இந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்

இந்திய அரசியலைப்புச் சட்டம்  எல்லா குடிமக்களுக்கும் அடிப்படை சம உரிமைகளையும்,  வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.  ஆனால்,  தொடர்ந்து பல பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியும் இன்னபிற போலி மதச்சார்பின்மை கட்சிகளும்   சிறுபான்மை மதத்தினரை,  குறிப்பாக இஸ்லாமியர்களை தாஜா செய்வதற்காக சட்டங்களையும்  நெறிமுறைகளையும்  ஒடித்து வளைத்து திரித்து வந்துள்ளனர்.

இஸ்லாமியர்களை  சுயமரியாதை கொண்ட குடிமக்களாகக் கருதாமல் தாஜா செய்ய வேண்டிய வாக்கு வங்கிகளாகவே  இந்தக் கட்சிகள் பாவித்ததால்,  இரண்டு தீய விளைவுகள் ஏற்பட்டுள்ளது.  ஒன்று,  இந்தியாவில் பெரும்பான்மை மதத்தினராக உள்ள  இந்துக்களுக்கு  கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என்று பல துறைகளிலும்  அநீதி இழைக்கப்  பட்டுள்ளது.  இரண்டு,  ஏற்கனவே ஆக்கிரமிப்பு  மனநிலை கொண்ட கிறிஸ்தவ, இஸ்லாமிய மத அதிகார பீடங்கள் இந்த சலுகைகள் ஏதோ தங்களுக்கு பட்டயமளிக்கப் பட்ட உரிமைகள்  என்ற அளவில் அராஜகப் போக்குடன் நடந்து கொள்ளவும் இது வழி செய்திருக்கிறது.

இந்த பிரசினையின்  சில அம்சங்களை விளக்கும் முகமாக  தில்லியைச் சேர்ந்த சமர்த் டிரஸ்ட் என்ற அமைப்பு  “தி மெஜாரிடி ரிப்போர்ட்”  என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் தமிழ் வடிவம் இங்கே.

https://tamilhindu.com/wp-content/uploads/2014/03/the-majority-report-tamil.pdf

தமிழ் மொழிபெயர்ப்பு:  ஸ்ரீவைஷ்ணவ  ஸ்ரீ கிருஷ்ணமாசாரியார், பாஞ்சஜன்யம் இதழின் ஆசிரியர்.

the-majority-report-tamil

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *