மோடி திருமணத்தை மறைத்தாரா?

 

Modi and his wife
ஜசோதாபென் – நரேந்திர மோடி
அர்ப்பணமயமான வாழ்வுக்கு உதாரணங்கள்

இதுநாள் வரை நரேந்திர மோடி திருமணமாகாதவர், பிரம்மச்சாரி என்று கருதப்பட்டவர், வதோதரா தொகுதியில் போட்டியிட  தன்னுடைய வேட்பு மனுவைத் தக்கல் செய்தபோது,  தான் மணமானவர் என்பதையும், மனைவியின் பெயர் யசோதா பென் என்பதையும் சொல்லியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  குறிப்பாக காங்கிரஸ்,  தி.மு.க. ஆகிய கட்சிகளிடையே இந்த விவகாரம், வெறும் வாயை மெல்லுவோர்க்குக் கிடைத்த அவலாகவே பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய தலைப்பாகப் பேசப்படுகிறது. நாட்டில் நிலவும் ஏராளமான பிரச்னைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், விழுப்புரத்தில் மு.கருணாநிதி தன் அருகில் துணைவியார் ராசாத்தி அம்மாளை (ஒருகாலத்தில் இவரை யார் என்றே தெரியாது என்று சொன்ன புண்ணியவான் தான் கலாகார்) உட்காரவைத்துக் கொண்டு மோடியின் ரகசியம் ஒரு மோடி மஸ்தான் வேலை என்றெல்லாம் கேலி பேசக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறது. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்றொரு சொல்வழக்கு உண்டு. போகட்டும், இந்தச் செய்தி பற்றிய விவரங்களை ஒரு பத்திரிகை (இந்தியா டுடே) வெளியிட்டிருக்கிறது.

இந்த பிரச்னை குறித்து நரேந்திர மோடியின் மூத்த சகோதரர் சோமபாய் மோடி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர்கள் குடும்பம் குஜராத்தின் கிராமப் பகுதியில் இருந்த ஒரு ஏழ்மையான குடும்பம் என்றும், அங்கு அவர்களின் வழக்கப்படி நரேந்திர மோடியின் இளம் வயதிலேயே அவருக்கு விவரம் புரிவதற்கு முன்பாக அவர் விருப்பம் இல்லாமலேயே இந்த பெண்ணைத் திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும், அதன் பின்னர் அவருடைய கவனம் நாட்டு நன்மையைக் கருதித் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணிபுரிய வீட்டைவிட்டு வெளியேறி பொதுவாழ்வில் ஈடுபட்டுவிட்டதாகவும்,  யசோதா பென் தன் பெற்றோருடன் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு கல்வித்துறையில் பணியாற்றிவிட்டு பணிநிறைவு பெற்று தன் சகோதரருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதையெல்லாம் யார் காதில் வாங்கிக் கொள்வார்கள்? கல்யாணம் செய்தாலும் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வரும் ஒரு உத்தமரைப் பற்றி,  என்னவேண்டுமாயினும் பேசுவதா?

முன்பு சிதம்பரம் ஜெயராமனின் சகோதரியைக் கல்யாணம் செய்துகொண்டு குடித்தனம் செய்தது, அங்கு மு.க.முத்து பிறந்தது,  பிறகு தயாளு அம்மாளுடன் திருமணம்- அவருக்குப் பிள்ளைகள் பிறந்தது,  பின்னர் அவர்கள் எல்லாம் இருக்கும்போதே மூன்றாவதாக துணைவியார் அமைந்தது, அவருக்கு ஒரு பெண் பிறந்தது – போன்ற சுயசைதைகளை மறந்துவிட்டு , மோடியை விமர்சிக்கிறார் கருணாநிதி.

ராசாத்தி அம்மாளுடன் கருணாநிதியின் திருமணம் எந்தக் காலகட்டத்தில் வெளியில் தெரிய வந்தது?  சர்க்காரியா கமிஷனில் யார் இந்த அம்மையார் என்ற கேள்விக்கு “என் மகள் கனிமொழியின் தாயார்” என்று பதிலளித்தவர் அல்லவா கருணாநிதி?

இதையெல்லாம் சுலபமாக மறந்துவிட்டு, ஏதோ விவரம் அறியாத வயதில் நடந்த மோடியின் பால்ய வயது திருமணத்தையும்,  அதில் விருப்பமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி ஒரு துறவியைப் போல நாட்டுக்குச் சேவை செய்யும் மோடியையும்  பார்த்து,  மேடையில் தன் அருகில் துணையை அமர்த்திக் கொண்டு, ஆயிரக் கணக்கானவர் முன்னிலையில் கேலி பேசுகிறார் கலையுள்ளம் படைத்த கண்ணதாசனின் நண்பர் (நன்றி: வனவாசம்).

நாட்டு மக்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்னாயிற்று? மவுன்ட் ரோடில் டாடா கொடுத்த இடம் என்ன ஆயிற்று? என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது,  ‘மோடி சின்ன வயசுல கல்யாணம் பண்ணிட்டாராம், ஆகாகா இதுவரை இதை யாருக்கும் சொல்லலையே, ஏன் இந்த மர்மம்?’  என்றெல்லாம் திண்ணைப் பேச்சு பேசுவது ஒரு தலைவருக்கு அழகாகவா இருக்கிறது? கேவலம்.

நரேந்திர மோடியின் மூத்த சகோதரர் சொல்கிறார்,  இந்தத் திருமணம் நரேந்திர மோடியின் விருப்பமில்லாமல், விவரம் புரியாத வயதில் நடத்தப்பட்டது. அவர்கள் பிறந்த இனத்து வழக்கப்படி குழந்தைத் திருமணம் அந்தக் காலத்தில் நடந்துவிட்டது.  அது விவரம் புரிந்தபின் புதுப்பிக்கப்படவில்லை.  மோடியோ தனக்குத் திருமணம் போன்றவற்றில் ஆர்வம் இல்லை, சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் நாட்டுக்கு உழைப்பதே என் நோக்கம் என்று போய்விட்டார் என்று சொல்லியிருக்கிறார்.

நமக்கெப்படி இவரைப் போன்றவர்களின் நல்ல உள்ளம் புரியப் போகிறது?  பசி ஏப்பக்காரனைப் பார்த்துப் புளிச்ச ஏப்பக்காரன் கேலி பேசுவதைப் போல, விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் செம்மாந்து பேசிய அந்தப் பேச்சையும், அருகில் அமர்ந்திருப்பவரையும் பார்க்கும்போது அட கேடுகெட்ட தமிழ்நாடே, நீ மட்டும்தான் இதுபோன்ற கேவலங்களைச் சகித்துக் கொண்டிருக்க முடியும் என்று கேட்கத் தோன்றியது.

மோடி வேட்புமனு தாக்கல்
மோடி வேட்புமனு தாக்கல்

நரேந்திர மோடி குறித்த இந்த விவரங்களையெல்லாம் பத்திரிகைகளுக்குச் சொன்ன சோமபாய் மோடி, மூத்த குடிமக்களுக்கென்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஓர் இல்லத்தை நடத்திக்கொண்டு மிக எளிமையாக வாழ்ந்து கொண்டிருப்பவர். இவர் தன்னுடைய அறிக்கையில், குஜராத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியில் வாழும் எளிய குடும்பத்தின் பின்னணி, பழக்க வழக்கங்கள் பற்றி நன்கு தெரிந்துகொண்டு இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டுமே தவிர, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வாய்க்கு வந்ததை பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் வாழும் சில ஆட்களைப் பார்த்துத் தான் அவர் இந்த விளக்கங்களைச் சொல்லியிருக்க வேண்டும். இங்குள்ளவர்கள் ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் வல்லமை படைத்தவர்கள். பகாசுரன் போல இரண்டு லட்சம் கோடிகளை விழுங்கி ஏப்பம் விட்டபிறகு,  ஒன்றுமே நடக்காதது போல நடிப்பதில் வல்லவர்கள் என்பதை அவர் தெரிந்து வைத்திருப்பார் போலும்.

இந்த ரகசியத்தை இத்தனை நாள் மூடி வைத்திருந்தாரே மோடி,  ஏன்? என சினிமா வசனம் பேசுகிறார்கள். ஆம், இதற்கு முந்தி என் பிள்ளைக்குத் தாயார் என்றெல்லாம் சொல்லி ஊரை ஏமாற்றவில்லை, நேரடியாக மனைவி  என்று வேட்பு மனுவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் எழுதாமல் வெறுமே விட்டிருந்தார். பொய்யா சொன்னார், சிலரைப் போல?

வயது வந்து விவரம் தெரிந்து திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ்ந்துவிட்டு, கைகழுவிவிட்டா ஓடினார்? சின்ன வயதிலே பொம்மைத் திருமணம் ஆனபின், அது பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறி ஊருக்கு உழைக்கும் ஒருவரை என்ன சொல்லி கேலி செய்வது? மனசாட்சி உள்ளவர்கள் தங்களை கண்ணாடி முன் நின்றுகொண்டு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்.

மோடி நாட்டிற்காக தனது வாழ்வை தியாகம் செய்தவர் என்றால், அவரது மனைவி யசோதா பென்னொ, மோடி வற்புறுத்தியும்கூட மறுமணம செய்துகொள்ளாமல் ஒரு துறவி  போல வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெற்ற தாய், சொந்த சகோதரர்களையே கண்டுகொள்ளாத துறவி மனநிலை கொண்ட மோடிக்கு யசோதா பென்னை மறந்தது பெரிய விஷயமல்ல. இப்போதும்கூட, தங்கள் திருமண வாழ்வு  பொம்மைக் கல்யாணம் தான் என்ற போதிலும் அதை வெளியே சொன்னால் பிரச்னை என்று தெரிந்தும்  துணிவுடன் கூறியிருப்பதற்கு காரணம் யசோதா பென் தான்.  மோடியை விஞ்சும் தியாக வாழ்க்கையை  வாழ்ந்திருப்பவர் அவர்தம் மனைவியல்லவா?

இபோதும்கூட, ஒவ்வொரு பாஜக பொதுக்கூட்டத்திலும் மோடி,  தனக்கு யாரும் இல்லை, யாருக்காகவும் நான் செல்வம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவருகிறார்.  யசோதா பென் அவர்தம் மனைவி என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல, மோடிக்கு யாரும் துணையில்லை என்பதும் உண்மை அல்லவா?

சில நாட்களாகவே காங்கிரஸிலுள்ள திக்விஜய் சிங் போன்ற சில அரை வேக்காடுகள் மோடி என்னவோ பெரிய இமாலய தவற்றைச் செய்துவிட்டு மறைப்பவரைப் போல சித்தரித்து, இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது, மனைவி பெயர் எனக்குத் தெரியும் என்றெல்லாம் மார்தட்டிக் கொண்டு சில்லரைத்தனமாக அலைவதைப் பார்த்துவிட்டு,  மோடி நடந்த உண்மைகளை இந்த முறை தெளிவாக உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளார்.  புத்தி உள்ளவர்கள் புரிந்துகொண்டு, அவரையும் அவரது நேர்மையையும் பாராட்டுவார்கள். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்று,  அவர் இங்கு ஊளையிடுபவர்கள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்.

வம்பர்களும், தம் குற்றங்களைக் காணாமல் அடுத்தவர்களைப் பற்றி வம்புக்கு அலையும் மனிதர்களும் எங்கேயும் உண்டு அல்லவா? 1992இல் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது. குஜராத்தில்  ‘அபிக்ஞான்’  எனும் வாரப் பத்திரிகை முதன் முதலில் இந்த விவரங்களை வெளியிட்டது. அப்போது கல்வித்துறையில் பணியில் இருந்துகொண்டு தன் சகோதரன் வீட்டில் வசித்து வந்த யசோதா பென்னைக் கண்டு கேட்டதற்கு அவர் சொல்லிவிட்டார், இது முழுக்க தங்கள் சொந்த குடும்பப் பிரச்சனை, இதில் பத்திரிகைகளோ அன்னியர்களோ தலையிட தேவையில்லை என்று சொல்லி, நரேந்திர மோடியின் பணிகள் சிறந்து விளங்க தன்னுடைய வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வளவையும் சொன்ன பிறகாவது அக்கப்போருக்கு அலையும் பேர்வழிகள் கெளரவமாக வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்ன போயிற்று?   ‘போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்’ கண்டுகொள்ளாத ஸ்திதப்ரக்ஞரை என்ன செய்துவிடும்? கர்மயோகிகளைக் களங்கப்படுத்த காரிருள் மனத்தவர்களால் என்று முடியாது.

***

மோடி பிரதமராக பிரார்த்தனை செய்யும் மனைவி

மேஹ்சானா, ஏப். 12: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக அவருடைய மனைவி யசோதாபென் விரதமிருந்து பிரார்த்தனை செய்துவருகிறார்.  மோடியை விட்டுப் பிரிந்து வாழ்ந்துவரும் அவர், புனித யாத்திரை செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

யசோதா பென்
யசோதா பென்

இதுகுறித்து யசோதாபென்னின் சகோதரர் கமலேஷ் கூறியதாவது:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்று யசோதாபென் மனப்பூர்வமாக விரும்புகிறார். மோடியை பிரதமராக பார்க்கும் வரை  ‘அரிசி உணவு சாப்பிடமாட்டேன், காலணி அணியமாட்டேன்’ என்று அவர் உறுதியோடு இருக்கிறார். மேலும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார் என்று கமலேஷ் கூறினார்.

ஓய்வுபெற்ற ஆசிரியையான யசோதாபென் (62), குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஈஸ்வர்வாடா கிராமத்தில், தனது 2 சகோதரர்களுடன் வசித்து வருகிறார். மிகுந்த கடவுள் பக்தி கொண்ட யசோதாபென் தினமும் அதிகாலையில் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தினமும் செய்தித்தாள்கள் படிக்கும், தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் கொண்டுள்ள அவர், மோடியைப் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறார். “யாரையும் எதிர்த்துப் பேசாத சுபாவம் கொண்ட ஜசோதாபென், மோடியைப் பற்றி யாராவது தவறாக விமர்சனம் செய்தால் கோபமாகி விடுகிறார்” என்கிறார் அவரது சகோதரர் கமலேஷ்.

திருமண வாழ்க்கை: குடும்பத்தில் 4 குழந்தைகளில் மூத்தவராக பிறந்த யசோதாபென்னுக்கு 17ஆவது வயதில், 1968ஆம் ஆண்டு நரேந்திர மோடியுடன் திருமணம் நடைபெற்றது.

தனது திருமண வாழ்க்கை குறித்து குஜராத் மாநிலத்தில் வெளியாகும் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் இருவரும் மிகக் குறுகிய காலமே சேர்ந்து வாழ்ந்தோம். திருமணம் நடைபெற்றவுடனே ஆசிரியர் பயிற்சியில் நான் சேர விரும்பியதால் அதற்கு ஊக்கமளித்த மோடி, ஆர்.எஸ்.எஸ் இயக்க பிரசாரகர் ஆவதற்காக என்னை விட்டுப் பிரிந்து சென்றார்” என்று கூறினார்.

தினமணி (13.04.2014)

.

27 Replies to “மோடி திருமணத்தை மறைத்தாரா?”

 1. தியாகம் என்றால் என்ன? துறவு என்றால் என்ன? கர்ம யோகி என்றால் யார்? இவற்றையெல்லாம் நமது மோதி ஜி அவர்களைப்பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
  யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. மத்தியில் மிக அதிகமான எம்பிக்களை பாராளுமன்றத்தில் கொண்டு வலுவான அரசை மானனீய ஸ்ரீ மோதி ஜியின் தலைமையில் நாம் அமைக்க இருக்கிறோம். ஹர ஹர மஹாதேவ. வெல்க வெல்க பாரத அன்னை.

 2. எப்படிப் பார்த்தாலும் சட்டப்படி செல்லாத ஒரு திருமணம். இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது எதிர்க்கட்சிகள் தான். 🙁 நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

 3. சுவாமி விவேகானந்தரையே அவர் வெளிநாட்டு பக்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை வைத்துக் கேவலமாகப் பேசிய எச்சில் நாக்குகளுக்கு
  மோடியைப்பற்றி அவதூறு கிளப்ப வாய்ப்புக்கிடைத்தால் விட்டுவிடுவார்களா?

  மோடியைப்பற்றிப் பேசும் மூத்த அரசியல்வாதியின் பெண்ண்ணசை லட்சணத்தை கண்ணதாசனின் வனவாசத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

  ‘ஈயம் பித்தளையைப்பார்த்து சிரித்ததாம்’ என்பதைவிட ‘பித்தளை தங்கத்தைப் பார்த்து சிரித்ததாம்’ என்பதே சரி.

 4. நேரு நள்ளிரவில் விமானத்தில் லண்டன் வருகிறார். தான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு போவார் என்று பார்த்தால் நேராக லேடி மவுண்ட் பேட்டனைப்பார்க்க செல்லுகிறார். மவுண்ட் பேட்டன் அப்போது லண்டனில் இல்லை. நேருவுக்காக நைட் கவுனோடு லேடி எட்வினா மவுண்ட்பேட்டன் கதவை திறந்து விடுகிற போட்டோ ’தி டெய்லி ஹெரால்ட்’ செய்தித்தாளில் வருகிறது. தலைப்பு “Lady Mountbatten’s Midnight Visitor.’’ லண்டனில் லார்ட் மவுண்ட் பேட்டன் அன்று இல்லை என்பதையும் டெய்லி ஹெரால்ட் சொல்கிறது.
  கிருஷ்ணமேனன் அன்று பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கைப் பார்த்து குரைக்கிறார். “ டெய்லி ஹெரால்ட் பாத்தியாய்யா? நேரு ஒன் மேல ரொம்ப கோபமா இருக்கிறார்”
  குஷ்வந்த் சிங் பரிதாபமாக “எனக்கெப்படிங்க தெரியும். நேரு ஹோட்டலுக்குப் போகாம இப்படி அந்தம்மாவைப் பாக்கப்போவாருன்னு.”

  பத்திரிக்கையாளர்களுக்கு நேரு தன் ஹோட்டலில் பேட்டி கொடுக்கிற காட்சி.
  கிருஷ்ணமேனன் தலையைத்தொங்கப்போட்டு தூங்குகிறார். நேரு உடனே குஷ்வந்த் சிங்கிடம் கோபமாய் சொல்கிறார். “ என்னய்யா இது உங்க ஹை கமிஷனருக்கு உடம்பு சரியில்ல போலருக்கு. You must not expose him to outsiders like this ” ஆனால் கொஞ்ச நேரத்தில் அத்தனை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நேருவும் தலையை நெஞ்சில தொங்கப்போட்டு நித்திரையில் ஆழ்கிறார்.

  Pandit Nehru had a couple of days free to indulge in his favourite hobbies, buying books and seeing Lady Mountbatten.

  நேரு ஒரு க்ரீக் ரெஸ்டாரெண்ட்டுக்கு வரும்படி லேடி மவுண்ட்பேட்டனை அழைக்கிறார். ரெஸ்டாரண்ட் ஓனர் உடனே பத்திரிக்கைகளுக்கு தொலைபேசி தகவல் கொடுக்கிறார். ரெஸ்டாரெண்ட்டுக்கு பப்ளிசிட்டியாம்! அடுத்த நாள் காலை பேப்பர்களில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின்றன.
  பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கிடம் நேரு எரிச்சலுடன் சொல்கிறார்.” You have strange notions of publicity!”

 5. இப்படி ஒரு வாழ்க்கை அனைவருக்கும் கிட்டி விடுவதில்லை

  மோடி தலைமையில் வாழ நாம் கொடுத்து வைத்தவர்கள்

  ஜூட்டு தியாகராஜன்

 6. மோடி மனைவி விவகாரத்தால் கருணாநிதியின் அந்தரங்கள் வெளியில் பட்டவர்தனாக தெரியவருகிறது அரசியில் சாக்கடை கலக்கவேண்டாம்

 7. நாளைய தலைப்புச் செய்தி: குஜராத் மாநிலம் மோர்வடா கிராமத்தில் வசிக்கும் அனாமிகா பென் படேல். இவர் மோடியுடன் ஒண்ணாம் கிளாஸ் படித்தவர். இவர் மோடி ஒண்ணாம் கிளாஸ் படிக்கும் போது தனக்குத் தராமல் கமர்கட் சாப்பிட்டதாகவும், தனக்கு கேட்டபோது தராமல் தின்றதோடு, தன் ஜடையை பிடித்து இழுத்து வவவவே என்று காட்டியதாகவும் கூறினார். நாளை மறுநாள் செய்தி. பெண்களை மதிக்காத இப்படிப்பட்டவர் எப்படி இந்த நாட்டுக்கு தலைமை தாங்க முடியம்? ராகுல் கேள்வி?

 8. எல்லாம் நன்மைக்கே . நேரு மற்றும் கலைஞரின் அந்தரங்கங்களை அறியாதவர்களுக்கு தெரிந்துகொள்ள கிடைத்த அரிய வாய்ப்பு .

 9. For 19 years (till she retired in 2009) Jashodaben taught children of the minority community in Rajosana, a village where Muslims comprise 60% of the population. Sarpanch of the village, Rafiq Basan, says that Jashodaben was a loving teacher who never discriminated between Hindu and Muslim children. “She used to keep Ma Santoshi fast on Fridays and would lovingly distribute prasad of gud-chana (jaggery and roasted horse-gram) to Muslim children. If a child was not well and missed school, she would visit him or her at home,” says Basan. (Ref Hindu voice E.bulletine- 67)

 10. For 19 years (till she retired in 2009) Jashodaben taught children of the minority community in Rajosana,
  a village where Muslims comprise 60% of the population. Sarpanch of the village, Rafiq Basan, says that Jashodaben was a loving teacher who never discriminated between Hindu and Muslim children. “She used to keep Ma Santoshi fast on Fridays and would lovingly distribute prasad of gud-chana (jaggery and roasted horse-gram) to Muslim children. If a child was not well and missed school, she would visit him or her at home,” says Basan. (Ref Hindu voice E.bulletine- 67)

 11. Ramesh Srinivasan …. super ponga…. Appadi kettalum keppar namma arasiyal arivujivi ragul

 12. இன்றைய குமுதம் ரிப்போர்ட்டரில் வந்துள்ள கருத்துக்கணிப்பு மொத்தம் 66,100- பேரிடம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றவர்களில் சுமார் 24 விழுக்காடு இன்னமும் முடிவு எடுக்காத , மற்றும் முடிவை சொல்ல தயங்கும் மற்றும் சொல்ல மறுக்கும் வாக்காளர்கள். எஞ்சிய 76 விழுக்காட்டில் , பாஜக அணிக்கும் பிற அணிகளுக்கும் உள்ள ஆதரவு விகிதம் வருமாறு:-

  1. பாஜக அணி 39 %

  2.அதிமுக அணி 22 %

  3. காங்கிரஸ் அணி 15 %

  இதில் முக்கிய செய்தி என்னவெனில் , யாருக்கு அதிக எதிர்ப்பு உள்ளது என்பதில்,

  திமுகவுக்கு சுமார் 19 %-ம்

  காங்கிரசுக்கு சுமார் 18 %-ம்

  பாஜக அணிக்கு 14 % ம்

  அதிமுக அணிக்கு 10 % ம்,

  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதரவில் எதிர்ப்பு போக மிச்சம் என்று பார்த்தால்,

  பாஜக அணிக்கு + 25%,

  அதிமுக அணிக்கு +12 %

  காங்கிரஸ் அணிக்கு (-)2 % என்று வருகிறது. இதனைப் பார்த்தால் , காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் முழுவதும் கட்டுத்தொகை ( ஜாமீன் தொகை ) பறிபோகும் என்று தெளிவாகத் தெரிகிறது.

  திமுகவினர் மீது அதிக வெறுப்பினை மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர். எனவே திமுகவும் அதிக இடங்களை கைப்பற்ற முடியாது. களத்தில் அதிமுகவும், பாஜகவும் மட்டுமே முக்கியப்போட்டி என்பது போல , கருத்துக்கணிப்பில் இருந்து தெரிகிறது.

  அடுத்த இதழில் இரண்டாம் பகுதி வெளிவருகிறது . அதில் இந்த வாக்கு சதவீதம் , தொகுதி எண்ணிக்கையில் எப்படிப் பிரதிபலிக்கும் என்பது தெரிய வரும். எனவே, வரும் வெள்ளிக்கிழமை வரை காத்திருப்போம்.

  மோடி பிரதமர் ஆவதும், பாஜக அணி 300-க்கு குறையாமல் இடங்களைப் பெறும் என்பதும் உறுதியாகி விட்டது.

 13. Very interesting to read the comments of other persons, media and politicians about Shri Modi`s personal life.

  Good.

  Leaving everything aside, there are more clarifications required here. Has Mr. Modi, hide this fact ever? Absolutely not. Earlier in 2001 itself, this information was brought out by a litigant and he filed a case in Supreme Court stating that Mr. Modi is married. He also informed SC that Mr. Modi left blank in the column MARITAL STATUS. So, his contention was that Mr. Modi lied in the form given to Election Commission. But SC refused to entertain the petition and asked the litigant to approach Election Commission. BUT PLEASE UNDERSTAND ONE THING HERE, EARLIER IT WAS NOT NECESSARY TO FILL IN ALL THE COLUMNS BECAUSE THAT WAS NOT MANDATORY. Election Commission, after deep slumber, just now, before two years, awaken and made a rule that all the columns should be filled up and no column should be left blank. So, Mr. Modi filled the column and said AM MARRIED. What is so funny on this? He is honest and true to himself and to the nation. Is it an offence?

  If one goes thro, Mahabharatha, even though the kings and queens and great warriors made mistakes, they have accepted and not hidden the same from any body. They waited for the time to come and when it came, they encountered it boldly. Bheeshmapithamaha was the best example and next comes Arjuna.

  So here also, the necessity came in the form of a rule, so no fact was hidden and everything came to the eyes of MEDIA AND DIRTY POLITICIANS now only.

  Lets remember the sayings of Jesus Christ that of WHOEVER HAS NOT SINNED, SHALL CAST A STONE and conclude.

 14. என்ன… ஒரு மனைவி, இரண்டு துணைவி, மூன்று இணைவி, நான்கு கனவி என்று இருந்தால் யதார்த்தம் என்று நினைத்து சர்ச்சை கிளப்பாமல் இருப்பார்கள். இப்படியென்றால் அவர்களுக்குப் பொறுக்காது தானே…

 15. Modi ji ya vimarsikira alavuku tamil natla yarukum arukadha illa,kuripa karupu satta thalaivaruku.

 16. Very good and healthy comments. none of the politician like dr mk have right to comment on namo. better he can first tell how dharma (kanimoli’s mother) became rajathi ammal.

 17. நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் வந்தது இங்கே அவனவன் செய்யும் அலம்பல்கள் தாங்கவில்லை.தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகிக்கமுடியாத அவதூறுகளையும்,தனிமனித தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகிறது ஒரு பெரிய கும்பல்.இந்த கும்பலில் ஒலக பாட்டாளி வர்க்கத்தின் ஒரே(!) தலைவன் கார்ல் மார்க்ஸின் பக்த கேடிகளிலிருந்து, தமிழின தலைக்கொள்ளி ஈ.வே.ராமசாமியின் சிஷ்ய கேடிகள் வரை அடக்கம்.போதாக்குறைக்கு பபூன் பொலிட்டீஸியன் நடிகர் கார்த்திக்-கிலிருந்து,ஜிப்பா ஜோல்னா பைய்யன் ஞானி வரை வேலைவெட்டியில்லாத அத்தனை பயல்களும் மோதி என்ற ஒரே நபரை குறிவைத்து வாய்க்கு வந்தபடி கண்டபடி உளறி கொட்டுகிறார்கள்.இவன்களை போன்ற சில்லறை பிரபலங்களே இந்த போடு போடும்போது உலக பிரபலங்களான (ஊழலில்தான்!) காங்கிரஸ்காரர்கள் மோதியை விட்டுவைப்பார்களா என்ன…? நரேந்திர மோதியின் சிறு வயது திருமண விஷயத்தை கையில் எடுத்து ஏதோ உலகத்தில் எங்கும் நடக்காத அக்கிரமம் நடந்து விட்டதாக வானத்துக்கும் பூமிக்கும் குதி குதியென்று குதிக்கிறார்கள்.மோதிக்கு எதிராக இந்த அயோக்கிய சிகாமணிகள் செய்யும் அத்தனை அவதூறுகளும் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில் புதிய புதிய அவதூறுகள் இந்த கும்பல்களுக்கு தேவைப்படலாம்.ஆகையால் அடியேனால் முடிந்த சில அவதூறுகளை இந்த “மத சார்பற்ற”கும்பல்களுக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன்.இதற்கு ராயல்டி எதுவும் தேவையில்லை.ஹிஹி!!!

  நரேந்திர மோதி ஒரு மோசடி பேர்வழி.தனக்கு அப்பாவும்,அம்மாவும் இருப்பதை நீண்ட காலமாக மூடி மறைத்துள்ளார்.இது போதாதென்று தாத்தா,பாட்டி போன்ற உறவினர்களும் அவருக்கு உண்டு.இந்த தகவல்களை இவ்வளவு காலமும் வெளியிடாமல் மறைத்த மோதியின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்.
  ……………………………………………………………………………………………………………………………………………….

  நரேந்திர மோதி மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது,இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரின் ஜடையை இழுத்தும்,கன்னங்களை கிள்ளியும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இவரால் பாதிக்கப்பட்ட மாணவி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாள்.இந்த அக்கிரமத்தை செய்த நரேந்திர மோதியா பெண்களை பாதுகாப்பார்? ஆகவே ,பெண்மணிகளே கண்மணிகளே ….மோதிக்கு ஓட்டு போடாதீர்!

  ……………………………………………………………………………………………………………………………………………….

  நரேந்திர மோதி தனது சகோதரரின் டீக்கடையில் பணியாற்றியபோது டீ குடிக்க வந்த வாடிக்கையாளர்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுக்களையும்,ஓட்டை காசுகளையும் கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்.இவரால் ஏமாற்றப்பட்ட அப்பாவி ஏழை மக்கள் அடுத்தவேளை சோறுகூட இல்லாமல் வறுமை நிலையில் பங்களாக்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.எனவே,ஏழை பாழைகளே…மோதிக்கு வாக்களிக்காதீர்!

  ……………………………………………………………………………………………………………………………………………….

  நரேந்திர மோதி தனக்கு தாகம் எடுத்தால் உடனே தண்ணீர் வாங்கி குடிப்பது அதிர்ச்சியளிக்கிறது.குடிநீரை இப்படி விரயம் செய்யும் இவரால் தண்ணீர் பிரச்சனையை எப்படி தீர்க்கமுடியும்? ஆதலால்,குடிமக்களே…உங்கள் வாக்கு எங்களுக்கே!

  ……………………………………………………………………………………………………………………………………………….

  நரேந்திர மோதி ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் தூங்குகிறார்.இப்படிப்பட்ட சோம்பேறியை,தூங்குமூஞ்சி பேர்வழியை உலகம் கண்டதில்லை.இந்த கும்பகர்ண ஆசாமிக்கா உங்கள் ஓட்டு…?

  ……………………………………………………………………………………………………………………………………………….

  நரேந்திர மோதி காலை உணவாக மட்டும் 5 சப்பாத்திகள் சாப்பிடுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமாகியுள்ளது.மதியம் 3 சப்பாத்திகளும்,இரவு 4 சப்பாத்திகளும் சாப்பிடுகிறார்.ஆகமொத்தம் ஒரு நாளைக்கு 12 சப்பாத்திகளை இந்த மனிதர் தின்று தீர்க்கிறார்.இந்த சாப்பாட்டு ராமனுக்கா நீங்கள் வாக்களிக்க போகிறீர்கள்…?

  ……………………………………………………………………………………………………………………………………………….

  நரேந்திர மோதியின் கொடுங்கோல் ஆட்சியில் மத கலவரங்களை தூண்டும் அப்பாவி தீவிரவாதிகளையும்,குண்டு வைப்பதை தவிர வேறு ஒரு பாவமும் அறியா பயங்கரவாதிகளையும் என்கவ்ண்டர் என்ற பெயரில் சுட்டுக்கொல்வது அப்பட்டமான மனித உரிமை மீறல்.ஆதலால்,இஸ்லாமிய பெருங்குடி மக்களே….உங்கள் வாக்கு கை சின்னத்திற்கே!

  ……………………………………………………………………………………………………………………………………………….

  நரேந்திர மோதி கல்லூரியில் படித்த காலத்தில் மற்ற மாணவர்கள் கிளாஸ் கட் அடித்து ஊர் சுற்றிக்கொண்டிருந்தபோது இவர்மட்டும் ஒழுக்கம் சிறிதுமில்லாமல் வகுப்பில் தனியாக அமர்ந்து படித்திருக்கிறார்.சக மாணவிகளை மாணவர்கள் ஈவ் டீசிங் செய்தபோது ஆணாதிக்க வெறியுடன் அதை கண்டித்திருக்கிறார்.ஆகவே,மாணவ கண்மணிகளே மாணவ விரோதியான மோதிக்கு தக்க பாடம் புகட்டுவீர்!

  ……………………………………………………………………………………………………………………………………………….

  நரேந்திர மோதி சிறுவனாக இருந்தபோது கிரிக்கெட் ஆடுகிறேன் பேர்வழி என்று ஏராளமான கண்ணாடி ஜன்னல்களை உடைத்து வெறியாட்டம் போட்டிருக்கிறார்.முஸ்லிம்களின் மண்டையை குறிவைத்து பந்தை அடித்து படுகாயப் படுத்தியிருக்கிறார்.இவரால் மண்டை உடைந்த முஸ்லிம்கள் தொழுகை செய்யக்கூட முடியாமல் இன்றும் அவதிப்படுகிறார்கள்.சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை கெடுத்த மதவெறியர் மோதிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாது!

  ……………………………………………………………………………………………………………………………………………….

  நரேந்திர மோதி என்ற பெயரில் உலா வருபவர் உண்மையில் நரேந்திர மோதியே அல்ல.உண்மையான நரேந்திர மோதி குஜராத் பூகம்பத்தில் சிக்கி இறந்துவிட்டார்.இறந்துப்போன மோதியின் முகசாயலில் ஒரு போலியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உருவாக்கி உலவவிட்டிருக்கிறார்கள்.எனவே இந்த போலி மோதியை கண்டு ஏமாறாமல் அன்னை சோனியாவின் அருந்தவப்புதல்வர் ராகுல் காந்திக்கே வாக்களிப்பீர்!

 18. Shri k.v.raghavan
  I agree entirely with your comments except the last bit about Jesus.There never was a person called Jesus and it all a myth. Let us not credit Jesus for all the goody goody,tear jerking stuff because there was never an HISTORICAL CHRIST.

 19. டெல்லியில் மண்ணைக் கவ்வப் போகும் கபில் சிபல், அப்பன் வீட்டு சொத்து கொள்ளை போனதைப் போல ஊடகங்களின் மைக்குக்கு முன்னால் நின்று, தேர்தல் கமிஷனில் முறையிட்டிருக்கிறோம், சட்டப்படி மோடி மீது நடவடிக்கை என்றெல்லாம் கூவுவது வேடிக்கையாக இருக்கிறது. இதே ஆளிடம் ஒரு நிருபர் உங்கள் தலைவிதான் முதலில் சும்மா மசூதிக்குச் சென்று இஸ்லாமிய மதத் தலைவரை சந்தித்தார், இப்போது ராஜ்நாத் சிங் லக்னோவில் ஷீயா மதத் தலைவரைப் பார்த்ததற்கு இத்தனை குதி குதிக்கிறீர்களே என்றதற்கு, சோனியா அப்படி பொய் பார்த்தது எனக்குத் தெரியாது, உங்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம் என்று “ஒண்ணுமே தெரியாத பாப்பா”வைப் போல நடிக்கிறார். எத்தனை பெரிய மனுஷனுக்கு இத்தனை சிறிய, அசிங்க, கேவல புத்தி.

 20. நாட்டில் குடிப்பதற்கு குடிநீர் கிடைக்கவில்லை.தொழில் நடத்த மின்சாரம் இல்லை. படித்தவருக்கு வேலை கிடைக்கவில்லை. விலைவாசி விண்ணை முட்டி கொண்டு நிற்கிறது. இவைகளைப்பற்றி எல்லாம் பேசுவதை விட்டுவிட்டு தேர்தல் விதிமுறைகள் பற்றிய எந்தவித அடிப்படை அறிவும் இன்றி “”மோடி தனக்கு திருமணமான விவரத்தை மறைத்து விட்டார்”” என்று புலம்புகிறார்கள். அப்படி புலம்புவது யார் தெரியுமா? மனைவி, துணைவி, இணைவி என்று கூறிக்கொண்டு திரியும் 92 வயது கிழவனும், வெனின்சுலா நாட்டை சேர்ந்த “வரோநிகா கார்டிலீ” என்ற பெண் தோழியை வைத்துகொண்டிருக்கும் ஓர் 48 வயது இளவரசரும் ஆவார்கள்.

  பதில்கள். (1) மோடி தனது சுயசரிதையில் தனக்கு திருமணமான விவரத்தை கூறியுள்ளார்.
  (2) தேர்தல் நடத்தும் விதி எண் 4 ன் படி படிவம் எண் 2 ல் பாகம் 1 ஐ பூர்த்தி செய்து போட்டியிடும் வேட்பாளரோ அவரை முன்மொழிபவரோ தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்யலாம். முன்மொழிபவர் தாக்கல் செய்வதாக இருந்தால் அவர் தனது பெயருடன் தனது அப்பா அல்லது அம்மா பெயரையும் சேர்த்து பூர்த்தி செய்யவேண்டும். முன்மொழிபவர் ஒரு திருமணமான பெண்ணாக இருந்தால் அவரது கணவர் பெயரையும் சேர்த்து பூர்த்தி செய்யவேண்டும். ஆனால் வேட்பாளரே நேரடியாக தேர்தல் அதிகாரியிடம் மனுவை தாக்கல் செய்தால் அவரைப் பற்றிய தகவலை மட்டுமளித்தால் போதும். அவர் தனது மனைவி பற்றிய தகவலை அளிக்க தேவை இல்லை. இதுதான் தேர்தல் விதி.

  10-5-2013 அன்று கௌஹாத்தியிலிருந்து ராஜ்யசபா தேர்தலுக்கு மன் மோகன் சிங் வேட்பு மனு தாக்கல் செய்த போது குர்ஷரன் கௌர் என்ற தனது மனைவி பெயரை குறிப்பிடவே இல்லை. அவரது மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டார்.

  ஒரு வேட்பாளரின் மனைவி Incometax assessee ஆக இருந்தால் மட்டுமே வேட்பாளர் தனது மனைவி பெயர் மற்றும் அவரது PAN கார்டு எண் ஆகியவற்றை மனுவில் குறிப்பிட்டாக வேண்டும். அவ்வாறு இல்லையெனின் தனது மனைவி பெயரை குறிப்பிடவேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்ட நிலை 29-9-2013 வரை மிக சரியாக இருந்தது. ஆனால் உச்ச நீதி மன்றம் 13-9-2013 அன்று வழங்கிய தீர்ப்பில் “””வேட்பு மனுவில் எந்த ஒரு column ம் blank ஆக விடக் கூடாது”” என்று கூறியது. ஆகவேதான் கடந்த தேர்தல்களில் blank ஆக விடப்பட்ட இடங்களில் தற்போது மோடி பூர்த்தி செய்திருக்கிறார். இதில் மோடி என்ன மோசடி செய்திருக்கிறார்? அவர் பிரதமர் பதவிக்கு சிறிதும் அருகதை இல்லை என்று காழ்புணர்ச்சி கொண்ட கருணாநிதி சொன்னால் 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த மன் மோகன் சிங்கை என்ன செய்ய போகிறீர்கள்?

 21. Madhavrao’s friendship continued even after Sonia’s marriage to Rajiv. Scindia in 1982 was involved in a traffic accident near IIT, Delhi main gate while driving a car at 2 AM. Sonia was the only other passenger. Both were badly injured. A student of IIT who was burning midnight oil was out for a cup of coffee. He picked them up from the car, hailed an auto rickshaw and sent an injured Sonia to Mrs. Indira Gandhi’s house since she insisted in not going to a hospital. Madhavrao had broken a leg and in too much pain to make any demand. He was taken to hospital by the Delhi Police who had arrived a little after Sonia had left the scene. In later years, Madhavrao had become privately critical of Sonia, and told some close friends about his apprehensions about Sonia. It is a pity that he died in mysterious circumstances in an air crash.

 22. Illegal registration as a voter
  In January 1980, Indira Gandhi returned as Prime Minister. The first thing Sonia did was to enroll herself as a voter. This was a gross violation of the law, enough to cause cancellation of her visa [since she was admittedly an Italian citizen then]. There was some hullabaloo in the press about it, so the Delhi Chief Electoral Officer got her name deleted in 1982. But in January 1983, she again enrolled herself as a voter!

 23. Sitaram Kesari (then president of Congress party) from the office. Physically, poor fellow. He has gone to the toilet. His chair was empty, and you know what happened? These congress goons, they went and locked up the toilet and made Sonia occupy that place. And the elderly man cried. This is how she became the Congress President.

 24. தேர்தல் வந்தாலே தமிழனுக்கு சாபம் இடுவது மஞ்சள் பெரியவரும், தமிழகத்துக்குல்லுக பட்டரும் ஆன கருணாநிதிக்கு வழக்கம். தேர்தலில் தோற்றவுடன் , வழக்கம் போல , நான் கடலில் கட்டையை மிதப்பேன் , நாயை சுற்றுவேன், பேயாய் இருப்பேன் என்று எதுகை மோனையுடன் அடுக்கு மொழியில் வசை பாடுவது அவர் இயல்பு.

  2011- தேர்தலில் மக்கள் இவரை தூக்கி எறிந்தனர் என்பதால், இப்போது நடக்கும் தேர்தல் கூட்டங்களில் , தனக்கு ஓட்டுப்போடாத பாவத்தினால் , தமிழக மக்கள் இப்போது தண்டனையாக சிரமப்படுவதாக சொல்லியுள்ளார். இந்த தேர்தலிலும் இவரை ஓரங்கட்டப்போகிறார்கள் நம் மக்கள். அப்பாவி இலங்கை தமிழரை படுகொலை செய்த , இலங்கை அரக்கர்களுக்கு பல நவீன அழிவு ஆயுதங்களை வழங்கிய கொலைகாரி சோனியாவை சொக்கத்தங்கம் என்று சொல்லிய அயோக்கியர் இந்த நபர்.

  தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் காரன் கட்டுத்தொகையை இழப்பான். அவனுடன் சேர்ந்து இழவு கொண்டாடப்போகிறது இவருடைய கட்சி. தேர்தல் தோல்வி என்ற இழவு விழுந்தவுடன், மீண்டும் தமிழக வாக்காளர்களுக்கு தொடர் சாபங்களை வழங்குவார் இந்த குல்லுக பட்டர். இந்த எட்டப்பர் விடும் சாபங்கள் , தமிழக மக்களை ஒன்றும் செய்யாது. சாபம் கொடுத்தவரையே திரும்ப சென்று சேரும்.

  டூ ஜி இராஜாவையும், பி எஸ் என் எல் தயாநிதிமாறனையும், கப்பல் டி ஆர் ஆர் பாலுவையும் இந்த தேர்தலில் டிக்கெட் கொடுக்காமல் தவிர்த்திருந்தால் , திமுக ஒரு பத்து இடமாவது வந்திருக்கும். அழிவு காலம் வரும்போது மனிதனுக்கு புத்தி தவறான பாதையில் தான் செல்லும். இப்போது கலைஞரின் குடும்ப அரசியலுக்கு அழிவு காலம் வந்துள்ளது. உண்மையான திமுக தொண்டர்கள் இவரை நன்கு புரிந்து கொண்டு, வேறு இயக்கங்களை தேடிப் போய்விட்டார்கள் . எஞ்சிய திமுக தொண்டர்களும் விழித்துக்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 25. கட்டுரைக்கு முழுமையாக வலு சேர்க்கும் வகையில் அன்பர்கள் அனைவருடைய கருத்துக்களும் அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. இந்த உணர்வுதான் இன்று நாடு முழுதும் பரவிக்கிடக்கிறது. தேவையில்லாமல் சிறுபிள்ளைத் தனமாக ராகுல் இது குறித்து கருத்து தெரிவித்தமைக்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக அவர்கள் இப்போது அடக்கி வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். திரு பாண்டியன் கூறியிருக்கும் கருத்துக்களும், இதுபோன்ற பல நிகழ்ச்சிகளும் திரு சுப்பிரமணிய சுவாமியால் ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. தமிழகத்துத் திராவிடத் தலைவர்கள் இந்த பிரச்சினை குறித்து பேசும் தகுதியற்றவர்களாகத் தங்களுடைய சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். எனவே நாட்டுக்காகத் தன் குடும்பம், உறவு, சுகபோகம் அனைத்தையும் துறந்து வாழ்கின்ற மோடியைப் பற்றிய அவதூறு பேசாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது. அவரை எதிர் கொள்ளமுடியாத இயலாமையின் காரணமாக கேவலமாக கீழே இறங்கி வந்து அவரை விமர்சிப்பது ஆங்கிலத்தில் சொல்வது போல “பண்டோராவின் பெட்டியைத் திறந்து விடுவது போன்றது.” அனைவருக்கும் நன்றி.

 26. திமுகவினர் மத்திய சென்னை தொகுதியில் டிபன் பாக்ஸில் ஆயிரம் ரூபாய் பணம் வைத்து கொடுக்க வைத்திருந்த டிபன் பாக்ஸ்களும்,பணமும் தேர்தல் கமிஷன் அலுவலர்கள் கைப்பற்றியதாக இன்று செய்தித்தாள்களில் செய்தி வந்துள்ளது. இதனை நான் தட்டச்சு செய்யும் போதே, தொலைகாட்சி செய்திகளில் , அதாவது முக்கிய வரிச் செய்தி , திமுகவின் தற்போதைய ராஜ்யசபை உறுப்பினர் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆகிய திரு செல்வகணபதி மற்றும் சில அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கில். இந்த சுடுகாட்டுக்கூரை மட்டுமல்ல, இன்னும் பிற ஊழல் மந்திரிகளும் வழக்கை தவிர்க்க , மஞ்சளாரிடம் தஞ்சம் புகுந்து ஞான ஸ்நானம் பெற்று, அதிலும் செல்வகணபதி டெல்லியில் ராஜ்யசபை உறுப்பினர் ஆகி விட்டார்.

  திமுகவினர் தங்கள் இயல்புக்கேற்ற பலரை , அதிமுகவில் இருந்து கூப்பிட்டு , தங்கள் கட்சியில் சேர்த்து, பதவிகள் வழங்கி , தங்கள் மாண்பினை உலகுக்கு தெளிவாக அறிவித்துள்ளனர்.

  பாராளுமன்ற தேர்தல் இன்னும் ஏழு நாட்களே இருக்கும் இந்த நேரத்தில் , திமுக எம் பி- யின் சிறைத்தண்டனை செய்தி வந்திருப்பது, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னணியில் உள்ள சுமார் ஐந்து அல்லது ஆறு தொகுதிகளில் வெற்றிவாய்ப்பினை பாதிக்கும். திமுகவிற்கு இப்போது நேரம் தொடர்ந்து சரியில்லை என்று தெரியவருகிறது/ வரிசையாக டிபன் பாக்ஸ் பணம், திமுக எம் பி க்கு ஊழல் குற்றத்துக்கு சிறைத்தண்டனை என்று செய்திகள் , தேர்தல்க்கு ஒரு வாரம் முன்பு வருகிறது. இதெல்லாம் , வரும் தேர்தலில் திமுகவுக்கு நேரப்போகும் விபத்தினை முன்கூட்டியே பறைசாற்றும் நிமித்தங்கள். மஞ்சள் பெரியவர் தமிழக மக்களுக்கு சாபம் வழங்குகிறார். ஆனால் இயற்கை , மஞ்சளாரின் கட்சிக்கு பெரிய பாதிப்புக்களை தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறது. படிப்பினை என்னவென்றால், பொது மக்களுக்கு விடும் சாபம் , நம் கட்சியைத்தான் பாதிக்கும்.

 27. Issue is personal to MODI and it is irrelevent to election. but general opinion is that MODI has not done justice in this case.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *