வன்முறையே வரலாறாய்… – 16

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ’அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

இந்தியா வந்த சூஃபிக்கள் ஏராளமான காஃபிர் இந்துக்களை தங்களின் பிரச்சாரங்கள் மூலம் “அமைதியான” முறையில் முஸ்லிம்களாக மதம் மாற்றினார்கள் என்பதற்கு வரலாற்றில் எவ்விதமான ஆதாரங்களும் இல்லை. அதையும் விட, பல சூஃபிக்கள் பிற மதத்தவர்களை அடியோடு வெறுத்ததுடன், ஜிகாதி மனோபாவமுடையவர்களாக, ஏன், அவர்களே ஜிகாதிகளாக இருந்ததாகத்தான் வரலாறு நமக்கு எடுத்துக் கூறும் உண்மை.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது அவர்கள் (சூஃபிக்கள்) வாழ்ந்த காலத்தில் இருந்த இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட வரலாறு. அவர்களின் மொழியில் சொல்வதானால், காஃபிரி இந்துக்களால் அல்ல.

முதலில், வங்காளம் முழுமையாக சூஃபிக்களால் “அமைதியான” முறையில் மதம் மாற்றப்பட்டதாக காலம், காலமாக நமக்குக் கூறப்பட்டு வந்த ஒரு விஷயம். ஆனால், அதனை ஆராயப் புகுந்தோமானால் நமக்குக் கிடைக்கும் செய்திகள் அதற்கு நேரெதிராக அமைந்தவை என்பதனைக் காணலாம். வங்காளத்தின் புகழ்பெற்ற சூஃபிக்களான இரண்டு ஜலாலுதீன்கள் – ஷேக் ஜலாலுதீன் தப்ரிஸி (1226-1244) மற்றும் ஷேக் ஷா ஜலால் (1347) – பற்றி சிறிது ஆராய்வோம்.

ஜலாலுதீன் தப்ர்ஸி, வங்காளத்தின் இந்து அரசனான லக்ஷ்மன் சேனாவை பக்தியார் கில்ஜி தோற்கடித்த பின்னர், அவனது படைகளுடன் வங்காளத்திற்கு வந்தவர். இன்றைய மேற்கு வங்காளத்தின் மால்டாவிற்கு அருகிலுள்ள தேவ்தலா என்னுமிடத்தில் குடியேறிய ஜலாலுதீன் தப்ரிஸி, ஏராளமான காஃபிர்களை முஸ்லிம்களாக மதம் மாற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் எந்த மாதிரியான வழி வகைகளைக் கையாண்டார் என்பது சரியாகத் தெரியவில்லை. வங்காளத்தைச் சேர்ந்த சையத் அத்தார் அப்பாஸ் ரிஸ்வி என்ற ஆராய்ச்சியாளர், “தேவ்தலாவிற்கு அருகில் காஃபிர்கள் (இந்து மற்றும் பவுத்தர்கள்) ஒரு பெரிய ஆலயத்தைக் கட்டினதாகவும், ஷேக் தப்ரிஸி அதனை தகர்த்தெறிந்துவிட்டு அங்கே தனது குடியிருப்பைக் கட்டிக் கொண்டதாகவும் தெரிகிறது”.

இந்த ஒரு உதாரணமே ஷேக் தப்ரிஸி எவ்விதமான “அமைதியான” முறைகளை உபயோகித்து வங்காளத்து இந்துக்களை/பவுத்தர்களை முஸ்லிம்களை மதம் மாற்றியிருப்பார் என்று நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

வங்காளத்தின் இன்னொரு புகழ் பெற்ற சூஃபியான ஷேக் ஷா ஜலால், மேற்கு வங்காளத்தில் அமைந்திருக்கும் சில்ஹட்டில் குடியேறினார். இன்றைய பங்களாதேஷி முஸ்லிம்களால் “தேசிய மகா புருஷனாக” அறியப்படும் ஷேக் ஜலால், ஏராளமான பங்களாதேஷி காஃபிர்களை “அமைதியான” முறையில் மத மாற்றம் செய்தவராகப் புகழப்படுகிறார். ஷா ஜலால் சில்ஹட்டில் குடியேறிய சமயம், வங்காளம் இந்து அரசனான கவுர் கோவிந்தா என்பவரால் ஆளப்பட்டு வந்தது. சுல்தான் சம்சுதீன் ஃப்ரோஸ் ஷா இரண்டு முறை கவுர் கோவிந்தாவின் நாட்டின் மீது படையெடுத்தான். அந்த படையெடுப்புகள் அவனது உறவினனான சிக்கந்தர் கான் காஸி என்பவனின் தலைமையில் நடந்தன. ஆனால், அந்த இரண்டு முறைகளும் இஸ்லாமியப் படைகள் கவுர் கோவிந்தாவினால் தோற்கடிக்கப்பட்டன.

islam-peace

கவுர் கோவிந்தாவின் மீதான மூன்றாவது படையெடுப்பு சுல்தானின் தளபதியான நசிருதீன் என்பவனின் தலைமையில் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஷேக் நிஜாமுதீன் அவுலியா அவரது 360 ஜிகாதி சீடர்களை இந்தப் போரில் படையெடுப்பதற்காக தனது பிரதம சீடனான ஷேக் ஜலாலின் தலைமையில் நசிருதீனிடம் அனுப்பி வைத்தான். ஷா ஜலால் வங்காளத்தை தனது சீடர்களுடன் அடைந்து நசிருதீனின் முஸ்லிம் படையினருடன் சேர்ந்து கொள்கிறான். அதனைத் தொடர்ந்து நடந்த கடுமையான சண்டையில் கவுர் கோவிந்தா தோற்கடிக்கப்படுகிறார். எனவே, அந்த வெற்றியும் இஸ்லாமிய கலாச்சாரத்தின்படி ஷா ஜலாலுக்கும் அவரது சீடர்களுக்கும் அளிக்கப்படுகிறது.

இஸ்லாமியப் படைகள் பெறும் ஒவ்வொரு வெற்றியும் பல்லாயிரக்கணக்கான அடிமைகளை அவர்களுக்குச் சொந்தமாக்கியது. அந்த அடிமைகள் உடனடியக முஸ்லிம்களாக மதம் மாற்றுவதே தொடர்ந்து நடைபெற்ற ஒரு வழக்கம். மறுப்பவர்கள் உடனடியாகக் கொல்லப்படுவார்கள். எனவே மேற்கண்ட வெற்றியிலும் பல ஆயிரக்கணக்கான காஃபிர்கள் வாள்முனையில் மதம் மாற்றப்பட்டார்கள். இதனை “அமைதியான” மதமாற்றம் என்பவர்களின் மனோ நிலையை எதில் கொண்டு சேர்ப்பது?

இப்ன்-பதூதா, சில்ஹட்டிற்குச் சென்று அங்கிருந்த ஷா ஜலாலைச் சந்திக்கிறார். அங்கு அவர் கண்டவற்றைக் குறிப்புகளாகவும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். அந்தக் குறிப்புகளே ஷா ஜலால் எந்த மாதிரியான முறைகளை உபயோகித்து அங்கிருந்த காஃபிர்களை மதம் மாற்றினார் என்பதற்கான ஆதாரங்கள். ஷா ஜலால் தனது 700 சீடர்களுடன் இந்தியாவிற்கு புனிதப் போர் (ஜிகாத்) புரிய வந்தவன் என்பனையும், கவுர் கோவிந்தாவின் படைகளை எதிர்த்து கடும் போர் புரிந்தவன் என்பதனையும் இத்துடன் இணைத்துப் பார்க்கையில், அவன் எம்மாதிரியான முறைகளை அப்பாவி காஃபிரி இந்து மற்றும் பவுத்தர்களின் மீது உபயோகித்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை.

இன்னொரு வங்காள சூஃபியான நூர் குத்ப்-இ-ஆலம் என்பவனும் ஏராளமான வங்காள இந்து/பவுத்தர்களை மதம் மாற்றியவன். 1414-ஆம் வருடம் இந்து இளவரசனான கணேசா என்பவன் இஸ்லாமியர்களை எதிர்த்து போரிட்டு வங்காளத்தைக் கைப்பற்றினான். ஒரு இந்து காஃபிர் தங்களை எதிர்த்து வென்றதை உலமாக்களாலும், சூஃபிக்களாலும் ஜீரணிக்க இயலாமல், அவனை அகற்றுவதற்காக வங்காளத்திற்கு வெளியே இருந்த முஸ்லிம் அரசர்களின் உதவியை நாடினார்கள். அதனை ஏற்ற இப்ராஹிம் ஷா ஷார்க்கி என்பவன், வங்காளத்தின் மீது படையெடுத்து இந்து அரசனான கணேசாவைத் தோற்கடித்தான்.

அரசன் கணேசாவிற்கும், இப்ராஹிம் ஷாவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க ஒரு தூதுவனைப் போலச் செயல்பட்ட சூஃபி நூர் குத்ப்-இ-ஆலம், கணேசாவின் பனிரெண்டு வயது மகனான ஜாடு என்பவனைக் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றி, அவனை முஸ்லிமாக மதம் மாற்றிய பின்னர் அந்தச் சிறுவனை வங்காளத்தின் அரியணையில் அமர்த்தினான். அந்தச் சிறுவன் சுல்தான் ஜலாலுதீன் முகமத் என்ற பெயருடன் வங்காளத்தை ஆளத் துவங்கினான். அந்த ஒரு மதமாற்றமே பின்னர் பல இலட்சக்கணக்கான வங்காளத்து இந்து/பவுத்தர்களை கட்டாய மதமாற்றம் செய்வதற்கு அச்சாரமாக அமைந்தது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் உலமாக்களாலும், சூஃபிக்களாலும் பயிற்சியளிக்கப்பட்ட அந்தச் சிறுவன் பின்னாளில் மிகப் பெரும் மதவெறியனானக மாறினான். ஜலாலுதீன் முகமது (1414-31) தனது ஆட்சியின் கீழிருந்த காஃபிர்களை வன்முறையின் மூலம் பெருவாரியாக மதம் மாற்றினான் எனக் கூறுகிறது Cambridge History of India.

இதனைப் பற்றி மேலும் கூறும் வரலாற்றாசிரியரான டாக்டர் ஜேம்ஸ் வைஸ் அவரது Asiatic Society of Bengal (1894) எனும் புத்தகத்தில், “ஜலாலுதின் தனது காஃபிர் குடிமக்களிடம் ஒன்று மதமாற்றம் அல்லது மரணம் என அறிவித்தான்….இதனைத் தொடர்ந்து ஏராளமான இந்துக்கள் காம்ரூப் மற்றும் அஸ்ஸாமிய காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். இருப்பினும் ஜலாலுதீனின் பதினேழு ஆண்டு கால ஆட்சியில் நிகழ்ந்த கட்டாய இஸ்லாமிய மதமாற்றத்திற்கு இணையாக அடுத்த மூன்று நூற்றாண்டுகளிலும் நிகழவில்லை….” எனக் கூறுகிறார்.

*

இனி காஷ்மீரில் ஜிகாதி சூஃபிக்களால் படுபயங்கரமான முறையில் நடந்த கட்டாய மதமாற்றங்களைக் குறித்துச் சிறிது பார்க்கலாம்.

காஷ்மீரில் இந்து காஷ்மீரிகள் சூஃபிக்களால் கட்டாயமான முறையில் மதமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வுகள் பாரசீக நூல்களான பஹாரிஸ்தான்-இ-ஷாஹி மற்றும் தாரிக்-இ-காஷ்மீர் (1620) ஆகிய நூல்களில் விரிவாக எழுதப்பட்டுள்ளன. காஷ்மீருக்கு வந்த சூஃபிக்களில் மிக முக்கியமானவன் அமிர்-ஷம்சுதின் முகமத் இராக்கி என்பவன். அப்போது காஷ்மீரை ஆண்டு கொண்டிருந்த மாலிக் மூசா ராணா (1501) என்பவனுடன் நெருக்கமான உறவு ஷம்சுதின் இராக்கிக்கு உண்டாகியது.

ராணாவிற்கு முன் அங்கு ஆட்சி செய்த சுல்தான் ஜயினுலாப்தீன் (1423-74) மதச் சார்பற்ற மனோபாவமுடையவன். இந்துக்கள் அவர்களின் மதக் கோட்பாடுகளைத் தொடர்வதனை ஜயினுலாப்தீன் எந்த வகையிலும் தடுக்க முயலவில்லை. ஜயினுலாப்தீனுக்கு முன்னால் ஆட்சி புரிந்த இஸ்லாமிய அடிப்படைவாதியான சிக்கந்தருக்கு நேரேதிரான எண்ணமுடைய ஜயினுலாப்தீனால் இந்துமதம் காஷ்மீரில் தழைத்தது. ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

ராணா பொறுப்பேற்றதுடன் தனது வெறியாட்டத்தைத் துவங்கிய சூஃபி சம்சுதீன் இராக்கி பற்றிக் கூறும் பஹாரிஸ்தான்-இ-ஷாஹி, “சம்சுதீன் இராக்கி காஷ்மீரிலிருந்த பல பெரும் இந்துக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கியதுடன், இந்துக் கடவுள் சிலைகளை உடைத்துத் தகர்த்தான். இடிக்கப்பட்ட ஒவ்வொரு கோவிலின் மீதும் ஒரு மசூதியைக் கட்டும்படி உத்தரவிட்ட இராக்கி, அங்கு இஸ்லாமிய முறையிலான பிரார்த்தனைகளையும் நடத்தத் துவங்கினான்” எனக் கூறுகிறது.

இதனைக் குறித்து தொடர்ந்து ஆராய்வோம்.

(தொடரும்)

One Reply to “வன்முறையே வரலாறாய்… – 16”

  1. இதோ சிரியா நாட்டில் முசுலீம்களால் நடக்கும் வன்முறை வெறியாட்டம் .. தங்கள் சொந்த முஸ்லிம் மக்களையே பலி கொள்ளும் வன்முறையாளர்கள் தான் இசுலாமியர்கள்.. இதற்க்கு பெயர் தான் அமைதி மார்க்கம் ..

    http://www.youtube.com/watch?v=zZFlSKv9XQc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *