வன்முறையே வரலாறாய்… – 14

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ’அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

இந்தியாவிற்கு இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொண்டு வந்த போர் நியதிகள் (code of war) அனைத்தும் குரானையும், சுன்னாவையும் அடிப்படையாகக் கொண்டவை. இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் எழுதிய குறிப்புகளின்படி, முஸ்லிம் படைகள் போர்க்களத்திலிருக்கும் அத்தனை எதிரி சிப்பாய்களையும் கொல்வது என்பதே பொது நியதி எனத் தெரிகிறது. முஸ்லிம் படைகள் போரில் வென்ற பிறகு அருகிலிருக்கும் கிராம, நகரங்களுக்குச் சென்று அங்கிருக்கும் போரிடும் வயதுடைய அனைத்து ஆண்களையும் கொலை செய்வார்கள். ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து அங்கிருக்கும் பொருட்களைக் கொள்ளையடிப்பதுடன், அந்தக் கிராமங்களையும், நகரங்களையும் தீக்கிரையாக்குவார்கள்.

காஃபிர் கிராமத்து, நகரத்து மக்கள் மிகவும் நம்பும் பிராமண அர்ச்சகர்கள் மற்றும் பவுத்த பிட்சுகள் மிக முக்கியமாகக் குறிவைத்துக் கொல்லப்படுவார்கள். காஃபிர்களின் நம்பிக்கைகளைக் கற்றுக் கொடுக்கும் இந்து மற்றும் ஜைனக் கோவில்கள், பவுத்த மடாலயங்கள், சீக்கிய குருத்வாராக்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் அவர்களால் அவமதிக்கப்பட்டு, அழித்து, இடிக்கப்படும். அங்கிருக்கும் பெண்களும், குழந்தைகளும் மிக அதிக அளவில் கைப்பற்றப்பட்டு அடிமைகளாக்கப் படுவார்கள்.

அவ்வாறு கைப்பற்றப்படும் அழகான இளம்பெண்களைத் தங்களின் பாலியல் அடிமைகளாக வைத்துக் கொள்வதுடன், வீட்டு வேலைகளுக்கும் இஸ்லாமியர்களால் உபயோகப்படுத்தப்படுவார்கள். மிகுந்த அனைவரும் அடிமைச் சந்தையில் விற்பனை செய்பப்படுவார்கள். அடிக்கப்படும் கொள்ளையின் அளவு எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களின் வெற்றிகளின் பெருமையும் அதிகரிக்குமாதலால் கண்மூடித்தனமான, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. அதுகுறித்து அவர்களின் வரலாற்றாசிரியர்கள் பெருமையுடன் எழுதி வைத்தார்கள்.

போர்களில் அதிக அளவிலான காஃபிர்கள் கொல்லப்படுகையில் – முகமது கோரி, குத்புதின் ஐபக், பாபர் போன்றவர்கள் – அந்தக் காஃபிர்களின் தலைகளை வெட்டியெடுத்து அதனைத் தங்களின் “வெற்றிக் கோபுரமாக” அடுக்கி வைத்து மகிழ்ந்தார்கள்.

History_of_mohammeden_INdia_Ferishtaதக்காணத்தை ஆண்ட சுல்தான் அஹமத்-ஷா-பாமானியின் (1422-36) விஜயநகரப் படையெடுப்பைக் குறித்து எழுதும் ஃபெரிஸ்ட்டா, “சுல்தான் செல்லுமிடமெல்லாம் ஆண், பெண், குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்று குவித்தான். பொதுமக்கள் எவ்விதத்திலும் போர்களில் பாதிக்கக் கூடாது என அவனுக்கு முன் ஆண்ட அவனது மாமனான முகமது ஷாவிற்கும், விஜயநகர ராயர்களுக்கும் உண்டான ஒப்பந்தத்தை அவன் மதிக்கவே இல்லை. கொல்லப்பட்ட காஃபிர்களின் என்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியதும் அவன் அந்தக் கொலைகளை மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைத்து, அந்தக் கொலைகளைக் கொண்டாட விருந்துண்டு மகிழ்ந்தான். காஃபிர்களின் கோவில் சிலைகளை உடைத்ததுடன், பிராமணர்கள் நடத்தி வந்த பள்ளிகளையும் நொறுக்கினான்” என்கிறார்.

முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களின் இவ்விதமன காட்டுமிராண்டிச் செய்கைகளுக்கு அடிப்படையாக அல்லா குரானில் அவர்களுக்கு இட்ட காஃபிர்களுக்கு எதிரான ஜிகாதையும், “இறைதூதரின்” வாழ்க்கைமுறையையும் அவர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றியதே காரணம். “இறைதூதர்” யூதப் பழங்குடிகளான மதீனாவின் பானு குரைஸா (627) மற்றும் கைபாரில் (628) படையெடுத்த போது அந்தப் பழங்குடிகளிடம் அவர் நடந்து கொண்ட முறைகளே பிற்காலத்தில் ஜிகாதிகளான இவர்களால் முன்னுதராணமாகப் பின்பற்றப்பட்டன.

இந்து மற்றும் இஸ்லாமிய போர் நியதிகளின் இடையே உள்ள மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் சுல்தான் முகமது கோரிக்கும், டெல்லியை ஆண்ட ப்ரித்விராஜ் சவுஹானுக்கும் அஜ்மீரில் (1191) நடந்தே போர்களே சிறந்த உதாரணம். இவர்களுக்கிடையே நடந்த முதல் போரில் முகமது கோரி தோற்கடிக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டான். வட இந்திய எல்லையில் முகமது கோரி நடத்திய வெறியாட்டங்கள், படுகொலைகள், கொள்ளைகள் அனைத்தையும் மன்னித்த ப்ரித்விராஜ் சவுகான், முகமது கோரியை அவமானப்படுத்த, தண்டனைக்குள்ளாக்க விருப்பமில்லாமல் அவனை மரியாதையுடன் விடுதலை செய்தார்.

இந்திய வரலாற்றின் மிகப் பெரும் தவறுகளில் ஒன்று அது.

விடுதலையான ஒரு சில மாதங்களிலேயே மீண்டும் வலிமையுடன் படையெடுத்த முகமது கோரி, ப்ரித்விராஜ் சவுஹானைத் தோல்விறச் செய்து அவனைச் சிறைப்பிடித்தான். ப்ரித்விராஜ் சவுஹான் அவனுக்குக் காட்டிய இரக்கத்தை மீண்டும் அளிக்க விரும்பிய கோரி, ப்ரித்விராஜ் சவுஹானின் கண்களைப் பிடுங்கிப் பின்னர் அவரைக் கொன்றான்.

போர் நியதிகளில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஃபெரிஸ்டா காட்டும் இன்னொரு உதாரணத்திலிருந்து பார்க்கலாம்.

1366-ஆம் வருடம் தக்காணத்து சுல்தானான சுல்தான் முகமது ஷா, கிருஷ்ண ராயரின் விஜயநகரத்தை நோக்கிப் படையெடுத்துச் சென்று அங்கிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான காஃபிர்களைத் தாக்கிக் கொல்வதாக அறிவித்ததுடன், “நான் துவங்க இருக்கும் காஃபிர்கள் மீதான படுகொலைகள் அங்கிருக்கும் கர்பிணிப் பெண்களை மட்டுமல்லாது அங்கே முலைகளில் பால் குடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் என்னுடைய வாள் விட்டு வைக்காது” எனச் சூளுரைக்கிறான்.

அதனைத் தொடர்ந்து எதிர்பாராத நேரத்தில் கிருஷ்ண ராயரின் படைகளைத் தாக்கிய முஸ்லிம் படைகள், கிருஷ்ண ராயரின் 10,000 படைவீரர்களைக் கொன்றார்கள். கிருஷ்ண ராயர் தப்பியோடினார். அதன்பிறகும் ரத்தம் குடிக்கும் வெறியடங்காத சுல்தான், விஜய நகரத்திலிருக்கும் அத்தனை குடிமக்களையும் பிடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான்.

இதனைக் கேள்விப்பட்டுப் பதறிய கிருஷ்ண ராயர், சுல்தானுடன் சமாதானம் பேச தூதுவர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் சுல்தான் அந்தத் தூதுவர்களச் சந்திக்க மறுத்துவிடுகிறான். இதனைக் கண்ட சுல்தானின் அருகிலிருக்கும் அவனது ஆலோசகன் சுல்தானிடம் “நீங்கள் ஒரு இலட்சம் காஃபிர்களை மட்டுமே கொல்லப்போவதாகச் சொல்லி இருந்தீர்கள்; இந்து காஃபிர் இனம் மொத்தத்தையும் அல்ல” என்று நினைவூட்டுகிறான். “அதைவிடவும் இரண்டு மடங்கு (இரண்டு இலட்சம்) காஃபிர்கள் இதுவரை இந்தப் போரில் கொல்லப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது” என்று பதில் சொல்கிறான் சுல்தான். ஆக, அந்தப் போரில் மட்டும் விஜயநகரத்தில் இரண்டு இலட்சம் இந்து காஃபிர்கள் சுல்தான் முகமது ஷாவினால் கொல்லப்பட்டார்கள் என்று தெரியவருகிறது.

கிருஷ்ண ராயரின் தூதுவர்கள் ஏராளமான பணத்தை சுல்தானிடம் கொடுத்துத் தாங்கள் பேசுவதைக் கேட்கும்படி மன்றாடுகிறார்கள். அதனை ஃபெரிஸ்டா இவ்வாறு பதிகிறார், “பேசுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட கிருஷ்ண ராயரின் தூதுவர்கள் உலகின் எந்த மதமும் அப்பாவிக் குடிமக்கள் தங்கள் அரசனின் தவறுகளுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்வதில்லை. குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படக் கூடாது. கிருஷ்ண ராயர் தவறு செய்தால் ஒன்றுமறியாத அப்பாவிக் குடிமக்கள் என்ன செய்வாரகள்? என்று கேட்கிறார்கள். அதற்கு சுல்தான், அல்லா எல்லா சிலைவழிபாட்டார்களையும் கொன்றழிக்கச் சொல்லி (குரான் 9:5) உத்தரவிட்டிருக்கிறான். எனவே அதன்படி செய்யவேண்டியது எதுவோ அது செய்யப்படும். உலகின் எந்த சக்தியாலும் அதனை மாற்ற முடியாது என்று பதிலளித்தான்.”

விடாமல் மன்றாடிய தூதுவர்கள் சுல்தானிடம் மனிதாபிமானம் வேண்டிக் கெஞ்சுகிறார்கள். இறுதியில் சுல்தான், தான் இனிவரும் போர்களில் எவரையும் கொல்லப்போவதில்லை என்றும், அவனது எதிரிகளும் அதனையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அந்தத் தூதர்களிடம் சொல்லுகிறார். கிருஷ்ண ராயர் ஏராளமான கப்பம் கட்ட ஒப்புக்கொண்டு தப்பிப் பிழைக்கிறார் என்கிறார் ஃபெரிஸ்டா.

(தொடரும்)

One Reply to “வன்முறையே வரலாறாய்… – 14”

  1. Very aggressive and might trigger unwanted communal tensions if people read this. Please restrict this kind of posts from any parties/communities.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *