ஜே.சி.குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம்

கடந்த 2026 ஆகஸ்டு 8 அன்று திருப்பூரில் அறம் அறக்கட்டளையின் ஏகாதசி உரைகள் 2026 நிகழ்வில் கு.சிவகுமார் ஆற்றிய பேருரையின் வீடியோ பதிவு.

“மகாத்மா காந்தியை சந்தித்து குமரப்பா அடைந்த மாற்றத்திலிருந்து ஆரம்பித்து – நம் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு பார்வையைக் குறித்த அடிப்படை கேள்விகளுடன் அவரது உரை இதயத்திலிருந்து எழுந்த உரையாக இருந்தது. அவருக்கு தாம் பேசியது சிறப்பான பேச்சாக இல்லையோ என்கிற ஐயம் இருந்தது. உண்மையில் தேவையற்ற ஐயம். அவரது உரை முழுக்க குமரப்பாவின் கோட்பாடுகளுடன் நிற்காது அந்த கோட்பாடுகளை திருப்பூரின் வரலாற்றுப்பாதையிலிருந்தும், இன்றைய தொழில்-பொருளாதாரச் சூழலிலிருந்தும், தம் சொந்த அனுபவங்களிலிருந்தும் இணைத்து பேசியமை ஒரு சராசரி உரையாக இல்லாமல் சாராம்சமும் இதயமும் இணைந்த சிறப்பானதோர் உரையாக அமைந்தது” என்று அரவிந்தன் நீலகண்டன் இந்த நிகழ்வு பற்றிய பதிவில் குறிப்பிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *