நடத்தியது.  1962-ல் நடந்த சண்டைக்குப் பின் சீனா சட்டவிரோமாக அருணாசலப் பிரதேசத்தில் 20,000 ச.கி.மீ இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு உள்பட்ட லடாக் பகுதியில் 38,000 ச.கி.மீ  பரப்பளவு கொண்ட அக்ஷாய்சின் பகுதியையும், 1963-ல் பாகிஸ்தான் சீனாவிற்கு தானமாக கொடுத்த 5,180 ச.கி.மீ. பகுதியையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.  இந்த நிலைமைக்கு நாட்டைக் கொண்டுவந்த அரசு காங்கிரஸ் அரசு,  முதல் பிரதம மந்திரி நேரு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  இன்று வரை காங்கிரஸ் அரசு சீனாவிற்கு தங்களுடைய எதிர்ப்பை வெற்று வார்த்தைகளில் மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறது.

பா.ஜ.க.வை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் எனக் கொக்கரிக்கும் திருவாளர் ராகுல் காந்திக்கு ஒரு உண்மையை உணர்த்தியாக வேண்டும்.  பல்வேறு காலகட்டங்களில் பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ அமைச்சர் உள்பட பலர் அருணாசலப் பிரதேசத்திற்குச் சென்றபோது, சீனா எச்சரிக்கை செய்தது. அப்போதெல்லாம் சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்க இயலாதவர்கள் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள்.  ஆனால் இதற்கு நேர்மாறாக நரேந்திர மோடி அருணாசலப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, சீனாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். சீனா நாடு பிடிக்கும் ஆசையைக் கைவிட்டு  சமாதான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற மோடியின் எச்சரிக்கைக்கு சீனா உடனடியாக பதிலும் உடனடியாக- அதுவும் நாகரிகமான முறையில்- கொடுத்தது. இந்தச் செயல்பாடே  பா.ஜ.க.வினர் தேசப்பற்று உள்ளவர்கள் என்பதை ராகுல் காந்திக்கு  புரியவைத்திருக்க வேண்டும்.

இன்று தமிழகத்தை தாயகமாகக் கொண்டுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வில் இருட்டை ஏற்படுத்தியவர் இந்திரா காந்தி. ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமான கச்சத் தீவை, அரசரின் அனுமதியைக் கூடக் கேட்காமல், இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தவர் இந்திரா காந்தி என்பதை மறந்து விடக் கூடாது.

லால்பகதூர் சாஸ்திரியும், ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தம் காலாவதி ஆகாமல் காப்பாற்றவும், இலங்கையுடன் நல்லெண்ண நட்புறவு கொள்வதற்கும் ஓர் அடையாளமாகவும் தான் கச்சத் தீவு இலங்கைக்கு அளிக்கப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் திருமதி இந்திரா காந்தி கூறியபோது, இது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக முடியும் என குரல் கொடுத்தவர்கள் அன்றைய ஜனசங்கத்தினர் என்பதும், அவர்களே இன்று பாரதிய ஜனதா கட்சியினர் என்பதும் ராகுல் காந்திக்கு தெரியுமா?

அன்று இந்திரா காந்தி செய்த தவறு , 500-க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கும், நூற்றுக் கணக்கான தமிழக மீனவர்கள் அன்றாடம் கைது செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது என்பதை நினைக்கும் போது,  நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டிய சக்தி எது என்பது நன்கு புரியும்.

.

15 Replies to “யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?”

 1. யேசு நாதரைச் சிலுவையில் அறையும்போது சொன்னார், பாவம் இவர்கள் இன்னது செய்கிறோமேன்கிறது தெரியாமல் செய்கிறார்கள் என்று. சோனியாவின் மகன் எனும் ஒரே தகுதியுள்ள இந்த இளைஞன் யாரை நாட்டைவிட்டு வெளியேறச்
  சொல்கிறார் என்பது புரியாமல் உளருகிறார். விசை கொடுக்கப்பட்ட பொம்மை போல சொல்லிக் கொடுத்ததை மனப்பாடம் பண்ணி , சொல்லிக் கொடுத்தவர்கள் சொன்னது போல குரலை உயர்த்திக் கொண்டு எங்கு குரலை உயர்த்த வேண்டும், எங்கு இழைய பேசவேண்டும் என்பதெல்லாம் தெரியாமலே ஏதோ வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். மக்கள் யாரை வெளியேற்றுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 2. திரு ஈரோட்டு ஆ சரவணன் அவர்களே! Hats off to you ! ஆதாரங்களுடன் அருமையான படைப்பு. சரி, எனக்கொரு சந்தேகம். அவர் பேசியதை அனைத்து print மற்றும் electronic media மக்களுக்கு தெரிவித்தது. அதற்கு இந்த இணையத்தில் நீங்கள் பதில் எழுதினால் எத்தனை பேர் படிப்பார்கள்? மாறாக நீங்கள் LOTUS டிவியில் “செய்தியும் விமர்சனமும்” என்ற தலைப்பில் (காலையில் கேப்டன் டிவி மற்றும் தந்தி டிவி செய்வது மாதிரி) இதையெல்லாம் பேசினால் அது அனைத்து மக்களையும் சென்று அடையும். ஆனால் இது விழலுக்கு இறைத்த நீர்தான். இதை பிஜேபிகாரர்கள் எப்போது இதை புரிந்து கொண்டு செயல்படுவார்களோ? Atleast இந்த தேர்தல் முடியும் வரையாகிலும் இதை செயகூடாதா? இதற்கு திரு சரவணன் பதில் (comment) எழுதினால் அவருக்கு நான் நன்றி உடையவனாக இருப்பேன். எழுதுவாரா?

  ” வெள்ளையனே வெளியேறு” என்ற போராட்டத்தைப் போல “இத்தாலியரே இடம்பெயரு” என்று போராட்டம் நடத்த வேண்டிய ஒரு காலம் விரைவில் வரும்
  அது சரி அந்த Rahul Khan ( s/o Rajiv Khan s/o Ferose KHAN) இடம் “தெரியுமா?” “தெரியுமா” என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளீர்கள். பாவம் ராகுல் கான். அவர் அந்த காலங்களில் தெருவில் ஜாலியாக கோலி விளையாடி கொண்டிருந்திருப்பார். அவரைப் போய இத்தனை கேள்விகள் கேட்டால் எப்படி?

  தினமும் இரவு சன் நியூஸ் டிவி, தந்தி டிவி, புதிய தலை முறை டிவி ஆகியவை விவாதம் நடத்துகின்றன . மோடி 2 தொகுதிகளில் நின்றால் அதை யாரும் இந்தியாவில் இதுவரை செயாத காரியம் போல மாங்கு மாங்கு என்று ஒரு மணி நேரம் விவாதம் நடத்துகிறார்கள். ஆனால் இப்படி முட்டாள்தனமாக பேசிய ராகுல் கான் பேசியதை பற்றி விவாதம் நடத்த மாட்டார்கள். எல்லாம் அயோக்கியர்கள். ஆகவே நீங்கள் lotus நியூஸ் டிவியை நாடுங்கள். மேலும் நீங்கள் magazine களில் (ஒரே நாடு etc ) கட்டுரை எழுதி கொண்டு ஈரோட்டிலேயே பேனாவும் கையுமாக உட்கார்ந்து கொண்டிராமல் வரும் தேர்தலில் ஒவ்வொரு ஊராய் சென்று மேடை ஏறி (இந்த மாறி புள்ளி விவரங்களுடன்) பிரச்சாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

 3. மறக்க முடியவில்லை

  இந்தோரை ஆண்டு வந்த ஹோல்கர் மஹாராஜா தனது அமெரிக்க மனைவிக்குப் பிறந்த ரிச்சர்டு என்ற தனது மகனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட வேண்டுமென்று அரசிடம் விண்ணப்பித்தார். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தான் இந்த வேண்டுகோள் விடுக்கப் பட்டது. அப்பொழுது மன்னர்கள் பதவிகள் நீக்கப்பட்டிருந்தன, மன்னர்கள் தங்கள் அதிகாரங்களை இழந்து சாதாரண மனிதர்கள் ஆகி இருந்தனர், அந்த நிலையிலும் அதாவது அதிகாரமற்ற இளவரசர் என்ற வெறும் பட்டத்தைக் கூடத் தர முடியாது என்று தடுத்தனர். காரணம் ஹோல்கர் மகாராஜாவின் மகன் அமெரிக்க மனைவிக்குப் பிறந்தவர் என்ற காரணம். இவ்வாறு தடுத்தவர்களில் முதன்மையானவர்கள் அமரர்களான ராஜேந்திர பிரஸாத், நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகிய மூவர் தாம். ஆனால் ராஜீவ் காந்தியின் இத்தாலிய மனைவிக்குப் பிறந்த ராகுல் பாரத மண்ணின் மைந்தர்களை வெளியேற்றவேண்டும் என்று சொல்கிறார், இது ராகுலின் காலமல்ல ராகுகாலம்
  பார்க்க
  சுட்டி
  https://www.angelfire.com/in/jalnews/99993.html
  Dinesh Trivedi, a leader from Kutch but now spokesman of the Trinamul Congress of Mamta Bannerjee in Calcutta, has cited the instance when Nehru as well as then President Babu Rajendra Prasad and Home Minister Sardar Patel refused to entertain then Indore Maharaja Yashwantrao Holkar’s desire to make Richard, son from his American wife, his successor.

  Participating in the debate on foreign origin in Calcutta daily “The Telegraph”, Trivedi says all three made it clear that the son of a foreign wife could not inherit the Indore gaddi and what followed was unprecedented. “Contrary to all Hindu traditions, precedent and religious sanctions, the maharaja’s daughter, Usha Raje Holkar, born of a Hindu wife, was made the successor to the ruler of Indore.”
  அன்புடன்
  நந்திதா

 4. Not only that as per Subramaniam Swamy web site :
  Rahul Gandhi also had Passport in Ital;y in the name of RAUL and Priyanka has in the name of Bianco.

  First Rahul should surender his Italian PASSPORT IF WANTS TO BECOME mp AGAIN.
  RAJAN
  Libya

 5. சார் தாமரை தொலைக்காட்சி எல்லா இடத்திலும் வருவதில்லை சாதாரண கேபிள் பயன் படுத்துவோர் மட்டுமே பார்க்க முடிகிறது. DTH வைத்திருப்பவர்களுக்கு தாமரை டிவி வருவதில்லை. அதனால் புதிய தலைமுறை டிவி யில் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் (அதனுடைய OWNER நம்முடைய கூட்டநியில்தனே இருக்கிறார் ). அதனால் முயற்சி செய்தால் நடக்கும்

 6. உயர்திரு ஈரோடு.ஆ.சரவணன்.
  அற்புதமான ஆதாரபூர்வமான கட்டுரை.தங்கள் எழுத்துநடை பெரிதும் கவர்கிறது.அடிக்கடி எழுதுங்கள்.
  தங்களை நேரில் காண ஆவலாக இருக்கிறேன்.நான் பள்ளிபாளையத்தில் (டிவிஎஸ்.மேட்டில்)வசிப்பவன்.தீவிர ஹிந்துத்வ மற்றும் வலது சாரி அனுதாபி.

 7. When the BJP comes to power, its first and foremost duty is to impound the pass ports of the Gandhis, Manmohan Singh, Chidambaram and Kapil Sibal and put them behind the bars in Tihar for treason. Pardon me for any omission in the list. CHAMI.

 8. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மார்த்தாண்ட பிரவ தொண்டைமான் என்பவர் இருந்தார். அவர் ஆஸ்திரேலியா சென்ற சமயம் அங்கு மோலி எனும் ஆஸ்திரேலிய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சிட்னி தொண்டைமான் எனும் ஒரு மகன் பிறந்தான். ஆனால் இங்கு புதுக்கோட்டையில் மொழியை ராணியாகவும், சிட்னி தொண்டைமானை இளவரசனாகவும் ஏற்க மறுத்து விட்டனர். பிரிட்டிஷ் அரசும் இவர்களை அங்கீகரிக்கவில்லை. எனவே அவர் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கும், அங்கிருந்து இங்கிலாந்துக்கும் கடைசியில் பிரான்சுக்கும் சென்று அங்கேயே வசித்தார். 52ஆம் வயதில் அவர் காலமானார். இந்தியா திரும்பவே இல்லை. ஆகையால் ராஜகோபால தொண்டைமான் அரசராக முடிசூட்டப்பட்டார். அவர்தான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர். அவர்தான் வல்லபாய் படேலிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தவர். இந்த வரலாற்றிலும் சிட்னி தொண்டைமான் ராஜாவின் மகன் என்றபோதும், மக்களும், பிரிட்டிஷ் அரசாங்கமும் சிட்னி தொண்டமானை ஏற்றுக் கொள்ளவில்லை. சுதந்திர இந்தியாவில் இந்த பண்பாடு காக்கப்படவில்லை. அதனால்தான் ராகுல் போன்றவர்கள் இங்கு வந்து பாஜகவினரை வெளியேறச் சொல்லுகிறார்.

 9. Shri “Thanjavooraan”
  “யேசு நாதரைச் சிலுவையில் அறையும்போது சொன்னார், பாவம் இவர்கள் இன்னது செய்கிறோமேன்கிறது தெரியாமல் செய்கிறார்கள் என்று”
  Sorry for nit picking. There never was an historical personality called Jesus. It is myth. This is all propaganda by the Church.

 10. ஆமாம் ஒருவர் என்கிருன்து வந்தார் என்பது முக்கியமல்ல அவர் என்ன செய்திருக்கிறார் என்பதுதான் முக்கியம். அதாவது Antonia Albino Mino எங்கிருந்து வந்தார் என்பது முக்கியமல்ல. அவர் இந்த நாட்டில் என்ன செய்தார் என்பதுதான் முக்கியம். 1) ராஜீவ் கான் (தி) என்பவருக்கு மனைவியாகி எத்தனை ஆண்டுகள் கழித்து இந்திய குடிமகள் ஆக ஆனார்? 2) இன்றும் அவர் இத்தாலிய & இந்திய குடிமகள் தானே! 3)அவர் இங்கே செய்ததெல்லாம் ஊழல் ஊழல் ஊழல். வேறு என்ன செய்தார்?

 11. திரு CECIL PAUL RAJ .T அவர்களே. நீங்கள் சொல்வது சரியானதுதான். ஆனால் புதிய தலைமுறை நடு நிலைமை தவறாது கயிறு மேல் நடக்கிறார்கள்.ஏனென்று தெரியவில்லை. புதிய தலைமுறை மற்றும் புது யுகம் அப்படியே இருந்து போகட்டும். அட்லீஸ்ட் “வேந்தர்” டிவியை ஆகிலும் (test னை சீக்கிரம் முடித்து) கூட்டணிக்கு ஆதரவாக நடத்தலாமே! அவர்களுக்கெல்லாம் யார் சொல்லுவது? கையில் வெண்ணை வைத்து கொண்டு நெய்க்கு நாம் அலையவேண்டும்? Lotus டிவி எங்கு தெரியவில்லையோ அங்கு தெரிவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். அது ஒன்றும் பெரிய problem அல்ல. ஆனால் அந்த தாமரை டிவி யினர் நம்ம பிஜேபி காரர்களைப் போன்றே ஏனோதானோ ஆட்கள். இது தேர்தல் நேரமாச்சே. மற்ற டிவி சேனல் காரர்கள் எப்படி நடக்கின்றனர் என்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டாமா? சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை.

  இதன் கட்டுரையாளர் திரு சரவணன் அவர்களுக்கு நன்றி சொல்ல காத்திருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அந்த நன்றியை பெற்று கொள்ள அவர் இன்னும் எனக்கு கமெண்ட் மூலம் பதில் சொல்லவில்லை. இதுதான் பிஜேபி.

 12. Thamizharkal evvaluvu kuruhiya buddhi enpathai therinthu kolla udhaviyathu

 13. காங்கிரசு கட்சியின் முக்கியமாக நேரு குடும்பத்தினரின் ப்ரொஃபைல்களைப்படித்த பின்புதான் தெரிந்தது இந்தியா ஒரு படுபாதாளத்தை நோக்கி எந்தவித உணர்வும் இன்றி சென்றுகொண்டிருப்பது புரிந்தது.. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி காங்கிரசு கட்சியை விடுதலைக்குப்பின்னர் கலைத்துவிடச்சொன்னது எவ்வளவு நியாயமானது என்று உணர்ந்தேன். மக்களின் நல்வாழ்வுக்காக எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் ஆட்சியில் இருக்க அலையும் இந்தக்காங்கிரசுக்கட்சி கலைக்கப்படவேண்டும்..மேலும் அதில் இப்போது பங்குபெற்றுள்ள ஊழல் பெருச்சாளிகள் எந்தக்கட்சி ஆரம்பித்தாலும் அதையும் மக்கள் படுதோல்வி அடையச்செய்ய வேண்டும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *